

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil


தொகுத்து எழுதியவர்கள்:- என்.விவேகானந்தன், இனியன் சம்பத், கல்பனாதாசன்
நன்றி:- தினமணி
--

>1935 இல் "பகுத்தறிவு" திங்கள் இதழாகவும், பல ஆராய்ச்சிக்
> கட்டுரைகளும், கவிதைகளும் தாங்கி வெளிவந்தது.
> - முத்துசாமி
> - பாரதிதாசன்
> - ஜலகண்டபுரம் கண்ணன்
பாவலர் மா. முத்துசாமி. அண்ணதுரை கேபினட்டில் இருந்தவர்.
ஜலகண்டபுரம் ப. (பச்சியண்ணன்) கண்ணன் (1913 - 1971).
பெரியார் இயக்கம். திராவிட இயக்கத்தில் பல பகுத்தறிவு
பத்திரிகைகள் நடத்தினவர். பெரியார் சீடர். திக, திமுக
மேடை நாடகங்களின் ஆசிரியர். அந்தக்காலத்தில்
அண்ணன்மார் கதையை திமுக நாடகங்களில் ஒன்றாக்கியவர்,
தீரன் சின்னமலை வரலாற்றையும் புலவர் குழந்தை போன்றோரிடம்
அறிந்து நாடகமாக்கியவர். கவிஞர் கண்ணதாசன் என்ற
புனைபெயரில் கண்ணன் என்பது சலகை ப. கண்ணனைக்
குறித்து வைத்தது. ஜலகண்டபுரம் கண்ணன் கண்ணதாசனுக்கு
திருச்செங்கோடு சுந்தரத்திடம் சேலம் மாடர்ன் த்யேட்டர்ஸில்
வேலை வாங்கிக் கொடுத்தார். கண்ணதாசன் அப்போது
திராவிட இயக்கத்தில் இருந்தார். பல பாடல்களும் பாரதிதாசன்
போட்டுக்கொடுத்த பாட்டையில் எழுதினார். பிற்காலத்தில்
கண்ணபிரானின் தாசரானார்.
------------
பல ஆண்டுகளாக இணையத்தில் நாட்டுரிமை ஆன
அறிஞர்கள் நூல்கள் ஸ்கான் ஆகியோ, தட்டச்சியோ (யுனிகோட்)
வைக்கவேண்டும் தமிழ்நாட்டுப் பல்கலைகள் என்று
அதிகாரிகளுக்கும் என்று எழுதிக்கொண்டுள்ளேன்.
பலரும் எழுத வேண்டும். இப்பொழுது விர்ச்சுயல் அகாதமி
தளத்தில் பல அறிஞர்கள் நூல்கள் வைக்கப்பட்டுள்ளன
என்று மடல் சென்னையிலிருந்து அனுப்பினர்.
சலகை கண்ணன் போன்றோர் நூல்கள் கிடைக்கின்றன.
ஆபுத்திரன் கதையை 1926-ல் தமிழ்ப் பேராசிரியர் ஒருவர்
எழுதிய நூல், ... ஏராளமான கருவூலங்கள் உள்ளன.
பயன் கொள்க.
இன்னும் ஆயிரக்கணக்கான தமிழ் நூல்கள், ஆய்வேடுகள் படிப்பாரின்றி
தமிழ்நாட்டு நூலகங்களில் குவிந்து கிடக்கின்றன,
பல அழிந்தும் வருகின்றன. அரசாங்கம் மென்மேலும்
இணையத்தில் அவற்றை இட்டுப் புனர்வாழ்வு அளிக்கணும்.
பழைய அச்சுநூல்கள் பேணுவோம், வாசிப்போம்,
நா. கணேசன்



சம்பத் உயர்நிலைக் கல்வியை முடித்து, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் (இன்டர்மீடியட்) வகுப்பில் சேர்ந்தார். அது 1944ஆம் ஆண்டு. அப்போது அவருக்கு வயது 18.
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்த சம்பத் இன்டர்மீடியட் கல்வி கற்கவேண்டும் என்று தந்தை பெரியார் சொன்னதோடு, சென்னையில் விடுதியிலேயே தங்கிப் படிக்க வேண்டும், அண்ணா உட்பட கட்சிக்காரர்கள் யாரையும் விடுமுறை நாட்கள் தவிர மற்ற நாட்களில் சந்திக்கக் கூடாது என்றும் கண்டிப்பாக அறிவித்திருந்தார். சம்பத், தமது தந்தையார் ஈ.வெ. கிருஷ்ணசாமியிடமும், சிறிய தந்தையார் பெரியாரிடமும் விடைபெற்றுக்கொண்டு சென்னை பயணமானார்.




நேரடி அரசியல்
இலட்சுமிகாந்தன் கொலை வழக்கில் எம்.கே. தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகிய இருவருக்கும் 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. நாடே சோகத்தில் ஆழ்ந்தது. பெரியார் மனம் வெதும்பினார். அண்ணா அதிர்ச்சியுற்றார். குடியரசு, திராவிட நாடு ஏடுகளில் இரு கலைஞர்களையும் விடுதலை செய்யுமாறு அறிக்கைகள், கட்டுரைகள் வெளிவந்தன. கழகக் கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கே.ஆர்.ஆர். நாடக சபையின் நாடகங்களில் கிருஷ்ணன், பாகவதர் விடுவிக்கப்பட வேண்டுமெனும் கோரிக்கையை காட்சியாக்கி நடித்தனர். கழகத்தின் பிரச்சார வலிமை கருதி பெரியார் மீண்டும் விடுதலை நாளேட்டினைத் தொடங்கினார். இதன் மேலாளர் பொறுப்பை சம்பத்திடம் ஒப்படைத்தார். திராவிடர் மாணவர் கழகத்தின் இரண்டாம் மாநில மாநாடு நீடாமங்கலத்தில் 1946 பிப்ரவரி 23, 24 நாட்களில் நடைபெற்றது. இந்தி எதிர்ப்புப் போரில் உயிர்த் தியாகம் செய்த தாளமுத்து நடராசன் பெயர்களில் மாநாட்டுப் பந்தல் அமைந்திருந்தது. இந்த மாநாட்டிற்கு சிவகங்கை மாணவர் தோழர் சத்தியேந்திரனைத் தலைமை தாங்கி நடத்துமாறு ஈ.வெ.கி. சம்பத் முன்மொழிந்து பேசினார். (சிவகங்கை சத்தியேந்திரன் குடும்பம் சுயமரியாதைக் குடும்பம், பிற்காலத்தில் அவர் மாவட்ட நீதிபதியானார். அவருடைய அண்ணன் இராஜசேகரன் காமராஜர் ஆட்சிக் காலத்தில் சட்டத்துறைச் செயலாளராக இருந்தார்.) மாநாட்டில் தோழர்கள் நெடுஞ்செழியன், அன்பழகன், மதியழகன், ஜனார்த்தனன், இளம்வழுதி, தவமணிராஜன், சொக்கப்பா, கி.வீரமணி, என்.எஸ். இளங்கோ ஆகியோரும் கழகத்தின் மூத்த தலைவர்களான கே.கே. நீலமேகம், பி. சின்னத்தம்பி, பாலசுந்தரம் (பாவலர்) ஆகியோரும் உரை நிகழ்த்தினர். இந்த மாநாட்டின் சிறப்பே, திராவிட மாணவர் கழகப் பிரிவு காலையில் கூடி, மாணவர் கழகத்தின் தலைவராக ஈ.வெ.கி. சம்பத்தை ஒரு மனதாகத் தேர்ந்தெடுத்ததுதான். செயலாளர் இளம்வழுதி (அண்ணாமலை நகர்) இணைச் செயலாளர் மா. குமாரசாமி (சென்னை) பொருளாளர் சொக்கப்பா (குடந்தை) ஆகியோரும் உடன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநாட்டில் கே.கே. நீலமேகம் பேசுகையில், "பெரியாரின் வாரிசு தம்பி சம்பத் இன்று நேரடி அரசியலுக்கு வந்துவிட்டார். வாழ்க இளம்தலைவர்'' என்று குறிப்பிடுகையில் மாநாட்டுப் பந்தல் அதிரும் வண்ணம் மகிழ்ச்சி ஆரவாரமும் கரவொலியும் ஏற்பட்டன. மாநாட்டின் இறுதியில் ஏ. இராமசாமி கவுண்டர், அண்ணா, பெரியார் ஆகியோர் சிறப்புரைகளை நிகழ்த்தினர். முதலமைச்சராக இருந்த பிரகாசம் கொடுங்கோலாட்சி புரிந்து ஆந்திராவைத் தனியே பிரிக்க முயன்றார். அப்போது தமிழ்நாடு காங்கிரசின் தலைவராக இருந்த காமராசருக்கும் பிரகாசத்திற்கும் சிறு மோதல் ஏற்பட்டது. பிரகாசத்தை அகற்ற காமராசரின் ஆற்றல் பயன்பட வேண்டுமென்று பெரியார் கருத்துக் கூறினார். தெலுங்கு பேசும் தமிழரான ஓமந்தூர் இராமசாமி ரெட்டியாரை முதல்வராக்கினார் காமராசர். பிரகாசம் எதிர்வரிசையில் அமர்ந்து ஆட்சிக்குத் தொல்லை கொடுத்தார். பெரியார், அண்ணாவின் பெருமுயற்சியால் 25.4.47இல் என்.எஸ். கிருஷ்ணன், தியாகராஜ பாகவதர் விடுதலையாகினர். கழகத்தவர் களிப்புற்று விழாக் கொண்டாடினர். ஈரோட்டில் சம்பத் தலைமையில் மகிழ்ச்சி விழா நடைபெற்றது. இவ்வாண்டு மே முதல் நாள் தஞ்சையில் கே.ஆர். இராமசாமி நாடகக்குழுவினரின் "வேலைக்காரி" 150ஆம் நாடக விழா நடைபெற்றபோது எதிர்பாராத வகையில் திடீரென பாகவதரும், என்.எஸ்.கேயும் மேடையில் தோன்றியதும் மக்கள் பெரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். யாருக்கும் அறிவிக்காமலே அண்ணாவும், சம்பத்தும் இரு கலைமணிகளையும் நாடகத்திற்கு அழைத்து வந்தனர். இருவரும் நாடகத்தைப் பாராட்டிப் பேசினர். இந்த நிகழ்ச்சிக்கு அண்ணாவால் "அக்ரகாரத்து அதிசய மனிதர்" என்று பாராட்டப்பட்ட வ.ரா. தலைமை தாங்கினார்.






ஆசிரியர் குத்தூசி குருசாமி. துணை ஆசிரியர்கள் இராம. அரங்கண்ணல், பு.கணேசன். பிழை திருத்துபவர் எம்.எஸ்.மணி. போர்மன் தில்லை கோவிந்தன் பொறுப்பில் அச்சகப் பகுதி. நகர விற்பனையாளர் கோபால். இப்படி சிக்கனமாக ஒரு நாளிதழ் வந்து கொண்டிருந்தது.
