தமிழ் வளர்ச்சி குறித்த கட்டுரைகள்,
தொழில் நுட்ப நுணுக்கங்கள் மற்றும்
இலக்கப்பதிவு பற்றிய கட்டுரைகள்
வரவேற்கப்பட்டாலும். அவ்வப்போது
தமிழ்ப் பண்பாடு பற்றிய சமகால
அலசலும் அவசியமே. தாராளமாக
எழுதுங்கள்.
தமிழ் மரபு அறக்கட்டளையின்
செயற்பாட்டிற்கு எப்படிப்
பங்களிப்பது? தமிழ்த்தேனீ போல் "மரபு
அணில்" என்ற ஒரு வகை உள்ளது, அது
தெரியுமோ?
கண்ணன்
எப்போது கர்வம் வருகிறதோ அப்போதே தெரிந்து கொள்ளலாம்
ஒரு மிகப் பெரிய சரிவு வரப் போகிறதென்று,அதனால்
நமக்கு வருகின்ற கர்வத்தையே அளவுகோலாக வைத்துக் கொள்ளலாம் நமக்கு வரப்
போகும் ப்ரச்சனைகளின் அளவை
அதனால்தான் நான் தெய்வத்திடம் அடிக்கடி வேண்டுவதே
இறைவா எனக்கு எப்போது கர்வத்தைக் கொடுக்காதே
என்னால் அதற்குப் பின் வரும் விளைவுகளைத் தாங்கமுடியாது
என்று..........
ஒவ்வொருமுறையும் நாராயணா காப்பாற்று என்று அபயக் குரல் கேட்கும்
போதெல்லாம் ஸ்ரீமன் நாராயணன் கருடாழ்வார் மீது சென்று
பக்தர்களைக் காப்பாறுவாராம், கஜேந்திர மோட்ஷம்
என்னும் நிகழ்வின் போது அதே போல நாராயணன் கருடன் மேல் உட்கார்ந்து
பக்தனைக் காப்பாற்ற போய்க்கொண்டிருக்கும் போது தன்னால் முடிந்தவரை
வேகமாகப் பறந்து கொண்டிருக்கும்
கருடன் மனதில் ஒரு நிமிட சிந்தனையாக தான் வேகமாகப் பறப்பதனால்தானே
ஸ்ரீமன் நாராயணன் பக்தர்களை சரியான நேரத்தில் சென்று காப்பாற்றுகிறான்
என்று தோன்றியதாம்
உடனே ஸ்ரீமன் நாராயணன் கருடனை எடுத்து தன் கையில் அணைத்துக் கொண்டு
இன்னும் வேகமாக இடத்தை அடைந்து கஜேந்திரனை காப்பாற்றினார்
என்று சொல்வார்கள்
கருடனின் வேகம் அங்கு போதவில்லை
கருட்ன தன் தலையை தூக்கி மன்னிக்கவேண்டும் என்பது போல் ஒரு பார்வை
பார்த்தாராம் நாராயணனை நோக்கி என்பார்கள்,
மனோ வேகம் ,வாயு வேகம் ,ஒளிவேகம் ,ஒலிவேகம் அத்தனையும் தன்னிடத்தே கொண்ட
விவேகமான ஸ்ரீமன் நாராயணன் அல்லவா
பரம் பொருள்
இதே போன்று ,மஹா பாரதத்தில்,ராமாயணத்தில் நிறைய கர்வ பங்கங்களின்
நிகழ்வுகள் இருக்கின்றன
ஒவ்வொன்றாக தொடருவோம்
அன்புடன்
தமிழ்த்தேனீ
> எப்போது கர்வம் வருகிறதோ அப்போதே தெரிந்து கொள்ளலாம்
> ஒரு மிகப் பெரிய சரிவு வரப் போகிறதென்று,
>
ஆகா! நல்ல தொடர்.
நமது இதிகாச புராணங்கள் முழுவதும் இதே கதைகள்தானே! மனிதர்களிடமிருந்து
இதை நீட்டி இறைவனிடமே வைத்து விட்டார்களே! சிவபுராணங்களைப் பார்த்தால்
பரம் பொருளான திருமாலுக்கே கர்வமுண்டு என்பார்கள். இந்த அடிமுடி தேடும்
கதைக்கு பல பிளேவர்கள் உண்டு :-) அப்புறம் வேத இதிகாசக் கதைகளில் சிவன்
வரம் கொடுத்துவிட்டு மாட்டிக் கொண்டார் என்றோ, யாகத்தில் தமக்கு மரியாதை
செய்யவில்லை என்பதால் கலாட்டா பண்ணினார் என்றெல்லாம் கதை இருக்கிறதே!
இவ்வளவு இருந்தும் நமக்கு கர்வமென்றால் என்னவென்று சரியாக,
திட்டவட்டமாகப் புரிவதில்லை! கர்வமென்றால் ஈகோவா? அகங்காரம், மமதை,
தெனாவெட்டு இதெல்லாம் ஒன்றா? கர்வத்தின் தோற்றுவாய் எங்கே? அது ஏன்
இறைவன், இறைவியருக்கே இருக்கிறது? யௌவன கர்வம் என்கிறார் சங்கரர். இது
தெனாவெட்டு வகை என்று தெரிகிறது. ஆடி,ஓடிக் களைச்சுப் போன கிழடுகளுக்கும்
கர்வம் இருக்கிறதே?
கர்வம் என்பது அசேதன ஒட்டு என்று தோன்றுகிறது. பூரண சித் சத் ரூபம்,
பிரகிருதியுடன் குலாவியவுடன் கர்வம் தோன்றிவிடுகிறது போலும் (இதுக்கும்
கதை இருக்கு :-) ஆனா, இந்த பிரகிருதி என்று தனியாகவா ஒன்று உள்ளது?
அதுவும் பூரணத்தின் அங்கம்தானே. ஆக, ஒண்ணு, ஒண்ணாகவே இருக்கும்வரை கர்வம்
தெரிவதில்லை. இரண்டா ஆச்சுன்னா பிரச்சனை ஆரம்பிச்சுடுது!
உலகில் பார்த்தவரை இந்தியர்களுக்கு ஒரு கொனஷ்டை உண்டு (இதுவும்
கர்வத்தின் ஒரு அங்கம் போலும்). எங்கு கர்வம் காட்டவேண்டுமோ அப்போது
தாழ்வுணர்ச்சியில் இருப்பார்கள். எப்போது காட்டக்கூடாதோ அப்போது
காட்டுவார்கள். இது கர்வமென்றால் என்னவென்று புரிந்து கொள்ளாததால் வரும்
கோளாறாக இருக்கலாம். மூக்கின் மேலே கோபம் எப்போதும் காத்துக்கொண்டே
இருக்கும்! யாரும் ஒண்ணு சொல்லிடக் கூடாது. உடனே பொத்துக் கொண்டு
வந்துவிடும். கர்வம் இல்லாமல் இருப்பது எப்படி என்று காட்டக்கூடிய
முன்மாதிரிகள் நம் சமூகத்தில் அதிகமில்லாததால் கூட இது இருக்கலாம்.
எப்படியோ போங்கள். கர்வம் பற்றிப் பேசினால் புரியாமலே பேசிக்கொண்டு
இருக்கலாம் என்று தோன்றுகிறது. நீங்க உங்க கதையைச் சொல்லுங்க :-)
அலோ!
அற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா
அற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா!
On Oct 11, 4:09 pm, "Aravinda Lochanan" <en.amud...@gmail.com> wrote:
எனக்குத் தெரிந்த அடுத்த கர்வ பங்கம்
பற்றி எழுதலாம் என்று நினைக்கிறேன்
" அர்ஜுன கர்வ பங்கம் "
மஹா பாரத யுத்தம் முடிந்து
கௌரவர்கள் அனைவரும் அழிக்கப் பட்டு
பாண்டவர்கள் பக்கம் வெற்றி ,அது தருமத்தின் வெற்றி
அர்ஜுனன் தேர்த்தட்டிலே நின்று கொண்டிருக்கிறான்
பரமாத்மா க்ருஷ்ணன் ஒன்றுமே தெரியாத
அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு
சாரதியாய் அமர்ந்திருக்கிறான்
அவனுக்கா ஒன்றும் தெரியாது ,
அடுத்து நடக்கப் போகும்
நாடகம் அவனுக்கு புறிகிறது
இப்போது அர்ஜுனன் கிருஷ்ணனைப் பார்த்து ,
என்ன க்ருஷ்ணா
போர் முடிந்து விட்டது போகலாமா,,,,,? என்றான்
அர்ஜுனனுக்கு மனதுக்குள் மிகப் பெரிய கர்வம்
எப்படிப்பட்ட வில்லாளிகளை,திறமைசாலிகளை
தான் வென்றுள்ளோம், என்று
அவன் அந்த நினைவுடனே க்ருஷ்ணா மறந்து விட்டாயா
தேரை செலுத்தும் சாரதி தானே கை லாகு கொடுத்து
போராளியை கீழே இறக்கவேண்டும்
" ( இந்த முறைதான் இப்போதும் கடைப்பிடிக்கப் படுகிறது
கனவான்கள் காரைவிட்டு கீழே இறங்க ஓட்டுனர் வந்து
கதவைத் திறந்து கைலாகு கொடுத்து கனவான்களை
மரியாதை செய்யும் வழக்கம்) "
வந்து கை லாகு கொடுக்கிறாயா.........?என்றான்
அர்ஜுனனை நிமிர்ந்து பார்த்த கிருஷ்ணன்
அர்ஜுனா நீ மகா வீரன் ,எப்படிப்பட்ட வீரர்களையெல்லாம்
வெற்றி கொண்டிருக்கிறாய் ,,உனக்கு கைலாகு கொடுத்து
