நீங்கள் சொல்ல வேண்டியதை முதலில் சொல்லி, பின் குறள் ஈற்றடிகளாக
அமையுமாறு அமைக்கலாம். இது போலவே ஒரு செய்யுள் நூல் உள்ளது, பெயர்
நினைவிற்கு வரவில்லை.
கூகிளில் தேடுமுன் ஒரு தடவை த ம அ கட்டளைப் பகுதியில்
இடம்பெற்றுள்ள ‘இரங்கேச வெண்பா’பார்க்கவும்.
http://bharani.dli.ernet.in/thf/text/ebook/general/evenpa.pdf
அன்புடைமை
வெற்பின் சிறகரிய செந்நென்பளித்து முனி
இப்புவியைக்காத்தான் இரங்கேசா - நற்புகழாம்
அன்பிலாரெல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
(முனி - ததீசி முனிவர்)
இந்திரனுக்கு வலிமை வாய்ந்த ஆயுதம் ஒன்று தேவைப்பட்டபோது
ததீசி முனிவர் தம் முதுகெலும்பை அளித்தார்; குறளுடன் வெகு இயல்பாகப்
பொருந்தும் நிகழ்ச்சி.
தேவ்
நன்றி தேவ்! உங்களைப் போன்ற ஆர்வலர்கள் நிறையத்தேவை.
கையில் வெண்ணெய்யை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவானேன்?
க.>