அறச்சலூர் – பிராமிக்கல்வெட்டு
வரலாற்றுக்காலத்துக்கு முந்தைய தொல்மாந்தர்
வரலாற்றுக்காலத்துக்கு முந்தைய தொல்மாந்தர் தாங்கள் பார்த்தவற்றை நினைவுபடுத்திக்கொள்ளவும், தங்கள் எதிரில் இல்லாதவர்க்குக் காலம் இடம் கடந்து செய்தி தரவும் படங்கள், குறியீடுகள் ஆகியவற்றைத் தாங்கள் தங்கியிருந்த குகைப்பாறைகளில் வரைந்தனர். இத்தகைய பாறை ஓவியங்களே எழுத்துகளுக்கு அடித்தளங்களாயின. எழுத்துகள் கிடைத்த காலத்திலிருந்துதான் வரலாறு தொடங்குகிறது என அறிஞர்கள் வகுத்திருக்கிறார்கள்.
தொன்மை எழுத்துகள்
குறியீடுகளிலிருந்து எழுத்து வந்தது என்று கருதப்படுகிறது. மிகத்தொன்மையான எழுத்து வடிவத்துக்குச் சான்றாக, இந்திய அளவில் இன்றுள்ள பலவேறு எழுத்துகளுக்கு முன்னோடியாக விளங்குபவை கரோஷ்டி, பிராமி என்ற இரு தொன்மை எழுத்துகளே ஆகும். இன்று வழக்கிலுள்ள, இடமிருந்து வலமாக எழுதப்படும் எழுத்துகளுக்கு முன்னோடி பிராமி எழுத்தாகும். வலமிருந்து இடமாக எழுதப்படும் அரபி, பாரசீகம் முதலிய எழுத்துகளுக்கு முன்னோடி கரோஷ்டியாகும். இந்தியா முழுதும் பயன்பாட்டில் இருந்த பிராமி எழுத்து, தமிழகத்தில் தமிழ்-பிராமி என அழைக்கப்படுகிறது. தமிழ் மொழியை மட்டுமே எழுதப்பயன்பட்ட இவ்வெழுத்து “தமிழி’ என்றும் அழைக்கப்பபடுகிறது.
சமணக்குகைத்தளங்களும் தமிழ்-பிராமியும்
தமிழ்-பிராமி எழுத்துகள் தமிழகத்தில் ஏறத்தாழ முப்பது ஊர்களில் மலை சார்ந்த குகைத்தளங்களில் கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்-பிராமிக் கல்வெட்டுகள் சிறு குன்றுகள் மற்றும் உயர்ந்த மலைகளில் இயற்கையாக அமைந்த குகைத்தளங்களில் காணப்படுகின்றன. இக்குகைத்தளங்களில் பெரும்பாலும், மக்களையும் ஊர்களையும் விட்டு ஒதுங்கி மிக எளிமையாக வாழும் தன்மையினரான சமண முனிவர்கள் தங்கியிருந்தனர். அவர்கள், தங்களின் தனிமைத்தவத்தோடு, கல்வி, அடைக்கலம், மருத்துவம் ஆகிய மூன்று அறங்களையும் கடைப்பிடித்தனர். அவர்களது அறநெறி வழிகாட்டலில் ஈர்க்கப்பட்ட மக்கள் அவர்கள்பால் கொண்ட பெருமதிப்பின் காரணமாக இக்குகைத்தளங்களில் துறவிகள் படுத்துறங்க எளிமையான கற்படுக்கைகள் அமைத்துக் கொடுத்தனர். மழை நீர் குகைத்தளங்களில் செல்லாமல் தடுக்க குகைப்பாறையின் முகப்பில் விளிம்புப் புடைப்புகளை வெட்டிக்கொடுத்தனர். குடிநீருக்காகச் சுனைகளையும் அமைத்துக்கொடுத்தனர். இவ்வகையான அறச்செயல்களைக் கல்வெட்டுகளாக வெட்டிப் பதிவுசெய்தனர். கல்வெட்டுகள் இவ்வறச்செயல்களைத் “தம்மம்” , “அறம்” என்னும் சொற்களால் குறிப்பிடுகின்றன.
இவ்வகைக் குகைத்தளங்கள் எளிமையானவை, ஒதுக்குப்புறமானவை. எனினும் அக்குகைத்தளங்களிலிருந்து பார்க்கும்போது அவற்றின் எதிரே மிகப்பரந்த சமவெளியினைக்காணமுடிகிறது. நெடுந்தூரத்து நிகழ்வுகளை நோக்கும் வண்ணம் அவற்றின் குறுக்கே எவ்விதத் தடைகளும் இல்லாத குகைத்தளங்களாக அவை அமைந்திருப்பதைக்காணலாம். தமிழ்-பிராமிக் கல்வெட்டு உள்ள இடங்கள் பெருவழிகளை அடுத்தும், பண்டைய நகரங்கள் மற்றும் வணிகச்சிறப்புடைய ஊர்களை அடுத்தும் இருப்பதைக் காணலாம்.
அறச்சலூர் சமணக்குகையும் தமிழ்-பிராமிக் கல்வெட்டும்
தமிழ்-பிராமிக்கல்வெட்டுகள் காணப்படும் ஊர்கள் முப்பது என்று மேலே குறிப்பிட்டோம். அவற்றில் பதினான்கு ஊர்கள் மதுரை மாவட்டத்தைச்சேர்ந்தவை. நெல்லை, விழுப்புரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இரண்டிரண்டு ஊர்கள். கொங்குப்பகுதியில் சேலம் மாவட்டத்தில் ஒன்றும், கரூர்ப்பகுதியில் ஒன்றும், ஈரோடு பகுதியில் ஒன்றும் என மூன்று ஊர்களில் கல்வெட்டுகள் உள்ளன. ஈரோடு மாவட்டத்தில், ஈரோட்டுக்கருகில், ஈரோடு-காங்கயம் சாலையில் அமைந்துள்ள அறச்சலூர் கல்வெட்டைச் சென்ற 27-02-2016 அன்று கட்டுரை ஆசிரியரும், அவிநாசி வரலாற்று ஆர்வலர் ஜெயசங்கரும் சென்று பார்த்தனர். தமிழகத்தின் தொன்மையான எழுத்தைக்கொண்டிருக்கும் கல்வெட்டு நம் பகுதியில் அறச்சலூரில் இருக்கும் வரலாற்றுப்பெருமை நம்மில் பலருக்குத் தெரியாது என்னும் காரணத்தாலும், இச்செய்தி நாளிதழில் வெளியிடப்பட்டு அதன் மூலம் அறச்சலூர் ஊர்மக்களுக்குத் தம் ஊரின் சிறப்பு புலப்படவேண்டும் என்னும் காரணத்தாலும் இக்கட்டுரை எழுதப்படுகிறது.
அமைவிடமும் மலைப்பாதையும்
அறச்சலூர், முன்னர் குறிப்பிட்டவாறு, ஈரோடு-காங்கயம் சாலையில் அமைந்துள்ள ஒரு சிறிய ஊர். ஊரை அடைந்து அங்கே இருப்பவர்களிடம் சமணக்குகையைப்பற்றியும் கல்வெட்டைபற்றியும் கேட்டோம். நன்கு தெரிந்தவர் கிடைக்கவில்லை. பின்னர், அப்பகுதியில் கட்டிடப்பணியில் ஈடுபட்டிருந்த ஒருவரிடம் கேட்டபோது அவ்வூர் இளைஞர் சுரேஷ் என்பவர் அறிமுகமானார். அவர் வழிகாட்ட நாங்கள் பின்தொடர்ந்தோம்.. கல்வெட்டு அமைந்திருக்கும் மலை நாகமலை என்னும் பெயருடையது. காங்கயம் சாலையில் ஓரிடத்தில் வாய்க்கால் ஒன்றும், வாய்க்காலை ஒட்டி ஒரு சிறிய சாலையும் உள்ளன. இந்தச்சாலையில் சிறிது தொலைவு சென்று மலையடிவாரத்தை நோக்கியுள்ள ஏற்றமான மண் பாதையில் சற்றுத்தொலைவு சென்றதும் கருவேல முள்மரங்கள் நிறைந்த பகுதி தென்பட்டது. அந்த முள்மரங்களினூடே சிறிது தொலைவு நடந்து சென்றதும் மலையின் அடிவாரப்பாறைப்பகுதி தென்பட்டது.
பாறைகளுக்கிடையில் பத்துப்பதினைந்து நிமிடங்கள் ஏறிச்சென்றதும், ஒரு பாறைப்பிளவு தென்பட்டது. அருகில் சென்றோம். குறுகலான ஒரு குகைத்தளம். முகப்பிலிருந்து சற்றே உள்பகுதியில் நுழைந்ததும், நாம் நிமிர்ந்து நின்ற நிலையிலிருந்து குனியவேண்டிய நிலை. குனிந்து சென்று அமர்ந்தோம். சமணத்துறவிகளுக்கு வெட்டிக்கொடுத்த படுக்கைகள் (நன்கு பார்த்தால்தான் அவை படுக்கைகள் எனத்தெரியும்) இருந்தன. ஒரு படுக்கையின் தலைப்பகுதியில் இரு வரிகளில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. குகைத்தள வாயிலில் நின்று எதிரே பார்த்தால் தடைகளற்ற பரந்தவெளி தெரிந்தது.
கல்வெட்டும் அதன் செய்தியும்
இந்தக்கல்வெட்டைப் பார்க்கக் கல்லூரிகளிலிருந்து பேராசிரியர்களும் மாணவர்களும் வந்துபோயிருக்கின்றனர் என அறிந்தோம். எனவே கல்வெட்டின்மீது சாக்கட்டியால் விளம்பியிருந்தது வியப்பை அளிக்கவில்லை.
விளம்பிய நிலையில் கல்வெட்டு:
விளம்பிய நிலையில் அதைப்படிக்க முடிந்தாலும், எழுத்துகளின் சரியான வடிவத்தை ஓரளவு தெரிந்துகொள்ள சாக்கட்டி விளம்பலை நீர்கொண்டு கழுவித் துடைத்துவிட்டு, எழுத்துகளின் பொறிப்புப் பள்ளங்களில் நீரில் கலந்த வெள்ளைச் சுண்ணத்தூளைப்பூசிக் காயவிட்டுப்பார்த்தோம். ஓரளவு எழுத்துகளின் வடிவம் புலப்பட்டது. கல்வெட்டின் பாடம், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினர் வெளியிட்ட “தமிழ்-பிராமி கல்வெட்டுகள்” நூலில் காணப்படுகிறது. பாடம் வருமாறு:
வரி 1 எழுத்தும் புணருத்தான் மணிய்
வரி 2 வண்ணக்கன் தேவன் சாத்தன்
மணிவண்ணக்கனான தேவன் சாத்தன் (இசை) எழுத்துகளைச் சேர்த்தமைத்தான் என்பது இதன் பொருளாகும். இசை எழுத்துகள் பற்றிச் சிலப்பதிகார உரையில் (சிலம்பு 17:13 உரை) அடியார்க்குநல்லார், “பாலை” என்னும் படவடிவ இசைக் குறிப்புகள் உண்டு என்றும் அவை வட்டப்பாலை, சதுரப்பாலை என்று இருவகைப்படும் எனவும் குறிப்பிடுகிறார். அதுபோன்ற ஒரு சதுரப்பாலை வடிவத்தை எழுத்துகளால் பொறித்திருக்கிறார் தேவன் சாத்தன் என்பவர். இந்தச்சதுரப்பாலையின் வடிவத்தில் ஒரு கல்வெட்டு அருகிலேயே பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு சிதைந்துள்ளது. மேலே குறிப்பிட்ட நூலில் கொடுக்கப்பட்ட கல்வெட்டுப் பாடம் வருமாறு:
வரி 1 த தை தா தை த
வரி 2 தை தா தே தா தை
வரி 3 தா தே தை தே தா
வரி 4 தை தா தே தா தை
வரி 5 த தை தா தை த
இந்தச்சதுரத்தில், இடமிருந்து வலமாக, வலமிருந்து இடமாக, மேலிருந்து கீழாக, கீழிருந்து மேலாக எப்படிப் படித்தாலும் ஒன்றுபோல் அமைந்துள்ளதைக்காணலாம்.
எழுத்துப்புணருத்தான் கல்வெட்டு – சில விளக்கங்கள்
இக்கல்வெட்டுக்குப் பாடபேதங்களும் உண்டு. அவற்றில் குறிப்பிடத்தக்கவை கீழ் வருமாறு.
முதலாவது:
வரி 1 எழுத்துப் புணருத்தான் மணிய்
வரி 2 வண்ணக்கன் தேவன் சாத்தன்
இரண்டாவது:
வரி 1 எழுத்தும் புணருத்தான் மலைய்
வரி 2 வண்ணக்கன் தேவன் சாத்தன்
”மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்” (15)
“மெய் ஈறு எல்லாம் புள்ளியொடு நிலையல்” (104)
என்னும் தொல்காப்பிய விதிப்படி, மெய்யெழுத்துகள் புள்ளிபெற்று அமையவேண்டும். அதுபோலவே, ”ஏ”, ”ஓ” ஆகிய நெடில் எழுத்துகளும் குறிலாக்க் காட்டும்போது புள்ளிபெறும் மரபு இருந்துள்ளதைத் தொல்காப்பியம் கீழ்வருமாறு கூறுகிறது:
”எகர ஒகரத்து இயற்கையும் அற்றே”
அறச்சலூர்க் கல்வெட்டில் இந்த விதிமரபு கடைப்பிடிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். கல்வெட்டின் முதல் எழுத்தாகிய “எ” குறிலில் புள்ளி இருப்பதைக் காணலாம்.
வட்டெழுத்தின் தொடக்க நிலை
இக்கல்வெட்டின் எழுத்துகள் பிராமி எழுத்திலிருந்து வட்டெழுத்து தோன்றுவதற்கு அடிப்படையான மாற்றத்தின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. பெரும்பாலும் நேர்கோடுகளால் அமைந்த பிராமி எழுத்தின் திருந்திய வடிவம் சற்றே மாறுபட்டு வளைவுகள் நிரம்பப்பெற்றதாக உருக்கொண்ட நிலையை இங்கு காண்கிறோம். மேலும், பிராமி எழுத்துகள் போலன்றி, எழுத்துகள் தலைக்கோடு பெற்றுள்ளதைக் காணலாம்.
கல்வெட்டில் வரும் வண்ணக்கன் என்னும் சொல் ஆய்வுக்குரியது. புறநானூறுப்பாடல்-198 வடமவண்ணக்கன் பேரிசாத்தனார் என்னும் புலவர் பாடியது. புறநானூற்றுக்கு உரை எழுதிய ஔவை.சு.துரைசாமிப்பிள்ளை தம் குறிப்புரையில், வண்ணக்கன் என்னும் பெயர் பொன்னோட்டம் பார்க்கும் தொழிலினரைக் குறிப்பதாகும் என்று கூறுகிறார். இது, பொன்னின் தரத்தையும், பொற்காசின் தரத்தையும் பார்ப்பவர் என்று பொருளாகிறது. இந்த வண்ணக்கன், மலை வண்ணக்கனா அல்லது மணி வண்ணக்கனா என்னும் ஐயம் ஏற்படக்காரணம், கல்வெட்டில் இந்தப்பெயரில் வரும் ஓர் எழுத்து, “ணி” மற்றும் “லை” என இருவேறு வகையில் படிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் துறையின் மேலே குறிப்பிட்ட நூலில், முடிவாக “மணி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை, நூல் குறிப்பில், “மணி என்பதைவிட மலை என்பதே எழுத்தின் அடிப்படையில் ஏறத்தாழ சரியாக உள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது. எழுத்தைக் கல்லில் பொறித்த சிற்பி இந்த ஓர் எழுத்தை மட்டும் தெளிவாகச் செதுக்காமல் விட்டது இவ்வாறான ஐயம் எழ இடமளித்தது எனலாம். மலை வண்ணக்கன் என்பது மலைப்பிரதேசத்தைச் சேர்ந்த வண்ணக்கன் என்ற குடியைச் சேர்ந்தவன் எனப்பொருள்படும். ஆனால், அறச்சலூருக்கு அண்மையில் உள்ள கொடுமணல் என்னும் ஊரில் செய்யப்பட்ட அகழாய்வில் சங்ககாலத்திய வண்ணமணிகள் செய்யப்பட்ட தொழிற்கூடங்கள் அறியப்பட்டுள்ளதால் மணிகளைச் சோதிப்பவன் என்பதும் பொருந்துகிறது.
இப்போது கல்வெட்டின் எழுத்துகளைப் பார்த்து “மணிவண்ணக்கன்” , “மலைவண்ணக்கன்” ஆகியவற்றில் மிகையாக எது பொருந்திவருகிறது எனக் காண்போம்.
கல்வெட்டின் மூலம்
கலவெட்டின் பார்வைப்படி - பிராமி வடிவம்
கலவெட்டின் பார்வைப்படி - வட்டெழுத்தாக மாற்றம்
ம ணி/லை ய்
முதல் எழுத்து - “ம”
பிராமி வடிவம்
வட்டெழுத்தாக மாற்றம்
இரண்டாவது எழுத்து - “ணி”
பிராமி வடிவம்
வட்டெழுத்தாக மாற்றம்
இரண்டாவது எழுத்து - ”லை”
பிராமி வடிவம்
கல்வெட்டில் உள்ள எழுத்தை “லை” எனக்கொண்டால், பிராமி வடிவ “லை” எழுத்துக்கும் கல்வெட்டில் உள்ள வட்டெழுத்தாக மாற்றம் கொண்ட “லை” எழுத்துக்கும் ஒற்றுமை இல்லை என்பது புலப்படும். எனவே, கல்வெட்டில் உள்ள எழுத்து “ணி” எழுத்தோடு ஒத்துப்போகிறது. ஆதலால், “மணிவண்ணக்கன்” என்ற பாடம் சரியெனத்தோன்றுகிறது.
இத்தகு சிறப்பு வாய்ந்த கல்வெட்டுகளை 1960-ஆம் ஆண்டில் கண்டறிந்தவர் ஈரோட்டுப்புலவர் இராசு அவர்கள். இவர் பின்னாளில் முனைவர் பட்டம் பெற்றுத் தஞ்சைப்பல்கலையில் கல்வெட்டுத்துறையின் தலைவராக இருந்து பணிஓய்வு பெற்றவர்.
புகழ்பெற்ற இக்கல்வெட்டு, தொல்லியல் துறையின் தகவல் பலகைகூட இல்லாமல் பாதுகாப்பற்ற நிலையில் தூய்மையின்றி உள்ளது வருத்தமளிக்கும் செய்தியாகும். ஊர்மக்களின் ஒத்துழைப்போடு இந்த இடத்தைத் தூய்மைசெய்து, ஒரு தகவல் பலகையை நிறுத்திக் கல்வெட்டு அழியாமல் பாதுகாப்பது அவசியமாகிறது.
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நன்றி சுபா அவர்களே. வேறொரு வேலையாக ஈரோட்டுப்பக்கம் சென்றபோதுதிரும்பும் வழியில் அறச்சலூர் சென்றேன். மாலைநேரம் ஆனதால் “எழுத்துப்புணருத்தான்” கல்வெட்டில் மட்டும் எண்ணம் செலுத்திவிட்டேன்.இசைக்கல்வெட்டைப் படம்கூட எடுக்காமல் விட்டுவிட்டேன். இசைக்கல்வெட்டு எழுத்துகள் மிகவும் தேய்ந்து காணப்பட்டதும் ஒரு காரணம் . எனவே, தொல்லியல் துறையினரின் ”தமிழ் - பிராமிக்கல்வெட்டுகள்” நூலில் இருந்த சதுரப்பாலை வடிவத்தை மட்டும் காட்டியிருந்தேன். கல்வெட்டின் மூலம் காட்டவியலாதது குறையே. உங்களிடம் இசைக்கல்வெட்டின் படம் இருந்தால் அனுப்புங்கள்.கட்டுரைச் செய்திகளுக்கு முற்றும் துணை நின்றது மேலே குறிப்பிட்ட நூலே.கட்டுரையில் அதைக்குறிப்பிடத் தவறிவிட்டேன்.சுந்தரம்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
...
--
...
நன்றி சுந்தரம் ஐயா. தங்கள் விளக்கத்திற்கு நன்றி. தாமதமான பதிலுக்கு பொறுத்தறுள்க.
ஆனால், தம்மலிபி பற்றிய கட்டுரை கீற்று இணைய தளத்தில் ஆய்வாளர் நடன காசிநாதன் என்று எண்ணுகிறேன் அவர் எழுதியிருந்தார். மேலும் சிலரும் இது பற்றி சொல்லியிருந்தனர். அக்கட்டுரையைத் தேடிப்பார்த்து இங்களிக்கிறேன். நன்றி.
சங்ககாலத் தமிழ் எழுத்துக்கள் முனைவர் மா.பவானி உதவிப்பேராசிரியர் கல்வெட்டியல் துறை (தமிழி அல்லது தமிழ் பிராமி) சங்ககாலத்தில் தமிழ் மொழிக்கு வழக்கிலிருந்த எழுத்துக்கள் இவையே ஆகும். இவை பலவாறாகப் பெயரிட்டு அழைக்கப் பெறுகின்றன.
சங்ககாலத் தமிழ் எழுத்துக்கு வழங்கப் பெற்ற பிற பெயர்கள்: இவ்வெழுத்துக்கள் தமிழி, தமிழ் பிராமி, பழந்தமிழ் என்று பலவாறாக அழைக்கப் பெறுகின்றன. அவற்றுக்கான காரணம் பின்வருமாறு: வட இந்திய பிராமி எழுத்துக்களுக்கும் சங்ககாலத் தமிழகத்தில் வழக்கத்திலிருந்த எழுத்துக்களுக்கும் உருவ அளவில் ஒற்றுமை இருப்பினும் பல வேறுபாடுகள் உள்ளன. “தமிழி” யில் வர்க்க எழுத்துக்கள் இல்லை. கூட்டெழுத்து முறைகளும் உரசொலி எழுத்துக்களும் இல்லை. அதுபோல் தமிழ் எழுத்துக்களில் உள்ள ழ, ள, ற, ன வடிவங்கள் வட இந்திய பிராமியில் இல்லை. இந்தியாவில் பிற பகுதிகளில் கிடைக்கும் பிராமி எழுத்துகள் பிராகிருத மொழியில் (புத்த தர்மத்தை போதிப்பனவாக) இருக்கும் பொழுது தமிழ் நாட்டில் தமிழ் மொழி மட்டுமே பயன்படுத்தப் பெற்றுள்ளது. எனவே தமிழகத்தில் கிடைக்கும் பிராமி எழுத்துக்களை வட இந்திய பிராமியிலிருந்து வேறுபடுத்தி உணர்த்தும் பொருட்டு இவை தமிழ் பிராமி அல்லது தமிழி என்று அழைக்கப்படுகிறது. இதை நாம் சங்ககாலத் தமிழ் எழுத்துக்கள் என்றே அழைக்கலாம். அந்த எழுத்துக்களே இங்கு காட்டப்பட்டுள்ளன. பெயர்க்காரணம்: இந்தியா முழுவதும் கிடைக்கும் பிராமி கல்வெட்டுக்களில் பெரும்பாலும் பிராகிருத மொழி இடம்பெறுகிறது. ஆனால் தமிழகத்தில் கிடைக்கும் கல்வெட்டுக்களில் தமிழ் மொழி மட்டுமே இடம்பெறுகிறது. சில பிராகிருத வரிவடிவங்கள் (ஸ, த4) மற்றும் ஒரு சில பிராகிருத சொற்கள் (த4 ம்மம் ஸாலகன்) மிகவும் அரிதாகவே கிடைக்கின்றன. எனவே எழுத்து ஒற்றுமையிருப்பினும் மொழி மற்றும் சில சிறப்புத் தன்மைகள் காரணமாக சங்க காலத்தில் கிடைக்கும் பழந்தமிழ் எழுத்துக்களை இப்பொழுது இருக்கும் தமிழ் எழுத்திலிருந்தும் அசோக பிராமி எழுத்திலிருந்தும் வேறுபடுத்துமுகமாக வழங்கப்பெற்ற பெயரே “தமிழி” அல்லது “தமிழ் பிராமி” என்பதாகும். தமிழகத்தில் கிடைக்கும் பிராமி எழுத்திற்கு “தமிழ் பிராமி” என்று பெயரிட்டவர் ஐராவதம் மகாதேவனாவார். அதுபோல் “தமிழி” என்று பெயரிட்டவர் நாகசாமியாவார். இதனை “தொன்மைத் தமிழ் எழுத்துக்கள்” என நடன காசிநாதன் மற்றும் சு.இராசவேல் போன்றோர் குறிப்பிடுகின்றனர்.
சங்கத் தமிழ் எழுத்துப் பொறிப்பு பெற்ற கல்வெட்டுக்கள் கிடைக்கும் இடங்கள்
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
* தற்பொழுது இவ்விடம் கேரளாவில் உள்ளது. இது தொன்மைப் தமிழகப் பகுதியாகும். காலம்: தோராயமாக (பொ.ஆ.மு. 500 - பொ.ஆ. 400) பொ.ஆ.மு 5ஆம் நூற்றாண்டு (பொருந்தல் மற்றும் கொடுமணல் அகழாய்வுகளில் கிடைத்த பானை ஓட்டின் அடிப்படையில் இதன் மேலெல்லை பொ.ஆ.மு. 5ஆம் நூற்றாண்டெனத் தொல்லியலாளர் கா.ராஜன் (பேராசிரியர், வரலாற்றுத்துறை, பாண்டிச்சேரிப் பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி) அண்மைக் காலத்தில் காலத்தை குறித்துள்ளார். பொ.ஆ. 4ஆம் நூற்றாண்டு வரை இவ்வெழுத்துக்கள் வழக்கிலிருந்துள்ளன. பிறகு இவ்வெழுத்துக்களே மாற்றம் பெற்று வட்டெழுத்துக்களாக வளர்ச்சியடைந்துள்ளன. அதற்கான தொடர்ச்சியான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. எனவே சங்க காலத் தமிழ் எழுத்துக்கள் பொ.ஆ.மு.5 ஆம் நூற்றாண்டு முதல் பொ.ஆ.4 ஆம் நூற்றாண்டு வரை என்று காலம் கணிக்கப் பெறுகிறது. பெயர்க்காரணம்: பொதுவாக இந்தியாவில் முந்தைய காலங்களில் “பிராமி”, “கரோஷ்டி” என்ற இரு வகை எழுத்துக்கள் வழக்கத்திலிருந்துள்ளன என்பது 19ஆம் நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலிருந்து வெளிக்கொணரப்பட்டுள்ளன. இவற்றில் “பிராமி” எழுத்துக்களே இந்தியா முழுவதும் நன்கு வழக்கத்திலிருந்துள்ளன. இவ்வெழுத்துக்களிலிருந்தே பின்னர் வந்த பிராந்திய வரிவடிவங்கள் எழுச்சி பெற்று வளர்ந்து இன்றைய நிலையை அடைந்துள்ளன என்பது பெரும்பாலும் ஏற்கப்பட்டுள்ள கருத்தாகும். “கரோஷ்டி” எழுத்துக்கள் இந்தியாவின் வட மேற்குப் பகுதியில் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் மட்டுமே வழக்கத்திலிருந்துள்ளன. ‘பிராமி’ வடிவம் துவக்க காலத்தில் “லத்” அல்லது “லாட்” (lath or lat) என்றும், அசோக பிராமி என்றும், மௌரிய பிராமி என்றும், “இந்தியன் பாலி” என்றும், ‘தம்மலிபி’ என்றும் அழைக்கப்பெற்றுள்ளது. இப்பெயர் தூண் என்பதற்கு வழங்கப்படும் சொல்லின் அடிப்படையிலும், அரசர் பெயர் அடிப்படையிலும், அரச மரபு அடிப்படையிலும், மொழியின் அடிப்படையிலும், தர்மத்தை எடுத்துரைத்ததின் அடிப்படையிலும் அறியப்பட்டது. ஜேம்ஸ் பிரின்ஸெப் என்ற ஆங்கிலேயே அறிஞரே இவ்வெழுத்துக்களை முதன் முதல் (1837) படித்தறிந்ததோடு கிரேக்கம் போன்ற பிற மொழி எழுத்துக்களுடன் ஒப்பிட்டு அந்தந்த எழுத்துக்களுக்கான ஒலிகளை நிச்சயித்த பெருமை பிரின்ஸப் அவர்களையே சாரும். வட இந்திய பிராமி கல்வெட்டுக்களை பட்டிபுரோலு கல்வெட்டுக்களுடன் ஒப்பிட்டு இவ்வெழுத்துக்களுக்கான ஒலிகளை பியூலரும் கணித்துள்ளார். இந்தியாவில் இருந்த புத்த, சமண சமய இலக்கியச் சான்றுகளின் அடிப்படையில் இதற்கு “பிராமி” (1886) என்று பெயரிட்டவர் டெர்ரியன் -டி- லாக்கோப்பெரி என்ற பிரெஞ்சு அறிஞரே ஆவார். இப்பிராமி எழுத்து அவற்றை பயன்படுத்திய அரசுகளுக்கேற்ப “அசோக பிராமி”, “மௌரிய பிராமி”, “குப்த பிராமி”, “குஷான பிராமி”, “சாதவாகன பிராமி” எனப் பலவாறாக அழைக்கப் பெற்றுள்ளன. பிரம்மனிலிருந்து தோன்றியதால் “பிராமி” எனப் பெயர் பெற்றுள்ளது என்ற கருத்தும் உள்ளது, ஆனால் இன்று வரை “பிராமி” என்று பெயர் விவாதிக்கத்தக்க ஒன்றாகவே உள்ளது. தமிழி: இந்தியாவின் வடபகுதியில் அசோகன் கல்வெட்டுக்கள் அனைத்திலும் இருவிதமான எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவை பொதுவாக “தம்மலிபி” என்று பெயர் கூறப்படுகிறது. இருப்பினும் இவை பிராமி மற்றும் கரோஷ்டி வரிவடிவங்களில் எழுதப்பட்டுள்ளன. இடமிருந்து வலமாக எழுதும் எழுத்து முறை பிராமி என்றும், வலமிருந்து இடமாக எழுதும் எழுத்து முறை கரோஷ்டி என்றும் சமாவயங்க சுத்த, பண்ணவாந சுத்த போன்ற சமண நூல்களும், லலிதவிஸ்தரா (64) என்ற பௌத்த நூலும் தெரிவிக்கின்றன. இவற்றுள் காலத்தால் முற்பட்டது சமண நூலே ஆகும். இது பொ.ஆ.மு. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இவைகள் குறிப்பிடும் எழுத்து வகைகளுள் பிராமி, கரோஷ்டி போன்றவை இடம்பெறுவது போல் “தாமிலி” என்பதும் குறிப்பிடப்பெற்றுள்ளது. தமிழ் மொழியின் “ழ”கரத்தின் சரியான உச்சரிப்பினை வடமொழியினர் அறிந்திலர். எனவே தமிழி என்பதற்குப் பதிலாக “தாமிலி” என உச்சரித்திருக்கலாம். அசோகரது கல்வெட்டுக்களிலும் கூட “சோழர்” என்பது “சோடா” என்றே குறிக்கப்பட்டுள்ளது. எனவே பிராமி என்ற பெயர் வழங்கப் பெற்ற அதே கால கட்டத்திலேயே “தமிழி” என்ற பெயரும் வழக்கில் இருந்துள்ளது இங்குச் சுட்டத்தக்கது. கரோஷ்டியும், பிராம்மியும் வேறு இரு எழுத்துக்களாகும். அசோகர் காலத்திற்கு முற்பட்டதாகக் கருதத்தக்க அளவில் பட்டிபுரோலுவில் (ஆந்திரா, கிருஷ்ணா மாவட்டம்) கிடைத்த எழுத்திற்கும் தமிழகத்தில் உள்ள எழுத்திற்கும் சில வேறுபாடுகள் இருப்பினும் அவைகளுக்கிடையில் பலவகையில் ஒற்றுமைகள் உள்ளன. ஆதலால் “பிராமி” என்ற எழுத்துக்களைத் தமிழில் “பிராமி” என்று அழைப்பது சரியா? என்று சிந்தனை செய்யவேண்டும். சமண நூலில் காணப்படுவது போல “தமிழி” என்ற பெயர் தான் சரியானது என நாகசாமி குறிப்பிடுகின்றார். தமிழகத்தைச் சேராதவர்கள் அவர்களின் மொழி மரபிற்கு ஏற்றவாறு “தாமிழி” என்று கூறியிருக்கலாம் எனினும் சிலர் இவை குகைகளில் மட்டும் இருப்பதால் இவற்றை “லேனா” எழுத்துக்கள் என்றும் குறிப்பிடுகின்றனர். திராவிடி: சுமார் 5-6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் லலிதவிஸ்தரம் என்ற நூலில் 64 வகையான எழுத்துக்களுள் ஒன்றாக “திராவிடி” குறிப்பிடப் பெறுகிறது. திராவிடி என்னும் பிற்காலப் பெயர் பண்டைய தமிழ் எழுத்தான தமிழுக்குப் பொருந்தாது. இவை பொ.ஆ. 5-6ஆம் நூற்றாண்டில் வழக்கிலிருந்த தெலுங்கு, கன்னடம், கிரந்தம் ஆகிய எழுத்துக்களுக்கு மட்டுமே பொருந்தும் என நாகசாமி கருதுகின்றார். தென் பிராமி: அசோகர் காலத்திற்குப் பின்னர் தமிழகத்தையும் ஆந்திர மாநில பட்டிபுரோலுவையும் தவிர்த்த தக்காணப் பகுதியில் வழங்கிய பிராமியே “தென் பிராமி” என அழைக்கப்பட்டது என ஐராவதம் மகாதேவன் கூறுகின்றார். தென்னகத்தில் குறிப்பாக ஆந்திர மாநிலத்திலிருக்கும் பட்டிபுரோலு என்ற இடத்தில் கிடைத்த கல்வெட்டுக்களும் தமிழகத்தில் கிடைத்த கல்வெட்டுக்களும் வரி வடிவத்தில் அசோகர் கல்வெட்டுக்களில் கிடைத்த வரிவடித்திலிருந்து சில மாற்று வடிவங்களைப் பெற்றுத் திகழ்வதின் அடிப்படையில் இவை “தென் பிராமி” என்றும் வட இந்தியாவில் கிடைப்பவை “வட பிராமி” என்றும் அழைக்கப்படுகிறது என கா.ராஜன் குறிப்பிடுகின்றார். சங்ககாலத் தமிழ் (தமிழி) எழுத்துகளின் தோற்றமும் கண்டுபிடிப்பு வரலாறும் (பொ.ஆ.மு. 400 -பொ.ஆ.300): மேற்சுட்டியது போல் சங்ககாலத் தமிழ் (தமிழி) எழுத்தின் வரிவடிவம் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே வெளி உலகிற்கு வந்தது. அதுவரையில் பொ.ஆ. 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர்களது கல்வெட்டுக்களில் காணப் பெற்ற தமிழ் எழுத்துக்களும் பொ.ஆ. 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியரது கல்வெட்டுக்களில் காணப்பெற்ற வட்டெழுத்துகளும் காலத்தால் முற்பட்ட வரி வடிவங்களாக கருதப் பெற்றது. ஒரு மொழிக்கு இரு வேறு வரிவடிவங்கள் இருப்பது ஆய்வறிஞர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. வட இந்தியாவில் அப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டு படித்துணரப்பட்ட “பிராமி” வரிவடிவத்திலிருந்தே தமிழ் வரிவடிவமும், வட்டெழுத்து வரிவடிவமும் தோன்றின என்பதை ஒப்பீட்டாய்வின் அடிப்படையில் டி.ஏ.கோபிநாதராவ் தி.நா.சுப்பிரமணியன் போன்றோர் நிறுவியபோதிலும் தமிழகத்தில் கிடைத்த சங்க காலக் (தமிழி) கல்வெட்டுக்களின் தனித்தன்மையினை அக்காலத்தில் அறிய இயலாது போயிற்று. பிராமியின் தோற்றம் குறித்து ஆய்வாளர்களின் கருத்துகள்:
|
அடடா, மிக அருமை, தேமொழி அவர்களே.
--