நல்ல விளக்கம்,
ஆனால், ஒரு அன்பான வேண்டுகோள்.
திருக்குறளின் சொற்களை மாற்றாமல் பொருள் கூறினால் நலம் பயக்கும்.
முன்பு "நுதல்", "அல்குல்" என்ற சொற்களுக்குப் புதிய பொருள்களைக்
கூறியிருந்தீர்கள்.
அதுபோல், சிவிகை என்ற சொல்லை மாற்றாமல், பிறிதொரு பொருள் கூறினால் நல்லது.
அன்பன்
கி.காளைராசன்
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
--
திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி படியுங்கள்,
http://www.freewebs.com/thirupoovanam/
அன்னதானம் செய்வோம், கண்தானம் செய்வோம். இவ்விருதானங்களையும் சிவபெருமான்
ஏற்றுக் கொள்கிறார்,

நான் செய்வதெல்லாம் திருக்குறள் மூலபாடத்தில் யாரோ சிலரால் செய்யப்பட்டிருக்கும் 'கைவேலை' களைத் திருத்துவதே.இப்போது இருக்கும் திருக்குறள் என்னைப் பொறுத்தவரையில் முற்றிலும் மாறுபட்ட ஒன்று.
பரிமேலழகர் ”அறத்து ஆறு இது எனல் வேண்டா. அறத்தின் பயன் இதுவென்று யாம் ஆகம அளவையான் உணர்த்தல் வேண்டா, சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை- சிவிகையைக் காவுவானோடு செலுத்துவானோடு காட்சியளவை தன்னானே உணரப்படும்’ என்று சொல்கிறார்.
இதில் இருந்து எளிமையான ஓர் உரையை பிற்காலத்தவர் தருவித்துக்கொண்டார்கள். அதாவது ‘அறத்தின் வழி இது என்பதற்கு சான்றாக பல்லக்கு தூக்குபவனையும் அதில் ஏறிச் செல்பவனையும் எடுத்துக்கொண்டாலே போதுமே’ என்பதே அக்குறளின் பொருள் என்று கொண்டார்கள். பரிமேலழகர் சொல்லுவதாக இவர்கள் எடுத்துக்கொண்ட அந்த உரையையே நாம் இன்றுவரை எல்லா நூல்களிலும் காண்கிறோம். கணிசமான குறள் உரைகள் ஒரு அடுப்பில் தீ வாங்கி ஊரே சமைப்பது போன்றவை.
அக்காலத்து தத்துவ விவாதத்தின் தளத்தில் வைத்துப் பார்க்க வேண்டிய குறள் இது.அறத்தின் பயன் இதுவென்று யாம் ஆகம அளவையான் உணர்த்தல் வேண்டா என்கிறார் பரிமேலழகர். ஆகம அளவை என்றால் என்ன?
அளவைவாதம் என்பது மீமாம்சத்துக்கு தமிழில் சுட்டப்பட்ட பெயர். இதை நாம் மணிமேகலையில் காணலாம். இதில் ஆகம அளவைவாதம் என்பது பூர்வ மீமாம்சை. வேதங்களை தன் முழுமுதல் அடிபப்டையாகக் கொண்ட ‘வேதமுதன்மைவாதம்’ அல்லது ‘வேள்விமையவாதம்’ என்று பூர்வ மீமாம்சையைச் சொல்லலாம்.
பூர்வ மீமாம்சையின் அடிப்படையான கருத்துக்களில் ஒன்று ‘அபூர்வம்’ என்பது. ஒரு செயலைச் செய்தால் அதற்கான பயன் உண்டு என்பதும் அந்தப்பயன் செய்தவனும் செய்யப்பட்டவனும் இல்லாமலான நிலையில் கூட இருந்துகொண்டிருக்கும் என்றும் மீமாம்சகர் சொன்னார்கள். அவ்வாறு திகழும் செயல்பயனே அபூர்வம். இது வேள்விக்கருமங்களை விளக்கும் கருதுகோள். வேள்விகளின் மூலம் கிடைக்கும் ‘பயன்’ அல்லது ‘லாபம்’ எங்கோ ஓர் இடத்தில் இருந்து உரிய நேரத்தில் வந்து சேரும் என்று மீமாம்சம் சொன்னது
அபூர்வம் என்னும் கருத்து பிறவிவினை வாதத்துக்குச் சமானமானதாக சிலரால் இப்போது கொள்ளப்படுகிரது. அது பிழை. வேள்விசெய்தால் அதன் பயன் ஒருவனை அடுத்த பிறவியானாலும் வந்து சேரும் என்று பூர்வமீமாம்சம் தன் அபூர்வம் கோட்பாட்டில் சொல்கிறது என்பது உண்மை. ஆனால் அது பிறவிவினைவாதம் அல்ல.
பிறவிவினைவாதம் என்பது ஒருவனின் எல்லா நன்மை தீமைகளும் அவன் முற்பிறவியில் செய்தவற்றின் விளைவுகளே என்கிறது. அபூர்வவாதம் ஒருவன் எந்தப்பிறவி எடுத்தாலும் வேள்விகள் செய்தால் அப்பிறவியிலேயே எல்லா மேன்மைகளையும் அடையலாம் என்கிறது. அசுரர்களும் ராட்சதர்களும்கூட வேள்விசெய்து பயன்பெற்றார்கள். அது சிலருக்கு வேள்விகளை தடைசெய்ததுகூட அவ்வேள்விகளை அவர்கள் செய்தால் தங்களை விட மேலே சென்று விடுவார்கள் என்பதனால்தான்.
பூர்வமீமாம்சத்தின் அபூர்வம் அல்லது வேள்விப்பயன் வாதத்துக்கு எதிராக வள்ளுவர் பிறவி வினை வாதத்தை முன்வைக்கிறார் என்றுதான் தன் உரையில் பரிமேலழகர் சொல்கிறார். அளவைவாத அடிபப்டையில் பார்க்காதே, முன்னைவினையின் பயன் என்ன என்பதை சிவிகை சுமப்பவனையும் ஏறுபவனையும் கண்ணால் பார்த்தாலே தெரிகிறதே என்பதுதான் குறளின் பொருள் என்கிறார் அவர். இந்த விவாதம் சமணத்துக்கும் சைவத்துக்கும் நடுவே அக்காலத்தில் தீவிரமாக நடந்த ஒன்று.
வள்ளுவர் அப்படிச் சொல்கிறாரா , அது உண்மையா என்பது வேறு விஷயம். ஆனால் நம் பிற்கால உரைக்காரர்களுக்கு அளவைவாதம் என்றால் என்னவென்றே தெரியாததன் விளைவே அவர்களின் எளிமையான புரிதல். இன்று வரை ஒரு தட்டையான வரியை இக்குறளின் பொருள் என்று கொடுத்துவிட்டு போய்க்கொண்டே இருக்கிறார்கள்.
உரைகளுக்குள் போகாமல் ஒரு நவீன வாசகன் வாசிப்பானாகில் அவனுக்குக் கிடைப்பவை இரண்டு விஷயங்கள். ஒன்று இவ்வரிகளின் சொற்கள். இப்பிரதி. இரண்டு திருவள்ளுவர் சமணராக இருந்திருக்கக் கூடும் என்ற ஊகம். இவ்விரண்டின் அடிப்படையில் அவன் தன் வாசிப்பை நிகழ்த்தலாம். நான் செய்திருப்பது அதைத்தான்.
சமணர்களுக்கு பிறவிப்பயன் என்பது முக்கியமான கோட்பாடு. இப்பிறவியில் அடையும் நன்மைகள் எல்லாம் முற்பிறவிப்பயனே என்பது அவர்களின் நம்பிக்கை. ஆனால் சமணம் தமிழகத்தில் ஒரு பெரிய விடுவிக்கும் சக்தியாக வந்த ஒன்று. அதை சிரமண மதம் என்று சொன்னார்கள். உழைப்பவர்களின் மதம். அந்நிலையில் பல்லக்கு சுமப்பதை மாற்றமுடியாத விதி என்றா அது சொல்லியிருக்கும்?