அதே பகுதியில் மீரான் சாகிப் தெருவில் பெரியாருக்குச் சொந்தமான ஒரு கட்டடம். சென்னை வந்தால் அங்கே தங்குவார். சம்பத்தும் அங்கேதான் தங்குவார்.
பெரியார் ஒரு நாள் ரிக்ஷாவில் விடுதலை அலுவலகத்துக்கு வந்து பரபரப்போடு இறங்கினார். "நல்ல காபி வாங்கி வையுங்கள். ஒரு நல்ல நாற்காலி கொண்டு வந்து போடுங்கள். எப்போது வருவாரோ தெரியவில்லை. வந்ததும் சொல்லுங்கள்'' என்று ஒரே பரபரப்பு.
யாரையும் வரவேற்பது என்றால் அய்யாவுக்குத் தனி மகிழ்ச்சி. மரியாதை காட்டுவதிலும் அவருக்கு இணை அவரே.
"யார் அய்யா வர்றாங்க?'' என்று அரங்கண்ணல் கேட்க, "ஒரு எம்.எல்.ஏ. என்னைப் பார்க்கிறதுக்கு வர்ராருங்க'' என்றார்.அப்போதெல்லாம் எம்.எல்.ஏ., மேயர் என்றாலே பெரிய பதவிகள். அப்படிப்பட்ட பதவிகளை நினைத்துக் கூட பார்க்க முடியாத காலம்.
ஒரு டாக்சி வந்து நின்றது. எம்.எல்.ஏ. வந்து இறங்கினார். பழுத்த பழமான பெரியார் தம் உடம்பைத் தூக்கிக் கெண்டு எழுந்ததோடு எதிர்கொண்டு வரவேற்றார். அலுவலகத்தில் அனைவருக்கும் ஒரே வியப்பு.
எம்.எல்.ஏ.வை கனிவோடு அழைத்து வந்து, அவர் உட்கார்ந்த பிறகுதான் அய்யா உட்காருகிறார். தடபுடல் உபசரிப்பு... இத்தனைக்கும் அவர் வேறு யாருமல்ல. கழகத்தோடு தொடர்புள்ள அரவக்குறிச்சி ரத்தினம்தான்.
என்ன இருந்தாலும் எம்.எல்.ஏ. அல்லவா? விடுதலை அலுவலகத்தில் பெரியார் கவனம் செலுத்துமிடம் முதலில் நிர்வாகப் பகுதி. சம்பத்தோடு பல விஷயங்களை விவாதிப்பார். கோவிந்தசாமியிடம் கணக்கு வழக்குகளை கேட்டுக் கொள்வார். கே.கோவிந்தசாமி ஓரளவு வசதியுள்ளவர். தமக்காக எதையும் எதிர்பார்க்க மாட்டார். கணக்கு வழக்குகளில் கறாராக இருப்பார், நல்ல உள்ளமும் கொள்கைப்பிடிப்பும் உள்ள பெரிய மனிதர்.
ஒரு முறை அழகிரிசாமி விடுதலை அலுவலகத்திற்கு வந்து அய்யாவிடம், சென்னைக் கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும் ஊருக்கு போகப் பணம் வேண்டுமென்றும் கேட்டார். "விஷயம் தெரிந்தது தானே? பணம் இல்லாம ஏன் வந்தீங்க? கூட்டம் நடத்தறவங்க கொடுத்த காசை என்ன பண்ணினீங்க?'' என்றெல்லாம் கேட்டு முகத்தை திருப்பிக் கொண்டார்.
விபரம் அறிந்த காசாளர் கோவிந்தசாமி அழகிரியைத் தனியே அழைத்து, ரூ. 40 தம் கணக்கில் கொடுத்து அனுப்பி வைத்தார். அப்படிப்பட்ட நல்ல மனிதர் கே. கோவிந்தசாமி. சிறிது நேரத்தில் அங்கு வந்த சி.பி. சிற்றரசு அய்யாவிடம் மாட்டிக் கொண்டார்.
ஓர் ஊருக்கு கூட்டத்திற்கு வருவதாக மணியார்டர் வாங்கிக் கொண்டு போகவில்லை. அது பற்றிய புகார்க் கடிதம் பெரியாரின் மேசைமேல் இருந்தது. வாக்கு நாணயத்தில் அய்யா கெடுபிடியாக இருப்பார். மறுபடியும் அந்த ஊரில் கூட்டம் பேசிவிட்டுதான் என்னைப் பார்க்க வேண்டுமென்று சிற்றரசுவிடம் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்.
பெரியார் விடுதலைக்குத் தலையங்கம் தீட்டுவார். அவருடைய கையெழுத்தை எல்லோராலும் படித்துவிட முடியாது. நெட்டெழுத்தில் அமைந்திருக்கும். அச்சுக் கோப்பவர்கள் எளிதில் அறிவார்கள். முதலில் எழுதிய விஷயத்தைவிட அதிகமான விஷயங்களை மெய்ப்பு படிக்கிறபோது அய்யா சேர்த்துவிடுவார்.
டெலிபிரிண்டர் குளோப் போன்ற செய்தி நிறுவன எந்திரங்கள் வாங்கி வைத்து கட்சிச் செய்திகளோடு மற்ற முக்கியச் செய்திகளையும் வெளியிட வேண்டும் என்பது சம்பத் விருப்பம். அது தண்டச் செலவு என்பது பெரியாரின் கருத்து. கழகச் செய்திகள், பேச்சுகள் வெளிவந்தால் போதுமென்பார். இதற்குக் கூட யாருடைய படத்தையும் ப்ளாக் செய்து போட அனுமதியில்லை.
சிக்கனத்திற்காக மட்டுமல்ல. ஆடம்பரம் கூடாதென்பார் பெரியார். கொலையுண்ட கழகத் தோழரின் செய்தியோடு படம் வந்தால் நன்றாக இருக்குமென்று அரங்கண்ணல் சொல்வார். "ஒரு பழைய ப்ளாக்கைத் தேய்த்து விட்டு வெளியிட்டால் அதில் யார் என்பதே தெரியப் போவதில்லை. ப்ளாக் போட்டதில் திருப்திதானே?'' என்பார் பெரியார்.
அதற்கு முதல் நாள் அண்ணாவின் பேச்சு, என்.வி.என்னால் எழுதப்பட்டு முழுப்பேச்சு விடுதலையில் வந்தது. இதில் அரங்கண்ணல் ஆர்வம் மிகுதியாகி காஞ்சி மணி மொழியாரின் போர்வாள் அலுவலகத்தில் அண்ணாவின் ப்ளாக்கை இரவல் வாங்கி விடுதலையில் வந்த பேச்சுப் பகுதியில் படத்தைப் போட்டுவிட்டார்.
அன்று அய்யாவிடம் அரங்கண்ணல் ஏதோ கேட்க, பெரியாருக்கு நேற்று விடுதலையில் வெளிவந்த படம் நினைவுக்கு வந்து ஒரே சீற்றம். அய்யாவுக்கு ரொம்ப கோபம் வந்து விட்டால் தாமே "உம், உம்" என்று முனகுவார். "காசு கொடுத்து வாங்கலே ஐயா. ஓசியில் வாங்கிப் போட்டேன்'' என்று அரங்கண்ணல் சொன்ன பிறகு சமாதானம் அடைந்தார்.
சிங்களக் குயில் என அழைக்கப்பட்ட தவமணி தேவி என்னும் ஒரு பிரபல கவர்ச்சிக் கலைஞர் அக்காலத்தில் பிரபலமாயிருந்தார். ஒரு நாள் அந்தப் பெண்மணி பெரியாரைப் பார்க்க விடுதலை அலுவலகத்திற்கு வந்துவிட்டார். நடிகை என்பதால் அவரைப் பார்க்க வெளியில் ஒரே கூட்டம். எல்லோரையும் வரவேற்பது போல் ஐயா அவரையும் மிகுந்த மரியாதையோடு வரவேற்றார்.
அந்தக் கலைஞர் எதற்காகத் தம்மைத் தேடி வந்தார் என்பது ஐயாவுக்குப் புரியவில்லை. அனைவரும் வியப்போடு பார்த்தனர். தாம் சிலோனில் இருந்து வந்த சினிமா படங்களில் நடித்துக் கொண்டிருப்பதாகவும், அய்யாவின் பேச்சு, கட்சிக் கொள்கைகள் ரொம்பவும் பிடித்தமாக இருப்பதாகவும் அந்த நடிகை பெருமிதத்தோடு சொல்லிக் கொண்டிருந்தார்.
அய்யாவும் மிகுந்த ஆர்வத்தோடு,"சொல்லுங்கம்மா"என்று கேட்டுக் கொண்டிருந்தார்."அடுத்த வாரம் பிராட்வேயில் திருவள்ளுவர் மாநாடு நடக்குதுங்க. நீங்க வந்து கலந்துக்குங்க'' என்று கூறியதோடு வாயில் வரையும் வந்து வழி அனுப்பி வைத்தார். சம்பத் உள்பட அனைவருக்கும் ஒரு சினிமாக் கலைஞர், அதுவும் பெண் கலைஞர் நமது அலுவலகத்தைத் தேடி வந்ததில் ஒரே வியப்பு.
அய்யா இருக்கையில் வந்து அமர்ந்ததும், "அப்பாடி எவ்வளவு பெரிய காரு... படகு மாதிரி வச்சிருக்காங்க அந்தம்மா'' என்று தம்முடைய வியப்பைத் தெரிவித்தார்.
அலுவகத்திலேயே அரங்கண்ணல் சினிமா விஷயத்தில் ஆர்வம் மிகுந்தவர். ஆகவே வந்த பெண்மணியைப் பற்றித்தான் அறிந்து வைத்ததையெல்லாம் விளக்கமாகவே எடுத்து விட்டார்.
"நீங்க என்ன வேணா சொல்லுங்க. நடிகைங்கண்ணா அப்படித்தான் இருப்பாங்க. எப்படி இருந்தாலும் அவங்களுக்கு என் கொள்கையிலே ஒரு ஆசை வந்த மாதிரி வேற எந்த நடிகைக்கு வந்திருக்கு?'' என்றார் அய்யா.
மறுவாரம் நடந்த திருக்குறள் மாநாட்டு மேடையில் தவமணி தேவியும் தவறாது இடம் பெற்றிருந்தார். அன்றிரவு நடந்த அண்ணாவின் சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் நாடகத்தில் சிவாஜி வேடத்தில் சம்பத் நடிக்கவில்லை. பெரியார் இருந்ததால் சட்டக் கல்லூரி மாணவர் இரெ. இளம்வழுதி சிவாஜியாக நடித்தார்.
இந்தி எதிர்ப்பு அறப்போர் மறியல் தொண்டர்களுக்காக வாங்கிப் போட்டிருந்த காய்கறிகளில் மீதியானவற்றை சமையலுக்காக அய்யா மீரான் சாகிப் தெரு இல்லத்திற்குக் கொண்டு வந்துவிட்டார்கள்.
அதை மணியம்மை சமையல் செய்ய அண்ணா உட்பட பிரமுகர்கள் உணவருந்தினர். அன்று மாலை சினிமாவுக்குப் போகலாம் என்று அண்ணாவும் சம்பத்தும் வெளியே புறப்பட்டனர். எதிர் வந்த அரங்கண்ணலையும் சேர்த்துக் கொண்டனர். மூவரும் வெளியே கிளம்புவதை தமது அறையிலிருந்தபடி அய்யா பார்த்துவிட்டார்.
"எங்கே போறீங்க...?'' என்று கேட்டுக் கொண்டே நெருங்கி வந்தார்."வெளியே போய் காபி சாப்பிட்டு வரலாம்னுய்யா'' சம்பத் சொன்னார்.
"எங்கே காப்பி நல்லா இருக்கும்...?'' பெரியார் கேட்டார்."பக்கத்துல இந்தியா காப்பி ஹவுசுன்னு இருக்கு. அங்கேதான்'' சம்பத் கூறினார்.
வழக்கமாக முந்திரிப் பருப்பு, சமூசா, ஆம்லேட் என்று அண்ணாவோடு விரும்பிச் சாப்பிடும் சம்பத்துக்கு அய்யாவின் சிக்கனம் இடையூறு. "காப்பி போதுமய்யா'' என்றார் அண்ணா."வெறும் காப்பிக்கா இவ்வளவு நடந்தோம். என்னா வேணும்னாலும் சாப்பிடுங்க'' என்றார் அய்யா.
பதினெட்டு ரூபாய்க்கு பில் வந்தது. என்னவோ தெரிய வில்லை. அன்று அய்யா முகம் சுளிக்கவில்லை. "கொள்ளை அடிக்கறானுங்க... மோசங்க... முந்திரிப் பருப்பு மூணு ரூபாயா?'' என்று முணுமுணுத்துக் கொண்டே பணத்தை எடுத்துக் கொடுத்தார்.
அந்தப் பாசம் மிகுந்த நிகழ்ச்சியை, அய்யா ஒரு குழந்தையைப் போல் குதித்துக் கொண்டு நடந்தே வந்து உபசரித்ததை அண்ணா அடிக்கடி உருக்கமாக நினைவு கூர்வதுண்டு.முதல் சிறைவாசம்கருப்புச்சட்டைப் படைக்குத் தடை விதித்ததைக் கண்டித்து 7.3.48 இல் சென்னை பெரியமேட்டுத் திராவிடர் கழக முதல் மாநாடு வி.கே. சுப்பராயலு தலைமையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் பெரியார், அண்ணா, ஈ.வெ.கி. சம்பத், ஆரிய சங்கரன், டி.பி. வேதாசலம் ஆகியோர் உரையாற்றினர்.
இம்மாநாட்டில் பேசிய சம்பத், கழகம் மிக நெருக்கடி யானதோர் கட்டத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தோழர்கள் அனைவரும் பொறுமையினைக் கடைப்பிடிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.அரசின் அடக்குமுறைக்கு எதிராகவும் இந்தித் திணிப்பைக் கண்டித்தும் போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை நெருங்கிக் கொண்டிருப்பதாக பெரியார் ஓர் அறிக்கையினை வெளியிட்டிருந்தார். இதனையொட்டி 22.8.48 இல் சென்னை மீரான் சாகிப் தெரு பெரியார் இல்லத்தில் திராவிடர் கழக நிர்வாகக் குழுக் கூட்டம் பெரியார் தலைமையில் நடைபெற்றது. உறுப்பினர்கள், பார்வையாளர்கள் என 93 தோழர்கள் பங்கேற்றனர்.
கமிட்டிக் கூட்டம் முடிவுற்றதும் காவல் துறையினர் பெரியார், அண்ணா, சம்பத், என்.வி.என். மணியம்மையார், மதியழகன் அனைவரையும் கைது செய்தனர். ஈ.வெ.கி. சம்பத் கைதாவது இதுவே முதல் தடவை. அனைவரும் 6 நாள் சிறை வாசத்திற்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர்.

சம்பத் பேச்சு"நாளுக்கு நாள் பெருகிவரும் மக்கள் ஆதரவைக் கண்டு அச்சப்படும் ஆட்சியாளர்கள் நம்மைத் தகுதியற்ற முறையில் தாக்கிப் பேசி வருகிறார்கள். சில தினங்களுக்கு முன் சட்டசபையில் பேசிய கல்வி அமைச்சர் அவினாசிலிங்கனார் நம்மை வகுப்புத் துவேஷிகள் என்று குற்றம் சாட்டி, தமிழில் உண்மைப் பற்றுதல் கொண்டவர்களாயின் இவர்கள் தம் ஆட்சிக் காலத்தில் தமிழுக்குச் செய்ததென்ன? என்று கேட்டிருக்கிறார்.
சேர,சோழ, பாண்டியர் காலத்திற்குப் பிறகு இதுவரை யாரும் செய்திராத அளவுக்கு திராவிடர் கழகம் தமிழ்த் தொண்டு புரிந்திருக்கிறது என்பதை எந்த அறிவாளியும் ஒப்புக் கொள்வான். இலக்கியத்தில் புரட்சி செய்தோம். தமிழைப் புதுப்பாதையில் திருப்பிவிட்டோம். புத்தகத் துறையில், பேச்சுத் துறையில், நாடகத் துறையில் யாவற்றிலும் மறுமலர்ச்சியை உண்டாக்கினோம். அவினாசியார் புகழ்ந்து போற்றும் அளவுக்கு சொற்பொழிவாற்றும் திறன் படைத்த அறிஞர் அண்ணாவை நம் கழகத்தின் தளபதியாகப் பெற்றிருக்கிறோம்.
"இந்தியா வாழ்க" என்று கூறுவதற்கு வக்கில்லாமல் "ஜெய்ஹிந்த்" என்று சொல்லித் திரியும் இவர்கள், நல்ல தமிழில் "வணக்கம்' என்று சொல்லத் தெரியாமல், "நமஸ்காரம்" என்று சொல்லித் திரியும் இவர்களா தமிழை வளர்ப்பவர்கள்? சட்டமன்றத்தில் தகுந்த பாதுகாப்புடன் இருக்கிறோம் என்கிற ஆணவத்தால் அங்கே மன்றத்தில் மக்கள் இல்லை என்ற தைரியத்தில் அமைச்சர் இம்மாதிரி கூறிவிட்டாரே ஒழிய, மக்கள் மன்றத்தில் வந்து இம்மாதிரி பேசத் துணிவாரா இவர்?
மற்றொரு காங்கிரஸ்காரர் கூறுகிறார், இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஓர் அரசியல் போராட்டம் என்று. நாங்கள் மறுக்கவில்லையே அதை .அரசியல் போராட்டம் நடத்துவதென்பது பஞ்சமா பாதகங்களுள் ஒன்றல்லவே. நீங்கள் விடுதலை பெற்றது அரசியல் போராட்டம் நடத்தித்தானே? பஜனை பாடியா சுதந்திரம் பெற்றீர்கள்? இந்தித் திணிப்பு என்று ஒன்று உள்ளவரை எங்கள் போராட்டம் நீடித்தபடிதான் இருக்கும். நம்மை அசட்டை செய்து வருகிறார்கள். எப்போதுமே மக்கள் உணர்ச்சியை, மக்கள் அபிப்ராயத்தை மதித்து நடப்பவர்கள் அல்ல இவ்வாட்சியாளர்கள். டெல்லியிலிருந்து வரும் உத்தரவைத்தான் மதிப்பார்கள். அதனால் தான் மக்கள் எதிரில் மதிப்பற்றுப் போகிறார்கள்.
பதவியில் பற்றுதல் உள்ளவர்களுக்குத்தான் இன்றைய காங்கிரஸ் ஏற்றதேயொழிய உண்மைத் தொண்டு செய்ய ஆசைப்படும் இளைஞர்களுக்கு எவ்விதத்திலும் ஏற்றதாகாது.தோழர்களே, நாட்டுக்கு நற்பணியாற்ற நல்லதோர் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்திருக்கிறது என்று மகிழ்ச்சியடையுங்கள். கிடைத்த வாய்ப்பை சரிவரப் பயன்படுத்திக் கொண்டு உண்மைத் தொண்டு செய்ய முன் வாருங்கள்.''
கோவை மாநாட்டில் கேள்வி1949 பொங்கல் திருநாளையொட்டி சென்னையில் திருக்குறள் மாநாட்டைப் பெரியார் நடத்தினார். இதற்கு முன்பெல்லாம் அவர், "மொத்தத்தில் புலவர்களே மோசம், தமிழ் இலக்கியமே குப்பை, தமிழே காட்டுமிராண்டி மொழி", என்றெல்லாம் கருத்துக் கூறியதால் தமிழ்ப்புலவர்கள் மத்தியில் கடும் கோபமும் எதிர்ப்பும் ஏற்பட்டன.
அண்ணா, சம்பத், நெடுஞ்செழியன் போன்றவர்கள் பெரியாரிடம் புராணங்களை எதிர்க்கிற வேகத்தில் திருக்குறள், சிலப்பதிகாரம் போன்றவற்றையும் சேர்த்துத் தாக்குவது முறையல்ல. தமிழுக்கும் தமிழ் இலக்கியங்களுக்கும் நாமே பாதுகாப்பு. குறள் உலகப் பொதுமறை என்பதை நாம் உணர்த்த வேண்டும் என்றெல்லாம் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பே ஓதிய பிறகு தாமதித்தேனும் பலன் ஏற்பட்டது. இப்போது பெரியார் தமிழ் இலக்கியங்களையும் புலவர்களையும் தாக்குவதை நிறுத்திக் கொண்டார்.
இப்போது அவரே மனமுவந்து இவ்வாண்டு பொங்கல் திருநாளைத் திருக்குறள் மாநாடாக நடத்த ஏற்பாடு செய்தார். இராஜாஜி - பெரியார் சந்திப்பு
பெரியார் மணியம்மையுடன் சென்னை திரும்பினார். அண்ணா, சம்பத்துடன் காஞ்சி புறப்பட்டார். "விபரீதமாக அய்யா எதையும் செய்துவிட மாட்டார். இப்படித்தான் எதையாவது செய்து மாட்டிக் குழப்பிக் கொண்டிருப்பார். எல்லாம் சரியாகி விடும்'' என்று அண்ணா சம்பத்திற்கு ஆறுதல் சொன்னார்.
காஞ்சியில் ஒருநாள் தங்கிவிட்டு மறுநாள் சென்னை விடுதலை அலுவலகத்திற்கு வந்தார் சம்பத். பெரியார் தந்த விளக்கம்விடுதலை அலுவலகம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. சம்பத் உள்பட அனைவரும் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ஈரோட்டில் இருந்து கணக்குப் புத்தக மூட்டைகளை சுமந்துகொண்டு வந்த அ. சங்கரையா பெரும் சத்தத்தோடு, "இந்தக் கிழவனுக்குப் புத்தி போன போக்கைப் பாத்தீங்களா? யார்கிட்டையும் ஏதும் சொல்லாம என்ன செஞ்சிட்டாரு பாருங்க. இந்த வயசிலே கல்யாணம் செஞ்சிக்கப் போறாராமே, கல்யாணம்'' என்று கூச்சல் போட்டுக் கொண்டே சம்பத்தை நோக்கி பாய்ந்து ஓடிவந்து "ஓ"வென்று அழ ஆரம்பித்துவிட்டார். கோவை மாநாட்டில் பெரியார், சொந்த விஷயம் என்று சொன்னது இது தானோ? என்று எல்லோரும் வியந்தனர். சங்கரையாவை சுற்றி நின்று விவரம் கேட்டனர் ஆவலோடு.
சாதாரணமாகவே சங்கரையாவுக்கு சுருங்கச் சொல்லி விளங்க வைக்கத் தெரியாது. முழுக்கதையையும் பேச ஆரம்பித்துவிடுவார். குருசாமி குறுக்கிட்டு,"பொண்ணு யாருப்பா?'' என்று கேட்க அழுதுகொண்டே பேசிய சங்கரையா, "அட உங்களுக்குத் தெரியாதா? மணியம்மாவை கல்யாணம் பண்ணிக்கிறதா?"மெட்ராஸ் ரிஜிஸ்டிரார் ஆபீஸ்லே எழுதி வச்சாச்சுங்க'' என்றதும் சம்பத் உட்பட அனைவரும் திகைத்துப் போய் அதிர்ச்சியோடு நின்றனர்.
சம்பத்தைப் பார்த்து அரங்கண்ணல் கேட்டார், "என்ன இது உண்மையாய் இருக்குமா?"எல்லாம் எதிர்பார்த்ததுதான், வருகிறேன்" என்று சொல்லிக்கொண்டே அறைக் கதவை "படார்" என்று சாத்திவிட்டு சம்பத் வெளியேறினார். உதவியாளர்கள் பின்னே ஓடினர். "காஞ்சிபுரம் போய் வரேன்'' என்றபடி வேகமாகப் போனார்.
விடுதலை அலுவலகமே தேம்பித் திகைத்து நின்றது. "அரங்கண்ணல் நீ பார்த்துக்க, சாய்ந்திரம் வரேன்'' என்று குருசாமி வீட்டுக்குப் புறப்பட்டார்.என்ன நடக்கிறது என்று வேவு பார்த்துவிட்டு வந்த தோழர் விடுதலை ஆபீசில் வந்து தலையில் கைவைத்தபடி வருத்தத்தோடு சொன்னார்: "ஜார்ஜ்டவுன் 1வது லைன் பீச்சு ரோட்ல இருக்கிற ரிஜிஸ்ட்ரார் ஆபீசில் ஐயாவுக்கு கல்யாணம்னு போர்டே எழுதி வைச்சுருக்கானுங்க'' என்று சோகத்தோடு சொன்னார்.
அந்த நேரத்தில் பெரியாரிடம் இருந்து வந்த தவமணிராஜன், "இந்த அறிக்கையை ஐயா இன்றே போடச் சொன்னாங்க‘' என்று கொடுத்தார். அதை ஆவலோடு வாங்கிப் பிரித்துப் பார்த்தார் அரங்கண்ணல். விளக்க அறிக்கை என்று தலைப்பிட்ட ஐயாவின் அறிக்கை அன்றைய விடுதலை இதழிலேயே இடம் பெற்றது.
19.6.49 அன்று விடுதலை ஏட்டுக்கு, விளக்கம் என்ற தலைப்பில் பெரியார் தன்னிலை விளக்கமாக நீண்டதொரு அறிக்கையை அனுப்பியிருந்தார். அதை ஆசிரியர் குருசாமி அன்றைய இதழிலேயே இடம்பெற வைத்தார். அவ்வறிக்கையின் முக்கிய கருத்துகள்:
சி.ஆர். அவர்களிடம் நான் பேசியது (இரகசியம்) பற்றி கோவை மாநாட்டிலேயே பிரஸ்தாபிக்கப்பட்டது யாவருக்கும் தெரியும். அது மிகுதியும் என் சொந்த விஷயம் என்று நான் முதலிலேயே தெரிவித்து விட்டேன். கோவையிலும் அதை நான் தெரிவித்ததோடு ஒரு விஷயம் அதிகமாகவும் சொல்லிவிட்டேன். அதாவது இயக்க விஷயத்தில் இதுவரை அலைந்ததுபோல் அலைய உடல்நலம் இடம் கொடுக்கவில்லை என்றும், என்னைப் போல் பொறுப்பு எடுத்துக் கொள்ளத்தக்க ஆள் யார் இருக்கிறார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளவர்கள் கிடைக்கவில்லை என்றும், ஆதலால் எனக்கு வாரிசாக ஒருவரை ஏற்படுத்தி அவர் மூலம் ஏற்பாடு செய்துவிட்டுப் போக வேண்டுமென்று அதிகக் கவலை கொண்டு இருக்கிறேன் என்றும், இது பற்றி சி.ஆர். அவர்களிடம் பேசினேன் என்பதாகவும் சொல்லி இருக்கிறேன். இது தவிர உண்மையில் சி.ஆருடன் பேசியதில் வேறு இரகசியம் இல்லை.
இன்றைய அரசியல் நிலையில் அரசியலாருக்கு நாம் அழிக்கப்பட வேண்டுமென்ற அவசியம் இருக்கிறது. இதற்கு நம்மில் ஓர் ஆளாவது தன்னுடைய அழிவை லட்சியம் செய்யாமல் பலி ஆக வேண்டியது அவசியமான காரியமாகும். ஏனெனில் அந்தப் பலிதான் இயக்கத்தை என்றும் அழிக்காமல் காப்பதாகும். அந்தப் பலிக்கு முதலாவது தகுதி நான் என்றுதான் உண்மையாகக் கருதி இருக்கிறேன். இது அகம்பாவமான கருத்தாக சிலருக்குத் தோன்றலாம். தோன்றினால் குற்றமில்லை, உண்மை அதுதான். உண்மையை வெளிப்படுத்த அதற்கு விலை கொடுப்பது போல் இந்த அகம்பாவக் குற்றத்துக்கு நான் ஆளாக்கப்படும் விலையைக் கொடுத்து அதைச் சகித்துக் கொள்ளுகிறேன். நான் பலி ஆவது என்பதை இன்று நேற்றல்ல, சில ஆண்டுகளாகவே முடிவு செய்து கொண்டிருக்கிறேன். என்றாலும் இந்தி எதிர்ப்பு துவக்கப்படும் பொழுதே உறுதியாக முடிவு செய்து கொண்டுதான் துவக்கினேன். இதை இந்த ஆண்டில் 3, 4 தடவை குறிப்பிட்டுமிருந்தேன். அதாவது, என்னைப் பற்றி ஓர் ஏற்பாடு செய்து கொண்டு இருக்கிறேன். அது முடிந்தவுடன் தீவிரமாக இறங்கி நடத்தப் போகிறேன் என்று பேசியும் எழுதியும் இருக்கிறேன். சிறையில் இருந்து வந்தவுடன் பிராட்வே மைதானக் கூட்டத்தில் சொன்னேன்.
அந்த ஏற்பாட்டை இனி நான் நடத்தப்போவதில்லை. உடன் செய்துவிட்டுப் பலி பீடத்திற்கு வரப்போகிறேன்.நம்பிக்கையான ஒருவர் எனக்கு கிடைக்கவில்லை என்றால் அதற்கு யாரும் கோபித்து கொள்ளக்கூடாது. கோபிக்கிறவர்களோ குறை கூறுகிறவர்களோ அப்படிப்பட்ட ஒருவரைச் சொன்னால் நான் ஏற்கத் தயாராய் இருக்கிறேன். நம் இயக்கத்துக்குத் தொண்டாற்ற, பொறுப்பேற்க முழு நேரத் தோழர்கள், தங்களை முழுதும் ஒப்படைப்பவர்கள் யார் இருக்கிறார்கள்? ஆதரவாளர்கள் அநேகர் இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் திராவிட மக்கள் பெரிதும் மதித்து, நம்பிப் பின்பற்றக்கூடிய அளவுக்கு நிலைமை கொண்டவர்களும் இயக்கத் தொண்டே தன் முழு நேர மூச்சாகக் கொண்டவர்களுமாய் இருந்தால் அல்லவா அது பயன்படும்? அதனால் அப்படிப்பட்டவர்கள்தான் என் கருத்துக்கு எட்டவில்லை என்றேன். அதனால் நான் பலியாக வேண்டியிருக்கிறது. இதைப் பொதுமக்கள் சீக்கிரம் காணத்தான் போகிறார்கள்.
என்னைப் பற்றி, என் பெயரைப்பற்றி, என் நடத்தையைப் பற்றி உங்களுக்குக் கவலை வேண்டாம். நீங்கள் எனக்கோ இயக்கத்துக்கோ உண்மையாய் நடந்து கொண்டீர்களா? என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள். மற்றதை எனக்கே விட்டுவிடுங்கள்.என் வாழ்நாளில், அதாவது என் பொதுவாழ்வில் எனக்குக் கிடைத்த வெற்றிகள் எல்லாம் என் எதிரிகளாலும் எனக்குக் கேடு நினைத்தவர்களாலும் என்னை ஏமாற்றியதாக ஏமாற்றுவதாகக் கருதிக்கொண்டு நடந்தவர்களாலுமேதான் பெரிதும் கிடைத்திருக்கிறது என்பது எனது தெளிவு. ஆதலால் எதிர்ப்புக்கு, சதிக்கு நான் கவலைப்படுவதில்லை.
பெரியாரின் இந்த விளக்கம் மக்களுக்கு, குறிப்பாக இயக்க ஆதரவாளர்களுக்கு அதிலும் முக்கியமாக இயக்க முன்னனி வீரர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. யாரிடத்திலும் நம்பிக்கையில்லை என்ற வார்த்தை வெந்த புண்ணில் வேல் பாய்ந்தது போல் இருந்தது, கழகத்தவர் பலரும் கலங்கினர்.

பெரியார் மணியம்மையுடன் சென்னைக்கு விரைந்து வந்தார். விடுதலையில் மேலும் சில விளக்கங்களை எழுதினார்.
மீண்டும் 28.6.1949 விடுதலை இதழில், "எனக்கு வயது எழுபத்து ஒன்றுக்கு மேலாகிறது. நான் பொது வாழ்வில் நாற்பது, ஐம்பது ஆண்டுக்கால அனுபவம் உடையவன். பொது மக்களின் மனப்பான்மை தெரிந்தவன். நான் நான்கு ஐந்து ஆண்டுக் காலமாகப் பழகி நம்பிக்கைகொண்டதும் என் நலத்தில் உண்மையான பற்றும், கவலையும் கொண்டு நடந்து கொண்டிருப்பதுமான மணியம்மையை எப்படியாவது வாரிசு உரிமையாக ஆக்கிக் கொண்டும் அந்த வாரிசு உரிமைகளையும், தனிப்பட்ட தன்மையையும் மற்றும் நான்கு, ஐந்து பேர்களையும் சேர்த்து இயக்க நடப்புக்கும் பொருள் பாதுகாப்பிற்குமாக ஒரு டிரஸ்ட் பத்திரம் எழுத ஏற்பாடு செய்திருக்கிறேன்'', பெரியாரின் அறிக்கை நாட்டில் பெரியதொரு குழப்பத்தை ஏற்படுத்தியது.--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil