முனிவர் எனும் சொல்லின் பயன்பாடு.
முனி எனும் வடச்சொல் உள்ளிருக்கும் கிளர்ச்சியினால் செயல் படுபவரை குறித்து, அதன் வழி துறவு பூண்டோ, அல்லது இல்லறத்தில் இருந்தோ மேம்பட்ட ஒரு வாழ்வை வாழ்பவர்களை சொல்லி, அதை தொடர்ந்து அன்னாருக்கு வீடு பேறு எய்தும் எண்ணத்தை குறிக்கிறது.
முனி எனும் தமிழ் இளயானை, கோபம் கொண்டவன் மற்றும் சிற்சில வட்டார வழக்குகளில் பேய்களையும் குறிக்கும். வில்லை குறிப்பதாகவும் இலக்கிய ஆதாரங்கள் உள.
வடச்சொல் முனியை பிரித்துக்காட்ட பரிபாடலில் அருமுனி போன்ற பதபயன்பாட்டையும் தமிழ் வழி முனி பயன்பாட்டை முனியன் முனியல் போன்ற பதபயன்பாட்டிலும் காணலாம்.
இவண்
ஜலசயனன்
From: vall...@googlegroups.com [mailto:vall...@googlegroups.com] On Behalf Of N. Ganesan
Sent: 24 October 2017 09:53
To: மின்தமிழ்; vallamai
Subject: [வல்லமை] Re: [MinTamil] Re: திருக்குறள் ஆய்வு
2017-10-23 7:29 GMT-07:00 Thenee MK <ipohs...@gmail.com>:
ஆனால் ‘மயிலை சீனி வேங்கடசாமி’ என்றொரு இழையில் அவர் எழுதியதாகக் கூறப்பட்டு பதிந்த கட்டுரையில் மேற்கூறிய தேவாரத்தில் கூறப்படாத விடயத்தை தாமே எடுத்துக் கட்டிக் கொண்டு சொல்லியுள்ளார் மயிலையார்.
அக்கட்டுரை முழுவதும் படித்த காரணத்தால் அதன் சாரத்தை இங்கு கூற விரும்புகிறோம். தமிழ் மொழியில் தெய்வம், இறைவன், கடவுள் ஆகிய சொற்களுக்குரிய பொருண்மையை ஆராயாமால் துறவற மத நூல்களில் அச்சொற்கள் துறவிகளுக்கும் பயன்படுத்தப் பட்டுள்ளதை முதலில் ஆராய்ந்து கூறியவர் இறுதியாக மேற்கூறிய திருநாவுக்கரசர் பாடலையும் கூறி அப்பாடலில் “தெய்வம்” என்று கூறப்பட்டதை,
“இத்திருத்தாண்டகத்திலே, முலை மறைக்கப்பட்ட நீராடாப் பெண்கள் (அதாவது, சமண சமயத்துப்பெண் துறவிகளாகிய ஆரியாங்கனைகள்) சமண முனிவரை எம்தெய்வம் என்று கூறிவணங்கினார்கள் என்று அப்பர் சுவாமிகள் கூறுகிறார். இங்குக் கடவுள் (முனிவர்) என்னும் பொருளில் தெய்வம் என்னும் சொல்லை வழங்கியிருப்பது காண்க.”
என்று கூறி முடித்தார்.
தெய்வம் என்று சொன்னதை மயிலையார் தாமாகவே திருநாவுக்கரசர் சமண முனிவரை அப்பெண்துறவியர் கடவுள் (முனிவர்) என்று குறித்ததாகப் பொருள் கொள்வது எவ்வாறு பொருந்தும்? திருநாவுக்கரசர் “தெய்வம்” என்ற சொல்லுக்கும் ‘கடவுள்” என்ற சொல்லுக்குமுள்ள வேற்றுமையை அறிந்தவர். அதனால்தான் ‘தெய்வமாகப் போற்றுகின்றனர்” என்று கூறினார். இது ஆன்ம வர்க்கத்தைக் குறித்தச் சொல்.
இம்முரண்பாட்டை விளக்காமல் மயிலையார் கருத்தை அப்படியே வெட்டி இவ்விழையில் ஒட்டி படிப்போருக்கு மயக்கத்தை ஏற்படுத்துவது முறையாகாது.
மேலும், “அதுபோல, சமணத்தில் இல்லறத்தரசிகளுக்கு எம்தெய்வம் என்பது கணவன். சமணத்துறவிகளை காட்டிலும் கணவனே பெரியவன் என்பது கருத்து” என்று கூறியவர் அதற்கான தரவை முன் வைக்காமால் போனது நமது துரதிருஷ்டமே. சிவசிவ.
அன்புடன் மு. கமலநாதன்
தமிழ் இலக்கியங்களில் கடவுள் = தெய்வம் என்று வருகிறது. எல்லா மக்களும் பயன்படுத்துவதுதான். தெய்வம் = கடவுள் = முனிவர் என்று பல இலக்கியங்களில் உள்ள பயன்பாடு.
இங்குக் கடவுள் (முனிவர்) என்னும் பொருளில் தெய்வம் என்னும் சொல்லை வழங்கியிருப்பது காண்க.” - இதற்கான சான்றுகளைக் கொடுத்துள்ளாரே மயிலை சீனி. வேங்கடசாமி.
கடவுள் - முனிவர் - தெய்வம்
- மயிலை.சீனி.வேங்கடசாமி
*சமயங்கள் வளர்த்த தமிழ்’ (1966) எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரை..
கடவுள் - முனிவர் - தெய்வம்*
சில சொற்கள், ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு பொருளில் வழங்கிவருகின்றன. ஒரு காலத்தில் ஒரு பொருளைப் பயந்த ஒரு சொல், பிற்காலத்தில் வேறு புதிய பொருளைத் தருகின்றது. ஒரு சொல்லின் பண்டைய பொருள் வழக்காற்றில் மறைந்து, பின்பு உண்டான புதிய பொருளில் அச்சொல் வழங்கும்போது, பழைய இலக்கியங்களுக்குப் பொருள் காண்பதில் தவறுகள் ஏற்படுகின்றன. இத்தவறுகளினாலே, உண்மைப் பொருள் காணமுடியாமல் இடர்ப்படவேண்டியிருக்கிறது. இத்தகைய சொற்களில் கடவுள் என்னும் சொல்லும் ஒன்று.
இக்காலத்தில், கடவுள் என்னும் சொல் முழுமுதற் பொருளாகிய இறைவனைக் குறிக்கிறது. முழுமுதல் அல்லாத சிறு தெய்வங்களையும், அவ்வத் தெய்வங்களின் அடைமொழிப் பெயருடன் சார்த்தி இச்சொல் வழங்குவதுமுண்டு. உதாரணம் : சுறவுக்கொடிக் கடவுள், கரும்புடைக் கடவுள், கனைகதிர்க் கடவுள், நான்முகக் கடவுள் முதலியன. ஆனால், பண்டைக் காலத்திலே, கடவுள் என்னும் சொல், முற்றத் துறந்த முனிவருக்கும் வழங்கப்பட்டது. இக்காலத்தில், இச்சொல் அப்பழைய பொருளை இழந்துவிட்டது. அதனை ஈண்டு ஆராய்வோம்.
“மலையிடை இட்ட நாட்டரும் அல்லர்
மரந்தலை தோன்றா ஊரரும் அல்லர்
கண்ணிற் காண நண்ணுவழி இருந்தும்,
கடவுள் நண்ணிய பாலோர் போல
ஓர்இனன் ஒழுகும் என்னைக்குப்
பரியலென் மன்யான் பண்டொரு காலே.”
