நாட்டரசன்கோட்டை நாயகி !

116 views
Skip to first unread message

rangameena

unread,
Sep 24, 2009, 11:48:03 AM9/24/09
to மின்தமிழ்

கண்களுக்கு ஒளிதரும் கண்ணுடைய நாயகி கண்ணாத்தாள்!

சிவகங்கை தேவஸ்தானம் மதுராந்தகி நாச்சியார் ஆளுகைக்குட்பட்ட 86 திருக்கோயில்களில் சிவகங்கை அருகேயுள்ள நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோவிலும் ஒன்றாகும். முத்துக்குட்டிப்புலவர் என்பவர் ”கண்ணுடைய நாயகி அம்மன் பள்ளு என்று கண்ணாத்தாளின் மகிமையை சிற்றிலக்கியமாகவே படைத்திருக்கிறார்!.

கண்ணுடையநாயகி 6 சகோதரிகளுடன் தோன்றியதாக முத்துக்குட்டிப்புலவர் சொல்கிறார்..

விரும்பு காளையில் வாள்மேல் நடந்தாள் வாளைப்பனங்குடி பெரியநாயகி , வெற்றி யூரினில் அம்மன் , அரும் பொருளுவாட்டிப் பெரியாள் , அடுத்த மங்கலந்தன்னில் வாழ் அறியவள் இவளாது பெண்களுக்கும் பெரியவளார்க்கும் பெரியவள் பெரும்புரியெல்லாம் பெற்றவள் என்னைப் பெற்றதாய் கன்ணுடையவள் என்று.

அந்த 6 அன்புச்சகோதரிகள் காளையார் கோவில் வாள்மேல் நடந்த அம்மன், பாகனேரி புல்ல நாயகி அம்மன், பனங்குடி பெரிய நாயகி அம்மன், வெற்றியூர் அம்மன், உருவாட்டி பெரிய நாயகி அம்மன், மறவங்கலத்தில் அரிய நாச்சி அம்மன் ஆகியோர்கள் ஆவார்கள்.

கண் சம்பந்தப்பட்ட நோய் எதுவாய் இருந்தாலும் கண்ணாத்தாளை வேண்டி(வெள்ளியினால் செய்த) கண்மலர் வைத்து வணங்கினால் போதும்.அதுபோல கண் மற்றும் உடம்பின் எந்த பாகமென்றாலும் நோய் குணமாக வேண்டி மாவிளக்கு(அரிசியுடன் வெல்லம் சேர்த்து இடித்து செய்வது) ஏற்றுவதாக வேண்டி அம்மன் பாதத்தில் ஏற்றி வைத்து அவ்விளக்கை எடுத்து உடம்பில் பாதிக்கப்பட்ட இடத்தில் சிறு துணியை விரித்து அதன்மேல் வைத்து எடுத்து குணமாக்கு தாயே என்று வணங்கி பலன் கண்டவர்களும் ஏராளம்!

நாட்டரசன்கோட்டையில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கொருமுறை நடைபெறும் களியாட்டம் வெகு சிறப்பானது. மேலும் பதினெட்டுச்சித்தர்களில் ஒருவரான அழுகுணிச்சித்தர்ர் இவ்வூரில்த்தான் அடங்கியுள்ளார் என்பதும் கம்பன் சமாதி இங்குதான் உள்ளது என்பதும்போற்றுதற்குரியதாகும்!.

அவிச்ச நெல்லும் முளைக்கும் அதிசயம் இந்த ஊரில்த்தான் நடப்பதாக பக்தர்கள் சொல்கிரார்கள்!

கண்ணாத்தாள் கோவிலின் முன்பு உள்ள தெப்பக்குளமும், கோவிலின் முகப்பு மண்டபமும்,சிற்பங்களும் அவசியம் பார்த்து பயனடைய வேண்டியவை.




srirangammohanarangan v

unread,
Sep 24, 2009, 2:12:24 PM9/24/09
to mint...@googlegroups.com
ம்  அப்படி  வாங்க.   ஏதோ  ஒரு  வரி  இரண்டு  வரின்னு  போட்டு   போறாங்களேஎன்னு  பார்த்தா,   கட்டுரை  நன்றாக  உள்ளது

N. Kannan

unread,
Sep 25, 2009, 2:10:35 AM9/25/09
to mint...@googlegroups.com
ரங்கன்! என்ன இப்படி சொல்லிடீங்க? நம்ம மீனா `இலக்கிய சிந்தனை
வட்டத்தால்` சிறந்த சிறுகதை ஆசிரியர் என்ற பட்டம் பெற்றவர். நன்றாக
எழுதக் கூடியவர். சமீபத்தில் கால்வலி என்று இந்தியாவில் இருந்து
சுகப்படுத்திக்கொண்டு மலேசியா மீண்டு இருக்கிறார்.

எங்களுக்கு பூர்வீகம் நாட்டரசன் கோட்டை. என் சகோதரி வெளியிட்ட
இசைப்பேழையில் கண்ணாத்தாள் மீதான பாடல் பலரால் பாராட்டுப்பெற்ற பாடல்.

http://www.tamilheritage.org/old/audio/collections/chellam.htm

நான் இன்னும் அங்கு போனதில்லை. எல்லாம் வீட்டுப் பெரியவர்கள் சொல்லும்
கதைதான். இப்போது மீனா!

கண்ணன்

2009/9/25 srirangammohanarangan v <ranga...@gmail.com>:

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

meena muthu

unread,
Sep 25, 2009, 7:38:09 AM9/25/09
to mint...@googlegroups.com
’கண்ணன் என்னது.. (ரொம்பவும் கூச்சமாக உணர்கிறேன்)இங்கே எவ்வளவு பெரியவர்கள் எல்லாம் இருக்கிறார்கள்?அத்தனைபேரின்(ரங்கனாரின்) எழுத்துக்களையும் படித்து பிரமித்து (வாயைடைத்து)போய் இருக்கிறேன். அவர்களுக்கு முன் நான் ஒண்ணுமேயில்லை இது எல்லோருக்குமே தெரியும் என்னைப்போய்...

இந்த பதிவை எழுதும்போது தங்களைத்தான் நினைத்துக்கொண்டேன்!

நாட்டரசன் கோட்டை வாழும் கண்ணாத்தா...நாட்டுமக்கள் எல்லோர்க்கும் கண்ணாத்தா...!

அருமை! குரலில் என்ன ஒரு இனிமை!திரும்ப திரும்ப கேட்கத்தூண்டுகிறது!

சகோதரி செல்லாம்மாவிற்கு என் பணிவான வணக்கங்கள்.

நன்றி.
மீனா
மீனா

2009/9/25 N. Kannan <navan...@gmail.com>

meena muthu

unread,
Sep 25, 2009, 7:40:17 AM9/25/09
to mint...@googlegroups.com
 இந்த ”நாட்டரசன் கோட்டை நாயகி” பதிவை எழுதும்போது தங்களைத்தான் நினைத்துக்கொண்டேன்!


2009/9/25 meena muthu <ranga...@gmail.com>

N. Kannan

unread,
Sep 25, 2009, 9:31:47 AM9/25/09
to mint...@googlegroups.com
என்ன மீனா! அதெல்லாம் பயப்படாதீங்க.
ரங்கன் நல்ல ரசிகன். உங்கள் எழுத்தை இன்னும் வாசிக்கவில்லை என்று
தோன்றுகிறது. தொடுப்பு கொடுங்கள்.
மின்தமிழ் தாரகைகளும் நிச்சயம் நீங்களும் ஒருவர்.
மின்வெளியின் நம்பிக்கை நட்சத்திரம் ;-)

அக்கா பாடல்..ம்ம்ம்.திருப்பூவணம் சகோதரிகள் எங்கோ இருக்க வேண்டியவர்கள்.
பெற்றோரை இழந்து, வேலை, குடும்பமென்ற பளுவில் வாழ்க்கை ஓடிவிட்டது.
இத்தனை திறமைக்கு நாள் கழித்து ஒரேயொரு இசைப்பேழைதான் கொண்டு வர
முடிந்தது. வெளியீட்டு விழா மதுரையில் நடந்தது. போயிருந்தேன். அப்போது
ஒருவர் சந்தக்கவியில் சரளமாய் எடுத்துவிட அசந்துவிட்டேன். சங்கம் வளர்த்த
மதுரையில் தமிழ் இன்னும் வாழ்கிறது.

க.>

2009/9/25 meena muthu <ranga...@gmail.com>:

Reply all
Reply to author
Forward
0 new messages