--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/2dd1b342-1083-4fe7-bf61-17a6dfc38267n%40googlegroups.com.
முன்னுரை:
பண்டைத்தமிழரின் காலைஉணவு பற்றிய இக்கட்டுரைக்கு அடிப்படையாக அமைவது நற்றிணை பா-60ல் உழவன் அதிகாலையில் உண்ணும் பொம்மலும் மிளிர்வையும் ஆகும். பொம்மல் என்றால் என்ன? மிளிர்வை என்னும் பெயர் எதற்குரியது? அவற்றின் ஊட்டச்சத்து என்ன என்று அறிவதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.
நற்றிணைப் பாடலும் செய்தியும்:
விடியுமுன்னர் உழவன் தன் மனைவியரோடு வயலுக்குப் பணியாற்றக் கிளம்புகிறான். கிளம்பும் முன்னர் வயிறார உண்கிறான். ஏனெனில் அன்று அவன் நாற்று நடவேண்டும். அதுவும் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. வேலையைத் தொடங்கினால் வெயிலேறும் வரை ஓய்விற்கோ உணவிற்கோ வழியில்லை என்பது பின்வரும் பாடற்பகுதி மூலம் தெளிவாகிறது.
“மலைகண் டன்ன நிலைபுணர் நிவப்பின்
பெருநீர் பல்கூட் டெருமை உழவ
கண்படை பெறாது தண்புலர் விடியல்
கருங்கண் வரால் பெருந்தடி மிளிர்வையொடு
புகர்வை அரிசிப் பொம்மல் பெருஞ்சோறு
கவர்படு கையை கழும மாந்தி” என்கிறார் தூங்கலோரியார்.
எனவே பருத்த வரால்மீன் துண்டுகளின் மிளிர்வையுடன் ‘புகர்வை அரிசிப் பொம்மல் பெருஞ்சோற்றைத் தன் கவர்த்த கைகளால் அரித்தெடுத்துண்டு; பின்னர் 'மாந்து’கிறான். பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் உரையில் ‘உணவுக்குரிய அரிசியால் ஆக்கிய மிக்க சோற்றுத்திரளை விருப்பமிக்க கையை உடையனாய் நிறைய மயக்கமேற உண்டு’ என்கிறார்.
பொம்மல் பெருஞ்சோறு எது?
’பொம்மல் பெருஞ்சோறு’ என்ற சொற்றொடரில் பொம்மல் எனும் சொல் பெருஞ்சோறு என்னும் பண்புப்பெயர்த் தொடருக்கு அடையாக அமைந்துள்ளது. இங்கே ஒருபொருட் பன்மொழியாக பொம்மல் சோற்றைக் குறிக்கும் எனக் கொள்ள வழியில்லை. ஏனெனில் கடலைக் குறிப்பிடும்போது “பொம்மல் படுதிரை” எனவும் (நற்றிணை- 96& அகநானூறு- 200), பெண்ணைக் குறிப்பிடும் போது “பொம்மல் ஓதி” எனவும் (நற்றிணை- 71,129, 252, 274, 293; குறுந்தொகை- 191, 379& அகநானூறு- 65, 214, 221, 257, 311, 353) தொகைநூல்களில் பல இடங்களில் பயின்று வருவதைக் காண இயல்கிறது. கடலலையைக் குறிக்குமிடத்தும், பெண்ணின் கூந்தலைக் குறிக்குமிடத்தும் ‘பொம்மல்’ பெயரடையாக வருவதால் சோற்றைக் குறிக்குமிடத்திலும் அது பெயரடையே எனல் திண்ணம். எல்லா இடங்களிலும் ‘பொலிந்த’ என பின்னத்தூர் நாராயண சாமி ஐயரும், நாவலர் வேங்கடசாமி நாட்டாரும், கரந்தைக் கவியரசு வேகடாசலம் பிள்ளையும் ஒருங்கு பொருள் உரைக்கின்றனர்.
பொம்மல் ஓதி = பொலிந்த கூந்தல் எனல் பொருத்தமே.
பொம்மல் படுதிரை = பொலிந்த படுதிரை என்பது பொருந்தவில்லை .
கழகத் தமிழகராதி ‘பொம்மல்’ எனும் சொல்லுக்குப் ‘பூரித்த’, ‘பொருமிய’ எனும் பொருளையும் சொல்கிறது(ப.- 716). தமிழ்மொழி அகராதி ‘பொருமல்’, ‘பொலிவு’ என்ற பொருள்களைத் தருகிறது (ப.- 1075).
பொம்மல் படுதிரை = பூரித்த/ பொருமிய படுதிரை எனல்
பொருத்தமே. ஏனெனில் கடல் அலைகள் பூரித்துப் பொங்கி கரையை மோதுகின்றன. அவ்வாறாயின் ‘பொம்மல் பெருஞ்சோறு’ எனும் தொடரின் பொருள் யாது? பூரித்த/ பொருமிய சோறு எப்படி உண்டாகும்? கேள்விகட்கு உரிய பொருள் பாடலிலேயே உள்ளது. உழவன் விடியுமுன் உண்டுவிட்டு வேலைக்குக் கிளம்புகிறான். அவன் மனைவியர் முதல்நாள் ஆக்கி நீரில் ஊறவைத்த சோற்றையே உண்ண இயலும். நீர்ச்சோறு பூரித்துப் பொருமி இருப்பது இயற்கை. நீரில் ஊறியதால் சோறின் கொள்ளளவு கூடி; மென்மையாக இருக்கும். இருபதாம் நூற்றாண்டில் நீராகாரம் என்று வழங்கிய பழைய சோறு தான் சங்க காலப் ‘பொம்மல் பெருஞ்சோறு’. இதனை மேலும் ஒரு சான்றால் நிறுவலாம்.
“குரூஉக்கண் இறடிப் பொம்மல்” (மலைபடுகடாஅம் அடி- 169)
என்ற அடிக்கு உரை கூறும் பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் ‘நிறம் மிக்குத் தோன்றும் தினையின் சோறு’ என்கிறார். ‘இறடி’ என்பது தினை. இறடிப் பொம்மல் தினையின் சோறு எனப் பொருள் கொள்கிறார். புன்செய்த் தானியங்களின் உணவை நீரில் அல்லது மோரில் கரைத்து உண்ணும் வழக்கமே இன்றும் நிலவுகிறது. சங்க காலத்திலும் அவ்வாறு கரைத்து உண்ணும் வழக்கம் தான் இருந்தது என்பதற்குப் புறநானூறு சான்று பகர்கிறது.
கரும்பனூர் கிழான் பற்றி நன்னாகனார் பாடுங்கால்; அவன் நாட்டில் கூலம் விளைந்தது என்னும் செய்தியை,
“இருநிலம் கூலம் பாறக் கோடை” எனும் அடியில் கூறுகிறார்.
அத்துடன் பாலில் கரைத்தோ, அல்லது பாகில் கலந்தோ புன்செய்த் தானிய உணவைத் தந்து விருந்தயர்வான் என்பதை,
.”பாலிற் பெய்தவும் பாகிற் கொண்டவும்
அளவுபு கலந்து மெல்லிது பருகி
விருந்துறுத்து”(புறம்- பா- 381) எனும் அடிகளால் உரைக்கிறார்.
இதனால் கூத்தராற்றுப்படையின் தினை உணவும் கரைத்துக் குடிக்கக் கூடியது எனல் பெற்றோம். முடிவாக பொம்மல் என்பது நீரில் கரைத்த / ஊறவைத்த உணவு என்பது உறுதிப்படுகிறது.
அது நீராகாரமாக இருந்ததால் தான் உழவன் ‘மாந்து’வதாகக் குறிக்கிறார் புலவர். அது மட்டுமன்று; “கவர்படு கையை கழும” எனும் தொடர் அவன் தனது விரல்களால் சோற்றினை அரித்து எடுத்து மிளிர்வையோடு உண்கிறான் என்பதைப் புலப்படுத்துகிறது (பார்க்க- படங்கள்1& 2).
(தொடரும்)
படம்- 1 நீரூற்றிய சோறு படம்-2 பொம்மலான சோறு படம்- 3 பொம்மலும் மிளிரவையும்
மிளிர்வை - விளக்கம் யாது?
“கருங்கண் வரால் பெருந்தடி மிளிர்வை” இன்றைய தமிழில்
வரால் மீனின் குழம்பு என்பது வெளிப்படை. இன்றும் முந்தைய நாள் வைத்த மீன்குழம்பே ருசி மிகுந்தது என்னும் கொள்கை பரவலாக உண்டு. ‘முள்ளும் மலரும்’ திரைப் படத்தில் இடம்பெறும்,
“நித்தம் நித்தம் நெல்லுச்சோறு; நெய் மணக்கும் கத்திரிக்கா
நேத்து வச்ச மீன்குழம்பு என்னை இழுக்குதையா“ என்னும்
பாடல் சான்று. ஆனால் மிளிர்வை என்ற சொல்லின் சிறப்புப் பொருள் என்ன?; என்பது ஆய்விற்குரியது.
பால் விட்டு உண்ணும் உணவு பாலின் மிதவை என்று பண்டைத்
தமிழில் பெயர் பெறுகிறது.(மலைபடுகடாஅம்- அடி- 417, அகநானூறு- பா-37) தயிர் விட்டு உண்ணும் உணவு தயிரின் மிதவை ஆகும் (அகநானூறு- பா- 340& புறநானூறு- பா- 215). நீர்ச்சோறாகிய பொம்மல் பெருஞ்சோற்றில் மீன் குழம்பை ஊற்றிப் பிசைந்து மிசைய வழியில்லை. ஏனெனில் அவ்வுணவு மாந்த வேண்டிய அளவு நீர் மிகுந்து உள்ளது. எனவே வரால் மீனின் பருத்த துண்டுகள் மட்டுமே பக்க உணவாக முடியும். அத்துண்டுகளின் மிதவை மிளிர்வையாக மாறுகிறது; அதாவது ‘சொட்டானம்’ ஆகிறது. சொட்டானம் என்பது கையில் எடுக்கும் சோற்றுக் கவளத்தில் ஒரு சிறு குழிவினை உருவாக்கி அதில் ஆனத்தை ஊற்றி உண்ணும் முறை ஆகும் (பார்க்க- படம்- 3).
பொம்மல் பெருஞ்சோற்றின் ஊட்டச்சத்து:
இன்று பழையசாதம் என்று அழைக்கப்படும் சங்ககாலப் பொம்மல் பெருஞ்சோற்றை முதல்நாள் ஆக்கிப் புளிக்க வைப்பதால் தேவையான தாதுச்சத்துக்களான கால்சியம், மெக்னீசியம், இரும்பு, சோடியம், பொட்டாசியம், செலினியம் அனைத்தும் உள்ளன. செலினியம் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் திறன் வாய்ந்தது. (Mineral nutrients of ‘pazhaya sadham’: A traditional fermented food of Tamil Nadu, India.- P. Praveen Kumar&co)
அமெரிக்க ஊட்டச்சத்துக் குழுமம் (American Nutrition Association) பழைய சோற்றினால் விளையும் நன்மைகளை வரிசைப்படுத்துகிறது.
உடல் தெம்பாகவும்; நாள் முழுதும் சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.
உடலுக்கு நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் மிகுதியாக உருவாகும்.
உடலுக்குத் தீமை செய்யும் மிகைச்சூடு சமன்படுத்தப்படுவதால் வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்.
நார்ச்சத்து மிகுந்த உணவாகையால் மந்தம் நீங்கிச் சோர்வு அகலும்.
இரத்த அழுத்தம் சீராகி; பதட்டநிலை குறையும்.
ஒவ்வாமைச் சிக்கல்களும், தோல் வியாதிகளும் குறையும்.
இளமையான தோற்றம் பெற இயலும்.
உடலுக்குள் இருக்கும் எல்லாப் புண்களும் ஆறும்.
புது நோய்த்தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும்.
வைட்டமின் B12 மிகுதி
காபி, தேநீருக்கு அடிமையாவதைத் தவிர்க்க இயலும்.
பக்கஉணவாக உழவன் உண்ட வரால்மீனில் அடர்த்தியற்ற கொழுப்பு அமிலங்களும், கால்சியம் தாதுவும் மிகுதி.
மேற்சுட்டிய ஆய்வுமுடிபுகளின்படி உழவன் உண்ட பொம்மலும் மிளிர்வையும் உடலுக்கு நலமும் ஊட்டமும் தரவல்லன என்பதுடன்; புற்றுநோய் உருவாகாமல் இருக்க வழிசெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. வயிற்றுக்கோளாறும் மந்தமும் நீங்கி; இரத்த அழுத்தம் சீராகி; ஒவ்வாமை, நோய்த்தொற்று, தோல் வியாதிகள் இன்றி; உடலுக்குள் புண்களின்றி; இளமை வேகத்துடன் சுறுசுறுப்பாக வேலைசெய்ய ஏதுவாக அவனது காலைஉணவு அமைந்தது
முடிவுரை:
உழவனின் காலைஉணவு பழைய சோறும் சொட்டானமும் ஆகும். நீர்ச்சோற்றுக்குச் சொட்டானம் ஊற்றி உண்ணும் 2000 ஆண்டுக் காலப் பாரம்பரியம் தலைமை சான்ற சத்துணவு முறையாகும். மிளிர்வை என்னும் தொகைநூலின் சொற் பயன்பாடு இன்று ‘சொட்டானம்’ என்று வழங்குகிறது.
துணைநூற்பட்டியல்
கழகத் தமிழகராதி கழகப் புலவர் குழுவினர் தொகுத்தது- சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு- 1999- 15ம் பதிப்பு
தமிழ்மொழி அகராதி- நா.கதிரைவேற் பிள்ளை திருத்தியது- 6ம் பதிப்பு- Asian Educational Services, New Delhi. Madras-1998
Mineral nutrients of ‘pazhaya sadham’: A traditional fermented food of Tamil Nadu, India. P. Praveen Kumar&co- Department of Siddha Medicine, Faculty of Sciences, Tamil University, Thanjavur-10, India.
Mineral nutrients of ‘pazhaya sadham’: A traditional fermented food of Tamil Nadu, India.- P. Praveen Kumar&co)
(https://academicjournals.org/article/article1379675511_Kumar%2520et%2520al.pdf)
(https://www.quora.com/How-good-is-Pazhaya-soru-Fermented-Rice-for-breakfast)
http://tamilconcordance.in/TABLE-sang.html
முற்றும்
சக
இக்கட்டுரைக்குரிய சுட்டி --->"அகஇலக்கியப் பாத்திரங்களுள் அகவன்மகளும் முதுவாய்ப் பெண்டும்- ஒரு ஒப்பீடு"
கட்டுரையை வாசிக்க:
http://ulagatamil.in/அக-இலக்கியப்-பாத்திரங்க
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcsuUWvqGhdLjh5U6y%3Dho2F6ts1UpKBaRviQ8JsAujrERA%40mail.gmail.com.
Yes.RMSVOn Thu, Nov 25, 2021 at 2:55 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:பாராட்டுக்கு நன்றி.அதுவும் நான் எழுதிய கட்டுரை தான்சக
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CANut-QayD%3D51ypOjGJ%3DcBNOMkaa1-_JsQBHSW4JneChFF%3Dwy1g%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHctsPkfivcEwHv0TH0%3D2nnOGno7ZYgObYocxPtAhYVDQgg%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CANut-QbOCtgOVV2nb-1PZk84h1HhYP_Arx%3Dbk_UpF2SUG5avXQ%40mail.gmail.com.