கணையாழி இணைய இதழ் இன்று முதல் வாசகர்களுக்காக..!

979 views
Skip to first unread message

Subashini Tremmel

unread,
Jul 6, 2012, 3:52:26 PM7/6/12
to மின்தமிழ், Subashini Tremmel, Ma Ra
நண்பர்களே,

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மீண்டும் கணையாழி அச்சு இதழாக வெளிவரத் தொடங்கியமை இலக்கிய உலகத்தைச் சேர்ந்தவர்கள் பலருக்கும் மகிழ்ச்சியளித்த ஒரு விஷயமாகும். இப்போது உலகின் எல்லா நாடுகளிலும் உள்ள தமிழ் பேசும் இலக்கிய ஆர்வலர்களுக்காக இணைய இதழாகவும் புதி வடிவம் எடுத்துள்ளது கணையாழி. இம்மாத இதழை இணையத்தில் வாங்கி வாசிக்கும் வகையில் இணையப் பதிப்பை கணையாழி ஆசிரியர் குழு இன்று முதல் தொடங்கியுள்ளது. 

Inline image 1

இணைய இதழின் சந்தா விபரங்கள்:
  • மாத இதழ் சந்தா - $2.50
  • 6 மாத இதழ்களின் சந்தா - $12.50
  • 1 வருட இதழ்களின் சந்தா - $20.00
  • 2 வருட இதழ்களின் சந்தா - $38.00
  • 5 வருட இதழ்களின் சந்தா - $90.00
இணைய இதழை http://kanaiyazhi.emagaz.in என்ற பக்கத்திலிருந்து வாசிக்கலாம்!!

இணையத்தில் வலம் வரும் கணையாழிக்கு உங்கள் ஆதரவு மேலும் வளம் சேர்க்கும். இச்செய்தியை உங்கள் நண்பர்கள் வட்டாரத்திலும் ஏனையை மடலாடற் குழுக்களிலும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்

கணையாழி இணைய இதழாகவும் வெளிவரும் இச்சமயத்தில் திண்ணை இணைய இதழில் வே.சபாநாயகம் எழுதி அண்மையில் வெளிவந்த ஒரு கட்டுரையையும் பகிர்ந்து கொள்வது பொறுத்தமாக இருக்கும் என்பதால் இங்கே இக்கட்டுரையை வழங்குகின்றேன். வாசித்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளலாம்.

அன்புடன்
சுபா

கணையாழியின் கதை
வே.சபாநாயகம்

        இது அசோகவனத்தில் சந்தித்து அனுமன் பெற்ற கணையாழியின் கதை அல்ல. இலக்கிய உலகில் தனக்கென சிறப்பான ஒரு இடத்தை உருவாக்கி வைத்துள்ள கலை இலக்கியத் திங்கள் இதழான 'கணையாழி' யின் தோற்றம் முதல் இன்றைய வளர்ச்சி வரையிலான ஒரு 'திரும்பிப் பார்த்தல்'.

        'புது தில்லி பொழுது போகாத ஒரு மாலை வேளையில், நண்பர் ரங்கராஜனுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்த போது, பத்திரிகை ஆரம்பிக்கும் யோசனை தோன்றியது.பேஷாகச் செய்து விடலாம் என்று சொன்ன ரங்கராஜன் தன் பங்குக்கு ஒவ்வொரு இதழிலும் எழுதுவதாக உறுதி அளித்தார். தமிழில் வெளிவந்து கொண்டிருந்த பத்திரிகைகளிலிருந்து வித்தியாசமாக இருக்க வேண்டும். அரசியல், ஆன்மீகம், மருத்துவம், அத்துடன் கொஞ்சம் இலக்கியம் என்று முடிவாயிற்று. ஆங்கிலப் பதிதிரிகைகளின் தரத்தில் அறிவார்த்தமாக இருக்க வேண்டும். ஜோக்குகள் கூடாது. 'கலைமகள்' போல் ஒரு தமிழ்ப் பெயராக இருக்க வேண்டும் என்று யோசித்து 'கணையாழி'என்று பெயர் வைத்தேன்' என்று 'கணையாழி' பத்திரிகையின் நதி மூலத்தை, அமெரிக்கப் பத்திரிகையான 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையின் தில்லி நிருபராகப் பணியாற்றி வந்த திரு.கி.கஸ்தூரிரங்கன்  கூறியிருக்கிறார்.

        டெம்மி அளவில் 24 பக்கம் கொண்டதாக 40 காசு விலையில், ஜூலை 1965 என்று முதல் பக்கத்தில் அச்சடித்து வந்த முதல் 'கணையாழி' ஆகஸ்ட் 15ல் வெளி வந்தது. தில்லிக்கு அப்போது வந்திருந்த ஜெயகாந்தனுடன் ஒரு பேட்டி, கலைமகளில் அரசியல் கட்டுரை எழுதி வந்த கே.சீனிவாசன் கட்டுரை, ஓரிரண்டு கதைகள், சினிமா, நாடகம் பற்றிய தகவல்கள் விமர்சனங்கள், ந.பிச்சமூர்த்தி கவிதைகள் பற்றி ஒரு அலசல் என்றெல்லாம் அதில் இருந்தன. அட்டைப் படமாக இந்தியத் தேசம், அதற்குள் நேருவும் சாஸ்திரியும் - அதுதான் அட்டைப்படக் கட்டுரையும். .தில்லியில் அபோது தமிழ் அச்சகம் இல்லாததால் சென்னை வந்து ஒருமாதம் தங்கி அச்சகமே கதி என்று கிடந்து 2000 பிரதிகள் அச்சடித்து எடுத்துக்கொண்டு போய், பிரதிகளைப் பாதிக்கு மேல் விற்க முடியாமல், 500 பிரதிகளை இலவசமாக அனுப்பி மிகுந்த சிரமங்களுக்கு ஆளானாலும் படித்தவர்கள் 'நன்றாக இருக்கிறது, வித்தியாசமாக இருக்கிறது, நல்ல எதிர்காலம் இருக்கிறது' என்று பாராட்டியதால், உற்சாகம் குறையவில்லை என்று எழுதுகிறார் கி.க. ஆரம்பத்தில் அசோகமித்திரனின் பங்களிப்பு கி.கவுக்குப் பெரிதும் துணையக இருந்தது.கணையாழியின் பொறுப்பாசிரியராக சென்னையிலிலுருந்து அவர் செயல்பட்டார். மிகவும் பொறுப்புடன், பிரதிபலனை எதிர்பாராது மாதாமாதம் 'கணையாழி'யை அச்சடித்து அனுப்பி வைத்தார்.

        பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சந்தாக்கள் வரத் தொடங்கியுள்ளன. விற்பனை ,உற்சாகம் தராதிருந்தும் எழுத்தாளர்களின் ஆதரவு பெருகியதால் கி.க உற்சாகமாகவே தொடர்ந்தார். 'தில்லி எழுத்தாளர்கள் சுப்புடு,'கடுகு' என்கிற பி.எஸ்.ரங்கநாதன், பூர்ணம் விஸ்வநாதன், லா.சு.ரங்கராஜன், இ.பா. , தி.ஜானகிராமன், என்.எஸ்.ஜகந்நாதன், கே.எஸ்.சீனிவாசன் என்று ஒரு ஐந்து நட்சத்திரத் தரத்தில் படைப்புகள் கணையாழியில் வெளிவரத் தொடங்கின' என்று பெருமிதப்படுகிறார் கி.க. இளம் எழுத்தாளர்கள் ஆதவன், சம்பத், மாலன், பாலகுமாரன் ஆகியோர் கணையாழி மூலம் முத்திரை பதித்தார்கள். ஞானக்கூத்தன், எஸ.வைத்தீஸ்வரன்,தி.சொ வேணுகோபாலன், சி.மணி முதலான 'எழுத்து'க்கவிஞர்கள் புதுக்கவிதை எழுதினார்கள்.அசோகமித்திரனின்  கதை, சுஜதாவின் கடைசிப் பக்கம், என்.எஸ் ஜெயின் 'என்னைக்கேட்டால்', சுப்புடுவின் சங்கீத வித்வான்கள் அறிமுகம் போன்றவை ஒவ்வொரு இதழையும் சுவாரஸ்யப்படுத்தின.இந்திராகாந்தி,மொரார்ஜி, காமராஜ், அண்ணா, கருணாநிதி, பெரியார் போன்ற பெரிய அரசியல் புள்ளிகளுடன் நேர்முகப்பேட்டிகள் மூலம் 'கணையாழி'க்கு ஒரு அந்தஸ்து ஏற்படத் தொடங்கியது.பின்னாளில் அரசியல் கைவிடப்பட்டு முழுக்க முழுக்க இலக்கிய ஏடாகப் பரிணாமம் கொண்டது.

        முப்பது ஆண்டுகள் நடத்தி பல சாதனைகள் செய்தபின், 'கணையாழி'யின் பொருளாதாரமும் கி.கவின்  உடல் நிலையும் நலிந்துபோன நிலையில் யாரிடமாவது அந்த இனிய சுமையைத் தோள் மாற்றிவிட விரும்பினார். அப்போது தமன்பிரகாஷ், சுவாமிநாதன், ம.ராஜேந்திரன் ஆகிய நண்பர்கள் தங்களது 'தசரா' அறக்கட்டளை மூலம் எடுத்து நடத்த முன் வந்தபோது மிகுந்த மகிழ்ச்சியோடு கி.க அவர்களிடம் 'கணையாழி'யை ஒப்படைத்தார். இதனை மிகுந்த உணர்ச்சிப்பெருக்கோடு, 1996ல் நடைபெற்ற 'கணையாழி'யின் 31வது ஆண்டு தொடக்கவிழாவின் போது, 'கணையாழி'யைத் தன் வளர்ப்பு மகளாக வர்ணித்து இந்தக் கல்யாண விழாவில் தான் மகிழ்ச்சியோடு இருப்பதாகவும், கணையாழியின் சஷ்டியப்தபூர்த்தி விழாவையும் தான் ஆவலோடு எதிர் பார்ப்பதாகவும் குறிப்பிட்டார். ஆனால் பதினைந்தாண்டுகளுக்கு மேலாக சிறப்பாக நடத்திய பின் 2006ல் ' தொடர்ந்து நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டது. திரும்பவும் 2011 மே முதல் கவிதா சொக்கலிங்கம் தனது 'கவிதா பதிப்பகம்' மூலம் வெளியிடும் பொறுப்பை ஏற்க, தசரா 'கணையாழி'யை புதிய பாய்ச்சலுடன் நடத்தத் தொடங்கியது. ஒராண்டு வெற்றிகரமாக நடந்த பிறகு தற்போது மே - '12 முதல் திரு.ம.ராஜேந்திரனின் முழுப்பொறுப்பில் வெளிவருகிறது.

        'கணையாழி', கி.க பொறுப்பில் வெளியானபோது பல சோதனை முயற்சிகளைச் செய்து சாதனைகள் பல நிகழ்த்தி இலக்கிய ரசிகர்களின் நெஞ்சில் நீங்காத இடத்தைப் பெற்றது. புதிய இளம் எழுத்தாளர்களைக் 'கணையாழி'யில் எழுத வைத்து இன்றைய நட்சத்திர எழுத்தாளர்கள் பலரை உருவாக்கியதை முதல் சாதனையாகச் சொல்லலாம். வாசகர் கடிதத்தை இலக்கிய அந்தஸ்க்கு உயர்த்தியதை அடுத்துச் சொல்லலாம். புதியவர்களும் புகழ்பெற்ற மூத்த படைப்பாளிகளும் வாசகர் கடிதம் மூலம் பல சிறப்பான விவாதங்களை நடத்திப் பரபரப்பை ஏற்படுத்தினர். இலக்கியத்திலும் இட ஒதுக்கீடு கேட்டு கவிஞர் பழமலய் குரலெழப்ப  சு.சமுத்திரம்  போன்றவர்கள் வழி மொழிந்ததும், என்.எஸ்.ஜகந்நாதனின் கட்டுரை ஒன்றில் மணிப்பிரவாள நடை பற்றி எழுதிய கருத்துக்களுக்கு தி.க.சி எதிர் வினையாற்றியதும் இன்றும் நினைவில் நிற்பவை.

        அடுத்து கணையாழிக் கதைகளும் கவிதைகளும் தனித் தொகுப்புகளாக வருமளவுக்குச் சிறப்பாக இருந்ததைக் குறிப்பிடலாம். கணையாழியில்தான் குறுநாவல்களுக்கு ஒரு இலக்கிய அந்தஸ்து ஏற்பட்டது என்றால் அது மிகை இல்லை. அதிலும் குறிப்பாக 'தி.ஜானகிராமன் நினைவுக் குறுநாவல் போட்டிகளில் வெளியானவை அத்தனையும் முத்துக்கள் என்றே சொல்லலாம். மேலும் இந்திரா பார்த்தசாரதி, தி.ஜானகிராமன், அசோகமித்திரன் வண்ணநிலவன் போன்றோரது அற்புதமான தொடர் நாவல்களும் 'கணையாழி'க்குப் பெருமை சேர்த்தன. 'கணையாழி' கிடைத்ததும் முதலில் கடைசிப்பக்கத்தைப் பார்க்குமளவுக்குப் பரபரப்பை ஊட்டியவர் 'ஸ்ரீரங்கம் எஸ்.ஆர்' ஆக ஆரம்ப காலங்களில் அறியப்பட்ட சுஜாதா அவர்கள். பல சித்திர விசித்திரங்களை சோதனை முயற்சிகளாக மேற்கொண்டு எழுத்தாளனை ஒரு நட்சத்திர அந்தஸ்க்கு உயர்த்திய அவரது சாதனை 'கணையாழி'யில்தான் நிகழ்ந்தது. புத்திலக்கியத்துடன் பழைய காவிய நயங்களைக் காட்டும் கே.எஸ்.சீனிவாசன் அவர்களது 'காவ்ய ராமாயாணம்' தொடரையும் வெளியிட்டது கணையாழி. 'முஸ்தாபா' என்ற பெயரில் யார் என்று தெரியாத மர்மத்தில் வாசகரை ஆழ்த்திய கி.க அவர்களது 'உள்ளது உள்ளபடி..' ஒவ்வொரு இதழையும் ஆவலுடன் எதிர்பார்க்க வைத்தது.  காலஞ்சென்ற அற்புதப் படைப்பாளி ஜெயந்தன் தனது 'நினைக்கப்படும்' நாடகத்தின் மூலம் தன்னை எழுத்துலகம் திரும்பிப் பார்க்கச் செய்தார். 'கணையாழி'யின் முகத்துக்குப் புதியதொரு பொலிவினை இத்தகைய பதிவுகள் கொடுத்தன. கிருஷ்ணன்நம்பியின் புகழ் பெற்ற சிறுகதையான 'மருமகள் வாக்கு' 'கணையாழி'யில்தான் வெளியாயிற்று, மற்றும் இதழ்தோறும் வாசகர்களை ஈர்த்த சுந்தரராமசாமி அவர்களது கேள்வி-பதிலும், கே.சீனிவாசன் அவர்களது கூர்மையான அரசியல் கட்டுரைகளும், திருப்பூர் கிருஷ்ணன் அவர்களது சுவாரஸ்யமான 'இலக்கிய விசாரமு'ம் குறிப்பிடத்தக்கவை. இன்னும் 'கணையாழி'க்குப் பெருமை சேர்த்தவர்களும், 'கணையாழி'யால் வெளிச்சம் பெற்றவர்களும் வழங்கிய அரிய படைப்புகள் பற்றி எழுதி மாளாது.

        தில்லியில் கி.க வுக்கு உதவியாக திரு லா.சு.ரங்கராஜன் - அசோகமித்திரன் போலவே கணையாழியின் பொறுப்பாசிரியராக சிறப்பாகப் பணியாற்றினார். கி.க சென்னைக்கு வந்ததும் சி.அண்ணாமலை என்பவர் உதவியாசிரியரகவும் இ.பா. கௌரவ ஆசிரியராகவும் கணையாழியை நடத்தினார்கள். இ.பா இன்றுவரை கணையாழியின் சிறப்பாசிரியராகத் தொடர்கிறார்.

        கணையாழியின் வெள்ளி விழா ஆண்டில் 'கணையாழி-25' என்ற தலைப்பில் கவிஞர் ஞானக்ககூத்தன் தொடர் எழுதி வந்தார். 30 ஆண்டுகள் முடிந்த போது, தசராவின் கணையாழியில் கடந்த காலப் பதிவுகளை நினைவூட்டும் வகையில் 'கணையாழியின் பரிணாம வனர்ர்ச்சி' என்ற தலைப்பில் வே.சபாநாயகம்  எழுதிவந்தார். 1997 பிப்ரவரியில் 'கணையாழி'யின் முதல் இதழ் முதல் இணையத்தில் பதிவு செய்து வைக்க, அரவிந்தன், கவிஞர்கனிமொழி மூலம் கி.க முயன்றார். கொஞ்சம் பதிவானபிறகு ஏனோ அம்முயற்சி கைவிடப்பட்டது. 30 ஆண்டுகாலத்தில் கணையாழியில் வந்த சிறப்பம்சங்களைக் கொண்ட கணையாழி தொகுப்பைக்   கஸ்தூரி ரங்கன்  வே.சபாநாயகம், இ,பா, என்.எஸ்.ஜெ மூலம் நான்கு தொகுதிகளாகக் 'கணையாழி களஞ்சியம்' என்ற தலைப்பில் கலைஞன் பதிப்பக வெளியீடாகக்  கொண்டு வந்ததார்..

        31ஆவது ஆண்டுமலர் வெளியீட்டைத் 'தசரா' ஒரு விழாவாகவே கொண்டாடியது. இலக்கிய அன்பர்களாலும் படைப்பாளிகளாலும் நிரம்பி வழிந்த அரங்கம், 'தசரா'வுக்குக் கிடைத்த அமோக வரவேற்பைக் காட்டியது. அது 'தசரா'வுக்கு 'கணையாழி'யை மிகுந்த உற்சாகத்துடன் தொடர வழி வகுத்தது. 

        'தசரா' பொறுப்பில் வந்த பிறகும் கணையாழிக்குப் பெருமை சேர்த்த அதன் ஆஸ்தான எழுத்தாளர்கள் சுஜாதா. என்.எஸ்.ஜெ, இ.பா. கி.க அசோகமித்திரன் எல்லோரும் தொடர்ந்து கணையாழியில் எழுதி வந்தார்கள்.  சுஜாதா கணையாழியில் எழுதாமல்  போனதும். அவரது கடைசிப் பக்கத்தை தோழர் தியாகு போன்றோர்களின் தொடர்கள் அணி செய்தன. பழைய எழுத்தாளர்கள் ந.முத்துசாமி, பா.செயப்பிரகாசம், சா.கந்தசாமி. இரா.முருகன், பிரபஞ்சன், த.பழமலய், அறிவுமதி, கல்யாண்ஜி, புவியரசு போன்றோரும் தொடர்ந்து எழுதினார்கள். வெங்கட் சாமிநாதன், கே.எஸ் சுப்பிரமணியன், மார்க்ஸ் போன்றோரின் விமர்சனங்களும் வெளியாயின. பழைய கணையாழியில் துடிப்பான இளைஞர்கள் இடம் பெற்றது போலவே இப்போதும் பின்னாளில் புகழ் பெற்ற புதிய  படைப்பாளர்கள்  கவிஞர் நா.முத்துகுமார், யூமா வாசுகி, பாப்லோ அறிவுக்குயில், அழகிய பெரியவன். இளம்பிறை, அ.வெண்ணிலா , நிஷார் மற்றும் கணையாழியில் இடம் கிடைக்காதா என்று ஏங்கிக்கொண்டிருந்த ஆரம்ப எழுத்தாளர்களும் இடம் பெற்றார்கள். ஈழத்து எழுத்தாளர்கள் கார்த்திகேசு சிவத்தம்பி, அ.முத்துலிங்கம், மாத்தளைசோமு, எஸ்.பொ, தேவகாந்தன் ஆகியோரது படைப்புகளும் தொடர்ந்து இடம் பெற்றன.

        இதழ் தோறும் நிறைய புதிய நூல்களின் அறிமுகமும் பிரபஞ்சன், சா.கந்தசாமி ஆகியோர் தாம் படித்த நூல்களை விமர்சித்ததும் வாசகர்களின் வரவேற்பைப் பெற்றன. 'இந்த நூற்றாண்டின் எனக்குப்பிடித்த சிறந்த கதை' என்ற தலைப்பில் பல மூத்த எழுத்தளர்கள் எழுதினார்கள். தி.க.சி யின் 'காலத்தின் குரல்', தோழர் தியாகுவின் 'மார்க்சின் தூரிகை' போன்ற தொடர் கட்டுரைகள் பாராட்டுகள் பெற்றன.

        மீண்டும் குறுநாவல் போட்டிகள் மூலம் வெளியான குறுநாவல்கள் இலக்கியத்தரம் வாய்ந்தனவாய் இருந்தன.ஓவியர்கள் ஆதிமூலம், மருது இவர்களுடன் புதியவர்களான புகழேந்தி, செல்வம், மாரிமுத்து ஆகியோர் கணையாழியைத் தொடர்ந்து அழகு படுத்தினர். கி.க வின் 'எட்டுத்திக்கும்' அரசியல், கலை, இலக்கியம் ஆன்மீகம் என்று பல துறைகளைப் பற்றியும் சாரமான தகவல்களைத் தந்தது. ம.ராஜேந்திரன் தலையங்கம் மட்டுமின்றி, 'நினைக்கப்படும்' என்ற தலைப்பில்  'மரன்' என்ற பெயரில்  தொடர் எழுதி வந்தார். மற்றும் 'படித்துப் பாருங்கள்' என்று பிரபஞ்சன் பல சிறந்த நூல்களைஅறிமுகப்படுத்தியதும் 'பார்வை' என்ற தலைப்பில் 'பார்வையளர்' என்பவரின் பதிவுகளும், சினிமா பற்றி அம்ஷ்குமார், எஸ்.சாமிநாதன் ஆகியோரின் ஆக்கபூர்வமான விமர்சனங்களும் வாசகர்களுக்கு விருந்தாய் அமைந்தன. வெங்கட் சாமிநாதன் போன்றோரின் நூல்விமர்சனங்களும் குறிப்பிடத் தக்கன. வாசகர் கடிதங்கள் 'எதிரொலி', 'எதிர்வினை' என்ற பெயர்களில் பாராட்டியும் விமர்சித்தும் 'கணையாழி'க்கு உற்சாகமூட்டின.

        சிறப்பான நேர்காணல்களும், பேட்டிகளும் இக்கால கட்டத்தில் வெளியாயின. முதல் இதழில் பேட்டி காணப்பட்ட ஜெயகாந்தன் 'தசரா' பொறுப்பேற்றபோதும் ை பேட்டி காணப்பட்டார்.  ஒவ்வொரு தடவையும் அவரது பேட்டிகள் பல புதிய தகவல்களைக் கொண்டதாய் இருந்தன. மற்றும் மறுபிரசுரம் ஆன ஆர்.சூடாமணி, இந்திரா கோஸ்வாமி ஆகியோரது பேட்டிகளும், புதிய இளம் படைப்பாளிகளான கண்மணி குணசேகரன், இளம்பிறை பொன்றோரது நேர்காணல்களும் கணையாழியின் பாரபட்ச மற்ற பார்வையை உணர்த்தின.

         காலஞ்சென்ற முத்திரை பதித்த படைப்பாளிகள் கு.ப.ரா,  பு.பி,  சி.சு.செ, மௌனி, வையாபுரிப்பிள்ளை எனப் பலரது நினைவு தினங்களையொட்டி அட்டையில் அவர்களது படங்களை வெளியிட்டு அவர்களைப்பற்றிய கட்டுரைகளையும் வெளியிட்டு கணையாழி கௌரவவித்தது. பல்வேறு சிறப்பிதழ்களுடன் மலேசிய, ஆஸ்திரேலிய, கனடா சிறப்பிதழ்களையும் கொண்டு வந்து பாராட்டுக்குரியதாயிற்று.

        இக்கால கட்டத்தில் பாவண்ணன். ஜெயமோகன், ம.ந.ராமசாமி, அசோகமித்திரன். பா.செயப்பிரகாசம், ஸிந்துஜா. ம.ரா, விழி.பா இதயவேந்தன்.கீரனூர் ஜாகிர்ராஜா எனப் பல பழைய புதிய எழுத்தளர்களின் கதைகள் பிரசரமாயின. எஸ். வைத்தீஸ்வரன், பழமலய், இளம்பிறை போன்றோர் நிறைய கவிதைகளை எழுதினார்கள். வெங்கட் சாமிநாதன், கே.எஸ், சுப்பிரமணியன், ஆர். நடராஜன் இன்னும் பல திறனாய்வாளர்களது சிறந்த கட்டுரைகள் வெளிவந்தன. பதிப்பாளர் தமன்பிரகாஷ் சட்டசபைத்தேர்தல் பற்றி எழுதிய கட்டுரை பலரது பாராட்டுக்கு உள்ளாயிற்று.

        ஆசிரியர் மய்திலி ராஜந்திரனும்  சில  கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடர்கிறார். அந்த இடைக்காலத்தில் பா.இராம்ஜி என்பவர் பொறுப்பிலும் பின்னர் ஆசிரியர் குழுவின் பொறுப்பிலும் கணையாழி தொடர்ந்தது. கவிஞர் யுகபாரதி உதவியாசிரியராகச் சில ஆண்டுகள் இருந்திருக்கிறார்.

        1995 முதல் 2006 வரை பதினாறு ஆண்டுகள் இவ்வளவு சாதனைகளை நிகழ்த்திய கணையாழி 2006 செப்டம்பர் இதழோடு தடைபட்டு நின்று போயிருந்தது , கணையாழி அன்பர்களுக்கும், இலக்கியப் படைப்பாளிகளுக்கும் பெரிய ஏமாற்றத்தை அளித்தது. மீண்டும் அது ஏப்ரல் 2011ல் புத்துயிர் பெற்றபோது இலக்கிய உலகுக்குப் பெரும் ஆறுதல்  ஏற்பட்டது. 

        கடந்த ஓராண்டிலும் கணையாழி தனது ஆரம்ப காலத்தை நினைவூட்டுவதாய், நவீன உள்ளடக்கங்களுடன் சிறப்பான பதிவுகளை வெளியிட்டுள்ளது. இ.பா .இப்போதும் சிறப்பாசிரியர் என்பதோடு, சுஜாதா போல கடைசி பக்கங்களில் பழைய இலக்கியங்களிலிருந்து அன்றாட நடப்பை ஒட்டியும் நல்ல விஷயங்களை அளித்து வருகிறார். பாரவி, வாசந்தி,  அசோகமித்திரன், சா.கந்தசாமி, எஸ்.சங்கர நாராயண் போன்றோரது கதைகளும், எஸ்.வைத்தீஸ்வரன், நீலமணி, ஈரோடு தமிழன்பன் போன்ற மூத்த கவிஞர்களின் கவிதைகளும், தமிழவன், மு.ராமசாமி, கி.நாச்சிமுத்து, அன்பாதவன் போன்றோரது கட்டுரைகளும் மீண்டும் கணையாழிக்குக் கனம் சேர்த்துள்ளன. நரசய்யாவின் 'காலம் கொன்ற விருந்து' அரிய ஆவணங்களை வாசகர் பார்வைக்கு  கொண்டு வந்தது. மரன் என்ற பெயரில் 'நினைக்கப்படும்' தொடர் எழுதிய ம.ரா. இப்பொது நடுப்பக்கத்தில் 'காணப்படும்' என்ற தலைப்பில் தான் கலந்து கொண்ட இலக்கிய விழாக்கள் பற்றியும் அங்கு, தான் கண்டவை பற்றியும் சுவாரஸ்யமாக எழுதி வருகிறார்.

    கஸ்தூரிரங்கன் காலத்திலேயே கணையாழியில் எழுதிவந்த ம.ராஜேந்திரன்,தசரா கணையாழியிலும் கவிதா வெளியீட்டிலும்  தொடர்ந்து கொண்டிருக்கிறார்.     இப்போது கணையாழிக்கு மறுபடியும்  சோதனை. கவிதா பதிப்பகம், பதிப்பாளராகத்  தொடர இயலா நிலை.   
ம.ராஜேந்திரன் வேள்வி போன்ற இப்பெரும் பொறுப்பையும் தற்போது ஏற்கிறார். 

வாசகப் படைப்பாளர்கள் ,இலக்கிய அன்பர்கள் ஆதரவில் கணையாழியின் கதை தொடரவேண்டும். 
front-a.jpg

coral shree

unread,
Jul 6, 2012, 8:50:38 PM7/6/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel, Ma Ra
அன்பின் சுபா,

பகிர்விற்கு மிக்க நன்றி. திண்ணையில் நானும் இந்த இடுகையைப் பார்த்தேன்.. சரி கணையாழி அச்சிதழில் வெளியாகும் படைப்புகள்தான் இணைய இதழிலும் வருமா.. அல்லது இரண்டும் வேறா? கணையாழி அச்சிதழுக்கு படைப்புகள் அனுப்ப வேண்டுமானால் எந்த முகவரிக்கு அனுப்ப வேண்டும் போன்ற விளக்கங்கள் கொடுத்தால் அனைவருக்கும் பயன்படுமே. நன்றி.

அன்புடன்
பவளா

2012/7/7 Subashini Tremmel <ksuba...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

front-a.jpg

Geetha Sambasivam

unread,
Jul 7, 2012, 2:10:54 AM7/7/12
to mint...@googlegroups.com
//ஆரம்பத்தில் அசோகமித்திரனின் பங்களிப்பு கி.கவுக்குப் பெரிதும் துணையக இருந்தது.கணையாழியின் பொறுப்பாசிரியராக சென்னையிலிலுருந்து அவர் செயல்பட்டார். மிகவும் பொறுப்புடன், பிரதிபலனை எதிர்பாராது மாதாமாதம் 'கணையாழி'யை அச்சடித்து அனுப்பி வைத்தார். //

66-67 ஆம் ஆண்டில் சென்னை தி.நகரில் இருந்த சித்தப்பா வீட்டில் தங்கி இருந்த காலத்தில் அச்சகத்திலிருந்து வரும் கணையாழியை சந்தாதரர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், தில்லிக்கும் தபாலில் அனுப்பச் சித்தப்பாவுக்கு உதவியது இன்னமும் நினைவில் இருக்கிறது.  கணையாழியில் வெளியிடவென வரும் பல கதைகளைக் கையெழுத்துப் பிரதியாகவே வாசித்த அனுபவமும் உண்டு.  கணையாழி வந்தவுடனே பார்ப்பது கடைசிப் பக்கம் தான், (இந்தப்பதிவிலே வந்திருக்கிற மாதிரி) ஶ்ரீரங்கம் எஸ்.ஆர். என்ற சுஜாதாவின் எழுத்து அறிமுகம் ஆனதும் அப்போது தான்.  வெகுஜனப்பத்திரிகைகளில் சுஜாதாவாக அறிமுகம் ஆகும் முன்னரே அவரின் எழுத்துகக்ளைக் கணையாழி மூலம் படித்தேன்.  பல நினைவுகள் வருகின்றன.  நன்றி பகிர்வுக்கு.

2012/7/7 Subashini Tremmel <ksuba...@gmail.com>
நண்பர்களே,

        அடுத்து கணையாழிக் கதைகளும் கவிதைகளும் தனித் தொகுப்புகளாக வருமளவுக்குச் சிறப்பாக இருந்ததைக் குறிப்பிடலாம். கணையாழியில்தான் குறுநாவல்களுக்கு ஒரு இலக்கிய அந்தஸ்து ஏற்பட்டது என்றால் அது மிகை இல்லை. அதிலும் குறிப்பாக 'தி.ஜானகிராமன் நினைவுக் குறுநாவல் போட்டிகளில் வெளியானவை அத்தனையும் முத்துக்கள் என்றே சொல்லலாம். மேலும் இந்திரா பார்த்தசாரதி, தி.ஜானகிராமன், அசோகமித்திரன் வண்ணநிலவன் போன்றோரது அற்புதமான தொடர் நாவல்களும் 'கணையாழி'க்குப் பெருமை சேர்த்தன. 'கணையாழி' கிடைத்ததும் முதலில் கடைசிப்பக்கத்தைப் பார்க்குமளவுக்குப் பரபரப்பை ஊட்டியவர் 'ஸ்ரீரங்கம் எஸ்.ஆர்' ஆக ஆரம்ப காலங்களில் அறியப்பட்ட சுஜாதா அவர்கள். பல சித்திர விசித்திரங்களை சோதனை முயற்சிகளாக மேற்கொண்டு எழுத்தாளனை ஒரு நட்சத்திர அந்தஸ்க்கு உயர்த்திய அவரது சாதனை 'கணையாழி'யில்தான் நிகழ்ந்தது. புத்திலக்கியத்துடன் பழைய காவிய நயங்களைக் காட்டும் கே.எஸ்.சீனிவாசன் அவர்களது 'காவ்ய ராமாயாணம்' தொடரையும் வெளியிட்டது கணையாழி. 'முஸ்தாபா' என்ற பெயரில் யார் என்று தெரியாத மர்மத்தில் வாசகரை ஆழ்த்திய கி.க அவர்களது 'உள்ளது உள்ளபடி..' ஒவ்வொரு இதழையும் ஆவலுடன் எதிர்பார்க்க வைத்தது.  காலஞ்சென்ற அற்புதப் படைப்பாளி ஜெயந்தன் தனது 'நினைக்கப்படும்' நாடகத்தின் மூலம் தன்னை எழுத்துலகம் திரும்பிப் பார்க்கச் செய்தார். 'கணையாழி'யின் முகத்துக்குப் புதியதொரு பொலிவினை இத்தகைய பதிவுகள் கொடுத்தன. கிருஷ்ணன்நம்பியின் புகழ் பெற்ற சிறுகதையான 'மருமகள் வாக்கு' 'கணையாழி'யில்தான் வெளியாயிற்று, மற்றும் இதழ்தோறும் வாசகர்களை ஈர்த்த சுந்தரராமசாமி அவர்களது கேள்வி-பதிலும், கே.சீனிவாசன் அவர்களது கூர்மையான அரசியல் கட்டுரைகளும், திருப்பூர் கிருஷ்ணன் அவர்களது சுவாரஸ்யமான 'இலக்கிய விசாரமு'ம் குறிப்பிடத்தக்கவை. இன்னும் 'கணையாழி'க்குப் பெருமை சேர்த்தவர்களும், 'கணையாழி'யால் வெளிச்சம் பெற்றவர்களும் வழங்கிய அரிய படைப்புகள் பற்றி எழுதி மாளாது.

        தில்லியில் கி.க வுக்கு உதவியாக திரு லா.சு.ரங்கராஜன் - அசோகமித்திரன் போலவே கணையாழியின் பொறுப்பாசிரியராக சிறப்பாகப் பணியாற்றினார். கி.க சென்னைக்கு வந்ததும் சி.அண்ணாமலை என்பவர் உதவியாசிரியரகவும் இ.பா. கௌரவ ஆசிரியராகவும் கணையாழியை நடத்தினார்கள். இ.பா இன்றுவரை கணையாழியின் சிறப்பாசிரியராகத் தொடர்கிறார்.

Dr.Durai.Manikandan

unread,
Jul 8, 2012, 6:06:25 AM7/8/12
to mint...@googlegroups.com, மின்தமிழ், Subashini Tremmel, Ma Ra
நீண்ட இடைவெளிவிட்டு வெளிவரும் கணையாழி இதழுக்கும், அதனை வெளியிடும் குழுவிற்கும், குறிப்பாக  ஆசிரியர் குழுவில் இடம்பெற்றுள்ள  திருமதி சுபாஷினி அவர்களுக்கும் நன்றி.

Subashini Tremmel

unread,
Jul 8, 2012, 6:16:51 AM7/8/12
to coral shree, மின்தமிழ், Ma Ra, Subashini Tremmel
அன்பு பவளா,

அச்சிதழும் இணைய இதழும் ஒன்றே. உள்ளடக்கத்தில் வித்தியாசம் இல்லை. படைப்புக்களை kanaiya...@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

முதலில் ஒரு முறை இதுவரை வெளிவந்துள்ள இதழ்களில் உள்ள படைப்புக்களை பார்த்தால் கணையாழி எதிர்பார்க்கும் தரம் பற்றிய ஒரு அடிப்படை புரிதல் கிடைக்கும். அதன் அடிப்படையில் உங்கள் படைப்புக்களை உருவாக்கி நீங்கள் அனுப்பி வைக்கலாம்.

என்னுடைய அறிவிப்பை ஏனைய மி ம்டலாடற் குழுக்களிலும் பகிர்ந்து கொள்ளுங்கள் பவளா.

அன்புடன்
சுபா

2012/7/7 coral shree <cor...@gmail.com>

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
front-a.jpg

Subashini Tremmel

unread,
Jul 8, 2012, 6:18:52 AM7/8/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel

2012/7/7 Geetha Sambasivam <geetha...@gmail.com>

//ஆரம்பத்தில் அசோகமித்திரனின் பங்களிப்பு கி.கவுக்குப் பெரிதும் துணையக இருந்தது.கணையாழியின் பொறுப்பாசிரியராக சென்னையிலிலுருந்து அவர் செயல்பட்டார். மிகவும் பொறுப்புடன், பிரதிபலனை எதிர்பாராது மாதாமாதம் 'கணையாழி'யை அச்சடித்து அனுப்பி வைத்தார். //

66-67 ஆம் ஆண்டில் சென்னை தி.நகரில் இருந்த சித்தப்பா வீட்டில் தங்கி இருந்த காலத்தில் அச்சகத்திலிருந்து வரும் கணையாழியை சந்தாதரர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், தில்லிக்கும் தபாலில் அனுப்பச் சித்தப்பாவுக்கு உதவியது இன்னமும் நினைவில் இருக்கிறது.  கணையாழியில் வெளியிடவென வரும் பல கதைகளைக் கையெழுத்துப் பிரதியாகவே வாசித்த அனுபவமும் உண்டு.  கணையாழி வந்தவுடனே பார்ப்பது கடைசிப் பக்கம் தான், (இந்தப்பதிவிலே வந்திருக்கிற மாதிரி) ஶ்ரீரங்கம் எஸ்.ஆர். என்ற சுஜாதாவின் எழுத்து அறிமுகம் ஆனதும் அப்போது தான்.  வெகுஜனப்பத்திரிகைகளில் சுஜாதாவாக அறிமுகம் ஆகும் முன்னரே அவரின் எழுத்துகக்ளைக் கணையாழி மூலம் படித்தேன்.  பல நினைவுகள் வருகின்றன.  நன்றி பகிர்வுக்கு.

அன்பு கீதா - 
இதனை அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி.

சுபா

2012/7/7 Subashini Tremmel <ksuba...@gmail.com>
நண்பர்களே,

        அடுத்து கணையாழிக் கதைகளும் கவிதைகளும் தனித் தொகுப்புகளாக வருமளவுக்குச் சிறப்பாக இருந்ததைக் குறிப்பிடலாம். கணையாழியில்தான் குறுநாவல்களுக்கு ஒரு இலக்கிய அந்தஸ்து ஏற்பட்டது என்றால் அது மிகை இல்லை. அதிலும் குறிப்பாக 'தி.ஜானகிராமன் நினைவுக் குறுநாவல் போட்டிகளில் வெளியானவை அத்தனையும் முத்துக்கள் என்றே சொல்லலாம். மேலும் இந்திரா பார்த்தசாரதி, தி.ஜானகிராமன், அசோகமித்திரன் வண்ணநிலவன் போன்றோரது அற்புதமான தொடர் நாவல்களும் 'கணையாழி'க்குப் பெருமை சேர்த்தன. 'கணையாழி' கிடைத்ததும் முதலில் கடைசிப்பக்கத்தைப் பார்க்குமளவுக்குப் பரபரப்பை ஊட்டியவர் 'ஸ்ரீரங்கம் எஸ்.ஆர்' ஆக ஆரம்ப காலங்களில் அறியப்பட்ட சுஜாதா அவர்கள். பல சித்திர விசித்திரங்களை சோதனை முயற்சிகளாக மேற்கொண்டு எழுத்தாளனை ஒரு நட்சத்திர அந்தஸ்க்கு உயர்த்திய அவரது சாதனை 'கணையாழி'யில்தான் நிகழ்ந்தது. புத்திலக்கியத்துடன் பழைய காவிய நயங்களைக் காட்டும் கே.எஸ்.சீனிவாசன் அவர்களது 'காவ்ய ராமாயாணம்' தொடரையும் வெளியிட்டது கணையாழி. 'முஸ்தாபா' என்ற பெயரில் யார் என்று தெரியாத மர்மத்தில் வாசகரை ஆழ்த்திய கி.க அவர்களது 'உள்ளது உள்ளபடி..' ஒவ்வொரு இதழையும் ஆவலுடன் எதிர்பார்க்க வைத்தது.  காலஞ்சென்ற அற்புதப் படைப்பாளி ஜெயந்தன் தனது 'நினைக்கப்படும்' நாடகத்தின் மூலம் தன்னை எழுத்துலகம் திரும்பிப் பார்க்கச் செய்தார். 'கணையாழி'யின் முகத்துக்குப் புதியதொரு பொலிவினை இத்தகைய பதிவுகள் கொடுத்தன. கிருஷ்ணன்நம்பியின் புகழ் பெற்ற சிறுகதையான 'மருமகள் வாக்கு' 'கணையாழி'யில்தான் வெளியாயிற்று, மற்றும் இதழ்தோறும் வாசகர்களை ஈர்த்த சுந்தரராமசாமி அவர்களது கேள்வி-பதிலும், கே.சீனிவாசன் அவர்களது கூர்மையான அரசியல் கட்டுரைகளும், திருப்பூர் கிருஷ்ணன் அவர்களது சுவாரஸ்யமான 'இலக்கிய விசாரமு'ம் குறிப்பிடத்தக்கவை. இன்னும் 'கணையாழி'க்குப் பெருமை சேர்த்தவர்களும், 'கணையாழி'யால் வெளிச்சம் பெற்றவர்களும் வழங்கிய அரிய படைப்புகள் பற்றி எழுதி மாளாது.

        தில்லியில் கி.க வுக்கு உதவியாக திரு லா.சு.ரங்கராஜன் - அசோகமித்திரன் போலவே கணையாழியின் பொறுப்பாசிரியராக சிறப்பாகப் பணியாற்றினார். கி.க சென்னைக்கு வந்ததும் சி.அண்ணாமலை என்பவர் உதவியாசிரியரகவும் இ.பா. கௌரவ ஆசிரியராகவும் கணையாழியை நடத்தினார்கள். இ.பா இன்றுவரை கணையாழியின் சிறப்பாசிரியராகத் தொடர்கிறார்.

"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Subashini Tremmel

unread,
Jul 8, 2012, 6:19:50 AM7/8/12
to மின்தமிழ், Subashini Tremmel
நன்றி நண்பரே,

கணையாழி  பற்றிய இச்செய்தியை நண்பர்கள் மத்தியிலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

சுபா

2012/7/8 Dr.Durai.Manikandan <mkdur...@gmail.com>

Subashini Tremmel

unread,
Jul 8, 2012, 6:20:08 AM7/8/12
to மின்தமிழ், Subashini Tremmel
நன்றி நண்பரே,

கணையாழி பற்றிய இச்செய்தியை நண்பர்கள் மத்தியிலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

சுபா

2012/7/8 Dr.Durai.Manikandan <mkdur...@gmail.com>
நீண்ட இடைவெளிவிட்டு வெளிவரும் கணையாழி இதழுக்கும், அதனை வெளியிடும் குழுவிற்கும், குறிப்பாக  ஆசிரியர் குழுவில் இடம்பெற்றுள்ள  திருமதி சுபாஷினி அவர்களுக்கும் நன்றி.

Subashini Tremmel

unread,
Aug 5, 2012, 2:29:43 PM8/5/12
to மின்தமிழ், Subashini Tremmel, Ma Ra
நண்பர்களே

கணையாழி இலக்கிய இதழின் ஆகஸ்ட் மாத இதழ் வெளிவந்து விட்டது. இதுவரை இணைய இதழ் சந்தா பெற்றுக் கொள்ளாதவர்கள் இங்கே சென்று சந்தாகட்டணம் செலுத்தி  கணையாழி இணைய இதழை வாசிக்கலாம்.

Inline image 2

அன்புடன்
சுபா

2012/7/6 Subashini Tremmel <ksuba...@gmail.com>
Clipboard01.jpg
front-a.jpg

Tthamizth Tthenee

unread,
Aug 5, 2012, 9:37:57 PM8/5/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel, Ma Ra
மிக அருமை  ! சீதா தேவியை  அனுமன் மூலமாக சேர்த்து வைத்தது கணையாழி
இப்போது இலக்கிய உலகத்தில்  பல சீதைகளையும்  ராமர்களையும் சேர்த்து வைக்கப் போகிறது   இந்தக் கணையாழி
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2012/8/5 Subashini Tremmel <ksuba...@gmail.com>
Clipboard01.jpg
front-a.jpg

coral shree

unread,
Aug 5, 2012, 9:57:26 PM8/5/12
to mint...@googlegroups.com
அன்பின் சுபா,

பகிர்விற்கு நன்றி.

அன்புடன்
பவளா

2012/8/5 Subashini Tremmel <ksuba...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
front-a.jpg
Clipboard01.jpg

Subashini Tremmel

unread,
Aug 6, 2012, 3:14:14 AM8/6/12
to Tthamizth Tthenee, மின்தமிழ், Ma Ra

2012/8/6 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
மிக அருமை  ! சீதா தேவியை  அனுமன் மூலமாக சேர்த்து வைத்தது கணையாழி
இப்போது இலக்கிய உலகத்தில்  பல சீதைகளையும்  ராமர்களையும் சேர்த்து வைக்கப் போகிறது   இந்தக் கணையாழி.

மிக அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள் தேனீயார். அமெரிக்காவில் இருக்கும் உங்கள் மகன் மற்றும் அவர்கள் நண்பர்களுக்கும் இந்த இணைய   இதழை அறிமுகப்படுத்துங்களேன். தமிழகத்தில் இல்லாத, அயலகத்தில் உள்ள ஏனைய இலக்கிய ஆர்வலர்களும் வாசித்து இன்புறும் வகையில் தான் கணையாழி இணையத்தில் இப்போது வலம் வர ஆரம்பித்திருக்கின்றது. 

சுபா
Clipboard01.jpg
front-a.jpg

Tthamizth Tthenee

unread,
Aug 6, 2012, 11:27:35 AM8/6/12
to Subashini Tremmel, மின்தமிழ், Ma Ra
நிச்சயம் அறிமுகப்படுத்துகிறேன்

அன்புடன்
தமிழ்த்தேனீ

2012/8/6 Subashini Tremmel <ksuba...@gmail.com>
front-a.jpg
Clipboard01.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages