'ஸ்ரீ' எனும் வடமொழி எழுத்து,

436 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Sep 17, 2014, 2:50:11 AM9/17/14
to mintamil, வல்லமை
மூல வடமொழியில் உள்ள ஸ்ரீ எனும் கூட்டு எழுத்தினை பிரித்தால் 
அந்த மொழியிலேயே முதலில் வரும் மெய் எழுத்து  எது  ?

                        =  'சரசுவதி' என்பதில் வரும் 'சகர'மா ??

 அல்லது 

                       (ஶ)   =  'சியாமா' என்பதில் வரும் 'சகர'மா ??

மேலும் அதற்கு அடுத்து வரும் எழுத்து  'ரீ'

     இது           री    'ஈ'கார  உயிர் ஏறிய 'ரகர'ம் தானே 

                        रु   உயிர் நிரலில் வரும் 'று' 'றூ' வுடன் தொடர்புடையது அல்ல தானே                        
அன்புடன் 
நூதலோசு
மயிலை  
                        

N. Ganesan

unread,
Sep 17, 2014, 3:02:58 AM9/17/14
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com, vall...@googlegroups.com
On Tuesday, September 16, 2014 11:50:11 PM UTC-7, selvi...@gmail.com wrote:
மூல வடமொழியில் உள்ள ஸ்ரீ எனும் கூட்டு எழுத்தினை பிரித்தால் 
அந்த மொழியிலேயே முதலில் வரும் மெய் எழுத்து  எது  ?

                        =  'சரசுவதி' என்பதில் வரும் 'சகர'மா ??

 அல்லது 

                       (ஶ)   =  'சியாமா' என்பதில் வரும் 'சகர'மா ??

இந்த தான். ஸ்ரீ எழுத்து யூனிகோடில் ஸ, ஶ இரண்டாலும் உருவாகிறது. மைக்ரோசாப்ட் அப்பிழைக்குக் காரணம்.

ஆனால், ஶ வைத்து சரியான வரையறையை ஸ்ரீக்கு கொடுத்துள்ளோம்.
உயிர்மெய்களுக்கும், கூட்டெழுத்துக்களுக்கும் தமிழுக்கு Named Sequences தரச் செய்ததில் என் பங்குண்டு.

புதுச்சேரியில் உத்தமம் மாநாடு கூடுகிற வேளையிது. உத்தமத்தின் பணிகளில்
முக்கியமான ஒன்று ஶ முழு உயிர்மெய் வரிசையும் தமிழ் எழுத்தாகக் கொடுத்தது.
இச் செயலால் இன்று சம்ஸ்க்ருத சுலோகங்களை விளக்க தேவ் போன்றோருக்கு
தமிழ் கிரந்த எழுத்து ஶ உயிர்மெய் வரிசை உதவுகிறது.

TAMIL SYLLABLE SHAA; 0BB6 0BBE
TAMIL SYLLABLE SHI;  0BB6 0BBF
TAMIL SYLLABLE SHII; 0BB6 0BC0
TAMIL SYLLABLE SHU;  0BB6 0BC1
TAMIL SYLLABLE SHUU; 0BB6 0BC2
TAMIL SYLLABLE SHE;  0BB6 0BC6
TAMIL SYLLABLE SHEE; 0BB6 0BC7
TAMIL SYLLABLE SHAI; 0BB6 0BC8
TAMIL SYLLABLE SHO;  0BB6 0BCA
TAMIL SYLLABLE SHOO; 0BB6 0BCB
TAMIL SYLLABLE SHAU; 0BB6 0BCC

TAMIL SYLLABLE SHRII; 0BB6 0BCD 0BB0 0BC0

இப்போது என்றால் இப்படி வடமொழி விளக்கத்துக்காக
தமிழ் எழுத்தாக  ஶ  தரமுடியுமா? - என்பது ஐயமே.

நா. கணேசன்

இராமகி

unread,
Sep 17, 2014, 6:58:31 AM9/17/14
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com, vall...@googlegroups.com
அங்கிங்கு என்று பார்த்துக் கடைசியில் பூனை வெளியில் வந்துவிட்டது. உத்தமம் ஏமாந்திருந்த போது, இவரும் இவருக்குத் துணையாயிருந்தோரும்  இந்த எழுத்தைக் கொணர எல்லாத் தகிடுதத்தங்களையும் சதிகளையும் செய்தார்கள். இப்பொழுது இவரே தன்னறிவிப்புச் சொல்கிறார்: “இப்பொழுது செய்வது ஐயமாம்.
 
இவர்களை எல்லாம் பொறுப்பில் விடுவது எவ்வளவு தவறு என்று பாருங்கள். தமிழைக் கெடுத்துக் குலைக்க இவர் ஒருவர் போதும். உத்தமத்தின் அழியாத மறு அந்த எழுத்தை தன் முன்னீட்டாலேயே உத்தமம் அந்நாளில் உள்நுழைத்தது.
 
இராம.கி.

Nagarajan Vadivel

unread,
Sep 17, 2014, 11:48:14 AM9/17/14
to மின்தமிழ்

2014-09-17 16:28 GMT+05:30 இராமகி <p...@giasmd01.vsnl.net.in>:
அங்கிங்கு என்று பார்த்துக் கடைசியில் பூனை வெளியில் வந்துவிட்டது


உத்தமத்தில்
​ ஒரு ருத்ராட்சப்பூனைதானா இருக்கு

தொடக்கத்தில் இருந்து உத்தமம் இந்த விளையாட்டில் இருந்து ஒதுங்கிக்கொண்டிருக்கவேண்டும்

ஒருங்குறியீட்டுப் பரிந்துரைக்குத் துறை சார்ந்த மற்றும் பயனர்களில் கருத்தைக் கேட்ட ஆதாரம் கொடுக்கவேண்டும் என்ற விதிக்கு எல்லாருமே தங்கள் விருப்பதுக்கு ஏற்ப ஆதரவாக எழுதிப் போட்டுக் கொண்டார்கள்

தமிழ் வரிவடிவத்தின் வரலாற்றை மொழியியல் அறிஞர்களுடன் கலந்துரையாடாமல் சமஸ்கிரித அறிஞர்களின் துணையையே தமிழுக்கு வரிவடிவம் பரிந்துரைத்தவர்கள் செய்ததன் மூலம் தமிழ் மொழியியல் அறிஞர்களை ஒதுக்கிவைத்தார்கள்

ஒருங்குறியீட்டுக்கு வரிவடிவம் தரத் தகுதியானவர்கள் கணினிப் பொறிஞர்கள் மட்டுமே என்ற ஊர்க்கட்டுப்பாட்டையும் ஏற்படுத்தினார்கள்

மைய அரசின் தவறை ஆதாரப் பூர்வமாகத் தட்டிக்கேட்க அவர்களோ அல்லது மாநில அரசையோ முயற்சி செய்ய முன்னேற்பாடு செய்யவில்லை. இங்கே கேட்டால் கணேசர் நீங்க அங்கே கேளுங்கள் என்கிறார். சென்ற மாதம்கூட அங்கே பேசினேன். அவர்கள் எங்களுக்கு மாநில அரசின் ஒத்துழையாமை மட்ட்ம்தான் நினைவில் உள்ளது என்று சொல்லுகிறார்கள்

ஒரு சிலருக்கு தமிழ் மொழியைவிட பன்னாட்டு வணிக முன்னேற்றம் முக்கியம் மாற்ற சிலருக்கு தமிழுக்கு சேவ செய்தோம் என்ற பெருமையில் திளைக்க விருப்பம.  அரசுக்கோ நரி இடம் போலானென்ன வடம்போனாலென்ன என்ற முனெச்சரிக்கையுடன் கூடிய ஒதுங்கி நிற்கும் மனப் போக்கு.  மைய அரசுக்கோ கோலெடுத்தவன் தண்டல்காரன் என்ற வாய்ப்பு

நானும் இந்த விளையாட்டைப் பதினைந்தாண்டுகளாக வேலிக்கு வெளியே இருந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்

மதஎசுஇந்திரன்

N D Logasundaram

unread,
Sep 17, 2014, 1:08:15 PM9/17/14
to வல்லமை, mintamil
அன்புள்ள திரு தேவ் அவர்களுக்கு,

மேல்கண்ட என்மடலுக்கு தேவையான  பதில் வரவில்லை
 
முதலில் உங்கக் பெயரை குறிக்காததற்கு காரணம் வடமொழி பற்றி
அறிந்த எவரும் தங்கள் கருத்தைத் வைக்கலாமே என்றுதான் 

எனக்கு தேவ நாகரியில் எப்படி எனத்தான்  அறிய ஆவல்
 
 श्री  எனும் வரிவடிவத்திலிருந்து குறில் இகரத்தை நீக்கி பார்த்தாலும்   
என்பதிலிருந்துதான் என தோன்றுகின்றது 

பற்பல எழுதுக்கூட்டு வருவதால் கூகாலில் உள்ள தேவ நாகரி உள்ளீட்டு
படிவத்திலிருந்து இதுதான் என்று கண்டு பிடிக்க முடியவில்லை 
ஏறக்குறைய श  உடன் தொடர்புடைய தாகத்தன் காட்டுகின்றது எனினும்

நீங்கள் தேவநாகரியில்  தட்டச்சு செய்யும் பழக்கம் உள்ளவர் எனத்தான் கேட்டேன் 

ஹிந்தி சமஸ்கிருதம் போன்ற மொழிகளின் நெடுங்கணக்கினில் கற்பிக்கப்படும்
 श्र , क्ष போன்ற இரு எழுத்துப்பிணைகளுக்கு யூனிகோடினர் தனியாக எழுத்து
நிலை கட்டம் கொடுக்க வில்லை ஏனெனில் அவை +ர  ; க்+ஷ என எழுத முடியும் 

---------------------------------------

கணேசனார் வைத்த கருதுப்பற்றி இராம கி அய்யா வைத்துள்ளது மிக மிகச் சரியானதே 

என்று தமிழல்லாத வடமொழி எழுத்துக்களை  தமிழில் அனுபந்தமாக கடையில்  இணைக்கப்பட்டதோ

அது முதல் இதுநாள் வரை பள்ளிப்படிப்பில் காட்டி வரும் ஜ ஸ ஷ ஹ க்ஷ ஸ்ரீ எனும் 6 எழுக்கள் மட்டுமே
 
உள்ளபோது (அதனால் தான் TSCII TAB TAM போன்ற பல்வேறு எழுத்து வைப்பு முறைகளிலும் எவரும்
 
பயன் கொள்ள்வில்லை இந்த எழுத்து பற்றி அறியார்  பயன்பாட்டில் இல்லாததால் தமிழ் மட்டும் அச்சிடும்

அச்சுக்கூடத்திலும் இந்த எழுதிற்கான அச்சு கிடைக்காது ஏன் தமிழ் கற்பிக்கும் பெரும்பாலன தமிழ் ஆசிரியர்

களுக்கும் இந்த சகரம் பற்றித் தெரியது ஏனெனில் அவர்களும் இப்படி ஓர் எழுத்து தமிழ் மொழியில் இருப்ப

தாகக் கற்க வில்லை தமிழர் தமிழ்மொழியினில் என்றும் பயன் கொள்ளாத  (ஶ) அயல்மொழி சகரத்தை 

தன் தனிஅறிவினில் தோன்றிய ஆசை வழி  INFITT ல் இருந்த காலத்து மெய்யான போதுமான  எடுத்துக்காட்டு

ஏதும் காட்டமல் யூனிக்கோடிற்குள் உண்மைக்கு புறம்பான வற்றை வைத்து தமிழ் மொழி அறிவுபற்றி சிறிதும்

அறியாத யூனிகோடினரை  ஏமாற்றினார் நாசா கணேசனார். என அறிய் முடிந்தது யூனிகோடில் எப்பொதும்

இவர் கருத்தை புகழேந்தி ஒட்டக்கூதர் போல் என்றும் எதிர்க்கும் வேறு ஒரு நபரும் தன் தனிக்கருத்து வழி

எதிர்க்காமல் இருந்ததற்குக் காரணம் வடமொழி தொடர்புடையதால். நான் அக்காலத்தில் யூனிகோடு உறுப்

பினராக வில்லை. அதனால் இச்செய்கை பற்றி  அறியேன். 

அன்புடன்
நூ த லோ சு 

You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Oru Arizonan

unread,
Sep 17, 2014, 1:13:19 PM9/17/14
to mint...@googlegroups.com
  // श (ஶ)   =  'சியாமா' என்பதில் வரும் 'சகர'மா ??//

ஆம்.  சியாமா என்பதில் வரு சகரம்தான்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

N D Logasundaram

unread,
Sep 17, 2014, 1:17:52 PM9/17/14
to mintamil
மிக்க நன்றி
அரிசோனன் அவர்களே

அன்புடன்
நூ த லோ சு 

N. Ganesan

unread,
Sep 17, 2014, 10:36:22 PM9/17/14
to mint...@googlegroups.com
On Wednesday, September 17, 2014 10:13:19 AM UTC-7, oruarizonan wrote:
  // श (ஶ)   =  'சியாமா' என்பதில் வரும் 'சகர'மா ??//

ஆம்.  சியாமா என்பதில் வரு சகரம்தான்.

ஆம் ஐயா.

 ஶ்யாம - என்று யூனிகோடில் இன்று எழுதி விளக்கமுடிகிறது என்றால் அதற்கு உத்தமத்தின் பணி காரணம்.
இப்பொழுது கணி முனைவர்கள் புதுவையில் கூட உள்ளார்கள். 

தமிழ்நாட்டில் கிரந்த எழுத்து எதிர்ப்பு புரிவதில்லை. ஈழத்தில் இன்றும் கிரந்தம்தான். 
வடமொழியில் தெப்பக்குளம் என்று எழுதாமல் தேப்பக்குளம் என்றும்,
தொல்காப்பியம் தோல்காப்பியம் என்றும் எழுதணும். இதற்குத்தான்
தமிழ் எழுத்தில் புள்ளி ஃபாண்ட்களில் வந்தது போல், கேப்டன் ஹார்க்னெஸ் புஸ்தகத்தைப்
போலச் செய்யலாம் என்று கிரந்த நிபுணர்கள் கூறினார்கள். மலையாள பிளாக்கில்
அவ்வாறு செய்யலாம். 

இந்தி எழுத்துக்கு நிகரானதாய் கிரந்த எழுத்தும் இருக்கட்டுமே.

நா. கணேசன்

தேமொழி

unread,
Sep 17, 2014, 10:55:17 PM9/17/14
to mint...@googlegroups.com
///இந்தி எழுத்துக்கு நிகரானதாய் கிரந்த எழுத்தும் இருக்கட்டுமே.///


'சியாமா' என்பதில் வரும் 'சகர' ஒலிதானே நாம் "பசிப்பிணி மருத்துவன்" என்று சொல்லும் பொழுதும் "முசிறி" என்று சொல்லும் பொழுதும் ஒலிப்பது?

மேலும் விசும்பு ...பசு ??


..... தேமொழி

Oru Arizonan

unread,
Sep 18, 2014, 12:26:24 AM9/18/14
to mint...@googlegroups.com
//'சியாமா' என்பதில் வரும் 'சகர' ஒலிதானே நாம் "பசிப்பிணி மருத்துவன்" என்று சொல்லும் பொழுதும் "முசிறி" என்று சொல்லும் பொழுதும் ஒலிப்பது?

மேலும் விசும்பு ...பசு ??//

இல்லை உயர்திரு தேமொழி அவர்களே!  ஸ்ரீ யில் உள்ள சகர ஒலி ஸ் என்ற ஒலிக்கும், ஷ் என்ற ஒலிக்கும் இடைப்பட்டது.  நீங்கள் எழுதிய  விசும்பு, பசு, என்னும் ஒலிகளுக்கும் சிவன்,  என்ற சகரத்திற்கும் மிக நெருங்கியது. சிவன் என்ற ஒளியைத் தமிழில் சொல்லும்போது நாக்கு மேலண்ணத்தை இலேசாகத் தொடும். காற்று இலேசாக வெளிவரும்.  வடமொழியில் சிவா என்னும் போது நாக்கு அதே இடத்தில் நின்று ஒலித்தாலும் காற்று சற்று அதிகமாக வரும்.  

தற்பொழுது ஷிவா என்று சொல்கிறார்களே, அது வடமொழி உச்சரிப்பின்படியும் தவறாகும்.  அப்பொழுது நாக்கு மேலண்ணத்தில் நன்றாக அழுத்தப்பட்டு காற்று இன்னும் அதிகமாக வெளியேற்றப்படும்.  

எனவே, பசு, விசும்பு, சிவன் என்னும் ஒலியைப் போல ஸ்ரீ யை உச்சரித்தாலே போதுமானது.  தமிழில் உச்சரிப்பு அடுத்து வரும் எழுத்திற்கேற்ப மாறுபடும் (வல்லினம், இடையினம், மெல்லினம்) என்பது தாங்கள் அறியாத ஒன்று இல்லையே!

பாதி, பாத்தி என்னும் இரு சொல்களில் 'தி'யின் உச்சரிப்பு மாறுவது இல்லையா! பாதியில் இலேசாக ஒலிக்கும் தி, பாத்தியில் அழுத்தமாக ஒலிக்கிறது அல்லவா?  எனவே, தமிழின் ஒழி முறைகள் வேறு, வடமொழியின் ஒலி முறைகள் வேறு.

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Dev Raj

unread,
Sep 18, 2014, 12:41:16 AM9/18/14
to mint...@googlegroups.com
ச ஸ ஶ ஷ

தமிழ் நெடுங்கணக்கில் இவற்றை வேறுபடுத்திக்காட்டத்
தனி எழுத்துக்கள் கிடையா; தமிழில் ஒலிப்புக்கு முதன்மை
இருப்பதாகவும் தெரியவில்லை. 

சென்னை, செங்கோட்டை [நெல்லை மாவட்டம்]
ஆங்கிலத்தில் [chennai, sengottai]  ‘செ’ இருவிதமாக உருப்பெறுகிறது.
ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீபுரம் - ஊர்ப்பெயர்கள்.
இன்றைய தேவை பல்வேறு உச்சரிப்புகளுக்கான
வசதி. ஆங்கில வரிவடிவம் ,தேவநாகரி பிற
எழுத்துக்களை ஏற்றுள்ளன; தமிழில் அவ்வசதி
ஏற்படுவது வரவேற்கத்தக்கதே


தேவ்

Nagarajan Vadivel

unread,
Sep 18, 2014, 1:15:03 AM9/18/14
to மின்தமிழ்

2014-09-18 10:11 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
இன்றைய தேவை பல்வேறு உச்சரிப்புகளுக்கான
வசதி. ஆங்கில வரிவடிவம் ,தேவநாகரி பிற
எழுத்துக்களை ஏற்றுள்ளன; தமிழில் அவ்வசதி
ஏற்படுவது வரவேற்கத்தக்கதே


ஒரு
​ பக்கம் தமிழ் நெடுங்கணக்குடன் மற்ற கிரந்த எழுத்துக்களையும் சேர்த்து வீரமாமுனிவர் போப்பையர் உருவாக்கியதுபோல் ஏறக்குறைய 350 எழுத்துக்களைத் தமிழ் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று ஒரு பக்கம் பேசிக்கொண்டு மறுபக்கம் தமிழ் எழுத்துச் சீர்மை மூலம் இப்போதைய நெடுங்கணக்கை மூன்றில் ஒரு பகுதியாகக் குறைத்துவிடவேண்டும் என்றும் பேசுகிறார்களே​

இதில் எதை வரவேற்பது?

மதஎசுஇந்திரன்

தேமொழி

unread,
Sep 18, 2014, 1:20:50 AM9/18/14
to mint...@googlegroups.com
எழுத்துக்கு இருக்கும் ஒலி ஒன்றாகவும் உச்சரிப்பில் வரும் பொழுது மற்றொரு ஒலியாகவும் மாறுவது ஆங்கிலத்திலும் உண்டு ...

///சென்னை, செங்கோட்டை [நெல்லை மாவட்டம்]
ஆங்கிலத்தில் [chennai, sengottai]  ‘செ’ இருவிதமாக உருப்பெறுகிறது.///


burger .. பர்ஜெர் கிடையாது 'கெ' ஒலி 
boy   ... போய்  கிடையாது 'ஆ'
car  ....சார் கிடையாது  'கே'  ஒலி 
coat ...சோஅட்  கிடையாது  'கே'  ஒலி 

ஒவ்வொன்றும் உருப்பெறும் விதம் ஒன்றாக இருந்தாலும் நாம் கற்கவில்லையா?

உலகம் முழுவதும் இதனால் மக்கள் சிரமப்படுவதாக எனக்குத் தெரியவில்லை.

..... தேமொழி

Dev Raj

unread,
Sep 18, 2014, 2:20:18 AM9/18/14
to mint...@googlegroups.com
On Wednesday, 17 September 2014 22:20:50 UTC-7, தேமொழி wrote:
எழுத்துக்கு இருக்கும் ஒலி ஒன்றாகவும் உச்சரிப்பில் வரும் பொழுது மற்றொரு ஒலியாகவும் மாறுவது ஆங்கிலத்திலும் உண்டு ...
burger .. பர்ஜெர் கிடையாது 'கெ' ஒலி 
boy   ... போய்  கிடையாது 'ஆ'
car  ....சார் கிடையாது  'கே'  ஒலி 
coat ...சோஅட்  கிடையாது  'கே'  ஒலி 
ஒவ்வொன்றும் உருப்பெறும் விதம் ஒன்றாக இருந்தாலும் நாம் கற்கவில்லையா?

ஆம் கற்கிறோம்; அது செந்தரமாகியுள்ளது , ஒலிப்பு விதியை
ஆங்கில அகராதி கூறுகிறது. தமிழில் ஒலிப்புக்கான விதிகள்
கிடையா. அது குறையாகாது; ஒவ்வொரு மொழிக்கும்
தனித்தன்மை வேறு.

kuDisai வட மாநிலங்களில் guDisai ஆகிறது.
muruhA,murugA  இரு விதம். ஆனால் பிற
மொழிப்புழக்கத்துக்கு சரியான உச்சரிப்புத்
தேவை என்பதால் கிரந்தப் பரிந்துரைப்பு.
கிரந்த இலிபியில் எழுதப்பட்ட நூல்களும்
பல உள்ளன.

இதன் தொழில்நுட்பப் பகுதி இது குறித்துப்
பேசும் நம் பெரும்பாலானோர்க்குத்
தெரியாது என்பதும் ஒரு குறைபாடு.
தேவைப் படுவோர் பயன்கொள்வர்;
தேவையற்றோருக்குக் கட்டாயமும்
கிடையாது


தேவ்

Dev Raj

unread,
Sep 24, 2014, 1:31:04 PM9/24/14
to mint...@googlegroups.com
On Wednesday, 17 September 2014 10:08:15 UTC-7, selvi...@gmail.com wrote:
எனக்கு தேவ நாகரியில் எப்படி எனத்தான்  அறிய ஆவல் 
 श्री  எனும் வரிவடிவத்திலிருந்து குறில் இகரத்தை நீக்கி பார்த்தாலும்   
என்பதிலிருந்துதான் என தோன்றுகின்றது 

பற்பல எழுதுக்கூட்டு வருவதால் கூகாலில் உள்ள தேவ நாகரி உள்ளீட்டு
படிவத்திலிருந்து இதுதான் என்று கண்டு பிடிக்க முடியவில்லை 
ஏறக்குறைய श  உடன் தொடர்புடைய தாகத்தன் காட்டுகின்றது 

ஹிந்தி சமஸ்கிருதம் போன்ற மொழிகளின் நெடுங்கணக்கினில் கற்பிக்கப்படும்
 श्र , क्ष போன்ற இரு எழுத்துப்பிணைகளுக்கு யூனிகோடினர் தனியாக எழுத்து
நிலை கட்டம் கொடுக்க வில்லை ஏனெனில் அவை +ர  ; க்+ஷ என எழுத முடியும் 


श्  + री -> श्री

ஶ்  + ரீ -> ஶ்ரீ

இருவித ‘ஸ்ரீ’ எழுத்துருக்களுக்கும் sri எனத் தட்டினால் போதுமானது ;

 श् + र  -> श्र  [sh + ra] ஶ்  + ர
क्ष   [k + Sha] க் +ஷ


தேவ்
Reply all
Reply to author
Forward
0 new messages