மண்ணின் குரல்: பெப்ரவரி 2014: திருவாவடுதுறை ஆதீன சரசுவதி மகால் நூலகம்

171 views
Skip to first unread message

Subashini Tremmel

unread,
Jan 31, 2014, 4:57:50 AM1/31/14
to மின்தமிழ், Subashini Tremmel
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 

சைவ ஆதீனங்களில் பழமை வாய்ந்தது திருவாவடுதுறை ஆதீனம். திருக்கயிலாயப் பரம்பரை வழி வந்த குருமுதல்வர்கள் இங்கு ஆதீனத்தலைவர்களாக இருந்து இம்மடத்திற்கு உரிமையான கோயில்களையும் கட்டளை மடங்களையும் இன்று வரை பாதுகாத்து சைவ நெறி வளர்த்து வருகின்றனர். 

திருமந்திரம் அருளிய திருமூலர் இங்கு இருந்து பாடல்கள் இயற்றினார் என்பதும் யோகசமாதி அடைந்தார் என்பதனையும் கோயில் ஆதீன வரலாற்றிலிருந்து அறிந்து கொள்கின்றோம்.

இந்தத் திருமடத்தின் நூலகம் மிகச் சிறப்பு வாய்ந்தது. சரசுவதி மகால் எனப் பெயர் கொண்ட இந்த நூலகத்தில் பழமையான சுவடி நூல்கள் பலவும் கிடைத்தற்கறிய சிறந்த பல தமிழ் நூல்களும் பாதுகாக்கப்படுகின்றன. 

இன்றைய வெளியீடாக மலரும் இந்த விழியப் பதிவில் நூலகத்தில் உள்ள சுவடி நூல்களைப் பற்றிய ஒரு அறிமுகம் வழங்கப்படுகின்றது. ஆதீனப் புலவர் இந்த அறிமுகத்தை வழங்குகின்றார்.  அதில் குறிப்பாக மடாதிபதி என்னும் சொற்றொடர் விளக்கம் என்ற தலைப்பிலான ஒரு சுவடி நூல் பற்றிய அறிமுக விளக்கம் இடம் பெறுகின்றது.  அதில் ஆதீனங்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள் பற்றிய விபரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. சைவ ஆதீனங்கள் அனைத்தும் இந்த நூலில் வழங்கப்பட்டுள்ள முறைகளைப் பின்பற்றியே ஆதீன அலுவல்களை முறைபடுத்துகின்றனர் என்ற செய்தியை இந்த ஒலிப்பதிவின் வழி அறிந்து கொளள முடியும். இந்த நூலை பல ஆண்டுகளுக்கு முன்னர் ஆதீனப் புலர் ஒருவர் ஆதீன கர்த்தரின் கட்டளைப்படி தயாரித்த விஷயத்தையும் இப்பதிவில் அறிந்து கொள்ளலாம். 

திருவாவடுதுறை மடத்தின் மற்றுமொரு சிறப்பு இங்கு அனையாத அடுப்பு எப்போதும் இருக்கும் என்பது. தொடர்ந்து அன்னதானம் இங்கு வழங்கப்பட்டு வருகின்றது என்ற செய்தியையும் இந்த பதிவின் வழி நாம் அறியலாம்.

அது மட்டுமல்ல..மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் கையெழுத்தில் அமைந்த ஏட்டுச் சுவடிகளும், பல புராண நூல்களும் நிறைந்த ஒரு நூலகம் இது என்பது இதன் சிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் விஷயம்.  அதனையும் ஆதீனப் புலவர் பேட்டியில் குறிப்பிடுகின்றார்.

10 நிமிட விழியம் இது . பார்த்து கருத்து பகிர்ந்து கொள்ளுங்கள்.

வலைப்பூவில் காண: http://video-thf.blogspot.de/2014/01/2014_9435.html

யூடியூபில் காண: http://www.youtube.com/watch?v=OSrT_rMAxC8

பதிவு செய்யப்பட்ட நாள்: 28.2.2013

அன்புடன்
சுபாஷிணி ட்ரெம்மல்
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

Dhivakar

unread,
Jan 31, 2014, 5:55:19 AM1/31/14
to மின்தமிழ்
அன்புள்ள சுபா,
நன்றி! விழியத்தை நிதானமாக பார்க்கிறேன். அதற்கு முன்

திருவாவடுதுறை ஆதீனத்தில் மூன்று சிறப்புகள் உள்ளன.

ஒன்று. இந்த நூலகம். ஆழத் தோண்டத் தோண்ட தங்கம் வந்து கொண்டே இருக்கும் இடம்.. ஆராய்ச்சிக்காகச் சென்றால் சேகரிக்கப்பட்ட தேனடைகள் அதிகம்.. சலிப்பில்லாமல் அள்ளிப் பருகலாம்.

இரண்டு: அணையாத அடுப்பு - இங்குள்ள சமையல் ருசியும் ஒருகாலத்தில் போடப்பட்ட ‘மெனு கூட பதிவாகியுள்ளது. வேண்டுமானால் எடுத்துப் போடுகிறேன். இங்கு துவையல் மிகவும் ருசித்துச் சாப்பிட்டதாக மீ.சு.பிள்ளையின் குறிப்பு ஒன்றுண்டு. மறுபடியும் நான் படிக்கவேண்டும். ஒரு கவிதை கூடப் படித்ததாக நினைவு.

மூன்று: இங்குள்ள சிறிய நடராஜமூர்த்தி. - மூர்த்தி சிறிது, கீர்த்தி பெரிது. இவர் காலத்தால் (14ஆம் நூற்றாண்டின் முற்பகுதி) சைவ ஆச்சாரியரான உமாபதி சிவாச்சாரியரால் பூசை செய்விக்கப்பட்டவர். தில்லை நடராஜர் கூட ஒரு சமயத்தில் ஆராதனையை இவருக்காக கொஞ்சம் தாமதிக்கச் செய்தாராம். இன்றும் கூட, காலை ஏழு மணிக்கு ஆதீனம் தம் கையால் அபிஷேகம் செய்துவிட்டு  தரிசனம் கிடைக்கும்.. மறுபடியும் அடுத்தநாள்தான் தரிசனம்..

தி.ஆதீனத்துக்குப் பொற்காலம் ஒன்றுண்டு.

அன்புடன்
திவாகர்


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Subashini Tremmel

unread,
Feb 1, 2014, 5:34:29 AM2/1/14
to மின்தமிழ், Subashini Tremmel



2014-01-31 Dhivakar <venkdh...@gmail.com>:

அன்புள்ள சுபா,
நன்றி! விழியத்தை நிதானமாக பார்க்கிறேன். அதற்கு முன்


வீடியோ பதிவை மறக்காமல் பாருங்கள். மிகப் பிடிக்கும் உங்களுக்கு.
 

திருவாவடுதுறை ஆதீனத்தில் மூன்று சிறப்புகள் உள்ளன.

ஒன்று. இந்த நூலகம். ஆழத் தோண்டத் தோண்ட தங்கம் வந்து கொண்டே இருக்கும் இடம்.. ஆராய்ச்சிக்காகச் சென்றால் சேகரிக்கப்பட்ட தேனடைகள் அதிகம்.. சலிப்பில்லாமல் அள்ளிப் பருகலாம்.
 
ஆமாம். வீடியோ பதிவிலும் இதனைக் காணலாம். பல நான் கேட்டறியாத சுவடி நூலகள்.
மடத்தின் இந்த நூலகத்தில் சமய பாரபட்ஷமின்றியே மக்கள் இருக்கின்றனர். மகாவித்வான் காலத்திலிருந்து இதனைக் காண்கின்றோம் என்ற நிலையிருந்தாலும் அங்கு நூலகம் சென்ற போது அவர்கள்  தொகுப்பில் இருந்த இஸ்லாமிய நூல்களின் பட்டியல் பார்த்து ஆச்சரியப்பட்டேன்.
நல்லதொரு பொக்கிஷம் இந்த  நூலகம். 

இரண்டு: அணையாத அடுப்பு - இங்குள்ள சமையல் ருசியும் ஒருகாலத்தில் போடப்பட்ட ‘மெனு கூட பதிவாகியுள்ளது. வேண்டுமானால் எடுத்துப் போடுகிறேன். இங்கு துவையல் மிகவும் ருசித்துச் சாப்பிட்டதாக மீ.சு.பிள்ளையின் குறிப்பு ஒன்றுண்டு. மறுபடியும் நான் படிக்கவேண்டும். ஒரு கவிதை கூடப் படித்ததாக நினைவு.
அப்படியா.. சுவாரசியமாக இருக்கின்றது. எழுதுங்கள்.

கடந்த ஆண்டு அங்கிருந்த போது நான் மடத்திற்கு இரண்டு முறை சென்றேன். முதல் நாள் நாங்கள் நூலகத்தின் பின்புறத்தில் மின்னாக்கப் பணியிலேயே மூழ்கி விட்டதால் அவர்கள் பல முறை கூப்பிட்டும் உணவு சாப்பிடச் செல்லாமல் தாமதப்படுத்தி விட்டோம். பின்னர்  வந்து பார்த்த போது எல்லா வகை உணவும் இல்லையே என்று அவர்களுக்குக் கவலை. பின்னர் எங்களை மடத்திற்குச் சொந்தமான் சூரியனார் கோயிலுக்கு போகச் சொல்லி நாங்கள் அங்கு சென்று அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த அன்னதானத்தை சாப்பிட்டு மகிழ்ந்தோம். சாம்பார், ரசம், தயிர், பாயசம் வடை என எல்லாம் சுவைத்தோம்.

மறு நாள் மடத்தில் பதிவு செய்து கொண்டிருந்த போது காலம் கடத்தாமல் சரியான நேரத்தில் திருவாவடுதுறை மடத்திலேயே சாப்பிட்டோம். நல்ல மறக்க முடியாதசந்தோஷமான அனுபவம் இது எனக்கு. 

மூன்று: இங்குள்ள சிறிய நடராஜமூர்த்தி. - மூர்த்தி சிறிது, கீர்த்தி பெரிது. இவர் காலத்தால் (14ஆம் நூற்றாண்டின் முற்பகுதி) சைவ ஆச்சாரியரான உமாபதி சிவாச்சாரியரால் பூசை செய்விக்கப்பட்டவர். தில்லை நடராஜர் கூட ஒரு சமயத்தில் ஆராதனையை இவருக்காக கொஞ்சம் தாமதிக்கச் செய்தாராம். இன்றும் கூட, காலை ஏழு மணிக்கு ஆதீனம் தம் கையால் அபிஷேகம் செய்துவிட்டு  தரிசனம் கிடைக்கும்.. மறுபடியும் அடுத்தநாள்தான் தரிசனம்..

நல்ல தகவல். 

தி.ஆதீனத்துக்குப் பொற்காலம் ஒன்றுண்டு.
உ.வே.சாவின் பில்ளையவர்கள் சரிதமும் அவரது சொந்தசரிதமும் குருபூஜை விழாக்களைநன்கு விளக்குகின்றன.  

சுபா



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
Reply all
Reply to author
Forward
0 new messages