இ - உ => சிக்கல்.

232 views
Skip to first unread message

kaviarasan Va.Mu.Se.

unread,
May 4, 2009, 7:36:26 PM5/4/09
to minT...@googlegroups.com

அன்புள்ள திரு. கண்ணன் நடராசன்

தங்கள் மறுமொழிக்கு நன்றி.

இது நக்கீர்களுக்கான விவாதம். 

அவர்களுக்கே விட்டு விடுகிறேன் விவாதத்தை :)

ராமர்  =>  இராமர் என்றே எழுதி / பிழை திருத்திப் பழக்கம். 

உராமர் என்று எழுதியோ படித்தோ/ பிழை திருத்தியோ நினைவில் இல்லை.

நக்கீரர்கள் விளக்கம் அளிக்கலாமே. 

அல்லது இக்கால இலக்கணப் பயிற்சி பெற்ற தமிழர்களும் விளக்கலாமே.

அன்புடன்
.கவி.

2009/5/4 Kannan Natarajan <thar...@gmail.com>
> இரசியா!

உருசியா/உருஷ்யா அல்லவா!

சொற்களின் முதலெழுத்து "ர" அல்லது "ரா" என்று தொடங்கும் போது, சில இடங்களில் "இ"யும், வேறு இடங்களில் "உ"வும் முன்னிடை எழுத்தாக வருவது தொல்காப்பியம் கூறுகிறது அல்லவா! இக்காலத்தில் அவ்வழக்கு, மாற்றம் அடைய என்ன அடிப்படையோ?

இதுவும் ஒரு வகையான, தமிழின ஒற்றுமையின்மையா?

தமிழன்பகலா,
கண்ணன் நடராசன்

 

kaviarasan Va.Mu.Se.

unread,
May 4, 2009, 7:39:33 PM5/4/09
to minT...@googlegroups.com
 
பிழை திருத்தம் :

இது நக்கீரர்களுக்கான விவாதம். 


2009/5/4 kaviarasan Va.Mu.Se. <vamus...@gmail.com>

Kannan Natarajan

unread,
May 4, 2009, 7:54:26 PM5/4/09
to minT...@googlegroups.com

> ராமர்  =>  இராமர் என்றே எழுதி / பிழை திருத்திப் பழக்கம்.  உராமர் என்று எழுதியோ படித்தோ/

> பிழை திருத்தியோ நினைவில் இல்லை.

ராமா, ராமர் - அகிய பெயர்களுக்கு முன் "இ" என்ற முன்னிடை எழுத்து தான் வரும். "உ" வருவதில்லை.

அதுவே, ரஷ்யா என்று எழுதும்போது அச்சொல்லை, "ருஷ்யா" என்று "ரு"வின் முதலெழுத்து இல்லாமல் - "உ" என்ற முன்னிடை எழுத்தோடு தொடங்குவது - உருஷ்யா (உருசியா) - தொல்காப்பிய இலக்கண முறை.

மறைகளும், முறைகளும் கறைகளாக இரைகளாகும் வரை, நிறைகளை எவ்வாறு பறைச் சாற்றுவது!

kaviarasan Va.Mu.Se.

unread,
May 4, 2009, 8:45:07 PM5/4/09
to minT...@googlegroups.com

அன்புள்ள கண்ணன் நடராசன்

தங்களின் வாதம்  இரு பிரிவுகளாக

1. தொல்காப்பியத்தின் படி ‘ர’+உயிர்மெய் சொல்லின் முதல் வராது.

2. ர என்றால் =>  இ முன் சேர்க்கவும்,  ரு எனில் உ முன் சேர்க்க வேண்டும் என்பது தொல்காப்பிய விதி.  இயன்றால் சூத்திர எண் தாருங்களேன்.

என் வினா..

ரசியா  ஏன் ருசியா  ஆனது? 

Russia,  Russian language என ’ர’ ஒலியில் பயன்படுத்தக் கண்டிருக்கின்றேன். ‘ரு’  என்று ஏன் மொழி மாற்றம்?

ரசியா  என எழுதினால் இரசியா தானே சரியான முறை, தங்களின் தொல்காப்பிய வாதப் படியும்.

முகலாயப் பேரரசர் இரசியா பேகம் எனத் தானே எழுத வேண்டும்.  “உருசியா பேகம்”  என ஏன் எழுத வேண்டும்? 

ரசியாவை, ருசியா என  ஏன் எழுத வேண்டும் பின் அதற்கு இலக்கணப் பிழை என்று உருசியா  என மாற்றம் ஏன், புரியவில்லையே....

இது வினாவே.... விடையல்ல. 

விடையை நக்கீரர்கள் எழுதுங்களேன்...

kaviarasan Va.Mu.Se.

unread,
May 4, 2009, 8:49:31 PM5/4/09
to minT...@googlegroups.com


ருக்கு =>  இருக்கு,  உருக்கு

ரூபராணி  => இரூபராணி ,உரூபராணி

என்ன முன்னிடை ?

2009/5/4 kaviarasan Va.Mu.Se. <vamus...@gmail.com>

Kannan Natarajan

unread,
May 4, 2009, 10:56:07 PM5/4/09
to minT...@googlegroups.com
> ராமா, ராமர் - அகிய பெயர்களுக்கு முன் "இ" என்ற முன்னிடை எழுத்து தான் வரும். "உ" வருவதில்லை.

அதுபோல, ரங்கன், ரங்கநாதன் முன்னிடைய எழுத்தாக "அ"ரங்கன், "அ"ரங்கநாதன் என்பது வழக்கே அன்றி இரங்கன், இரங்கநாதன் அல்லது ரெங்கன், ரெங்கனாதன் என்றில்லை.

கீழுள்ள தொகுப்பு - தமிழ் இணையப் பல்கலைக்கழக "ஒலியனியல்" என்னும் பாடத்தில் வரும் மொழிமுதல் எழுத்துகள் என்ற பிரிவில் இருந்து. (http://www.tamilvu.org/courses/diploma/a051/a0512/html/a0512512.htm)

தொல்காப்பிய இலக்கணத்தின்படி "ர", "ல" ஆகிய மெய்யெழுத்துகள் மொழிமுதலில் வராதவை.

சங்ககாலத்தத் தமிழில் இவ்வெழுத்துகளை முதலாகக் கொண்ட வடமொழிச் சொற்கள் கலந்தன. ஆனால், அவை அப்படியே ஏற்றுக் கொள்ளப்படவில்லை. "அ, இ, உ" என்னும் எழுத்துகளுள் ஒன்றை மொழி முதலில் துணையாகக் கொண்டே ஏற்றுக்கொள்ளப்பட்டன.

சான்றாக "ராமன்" என்ற வடசொல், "இராமன்" என்று சங்ககாலத் தமிழில் எழுதப்பட்டுள்ளது.

அதேபோல, "ரோகிணி" (ஒரு நட்சத்திரத்தின் பெயர்) என்ற சொல் "உரோகிணி" என்று எழுதப்பட்டுள்ளது.

ஆக, நீங்கள் குறிப்பிட்ட "ருக்கு, ரூபராணி" ஆகிய பெயர்கள் வடமொழிச் சொற்களாக உள்ளதால், பின்வரும் அடைப்புக்குறியிலிட்ட வாக்கியம் பொருந்தும் போல. (சங்ககாலத்தத் தமிழில் இவ்வெழுத்துகளை முதலாகக் கொண்ட வடமொழிச் சொற்கள் கலந்தன. ஆனால், அவை அப்படியே ஏற்றுக் கொள்ளப்படவில்லை. "அ, இ, உ" என்னும் எழுத்துகளுள் ஒன்றை மொழி முதலில் துணையாகக் கொண்டே ஏற்றுக்கொள்ளப்பட்டன.)

kaviarasan Va.Mu.Se.

unread,
May 5, 2009, 5:14:26 PM5/5/09
to minT...@googlegroups.com

நன்றி கண்ணன்.

அறிந்தோர் ரசியா,  ருசியா  ஆன கதையை எழுதுங்களேன்

Kannan Natarajan

unread,
May 5, 2009, 6:12:50 PM5/5/09
to minT...@googlegroups.com
ரஸ்ஸியா - அப்படியும் எழுதலாம் போலுள்ளது. அம்மொழியை ஓர் அளவிற்கு படித்தமையால். உரஷ்ய மொழியில், "ரஸ்ஸியா" (Россия) என்று தான்  உச்சரிப்பார்கள். ஆக, நாம் எழுதும் "ரசியா அல்லது ருசியா"வில் உள்ள "சி" ஒலியமைப்பு நிகரில்லாததோ என்ற ஐயம் தோன்றுகிறது! (அன்பர் செல்வகுமார் அவர்களின் கருத்துகள் விடையளிக்க வாய்ப்புள்ளதா?)

அதுவே, "ரஸ்சியன்" என்பதை "ரூஸ்கி" (русский) என்று தான் உச்சரிப்பார்கள் - உருஸ்ஸியர்கள்/உருஷியர்கள்/உருசியர்கள்:-))

மொழியன்பகலா,
கண்ணன் நடராசன்

kaviarasan Va.Mu.Se.

unread,
May 6, 2009, 9:45:58 PM5/6/09
to minT...@googlegroups.com

ரசிய மொழி அறிந்த நண்பர்கள் குழுமத்தில் இல்லை போலும்

அன்புடன்
.கவி.

2009/5/5 Kannan Natarajan <thar...@gmail.com>

Kannan Natarajan

unread,
May 7, 2009, 5:12:07 PM5/7/09
to minT...@googlegroups.com
திரு. செல்வகுமாரின் விடை.....

உருசிய நாட்டை அவர்கள் தங்கள் மொழியில் Россия, (Rossiya, ரொ˘ச்˘சிய அல்லது ரொஸ்ஸிய) என்கிறார்கள். அவர்கள் தங்கள் மொழியின் பெயரை русский  (russkiy  ரு˘ச்˘ச்கிய் ) என்பது போல ஒலிக்கிறார்கள்.
 
ரு˘ச்˘ச்கிய் மொழி என்பதை உருசிய மொழி எனலாம், எனவே உருசிய மொழி பேசும் மக்கள் உள்ள நாடு உருசியா. ரொ˘ச்˘சிய என்றாலும் அதனை உரொசிய என்று எழுதலாம். ஆனால் உருசியா என்று எழுதுவதே போதுமானது.
 
தமிழில் முதலில் வரக்கூடாத எழுத்துகளுக்கு முன்னே தகுந்த உயிரெழுத்து இட்டு எழுதுவது தமிழ் முறைமை. இதில் அறிவார்ந்த நுட்பம் உள்ளது. 
 
அன்புடன்
செல்வா
Reply all
Reply to author
Forward
0 new messages