அவ்வரிகளைப் பார்க்கும்போது ‘அறத்தின் வழி இது என்று நினைத்தல் வேண்டாம்’ என்கிறார் வள்ளுவர். யாருடன்? ‘இதுவே அறத்தின் மாற்றமில்லா வழி’ என்று நம்புகிறவர்களிடம் தானே. அப்படியானால் மாற்றம் உண்டு என்பதைத்தானே அவர் சொல்கிறார்? அவ்வரிகள் அளிக்கும் பொருள் அதுதானே? சிவிகை பொறுப்பவனுக்கும் ஊர்பவனுக்கும் நடுவே உள்ள வழியே அறத்தின் வழி என்று எண்ணவேண்டாம் என்பதே அக்குறள் என்பதுதான் கவிதையின் தரிசனம் என்பதே என் வாசிப்பு
ஜெ
<<<<<<
கிடைத்துள்ள தமிழ் இலக்கியங்களுள் திருக்குறள் மட்டுமே அதிகமான பாடபேதமின்றிக் கிடைத்துள்ளது என்ற கட்டுரை படித்திருக்கிறேன். திரு சரவணன் மூலத்தைத் திருத்தாமல் விளக்கமளிக்கலாம்.
மறை நெறி வகுக்கும் நான்கு ஆச்ரமங்களில் ‘ச்ரம’ இல்லையா ?
வெறுந்தரையில் கிடந்து நெறிப்படி மறை கற்பதிலிருந்து,
நெறி பிசகாமல் துறவுக்கான அறம் காப்பதுவரை
எல்லாவற்றிலும் சிரமங்கள் உள்ளன.
உழைப்பில்லாத பணி எது ?
நோகாமல் நுங்கெடுக்க முடியாது.
இன்று ஆசிரமம் என்றால் ஆடம்பரமான மாளிகை என்று
பொருளாகிப்போனது காலத்தின் கோலம்
தேவ்
>> நான் செய்வதெல்லாம் திருக்குறள் மூலபாடத்தில் யாரோ சிலரால்
>> செய்யப்பட்டிருக்கும் 'கைவேலை' களைத் திருத்துவதே.
தாங்கள் குறிப்பிடுவது தவறு.
யாரும் திருக்குறள் மூலத்தைத் திருத்தவில்லை. சாலமன் பாப்பையாத் தவிர.
ஐயா,
"பல்லக்கு தூக்குவது" பாவமோ இல்லையோ?
ஆனால் திருக்குறள் மூலத்தைத் திருத்துவது நிச்சயம் பாவமாகிவிடும்.
சாலமன் பாப்பை அவர்கள் செய்த பிழையைத் தாங்களும் செய்ய வேண்டாம் என
வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
>>அதை சிரமண மதம் என்று சொன்னார்கள். உழைப்பவர்களின் மதம். அந்நிலையில் பல்லக்கு சுமப்பதை மாற்றமுடியாத விதி என்றா அது சொல்லியிருக்கும்?<<
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஒவ்வொரு காலத்திலும், பொருளாதார / தொழில் நுட்ப சந்தர்பங்களுக்கு ஏற்ப்ப
வேலைகள் உள்ளன. இதுல பாவம் என்ன புண்ணியம் என்ன? தொழில்நுட்ப / பொருளாதார
சூழல் முற்றிலும் மாறும் போது, பழைய வேலை வாய்ப்புகள் புற்றிலும்
மறைகின்ரன, புது வேலைகள் தோன்றுகின்றன..
தமிழர்கள் மனநிலை 1700 கிபியை தாண்ட வில்லை.
எனக்கு 'மலர்ந்தும் மலராத ...' பாட்டு எவ்வளவு பிடித்திருந்தாலும்,
சிவாஜி கணேசன் குழந்தையை பார்த்து "யானை படை கொண்டு... "என பாடும்போது
எரிச்சல்தான் வரும். யானைப்படையெல்லாம் எவ்வளவு போய் எவ்வளவு
நூற்றாண்டுகள் ஆகி விட்டன. சாம்பிளுக்கு மிஷின் கன், டாங்கி
இவற்றையெல்லாம் குழந்தைகிட்ட சொல்ல வேண்டாமா?
தமிழரக்ள் எவ்வளவுதான் கணினி, மொபைல் போன் வைத்திருந்தாலும், உணர்வுகள்,
சிந்தனைகள் 1700 ஐ தாண்ட வில்லை.
விஜயராகவன்
On May 7, 1:48 pm, திருத்தம் பொன்.சரவணன் <vaend...@gmail.com> wrote:
> பொதுவாக பல்லக்கில் பயணம் செய்பவர் உயர்நிலையில் உள்ளோராக அதாவது செல்வந்தராக
> இருப்பர். அவருக்கு தான் விரும்பிய இடத்திற்கு வசதியாகச் செல்ல விருப்பம்.
> பல்லக்கு தூக்கிக்கு பல்லக்கு தூக்குவது வேலை ஆகும். பணத்திற்காக அவர்
> பல்லக்கைத் தூக்குகிறார். இதில் அறத்தின் பயன் எங்கே வருகிறது?. பணத்திற்காக
> ஒருவர் பல்லக்கு தூக்கினால் அது எப்படி துன்பமாகும்? பல்லக்குத் தூக்குவது
> என்பது எப்படி பாவச்செயலால் விளைந்த பயனாகும்?. அது மட்டுமின்றி பல்லக்கைத்
> தூக்கும் வேலையில் மட்டும் தான் துன்பம் என்றில்லை; எல்லா வேலைகளிலும் தான்
> இன்ப துன்பங்கள் உள்ளன. எனவே பணத்திற்காகப் பல்லக்கைத் தூக்குபவரைப் பாவி
> (பாவம் செய்தவன்) என்றும் செல்வம் இருப்பதால் பல்லக்கில் பயணம் செய்பவரைப்
> புண்ணியவான் (புண்ணியம் செய்தவன்) என்றும் கூறுவது எவ்வகையிலும் பொருத்தமற்ற
> கருத்தாகும்.
>
> இது குறித்த வள்ளுவரின் கருத்தினை அறிந்துகொள்ள கீழ்க் காணும் சுட்டியில்
> படிக்கலாம்.
>
> http://thiruththam.blogspot.com/2011/05/blog-post.html
>
> --
> அன்புடன்,
>
> திருத்தம் பொன்.சரவணன்
> .....................................................................................
> நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
> அல்லது செய்தல் ஓம்புமின்!
> ......................................................................................
செல்வன் ஐயா,திருக்குறள் திருத்தப்படவில்லை என்பதை நிரூபிக்க உங்களிடம் ஆதாரம் உள்ளதா என நான் திருப்பிக் கேட்டால் என்ன சொல்வீர்கள்?
மதுரையில் வாழ்ந்த ஸ்காட் துரை என்ற ஒரு ஆங்கிலேய வழக்கறிஞர்
தமிழ்மொழியில் ஆர்வம் கொண்டு தமிழ் இலக்கணத்தைக் கொஞ்சம் கற்றுக் கொண்டு
தமிழ் இலக்கியங்களையும் படிக்கத் தொடங்கினார். தமிழ் அணி இலக்கணம் பேசும்
எதுகை மோனைகளில் பெரும் ஈடுபாடு கொண்டு திருக்குறளில் எதுகை மோனை சரியாக
அமையாத இடங்களில் அவற்றைத் திருத்தி இவரே ஒரு புதிய திருக்குறள் பதிப்பை
வெளியிட்டார். 'சுகாத்தியரால் (ஸ்காட்டால்) திருத்தியும் புதுக்கியும்
பதிப்பிக்கப்பட்ட குறள்' என்பது அந்த புதிய திருக்குறள் நூலுக்கான
தலைப்பு.
ஒரு முறை நான்காம் தமிழ்ச்சங்கம் தந்த வள்ளலாம் பாண்டித்துரை தேவரை இந்த
ஸ்காட் துரை சந்தித்து தாம் செய்த இந்த 'அரிய' பணியைப் பற்றிச் சொல்லி
தாம் பதிப்பித்த நூலின் ஒரு பிரதியையும் கொடுத்தார். அந்தப் பதிப்பில்
இருந்த குறைபாடுகளைக் கண்டு மிகவும் மனம் நொந்தார் பாண்டித்துரை தேவர்.
திருக்குறளின் முதல் குறட்பா இப்படி திருத்தப்பட்டிருந்தது.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
உகர முதற்றே உலகு
இப்படியே நூல் முழுக்க நெடுகவும் பெரும்பிழைகள் இருந்தன. தன் சினத்தை
மறைத்துக் கொண்டு தேவர் ஸ்காட்டிடம் இந்த நூலின் பிரதிகள் மொத்தத்தையும்
தாம் வாங்கிக் கொள்வதாகச் சொன்னார். ஸ்காட்டும் தேவர் தன் அரிய பணியைப்
பாராட்டி அதில் மகிழ்ந்து எல்லாவற்றையும் வாங்குவதாக எண்ணிக் கொண்டு
தன்னிடம் இருந்த எல்லா பிரதிகளையும் கொண்டு வந்து கொடுத்தார்.
முன்னூற்றுச் சொச்சம் பிரதிகளுக்கு பிரதி ஒன்றிற்கு ஒரு ரூபாய் வீதம்
விலை கொடுத்து எல்லாவற்றையும் வாங்கிய தேவர், இராமநாதபுரம் சென்ற பின்
அந்த புத்தகக் கட்டை கொண்டு வரச் செய்து எல்லாவற்றையும் தம் கண் முன்
தீயிட்டுக் கொளுத்த வைத்தார்.
'இப்பித்துக்கொள்ளியிடம் எஞ்சியிருந்த முன்னூறு பிரதிகளும் அறிஞர் பாற்
சென்று மனத்துன்பம் விளைக்காதிருப்பதற்கும், அறியாதார் திருக்குறளை
தாறுமாறாக பாடமோதாமல் இருப்பதற்கும் இது தான் தக்க பரிகாரம்' என்று
எல்லோரிடமும் சொல்லி மகிழ்ந்தார் தேவர்.
http://koodal1.blogspot.com/2007/08/blog-post_28.html
”தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்” என்னும் குறளின் ஈற்றடியை
’மக்களாற் காணப்படும்’ என்று அந்த துரை
திருத்தினார் எனவும் கூறுவதுண்டு
தேவ்
என்னிடம் ஆதாரம் இல்லாத செய்தி: 26 01 1950 அன்றைய ஹிந்து இதழின் முதல்
பதிப்பு தீயிட்டு கொளுத்தப்பட்டதாம். ஒன்று கூட தப்பவில்லையாம்! ஏன்
தெரியுமா? 'Heralding the Indian Union' என்பதற்கு பதிலாக 'Heralding the
Indian Onion' என்று அச்சாகி இருந்ததாம். அது கூட ஒரு மாதிரியான
'தீர்க்கதரிசனம் எனினும்....'திருக்குறள்' 'திருப்புரள்' ஆகிவிடக்கூடாது
என்ற ஆதங்கம் எனக்கு.
நன்றி, வணக்கம்.
இன்னம்பூரான்
11 05 2011
மதுரையில் வாழ்ந்த ஸ்காட் துரை என்ற ஒரு ஆங்கிலேய வழக்கறிஞர்
தமிழ்மொழியில் ஆர்வம் கொண்டு தமிழ் இலக்கணத்தைக் கொஞ்சம் கற்றுக் கொண்டு
தமிழ் இலக்கியங்களையும் படிக்கத் தொடங்கினார். தமிழ் அணி இலக்கணம் பேசும்
எதுகை மோனைகளில் பெரும் ஈடுபாடு கொண்டு திருக்குறளில் எதுகை மோனை சரியாக
அமையாத இடங்களில் அவற்றைத் திருத்தி இவரே ஒரு புதிய திருக்குறள் பதிப்பை
வெளியிட்டார். 'சுகாத்தியரால் (ஸ்காட்டால்) திருத்தியும் புதுக்கியும்
பதிப்பிக்கப்பட்ட குறள்' என்பது அந்த புதிய திருக்குறள் நூலுக்கான
தலைப்பு.
'சுகாத்தியரால் (ஸ்காட்டால்) திருத்தியும் புதுக்கியும்
பதிப்பிக்கப்பட்ட குறள்' என்பது அந்த புதிய திருக்குறள் நூலுக்கான
தலைப்பு.
நேர்மையும், பெருந்தன்மையும் எழுத்துலகில் அரிதானவை
தேவ்
On May 11, 10:48 am, Innamburan Innamburan <innambu...@gmail.com>
wrote:
தனித்தமிழ் ஜோக்கர்கள் ஒரு கன்சிஸ்டன்சியை கூட கடைப்பிடிப்பதில்லை.
தலைப்பு இசுக்கொட்லாந்து , (ஸ்காட்லாந்திலிருந்து மாற்றப்பட்டது) அதன்
கீழேயே இசுக்காட்லாந்து . பக்கத்தில் ஸ்காட்லாந்து. அதன் மொழிகள்
ஆங்கிலம் (இங்லிஷ்), இசுக்காட்டிய கேலிக் மொழி, இசுகாட்டுசு. ஆங்கிலம்
எழுதினால் யாருக்கும் புரியாதாம், அதனால் பிராக்கட்டுகளில் இங்லிஷ்.
இசுக்காட்டுசு என்பது என்ன மொழி என தெரியவில்லை.
தமிழ்விகி தனித்தமிழ் தினவுகளை சொறிந்துகொள்ளும் இடமாகி விட்டதே தவிர,
படிப்பவர்களின் அறிவை விகி கொள்கைகள் படி பரப்புவதை இம்மியும்
கடைப்பிடிப்பதல்ல.
விஜயராகவன்
காட்லாந்து என்பதே செப்பமான தமிழ் சேசத்திரி
> செல்வன்
>
> "அவர்கள் சண்டையில் கத்தியை உருவினால் நாஙக்ள் துப்பாக்கியை உருவுவோம்.அவர்கள்
> எங்க ஆள் ஒருத்தனை ஆஸ்பத்திரிக்கு அனுப்பினால் நாங்கள் அவர்கள் ஆள் ஒருவனை
> பிணவறைக்கு அனுப்பி வைப்போம். இது தான் சிகாகோ வழிமுறை" - ஒபாமா
>
>
>
Gødland is an American comic book series by Joe Casey and Tom Scioli,
published by Image Comics since 2005.
http://en.wikipedia.org/wiki/G%C3%B8dland
இதைத் தமிழ் விகியில் பதிவிட வேண்டுமானால் எப்படி எழுத வேண்டும் ?
Scotland, Gødland இரண்டுக்கும் ‘காட்லாந்து’ என்பதே செப்பமான தமிழா ?
சேசாத்திரியாரே செப்புவீராக
தேவ்
On May 12, 2:03 am, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> On 5/12/11, செல்வன் <holy...@gmail.com> wrote:
>
> > 2011/5/11 devoo <rde...@gmail.com>
>
> >> 'சுகாத்தியரால் (ஸ்காட்டால்) திருத்தியும் புதுக்கியும்
> >> பதிப்பிக்கப்பட்ட குறள்' என்பது அந்த புதிய திருக்குறள் நூலுக்கான
> >> தலைப்பு.
>
> > விக்கியில் ஸ்காட்லாண்டை இசுக்கொட்லாந்து என
> > குறிப்பிட்டுள்ளனர்<http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%...>
>
> > இனி சுகாத்திலாந்து என மாற்றிக்கலாம்.
>
> காட்லாந்து என்பதே செப்பமான தமிழ் சேசத்திரி
>
> > செல்வன்
>
> > "அவர்கள் சண்டையில் கத்தியை உருவினால் நாஙக்ள் துப்பாக்கியை உருவுவோம்.அவர்கள்
> > எங்க ஆள் ஒருத்தனை ஆஸ்பத்திரிக்கு அனுப்பினால் நாங்கள் அவர்கள் ஆள் ஒருவனை
> > பிணவறைக்கு அனுப்பி வைப்போம். இது தான் சிகாகோ வழிமுறை" - ஒபாமா
>
> >www.holyox.blogspot.com
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post

















>> காட்லாந்து என்பதே செப்பமான தமிழ் <<
Gødland is an American comic book series by Joe Casey and Tom Scioli,
published by Image Comics since 2005.
http://en.wikipedia.org/wiki/G%C3%B8dland
இதைத் தமிழ் விகியில் பதிவிட வேண்டுமானால் எப்படி எழுத வேண்டும் ?
Scotland, Gødland இரண்டுக்கும் ‘காட்லாந்து’ என்பதே செப்பமான தமிழா ?
சேசாத்திரியாரே செப்புவீராக
தேவ்
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
அப்போ சமத்துவக் கோட்பாடு குறளில் இல்லை?அப்போ இது என்னா?பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்தொகுத்த்வற்றுள் எல்லாம் தலை.