வாயிலாகப் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியதாக அமைந்த இக்குறுந்தொகைப் பாட்டில் (203), துறவியாகிய முனிவர் கடவுள் என்று கூறப்படுவது காண்க. “கடவுள் நண்ணிய பாலோர் போல ஒரீஇ ஒழுகும்” என்பதற்கு, “முற்றத் துறந்த முனிவரைக் கண்ட காலத்து,
தூய்மையற்றோர், தாம் தூய்மையற்றவராக இருப்பதனாலே அஞ்சி விலகிப்போகிறார்கள்” என்பது பொருள்.
மதுரைக் காஞ்சியிலே,
“தென்னவற் பெயரிய துன்னருந் துப்பிற்
றொன்முது கடவுள் பின்னர் மேய
வரைதாழ் அருவிப் பொருப்பிற் பொருந”
என வரும் அடிகளில் உள்ள கடவுள் என்னும் சொல்லுக்கு ‘முனிவனாகிய அகத்தியன்’ என்று நச்சினார்க்கினியர் பொருள் கூறியிருக்கிறார். இவ்வாறு பொருள் கூறியதோடு அமையாமல், கலித் தொகையில் உள்ள கடவுட் பாட்டைச் சுட்டிக்காட்டி, “இருடிகளையும் கடவுள் என்று கூறியவாற்றானும் காண்க” என்று விளக்கம் கூறியிருக் கிறார். இவர் சுட்டிக்காட்டும் கலித்தொகைப் பாட்டு, மருதக்கலி 28ஆம் பாட்டாகும். இப்பாட்டில் தலைமகள், தலைமகனை நோக்கி, ‘நீர் யாண்டுச் சென்றிருந்தீர்?’ என்று கேட்க, அவன் கடவுள் இடம் (முனிவர் இடம்) சென்று வந்தததாகக் கூறுகிறான். அவன் கூற்றை நம்பாத தலைவி, அவன் பரத்தையர் மாட்டுச் சென்றதாகக் கருதிச் சினந்து கூறுகிறாள். இப்பாட்டிலே முனிவரைக் கடவுள் என்று கூறுகிற பகுதி இவை.
“நன்றும் தடைஇய மென்றோளாய் கேட்டீவா யாயின்
உடனுறை வாழ்க்கைக் குதவி யுறையுங்
கடவுளர் கட்டங்கி னேன்”
“பெரிதும் பெருத்த மெல்லிய தோளினை யுடையாய்! யான் கூறு கின்றதனைக் கேட்பாயின் கேள்; யாம் இருவரும் போய் உடனே துறவகத்திருக்கும் வாழ்க்கைக்கு உதவியாயிருக்கும் கடவுளரைக் கண்டு அவரிடத்தே தங்கினேன் என்றான்” (நச்சினார்க்கினியர் உரை)..
“முத்தேர் முறுவலாய் நாமணம் புக்கக்கால்
இப்போழ்து போழ்தென் றதுவாய்ப்பக் கூறிய
அக்கடவுள் மற்றக் கடவுள்”
“பின்னை அந்தக் கடவுள், முத்தை யொக்கும் முறுவலை யுடையாய்! நாம் மணத்தைச் செய்ய இப்பொழுது முகுத்தமென்று அம்முகுத்தம் வாய்ப்பச் சொன்ன அந்தக் கடவுள் காண் என்றான்” (நச்சினார்க்கினியர் உரை)
இதில், முற்றத் துறந்த முனிவர்களாகிய துறவிகள் கடவுள் என்று கூறப்பட்டது காண்க. இளங்கோ அடிகளும், முனிவர்களைக் கடவுளர் என்று கூறுகிறார்.
“ஆதியில் தோற்றத்து அறிவனை வணங்கிக்
கந்தன் பள்ளிக் கடவுளர்க் கெல்லாம்
அந்தில் அரங்கத் தகன்பொழில் அகவயின்
சாரணர் கூறிய தகைசால் நன்மொழி
மாதவத் தாட்டியும் மாண்புற மொழிந்து”
- (சிலப்பதிகாரம், மதுரைக்காண்டம், காடுகாண் காதை)
கோவலன் கண்ணகியரோடு மதுரைக்குச் சென்ற கவுந்தியடிகள், இடை வழியிலே உறையூரில் தங்கி, அருக்க கடவுளை வணங்கி, பின்னர்த் துறவிகளாகிய கடவுளர் இடத்தில் உரையாடினார் என்னும் செய்தி இதில் கூறப்பட்டது. சிந்தாமணி நூலாரும்,
“காசறு துறவின் மிக்க கடவுளர் சிந்தைபோல
மாசறு விசும்பின் வெய்யோன் வடதிசை யயண முன்னி”
- (குணமாலையார் இலம்பகம் 1)
இதில் சூரியனுடைய உத்தராயண நிலையைக் கூறுகிறபோது வானத்தைத் துறவிகளின் மாசற்ற மனத்திற்கு உவமை கூறுகிறார். கூறுகிறவர் முனிவரைக் கடவுளர் என்னும் சொல்லால் குறிப்பிடுவது காண்க. மேலும்,
“சுறவுக்கொடிக் கடவுளொடு காலற் றொலைத்தோய், எம்
பிறவியறு கென்று பிறசிந்தை இலராகி
நறவுமலர் வேய்ந்து நறுஞ்சாந்து நிலமெழுகித்
துறவுநெறிக் கடவுளடி தூபமொடு தொழுதார்”
(முத்தியிலம்பகம் : மணியரும்பதம்)
சீவக மன்னன் அரசு துறந்து, துறவு பூண்டு, கேவல ஞானம் கைவரப் பெற்று, வீடுபேறடையும் நிலையில் இருந்த போது, விஞ்சையர் வந்து அவரைத் தொழுது வணங்கிய செய்தியை இச்செய்யுள் கூறுகிறது. இதில் துறவியாகிய சீவகனைக் கடவுள் என்று கூறியிருப்பது காண்க.
சூளாமணி என்னும் காவிய நூலாரும், கடவுள் என்னும் சொல்லை முனிவர் என்னும் பொருளில் வழங்கியுள்ளார்.
“முனிவருள் பெரியவன் முகத்துநோக்கி, ‘ஒன்று
இனிதுளது உணர்த்துவது அடிகள்’ என்றலும்.
பனிமலர்த் தாமரைப் பழன நாடனைக்
கனியமற் றின்னணம் கடவுள் கூறினான்”
- (இரதநூபுரச் சருக்கம், 78)
இதில், ‘பயாபதி என்னும் அரசன் முனிவர் ஒருவரைக் கண்டு வணங்கி, தனக்கு அறநெறி கூறவேண்டும் என்று வேண்டிக் கொள்ள, அக்கடவுள் (முனிவர்) அவனுக்கு உபதேசம் செய்தார்’ என்று கூறப்படுகிறது.
பெருங்கதை என்னும் நூலாரும் முனிவர்களைக் கடவுளர் என்னும் சொல்லால் பல இடங்களில் குறிப்பிடுகிறார்.
“பட்டதை யறியான் பயநிலங் காவலன்
கட்டழ லெவ்வமொடு கடவுளை வினவ”
- (இலாவாணகாண்டம் : அவலம் தீர்ந்தது)
என்றும்,
“அளப்பருவம் படிவத் தறிவர் தானத்துச்
சிறப்பொடு சென்று சேதீயம் வணங்கிக்
கடவது திரியாக் கடவுளர்க் கண்டு”
- (வத்தவகாண்டம் : கனாவிறுத்தது)
என்றும்,
“வடுத்தீர் மாதவம் புரிவேன் மற்றெனக்
கேட்டவன் கலுழ வேட்கையின் நீங்கிக்
காசறு கடவுட் படிவம் கொண்டாங்கு
ஆசறச் சென்றபின் ... ... ... ... ... ... ...”
- (வத்தவகாண்டம் : விரிசிறை வதுவை)
என்றும்,
“கண்ணுறக் கடவுள் முன்னர் நின்று”
- (மேற்படி பிரச்சேதனன் தூதுவிட்டது)
“காவும் தெற்றியும் கடவுட் பள்ளியும்”
- (மகதகாண்டம் : புறத்தொடுங்கியது)
கூறப்பட்டது காண்க.
இவற்றில் துறவிகள் கடவுள் என்னும் சொல்லால் சுட்டப் பட்டிருப்பது காண்க. திருக்கலம்பகம் என்னும் நூலிலும் இச்சொல் இப்பொருளில் வழங்கப்படுகிறது.
“தருமந்திகிரிப் படையிற் புவனத் திரயந்தனை யான்வாய்
கருமக்கடலைச் சுவறக் கடையும் கடவுட் கணநாதா”
இதற்குப் பழைய உரைவருமாறு: “தருமமாகிய சக்கரா யுதத்தினால் மூன்று உலகத்தையும் ஆள்பவனே! வினையாகிய சமுத் திரத்தை வற்றக் கடைகின்ற முனிகணங்களுக்கு நாயகனே!” இதில், முனிகணங்கள் கடவுட்கணம் எனக் கூறப்பட்டிருப்பது நோக்குக.
கம்பரும் தமது இராமாயணத்தில் இச்சொல்லை இப்பொருளில் வழங்கியுள்ளார்:
“வில்லாளர் ஆனார்க் கெல்லாம் மேலவன் விளித லோடும்
செல்லாதிவ் விலங்கை வேந்தற் கரசெனக் களித்த தேவர்
எல்லாரும் தூசு நீக்கி ஏறிட ஆர்த்த போது
கொல்லாத விரதத் தார்தம் கடவுளர் கூட்டம் ஒத்தார்.”
- (உயுத்தகாண்டம், இந்திரசித்து வதைப்படலம்)
கடவுள்
- மயிலை சீனி. வேங்கடசாமி
(கடவுள் - முனிவர் - தெய்வம் என்ற கட்டுரை எழுதிய ஆசிரியர்
கடவுள் என்ற தலைப்பிலும் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.
Naturally, they share some references from old Tamil literature. ~NG)
கடவுள் என்னும் சொல்லைக் கேட்டதும் முழுமுதற் பொருள் ஆகிய இறைவனை நினைக்கிறீர்கள். ஆம்; எல்லாம் கடந்த இறைவ னான பரம்பொருளுக்குக் கடவுள் என்பது பெயர். முழுமுதல்வன் அல்லாத சிறு தெய்வங்களையும், அவ்வத் தெய்வங்களின் அடைமொழிப் பெயருடன் சார்த்திக் கடவுள் என்னும் சொல்லை வழங்குவதும் உண்டு. உதாரணமாக: சுறவுக்கொடிக் கடவுள் (மன்மதன்), கரும்புடைக் கடவுள் (மன்மதன்), கனைகதிர்க் கடவுள் (சூரியன்), நான்முகக் கடவுள் (பிரமன்), கடவுட் சாத்தன். கடவுட் பத்தினி முதலியன.
பண்டைக்காலத்திலே, கடவுள் என்னும் இந்தச் சொல், முற்றத் துறந்த முனிவருக்கும் பெயராக வழங்கப்பட்டது. அதாவது, துறவிகளுக்குக் கடவுள் என்ற பெயரும் உண்டு. இக்காலத்தில், இச்சொல் இந்தப் பொருளை இழந்துவிட்டுத் தெய்வம் என்னும் பொருளை மட்டும் கொண்டுள்ளது. இதனை ஆராய்வோம்.
முனிவருள் பெரியவன் முகத்து நோக்கி, ‘ஒன்று
இனிதுளது உணர்த்துவது அடிகள்’ என்றலும்
பனிமலர்த் தாமரைப் பழன நாடனைக்
கனியமற் றின்னணம் கடவுள் கூறினான்
என்பது சூளாமணி காவியம், இரதநூபுரச் சருக்கம், 78-ஆம் செய்யுள்.
இந்தச் செய்யுளில், பயாபதி என்னும் அரசன் முனிவர் ஒருவரை வணங்கி, தனக்கு அறநெறி கூற வேண்டும் என்று வேண்டிக்கொள்ள, அந்தக் கடவுள் (முனிவர்) அவ்வரசனுக்கு உபதேசம் செய்தார் என்று கூறப்படுகிறது. இதில், முனிவர் கடவுள் என்று கூறப்படுவது காண்க.
சீவக சிந்தாமணி என்னும் காவியத்திலும் முனிவர்கள் கடவுளர்என்று கூறப்படுகின்றனர்.
காசறு துறவின் மிக்க கடவுளர் சிந்தை போல
மாசறு விசும்பின் வெய்யோன் வடதிசை யயன முன்னி.
என்னும் குணமாலையார் இலம்பகச் செய்யுளில், வானத்திலே விளங்கும் சூரியன், தென்பக்கமிருந்து வடக்குப்பக்கம் சென்றதைக் (அயனத்தைக்) கூறுகிற இடத்தில், கடவுளர் (முனிவர்) மனம் போலத் தூய்மையான வானம் என்று கூறப்படுகிறது. இதில் முனிவர்கள் கடவுளர் என்று கூறப்பட்டிருப்பது காண்க.
சீவக சிந்தாமணி (முத்தியிலம்பகம், மணியருபதம்) செய்யுளிலும், துறவு பூண்ட முனிவர் கடவுள் என்று கூறப்படுகிறார்:
சுறவுக்கொடிக் கடவுளொடு காலற்றொலைத் தோய், எம்
பிறவியறு கென்று பிற சிந்தை இலராகி
நறவமலர் வேய்ந்து நறுஞ்சாந்து நிலமெழுகித்
துறவுநெறிக் கடவுளடி தூபமொடு தொழுதார்
சீவக மன்னன் அரசு துறந்து, துறவு பூண்டு கேவல ஞானம் பெற்று வீடுபேறடையும் நிலையில் இருந்தபோது, விஞ்சையர் வந்து அவரைத் தொழுது வணங்கியதை இச்செய்யுள் கூறுகிறது. இங்குத் துறவியாகிய சீவக முனிவர் கடவுள் என்று கூறப்பட்டது காண்க.
திருக்கலம்பகம் என்னும் நூலிலும், இச்சொல் இந்தப் பொருளில் வழங்கப்பட்டுள்ளது:
தருமத் திகிரிப் படையிற் புவனத் திரயந்தனை யாள்வாய்
கருமக் கடலைச் சுவறக் கடையும் கடவுட் கணநாதா
என்பது அச்செய்யுள் அடி.
“தருமச் சக்கரத்தினாலே மூன்று உலகத்தையும் ஆள்பவனே! வினையாகிய கடலை வற்றக் கடைகின்ற முனி கணங்களுக்கு நாயகனே!” என்பது இதன் பொருள். இச்செய்யுளில் முனிவர் கூட்டம் கடவுள் கணம் என்று கூறப்பட்டிருப்பதை நோக்குக.
குறுந்தொகை என்னும் நூலில், 203-ஆம் பாட்டிலும், துறவி, கடவுள் என்று கூறப்படுகிறார்.
கடவுள் நண்ணிய பாலோர் போல
ஒரீஇ ஒழுகும்
என்பது அச்செய்யுள் அடி. முற்றத் துறந்த முனிவர்களைக் கண்ட காலத்து, தூய்மையற்றோர், தாம் தூய்மையற்றவராக இருப்பதனாலே .
அவருக்கு அஞ்சி விலகிப் போகிறார்கள் என்பது இதன் கருத்து. இதில் துறவிகள் கடவுள் என்று கூறப்பட்டிருப்பது நோக்குக.
மதுரைக் காஞ்சியில்,
தென்னவற் பெயரிய துன்னருந் துப்பில்
தொன்முது கடவுள் பின்னர் மேய
வரைத்தாழ் அருவிப் பொருப்பிற் பொருந
என்னும் அடிகளில் கடவுள் என்னும் சொல் வந்துள்ளது. இச் சொல்லுக்குமுனிவனாகிய அகத்தியன் என்று நச்சினார்க் கினியர் பொருள் கூறியிருக்கிறார். இவ்வாறு பொருள் கூறியதோடு அமையாமல் கலித்தொகையில் உள்ள கடவுள் பாட்டைச் சுட்டிக் காட்டி, “இருடிகளையும் கடவுள் என்று கூறியவற்றானும் காண்க” என்று விளக்கம் கூறியிருக்கிறார். இதனால், இருடிகளாகிய துறவிகளும், முனிவர்களும் கடவுள் என்னும் பெயர் பெற்றிருந்தனர் என்பது ஐயமற விளங்குகிறது.
நச்சினார்க்கினியர் சுட்டிக் காட்டிய கலித்தொகைக் கடவுட் பாட்டு, மருதக்கலி 28-ஆம் பாட்டாகும். இந்தப் பாட்டில், தலைமகள், தலைமகனை நோக்கி, ‘நீ யாண்டுச் சென்றிருந்தாய்’ என்று கேட்க, அவன் கடவுள் (முனிவர்) தங்கியிருந்த இடத்தில் சென்று தங்கினதாகக் கூறினான்.அவன் கூற்றை நம்பாத தலைவி, அவன் பரத்தைமாட்டுச் சென்றதாகக் கருதி அவனைச் சினந்து கூறுகிறாள். அப்பாட்டிலே முனிவர், கடவுள் என்று கூறப் படுகிறார்.
நன்றும்,
தடைஇய மென்றோளாய் கேட்க வா யாயின்
உடனுறை வாழ்க்கைக் குதவி யுறையுங்
கடவுளர் கட்டங் கினேன்.
“பெரிதும் பெருத்த மெல்லிய தோளினையுடையாய்! யான் கூறுகின்றதனைக் கேட்பாயாயிற் கேள்; யாம் இருவரும் போய் உடனே துறவகத்திருக்கும் வாழ்க்கைக்கு உதவியாயிருக்கும் கடவுளரைக் கண்டு அவரிடத்தே தங்கினேன் என்றான்” (நச்சினார்க்கினியர் உரை).
இவ்வாறு தலைமகன் கூறியதைக் கேட்ட தலைமகள்,.
சோலை,
மலர்வேய்ந்த மான்பிணை யன்னார் பலர்நீ
கடவுண்மைக் கொண்டொழுகு வார்;
அவருள்,
எக்கடவுள் மற்றக் கடவுளைச் செப்பீமன்
என்று கேட்கிறாள். அதாவது, “நீர் கடவுளாக (முனிவராக)க் கொண்டவர், மான்போலுங் கண்ணை யுடையவர்களாய்த் தலையிலே மலர் சூடியவர்கள் (மகளிர்). அந்தக் கடவுளர்களில் நீர் தங்கியிருந்த கடவுள் யார், சொல்லும்” என்று கேட்கிறாள். அதற்குத் தலைமகன்,
முத்தேர் முறுவலாய்! நாமணம் புக்கக்கால்
இப்போழ்து போழ்தென் றதுவாய்ப்பக் கூறிய
அக்கடவுள் மற்றக் கடவுள்
என்று கூறுகிறான்.“பின்னை அந்தக் கடவுள், முத்தையொக்கும் முறுவலையுடையாய்! நாம் மணத்தைச் செய்ய இப்பொழுது முகுத்த மென்று அம்முகுத்தம் வாய்ப்பச் சொன்ன அந்தக் கடவுள் காண் என்றான்” (நச்சினார்க்கினியர் உரை).
மேலே காட்டிய கலித்தொகைச் செய்யுட்களில், முனிவர்களாகிய துறவிகள் கடவுளர் என்று கூறப்பட்டிருப்பது காண்க.
இளங்கோ அடிகளும் முனிவர்களாகிய துறவிகளைக் கடவுளர் என்று கூறுகிறார்.
ஆதியில் தோற்றத்து அறிவனை வணங்கிக்
கந்தன் பள்ளிக் கடவுளர்க் கெல்லாம்1
என்றும்,
பெண்டிரும் உண்டியும் இன்பமென்று உலகிற்
கொண்டோ ருறூஉங் கொள்ளாத் துன்பம்
கண்டன ராகிக் கடவுளர் வரைந்த
காமம்?2
என்றும்,
கண்ணகி தாதை கடவுளர் கோலத்
தண்ணலம் பெருந்தவத் தாசீவகர் முன்
புண்ணிய தானம் புரிந்தறம் கொள்ளவும்3.
34 மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 18
என்றும் அவர் கூறியிருப்பது காண்க. இவற்றில், முனிவர்களும் துறவிகளும் கடவுளர் என்று கூறப்பட்டிருப்பதைப் பாருங்கள்.
கொங்குவேளிர் இயற்றிய பெருங்கதை என்னும் காவியத்திலும், முனிவர்களும் துறவிகளும் கடவுளர் என்று கூறப்படுகின்றனர். அவற்றில் சிலவற்றைக் காட்டுவோம்.
பட்டதை அறியான் பயநிலங் காவலன்
கட்டழல் எவ்வமொடு கடவுளை வினவ4
தன் தேவியைப் பிரிந்த சதானிகன் என்னும் அரசன் ஒரு முனிவரிடம் சென்று தனக்கு நேர்ந்ததைக் கேட்டான். இதில் முனிவன் கடவுள் எனப்படுகிறான்.
தேவ குலனும் தேசிகப் பாடியும்
மாவும் தேரும் மயங்கிய மறுகும்
காவும் தெற்றியும் கடவுட் பள்ளியும்5
உதயணன், கனவு கண்டு அதன் கருத்தை அறிந்துகொள்ள விரும்பி முனிவர் இருக்கும் இடம் சென்று அவர்களிடம் தனது கனவைக் கூறி அதன் கருத்தை விளக்கும்படி கேட்கிறான்.
அளப்பரும் படிவத்து அறிவர் தானத்துச்
சிறப்பொடு சென்று சேதியம் வணங்கிக்
கடவது திரியாக் கடவுளர்க் கண்டு
நின்றிடை யிருள்யாம நீங்கிய வைகறை
இன்றியான் கண்ட தின்னது மற்றதை
என்கொல் தானென நன்கவர் கேட்ப
உருத்தகு வேந்தன் உரைத்ததன் பின்றை6
விரிசிகை என்பாளின் தந்தை, விரிசிகையை உதயணனுக்கு மணம் செய்வித்துத் தான் துறவறம் பூண்டு முனிவர் வேடத்துடன் காட்டுக்குச் சென்றான். அப்பொழுது அவன் மனைவி வருந்தினாள். அதற்கு அவன் இளகானாகி முனிவர் வேடத்துடன் சென்றான். முனிவர் வேடம் கடவுட் படிவம் என்று கூறப்படுகிறது.
வடுத்தீர் மாதவம் புரிவேன் மற்றெனக்
கேட்டவள் கலுழ வேட்கையி னீக்கிக்
காசறு கடவுட் படிவம் கொண்டாங்கு
ஆசறச் சென்றபின்...7.
கம்பரும் தமது இராமாயணத்தில் இச்சொல்லை இந்தப் பொருளில் வழங்கியுள்ளார். இலங்கையில் போர் நடந்தது. அந்தப் போரிலே இந்திரசித்து மாண்டான். அதனைக் கண்ட தேவர்கள், “இனி இராவணனுக்கு அரசாட்சி நிலைக்காது என்று அறிந்து, மகிழ்ச்சி பொங்க ஆரவாரம் செய்தார்கள். அந்த மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் அவர்கள் அணிந்திருந்த உடைகளும் அவிழ்ந்து விட்டன. அப்போது அவர்கள், கொல்லாத விரதமுடைய சமண முனிவர்களைப்போல நிர்வாணமாக இருந்தார்கள். தங்கள் உடை அவிழ்ந்து விட்டதையும் அறியாமல் அவர்கள் ஆனந்தத்தில் மூழ்கி ஆரவாரம் செய்தார்கள்” என்று கம்பர் பாடுகிறார்;
வில்லாளர் ஆனார்க் கெல்லாம் மேலவன் விளித லோடும்
செல்லாதிவ் விலங்கை வேந்தற் கரசெனக் களித்த தேவர்
எல்லோரும் தூசு நீக்கி ஏறிட ஆர்த்த போது
கொல்லாத விரதத் தார்தம் கடவுளர் கூட்டம் ஒத்தார்8
துறவிகளுக்குக் கடவுளர் என்னும் பெயர் உண்டு என்பதற்கு இன்னும் பல இலக்கியச் சான்றுகளைக் காட்ட முடியும். இடம் பெருகும் என்றஞ்சி இதனொடு நிறுத்துகிறேன். நிற்க.
துறவிகளுக்குக் கடவுள் என்று பெயர் இருந்தது போலவே, தெய்வம் என்னும் பெயரும் வழங்கி வந்தது. இந்தக் காலத்தில் தெய்வம் என்னும் சொல்லுக்குத் தேவன் என்றும், முழுமுதற் கடவுள் என்றும் பொருள் கூறப்படுகிறது. ஆனால், பண்டைக் காலத்தில் தெய்வம் என்னும் சொல்லுக்கு முனிவர், துறவி என்னும் பொருளும் இருந்துவந்தது. அதாவது, கடவுள் என்னும் சொல் அக்காலத்தில் துறவிகளாகிய முனிவரைக் குறித்ததுபோலவே, தெய்வம் என்னும் சொல்லும் பண்டைக்காலத்தில் முனிவர்களுக்குப் பெயராக வழங்கப்பட்டிருந்தது. பிற்காலத்தில், இச்சொல் இப்பொருளை இழந்து விட்டு, தேவர்களுக்கும் பரம் பொருளுக்கும் பெயராக வழங்கப்படுகிறது. அப்பர் எனப்படுகிற திருநாவுக்கரசர் தெய்வம் என்னும் சொல்லை முனிவர் அல்லது துறவிகள் என்னும் பொருளில் வழங்கியுள்ளார். அச்செய்யுள் இது:
முலைமறைக்கப் பட்டுநீ ராடாப் பெண்கள்
முறைமுறையால் “நந்தெய்வம்” என்று தீண்டித்
தலைபறிக்குந் தன்மையர்க ளாகி நின்று
தவமென்று அவஞ்செய்து தக்க தோரார்.9.
இத் திருத்தாண்டகத்திலே, முலை மறைக்கப்பட்ட நீராடாப் பெண்கள் (அதாவது சமண சமயத்துப் பெண் துறவிகளாகிய ஆரியாங்கனைகள்) சமண முனிவரை எம் தெய்வம் என்று கூறி வணங்கினார்கள் என்று அப்பர்சுவாமிகள் கூறுகிறார். இங்குக் கடவுள் (முனிவர்) என்னும் பொருளில் தெய்வம் என்னும் சொல்லை வழங்கியிருப்பது காண்க.
திருவள்ளுவரும், தாம் அருளிய திருக்குறளிலே முனிவர் (துறவி) என்னும் பொருளில் தெய்வம் என்னும் சொல்லை வழங்கியிருக்கிறார்.
தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தான்என்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை
என்பது அந்தக் திருக்குறள்.
இக்குறளில் தெய்வம் என்னும் சொல்லுக்குக் கடவுள் (முனிவர், துறவி) என்னும் பொருள் உள்ளது காண்க. இல்லறத்தில் உள்ளவன் ஐந்துவகைப்பட்டவர்களுக்கு உணவு கொடுத்துக் காப்பாற்ற வேண்டும் என்று இத்திருக்குறள் கூறுகிறது. அந்த ஐந்துவகைப்பட்ட மனிதர் யாவர்? இல்லறத்தால் தன்னையும், தன் குடும்பத்தினரையும், விருந்தினரையும், தெய்வம் (கடவுள்) எனப்படும் துறவிகளையும் தென்புலத்தாரையும் உணவு கொடுத்துக் காப்பாற்ற வேண்டும்.
--------------
தெரிவு:
நா. கணேசன்
2017-10-23 14:34 GMT+08:00 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
On Sun, Oct 22, 2017 at 9:21 AM, செல்வன் <hol...@gmail.com> wrote:
தெய்வத்தை (சமணர்களின் பாஷையில் தீர்த்தங்கரர்களை)
:-)) செல்வன், இது எனக்கு புதுக்கருத்து. அப்படியே சமண நூற்களில் (மூலம்) தெய்வம் = தீர்த்தங்கரர்
என்று வருவதை இங்கு இடவும்.
==============
நிற்க!
"முலைமறைக்கப் பட்டுநீ ராடாப் பெண்கள்
முறைமுறையால் 'நந்தெய்வம்' என்று தீண்டித்
தலைபறிக்குந் தன்மையர்க ளாகி நின்று
தவமென்று அவஞ்செய்து தக்க தோரார்",
(திருவீரட்டானம், ஏழைத் தாண்டகம் 11)
இத்திருத்தாண்டகத்திலே, முலை மறைக்கப்பட்ட நீராடாப் பெண்கள்(அதாவது, சமண சமயத்துப்பெண் துறவிகளாகிய ஆரியாங்கனைகள்) சமண முனிவரை எம்தெய்வம் என்று கூறிவணங்கினார்கள் என்று அப்பர் சுவாமிகள் கூறுகிறார். இங்குக் கடவுள்(முனிவர்) என்னும் பொருளில்தெய்வம் என்னும் சொல்லை வழங்கியிருப்பது காண்க.
சமணத்தில் தெய்வம் என்ற சொல்லுக்கு முனிவர், தேவர், ஊழ் (ஊழ்வினை, கருமம்) என்று பொருள் வரும். இடத்திற்குற்கேறாற்போல் பொருளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
மேலே உள்ள அப்பர் தேவாரத்தில், சமண சமய பெண் துறவிகள், சமண முனிவரை எம்தெய்வம் என்று கூறிவணங்கினார்கள் என்று அப்பர் மூலம் நாம் அறியலாம்.
அதுபோல, சமணத்தில் இல்லறத்தரசிகளுக்கு எம்தெய்வம் என்பது கணவன். சமணத்துறவிகளை காட்டிலும்,
கணவனே பெரியவன் என்பது கருத்து.
இரா.பானுகுமார்
தொழவேண்டாம். கணவனை மட்டும் தொழுதால் போதும்
என்பது சமணத்துக்கு ஏற்புடைய கருத்துதானா?
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

---You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/3C-RemgZVn4/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
முனிவர் எனும் சொல்லின் பயன்பாடு.
முனி எனும் வடச்சொல் உள்ளிருக்கும் கிளர்ச்சியினால் செயல் படுபவரை குறித்து, அதன் வழி துறவு பூண்டோ, அல்லது இல்லறத்தில் இருந்தோ மேம்பட்ட ஒரு வாழ்வை வாழ்பவர்களை சொல்லி, அதை தொடர்ந்து அன்னாருக்கு வீடு பேறு எய்தும் எண்ணத்தை குறிக்கிறது.
முனி எனும் தமிழ் இளயானை, கோபம் கொண்டவன் மற்றும் சிற்சில வட்டார வழக்குகளில் பேய்களையும் குறிக்கும். வில்லை குறிப்பதாகவும் இலக்கிய ஆதாரங்கள் உள.
