ஓலை= செவியணி= புத்தர் தீர்த்தங்காரர் செவிகளில் நீண்டு தொங்கும் காது மடல்

55 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Sep 13, 2018, 11:06:47 AM9/13/18
to mintamil, vallamai, தமிழ் மன்றம், thamizayam, SivaKumar, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Vasudevan Letchumanan, muthum...@gmail.com, ara...@gmail.com, Raji M, thirumurai, Suresh Kumar, Banukumar Rajendran, Seshadri Sridharan, Thenee MK
நூ த லோ சு
மயிலை
2018-09-09 7:47 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
ஓர் மாற்றுக் கருத்து - தெளிவிற்காக , 
தோடு அணிந்திருப்பதால் பேதைப்பெண்கள் என்று சொல்ல வேண்டிய தேவை என்ன? 
" தோடுடைய செவியன்" என்று சம்பந்தர் பாடி இருப்பது சுடலை ஆண்டியைத் தானே. எனவே தோட்டைக் காரணம் காட்டி அவர்களைப் பேதைப் பெண்கள் என்று கூறுவது தவறு. ஆண்களும்  பண்டு தோடு அணிந்தனர் என்பதற்கு தேவாரமே சான்றாகிறது. 
கண்மணி 
அன்புள்ள  கண்மணி அவர்களுக்கு 
உங்கள் புரிதலில் பிழை உள்ளது 
தோடுடைய செவியன் என "சம்பந்தர் பாடி இருப்பது சுடலை ஆண்டியை அல்ல அதான்று 
சேக்கிழார் திருத்தொண்டர் புராணத்தில் சிலம்படி எனக்குறித்தமை  ஓர் ஆணை மட்டுமல்ல  

ஆண்டி என்பது மனைவி மக்கள் குடும்பம் இவற்றை விடுத்து தனிமனிதனாக பிறப்பில் சுற்றங்கள் எனபதை விட்டுநீங்கிய ஒருவனைக்குறிப்பது எனும் பொருளில் வரும் ஆண்டியை அதாவது இந்த பாடலில் 
பாடியதுபழனிமலைமேல் முருகனாக பாவித்து வணங்கப்படும்  ஆண்டியை அல்ல 'இரு பாலனாக '
காண்க 
சம்பந்தர் தேவாரத்தில் காணும் தோடு என்பதுகாதில் அணியப்படும் பனை ஓலைச் சுருளைக்குறிக்கும். அது வெறும் காதணி மட்டுமல்ல. அது இன்றைய மணமான பெண்களின் தாலிக்கு நிகராகும். 

'தாலி' எனும் சொல்லே பனையோலை தான். தால் /தாலம்  எனறால் பனைமரம்தான்  தாள் என்றால் எழுதும் பொருள் முதலில் பனைஓலையில் ஆனதால் காகிதத்திற்கு தால் எனும் சொல் திரிபில் தாள்  ஆயது

இப்போது தே வாரத்தில் காண்போம்
ஆடல்வல்லான் உருவத்தில் (ஆண் தானே)  இடது காதில் தோ டும் (பனைஓலைச்சுருள்)வலது காதில் (மகரக்)குழை எப்போதும் உண்டு. 
நன்றாக கூர்ந்து நோக்குக
தோடு இருப்பது பெண்பாகமான இடதுசெவி 
வலது செவியில் பூண்பது 'மகரக்' குழை   
   
வட தமிழ்நாட்டில் கேதார கவுரி விரதம் எனபது பெண்கள் தங்கள் கொழுநன் நலம் கருதி நோற்கப்படும் ஓர் நோன்பு அய்ப்பசி அமாவாசை அன்று கடைபிடிக்கப்படும் (தீபாவளி மறுநாள்) அப்போது அவர்கள் 
காதோலை கருமணி வைத்து பூசிப்பர் அதாவது (பழங்கால) தாலியை. கருமணி என்பது ஆந்திரம் மராட்டம் கருநாடகம் இங்கெல்லாம் கருதத்த நிற மணி கழுத்திலணிவர் அது கணவன் உயிருடன் உள்ள பெண்பால் 
அணிதலில் மரபு தமிழ்நாட்டில் இன்று வழக்கற்றுள்ளது 

கிளைக்காத  பயிரினங்களாகும் பனை தென்னை கமுகு வாழை (கற்)தாழை எனவரும் புல்லினத்தின்  இலைகளை 'இலை 'என்னாது ஏடு தோடு மடல் எனும் சொற்களைத்தான் ஆள்வது து மரபு என்கின்றது   தொல்காப்பியம்
தோடே மடலே ஓலை என்றா
ஏடே இதழே பாளை என்றா
ஈர்க்கே குலை என நேர்ந்தனபிறவும்
புல்லொடு வரும் எனச் சொல்லினர் புலவர் 88 தொ ல் - மரபியல்

'தோடு' இன்று காதணியாகி ஆகியது சரியே அது பெண் களுக்கு மட்டுமே உண்டு முற்காலத்தில் திருமணம்
 ஆனவள் என்பது அவள் அணியும் தோட்டினைக்கொண்டு அறிவர் அது இன்றுள்ள தாலிக்கு நேராது நீங்கள் என்ன ஊரினர் என அறியேன் ஆனால் பெண்தான் அதனை அறிதல் வேண்டும் இன்றும் மதுரை திருநெல்
வேலி கேரளத்தின் சில மாவட்டங்க இவற்றிலெல்லாம் பெண்கள் காதின் துளை மிக நீளாமாக தொங்க
காணும் காதணிக்கு ஓலை என்பதுதான் பெயர் அறிவீர்.

