என் நண்பர் திரு
ஜெயராம் இராசகண்டியர் கிருபாகரன்.எனக்கு அனுப்பிய மடல் இது. இதில் அவர் அறிய விரும்பும் நூல் பற்றி,
புத்தகதின் ஆசிரியர் அல்லது பதிப்பகத்தின் விபரங்கள் தங்களிடம் இருப்பின் எனக்கு தெரியப்படுத்தவும்.
சேசாத்திரிக்கு வணக்கம்,
அன்மையில் ஆக்ஸ்போர்டு பல்கலையில் கரிகால் சோழனைப்பற்றிய பழமை வாய்ந்த ஒருபுத்தகம் கிடைக்கப்பெற்று படித்தேன்.புத்தகம் நாவல் வடிவில் இருந்தாலும் கரிகாலனை பற்றி அறிவதற்கு உதவியாக
இருந்தது. புத்தக ஆசிரியரின் பெயர் மற்றும் பதிப்பகத்தின் பெயர் கிடக்கவிலலை. புத்தகத்தின் முதல் மூன்று பக்கங்களும் இருக்கவிலை.
புத்தகத்தின் சொல்லாக்கங்களை பார்க்கும் போது இந்திய ஆசிரியர்களின் ஆக்கம் போல்
தெரியவிலை.இலங்கை அல்லது மலேசிய ஆசிரியர்கள் மாணவர்களுக்காக எழுதியதை போல் தெரிகிறது. கரிகாலனின் தாய் பிரசவ வேதனையில் துடிக்கும் போது மருத்துவர்களின் ஆசோசனை படி தலை கீழாக கட்டி தொங்கவிடப்பட்டதாக இப்புத்தகத்தில் உள்ளது. இவ்வாறான சம்பவம் கோச்செங்கசோழன் வாழ்க்கையில் நடைபெறதாக சங்க இலக்கியங்கள் சொல்லுகின்றன. இது எப்படி கரிகாலன் காலத்திலும் ஏற்பட்டதது என்பது தெரியவில்லை.
புத்தகத்தின் பக்கங்கள் 88, விலை ஒரு ருபா என்றும் குறிக்கப்பட்டுள்ளது. புத்தகத்தின் கடைசி பக்கத்தில் மாணவர்களுக்கான பயிற்சி விணாக்களும் கேட்கப்படுள்ளன. புத்தகம் முழுக்க இலக்கியச் சான்றுகளின்
அடிபடையில் மட்டுமே எழுதப்பட்டுள்ளது. தொல் ஆய்வுகள் எதுவும் குறிப்பிடப்படவிலை.இவற்றை பார்க்கும் போது புத்தகம் சுமார் 60அல்லது 70 வருடங்களுக்கு முன்னர் அச்சில் வந்திருக்கலாம் என்றும் தோன்றுகிறது.
இப்புத்தகத்தின் ஆசிரியர் அல்லது பதிப்பகத்தார் யார் என்பதனை அறிய விரும்புகிறேன். வியாபார நோக்கமின்றி இப்புத்தகத்தை மறு பதிப்பு செய்து வெளியிட சர்வதேசகள்ளர் பேரவை விரும்புகிறது. புத்தகதின் ஆசிரியர் அல்லது பதிப்பகத்தின் விபரங்கள் தங்களிடம் இருப்பின் எனக்கு தெரியப்படுத்தவும்.
நன்றி
ஜெயராம் இராசகண்டியர் கிருபாகரன்.
இப் புத்தகத்தின் பிரதியை கீல் பதிவு செய்துள்ளேன்.