பாண்டியர் குடிமரபு கூறும் நற்குடி வேளாளர் வரலாறு

893 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
May 12, 2011, 6:59:58 AM5/12/11
to ssesh...@gmail.com, mint...@googlegroups.com
                                                                      மூவேந்தரும் ஒரே குடிவழியினர்
 
 
பழந்தமிழகத்தில் முதலில் தோன்றிய மன்னர் மரபு பாண்டிய மரபு ஒன்றே. பாண்டிய மரபிலிருந்தே சேரரும், சோழரும் தோன்றினர் என்பதைப் பின்வரும்  பாடல் தெரிவிக்கிறது.
 
                         தலையவைக் காலத்துத் தலைவ ரிம்முறை
                          மாறன் வழுதி மாறன் திரையன்
                          மாறன் பொறையன் ஓர்வகுப்பில் வந்தனர்
                          தமிழ்மூ வரசிவர் தாமா வாரே         (ந.வே.வ. பாயிரம்)
 
மாறன் திரையன் மரபில் வய்தோர் சோழராயினர் இவர்கள் அலைகடலில் நெடுந்தொல்வு ஆழ்கடலில் பயணம் செய்ததால் திரையர் எனப்பட்டனர். கடல் கடந்த தொலைவிடங்களிலிருந்து நெற்பயிர் கொண்டு வந்து பயிர் செய்ததால் சொல் - சொல்லர் - சோலர் - சோழர் எனப் பெயர் பெற்றிருக்கலாம் என கருதப் படுகிறது.
 
மாறன் வழுதி மரபினர் தொடர்ந்து பாண்டியராகவே நீடித்தனர்.
 
 
பாண்டியர் வரலாறு மீட்டமைப்பது
 
பதிற்றுப்பத்து எட்டு சேர மன்னர்களின் வரலாற்றை அவர்கள்  ஆட்சி புரிந்த ஆண்டுக் காலக் குறிப்போடு தெளிவாலக் கூறுகிறது. கா.சு. பிள்ளை அவர்கள் இந்த ஆட்சிக் காலத்தைக கி.மு. 4-ஆம் நூற்றாண்டு முதல் முறைப்படி கணித்திருக்கிறார்.
 
இந்நிலையில் 1920 ஆம் ஆண்டு மதுரையில் அச்சிட்டு வெளியிடப்பட்ட நற்குடி வேளாளர் வரலாறு என்னும் 1035 செய்யுள் கொண்ட பாண்டியர் குடிமரபு கூறும் நூல் பாண்டியர்களின் 201 தலைமுறைகளைக் குறிப்பிடுகிறது.
 
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அடுத்த தலைமுறைக்கு உரியவனுக்குப் பட்டம் கட்டி வந்த வழக்கத்தை இவர்கள் கொண்டிருந்தனர்.
 
பாண்டியரின் ஐவகைப் பிரிவில் கொடி என்றும் பிதிர் என்றும் பிரிக்கப்பட்ட வண்ணம் இருங்கோவேள் பிரிவினர் வழி வந்தவர்கள் தொடர்ந்து பட்டம் கட்டிக் கொள்வதைக் கைவிடவில்லை.  . இதன் வண்ணம் கி.பி. 1944 இல் இயற்கை எய்திய போற்றியடியா இருங்கோவேள் 201 ஆவது பாண்டிய மன்னர் மரபின் பட்டம் கொண்டிருந்தார் என அந்நூல் கூறுகிறது.
 
இந்நூலில் பெயர் தெரிந்த பாண்டியர்களின் ஆட்சிக் காலம் கலியாண்டுக் கடக்கில் குறிக்கப்பட்டுள்ளது.
 
காசுமீர வரலாற்றை இராச தரங்கிணி குறிப்பிடுவது போல் நெடிய பாண்டியர் மரபை நற்குடிவேளாளர் வரலாறு  குறிப்பிடுவது,  நெடிய மூவேந்தர் வரலாற்றை மீட்டமைப்பதற்கு ஓரளவு துணை செய்கிறது. இந்நூலில் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனை 87 ஆவது பாண்டியனாகவும்,  வெற்றிவேள்செழியனை 88 ஆவது பாண்டியனாகவும் குறித்திருப்பது ஏனைய சேர, சோழ வரலாற்றுக் காலத்தோடு நன்கு பொருந்தி
வருகிறது. இந்நூலில் கண்ட குறிப்புகளின் வண்ணம் விடுபட்ட பாண்டியன் பெயர்களையும் சேர்த்தால் கி.மு. 500 முதல் கி.பி. 500 வரை 1000 ஆண்டுக் கால பாண்டியர் தலைமுறைகளைக் கண்டறிய முடிகிறது.
 
1000 ஆண்டுகளில் 40 தலைமுற குறிப்பிடப்படுகிறது. ஒரு தலைமுறைக்குச் சராசரி 25 ஆண்டுகள் என்பது இயல்பான நிகழ்ச்சி ஆகும். இவர்களுள் கடைக் கழக நூல்களில் 20 பாண்டியர் பெயர்கள் மட்டும் உள்ளன.
ஏனையவற்றுள் பிற சான்றுகள் வாயிலாகக் கிடைத்த பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
 
கடைக்கழக இலக்கியங்களின் வாயிலாக  அறியப்படும் முதுகுடுமிப் பெரு வழுதி, கருங்கை ஒள் வாட் பெரும் பெயர் வழுதி ஆகிய இருவரும் முறையே 66 ஆவது, 67 ஆவது பாண்டிய மரபிரராக அறிய முடிகிறது.
 
இமயவரம்பனும், பல்யானச் செல்கெழு குட்டுவனும் வாழ்ந்த கி.மு. 350 - 3000 கால அளவில் 70 ஆவது பாண்டியனாகிய தேவ பாண்டியன் ஆட்டி புரிந்ததாக நற்குடி வேளாளர் வரலாறு கூறுகிறது.
 
பாண்டியரின் கிளை மரபாகிய இருங்கோவேள் மரபு கி.மு. 2283 கூன் பாண்டியனில் தொடங்குகிறது.
 
கோசாம்பியை தலைநகராகக் கொண்டு வடநாட்டில் ஆட்சி புரிந்த தமிழ் மன்னன் உதயணன் கி.மு.701 இல் (கலியாண்டு  2400) ஆரியர்களைப் போரிட்டு வென்றான். அவன் ஆட்சி செய்திருந்தால் கி.பி. 199 - இல் குப்தர் தலையெடுக்காமல் தடுத்திருக்கலாம். பணிநது பேசிய ஆரியர்களை நம்பி அடங்கிப் போன பண்பாட்டு அடிமைத்தனமே இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என நற்குடி வேளாளர் வரலாறு ஆசிரியர் ஆறுமுக நயினார் பிள்ளை பின்வரும் செய்யுளில் குறிப்பிட்டுள்ளார்.
 
       பண்டை நாலறு நூறாண்டினாகரிறை பாடலிக்க ணளவில் படை
        விண்டிருந்தவடவர்படை தடுத்ததமிழ்வேந்தர் முப்பத்து முந்நூற்றுமேற்
        கொண்டுகுத்தரை யடக்கிடாததெனை கூடுநின்ற வடவோர் வழித்
       தொண்டராயதிறன் பின்னர் சாங்கரடி தொத்தினார்       (ந.வே.வ.414)
 
மேற் சொன்ன செய்திகள் முனைவர் இரா. மதிவாணனின் கடைக்க.க நூல்களின் காலமும் கருத்தும் எனற நூலில் இருந்து தட்டச்சு செய்யப்பட்டது.
 
 
நற்குடி வேளாளர் வரலாறு நூலின் செய்யுளும் பொழிப்புரையும் தந்து யாரேனும் உதவமுடியுமா?
 
சேசாத்திரி

prakash sugumaran

unread,
May 12, 2011, 8:47:30 AM5/12/11
to mint...@googlegroups.com
இந்நூலில் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனை 87 ஆவது பாண்டியனாகவும்,  வெற்றிவேள்செழியனை 88 ஆவது பாண்டியனாகவும் குறித்திருப்பது ஏனைய சேர, சோழ வரலாற்றுக் காலத்தோடு நன்கு பொருந்தி

இமயவரம்பனும், பல்யானச் செல்கெழு குட்டுவனும் வாழ்ந்த கி.மு. 350 - 3000 கால அளவில் 70 ஆவது பாண்டியனாகிய தேவ பாண்டியன் ஆட்டி புரிந்ததாக நற்குடி வேளாளர் வரலாறு
கூறுகிறது.

மிக்க நன்றி. சிறப்பான பதிவு. இந்த வெற்றிவேல் செழியன் சிலப்பதிகார பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு அடுத்து மதுரையை ஆண்டவன். இமயவரம்பன் என்ற அரிய  பட்டதை சேரன் நெடுஞ்செரலாதனுக்கு விட்டு கொடுத்த ( அல்லது விட்டு கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளான ) பரிதாபத்துக்கு உரிய சிலம்பு புகழ் குடக்கோ பாண்டியன் நெடுஞ்செழியனும், பலராலும் இளங்கோவடிகளார் என அறியப்படும் பல்யானை செல்கெழு குட்டுவனும், சகோதரர்கள். இவர்களின் தந்தை மகாபாரதத்தில் இரு பக்கத்துக்கும் பொதுவாக நின்று இரு தரப்பு படைக்கும் உணவளிக்கும் பொறுப்பை ஏற்றதால் ( போரில் பங்கேற்காமல் இருக்க ) பெருஞ்சோற்றுதிய சேரலாதன் என் புகழ் பெற்ற உதியன் சேரல்.



2011/5/12 seshadri sridharan <ssesh...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
prakash sugumaran

வேந்தன் அரசு

unread,
May 12, 2011, 7:42:12 AM5/12/11
to mint...@googlegroups.com
>கடைக் கழக நூல்களில் 20 பாண்டியர் பெயர்கள் மட்டும் உள்ளன.
 
இவர்கள் அக்குடியில் தோன்றியவர்கள். முடி சூடியவர்கள் என கொள்ள இயலாது
 
ஆதித்த கரிகாலனையும் அருள்மொழி வர்மணையும் ஒரே காலத்தில் கொள்வதுபோல் இவர்களில் பலரும்.

--
 
>>நற்குடி வேளாளர் வரலாறு நூலின் செய்யுளும்
 
குடிப்பெருமையை உயர்த்திக்கொள்ள மிகைப்படுத்தி சொல்லுவாங்க
 
எங்க குல வரலாற்றில் பரசுராமன் கூட வருவார்.
 
சோழர் தலைமுறையை செயங்கொண்டார் இப்படித்தான் கூட்டிச்சொல்வார் பரணியில்
 
வரலாறு அழிந்து புராணம் ஓங்கி நிற்கும் நாடு பாரத நாடு
அதனாலே பாருக்குளே நல்ல நாடு பாரத நாடு

 
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

வேந்தன் அரசு

unread,
May 12, 2011, 7:26:03 PM5/12/11
to mint...@googlegroups.com


12 மே, 2011 8:47 am அன்று, prakash sugumaran <praka...@gmail.com> எழுதியது:

இந்நூலில் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனை 87 ஆவது பாண்டியனாகவும்,  வெற்றிவேள்செழியனை 88 ஆவது பாண்டியனாகவும் குறித்திருப்பது ஏனைய சேர, சோழ வரலாற்றுக் காலத்தோடு நன்கு பொருந்தி

இமயவரம்பனும், பல்யானச் செல்கெழு குட்டுவனும் வாழ்ந்த கி.மு. 350 - 3000 கால அளவில் 70 ஆவது பாண்டியனாகிய தேவ பாண்டியன் ஆட்டி புரிந்ததாக நற்குடி வேளாளர் வரலாறு
கூறுகிறது.

மிக்க நன்றி. சிறப்பான பதிவு. இந்த வெற்றிவேல் செழியன் சிலப்பதிகார பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு அடுத்து மதுரையை ஆண்டவன். இமயவரம்பன் என்ற அரிய  பட்டதை சேரன் நெடுஞ்செரலாதனுக்கு விட்டு கொடுத்த ( அல்லது விட்டு கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளான ) பரிதாபத்துக்கு உரிய சிலம்பு புகழ் குடக்கோ பாண்டியன் நெடுஞ்செழியனும், பலராலும் இளங்கோவடிகளார் என அறியப்படும் பல்யானை செல்கெழு குட்டுவனும், சகோதரர்கள். இவர்களின் தந்தை மகாபாரதத்தில் இரு பக்கத்துக்கும் பொதுவாக நின்று இரு தரப்பு படைக்கும் உணவளிக்கும் பொறுப்பை ஏற்றதால் ( போரில் பங்கேற்காமல் இருக்க ) பெருஞ்சோற்றுதிய சேரலாதன் என் புகழ் பெற்ற உதியன் சேரல்.


 
 
சோறு போட்டதாக பாடு என் ஆணை இட்டு இருப்பார், புலவர் பாடி இருப்பார்
 
பாரதம் நடந்த காலம் எந்த காலம்?. இவரு சங்க காலம்
 
 
--

seshadri sridharan

unread,
May 13, 2011, 6:40:21 AM5/13/11
to mint...@googlegroups.com
      தொடர்சசி
    
      வரலாற்றுக் காலப் பாண்டியர்கள்
      
      கி.மு. 2082 - முடத்திருமாறன்                      6ஆவது பாண்டியன்
      கி.மு.1932  -  மாறன் வழுதி                        10 ஆவது பாண்டியன் 
      கி.மு. 1002 -  960 திருவழுதி                         45 ஆவது பாண்டியன்
      கி.மு. 910 - 854 வீர பாண்டியன்                  49 ஆவது பாண்டியன்
      கி.மு. 884 -832 பாண்டீசன் (நிலந் தரு       50 ஆவது பாண்டியன்
                                திருவின்பாண்டியன்)
      கி.மு. 340 - 302 தேவ பாண்டியன்               70 ஆவது பாண்டியன்
       கி.மு. 302- 260 செயபுஞ்ச                            71 ஆவது பாண்டியன்
      கி.மு. 202          நன்மாறன்                          74 ஆவது பாண்டியன்   
      கி.மு. 138          இராசகுலோத்தமன்           77 ஆவது பாண்டியன்
       கி.மு. 56          தேவ பூடணன்                    82 ஆவது பாண்டியன் 
     கி.பி. 142 ஆரியப் படை கடந்த நெ.செ       87 ஆவது  பாண்டியன்
      கி.பி. 150       வெற்றிவேற் செழியன்         88 ஆவது பாண்டியன்
      கி.பி. 172        நெடுஞ்செழியன் II                 89 ஆவது பாண்டியன்
      கி.பி. 198        உக்கிர மாறன்                       90 ஆவது பாண்டியன்

 

       பாண்டியர் தலைமுறை மீட்டமைப்பு
 
      கி.மு. 500 - 450   பல்சாலை முதுகுடுமி பெரு வழுதி                    66 ஆவது
      கி.மு. 450 - 400  கருங்கை யொளைவாட் பெரும் பெயர் வழுதி 67 ஆவது
      கி.மு. 400 - 380   போர்வல் வழுதி                                                     68 ஆவது
      கி.மு. 380 - 340   கொற்கை வழுதி நற்றேர் வழுதி                         69 ஆவது
      கி.மு. 340 - 302   தேவ பாண்டியன்                                                   70 ஆவது
      கி.மு. 302 - 270    செய புஞ்சன்                                                          71 ஆவது
      கி.மு. 270 - 245  பசும் பூண் பாண்டியன்                                           72 ஆவது
      கி.மு. 245 - 220 ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன்                      73 ஆவது
      கி.மு. 220 - 200 பாண்டியன் நன்மாறன்                                            74 ஆவது  
      கி.மு. 200 - 180  கடலன் வழுதி - நெடுஞ்செழியன்                         75 ஆவது
      கி.மு. 180 - 160  மருங்கை வழுதி                                                     76 ஆவது
      கி.மு. 160 - 150  பாண்டியன் இத்தமன் -- புலிமான் வழுதி            77ஆவது
      கி.மு. 150 - 140  பாண்டியன் கீரன் சாத்தன்                                     78 ஆவது
      கி.மு. 140 - 120  கலிமான் வழுதி (அண்டர்  மகன் குறுவழுதி)     79 ஆவது
      கி.மு. 120 - 100  பாண்டியன் ஏனாதி (நெடுங் கண்ணன்)                80 ஆவது
      கி.மு. 100 -   87  கொற்கை வழுதி(பசும்பூண்பாண்டியன்  II)          81ஆவது
      கி.மு.   87 - 62    தேவபூடணன்(இலவந்திகைதூஞ்சியநன்மாறன்  82ஆவது
      கி.மு.  62 - 42   தலை. கான. செரு. நெடுஞ்செழியன்                      83ஆவது
      கி.மு.  42 - 1     கானப்பேரெயில் கட உக்கி பெருவழுதி               84 ஆவது
      கி.மு.  1 - 30   பாண்டியன் அறிவுடைநம்பி      புற 184                 85ஆவது
      
 
சேசாத்திரி                                  
      

2011/5/13 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
--

prakash sugumaran

unread,
May 13, 2011, 5:11:01 PM5/13/11
to mint...@googlegroups.com
சோறு போட்டதாக பாடு என் ஆணை இட்டு இருப்பார், புலவர் பாடி இருப்பார்.

பாரதம் நடந்த காலம் எந்த காலம்?. இவரு சங்க காலம்

பாரதம் நடந்த காலம் எந்த காலம்???


--
prakash sugumaran

seshadri sridharan

unread,
May 14, 2011, 6:04:10 AM5/14/11
to mint...@googlegroups.com
தொடர்ச்சி

கி.பி. 30 - 60 வெள்ளிநம்பலத்து துஞ்சிய பெருவழுதி 86 ஆவது
கி.பி. 60 - 117 ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் 87 ஆவது
கி.பி. 117 - 160 வெற்றிவேற் செழியன் 88 ஆவது
கி.பி. 160 - 198 நெடுஞ்செழியன் II
89 ஆவது
கி.பி. 198 - 220 சித்ர மாட துஞ் நன்மாறன்/ உக்கிரமாறன் 90 ஆவது
கி.பி. 220 - 250 பன்னாடு தந்த மாறன் வழுதி 91 ஆவது
கி.பி.250 - 270 கூடாகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி 92 ஆவது
கி.பி. 270 - 297 தென்னவன் கோ 93 ஆவது
கி.பி. 298 - 310 பராக்கிரம பாகு (மானாபரணன்) 94 ஆவது
நல்வழுதி
கலியன் கூத்தன் 95 ஆவது
கடலன் வழுதி (கழுகு மலை கல்வெட்டு 96 ஆவது
பொற்கைப் பாண்டியன் புற -18
97 ஆவது
பாண்டியன்மதிவாணன் 98 ஆவது முதல் 102 வரை
கி.பி. 475 -490 கடுங்கோன் 103 ஆவது
கி.பி. 498 உக்கிரபாண்டியன் 104 ஆவது
கி.பி. 498 - 540 சோம சுந்தர பாண்டியன் 105 ஆவது


தொடரும்


5/13/11, seshadri
sridharan <ssesh...@gmail.com> wrote:

seshadri sridharan

unread,
May 14, 2011, 6:13:44 AM5/14/11
to mint...@googlegroups.com
On 5/14/11, prakash sugumaran <praka...@gmail.com> wrote:
> சோறு போட்டதாக பாடு என் ஆணை இட்டு இருப்பார், புலவர் பாடி இருப்பார்.
> பாரதம் நடந்த காலம் எந்த காலம்?. இவரு சங்க காலம்
>
> பாரதம் நடந்த காலம் எந்த காலம்???

பாரதப் போர் கி.மு. 1,300 இல் நடந்ததாக ஆனந்த மூர்த்தி தமது discources
on Mahabarat என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

இப்போரில் தொடர்புடைய தமிழ் மூவேந்தர் வடநாட்டில் ஆட்சி புரிந்தவர்கள்
எனறும் கி.மு 6 ஆம் நூற்றாண்டோடு தமிழராட்சி வடநாட்டில் முடிவுற்றதாகவும்
இருங்கோவேள் குசராத்தை ஆண்ட பாண்டியன் என்று நற்குடி வேளிர் வரலாற்றை
அடிப்படையாகக் கொண்டு இரா. மதிவாணர் சொல்கிறார்.

N. Kannan

unread,
May 15, 2011, 6:30:37 AM5/15/11
to mint...@googlegroups.com
வாழ்த்துக்கள் சேசாத்திரி.
இதைத்தாங்கள் எக்ஸல் ஷீட்டில் பதிவு செய்து பவளசங்கரியின் உதவியுடன் நம்
மரபு விக்கியில் போடலாம்.
நானும், பேராசிரியரும் தமிழ் வரலாற்றின் மைல்கற்கள் எவை எனக்
கேட்டுக்கொண்டு வருகிறோம்.
இங்கு சரித்திரம் அறிந்தோர் எங்களுக்கெல்லாம் தமிழக வரலாறை சங்கம்
தொட்டுச் சொன்னால் நன்றாக இருக்கும்.
நன்றி.
நா.கண்ணன்

2011/5/14 seshadri sridharan <ssesh...@gmail.com>:

Dhivakar

unread,
May 15, 2011, 6:56:43 AM5/15/11
to mint...@googlegroups.com
வெறுமனே கால வருடம் போடுவதை விட ரெபரென்ஸ் கொடுத்துப் போடுவதும் பின்பு அதை மரபு விக்கியில் பதிவு செய்வதும் சாலப் பொருத்தம். 

பழைய கால பாண்டியர்கள் காலம் இதுவரை கிடைத்த ஆதாரங்களின் படி, சரித்திர ஆய்வாளர்கள் யாரும் சரிவரப் பொருந்துவதில்லை என்றே எழுதுகின்றனர்.இளங்கோவடிகளின் காலமே இன்னமும் ஆதாரபூர்வமாகத் தெரியவில்லை. பாண்டியர்களில் கடுங்கோன் முதலான பிற்காலப் பாண்டியர்களுக்குதான் காலக் குறிப்பீடு உள்ளது.

முற்காலப் பாண்டியர்களில் - தோராயமாக இதுதான் பெயர், இதுதான் காலம் என்று எழுதுவதை எப்படி மரபு விக்கி போன்ற காலப் பெட்டகத்தில் பதிவு செய்யமுடியும் என்பதை திரு கண்ணன் அவர்கள் எடுத்துச் சொல்லவேண்டும். நாளை வரும் இளைய தலைமுறை இந்தக் காலப் பெட்டகத்தின் (மரபு விக்கியில் பாண்டியர்களின் காலம்) குறிப்பையே ரெஃபரன்ஸாக எடுத்துக் கொள்ள ஒரு தவறான வாய்ப்புக் கொடுக்க ஏதுவாகும். 

இலக்கியத்துக்கு இந்த பிரச்னைகளெல்லாம் இல்லை. ஆனால் சரித்திரம் என்று வரும்போதும் அதன் கால கட்டம் எனக் குறிப்பிடும்போதும் என்னென்ன ஆதாரங்கள் அவற்றுக்கு உள்ளன என்பதை அடிக் குறிப்புகள் மூலம் குறிப்பிட்டு பதிவு செய்வது மிகவும் அவசியம். 

மரபு விக்கி என்பது காலப் பெட்டகமாக அமையவேண்டும் என்ற விருப்பத்தில் எழுதப்பட்டது இந்தக் கருத்தே தவிர வேறொன்றும் யாமறியோம் பராபரமே!

தி






2011/5/15 N. Kannan <navan...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Kannan

unread,
May 15, 2011, 7:00:11 AM5/15/11
to mint...@googlegroups.com
அன்பின் திவாகர்:

உங்களைப் போன்றோர் கவனிக்கிறார்கள் எனும் தைர்யத்தில்தான் சொல்கிறேன்.
அறிவியல் வெளியீடுகளில் இந்தப் Peer Review இருக்கும். உங்கள்
பங்களிப்பிற்கு முன்னமே நன்றி.

நான் சொல்வது ஒரு ஊக்குவிப்பே!

நா.கண்ணன்

2011/5/15 Dhivakar <venkdh...@gmail.com>:

seshadri sridharan

unread,
May 15, 2011, 6:41:22 AM5/15/11
to mint...@googlegroups.com
ஐயா,
 
பாண்டியர் மட்டும் அல்ல சோழ, சேரர் வரலாற்றையும் மதிவாணர் எழுதி உள்ளார். scan செய்து கொள்ள மதிவாணர் அனுமதித்துள்ளார். 
 இப்போது நமக்கு கால வரிசைப்படி பல்லவர் காலத்திலிருந்து தான் கிடைக்கிறது. மதிவாணர் கி.மு. 500 வரை முற்பட கால வரிசையை நீட்டுத்துள்ளார்.
அதற்கான கருவி நூல் தான் நற்குடி வேளார் வரலாறு.
 
சேசாத்திரி
2011/5/15 N. Kannan <navan...@gmail.com>

prakash sugumaran

unread,
May 15, 2011, 8:53:40 AM5/15/11
to mint...@googlegroups.com
பாரதப் போர் கி.மு. 1,300 இல் நடந்ததாக ஆனந்த மூர்த்தி தமது discources
> on Mahabarat என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

கி.மு 6 ஆம் நூற்றாண்டோடு தமிழராட்சி வடநாட்டில் முடிவுற்றதாகவும்


> இருங்கோவேள் குசராத்தை ஆண்ட பாண்டியன் என்று நற்குடி வேளிர் வரலாற்றை

i got evidendces from chera history and silappathigaaram for this
statement. ilango ilangadungo who ruled the vindhya malai border area
was one of the cousin brother of pandian nedunchezhian. who wrote
silappathigaaram. un avoidably the history of silappathigaara
nedunchezian was deprived. ( the family background of this pandian was
completely deprived ) palyaanai selkuzhu kuttuvan was the direct
brother of nedunchezhian. he is the second son of udhiyan cheral. he
got that name on the remembrance of the brother of his father udhiyan
cheral. ( who involved in mahaa baaratha war ) kadal piragottiya vel
kuzhu kuttuvan. who was the friend of egypt king julias seazer. gone
to egypt via sea to help him in war. palyaanai also spent his old age
wih egypt king augustus after silappathigaara issue. the month july
added in the english calender on the remembrance of julious and the
month august for augustus.

i believe these two were added in navagrahaas list in india.. raahu
and kedhu. ( dts my belief only ) some body interested in austrology
can search the period of raahu and kedhu added in navagrahaa list.

வேந்தன் அரசு

unread,
May 15, 2011, 8:54:24 AM5/15/11
to mint...@googlegroups.com


14 மே, 2011 6:13 am அன்று, seshadri sridharan <ssesh...@gmail.com> எழுதியது:

On 5/14/11, prakash sugumaran <praka...@gmail.com> wrote:
> சோறு போட்டதாக பாடு என் ஆணை இட்டு இருப்பார், புலவர் பாடி இருப்பார்.
> பாரதம் நடந்த காலம் எந்த காலம்?. இவரு சங்க காலம்
>
> பாரதம் நடந்த காலம் எந்த காலம்???

பாரதப் போர் கி.மு.  1,300 இல் நடந்ததாக ஆனந்த மூர்த்தி தமது discources
on Mahabarat என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

இப்போரில் தொடர்புடைய தமிழ் மூவேந்தர் வடநாட்டில் ஆட்சி புரிந்தவர்கள்
எனறும் கி.மு 6 ஆம் நூற்றாண்டோடு தமிழராட்சி வடநாட்டில் முடிவுற்றதாகவும்
 இருங்கோவேள் குசராத்தை ஆண்ட பாண்டியன் என்று நற்குடி வேளிர் வரலாற்றை
அடிப்படையாகக் கொண்டு இரா. மதிவாணர் சொல்கிறார்.


உதியன் சேரலாதனின் மகன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் .
அவன் மகன் செங்குட்டுவன்.
செங்குட்டுவன் நூற்றுவகன்னர், கயவாகு  காலத்தவர்

பின் பாரதம் எப்படி கிமு 1300 க்கு முந்தும்.

அல்லது உதியன் எப்படி பாரத காலத்தினன்

கிருஷ்ணமூர்த்தி

unread,
May 15, 2011, 10:50:25 AM5/15/11
to மின்தமிழ்
//உதியன் சேரலாதனின் மகன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் அவன் மகன்

செங்குட்டுவன். செங்குட்டுவன் நூற்றுவகன்னர், கயவாகு காலத்தவர்

பின் பாரதம் எப்படி கிமு 1300 க்கு முந்தும்.அல்லது உதியன் எப்படி பாரத
காலத்தினன்//

அப்படிப் போடுங்க அருவாள!

உதியன் சேரல் பரத காலத்தவனா என்ற தலைப்பில் நாற்பத்துமூன்று
வருடங்களுக்கு முன்னாலேயே மதுரையில் ஒரு தமிழ்ப் பேராசிரியர் ஒரு ஆய்வு
நூலை எழுதியதைப் படித்திருக்கிறேன். மதுரை பாரதி புத்தக நிலைய வெளியீடாக
வந்த நினைவு. சமகால அரசர்கள், புலவர்களுடைய பாடல்களைக் கொண்டு அதில்
பாரதப் போரில் உயிர் நீத்தவர்களை நினைத்து சோற்றுப் பிண்டம் கொடுத்ததாக
நிறுவி இருப்பார்.

புலவர்க்கழகு பொய்யுரைத்தல் என்பதை
இன்றைக்கு வைரமுத்து வாலி வர்பை கொஞ்சம்
கூடத்தப்பாமல் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள்
-----------------------------
பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடைக்காதென்பது பொய்
பொய் சொன்ன வாய்க்குத்தான் தமிழ்நாடு சோறுபோட்டு வளர்த்திருக்கிறது.

கிருஷ்ணமூர்த்தி

On May 15, 5:54 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:

வேந்தன் அரசு

unread,
May 15, 2011, 3:12:50 PM5/15/11
to mint...@googlegroups.com


15 மே, 2011 10:50 am அன்று, கிருஷ்ணமூர்த்தி <kris...@gmail.com> எழுதியது:

//உதியன் சேரலாதனின் மகன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் அவன் மகன்
செங்குட்டுவன். செங்குட்டுவன் நூற்றுவகன்னர், கயவாகு  காலத்தவர்

பின் பாரதம் எப்படி கிமு 1300 க்கு முந்தும்.அல்லது உதியன் எப்படி பாரத
காலத்தினன்//

அப்படிப் போடுங்க அருவாள!

உதியன் சேரல் பரத காலத்தவனா என்ற தலைப்பில் நாற்பத்துமூன்று
வருடங்களுக்கு முன்னாலேயே மதுரையில் ஒரு தமிழ்ப் பேராசிரியர் ஒரு ஆய்வு
நூலை எழுதியதைப் படித்திருக்கிறேன். மதுரை பாரதி  புத்தக நிலைய வெளியீடாக
வந்த நினைவு. சமகால அரசர்கள், புலவர்களுடைய பாடல்களைக் கொண்டு அதில்
பாரதப் போரில் உயிர் நீத்தவர்களை நினைத்து சோற்றுப் பிண்டம் கொடுத்ததாக
நிறுவி இருப்பார்.
 
 
ஆனால் அந்த பாடலின் பொருள் அப்படி வரலை
 
அலங்கு உளைப் புரவி ஐவரொடு சினைஇ
நிலம்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம்பதின்மரும் பொருது களத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்
 
இந்த பாட்டில் பிண்டம் வச்சார்னு பொருள் இல்லை. மிகுபதம்
 

புலவர்க்கழகு பொய்யுரைத்தல் என்பதை
இன்றைக்கு  வைரமுத்து வாலி வர்பை கொஞ்சம்
கூடத்தப்பாமல் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள்
 
 
சங்க இலக்கியங்களில் அப்படி முழு பொய் எல்லாம் இல்லை கிளிமொழி என் உவமை சொல்லுவாங்க. அது நலம் புனைந்து உரைத்தலின் பாற்படும்.
 
”முல்லைக்கு தேர், மயிலுக்கு போர்வை”
 
இது கிறுக்குத்தனம் போல் நமக்கு தோணும்
 
ஆனால் கொடைமடம் படுதல் அன்றி படைமடம் பாடார் என் பொய்யா நாவின் கபிலரே பாடுவார்
 

seshadri sridharan

unread,
May 16, 2011, 1:53:30 AM5/16/11
to mint...@googlegroups.com
உதியஞ் சேரலாதனை நோக்கி அவன் முன்னோன் பெருஞ் சோற்று உதியன் பாரதப்
போரில் சோறு இட்டதாக புலவர் பாடியதாக மதிவாணர் கருதுகிறார். இந்த உதியன்
(குட்டுவன்) காலம் கி.மு. 350 - 328 என மதிவாணர் கூறுகிறார்.

சேசாத்திரி

On 5/16/11, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
> 15 மே, 2011 10:50 am அன்று, கிருஷ்ணமூர்த்தி <kris...@gmail.com> எழுதியது:
>
>> //உதியன் சேரலாதனின் மகன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் அவன் மகன்
>> செங்குட்டுவன். செங்குட்டுவன் நூற்றுவகன்னர், கயவாகு காலத்தவர்
>>
>> பின் பாரதம் எப்படி கிமு 1300 க்கு முந்தும்.அல்லது உதியன் எப்படி பாரத
>> காலத்தினன்//
>>
>> அப்படிப் போடுங்க அருவாள!
>>
>> உதியன் சேரல் பரத காலத்தவனா என்ற தலைப்பில் நாற்பத்துமூன்று
>> வருடங்களுக்கு முன்னாலேயே மதுரையில் ஒரு தமிழ்ப் பேராசிரியர் ஒரு ஆய்வு
>> நூலை எழுதியதைப் படித்திருக்கிறேன். மதுரை பாரதி புத்தக நிலைய வெளியீடாக
>> வந்த நினைவு. சமகால அரசர்கள், புலவர்களுடைய பாடல்களைக் கொண்டு அதில்
>> பாரதப் போரில் உயிர் நீத்தவர்களை நினைத்து சோற்றுப் பிண்டம் கொடுத்ததாக
>> நிறுவி இருப்பார்.
>>
>
>
> ஆனால் அந்த பாடலின் பொருள் அப்படி வரலை
>
> அலங்கு உளைப் புரவி ஐவரொடு சினைஇ
> நிலம்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
> ஈரைம்பதின்மரும் பொருது களத் தொழியப்
> பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்

> **


> இந்த பாட்டில் பிண்டம் வச்சார்னு பொருள் இல்லை. மிகுபதம்

> **


>
>>
>> புலவர்க்கழகு பொய்யுரைத்தல் என்பதை
>> இன்றைக்கு வைரமுத்து வாலி வர்பை கொஞ்சம்
>> கூடத்தப்பாமல் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள்
>>
>
>
> சங்க இலக்கியங்களில் அப்படி முழு பொய் எல்லாம் இல்லை கிளிமொழி என் உவமை
> சொல்லுவாங்க. அது நலம் புனைந்து உரைத்தலின் பாற்படும்.
>
> ”முல்லைக்கு தேர், மயிலுக்கு போர்வை”
>
> இது கிறுக்குத்தனம் போல் நமக்கு தோணும்
>
> ஆனால் கொடைமடம் படுதல் அன்றி படைமடம் பாடார் என் பொய்யா நாவின் கபிலரே பாடுவார்
>
> --
> வேந்தன் அரசு
> வள்ளுவம் என் சமயம்
>

seshadri sridharan

unread,
May 16, 2011, 2:51:17 AM5/16/11
to mint...@googlegroups.com
சேரர் தலைமுறை மீட்டமைப்பு

காலம் பெயர் ஆட்சி ஆண்டுகள்
கி.மு. 430-350 வானவன் (அ) வானவரம்பன்
350 - 328 (குட்டுவன்) உதியஞ் சேரலாதன் 22
329 - 270 இமயவர நெடு சேரலாதன் 58
270-245 பல்யானை செல்கெழு குட்டுவன் 25
245- 220 களங்காய்கண்ணி நார்முடிச்சேரல் 25
220 - 200 பெருஞ்சேரலாதன் 20
200 - 180 குடக்கோ நெடுஞ்சேரலாதன் 20
180 - 125 கடல் பிறக் கோட்டிய வேல்கெழு குட்டுவன் 55
125 -87 ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் 38
87 - 62 செல்வக் கடுங்கோன் வாழியாதன் 25
62 - 42 யானைகட் சேய் மாந்த சேரல் + மாரிவெண்கோ 20
42 - 25 தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை 17
25 - 9 இளஞ்சேரல் இரும்பொறை 16
9 - 1 கருவூர் ஏறிய கோப்பெருஞ்சேரல் இரும்பொறை 8
கி.மு. 20 - கி.பி. 10 வஞ்சி முற்றத்து துஞ்சிய அந்துவன்சேரல் 30
1 - 30 பாலை பாடிய பெருங்கடுங்கோ 30
20 - 30 கணையன் ( கணைக்கால் இரும்பொறை) 10
30 - 60 கோக் கோதை மார்பன் 30
60 - 140 சேரன்செங்குட்டுவன் 70
140 - 150 கோட்டம்பலத்து துஞ்சிய மாக்கோதை 10
150 - 160 சேரமான் முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன் 10
160 - 180 சேரமான் கணைக்கால் இரும்பொறை 20
180 - 200 சேரமான் இளங்குட்டுவன் 20
200 - 220 நம்பி குட்டுவன் 20
220 - 250 பூரிக் கோ 30
250 - 270 சேரமான் குட்டுவன் கோதை 20
270 - 300 சேரமான் வஞ்சன் 30
330 - 380 மாந்தரஞ்சேரல்(சமுத்குப்தன் கல்வெட்டு) 50

இவர் தவிர ணேரருள் குறுநிலமன்னராக இருந்திருக்கலாம் என கருதப்படுவோர்;
சேலமான் எந்தை (குறு 22, அக 41 ) ; கரூவூர் சேரமான் சாத்தன் (குறு 268),
மருதம் பாடிய இளங்கடுக்கோ(அக 96, 176 நற் 50), நன்னன், ஆட்டன் அத்தி
எனபோர்.

வேந்தன் அரசு

unread,
May 16, 2011, 8:32:16 AM5/16/11
to mint...@googlegroups.com


16 மே, 2011 1:53 am அன்று, seshadri sridharan <ssesh...@gmail.com> எழுதியது:

உதியஞ் சேரலாதனை நோக்கி அவன் முன்னோன் பெருஞ் சோற்று உதியன் பாரதப்
போரில் சோறு இட்டதாக புலவர் பாடியதாக மதிவாணர் கருதுகிறார். இந்த உதியன்
(குட்டுவன்) காலம் கி.மு. 350 - 328 என மதிவாணர் கூறுகிறார்.

 
அப்படி எனில் ”உரவோன் மருக” என பாடி இருப்பார். சங்கப்புலவர்களின் ஒவ்வொரு சொல்லும் ஒரு கோடி பெறும்
 

வேந்தன் அரசு

unread,
May 16, 2011, 8:37:25 AM5/16/11
to mint...@googlegroups.com
பரணரும் கபிலரும் ஒரே காலத்தவர். இருவரும் பேகனை பாடி அறிவுரை சொல்லி உள்ளார்கள்
 
பரணர் செங்குட்டுவனை பாடியவர் (பதிற்றுப்பத்து)
கபிலர் செல்வக் கடுங்கோ வாழியாதனை பாடியவர் (பதிற்றுப்பத்து)
 
இதனால் இவ்விரு அரசர்களும் அடுத்தடுத்த தலைமுறையினராக இருக்கணும்
 
பட்டியலில் பல தலைமுறைகள் இடைவெளி இருக்கு.


 
16 மே, 2011 8:32 am அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:

seshadri sridharan

unread,
May 16, 2011, 1:00:02 PM5/16/11
to mint...@googlegroups.com
இந்நூலில் மூன்று பரணர்களைப் பற்றி மதிவாணர் குறிப்பிடுகிறார். ஒருவர்
கி.மு. 150 - 90 வேற்படர்க்கை பெருவிறற் கிள்ளியை பாடியவர்.

இரணைடாமவர் கி.மு. 80 -40
தலை. செரு. நெடுஞ்செழியனை பாடியவர்

மூனறாமவர் கி.பி. 25 - 75

கபிலர் மூவர்
முதலாமவர் கி.மு. 190 - 130 இவர் குறிஞ்சிப் பாட்டு பாடியவர்.

இரண்டாமவர் கி.மு. 100 - 40
பாரி, செ.கடு. வாழியாதனை பாடியவர்
புலால் உணவினர்.

மூன்றாமவர் கி.பி. 220 - 280
இன்னா நாற்பது இயற்றியவர். இவர் சைவர் உணவினர்.

சேசாத்திரி

seshadri sridharan

unread,
May 16, 2011, 11:51:36 PM5/16/11
to mint...@googlegroups.com
சோழர் தலைமுறை மீட்டமைப்பு

கி.மு. 450 - 380 முதற் கரிகாலன்
கி.மு. 380 - 320 சேரமான் பாமளுர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ்
சேட் சென்னி
கி.மு. 320 - 270 செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி
கி.மு. 270 - 245 பெரும்பூண் சென்னி
கி.மு. 245 - 232 உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி
கி.மு. 232 - 200 கரிகாலன் II
கி.மு. 200 - 180 மணக்கிள்ளி
கி.மு. 180 - 160 வேல் ப்றடக்கை பெருவிற் கிள்ளி
கி.மு. 160 -125 போரவைக் கோல் பெருநற் கிள்ளி
கி.மு. 125 - 87 முடித்தலை கோல் பெருநற்கிள்ளி
கி.மு. 87- 62 கோப்பெருஞ் சோழன்
கி.மு. 62- 40 ஒற்றுமை வேட்ட பெருநற் கிள்ளி (ராசசூய)
கி.மு. 40 - 22 சேட்சென்னி நலங்கிள்ளி + மாவளத்தான்
கி.மு. 22 - 1 குளமுற்றத்து துஞ்சிய கிள்ளி வளவன்
கி.பி. 1 - 40 குராப்பள்ளி துஞ்சிய கிள்ளி வளவன்
கி.பி. 40 - 60 நெய்தலங் கானல் இளஞ்சேட் சென்னி
கி.பி. 60 - 110 கரிகாலன் III
கி.பி. 110 -130 மாவண் கிள்ளி
கி.பி. 130 - 150 நெடுமுடிக்கிள்ளி
கி.பி. 150 - 180 செங்கணான்
கி.பி.180 -- 210 இசை வெங்கிள்ளி
கி.பி. 210 - 240 கைவண்கிள்ளி
கி.பி. 240 - 260 பொலம் பூண் கிள்ளி
கி.பி. 260 -285 கடுமான் கிள்ளி
கி.பி. 285 - 330 நல்லடி (அக 356)
கி.பி. 300 - 400 ஆந்திர நாட்டில் சோழராட்சி

மேற்சொன்ன பாண்டிய, சேர, சோழ மன்னர்களின் காலத்தை மதிவாணர் நற்குடி
வேளாளர் வரலாறு என்ற நூலைக் கருவி நூலாகக் கொண்டு மீட்டமைத்துள்ளார்.
அவர் ஒரு சில கூற்றுகள் பூராணப் பாங்கிலும் அரசர்பெயர் வடமொழி தழுவியும்
இருப்பினும் பெரும்பாலான பகுதிகள் வரலாற்று உண்மைகளோடு பொருந்தி
வருகின்றன் என இந்நூல் குறித்து கூறுகிறார். எனவே நற்குடி வேளாளர் வரலாறு
நூற்பா மி.த. அ. இல் ஆவணமாக சேர்க்கப்பட அன்பர்கள் முயல வேண்டும்.

சேசாத்திரி

கி.காளைராசன்

unread,
May 17, 2011, 8:33:42 AM5/17/11
to mint...@googlegroups.com
ஐயா வணக்கம்.
அளப்பரிய பணியாற்றியுள்ளீர்கள் ஐயா,

திருப்பூவணத்தை மதுரையின் கிழக்கு எல்லாயாகக கொண்டு அங்கு கோட்டை கட்டி
மதுரையை ஆண்ட வங்கிய சேகர பாண்டியன் இந்தப் பட்டியலில் உள்ளானா?

என அறிந்து கொள்ள ஆவலாய் உள்ளேன்.
அன்பன்
கி.காளைராசன்


--
திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி படியுங்கள்,
http://www.freewebs.com/thirupoovanam/
அன்னதானம் செய்வோம், கண்தானம் செய்வோம். இவ்விருதானங்களையும் சிவபெருமான்
ஏற்றுக் கொள்கிறார்,

Subashini Tremmel

unread,
May 17, 2011, 9:35:36 AM5/17/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
அன்புள்ள திரு.சேசாத்ரி,
 
பட்டியலுக்கும் தகவலுக்கும் நன்றி.
 
”நற்குடி வேளாளர் வரலாறு” என்னும் இந்த நூலை சென்னையில் கன்னிமாரா, கீழ்த்திசை நூலகங்களில் தேடிப்பார்க்கலாமே. அங்கு கிடைக்க வாய்ப்புள்ளது.
 
இந்தப் பட்டியலை நீங்கள்  ”இரா. மதிவாணனின் கடைக்க.க நூல்களின் காலமும் கருத்தும்”  நூலிலிருந்து தயாரித்திருப்பதாக குறிப்பிட்டிருக்கின்றீர்கள். சதாசிவ பண்டாரத்தாரின் பாண்டியர் வரலாறு நூலையும் ஒப்பிட்டிருக்கின்றீர்களா? நாம் பட்டியல் தயாரித்து மரபு விக்கியில் வைக்க வேண்டுமென்றால் ஒரு சில நூல்களை மேற்கோளாகக் கொண்டு வித்தியாசங்களையும் இணைத்து தயாரிப்பது பொறுந்தும்.  ஏனென்றால் இந்த சேர, சோழபாண்டியர் பெயர், ஆட்சி காலம் ஆகியவற்றில் ஒன்றுக்கொன்று மாற்றங்கள் உள்ளன என்பதை இந்த ஆய்வில் உள்ளவர்கள் குறிப்பிடுவதை நான் காண்கின்றேன்.
 
 
-சுபா

2011/5/13 seshadri sridharan <ssesh...@gmail.com>



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

Maravanpulavu K. Sachithananthan

unread,
May 17, 2011, 9:39:23 AM5/17/11
to மின்தமிழ்
கி.மு. 2082 முடத்திருமாறன் 6 ஆவது பாண்டியன்
கி.மு. 1932 மாறன் வழுதி 10 ஆவது பாண்டியன்

கி.மு. 1002 - 960 திரு வழுதி 45 ஆவது பாண்டியன்
கி.மு. 910 - 854 வீர பாண்டியன் 49 ஆவது பாண்டியன்
கி.மு. 884 - 832 பாண்டீசன் (நிலந்தருதிருவின் பாண்டியன்) 50 ஆவது
பாண்டியன்
கி.மு. 500 – 450 பல்சாலைமுதுகுடுமிப்பெரு வழுதி 66 ஆவது பாண்டியன்
கி.மு. 450 – 400 கருங்கையொளைவாட்பெரும்பெயர் வழுதி 67 ஆவது பாண்டியன்
கி.மு. 400 – 380 போர்வல் வழுதி 68 ஆவது பாண்டியன்
கி.மு. 380 – 340 கொற்கைவழுதி நற்றேர் வழுதி 69 ஆவது பாண்டியன்
கி.மு. 340 – 302 தேவ பாண்டியன் 70 ஆவது பாண்டியன்

கி.மு. 340 - 302 தேவ பாண்டியன் 70 ஆவது பாண்டியன்
கி.மு. 302 - 260 செய புஞ்சன் 71 ஆவது பாண்டியன்
கி.மு. 302 – 270 செய புஞ்சன் 71 ஆவது பாண்டியன்
கி.மு. 270 – 245 பசும்பூண் பாண்டியன் 72 ஆவது பாண்டியன்
கி.மு. 245 - 220 ஒல்லையூர்தந்தபூதப் பாண்டியன் 73 ஆவது பாண்டியன்
கி.மு. 220 - 200 பாண்டியன் நன் மாறன் 74 ஆவது பாண்டியன்

கி.மு. 202 நன் மாறன் 74 ஆவது பாண்டியன்
கி.மு. 200 - 180 கடலன் வழுதி நெடுஞ் செழியன் 75 ஆவது பாண்டியன்
கி.மு. 180 – 160 மருங்கை வழுதி 76 ஆவது பாண்டியன்

கி.மு. 138 இராசகுலோத்தமன் 77 ஆவது பாண்டியன்
கி.மு. 160 – 150 பாண்டியன் இத்தமன் புலிமான் வழுதி 77ஆவது பாண்டியன்
கி.மு. 150 – 140 பாண்டியன் கீரன் சாத்தன் 78 ஆவது பாண்டியன்
கி.மு. 140 – 120 கலிமான் வழுதி (அண்டர்மகன் குறு வழுதி) 79 ஆவது
பாண்டியன்
கி.மு. 120 – 100 பாண்டியன் ஏனாதி (நெடுங் கண்ணன்) 80 ஆவது பாண்டியன்

கி.மு. 100 - 87 கொற்கை வழுதி (பசும்பூண் பாண்டியன் II) 81ஆவது
பாண்டியன்
கி.மு. 56 தேவபூடணன் 82 ஆவது பாண்டியன்
கி.மு. 87 – 62 தேவபூடணன் (இலவந்திகை தூஞ்சியநன் மாறன்) 82ஆவது
பாண்டியன்
கி.மு. 62 – 42 தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன் 83ஆவது
பாண்டியன்
கி.மு. 42 – 1 கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி 84 ஆவது
பாண்டியன்
கி.மு. 1 – 30 பாண்டியன் அறிவுடைநம்பி (புற 184) 85ஆவது பாண்டியன்
கி.பி. 30 - 60 வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி 86 ஆவது
பாண்டியன்
கி.பி. 142 ஆரியப்படைகடந்த நெடுஞ் செழியன் 87 ஆவது பாண்டியன்
கி.பி. 60 - 117 ஆரியப்படைகடந்த நெடுஞ் செழியன் 87 ஆவது பாண்டியன்

கி.பி. 150 வெற்றிவேற் செழியன் 88 ஆவது பாண்டியன்
கி.பி. 117 – 160 வெற்றிவேற் செழியன் 88 ஆவது பாண்டியன்

கி.பி. 172 நெடுஞ் செழியன் II 89 ஆவது பாண்டியன்
கி.பி. 160 – 198 நெடுஞ் செழியன் II 89 ஆவது பாண்டியன்

கி.பி. 198 உக்கிர மாறன் 90 ஆவது பாண்டியன்
கி.பி. 198 – 220 சித்திரமாடம் துஞ்சிய நன்மாறன்/ உக்கிரமாறன் 90 ஆவது
பாண்டியன்
கி.பி. 220 – 250 பன்னாடுதந்த மாறன் வழுதி 91 ஆவது பாண்டியன்
கி.பி. 250 – 270 கூடாகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி 92 ஆவது பாண்டியன்
கி.பி. 270 - 297 தென்னவன் கோ 93 ஆவது பாண்டியன்
கி.பி. 298 - 310 பராக்கிரமபாகு (மானாபரணன்) 94 ஆவது நல்வழுதி
கி.பி. 298 - 310 கலியன் கூத்தன் 95 ஆவது பாண்டியன்
கி.பி. 298 - 310 கடலன் வழுதி (கழுகு மலை கல்வெட்டு) 96 ஆவது பாண்டியன்
கி.பி. 298 – 310 பொற்கைப் பாண்டியன் புற -18 97 ஆவது பாண்டியன்
கி.பி. 298 – 310 பாண்டியன் மதிவாணன் 98 ஆவது முதல் 102 வரை
கி.பி. 475 -490 கடுங்கோன் 103 ஆவது பாண்டியன்
கி.பி. 498 உக்கிர பாண்டியன் 104 ஆவது பாண்டியன்
கி.பி. 498 – 540 சோமசுந்தர பாண்டியன் 105 ஆவது பாண்டியன்

பாண்டியர் கால வரிசைப் பட்டியலை ஒழுங்குசெய்தேன், சரியாக உள்ளதா எனப்
பார்க்க

Subashini Tremmel

unread,
May 17, 2011, 9:43:07 AM5/17/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
நீங்கள் எந்த நூலை கேற்கோளாக பயன்படுத்துகின்றீர்கள் சச்சிதானந்தம் ஐயா?
 
-சுபா

2011/5/17 Maravanpulavu K. Sachithananthan <tami...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Maravanpulavu K. Sachithananthan

unread,
May 17, 2011, 9:46:59 AM5/17/11
to மின்தமிழ்
கி.மு. 450 - 380 முதற் கரிகாலன்
கி.மு. 380 - 320 சேரமான் பாமளுர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ் சேட்
சென்னி
கி.மு. 320 - 270 செருப்பாழிஎறிந்த இளஞ்சேட் சென்னி
கி.மு. 270 - 245 பெரும்பூண் சென்னி
கி.மு. 245 - 232 உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி
கி.மு. 232 - 200 கரிகாலன் II
கி.மு. 200 - 180 மணக் கிள்ளி
கி.மு. 180 - 160 வேல்பறடக்கைபெருவிற் கிள்ளி

கி.மு. 160 -125 போரவைக்கோல்பெருநற் கிள்ளி
கி.மு. 125 - 87 முடித்தலைகோல்பெருநற்கிள்ளி

கி.மு. 87- 62 கோப்பெருஞ் சோழன்
கி.மு. 62- 40 ஒற்றுமைவேட்டபெருநற் கிள்ளி (இராசசூயம்)

கி.மு. 40 - 22 சேட்சென்னிநலங் கிள்ளி + மாவளத்தான்
கி.மு. 22 - 1 குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவன்
கி.பி. 1 - 40 குராப்பள்ளித்துஞ்சிய கிள்ளிவளவன்

கி.பி. 40 - 60 நெய்தலங்கானல்இளஞ்சேட் சென்னி
கி.பி. 60 - 110 கரிகாலன் III
கி.பி. 110 -130 மாவண் கிள்ளி
கி.பி. 130 - 150 நெடுமுடிக் கிள்ளி
கி.பி. 150 - 180 செங்கணான்
கி.பி.180 -- 210 இசைவெங் கிள்ளி
கி.பி. 210 - 240 கைவண் கிள்ளி
கி.பி. 240 - 260 பொலம்பூண் கிள்ளி
கி.பி. 260 -285 கடுமான்கிள்ளி
கி.பி. 285 - 330 நல்லடி (அக 356)
கி.பி. 300 - 400 ஆந்திர நாட்டில் சோழராட்சி

சோழர் காலவரிசைப் பட்டியலைச் செம்மை செய்தேன், சரியாக உளதா?

seshadri sridharan

unread,
May 17, 2011, 10:50:20 AM5/17/11
to mint...@googlegroups.com
சத்சிதானந்ந ஐயாவிற்கு வணக்கம்,

இதை நீங்கள் மதிவாணரிடம் கேட்டறிவதே நலம் என்று எண்ணுகிறேன். இவற்றை சரி
பார்க்க கருவி நூல்கள் என்னிடம் கிடையா. மதிவாணர் எண்: 99629 49787.
உங்கள் முயற்சியை நான் பாராட்டுகிறேன்.

சேசாத்திரி

seshadri sridharan

unread,
May 17, 2011, 10:42:48 AM5/17/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
அம்மணி, நான் மதிவாணனரிடமே கேட்டுள்ளேன். அது தன்னிடம் இல்லை
வேறொருவரிடம் தான் வாங்கி குறிப்பெடுத்துக் கொண்டதாக அவர் சொன்னார்.
சின்னாள் கழித்து அவரிடமிருந்து வாங்கித் தருவதாக சொல்லி உள்ளார்.
என்றாலும் மதுரை அல்லது கொற்கை பகுதியில் இந்நூல் கிடைக்க அதிக
வாய்ப்புண்டு. அதனால் தான மின் தமிழில் 'நற்குடி வேளாளர் வரலாறு'
குறித்து ஆர்வமும் விழிப்புணர்வும் ஏற்பட மதிவாணர் நூலின் சில
குறிப்புகளை இங்கு தட்டச்சு செய்தேன். மதிவாணரும் சதாசிவ பண்டாரத்தாரின்
நூலை கண்டிருப்பார் என்றே எண்ணுகிறேன்.
எனினும் ந.வே.வ தமிழ் மரபு ஆவணத்தில் சேர்வது நமக்கெல்லாம் பயனுள்ளதாக
அமையும் என நம்புகிறேன்.

சேசாத்திரி

Subashini Tremmel

unread,
May 17, 2011, 12:22:12 PM5/17/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram, K R A Narasiah
திரு.நரசய்யாவின் ஆலவாய் நூலில் இவ்விஷயம் தொடர்பான சில குறிப்புக்கள் உள்ளன. அவர் சங்க காலத்துக்குப் பின் வந்த பாண்டியர்களை மூன்று காலத்தினராய் இப்படி பிரிக்கின்றார்.

  1. முற்காலப் பாண்டியன் (கி.பி. 550 - 1000)
  2. இடைக்காலப் பாண்டியர் (கி.பி. 1000 - 1200)
  3. பாண்டியப் பேரரசர்கள்  (கி.பி. 1200 - 1371)


அதில் முற்கால பாண்டியர்களின் மரபுவழியும் உத்தேசமான ஆட்சிக்காலத்தையும் இப்படி பிரிக்கின்றார்.  வேள்விக்குடி மற்றும்  சின்னமனூர் சாசனங்கள் முற்காலப் பாண்டியரின் மரபு வழி அறிந்து கொள்ள உதவுவனவாக உள்ளன. 

  • கடுங்கொன் ( - 550)
  • மாறவர்மன் அவண் சூளாமணி ( - 645)
  • செழியன் சேந்தன் ( - 695)
  • மாறவர்மன் அரிகேசரி ( - 715)
  • கோச்சடையன் ரணதீரன்   ( - 740)
  • மாறவர்மன் இராஜசிம்மன் - 1   ( - 768)
  • நெடுஞ்சடையன் வரகுணன் - 1  (768 - 815)
  • ஸ்ரீ மாற ஸ்ரீவல்லபன் (815 - 862)
  • சடையன் வரகுணன் -1   (862 - 887)
  • பராந்தகவீரநாராயணன் (860 - 905)
  • மாறவர்மன் இராஜசிம்மநன் - 1 (905 - 929)
  • வீரபாண்டியன் (947 - 966)

ஏனையவை பிறகு பட்டியலிடுகின்றேன்.

-சுபா

2011/5/17 Maravanpulavu K. Sachithananthan <tami...@gmail.com>
கி.மு. 2082     முடத்திருமாறன்  6 ஆவது பாண்டியன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Kannan

unread,
May 17, 2011, 7:07:07 PM5/17/11
to mint...@googlegroups.com
`பண்டு` என்றால் தொன்மை. மேலும் சங்கக்காலத்தின் கடலாட்சி என்பது
பாண்டியர்/சேரர் கையில் இருந்திருக்கிறது. கொரிய சரித்திர/மானுடவியலர்
கொரிய நாட்டிற்கு நெல் விவசாயம் அளித்தது தமிழர்கள் (இந்தியர்கள்) என்று
நம்புகிறார்கள். இவர்கள் கிறிஸ்து பிறப்பிற்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த
பாண்டியர்களாக இருக்க வேண்டும். நம் ஆய்வுகளை இன்னும் துரிதப்படுத்த
வேண்டும்.

நா.கண்ணன்

2011/5/18 Subashini Tremmel <ksuba...@gmail.com>:

s.bala subramani B+ve

unread,
May 17, 2011, 10:29:48 PM5/17/11
to mint...@googlegroups.com
முயற்சி தமிழக கேரளா ஆந்திர கலிங்க கடலோர மாவட்டங்களில் நடந்து கொண்டு தான்  இருக்கிறது 

ஒரிசாவை சேர்ந்த சாரங்கி புதிய  செயலர் ஆக  வந்து விட்டதால் கலிங்க தமிழ் கடல் வரலாற்று தொடர்பாக ஆய்வுகள் மீண்டும் தொடரும் 


2011/5/18 N. Kannan <navan...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
S.Balasubramani B+ve

s.bala subramani B+ve

unread,
May 17, 2011, 11:21:06 PM5/17/11
to mint...@googlegroups.com
2000 வருடங்களுக்கு முந்தைய  வரலாற்றை இன்றுள்ள அமைப்பை வைத்து பார்க்க முடியாது

பர்மாவிலிருந்து ஜப்பான் கடற்கரை உள்ள குறிப்பாக சீனாவின்  கடற்கரையை ,சீனர்களின் வரலாற்றை அடிப்படையாக கொண்டு தேடினால் கொரியா கடல் தொடர்புகளை எடுத்து விடலாம் 
இந்தோனேசியா,ஜாவா ,மற்றும் அனைத்து தென் கிழக்கு நாட்டு தீவு தொடர்புகளையும் சேர்க்க வேண்டும் 

அந்த அந்த காலத்து கடல் மட்டங்களையும் கணக்கில் எடுக்கவேண்டும் 


The Yellow Sea, excluding the Bohai, extends by about 960 km (600 miles) from north to south and about 700 km (435 miles) from east to west; it has an area of about 380,000 km² (146,700 sq mi) and the volume of about 17,000 km3.[3] Its depth is only 44 meters (144 ft) on average, with a maximum of 152 meters (500 ft). The sea is a flooded section of continental shelf that formed after the last ice age (some 10,000 years ago) as sea levels rose 120 meters to their current levels. The sea bottom is slowly rising toward China and more rapidly at the Korean Peninsula.


2011/5/18 s.bala subramani B+ve <sunke...@gmail.com>



--
S.Balasubramani B+ve

N. Kannan

unread,
May 18, 2011, 3:40:29 AM5/18/11
to mint...@googlegroups.com
அன்பின் பாலு:

கொரிய, இந்தியத் தொடர்பை தரை வழியாகக் காண்கிறார் 40 வருடங்கள்
பாட்டுப்பாதையில் ஆய்வு செய்த பேராசிரியர் கிம் பியோங் மோ. அதாவது
கலிங்கம், பர்மா, சீனா, யாங்க்சி நதி settllement, கொரியா என்று. அது
நிச்சயம் சாத்தியமே. ஆயினும் தமிழர்களுக்கு கடல்வழிச் செலவு எளிதாக
அமைந்திருக்குமென்று தோன்றுகிறது. தென்னாசிய முகங்களைப் பார்த்தாலே சீன,
இந்தியக் கலப்பு இருப்பதை எளிதாக யூகிக்கலாமே! எங்க ஊரு கட்டாரி (எங்க
வீட்டுக்கு மண் சுவர் வைப்பவர்) முகம் எங்கு பார்த்தாலும் தெரிகிறது.
நாம் எல்லோரும் மயங்கிவிடுவது தோல் நிறம் கண்டு. தோல் மஞ்சளாகவோ,
வெள்ளையாகவோ இருந்தாலும் முக அலகுகளைக் கூர்ந்து கவனித்தால் அந்நாளையக்
கலப்பு தெரியும்! மனிதத்தோல் நிறம் குறித்து இன்னும் கொஞ்சம் தோண்ட
வேண்டும். நான் பின்லாந்தில் இருந்த போதும் கட்டாரியைக் கண்டேன் !!

நா.கண்ணன்

2011/5/18 s.bala subramani B+ve <sunke...@gmail.com>:

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

s.bala subramani B+ve

unread,
May 18, 2011, 7:48:48 AM5/18/11
to mint...@googlegroups.com
கடல் நீரோட்டத்தில் செல்லும் ஆமைகள் பற்றிய ஆய்வை தொடர்ந்து
 தீவுகளின் ஊடே ஆதி கால மனிதர்கள் பயணம் செய்திருப்பதை 

தெளிவாக செய்மதிகளின் உதவியுடன் புரிந்து கொள்ள முடிகிறது 

இன்றும் பசிபிக் தீவு கூட்டங்களில் வாழும் பூர்வ குடி மக்கள் வேறு இடத்திற்கு செல்லும் போது திரும்பி வர இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகி விடுவதால் ஆமைகள் மூலம் தகவல் பரிமாற்றம் செய்வதை  வழக்கத்தில் வைத்து இருக்கிறார்கள்

இந்த ஆய்வின் முதல் கட்டம் தெளிவாக உள்ளதால் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளது 

Reply all
Reply to author
Forward
0 new messages