நீங்களும் கல்வெட்டு அறிஞர் ஆகலாம்

11 views
Skip to first unread message

தேமொழி

unread,
Dec 19, 2025, 11:19:39 PM (2 days ago) Dec 19
to மின்தமிழ்
கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் ஓராண்டு காலப் பட்டய வகுப்பு - 2026

சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2026ஆம் ஆண்டிற்கான ஓராண்டு கல்வெட்டியல் மற்றும் தொல்லியல், அகழாய்வுக்கான பட்டய வகுப்பு 2026 சனவரித் திங்கள் முதல் தொடங்கப்பட உள்ளது. இவ்வகுப்பில் கல்வெட்டியல், தொல்லியல் வழி தமிழக வரலாறு, மொழி, பண்பாடு, கலை, இலக்கியம் குறித்து அறிந்து கொள்வதற்கும்.

கல்வெட்டுப் படியெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்தலுக்கான பயிற்சியும் அளிக்கப்படும். இதில் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பட்டய வகுப்பு வார விடுமுறை நாளான ஞாயிறுதோறும் (முழுநேரம்) நேரடியாக ஓராண்டுக் காலம் சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடத்தப்பெறும்.

இப்பட்டய வகுப்பிற்கான விண்ணப்பத்தினை நிறுவன வலைதளத்தில் (www.ulakaththamizh.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ்வகுப்புக்கான குறைந்தபட்சக் கல்வித் தகுதி பத்தாம் வகுப்புத் தேர்ச்சி. வயது வரம்பு கிடையாது. விண்ணப்பக் கட்டணம் + சேர்க்கைக் கட்டணம் + அடையாள அட்டை + தேர்வுக் கட்டணம் என மொத்தம் ரூ.4000/- செலுத்த வேண்டும். கட்டணத்தை The DIRECTOR, International Institute of Tamil Studies எடுத்தல் வேண்டும்.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் வரைவோலையை இணைத்து அஞ்சலில்/தூதஞ்சலில் நிறுவனத்திற்கு அனுப்பப்பட வேண்டும். அனுப்ப வேண்டிய முகவரி: இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச்சாலை, மையத்தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை 600 113 அல்லது நேரடியாக அலுவலகத்தில் ரொக்கமாகச் செலுத்தி விண்ணப்பம் செய்திடலாம்.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 2026 சனவரி 20ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் நிறுவன முகவரிக்கு வந்து சேர வேண்டும். வகுப்புகள் தொடங்கப்பெறும் நாள், நேரம் போன்ற விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.

மேலும் தகவல்களுக்கு. வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 044-22542992, 9500012272 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

application.jpg
விண்ணப்பம் இணைப்பிலும் . . . 
Kalvettu Application.pdf
Reply all
Reply to author
Forward
0 new messages