விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..!

383 views
Skip to first unread message

Suba.T.

unread,
Apr 10, 2015, 6:02:35 PM4/10/15
to மின்தமிழ், Subashini Tremmel

​காந்தி வாழ்ந்த இடத்தில் .. ஷுலு இனக்குழு மக்களின் குழந்தைகளோடு

​உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தென்னாப்பிரிக்க கிளையின் தலைவர் திரு.மிக்கி செட்டி அவர்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜெர்மனி வந்திருந்த பொழுதில்,  இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற உள்ள தமிழாசிரியர் பட்டமளிப்பு விழாவிலும் அதனைத் தொடர்ந்து நடைபெற உள்ள செயலவைக் குழு தேர்தல் நிகழ்விலும் கலந்து கொள்ள அழைப்பு விடுத்திருந்தார். அலுவலக பணிகளுக்கிடையேயும் எனது முனைவர் பட்ட ஆய்வுக்கிடையேயும் இதனை சாத்தியப்படுத்த முடியுமா என்ற ஒரு அய்யம் மனதில் இருந்து கொண்டிருந்தது. ஆயினும் இந்த இயக்கத்தின் செயலவைக் குழுவினர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இப்பயணத்திற்கு திட்டமிட்டேன்.

இந்த இயக்கத்தில் பல ஆண்டுகள் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒருவர், நான் ஜொஹான்னஸ்பெர்க் நகருக்கு டிக்கட் போடவேண்டுமென்று தகவல் சொல்லிவிட்டார். ஆக அங்கு செல்ல விமானத்தை தேடிய போது எத்தியோப்பியன் விமானத்தில் குறைந்த நேர இடைவெளி.  அத்தோடு பயணக்கட்டணமும் கணிசமான விலை என்ற வகையில் டிக்கட் அமைந்தது. நானும் தோழி இந்துவும் பயணத்திற்கு டிக்கட்டை பதிந்து கொண்டோம். இதைப் பற்றி அந்த பொறுப்பாளரிடம் குறிப்பிட்ட போது எத்தியோப்பியன் ஏர்லைன்ஸில் சென்றால் இபோலா காய்ச்சல் வந்து இறந்து விடுவீர்கள் என்று கூடுதல் 'இன்மொழி' கூறினார். 

என்ன செய்வது ..? இப்படியும் சில மனிதர்கள்!

எத்தியோப்பியன் விமான பயண விபரங்களைப் பார்த்தபோது தினம் ஒரு விமானம் எத்தியோப்பியா செல்வதை அறிந்து கொண்டேன். ஜெர்மனியில் கணிசமான எண்ணிக்கையில் எத்தியோப்பியர்களும் ஆப்பிரிக்காவின் ஏனைய நாடுகளைச் சேர்ந்தோரும் இருக்கின்றனர். விமானத்தில் பயணித்தாலே இபோலா நோய் வரும் என நினைப்போரை என்ன செய்வது? எல்லாம் அறியாமை தான் காரணம். இப்படியும் மனிதர்கள் இருக்கின்றார்களே என வருந்திக் கொண்டதோடு மட்டுமல்லாது அந்த நபருக்கும் இபோலா பற்றியும் அனைத்துலக விமானப்பயணத்தில் கடைபிடிக்கப்படும் சுகாதார முறைகள் பற்றியும் சற்று விளக்கியும் கூறினேன்.

​விமானப் பயணத் தகவல்

ஆனால் பின்னர் டர்பனில் தான் நிகழ்வு என்று உறுதியானதும் ஜொஹான்னஸ்பெர்கிலிருந்து டர்பனுக்கு ஒரு பயண டிக்கட் கூடுதலாக பதிவு செய்ய வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது. குலுலா விமான சேவையகத்தில் இதற்கான  டிக்கட்டை  எனக்கும் இந்துவிற்கும் பதிந்து கொண்டேன்.

எங்களின் பயணம் 4 விமான நிலையங்களில் உலாவும்  வகையில் 3 விமானங்களில் பயணம் என்ற வகையில் அமைந்தது. இப்படி ஒரு பயணத்தை இது நாள் வரை நான் என் வாழ் நாளில் செய்த்தில்லை. எல்லாம் புது அனுபவம் என நினைத்து பயண ஏற்பாட்டு வேலைகளைக் கவனித்துக் கொண்டேன்.
  • ஃப்ராங்பர்ட் நகரிலிருந்து எத்தியோப்பிய விமானத்தின் வழி முதலில் அதன் தலைநகரான அடிஸ் அபாபாவிற்குப் பயணம்
  • அடிஸ் அபாபாவிலிருந்து ஜொஹான்ன்ஸ்பெர்க்
  • பின்னர் ஜொஹான்னஸ்பெர்கிலிருந்து டர்பனுக்கு 
என பயணம் இருந்தது.

​ஃப்ராங்பர்ட் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட எஹ்ட்தியோப்பிய விமானம்

எனது வாகனத்தில் ஃப்ராங்பர்ட் விமான நிலையம் வரை பயணம் செய்து அங்கு விமான நிலைய கார் பார்க்கில் வாகனத்தை விட்டு விட்டு எத்தியோப்பிய விமானத்தில் நானும் இந்துவும் அடிஸ் அபாபா நோக்கி புறப்பட்டோம்.​

தொடர்வோம் நம் பயணத்தை டர்பனுக்கு....

சுபா

--
Suba.T.
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
Suba.T.

unread,
Apr 11, 2015, 5:27:23 PM4/11/15
to மின்தமிழ், Subashini Tremmel
பகுதி 2

எத்தியோப்பிய விமானப் பணிப் பெண்களும் ஆண்களும் தமிழர்களை ஒத்த முகச்சாயலிலும்  உடல் சாயலிலுமே தென்படுகின்றனர். அதிலும் குறிப்பாக பெண்கள். இவர்களுக்கு இந்திய ஆடைகளை உடுத்தி சாலையில் நடக்கச் சொன்னால் தமிழ் பெண்கள் என்றே எல்லோரும் ஒத்துக் கொள்வர். தலைமுடி வகையில் மட்டும் ஒரு சிறு வித்தியாசத்தைக் காண்கின்றேன். அடர்த்தியான கூந்தல் வகை இவர்களது. பெரும்பாலானோர் தோலின் நிறம் கருமையாகவும் ஒரு சிலருக்கு நிறம் மாநிறமாகவும் இருக்கின்றது. இது தென்னிந்தியர்களின் தோலின் நிரத்தை ஒத்த வகையிலேயே இருக்கின்றது.

விமானத்தில் நான் சைவ உணவு பதிந்திருந்தேன். எனக்கு கொடுக்கப்பட்ட உணவைப் பார்த்தபோது அதிசயப்பட்டேன். பாஸ்மதி அரிசி போல ஆனால் இன்னமும் நீளமான வடிவில் அரிசி. 

பயிற்றங்காய் வருவல் அதற்கு மொச்சை, மேலும் சில கடலை வகைகள் சேர்த்த குழம்பு. உணவின் சுவையும் மலேசிய இந்திய உணவு சுவையை ஒத்ததாக அமைந்திருந்தது. நான் ஸ்டுட்கார்ட் நகரில் சாப்பிட்டு பழகிய மடகாஸ்கர் அல்லது தென்னாப்பிரிக்க உணவின் சுவையை விட இது மிக நன்றாக நமது இந்திய உணவு போல இருந்தது. 

எத்தியோப்பிய மக்களின் உணவும் உடல் தோற்றமும் தென்னிந்திய மக்களின் உடல் தோற்றத்தை ஒத்திருப்பது போலவே அவர்களது அங்க அசைவுகளும் முக பாவனைகளும் கூட நமக்கு பரிச்சயமான வகையிலேயே இருந்தன. மிகுந்த சுவாரசியத்துடன் என் கண்ணில் தென்படும் ஒவ்வொரு எத்தியோப்பியர்களையும் நான் என மனதில் அலசி ஆராய்ந்து கொண்டிருந்தேன். 

விமானத்தின் கேப்டன் நடந்து வந்து ஒரு சிலரிடம் பேச்சுக் கொடுத்து பேசிக் கொண்டிருந்தார். நான் இருக்கும் பகுதிக்கு வந்த போது இரவு வணக்கம் சொல்லிவிட்டு சிறிது நேரம் இருந்து கதை பேசிச் சென்றார். நலல் உயரமான உருவம். எனக்கு ஒரு தமிழரிடம் பேசிக்கொண்டிருக்கின்றோம் என்ற உணர்விலேயே பேசினேன் என்று தான் சொல்வேன். எங்கள் பயண நோக்கம் பற்றி அறிந்து கொண்ட பின்னர் எத்தியோப்பிய நாட்டிற்கு  ஒரு முறை வந்து சுற்றிப் பார்ஹ்த்டு செல்லுமாறு கூறினார்.

அடிஸ் அபாபா விமான நிலையம் மிகச் சிறியது. நாங்கள் வந்திறங்கிய சமையம் அதிகாலையாக இருந்தமையால் பயணிகள் நடமாட்டமும் குறைவாகவே இருந்தது. காலை ஆறு மணிக்கெல்லாம் சூரியோதயம் ஏற்பட்டதில் மிகத் தெளிவாக பகல் வெளிச்சத்தில் நகரை பார்க்க முடிந்தது. 

இந்த நாடு பாலைவனப்பகுதிக்கும் கீழே அமைந்திருப்பதால் வெயில் இருந்தாலும் மிக அதிகமான் வெப்பத்தை நான் உணரவில்லை. ஏறக்குறைய 24லிருந்து 30 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பம். வெளியே சென்று பார்க்க வாய்ப்பு அமைந்திருந்தால் மேலும் எத்தியோப்பியா பற்றி அறிந்து கொள்ள முயற்சித்திருப்பேன். ஆனால் ஒரு முறைபிரத்தியேகமாக இந்த நாட்டிற்கு சென்று வர வேண்டும் என்று மனதில்  ஆவல் வந்துள்ளது.. வாய்ப்பு அமைந்தால் எத்தியோப்பியா பற்றியும் இம்மக்கள் பற்றியும் மேலும் நேரில் அறிந்து கொள்ள அது உதவலாம்.

​தொடர்வோம் நம் பயணத்தை டர்பனுக்கு....

சுபா

செல்வன்

unread,
Apr 11, 2015, 6:32:25 PM4/11/15
to mintamil
எத்தியோப்பிய இஞ்சிரா ரொட்டி, அதற்கு கொடுக்கப்டும் பருப்பு/கீரை கர்ரி, உணவை கையால் உண்ணும் அவர்கள் வழிமுறை எல்லாமே தமிழகத்தை நினைவுபடுத்தும்

எத்தியோப்பிய உணவகங்களில் ஒரே தட்டில் குடும்பமாக உண்டு அமரும் வகையில் இருக்கும். தமிழருக்கும், எத்தியோப்பியருக்கும் நெருங்கிய வாணிக தொடர்பு உண்டு. தமிழகத்தில் கிடைக்கும் ரோமானிய காசுகள் எல்லாமே எத்தியோப்பியாவில்/எகிப்தில் இருந்து வந்தவையே. சங்க இலக்கியங்களில் வரும் யவனர் எத்தியோப்பியரே..பண்டைய ரோமானிய பேரரசு எகிப்து, எத்தியோப்பியா வரை பரவி இருந்தது. ரோமானிய/தமிழக வணிக உறவு என்றவுடன் பலரும் இத்தாலிக்கும், தமிழ்நாட்டுக்கும் வணிக உறவு இருந்ததாக நினைப்பார்கள். அது உண்மை அல்ல..இத்தாலிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே கடல்வழி தொடர்பு ஏற்பட வாஸ்கடோகாம காலம் வரை வழியில்லை

தேமொழி

unread,
Apr 11, 2015, 6:50:01 PM4/11/15
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com, ksuba...@gmail.com
///
எத்தியோப்பிய விமானப் பணிப் பெண்களும் ஆண்களும் தமிழர்களை ஒத்த முகச்சாயலிலும்  உடல் சாயலிலுமே தென்படுகின்றனர். அதிலும் குறிப்பாக பெண்கள். இவர்களுக்கு இந்திய ஆடைகளை உடுத்தி சாலையில் நடக்கச் சொன்னால் தமிழ் பெண்கள் என்றே எல்லோரும் ஒத்துக் கொள்வர். தலைமுடி வகையில் மட்டும் ஒரு சிறு வித்தியாசத்தைக் காண்கின்றேன்.
///

ஆமாம் சுபா, நீங்கள் குறிப்பிடுவதை நானும்   கவனித்துள்ளேன். தமிழர்  சாயல் எத்தியோப்பியரிடம் அதிகம்.

கேரளாவில் இருப்பவர்கள் கூட  தமிழக மக்களைவிடக்  கொஞ்சம் வேறுபட்டிருப்பதாகத் தெரியும்...ஆனால் ..  எதியோப்பியர்கள் நமது   பக்கத்து வீட்டுக்காரர் போன்ற தோற்றத்தில் இருப்பார்கள் .

பேராசிரியர் பெர்ஹானு மென்ஞ்ட்சு  என்ற எங்கள் ஆசிரியர் நம் ஊர்காரர் போலவே இருப்பார்.  அவர் பேசும் ஆங்கிலம்  கொஞ்சம் ராகம் போட்டுப்  பாடுவது போல இருக்கும்  

http://www.cimpad.org/index.php/component/k2/item/106-berhanu-mengistu

..... தேமொழி 

இணையவேள்

unread,
Apr 11, 2015, 8:26:20 PM4/11/15
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com, ksuba...@gmail.com
இரண்டு காத்துட்டுக் கருத்துக்கள்.  ஏற்போர் ஏற்க ஏற்க மறுப்போர் ஒதுக்கி விலக

இந்தியாவில் ஆங்கில அரசு ஆட்சிக்காலத்தில் அவர்களது ஆட்சிக்குள் இருந்த எத்தியோப்பியாவில் நடந்த உள்நாட்டுக்கலகத்தை அடக்க இந்தியாவிலிருந்து போர் வீரர்களை அனுப்பவேண்டிய சூழல்.  அப்போது கவர்னராக இருந்த மன்றோ அவர்கள் ஒரு கப்பலில் சென்னையிலிருந்து போர்வீரர்களை அனுப்பினார்.  அவர்கள் அனைவரும் தமிழர்கள்.  பெரும்பாலோர் மறவர்கள்.  செங்கடல் வழியாகப் பயணம் செய்து எரித்ரியத் துறைமுகத்தில் இறங்கிய பட்டாளம் நடந்தே அஸ்மாரா வரை சென்றது.  அந்த வலசை தமிழ் எத்தியோப்பிய வலசையாக அமைந்து அங்கு ஒரு கலப்பினம் உருவானது

ஆஃப்ரிக்க வாழ்வியல் மரபை ஆய்வு செய்த மானுடவியலார் எத்தியோப்பியாவில் பெண்களை வளர்க்கும்போதே திருமணமான பெண் தன் கனவனையும் கனவனின் நண்பர்களையும் விருந்தினர்களையும் மகிழ்விப்பது பண்பு என்று பலதலைமுறைகளாகச் சொல்லிச்சொல்லி வளர்த்ததால் மன்றோ அனுப்பிய மறவர் பட்டாளம் கடந்த பாதையில் வாழ்ந்த பெண்கள் தங்களுக்கு வன்கொடுமை நடந்ததாகக் குற்றம் சாட்டவில்லை.  மாறாக தங்களின் கலப்பு வாரிசுகளின் பேரழகில் பெருமை கொண்டனர்

டிஸ்கி:  தமிழர்களின் மறவர்கள் உலகெல்லாம் இருந்த பலநாட்டுப் போர்ப்படைகளிலும் போர்வீரர்களாகப் பணிபுரிநவர்கள்.  தமிழ்நாட்டுக்குள் நுழைந்த பலவேற்றுநாட்டினர் பெண்துணையின்றித் தனியே வந்து தமிழ்நாட்டுப் பெண்களைத் திருமணம் செய்து கலப்பினமாக மாறிப்போயினர்.  புறத்தே உயர்வு தாழ்வு உரக்க முழக்கினாலும் அகத்தே மரபணுவில் தனித்து நிற்கும் பிரிவே தமிழகத்தில் இல்லை என்று மரபணு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்

இணையவேள்

Oru Arizonan

unread,
Apr 11, 2015, 8:33:18 PM4/11/15
to mintamil
//மறுப்போர் ஒதுக்கி விலக//

இது சரியல்ல.  கருத்தைப்படிப்பவர் ஏற்கவும் செய்வார்கள், மறுக்கவும் செய்வார்கள்;  இருவருமே கருத்துப்பதிவார்கள்.  எனவே, மறுப்போரை ஒதுக்கி விலகச் சொல்வது, கருத்தாடலுக்கே வழியின்றிச் செய்துவிடுகிறது. 

 செய்திகளுக்கே கருத்துப் பதியும்போது, கருத்துப்பதிதலுக்கு  ஏற்பும், மறுப்பும் இருப்பது இயற்கைதானே!  

ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Innamburan S.Soundararajan

unread,
Apr 11, 2015, 8:46:19 PM4/11/15
to mintamil, Innamburan S.Soundararajan

ஏற்போர் ஏற்க ஏற்க மறுப்போர் ஒதுக்கி விலக...

மேற்படி தாரகமந்திரம் மட்டுறுத்தப்படாவிடின், நல்லதே நடக்கும். தற்கால மின் தமிழ் கார்வார் அக்காலம் இருந்திருந்தால், சிலப்பதிகாரமும், கலித்தொகையும், பின்னர் திருவிளையாடல் புராணமும், பாரதியாரும், தி.ஜானகிராமனும், ஜெயகாந்தனும், ஞானியும், மற்றும் பலரும் ஒழித்துக்கட்டப்பட்டிருப்பார்கள்.

மீள்பதிவு கீழே:

அன்றொரு நாள்: ஏப்ரல் 10:

திரைகடலோடிய இந்தியா!

‘...ஏடன் நகரத்தில் கலோனிய ஆட்சி புரிந்தது, இந்திய அரசு என்பது ‘ஏடாகூடமான பேச்சாக’த் தோன்றினால்...! என்று அன்றொரு நாள்: ஜனவரி:19:ஏடாகூடம்! இழையில் கூறப்பட்டதின் தொடர்பாக, இன்று எத்தியோப்பியா (அபிசீனியா) போகப்போகிறோம். தொன்மையும், வளமும், இனம், மொழி, கலாச்சார வித்தியாசங்கள் (80 வகை தொகைகள்) நிறைந்த நன்னாடு. இயற்கை வளமும், கானகங்களும், மலையும், மடுவும், பழங்கால நாகரீகமும் நிறைந்த பூமி. தொன்று தொட்டு வரும் கிருத்துவ சமயத்தின் ஆளுமை. புராணங்களில் பேசப்படும் மஹாராணி ஷேபாவின் பிரதேசம்.

இந்தியாவின் மொகலாய சாம்ராஜ்யத்தின் இறுதி நாட்களில், தடியெடுத்தவன் எல்லாம் தாண்டவராயர்களான மாதிரி, எத்தியோப்பாவிலும் 1769 -1855 காலகட்டத்தில் மூலைக்கொரு மகராசா வந்து, ராஜ்யத்தைக் குலைத்து, நாட்டாண்மையும், கட்டைபஞ்சாயத்தும் செய்து கொண்டிருந்தனர். 1855ல் லிஜ் காசா ஹைலு ( அருமையான பெயர்!) என்பவர் தன்னை சக்ராதிபதி திவொட்டரோஸ் II (தியோடர்?) என்று முடி சூட்டிக்கொண்டு, வரிசையாக எதிரிகளை வீழ்த்தி, பகை தேடிக்கொண்டார். நல்ல மனிதர்.  சோம்பேறி பிரபுக்களை உதைத்து, ஏழை பாழைக்கு உதவினார். அடிமை வணிகத்தை ஒழிப்பதில் கணிசமான வெற்றி. பிரஜை விரும்பிய ராஜா. ராணுவத்தை துப்பாக்கி, தளவாடங்கள் வாங்கி, தடபுடல் செய்ய பார்த்தார் மாவீரன். எல்லாம் தெரியும், ராஜ தந்திரத்தைத் தவிர. போறாக்குறைக்கு ஆத்திரக்காரன். அதனாலே புத்தி மட்டு. அதான் சாக்கு என்று திரைகடலோடி, இந்தியா எத்தியோப்பியாவை தாக்கியது. நடந்த கதை கேளும்.

மஹராசாவுக்கு விளையாட்டுத்தோழர்கள், சிங்கங்கள்! மனுஷனுக்கு போறாத காலம். போயும்,போயும், ஆங்கிலேயனிடம் டெக்னிக்கல் உதவி நாடினார். சிவப்பு நாடா அவருக்கு மகத்தான உதவி செய்தும், மாட்டிக்கொண்டார். கர்மவினையோ? அவர் விக்டோரியா மஹாராணிக்கு துப்பாக்கி செய்யும் முறையஒ சொல்லிக்கொடுக்க ஆள் அனுப்பச்சொல்லி, கனிவுடன் கடிதம் எழுதி, அக்காலமே அங்கு தூதுராக குந்தியிருந்த கேப்டன் சார்லஸ் டங்கன் கேமரானிடம் கொடுத்து, நேரில் கொடுத்து வருக என்று ஆணையிட்டார். ஆனால், இங்கிலாந்தின் வெளியுறவு (உறவா) துறை, வீண் செலவு வேண்டாம், அனுப்பி வைய் என்றனர். அவரை சூடானுக்கு அனுப்பினர். திரும்பிய கேமரானை, சினம் கொண்டு, ஜெயிலில் போட்டார், நம்ம திவொட்டரோஸ் II. இங்கிலாந்தின் வெளியுறவு (உறவா) துறை கடிதத்தை ‘pending’ லெ போட்டு (இந்த ‘pending’ பற்றி நானூறு பக்கம் எழுதலாம், சுவை கூட்டி, கூட்டி!), ராணி கிட்ட அனுப்பாமல், ஒரு வருடம் வைத்திருந்து,’ மறந்துட்டோமே! அபிசீனியா இந்திய கலோனிய பிரிட்டீஷ் ராஜ் அடியில் அல்லவா வருகிறது’ என்று, அதை இந்தியா பக்கம் திருப்பி விட்டனர். ‘அப்பனுக்கு மேலெ பிள்ளை’ என்ற சொலவடைக்கொப்ப, மஹா கனம் பொருந்திய இந்திய கலோனிய அரசு அந்த கடிதத்தை ‘not even pending!’ என்று ஒதுக்கி விட்டது. இரு வருடங்கள் ஓடின. இருக்கற வெள்ளைக்காரன் எல்லாரையும் ஜெயிலில் போட்டு வதைத்தாரு, சக்ராதிபதி திவொட்டரோஸ் II.

மூன்று வருடங்கள் ஓடின. ராணியம்மா, ‘நம்ம ஆளுங்களை விட்டுடு’ என்ற மிரட்டல் கடிதத்தை. ஹோர்மஸ்ட் ரஸ்ஸம் என்பரின் தலைமையில் ஒரு படையுடன் அனுப்பி வைத்தாள், பெரிய ராஜதந்திரியை போல. எல்லாரையும் ஜெயிலில் போட்டுட்டாரு, சக்ராதிபதி திவொட்டரோஸ் II. இப்போ தான் ரோஷம் வந்தது, பிரிட்டீஷ் கலோனிய அரசுக்கு. ராபெர்ட் நேப்பியர் தலைமையில், இந்தியாவிலிருந்து, ஆங்கிலேயரும், இந்தியர்களும் 30 ஆயிரம் கொண்ட படை ஒன்று அபிசீனியா வந்து, உலக வழக்கத்திற்கு இணங்க, துரோகிகள், உதவியுடன், அரோக்யா என்ற இடத்தில், சக்ராதிபதி திவொட்டரோஸ் II யை தோற்கடித்தது. இன்றைய தினம். வருடம் 1868. நேப்பியர் கெளரவமாக நடத்துவேன் என்றார். ஆனால், அவரோ, தன்மானம் தலை தூக்க, தன்னை சுட்டுக்கொண்டு, தற்கொலை செய்து கொண்டார். துப்பாக்கி ஏது? ரஸ்ஸம் மூலம் ராணியம்மா அனுப்பிய பிஸ்டல்! கர்மவினை எப்படியெல்லாம் இயங்குது, பாருங்கோ!

வாகை சூடிய படை காவற்காட்டை அழித்தது; கோட்டையை இடித்தது; ஊரை கொளுத்தியது: பழமை வாய்ந்த மாதாகோவில்களையிம் அழித்தது. அஃறிணை மீது பழி வாங்கும் கயவாளிக்கூட்டம். இன்றளவும் சக்ராதிபதி திவொட்டரோஸ் II எத்தியோப்பிய மக்களால் மதிக்கப்படுகிறார். 

இன்னம்பூரான்

10 04 2012

http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4b/ST-Theodore.jpg/300px-ST-Theodore.jpg

Inline image 1

Nagarajan Vadivel

unread,
Apr 11, 2015, 9:07:53 PM4/11/15
to மின்தமிழ்

2015-04-12 6:03 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:
கருத்தைப்படிப்பவர் ஏற்கவும் செய்வார்கள், மறுக்கவும் செய்வார்கள்;  இருவருமே கருத்துப்பதிவார்கள்.  எனவே, மறுப்போரை ஒதுக்கி விலகச் சொல்வது, கருத்தாடலுக்கே வழியின்றிச் செய்துவிடுகிறது. 

கருத்து
​ என்பது ​
தனிப்பட்டது.
​  ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும்.  ஒருவர் கருத்தைத் மற்றொருவர் ஏற்கலாம் ஆனால் தவறு என்று மறுக்கவோ வாதிடவோ வழி இல்லை.  தகவல், செய்தி ஆய்வு முடிவுகளில் தவறு இருந்தால் மறுத்துரைக்கலாம்.

கருத்தாடல் என்பது எதிராடல் அல்ல.  ஒவ்வொருவர் கருத்தும் பதிவிடப்படும்போது தொடர்புடைய கருத்துக்கள் இழையாக மாறும்.  எதற்கெடுத்தாலும் எதிர்வினை மறுவினை செய்துகொண்டிருந்தால் இழை பிழைபடும்
இது என் காத்துட்டுக் கருத்து.  ஏற்போர் ஏற்க மறுப்போர் ஒதுக்கி விலக.
இணையவேள்

Oru Arizonan

unread,
Apr 11, 2015, 10:39:58 PM4/11/15
to mintamil
//எதற்கெடுத்தாலும் எதிர்வினை மறுவினை செய்துகொண்டிருந்தால் இழை பிழைபடும்//

சித்தரே, காரணமில்லாமல், எதற்கெடுத்தாலும் எதிர்வினை, மறுவினை செய்வது சரியல்லதான். ஆனால் ஏற்க மறுப்போர் ஒதுக்கி விலகவேண்டுமா என்ன?  சான்றுடன் மறுப்பு வைக்கலாம் அல்லவா?  அதைத்தான் எழுதினேன்.  மற்றபடி, இந்த இழைபற்றி எனக்கு தனிப்பட்ட கருத்து எதுவும் இல்லை.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Nagarajan Vadivel

unread,
Apr 11, 2015, 10:55:01 PM4/11/15
to மின்தமிழ்

2015-04-12 8:09 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:
ஆனால் ஏற்க மறுப்போர் ஒதுக்கி விலகவேண்டுமா என்ன?  சான்றுடன் மறுப்பு வைக்கலாம் அல்லவா?

Opinions
​ are individualistic in nature.  There is nothing right and wrong in the opinion.  Therefore stating that my opinion is wrong is construed as ​
time
​ stealer.
In this topic itself Innamburar stated that the Madras Governer was Napier and not (as stated by me) Manroe.  It is a factual error and subject to correction. My opinion about Maravar and Ethiopian women is opinion based.

The best one can do is to appreciate the opinion when it is acceptable and ignore when the opinion is unacceptable. Why to wage a war of words to contradict the individual opnion

Inaiyavel

Seshadri Sridharan

unread,
Apr 12, 2015, 2:08:37 AM4/12/15
to mintamil
எதியோப்பிய நாகரிகர் முன்னோர் தமிழர் https://groups.google.com/forum/#!msg/mintamil/mYjJa0aLJGU/QrZQsXDoWo4J

க்ருஷ்ணகுமார்

unread,
Apr 12, 2015, 3:09:47 AM4/12/15
to mint...@googlegroups.com
திக்குகள் பல சென்று தமிழுக்குப் பாடுபடும் ஸ்ரீமதி சுபாஷிணி ட்ரெம்மல் அவர்களுடைய பயணக்குறிப்புகள் எப்போதும் போல அனுபவங்களால் நிறைந்த கருத்துக்கருவூலங்கள். அதுவும் கேழ்ப்பார் பேச்சைக்கேட்டு சுத்திச் சுத்தி டர்பனுக்குப் போக நேர்ந்தது!!!!!!!!!!!!

தேமொழி அம்மையார் சொல்வதில் பாதியை ஒத்துக்கொள்கிறேன். பாதியை மறுக்கிறேன். 

\\ கேரளாவில் இருப்பவர்கள் கூட  தமிழக மக்களைவிடக்  கொஞ்சம் வேறுபட்டிருப்பதாகத் தெரியும்...ஆனால் ..  எதியோப்பியர்கள் நமது   பக்கத்து வீட்டுக்காரர் போன்ற தோற்றத்தில் இருப்பார்கள் . \\

எத்தியோப்பியர் விஷயத்தில் ஒப்புக்கொள்கிறேன். மலயாளிகள் விஷயத்தில் ஏற்க முடியாது.  

ஒவ்வொரு முறை பழனி செல்லும் போதும் பழனியம்பதியில் நான் பார்க்கும் சரிக்கு சரி பாதியான மலயாளிகள் அச்சசலாக தமிழர்களையே ஒத்தவர்கள்.  வேறுபாடாகத் தோன்றும் விஷயங்கள் இரண்டு மட்டிலும் தான். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்கள் நெற்றிக்கு இட்டுக்கொள்ளும் களபம் (கோவில் சந்தன ப்ரசாதம்) மற்றும் பெண்டிர் ஜரிகைத்தலைப்புடன் அணியும் வித்தியாசமான வெண்புடவை.

இங்கு பாரதத்தின் வடபகுதியில் நீங்கள் பீஹாருக்கு வந்து பாருங்கள். மேலும் பீஹாரை ஒட்டிய உத்தரப்ரதேசப்பகுதிகளான பனாரஸ் (காசி), தேவரியா, கோரக்பூர் பகுதிகள்.  நிறைய தமிழ்ச்சாயலை ஒட்டிய முகங்களைப் பார்க்க முடியும்.  கருப்பு நிறத்தைச் சொல்லவில்லை.  நிறம் கருப்பாக இருக்கட்டும் அல்லது கோதுமை நிறமாக இருக்கட்டும் ............ முகச்சாயலில் பல பேரை நான் தமிழர்களோ என்று நினைத்து தமிழில் பேச விழைந்து பின்னர் அசடு வழிந்திருக்கிறேன்.

\\ The best one can do is to appreciate the opinion when it is acceptable and ignore when the opinion is unacceptable. \\

ம்............Thats really a wonderful quotable quote sir.  kudos!!!!

தேமொழி

unread,
Apr 12, 2015, 3:52:43 AM4/12/15
to mint...@googlegroups.com
\\Thats really a wonderful quotable quote sir.  kudos!!!!\\

ஹ்ம்ம்... அதாவது 

நான் சொன்னதில்  பாதியை  ஒத்துக் கொண்டு மீதியை கண்டு கொள்ளாமல் இருந்திருக்கலாமோ என மற்றொரு எண்ணமும் உங்களுக்குத் தோன்றியது எனப் புரிந்து கொள்கிறேன்.

..... தேமொழி 

Suba.T.

unread,
Apr 12, 2015, 1:52:52 PM4/12/15
to மின்தமிழ், Subashini Tremmel
பகுதி 3

அடிஸ் அபாபா.. விமானத்திலிருந்து எடுத்த புகைப்படம்

​எத்தியோப்பிய  விமான நிலையத்தில் ஜொஹான்னாஸ்பர்க் நகர் நோக்கி எங்கள் விமானம் புறப்பட்டது.

அடிஸ் அபாபா.. விமானத்திலிருந்து எடுத்த புகைப்படம்​

எனக்கும் தோழி இந்துவுக்கும் இடையில் இருந்த இருக்கையில்  ஒரு ஆப்பிரிக்க இளம் பெண் வந்து அமர்ந்தார். ​கையில் தொலைபேசி.. அதில் பாட்டுகேட்டுக் கொண்டு தன்னை மறந்து தலையசைத்து ரசித்து அந்த  மகிழ்ச்சியில் மூழ்கி இருந்தார் அந்தப் பெண். 

​அடிஸ் அபாபா.. விமானத்திலிருந்து எடுத்த புகைப்படம்

நான் என் கையோடு எடுத்துச் சென்றிருந்த ஒரு நூலை வாசிக்க ஆரம்பித்தேன்.  நூலின் பெயர் பண்டைய தமிழக வரைவுகளும் குறியீடுகளும் என்பது.  இது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் ஒரு தரமான வெளியீடு. தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் இராசு.பவுன் துரையின் நூல். நூலாசிரியர் பல ஆண்டுகளாக தொல்வடிவங்களின் குறியீடுகள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டவர் எனபதனை நூலின் அறிமுகப் பகுதியிலிருந்து தெரிந்து கொண்டேன்.

இந்த நூலில் குறியீடுகளை ஆய்வு செய்யும் முறை, தமிழக நிலப்பரப்பில் காணப்படும் பாறை வரைவுகள், குறியீடுகள் பற்றிய செய்திகள்,  தொல்வடிவங்களின் குறியீடுகள், மட்பாண்ட வரைவுகள்  சிந்துவெளி நாகரிக குறியீடுகளுடன் தமிழக நிலப்பரப்பில் காணப்படும் குறியீடுகளின்  தன்மை ஒப்பீடு, குறியீடுகள் அவை பேசும் மொழி என்ற வகையில் நூல் செல்கின்றது. 

ஏறக்குறைய 6 மணி நேர பயணம் என்பதால் வாசிப்பில் மூழ்கியிருந்தேன். இடையில் விமானத்தில் வீடியோ பார்க்க இந்துவுக்கு உதவி தேவைப்பட்டதால் அவர் என்னை உதவி கேட்க சட்டென்று எங்கள் இடையில் அமர்ந்திருந்த அப்பெண் எந்தத் தயக்கமும் காட்டாது தானே வீடியோ ஆரம்பித்து சினிமா படம் தென்பட உதவினார். அந்தப் பெண்ணிற்கு இயற்கையாகவே உதவும் மணப்பாண்மை. அதிலும் பிறர் ஏதும் நினைத்துக் கொள்ள மாட்டார்கள் என்று நம்பி தானே முன் வந்து உதவினாள். இந்து மகிழ்ச்சியாக ஒரு ஹிந்தி படத்தை பார்த்து ரசிக்கத் தொடங்கி விட்டார். 

இடையில் மீண்டும் எங்களுக்கு உணவு கிடைத்தது. ஆப்பிரிக்க உணவு. சாதமும் மொச்சை, கீரை சேர்த்த கெட்டிக் குழம்பும். ரசித்து சாப்பிட்டேன். கொஞ்சம் சீரகம் சோம்பு மிளகு சேர்த்திருந்தால் சுவை தூக்கலாக இருந்திருக்கும். ஆனாலும் ஆப்பிரிக்க உணவு இதுதான் என்பதை அறிந்து கொண்டு சுவைக்கவும் வேண்டும் அல்லவா..?

 சாப்பிட்டுக் கொண்டே அந்தப் பெண்ணிடம் பேச்சுக் கொடுத்தேன். சரளமாக ஆங்கிலத்தில் பேசினார். தான் நைஜீரியாவில் இருந்து வந்த பெண் என்றும் ஜொஹான்னஸ்பெர்கிற்கு கல்லூரி படிப்பு முடித்து இண்டர்ன்ஷிப் செய்ய செல்வதாகவும் கூறினார். என்னைப் பற்றி விசாரித்தார். தொடர்ந்து சிறிது நேரம் பேசி விட்டு நான் என் நூலில் மூழ்கினேன்.

​காபி கடையில்

ஜொஹான்னஸ்பெர்கில் தரையிறங்கிய பின்னர் ஒரு காபி கட்டாயம் தேவை என்று தோன்றியது.  விமான நிலையத்தில் ஒரு உணவகத்தில் நானும் இந்துவும் காபி ஆர்டர் செய்து அருந்தினோம். அந்த உணவகத்தில் எக்ஸ்ட்ரா லார்ஜ் அளவில் மஃப்பின் விற்பனை செய்து கொண்டிருந்தனர். திரும்பி வரும் போது கட்டாயம் வாங்கி சாப்பிட வேண்டும் என்று நானும் இந்துவும் சொல்லிக் கொண்டோம்.

நாங்கள் பயணம் செய்த குலுலா விமானம்

​ஜொஹான்னஸ்பெர்க்  - விமானத்திலிருந்து எடுத்த புகைப்படம்

சில மணி நேரங்களில் நாங்கள் அடுத்து பயணம் செய்ய வேண்டிய குலுலா விமானம் தயாராக, அதில் ஏறி டர்பன் நகருக்குப் பயணமானோம். ஏறக்குறைய 1 மணி நேர பயணம் அது.

​ஜொஹான்னஸ்பெர்க்  - விமானத்திலிருந்து எடுத்த புகைப்படம்

எனக்கும் இந்துவுக்கும் இடையில் ஒரு தமிழ்பெண். 16 வயது உள்ள பெண் வந்து அமர்ந்தார். அவர் எங்களுடன் இடைக்கிடையே பேசிக்கொண்டேயிருந்ததில் நேரம் சென்றதே தெரியவில்லை. தாம் குடும்பத்தாருடன் டர்பன் நகரில் ஓய்வை கழிக்கச் செல்வதாகவும் தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் தாம் தமிழர் என்பது தெரியும் ஆனால் ஒரு சில வார்த்தைகளைத் தவிர  தமிழ் பேசத் தெரியாது என்று சொன்னார். தமிழ்படம் பார்ப்பார்களாம். இந்திய உடைகளை அணிந்து கொள்வார்களாம். தமிழ் மொழி பேச்சு மட்டும் வழக்கத்தில் இல்லாமல் மறைந்து விட்டது என்று சொன்னார். தமிழ் கற்றுக் கொள்ள விருப்பம் உள்ளதா எனக் கேட்டேன். இருக்கின்றது என மிக நளினமாக தலையாட்டினார். தொடர்ந்து என்னைப்பற்றியும் என் தொழில், நான் டர்பன் செல்லும் நோக்கம் என பேசி தெரிந்து கொண்டார். 

விமானத்தின் மேலிருந்து டர்பன் நகரை பார்த்து ரசித்துக் கொண்டே டர்பனில் மாலை 6.10 வாக்கில் தரையிறங்கினோம். எங்கள் பைகளை எடுத்துக் கொண்டு வெளியே வரும் போது எங்களை அழைத்துச் செல்ல ஏற்பாட்டாளர்கள் காத்திருப்பர் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் வெளியே வந்தபோது ஒரு சிறு அதிர்ச்சி..

​​தொடர்வோம் நம் பயணத்தை,  டர்பனுக்கு....

சுபா

Suba.T.

unread,
Apr 12, 2015, 1:54:07 PM4/12/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-04-12 0:32 GMT+02:00 செல்வன் <hol...@gmail.com>:
எத்தியோப்பிய இஞ்சிரா ரொட்டி, அதற்கு கொடுக்கப்டும் பருப்பு/கீரை கர்ரி, உணவை கையால் உண்ணும் அவர்கள் வழிமுறை எல்லாமே தமிழகத்தை நினைவுபடுத்தும்

​ஆமாம். தோசையை நினைவு படுத்தும் இங்கு ஸ்டுட்கார்ட்டில் நல்ல உணவகம் ஒன்று இருக்கின்றது.

சுபா​

எத்தியோப்பிய உணவகங்களில் ஒரே தட்டில் குடும்பமாக உண்டு அமரும் வகையில் இருக்கும். தமிழருக்கும், எத்தியோப்பியருக்கும் நெருங்கிய வாணிக தொடர்பு உண்டு. தமிழகத்தில் கிடைக்கும் ரோமானிய காசுகள் எல்லாமே எத்தியோப்பியாவில்/எகிப்தில் இருந்து வந்தவையே. சங்க இலக்கியங்களில் வரும் யவனர் எத்தியோப்பியரே..பண்டைய ரோமானிய பேரரசு எகிப்து, எத்தியோப்பியா வரை பரவி இருந்தது. ரோமானிய/தமிழக வணிக உறவு என்றவுடன் பலரும் இத்தாலிக்கும், தமிழ்நாட்டுக்கும் வணிக உறவு இருந்ததாக நினைப்பார்கள். அது உண்மை அல்ல..இத்தாலிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே கடல்வழி தொடர்பு ஏற்பட வாஸ்கடோகாம காலம் வரை வழியில்லை

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Suba.T.

unread,
Apr 12, 2015, 1:55:03 PM4/12/15
to தேமொழி, மின்தமிழ்
2015-04-12 0:50 GMT+02:00 தேமொழி <jsthe...@gmail.com>:
///
எத்தியோப்பிய விமானப் பணிப் பெண்களும் ஆண்களும் தமிழர்களை ஒத்த முகச்சாயலிலும்  உடல் சாயலிலுமே தென்படுகின்றனர். அதிலும் குறிப்பாக பெண்கள். இவர்களுக்கு இந்திய ஆடைகளை உடுத்தி சாலையில் நடக்கச் சொன்னால் தமிழ் பெண்கள் என்றே எல்லோரும் ஒத்துக் கொள்வர். தலைமுடி வகையில் மட்டும் ஒரு சிறு வித்தியாசத்தைக் காண்கின்றேன்.
///

ஆமாம் சுபா, நீங்கள் குறிப்பிடுவதை நானும்   கவனித்துள்ளேன். தமிழர்  சாயல் எத்தியோப்பியரிடம் அதிகம்.

கேரளாவில் இருப்பவர்கள் கூட  தமிழக மக்களைவிடக்  கொஞ்சம் வேறுபட்டிருப்பதாகத் தெரியும்...ஆனால் ..  எதியோப்பியர்கள் நமது   பக்கத்து வீட்டுக்காரர் போன்ற தோற்றத்தில் இருப்பார்கள் .

பேராசிரியர் பெர்ஹானு மென்ஞ்ட்சு  என்ற எங்கள் ஆசிரியர் நம் ஊர்காரர் போலவே இருப்பார்.  அவர் பேசும் ஆங்கிலம்  கொஞ்சம் ராகம் போட்டுப்  பாடுவது போல இருக்கும்  

​டத்தில் பார்க்க தமிழர் முகச்சாயல் தான்.

சுபா
 
Suba.T.

unread,
Apr 12, 2015, 2:01:04 PM4/12/15
to மின்தமிழ், Subashini Tremmel
நண்பர் பாலு குறிப்பிடும் அக்கட்டுரையை படிக்க வாய்ப்பு அமைந்தால் பயனுள்ளதாக இருக்கும்.

சுபா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Suba.T.

unread,
Apr 15, 2015, 6:32:02 PM4/15/15
to மின்தமிழ், Subashini Tremmel
பகுதி 4

டர்பன் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தவுடன் ஆப்பிரிக்க உலகத் தமிழ் பண்பாட்டுக் கழகத்தின் நண்பர்கள் யாராகினும் இருப்பார்கள். ஆக உடனேயே புறப்பட்டு தங்கும் விடுதி சென்று விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். வெளியே வந்து ஏறக்குறைய 10 நிமிடங்களாகியும் அங்கு யாரையும் காணவில்லை. மனதில் மெலிதாக ஒருவித அலுப்பும் எரிச்சலும் படர ஆரம்பித்தது.

சரி.. அதிக நேரம் காத்திருக்க வேண்டாம் என நினைத்து எனது தொலைபேசியில் கொடுக்கப்பட்டிருந்த தொடர்பாளர் ஒருவரது எண்ணை அழைத்தேன். அவரிடம் பேசியபோது யாரும் விமான நிலையம் வரவில்லை எனச் சொல்லி டாக்ஸி எடுத்து வந்து விடுங்கள் என்று ஒரு அதிர்ச்சியை தெரிவித்தார். அவரிடம் தொடர்பை துண்டித்து விட்டு ஏற்கனவே ப்ரான்ஸிலிருந்து வந்திருந்த நண்பர் சாம் விஜய்க்கு தொலைபேசியில் அழைத்து நாங்கள் வந்து விட்டதையும் விமான நிலையத்தில் யாரும் இல்லை என்ற விபரத்தையும் தெரிவித்தேன். அவர் உடன் ஏற்பாட்டளர்களைத் தொடர்பு கொண்டதில் ஏற்கனவே ஒருவர் வந்து காத்திருப்பதாக எனக்குச் செய்தியைச் சொன்னபோதுதான் சற்று மனம் அமைதி அடைந்தது. பேசிக் கோண்டிருக்கும் போதே ஒருவர் எங்கள் அருகில் வந்து எங்கள் பெயரைச் சொல்லி தம்மை அறிமுகப் படுத்திக் கொண்டார்.

ஏற்பாட்டுக் குழுவில் இருக்கும் நண்பர் அப்துல்லா தான் அவர். மிக அன்பான மனிதர். அவரிடம் நடந்ததைச் சொன்னேன். அவருக்கு சற்றே குழப்பமாகிவிட்டது. பின்னர் நான் அழைத்த எண்ணைப் பார்த்து அது ஜொஹான்னஸ்பர்க் தொலைபேசி எண் என்றும் அவர்களுக்கு இந்த ஏற்பாட்டு விஷயம் தெரியாதென்றும் கூறினார்.

பின்னர் தாம் வேறொரு  பகுதியில் கனடாவிலிருந்து வந்திறங்கிய கனடா பேராளர்கள் உதயன் பத்திரிக்கை ஆசிரியர் திரு. லோகேந்திரலிங்கம், திரு.துரைராஜ் ஆகியோரை தேடி அழைத்துக் கொண்டு வருவதில் தாமதமாகி விட்டது எனத் தெரிவித்து எங்களை வாகனத்திற்கு அழைத்துச் சென்றார். 

டர்பனில் அப்போது ஏறக்குறைய மாலை 6.50 எட்டியிருந்தது. மெலிதான இருள் படர்ந்திருந்தது. சீதோஷ்ணம் ஏறக்குறைய 26 டிகிரி இருக்கலாம் என்ற வகையில் இதமான வெப்பம்.. மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.

கனடாவிலிருந்து வந்த நண்பர்களிடமும் திரு.அப்துல்லாவிடமும் பேசிக் கொண்டே நாங்கள் தங்க வேண்டிய விருந்தினர் தங்கும் விடுதிக்கு வந்தடைந்தோம். உம்ஷ்லாங்கா பகுதியில் கடற்கரை அருகே அமைந்திருக்கும் ஒரு 4 நட்சத்திர ஹோட்டல் அது.முகப்பிலேயே பிரமாண்டமான அலங்காரம். 

மேலே வரவேற்பறைக்குச் செல்வதற்குள் திரு.மிக்கி செட்டியும் வந்து விட்டார். எங்கள அனைவருக்கும் வரவேற்பு கூறி அழைத்துச் சென்றார். எங்கள் அறைகள் பற்றிய தகவல்கள் தெரிந்து கொண்டபின் நேராக உணவு இருக்கும் பகுதிக்குச் சென்று வந்திருக்கும் நண்பர்களைச் சந்தித்து விட்டு பின்னர் அறைக்குச் செல்லலாம் என எனக்குத் தோன்றியது. இந்துவிடம் சொல்ல அவருக்கும் சம்மதம். இருவருமாக மாலை விருந்து நடந்து கொண்டிருக்கும் இடத்திற்குச் சென்றோம்.

அங்கே ஏற்கனவே முன்னர் அறிமுகமான சில நண்பர்களும் புதிய நண்பர்களும் இருந்தனர். என்னைப் பார்த்ததும் வந்து அழைத்துச் சென்ற மலேசிய பிரதினிதியும் கழகத்தின் துணைத்தலைவருமான திரு,ப.கு.சண்முகம் இருந்த  மேசையிலேயே அமர்ந்து கொண்டோம். சற்று நேரத்தில் அங்கு வந்த பாரத் பல்கலைக்கழக் துனை வேந்தர் டாக்டர். பொன்னவைக்கோவும் எங்களுடன் இணைந்து கொண்டார். 

திரு.ப.கு.சண்முகம், சுபா, டாக்டர்.பொன்னவைக்கோ, புலவர்,சேதுராமன், இந்து

மாலை உணவை சுவைக்கத் தொடங்கினோம். மிதமான காரத்தில் நல்ல சுவையுடன் உணவு இருந்தது. இந்திய வகை உணவையே நான் எடுத்துக் கொண்டேன்.  சேமியா பாயசம் மிக கெட்டியாக இனிப்புச் சுவை தூக்கலாக இருந்தது. 

ஏறக்குறைய 3 மணி நேரம் அங்கேயே இருந்து நணபர்களுடன் பேசி விட்டு இயக்கத்தின் மகளிர் பகுதி தலைவி பொன்னி வீரப்பனுடன் அவர் அறையில் தங்கிக் கொள்ளச் சென்றேன். மறு நாள் காலை 7 மணிக்கெல்லாம் உணவை முடித்து 9 மணிக்கெல்லாம் பேருந்தில் பட்டமளிப்பு விழாவுக்கு செல்ல தயாராகவேண்டும் என்று கட்டளை இருந்தது. அதை நினைத்துக் கொண்டு சிறிது கதை பேசி விட்டு பயணக் களைப்பும் அதிகரிக்க உறக்கம் வந்து விட்டது.

தொடரும்..

சுபா

Nagarajan Vadivel

unread,
Apr 15, 2015, 9:38:58 PM4/15/15
to மின்தமிழ்
கணிணியத் தேடி எத்தோப்பிய மங்கையர் சிலர் படங்கள் கீழே

இணையவேள்
டிஸ்கி: காலை வேளையில் இப்படியா என்று வாலிப வயோதிக மற்றும் பெண்ணியலார்கள் கொடி தூக்க வேண்டாம்.  பிடிக்கவில்லை என்றால் விலக்கிவிடவும்

--

Suba.T.

unread,
Apr 16, 2015, 2:30:13 AM4/16/15
to மின்தமிழ், Subashini Tremmel

2015-04-16 3:38 GMT+02:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

​ஜெர்மனியில் வாழும் எத்தியோப்பிய பெண். 2012 என நினைக்கின்றேன். ஜெர்மனியின் டாப் மோடல் என தேர்ந்தெடுக்கப்பட்டவர். ​இங்கே உள் நாட்டில் புகழ்பெற்றவர்.

சுபா

Suba.T.

unread,
Apr 16, 2015, 4:25:23 PM4/16/15
to மின்தமிழ், Subashini Tremmel
பகுதி 5

முதல் நாள் குறிப்பிட்டது போல காலை 7 மணி வாக்கில் தயாராகி ஹோட்டலில் காலை உணவுக்கு நண்பர்கள் அனைவரும் வந்து சேர்ந்து விட்டோம். ஹோட்டலில் தங்கியிருந்த 5 நாட்களும் ஹோட்டல் பணியாளர்கள் மிகப் பணிவுடனும் அன்புடனும் வருகையாலர்களான எங்களுடன் பழகினர். திரு.மிக்கி செட்டியின் நண்பரின் ஹோட்டல் அது என்பதும் கூடுதல் செய்தி. மிகத் தரமான நவீன வசதிகளைக் கொண்ட ஒரு ஹோட்டல் அது. 

​ஹோட்டல் அறையிலிருந்து,  இந்திய பெருங்கடல், அதிகாலை நேரக் காட்சி

காலை உணவின் போதும் மாலை உணவின் போது பணியாளர்கள் அனைவரும் எங்களின் தேவையைக் கேட்டறிந்து தக்க வகையில் பணிவிடைகளைச் செய்தனர். அவர்களில் சிலர் கல்லூரிகளில் படிப்பவர்கள். பகுதி நேரமாக இங்கே பணிபுரிகின்றனர் என்ற விசயத்தையும் அறிந்து கொண்டேன். 

ஹோட்டல் பணியாளர்களுடன் நானும் சாம் விஜயும்

காலை உணவு முடித்து ஏறக்குறைய 9 மணி அளவில் எங்களுக்காகத் தயாராக இருந்த பேருந்தில் அனைவரும் ஏறி டர்பன் நகரின் மையப்பகுதியில் இருக்கும் எம்டிஎஸ் மண்டபத்திற்குப் பயணமானோம். அங்கு தான் தேர்ச்சி பெற்ற தமிழாசிரியர்களுக்கு பட்டமளிப்பு விழா ஏற்பாடாகியிருந்தது.

​மலேசியப் பேராளர்களுடன்

பேருந்தில் செல்லும் போது கனடாவிலிருந்து வந்திருந்த செய்தியாளர் ஒருவர் மிக அருமையாக ரேடியோ ஒலிபரப்பு செய்வது போல மைக்கை வைத்து பக்திப்பாடல், காலைச் செய்தி என நல்ல பொழுது போக்கு அம்சங்களை வழங்கினார். இப்படி இனிமையாக பாடல்களையும் செய்திகளையும் கேட்டுக் கொண்டே 25 நிமிடம் பயணம் செய்தது மிக சுவாரசியமாக இருந்தது. திடீரென்று பொறுப்பாளர் என்னை அழைத்து வந்திருப்போருக்கு நன்றியுரை கூறுமாறு கேட்டுக் கொண்டார். இந்த திடீர் அழைப்பை நான் எதிர்பார்க்கவில்லை. சிறிய நன்றியுரையை பேருந்திலேயே நான் செய்து முடிக்க, பொறுப்பாளர் இனிமையான வார்த்தைகளைச் சொல்லி என்னையும் மற்றவர்களையும் சிரிக்க வைத்து விட்டார்.

மண்டபத்திற்குள் சென்ற எங்களைச் சிறப்பு விருந்தினர் பகுதியில் அமர வைத்தனர். ஏற்கனவே பட்டம் பெறப்போகும் மாணவர்கள் ஒரு தனிப்பகுதியில் அமர்த்தப்பட்டிருந்தனர். ஏராளமான பொது மக்களும் வந்திருந்தனர். தமிழ்ச்சங்கங்களின் பிரதினிதி அரசாங்க அலுவலர்கள், பட்டம் பெறுவோரின் குடும்பத்தினர்  என அரங்கம் நிறைந்திருந்தது.

பட்டம் பெற்ற தென்னாப்பிரிக்க தமிழ் மாணவர்கள்

மேடையில் எஸ்.ஆர்.எம்.கல்லூரியின் வேந்தர், திரு.மிக்கி செட்டி, இந்திய தூதர், மற்றும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பொறுப்பாலர்கள் என சிலர் அமர்த்தப்பட்டனர்.

தென்னாப்பிரிக்காவில் முறையாக பள்ளிகளில் தமிழ் போதிக்க பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லாத குறையைப் போக்க வேண்டும் என்று திரு.மிக்கி செட்டி தமிழகத்தின் பல கல்லூரிகளை நாடியிருக்கின்றார். ஆயினும் ஒரு சிறப்பு ஆசிரியர் பயிற்சி என்பது சாத்தியப்படாது என்ற நிலையில் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் அப்போதைய துணைவேந்தராகிய டாக்டர்.பொன்னவைக்கோவை அணுக அவர் ஒரு பிரத்தியேக பாடத்திட்டத்தை இதற்காக உருவாக்கலாம் என நம்பிக்கைக் கூறி அதற்கு டாக்டர்.இல.சுந்தரத்தைப் பொறுப்பாளராக அமைத்து டர்பனில் வகுப்புக்கள் நடைபெற ஏற்பாடு செய்து தந்திருக்கின்றார். ஆசிரியர் பயிற்சி முடித்து தேர்வும் நடைபெற்றதில் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 

நிகழ்ச்சி பொறுப்பாளர் திரு.மேஸ்திரி வரவேற்புரை ஆற்றுகின்றார். மேடையில் சிறப்பு விருந்தினர்கள்

இந்த வகுப்புக்களை ஏற்பாடு செய்வதிலிருந்து மாணவர்கள் கட்டணம் வரை என்று பொருளாதார வகையில் உதவியதோடு இதற்காக சென்னை சென்று பல முறை நேரடியாக பாடத்திட்டம் முறையாக உருவாக்கப்படுவதையும் கண்காணித்தும் ஏற்பாடுகள் செய்தும் உதவியதில் திரு.மிக்கி செட்டியின் பங்கு மிகப் பெரியது.
 
டர்பன் நகரில் தமிழ் மக்களின் குழந்தைகள் தமிழ் பேசுவது என்பது நடைமுறையில் இல்லை. இதனை மாற்ற வேண்டுமென்றால் முறையான தமிழ் வகுப்புக்களை நடத்தும் திறன் பெற்ற தக்க பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தேவை என்பதை நன்கு உணர்ந்து அதனைச் செயல் படுத்தும் நடவடிக்கையில் தன்னை முழுமையாக அர்பப்ணித்துக் கொண்டவர் திரு.மிக்கி செட்டி. டர்பன் நகரில் இருக்கும் தமிழ்சங்கங்கள் ஏனைய தமிழ் சமூக நல இயக்கங்கள் ஆகியவற்றுடன் நெருக்கமான தொடர்பில் இருப்பவர் இவர்.

திரு.மிக்கி செட்டி தென்னாப்பிரிக்க நகர் தமிழ் மக்களுக்குக் கிடைத்திருக்கும் ஒரு வரப்பிரசாதம் என்றால் அது மிகையில்லை.

டர்பனில் பயணத்தைத் தொடர்வோம்..

சுபா 

Oru Arizonan

unread,
Apr 16, 2015, 4:27:35 PM4/16/15
to mintamil
சுபா,

நீங்கள் எழுதியிருக்கவிட்டால் தமிழ்ப்பெண் என்றுதான் யாரும் நினைப்பார்கள்.

ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Suba.T.

unread,
Apr 18, 2015, 4:49:45 PM4/18/15
to மின்தமிழ், Subashini Tremmel
​பகுதி 6

பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள  வந்திருந்த அனைவருக்குமே குதூகலம் மனம் முழுதும் நிறைந்திருந்தது என்றாலும் பட்டச் சான்றிதழை அந்தச் சிறப்பு மிக்க அரங்கில பல முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பெறக் காத்திருந்த மாணவர்கள் முகத்தில் தான் விவரிக்க முடியாத மகிழ்ச்சியும் பூரிப்பும் பெருமையும் குடிகொண்டிருந்தது. எப்போது அந்த பட்டமளிப்பு தருணம் வரும் என அவர்கள் ஆவலுடன் காத்திருப்பதை அவர்கள் முகத்திலேயே உணர முடிந்தது. 

எங்களுக்கு உள்ளே சென்றதும் VIP  என்று பெயரிட்ட ஒரு அட்டையைக் கொடுத்து கழுத்தில் அணிந்து கொள்ளச் சொல்லி சிறப்பு பிரமுகர்களுக்கு ஒதுக்கபப்ட்ட முன் இருக்கைகளில் அமர வைத்தனர். குறித்த நேரத்தில் சிறப்பு விருந்தினர்களும் வந்து சேர நிகழ்ச்சி ஆரம்பமானது. எஸ்.ஆர்.எம் கல்லூரி வேந்தர், பின்னர் டாக்டர்.பொன்னவைக்கோ, திரு.மிக்கி செட்டி என ஒவ்வொருவராக தங்கள் உரையை ஆற்றினர். தங்கள் உரையில் எவ்வகையில் இந்த ஆசிரியர் பயிற்சி வகுப்பு சாத்தியமானது என்று விரிவாக எடுத்துரைத்தனர்.

அடுத்து பேச வந்த தென்னாப்பிரிக்க பாராளுமன்ற சட்ட சபை உறுப்பினர் திரு லூகி செட்டி அவர்கள் தோற்றத்தில் ஆப்பிரிக்க இனத்தவரைப் போல காட்சியளித்தாலும் அவர் தமிழர் தாம் என்பதை அவர் பெயரைக் கொண்டும் அவர் கூறிய தகவல்களைக் கொண்டும் அறிந்து கொண்டேன். இவருக்கு தமிழ் ஒரு வார்த்தையும் தெரியா விட்டாலும் தமிழ் சினிமா பாடல் இவருக்கு தமிழ் மொழி மேல் தீரா காதலையும் ஈர்ப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றது என்பதை அவரது பேச்சிலிருந்து உணர முடிந்தது.  பேச்சோடு நிறுத்திக் கொள்ளாமல் தமக்குத் தெரிந்த  ஒரு த மிழ்ப்பாடலையும் பாடினார். எங்கே அந்த வெண்ணிலா என்ற பாடலைப் பாடி அவையில் இருந்த அனைவரின் கைத்தட்டலையும் பெற்றார்.

தொடர்ந்து பேச வந்த தென்னாப்பிரிக்காவிற்கான இந்திய தூதர் திரு.ரங்கராஜன் அவர்கள் முதலில் தமிழ் தெரியாதவர் போல பேச ஆரம்பித்து பின்னர் இயல்பான தமிழில் பேசினார். தமிழரான இவரே தென்னாப்பிரிக்காவில் தூதரகத்தில் தமிழ் படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக தமிழ் போதனை நடக்க ஏதாவது உதவிகள் செய்யலாம். ஆனால் செவதாக அறியமுடியவில்லை.

பட்டமளிப்பிற்குப் பின்னர் இலங்கை ​ தமிழ்த்தேசியக் கட்சியின் துணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. மாவை சோனாதிராஜா அவர்கள் பேச அழைக்கப்பட்டார். பேச்சின் போது ஒரு மனிதருக்கு எவ்வகையில் ஒழுக்கம் என்பது சிறந்த பண்பாக அமைகின்றது என்று நன்கு எடுத்துரைத்தார். தொடர்ந்து பேசுகையில் இலங்கையில் தற்போது தமிழ் மக்கள் இன்னமும் மீள் குடியேற்றம் செய்யப்படாமல் இருக்கும் நிலை பற்றியும் சில தகவல்கள் பேசத் தொடங்கினார். ஆனால் இப்பேச்சினை அவர் தொடர விடாத வகையில் இந்திய தூதர் நிகழ்ச்சி நடத்துனரை சைகை செய்து அழைத்து பேச்சை நிறுத்துமாறு கேட்டுக் கொள்ளச் செய்ததை மேடையின் கீழ் அமர்ந்திருந்த அனைவருமே பார்த்தோம். 

இலங்கை தமிழ் மக்களின் அகதிமிகாம்களின் நிலை பற்றிய செய்திகளை அவர் தொடர்ந்து சில நிமிடங்கள் பேச அனுமதிப்பதில் என்ன பிரச்சனை இருக்கின்றது என நண்பரக்ள் எங்களுக்குள் உரையாடிக் கொண்டோம். உலகின் ஒரு பகுதியில் தமிழ் மக்கள் மகிழ்ச்சியான சூழலில் நல்ல நிகழ்வில் பங்கெடுக்கும் அதே வேளை தங்கல் உடமைகளை இழந்து வசிப்பிடங்களை இழந்து தங்கள் தேசத்திலேயே அகதிகள் போல அகதி முகாம்களில்வாழும் தமிழர்கள் பற்றி ஒரு தமிழர்கள் கூடியிருக்கும் மேடையில் சில நிமிடங்கள் பேசக் கூடாதா..?  இந்தியத் தூதரின்  சைகை செய்து நிறுத்தச் சொல்லி கேட்டுக் கொண்ட இச்செயல் அவர் மேல்  கீழே அமர்ந்திருந்த பலருக்கு அதிருப்தியை உருவாக்கியது.

தொடர்வோம் டர்பனில்..

சுபா

Suba.T.

unread,
Apr 22, 2015, 4:56:05 PM4/22/15
to மின்தமிழ், Subashini Tremmel
​பகுதி 7

பட்டமளிப்பு விழா மதியம் ஒரு மணி வாக்கில் இனிதே முடிவடைந்தது. அதன் பின்னர் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த எங்களை எம்டிஎஸ் மண்டபத்தின் முன் பக்கத்தில் இருக்கும் பிரமாண்டமான மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.

உள்ளே நுழையும் போது ஒரு வெள்ளையர்.. கையில் கேமராவுடன் நின்று கொண்டிருந்தவர் என்னைப்பார்த்து நிகழ்ச்சிக்கு வந்த விஐபி யா எனக் கேட்டார். ஆமாம் என்றேன். உடன் இங்கே வாருங்கள் என என் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு போய் வாசலில் இருந்தபெரிய விநாயகர் உருவச் சிலைக்கு முன் ஏற்கனவே அங்கு நின்று கொண்டிருந்த 3 பேருடன் நிற்க வைத்தார். என்ன செய்கின்றார் என முதலில் புரியவில்லை. பின்னர் அங்கு வந்த திரு.மிக்கி செட்டியின் மகள் நிரன், அவர் உள்ளூர் பத்திரிக்கையான  Post  பத்திரிக்கையின் செய்திக்காக படம் பிடிக்க வேண்டும், அதற்காகத்தான் என் விளக்கினார். விஷயம் புரிந்ததும் நானும் அந்த மூவருடன் இணைந்து  கொண்டு புகைப்படத்திற்கு; புன்னகைத்தேன்.

இது முடிந்து உள்ளே சென்றோம். முதல் பகுதியில் இருந்த பெரிய வட்ட மேசைகளில் விருந்தினர்களைப் பொறுப்பாளர்கள் அமர வைத்துக் கொண்டிருந்தனர். நானும் சென்று அவர்கள் காட்டிய பகுதியில் ஏனைய சில நண்பர்களுடன் அமர்ந்து கொண்டேன்.

விருந்தினர்கள்

கலை நிகழ்ச்சிகளுடன் மதிய உணவு என்ற வகையில் ஏற்பாடாகியிருந்தது. மேடையில் பிரமாண்ட உருவத்திலான நர்த்தன விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. சற்றே நேரத்தில் இன்னிசை தொடங்கவிருப்பதற்கான ஆயத்த வேலைகள் தொடங்கின. சரி..  கச்சேரி செய்யவிருக்கின்றார்கள் என நினைத்துக் கொண்டு நண்பர்களுடன் பேச எத்தனிக்கையில் இன்னிசை தொடங்கியது. என்ன ஆச்சரியம்.. தேவாரப் பாடலை மிக நேர்த்தியாக தொடங்கினார் இசைக்கலைஞர் திரு.கதிரேசன். அதன் பின்னர் தொடர்ச்சியாக  சீர்காழி கோவிந்தராசனின் பாடல்கள் எனப் பாடி தமிழிசையால் அந்த மண்டபத்திற்குள் இருந்தோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அவரோடு அவர் துணைவியார் ஹார்மோனியம் வாசித்துக் கொண்டிருந்தார்கள். இன்னொரு கலைஞரான காமினி அவர்களும் பல அருமையான தமிழ் கீதங்களைத் தொடர்ந்து பாடினார்.

இசைக்கலிஞர் திரு.கதிரேசன், திருமதி.காமினி

ஜனவரி மாதத்தில் மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மானாட்டில் பெயரளவிற்கும் கூட தொடக்க நிகழ்வில் ஒரு தமிழ்ப்பாடல் இல்லையே என வருந்திய எனக்கு இது மாபெரும் வியப்பை அளித்தது. தென்னாப்பிரிக்க தமிழர்களின் தமிழ் உணர்வு என்னை மகிழ்ச்சியில் திளைக்க வைத்தது என்றே சொல்வேன். இதனை நண்பர்களிடம் சொல்லி என் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டேன். 

நடனக் கலைஞர்

இதனைத் தொடர்ந்து நாட்டிய நிகழ்ச்சி ஆரம்பித்தது. தோடுடைய செவியன் என்ற தேவாரப் பாடலுக்கு அபிநயம் பிடித்தார் ஒரு இளம் மங்கை. மிக நேர்த்தியான நடன அசைவுகள்.  முழு நடனமும் ஒரு சிறு குறையும் சொல்ல முடியாத அளவில்  அத்தனை சிறப்பாக இருந்தது.

எம்டிடிஎஸ் தமிழ் சங்கத் தலைவரும் மண்டபத்தின் உரிமையாளரும் குத்து விளக்கு ஏற்றுகின்றனர்

இதற்கிடையே உணவு பரிமாரப்பட்டது. வந்திருந்த அனைவருக்கும் அன்று மதிய உணவு விருந்து வழங்கப்பட்டது. அன்று அந்த நிகழ்வில் தான் முதன் முதலாக திரு.மிக்கி செட்டியின் மனைவியை சந்தித்தேன். மிக எளிமையாக வந்து பேசினார். அன்று பொதுவாக ஒரு அறிமுகம் என்ற வகையிலேயே எங்கள் அறிமுகம் ஆனது.

திரு.மிக்கி செட்டியின் மகள் நிரன் சான்

சற்று நேரத்தில் சம்போ சிவ சம்போ என்ற பாடல் ஒலிக்க ஒரு இளைஞனும் இளம் பெண்ணும் மேடையில் தோன்றினார்கள். நடனமாடிய அந்த இளம் பெண் நண்பர் திரு.சின்னப்பன் கோகி தம்பதியரின் ஒரே செல்ல மகள் சிவானி. அபாரமான முத்திரைகள். முக பாவனைகள் என என்னை மெய்மறக்கச் செய்தாள் சிவானி. முழு நடனம் முடியும் வரை நடனத்திலேயே என் கருத்தும் கவனமும் இருந்தது. அவ்வளவு லயத்துடன் நடனமாடினாள் சிவானி. 

சிவானி இன்னொரு நாட்டியக் கலைஞருடன்
​​
கலை என்பது வாழ்வில் அற்புதமான ஒரு அம்சம். தமிழ் மொழி என்பது பேச்சு வழக்கில் இல்லையென்றாலும் தமிழ் இசை தமிழ் கலை என்ற அளவில் தென்னாப்பிரிக்க மக்களின் இரத்தத்தில் கலந்து இருப்பதை அறிந்து அந்த உணர்வில் என்னை சற்றே மறந்தேன்.

தொடர்வோம்.. டர்பனில்....

சுபா

Suba.T.

unread,
Apr 27, 2015, 5:23:26 PM4/27/15
to மின்தமிழ், Subashini Tremmel
பகுதி 8

விருந்து நிகழ்ச்சியின் போது இடையில் நண்பர் ஒருவர் ஒரு பெரியவரை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். அவர்தான் திரு.செல்வன் கவண்டர். டர்பன் நகரில் இயங்கும் மியர்பேங்க் தமிழ்ப்பாடசாலையின் தலைவராக இயங்கி வருபவர். 

அவரோடு உரையாடியதில் மியர்பேங்க் தமிழ்ப்பாடசாலை பற்றி சில தகவல்கள் அறிந்து கொள்ள முடிந்தது. நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த எம்டிடிஎஸ் மண்டபத்தின் வலது புறத்தில் உள்ளது இந்தப் பாடசாலை. கட்டிடத்தின் இரண்டு மாடிகளில் தமிழ்ப்பாடசாலையின் வகுப்புக்கள் இருக்கின்றன.

பாடசாலையைச் சென்று பார்க்கலாமா என நான் வினவிய உடன் சற்றும் தயங்காது என்னை அழைத்துக் கொண்டு சென்றார் திரு.செல்வன் கவண்டர்.  மண்டபத்திற்குச் செல்லும் வழியில் ஒரு திருவள்ளுவர் சிலையை வைத்திருக்கின்றனர். இந்தப் பள்ளி வகுப்பறையை திரு.நடேசன் ஒடையார் என்பவர் திறந்து வைத்தார் என்ற தகவலை முன்வாசல்பகுதியில் உள்ள அறிவிப்பில் காண முடிந்தது. 

மாடியில் ஏறிச்சென்று பள்ளியின் அறைகளை எனக்கு காட்டினார். பிறகு மேல்மாடியில் இருக்கும் அலுவலக அறைக்கும் என்னை அழைத்துச் சென்று அங்குள்ள புகைப்படங்களைக் காட்டி விளக்கினார். 

1936ம் ஆண்டு தொடங்கப்பட்டது இந்த மியர்பேங்க் தமிழ்ப்பாடசாலையும் அதற்கு அடிப்படையாக இருக்கும் தமிழ்ச்சங்கமும். தொடர்ந்து பல தமிழார்வளர்களின் முயற்சியால் தமக்கென்று ஒரு கட்டிடம், மண்டபம் என மிகச் சிறப்பாக இன்று வளர்ந்திருக்கின்றது இந்த மியர்பேங்க் தமிழ்ச்சங்கமும் தமிழ்ப்பாடசாலையும்.

மீண்டும் விருந்து நடைபெறும் இடத்திற்கு வந்து அங்கு நண்பர்களோடு உரையாடிக் கொண்டிருந்ததில் சில மணி நேரங்கள் கழிந்தன. தமிழிசை பக்திப்பாடல்கள் முடிந்து தமிழ் சினிமா பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தனர் இசைக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் பாடிய ஏ.ஆர். ரகுமானின் வெள்ளைப்பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே என்ற பாடல் மிக இனிமையாக இருந்தது. பாடகர்கள் அனைவருமே தமிழ் பேசத்தெரியாத நிலையிலும் ஆங்கிலத்தில் எழுதி வைத்துக் கொண்டு பாடுகின்றார்கள். ஆனாலும் உச்சரிப்பில் தவறுகளை அதிகமாகக் காணமுடியவில்லை. தென்னாப்பிரிக்காவில் டர்பன் நகரில் இத்தகைய இசைக்கலை ஆர்வம் நிறைந்த இளைஞர்களைக் காண்பதில் மனதிற்கு உவப்பாகவே இருந்தது.

தொடரும்..
சுபா

2015-04-22 22:56 GMT+02:00 Suba.T. <ksuba...@gmail.com>:
​பகுதி 7

பட்டமளிப்பு விழா மதியம் ஒரு மணி வாக்கில் இனிதே முடிவடைந்தது. அதன் பின்னர் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த எங்களை எம்டிஎஸ் மண்டபத்தின் முன் பக்கத்தில் இருக்கும் பிரமாண்டமான மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.
--

செல்வன்

unread,
Apr 27, 2015, 9:15:23 PM4/27/15
to mintamil

2015-04-27 16:23 GMT-05:00 Suba.T. <ksuba...@gmail.com>:
தமிழிசை பக்திப்பாடல்கள் முடிந்து தமிழ் சினிமா பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தனர் இசைக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் பாடிய ஏ.ஆர். ரகுமானின் வெள்ளைப்பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே என்ற பாடல் மிக இனிமையாக இருந்தது. பாடகர்கள் அனைவருமே தமிழ் பேசத்தெரியாத நிலையிலும் ஆங்கிலத்தில் எழுதி வைத்துக் கொண்டு பாடுகின்றார்கள். ஆனாலும் உச்சரிப்பில் தவறுகளை அதிகமாகக் காணமுடியவில்லை. தென்னாப்பிரிக்காவில் டர்பன் நகரில் இத்தகைய இசைக்கலை ஆர்வம் நிறைந்த இளைஞர்களைக் காண்பதில் மனதிற்கு உவப்பாகவே இருந்தது.

தென்னாபிரிக்காவுக்கு தமிழர் குடியேற்றம் நிற்காது தொடர்ந்து நிகழ்ந்திருந்தால் இவர்கள் தமிழ்மண்ணிலிருந்து இப்படி துண்டிக்காப்பட்டிருக்க மாட்டார்கள் என தோன்றுகிறது. சாட்டிலைட் டிவி, இணையம், தொடர் குடியேற்றம் போன்றவை அமெரிக்க, ஐரோப்பிய தமிழரை தமிழ்மண்ணின் தொடர்பில் தொடர்ந்து வைத்திருக்கும் என நம்புவோம்.

--

Nagarajan Vadivel

unread,
Apr 27, 2015, 10:17:42 PM4/27/15
to மின்தமிழ்

2015-04-28 6:44 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
தென்னாபிரிக்காவுக்கு தமிழர் குடியேற்றம் நிற்காது தொடர்ந்து நிகழ்ந்திருந்தால் இவர்கள் தமிழ்மண்ணிலிருந்து இப்படி துண்டிக்காப்பட்டிருக்க மாட்டார்கள் என தோன்றுகிறது.

​தென் ஆஃப்ரிக்காவின் இனவெறிக் கொள்கைக்கு எதிரான ஒரு முடிவை இந்திய அரசு எடுத்திருந்த நிலையில் அங்கிருப்போர் தங்கள் உறவுகளைத் தேடித் தமிழகம் வரவோ தமிழர்கள் தென் ஆப்ரிக்கா செல்லவோ இயலாமல் ஒது பெரிய தடை இருந்ததே முக்கியக் காரணம்.  தென் ஆஃப்ரிக்கா தமிழர்கள் வரக்கூட்டது என்று சொன்னதே இல்லை.  நான் தென் ஆஃப்ரிக்கா செல்லவேண்டும் என்று சொன்னபோது எனக்கு இந்தியாவில் விசா கிடைக்காது என்பதால் லண்டனில் இந்தியத் தூதரகத்தின் பரிந்துரையுடன் தென் ஆஃப்ரிக்கா செல்ல முடிந்தது.  அதற்குமுன் இரட்டைப் பாஸ்போர்ட் முறைதான்.  ​
வலைப்பித்தன்

Oru Arizonan

unread,
Apr 27, 2015, 10:20:43 PM4/27/15
to mintamil
காந்தி படத்தில் பார்த்ததாக நினைவு --  இந்தியர்களுக்கு நீதிவேண்டும் என்று வெள்ளையர்களுக்கு எதிரான போராட்டம் நடந்தபோது,   தென்னாப்பிரிக்க பிரதமரிடம் நடக்கும் பேச்சுவார்த்தையில் மேலும் இந்தியர் குடியேற்றம் நிறுத்தப்படுவதற்கு ஒப்புக்கொண்டால்தான், காந்தியின் கோரிக்கைகளை ஒப்புக்கொள்வேன் என்று  தென்னாப்பிரிக்க பிரதமர் நிபந்தனை விதிக்கிறார்.  அதைக் காந்தி ஏற்றுக்கொள்கிறார்.  

அத்துடன், இந்தியர்களின் தென்னாப்பிரிக்கக் குடியேற்றம் நிறுத்தப்பட்டது.

In 1915 the Government of India informed the Secretary of State that "the time has come for His Majesty 's Government to assent to a total abolition of the system of indentured. Indian labour the four INDIAN MIGRATION 599 British colonies where it still prevails, and in Surinam." This was agreed to on March 20, 1915, the Defence of India Act stopped it, and the prohibition received further legislative sanction by the Emigration Act of 1922.' 

Eventually, Smuts oversaw the passage of the Indian Relief Act that was passed in 1914. This act withdrew the £3 tax that was imposed on ex-indentured Indians, customary marriages were recognised (a right for which Gandhi’s wife Kasturba had protested and been arrested), and Indians were allowed to move freely into the Transvaal.

On 30 June 1914, the two men signed a pact bringing to an end the satyagraha campaign in South Africa.

Having achieved a major victory, Gandhi decided to return to India (by way of the United Kingdom). There he was to ultimately lead his home country to independence from British rule using the political experience he had gained in South Africa.

/ -- தாரகை 

Nagarajan Vadivel

unread,
Apr 27, 2015, 10:54:59 PM4/27/15
to மின்தமிழ்

On Tue, Apr 28, 2015 at 7:50 AM, Oru Arizonan <oruar...@gmail.com> wrote:
customary marriages were recognised (a right for which Gandhi’s wife Kasturba had protested and been arrested),

​தில்லையாடி வளியம்மையும் அவரின் தாயும் மற்ற இரு பெண்கள் அந்தப்போராட்டத்தில் பங்குபெற்றவர்கள்.  ஆறுமாதம் சிறைக்குச் சென்ற வள்ளியம்மை நோயின் தாக்கத்தால் 16 வயதில் இறக்க நேரிடுகிறது.அவர்களை விட்டுவிட்டீர்களே ஐயா​

காந்தியார் அங்கே தொடுத்தபோர் தன்போன்ற இந்தியர்கள் வெள்ளையர்களால் வேறுபடுத்திப் பார்ப்பதற்கு எதிரான போராட்டம்தான்.  கறுப்பர்களுக்கு ஆதரவாக அல்ல.  அவருக்கு ஆதரவளித்தவர்கள் பெரும்பாலும் தமிழர்களே. டர்பன் வழக்குமன்றத்தில் அலுவலராக இருந்த இரட்டைமலை சீனிவாசன் காந்திக்குத் தமிழர்களை அறிமுகப்படுத்தி அவர்கள் துணையுடன் சத்யாக்கிரகப்போர் நடத்தினார்.
                                            இரட்டைமலை சீனிவாசன் பயிற்சிகொடுத்து தெனாஃப்ரிக்காவில்                                                   காந்தி தமிழில்போட்ட கையெழுத்து
  பலதமிழர்கள் நாட்டைவிட்டு வெளியேறப்பட்டனர்.  அவர் இந்தியா திரும்பி வார்தாவில் ஆசிரமம் அமைத்தபோது அவருடன் வந்தவர்களில் நால்வர் தமிழர்கள்.  அவருடைய முதல் தமிழ்நாட்டு வருகை வள்ளியம்மாள் பிறந்த வீட்டைப் பார்க்கவும் அவரது போராட்டத்தில் பங்குபெற்றதால் வெளியேற்றப்பட்ட வெதாரண்யத் தமிழர்களைப் பார்க்கவும்தான்.  அவர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்த இழிநிலையைக் கண்ணால் பார்த்து கதறிப்போய் வளியம்மை வீட்டுத் தரையில் அமர்ந்து இனிமேல் என் போராட்டம் இவர்களைக் கரையேற்றத்தான் என்று சொன்னவர் இந்திய விடுதலை என்ற காட்டாறுவெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டௌ அதை மறந்தே போனார்

இன்றும் தென் ஆஃப்ரிக்காவில் உள்ள கருப்பினத்தவர் தமிழர்கள் தங்கள் சுயநலத்தை முன்னிறுத்தும் கருப்பாடுகள் எனவே அவர்களைத் தாக்குவோம் என்று சொல்லிச் சொல்லி அடிக்கிறார்கள்.  (என்னைப் பர்த்தால் நான் ஒரு லெபலீஸ்போல் இருப்பதால் அடிவாங்காமல் தப்பிக்கொண்டிருப்பதாகச் சொன்னார்கள்)

தென் அஃஃப்ரிக்காத் தமிழர்களையும் இலங்கைத் தமிழர்களையும்பற்றி வாயே திறக்கக் கூடாது வம்பு வந்து சேரும்
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Oru Arizonan

unread,
Apr 27, 2015, 10:58:11 PM4/27/15
to mintamil
//தில்லையாடி வளியம்மையும் அவரின் தாயும் மற்ற இரு பெண்கள் அந்தப்போராட்டத்தில் பங்குபெற்றவர்கள்.  ஆறுமாதம் சிறைக்குச் சென்ற வள்ளியம்மை நோயின் தாக்கத்தால் 16 வயதில் இறக்க நேரிடுகிறது.அவர்களை விட்டுவிட்டீர்களே ஐயா​//

வேண்டுமென்று செய்யவில்லை, சித்தரே!  மறதிக்கு மன்னிக்க!

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Oru Arizonan

unread,
Apr 27, 2015, 11:01:35 PM4/27/15
to mintamil
தென்னாப்பிரிக்கத் தமிழர்களுக்கும், கறுப்பர்களுக்கும் நல்ல உறவில்லை என்பதை நானும் அறிவேன், சித்தரே!  இங்கு நான் சந்திக்கும் ஒவ்வொரு தென்னாப்பிர்க்கத் தமிழர்களும் அதை எனக்குச் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஒரு அரிசோனன்

Suba.T.

unread,
Apr 28, 2015, 3:11:13 AM4/28/15
to மின்தமிழ்
2015-04-28 4:54 GMT+02:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

On Tue, Apr 28, 2015 at 7:50 AM, Oru Arizonan <oruar...@gmail.com> wrote:
customary marriages were recognised (a right for which Gandhi’s wife Kasturba had protested and been arrested),

​தில்லையாடி வளியம்மையும் அவரின் தாயும் மற்ற இரு பெண்கள் அந்தப்போராட்டத்தில் பங்குபெற்றவர்கள்.  ஆறுமாதம் சிறைக்குச் சென்ற வள்ளியம்மை நோயின் தாக்கத்தால் 16 வயதில் இறக்க நேரிடுகிறது.அவர்களை விட்டுவிட்டீர்களே ஐயா​

​தகவலுக்காக..
இம்மாத மின் தமிழ் மேடை மின்னூலில் எனது தலையங்கத்தில் இடம்பெறும் வரிகள்..

//
மகாத்மா காந்தியடிகள் தன் வாழ்நாளின்  20 ஆண்டு காலங்கள் தென்னாப்பிரிக்காவில் வசித்தவர். மகாத்மா காந்தியடிகளுக்கு விடுதலை உணர்வை ஊட்டியவர்களில் ஒருவராக அறியப்படும் தில்லையாடி வள்ளியம்மை பிறந்த நாடு தென்னாப்பிரிக்கா. அங்கு அப்போது எவ்வகையில் தமிழ் உணர்வு இருந்ததோ அதில் சிறிதும் குறைவில்லாது,  தமிழ் உணர்வே தமிழரின் தன்மானத்திற்கு அடையாளம் என தென்னாப்பிரிக்க தமிழர்கள் தீவிரமாக தமிழ் முயற்சிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு வருகின்றனர். இவர்கள் அனைவரின் ஊக்கமும் நாளுக்கு நாள் பெருக வேண்டும். இவர்களது முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வேண்டும். தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் தமது இன்றைய நிலை போலல்லாது நன்கு தமிழில் எழுதவும் பேசவும் கற்றவர்களாக வளர்ச்சி பெற வேண்டும் என்று தமிழ் மரபு அறக்கட்டளை வாழ்த்துகின்றது!  - சுபாஷிணி
//
சுபா​
 
Suba.T.

unread,
May 4, 2015, 4:49:01 PM5/4/15
to மின்தமிழ், Subashini Tremmel
பதிவு 9

பட்டமளிப்பு விழா நடைபெற்ற நாளின் மாலை வேறு எந்த திட்டமும் எனக்கு இல்லை. மறுநாள் உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தில் செயலவைக் கூட்டம் நடைபெற இருந்ததால் மாலை ஹோட்டலிலேயே இயக்கத்தின் உறுப்பினர்கள் சிலரோடு பேசிக் கொண்டிருந்ததில் அன்றைய மாலைப் பொழுது இனிதே கழிந்தது. 

எங்களுக்கு ஏற்பாடு செய்திருந்த தங்கும் விடுதி மிக நேர்த்தியான மாடர்ன் வடிவில் அமைக்கப்பட்டது. உள்ளேயே ஸ்பா வசதிகள் நீச்சல்குளம்,ரெஸ்டாரண்ட் எல்லாம் அமைந்த நான்கு நட்சத்திர ஹோட்டல் அது. அறைகளும் மிக விசாலமாக மிகுந்த வசதிகளுடன் மிகத் தூய்மையாக இருந்தன. அதிலும் நான் தங்கியிருந்த அறையிலிருந்து கண்ணாடி ஜன்னல் வழியாக நோக்கினால் இந்தியப் பெருங்கடலை பார்க்க அக்காட்சியே மிக ரம்மியமாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது. அறையில் தோழி பொன்னியுடன்  மலேசியக்கதைகளைப் பேசிக் கொண்டிருந்ததும் அன்றைய மாலைப் பொழுது  மகிழ்ச்சி நிறைந்ததாக  அமைத்தது.

மறுநாள் காலை உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தில் செயலவைக் கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்க இருந்ததால் காலையில் 8 மனியிலிருந்து ஹோட்டல் உணவகத்தில் உணவருந்த ஏற்பாடாகியிருந்தது. காலை உணவாக உப்புமா, சட்னி சாம்பார் ஆகியவற்றோடு மேற்கத்திய வகை காலை உணவுகளும் இருந்தன. காலையில் ஒரு காப்பி சாப்பிட்டால் ஏற்படும் மகிழ்ச்சியே தனி. அதிலும் நல்ல தென்னிந்தியவகை உப்புமா, சட்னி, சாம்பார் ஆகியவற்றோடு காப்பியும் சேர்த்துப் பருக வயிற்றையும் மனத்தையும் நிரப்பியது காலை உணவு.

உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் செயலவைக் கூட்டம் தென்னாப்பிரிக்க கிளையின் தலைவர்.திரு.மிக்கி செட்டி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் குறிப்புக்களை என்னை பதியக் கேட்டுக் கொண்டனர் முக்கிய நிர்வாகஸ்தர்கள்,. இப்படி திடீரென ஒரு பணி அமைய அதில் கடமையே கண்ணாக மூழ்கிப்போனேன். 

40 வருட கால பழமை கொண்டது இந்த உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கம். உலகின் பல நாடுகளில் கிளைகளைக் கொண்டு இயங்கி வரும் இந்த இயக்கத்தின் இந்த செயலவைக் குழு கூட்டத்தில் கலந்து கொள்ள அன்று தென்னாப்பிரிக்க, ப்ரான்ஸ், ஜெர்மனி, இலங்கை, இந்தியா, சுவிஸர்லாந்து, மொரிஷியஸ், கனடா, ஆகிய நாடுகளிலிருந்து பிரதினிதிகள் வந்திருந்தனர்.

அன்று நடைபெற்ற கூட்டத்தில் இயக்கத்தின் யாப்பினை அமைக்கும் குழுவிற்கு தலைமை தாங்க பொறுப்பேற்றுக் கொண்ட டாக்டர். பொன்னவைக்கோ என்னையும் அக்குழுவில் இணைத்துக் கொண்டார். ஒரு முக்கிய இயக்கத்திற்கு நம்மால் முடிந்த  வகையில் உதவ வாய்ப்பு அமைந்தது ஒரு நல்ல நிகழ்வாகவும் எனக்கு மனதில் தோன்றியது. கூட்டத்தின் இடையிலேயும் உணவுகள் வரும் வகையில் ஏற்பாடு செய்திருந்தனர் தென்னாப்பிரிக்க குழுவினர். உணவு  பருக நீர்  என எவ்விதப் பிரச்சனையுமில்லாமல் வந்திருந்த அனைவரும் மன நிறைவு கொள்ளும் வகையில் மிக நேர்த்தியாக அந்தக் கூட்டத்தை நடத்திச் சென்றது திரு.மிக்கி செட்டியின் குழு.

மதியம் மூன்று மணிவாக்கில் இந்தச் செயலவை உறுப்பினர் சந்திப்புக் கூட்டம் முடிய மாலை அவரவர் விருப்பப்படி பொழுதைக் கழிக்கலாம் என உறுதியானது. எனக்கு நண்பர்களோடு பேசிக் கொண்டிருப்பதில் அதிக நாட்டம் இருந்ததால் என் மாலை பொழுதை அன்று  ஹோட்டல் ரெஸ்டாரண்டிலேயே நண்பர்களுடன் செலவிட்டேன்.

பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த இந்த உறுப்பினர்களுடன் பேசுவதற்கு இது ஒரு நலல் வாய்ப்பாக அமைந்தது.  உலகத் தமிழர்களின் நிலை, சமூக இயக்கக்களின் நடவடிக்கைகள், செயல்பாடுகள், தமிழர் வாழ்வியல் என பல விஷயங்களைத் தொட்டுப் பேசி மகிழ்ந்தோம்.

தொடரும்..

Suba.T.

unread,
May 5, 2015, 4:07:20 PM5/5/15
to மின்தமிழ், Subashini Tremmel
​பதிவு 10

தென்னாப்பிரிக்காவில் தமிழர்கள் குடியேற்றம் என்பது இன்றைக்கு ஏறக்குறைய 250 ஆண்டுகள்​ பழமை வரலாற்றைக் கொண்டது. அப்போதைய  தென்னாப்பிரிக்க ஆங்கிலேய காலணித்துவ அரசின் ஆட்சியில் கரும்புத் தோட்டங்களில் பணி புரிய தென்னிந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட மக்களில் பெரும்பாலோர் தமிழக நிலப்பரப்பைச் சார்ந்தோர். ஒப்பந்த தொழிலாளர்களாக வந்த இவர்களில் ஒரு சிலர் சில ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியா திரும்பினாலும் பலர் தென்னாப்பிரிக்காவிலேயே தங்கிவிட்டனர். இவர்களின் சந்ததியினரே இன்று தென்னாப்பிரிக்காவில் வசிக்கும் தென்னாப்பிரிக்கத் தமிழர்கள். 

தென்னாப்பிரிக்காவின் மக்கள் தொகையில் பெரும்பாண்மையினர் உள்ளூர் சூலு இன மக்கள். இவர்கள் தென்னிந்தியாவிலிருந்து உழைக்க வந்த இந்தியர்களை முழு மனதுடன் ஏற்றுக் கொள்ளவில்ல என்பதனை உள்ளூரில் நிகழ்ந்த பல சம்பவங்கள் சாட்சிகளாக காட்டுகின்றன. தற்போதும் கூட டர்பன் நகரத்திலும் அதன சுற்று வட்டாரத்திலும்  இந்தியர்கள் வாழும் பகுதி என்று பீனிக்ஸ் பகுதியும் அதற்கு எதிர்புறமாக உள்ள பகுதி சூலு மக்கள் வாழும் பகுதி என்றும் அறிந்து கொண்டேன். ஆயினும் பெரிய அளவிலான பிரச்சனைகளோ, இனக்கலவரமோ என்பது இங்கு இல்லை என்பது ஒரு மிக நல்ல விசயம்.

சூலு மக்களின் உணவு வகைகளை நான் சுவைகும் வாய்ப்பே இந்தப் பயணத்தில் எனக்கு அமையவில்லை. தமிழ் பண்பாட்டு இயக்க நிகழ்வின் மூன்று நாட்களும் சரி.. பினன்ர் தங்கியிருந்த இரண்டு நாட்களும் சரி, ஹோட்டலில் வழங்கப்பட்ட உணவு விருந்து என பெரும்பாலும் தென்னிந்திய வகை உணவையே அதில் நான் காண முடிந்தது. இந்திய வகை உணவோடு ஐரோப்பிய உணவு வகைகளான பாஸ்டா, ரொட்டி, சீஸ் போன்றவைகளும் உணவுத் தேர்வில் இடம்பெற்றிருந்தன. ஐரோப்பாவில் எப்போதும் அதிகம் ஐரோப்பிய உணவை சுவைக்கும் வாய்ப்பே எனக்கு அமைவதால் தென்னாப்பிரிக்க இந்திய வகை உணவைச் சாப்பிடுவதே எனக்குப் பிடித்திருந்தது. அதனால் கிடைத்த தோசை, உப்புமா, சாம்பார், சட்னி, பொறியல், கூட்டு, கீரை, பாயசம் என இந்திய உணவுகளை சுவைத்தேன். முற்றும் முழுதும் தென்னிந்திய வகை உணவு என்றில்லாமல், சற்றே வித்தியாசமாக  ஒரு வகையில் மலேசிய வகை தென்னிந்தியச் சமையல் சாயலும் இவர்கள் சமையலில் இருந்தது போன்ற ஒரு உணர்வும் எனக்கு ஏற்பட்டது.

சுற்றுலா சென்ற போதும் இடையில் திரு.திருமதி சின்னப்பன் இல்லத்தில் மிகத் தரமான இந்திய உணவைச் சாப்பிடும் வாய்ப்பும் அமைந்தது. பின்னர் இந்திய உணவுக்கடையில் ஓரிரு முறை சாப்பிடவும் சென்றிருந்தோம். ஆக முழுமையாக இந்த தென்னாப்பிரிக்கப் பயணத்தில் இந்திய வகை உணவுகளையே பெரும்பாலும் காண நேர்ந்தது. ஒரே ஒரு முறை மட்டும் தென்னாப்பிரிக்காவில் மிகப் பிரபலமான பன்னி சோவ் (Bunny Chow)  வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்தேன்.

பன்னி சோவ் என்பது தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் உருவாக்கிய ஒரு ரெசிப்பி. 2ம் உலகப்போர் காலத்திலேயெ இது பிரபலமாகிவிட்டது என்றும் பின்னர் தென்னாப்பிரிக்காவின் டர்பன்  தவிர்த்து  க்லெல்லோ, ரொடேசியா போன்ற பகுதிகளிலும் பிரபலமாகிவிட்ட ஒரு துரித உணவு இது. 

அடிப்படையில் பெரிய ரொட்டி ஒன்றிற்குள் கறி வகைகள் அல்லது பீன்ஸ் வகைகளைத் தினித்து சுற்றித் தருவது தான் பன்னி சோவ் எனப்படுகின்றது. 

என் தென்னாப்பிரிக்கத் தோழி கோகி எனக்கு முதலில் இதனைப் பற்றி தெரிவித்தார். பன்னியில் காய்கறிகள் சேர்த்த பன்னியும் உண்டு, ரசம் பன்னியும் உண்டு என்று மேலும் ஆச்சரியப்படுத்தினார். இது மனதிலேயே இருக்க ஜெர்மனி திரும்புவதற்குள் ஒரு நாளாவது பன்னியை வாங்கிச் சாப்பிட வேண்டும் என ஆவல் இருந்தது. பயணத்தின் இறுதி நாளுக்கு முதல் நாள் 'இன்று எப்படியாவது ஓரிடத்தில் எல்லோரும் பன்னியை வாங்கிச் சாப்பிடுகின்றோம்' எனச் சொல்லி என்னுடன் வந்த மலேசியக் குழுவினர், கனடாவின் திரு.ராஜரட்னம், இந்து, எல்லோரையும் ஒரு ஷாப்பிங் மாலுக்குள் அழைத்துச் சென்று அங்கு தேடியதில் ஒரு ரெஸ்டாரண்டில் பன்னி விற்பனை செய்யப்படுவது தெரிந்தது. 

​பன்னி மடித்து வைக்கப்பட்டுள்ளது

அங்கேயே நண்பர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கு ஒரு பன்னி ஆர்டர் செய்து வாங்கிக் கொண்டோம். அசைவப் பிரியர்கள் அசைவ பன்னி வாங்கிக் கொண்டனர். சைவ உனவு பிரியர்கள் சைவ பன்னி வாங்கிக் கொண்டோம். 

​மேல் பகுதி மூடப்பட்ட நிலையில்

எனக்கு காய்கறி குருமா திணித்த பன்னி சாப்பிட விருப்பம் இருந்ததால் அதனையே ஆர்டர் செய்து வாங்கினேன்.

பன்னியில் மூன்று அளவுகள் உள்ளன. பெரிது, நடுத்தர அலவு, சிறியது என முன்று அளவுகளில் இவை கிடைக்கின்றன. நடுத்தர அளவே போதும் என வாங்கிய எனக்கு அது இரண்டு பேர் சாப்பிடக்கூடிய அளவு என்ரு நேரில் பார்த்ததும் தான் தெரிந்தது. 

மலேசியாவில் வங்காளி ரொட்டி என்று சொல்வோம். அப்படிப்பட்ட ஒரு ரொட்டி வகை தான் இது. அதன் மேல் பகுதியை வெட்டி வைத்து விடுகின்றனர் இது மூடி போல பயன்படுகின்றது. பின்னர் ரொட்டியின் நடுப்பகுதியில் குழி மாதிரி செய்து அதற்குள் குருமாவை திணித்து விடுகின்றனர். பின்னர் வெட்டிய மூடி போன்ற பகுதியை வைத்து மூடி கொடுத்து விடுகின்றனர். ஒரு வகையில் பார்க்க வெட்டிய இளநீரின் வடிவத்தில் இந்த ரொட்டி இருக்கும்.

​மேல் பகுதியைத் திறந்ததும் உள்லே காய்கறி குருமாவுடன் பன்னி

ஒரு முறை சாப்பிட்டவர்கள் மறு முறைபன்னி சாப்பிட வேண்டும் என நிச்சயம் விரும்புவர். மிக நல்ல சுவை என்பதில் சந்தேகமில்லை. 

புலம்பெயரும் மக்கள் தங்கள் வாழ்வியல் சூழலுக்கேற்ப இவ்வகை புதுமைகளை உருவாக்கிக் கொண்டேயிருக்கும் நிலையை உலகில் பல இடங்களில் காண்கின்றோம். தென்னாப்பிரிக்கத் தமிழர்களின் வெற்றிகரமான ஒரு புதுமை உணவு இந்த பன்னி சோவ் என நிச்சயம் சொல்லலாம்.

தொடரும்..

சுபா

2015-05-04 22:48 GMT+02:00 Suba.T. <ksuba...@gmail.com>:
பதிவு 9

பட்டமளிப்பு விழா நடைபெற்ற நாளின் மாலை வேறு எந்த திட்டமும் எனக்கு இல்லை. மறுநாள் உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தில் செயலவைக் கூட்டம் நடைபெற இருந்ததால் மாலை ஹோட்டலிலேயே இயக்கத்தின் உறுப்பினர்கள் சிலரோடு பேசிக் கொண்டிருந்ததில் அன்றைய மாலைப் பொழுது இனிதே கழிந்தது. 

Oru Arizonan

unread,
May 5, 2015, 7:19:15 PM5/5/15
to mintamil
தங்களது பன்னி ரொட்டியைப் படித்தபோது எனக்கு பனீனி ரொட்டி நினைவுக்கு வந்தது.  நான் மின்னியாபாலிஸ் நகருக்கு அலுவல் காரணமாகச் சென்றபோது, எனக்கு சைவ உணவு படிக்கவேண்டும் என்று நான் செல்லும் கம்பெனிக் காரர்கள் மிகவும் முனைவார்கள்.  

அப்பொழுது ஒரு இத்தாலிய உணவகத்திற்கு என்னை அழைத்துச் சென்று, என் நிலையை அங்கிருக்கும் தவசிப்பிள்ளையிடம்  [chef] தெரிவித்தார்கள். 

அவர் என்னைப் பரிவுடன் விசாரித்து, நான் என்ன சாப்பிடுவேன் என்று தெரிந்துகொண்டு,  அந்த உணவகத்திலேயே செய்யப்படும் பனீனி ரொட்டியில் spice இட்ட காய்கறிகளை அடைத்துச் சுருட்டிக் கொடுத்தார்.  அதை நான் மிகவும் சுவைத்து உண்டேன் என்று என்னிடம் தெரிந்துகொண்டு, மிக மகிழ்ந்து , 'This is my special treat to you!  Your lunch is on the house!" என்றபோ து நான் நன்றி உணர்ச்சியால் திக்குமுக்காடிப்போனேன்.

அன்றிலிருந்து நான் எப்பொழுது மின்னியாபாலிஸ் சென்றாலும், அந்த இத்தாலிய உணவகத்திற்குச் சென்று அந்த தவசிப்பிள்ளை ஆன்ரேயின் பனீனி ரொட்டி சாப்பிடாமல் வரவேமாட்டேன்.

ஒரு இனிய நினைவலையை வரவழைத்தமைக்கு மிக்க நன்றி, சுபா அவர்களே!

Malarvizhi Mangay

unread,
May 5, 2015, 10:41:34 PM5/5/15
to mint...@googlegroups.com

இந்திய சமோசா போன்று உள்ளது சுபா.சுவை எப்படி யோ? மாறுபடலாம்.அரிசோனன் ஐயா! தவசிபிள்ளை _நெல்லைச்சீமை வழக்குச்சொல்தானே?

--

Oru Arizonan

unread,
May 5, 2015, 11:02:18 PM5/5/15
to mintamil
நான் அச்சொல்லைப் பலமுறை கேள்விப்பட்டிருக்கிறேன்.  சமையல்காரர் என்று சொல்வதைவிட தவசிப்பிள்ளை என்பது மரியாதையான சொல் என்று எனக்குத்தொன்றவே அச்சொல்லை எழுதினேன்.  அது நெல்லைச்சீமைச் சொல்லா என்று நானறியேன்.  நெல்லையைச் சேர்ந்தவர்கள்தான் தெளிவுபடுத்தவேண்டும்.
--
பணிவன்புடன்,

Malarvizhi Mangay

unread,
May 6, 2015, 12:23:36 AM5/6/15
to mint...@googlegroups.com

நெல்லைச்சீமை நான் வா (ழ்) க்கப்பட்டபூமி.ஆம்.அங்குதான் முதன்முதலில் "வீட்டுவிஷேசத்திற்குத் தவசிபிள்ளையக் கூப்புடுவோம் "என மாமனார் சொன்னபோது புரியாமல் கணவரை நோக்க அவர்தான் "சமையற்காரர் "  என்றார்.

Suba.T.

unread,
May 7, 2015, 12:46:26 PM5/7/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-05-06 1:19 GMT+02:00 Oru Arizonan <oruar...@gmail.com>:
தங்களது பன்னி ரொட்டியைப் படித்தபோது எனக்கு பனீனி ரொட்டி நினைவுக்கு வந்தது.  நான் மின்னியாபாலிஸ் நகருக்கு அலுவல் காரணமாகச் சென்றபோது, எனக்கு சைவ உணவு படிக்கவேண்டும் என்று நான் செல்லும் கம்பெனிக் காரர்கள் மிகவும் முனைவார்கள்.  

அப்பொழுது ஒரு இத்தாலிய உணவகத்திற்கு என்னை அழைத்துச் சென்று, என் நிலையை அங்கிருக்கும் தவசிப்பிள்ளையிடம்  [chef] தெரிவித்தார்கள். 

அவர் என்னைப் பரிவுடன் விசாரித்து, நான் என்ன சாப்பிடுவேன் என்று தெரிந்துகொண்டு,  அந்த உணவகத்திலேயே செய்யப்படும் பனீனி ரொட்டியில் spice இட்ட காய்கறிகளை அடைத்துச் சுருட்டிக் கொடுத்தார்.  அதை நான் மிகவும் சுவைத்து உண்டேன் என்று என்னிடம் தெரிந்துகொண்டு, மிக மகிழ்ந்து , 'This is my special treat to you!  Your lunch is on the house!" என்றபோ து நான் நன்றி உணர்ச்சியால் திக்குமுக்காடிப்போனேன்.

அன்றிலிருந்து நான் எப்பொழுது மின்னியாபாலிஸ் சென்றாலும், அந்த இத்தாலிய உணவகத்திற்குச் சென்று அந்த தவசிப்பிள்ளை ஆன்ரேயின் பனீனி ரொட்டி சாப்பிடாமல் வரவேமாட்டேன்.

​ஆஹா..
பனீனி ரொட்டி கடிக்க மேல்புறம் சற்றே கடினமாக இருக்கும். இந்த பன்னி ரொட்டி போல இருக்காது.
பன்னி ரொட்டி சாப்பிட்ட போது எனக்கு எங்கள் ஊர் மலேசிய வங்காளி ரொட்டி தான் உடன் நினைவு வந்தது.. மலேசியாஅடுத்டு செல்லும் போது வீட்டில் கட்டாயம் நான் வெஜி பன்னி செய்து நண்பர்களை அசத்டஹ் வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கின்றேன்.

சுபா

Suba.T.

unread,
May 7, 2015, 12:48:19 PM5/7/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-05-06 4:41 GMT+02:00 Malarvizhi Mangay <malarm...@gmail.com>:

இந்திய சமோசா போன்று உள்ளது சுபா.சுவை எப்படி யோ? மாறுபடலாம்.

உள்ளே உள்ள பொருள் ஏறக்குறைய சமோசாவில் இருப்பது போஅல் ஆனால் கொஞ்சம் க்ரேவி அதிகம். ரொட்டி பகுதி மிக மிக மெண்மையாக  இருக்கும்.

அடுத்து மலேசியா சென்றால் முன்னதாக் சொல்லுங்கள். இந்த வகை ரொட்டியினை ஞாபகப்படுத்துகிறேன். தமிழ் நாட்டில் கிடைக்கலாம். அடுத்தமுறை தமிழகம் வரும் போது தேடிப்பார்கனும்.

சுபா

Malarvizhi Mangay

unread,
May 7, 2015, 1:00:10 PM5/7/15
to mint...@googlegroups.com

கண்டிப்பாக சுபா.மதுரையிலும் சிறந்த வடஇந்தியஉணவகங்கள் உள்ளன உங்களை அழைத்துச்செல்கிறேன்.

Suba.T.

unread,
May 7, 2015, 1:32:11 PM5/7/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-05-07 19:00 GMT+02:00 Malarvizhi Mangay <malarm...@gmail.com>:

கண்டிப்பாக சுபா.மதுரையிலும் சிறந்த வடஇந்தியஉணவகங்கள் உள்ளன உங்களை அழைத்துச்செல்கிறேன்.

​எனக்கு ரொம்ப பிடித்தவை முருங்கைகீரை கூட்டு, கத்தரிக்காய் குழம்பு, வெண்டைக்காய் வருவம்ல்.. தயிர்சாதம், தக்காளி சாதம்.. பரோட்டோ.. இப்படி தென்னிந்திய உணவுகள் தான் மலர்விழி.. அதையே ஒரு கை பார்ப்போம்..:-)

Malarvizhi Mangay

unread,
May 7, 2015, 7:07:28 PM5/7/15
to mint...@googlegroups.com

இவை அனைத்தையும் நானே அருமையாகச் செய்வேன் பரோட்டா  உட்பட.என் கையால் நானே ருசியாக சமைத்துத் தருகிறேன்.நீங்கள் சாப்பிட்டுக்கொண்டே இருங்கள்.

Oru Arizonan

unread,
May 7, 2015, 11:09:57 PM5/7/15
to mintamil
சுபா அவர்களே,

அமெரிக்கா வந்தால், அரிசோனா வந்து எங்கள்  செய்யுங்கள்.

நீங்கள் குறிப்பிட்ட //​எனக்கு ரொம்ப பிடித்தவை முருங்கைகீரை கூட்டு, கத்தரிக்காய் குழம்பு, வெண்டைக்காய் வருவல்.. தயிர்சாதம், தக்காளி சாதம்../// அத்தனை காய்கறிகள்,கீரை உள்பட -- எங்கள் வீட்டிலேயே விளைகின்றன.  ஜமாய்த்துவிடலாம்.  

ஒரு அரிசோனன் 
--
பணிவன்புடன்,

Oru Arizonan

unread,
May 7, 2015, 11:10:51 PM5/7/15
to mintamil
அரிசோனா வந்து எங்கள்  செய்யுங்கள். -- அரிசோனா வந்து எங்கள் வீட்டுக்கு விஜயம் செய்யுங்கள் அன்று படித்துக்கொள்ளுங்கள்.

செல்வன்

unread,
May 7, 2015, 11:41:29 PM5/7/15
to mintamil

2015-05-07 22:09 GMT-05:00 Oru Arizonan <oruar...@gmail.com>:
அமெரிக்கா வந்தால், அரிசோனா வந்து எங்கள்  செய்யுங்கள்.

நீங்கள் குறிப்பிட்ட //​எனக்கு ரொம்ப பிடித்தவை முருங்கைகீரை கூட்டு, கத்தரிக்காய் குழம்பு, வெண்டைக்காய் வருவல்.. தயிர்சாதம், தக்காளி சாதம்../// அத்தனை காய்கறிகள்,கீரை உள்பட -- எங்கள் வீட்டிலேயே விளைகின்றன.  ஜமாய்த்துவிடலாம்.  

இதெல்லாம் சாப்பிட அரிசோனா வரணுமா? :-) உங்க ஊர்ல கிடைக்கும் சல்சா, டாக்கோ, எஞ்சிலாடா, -பகீடா எல்லாம் செய்து கொடுங்க.

--

Oru Arizonan

unread,
May 7, 2015, 11:51:19 PM5/7/15
to mintamil
அதெல்லாம் கடையில்தான் கிடைக்கும்.  எங்கள் வீட்டில் விளையாது.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

செல்வன்

unread,
May 8, 2015, 12:00:36 AM5/8/15
to mintamil
இதெல்லாம் சமைப்பது எளிது

நாங்க சல்சா தோட்டத்து தக்காளியை வைத்து செய்வோம். டாக்கோ மட்டும் வாங்கி வந்து ஸ்டஃபிங் வீட்டிலேயே செய்வோம். இங்கே நாங்க என்பது என்னையும் மகளையும் மட்டுமே குறிக்கும் :-) (மகளுக்கு நான் தான் மெக்ஸிகன் சமையல் கோச் )

Oru Arizonan

unread,
May 8, 2015, 12:17:09 AM5/8/15
to mintamil
செல்வன் அண்ணாச்சி,

எங்க வூட்டுல தமிழ்நாட்டுச் சாப்பாடுதாங்க பெரும்பாலும்.  கொஞ்சங்கொஞ்சம் வட இந்தியச் சாப்பாடும் உண்டுங்க.  ஆனா, வேற நாட்டுச் சாப்பாடெல்லாம் வூட்டுல சமைக்கறது இல்லீங்க.  அப்புட்டுத்தான்.  சொல்லிப்போட்டேனுங்க.

Suba.T.

unread,
May 8, 2015, 7:27:29 AM5/8/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-05-08 1:07 GMT+02:00 Malarvizhi Mangay <malarm...@gmail.com>:

இவை அனைத்தையும் நானே அருமையாகச் செய்வேன் பரோட்டா  உட்பட.என் கையால் நானே ருசியாக சமைத்துத் தருகிறேன்.நீங்கள் சாப்பிட்டுக்கொண்டே இருங்கள்.

​மிக்க மகிழ்ச்சி.
செய்ய வேண்டிய பணிகளையும் மகிழ்ச்சியோடு செய்வோம். 
ஆகஸ்டில் திட்டத்தோடு தொடர்பு கொள்கிறேன்.

சுபா ​
On 07-May-2015 11:02 pm, "Suba.T." <ksuba...@gmail.com> wrote:

Suba.T.

unread,
May 8, 2015, 7:28:20 AM5/8/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-05-08 5:09 GMT+02:00 Oru Arizonan <oruar...@gmail.com>:
சுபா அவர்களே,

அமெரிக்கா வந்தால், அரிசோனா வந்து எங்கள்  செய்யுங்கள்.

நீங்கள் குறிப்பிட்ட //​எனக்கு ரொம்ப பிடித்தவை முருங்கைகீரை கூட்டு, கத்தரிக்காய் குழம்பு, வெண்டைக்காய் வருவல்.. தயிர்சாதம், தக்காளி சாதம்../// அத்தனை காய்கறிகள்,கீரை உள்பட -- எங்கள் வீட்டிலேயே விளைகின்றன.  ஜமாய்த்துவிடலாம்.  

​நிச்சயம் வருகிறேன்.
அதிலும் வீட்டிலே விளையும் காய்கறி என்றால் எனக்கு கொள்ளை பிரியம்.

சுபா

Suba.T.

unread,
May 8, 2015, 7:29:46 AM5/8/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-05-08 6:00 GMT+02:00 செல்வன் <hol...@gmail.com>:
இதெல்லாம் சமைப்பது எளிது

நாங்க சல்சா தோட்டத்து தக்காளியை வைத்து செய்வோம். டாக்கோ மட்டும் வாங்கி வந்து ஸ்டஃபிங் வீட்டிலேயே செய்வோம். இங்கே நாங்க என்பது என்னையும் மகளையும் மட்டுமே குறிக்கும் :-) (மகளுக்கு நான் தான் மெக்ஸிகன் சமையல் கோச் )

​உங்கள் ஊர் வந்து ஒரு முறை உங்கள் ஷாப்பிங்க்கை பார்க்கனும்.. அடுத்து சமையலை பார்க்கனும்..

சுபா

Suba.T.

unread,
May 10, 2015, 5:32:57 PM5/10/15
to மின்தமிழ், Subashini Tremmel
பதிவு 11

ஏப்ரல் 5ம் தேதி மதியம் முக்கிய  நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிவடைந்ததால் எஞ்சிய மூன்று தினங்கள்  டர்பன் நகரைச் சுற்றிப் பார்க்கவேண்டும் என மனதில் நினைத்திருந்தேன்.  என்னோடு மலேசிய நண்பர்கள் திரு.ப.கு.ஷண்முகம் தலைமையிலான குழுவினர், இந்து, சாம் விஜய், கனடா நண்பர் திரு,ராஜரட்ணம் ஆகியோரும் இருந்தமையால் அனைவரும் இணைந்தே பயணம் செய்ய சம்மதம் தெரிவித்து விட்டனர். எங்கெங்கு செல்லலாம், எவற்றை பார்க்கலாம் எப்போது எப்படி என்று திட்டமிடம் பணி யாரும் திட்டமிட்டாமலேயே எனக்கு வந்து சேர்ந்தது.

தென்னாப்பிரிக்கத் தோழி கோகியும் அவர் கணவர் திரு.சின்னப்பனும் திங்கள் கிழமை அதாவது புனித வெள்ளி முடிந்த வாரத்தின் முதல் திங்கள்கிழமை அருகாமையில் இருக்கும் புற்று மாரியம்மன் ஆலயத்தில் விஷேஷம் இருப்பதாகவும் அங்கு வந்து பார்க்க விருப்பம் இருக்கின்றதா என்றும் கேட்டனர். வேறு இடங்களுக்குச் செல்வதற்கு முன்னர் ஆலயம் சென்று பார்த்து விட்டு வரலாமே என்று எனக்கும் அது சரியான யோசனையாகவே தோன்றியது. மாரியம்மன் ஆலயத்தைப் பார்த்து விட்டு அருகாமையில் இருக்கும் முருகன் கோயிலும் சென்று வரலாம் என்று அவர்கள் தெரிவித்தனர். ஆக அன்று காலை முதல் மாலை வரை கோயில் சுற்றுலா என்று முடிவெடுத்து ஏனைய நண்பர்களுக்கும் காலையில் சரியாக 10 மணிக்குத் தயாராக இருக்கும் படி கேட்டுக் கொண்டதோடு அவர்களை மீண்டும் ஞாபகப்படுத்தி தயார் நிலையிலும் வைத்துக் கொண்டேன். பள்ளிக் கூட ஆசிரியர் மாணவர்களை சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்வது போண்ற ஒரு உணர்வு தான் எனக்கு அப்போது தோன்றியது. ஏனைய நண்பர்களும் மகிழ்ச்சியோடும் ஆவலோடும் அலய சுற்றுலாவிற்குத் தயாரானார்கள்.

திரு.சின்னப்பன் அவர்களின் மகள் சிவானியும் ஒரு கார் வைத்திருக்கின்றார்.ஆக எங்களை  இவர்கள் இருவரும் ஹோட்டலிலிருந்து கோயிலுக்குத் தங்கள் காரிலேயே அழைத்துச் சென்று விட்டனர். ஒரு பயணத்தில் எல்லோரும் செல்ல முடியாததால் சிவானி எங்களை இரண்டு முறை வந்து அழைத்துச் சென்றார். நல்ல உதவும் மனம் கொண்ட பெண் சிவானி. நாட்டியப்பள்ளி வைத்து நடத்தி வரும் சிவானி ஒரு வக்கீலாகவும் படித்து பட்டம் பெறும்  நிலையில் இருக்கின்றார்.

கோயிலுக்குச் செல்லும் போது டர்பன் நகர சாலைகளைக் கவனித்துக் கொண்டே வந்தேன். சாலைகள் நேர்த்தியாகவும் தூய்மையாகவும் இருக்கின்றன. ஆசிய நாடுகளைப் போன்ற சீதோஷ்ணம் இருப்பதால் பசுமையான சூழலைக் காணமுடிகின்றது. 

கோயிலை நெருங்கும் போதே தூரத்திலிருந்தே கோயில் கோபுரம் கண்களுக்குப் புலப்பட்டது. தென்னாப்பிரிக்காவில் நான் பார்க்கும் முதல் இந்து ஆலயம் என்ற மகிழ்ச்சியும் மனதில் நிறைந்திருந்தது.

ஆலயத்தின் வாசல் முழுக்க வாகனங்கள் நிறைந்து இருந்தமையால் வாகனத்தை நிறுத்திவதில் சற்றே சிரமம் ஏற்பட்டது. தென்னாப்பிரிக்க தமிழர்கள் ஆலயத்தில் நிறைந்திருந்தார்கள். கண்கொள்ளா காட்சியாக அது அமைதிருந்தது.

மாரியம்மன் ஆலயம் என்பது மனதில் ஒலித்துக் கொண்டிருந்ததால் அம்மன் சிலை எவ்வகையில் இருக்கும் என்ற ஒரு கற்பனை மனதில் ஓட ஆரம்பித்திருந்தது. காமாட்சியம்மன் அல்லது துர்கை வடிவில் அம்மன் சிலை இருக்குமோ? அல்லது மலேசியாவில் இருக்கும் மாரியம்மன் வடிவில் இங்கு மூலஸ்தான தெய்வ மடிவம் இருக்குமோ என மனதில் கேள்விகள் ஓட உள்ளே சென்று பார்க்க மனதில் ஆவல் அதிகரித்துக் கொண்டிருந்தது.

எல்லோரும் ஆலயத்திற்கு வெளிப்பகுதி வழியாகச் சுற்றிக் கொண்டு வந்து ஆலயத்தின் நேர் வாசல் பகுதியை அடைந்தோம்.

நடுப்பகுதியில் இருப்பது பிரதான ஆலயம். அதற்கு இடப்புறமும் வலப்புறமும் மேலும் ஒரு மாரியம்மன் ஆலயமும் ஒரு வினாயகர் ஆலயமும் இருக்கின்றன. மையப்பகுதியில் அமைந்திருக்கும் ஆலயத்தின் முன் வாசல் பகுதிக்கு வந்தேன். அங்கு நான் கண்ட காட்சி என்னை அதிசயத்தில் மலைக்க வைத்தது.

கற்பகிரகம் மூலஸ்தானம் என இல்லாமல் ஆலயத்தின் நடுப்பகுதியில் பிரமாண்டமான மணல் புற்று நேராக நிமிர்ந்து நிற்க அதன் மேல் மாலைகள் குவிந்து கிடக்க மையப்பகுதியில் வெள்ளியால் ஆன அம்மன் வடிவத்து முகம் மட்டும் வைத்தாற்போன்ற ஒரு அமைப்பு அங்கே கண்முன்னே காட்சியளித்தது.

நான் எதிர்பாராத ஒரு காட்சி அது.ஆச்சரியத்திலும் அக்காட்சியின் அழகிலும் மெய்மறந்து போனேன்

தொடரும்..

சுபா

Suba.T.

unread,
May 13, 2015, 2:36:57 AM5/13/15
to மின்தமிழ், Subashini Tremmel
பதிவு 12

புற்று மாரியம்மன் கோயிலில் எடுக்கப்பட்ட படங்களில் சில புகைப்படங்களை மட்டும் இப்பதிவில் இன்று பகிர்ந்து கொள்கின்றேன்.

இக்கோயிலில் வழிபாடு செய்து வைக்க என்று தனியாக குருக்கள் இல்லை. பொதுமக்களே கோயில் வழிபாட்டினை முழுமையாகச் செய்கின்றனர். ஆண் பெண் என்ற பேதமின்றி தூபம் காட்டுதல், மங்கல நீர்வழங்குதல் என்பது போன்ற பணிகளைப் பொதுமக்கள், கோயில் நிர்வாகத்தினர் ஆகியோர் செய்கின்றனர்.

தொடரும்​

சுபா

Suba.T.

unread,
May 21, 2015, 3:17:11 PM5/21/15
to மின்தமிழ், Subashini Tremmel
பதிவு 13

டர்பன் புற்றுமாரியம்மன் ஆலயம் மூன்று பகுதிகளாக அமைக்கப்படிருப்பதைப் பற்றி முந்தைய பகுதியில் குறிப்பிட்டேன். நடுப்பகுதியில் மிகப்பிரமாண்டமாக உயர்ந்து நிற்கும் புற்றையே அம்மனாக வைத்து மக்கள் வழிபடும் இடம் இருக்கின்றது. இப்புற்றில் அம்மன் வடிவமாக அமைக்கப்பட்ட வடிவம் இந்த மண்டபத்தின் நடுப்பகுதியில் இருக்குமாறு செய்திருக்கின்றார்கள். நடுப்பகுதியில் அமைந்திருப்பதால் பக்தர்கள் அம்மன் வடிவத்தின் முன் நின்று தாமே தீபாராதனைக் காட்டி தாமே பிரார்த்தனை செய்து கொண்டு செல்ல இலகுவாக அமைந்துள்ளது. இக்கோயிலில் அர்ச்சனை செய்து வைக்க என்று தனியாக அர்ச்சகர்களோ குருக்கள்களோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் கூட்டம் நிறைந்திருந்த அன்றும் கூட பொது மக்கள் வரிசையாக நின்று ஒவ்வொருவரும் யாரையும் இடித்து தள்ளிக் கொள்ளாமல் தங்கள் வழிபாட்டினைச் செய்து விட்டு சென்று கொண்டிருந்தனர். 

புற்று வடிவத்தின் முன் பக்தர்கள் தாங்களே தாங்கள் கையோடு கொண்டு வந்திருந்த வழிபாட்டு பொருட்களை வைத்து சூடம் ஏற்றி குடும்பத்தோடு நின்று வழிபட்டு பின்னர் தங்கள் பொருட்களைக் கையோடு எடுத்துக் கொண்டு ஆலயத்தைச் சுற்றி செல்கின்றனர். அப்படி செல்லும் போது முதலில் ஒரு பெண்மணியிடம் மங்கலப் பொருட்களைப் பெற்றுக் கொள்கின்றனர். 

பின்னர் அங்கு நிற்கும் இரண்டு பெண்களிடம் வேப்பிலை போன்ற வடிவம் கொண்ட ஒரு இலையால் உடல் முழுவதும் படுவது போல செய்து கொண்டு அங்கிருந்து நகர்ந்து அடுத்த இடம் செல்கின்றனர். இங்கே இருக்கும் ஒரு பெண்மனி அவர்களுக்கு புனித நீரை ஒரு பெரிய கரண்டியில் எடுத்துக் கொடுக்க அதனை பக்தர்கள் பருகிச் செல்கின்றனர்.

இந்த மையப்பகுதியை அடுத்தார் போல வலது புறத்தில் ஒரு சிறிய விநாயகர் சன்னிதி இருக்கின்றது. இங்கேயும் மக்கள் வரிசையாக வருகின்றனர். முன்னால் நிற்கும் ஊழியர்கள் பக்தர்கள் கொண்டு வரும் தட்டில் சூடம் ஏற்றித் தர குடும்பத்தோடு மக்கள் விநாயகரை வழிபட்டு செல்கின்றனர். வெளியேறும் போது அங்கு நிற்கும் ஒருவர் விபூதியை அவரே  தாமாக நமது நெற்றியில் இட்டு விடுகின்றார். ஆலயத்தின் எல்லா இடங்களிலும் அவசரம், தள்ளிப்பிடித்தல் என்ற வகையில் இல்லாமல் மிக ஒழுங்காக காரியங்கள் நடைபெறுகின்றன.

இங்குள்ள விநாயகர் சிலையின் வடிவம் நம் கண்கள் பார்த்து பழகியனவற்றிலிருந்து மாறுபட்டவை. ஒல்லியான உடம்புடன் தொந்தியில்லாத விநாயகர் நமக்கு வித்தியாசமாகவே படுகின்றார். ஆயினும் அலங்காரங்களுடனும் பக்தர் கூட்டத்துடனும் பார்க்கும் போது நம் மனதைக் கவரத் தவறவில்லை. நான் என் வழிபாட்டை முடித்துக் கொண்டு கோயில் இடப்புரம் கச்சேரி நடந்து கொண்டிருந்த பகுதிக்குச் சென்றேன். அங்கே திரு.கார்த்திகேயன் இசைக்குழுவினர் தமிழிசை கச்சேரி செய்து கொண்டிருந்தனர்.

இடையில் எங்களை அழைத்துச் சென்ற திரு.சின்னப்பன் தம்பதியர் எங்கள் வருகையைப் பற்றிச் சொல்ல, உடனே எங்களில் யாரேனும் பாட விருப்பம் உள்ளதா என வினவினர். என்னுடன் வந்திருந்த திரு.நயினை விஜயன் அவர்கள் அற்புதமாக ஒரு தமிழைப்பாடலைப் பாடினார். அதனை அடுத்து நானும் பாடுகின்றேன் எனச் சொல்ல என்னையும் பாட அழைத்தனர். நான் ஒரு தேவாரப் பாடலை பாடினேன். அதற்கு பக்க வாத்தியம் மிக அருமையாக அமைந்திருந்தது. மத்தளம், ஹார்மோனியம் வயலின் இசை கலந்ததும் எனக்கு முன்னர் கச்சேரி செய்த நினைவுகள் மனதில் தோன்றின. ஆகையால் பாடலை சற்றே விரிவாக்கி பாடி முடித்து எழுந்த போது மீண்டும் ஒரு பாடலை பாடுமாறு கேட்டுக் கொண்டனர் இசைக்குழுவினர். எனக்கு இது மேலும் ஆர்வத்தையும்  மகிழ்ச்சியும் அளித்ததால் மேலும் ஒரு தமிழிசைப்பாடலை பாடினேன். பாடி முடித்து கீழே வரும்போது நண்பர்களின் புன்னகை கலந்த பாராட்டுதல்கள் எனக்கு நிறைந்த மன மகிழ்ச்சியை அளித்தன. 

எதிர்பாராது நடந்த நிகழ்வு அது. மனதில் இன்னமும் நினைத்துப் பார்க்கும் போது அதே மகிழ்ச்சி மலர்கின்றது.

தொடரும்..

சுபா

தேமொழி

unread,
May 21, 2015, 3:34:23 PM5/21/15
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com

On Thursday, May 21, 2015 at 12:17:11 PM UTC-7, Suba.T. wrote:

பாராட்டுகள் !!! 
என்ன தேவாரப் பாடல், தமிழிசைப் பாடல் பாடினீர்கள் சுபா.  இந்து அல்லது நண்பர்களர் யாரேனும் நீங்கள் பாடியதை காணொளி எடுத்தனரா? 

Suba.T.

unread,
May 21, 2015, 3:46:04 PM5/21/15
to மின்தமிழ், Subashini Tremmel
​சலம்பூவொடு தூபம் மறந்தறியேன், தோடுடைய செவியன் இரண்டு பாடல்களும் பின்னர் 'ஆதிபராசக்தி அகிலாண்ட நாயகி​'  வஸந்தா ராகத்தில் அமைந்த ஒரு பாடலையும் பாடினேன்.
​தோடுடைய செவியன் பாடியது வீடியோ எடுத்த நினைவு இருக்கின்றது. பார்க்கனுமா? :-))​

சுபா

எதிர்பாராது நடந்த நிகழ்வு அது. மனதில் இன்னமும் நினைத்துப் பார்க்கும் போது அதே மகிழ்ச்சி மலர்கின்றது.

தொடரும்..

சுபா

2015-05-13 8:36 GMT+02:00 Suba.T. <ksuba...@gmail.com>:
பதிவு 12

புற்று மாரியம்மன் கோயிலில் எடுக்கப்பட்ட படங்களில் சில புகைப்படங்களை மட்டும் இப்பதிவில் இன்று பகிர்ந்து கொள்கின்றேன்.

-- 

தேமொழி

unread,
May 21, 2015, 3:50:03 PM5/21/15
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com
ஆமாம் சுபா :-)) பார்க்கணுமே ..

Suba.T.

unread,
May 21, 2015, 3:52:11 PM5/21/15
to மின்தமிழ்

2015-05-21 21:50 GMT+02:00 தேமொழி <jsthe...@gmail.com>:

​..

ஆமாம் சுபா :-)) பார்க்கணுமே ..

​சரி.. ப்ராஸஸ் செய்துட்டு நான் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.

சுபா​
 
Malarvizhi Mangay

unread,
May 21, 2015, 11:28:01 PM5/21/15
to mint...@googlegroups.com

உள்ளங்கவர் கள்வன் _இல்லை இல்லை கள்ளி ஆகிவிட்டீர்கள் சுபா! தமிழிசைப்பாடகி _சுடிதார் அணிந்த சுந்தரி.சர்வகலாவல்லிதான் போங்கள்! உண்மையில் மனம் மகிழ்கிறது சுபா.வாழ்க! வளர்க!

Suba.T.

unread,
May 22, 2015, 4:25:38 PM5/22/15
to மின்தமிழ், Subashini Tremmel
பதிவு 14

தென்னாப்பிரிக்காவிற்கான தமிழர்களின் குடியேற்றம் என்பது 1860களில் தொடங்குகின்றது. தென்னாப்பிரிக்காவின் நாட்டல் (Natal) பகுதியில் தமிழ் மக்களின் குடியேற்றம் என்பது நாட்டல் கரும்புத்தோட்டத்தோடு நெருங்கிய தொடர்பு உடையது. தென்னாப்பிரிக்காவின் பெரும்பாண்மை இனக்குழுவினராகிய சூலு(Zulu) இனமக்கள் கரும்புத்தோட்டங்களில் பணிபுரிவதைத் தவிர்க்க ஆரம்பித்து விட்ட நிலையில் அங்கு பணிபுரிய அப்போதைய பிரித்தானிய காலணித்துவ ஆட்சிக்கு மாற்று மனிதவளத் தேவை என்பது அத்தியாவசியமாகிப் போன சூழலில் அவர்களது பார்வை தென்னிந்தியாவை நோக்கிச் சென்றதன் அடிப்படையில் தென்னிந்தியாவைச் சேர்ந்த  உடல் உழைப்பு தொழிலாளர்களைத் தென்னாப்பிரிக்கா கொண்டு செல்லும் முயற்சி தொடங்கியது. 

1860 ஆண்டு அப்போதைய  மட்ராஸிலிருந்து 16 நவம்பர்  டர்பன் துறைமுகத்தை வந்தடைந்த கப்பலில் முதல் தென்னிந்திய மக்கள் வந்து சேர்ந்தனர் என்று குறிப்புக்களிலிருந்து அறிகின்றோம். அப்படி வந்த மக்களில் தமிழகத்திலிருந்து வந்த மக்களே பெரும்பான்மையினர். இந்த தமிழக மக்கள் தென்னாப்பிரிக்காவிற்குப் புலம் பெயர்ந்த போது தங்கள் வாழ்க்கையில் கடைபிடித்த உணவு, வழிபாடு, குடும்ப முறை வழக்கங்கள ஆகியவற்றையும் டொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதில் தவறவில்லை என்பது தென்னாப்பிரிக்கத் தமிழர்களைக் காணும் போது தெரிகின்றது. 

அர்ச்சனை தட்டை ஏந்தியவண்ணம் ஒரு பக்தர்

இடைபட்ட காலத்தில் தமிழ் மொழி என்பது படிப்படியாக மறைந்து விட்ட நிலை ஏற்பட்டது என்பதை மறக்க முடியாது.பல தென்னாப்பிரிக்க தமிழர்களுக்கு ஒரு சொற்களும் தமிழ் தெரியாத நிலையே இருப்பது கண்கூடு. ஆயினும் தாம் தமிழ் மக்கள், என்ற உணர்வினை அவர்கள் மறக்கவுமில்லை, ஒதுக்கவுமில்லை.

தமிழ் மொழி மறக்கப்படக்கூடாது என பல தமிழ்ச்சங்கங்கள் எவ்வாறு முயற்சி செய்து வருகின்றனவோ அதே போல ஆலயங்கள் பலவும் இங்கு தமிழர் வழிபாட்டு முறைகள் மக்கள் மத்தியில் மறைந்து போய் விடாமல் காப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

புற்றுமாரியம்மன் கோயிலைப் பார்க்கும் போது சிறிதும் மாற்றமில்லாது தமிழகத்து கோயில்களே நினைவுக்கு வரும் வகையில் அங்கே கிராமத்து வழிபாட்டு முறையைக் காண முடிகின்றது.

ஒரு பக்கம் மணலால் எழுப்பப்பட்ட அம்மன் சன்னிதி. அந்த மணல் பகுதியைச் சுற்றி எலுமிச்சை பழ மாலை. மணல்புற்றின் மேல் மலர்கள் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன. மலர் மாலைகளும் அணிவிக்கபப்ட்டிருக்கின்றன. கோழி முட்டைகளை புற்றின் மேல் பகுதியிலும் அடிப்பகுதியிலும் அடுக்கி வைத்திருக்கின்றனர்.

​வீரபத்திரன் சாமி

இன்னொரு பக்கம் வீரபத்திரன் சிலை குதிரையில் சவாரி செய்வது போன்ற தோற்றத்துடன் அமைக்கப்பட்டிருக்கின்றது. இதுவும் கிராமத்து வழக்கில் சிறிதும் மாற்றமில்லாத வகையில் அமைந்துள்ளது.

​பக்தர்களுக்கு வேப்பிலை சார்த்தும் பெண்கள்

மாரியம்மனுக்கு மஞ்சள் நீரும் வேப்பிலையும் சார்த்துவது எப்படி தமிழக கிராமப்புறங்களில் இன்னமும் வழக்கமாக இருக்கின்றதோ அதே போல இங்கேயும்  அம்மனின் அருள் கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு கிட்ட வேண்டும் என நினைத்து வந்து செல்வோர் அனைவருக்கும் வேப்பிலையை உடலில் சார்த்தி அனுப்புகின்றனர். இதற்காககோயிலில் பணியாற்றும் தன்னார்வலர்கள் குறிப்பாக இளைஞர்கள் இவ்வகை பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கின்றனர்.

தொடரும்..

சுபா

Suba.T.

unread,
May 22, 2015, 4:48:37 PM5/22/15
to மின்தமிழ், Subashini Tremmel
இங்கே கோயிலில் பதியப்பட்ட வீரபத்திரன் பூஜை வீடியோ பதிவைக் காணலாம் 
நன்றி: சாம் விஜய்.

சுபா

தேமொழி

unread,
May 22, 2015, 11:08:50 PM5/22/15
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com

சுட்டி சுட்டுவது மதுரை வீரன் காணொளி சுபா. 

..... தேமொழி 

Suba.T.

unread,
May 23, 2015, 5:09:23 AM5/23/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-05-23 5:08 GMT+02:00 தேமொழி <jsthe...@gmail.com>:

சுட்டி சுட்டுவது மதுரை வீரன் காணொளி சுபா. 

நன்றி தேமொழி.
பதிவிலும் மதுரை வீரன் என மாற்றி விடுகிறேன்.

சுபா
 
Oru Arizonan

unread,
May 25, 2015, 7:02:35 PM5/25/15
to mintamil
//எனக்கு இது மேலும் ஆர்வத்தையும்  மகிழ்ச்சியும் அளித்ததால் மேலும் ஒரு தமிழிசைப்பாடலை பாடினேன்.//

சுபா அவர்களே,  தங்களது பாட்டைக் கேட்டு மகிழ ஆவலாக இருக்கிறது.  தாங்கள் பாடிய அப்பாட்டைப் பதிவு செய்து வலையேற்றலாமே!  தங்கள் மனதில் ஏற்பட்ட மகிழ்வை நாங்களும் பெறுகிறோமே!

அன்புடன்,
ஒரு அரிசோனன் 

2015-05-13 8:36 GMT+02:00 Suba.T. <ksuba...@gmail.com>:
பதிவு 12

புற்று மாரியம்மன் கோயிலில் எடுக்கப்பட்ட படங்களில் சில புகைப்படங்களை மட்டும் இப்பதிவில் இன்று பகிர்ந்து கொள்கின்றேன்.

எதிர்பாராது நடந்த நிகழ்வு அது. மனதில் இன்னமும் நினைத்துப் பார்க்கும் போது அதே மகிழ்ச்சி மலர்கின்றது.

Suba.T.

unread,
May 29, 2015, 4:03:43 PM5/29/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-05-26 1:02 GMT+02:00 Oru Arizonan <oruar...@gmail.com>:
//எனக்கு இது மேலும் ஆர்வத்தையும்  மகிழ்ச்சியும் அளித்ததால் மேலும் ஒரு தமிழிசைப்பாடலை பாடினேன்.//

சுபா அவர்களே,  தங்களது பாட்டைக் கேட்டு மகிழ ஆவலாக இருக்கிறது.  தாங்கள் பாடிய அப்பாட்டைப் பதிவு செய்து வலையேற்றலாமே!  தங்கள் மனதில் ஏற்பட்ட மகிழ்வை நாங்களும் பெறுகிறோமே!

​சரி.. நேரம் கிடைப்பதே பிரச்சனையாக உள்ளது. பல விஷயங்கள் வெளியீட்டிற்கு உள்ளன. இடையில் எனக்கு நேரம் கிடைக்கும் போது தயாராக்கி நிச்சயம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

சுபா​
 
Suba.T.

unread,
May 29, 2015, 4:27:43 PM5/29/15
to மின்தமிழ், Subashini Tremmel
பதிவு 15

காலையில் புற்று மாரியம்மன் கோயிலில் வழிபாட்டை முடித்ததோடு கோயில் நிர்வாகத்தலைவர் திரு சீலன் ஆசாரியுடன் ஒரு பேட்டியையும் செய்து முடித்தேன். அத்தோடு, சாஸ்திரிய இசைபயின்று அதே வேளை தமிழிசை பாடி டர்பனில் இசைக் கச்சேரிகள் நடத்துபவரும் இசைப்பள்ளி நடத்தி வருபவருமான திரு.கதிரேசனையும் ஒரு பேட்டி கண்டேன். ஆலயத்தில், எனக்கும் என்னுடன் வந்திருந்த ஏனையோருக்கும் ஆலய நிர்வாகத்தினர் தேனீரும் பலகாரங்களும் வழங்கி அன்புடன் உபசரித்தனர்.

பேட்டிக்குப் பின்னர் ஆலய நிர்வாகத்தலைவர் திரு.சீலன் ஆசாரி, சாம் விஜய் (அமர்ந்திருப்போர்)
திரு.சின்னப்பன், ஆலயத்தின் மற்றும் ஒரு நிர்வாகத்தர் (நிற்பவர்கள்) 

அங்கிருந்து  சிவானியின் வாகனத்தில் சிலரும் கோகியின் வாகனத்தில் சிலரும் எனப் புறப்பட்டோம். எங்களின் அடுத்த இலக்கு டர்பன் முருகன் கோயில். 

​சிவானி 

புற்று மாரியம்மன் கோயிலிருந்து ஏறக்குறைய 7 நிமிட பயணத்தில் இந்தக் கோயிலை அடைந்து விடலாம். செல்லும் போதே டர்பன் நகர சாலைகள் வீடுகளின் அமைப்புக்களையும் பார்த்துக் கொண்டே வந்தேன்.

​ஆஸ்திரேலிய நண்பர் திரு.சுகுமாரன், சாம் விஜய், திரு.சின்னப்பன்

சிவானி இரண்டு முறை எங்களை அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. முதல் பயணத்தில் மலேசிய நண்பர்களை முருகன் கோயிலில் கொண்டு வந்து விட்டு விட்டு, கோயிலில் பேட்டி செய்து கொண்டிருந்த எங்களை அழைத்துச் செல்ல மீண்டும் வந்திருந்தார். மிகப்பொறுப்புடன் எங்களை அழைத்துச் செல்ல வேண்டும் என நினைத்துக்கொண்டு எல்லா காரியங்களையும் கவனத்துடனும் பொறுப்புடனும் செய்வதைப் பார்த்து ரசித்தேன். எங்களுக்குப் பால் பாயசம் செய்ய வேண்டும் என சொன்னதில் இடையில் வாகனத்தை நிறுத்தி பால் பாக்கெட்களும் வாங்கிக் கொண்டார். 

​சாலையில் ஒரு வியாபாரி முருக்கு விற்றுக் கொண்டு செல்கின்றார்

வாகனத்தில் செல்லும் போதே சாலையோர வியாபாரிகள் வாகன ஓட்டிகளிடம் வியாபாரம் செய்வதையும் காண முடிந்தது. எங்கள் வாகனத்தின் அருகே முருக்கு தூக்கிக் கொண்டு வந்து விற்க வந்தார் ஒரு ஆப்பிரிக்கர். அவர் கையிலும் முருக்கா என பார்த்து வியந்து புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.

​டர்பன் சாலையில்

சில நிமிடங்களில் முருகன் கோயில் வாசலை வந்தடைந்து விட்டோம் என்பதற்கு அடையாளமாக சற்று தூரத்திலேயே நெடிய முருகன் சிலையைக் காண முடிந்தது. பின்புறமாகச் சென்று வாகனத்தை நிறுத்த, வாகனத்தில் வந்த  நாங்கள்  இறங்கிக் கொண்டோம்.
.

அப்போது மதிய வேளை. ஆயினும் கோயில் பூட்டப்படாமல் திறந்தே இருந்தது. ஆலயத்தில் பக்தர்கள் இல்லாத நேரம் அது. 

தொடரும்.

சுபா

Suba.T.

unread,
Jun 8, 2015, 6:09:17 PM6/8/15
to மின்தமிழ், Subashini Tremmel
பதிவு 16

டர்பன் நகர் தமிழ் மக்கள் பெரும்பாண்மையினர் வாழும் ஒரு பகுதி. இன்றைக்கு ஏறக்குறைய 250 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி, ஒப்பந்த தொழிலாலர்களாக தென்னாப்பிரிக்காவின் நாட்டல் பகுதிக்கு வந்து சேர்ந்த தமிழர்களில் பலர் மீண்டும் அவர்களது தாயகமான தமிழகத்திற்குத் திரும்பிச் செல்லவில்லை. 

கிடைக்கின்ற ஆவணங்களைப் பார்க்கும் போது, 1860 ஆண்டு, அப்போதைய  மட்ராஸிலிருந்து  நவம்பர் 16ம் நாள் இந்திய பெருங்கடலில் அமைந்திருக்கும்  டர்பன் துறைமுகத்தை வந்தடைந்த கப்பலில் முதல் தென்னிந்திய மக்கள் வந்து சேர்ந்தனர்.  இப்படி வந்த இவர்கள் மூன்றாண்டு கால ஒப்பந்ததில் கையெழுத்திட்டுக் கொண்டு  தொழில் பார்க்க என்ற காரணத்திற்காக மட்டுமே எனக் கொண்டுவரப்பட்டவர்கள். இவர்களில் மிக அதிக எண்ணிக்கையில் இருந்தவர்கள் தமிழர்கள். இவர்களைப் போல தெலுங்கர்களும் சில வட இந்தியர்களும் வந்து சேர்ந்தனர். ஆரம்பத்தில் உழைத்து பணம் சம்பாதித்து திரும்பிச் செல்ல வேண்டும் என்ற கணவுடன் தான் இவர்கள் வந்தனர். ஆயினும் நாள் செல்லச் செல்ல திரும்பிச் செல்வதை விட தொடர்ந்து பணியாற்றி இந்தப் புதிய இடத்தில் தமக்கென்று ஒரு வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றே இவர்களில் பலர் முடிவெடுத்ததன் விளைவாக பல தடைகள இருந்த போதிலும் திரும்பிச் செல்ல இவர்கள் முன் வரவில்லை.

புலம் பெயர்ந்த மக்களுக்கு இருக்கும் ஒரு மிகப்பெரிய உளவியல் சிக்கல் இது. அன்னிய நாட்டிற்கு வந்து அங்குள்ள வாழ்க்கை நிலையில் பழக ஆரம்பித்ததும் நம் மனம் புதிய விஷயங்களுக்கு நம்மைப் பழக்கப்படுத்திக் கொள்கின்றது. தாய்மண்ணின் ஏக்கம் மனதில் இருந்தாலும் புதிய சூழல், புதிய வாழ்க்கை தேவைகள்,  புலம்பெயர்ந்த இடத்தில் கிடைக்கின்ற சில மேம்பாடுகள் ஆகியன மீண்டும் தாயகம் திரும்பும் எண்ணத்தை தாமதப்படுத்திப் போடுவதையே விரும்பும் நிலையைத் தான் பெருவாரியாகக் காண்கின்றோம். கல்விக்காகவோ அல்லது தொழிலுக்காகவோ அல்லது அடிப்படை வாழ்க்கை நலனுக்காகவோ அல்லது அரசியல் சூழல் காரணமாகவோ....... காரணம் ஏதாக இருப்பினும் வந்து விட்ட புதிய சூழலில் வாழ்க்கையைத் தொடர்வதற்கே மனம் தன்னைத் தயார் படுத்திக் கொள்கின்றது. இப்படி நிகழ்ந்தமையால்தான் தென்னாப்பிரிக்கா வந்த தமிழ் மக்களில் பலர் தாயகம் திரும்பிச்செல்லாத நிலையில் தென்னாபிரிக்கத் தமிழர்கள் என்ற ஒரு தனி இனமே ஆப்பிரிக்க கண்டத்தில் உருவாகியது.

இங்கு வந்த தமிழ் மக்கள் தங்கள் பண்பாட்டு எச்சங்களைப் புதிய சூழலில் விட்டுக் கொடுத்து விடவில்லை. தாம் தமிழர்தாம் என்ற நிலையை மறந்து ஒதுக்கித் தள்ளிவிட்டு தென்னாப்பிரிக்க சூழலில் ஆங்கில நாகரிகத்திற்கு தம்மை முழுமையாக விட்டுக் கொடுத்து விடவில்லை. இன்னமும் தங்கள் மூதாதையர்களின் பாரம்பரியம் என்பது தென்னாப்பிரிக்க மண்ணிலும் தொடர்கின்றது. 

டர்பன் புற்று மாரியம்மன் ஆலயத்திலிருந்து பயணித்து சில நிமிடங்களில் சிவானியின் வாகனத்தில் முருகன் கோயில் வந்தடைந்தோம். முருகன் கோயிலில் அந்த மதிய வேளையில் பக்தர்கள் யாரும் இல்லை. 

கோயிலின் முன் புறத்தில் பொன்னிறத்திலான பிரமாண்டமான முருகன் சிலையை வைத்திருக்கின்றார்கள். உள்ளே மூலஸ்தானத்தில் மத்தியில் வள்ளி தெய்வயானை இணைந்த முருகன், விநாயகர், சிவலிங்கம், பார்வதி சிலைகளும் அமைகப்பட்டுள்ளன. கோயிலில் ஒரு குருக்கள் இருந்து வழிபாட்டு விஷயங்களைக் கவனித்துக் கொள்கின்றார் என்பதையும் அறிந்து கொண்டேன்.

சில நிமிடங்கள் முருகன் ஆலயத்தில் இருந்து விட்டு அங்கிருந்து நாங்கள் திரு.திருமதி.சின்னப்பன் இல்லத்திற்கு பகல் உணவிற்காகச் சென்றோம். அங்கு எங்களுக்ககா விருந்து தயாரித்துக் கொண்டிருந்தார் கோகி.

தொடரும்

சுபா

2015-05-29 22:27 GMT+02:00 Suba.T. <ksuba...@gmail.com>:
பதிவு 15

காலையில் புற்று மாரியம்மன் கோயிலில் வழிபாட்டை முடித்ததோடு கோயில் நிர்வாகத்தலைவர் திரு சீலன் ஆசாரியுடன் ஒரு பேட்டியையும் செய்து முடித்தேன். அத்தோடு, சாஸ்திரிய இசைபயின்று அதே வேளை தமிழிசை பாடி டர்பனில் இசைக் கச்சேரிகள் நடத்துபவரும் இசைப்பள்ளி நடத்தி வருபவருமான திரு.கதிரேசனையும் ஒரு பேட்டி கண்டேன். ஆலயத்தில், எனக்கும் என்னுடன் வந்திருந்த ஏனையோருக்கும் ஆலய நிர்வாகத்தினர் தேனீரும் பலகாரங்களும் வழங்கி அன்புடன் உபசரித்தனர்.

Bala Sundara Vinayagam

unread,
Jun 10, 2015, 2:35:32 PM6/10/15
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com
தலைப்பைத் தவிர மற்றெல்லாம் நன்றாக இருக்கின்றன.  மூடிய மனதோடு புது இடங்களைப்பார்க்க பயணம் செய்வார்களா? என்ற கேள்வியை தலைப்பு எழுப்புகிறது.

முதலில் போட்ட ஃபோட்டோ வெகு சிறப்பு. காலோரத்தில் அமர்ந்திருக்கும் அந்தச் சின்னப்பையன் தன் வாய் திறந்த சிரிப்பால் உங்கள் பயணக்கட்டுரைக்கு சிறப்பு சேர்க்கிறான்.

On Saturday, 11 April 2015 03:32:35 UTC+5:30, Suba.T. wrote:

​காந்தி வாழ்ந்த இடத்தில் .. ஷுலு இனக்குழு மக்களின் குழந்தைகளோடு

​உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தென்னாப்பிரிக்க கிளையின் தலைவர் திரு.மிக்கி செட்டி அவர்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜெர்மனி வந்திருந்த பொழுதில்,  இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற உள்ள தமிழாசிரியர் பட்டமளிப்பு விழாவிலும் அதனைத் தொடர்ந்து நடைபெற உள்ள செயலவைக் குழு தேர்தல் நிகழ்விலும் கலந்து கொள்ள அழைப்பு விடுத்திருந்தார். அலுவலக பணிகளுக்கிடையேயும் எனது முனைவர் பட்ட ஆய்வுக்கிடையேயும் இதனை சாத்தியப்படுத்த முடியுமா என்ற ஒரு அய்யம் மனதில் இருந்து கொண்டிருந்தது. ஆயினும் இந்த இயக்கத்தின் செயலவைக் குழுவினர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இப்பயணத்திற்கு திட்டமிட்டேன்.

இந்த இயக்கத்தில் பல ஆண்டுகள் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒருவர், நான் ஜொஹான்னஸ்பெர்க் நகருக்கு டிக்கட் போடவேண்டுமென்று தகவல் சொல்லிவிட்டார். ஆக அங்கு செல்ல விமானத்தை தேடிய போது எத்தியோப்பியன் விமானத்தில் குறைந்த நேர இடைவெளி.  அத்தோடு பயணக்கட்டணமும் கணிசமான விலை என்ற வகையில் டிக்கட் அமைந்தது. நானும் தோழி இந்துவும் பயணத்திற்கு டிக்கட்டை பதிந்து கொண்டோம். இதைப் பற்றி அந்த பொறுப்பாளரிடம் குறிப்பிட்ட போது எத்தியோப்பியன் ஏர்லைன்ஸில் சென்றால் இபோலா காய்ச்சல் வந்து இறந்து விடுவீர்கள் என்று கூடுதல் 'இன்மொழி' கூறினார். 

என்ன செய்வது ..? இப்படியும் சில மனிதர்கள்!

எத்தியோப்பியன் விமான பயண விபரங்களைப் பார்த்தபோது தினம் ஒரு விமானம் எத்தியோப்பியா செல்வதை அறிந்து கொண்டேன். ஜெர்மனியில் கணிசமான எண்ணிக்கையில் எத்தியோப்பியர்களும் ஆப்பிரிக்காவின் ஏனைய நாடுகளைச் சேர்ந்தோரும் இருக்கின்றனர். விமானத்தில் பயணித்தாலே இபோலா நோய் வரும் என நினைப்போரை என்ன செய்வது? எல்லாம் அறியாமை தான் காரணம். இப்படியும் மனிதர்கள் இருக்கின்றார்களே என வருந்திக் கொண்டதோடு மட்டுமல்லாது அந்த நபருக்கும் இபோலா பற்றியும் அனைத்துலக விமானப்பயணத்தில் கடைபிடிக்கப்படும் சுகாதார முறைகள் பற்றியும் சற்று விளக்கியும் கூறினேன்.

​விமானப் பயணத் தகவல்

ஆனால் பின்னர் டர்பனில் தான் நிகழ்வு என்று உறுதியானதும் ஜொஹான்னஸ்பெர்கிலிருந்து டர்பனுக்கு ஒரு பயண டிக்கட் கூடுதலாக பதிவு செய்ய வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது. குலுலா விமான சேவையகத்தில் இதற்கான  டிக்கட்டை  எனக்கும் இந்துவிற்கும் பதிந்து கொண்டேன்.

எங்களின் பயணம் 4 விமான நிலையங்களில் உலாவும்  வகையில் 3 விமானங்களில் பயணம் என்ற வகையில் அமைந்தது. இப்படி ஒரு பயணத்தை இது நாள் வரை நான் என் வாழ் நாளில் செய்த்தில்லை. எல்லாம் புது அனுபவம் என நினைத்து பயண ஏற்பாட்டு வேலைகளைக் கவனித்துக் கொண்டேன்.
  • ஃப்ராங்பர்ட் நகரிலிருந்து எத்தியோப்பிய விமானத்தின் வழி முதலில் அதன் தலைநகரான அடிஸ் அபாபாவிற்குப் பயணம்
  • அடிஸ் அபாபாவிலிருந்து ஜொஹான்ன்ஸ்பெர்க்
  • பின்னர் ஜொஹான்னஸ்பெர்கிலிருந்து டர்பனுக்கு 
என பயணம் இருந்தது.

​ஃப்ராங்பர்ட் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட எஹ்ட்தியோப்பிய விமானம்

எனது வாகனத்தில் ஃப்ராங்பர்ட் விமான நிலையம் வரை பயணம் செய்து அங்கு விமான நிலைய கார் பார்க்கில் வாகனத்தை விட்டு விட்டு எத்தியோப்பிய விமானத்தில் நானும் இந்துவும் அடிஸ் அபாபா நோக்கி புறப்பட்டோம்.​

தொடர்வோம் நம் பயணத்தை டர்பனுக்கு....

சுபா

Suba.T.

unread,
Jun 10, 2015, 3:50:38 PM6/10/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-06-10 20:35 GMT+02:00 Bala Sundara Vinayagam <balasundar...@gmail.com>:
தலைப்பைத் தவிர மற்றெல்லாம் நன்றாக இருக்கின்றன.  மூடிய மனதோடு புது இடங்களைப்பார்க்க பயணம் செய்வார்களா? என்ற கேள்வியை தலைப்பு எழுப்புகிறது.

​சுற்
றுப்பயண​ம், தமிழ் நிகழ்வுகள் தொடர்பான பயணம் என்பவை எப்போதும் எனக்கு மனதுக்கு மகிழ்ச்சி அளிப்பவை என்ற ரீதியில் பயண ஏற்பாடு செய்யும் போதே மனதில் மகிழ்ச்சி தொற்றிக் கொள்ளும். ஆனால் இந்தப் பயணம் டிசம்பர் மாதம் பதிவு செய்த நாளிலிருந்து நான் அடைந்த மன உளைச்சல் மிகப் பெரிது.  ஆக விரும்பாமல் சென்ற பயணம் தான் இது.

​ஆனால் டர்பனில் இறங்கி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை சந்தித்த அக்கணத்திலிருந்து​ ..மனதில் அனைத்துமே மகிழ்ச்சியாகவே அமைந்தன.. ஆக விரும்ப ஆரம்பித்து விட்டேன்.. டர்பனை..

முதலில் போட்ட ஃபோட்டோ வெகு சிறப்பு. காலோரத்தில் அமர்ந்திருக்கும் அந்தச் சின்னப்பையன் தன் வாய் திறந்த சிரிப்பால் உங்கள் பயணக்கட்டுரைக்கு சிறப்பு சேர்க்கிறான்.

​ஆமாம். இன்னொரு பெண்குழந்தை.. முகத்தை போடோவுக்குக் காட்டாமல் தலையையும் மூடிக் கொண்டிருப்பவள்.. அதுவும் எனக்கு​
 
​பிடித்தது.. ​

சுபா

Suba.T.

unread,
Jun 11, 2015, 5:39:45 PM6/11/15
to மின்தமிழ், Subashini Tremmel
பதிவு 17

டர்பன் நகர் வந்த நாள் முதல் எங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தங்கும் விடுதியிலேயே உணவு சாப்பிட எல்லா ஏற்பாடுகளும் ஆகியிருந்தமையினால் வெளியே சென்று உணவகங்களில் சாப்பிடும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை. தென்னாப்பிரிக்க தமிழ் மக்கள் வீட்டு சமையல் எப்படி இருக்கின்றது என்று அறிந்து கொள்ளவும் அதுவரை வாய்ப்பு கிட்டவில்லை. வந்து சேர்ந்த முதல் மூன்று நாட்களிலுமே நிகழ்ச்சிகளிலேயே நாட்கள் கழிந்ததால் அதுவரை வெளியே சென்று இயல்பானவாழ்க்கையை அறிந்து கொள்ள முடியாமலேயே இருந்தது. இந்த நிலையை போக்கும் வகையில் கோகி அவர்கள் இல்லத்தில் வந்து எல்லோரும் மதிய உணவு சாப்பிட்டு செல்லும் படி அழைத்திருந்தார்.

​சமையலில் மும்முரமாக கோகி

முருகன் கோயிலில் வழிபாட்டை முடித்திக் கொண்டு திரு.சின்னப்பன், கோகி வீட்டிற்கு மதிய உணவிற்குச் செல்வதாக ஏற்பாடாகியிருந்தது. வாகனத்தில் எல்லோரும் ஒரே நேரத்தில் செல்ல முடியாது என்பதால் முதலில் சிலர் சென்று விட்டனர். நானும் ஏனைய சில நண்பர்களும் முருகன் கோயிலில் கொஞ்சம் நேரத்தை கழித்து விட்டு  பின்னர் சிவானியின் காரில் அவர்கள் இல்லத்தை வந்தடைந்தோம். வீட்டிற்குள் நுழையும் போதே இந்திய உணவு வகைகளின் வாசம் எங்களுக்கு பசியைத் தூண்டுவதாகவே இருந்தது.

புளியஞ்சாதம், சப்பாத்தி, குருமா, சாதம், காரக் குழம்பு அப்பளம் என பலவகையான பதார்த்தங்களை கோகி அந்த குறுகிய நேரத்தில் எங்கள் எல்லோருக்கும் சமைத்திருந்தது ஆச்சரியம் தருவதாக இருந்தது. உணவை முடித்து கோகி செய்திருந்த பால் பாயசத்தையும் சுவைக்க நான் தவறவில்லை. 

​சிவானி

திரு,சின்னப்பன் கோகி இருவரின் ஒரே புதல்வி சிவானி ஒரு பரதக்கலைஞர். டர்பன் நகரில் நடனப்பள்ளி நடத்தி வரும் இவர் வக்கீலாகும் லட்சியத்துடன் இறுதியாண்டு பல்கலைக்கழகத்தில் படித்து வருபவர். வீட்டில் அவரது நேர்த்தியான நாட்டியப் புகைப்படங்கள் வீட்டின் அழகுக்கு அழகு சேர்த்துக் கொண்டிருந்தது.

அவர்களின் விருந்தோம்பலை பாராட்டி மீண்டும் தங்கு விடுதி வந்து சேர்ந்தோம்.அங்கு நாங்கள் வரும் போது இலங்கையிலிருந்தும் ஏனைய சில நாடுகளிலிருந்தும் வந்திருந்த பிரதினிதிகள் புறப்படுவதற்காக ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். அவர்களை வழியனுப்பிவைத்து விட்டு காத்திருக்கையில் டர்பனின் இந்தியத் தூதரகத்தில் தமிழாசிரியராகப் பணிபுரியும் மாலாவும் அவர் தோழி ப்ரேமியும் அங்கிருக்க அவர்களோடு சற்று உரையாடிவிட்டு மாலாவை  அவர் நடத்தும் தமிழ்பள்ளி, அங்குள்ள மக்கள் நிலை ஆகியன பற்றி குறிப்பிடும் வகையில் ஒரு பேட்டி ஒன்றினைப் பதிவு செய்தேன்.

மதியம் ஐந்து மணி வாக்கில் நண்பர்கள் விடைபெற்றுச் சென்று விட மாலை நேரம் எங்களுக்கு எந்த திட்டமும் இல்லாததால் என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்தேன். வீட்டில் வேலைகளை முடித்து விட்டு திரு.திருமதி சின்னப்பன் எங்களை சந்திக்க மீண்டும் நாங்கள் இருந்த தங்கும் விடுதிக்கு வந்திருந்தனர். 

​திரையரங்கு அமைந்திருக்கும் கேளிக்கை விடுதி

டர்பன் நகரில் உள்ள திரையரங்கில் புதிதாக கொம்பன் என்ற திரைப்படம் வந்திருப்பதாகவும் என்னை அழைத்துச் செல்ல விரும்புவதாகவும் கூறவே அன்றைய மாலைப் பொழுதை கழிக்க இது நல்ல வழி தான் என நானும் சம்மதித்து விட்டேன். கடைசியாக தமிழகத்தில் ஒரு திரையரங்கில்  நான்கு ஆண்டுகளுக்கு முன் நான் பார்த்த தமிழ்ப்படம் ராவணன். அதற்குப் பின் மீண்டும் ஒரு தமிழ்ப்படம் பார்க்க வாய்ப்பும் நேரமும் அமையவில்லை. அதோடு டர்பன் நகர திரையரங்குகளையும் இரவு நேர சிறப்புக்களையும் அறிந்து கொள்ள இது நல்ல வாய்ப்பாக அமையும் என்றும் தோன்றியதால் கொம்பன் படம் பார்க்க நான் திரு.சின்னப்பன் கோகியுடனும் எங்களுடன் இணைந்து கொண்ட திரு.மிக்கி செட்டியின் மனைவியுடனும் அவர் பேரனுடனும் புறப்பட்டு விட்டேன்.

தொடரும்..
சுபா

2015-06-09 0:09 GMT+02:00 Suba.T. <ksuba...@gmail.com>:
பதிவு 16

டர்பன் நகர் தமிழ் மக்கள் பெரும்பாண்மையினர் வாழும் ஒரு பகுதி. இன்றைக்கு ஏறக்குறைய 250 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி, ஒப்பந்த தொழிலாலர்களாக தென்னாப்பிரிக்காவின் நாட்டல் பகுதிக்கு வந்து சேர்ந்த தமிழர்களில் பலர் மீண்டும் அவர்களது தாயகமான தமிழகத்திற்குத் திரும்பிச் செல்லவில்லை. 

துரை.ந.உ

unread,
Jun 12, 2015, 12:20:36 AM6/12/15
to Groups, Subashini Tremmel
அருமையான ஆவலைத் தூண்டும் பதிவு ..பகிர்வு

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

Malarvizhi Mangay

unread,
Jun 12, 2015, 1:05:25 AM6/12/15
to mint...@googlegroups.com

சுபா டர்பனில் உங்களோடு நாங்களும் உடன் வருவதுபோலவே உணர்கிறொம்.ஏன் சுபா இப்படிச் செய்தால் என்ன? மின்தமிழ் உறுப்பினர் எல்லாம் வருடம்
ஒருமுறை ஒருநாட்டில் கூடுவது.கண்ணன் ஐயாவிடம்
கோரிக்கை யாக உங்களுடைய. இழையிலேயே
இக்கருத்தையிடுகிறேன்.

Nagarajan Vadivel

unread,
Jun 12, 2015, 1:57:10 AM6/12/15
to மின்தமிழ்
இதெல்லாம் ஒரு தலை ராகம் என்போன்ற தள்ளாதவர்களைத் தள்ளிவிட்டு ஒரு பயணமா?  மெய்நிகர் பயணம் எனக்கு நான் போன டர்பன் போகாமலே தெரிகிறதே
நவகேடி

சொ. வினைதீர்த்தான்

unread,
Jun 12, 2015, 2:07:47 AM6/12/15
to mintamil
+1

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

சொ. வினைதீர்த்தான்

unread,
Jun 12, 2015, 2:19:36 AM6/12/15
to mintamil
2015-05-22 0:47 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:

இடையில் எங்களை அழைத்துச் சென்ற திரு.சின்னப்பன் தம்பதியர் எங்கள் வருகையைப் பற்றிச் சொல்ல, உடனே எங்களில் யாரேனும் பாட விருப்பம் உள்ளதா என வினவினர். என்னுடன் வந்திருந்த திரு.நயினை விஜயன் அவர்கள் அற்புதமாக ஒரு தமிழைப்பாடலைப் பாடினார். அதனை அடுத்து நானும் பாடுகின்றேன் எனச் சொல்ல என்னையும் பாட அழைத்தனர். நான் ஒரு தேவாரப் பாடலை பாடினேன்.

உங்கள் வெற்றியின் இரகசியம் இதுவே! பலநேரங்களில் கூச்சம் காரணமாகவும், தவறு நேர்ந்துவிடுமோ என்ற எண்ணம் காரணமாகவும், புறக்கணிப்புக்கு அஞ்சியும் முன்வரத் தயங்குகிறோம். அத்தடையினை உடைப்பவர் வெற்றி பெறுகிறார். சிறப்புப்பெறுகிறார். வாழ்த்துக்கள்.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

Malarvizhi Mangay

unread,
Jun 12, 2015, 2:23:58 AM6/12/15
to mint...@googlegroups.com

நான் பலர் ஒன்றுகூடும் பஞ்சரத்தினக் கீர்த்தனைகள் பாடும் பரவசப் பொழுதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறேன்.ஒருதலைராகம் /முகாரி பாடுவதையல்ல.வேண்டுமானால் உங்களுடைய. தனிஆவர்த்தணத்திற்கு கண்ணன் ஐயாவிடம்
நாங்கள் ஏகமனதாக எல்லாரும் பரிந்துரைக்கிறோம்.
O.K.Deal?!

Suba.T.

unread,
Jun 12, 2015, 2:59:17 AM6/12/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-06-12 7:05 GMT+02:00 Malarvizhi Mangay <malarm...@gmail.com>:

சுபா டர்பனில் உங்களோடு நாங்களும் உடன் வருவதுபோலவே உணர்கிறொம்.ஏன் சுபா இப்படிச் செய்தால் என்ன? மின்தமிழ் உறுப்பினர் எல்லாம் வருடம்
ஒருமுறை ஒருநாட்டில் கூடுவது.கண்ணன் ஐயாவிடம்
கோரிக்கை யாக உங்களுடைய. இழையிலேயே
இக்கருத்தையிடுகிறேன்.

​அன்பு மலர்விழி,

மின்தமிழ் உறுப்பினர் உலகின் பல நாடுகளில் இருக்கின்றனர். நேரில் சந்திப்பதும் ஒன்று கூடுவதும் நமது நட்பை வளர்க்கும் என்பதோடு மேலும் நல்ல ஆக்ககரமான முயற்சிகளை உலகளாவிய வகையில் செயல்படுத்த உதவும்.

1999ம் ஆண்டிலுருந்து 2005 வரை உத்தமம் மானாடு நடைபெறும் போது, எந்த நாட்டில் எங்கு மானாடு நடக்கின்றதோ அங்கேயே தமிழ் மரபு அறக்கட்டளை நன்பர்களும் ஒரு நாள் ஒன்று கூடுவது என்ற வழக்கத்தைக் கொண்டிருந்தோம்.
அதன் பின்னர் 2006லிருந்து ஒவ்வொரு ஆண்டும் நான் தமிழகம் வருவதால் குறைந்தது ஒரு ஒன்று கூடுதல் நிகழ்வை நான் சென்னையில் எல்லா உறுப்பினர்களுக்காகவும் ஏற்பாடு செய்வது வழக்கம். கடந்த ஆண்டு வரை இதே வகையில் தான் நண்பர்கள் சந்தித்து செயல்பாடுகளைத் திட்டமிடுவது என்பனவற்ரை செயல்படுத்தி வருகின்றோம்.
நமது வலைத்தளத்தில் முந்தைய நிகழ்வுகளின் புகைப்படங்கள் இங்குள்ளன பாருங்கள்.http://www.tamilheritage.org/thfcms/index.php/2008-09-27-02-18-53

சென்னையில் பிரத்தியேகமாக நண்பர்கள் சந்திப்பு என்பதோடு நான் தமிழகம் வரும் போது களப்பணிகளுக்காக பல நகர்களுக்குச் செல்வதால் அங்கு கல்லூரிகலில் என் சொற்பொழிவு நடைபெறும் போது நான் சிறு சந்திப்பையும் அங்குள்ள த.ம.அ மிந்தமிழ் நண்பர்களுடன் நிகழ்த்துவது உண்டு. 

ஆக, வேறு ஊர்களில் சந்திக்கின்றோமோ இல்லையோ, இந்த ஆண்டு டிசம்பர் ஜனவரி, எனது தமிழக பயணத்தில் சில சந்திப்புக்களை நடத்த திட்டமிட்டுள்ளேன். அங்கு நாம் சந்திக்கலாம்.
தற்சமயம் என் பட்டியலில் திருநெல்வேலி, சிவகங்கை, திருச்சி, மதுரை, சிதம்பரம், உடையார்பாளையம், புதுக்கோட்டை, கும்பகோணம், ராஜபாளையம், ராமநாதபுரம் ஆகியவை  உள்ளன. 

சுபா

Nagarajan Vadivel

unread,
Jun 12, 2015, 3:34:11 AM6/12/15
to மின்தமிழ்

2015-06-12 11:53 GMT+05:30 Malarvizhi Mangay <malarm...@gmail.com>:

நான் பலர் ஒன்றுகூடும் பஞ்சரத்தினக் கீர்த்தனைகள் பாடும் பரவசப் பொழுதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறேன்.ஒருதலைராகம் /முகாரி பாடுவதையல்ல.வேண்டுமானால் உங்களுடைய. தனிஆவர்த்தணத்திற்கு கண்ணன் ஐயாவிடம்
நாங்கள் ஏகமனதாக எல்லாரும் பரிந்துரைக்கிறோம்.
O.K.Deal?!

​மின்தமிழில் அடையாளம் தெரியாத முகமூடியுடன் பஞ்சரத்தினம் பாடமுடியல. என்னையெல்லாம் என்ன கரைச்சல்​ கரைச்சல் இரண்டாம் வாய்ப்பாட்டைச் சொன்னாலே தப்புன்னு சொல்றாங்க.  இவங்களுக்குப் பயந்துகொண்டே என் சிவகாமிப்பாட்டியைப் பாக்க மதுரைக்குப் போகமுடியவில்லை பங்களூருக்கும் போகமுடியல
நவகேடி

தேமொழி

unread,
Jun 12, 2015, 3:41:51 AM6/12/15
to mint...@googlegroups.com, karu...@gmail.com

On Thursday, June 11, 2015 at 11:19:36 PM UTC-7, சொ.வினைதீர்த்தான் wrote:

உங்கள் வெற்றியின் இரகசியம் இதுவே! பலநேரங்களில் கூச்சம் காரணமாகவும், தவறு நேர்ந்துவிடுமோ என்ற எண்ணம் காரணமாகவும், புறக்கணிப்புக்கு அஞ்சியும் முன்வரத் தயங்குகிறோம். அத்தடையினை உடைப்பவர் வெற்றி பெறுகிறார். சிறப்புப்பெறுகிறார். வாழ்த்துக்கள்.

இப்பொழுது சொ வி ஐயாவின் கருத்திற்கு 
  +1 

..... தேமொழி 

Suba.T.

unread,
Jun 12, 2015, 3:50:37 AM6/12/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-06-12 7:57 GMT+02:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
இதெல்லாம் ஒரு தலை ராகம் என்போன்ற தள்ளாதவர்களைத் தள்ளிவிட்டு ஒரு பயணமா?  மெய்நிகர் பயணம் எனக்கு நான் போன டர்பன் போகாமலே தெரிகிறதே
நவகேடி

​ஏனோ திடீரென்று 2010ல் செம்மொழி மானாட்டிற்கு சென்று விட்டு திரும்பி வருகையில் கோவை விமான நிலையமும் விமானப் பயணமும் நினைவு வந்தது.  சிரித்துக் கொள்கின்றேன். :-))
சுபா

Nagarajan Vadivel

unread,
Jun 12, 2015, 3:57:11 AM6/12/15
to மின்தமிழ்
விரும்பாமல் சென்று விரும்பிய கோவை என்று நானும் எழுதவேண்டும்.  இன்றுவரை என் விமானப்பயணத் தொகை எனக்குக் கிடைக்கவில்லை.  கேட்டால் யார் போகச் சொன்னாரோ அவரைக் கேளுங்கள் என்கிறார்கள் நடக்குற வேலையா என்ன?

என்னால் மின்தமிழுக்குக் கிடைக்கும் ஒரே நன்மை என்னை நினைத்தாலே தங்களுக்குள் சிரிப்பதாகப் பலர் சொல்லுகிறார்கள்.  எப்படியோ என்னால் ஒரு நன்மையாவது நடக்கிறதே

நவகேடி

Suba.T.

unread,
Jun 12, 2015, 4:03:38 AM6/12/15
to மின்தமிழ்
2015-06-12 9:57 GMT+02:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
விரும்பாமல் சென்று விரும்பிய கோவை என்று நானும் எழுதவேண்டும்.  இன்றுவரை என் விமானப்பயணத் தொகை எனக்குக் கிடைக்கவில்லை.  கேட்டால் யார் போகச் சொன்னாரோ அவரைக் கேளுங்கள் என்கிறார்கள் நடக்குற வேலையா என்ன?
​நிஜமாகவா? அங்க்கேயே நனக்களெல்லாம் நேர்டையகாப் பெற்ருக் கொண்டு வந்து விட்டோமே எங்க்கள் பயணச் செலவை.
 
என்னால் மின்தமிழுக்குக் கிடைக்கும் ஒரே நன்மை என்னை நினைத்தாலே தங்களுக்குள் சிரிப்பதாகப் பலர் சொல்லுகிறார்கள்.  எப்படியோ என்னால் ஒரு நன்மையாவது நடக்கிறதே

​பல நன்மைகள்.
அதில் இது தனிச்சிறப்பு :-))​
 
​சுபா

Malarvizhi Mangay

unread,
Jun 12, 2015, 5:44:57 AM6/12/15
to mint...@googlegroups.com

கோவைக்கு நான் வரவுமில்லை கூடஇருந்து பார்க்கவும் இல்லை.ஆனாலும் நா.வ ஐயாவும் நீங்களும் எழுதியதை
அடுத்தடுத்து படித்து நானும் வாய்விட்டுச்சிரித்து விட்டேன்
சுபாம்மா.பேசாமல் "பயணங்களும் பரவசங்களும் "என இழை தொடங்கி இருவரும் பகிருங்கள்.நாங்கள் கேட்டு /
பார்த்து முக்தியடைய முயலுகிறோம்.

--

Suba.T.

unread,
Jun 12, 2015, 10:38:13 AM6/12/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-06-12 11:44 GMT+02:00 Malarvizhi Mangay <malarm...@gmail.com>:

கோவைக்கு நான் வரவுமில்லை கூடஇருந்து பார்க்கவும் இல்லை.ஆனாலும் நா.வ ஐயாவும் நீங்களும் எழுதியதை
அடுத்தடுத்து படித்து நானும் வாய்விட்டுச்சிரித்து விட்டேன்
சுபாம்மா.பேசாமல் "பயணங்களும் பரவசங்களும் "என இழை தொடங்கி இருவரும் பகிருங்கள்.நாங்கள் கேட்டு /
பார்த்து முக்தியடைய முயலுகிறோம்.

​:-)))
இங்கேயே சொல்லி விடுகிறேன். 
பேராசிரியரை (டாக்டர். நாகராசன்)  முதல் முதலாக செம்மொழி மானாட்டில் தான் பார்த்தேன். செம்மொழி மானாட்டில் உத்தமம் செயற்குழு கூட்டம் நடைபெற்ற போது ஒருவர் கதர் வெள்ளை சட்டை வேட்டியில். நான் அவரை கணினித்துறையில் ஆர்வம் உள்ள கல்லூரி தமிழ் ஆசிரியர் என நினைத்துக் கொண்டேன். 

இருந்த ஏனைய நாட்களில் இவரை காணவில்லை. இறுதிநாள் கோவை விமான நிலையத்தில் எல்லோரும் சென்னைக்கு வரும் விமானத்திற்காக காத்திருக்கும் போது பேராசிரியர் ஒரு மூலையில் உட்கார்ந்து ஒரு லேப்டாப் வைத்துக் கொண்டு அதே கதர் வெள்ளை சட்டை வேஷ்டியில்... 

உத்தமம் செயற்குழு கூட்டத்தில் பேசவில்லை. ஆகையால் நானே சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினேன். விமானம் புறப்படும் வரை பேசிக் கொண்டிருந்தோம்.  இடையில் தன் புதல்வியோடு வந்திருந்த கண்ணனையும் இவருக்கு அறிமுகப்படுத்தினேன். முதல் சந்திப்பிலேயே கருத்து ஒற்றுமை எமக்கு இருப்பது மனதிற்கு மகிழ்ச்சியளித்தது.

விமானம் புறப்படப் போகின்றது எனத் தெரிந்ததும் விடைபெற்றுக் கொள்ளலாம் என நினைத்து எந்த இருக்கை என விசாரித்துப் பார்த்தால்  அவருக்கு பக்கத்து சீட் என்னுடையது. 

அப்புறம் என்ன .. மறுபடியும் விமானத்தில் ஏறியதிலிருந்து பேசிக்கொண்டே வந்தோம். சென்னை வரும்வரை. தொழில் நுட்பம், த.ம.அ.. மின்தமிழ், உத்தமம் இப்படி பல  விசயங்கள். மின்தமிழில் இணைத்து வைத்தேன். கொஞ்சம் கொஞ்சம் தமிழ் என ஆரம்பித்து இப்போது கலக்கி கொண்டிருக்கின்றார் பேராசிரியர்.

தமிழகத்தில் எனது த,ம.அ  திட்டங்களுக்கு மிக உறுதுணையாக இருப்பவர் பேராசிரியர். இப்படி ஒரு நட்பு கிடைத்ததில் எனக்கு மனதில் மிகுந்த மகிழ்ச்சி.

ஆனாலும் அவ்வப்போது அந்த வெள்ளை கதர் வேட்டி சட்டை நினைவு வரும்.  :-))

சுபா

Malarvizhi Mangay

unread,
Jun 12, 2015, 11:36:44 AM6/12/15
to mint...@googlegroups.com

மகிழ்ச்சி சுபா.இருவரும் தமிழால் இணைந்து தமிழுக்காகப் பணியாற்றும் தகைசால் களப்பணி
திலகங்கள்.Hat's of to boath of you.

Suba.T.

unread,
Jun 12, 2015, 3:56:26 PM6/12/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-06-12 8:19 GMT+02:00 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:

2015-05-22 0:47 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:

இடையில் எங்களை அழைத்துச் சென்ற திரு.சின்னப்பன் தம்பதியர் எங்கள் வருகையைப் பற்றிச் சொல்ல, உடனே எங்களில் யாரேனும் பாட விருப்பம் உள்ளதா என வினவினர். என்னுடன் வந்திருந்த திரு.நயினை விஜயன் அவர்கள் அற்புதமாக ஒரு தமிழைப்பாடலைப் பாடினார். அதனை அடுத்து நானும் பாடுகின்றேன் எனச் சொல்ல என்னையும் பாட அழைத்தனர். நான் ஒரு தேவாரப் பாடலை பாடினேன்.

உங்கள் வெற்றியின் இரகசியம் இதுவே! பலநேரங்களில் கூச்சம் காரணமாகவும், தவறு நேர்ந்துவிடுமோ என்ற எண்ணம் காரணமாகவும், புறக்கணிப்புக்கு அஞ்சியும் முன்வரத் தயங்குகிறோம். அத்தடையினை உடைப்பவர் வெற்றி பெறுகிறார். சிறப்புப்பெறுகிறார். வாழ்த்துக்கள்.

​பிறர் நம்மை ஒதுக்கி விடுவர், குறை சொல்வர், ஏளனம் செய்வர் என்றெல்லாம் நான் நினைப்பதை மறந்து பற்பல வருடங்கள் ஆகி விட்டன. குறை நிறைகள் நிறைந்ததுவே ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையும் முற்சி செய்தால் தான் ஏதும் கிடைக்கும் என வாழ்க்கையில் அடிப்படை தத்துவமாக உணர்ந்திருக்கின்றேன். 
பல பயிற்சிகள்.. அதன் பலனாக ஏற்பட்ட மன தைரியம். அதுவே இதற்குக் காரணம்.

​நன்றி திரு.சொ.வி அவர்களே.

சுபா

Suba.T.

unread,
Jun 12, 2015, 4:31:14 PM6/12/15
to மின்தமிழ், Subashini Tremmel
பதிவு 18

இந்த கேளிக்கை விடுதி டர்பன் நகரின் மையப் பகுதியில் வர்த்தக நிறுவனங்கள் இருக்கும் இடத்தில் இருப்பது.  இதன் உள்ளே சில திரையரங்குகள், கேசினோ, ரெஸ்டாரண்டுகள், விளையாட்டு பகுதிகள் என பல்தரப்பட்ட கேளிக்கை அம்சங்கள் நிறைந்திருக்கின்றன.

எங்களுக்கான டிக்கட்டை கோகி வாங்கிக் கொள்ள நாங்கள் தியேட்டருக்குள் செல்லும் முன்னர் கோகியின் நண்பர்கள் சிலரை அங்கு பார்த்து விட அவர்களுடன் பேசிக் கோண்டிருந்து விட்டு சில புகைப்படங்களும் எடுத்துக் கொண்டு பின்னர் திரையரங்குக்குள் சென்றோம். ஏறக்குறைய அரங்கம் நிறைந்திருந்தது.

படம்  ஆரம்பிக்கும் போது கவனித்தேன். ஆங்கிலத்தில் சப்டைட்டில் ஓடிக்கொண்டிருந்தது. பலருக்கும் தமிழ் மொழிப்பேச்சு புரிவதில் சிரமம் இருப்பதால் ஆங்கிலத்தில் சப்டைட்டில் அவசியம் என்பதை புரிந்து கொண்டேன்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் பார்க்கும் திரைப்படம். படத்தின் ஆரம்பமே கோரமான வன்முறை காட்சி. கொலை. ராமநாதபுரத்தில் பதிவாக்கப்பட்டது என்று அறியமுடிந்தது. அகா.. இந்த வருடம் த.ம.அ களப்பணிக்காக ராமநாதபுரம் செல்லவேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கின்றோமே.. இந்த ஊரில் வன்முறை அதிகமாக இருக்குமோ என்ற எண்ணமே மனதில் தோன்றியது.  படத்தில் கதாநாயகியை அறிமுகப்படுத்தும் போதே உழைக்கும் தந்தைக்கு சாராயத்தை ஊற்றிக் கொடுக்கும் ஒரு கதாபாத்திரம். தந்தையைப் புரிந்து கொண்ட பெண் என்றுகாட்டும் அதே வேளை சாராயத்தை நியாயப்படுத்த கதாசிரியர் மேற்கொண்ட முயற்சி வெறுப்பையே உருவாக்கியது.  நான் தான் தமிழ் சினிமாவே பார்க்கவேண்டாம் என நினைத்திருந்தேனே. இப்போது வந்து பார்த்து இப்படி மனதிற்குள் புழுங்கிக் கொண்டிருக்க வேண்டுமா என எண்ணம் மனதில் எழாமல் இல்லை. இன்னொரு வகையில் இதையெல்லாம் பார்த்தால் தற்காலத் தமிழகச் சூழலை ஓரளவு புரிந்து கொள்ள முடியும் என்ற சிந்தனையும் மனதில் எழாமல் இல்லை.

கதை சுவாரசியமாக இருந்தது. பாடல் ஒன்று அப்போது மனதைக் கவர்ந்தது. ஆனால் மீண்டும் நினைத்துப் பார்த்தால் வரிகள் மனதில் நிற்காமல் மறைந்து விட்டன. படத்தில் கதாபாத்திரங்கள் மிக இயற்கையாக அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் படத்தில் காட்டப்பட்ட வன்முறை சம்பவங்கள் இது எவ்வகை மனிதத்தன்மை என்ற கேள்வியை என் மனதில் எழுப்பாமல் இல்லை.

படம் பார்த்து மனம் முழுக்க டென்ஷனை நிரப்பிக் கொண்டு வெளி யே வந்து ஒரு ரெஸ்டாரண்டில் காப்பி அருந்தினோம். பின்னர் கேளிக்கை விடுதியைச் சுற்றிப் பார்த்தோம். கேசினோவிற்குள் சென்று அதனுள்ளே உள்ள நிலைமையை அறிந்து கொள்ள ஆவல் தோன்றவே உள்ளே சென்றோம். கேசினோவிற்குள் ஏறக்குரைய 70 விழுக்காட்டினர் இந்திய வம்சாவளியினர் தாம் நிறைந்திருந்தனர். அதிலும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மிக அதிகம். பணத்தை ஆயிரம் ஆயிரமாகக் கொண்டு வந்து  பல வேளைகளில் தொலைப்பதும் சில வேளைகளில் பணம் ஈட்டுவதும் இங்கு நடக்கின்றது. ஒவ்வொருவரும் வரிசையாக அமைக்கபப்ட்ட கேசினோ பாரில் அமர்ந்து தங்கள் முழு கவனத்தையும் கேசினோ மெஷின் மேல் வைத்துக் கொண்டு  அமர்ந்திருந்தனர். அங்கிருந்தோரில் பெரும்பாண்மையோர் மிகப் பருமனான உடல் அளவைக் கொண்டிருந்தனர். ஆங்காங்கே உள்ளூர் கருப்பர் இனத்தவர்களும் இருப்பதையும் காணமுடிந்தது. கேசினோவிற்குள்ளேயே உணவு பரிமாறும் ரெஸ்டாரண்டும் இருக்கின்றது. அங்கே பெர்கர் போன்ற துரித உணவு பரிமாறப்படுவதையும் பார்த்தேன்
.

ஆக மொத்தம் மனதிற்கும் உடலுக்கும், தாமே பணத்தைக் கொட்டி தெரிந்தோ தெரியாமலோ, தானே தனக்கு பாதிப்பைத் தேடிக் கொள்ள விரும்புபவர்கள் தாம் இவ்வகை இடங்களுக்குச் செல்கின்றனர் என்பதைக் காணமுடிந்தது.  மேலும் சிறிது நேரம் அங்கிருந்து விட்டு பின்னர்  புறப்பட்டோம். ஹோட்டலுக்கு வரும் போது இரவு மணி 12ஐ தாண்டியிருந்தது. ஆயினும் என் அறையில் பொன்னி ஏனைய நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். நான் திரும்பியதும் மறு நாள் செல்ல வேண்டிய இடங்களைப் பற்றி கலந்தாலோசித்தோம். நான் தான் பயண வழிகாட்டி. ஆக எனது பட்டியல் படி செல்வோம் என அனைவரும் ஏற்றுக் கொண்டனர். மறு நாள் செல்ல வேண்டிய இடங்களைப் பட்டியலிட்டு பயண ஏற்பாட்டை செய்து முடித்த திருப்தியில் உறக்கம் தானாகவே வந்து என்னை அழைத்துக் கொண்டது.

தொடரும்..
சுபா
 
2015-06-11 23:39 GMT+02:00 Suba.T. <ksuba...@gmail.com>:
பதிவு 17

டர்பன் நகர் வந்த நாள் முதல் எங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தங்கும் விடுதியிலேயே உணவு சாப்பிட எல்லா ஏற்பாடுகளும் ஆகியிருந்தமையினால் வெளியே சென்று உணவகங்களில் சாப்பிடும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை. தென்னாப்பிரிக்க தமிழ் மக்கள் வீட்டு சமையல் எப்படி இருக்கின்றது என்று அ
--

Oru Arizonan

unread,
Jun 12, 2015, 6:09:15 PM6/12/15
to mintamil
இது "சீட்டுக்கச்சேரி" என்ற இழை"யில் இருக்கவேண்டும் என்று எனக்குத் தோன்றுவதால், இதை அங்கு ஒட்டுகிறேன்.  சித்தரின் கோவை விஜயத்தைப் பற்றி  அங்கு அனைவரும் கச்சேரி நடத்தலாமே!
ஒரு அரிசோனன் 

Suba.T.

unread,
Jun 24, 2015, 5:10:28 PM6/24/15
to மின்தமிழ், Subashini Tremmel
பதிவு 19

மறு நாள் காலையில் தங்கும் விடுதியில் நண்பர்கள் அனைவரும் காலை உணவு வேளையில் சந்தித்துக் கொண்டோம். நிகழ்ச்சி முடிந்து விட்டாலும் அன்று வரை எங்கள் தங்கும் விடுதியிலேயே குடும்பத்தாருடன் மிக்கி செட்டியும் அவர் துணைவியாரும் தங்கி இருந்தனர். காலையில் உணவு வேளையின் போது குறிப்பாக உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தொடர் நடவடிக்கைகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.ஜொஹான்னஸ்பெர்க் நகரில் வசிப்பவர்கள் மிக்கி செட்டி குடும்பத்தினர். காலை உணவு முடித்து அனைவருமாக ஜொஹான்னஸ்பர்க் திரும்பிச் செல்ல ஆயத்தமாகி இருந்தார்கள். டர்பனிலிருந்து ஜொஹான்னஸ்பெர்க் ஏறக்குறைய வடக்கு நோக்கி 600 கிமீ தூரம்.

திரு.மிக்கி செட்டியுடன்

தமிழ் பேசத்தெரியாவிட்டாலும் ஏனையோர் பேசுவதை மிக நன்கு புரிந்து கொள்ளும் திறமை படைத்தவர் திரு. மிக்கி செட்டி அவர்கள். தீராத தமிழ் தாகம் அவருக்கு இருக்கின்றது. வர்த்தகம் அவரது தொழில் என்ற போதிலும் தமிழ் சங்கங்களில் தம்மை நெடுங்காலமாக ஈடுபடுத்திக் கொண்டு பல தொண்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருபவர் இவர். இவர்து மனைவியாரும் மிக அன்பான பெண்மணி. சிறு குழந்தைபோல எல்லோருடனும் சிரித்து பேசி மகிழ்பவர். முதல் நாள் சின்னப்பன் குடும்பத்தாருடனும் திருமதி மிக்கியுடனும் சினிமா பார்க்கச் சென்றிருந்த போது என் மாலை நேரம் இவர்களுடன் பேசிக் களித்ததில் மிக மகிழ்ச்சியாகக் கழிந்தது.  மீண்டும் சந்திக்க வேண்டும் என்று உறுதி செய்து கொண்டோம். மிக்கி செட்டியின் குழந்தைகளும் பெற்றோருக்குச் சளைத்தவர்களல்ல. வந்திருந்த எல்லோரையும் அன்புடன் அரவணைத்து வேண்டிய எல்லா உதவிகளையும் உடனுக்குடன் செய்து கொடுத்து தம் சொந்தக் குடும்பத்தார் போல பார்த்துக் கொண்டனர்.  இப்போதுதான் சந்திக்கின்றோம் என்ற எந்த தயக்கமும் இல்லாமல் உறவினர் போல பழகும் தன்மை கொண்டவர்கள்  திரு.சின்னப்பன் குடும்பத்தாரும் திரு.மிக்கி செட்டி குடும்பத்தாரும்.

திருமதி. மிக்கி செட்டியுடன்

அவர்களுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு விடைபெற்றுக் கொண்டேன். அடுத்து 2 நாட்கள்.. மீதமிருந்த நண்பர்களுக்கு நான் தான் பயண ஒருங்கிணைப்பாளர், வழிகாட்டி. இது ஒரு புதிய பொறுப்பு. இதனை ஏற்றுக் கொண்டதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சி. 

நான் இணையத்தில் தேடிப்பார்த்து டர்பனில் எந்தெந்த இடங்கள் செல்லலாம் என சில குறிப்புக்களைத் தயாரித்து வைத்திருந்தேன். அதில் சில அருங்காட்சியகங்கள், முக்கிய வரலாற்று இடங்கள், ஆலயங்கள் என்று இருந்தன. புற்று மாரியம்மன், டர்பன் முருகன் ஆகிய கோயில்கள் சென்று விட்டதால் ஏனைய பகுதிகளுக்கு செல்வது என திட்டமிட்டிருந்தேன். முதல் நாளே எங்களை அழைத்துச் செல்ல இரண்டு டாக்ஸிகளையும் தொலைபேசியில் அழைத்து ஏற்பாடு செய்து கொண்டேன். தங்கும் விடுதியில் நல்ல டாக்சி தொடர்பு ஏற்படுத்திதருமாறு கேட்டுக் கொண்டதால் அவர்கள் நம்பிக்கையான ஒரு டாக்ஸி ஓட்டுனரின் எண்ணை கொடுத்திருந்தார்கள். ஆக அவரை தொலைபேசியில் அழைத்து  ஒரு நாள் முழுதும் சுற்றிப் பார்க்க என்ற வகையில் மொத்தமாக எங்கள் அனைவருக்கும் ஒரு தொகையை நிர்ணயம் செய்து கொண்டேன். பயணச் செலவை அனைவரும் பகிர்ந்து கொள்வோம் என்றும் முடிவாகியது.

என்னுடன் இணைந்து கொண்டவர்களில் என்னுடன் ஜெர்மனியிலிருந்து வந்த இந்து, பிரான்சிலிருந்து வந்த நண்பர் சாம் விஜய், மலேசிய நண்பர்கள் சண்முகம், பொன்னி, ராமச்சந்திரன், அமுதா, ஜெயராமன், கனடா ராஜரட்னம் ஆகியோர் இருந்தனர்.  என்னுடன் சேர்த்து ஒன்பது பேர் இந்த சுற்றுலாவில். இரண்டு வாகனங்களில் பாதியாக பிரிந்து கொண்டோம். சரியாக காலை 9.30க்கு புறப்பட வேண்டும் என அனைவரிடமும் சொல்லியிருந்தேன். எல்லோரும்  குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து விட்டார்கள்.

டாக்சியோட்டிகள் இருவரும் டர்பன் தமிழர்களே. ஆனால் தமிழ் பேசத்தெரியாத தமிழர்கள். அந்த முழு நாள் பயணத்தையும் மிக்க அன்புடனும் அக்கறையுடனும் எங்களுடன் பேசி நாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கெல்லாம் எங்களை அழைத்துச் சென்று வழிகாட்டியாக இருந்து உதவினர்.

எங்கள் டர்பன் நகர பயணம் தொடங்கியது. 
என் பட்டியலில் முதலில் இருந்தது மகாத்மா காந்தி 20 ஆண்டுகள் டர்பன் நகரில் வாழ்ந்த போது  அவர் தங்கியிருந்த இல்லம்.  

தொடரும்...

சுபா

2015-06-12 22:31 GMT+02:00 Suba.T. <ksuba...@gmail.com>:
பதிவு 18

இந்த கேளிக்கை விடுதி டர்பன் நகரின் மையப் பகுதியில் வர்த்தக நிறுவனங்கள் இருக்கும் இடத்தில் இருப்பது.  இதன் உள்ளே சில திரையரங்குகள், கேசினோ, ரெஸ்டாரண்டுகள், விளையாட்டு பகுதிகள் என பல்தரப்பட்ட கேளிக்கை அம்சங்கள் நிறைந்திருக்கின்றன.

Asir Manuel

unread,
Jun 24, 2015, 6:48:29 PM6/24/15
to mint...@googlegroups.com
நல்ல தகவல்கள், நன்றி சுபா.

Suba.T.

unread,
Jun 29, 2015, 5:02:24 PM6/29/15
to மின்தமிழ், Subashini Tremmel
பதிவு 20

டர்பன் நகரிலிருந்து வடக்கு நோக்கிய பயணமாக N2 சாலையில் 177 எக்ஸிட் எடுத்து Kwamashu H’way (M25) Inanda R102  சாலையில் வந்து இடது பக்கம் தொடர்ந்து பயணிக்கும் போது சாலையின் இருபக்கமும் மகாத்மா காந்தி நினைவு இல்லம் பற்றிய விளம்பர அட்டைகள் விளக்குக் கம்பங்களில் இணைத்திருப்பதைக் காணலாம். வழிகாட்டிப் பலகையைப் பார்த்தே உள்ளே நுழைந்தால் அங்கே சுலபமாக இந்த இடத்தை நாம் அடைந்து விடலாம். ஃபீனிக்ஸ் மக்கள் குடியிறுப்புப் பகுதி என இப்பகுதி அழைக்கப்படுகின்றது.

காந்தி நினைவு இல்லம் காணச் செல்கின்றோம். இந்திய வம்சாவளியினர் நிறைந்த ஒரு இடமாக இது இருக்கும் என்ற எண்ணம் மனதில் இருந்தது. ஆனால் அந்த எண்ணத்தைப் பொய்ப்பிக்கும் வகையில் சுற்றிலும் எளிமையான ஒரு ஆப்பிரிக்க இனமக்களின் கிராமம் தான் அது. ஆப்பிரிக்க சூலு இன மக்கள் சாலையில் அங்கும் இங்குமாக நடந்து கொண்டும் குழந்தைகள் விளையாடிக் கொண்டும் என இருந்தனர். 

​அச்சகம்
உள்ளே செல்லும் போது நம்மை வரவேற்பது மகாத்மா காந்தி ஆரம்பித்த அச்சத்தின் கட்டிடம்.  இது ஒரு சர்வதேச பத்திரிக்கை அச்சகம் என்ற குறிப்புடன் காணப்படுகின்றது. ஆரம்பத்தில் இங்குதான் காந்தி தனது Indian Opinion   என்ற பத்திரிக்கையைத் தொடங்கி நடத்தினார். பின்னர் இந்தப் பத்திரிக்கை Opinion எனப் பெயர் மாற்றம் கண்டது. 1903 முதல் இந்தப் பத்திரிக்கை ஆரம்பிக்கப்பட்டு பின்னர் 1961ம் ஆண்டு இப்பதிரிக்கை முயற்சி நின்று போனது.

காந்தி - கஸ்தூரிபா - பீனிக்ஸ் பகுதியில்

மகாத்மா காந்தி என அறிந்தோரால் அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள் அக்டோபர் மாதம் 2ம் தேதி 1869ம் ஆண்டில் இந்தியாவின் போர்பண்டர் என்ற பகுதியில் பிறந்தார். இளம் பிராயத்தில் உள்ளூரில் கல்வி கற்று திருமணமும் முடித்து பின்னர் 1888ம் ஆண்டில் இங்கிலாந்தின் லண்டன் நகருக்குச் சென்று அங்கு சட்டத்துறையில் பட்டம் பெற்றார். அதன் பின்னர் தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு இந்திய கம்பெனிக்குச் சட்டத்துறை உதவிகள் செய்யும் பணிக்காக நியமிக்கப்பட்டு 1893ம் ஆண்டில் தென்னாப்பிரிக்கா வந்தடைந்தார். 1914ம் ஆண்டுவரை, அதாவது 20 ஆண்டுகள் தன் குடும்பத்துடன் மகாத்மா காந்தியவர்கள் தென்னாப்பிரிக்காவின் இந்த டர்பன் புறநகர் பகுதியில் இங்கே வாழ்ந்து வந்தார்.

​​

இங்கு காந்தி வாழ்ந்த இல்லத்திற்கு சர்வோதயா என்ற பெயர் அமைந்திருக்கின்றது. இந்த இல்லம் இருக்கும் இடத்தில் முதலில் காந்திக்கும் அவர் குடும்பத்திற்கும் அமைக்கப்பட்ட இல்லமானது 1985ம் ஆண்டில் இப்பகுதியில் நிகழ்ந்த இனாண்டா கலவரத்தில் தீயில் அழிக்கப்பட்டது. அதன் பின்னர் அதே இடத்தில் அதே வகையில் புதிய இல்லம் கட்டப்பட்டுள்ளது. வீட்டின் தரைப்பகுதிகள் தீயில் சேதமடையாததால் வீட்டின் மேல் பகுதியை மட்டும் புதுப்பித்து நினைவில்லமாக எழுப்பியிருக்கின்றனர். இந்த இல்லத்தின் உள்ளே மிக எளிமையான வகையில் காந்தியை நினைவூட்டும் பல சம்பவங்களின் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.  

வீட்டின் முன் புறத்தில் சிறிய பூங்காவனம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவனத்தின் ஒரு பகுதியில் மிக அழகான சிறிய குடில் ஒன்று அமைக்கப்பட்டு அதில் உள்ளே காந்தியின் சிலை ஒன்றும்நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் ஒரு சமூக மையம் போன்ற ஒரு  கட்டிடம் உள்ளது. இங்கே காந்தியின் பெரிய உருவப் படங்கள் சில உள்ளன.

மீண்டும் முன் பகுதிக்கு வந்தால் அச்சகத்தை வந்தடைவோம். அச்சகத்தின் உள்ளே உள்ள அறையில் காந்தி வாழ்ந்த காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுதிகள் அமைந்திருக்கின்றன. இவை வரலாற்றை நினைவூட்டும் ஆவணங்கள். இங்கே விரும்புவோர் காந்தி தொடர்பான நினைவுச் சின்னங்களை வாங்கிச் செல்லலாம். வருவோருக்கு இலவசமாக இந்த நினைவு இல்லம் பற்றிய ஒரு சிறு குறிப்பு அட்டையை வழங்குகின்றனர். 

நாங்கள் இந்த நினைவில்லத்திற்குச் சென்ற போது உள்ளே ஒரு அதிகாரி மட்டுமே இருந்தார். அவர் ஆப்பிரிக்க சூலு இனத்தைச் சேர்ந்தவர். எங்களுக்கு இந்த நினைவில்லம், அச்சகம், மற்ற ஏனைய பகுதிகள் அனைத்தையும் சுற்றிக் காட்டி ஆங்கிலத்தில் விளக்கமளித்தார். பொறுமையான குணமும் வருவோரை வரவேற்கும் நல்ல குணமும் கொண்டவராக இந்த அதிகாரி தோன்றினார். அங்கு ஏறக்குறைய 1 மணி நேரம் செலவிட்டு விட்டு அங்கிருந்து நாங்கள் என் பட்டியலில் இருந்த அடுத்த இடத்திற்குப் பயணமானோம்.

சூலு இன குழந்தைகளுடன்

எங்கல் வாகன்மோட்டியாக இருந்து உதவியவருடன்

என்னுடன் இணைந்து கொண்ட நண்பர்களுடன்

கஸ்தூரிபா- காந்தி

நினைவு இல்லத்தின் உள்ளே

தொடரும்..

சுபா

2015-06-24 23:10 GMT+02:00 Suba.T. <ksuba...@gmail.com>:
பதிவு 19

மறு நாள் காலையில் தங்கும் விடுதியில் நண்பர்கள் அனைவரும் காலை உணவு வேளையில் சந்தித்துக் கொண்டோம். நிகழ்ச்சி முடிந்து விட்டாலும் அன்று வரை எங்கள் தங்கும் விடுதியிலேயே குடும்பத்தாருடன் மிக்கி செட்டியும் அவர் துணைவியாரும் தங்கி இருந்தனர். காலையில் உணவு வேளையின் போது குறிப்பாக உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தொடர் நடவடிக்கைகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.ஜொஹான்னஸ்பெர்க் நகரில் வசிப்பவர்கள் மிக்கி செட்டி குடும்பத்தினர். காலை உணவு முடித்து அனைவருமாக ஜொஹான்னஸ்பர்க் திரும்பிச் செல்ல ஆயத்தமாகி இருந்தார்கள். டர்பனிலிருந்து ஜொஹான்னஸ்பெர்க் ஏறக்குறைய வடக்கு நோக்கி 600 கிமீ தூரம்.
--

Oru Arizonan

unread,
Jun 29, 2015, 5:06:49 PM6/29/15
to mintamil
எங்களை உங்களுடன் தென் ஆப்பிரிக்காவுக்கு அழைத்துச்சென்று அங்கு வராத குறையைத் தீர்த்துவருகிறீர்கள் .  நானும் உங்களிடமிருந்து இதைக் கற்றுக்கொள்ளவேண்டும்.

அன்புடன்,

Mohanarangan V Srirangam

unread,
Jun 29, 2015, 5:08:17 PM6/29/15
to min tamil, Subashini Tremmel
படங்களும், விவரிப்புகளும் நன்கு இசைந்து செல்கின்றன.

--

Suba.T.

unread,
Jun 29, 2015, 5:18:02 PM6/29/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-06-29 23:06 GMT+02:00 Oru Arizonan <oruar...@gmail.com>:
எங்களை உங்களுடன் தென் ஆப்பிரிக்காவுக்கு அழைத்துச்சென்று அங்கு வராத குறையைத் தீர்த்துவருகிறீர்கள் .  நானும் உங்களிடமிருந்து இதைக் கற்றுக்கொள்ளவேண்டும்.
தொடர்ந்து வாருங்கள். இன்னும் சில இடங்கள் அழைத்துச் செல்கின்றேன் :-))

சுபா​

அன்புடன்,
ஒரு அரிசோனன் 

-- 

Suba.T.

unread,
Jun 29, 2015, 5:19:35 PM6/29/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-06-29 23:08 GMT+02:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
படங்களும், விவரிப்புகளும் நன்கு இசைந்து செல்கின்றன.
​மிக்க மகிழ்ச்சி.
அதிலும் இந்த இடம் நான் சில ஆண்டுகளுக்கு முன்னர் மனதில் சென்று வரவேண்டும் என்று நினைத்திருந்த இடம்.  

சுபா​

Thirumoorthy Kasi

unread,
Jun 29, 2015, 10:17:09 PM6/29/15
to mint...@googlegroups.com
வணக்கம் சுபா வெற்றி பயணம் இனிதாக இருக்க வேண்டும் .நன்றி 

தேமொழி

unread,
Jun 29, 2015, 10:40:36 PM6/29/15
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com

On Monday, June 29, 2015 at 2:02:24 PM UTC-7, Suba.T. wrote:

சூலு இன குழந்தைகளுடன்

உலகம் சுற்றும் வாலிபி!!!!
சூலுக் குழந்தைகளுடன்     சிக்கு மங்கு  ...சிக்கு மங்கு  ...சச்ச பப்பா ...பாடினீர்களா?

.... தேமொழி

Nagarajan Vadivel

unread,
Jun 29, 2015, 11:10:56 PM6/29/15
to மின்தமிழ்

On Tue, Jun 30, 2015 at 8:10 AM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
உலகம் சுற்றும் வாலிபி!!!!

​உலகம் சுற்றும் வாலிபனில் எம்.ஜி.ஆருக்கும் வாலிக்கும் கருத்துவேறுபாடு. வாலியைப் படத்திலிருந்து தூக்குவது என்று முடிவு செய்து வாலியிடம் எம்.ஜி.ஆர் சொன்னார்.  வாலியோ என் பேரை எடுத்துவிட்டால் உங்கள் படம் உலகம் சுற்றும் வாலிபன் என்பதற்குப் பதிலாக உலகம் சுற்றும் பன் என்றாகிவிடும் என்று கலாய்த்தாரம்.  எம்.ஜி.ஆர் சிரித்துக்கொண்டே வாலையை மீண்டும் இணைத்துக்கொண்டார்

அம்மையார் சொல்லும் எல்ல இடங்கலுக்கும் வாலிபத்தில் சென்று வந்தவன் நான்.  குளு நட்டாலில் பல ஊர்களுக்கும் சென்று வந்தவன் நான் எனவே உலகம் சுற்றிய பன் நான்தான்  

வேண்டுமானல் அவர்கள் உலகம் சுற்றும் பி யாக (வாலி மறைந்துவிட்டாரே) இருந்துவிட்டுப் போகட்டும்

ஊர்சுத்தி​

Suba.T.

unread,
Jun 30, 2015, 3:03:43 AM6/30/15
to மின்தமிழ், Subashini Tremmel
​ஆமாம். பாடி ஆடினோம். :-)​
 
.... தேமொழி

--
It is loading more messages.
0 new messages