த.ம.அறக்கடளை செய்தி

3 views
Skip to first unread message

Subashini Tremmel

unread,
Dec 10, 2009, 2:32:34 PM12/10/09
to மின்தமிழ், ksuba...@gmail.com
நண்பர்களே,

இன்று கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை அவரது புதிய இல்லத்தில் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. பொன்னியின் செல்வன் குழுவின் ஒருங்கினைப்பாளர் திரு.சுந்தர் பரத்வாஜ் அவர்களும் நானும் திரு.வைரமுத்து அவர்களைச் சந்தித்து உரையாடினோம். தமிழ் மரபு அறக்கட்டளை மற்றும் நமது பணிகளை அவருக்கு நாங்கள் விளக்கினோம். நமது நடவடிக்கைகளைக் கேட்டு மிகவும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்த திரு,வைரமுத்து அவர்கள் அவரது வாழ்த்துக்களையும் அன்பினையும் பகிர்ந்து கொண்டார். இந்தச் சந்திப்பு நமது செயல்பாடுகளுக்கு மேலும் உதவும் என்று நம்புவோம்.

அன்புடன்
சுபா 
Mr.Vairamithu.JPG
Mr.Barathwaj Mr.Vairamuthu Suba.JPG
BVS.JPG
Suba + Mr.Vairamithu.JPG

Subashini Tremmel

unread,
Dec 10, 2009, 2:44:11 PM12/10/09
to மின்தமிழ், ksuba...@gmail.com
நண்பர்களே,

சிலை காத்த செம்மல் என்ற சிறப்பினைப் பெற்ற முனைவர் நாகசுவாமி அவர்களை இன்று சந்தித்து த.ம.அறக்கட்டளைக்காக பதிவுகளை மேற்கொண்டேன். அவரது ஆய்வுகள் தொடர்பான் செய்திகள் அடங்கிய சில ஒலிப்பதிவுகள் இதன் வழி சாத்தியமாகியுள்ளன. இவை விரைவில் நமது வலை பக்கத்தில் வெளியிடப்படும். 

சில படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

குறிப்பு: வரும் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு முனைவர் நாகசுவாமி அவர்களது அங்கோர் வாட் (கம்போடியா) ஆலயத்தைப் பற்றிய சொற்பொழிவு  ஒன்று நடைபெற உள்ளது. இது பற்றிய தகவலை நாளை பகிர்ந்து கொள்கிறேன்.

அன்புடன்
சுபா

2009/12/11 Subashini Tremmel <ksuba...@gmail.com>
Suba + Dr.Nagaswamy.JPG
Library (Dr.Nagaswamy).JPG
Suba Dr.Nagaswamy Bharathwaj.JPG

Subashini Tremmel

unread,
Dec 13, 2009, 1:21:11 AM12/13/09
to மின்தமிழ்
நண்பர்களே,

திருவான்மியூர் கூத்துப்பட்டறைக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. திரு.மாலன், திரு.நரசய்யா நான் மூவரும் திரு.முத்துசாமியை சந்தித்து கூத்துப்பட்டறை தொடர்பான பல தகவல்களை பேட்டி கண்டு பதிவு செய்து வந்தோம். அந்த தகவல்களை விரைவில் நமது வலைப்பக்கத்தில் காணலாம். 

அன்புடன்
சுபா

குறிப்பு: வரும் செவ்வாய்கிழமை 15ம் திகதி எனது பேட்டி கலைஞர் தொலகாட்சியில் ஒலிபரப்பாக உள்ளது. காலை 8:00 மணிக்கு 

2009/12/11 Subashini Tremmel <ksuba...@gmail.com>

N. Kannan

unread,
Dec 13, 2009, 6:46:24 AM12/13/09
to mint...@googlegroups.com
இந்த நேர்காணலை யாராவது தொலைக்காட்சியிலிருந்து பதிவு செய்து உன்குழலில்
(YouTube) போடமுடியுமா? பின் அதை நம் வலைப்பதிவில் வலையேற்றிவிட எளிது.

கண்ணன்

2009/12/13 Subashini Tremmel <ksuba...@gmail.com>:

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Reply all
Reply to author
Forward
0 new messages