உலகத் தாய்மொழி நாள் - 2021

59 views
Skip to first unread message

தேமொழி

unread,
Feb 20, 2021, 9:50:30 PM2/20/21
to மின்தமிழ்

எவ்வளவு உணர்ச்சிமயமாகப் பேசினாலும் எழுதினாலும் அன்னை, தாய் என்ற சொற்களெல்லாம் பின்னால் வந்தவைதான். முதலில் உருவான சொல் அம்மா. அதற்கும் முன்பாக முளைத்தது ம்மா, மா, மம்மா என்ற சொற்கள் அல்லது ஒலிக்குறிப்புகள்தான். அந்தச் சொற்கள் பொதுவாகத் தாயைக் குறிப்பதாக எடுத்துக்கொள்ளப்பட்டு, தாய், தாய்மை தொடர்பான உணர்ச்சிமயக் கருத்துகளும் கதைகளும் கவிதைகளும் நிறையவே கட்டப்பட்டிருக்கின்றன. ஆனால் ம்மா, மா, மம், மம்மா போன்ற ஒலிகளை முதன் முதலில் வெளிப்படுத்தத் தொடங்குகிற குழந்தை அறிவிப்பது  தனது உயிர்வாழ்வுக்கான உணவுத் தேவையைத்தான். உணவு கிடைத்தபின் அந்த மகிழ்ச்சியையும் அதே ஒலிகளால் தெரிவிக்கிறது.  தாயிடமிருந்தே முதல் உணவு கிடைப்பதால் நாளாக நாளாக ம்மா என்றால் அம்மாவைக் குறிப்பதாகிறது.

உலகின் மூத்த மொழிகள், மிக இளைய மொழிகள் அனைத்திலும் ஆகப் பெரும்பாலும் தாயைக் குறிப்பிடுவதற்கு மா, அம்மா, மம், மம்மா, மம்மி என்ற சொற்கள் அமைந்திருப்பது தற்செயலானது அல்ல. மனித இனப் பரிணாமத்திலிருந்து மானுடப் பண்பாட்டு வளர்ச்சி வரையிலான வரலாற்றோடு இணைந்தது அது.

புதிதாகப் பிறந்த குழந்தையின் முதல் மொழி அழுகையொலிதான். பசி, வலி, தாய் முகம் காணும் ஆசை, ஈரத்தில் கிடக்கும் இடைஞ்சல் என தனது உணர்வுகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு விதமான அழுகையில் வெளிப்படுத்தத் தெரிந்துகொள்கிறது. தவழும் பிள்ளையின் வாயிலிருந்து வருகிற மா, தா, ப்ர்ர், ஆஆஆ, ஊஊஊ போன்ற ஒலிகளைப் பெற்றோரும் மற்றோரும் திரும்பிச் சொல்கிறபோது தனது மொழியில் பேசுகிறார்கள் என்று ஒரு சொந்தத்தை உணர்கிறது. தான் பார்க்கிற, உணர்கிற எல்லாப் பொருள்களுக்கும் அதே ஒலிகள்தான். படிப்படியாக எதை எந்தெந்தச் சொற்களால் சொல்ல வேண்டும் என்று குடும்பத்தாலும் சுற்றத்தாலும் மொழி கற்றுத்தரப்படுகிறது.

ம்மா என்று தொடங்கி அம்மா எனத் தொடர்ந்து கற்றுக்கொள்வது தாய்மொழியாகிறது. குழந்தைக்குப் பூமியில் எல்லாமே சமம்தான். பூமியின் குழந்தைகளாகிய மனிதர்களுக்கு உலகின் எல்லா மொழிகளும் சமம்தான். தேசத்தின் குழந்தைகளாகிய குடிமக்களுக்கு நாட்டின் எல்லா மொழிகளும் சமம்தான்.

அரசியல், அதிகாரம், ஆதிக்கம், வணிகம், சந்தை என்று எந்த வழியிலும் எந்த மொழியும் எவர் மீதும் திணிக்கப்படக்கூடாது. அது உரிமைக்கு எதிரானது மட்டுமல்ல இயற்கைக்கு முரணானதும் கூட.

இந்தச் சிந்தனைப் பகிர்வோடு –
இன்று பிப்ரவரி 21 -
உலக தாய்மொழி தின வாழ்த்துகள். 

வரலாற்றுக் குறிப்பு: 1948ல் அன்றைய பாகிஸ்தான் அரசு நாடு முழுமைக்கும் ஒரே தேசிய மொழி உருது என அறிவித்தது. அதை எதிர்த்து, தங்களுடைய தாய்மொழியான வங்காளத்தை இணை ஆட்சிமொழியாக அறிவிக்க வலியுறுத்தி கிழக்கு பாகிஸ்தான் மக்கள் மதப் பாகுபாடின்றிப் போராடினார்கள். அதே ஆண்டின் பிப்ரவரி 21ல் டாக்கா நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பல்கலைக்கழக மாணவர்கள் 4 பேர் பலியானார்கள். போராட்டம் பலியாகிவிடாத நிலையில் 1956ல் வங்காளம் ஆட்சிமொழியாக அங்கீகரிக்கப்பட்டது. அடிப்படையான வேறு பிரச்சினைகளுக்காகவும் ஒடுக்குமுறைகளை எதிர்த்தும் கிளர்ந்த பேரெழுச்சியின் விளைச்சலாக கிழக்கு பாகிஸ்தான் 1971ல் பங்களாதேஷ் நாடாக உருவெடுத்தது. பிப்ரவரி 21ம் நாளை, உலக மக்கள் பேசுகிற அனைத்து மொழிகளையும் பாதுகாத்து வளர்க்கிற இலக்கோடு, உலக தாய்மொழி தினமாக ஐக்கிய நாடுகள் சபை தீர்மானித்து 2008ம் ஆண்டிலிருந்து கடைப்பிடிக்கப்படுகிறது.

-அ. குமரேசன்

தேமொழி

unread,
Feb 20, 2021, 9:53:25 PM2/20/21
to மின்தமிழ்

இருளினை வறுமை நோயை இடறுவேன் -என்னுடல் மேல்
உருள்கின்ற பகைக் குன்றை, நான்
ஒருவனே உதிர்ப்பேன் -நீயோ
கருமான் செய் படையின் வீடு
நானங்கோர் மறவன் - கன்னல்
பொருள் தரும் தமிழே
நீ ஓர் பூக்காடு!!
நானோர் தும்பி

 --- பாவேந்தர்

தேமொழி

unread,
Feb 20, 2021, 10:09:08 PM2/20/21
to மின்தமிழ்
International Mother Language Day 2021-3.JPG

இணையவழி கூடல் - நேரம் - இன்று காலை  11:00 மணி
---------

தேமொழி

unread,
Feb 20, 2021, 10:10:22 PM2/20/21
to மின்தமிழ்
International Mother Language Day 2021-3.JPG

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்
தமிழியல் மற்றும் பண்பாட்டுப் புலம் 
சென்னை -15

 உலகத் தாய்மொழி நாள்  (பன்னாட்டு இணையவழி உரையரங்கம்)

நாள்:   21-02- 2021 
நேரம்: .காலை 11:00 

தலைமை : 
பேராசிரியர் 
கோ. பார்த்தசாரதி அவர்கள்,
துணைவேந்தர்,
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்.

சிறப்புரை :
திரு. பட்டேல் பா. பைரோஸ் அகமது அவர்கள்,
இலக்கியச்  சொற்பொழிவாளர்.

Join Zoom Meeting

Meeting ID: 823 5144 2312
Passcode: tnousotcs

#பங்கேற்பாளர்களுக்கு மின் சான்றிதழ் வழங்கப்படும்

தேமொழி

unread,
Feb 20, 2021, 10:33:22 PM2/20/21
to மின்தமிழ்
நற்றமிழ் நானிலத்தே
சுற்றமும் பெருக்குமே
அற்றமும் அழிக்குமே
உற்றமும் நீயே அருந்தமிழே

பெற்றவளே நீயே
பெருங்குற்றமும் நீக்குமே
கற்றதனால் ஆயபயன்
உற்றதனால் தமிழும்
குன்றாது நிறையுமே

பைந்தமிழ் காக்கும்
பாரதத்திலே அன்னையே
தீஞ்சுவை நீயே 
திகழ்பரதக்கண்டத்திலே

உண்மை வார்த்தையில்
உள்ளொன்றும் புறமொன்றும்
வேறில்லை தூய்மையே
தாய்மையே தமிழே
தூய தமிழ் ஒன்றே
பிறமொழி கலப்புமில்லை

பெருந்தவமே பெருமையே
அருந்தவமே தமிழே 
நீ வாழியவே
போற்றுகிறேன் வணங்குகிறேன்

புலம்பெயரா புலமையே
நீ தருவாய் அன்னையே 
தமிழே தாயே
அருகு போல் நீ வளர்ந்து
அழகு தமிழே வாழியவே!        

தாய் மொழி நாள் வாழ்த்துகள்!

--- பூங்கோதை கனகராஜன்.

தேமொழி

unread,
Feb 20, 2021, 11:12:31 PM2/20/21
to மின்தமிழ்
உலக தாய்மொழி தின சிந்தனைகள்...
==============
(முந்தைய பதிவில் முக்கியமான திருத்தங்களுடன்)
---------------------------

எவ்வளவு உணர்ச்சிமயமாகப் பேசினாலும் எழுதினாலும் அன்னை, தாய் என்ற சொற்களெல்லாம் பின்னால் வந்தவைதான். முதலில் உருவான சொல் அம்மா. அதற்கும் முன்பாக முளைத்தது ம்மா, மா, மம்மா என்ற சொற்கள் அல்லது ஒலிக்குறிப்புகள்தான். அந்தச் சொற்கள் பொதுவாகத் தாயைக் குறிப்பதாக எடுத்துக்கொள்ளப்பட்டு, தாய், தாய்மை தொடர்பான உணர்ச்சிமயக் கருத்துகளும் கதைகளும் கவிதைகளும் நிறையவே கட்டப்பட்டிருக்கின்றன. ஆனால் ம்மா, மா, மம், மம்மா போன்ற ஒலிகளை முதன் முதலில் வெளிப்படுத்தத் தொடங்குகிற குழந்தை அறிவிப்பது  தனது உயிர்வாழ்வுக்கான உணவுத் தேவையைத்தான். உணவு கிடைத்தபின் அந்த மகிழ்ச்சியையும் அதே ஒலிகளால் தெரிவிக்கிறது.  தாயிடமிருந்தே முதல் உணவு கிடைப்பதால் நாளாக நாளாக ம்மா என்றால் அம்மாவைக் குறிப்பதாகிறது.

உலகின் மூத்த மொழிகள், மிக இளைய மொழிகள் அனைத்திலும் ஆகப் பெரும்பாலும் தாயைக் குறிப்பிடுவதற்கு மா, அம்மா, மம், மம்மா, மம்மி என்ற சொற்கள் அமைந்திருப்பது தற்செயலானது அல்ல. மனித இனப் பரிணாமத்திலிருந்து மானுடப் பண்பாட்டு வளர்ச்சி வரையிலான வரலாற்றோடு இணைந்தது அது.

புதிதாகப் பிறந்த குழந்தையின் முதல் மொழி அழுகையொலிதான். பசி, வலி, தாய் முகம் காணும் ஆசை, ஈரத்தில் கிடக்கும் இடைஞ்சல் என தனது உணர்வுகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு விதமான அழுகையில் வெளிப்படுத்தத் தெரிந்துகொள்கிறது. தவழும் பிள்ளையின் வாயிலிருந்து வருகிற மா, தா, ப்ர்ர், ஆஆஆ, ஊஊஊ போன்ற ஒலிகளைப் பெற்றோரும் மற்றோரும் திரும்பிச் சொல்கிறபோது தனது மொழியில் பேசுகிறார்கள் என்று ஒரு சொந்தத்தை உணர்கிறது. தான் பார்க்கிற, உணர்கிற எல்லாப் பொருள்களுக்கும் அதே ஒலிகள்தான். படிப்படியாக எதை எந்தெந்தச் சொற்களால் சொல்ல வேண்டும் என்று குடும்பத்தாலும் சுற்றத்தாலும் மொழி கற்றுத்தரப்படுகிறது.

ம்மா என்று தொடங்கி அம்மா எனத் தொடர்ந்து கற்றுக்கொள்வது தாய்மொழியாகிறது. குழந்தைக்குப் பூமியில் எல்லாமே சமம்தான். பூமியின் குழந்தைகளாகிய மனிதர்களுக்கு உலகின் எல்லா மொழிகளும் சமம்தான். தேசத்தின் குழந்தைகளாகிய குடிமக்களுக்கு நாட்டின் எல்லா மொழிகளும் சமம்தான்.

அரசியல், அதிகாரம், ஆதிக்கம், வணிகம், சந்தை என்று எந்த வழியிலும் எந்த மொழியும் எவர் மீதும் திணிக்கப்படக்கூடாது. அது உரிமைக்கு எதிரானது மட்டுமல்ல இயற்கைக்கு முரணானதும் கூட.

இந்தச் சிந்தனைப் பகிர்வோடு –
இன்று பிப்ரவரி 21 -
உலக தாய்மொழி தின வாழ்த்துகள். 

(வரலாற்றுக் குறிப்பு: 1948ல் அன்றைய பாகிஸ்தான் அரசு நாடு முழுமைக்கும் ஒரே தேசிய மொழி உருது என அறிவித்தது. அதை எதிர்த்து, தங்களுடைய தாய்மொழியான வங்காளத்தை இணை ஆட்சிமொழியாக அறிவிக்க வலியுறுத்தி கிழக்கு பாகிஸ்தான் மக்கள் மதப் பாகுபாடின்றிப் போராடினார்கள். அதே ஆண்டின் பிப்ரவரி 21ல் டாக்கா நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பல்கலைக்கழக மாணவர்கள் 4 பேர் பலியானார்கள். போராட்டம் பலியாகிவிடாத நிலையில் 1956ல் வங்காளம் ஆட்சிமொழியாக அங்கீகரிக்கப்பட்டது. அடிப்படையான வேறு பிரச்சினைகளுக்காகவும் ஒடுக்குமுறைகளை எதிர்த்தும் கிளர்ந்த பேரெழுச்சியின் விளைச்சலாக கிழக்கு பாகிஸ்தான் 1971ல் பங்களாதேஷ் நாடாக உருவெடுத்தது. பிப்ரவரி 21ம் நாளை, உலக மக்கள் பேசுகிற அனைத்து மொழிகளையும் பாதுகாத்து வளர்க்கிற இலக்கோடு, உலக தாய்மொழி தினமாக யுனெஸ்கோ அமைப்பு அறிவித்தது. 2002ல் அதனை  ஐக்கிய நாடுகள் பொதுச் சபை முறைப்படி அங்கீகரித்தது.

கூடுதல் தகவல்: 1930களிலேயே வந்த இந்தித் திணிப்புக்கு எதிராக இங்கே பெரியார் தலைமையில் போராட்டம் நடைபெற்றது 1938 பிப்ரவரி 21ல்தான்.)

-குமரேசன்

On Saturday, February 20, 2021 at 6:50:30 PM UTC-8 தேமொழி wrote:

தேமொழி

unread,
Feb 20, 2021, 11:59:02 PM2/20/21
to மின்தமிழ்
Balakrishnan R
on Friday

தாய்மொழி என்ற தாய்ப்பால்
----------------------------------------------------
ஆட்சி மொழி.
--------------------------
அது
அரண்மனையின் மொழி.
ஆட்டிப் படைக்கும்
ஆதாயம் கொடுக்கும்.
தூக்கி விடும்.
சில நேரம்
தொலைந்தும் விடும்.
பாரசீகம் எங்கே?
ஆலய மொழி
-----------------------
பூசாரிகள்
சாமியிடம்
மறைவாகப் பேசும்
மறைமொழி.
தைரியம் கொடுக்கும்.
தட்சணை கேட்கும்.
"எந்த மாவட்டத்தில்
எல்லோரும் பேசினார்கள்?"
என்றால்
"சாமியே பேசினார்" என்று
சரிக்கட்டும்..
வணிக மொழி.
----+-------------------
ஏற்றுமதி இறக்குமதியைப்
பொறுத்தது
ஏற்ற இறக்கம்.
எடை போடும்.
அளந்து பேசும்.
மகசூலைப் பொறுத்தது
மவுசு.
விலை போனால் வெளிச்சம்.
உண்மையில்
வியாபாரிகள் தான்
பன்மொழியாளர்கள்.
பற்று வரவைப் பொறுத்தது
பற்று.
சிந்துவெளி மொழி எது?
தாய் மொழி
----------------------
தாய் மொழி
என்பது
உண்மையில்
ஒரு
தனிமொழி அல்ல.
தாய்ப்பால் என்பது
தனியான
பால் வகையா?
ஆவின் கன்றுக்கு
ஆவின் பாலென்ன
'ஆவின்பாலா'?
அதன்
அன்னையின் பால்...
தாய் மொழி
என்பது
தாய்ப்பால் போலவே
குருதியின் கொடை.
அது நம்
குரல்வளை.
காதலர் தினம்
பார்த்தா
காதல் வரும்?
ஆனால்
தாய்மொழியே
ஆட்சி மொழியாகவும்
ஆலய மொழியாகவும்
வணிக மொழியாகவும்
வளர்ச்சி பெறும்போது தான்
நிறைவு வரும்!
ஆர். பாலகிருஷ்ணன்

தேமொழி

unread,
Feb 21, 2021, 1:10:07 AM2/21/21
to மின்தமிழ்
உலகத் தாய்மொழி நாள் 
| தாய்மொழி வணக்கப் பாடல்
|தவ சஜிதரன்

தேமொழி

unread,
Feb 21, 2021, 1:19:10 AM2/21/21
to மின்தமிழ்

உலகத் தாய்மொழி தின உரை: மகா தமிழ்
திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரிக் கலைப்புல முதன்மையர் முனைவர் சௌந்தர மகாதேவன்

தேமொழி

unread,
Feb 21, 2021, 1:22:28 AM2/21/21
to மின்தமிழ்
International Mother Language Day 2021.JPG 

*** இந்தியா நேரம் - இரவு 8:30 ***

--------

தேமொழி

unread,
Feb 21, 2021, 1:43:06 AM2/21/21
to மின்தமிழ்
International Mother Language Day 2021-2.JPG
International Mother Language Day 2021-2a.JPG
*** இந்தியா நேரம் - இரவு 10:30 மணிக்கு ***
_______________________________________________________________________

தேமொழி

unread,
Feb 24, 2021, 4:14:37 PM2/24/21
to மின்தமிழ்

valaitamil.JPG

முந்தைய நிகழ்வுகளின் காணொளிகள்

உலகத் தாய்மொழி நாள், 21 பிப்ரவரி | தாய்மொழி நாள் கருத்துரை - 

இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

https://youtu.be/qNWc86iV33A

---

உலகத் தாய்மொழி நாள், 21 பிப்ரவரி | தாய்மொழி நாள் கருத்துரை - 

மருத்துவர் சுந்தரேசன் சம்பந்தம், USA

https://youtu.be/U8mTraRV4bI

---

தாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன? - 3 | 

சித்தமருத்துவர், பேராசிரியர் திரு. கோ.அன்புகணபதி

https://youtu.be/sV4urm7xiJ8

---

தாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன? - 4 | 

திரு. G. பாலச்சந்திரன் IAS (Retd)

https://youtu.be/VqxsLuwkxrM

--------------------------------------------------
Reply all
Reply to author
Forward
0 new messages