பழங்குடி மக்களின் மொழி பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி

65 views
Skip to first unread message

Envirovivek

unread,
Jun 18, 2011, 5:32:22 PM6/18/11
to மின்தமிழ்
நம் தமிழ் மொழியை ஆங்கிலத்தின் பிடியில் இருந்து காப்பாற்ற பெரும்
பாடுபடும் நாம், நம் தமிழ் மொழியை விட பல மடங்கு சிரிய மொழிகளான,
பழங்குடிகளின் மொழிகளை காப்பதற்கு இது வரையில் தமிழக அரசு எவ்வளவு
செலவிட்டுள்ளது என்பது எனக்கு தெரியவில்லை. தெரிந்தவர் விளக்கினால்
நிம்மதயுறுவேன் .

பழகுடி மக்கள் குறித்து கிழுள்ள பின்னுட்டத்தில் கடந்த வாரம்
ஒளிபரப்பப்பட்ட ஒரு நிகழ்ச்சியின் காணொளி பார்க்கலாம்.

http://www.dailymotion.com/video/xjbi1b_kannadi_shortfilms

கடந்த 2009 ஆம் ஆண்டு, ஐநா நிறுவனம் மொழிகளின் அழிவு குறித்து
வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்போதய தமிழகத்தில் உள்ள ஐந்து மொழிகள்
ஆழியும் நிலையில் உள்ளது என அறிவித்து, அழியும் நிலையை பின் வருமாறு
விளக்கி உள்ளனர்.

http://www.unesco.org/culture/languages-atlas/index.php

Kota- critically endangered
Toda- critically endangered
Irula- Vulnerable
Kuruba- critically endangered
Badaga- definitely endangered

இம்மொழி அழிவதற்கு பல கரணங்கள் இருக்கலாம் அவற்றில் ஒன்று, இம்மொழிக்கு
வரி வடிவம் இல்லாதது.

பழங்குடி மக்களின் மொழியை காக்க, தமிழ் எழுத்துகள் கொண்டு, வரி வடிவம்
வளர்ச்சி பெற உதவ வேண்டும். தமிழ் மொழியின் பரிணாமத்திற்கு சான்றாக
இருக்கும் இம்மொழிகளும் காக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்.

ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ஒரு பழங்குடி மொழியை காக்க இப்படியான ஒரு
முயற்ச்சியை எடுத்துள்ளனர். இவ்வாறு நம் மாநிலத்திலும் நடைபெறுமா?
வரிவடிவம் இருக்குமெனில் இம்மொழிகள் பள்ளிகளில் கற்பிக்க படுகின்றனவா?

இம்மொழிகளின் நிலை குறித்தும் நம் மின்-தமிழில் மேலும் அறிய
விரும்புகிறேன்.

நன்றி
விவேக்

Subashini Tremmel

unread,
Jun 19, 2011, 6:08:03 AM6/19/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
முக்கியமான ஒரு விஷயத்தை இங்கு முன் வைத்திருக்கின்றீர்கள் விவேக்
முதலில் இந்தியா மற்றும் தமிழ் நாட்டு சிறுபான்மை பழங்குடி மக்களின் நிலை எந்த அளவு அரசாங்கத்தால் பராமரிக்கப்படுகின்றது என்பதையும் தெரிந்து கொள்ள நான் விரும்புகின்றேன். இந்தியாவில் /தமிழகத்தில் பழங்குடியினர் நலன்,வளர்ச்சி தொடர்பில் ஒரு துறை இருக்க வேண்டுமே. அதில் எவ்வாறான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று தெரிந்தவர்கள் விளக்கினால் நன்று.

-சுபா

2011/6/18 Envirovivek <capparis...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

seshadri sridharan

unread,
Jun 19, 2011, 8:32:25 AM6/19/11
to mint...@googlegroups.com
குறைந்தளவு இம்மக்கள் கூடி வாழ வேண்டும் அதற்கு அவருடைய வாழ்விடங்களிலேயே
வேலை வாய்ப்பு பெற ஏற்பாடு செய்ய வேண்டும்.
பிழைப்பு கருதி இவர்கள் இடம் பெயர்வதால் பிள்ளைகள் தம் பழங்குடி மொழியை
கற்க இயலாமல் போகிறது.
நீலகிரி இருளர் ஒருவரிடம் பேசும் வாய்ப்பு கிட்டியது. தண்ணி குடிக்க
வா எனபதை எப்படி சொல்வீர்கள் எனறேன் அதற்கு அவர் 'நீர் குடிய வா'
என்போம். குரங்கை என்ன என்று சொல்வீர் என்றேன,. ' கோடன்' என்றார்.
கோடு என்பது மரக்கிளையை குறிப்பது. மரக்கிளைகளில் குரங்குகள்
காணப்படுதலால் கோடன் என்ற சொல் உருவானது. இந்த கோடன் > கோட்டி> கோத்தி என
குரங்கிற்கு இன்றும் தெலுங்கில் வழங்குகிறது.

உண்மையில் இப்பழங்குடி மக்கள் மொழி இலக்கண இலக்கிய வளம் பெற்ற நிலையில்
ஒரு கட்டத்தில் இம்மக்கள் பிற பெருங் கூட்ட மக்களிடம் இருந்து தொடர்பற்று
தனித்து வாழ்ந்ததால் அவர்கள் தனித்து வாழத் தலைப்பட்ட காலத்தில் என்ன
பேச்சுமொழி வழக்கு இருந்ததோ அப்படியே மாறாமல் இவர்கள் பேச்சு மொழி
நிலைத்து விட்டது. இப்படித் தான் வட்டார வழக்குகள் உண்டாயின. ஆனால் அவை
எழுத்து வழக்கிற்கு ஒரு பொது மரபைப் பின்பற்றியதால் தமிழ் என்ற
வட்டத்துள் வந்துவிட்டன. இந்த பழங்குடிகள் மொழிக்கு எழுத்து தொடர்பு
வாய்க்கப் பெறாததால் தனி தொழியாக கொள்ளப் படுகின்றன. இப்பழங்குடி மொழிகள்
உண்மையில் தமிழின் பல்வேறு காலகட்ட வளர்ச்சியின் விளர்ச்சியின் ஆவணம்
என்றே சொல்ல முடியும்.

சேசாத்திரி

Envirovivek

unread,
Jul 7, 2011, 6:46:24 AM7/7/11
to மின்தமிழ்
அன்பிற்குரிய சுபா மற்றும் சேசாத்ரி அவர்களே!!!

தங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது கிழுள்ள பின்னுட்டத்தில் காநோலியெய்
காணுங்கள். அம்மக்கள் தாங்கள் படும் அவதிகளை நன்கு விவரித்துள்ளனர்.

http://www.dailymotion.com/video/xjgoo1_kannadi_shortfilms#from=embediframe


அவர்கள் படும் மிகப்பெரும் அவதி

வன்னத்திளிரிந்து அவர்களை குடிபெயர தூண்டும் வனத்துறை,

வனவிலங்கு ஊருக்குள் நுழைவது

தங்களால் தாங்கள் பழங்குடியினர் என நிருபித்து சான்றிதழ் பெறமுடியாமை

நகரங்களில் பழங்குடி மாணவர்களின் விடுதிகள் சீராக பரமரிக்கப்படமை

என பல ப்றேச்சனைகள்.


****குறைந்தளவு இம்மக்கள் கூடி வாழ வேண்டும் அதற்கு அவருடைய
வாழ்விடங்களிலேயே வேலை வாய்ப்பு பெற ஏற்பாடு செய்ய வேண்டும்.


பிழைப்பு கருதி இவர்கள் இடம் பெயர்வதால் பிள்ளைகள் தம் பழங்குடி மொழியை

கற்க இயலாமல் போகிறது. ****

உண்மை சேசாத்ரி அவர்களே.. வனத்துறையினர் அவர்களை காடுகளில் செல்லவே
அனுமதி மறுக்கின்றனர் சில காடுகளில்.

***** நீலகிரி இருளர் ஒருவரிடம் பேசும் வாய்ப்பு கிட்டியது. தண்ணி


குடிக்க
வா எனபதை எப்படி சொல்வீர்கள் எனறேன் அதற்கு அவர் 'நீர் குடிய வா'
என்போம். குரங்கை என்ன என்று சொல்வீர் என்றேன,. ' கோடன்' என்றார்.
கோடு என்பது மரக்கிளையை குறிப்பது. மரக்கிளைகளில் குரங்குகள்
காணப்படுதலால் கோடன் என்ற சொல் உருவானது. இந்த கோடன் > கோட்டி> கோத்தி
என

குரங்கிற்கு இன்றும் தெலுங்கில் வழங்குகிறது. *****

மிகவும் நெகிழ்வாக உள்ளது அவர்களின் சொல்லாடல்கள்.... அமாம் நாங்கள்
தெலுங்கில் கோதி என்று தான் அழைப்போம். எனக்கு நீங்கள் குரியபிரகுதான்
ஏன் கோரங்குக்கு அந்த பெயர் வந்துள்ளது என விளங்குகிறது... எங்கள் தெலுகு
மக்கள் கூட பலர் அறிய மாட்டார். ஏன் இவ்வளவு தெலுங்கு, தமிழின் கிளை மொழி
என்றாலே வெறித்து பார்கிறார்கள்.


*****உண்மையில் இப்பழங்குடி மக்கள் மொழி இலக்கண இலக்கிய வளம் பெற்ற


நிலையில் ஒரு கட்டத்தில் இம்மக்கள் பிற பெருங் கூட்ட மக்களிடம் இருந்து
தொடர்பற்று தனித்து வாழ்ந்ததால் அவர்கள் தனித்து வாழத் தலைப்பட்ட
காலத்தில் என்ன பேச்சுமொழி வழக்கு இருந்ததோ அப்படியே மாறாமல் இவர்கள்
பேச்சு மொழி
நிலைத்து விட்டது. இப்படித் தான் வட்டார வழக்குகள் உண்டாயின. ஆனால் அவை
எழுத்து வழக்கிற்கு ஒரு பொது மரபைப் பின்பற்றியதால் தமிழ் என்ற
வட்டத்துள் வந்துவிட்டன. இந்த பழங்குடிகள் மொழிக்கு எழுத்து தொடர்பு

வாய்க்கப் பெறாததால் தனி தொழியாக கொள்ளப் படுகின்றன. இப்பழங்குடி


மொழிகள்
உண்மையில் தமிழின் பல்வேறு காலகட்ட வளர்ச்சியின் விளர்ச்சியின் ஆவணம்

என்றே சொல்ல முடியும். *****

நாம் மின்தமிழில் இவர்களை பற்றி விவதிப்பதன் முக்கிய காரணமே, இவை தமிழ்
மொழியால் நசுக்கப்படும் சிறுபான்மை மொழி என்பதால். இம்மகளிடயே கண்டிப்பாக
தமிழ் பேசுபவர்கள் பற்றிய உயர்வான எண்ணம இருக்கும். உயர்வான எண்ணம
இருப்பதற்கு பதிலாக சமன் எனும் எண்ணம நிலவ இவர்கள் மொழிக்கு வரி வடிவம்
வேண்டும். இதுவரையில் அப்படியான ஒரு செயல்பாடு நடந்துள்ளத என
தெரியவில்லை. சிரிதொரு நாட்களில் நான் இவர்கள் பற்றிய மேலும்
விவரங்களுடன் வருகிறேன்.

நன்றி நட்புடன்
விவேக் பாபு


On Jun 19, 12:08 pm, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
> முக்கியமான ஒரு விஷயத்தை இங்கு முன் வைத்திருக்கின்றீர்கள் விவேக்
> முதலில் இந்தியா மற்றும் தமிழ் நாட்டு சிறுபான்மை பழங்குடி மக்களின் நிலை எந்த
> அளவு அரசாங்கத்தால் பராமரிக்கப்படுகின்றது என்பதையும் தெரிந்து கொள்ள நான்
> விரும்புகின்றேன். இந்தியாவில் /தமிழகத்தில் பழங்குடியினர் நலன்,வளர்ச்சி
> தொடர்பில் ஒரு துறை இருக்க வேண்டுமே. அதில் எவ்வாறான பணிகள்
> மேற்கொள்ளப்படுகின்றன என்று தெரிந்தவர்கள் விளக்கினால் நன்று.
>
> -சுபா
>

> 2011/6/18 Envirovivek <capparisvivi22...@gmail.com>

> Suba Tremmelhttp://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!http://subahome2.blogspot.com-  ஜெர்மனி நினைவலைகள்..!http://subaillam.blogspot.com- மலேசிய நினைவுகள்..!http://ksuba.blogspot.com- Suba's Musings

seshadri sridharan

unread,
Jul 7, 2011, 8:18:34 AM7/7/11
to mint...@googlegroups.com

மிகவும் நெகிழ்வாக உள்ளது அவர்களின் சொல்லாடல்கள்.... அமாம் நாங்கள்  தெலுங்கில் கோதி என்று தான் அழைப்போம். எனக்கு நீங்கள் குரியபிரகுதான் ஏன் கோரங்குக்கு அந்த பெயர் வந்துள்ளது என விளங்குகிறது... எங்கள் தெலுகு  மக்கள் கூட பலர் அறிய மாட்டார்.
 
ஏன் இவ்வளவு தெலுங்கு, தமிழின் கிளை மொழி
என்றாலே வெறித்து பார்கிறார்கள்
.
இவ்வாறு வெறித்துப் பார்ப்பது மட்டுமல்ல சினந்து கடுகடுப்பாகிப் போகிறார்கள் ஆந்திரத் தெலுங்கர்கள். (லேது! மாதி கூட தமிள் லாகா பாத பாஷனே) இல்லை, எங்கள் தெலுங்கு கூட தமிழ் போல் பழைய  மொழி தான். எனவே தமிழின் கிளை மொழி அல்ல என்று ஆவேசப் படுகின்றனர். பிராகிருதத்தில் இருந்து தோன்றியது என தமிழ் உறவை மறுக்கின்றனர் தெலுங்கர்.


நாம் மின்தமிழில் இவர்களை பற்றி விவதிப்பதன் முக்கிய காரணமே, இவை தமிழ்  மொழியால் நசுக்கப்படும் சிறுபான்மை மொழி என்பதால். இம்மகளிடயே கண்டிப்பாக  தமிழ் பேசுபவர்கள் பற்றிய உயர்வான எண்ணம இருக்கும். உயர்வான எண்ணம இருப்பதற்கு பதிலாக சமன் எனும் எண்ணம நிலவ இவர்கள் மொழிக்கு வரி வடிவம்
வேண்டும். இதுவரையில் அப்படியான ஒரு செயல்பாடு நடந்துள்ளத என  தெரியவில்லை. சிரிதொரு நாட்களில் நான் இவர்கள் பற்றிய மேலும்விவரங்களுடன் வருகிறேன்.

ஐயா,  தமிழ் இவர்களுடைய மொழியை நசுக்கவில்லை. நான் ஒரு படுக இளைஞரிடம் பேச நேர்ந்த போது அவர் அவ்வாறு எதையும் தெரிவிக்கவில்லை. பழங்குடி மக்கள் தம் மொழியை கற்க, படிக்க தமிழ் அல்லது உரோமன் எழுத்துகளைப் பயன்படுத்தலாம். அதற்கு தடை ஏதும் இல்லை. முதலில் மொழி காப்பு உணர்வு இவர்களிடம் வளரவேண்டும். இலக்கியங்கள் இயற்றப்பட வேண்டும்.
   
    சேசாத்திரி
நன்றி நட்புடன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

செல்வன்

unread,
Jul 7, 2011, 12:28:18 PM7/7/11
to mint...@googlegroups.com


2011/7/7 seshadri sridharan <ssesh...@gmail.com>

இவ்வாறு வெறித்துப் பார்ப்பது மட்டுமல்ல சினந்து கடுகடுப்பாகிப் போகிறார்கள் ஆந்திரத் தெலுங்கர்கள். (லேது! மாதி கூட தமிள் லாகா பாத பாஷனே) இல்லை, எங்கள் தெலுங்கு கூட தமிழ் போல் பழைய  மொழி தான். எனவே தமிழின் கிளை மொழி அல்ல என்று ஆவேசப் படுகின்றனர். பிராகிருதத்தில் இருந்து தோன்றியது என தமிழ் உறவை மறுக்கின்றனர் தெலுங்கர்.


:-)))

அவர்களுக்கும் அவர்கள் மொழி கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முந்தோன்றி மூத்த மொழியாக இருக்கும்.அவர்களிடம் போய் இன்னொரு மொழியில் இருந்து உன் மொழி வந்தது என்றால் அவர்கள் டென்சனாக மாட்டார்களா?
--
செல்வன்

"வாழும் பூமியை வளமாக்க அதை நாம் நேசிப்பது அவசியமாகிறது" - செல்வன்



www.holyox.blogspot.com

http://twitter.com/#holyox

https://profiles.google.com/holyape/buzz

Reply all
Reply to author
Forward
0 new messages