"தோடுடைய செவியன்" சம்பந்தர் தேவாரத்தில் காணும் முதல் குறிப்பு சொற்கள்  உம்மைத் தொகை
 கூடிய  பெயரெச்சமாகாமல்  வினையாணையும்பெயர்கள்  ஆகும் எனவும் காட்டுவர் உரையாசிரியர் 
 ங்கு பயன்கொண்ட இயல்நூல் சொற்கள் பற்றி நன்றே அறிவீர் என கொள்கின்றேன் 
தோ டுடையசெவியன் (ஆடல்வல்லான்-நடராசன் )
விடையேறி (காளை ஊர்வான்-இரிசப வாகனன்) 
 மதிசூடி (பிறையணிந்தான் -சந்திர சேகரன் )
பொடிபூசி (நீறணிந்தான்-பசுபமேனி
கள்வன் (ஈர்த்தவன் -மோகனன்

அடுத்து

சேக்கிழார் அடிகள் " தன்  பெரியபுராண முதல் பாடல் ஈற்றடியில் குறித்த "அம்பலத்து ஆடுவான் மலர்
சிலம்படி " என்பது ஆடல்வல்லான் படிமத்து ஆடலில் தூக்கிய திருவடி (குஞ்சித பாதம்?) ஆவது  இடது
காலாகும் . ஏனெனில் சிலம்பு பெண்களுக்கென்றே  ஆன ஒலிக்கும் காலணி. பெண்பாலைக் காட்டும் துளைடையது இடது பக்கம். ஆண்கள் அணிவதோ துளையற்ற கழல் ஆகும். இது வலது காலிற்காகும் 

படிமஇயல் (சிற்பசாத்திரம்) கடவுள் வழிபாட்டில் கைக்கொண்ட மரபு பற்றிப்பேசும் என்பதை நன்றே  அறிவீர்
இந்நாளில் கோயில் உலாக்களில் பயனில் உள்ள திருவாசிகளிலும் மரபு உண்டு இலிங்கம் போல் மேலே அரைக்கோளம் வீங்கி காண்பது ஆண் எனவும் அதனின் நடுவண் உச்சிநிலையில் கூர்மையாக  தொங்கும்  அமைப்புடையது பெண் எனவும் உண்டு எனினும் இக்காலத்தில் அவற்றினை அறியாது பால்பாகுபாடு
 நீக்கி ஆளப்படுவதும் காண்கின்றோம் 

மேலும் இணையானவை சில
(1) 
அமெரிக்க ஆப்பிரிக்க,தூரக்கிழக்கு நாடுகளில் உள்ள பழங்குடிகள் இன்றும் மேற்குறித்த ஒலைக்கு நிகரானவற்றை செவியில் பெருத்த துளைகளுடன் அணி த்து வருவது காணலாம். ஓலை என்னும் அணிகலன் (செவிப்பூ?)இப்போதெல்லாம் தென்னாட்டில் அது நாகரீகம் அல்ல என நீக்கி வந்துள்ளனர் ஆ னல் முன்காலத்தில் வடஇந்தியாவில் ஆண் களும் காதில் ஓலை எனும் (பனைஓலைச் சுருள்) அணிகலன் அணிந்துவந்துள்ளனர் என நினைக்க ஏது உண்டு. கௌதம புத்தர் சமண தீர்த்தங்காரர் படிமங்களில்
 செவிகளில் தொங்கும் துளையுடையவை கா ட்டப்படுத்தல் காணலாம்  முற்றும் துறந்தவர் ஆதலால் அணிகலன்கள் கிடையாது ஆனால் ஏன் தொளையுடைய நீண்ட காது காட்டப்படுகின்றது என அறிய முடியவில்லை அறிந்தார் காட்டலாம் 
(2)
பெரும்பாலும் இந்நாளைய ஆடைகளில் அணிகலன்களில் காலனிகளில் ஆண்  பெண் வேறுபாடு உள்ளன. ஆடைகளிலும் கூட பூப்போட்டவை பொதுவாக  ஆண்கள் ஏற்பதில்லை அது பெண் களுக்கென்றே உ ள்ளமை புள்ளியியல் வழி அறியலாகும் மயங்க உடுப்பது சில நேரங்களில் இடர் விளைவிக்கலாம். ஓர் எடுத்துக்காட்டு  ஓர் நண்பர் இந்தியாவில் சில நேரங்களில் பாகுபாடு நோக்காது பூப்போட்ட லுங்கி (கைலி) அணிதல் உண்டு (முகமதியர் அணியார்)  ஒருமுறை பர்மாவிற்கு சென்றபோது தெரியாமல் இரவில் பூப்பட்ட லுங்கி அணிந்து சென்றார் எல்லாரும் ஒருவித ஏளனப்பார்வையுடன் நோக்குவதைக்கணட நண்பர் பின் தாங்கும் விடுதிக்கு வந்து விசாரித்தபோது அவர் அணிந்த பெண்களுக்கு உள்ள பூப்போட்ட லுங்கிதான் ஏளனத்திற்கு  கா ரணம் என அறிந்தார்.
 



penthiruvaaci.gif
anTIRUVaCI.jpg
tUKiyatiruvaTi.gif
ATalvallAn.jpg

kanmani tamil

unread,
Sep 13, 2018, 12:51:24 PM9/13/18
to mintamil
நன்றி ஐயா 
Sk

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Sathivel Kandhan Samy

unread,
Sep 14, 2018, 4:08:49 AM9/14/18
to மின்தமிழ்
Reply all
Reply to author
Forward
0 new messages