உன்னைக் கீழே இறக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே
ஆனால் இந்த முறை மட்டும் எனக்காக ஒரு உதவி செய்
நானும் களைப்பாக இருக்கிறேன்,நீயே இறங்கி வந்து விடேன்
என்றான் பார்த்தசாரதி
,அர்ஜுனனும் சரி என்று கீழே இறங்கி வந்தான்
அர்ஜுனன் கீழே இறங்கியவுடன் கிருஷ்ணன்
தேரை விட்டு கீழே இறங்கினான்
தேர் முழுவதம் தீப்பிடித்து ஒரே நொடியில் சாம்பலானது "
அர்ஜுனன் திகைத்தான்
கண்ணன் அர்ஜுனனைப் பார்த்து ,அர்ஜுனா நினைவிருக்கிறதா
கர்ணன் நாகாஸ்திரம் உபயோகித்தானே அப்போது
நான் தேர்த்தட்டை அழுத்தியதால் உன் தலை தப்பியது
ஆனால் அந்த அஸ்திரத்தின் சக்தி முழுவதையும் உன் தேர்த்தட்டில் கொடியாக
அமர்ந்தானே
அனுமன் அவன் இத்தனை நேரம்
எனக்காக தாங்கிக் கொண்டிருந்தான்
இப்போது நானும் இறங்கினேன்,
அனுமனும் விடைபெற்றான்
அதனால் தேர் எறிந்து சாம்பலாகியது
இப்போது நினைத்துப் பார்
உன் மனதில் தோன்றியதே எப்படிப்பட்ட வீரர்களையெல்லாம்
நீ வீழ்த்தி இருக்கிறாய் என்கிற கர்வம் அது வீணான கர்வம்
எல்லாம் அவன் செயல் கர்வப் படாதே
உன்னால் ஒன்றும் முடியாது
இறை அருள் இன்றி
நான் மட்டும் உனக்கு கைலாகு கொடுத்து இறக்கவேண்டும்
என்று உனக்கு முன்னரே தேர்த்தட்டிலிருந்து கீழே இறங்கி இருந்தால் நீயும்
சேர்ந்து எரிந்திருப்பாய்,
புறிகிறதா கர்வப் படாதே என்றார்
அர்ஜுனன் கிருஷ்ணா என்னை மன்னித்துவிடு
ஒரு வினாடி கர்வம் கூட ஒரு வம்சத்தையே
அழிக்கும் ஆயுதம் என்பதை
இப்போது புறிந்துகொண்டேன்
என்றான் அர்ஜுனன்
அன்புடன்
தமிழ்த்தேனீ
On Oct 11, 4:09 pm, "Aravinda Lochanan" <en.amud...@gmail.com> wrote:
வேண்டுதலுடன்
அன்புடன்
தமிழ்த்தேனீ
On Oct 9, 12:26 pm, Narayanan Kannan <drnkan...@yahoo.com> wrote:
> அன்பின் தமிழ்த்தேனீ:
>
> தமிழ் வளர்ச்சி குறித்த கட்டுரைகள்,
> தொழில் நுட்ப நுணுக்கங்கள் மற்றும்
> இலக்கப்பதிவு பற்றிய கட்டுரைகள்
> வரவேற்கப்பட்டாலும். அவ்வப்போது
> தமிழ்ப் பண்பாடு பற்றிய சமகால
> அலசலும் அவசியமே. தாராளமாக
> எழுதுங்கள்.
>
> தமிழ் மரபு அறக்கட்டளையின்
> செயற்பாட்டிற்கு எப்படிப்
> பங்களிப்பது? தமிழ்த்தேனீ போல் "மரபு
> அணில்" என்ற ஒரு வகை உள்ளது, அது
> தெரியுமோ?
>
> கண்ணன்
>
> --- Tthamizth Tthenee <rkc1...@gmail.com> wrote:
>
>
>
> > கர்வ பங்கம் எனும் தலைப்பில்
> > எழுதிக் கொண்டிருக்கிறேன்
>
> > நம் குழுமத்துக்கு அனுப்பலாம் என்று
> > இருக்கிறேன்
> > தாங்கள் அனுமதி கொடுத்தால்
> > அனுப்புகிறேன்
>
> > நம்முடைய மஹாபாரதம் ,இராமாயணம்
> > ,நம்முடைய
> > இதிகாச புராணங்களில்
> > கர்வம் கூடாது என்பதற்கு உதாரணமாக
> > பல கதைகள் இருக்கின்றன
> > என்னுடைய தாயார் ஆர்.கமலம்மாள்
> > அவர்கள் எனக்கு சொல்லி என் மனதில்
> > பதிந்திருக்கும் அவைகளை என்னுடைய
> > பாணியில் எழுதுகிறேன்
> > தங்கள் அனுமதி வேண்டும்
>
> > அன்புடன்
>
> > ஆர்.கிருஷ்்ணமாச்சாரி
> > என்கிற
> > தமிழ்த்தேனீ
> >http://thamizthenee.blogspot.com- Hide quoted text -
>
> - Show quoted text -
ஈக்கும், தேனீக்கும் பாரிய வித்தியாசமுண்டு. ஈ எல்லா இடத்திலும்
உட்காரும். தேனீ சுவையுள்ள இடத்தில் மட்டும் உட்காரும். நீங்கள் தமிழின்
சுவை நாடி அலையும் தேனீ!
அணில் சிறு பிராணி. சேது சமுத்திரத்திட்டமோ பெரிது (நான் சொல்வது இராமர்
காலத்து அணையை:-) ஆயினும் அணில் தன்னளவில் முயன்று சிறு உதவி செய்தது.
அது இறைவனுக்கு உவப்பாக இருந்தது. அந்த அணில் போல் தமிழர்கள்
ஒவ்வொருவரும் மின்தமிழ் இயக்கத்தில் பங்கேற்று உதவ வேண்டும். மின்தமிழ்
அன்பர்கள் "மரபு அணில்" ஆகவும் மாறிவிட்டால் எவ்வளவோ சாதிக்க முடியும்!
நீங்கள் தேனீ மட்டுமல்ல அணிலும் கூட என்று நம்புகிறேன்.
நா.கண்ணன்
அன்புடன்
தமிழ்த்தேனீ
கர்வம் என்பது மனிதருக்கு மட்டுமல்ல
இறைவனுக்கும் வரக் கூடாது
இதற்க்கு ஒரு சுவையான நிகழ்ச்சி
மஹாபாரதத்திலே
தருமன் ,பீமன் அர்ஜுனன் ,நகுலன் ,சகாதேவன்
பஞ்ஜ பாண்டவர்கள் அனைவருமே தருமத்தில் சிறந்தவர்கள்தாம்
ஒவ்வொரு கலையிலே ஒவ்வொருவரும் தனிப்பட்டு சிறப்பாக விளங்கினர்
அதில் சகாதேவன் ஜோதிடக் கலையின் முன்னோடி என்பர்
ஜோதிடக் கலையை முழுமையாக அறிந்தவன் சகாதேவன்
அவனிடத்திலே துரியோதனன் வந்து
என்று போர் செய்தால்
தருமரின் தலை வீழும் என்று கேட்கிறான்
சகாதேவனும் தருமரின் தலை
வீழ நாள் குறித்துக் கொடுக்கிறான்
அதை தருமரிடமே வந்து சொல்லுகிறான்
அண்ணா என்னை மன்னிக்க வேண்டும்
எனக்கு வேறு வழிதெரியவில்லை
,என்னை தருமத்தின் பாதை தவறாது
தாங்கள்தானே வள்ர்த்தீர்கள்
இப்போது உங்கள் தலை வீழவே நான் நாள்
குறித்துக் கொடுக்கும் துர்பாக்ய நிலைமை
எனக்கு ஏற்பட்டதே நான் என்ன செய்வேன் என்று துடிக்கிறான்
அதற்கு தருமன் சகாதேவா என் இனிய சகோதரா
உன் கடமையை நீ செய்தாய் ,இதிலென்ன தவறு
நம்மை தருமம் காப்பாற்றும் நாமெல்லாரும்
கருவிகள் தானே
கவலைப் படாதே என்றார்
செய்தி கிருஷ்ணனுக்கு போயிற்று
கிருஷ்ணன் சகாதேவனிடம்
வந்து என்ன சகாதேவா இப்படி செய்துவிட்டாய்
என்று வினவ
அதற்க்கு கற்ற வித்தையை சன்மானத்துக்கு
விற்கக் கூடாது
யார் கேட்டாலும் கற்ற வித்தையை
பாரபட்ஷம் பாராது அனைவருக்கும்
பயன்படுமாறு பணிவோடு செய்ய வேண்டும்
என்றெல்லாம் எனக்கு தருமர் தானே
உபதேசம் செய்து வளர்த்தார்
நானென்ன செய்வேன் தருமரின் தம்பி நான்
தருமம் காக்கவே அப்படி செய்தேன் என்றான்
கிருஷ்ணனன் நான் என்னடாவென்றால்
தருமத்தை காக்கவேண்டும் ,உங்களைக் காக்க வேண்டுமே
என்கிற கவனத்தோடு காரியம் ஆற்றி வருகிறேன்
இப்படி எனக்கெதிராகவே நீங்கள் காரியமாற்றினால்
நான் எப்படிதருமத்தை காப்பது ……?
சரி யுத்தம் நடக்காமல் இருந்தால்
தருமனின் தலை காக்கப் படும்
யுத்தத்தை நிறுத்த ஒரு வழி சொல்
என்றான் சகாதேவனிடம்
1.யுத்தம் நிற்க்கவேண்டுமானால் த்ரௌபதியின் கூந்தலை
வெட்டிவிடு ஏனென்றால் தன் தொடை மீது வந்து அமரச்சொல்லிய
துரியோதனின் தொடையைப் பிளந்து அந்தக் குருதியால்தான
தன் கூந்தல் முடிப்பேன் என்று சூளுரைத்திருக்கிறாள்
த்ரௌபதி
2. அல்லது பீமனைப் போரிலிருந்து நீக்கிவிடு
ஏனென்றால் அவன்தான் சத்தியம் செய்திருக்கிறான் துரியோதனனின்
தொடையைப்பிளப்பதாக
3. இது இரண்டும் முடியாதென்றால் கிருஷ்ணனாகிய
உன்னைக் கட்டிப் போட்டால் யுத்தம் நின்று விடும்
என்றான் சகாதேவன்
கிருஷ்ணன் சகாதேவனைக் கூர்ந்து பார்த்தபடி
என்னைக் கட்டிப்போட உன்னால் முடியுமா?
என்னுடைய அன்னை யசோதையாலேயெ என்னைக்
கட்டி போடமுடியவில்லை,கயிறின் நீளம் வளர்ந்த கதை தெரியுமா உனக்கு பிறகு
நானே த்ர்மத்துக்கும் அன்புக்கும் கட்டுப்பட்டு
கட்டுப்பட்டேன் தெரியுமா உனக்கு என்றான் கண்ணன்
முடியும்
அதே தருமத்தின் பெயரால்,அன்பின் பெருமையால்
இதோ உன்னைக் கட்டிவிடுகிறேன் எனறு் கூறிய சகாதேவன்
சம்மணமிட்டு உட்கார்ந்த்து கண்ணை மூடி மதைத்திறந்து
ஆத்மசொருபத்தைக் தியானத்தால் கவர்ந்து
கண்ணனை தன் அன்பெனும் சக்தியை ப்ரயோகித்து
பக்தி என்னும் கயிறால் கண்ணனைக் கட்டிப் போட்டான்
கண்னன் திகைத்தான் தானே நினைத்தாலும் பக்தன் கட்டு
அறுக்க முடியாத கட்டாயிற்றே
அந்தக் கட்டிலிருந்து மீளமுடியாமல் தவித்து,
சகாதேவா
உன் பக்தியின் முன்னால் நான் தோற்றுப் போனேன
தயவு செய்து என்னை இந்த இக்கட்டிலிருந்து
இக் கட்டிலிருந்து் என்னை விடுவித்து விடு
என்று இரைஞ்ஜினான் இறைவன் கண்ணன்
பரமாத்மாவுக்கேஅந்த கதி என்றால்
நாம் எம்மாத்திரம்
அன்புடன்
தமிழ்த்தேனீ
> கண்னன் திகைத்தான் தானே நினைத்தாலும் பக்தன் கட்டு
> அறுக்க முடியாத கட்டாயிற்றே
> அந்தக் கட்டிலிருந்து மீளமுடியாமல் தவித்து,
> சகாதேவா
> உன் பக்தியின் முன்னால் நான் தோற்றுப் போனேன
> தயவு செய்து என்னை இந்த இக்கட்டிலிருந்து
> இக் கட்டிலிருந்து் என்னை விடுவித்து விடு
>
> என்று இரைஞ்ஜினான் இறைவன் கண்ணன்
> பரமாத்மாவுக்கேஅந்த கதி என்றால்
> நாம் எம்மாத்திரம்
>
இதை கர்வம் என்று எப்படிச் சொல்வது? கண்ணன் அன்பிற்குக் கட்டுப்படுகிறான்
என்றால் அது அவனது நீர்மையைக் காட்டுகிறது. இதை அறிந்துதான் மதுரகவி
"கட்டுண்ணுப் பண்ணிய பெரு மாயன்" என்கிறார். அவனை யாரால்
கட்டுவிக்கமுடியும்? அந்த "மயா விநோதங்களை" அறிந்தவர்க்கும்,
அனுபவிப்பவர்க்குமே இது புரியும்.
அலோ!
அன்புடன்
தமிழ்த்தேனீ
On 10월19일, 오후7시21분, "Aravinda Lochanan" <en.amud...@gmail.com> wrote:
கண்ணனையே தன் பக்தி எனும் கட்டுக்குள் கட்டி்ப் போட்ட
சகாதேவனுக்கும் ஒரு நாள் அனுபவம் கர்வம் என்பது வீண் என்று கற்றுத்
தந்தது
அந்த நிகழ்ச்சியைப் பார்ப்போம்
திரு பரமாத்மா கிருஷ்ண பகவானால் அறிவுறுத்தப் பட்டு
கர்ணனிடம் சென்று குந்தி தேவி
தான்தான் அவனுடைய தாய் என்று அறிவிக்கிறாள்
குமுறல், பாசம் ஏக்கம்,தாய்மையை இழந்த பரிதவிப்பு
அத்தனை கலவைகளையும் ஒரு சேர அனுபவித்த
கர்ணன் குந்திதேவியின் மடியில் தன் தலையை வைத்து
சொர்கத்தில் மிதந்து கொண்டிருந்தான்
மகனின் தலையை வாஞ்ஜையோடு
தடவிக் கொடுத்துக் கொண்டிருந்த
குந்தியின் மனம் தாய்மையின் உயர்வில் மூழ்கிக் கொண்டிருந்தது
வெகு நுணுக்கமாக சொல்லுபவர்கள் குந்தி தேவியின் தாய்மை உணர்வு காரணமாக
நெக்குருகிப் போன கர்ணன்
" அம்மா " அப்பாடி எத்துணைக் காலம் கழித்து அந்த முதல் வார்த்தையைதன்
வாயார அழைக்கிறான் கர்ணன்
அம்மா எனக்கு ஒரு வரம் கொடுங்கள்
என்னைப் பெற்றவுடன் உங்கள் சூழ்நிலை என்னைப் பிறிந்தீர்கள்
ஆனால் நான் இறக்கும்போதாவது இந்த உலகதின் அத்தனை உள்ளங்களும் உருகுமாறு
என்னை உங்கள் மடியில் கிடத்திக் கொண்டு கர்ணன் என் மகன் ,என் மகன் எனறு
உலகறிய சொல்லுங்கள் என்று இறைஞ்ஜினான் குந்தி தேவி உணர்ச்சிப்
பெருக்கால் வாக்களித்தாள் அப்படியே செய்வதாக
இது இப்படியே இருக்கட்டும்
கர்ணனுக்கு அப்போதே தெரியும் தான் வயதில் சிரியவனானுலும் 'தன் தாய்
குந்தி தேவிக்கு முன்னரே தான் இறக்கப் போவது
அப்படிப்பட்ட ஒரு தீர்கதரிசி கர்ணன்
அவன் தன்னுடைய தான தர்மங்களின்
பலனை அந்தணர் வேடத்தில்
வந்தது பரம்பொருள்தான் என்றறிந்தே உவகையுடன்
தன் ஆத்மாவை ஜ்யோதியோடு கலக்கச் செய்யும் அந்த அற்புத செயலைச் செய்தான
்மஹாபாரத யுத்தத்தில் கர்ணன்,ஸ்ரீமன்நாரயணனும் அவனுக்கு சொர்கத்தை
அளித்தான்
இறைவனடி சேர்ந்த கர்ணனை தன் மூத்த மகனை
தன் மடியில் போட்டுக்கொண்டு
கதறிக் கொண்டிருக்கிறாள்
குந்திதேவி
திடுக்கிட்டான் சகா தேவன்
ஜ்யோதிடக் கலையில் வல்லவன் தான் என்கிற
நம்பிக்கையில் இருந்த சகாதேவனுக்கு
கர்ணன் குந்திதேவியின் மகன்,தன்னுடைய மூத்த
அண்ணன் கர்ணன் என்கிற உண்மை திடுக்கிட வைத்தது
மஹா ஜோதிடனான தனக்கு ஒரு
அண்ணன் இருப்பதே தெரியவில்லை
என்னும் உணர்வு அவனைக் குன்றிப் போக வைத்தது
அப்போது அவன் தான்எழுதிய ஜ்யோதிடக் கலையின்
ஓலைச் சுவடிகளை
எரித்து விட்டான் ,அதில் மீதம் மிஞ்ஜியதுதான் இன்றும்் பயன் பட்டு
வருகிறது எனறு ஆன்றோர்கள் கூறுவர்
அப்போதைய உன்மையான் ஜோதிடக் கலையினாலேயே
ஒரு சகோதர்ன் இருப்பதைக் கண்டு பிடிக்க முடியவில்ல என்றால்
ஆத்ம சுத்தியே இலாது பணம் சம்பாதிப்பதையே கூறிக்கோளாக கொண்டு தற்போது
ஜ்யோதிடக் கலையை வியாபாரமாக்கிய இந்தக் காலத்தில் ஜ்யோதிடம் எப்படிப்
பலிக்கும் என்பதுதான் என்னுடை சந்தேகம்
அன்புடன்
தமிழ்த்தேனீ
> > அலோ!- Hide quoted text -
> கிருஷ்ணன் சகாதேவனைக் கூர்ந்து பார்த்தபடி
> என்னைக் கட்டிப்போட உன்னால் முடியுமா?
> என்னுடைய அன்னை யசோதையாலேயெ என்னைக்
> கட்டி போடமுடியவில்லை,கயிறின் நீளம் வளர்ந்த கதை தெரியுமா
கயிற்றின் நீளம் எங்கே வளர்ந்தது?
எத்தனை நீளமான கயிறு எடுத்தாலும் நீளம் போதாமல் போயிற்று.
உனக்கு பிறகு
> நானே த்ர்மத்துக்கும் அன்புக்கும் கட்டுப்பட்டு
> கட்டுப்பட்டேன் தெரியுமா உனக்கு என்றான் கண்ணன்
>
ஆக வழியையும் சொல்லிக்கொடுத்துவிட்டான் கண்ணன்.
:-)
திவே
--
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
ராம ராவண யுத்தங்கள் முடிந்து
இனிமையான பட்டாபிஷேக காட்சி
அப்போது எல்லோருமே மகிழ்ச்சியாய் இருந்த வேளையில்
சீதாபிராட்டியார் அனுமனை பார்த்தபடி இருந்தாள்
எல்லோருமே ஏதோ ஒரு காரனத்துக்காக,காரியங்களை செய்தனர் ,ஆனால் இந்த அனுமன்
மட்டும் எந்தப் ப்ரதி பலனையும் எதிர் பாராமல் ராமனுக்காகவும் தனக்காகவும்
உழைத்தானே
இவனுக்கு என்ன பரிசளிப்பது,எதைக் கொடுத்தால் தகும் ,என்று யோசித்து தான்
அணிந்திருந்த
முத்து மலையைக் கழற்றி அனுமன் கழுத்திலே அணிவித்தாள் அன்னை சீதை
உடனே அனுமன் அந்த முத்துமாலையை எடுத்து
ஒவ்வொரு முத்தாக கடித்துப் பார்க்க ஆரம்பித்தான்
சீதைக்கு ஒரே கோபம் தான் எவ்வளவு உயரிய பொருள் என்று நினைத்து அணிவித்த
முத்துமாலையின் மதிப்பு தெரியாமல் தன்னுடைய
வானர புத்தியைக் காண்பித்துவிட்டானே அனுமன் என்று வேதனைப் பட்டாள் சீதை
அவளைத் திரும்பிப் பார்த்த ராமன்
அனுமனிடம் இவ்வாரு செய்வது ஞாயமா என்று வினவ அதற்கு மன்னிக்கவேண்டும்
அன்னை கொடுத்த முத்துமாலையை நான் மதிக்கிறேன்,இருந்தாலும் ஏதாவதொரு
முத்தில் என்னுடைய ராம நாமத்தின் ருசி இருக்கிறதா என்றுதான் கடித்துப்
பார்த்தேன் என்றான் அனுமன்
சீதை வெட்கித் தலை குனிந்தாள்
ராமநாம ருசி வேரு எதிலும் வருமா......?
எந்த ருசி ரா ராமா ஏமி ருசிரா
த்யாகப்ரும்மத்தின் திருப்பாதம் பணிந்து
ராம நாமத்தை பாடி உய்யும் வழி காண்போம்
ஸ்ரீ ராமன் தன் பங்குக்கு அனுமனுக்கு ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும்
என்று எண்ணி
அனுமனை அருகே அழைத்து அவனை அப்படியே கட்டிக் கொண்டு ,ஆலிங்கம செய்து
கொண்டாராம்
அதுதான் காடாலிங்கனம் ,இந்தக் காடாலிங்கனம் மிகச் சிலரே
பெற்றிருக்கின்றனர்,
குகன் , விபீஷனன் போன்ற நிகரில்லா பக்தர்கள் மட்டுமே அடைந்த்த
ஆலிங்கனதைப்,பெற்ற
அனுமன் சிறஞ்ஜிவி அல்லவோ
அந்தப் பேரு பெற்ற அனுமனை தினமும் துதிப்போம்
" அசாத்யஸ் சாதகஸ் ஸ்வாமின்
அஸாத்யம் தவகிம் வத:
ராம தூத க்ருபா ஸிந்தோ
மத் கார்யம் ஸாதயப் ப்ரபோ:"
அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
> > - Show quoted text -- Hide quoted text -
மாற்றாந்தாயானுலும் அவளும் தான் அவதரித்த நோக்கத்துக்கு்
ஒரு கருவியே என்றுணர்ந்திருந்த ஸ்ரீராமன் அவளுக்கு தன் தந்தை கொடுத்த
வாக்குறுதியை நிறைவேற்ற கானகம் ஏகினான்
கூடவே லக்ஷ்மணன் தன்னுடைய மனைவியயும் பிறிந்து
அண்ணல் ஸ்ரீராமனுடன் தானும் கானகம் சென்ற லக்ஷ்மணன்
அப்படிப்பட்ட லக்ஷ்மணன் அன்ணணின் மேல் கொண்ட பக்தி
அளவிட இயலாதது ஆனால் லக்ஷ்மணனுக்கு கோபம் அதிகம்
ஆதிசேஷனின் அம்சமல்லவா
க்கனகத்தில் ஸ்ரீ ராமன் இளைப்பாறிக் கொண்டிருக்கிறான்
சில தூதுவர்கள் வந்து பரதன் ஒரு பெரிய மக்கள்
கூட்டத்தோடு வந்து கொண்டிருக்கிறான்
என்று சேதி சொன்னார்கள்
உடனே லக்ஷ்மணன் எட்டிப் பார்த்தான்
லக்ஷ்மணனுக்கு கோபம் தலைக்கேறியது
ஸ்ரீ ராமனிடம் வந்து அண்ணா இது என்ன நியாயம்
நாம்தான் ராஜ்ஜியத்தையே விட்டு விட்டு கானகம் ஏகிவிட்டோமே
நாம் உயிரோடு இருந்்தால் மீண்டும் ராஜ்ஜியத்தை
பரதனிடமிருந்துவாங்கிக் கொள்வோமோ என்கிற
பயத்தால் பரதன் உங்களை அழிக்க வருகிறான
என்று ஆவேசப் பட்ட லக்ஷ்மணனை
ஸ்ரீ ராமன் அமைதிப் படுத்தி
லக்ஷ்மணா கோபம் கொள்்ளாதே
சற்றுப் பொறு என்றார்
பரதன் வருகிறான் அழுத கண்ணும்
சிறமேற் கூப்பிய கைகளால்
தொழுத வண்ணம் ஸ்ரீ ராமனுக்கு எதிரே வந்து
அண்ணா நீங்கள் இப்படி செய்யலாமா நான்
என்ன குற்றம் செய்தேன்
மூத்தவர் நீங்கள் இருக்க நான் எப்படி நாடாளுவேன்
என் தாய் ஒரு அறிவிலி அவள் சொல்வதக்
கேட்காது தாங்கள் மீண்டும்
நாட்டுக்கு வரவேண்டும் என்று தொழுதான் பரதன் ,
லக்ஷ்மணனை திரும்பி ஒரு பார்வை பார்த்தான்
ஸ்ரீ ராமன் லக்ஷ்மணன் தலை குனிந்தான்
அண்ணா என்னை மன்னித்துவிடுங்கள்
ஆத்திரத்தால் அறிவிழந்து போனேன் என்று
பார்வையாதாலேயே மன்னிப்பு கேட்டான் லக்ஷ்மணன்
பரதனை கட்டித் தழுவிய ராமன் பரதா தாய் சொல் கேள், தந்தை சொல் மிக்க
மந்திரமில்லை எனறெல்லாம்
படித்து வளர்ந்தவர் தாமே நாமெல்லாம்
நான் சொல்வதைக் கேள் பதிநான்கு வருடங்கள்
வனவாசத்தை முடித்து விட்டுத்தான் வருவேன் நான்
அதுவரை ராஜ்ய பரிபாலனம் செய்ய வேண்டியது
பரதனின் கடமை என்று உணர்த்தினான் ஸ்ரீராமன்
பரதன , அண்ணா தங்கள் பாதுகைகளை தாருங்கள்
அரசுக் கட்டிலில் உங்கள் பாதுகைகளை
வைத்து் நான் ராஜ்ஜியத்தை பார்த்துக் கொள்கிறேன்
ஆனால் பதினான்கு வருடங்கள்
முடிந்து ஒரு நொடியும் உயிர் தறியேன்
நீங்கள் வந்து ராஜ்ய பரிபாலனத்தை ஏறறு்க்
கொள்ளவேண்டும் என்று தொழுதான் பரதன்
அதனால்தான் ஆதிசேஷனாக இருந்தாலும்
லக்ஷ்மணனுக்கு கிடைக்காத
பட்டம் பரதனுக்கு கிடைத்தது
ஆம் பரதாழ்வார் என்னும் பட்டம் பரதனுக்கு கிடைத்தது
இறைவன் எப்போதுமே தன்னை
மதிக்காதவனைக் கூட மன்னித்துவிடுவான்
ஆனால் தன் அடியார்களை மதிக்காதவர்களை
மன்னிக்கவே மாட்டான்
அதனால்தான் பாகவர்களுடைய மனம்
புண்படும்படி பேசக் கூடாது
என்று பெரியவர்கள் சொல்லுவர்
கர்வமும் கூடாது விணான கோபமும் கூடாது என்பதற்கு
இது ஒரு நல்ல படிப்பினை
அன்புடன்
தமிழ்த்தேனீ
> ...
>
> read more »- Hide quoted text -
> ஆத்ம சுத்தியே இலாது பணம் சம்பாதிப்பதையே கூறிக்கோளாக கொண்டு தற்போது
> ஜ்யோதிடக் கலையை வியாபாரமாக்கிய இந்தக் காலத்தில் ஜ்யோதிடம் எப்படிப்
> பலிக்கும் என்பதுதான் என்னுடை சந்தேகம்
உண்மைதான்.
ஜோதிஷம் பலிக்க நிறைய தெய்வ பலம் தேவை- பூஜைகள், ஹோமங்கள், ஜபங்கள்...
பத்துடை யடியவர்க் கெளியவன்; பிறர்களுக்கரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும்நம் அரும்பெற லடிகள்
மத்துறு கடைவெண்ணெய் களவினில்உரவிடை யாப்புண்டு
எத்திறம்? உரலினோ டிணைந்திருந் தேங்கிய எளிவே!
திருவாய்மொழி