மண்ணின் குரல்: மே 2014: சித்தன்னவாசல்

23 views
Skip to first unread message

Suba.T.

unread,
May 17, 2014, 7:15:28 AM5/17/14
to மின்தமிழ், Subashini Tremmel
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 


​அறிவர் கோவில்

புதுக்கோட்டை நகரிலிருந்து 12 கி.மீ தொலைவில் சித்தன்னவாசல் என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள மலையில் சமணர் குகைக்கோவில் ஒன்று உள்ளது. இக்குகைக் கோவிலின் உள்ளே ஒரு சிறு அறையும் வெளியே ஒரு தாழ்வாரமும் உள்ளன. குகைக்கோவிலின் சுவர்களில்  சமணத் தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் உள்ளன. சித்தன்னவாசலும், இதனருகிலிள்ள அன்னவாசலும் பல நூற்றாண்டுகளாகச் சிறந்த சமண மையங்களாக விளங்கின.


​கோவிலுக்குள்ளே

மதுரையைத் தலைநகராகக் கொண்டு அவனிய சேகர ஸ்ரீவல்லப பாண்டியன் (கி.பி, 815-862) ஆட்சி செய்தபொழுது இளம் கௌதமன் என்ற மதுரை ஆசிரியர், சித்தன்னவாசல் குகைக் கோவிலைத் திருப்பணி செய்து, இங்கு உலகம் வியக்கும் ஓவியங்களைத் தோற்ருவித்தா என்று இக்குகைக் கோவிலிலுள்ள கல்வெட்டுக்கள் மூலம் அறியப்படுகின்றன. இங்குள்ள சுவர் ஓவியங்கள் பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் உருவானவை என்ற கருத்தும் உள்ளது.
- தமிழ் நாட்டின் தல வரலாறுகளும் பன்பாட்டுச் சின்னங்களும்

சித்தன்னவாசல் குகைக் கோயில் ஓவியம், சிற்பம், நடனம் என முக்கலைகளையும் சிறப்பிக்கும் கலைக்கூடமாக விளங்குகின்றது.


​ஏழடிப்பட்டம் சமணர் படுக்கைகள்

சித்தன்னாவாசலோடு இணைந்ததாக அமைந்திருப்பது ஏழடிப்பட்டம் சமணர் பள்ளி. இங்குள்ள பாறையின் மலைப்பகுதியின் மேல் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட 17 சமணர் படுக்கைகள் காணப்படுகின்றன. இங்கே பிராமி எழுத்துக்களிலான கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.  இக்கல்வெடுக்களில் சில கி.மு 3-2 வரையிலானவையாக இருக்கலாம் என அறியப்படுகின்றது.


விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2014/05/blog-post_17.html

யூடியூபில் இப்பதிவைக் காண:  https://www.youtube.com/watch?v=PbY0WlLwXrg

இப்பதிவு ஏறக்குறைய 10 நிமிடங்கள் கொண்டது.

புகைப்படங்கள் பின்னர் இணைக்கப்பட்டு அறிவிக்கப்படும்!

இப்பதிவினை கடந்த வருடம் மார்ச் மாதத்தில் தமிழகத்தில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன். இப்பதிவிற்கான தகவல்களை எனக்கு அனுப்பி உதவிய திரு.நரசய்யா அவர்களுக்கும், டாக்டர். சுவாமிநாதன் அவர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

அன்புடன்
சுபாஷிணி ட்ரெம்மல்
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

Geetha Sambasivam

unread,
May 17, 2014, 7:33:26 AM5/17/14
to மின்தமிழ்
ஆஹா, சித்தன்னவாசலாகத் தான் இருக்கும்னு நினைச்சேன்.  இன்னும் போக முடியலை.  அருமையான பகிர்வுக்கு நன்றி.


2014-05-17 16:45 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:
வணக்கம்.

 

N. Kannan

unread,
May 17, 2014, 9:01:42 AM5/17/14
to மின்தமிழ்

சித்தன்னவாசல் ஓவியங்கள்....

நா.கண்ணன்

பிகு: சுபா ஆங்கிலப்பின்குரல் சூப்பர்.



--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Singanenjam Sambandam

unread,
May 17, 2014, 9:49:34 AM5/17/14
to mint...@googlegroups.com
மீண்டும் ஒரு அரிய, அருமையான பதிவு. கண்டு, கேட்டு, ரசித்து மகிழ்ந்தேன்....., நன்றி, பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். HAD ASI TAKEN AN EARLY ACTION TO CURTAIL VANDALISM, IT WOULD'VE BEEN BETTER. ANY WAY, BETTER LATE THAN NEVER.   வர்ணனை , செவிக்கு விருந்தளித்தது. 

Suba.T.

unread,
May 17, 2014, 12:01:50 PM5/17/14
to மின்தமிழ், Subashini Tremmel
On Sat, May 17, 2014 at 1:33 PM, Geetha Sambasivam <geetha...@gmail.com> wrote:
ஆஹா, சித்தன்னவாசலாகத் தான் இருக்கும்னு நினைச்சேன்.  இன்னும் போக முடியலை.  அருமையான பகிர்வுக்கு நன்றி.

​சென்று வாருங்கள் கீதா. நல்ல பயண ஏற்பாடு செய்து கொண்டு சென்று பார்த்து வாருங்கள். ஏழடிப்பட்டம் பாறையின் மேல் ஏற சற்று சிரமம் இருக்கலாம். ஆனாலும் நல்ல படிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

சுபா


--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Suba.T.

unread,
May 17, 2014, 12:02:39 PM5/17/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-05-17 15:01 GMT+02:00 N. Kannan <navan...@gmail.com>:

சித்தன்னவாசல் ஓவியங்கள்....

​:-))
நா.கண்ணன்

பிகு: சுபா ஆங்கிலப்பின்குரல் சூப்பர்.

​ஓ நன்றி.

சுபா

Suba.T.

unread,
May 17, 2014, 12:06:35 PM5/17/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-05-17 15:49 GMT+02:00 Singanenjam Sambandam <singa...@gmail.com>:
மீண்டும் ஒரு அரிய, அருமையான பதிவு. கண்டு, கேட்டு, ரசித்து மகிழ்ந்தேன்....., நன்றி, பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். HAD ASI TAKEN AN EARLY ACTION TO CURTAIL VANDALISM, IT WOULD'VE BEEN BETTER. ANY WAY, BETTER LATE THAN NEVER.   வர்ணனை , செவிக்கு விருந்தளித்தது. 

​மிக்க மகிழ்ச்சி. நன்றி.
நீங்கள் சொல்வது போல ASI​ எடுத்த முயற்சியினால் இன்று குறிப்பாக ஏழடிப்பட்டம் சமணர் படுக்கைகள் உள்ள பகுதி பாதுகாக்கப்பட்டிருக்கின்றது என்பது மிக உண்மை.
ஆயினும் அதனையும் மீறி இன்னமும் பலர் இப்பகுதிக்கு வந்து வேலிக்கு உள்ளே குதித்து தங்கள் பெயர்களை எழுதி வைக்கின்றனர். 

வரலாற்றுச் சின்னங்களை தாமே அழிக்கின்றோமே என்ற உணர்வு இல்லாமல் இப்படி செய்து விடுகின்றனர். வரலாற்றுச் சின்னங்கள் பற்றிய பொதுவான விழிப்புணர்ச்சி என்பது தேவை. அதனை இவ்வகை பதிவுகள்~ உருவாக்க முடிந்தால் மகிழ்வேன்.

சுபா

K R A Narasiah

unread,
May 17, 2014, 12:18:55 PM5/17/14
to mintamil
What takes the cake in the video is the clear and informative descriptive commentary by Suba!
Suba you are a professional!

Narasiah



On Sat, May 17, 2014 at 9:32 PM, Suba.T. <ksuba...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (ksuba...@gmail.com) Add cleanup rule | More info




2014-05-17 15:01 GMT+02:00 N. Kannan <navan...@gmail.com>:

சித்தன்னவாசல் ஓவியங்கள்....

​:-))
நா.கண்ணன்

பிகு: சுபா ஆங்கிலப்பின்குரல் சூப்பர்.

​ஓ நன்றி.

சுபா

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

--

நா.ரா.கி.காளைராசன்

unread,
May 17, 2014, 12:38:43 PM5/17/14
to mintamil
வணக்கம்.

இத்தனை வருடங்கள் இவ்வளவு அருகில் இருந்தும் இன்னும் போக முடியலை. 
திருச்சிராப்பள்ளியிலிருந்து தலைவி வந்தார்கள் என்றால், அடியேனும் உடன் சென்று பார்த்து வரலாம் என்று எண்ணியுள்ளேன்.

அருமையான பகிர்வுக்கு நன்றி.

அன்பன்
கி.காளைராசன்



2014-05-17 16:45 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:
வணக்கம்.

 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Singanenjam Sambandam

unread,
May 17, 2014, 10:10:47 PM5/17/14
to mint...@googlegroups.com
##வரலாற்றுச் சின்னங்களை தாமே அழிக்கின்றோமே என்ற உணர்வு இல்லாமல் இப்படி செய்து விடுகின்றனர். வரலாற்றுச் சின்னங்கள் பற்றிய பொதுவான விழிப்புணர்ச்சி என்பது தேவை. அதனை இவ்வகை பதிவுகள்~ உருவாக்க முடிந்தால் மகிழ்வேன்##

உண்மைதான்....விழிப்புணர்வு அவசியம் ; மின்தமிழ் - மண்ணின்குரல் பதிவுகள் இதில் ஒரு சிறு பங்கைதான் ஆற்ற முடியும். உள்ளுர் ஆர்வலர்கள், தலைவர்கள், அரசியல்வாதிகள் பெரும் பங்காற்ற முடியும். அரசாங்கத்தின் முயற்சிகள் ஓரளவே வெற்றி தரும்.....

Geetha Sambasivam

unread,
May 18, 2014, 1:21:43 AM5/18/14
to மின்தமிழ்
ஆமாம், இந்த அழகில் மத்திய அரசு மாறியதால் கலாசாரம், மொழி, வரலாறு, தொன்மம் எல்லாமும் சிதையும்னு வேறே சொல்லிக்கிறாங்க.  அழிப்பது நாமேனு தெரியலை! :(

தேமொழி

unread,
May 18, 2014, 3:44:49 AM5/18/14
to mint...@googlegroups.com, மின்தமிழ், Subashini Tremmel



தொழில் முறை படபிடிப்பின் தரம்,  அருமையான விளக்கம் வாழ்த்துகள் சுபா.
சிறுவயதில் பள்ளியில் அழைத்துச் சென்று காண்பித்தார்கள், அப்பொழுது அதன் அருமை புரியவில்லை.  
மங்கு மங்கென்றி மலையேறிப் போனதற்கு இதுதான் படுக்கை என்று காண்பிக்கவும் வெறுப்படைந்த வயது.  
கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை என்பது போல ஏதோ போனோம் வந்தோம் என்று வந்ததை நினைத்தால் இப்பொழுது வருத்தமாக இருக்கிறது.

.... தேமொழி 

jayasree shanker

unread,
May 18, 2014, 7:29:05 AM5/18/14
to mint...@googlegroups.com
ஆஹா.....இப்போது தான் முதன் முறையாகப் படிக்கிறேன். செல்ல வேண்டும் என்று மனத்தில் ஒரு உந்துதல். மிக்க நன்றி. சித்தன்னவாசல் ஓவியங்கள் அற்புதம். 
அருமையான பதிவு. படங்களும் அருமை. மிக்க நன்றி சுபா,

அன்புடன் 
ஜெயஸ்ரீ ஷங்கர்.


18 மே, 2014 1:14 பிற்பகல் அன்று, தேமொழி <jsthe...@gmail.com> எழுதியது:

--

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
May 18, 2014, 10:09:17 AM5/18/14
to mint...@googlegroups.com

சூப்பர் !!!..பாராட்ட வார்த்தைகள் இல்லை !!!..அருமையான பகிர்வு சுபா!!..

sent from iphone.
அன்புடன் 
பார்வதி இராமச்சந்திரன்.
www.aalosanai.blogspot.com
www.kuviyalgal.blogspot.com

Innamburan S.Soundararajan

unread,
May 18, 2014, 10:40:51 AM5/18/14
to mint...@googlegroups.com
65 வருடங்களுக்கு பிறகு சித்தன்ன வாசல் சென்ற உணர்வு. நன்று, ஸுபாஷிணி.
ஒரு குறை. அக்காலம் திரும்பி வரும்போது மாங்காய் அடிப்போம்.

>>>> ​அறிவர் கோவில்
>>>>
>>>> புதுக்கோட்டை நகரிலிருந்து 12 கி.மீ தொலைவில் சித்தன்னவாசல் என்ற கிராமம்
>>>> உள்ளது. இங்குள்ள மலையில் சமணர் குகைக்கோவில் ஒன்று உள்ளது. இக்குகைக்
>>>> கோவிலின் உள்ளே ஒரு சிறு அறையும் வெளியே ஒரு தாழ்வாரமும் உள்ளன.
>>>> குகைக்கோவிலின் சுவர்களில் சமணத் தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் உள்ளன.
>>>> சித்தன்னவாசலும், இதனருகிலிள்ள அன்னவாசலும் பல நூற்றாண்டுகளாகச் சிறந்த
>>>> சமண
>>>> மையங்களாக விளங்கின.
>>>>
>>>>
>>>> ​கோவிலுக்குள்ளே
>>>>
>>>> மதுரையைத் தலைநகராகக் கொண்டு அவனிய சேகர ஸ்ரீவல்லப பாண்டியன் (கி.பி,
>>>> 815-862) ஆட்சி செய்தபொழுது இளம் கௌதமன் என்ற மதுரை ஆசிரியர்,
>>>> சித்தன்னவாசல்
>>>> குகைக் கோவிலைத் திருப்பணி செய்து, இங்கு உலகம் வியக்கும் ஓவியங்களைத்
>>>> தோற்ருவித்தா என்று இக்குகைக் கோவிலிலுள்ள கல்வெட்டுக்கள் மூலம்
>>>> அறியப்படுகின்றன. இங்குள்ள சுவர் ஓவியங்கள் பல்லவ மன்னன் மகேந்திரவர்மன்
>>>> காலத்தில் உருவானவை என்ற கருத்தும் உள்ளது.
>>>> *- தமிழ் நாட்டின் தல வரலாறுகளும் பன்பாட்டுச் சின்னங்களும்*
>>>>
>>>> சித்தன்னவாசல் குகைக் கோயில் ஓவியம், சிற்பம், நடனம் என முக்கலைகளையும்
>>>> சிறப்பிக்கும் கலைக்கூடமாக விளங்குகின்றது.
>>>>
>>>>
>>>> ​ஏழடிப்பட்டம் சமணர் படுக்கைகள்
>>>>
>>>> சித்தன்னாவாசலோடு இணைந்ததாக அமைந்திருப்பது ஏழடிப்பட்டம் சமணர் பள்ளி.
>>>> இங்குள்ள பாறையின் மலைப்பகுதியின் மேல் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட
>>>> 17
>>>> சமணர் படுக்கைகள் காணப்படுகின்றன. இங்கே பிராமி எழுத்துக்களிலான
>>>> கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கல்வெடுக்களில் சில கி.மு 3-2
>>>> வரையிலானவையாக இருக்கலாம் என அறியப்படுகின்றது.
>>>>
>>>>
>>>> விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2014/05/blog-post_
>>>> 17.html
>>>>
>>>> யூடியூபில் இப்பதிவைக் காண: https://www.youtube.com/watch?v=PbY0WlLwXrg
>>>>
>>>> இப்பதிவு ஏறக்குறைய 10 நிமிடங்கள் கொண்டது.
>>>>
>>>> *புகைப்படங்கள் பின்னர் இணைக்கப்பட்டு அறிவிக்கப்படும்!*
>>>>
>>>> இப்பதிவினை கடந்த வருடம் மார்ச் மாதத்தில் தமிழகத்தில் இருந்த சமயத்தில்
>>>> நான் பதிவாக்கினேன். இப்பதிவிற்கான தகவல்களை எனக்கு அனுப்பி உதவிய
>>>> தி*ரு.நரசய்யா
>>>> அவர்களுக்கும், டாக்டர். சுவாமிநாதன் அவர்களுக்கும்* தமிழ் மரபு
>>>> அறக்கட்டளையின் நன்றி.
>>>>
>>>> அன்புடன்
>>>> சுபாஷிணி ட்ரெம்மல்
>>>> *[தமிழ் மரபு அறக்கட்டளை] *
இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Suba.T.

unread,
May 18, 2014, 10:46:07 AM5/18/14
to மின்தமிழ், Subashini Tremmel
இனிய வார்த்தைகளும் கருத்துக்களும் பகிர்ந்து கொண்ட திரு.நரசய்யா, கீதா, பார்வதி, திரு.காளைராசன், ஜெயஸ்ரீ, தேமொழி அனைவருக்கும் நன்றி.

சுபா

Suba.T.

unread,
May 18, 2014, 10:47:34 AM5/18/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-05-18 16:40 GMT+02:00 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:
65 வருடங்களுக்கு பிறகு சித்தன்ன வாசல் சென்ற உணர்வு. நன்று, ஸுபாஷிணி.
ஒரு குறை. அக்காலம் திரும்பி வரும்போது மாங்காய் அடிப்போம்.


​எனக்கு முதலிலேயே சொல்லியிருக்கலாம் நீங்கள். நான் சித்தன்னவாசல் மாமரத்தையும் தேடி படம் பிடித்திருப்பேனே :-)

சுபா


Nirmala Raghavan

unread,
May 18, 2014, 7:43:43 PM5/18/14
to mint...@googlegroups.com
நான்கு ஆண்டுகளுக்குமுன், குடும்பத்துடன்  நான் சித்தன்ன வாசல் போயிருந்தேன். கீழே நிறைய மயில்கள் ஓடிக்கொண்டிருந்தன. மேலே ஒரு மண்டபத்தின் நடுவில் நின்று, கை முட்டிகளை இறுக்கிக்கொண்டால், `ஓம்' என்ற ஒலி கேட்கும். புல்லரிக்க வைத்த நிகழ்ச்சி.
நிர்மலா


Reply all
Reply to author
Forward
0 new messages