வடச்சொல் முனியை பிரித்துக்காட்ட பரிபாடலில் அருமுனி போன்ற பதபயன்பாட்டையும் தமிழ் வழி முனி பயன்பாட்டை முனியன் முனியல் போன்ற பதபயன்பாட்டிலும் காணலாம்.
இவண்
ஜலசயனன்
முனைப்புடன் முனைபவர் என்பதால் முனி என்ற பெயர். புத்தர், மகாவீரர், பார்சுவர், ... இவர்கள் முனி என்றழைக்கும் வடசொல் “முனை-தல்” என்னும் த்ராவிடபாஷையின் தாதை அடியாய்க் கொண்டது.
|
மனதிற்கு இனிமை அளித்தாலும் இது உண்மையல்ல
முனைப்பு, முனைவு முனைபவர் முனைதல் போன்ற சொற்கள் சங்க இலக்கியங்களில் காணகிடைக்காதவை. பிராசீன அகராதிகளிலும் இச்சொற்கள் இல்லை.
இவை நவீன தமிழாக்கம். புதிய சொற்களை கொண்டு பழைய வடசொல் பிறந்ததாக கொளக்கூடாது
நிமைத்தல் எனும் தமிழ்பயன்பாடு காண தருவீரோ. இலக்கியமும் காலமும் சுட்டி, அதை தொடர்ந்து நிமி எனும் வடசொல் பயன்பாட்டின் காலம் அதற்கு பிந்தை என காண அவா
From: vall...@googlegroups.com [mailto:vall...@googlegroups.com] On Behalf Of N. Ganesan
Sent: 24 October 2017 12:27
To: மின்தமிழ்
; vallamai
Subject: Re: கடவுள் - முனிவர் - RE: [வல்லமை] Re: [MinTamil] Re: திருக்குறள் ஆய்வு

From: vall...@googlegroups.com [mailto:vallamai@googlegroups.com] On Behalf Of N. Ganesan
Sent: 24 October 2017 12:27
To: மின்தமிழ்; vallamai
Subject: Re: கடவுள் - முனிவர் - RE: [வல்லமை] Re: [MinTamil] Re: திருக்குறள் ஆய்வு
2017-10-23 23:40 GMT-07:00 Jalasayanan <jalas...@gmail.com>:
முனிவர் எனும் சொல்லின் பயன்பாடு.
முனி எனும் வடச்சொல் உள்ளிருக்கும் கிளர்ச்சியினால் செயல் படுபவரை குறித்து, அதன் வழி துறவு பூண்டோ, அல்லது இல்லறத்தில் இருந்தோ மேம்பட்ட ஒரு வாழ்வை வாழ்பவர்களை சொல்லி, அதை தொடர்ந்து அன்னாருக்கு வீடு பேறு எய்தும் எண்ணத்தை குறிக்கிறது.
முனைப்புடன் முனைபவர் என்பதால் முனி என்ற பெயர். புத்தர், மகாவீரர், பார்சுவர், ... இவர்கள் முனி என்றழைக்கும் வடசொல் “முனை-தல்” என்னும் த்ராவிடபாஷையின் தாதை அடியாய்க் கொண்டது.
சென்ற வாரம், நிமை-த்தல், நிமி என்னும் பெயரைச் சொன்னேன்:
இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் இமைத்தல் ‘blinking' ந்- என்ற எழுத்துடன் தொடங்குவதே இல்லை.
எனவே தான் நிமைத்தல் என்னும் சொல் சம்ஸ்கிருதத்துக்கு தமிழ்/த்ராவிடம் தந்தது எனக் கொள்ளவேண்டியுள்ளது.
புலை/புலி, நரை/நரி, பனை/பனி (பல்/பால் = வெள்ளை), ... என்பதுபோல, நிமை/நிமி என்றெடுத்து
கண் இமைகளில் எப்போதும் இருக்கும் கடவுள் நிமி என்ற புராணமும் https://en.wikipedia.org/wiki/Nimi_(Vedic_king) ,
நிமிஷ என்ற வார்த்தையும் சம்ஸ்கிருதத்தில் உருவாகிறது. கங்கை என்ற சொல்லில் இருந்து முருகுக்கு காங்கேயன்
என்ற தத்திதாந்த நாமம் என்பதுபோல, நிமிஷ என்ற சொல்லில் இருந்து அகஸ்திய முனியுடன்
தொடர்புடைய வனம் நைமிஷாரண்யம் எனப்படுகிறது. நிமை > இமை.
நா. கணேசன்
முனி எனும் தமிழ் இளயானை, கோபம் கொண்டவன் மற்றும் சிற்சில வட்டார வழக்குகளில் பேய்களையும் குறிக்கும். வில்லை குறிப்பதாகவும் இலக்கிய ஆதாரங்கள் உள.
வடச்சொல் முனியை பிரித்துக்காட்ட பரிபாடலில் அருமுனி போன்ற பதபயன்பாட்டையும் தமிழ் வழி முனி பயன்பாட்டை முனியன் முனியல் போன்ற பதபயன்பாட்டிலும் காணலாம்.
வடசொல். பார்க்க: தொல்காப்பியம்.
இவண்
ஜலசயனன்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
2017-10-24 0:13 GMT-07:00 Jalasayanan <jalas...@gmail.com>:
முனைப்புடன் முனைபவர் என்பதால் முனி என்ற பெயர். புத்தர், மகாவீரர், பார்சுவர், ... இவர்கள் முனி என்றழைக்கும் வடசொல் “முனை-தல்” என்னும் த்ராவிடபாஷையின் தாதை அடியாய்க் கொண்டது.
மனதிற்கு இனிமை அளித்தாலும் இது உண்மையல்ல
முனைப்பு, முனைவு முனைபவர் முனைதல் போன்ற சொற்கள் சங்க இலக்கியங்களில் காணகிடைக்காதவை. பிராசீன அகராதிகளிலும் இச்சொற்கள் இல்லை.
சங்க இலக்கியத்தில் உள்ளவையே. உ-ம்: தொல்காப்பியம். (தொல்காப்பியம் படித்துப் பாருங்கள், வடச்சொல் என இருக்காது. வடசொல் தான்.)வினையினீங்கி விளங்கிய வறிவின்,முனைவன் கண்டது முதனூலாகும் - தொல்காப்பியம்
இவை நவீன தமிழாக்கம். புதிய சொற்களை கொண்டு பழைய வடசொல் பிறந்ததாக கொளக்கூடாது
த்ராவிடமொழிகளின் மிகப் பழைய சொல்: முனைதல், முனைவு. முனைவர்.வினையினீங்கி விளங்கிய வறிவின், முனைவன் கண்டது முதனூலாகும் - சிந்தாமணி
முனைப்புடன் முனைபவர் என்பதால் முனி என்ற பெயர். |
இங்கு தங்கள் கூற்றில் முனைப்பு எனும் வினைச்சொல் காண்க. தாங்கள் தரும் தொல்காப்பிய ஆதாரத்தில் உள்ள பெயர்ச்சொல்லை வினைச்சொல்லாக கொண்டு பொருள் கொள்வது தவறு.
முனை எனும் சொல் கூர்மையை குறிப்பது. அறிவின் முனைவன் என்பது அறிவு மிகுந்தவன் என பொருள். இங்கு முனைப்பு எங்கு வந்தது
முனைவனுக் கிறைஞ்சினான் முருக வேளனான் என சீவகமும்
முனைவன் மூவுலகாளி - முனைவனை மூவுலகும் படைத்த முதல் மூர்த்தி எனும் திவ்ய பிரபந்த பாடலிலும் முனைவன் முன்னோன் எனும் பொருளில் வருகிறது. அவ்வண்ணம் அறிவின் முனைவன் என்பது அறிவின் முன்னோன் எனலாம். இங்கு முனைப்பு எனும் கிரியை எங்கு வந்தது
திருப்புகழ் காலத்தில் வினைச்சொல்லாய் திரிந்தது சரி. திருப்புகழ் காலத்திற்கு முன்பே நிமி எனும் சமஸ்கிருத பயன்பாடு உள்ளது தாங்கள் அறியாததா. காலத்திற்முற்பட்ட நூலை சுட்டுங்கோள்
இங்கே முனைவன் = அருகன். அர்ஹத் என்னும் புத்தர், மகாவீரர், பார்சுவர். முனைவன் = முனிவன் என்றாதல் காண்க.
|
இது தாங்கள் சொல்வதா இல்லை சிந்தாமணி சொல்வதா
From: vall...@googlegroups.com [mailto:vall...@googlegroups.com] On Behalf Of N. Ganesan
Sent: 24 October 2017 12:53
Cc: vallamai; மின்தமிழ்
Subject: Re: கடவுள் - முனிவர் - RE: [வல்லமை] Re: [MinTamil] Re: திருக்குறள் ஆய்வு
2017-10-24 0:13 GMT-07:00 Jalasayanan <jalas...@gmail.com>:
" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
rnk
rnk
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
முனைவர்க்கும் முனைவா!
சொற்றி யாவதுங் கேளாய் சுதநயந் துணிவுமங் குரைத்து
கற்றி யாவது மிலையாய்க் கடையில்பல் பொருளுணர் வுடையை
பற்றி யாவது மிலையாய்ப் பரந்தவெண் செல்வமு முடையை
முற்ற யார்நினை யுணர்வார் முனைவர்தம் முனைவர்க்கு முனைவா - (160)
முனைவர்தம் முனைவர்க்கும் முனைவா - முயல்வார்தம் முயல்வர்க்கும் முதல்வன் - முயல்பவர் - முனைவர் - தவம் செய்பவர்.
தவம். முனைத்திறத்து மிக்கசீர் முனைவர் (சீவக. 707).
சீவகசிந்தாமணி,
கனைத்து வண்டு உளர்ந்த தார்க் காளை சீவகன் அரோ
தமிழில் முனி, வடமொழி முனி என்பதற்கும் துல்லியமான வேறுபாடு யாராவது
கூறினால் நன்றாக இருக்கும்.
ரிஷி , முனி வேறுபாட்டை அறிவேனாயினும், தமிழிலும், சங்கத/பாகதத்திலும் வேறுபாட்டையறிய
ஆவால்.
இரா.பானுகுமார்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
நன்றி
முனைவன் இலக்கிய ஆதாரங்கள் காண கிடைக்கின்றன என பல கால் சொல்லியாகிவிட்டது. இனி, முனைவன் எனும் சுட்டுச்சொல் முனைப்பு எனும் வினையை கொண்டா என்பது விவாதம்.
முனைப்பு எனும் வினைச்சொல் இலக்கியத்தில் காண கிட்டவில்லை. எனினும் நவீன பயன்பாட்டில் உள்ளது. புரிதலுக்கு நன்றி எனும் வாசகம் போல் இதுவும் இணையத்தில் உலா வருகின்றது.
நவீன தமிழாக்கத்தை கொண்டு பழங்கால சொல்லின் கூற்றினை விளக்குதல் தவறாகும்
முனைவர்க்கும் முனைவா |
முன்னோர்க்கும் முன்னவா என்று செவிமடுத்திருக்கிறோமே
தமிழில் முனி, வடமொழி முனி |
அகராதிகளே தரும். தமிழில் முனி எனும் சொல் எத்தகைய சொற்களை சுட்டும் என்பதும், வடமொழியில் என்ன என்ன பொருள் தரும் என நோக்க தெளிவு பிறக்கும்.
From: mint...@googlegroups.com [mailto:mint...@googlegroups.com] On Behalf Of Banukumar Rajendran
Sent: 25 October 2017 13:03
To: மின்தமிழ்
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
http://agarathi.com/word/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D
|
முனைவன் என்பது பகைவனையும் சுட்டும் என்பதையும் வெட்டி ஒட்டியிருக்கலாமே
From: mint...@googlegroups.com [mailto:mint...@googlegroups.com] On Behalf Of Banukumar Rajendran
Sent: 25 October 2017 13:03
To: மின்தமிழ்
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
நன்றி
முனைவன் இலக்கிய ஆதாரங்கள் காண கிடைக்கின்றன என பல கால் சொல்லியாகிவிட்டது. இனி, முனைவன் எனும் சுட்டுச்சொல் முனைப்பு எனும் வினையை கொண்டா என்பது விவாதம்.
முனைப்பு எனும் வினைச்சொல் இலக்கியத்தில் காண கிட்டவில்லை. எனினும் நவீன பயன்பாட்டில் உள்ளது. புரிதலுக்கு நன்றி எனும் வாசகம் போல் இதுவும் இணையத்தில் உலா வருகின்றது.
நவீன தமிழாக்கத்தை கொண்டு பழங்கால சொல்லின் கூற்றினை விளக்குதல் தவறாகும்
முனைவர்க்கும் முனைவா
முன்னோர்க்கும் முன்னவா என்று செவிமடுத்திருக்கிறோமே
தமிழில் முனி, வடமொழி முனி
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
முனைப்புடன் முனைபவர் என்பதால் முனி என்ற பெயர். புத்தர், மகாவீரர், பார்சுவர், ... இவர்கள் முனி என்றழைக்கும் வடசொல் “முனை-தல்” என்னும் த்ராவிடபாஷையின் தாதை அடியாய்க் கொண்டது.
மனதிற்கு இனிமை அளித்தாலும் இது உண்மையல்ல
முனைப்பு, முனைவு முனைபவர் முனைதல் போன்ற சொற்கள் சங்க இலக்கியங்களில் காணகிடைக்காதவை. பிராசீன அகராதிகளிலும் இச்சொற்கள் இல்லை.
இவை நவீன தமிழாக்கம். புதிய சொற்களை கொண்டு பழைய வடசொல் பிறந்ததாக கொளக்கூடாது
நிமைத்தல் எனும் தமிழ்பயன்பாடு காண தருவீரோ. இலக்கியமும் காலமும் சுட்டி, அதை தொடர்ந்து நிமி எனும் வடசொல் பயன்பாட்டின் காலம் அதற்கு பிந்தை என காண அவா
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
மீண்டும் இனிமையான வாசகங்கள்
உங்கள் பெயரில் உள்ள ‘சயனம்’ (ஸயநம்) |
முதற்கண் பெயரில் உள்ள சயனம் – ஸயநம் அல்ல, ஶயநம்.
சாய்தல் |
சாய்தலும் படுத்து இருத்தலும் ஒன்றா. ஶயநம் படுத்து இருக்கும் நிலை. சாய்தல் நேர்மறை பொருள் அமர்ந்து இருக்கும் நிலையில் ஒன்று, எதிர்மறையாக தோற்றல் போன்றவை
முனிதல், முனைதல், முன்னுதல் எல்லாம் முனி, முனைவர் |
முனி முனைவன் சரி
முனைப்பு போன்ற வினைச்சொற்கள் பற்றி விவாதம். இது காணகிட்டவில்லை. நிகண்டு நூற்களிலும் பழைய அகராதிகளிலும் இல்லை. மேலும் முனி எனும் தமிழ்ச்சொல் முனிவர் எனும் சொல் தரும் பொருள் தனக்கு எதிர் பதமாகவும் கையாளப்பட்டுள்ளது. இரண்டு முரண்படு பொருள்தரும் சொற்களை பொருந்தவிடும் பொது வேர்ச்சொல் ஆய்வு இதுகாலம் காணவில்லை
ஞிமித்தல் |
ஞிமி எனும் தனிச்சொல்லாய் இலக்கிய பயன்பாடு இல்லை. வல்லின றகரம் மெய் உகர உயரொடு புணர்ந்து ஞிமிறு என்பது மட்டுமே அறிவேன். இது தேனீக்களை குறிக்கும் சொல். மாறாய் தாங்கள் சொல்லும் பொருளில் இல்லை. தேனீக்களும் வண்டும் திரிந்து இருப்பதை சிலம்பு காண்பிக்க பைஞ்ஞிமிறு எனும் பயன்பாடு உண்டு
பண்டை தமிழில் திரிச்சொற்களாய் ஞகர ஞிகர பயன்பாடு உண்டு. நீலிவனம் என்பதை ஞீலிவனம் என எழுதும் முறை நீலி எனும் சொல்லை பசுமை என சுட்டும் சொல்லோடு சேர்த்து பைந்நீலி என எழுதாது பைம்ஞீலி என எழுதும் முறை 1923 தனில் அச்சிட்ட ஒரு புத்தகத்தில் காண கிட்டியது. பொதுவாய் பைஞ்ஞீலி என எழுதி கண்டுள்ளேன்
பைஞ்ஞிணம் எனும் சங்க இலக்கிய பயன்பாடு தற்போது எழுத முற்பட்டால் பைந்நிணம் என்றே எழுதப்படும். நிணம் எனும் சொல் தனிச்சொல்லாய் பயன்படும் போது ஞிணம் என்று எழுதப்பட மாட்டாது.
ஆக, ந - ஞ போலி அல்ல திரி அல்ல மாறாய் புணர்ச்சி என தேறும்.
பல திரிகளிலும் பல தளங்களிலும் தாங்கள் ஞிமித்தல் நிமித்தல் பற்றி எழுதியும் ஞிமித்தலுக்கான இலக்கிய பயன்பாட்டை காணவில்லை.
இனி நிமை பயன்பாடு காலத்தால் பிற்பட்டது தாங்கள் தந்த ஆதாரமே.
விந்து மற்றும் நேமி பயன்பாட்டை குறித்து எழுதும் கால அவகாசம் இல்லை. எனினும் உடனடியாய் தங்கள் சிந்தனைக்கு விந்து எனும் சொல்லின் முதல் இலக்கிய பயன்பாடு சிலம்பில் புள்ளி எனும் பொருளில். ரேகை ஏகை என திரிந்தாகவும் காண கிடைக்கிறது. திரி சொற்களின் பயன்பாட்டை காண சொல்ல வேண்டியது திரிந்த காரணம் பேச்சு வழக்கு மட்டுமே என கொள்ள மாட்டாதே இன்ன பிற காரணங்களும் உண்டு என்பதை அறிய வேண்டும்
ஓசை பொருத்தம் மட்டுமே கண்டால் வடமொழி என்ன இன்னமும் பல மொழிகளை இணைத்துவிடலாம். நாம் தமிழ் முன்னது என சொல்ல அவரவர் தம்மொழி முன்னது என்பர். இங்கு காலத்தை கவனத்தில் கொண்டே ஆராய வேண்டும். உமது தேடுதலில் ஓசையோடு காலத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது என் அவா
From: vall...@googlegroups.com [mailto:vall...@googlegroups.com] On Behalf Of N. Ganesan
Sent: 26 October 2017 20:08
To: மின்தமிழ்; vallamai
Subject: Re: கடவுள் - முனிவர் - RE: [வல்லமை] Re: [MinTamil] Re: திருக்குறள் ஆய்வு
2017-10-24 0:13 GMT-07:00 Jalasayanan <jalas...@gmail.com>:
" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
எங்கெங்கோ திரிந்துக்கொண்டு இருக்கிறோம். உதாரணமாக மாம்பழம் ஆம்ர என ஆனது என்றது.
மாம்பழம் என்பது ஆம்ரப2லம் வடமொழியில்
மா – ஆம்ர என நிறுவுங்கள். மாம்பழம் ஆம்ர என திரிந்தால் ஆம்ர என்பதோடு பலம் எனும் பழத்தை குறிக்கும் வடசொல் சேரக்கூடாது அல்லவா
இதைக்கொண்டு பலம் பழம் என வேறு திசையில் பயணப்படுதல் வேறு
From: vall...@googlegroups.com [mailto:vall...@googlegroups.com] On Behalf Of N. Ganesan
Sent: 26 October 2017 18:07
To: மின்தமிழ்; vallamai
Subject: Re: கடவுள் - முனிவர் - RE: [வல்லமை] Re: [MinTamil] Re: திருக்குறள் ஆய்வு
2017-10-25 23:45 GMT-07:00 Jalasayanan <jalas...@gmail.com>:
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
எங்கெங்கோ திரிந்துக்கொண்டு இருக்கிறோம். உதாரணமாக மாம்பழம் ஆம்ர என ஆனது என்றது.
மாம்பழம் என்பது ஆம்ரப2லம் வடமொழியில்
மா – ஆம்ர என நிறுவுங்கள். மாம்பழம் ஆம்ர என திரிந்தால் ஆம்ர என்பதோடு பலம் எனும் பழத்தை குறிக்கும் வடசொல் சேரக்கூடாது அல்லவா
இதைக்கொண்டு பலம் பழம் என வேறு திசையில் பயணப்படுதல் வேறு
மீண்டும் இனிமையான வாசகங்கள்
உங்கள் பெயரில் உள்ள ‘சயனம்’ (ஸயநம்)
முதற்கண் பெயரில் உள்ள சயனம் – ஸயநம் அல்ல, ஶயநம்.
சாய்தல்
" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
ஐயன்மீர்
பழத்திற்கு சொன்னது மரத்திற்கும் பொருந்தும்
From: mint...@googlegroups.com [mailto:mint...@googlegroups.com] On Behalf Of N. Ganesan
Sent: 28 October 2017 05:51
To: மின்தமிழ்
Subject: Re: கடவுள் - முனிவர் - RE: [வல்லமை] Re: [MinTamil] Re: திருக்குறள் ஆய்வு
2017-10-27 10:10 GMT-07:00 Jalasayanan <jalas...@gmail.com>:
--
ஐயன்மீர்
பழத்திற்கு சொன்னது மரத்திற்கும் பொருந்தும்
--
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
முன்னம் ( 1500 BCE)
|
அதே அதே
2500-1500 BCE இங்கு மாமரம் தென்னக்கத்தில் இருந்த ஆதாரம் இருக்கிறதா. தாருங்கள் நாமும் தெரிந்துக்கொள்வோம்.
ஆரியர்களின் பூர்வீகம் எனும் வேறு திசையில் பயணிப்பதை தவிர்க்கவும். அது திரியின் நோக்கம் அல்ல
பழத்திற்கு சொன்னது மரத்திற்கும் பொருந்தும் என்றது ஆம்ர எனும் சொல் மரத்தை குறிக்கும் சொல் அல்ல. ஆம்ர என்பது பெயர் அத்தோடு வ்ருக்ஷம் சேர்த்தால் அது மாமரத்தை குறிக்கும்.
மாமரம் ஆம்ர ஆனது என்றால் அது போல் வேறு எந்த மரத்தின் பெயர் இதேபோலும் “ம்ர” என்ற ஈற்றோடு மருவியது என்பதையும் தரவேணும் அல்லவா
மா என்பதை ஆம்ர என பொருந்த விட வேண்டும். இதில் உமது கற்பனை இல்லை என்று ஆதாரமும் சேர்க்க வேண்டும்.
ஏன் ஆம்ர என்பது மருவி மாம்ர என்றாகி இருக்கக்கூடாது என்பதை விளக்கவும்
From: vall...@googlegroups.com [mailto:vall...@googlegroups.com] On Behalf Of N. Ganesan
Sent: 30 October 2017 19:54
To: மின்தமிழ்; vallamai
Subject: Re: கடவுள் - முனிவர் - RE: [வல்லமை] Re: [MinTamil] Re: திருக்குறள் ஆய்வு
2017-10-30 1:04 GMT-07:00 Jalasayanan <jalas...@gmail.com>: