"திருக்குறள் தெள்ளமுதம்" - மணிவாசகர் பதிப்பகம் வெளியீடு
திருக்குறள் அதிகாரத்திற்குப் பத்துக் குறட்பாக்கள் போல நூலில் பத்துக் கட்டுரைகளை வழங்கியுள்ளார் நூலாசிரியர் திருமிகு N.S.பிரேமா, (மேநாள் ஆணையர், திருச்சி மாநராட்சி)
தெள்ளிய அமுதம் உண்ட இளங்கோ, கம்பர், பாரதி, பாரதிதாசன் கருத்துக்களின் வழியாக "திருக்குறள் வாழ்வாங்கு வாழ வழி காட்டும் நூல் என்பதனை படிப்போர் மனங்கொள்ளுமாறு எடுத்துரைத்துள்ளார் திருமிகு பிரேமா.
நூலின் சிறப்பை 45 நிமிட உரையாக MYM தளத்தில் வழங்கினேன். அக்காணொளியின் தொடரி (Link) நண்பர்களின் கனிவான பார்வைக்கும் கருத்துக்கும் பகிர்ந்துள்ளேன்.
நன்றி!
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்