அகஸ்தியர்: ஒரு மீள்பார்வை
— ஆர். பாலகிருஷ்ணன்
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் 2025 வெளியீடு அகஸ்தியர் தொன்மம், தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றில் பல்வேறு நிலைகளில் பின்னிப்பிணைந்து காணப்படுகிறது. தமிழ் மொழியின் தோற்றத் தொன்மையோடு அகஸ்தியர் இணைக்கப்படுகிறார். இவற்றிற்கான அடிப்படை ஆரியமயமாக்கல், சமஸ்கிருதமயமாக்கல் என்பதோடு வேரூன்றி உள்ளது. அகஸ்தியர் தொன்மத்தின் புதிர் முடிச்சுகளையும் அத்தொன்மத்தின்மேல் உருவாக்கப்பட்ட கட்டுக்கதைகளையும் திரிபுகளையும் தெளிவாக விசாரணை செய்து, அகஸ்தியர்வழி மேற்கொள்ளப்பட்ட ஆதிக்கப் பண்பாட்டு அரசியலைச் சுட்டிக்காட்டுகிறார் பாலகிருஷ்ணன்.
-------------------------
ஒரு திரைக்கதை இலாக்கா உருவாக்கிய பிம்பத்தை சுக்கு நூறாக தகர்த்திருக்கிறது இந்த நூல்.
செவ்வியல் தமிழ் செய்யுள்களைக் கொண்டு தனது பார்வை கோணத்தை ஆழமாகப் பதிவு செய்திருக்கிறார் ஐயா ஆர்.பாலகிருஷ்ணன்
தமிழ் இலக்கியம் படிக்கும் அத்தனை மாணவர்களுக்கும் இந்த நூல் ஒரு அவசியமான தரவு நூலாக இருக்கும்.
எளிய வாசகர்களுக்கோ சங்கத் தமிழை நீள் வெட்டாகவும், குறுக்கு வெட்டாகவும் அறிமுகப்படுத்திவிடும்.
அகத்திய மாமுனி என்பவர் ஒரு ஆரிய கற்பனை மட்டுமே என்பதை அழுத்தி சொல்லியிருக்கிறது இந்த நூல்.
கே என் சிவராஜ பிள்ளை அவர்களின் ஆய்வு நூலை உள்வாங்கி, தமிழ் திணைகளோடு பொருத்தி, தமிழர் வாழ்வியல், உழவு, நீர் மேலாண்மை என பல்வேறு வரலாற்று தரவுகளோடு அகஸ்தியர் என்கிற ஃபர்னிச்சரை சுக்கு நூறு ஆக்கி இருக்கிறார் ஆய்வாளர்.
நம்முடைய பிரச்சனைகளில் பெரிய பிரச்சனை என்னவென்றால் அன்லேர்ன் செய்யவே தெரியாது நமக்கு.
நம் மூளையில் ஏற்றப்பட்ட கற்பிதங்களுடே வாழ்ந்து விழுந்து விடுகிறோம்.
திடுமென ஒரு ஆய்வில் நாம் நம்பியது அத்தனையும் கப்சா என்றால் திகைத்துப் போய் விடுகிறோம்.
சிலர் வெறிகொண்டு தாக்கக்கூட ஆரம்பிக்கலாம்.
முழுக்க நிரம்பிய ஒரு கோப்பையில் நாம் மேலும் நீரை ஊற்ற இயலாதது போலவே தவறான விஷயங்களை புனித பிம்பத்தோடு நம்பிக் கொண்டிருக்கும் மனங்களை நாம் திருத்த முடியாது.
அவர்களாக பார்த்து, உணர்ந்து, வாசித்து திருந்தினால்தான் உண்டு.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றது தமிழ், நால்வர்ணம் பேசுவது ஆரியம்,
கல்வி யாவருக்கும் பொது என்பவர்கள் தமிழ் மன்னர்கள், உயர் சாதியினரைத் தவிர யாரேனும் கல்வி கற்றால் நாக்கை அறுத்து கண்களை குருடாக்கி, காதில் ஈயத்தை காட்சி ஊற்று என்பது வடபுலத்தவர் இயல்பு.
நேர்த்தியான வடிவமைப்பில், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் வாயிலாக வெளியிடப்பட்டிருக்கும் இந்த நூல் தன்மானம் உள்ள தமிழர்கள் அனைவரின் இல்லத்திலும் இருக்க வேண்டிய நூல்.
என்பது ரூபாய்கள் மட்டுமே...