திருவண்ணாமலை பதிவுகள்

301 views
Skip to first unread message

Subashini Tremmel

unread,
Sep 10, 2011, 7:08:09 PM9/10/11
to மின்தமிழ், Subashini Kanagasundaram
வணக்கம்.

திருவண்ணாமலை மாவட்டத்தின் தகவல்கள் அடங்கிய ஒரு பகுதியினை இன்று நமது வலைப்பக்கத்தில் தொடங்குகின்றோம். இப்பகுதியில் படிப்படியாக இம்மாவட்டத்தின் சிறப்பினை வலியிறுத்தும் பல்வேறு தகவல்கள் இணைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இம்முயற்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்து சில பயணங்களை ஏற்பாடு செய்து தானே பயணமும் செய்து பேட்டிகளையும் மேற்கொண்டு இம்முயற்சியில் உதவியவர் ஸ்ரீமதி சீதாலட்சுமி அவர்கள்.இப்பதிவுகள் மேற்கொள்ள அனுமதி வழங்கி எங்கள் பயணத்திற்கும் உதவிய அப்போதைய திருவண்ணாமலை ஆட்சியாளர்  டாக்டர்.மா.ராஜேந்திரன் அவர்களுக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் மனமார்ந்த நன்றி.


திருவண்ணாமலை மாவட்டம்

தமிழ் மரபு அறக்கட்டளையின் தூதுவராகச் சென்று ஸ்ரீமதி சீதாலட்சுமி (சீதாம்மா) அவர்கள் கடந்த ஆண்டு தமிழகத்தில் அப்போதைய திருவண்ணாமலை ஆட்சியாளர்  டாக்டர்.மா.ராஜேந்திரன் அவர்களை மேற்கண்ட பேட்டி இன்று வெளியிடப்படுகின்றது. இப்பேட்டியின் நீளம் 36 நிமிடங்கள்.

இப்பேட்டியில் குறிப்பிடப்படும் செய்திகள் பற்றிய குறிப்புக்கள் கீழ் வருமாறு:

1.முனைவர் பட்ட ஆய்வு தொடர்பான சில செய்திகள்
டாக்டர்.மா.ராஜேந்திரன் அவர்களின் முனைவர் பட்ட ஆய்வு திருக்குறள் தொடர்பில் அமைந்தமைப் பற்றிய சில செய்திகள்.
திருக்குறளில் பொருளியலில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டதன் காரணம்..
திருக்குறளில் ஏறக்குறைய 190 குறள்களில் சட்டம் பற்றிய கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன என்றும் எவ்வாறு சட்டம் எனும் பொருள் அனுகப்படுகின்றது என்றும் குறிப்பிடுகின்றார்.

2.நடைமுறை பணிகள்
தனது பணியில் உள்ள நடைமுறை விஷயங்கள், பொது மக்கள் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றார்.
ஜவ்வாது மலைப் பகுதி திருவண்ணாமலை மாவட்டத்தில் அடங்குவது.  
ஜவ்வாது மலையில் ஆட்சியர்  அவர்களின் பணி..
ஜவ்வாது மலையில் ஏறக்குறைய 70,000 மலைவாசி மக்கள் இருக்கின்றார்கள். தற்சமயம் சாலைவசதிகள் செய்யப்பட்டுள்ளன. 
இம்மக்கள் வெளி உலகத்திலிருந்து தனித்து இருப்பதால் வெளி உலக வாழ்க்கை நிலை அறியாவர்களக இருக்கின்ற சூழல் இருக்கின்றது. இவர்களுக்கு முடிந்தவரை எஸ்.சி. சான்றிதழ்கள் வழங்க அரசு உதவுவதால் மலைப்பகுதியிலிருந்து வெளிவந்து இம்மக்கள் ஏனைய தொழில்களில் ஈடுப்ட வாய்ப்பு அமைந்துள்ளது.
இந்தியாவிலேயே பெண் கல்வியறிவு குறைவான நிலையில் உள்ள பகுதி ஜவ்வாது மலை. 

3.ஜவ்வாது மலை மலைவாழ் மக்கள் வாழ்க்கை முறை
இவர்களின் குழுவைச் சாராத வெளி ஆட்களை இவர்கள் பகுதியில் அனுமதிப்பதில்லை.
திருமணம் என்பது பெண்ணுக்கும் ஆணுக்கும் பிடித்தால் தான் நடைபெறும் என்ற வகையில் அமைந்துள்ளது. சாதிப்பிரிவும் கட்டுப்பாடும் இம்மக்களிடயே இல்லை.
பண்டமாற்று முறையாக ஒரு பொருளை பெற இன்னொரு பொறுளைத் தரும் முறை இன்னமும் வழக்கத்தில் உள்ளது. விலைக்குக் கேட்டாலும் கிடைக்காது..
திருமணச் சடங்குகள் அந்த மக்களுக்குள்ளேயே நிகழும். ப்ரோகிதர்களை வைத்து திருமணம் செய்யும் வழக்கம் இவர்களிடையே இல்லை.
இம்மக்கள் இயற்கை விவசாயத்தை செய்கின்றனர். மாறிவிட்ட சமுதாயத்தில் உள்ள மாற்றங்கள் இவர்களைப் பாதிக்காததால் இயற்கை வாழ்க்கை முறை விவசாயம் இன்னமும் இவர்களின் புழக்கத்தில் இருக்கின்றது. 


4.தலித் மக்கள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏறக்குறைய 22% மக்கள் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மிகக் குறைவான சம்பளத்தில் பொருளாதார ரீதியில் வருமையில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கான பற்பல மேம்பாட்டு நடவடிக்கைகள் நிகழ்ந்து வருகின்றன. 

5. ஆலயத் திருப்பணிகள்
திருவண்ணாமலையில் சிதைந்த நிலையில் உள்ள கோயில்களைச் சீரமைத்துப் பாதுகாக்க வேண்டிய நிலை உள்ளது. இச்சீரமக்கும் பணியை ஆட்சியர் தொடங்கியிருக்கின்றார்கள். 

6.சோழர்கள்
இவ்வுரையாடல் தொடர்ந்து தமிழக வரலாற்றையும் தொட்டுச் செல்கின்றது.

திருவண்ணாமலையார் கோயிலில் 7ம் நூற்றாண்டு கல்வெட்டுக்கள் கூட உள்ளன. இக்கோயிலின் தலவிருட்சம் மகிழ மரம். இதன் அருகில் 
ராஜேந்திர சோழனின் கல்வெட்டு ஒன்று உள்ளது. இதில் அவரது மெய்கீர்த்தி அதாவது தனது அளப்பெரிய வெற்றியான கங்கை கொண்டது,  கடாரத்தை வென்ற செய்தி, கடல் பயணங்கள் என்று தனது மெய்கீர்த்தியை தானே சொல்லும் வகையில் அமைந்த கல்வெட்டினை அடையாளம் காணும் வாய்ப்பு இவருக்கு அமைந்தது. அந்தச் செய்தியையும் இப்ப்பேட்டியில் பகிர்ந்து கொள்கின்றார்.

ராஜேந்திர சோழன் தனது வாழ் நாளின் கடைசி 3 ஆண்டுகள் இங்கே இருந்திருக்கின்ரார்.
இம்மன்னர் அரச பதவிக்கு வந்த போது அவருக்கு 47 வயதுக்கு மேல். 1014ல் முழு ஆட்சியாளராக பட்டமேற்கின்றார். இறுதியில் தனது மகனிடம் ஆட்சியை ஒப்படத்து விட்டு திருவண்ணாமலைப் பகுதியில் வந்து தங்கி இருந்த செய்தி, அப்போது கூல மந்தையில் ராஜேந்திர சோழன் கோயில் கட்டிய செய்தி,  திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பிரம்மதேசத்தில் இம்மன்னனுக்கு பள்ளிப்படை கோயில் அமைந்துள்ள செய்தி ஆகியன பற்றி விவரிக்கின்றார்.

இப்பேட்டியின் ஒலிப்பதிவைக் கேட்கவும் இப்பதிவைப் படங்களுடன் காணவும் த.ம.அ வலைப்பக்கத்தில் உள்ள திருவண்ணாமலை பகுதிக்குச் செல்க!


திருவண்ணாமலை மாவட்ட விவரங்கள் பல அடங்கிய விரிவான இந்தப் பேட்டி கடந்த ஆண்டு தமிழ் மரபு அறக்கட்டளைக்காக பதிவாக்கப்பட்டது. இப்பேட்டியை பதிவு செய்தவர் ஸ்ரீமதி சீதாலட்சுமி அவர்கள். அவருக்கும் இப்பேட்டியில் உதவிய திரு.ப்ரகாஷ் சுகுமாரன், மற்றும் ஏனைய நண்பர்கள் அனைவருக்கும் நமது நன்றி.

தொடரும்...

அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]


 
 

coral shree

unread,
Sep 10, 2011, 8:49:29 PM9/10/11
to mint...@googlegroups.com
அன்பின் சுபா,

மிக நல்ல முயற்சி. சீதாம்மாவிற்கு மனமார்ந்த நன்றிகள். இன்னும் பல மாவட்டங்கள் குறித்த தகவல்கள் இது போல் வர வேண்டும். பலருக்கும், குறிப்பாக மாணவர்களுக்கு பயன்படக்கூடிய பகுதி. பகிர்விற்கு நன்றி.

2011/9/10 Subashini Tremmel <ksuba...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil--

                                                               
                 
மின் செய்தி மாலை படியுங்கள்.
Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

கவி.செங்குட்டுவன்

unread,
Sep 10, 2011, 11:53:29 PM9/10/11
to mint...@googlegroups.com
மிகச் சீரிய பணி சிறப்பாக நிறைவேறி இருக்கிறது. தங்களுக்கும் தங்களின்
பணிக்கு உதவியவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

On 9/11/11, Subashini Tremmel <ksuba...@gmail.com> wrote:
> வணக்கம்.
>
> திருவண்ணாமலை மாவட்டத்தின் தகவல்கள் அடங்கிய ஒரு பகுதியினை இன்று நமது
> வலைப்பக்கத்தில் தொடங்குகின்றோம். இப்பகுதியில் படிப்படியாக இம்மாவட்டத்தின்
> சிறப்பினை வலியிறுத்தும் பல்வேறு தகவல்கள் இணைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
> இம்முயற்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்து சில பயணங்களை ஏற்பாடு செய்து தானே
> பயணமும் செய்து பேட்டிகளையும் மேற்கொண்டு இம்முயற்சியில் உதவியவர் ஸ்ரீமதி
> சீதாலட்சுமி அவர்கள்.இப்பதிவுகள் மேற்கொள்ள அனுமதி வழங்கி எங்கள் பயணத்திற்கும்
> உதவிய அப்போதைய திருவண்ணாமலை ஆட்சியாளர் டாக்டர்.மா.ராஜேந்திரன் அவர்களுக்கு
> தமிழ் மரபு அறக்கட்டளையின் மனமார்ந்த நன்றி.
>
>

> *திருவண்ணாமலை மாவட்டம்*

> திருவண்ணாமலை<http://www.tamilheritage.org/thfcms/index.php?option=com_content&view=article&id=529&Itemid=671>பகுதிக்குச்


> செல்க!
>
>
> திருவண்ணாமலை மாவட்ட விவரங்கள் பல அடங்கிய விரிவான இந்தப் பேட்டி கடந்த ஆண்டு
> தமிழ் மரபு அறக்கட்டளைக்காக பதிவாக்கப்பட்டது. இப்பேட்டியை பதிவு செய்தவர்
> ஸ்ரீமதி சீதாலட்சுமி அவர்கள். அவருக்கும் இப்பேட்டியில் உதவிய திரு.ப்ரகாஷ்
> சுகுமாரன், மற்றும் ஏனைய நண்பர்கள் அனைவருக்கும் நமது நன்றி.
>
> தொடரும்...
>
> அன்புடன்
> சுபா

> *[தமிழ் மரபு அறக்கட்டளை]*


>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil


--
அன்புடன்..........
கவி.செங்குட்டுவன்,
ஊத்தங்கரை - 635207.
அலைபேசி: 9842712109 / 9965634541
தொலைபேசி: 04341- 223011 / 223023
மின்னஞ்சல்: rajend...@yahoo.co.in / kavi.sen...@gmail.com
வலைப்பூ : http://pumskottukarampatti.blogspot.com.
http://kaviyinkural.blogspot.com
http://mazalaiootru.blogspot.com
http://kaviugi.blogspot.com/
http://crcmittapalli.blogspot.com/

Subashini Tremmel

unread,
Sep 15, 2011, 2:29:58 PM9/15/11
to மின்தமிழ், Subashini Kanagasundaram
திருவண்ணாமலை மாவட்டம் - 2

இன்று இப்பேட்டிகளின் தொடர்ச்சி இடம்பெறுகின்றது. இரண்டு ஒலிப்பதிவுகள் இந்தப் பேட்டியில் இடம்பெறுகின்றன.

2. கண்ணகி கோயில் - ஸ்ரீமதி சீதாலட்சுமி அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தொடர்ந்து பதிலளிக்கின்றார் முனைவர்.மா.ராஜேந்திரன். இப்பதிவில்:

கண்ணகி அறக்கட்டளை மேற்பார்வையில் நடைபெறும் பணிகள்
கேரளா அரசாங்கமும் தமிழ் நாடு அரசாங்கமும் பொறுப்பெடுத்துக் கொண்டுள்ளமை
கோயில் மிகவும் சிதலமடைந்த நிலையில் உள்ள செய்திகள்
சித்திரா பவுர்ணமி அன்று மட்டும் இங்கு வழிபாடு நடைபெறுகின்றது என்ர தகவல் 
தமிழகத்தின் பல இடங்களிலிருந்து இந்த தினத்தன்று ஆண்களும் பெண்களும் பச்சை மஞ்சள் நிறத்தில்  ஆடையணிந்து வந்து வழிபாட்டில் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்திருக்கும் செய்திகள்

என கண்ணகி கோயில் பற்றிய பல செய்திகள் கலந்துரையாடப்படுகின்றன.

அதுமட்டுமின்றி, கோயில் சோழர் கால கட்டட அமைப்பில் கட்டப்பட்டுள்ள செய்தி, ராஜராஜ சோழன் அங்கு வந்தமையை கூறும் வகையில் உள்ள ஒரு கல்வெட்டு பற்றிய தகவல்களும் வருகின்றன.


3. அறிமுகப் பகுதி - இதில் முனைவர்.மா.ராஜேந்திரன் தன்னைப் பற்றியும் தனது பணிகள் பற்றிய சில தகவ்ல்களை வழங்குகின்றார்.  தமிழ் மரபு அறக்கட்டளை உறுப்பினர்கள் திரு. துரை, திரு.செல்வமுரளி, திரு.ப்ரகாஷ், திரு.உதயன் ஆகியோர் ஸ்ரீமதி சீதாலட்சுமி அவர்களுடன் இக்கலந்துரையாடலில் இணைந்து கொள்கின்றார்கள். 

இந்த இரண்டு பதிவுகளையும் இங்கே சென்று கேட்கலாம்.

அன்புடன்
சுபா 

2011/9/11 Subashini Tremmel <ksuba...@gmail.com>--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

Subashini Tremmel

unread,
Sep 17, 2011, 2:14:48 PM9/17/11
to மின்தமிழ், Subashini Kanagasundaram

கூத்தனூர் அப்பன்


kuthanoor.jpg

திருவண்ணாமலை மாவட்டத்தில் தானிப்பாடி என்னும் சிற்றூருக்கு அருகில் உள்ள கிராமம் மூட்டூர். இயற்கை எழில் சூழ்ந்த பசுமையான பயிர் நிலங்கள் சூழ்ந்த ஒரு பகுதியில் கூத்தனூர் அப்பன் சிலை உள்ளது.

கோயில் இல்லாது ஒரு சிலை மட்டும் மிக வித்தியாசமான வடிவத்தில் வட்டமான ஒரு மேல் பகுதி கைகள் போன்ற இரண்டு பக்கத்திலும் பின்னர் கீழ்பகுதி என அமைந்துள்ளது இச்சிலை. சிலை ஏறக்குறைய 10 அடி உயரம் கொண்டது. இச்சிலையின் மேல் ஆங்காங்கே மஞ்சள் குங்குமத்தால் பொட்டு வைத்து பக்கத்தில் மணிகட்டி ஆலய வழிபாட்டு பொருட்களையும் வைத்து எளிமையான முறையில் கோயில் வழிபாட்டினை செய்து வருகின்றனர் இவ்வூர் மக்கள்.

இவ்வூர் மக்களுடன் பேசி அவர்களை இச்சிலை பற்றி விசாரித்த போது பல செய்திகளை அறிந்து கொள்ள முடிந்தது. 

இம்மக்கள் இச்சிலையை கூத்தாண்டவர் சாமி என அழைக்கின்றனர்.  வருடத்திற்கு ஒரு முறை ஆடிமாதத்தில் இங்கே சிறப்பாக திருவிழா எடுத்து விஷேஷ பூஜை செய்து வழிபடுகின்றனர். முப்பூசை எனப்படும் ஆடு, பன்றி, கோழி ஆகியவற்றை பலி கொடுத்து அதனை சமைத்து படையல் செய்து இந்தச் சிலைக்கு வழிபாடு செய்கின்றனர்.  

அபிஷேகத்திற்கு வீட்டிற்கு ஒன்றாக குடங்களில் நீர் எடுத்து வரப்படுகின்றது. இந்த நீரைக் கொண்டு இச்சிலையை அபிஷேகம் செய்து பின்னர் எண்ணெய் சீயக்காய் தேய்த்து சுத்தம் செய்து அலங்கரிக்கின்றனர்.  அபிஷேகம் செய்யும் போது 108 குடங்களை வரிசப்படுத்தி ஏணி வைத்து மேலே ஏறி அபிஷேகம் செய்கின்றனர். 

எண்ணெய் சீயக்காய் கொண்டு சுத்தம் செய்த பின்னர் இச்சிலையை முழுதாக மஞ்சள் குங்குமத்தால் பொட்டு வைத்து அலங்கரிக்கின்றனர்

இந்தக் கிராம மக்களை மேலும் விசாரித்த போது இச்சிலையின் மேல் பகுதியை சிலர் வெட்டி எடுத்து வேறு இடத்திற்குக் கொண்டு சென்று இன்றும் வழிபாட்டிற்கு வைத்திருக்கின்றனர் என்ற செய்தியும் கிடைத்தது. ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு தொல்லியல் ஆய்வுக்காக வந்த ஆய்வாளர்கள் காடுகள் நிறைந்த இப்பகுதியில் ஆய்வுகள் நடத்தி இங்கு கிடைத்த சில பொருட்களை ஆய்வுக்காகவும் பாதுகாப்பதற்கும் எடுத்துச் சென்றுள்ளனர். ஆய்வுப் பணிகள் முடிந்து அவர்கள் சென்ற பிறகு இந்தச் சிலை அங்கேயே இருந்ததால் ஊர் மக்கள் அதனை வழிபடும் இறைவனாகப் பாவித்து இன்று வரை வழிபாடு செய்து வருகின்றனர்.

இந்தச் சிலைக்கு முன் புறத்தில் உள்ள பெரிய நிலத்தில் ஆங்காங்கே சிறிய மேடுகளைக் காண முடிகின்றது. இவை என்னவாக இருக்கும் என விவரம் கேட்டபோது இங்கு வாழ்கின்ற இம்மக்கள் அதற்கான விளக்கம் அளித்தனர். முற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட மன்னர்களோ சிற்றரசர்களோ ஏதாவது ஒரு காரணத்திற்காக இப்பகுதியை விட்டுச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் போது தங்களுக்கு உடனடித் தேவைக்கு மட்டும் கொஞ்சம் பொருட்களை எடுத்துக் கொண்டு ஏனையவற்றை இவ்வகையான ஆழமான குழிகளைத் தோண்டி அவற்றிற்குள் பொருட்களைப் பத்திரமாக புதைத்து வைத்து விட்டுச் சென்று விடுவார்களாம். மீண்டும் தாங்கள் திரும்பி வரும் போது பொருட்களை எடுத்துக் கொள்வார்களாம். காடாக இருந்த இப்பகுதி எதிரிகளிடமிருந்து உடமைப் பொருட்களைப் பாதுகாப்பதற்கும் இவ்வகையில் உதவி இருக்கின்றது. 

இந்திய தொல்லியல் ஆய்வாளர்களின் முயற்சியினால் இந்த இடம் கண்டெடுக்கப்பட்டு இச்சிலை பொதுமக்களுக்குத் தெரிய வந்த பின்னரும் கூட இப்பகுதி முழுமையாக ஆய்வாளர்களால் ஆய்வுக்குட்படுத்தப்படாத நிலை இருப்பது தெரிகின்றது. கடந்த கால தொல்லியல் ஆய்வுகளின் போது இப்பகுதில் இவ்வகையில் காணப்படும் இச்சிறு மேடுகளை ஆய்வாளர்கள் தோண்டி அகழ்வாராய்ச்சி செய்த போது வழிபாட்டுப் பொருட்கள் சில கிடைத்தன என்று இம்மக்கள் சொல்வதிலிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது.  இப்பகுதி ஆய்வுக்குட்படுத்தப் பட வேண்டியுள்ளதால் மாவட்ட ஆட்சியாளர் பொது மக்கள் இம்மேடுகளை தோண்டக்கூடாது என தெரிவித்து கட்டளையிட்டிருக்கின்றனர். அதோடு பொது மக்களுக்கும் இவற்றை ஏதாவது ஒரு வகையில் தொந்தரவு செய்தால் அது கடவுள் குற்றம் என நினைத்து நோய் ஏற்படுவதாக நினைப்பதால் இவற்றை ஏதும் செய்யாமல் ஆங்காங்கே செடிகளை நட்டு பாதுகாத்து வருகின்றனர். மக்களின் இவ்வகை நம்பிக்கையே இப்பகுதியில் மறைந்து கிடக்கின்ற ஏராளமான வரலாற்றுச் சான்றுகளை இன்னமும் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றது என்பதை நேரடியாகக் கண்டு உணர முடிகின்றது.

இத்தகவலோடு ஒரு ஒலிப்பதிவு பேட்டியும் ஒரு விழியப் பதிவும் இணைத்திருக்கின்றேன். இவற்றை மேலும் பல படங்களுடன் காண இங்கே செல்க!


அன்புடன்
சுபா

குறிப்பு: இப்பயணத்தைத் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக ஏற்பாடு செய்தவர் ஸ்ரீமதி சீதாலட்சுமி அவர்கள். சீதாம்மாவுடன், நான், ப்ரகாஷ், திருமதி.புனிதவதி இளங்கோவன் அனைவருமே மதியம் திருவண்ணாமலையிலிருந்து புறப்பட்டு தானிப்பாடி வந்து இங்கு வந்து சேர்ந்தோம்.  நீண்ட தூரப் பயணத்தால் உடல் நலம் குறைந்திருந்த சீதாம்மா அவர்கள் இந்தப் பேட்டியின் போது கலந்து கொள்ள இயலவில்லை. வாகனத்தில் நாங்கள் பேட்டி முடித்து வரும் வரை காத்திருந்தார்கள்.  அவர்கள் வீக்கத்துடன் இருந்த கால் வலியையும் பொறுத்துக் கொண்டு இப்பயணத்தில் என்னுடன் கலந்து கொண்டது மனதை நெகிழ வைக்கின்றது. 

2011/9/15 Subashini Tremmel <ksuba...@gmail.com>
kuthanoor.jpg

Subashini Tremmel

unread,
Sep 17, 2011, 2:18:23 PM9/17/11
to மின்தமிழ், Subashini Kanagasundaram


2011/9/17 Subashini Tremmel <ksuba...@gmail.com>

கூத்தனூர் அப்பன்
..

இத்தகவலோடு ஒரு ஒலிப்பதிவு பேட்டியும் ஒரு விழியப் பதிவும் இணைத்திருக்கின்றேன். இவற்றை மேலும் பல படங்களு..


தவறான இணைப்பினை வழங்கியிருந்தேன்.. கீழுள்ள இணைப்பில் இப்பகுதிக்குச் செல்லலாம்.!

இத்தகவலோடு ஒரு ஒலிப்பதிவு பேட்டியும் ஒரு விழியப் பதிவும் இணைத்திருக்கின்றேன். இவற்றை மேலும் பல படங்களுடன் காண இங்கே செல்க!

சுபா

Subashini Tremmel

unread,
Sep 17, 2011, 2:25:54 PM9/17/11
to மின்தமிழ், Subashini Kanagasundaram
நண்பர்களே,

கூத்தனார் அப்பன் என்றிருக்க வேண்டும். தவறுதலாக கூத்தனூர் என்றாகிவிட்டது. மாற்றி வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். 

2011/9/17 Subashini Tremmel <ksuba...@gmail.com>

rajam

unread,
Sep 17, 2011, 6:56:40 PM9/17/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
நல்ல தகவல்கள்! நன்றி -- சீதாம்மா, சுபா, ப்ரகாஷ், புனிதவதி இளங்கோவன் ... எல்லாருக்கும்!
சுபா, அடுத்த முறை இந்தியா போகும்போது ... ஒரு/பல நல்ல ஒலிபெருக்கி, பதிவுக் கருவிகளை எடுத்துச் செல்லுங்கள். நான் குறிப்பது ... வெளிநாடுகளில் பயன்படுத்தும் ... கழுத்திலோ / கழுத்துப் பட்டையிலோ மாட்டிக்கொள்ளும் ஒலிபெருக்கி (a type of collar microphone). அது இல்லாதது தமிழக ஒலிப்பதிவுகளுக்குப் பெரும் குறை.
1995-இல், தமிழ் மாநாட்டின்போது, நான் வேண்டிய, எனக்குத் தேவையான, சுவரொளியில் கட்டுரையைப் பரப்பும் கருவி அமையவில்லை.
அண்மையில் திரு சுப அண்ணாமலை அவர்கள் பேச்சைப் பதிவு செய்ய முனைந்தபோது தேடினேன். ஒரு lousy microphone கூடக் கிடைக்கவிலை!  ஆனால் ... ஊர் நெடுக எல்லாரும் செல் ஃபோன் பயனர்! என்னத்தைச் சொல்ல? 
Anyway, please do arrange for some hand-held and collar microphones ... the next time you go to தமிழகம்!
அன்புடன்,
ராஜம்
பி. கு. எனக்கு இப்பொ தொலைபேசி வசதி சரியாக இல்லை. நான் ஊருக்குப் போயிருந்தப்போ இங்கே கொஞ்சம் கொழப்பம். எல்லாம் சரியானவுடன் சீதாம்மாவுடன் பேசுகிறேன், இடையில் ஒரு கொசுறுச் செய்தி: எனக்குக் கால் வீக்கம் முதன்முறையாகக் கண்டது 10 ஆண்டுகளுக்கும் முன் இந்தியா போனபோது (2001). அங்கே யாரும் அதைக் கண்டுக்கவில்லை, நான் வலியால் துடித்தபோதும். அமெரிக்கா வந்தவுடன் வீக்கம் ஓடிப்போச்சு. அதே போல ... இந்த முறையும் ... பன்னிக்குட்டி மாதிரி வீங்கத் தொடங்கிய பாதங்கள் முயல் குட்டிகள் போல் ஆயின. யாரும் ஒன்றும் செய்ய முடியலை. பிறகு அமெரிக்கா திரும்பியபோது ... ஹாங்காங் விமான நிலையத்தில் 4 மணிக்கூறு காத்திருந்தபோது காலில் வீக்கம் வடிவதை உணர்ந்தேன்! அதிசயமாக இருந்தது. ஆனாலும் ... காத்திருந்து மீண்டும் விமானம் ஏறி அமர்ந்து கொஞ்ச நேரம் கழித்துத்தான் மெதுவாகக் காலுறையை நீக்கிப் பார்த்தேன் -- நல்ல வியப்புக் காத்திருந்தது. வீக்கம் வடிந்திருந்தது. கலி திரும்பியபின் ... இன்றுவரை காலில் வீக்கம் திரும்பவில்லை (knock on wood!). 

நடக்கும் நிலத்தின் கோளாறோ ... காந்த திசையின் கோளாறோ ... எதுவோ ... புரியவில்லை! எல்லாம் கலிகாலம்! :-)


செல்வன்

unread,
Sep 17, 2011, 8:35:36 PM9/17/11
to mint...@googlegroups.com

விமான பயணத்தின் போது கால் வீக்கம் வரலாம் அம்மா.உங்களுக்கு வந்தது அதுவா என தெரியவில்லை.

What causes leg and foot swelling during air travel?

from Sheldon G. Sheps, M.D.

Leg and foot swelling during air travel is common and typically harmless. The most likely culprit is inactivity during a flight. Sitting with your feet on the floor for a long period causes blood to pool in your leg veins. The position of your legs when you are seated also increases pressure in your leg veins. This contributes to foot swelling by causing fluid to leave the blood and move into the surrounding soft tissues.

To relieve foot swelling during a flight:

  • Wear loosefitting clothing.
  • Take a short walk every hour or so.
  • Flex and extend your ankles and knees frequently while you're seated.
  • Shift your position in your seat as much as possible, being careful to avoid crossing your legs.
  • Drink plenty of fluids to prevent dehydration.
  • Avoid alcohol and sedatives, which could make you too sleepy to walk around the cabin.

Foot swelling isn't a serious problem if it lasts only a short time. But excessive swelling that persists for several hours after you resume activity may be due to a more serious condition, such as a blood clot in the leg (deep vein thrombosis) — especially if the swelling occurs in only one leg and is accompanied by leg pain. If you experience these signs and symptoms, seek prompt medical attention.

If you're at increased risk of blood clots — because you recently had major surgery or you take birth control pills, for example — consult your doctor before flying. He or she may recommend wearing compression stockings during your flight. In some cases, the doctor may prescribe a blood-thinning medication to be taken before departure.

--
செல்வன்


rajam

unread,
Sep 17, 2011, 9:27:54 PM9/17/11
to மின்தமிழ்
On Sep 17, 2011, at 5:35 PM, செல்வன் wrote:

விமான பயணத்தின் போது கால் வீக்கம் வரலாம் அம்மா.உங்களுக்கு வந்தது அதுவா என தெரியவில்லை. 

கால் வீக்கத்துக்குக் காரணம் விமானப் பயணம் மட்டும் இல்லை என்று நினைக்கிறேன் செல்வன். நான் 1974-லிருந்து விமானப் பயணம் செய்துவருகிறேன். முதலில் வீக்கம் தொடங்கியது 2001-இல்தான். வயது காரணமாக இருக்கலாம். ஆனாலும் ... விமானப் பயணம் மட்டுமே கால் வீக்கத்துக்குக் காரணம் என்றால் ... எப்படி அது கீழ்த்திசை நோக்கிப் போனபோது மட்டும் தொடங்கியது? ஏன் அங்கே இருந்த நாட்களெல்லாம் (4, 5.5 மாதங்கள்) நீடித்து இருந்தது? பிறகு மேல் திசைப் பயணத்தின்போது வற்றத் தொடங்கியது? என்றெல்லாம் பார்க்கவேண்டும். எனக்குள்ள கருத்துக்களை இன்னொரு நாள் வேறு இழையில் எழுதுகிறேன்.  இது "திருவண்ணாமலை பதிவுகள்" இழை என்பதால் இனியும் நான் குறுக்கிடக்கூடாது, இல்லையா! :-) சுபா கோபித்துக்கொள்ளக்கூடாது! :-)


Geetha Sambasivam

unread,
Sep 18, 2011, 12:01:28 AM9/18/11
to mint...@googlegroups.com
அருமை சுபா, உங்கள் உழைப்பையும், திறமையையும், இந்த வயதிலும் மோசமான உடல்நிலையிலும் அசராது வந்து அனைத்தையும் காட்டித்தந்திருக்கும் சீதாம்மாவையும், குழுவினரையும் எவ்வளவு பாராட்டினாலும் போதாது.

2011/9/17 Subashini Tremmel <ksuba...@gmail.com>
நண்பர்களே,

கூத்தனார் அப்பன் என்றிருக்க வேண்டும். தவறுதலாக கூத்தனூர் என்றாகிவிட்டது. மாற்றி வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். 


2011/9/17 Subashini Tremmel <ksuba...@gmail.com>


2011/9/17 Subashini Tremmel <ksuba...@gmail.com>

கூத்தனார் அப்பன்
..

இத்தகவலோடு ஒரு ஒலிப்பதிவு பேட்டியும் ஒரு விழியப் பதிவும் இணைத்திருக்கின்றேன். இவற்றை மேலும் பல படங்களு..


தவறான இணைப்பினை வழங்கியிருந்தேன்.. கீழுள்ள இணைப்பில் இப்பகுதிக்குச் செல்லலாம்.!

இத்தகவலோடு ஒரு ஒலிப்பதிவு பேட்டியும் ஒரு விழியப் பதிவும் இணைத்திருக்கின்றேன். இவற்றை மேலும் பல படங்களுடன் காண இங்கே செல்க!

சுபா

Geetha Sambasivam

unread,
Sep 18, 2011, 12:02:28 AM9/18/11
to mint...@googlegroups.com
இது கால்வீக்கம் வாஆஆஆஆஆஆஆஆஆஆரம் போலும்!  ஒருமணி நேரம் அல்லது அதிகமாக உட்கார்ந்து கொண்டே இருந்தால் எனக்குக் கால் பாதங்கள் வீங்கிவிடும். நடக்க ஆரம்பித்தால் சரியாகும்.

2011/9/18 rajam <ra...@earthlink.net>

prakash sugumaran

unread,
Sep 18, 2011, 1:39:06 AM9/18/11
to mint...@googlegroups.com
சிலைக்கு முன் புறத்தில் உள்ள பெரிய நிலத்தில் ஆங்காங்கே சிறிய மேடுகளைக் காண முடிகின்றது. இவை என்னவாக இருக்கும் //
மோட்டூர் கிராமம் ( மூட்டூர் அல்ல )
2011/9/18 Geetha Sambasivam <geetha...@gmail.com>--
prakash sugumaran

visit my blog
http://thamizharkoodu.blogspot.com/
see me at THF Hub
http://image-thf.blogspot.com/

Tthamizth Tthenee

unread,
Sep 18, 2011, 1:46:34 AM9/18/11
to mint...@googlegroups.com
பதிவு ஒன்று கேட்கவில்லை
 
பதிவு இரண்டு நன்றாகக் கேட்கிறது
 
பதிவு மூன்று நன்றாகக் கேட்கிறது
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2011/9/15 Subashini Tremmel <ksuba...@gmail.com>

prakash sugumaran

unread,
Sep 18, 2011, 1:47:25 AM9/18/11
to mint...@googlegroups.com
இது தாய் தெய்வத்தின் வடிவம் என்றும், பறவை கல் என்றும் கூட சொல்லப்படுகிறது. இந்த சிலையின் தலை பகுதி விழுப்புரம் மாவட்டம் கூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் வைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் தான் இந்திய முழுக்க உள்ள அரவாணிகள் ஆண்டுதோறும் ஒன்று கூடி கொண்டாடும் கூத்தாண்டவர் திருவிழா நடைபெறுகிறது.

10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தங்களுக்குள் உள்ள பிடித்த ஒருவரை தேர்ந்தெடுத்து முறைப்படி எல்லா சடங்குகளையும் செய்து திருமணம் செய்து கொள்ளும் அரவாணிகள் இறுதி தினத்தில் கணவர்கள் இறந்து விட்டதாக தாலிகளை அறுத்து எறிவார்கள். ஆணாகவோ, பெண்ணாகவோ வாழ முடியாமல் இரண்டும் கெட்ட நிலையில் இருக்கும் அவர்களின் அழுகை, வேதனை, ஒப்பாரிகளை நேரில் கண்டால் ஒரு ஜென்மத்துக்கு மறக்காது.

2011/9/18 prakash sugumaran <praka...@gmail.com>

Subashini Tremmel

unread,
Sep 18, 2011, 2:23:42 AM9/18/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
மூட்டுர் என்ற பெயர் சரியாக இருக்குமா என்ற சந்தேகம் இருந்தது.. நன்றி ப்ரகாஷ். மாற்றம் செய்து இந்த தகவலையும் உடன் இணைத்து விடுகின்றேன்.

2011/9/18 prakash sugumaran <praka...@gmail.com>--

Subashini Tremmel

unread,
Sep 18, 2011, 2:35:52 AM9/18/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
இப்பதிவைப் பற்றி எழுதும் போது ஒரு சிந்தனை வந்தது..

இந்தக் கூத்தாண்டவர் சாமியும் இதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள சடங்குகள் சம்பிரதாயங்கள் போன்றவையும் ஏறக்குறைய 50 ஆண்டு கால கட்டத்தில் ஏற்ப்படுத்தப்பட்டு மக்கள் மத்தியில் நிலைத்து நிற்பனவாக உருவாகி இருக்கின்றது.  முப்பூசை என்பது, ஆடியில் இந்தச் சிலைக்காக பூசை செய்வது என்பன போன்றவை மக்கள் புதிதாக ஏற்படுத்திய சடங்குகள். இந்தச் சிலையை இங்கு பார்த்த மக்களுக்கு இயற்கையோடு இணைந்து நிற்கும் வித்தியாசமான இந்தத் தோற்றம் ஒரு இறைவடிவமாக மனதில் தோன்ற இதற்கென்று சடங்குகள், பூஜைகள், சில நெறிகள் என உருவாக்கி அதனைக் கடைபிடித்து வருகின்றனர். இயற்கையோடு பிணைந்த கிராமத்து வழிபாட்டு அமைப்பை இக்காலத்திலும் இது போன்ற பகுதிகளில் காண முடிகின்றது.

சுபா

2011/9/18 Subashini Tremmel <ksuba...@gmail.com>

 

Subashini Tremmel

unread,
Sep 18, 2011, 2:42:48 AM9/18/11
to rajam, mint...@googlegroups.com, Subashini Kanagasundaram


2011/9/18 rajam <ra...@earthlink.net>

நல்ல தகவல்கள்! நன்றி -- சீதாம்மா, சுபா, ப்ரகாஷ், புனிதவதி இளங்கோவன் ... எல்லாருக்கும்!
சுபா, அடுத்த முறை இந்தியா போகும்போது ... ஒரு/பல நல்ல ஒலிபெருக்கி, பதிவுக் கருவிகளை எடுத்துச் செல்லுங்கள். நான் குறிப்பது ... வெளிநாடுகளில் பயன்படுத்தும் ... கழுத்திலோ / கழுத்துப் பட்டையிலோ மாட்டிக்கொள்ளும் ஒலிபெருக்கி (a type of collar microphone). அது இல்லாதது தமிழக ஒலிப்பதிவுகளுக்குப் பெரும் குறை.
1995-இல், தமிழ் மாநாட்டின்போது, நான் வேண்டிய, எனக்குத் தேவையான, சுவரொளியில் கட்டுரையைப் பரப்பும் கருவி அமையவில்லை.
ஒலிப்பதிவு தெளிவாக இல்லையா ராஜம் அம்மா? விழியப் பதிவு முழுமையாக செய்ய இயலவில்லை. அதனால் பேட்டி சிறு பகுதி அதிலும் மைக்ரபோன் கேமராவோடு பொறுத்தாமல் என்னுடைய காமராவில் இருந்த மைக்ரபோன் மட்டும் வைத்து செய்தது. பலமான காற்றில் பேச்சில் தெளிவு குறைந்து விட்டது. இதற்கு ஒரு கருவி யோசிக்கிறேன். 

வீடியோ விழியப் பதிவுக்கு மேல் இணைத்திருக்கின்றேன் ஒலிப்பதிவு பேட்டி. அதனை ஒரு முறை சோதனை செய்து விட்டு சொல்ல முடியுமா? ஏனென்றால் இது நான் ப்ரத்தியேகமாக ஒலிப்பதிவுகள் (ஆடியோ மட்டும்) இங்கிருந்து வாங்கிச் சென்ற ஒலிப்பதிவு கருவி.
வீடியோ தெளிவில்லாமல் போய்விடும் என்ற சந்தேகத்தில் தான் தனியாக ஒலிப்பதிவு பேட்டி ஒன்றை முழுமையான பேட்டியையும் இணைத்திருக்கின்றேன். 

சுபா
 
அண்மையில் திரு சுப அண்ணாமலை அவர்கள் பேச்சைப் பதிவு செய்ய முனைந்தபோது தேடினேன். ஒரு lousy microphone கூடக் கிடைக்கவிலை!  ஆனால் ... ஊர் நெடுக எல்லாரும் செல் ஃபோன் பயனர்! என்னத்தைச் சொல்ல? 
Anyway, please do arrange for some hand-held and collar microphones ... the next time you go to தமிழகம்!
அன்புடன்,
ராஜம்
பி. கு. எனக்கு இப்பொ தொலைபேசி வசதி சரியாக இல்லை. நான் ஊருக்குப் போயிருந்தப்போ இங்கே கொஞ்சம் கொழப்பம். எல்லாம் சரியானவுடன் சீதாம்மாவுடன் பேசுகிறேன், இடையில் ஒரு கொசுறுச் செய்தி: எனக்குக் கால் வீக்கம் முதன்முறையாகக் கண்டது 10 ஆண்டுகளுக்கும் முன் இந்தியா போனபோது (2001). அங்கே யாரும் அதைக் கண்டுக்கவில்லை, நான் வலியால் துடித்தபோதும். அமெரிக்கா வந்தவுடன் வீக்கம் ஓடிப்போச்சு. அதே போல ... இந்த முறையும் ... பன்னிக்குட்டி மாதிரி வீங்கத் தொடங்கிய பாதங்கள் முயல் குட்டிகள் போல் ஆயின. யாரும் ஒன்றும் செய்ய முடியலை. பிறகு அமெரிக்கா திரும்பியபோது ... ஹாங்காங் விமான நிலையத்தில் 4 மணிக்கூறு காத்திருந்தபோது காலில் வீக்கம் வடிவதை உணர்ந்தேன்! அதிசயமாக இருந்தது. ஆனாலும் ... காத்திருந்து மீண்டும் விமானம் ஏறி அமர்ந்து கொஞ்ச நேரம் கழித்துத்தான் மெதுவாகக் காலுறையை நீக்கிப் பார்த்தேன் -- நல்ல வியப்புக் காத்திருந்தது. வீக்கம் வடிந்திருந்தது. கலி திரும்பியபின் ... இன்றுவரை காலில் வீக்கம் திரும்பவில்லை (knock on wood!). 

நடக்கும் நிலத்தின் கோளாறோ ... காந்த திசையின் கோளாறோ ... எதுவோ ... புரியவில்லை! எல்லாம் கலிகாலம்! :-)


On Sep 17, 2011, at 11:25 AM, Subashini Tremmel wrote:

நண்பர்களே,

கூத்தனார் அப்பன் என்றிருக்க வேண்டும். தவறுதலாக கூத்தனூர் என்றாகிவிட்டது. மாற்றி வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். 

2011/9/17 Subashini Tremmel <ksuba...@gmail.com>


2011/9/17 Subashini Tremmel <ksuba...@gmail.com>

கூத்தனார் அப்பன்
..

இத்தகவலோடு ஒரு ஒலிப்பதிவு பேட்டியும் ஒரு விழியப் பதிவும் இணைத்திருக்கின்றேன். இவற்றை மேலும் பல படங்களு..


தவறான இணைப்பினை வழங்கியிருந்தேன்.. கீழுள்ள இணைப்பில் இப்பகுதிக்குச் செல்லலாம்.!

இத்தகவலோடு ஒரு ஒலிப்பதிவு பேட்டியும் ஒரு விழியப் பதிவும் இணைத்திருக்கின்றேன். இவற்றை மேலும் பல படங்களுடன் காண இங்கே செல்க!

சுபா


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Subashini Tremmel

unread,
Sep 18, 2011, 4:34:27 AM9/18/11
to மின்தமிழ், Subashini Kanagasundaram
திருவண்ணாமலை பதிவுகள் பகுதியில் இன்று மேலும் ஒரு அங்கம்..செங்கம் பகுதியில் வாழும் லம்பாடி இன மக்கள் பற்றிய செய்தியைப் பகிர்ந்து கொள்கின்றேன். இன்றைய வெளியீட்டில் சிறு விளக்கமும், படங்களும் ஒரு விழியப் பதிவும் உள்ளது. 


லம்பாடி ஆதிக் குடிகள்

lambadi7.jpg


திருவண்ணாமலை வந்து சேர்ந்து மதிய உணவிற்குப் பின்னர் முதலில் நாங்கள் திட்டமிட்டிருந்த படி லம்பாடி இன மக்களைசச் சென்று காணப் புறப்பட்டோம். இவர்களின் குடியிறுப்புப் பகுதி திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள செங்கம் பகுதில் உள்ளது. (வரை படத்தில் செங்கம் ஊரைக் காணலாம்.)


chengam.jpg


லம்பாடி ஆதிவாசி மக்கள் மராட்டிய சத்தாரா பகுதியிலிருந்து தெற்குப் பகுதியில் வந்து குடியேறியிருக்கின்றனர்.  இவர்கள் மராத்தியும் குஜராத்தி மொழியும் கலந்த வகையில் அமைந்த கோரெர் (Gorer) என்னும் ஒரு மொழியைப் பேசுகின்றனர். தற்சமயம இம்மக்கள் தமிழகத்தில் வாழ்கின்ற மக்களோடு கலந்து இச்சூழலுக்கேற்றவாறு தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டுள்ளமையால் இவர்கள் தங்கள் தாய்மொழியை விட தமிழை பேசுபவர்களாக உள்ளனர்.  இளைஞர்களோ குழந்தைகளோ இம்மொழியைப் பேச அவசியம் இல்லாத நிலை இருக்கின்ற காரணத்தால் இம்மொழி இம்மக்களின் அன்றாட வழக்கிலிருந்து குறைந்து தற்சமயம் அரிதாகி விட்ட நிலை இருப்பதை உணர முடிகின்றது. வயதான சில பெண்களும் ஆண்களும் மட்டும் தங்களுக்குள் இம்மொழியில் உரையாடிக் கொள்கின்றனர். 

ஒரு இடத்திலிருந்து வேறொரு இடம் பெயர்ந்து செல்லும் வகையில் தங்கள் கூடாரங்களையும் கையோடு கொண்டு செல்லும் வழக்கம் கொண்டவர்கள் லம்பாடி இன மக்கள். இந்த போக்கும் தற்சமயம் மாற்றம் கண்டுள்ளது. நிலையாக ஒரே இடத்தில் இருந்து அங்கேயே விவசாயம், கைத்தொழில்கள், கூலி வேலை என சிறு சிறு வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர் இம்மக்கள். இதனால் நிலையான் அகுடிசை, சிறு வீடுகள் என்று இவர்களின் அடிப்படை வாழ்க்கையில் சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் சமூகத்து மக்களும் மிகக் குறைந்த் அளவில் பள்ளிக்கூடம் சென்று கல்வி கற்று சற்று மேம்பாடு அடைந்தும் வருகின்றனர் என்பதைக் காண முடிந்தது. 

சிறப்பு பண்டிகைகள் எனும் போது இவர்களுக்கு ஹோலி பண்டிகை முக்கியமானதாக அமைகின்றது.  ஹோலி பண்டிகையை மிக விமரிசையாக ஒவ்வொரு ஆண்டும் இவர்கள் ஒன்று கூடி கொண்டாடி மகிழ்கின்றனர். 

இவர்களின் திருமண முறை மிக எளிமையானது. வித்தியாசமானதும் கூட. இவர்கள் தமிழ் நாட்டுப் பெண்கள் கழுத்தில் அணிவது போன்று தாலி அணிவதில்லை. மாறாக கைகளின் மேல் புறத்தில் தகட்டால் ஆன ஒரு ஆபரணத்தை அணிந்திருக்கின்றனர். கணவனை இழந்த பெண்கள் இதனை அகற்றி விடுகின்றனர்.


விழியப் பதிவையும் படங்களையும் காண இங்கே செல்க..!

லம்பாடி ஆதிக் குடிகள் பற்றி மேலும் சில ஒலிப்பதிவுகளும், விளக்கங்களும் தொடரும்..!

அன்புடன்
சுபா


2011/9/17 Subashini Tremmel <ksuba...@gmail.com>

rajam

unread,
Sep 18, 2011, 1:48:05 PM9/18/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
திறக்க முடியவில்லை!
+++++++++++++++++++++++++++++++++++++++++

http://www.tamilheritage.org/thfcms/index.php?option=com_content&view=article&id=531&Itemid=673

Internal Server Error

The server encountered an internal error or misconfiguration and was unable to complete your request.

Please contact the server administrator, webm...@tamilheritage.org and inform them of the time the error occurred, and anything you might have done that may have caused the error.

More information about this error may be available in the server error log.

Additionally, a 404 Not Found error was encountered while trying to use an ErrorDocument to handle the request.

++++++++++++++++++++++++++++++++++++++++ 

Geetha Sambasivam

unread,
Sep 18, 2011, 8:55:43 PM9/18/11
to mint...@googlegroups.com
இது கிட்டத்தட்ட ராஜஸ்தானின் லம்பாடி இனத்தின் பழக்கங்களை ஓரளவு ஒத்திருக்கிறது.  முக்கியமாய்க் கையில் மேல்புறத்தில் அவர்களும் திருமணமானால் வெள்ளியில் வளையல் போன்றதொரு தகட்டை அணிவார்கள்.

2011/9/18 Subashini Tremmel <ksuba...@gmail.com>
திருவண்ணாமலை பதிவுகள் பகுதியில் இன்று மேலும் ஒரு அங்கம்..செங்கம் பகுதியில் வாழும் லம்பாடி இன மக்கள் பற்றிய செய்தியைப் பகிர்ந்து கொள்கின்றேன். இன்றைய வெளியீட்டில் சிறு விளக்கமும், படங்களும் ஒரு விழியப் பதிவும் உள்ளது. 


அன்புடன்
சுபா


2011/9/17 Subashini Tremmel <ksuba...@gmail.com>
நண்பர்களே,

கூத்தனார் அப்பன் என்றிருக்க வேண்டும். தவறுதலாக கூத்தனூர் என்றாகிவிட்டது. மாற்றி வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். 


Geetha Sambasivam

unread,
Sep 18, 2011, 8:56:58 PM9/18/11
to mint...@googlegroups.com
ராஜஸ்தானி மொழியோ?? ஏனெனில் பல ராஜஸ்தானியரோடும் இவர்கள் சரளமாகப் பேசுவதைக் கண்டிருக்கிறேன்.

2011/9/18 Subashini Tremmel <ksuba...@gmail.com>


லம்பாடி ஆதிக் குடிகள் பற்றி மேலும் சில ஒலிப்பதிவுகளும், விளக்கங்களும் தொடரும்..!

அன்புடன்
சுபா
Subashini Tremmel

unread,
Sep 21, 2011, 4:19:14 AM9/21/11
to rajam, mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
Dr.Rajam Amma,
 
Please try the link once again. It was a temporary server error and It's fixed now.
 
anbudan
Suba
 


 
2011/9/18 rajam <ra...@earthlink.net>

coral shree

unread,
Sep 21, 2011, 5:19:30 AM9/21/11
to mint...@googlegroups.com
அன்பின் சுபா, சீதாம்மா, பிரகாஷ் சுகுமாரன், தங்கள் மூவரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். அருமையான பணி. அழகான படங்கள். வாழ்த்துகள் அனைவருக்கும். 

2011/9/18 Subashini Tremmel <ksuba...@gmail.com>

--

                                                               
                 
மின் செய்தி மாலை படியுங்கள்.
Take life as it comes.

Subashini Tremmel

unread,
Sep 21, 2011, 1:10:27 PM9/21/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
நீங்கள் சொல்வதைப் பார்க்கும் பொது ஒற்றுமை இருப்பது போலத்தான் தெரிகின்றது.  இவர்கள் ஆண் குழந்தைகள் பிறந்தால் அதனையும் பொட்டு என குறிப்பிட்டு கழுத்தில் அணிகின்றனர். ஒஉ ஆண்குழந்தைக்கு ஒரு ஆண் பொட்டு. ஏழு ஆண் குழந்தைகள் என்றால் அதில் ஏழு பொட்டுக்கள் இருக்குமாம். மேலும் விபரங்கள் விரைவில் தொடர்கின்றேன். 

வீடியோ பதிவில் உள்ள இவர்களின் நாட்டியத்தையும் பார்த்தீர்களா ?

சுபா

2011/9/19 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Subashini Tremmel

unread,
Sep 21, 2011, 1:11:41 PM9/21/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
அன்பான வாழ்த்துக்கு நன்றி பவளா. இந்தப் பயணம் முழுதுமே மிக சுவாரசியமான அனுபவம் எனக்கு. 

சுபா

2011/9/21 coral shree <cor...@gmail.com>