''தமிழ்நாட்டில் தேசிய கல்வெட்டியல் நிறுவனம் அமைக்கவேண்டும் "என்று பிரதமருக்கு தமிழக முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்த பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கருணாநிதி எழுதியுள்ள கடித்தில்...'' மத்திய அரசின்சார்பில் தேசிய கல்வெட்டு இயல் நிறுவனம் உருவாக்கப்படப் போகும் மகிழ்ச்சியான செய்தியை அறிந்தேன். நாட்டின் பழமையான கல்வெட்டு எழுத்துகளை பாதுகாக்கும் அளப்பரிய முயற்சியாகும் இது.தொல் லியல் துறையின் மத்திய ஆலோசனைக் குழுக் கூட்டம் கடந்த 2-ம் தேதி நடைபெற்றது. அப்போது, "இந்திய தேசிய கல்வெட்டு இயல் நிறுவனத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும்'' என்ற கோரிக்கையை மாநிலத்தின் மிகச் சிறந்த தொல்லியல் அறிஞரும், பத்மபூஷண் விருது பெற்றவருமான ஐராவதம் மகாதேவன் முன்வைத்தார். தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் வரையிலான கல்வெட்டுகள் உள்ளன. அதில், 60 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழில் உள்ளன. எனவே, தமிழகத்தில் தேசிய கல்வெட்டு இயல் நிறுவனத்தை அமைப்பதற்குத் தேவையான நிலம் உள்ளிட்டவைகளை ஒதுக்க மாநில அரசு தயாராக உள்ளது. எனது, இந்த வேண்டுகோளை கனிவுடன் பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். "தமிழகத்தில் தேசிய கல்வெட்டு இயல் நிறுவனம் அமைக்கப்படும்'' என்ற அறிவிப்பு ஜூனில் நடைபெற இருக்கும் உலக தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு அச்சாரமாக இருக்கும் "என்று தனது கடிதத்தில் கருணாநிதி தெரிவித்துள்ளார். மரபு வகையிலான தேடலில் இந்திய நாடும் முழித்துக் கொண்டு நிறுவனம் ஆரம்பிக்க உள்ளது எனக் கொள்ளலாமா ?
|
காகிதப்படிகள் உள்ளன. அவை மின்னாக்கம் பெறவேண்டும்.
க.>
2009/12/15 Anbudan Nilavan <anbudan...@gmail.com>