வெருளி நோய்கள் 1161-1165: இலக்குவனார் திருவள்ளுவன்

2 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Feb 20, 2026, 5:27:12 PM (17 hours ago) Feb 20
to thiru thoazhamai, Thamizh Pavai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, raman kannusamy, பூங்குழலி Poonkuzhali, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, Dr. Namadhu MGR, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan Srinivasan, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, Chitraleka V, Dr Seenivasan Sappani, Rajan Krishnan, Umarani Pappusamy Mysore, Guberan Rajan, Dr. Ku.Muthukumar

வெருளி நோய்கள் 1161-1165: இலக்குவனார் திருவள்ளுவன்



(வெருளி நோய்கள் 1156-1160:தொடர்ச்சி)

வெருளி நோய்கள் 1161-1165

  1. சோனிகன் வெருளி – Sonicphobia

புனைவுரு கதைப்பாத்திரமான சோனிகன்(Sonic) குறித்த வரம்பற்ற பேரச்சம் சோனிகன் வெருளி
சப்பானியக் காணொளி ஆட்டத்தின் பெயரே ‘சோனிக்கு’ (Sonic, the Hedgehog). இப்பெயரில் திரைப்படமும வந்துள்ளது. இவ்வாட்டத்தை ஆடுபவர்களுக்கும் இதனை ஆடும் சிறுவர்களால் அவர்களின் படிப்பு பாதிக்கப்படும் என அஞ்சும் பெற்றோர்களுக்கும் சோனிகன் வெருளி வருகிறது.
‘க்‘ எழுத்தில் சொல் முடியாது. எனவே, ‘சோனிக்’ என்பது அன் விகுதி சேர்த்து சோனிகன் எனப்பட்டது.
00

  1. ஞாயிற்றுக்கிழமை வெருளி – Kyriakiphobia / Dimanchophobia

ஞாயிற்றுக்கிழமை குறித்த வரம்பற்ற பேரச்சம் ஞாயிற்றுக் கிழமை வெருளி.
விடுமுறை நாள் என்பதால் வரும் சோம்பல், வார விடுமுறையில் செய்யலாம் என ஒதுக்கி வைத்த வேலைகளின் குவியல், விடுமுறையில் பிள்ளைகளின் தொல்லைகள், பொழுதுபோக்கு அச்சம் போன்றவபற்றால் ஞாயிறு வந்தாலே பேரச்சம் கொள்கின்றனர் சிலர்.
Kyriaki என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் ஞாயிற்றுக்கிழமை.
Dimancho என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் ஞாயிற்றுக்கிழமை.
காண்க: ஞாயிற்று மாலை வெருளி(Hebdomaphobia)
:
00

  1. ஞாயிற்று மாலை வெருளி – Hebdomaphobia
    ஞாயிற்றுக்கிழமையின் மாலைப்பொழுது அல்லது இரவுநேரம் முடியப்போகிறதே என்ற வரம்புகடந்த பேரச்சம் ஞாயிற்று மாலை வெருளி.
    பொதுவாகவே ஞாயிறு பிறக்கும் பொழுது அல்லது பிறக்க இருக்கும் பொழுது அதை எண்ணி அளவுகடந்த மகிழ்ச்சி கொள்பவர்கள் உள்ளனர். இவர்கள் ஞாயிறு முடியப் போவதை எண்ணி – திங்கட்கிழமை விடிந்ததும் வழக்கமான வேலை தொடங்கிவிடுமே என்ற அச்சத்திற்கு ஆட்படுகின்றனர்.
    சிறு பருவத்தில் பள்ளி மாணாக்கர் நிலையில் இவ்வெருளி உண்டாகி நாளடைவில் வளர்வதும் உண்டு.

ஞாயிற்றுக் கிழமை என்றாலே விருந்து,கொண்டாட்டம் என்று பொழுது போக்குபவர்களுக்கும் ஞாயிற்றுக்கிழமை முடிந்து விடுமே என்ற பேரச்சம் வருகிறது.

ஏழைக் குறிக்கும் heptய என்னும் சொல்லில் இருந்து உருவான Hebdoma என்னும் இலத்தீன் சொல், 7, (திங்கட்கிழமையிலிருந்து) 7 ஆம்நாள், (7 நாள் கொண்ட) வாரம், வார முடிவு நாள் எனப்பொருள்கள் உடையது.
காண்க: ஞாயிற்றுக்கிழமை வெருளி(Kyriakiphobia / Dimanchophobia)
00

  1. தகாக் கலவி வெருளி – Incestophobia

தகாக் கலவி(Incest) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தகாக் கலவி வெருளி.
பாலுறவு மேற்கொள்ளக்கூடாத நெருங்கிய உறவினர்களிடையே மேற்கொள்ளும் கூடாப்புணர்ச்சி நம் நாட்டிலும் குற்றமாகக் கருதப்பட்டது. இப்பொழுது குற்றமில்லை என்று மாற்றியுள்ளனர். எனினும் அறவழியலும் மரபு வழியிலும் இதனைக் கற்றமாகக் கருதி வெறுத்தொதுக்க வேண்டும்.
தகாப்புணர்ச்சி அல்லது கூடாப்பாலுறவு என்னும் பொருள் உடைய incestus என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து incest சொல் உருவானது.
00

  1. தசை ஒத்தியங்கா வெருளி – Ataxiophobia

தசை ஒருங்கிணைப்பு இன்மையால், படபடப்பு, சீர்குலைவு, ஒழுங்கின்மை, போன்ற சூழலில் இருப்பதாக அளவுகடந்து பேரச்சம் கொள்வது தசை ஒத்தியங்கா வெருளி.
இதைத் தள்ளாட்ட வெருளி என்று சொல்லலாம். ஆனால், மழையரின் தள்ளாட்ட நடை வெருளி (Nipiophobia) யுடன் குழப்பம் வரும் என்பதால் அவ்வாறு குறிப்பிடவில்லை.
00

(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5

--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages