ராஜாஜியைப் பற்றிய தெளிவான கட்டுரை

6 views
Skip to first unread message

விஜயராகவன்

unread,
Dec 28, 2010, 8:32:00 AM12/28/10
to மின்தமிழ்
கடந்த 50 வருட தமிழக அரசியல் பிரச்சாரங்களில் மிகவும் தூற்றப் பட்டவர்
ராஜாஜி. ராஜாஜி என்றவுடன் அந்த பிரச்சாரத்தை அமிழ்தம் என நினைக்கும்
நபர்களிடையே , முதலில் வரும் எண்ணம் `குலக்கல்வி` - ராஜாஜி-குலக்கல்வி
இரண்டையும் வெற்றிகரமாக பிரச்சார்கர்கள் முடிச்சு போட்டனர். ஆனால் உண்மை
என்ன ?

ஜெயமோகனின் இந்தக் கட்டுரை உண்மைகளை பார்க்கின்றது.

http://www.jeyamohan.in/?p=11070
மபொசி,காமராஜ், ராஜாஜி..


காமராஜும் அப்படி தூற்றபட்டவர், ஆனால் சமயம் வரும்போது
`பச்சைத்தமிழ்ராகி` விடுவார் - அதாவது பிரசாரங்களில்.

முதல் உண்மை - குலக்கல்வி என ஒரு திட்டமும் இல்லை. 1953களில் ராஜாஜியின்
அரசு MODIFIED SCHEME OF ELEMENTARY EDUCATION MADRAS (PLACED BEFORE
THE TWENTIETH MEETING). என்பதை தீவிரமாக யோசித்தது.

இரண்டாவது உண்மை - அதற்கும் குலம், பரம்பரைக்கும் ஒரு தொடர்பும் இல்லை.
அந்த திட்டம் படி முதநிலைப் பள்ளி மாணவர்கள் பாதி நாள் - அதாவது 3 மணிகள்
- பள்ளியில் பள்ளி ஆசிரியருடன் இருப்பர். மற்ற பாதி பெற்றொரின் தொழிலில்
உதவி செய்வர், அல்லது கற்றுக் கொள்வர். அப்படி பெற்றோருடன் இருக்க
முடியாதவர், ஊரில் உள்ள மற்ற தொழிலாலிகளுடன் - அதாவது குடியானவர்,
தச்சர், மேஸ்த்ரி - பாதி நாளை கழித்து தொலிகளுக்கு மதிப்பை கற்பர்.

http://www.education.nic.in/cd50years/g/12/28/12280V01.htm
http://www.education.nic.in/cd50years/g/12/28/12281301.htm

மூன்றாவது உண்மை - அதற்கு மெட்ராஸ் லெஜிஸ்லேடிவ் கௌன்ஸிலில் நல்ல ஆதரவு
இருந்தது. பல மாத ஈவேரா/அண்ணாதுரை பிரச்சாரங்களுக்கு பிறகு, மக்கள்
அவையில் அந்த திட்டத்தை கைவிடும் தீர்மானம் வெற்றி அடைய வில்லை

http://www.assembly.tn.gov.in/archive/Resumes/review_01assly/table16.pdf

Resolution*21. dt 29th July 1953.
Sri. K.P. Gopalan’s amendment to the motion on the modified Scheme of
Elementary Education that it be dropped.
Yes 138
No 138

தீர்மானம் வெற்றி அடைய வில்லை ஆதலால் , அதற்கு அடுத்த தீர்மானம் -
திட்டத்தை ஒரு கமிட்டி பரிசீலிப்பது - ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி
பெற்றது

Resolution 22. dt 29th July 1953.
Sri.K. R. Viswanatham’s amendment to the Motion on the Modified Scheme
of Elementary Education, Viz., that the Scheme be referred to a
Committee of Experts.
ஆம் 139
இல்லை 137


இந்த மாற்றுக்கல்வித் திட்டம் பண நெருக்கடியினால் செய்யப்பட்டது. மேலும்
மாணவர்கள் ஆபீஸ் வேலை -ஒயிட் காலர் ஜாப் - மட்டுமின்றி எல்லா
தொழில்களுக்கு மதிப்பு தர வேண்டும் என்ற குறிக்கோளில் செய்யபட்டது.

7. The most essential part of the scheme is the reduction to the pupil
of the school-day from one of five hours to three. The pupils will be
divided into two batches and the schools will function in two sessions
of three hours each; each batch will attend only one session. In this
State this reduction of school hours is not entirely an innovation. As
far back as 1939 the Education Department permitted pupils belonging
to Scheduled Classes and girls in standards III, IV and V to attend
school only for three hours a day so that they might help the family
during the rest of the day. The idea was to encourage the enrolment of
pupils belonging to economically Backward and Scheduled Classes. This
new scheme has been introduced in all the non-municipal areas in the
State from the year 1953-54 and there are about 35,000 schools working
under this scheme as against the total of 38,687 schools in the whole
State.

8. The need to maintain the standard of instruction under the Modified
Scheme in tool subjects has at the same time been kept in view. The
scheme does not reduce the content in any of the subjects like
Language, Elementary Mathematics, Nature Study, Drawing, History,
Geography, Hygiene, Civics, Moral Instruction and Singing. These
subjects will be taught for the same duration as before and the same
syllabus will be followed. There will be six working days of ,four
periods each under the new arrangement, adding up to 24 periods in
all. Twenty-one periods of 40 minutes each per week will be given to
these subjects as hitherto, leaving three periods to be used at the
discretion of the headmasters.

9. As already stated, in 60 per cent. of schools there are as many
teachers as there are standards. The Modified Scheme reduces plural
class teaching considerably. It saves pupils from the weariness of
waiting while the teacher is occupied with another class. The evils
arising out of the inadequacy and unsuitability of school buildings
are reduced when the numbers of pupils attending school at a time is
smaller.

10. An integral part of the scheme is that the half day during which
the pupils will not attend school should be utilised for securing the
objectives contemplated by the Basic system, namely, learning through
living and training in self-reliance. One of the accepted misfortunes
of pupils who have gone through a school course is their

268

dependance on securing what in the West is known as a "White-Collar
job". If they fail to secure such an appointment they are practically
incapable of earning a livelihood; any increase in the number of such
persons will be a national disaster. The Scheme therefore contemplates
that while the pupils are at school they will be concurrently in touch
with other ways of living and avoid looking down on them. The best
persons who can preserve for pupils this outlook and under the best
possible conditions are their parents who, are engaged in some kind of
work for their livelihood. Where pupils have such parents the school
can safely leave them in the hands of the parents. Put it is vital
that not only these children but every- school-going child should
develop this outlook; otherwise those that are not subject to this
discipline will not only suffer themselves but are liable to disturb
the minds of others, making the latter feel that they are in some
manner inferior. The scheme, therefore, contemplates that children who
cannot join their parents should be attached to a farmer or a
craftsman in the village during the half day when they don't attend
school. The pupils will watch the work that is being carried on and
would be encouraged to participate progressively in the same in
accordance with their aptitude. There is no rigidity about their
attendance or work. The children are not obliged to be at any
particular place for any fixed number of hours. The nature and amount
of activity is a matter of the aptitude, the capacity and the needs of
the children themselves.

11. To summarise, the following are some of the advantages. expected
to result from the scheme:

(1) Shortened school-day for the pupils will benefit their body and
mind without affecting their knowledge.

(2) Minimising the evils of bad and inadequate school buildings.

(3) Minimising plural class teaching.

(4) Immediate possibility of admission of a large number of pupils
into existing schools while the State plans for new schools and better
buildings in coming years.

(5) Greater chance of poor children, who have to assist their parents
because of Poverty, coming to schools.

(6) New orientation to the advantage of the individual and the
nation.

(7) Avoiding the need for any large sum of money which in any case is
not now available.

விஜயராகவன்


.

விஜயராகவன்

unread,
Dec 29, 2010, 3:59:07 PM12/29/10
to மின்தமிழ்
ஜெயமோகனுக்கு அந்த கட்டுரையை பற்றிய என் கடிதத்தையும் அவர் பிரசுரித்து
விட்டார்.


http://www.jeyamohan.in/?p=11164

திரு ஜெயமோகன் அவர்களுக்கு

தங்கள் வலையில் படித்த இந்த கட்டுரை பெரும் சந்தோஷத்தை கொடுத்தது.

50 வருடங்களாக காமராஜ் ஓரளவும், ராஜாஜி முழு அளவும் திராவிட கட்சி
பிரச்சாரங்களால் பெரிய வில்லன்களாகவே சித்தரிக்கப் பட்டுள்ளனர். உங்கள்
கட்டுரை தற்காலத்தில் திராவிட பிரச்சாரத்திரைகளை நீக்கி, அந்தக்கால
ஆவணங்கள் மூலம் அந்த மனிதர்களின் சாதனைகளையும், தோல்விகளையும்
பார்ப்பதில் முதல் முயற்சி. இது இன்னும் சிந்தனையாளர்களால்
முன்னெடுத்துச் செல்லப்படுமானால் தமிழ்நாடு `இருட்டு யுகத்திலிருந்து`
வெளியே வரலாம்.

திராவிட பிரச்சாரகர்கள், ஹிஸ்டெரிகலாக, ராஜாஜி `குலக் கல்வி` என்பதை
ஆரம்பித்து வருணஸ்ரம தர்மத்தை திராவிடர்கள் மேல் திணிக்க
முயற்சித்ததாகவும், திக/திமுக கட்சிகள் அந்த வர்ணாசிரம சதியிலிருந்து
தமிழர்களை மீட்டதாகவும் கட்டுக்கதை இடுகிறனர். இது வரை நான் அப்படிப்பட்ட
பிரசாரகர்களை உங்கள் ஆதாரம் – அதாவது அரசு ஆணைகள் – யாவை என்றால்
யாராலும் கொடுக்க முடியவில்லை. உங்கள் வலைத் தளத்தில் முதன் முறையாக
அக்கால அரசு சிந்தனை/திட்டம் பற்றி படித்ததில் மகிழ்ச்சி. மேலும் ராஜாஜி
மாகாண பிரிவினை போது , சென்னை தமிழ்நாட்டில் இருக்க வெற்றிகரமாக
முயன்றதையும் சுட்டிக் காட்டி இருப்பது நல்லது.

ராஜாஜி ஒரு காம்ளிகேடட் ஆசாமி, அதே சமயம் நேரமையான அரசியலையும்
கடைப்பிடித்தார். அதற்கு 2 உதாரணங்கள் 1942ல், காங்கிரஸ் முஸ்லிம் லீக்/
ஜின்னாவுடன் பேசவே மாட்டேன் என பிடிவாதமாக இருந்தது. அப்போது ராஜாஜி
காங்கிரஸில் தனியராக, நமக்கு பிடிக்குமோ இல்லையோ, முஸ்லிம் லீக்/ ஜின்னா
பெரிய அரசியல் சக்தி, அத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி சுமுக உறவுக்கு வர
வேண்டும் என்றார். அதற்காக அவர் மேல் காங்கிரஸ்காரர்கள் முட்டைகளை
வீசினர். ஆனால் சில வருடங்களில் காங்கிரஸ் வலுவடைந்த முஸ்லிம் லீகுடன்
பேச்சு வார்த்தை நடத்த நிர்பந்தம் ஏற்பட்டது.

அதே போல், 1950ல், சோஷலிசம் தவறு, தனியார் உற்பத்தியை ஊக்குவிக்க
வேண்டும் என்று வெளிப்படையாக கொள்கை செய்தார். அவருடைய பொருளாதார
எண்ணங்களை ஏற்க்காலும், ஏற்க்காவிட்டாலும் , அவர் வெளிப்படையாக கொள்கைகளை
வைத்து அதை தன் அரசியலின் அடிப்படையாக செய்ததை பாராட்ட வேண்டும். அது
தற்போது சோஷலிசம், மக்கள் நலம் என வேஷம் போட்டு, தன் குடும்ப நலனுக்கு
மட்டும் தனியார் முதலீட்டை திருட்டுத் தனமாக முன் வைப்பதற்கு
எதிர்மாறானது.

நீங்கள் சொல்லும் போல், அவர் `பழைய உலக மனிதர்` அதே சமயம் அவரிடம்
நேர்மையும், முன் பார்வையும் இருந்தது. அது கடந்த 40 வருடங்களில்
கிடைக்காதது

மதிப்புடன்

வன்பாக்கம் விஜயராகவன்


On Dec 28, 1:32 pm, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> கடந்த 50 வருட தமிழக அரசியல் பிரச்சாரங்களில் மிகவும் தூற்றப் பட்டவர்
> ராஜாஜி. ராஜாஜி என்றவுடன் அந்த பிரச்சாரத்தை அமிழ்தம் என நினைக்கும்
> நபர்களிடையே , முதலில் வரும் எண்ணம் `குலக்கல்வி` - ராஜாஜி-குலக்கல்வி
> இரண்டையும் வெற்றிகரமாக பிரச்சார்கர்கள் முடிச்சு போட்டனர். ஆனால் உண்மை
> என்ன ?
>
> ஜெயமோகனின் இந்தக் கட்டுரை உண்மைகளை பார்க்கின்றது.
>
> http://www.jeyamohan.in/?p=11070
> மபொசி,காமராஜ், ராஜாஜி..
>
> காமராஜும் அப்படி தூற்றபட்டவர், ஆனால் சமயம் வரும்போது
> `பச்சைத்தமிழ்ராகி` விடுவார் - அதாவது பிரசாரங்களில்.
>
> முதல் உண்மை - குலக்கல்வி என ஒரு திட்டமும் இல்லை. 1953களில் ராஜாஜியின்
> அரசு MODIFIED SCHEME OF ELEMENTARY  EDUCATION MADRAS (PLACED BEFORE
> THE TWENTIETH MEETING). என்பதை தீவிரமாக யோசித்தது.
>
> இரண்டாவது உண்மை - அதற்கும் குலம், பரம்பரைக்கும் ஒரு தொடர்பும் இல்லை.
> அந்த திட்டம் படி முதநிலைப் பள்ளி மாணவர்கள் பாதி நாள் - அதாவது 3 மணிகள்
> - பள்ளியில் பள்ளி ஆசிரியருடன் இருப்பர். மற்ற பாதி பெற்றொரின் தொழிலில்
> உதவி செய்வர், அல்லது கற்றுக் கொள்வர். அப்படி பெற்றோருடன் இருக்க
> முடியாதவர், ஊரில் உள்ள மற்ற தொழிலாலிகளுடன் - அதாவது குடியானவர்,
> தச்சர், மேஸ்த்ரி - பாதி நாளை கழித்து தொலிகளுக்கு மதிப்பை கற்பர்.
>

> http://www.education.nic.in/cd50years/g/12/28/12280V01.htmhttp://www.education.nic.in/cd50years/g/12/28/12281301.htm

செல்வன்

unread,
Dec 31, 2010, 2:35:13 AM12/31/10
to mint...@googlegroups.com
ஜெயமோகனின் இந்த கட்டுரையை இன்னொரு குழுமத்தில் இட்டேன்.சுமார் 100 மடல்கள் தாண்டி சூடான விவாதம் நடக்கிறது:-)

லின்க்

http://bit.ly/hqfVTY




--
செல்வன்

இந்திய நாடு என் வீடு 
இந்தியன் என்பது என் பேரு


www.holyox.blogspot.com


வில்லன் .

unread,
Dec 31, 2010, 8:04:28 AM12/31/10
to mint...@googlegroups.com
எனக்கு தெரிஞ்சி அங்க மட்டும்தான் மறுப்பு சொல்லி இழை தொடருதுனு நினைக்கிறேன்,

மத்தபடி பல குழுமத்துல ஜஸ்ட் கட் & பேஸ்ட் மட்டும் போயிருக்கு.

இதை குலக்கல்வி திட்டம்னு ஏத்துக்க முடியலைனு சொன்னாலும் இதை ஒரு மோசமான தவறான திட்டம் என்பதைதான் பலர் சொல்றாங்க.

அந்த பருலேக்கர் அறிக்கையின் சாரம்சம் கிடைச்சா திட்டத்தினைப்பற்றி ஒரு தெளிவு கிடைக்கும்னு நினைக்கிறேன்.

2010/12/31 செல்வன் <hol...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages