சோழர் கால 'ஆனைமங்கலம்' செப்பேடுகள் தாயகம் திரும்புகின்றன

29 views
Skip to first unread message

தேமொழி

unread,
May 16, 2026, 10:26:07 PM (4 days ago) May 16
to மின்தமிழ்
சோழர் கால 'ஆனைமங்கலம்' செப்பேடுகள் தாயகம் திரும்புகின்றன
leiden copper plates1.jpg
leiden copper plates2.jpg
leiden copper plates3.jpg
-----------------
 

தேமொழி

unread,
May 16, 2026, 10:34:50 PM (4 days ago) May 16
to மின்தமிழ்
leiden copper plates4.jpg
நெதர்லாந்தில் உள்ள லெய்டன் செப்பேடுகள் (ஆனைமங்கலம் செப்பேடுகள் என்றும் இவை அழைக்கப்படுகின்றன) பற்றிய நேரடி கள ஆய்வை 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நான் மேற்கண்ட போது அங்கு பதிவு செய்யப்பட்ட காணொளி இது. (முதல் கமெண்ட் பெட்டியில் உள்ளது)

இந்த ஆய்வின் பின்னணியில் ஆனைமங்கலம் செப்பேடுகள் என்ற தலைப்பில் எனது வரலாற்று ஆய்வு நூல் 2022 ஆம் ஆண்டு வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதில் விரிவாக இந்த ஆனைமங்கலம் செப்பேடுகள் பற்றியும் தமிழ்நாடு அரசு அதனை மீட்பதற்காக வெளியிட்ட ஆணை பற்றிய செய்திகளும் பதிவாகியுள்ளன.

-சுபா

"மீட்கப்பட வேண்டிய சோழர் காலச் செப்பேடுகள்"
இக்காணொளி ... https://www.youtube.com/watch?v=9EweLRrmKmU
சோழ வரலாறு குறித்த முக்கியமான ஆவணங்களை;
நெதர்லாந்தில் உள்ள லெய்டன் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் சோழர்காலச் செப்பேடுகளான - ஆனைமங்கலச் செப்பேடுகள் எனவும் லெய்டன் செப்பேடுகள் (Leiden Copper plates) எனவும் அழைக்கப்படும் செப்பேடுகளை விவரிக்கிறது.

அன்புடன்
முனைவர். தேமொழி
செயலாளர் - தமிழ் மரபு அறக்கட்டளை

தேமொழி

unread,
May 16, 2026, 10:36:32 PM (4 days ago) May 16
to மின்தமிழ்
leiden copper plates5.jpg

அண்மையில் தமிழக அரசின் சிறந்த வரலாற்று ஆய்வு நூலுக்கான பரிசு பெற்ற  நூல். ஆனைமங்கலம் செப்பேடுகள், அவை எவ்வாறு  நெதர்லாந்துக்குச் சென்றன..? சூளாமணி விகாரை எப்படி உருவானது? அது எப்படி சிதைக்கப்பட்டது? செப்பேடுகள் சொல்கின்ற செய்திகள் யாவை ..?
போன்ற பல செய்திகளை கூறுகின்ற நூல்.
வாசித்து மகிழ  நூலைப் பெறுங்கள்
https://www.commonfolks.in/books/tamil-heritage-foundation

தேமொழி

unread,
May 16, 2026, 10:43:14 PM (4 days ago) May 16
to மின்தமிழ்
 leiden copper plates6.jpg
ஆனைமங்கலம் கோயிலின் இன்றைய நிலை
காணொளி:

சோழப் பேரரசன் முதலாம் ராஜராஜன் நாகப்பட்டினத்தில் சூடாமணி விகாரை கட்டுவதற்காக நிலக்கொடை வழங்கிய ஊர் ஆனைமங்கலம். இந்த ஆனைமங்கலத்தில் மாமன்னன் ராஜராஜன் காலத்து சிவாலயம் ஒன்று பாழடைந்த நிலையில் தற்சமயம் உள்ளது.
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் குழுவினர் கடந்த 2022 - டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி இந்த ஆனைமங்கலம் பகுதிக்கு நேரில் சென்றிருந்த போது கோயிலின் இன்றைய நிலையை ஆவணப்படுத்த பதியப்பட்ட  காணொளிப் பதிவு இது.

leiden copper plates7.jpg

leiden copper plates8.jpg
---------------------




தேமொழி

unread,
May 16, 2026, 10:45:44 PM (4 days ago) May 16
to மின்தமிழ்
leiden copper plates9.jpg
மின்தமிழ்மேடை - அட்டையில் - அக்டோபர் 2021
---
Message has been deleted

தேமொழி

unread,
May 16, 2026, 10:49:13 PM (4 days ago) May 16
to மின்தமிழ்
leiden copper plates5.jpg 

பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பேரவை தோற்றுநர் திரு.சுந்தர் பரத்வாஜ் அவர்களது பதிவு

Financial management for non financial managers என்ற நூலை 30 ஆண்டுகளுக்கு முன் படித்திருக்கிறேன். சிறப்பான தகவல்கள் அடங்கியது. அதிலிருந்தே வரலாற்றாசிரியராக படித்து வராமல் வரலாற்றின் மீது கொண்ட காதலால் வரலாற்றை தேடி அறிந்து நம்முடனும் பகிர்ந்துகொள்ளும் ஆர்வலர்கள் அறிஞர்கள் இவர்களது கருத்து மிகவும என்னை ஈர்க்கும். அந்த வகையில் நமது குழுமத்தில் வழக்கறிஞர் காந்தி..furniture கடை அதிபர் மாரி ராஜன்.. கணினி அறிஞர் தேமொழி போன்றோர் பகிரும் வரலாற்றுத் தரவுகள் மிகவும் என்னை ஈர்க்கும்.. நானும் கட்டிடம் சார்ந்த தொழில் செய்யும் ஒரு வரலாற்று ஆர்வலர்.

இந்த வகையில் பேராசிரியர் நா கண்ணன் --கணினி முனைவர் சுபாஷினி அவர்கள் நிறுவிய நமது தமிழ் மரபு அறக்கட்டளையின் தோற்றமும் வளர்ச்சியும் வியக்கத்தக்கது.. பரந்து விரிந்து பல்வேறு அறிஞர்களையும் உள்ளடக்கி இன்றைய மற்றும் நாளைய பன்னாட்டு இளைஞர்களுக்கு நமது தமிழ் மொழியின் சிறப்பையும் தமிழ் வரலாற்று ஏற்றத்தையும் பகிர்ந்தளித்து தன்னலமில்லாத சிறந்த சமுதாய வளர்ச்சி பணியினை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.

என்னை பொருத்தவரை ராஜராஜன் ஒரு உன்னதத்தின் உச்சியை உடனடியாக நமக்குள் எழுப்பும் தீப்பொறி.

டாக்டர் சுபாஷினி எழுதிய ராஜராஜனின்கொடை மற்றும் தேமொழியின் வரலாற்றில் பொய்கள் நூல்களை புத்தகக் கண்காட்சியில் வாங்கி இருந்தும் படிப்பதற்கு தாமதமாகிவிட்டது ‌. டாக்டர் சுபாஷினியின் ராஜராஜனின் கொடை   நூல் அவரது கணினி பின் புலம் காரணமாக லேஅவுட் திட்டமிடல் - செயல்படுத்தல் எதிர்கால சிந்தனை போன்றவைகளுடன் மிக அருமையாக வெளிவந்திருக்கிறது... இதனை "மாற்றுரைத்து" சொக்கத்தங்கம் என வியக்கிறார் நமது பெருமதிப்பிற்குரிய தஞ்சைப் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் செல்வகுமார் அவர்கள்.. அப்படி என்ன எழுதி இருக்கிறார்கள் என்று பார்க்க படிக்கத் துவங்கினால் பிரமித்துப் போகிறோம்... ராஜராஜனின் கொடை அண்மைக்கால ஆய்வு அறிஞர்களின் பெரும் கொடையை உள்ளடக்கிய சிறப்பான முன்னெடுப்பு.. இனி அந்த நூலைப் பற்றிய எனது பார்வையை பகிர்ந்து கொள்கிறேன்.

ராஜராஜனின் கொடை.. எளிமையான தலைப்பில் தமிழ் மரபு அறக்கட்டளை நிறுவுனர் டாக்டர் சுபாஷிணியின் கருத்தாழம் கொண்ட ஆய்வுப் பேழை. செய்வன திருந்தச் செய் என்ற கொள்கை பிடிப்பில் தீவிரமானவராய் ஒளிர்கிறார்.  கணினி சார்ந்த ஆய்வுப் பட்டம் பெற்ற சுபாஷிணி‌ - முனைவர் தேமொழி போன்றோரின் பார்வை - விருப்பு வெறுப்பற்ற - சுத்திகரிக்கப்பட்ட - தமிழ் கூறும் நல்லுலகம் சார்ந்த சமகால வரலாற்று பார்வை. பதிப்புரையிலேயே அசத்துகிறார் முனைவர் தேமொழி. அணிந்துரையில் அருமையான கருத்துக்களை உதிர்க்கிறார் தஞ்சை பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் செல்வகுமார் அவர்கள்.

உலகத்தமிழ் மாநாட்டை ஒட்டி டாக்டர் எம்ஜிஆர் அவர்களால் நிறுவப்பட்ட தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் தமிழக வரலாற்றிற்கு பெரும் பங்களிப்பை  ஈந்துள்ளது. குறிப்பாக மதிப்பிற்குரிய பேராசிரியர் முனைவர் ராஜவேல் அவர்கள். முனைவர் ஜெயக்குமார் ‌, முனைவர் செல்வகுமார் காலஞ்சென்ற எனது அருமை நண்பர் அதியமான் ஆகியோரின் பங்களிப்பு போற்றத் தகுந்தது.. அதிலும் டாக்டர் ஜெயக்குமார் அவர்களின் நாகப்பட்டினம் புத்த விகாரம் குறித்த கடல் சார்ந்த ஆய்வுத் தகவல்கள் மிகவும் சிறப்பானவை.  சிங்கப்பூரில் நடந்த தமிழக வரலாற்று ஆய்வு மாநாட்டுக் குறிப்புகள் " நாகப்பட்டினம் - சுவர்ணதீபம்" என்ற தொகுப்பாக ஆங்கிலத்தில் வெளியானதில் டாக்டர் ஜெயக்குமார் அவர்களின் சூடாமணி விகார ஆய்வுக் கருத்துகளும் அடக்கம். அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய தகவல் களஞ்சியமான இத்தகைய ஆய்வு கருத்துக்கள் பலரையும் சென்று சேரவில்லையே என்ற கவலை என்போன்ற வரலாற்று ஆர்வலர்களுக்கு இருந்து வந்தது.. அதனை துடைத்தெறிந்து கடந்த 30 ஆண்டுகளுக்குள் தமிழக வரலாறு - குறிப்பாக சோழ வரலாறு - அதிலும் ராஜராஜன் - ராஜேந்திரன் -குலோத்துங்கன் ஆகிய மன்னர்களின் பௌத்தம் சார்ந்த கொடைகளை தேர்ந்தெடுத்து அவை அடங்கிய பெரிய லெய்டன் - சிறிய லெய்டன் செப்பேடுகளை - அவை பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ள நெதர்லாந்து பல்கலைக்கழகத்தின் அனுமதியுடன் ஆய்வு செய்து அருமையான புகைப்படங்களுடன் சுவைமிக்க வரலாற்றுத் தரவுகளை நமக்காக தொகுத்து பகிர்ந்துள்ளார் டாக்டர் சுபாஷிணி அவர்கள்.

பொ.ஆ. 1006ல் ஸ்ரீவிஜய வணிக குழுக்களின் பௌத்தமத வழிபாட்டிற்காக நாகப்பட்டினம் அருகே ஆனைமங்கலம் என்ற கிராமம் இறையிலியாக ராஜராஜனால் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவிஜய அரசர்கள் அங்கு ஒரு புத்த விகாரம் எழுப்பி வழிபட்டனர். ஸ்ரீவிஜயம் மற்றும் சீன வணிகர்கள் நாகப்பட்டினம் பின் இலங்கை என பௌத்த யாத்திரை மேற்கொண்டனர். ஆயினும் ஸ்ரீவிஜய மன்னர்கள் சீனப் பேரரசரிடம் சோழ மன்னர் பரம்பரை தங்களுக்குள் அடங்கியது என்ற வகையில் திரித்துக் கூறிய தகவல்கள் மாமன்னன் ராஜேந்திர சோழனின் செவிகளை எட்டியது. எனவே 1018ல் ஸ்ரீவிஜயத்தின் மீது படை எடுத்து அதனை  சோழப்பேரரசின் சிற்றரசாக ஒடுக்கினான். இதற்கான கல்வெட்டு ஆதாரம் தமிழகத்தில் கிடையாது. ஆனால் சீன வரலாற்று  பதிவுகளில் உள்ளது.

இவை போன்ற புதிய தரவுகளை சாஸ்திரி - பண்டாரத்தார் போன்ற அறிஞர்களுக்கு பிறகு வரலாற்றறிஞர் மகாலிங்கம்‌ TN ராமச்சந்திரன் மயிலை சீனி வேங்கடசாமி முனைவர் ஜெயகுமார் போன்றோரின் அண்மைக்கால ஆய்வுகளை தொகுத்து எடுத்து சிறப்பாக வழங்கியுள்ளார் டாக்டர் சுபாஷிணி அவர்கள். தொடர்ந்து தமிழகம் வந்து இத்தகைய லெய்டன் செப்பேடுகள் கண்டிப்பாக தமிழகம் வந்து சேர வேண்டும் என்ற கோரிக்கையையும் தமிழக தொல்லியல் துறை அமைச்சரிடம் கொடுத்து அது தமிழக அரசு மானிய கோரிக்கை அரசாணையாக இடம் பெற்றுவிட்டது.. தொடர்ந்து நெதர்லாந்து அரசும் காலனியாதிக்க நாடு வேறு நாட்டிலுள்ள தனது கலைச்செல்வத்தை முறையாக உறுதி செய்தால் கோரிக்கை விடுக்கும் நாட்டிற்கு கொடுப்பதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்ய ஒரு குழு  அமைத்துள்ளது  நமக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது.

பன்னாட்டு அமைப்பான தமிழ் மரபு அறக்கட்டளையின் நிறுவுனர் டாக்டர் சுபாஷிணி அவர்களின் செய்வன திருந்தச் செய் என்ற கோட்பாட்டினால் லெய்டன் செப்பேடுகள் ஒரு நாள் சென்னை வந்து சேரும் என்பதில் நமக்கு ஐயமில்லை...  டாக்டர் சுபாஷிணி அவர்கள் வருடிப் பார்த்து மகிழ்ந்த அந்த செப்பேடுகளை ஆயிரமாண்டு இன்ப நினைவலைகளுடன் நாமும் வருடி பார்க்கும் நாள் இதோ வந்து கொண்டே இருக்கிறது. அவரது எழுத்திற்கும் செயல்பாட்டிற்கும் நமது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏 சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏🙏

தேமொழி

unread,
May 16, 2026, 10:50:54 PM (4 days ago) May 16
to மின்தமிழ்
leiden copper plates5.jpg 

அருள் மெர்வின் பதிவு - 21.7.2022


ராஐராஐனின் கொடை

எங்கள் ஊர்ப்பக்கத்தில் கோவில் திருவிழாக்களை ‘கொடை’ என்பார்கள். பெரும்பாலும் கோவில் நிலங்கள், கோவில்களுக்கான வரி விலக்குகள், கோவில் பராமரிப்புகள் யாராவது கொடையாக கொடுத்ததாக இருக்கும். பெரும்பாலும் மன்னர்கள். அப்படி கொடை கொடுத்ததைக் கொண்டாடும் பழக்கம் பலகாலமாக இருந்திருக்கிறது. கடைசியில் கொடை மட்டும் கொண்டாடப்படும், கொடுத்தவர் யாரென்று மக்கள் மறந்துவிடுவார்கள்.

‘விகாரமன உருவம்’ என்பது தமிழில் உபயோகிக்கப்படும் சொற்றொடர். அசிங்கமாக இருக்கிறான் என்ற அர்த்தத்தில். பௌத்தம், சமணம் சம்பந்தப்பட்ட வார்த்தைகள் பல இன்று தமிழில் இழிச்சொற்களாக வலம் வருகின்றன. ஏகப்பட்ட உதாரணங்கள் உண்டு. அவற்றில் ஒன்று ‘விகாரம்’.  விகாரை, விகாரம் என்பவை பௌத்த பிக்குகள் தங்கியிருந்த இடம்.

ராஜராஜ சோழர் ஒரு ‘கொடை’ கொடுத்திருக்கிறார். நாகப்பட்டினத்தில் ஒரு பௌத்த ‘விகாரை’ கட்ட. அவர் என்ன கொடுத்தார் என்பதை ஒரு முப்பது கிலோ எடையுள்ள செப்பேட்டில் சாசனமாக அப்போதே எழுதியிருக்கிறார்கள். எப்படி அந்த காலங்களில் செம்மறி ஆடு எடை உள்ள செப்பேடுகளைக் கையில் தூக்கி வாசித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. அந்த சாசனத்தில் எழுதப்பட்டிருக்கும் ஒரு வரி, “ஆதிசேஷன் இந்த உலகத்தைத் தாங்குகிற வரையிலும் இந்த விகாரைக்குக் கொடுக்கப்பட்ட இந்தத் தானம் நிலைபெறுவதாக.”

இப்போது அந்த செப்பேடும் இல்லை. அவர் கொடுத்த விகாரையும் இல்லை. நிற்க, செப்பேடு நெதர்லாந்தில் உள்ளது. நாகப்பட்டினத்திலிருந்த விகாரை இடிக்கப்பட்டுவிட்டது.

சிவபக்தர் என்று சொல்லப்படுபவர், தஞ்சை பெரிய கோவில் கட்டியவர் நாகப்பட்டினத்தில் பௌத்த விகாரை கட்ட ஏன் கொடை கொடுத்தார்? செப்பேடு எப்படி நெதர்லாந்து சென்றது? விகாரை யாரால் இடிக்கப்பட்டது?

இந்த செப்பேடுகளைத் தேடி நெதர்லாந்து செல்வதிலிருந்து ஆரம்பிக்கிறது, ‘ராஐராஜனின் கொடை’ என்ற புத்தகம். ஃப்ளாஷ்பேக் சுற்றுகிறது.  தெற்காசியத் தீவுகளை (மலேசியா, கம்போடியா, ஜாவா, சுமத்தரா மற்றும் பல எட்டாங்கிளாஸில் ஹிஸ்டரி டீச்சர் சொல்லிக் கொடுத்த தீவுகளை) ஆண்ட பௌத்த மன்னனுடன் நட்புறவைப் பேண, தமிழ் பௌத்தத்தைக் காப்பாற்ற இந்தக் கொடையை அளிக்கிறார் ராஜராஐ சோழர். பிரம்மாண்டமான விகாரை எழுப்பப்படுகிறது. அதற்கான வணிக, மத காரணங்கள் பின்புலத்தில். செப்பேடு எழுதப்படுகிறது. ராஜேந்திர சோழர் ஆட்சிக்கு வருகிறார். அரசியல் மாறுகிறது. சீனா மூக்கை நுழைக்கிறது. அரசியல்-வியாபார சதிகள் அரங்கேறுகின்றன. ராஜராஜ சோழர் எந்த தெற்காசியத் தீவுகளின் அரசுக்காக விகாரை கட்டினாரோ அந்தத் தெற்காசியத் தீவுகளைத் தாக்கிக் கைப்பற்றி சோழர்களின் கடல் மேலாண்மையை நிரூபிக்கிறார் ராஜேந்திர சோழர். கடாரம் கொள்கிறார். அடுத்து குலோத்துங்கச் சோழர் ஆட்சிக்கு வருகிறார். தெற்காசியா இன்னும் சோழர்கள் கைவசம்தான். பௌத்த விகாரைக்கான கொடை தொடர இரண்டாவது செப்பேடு எழுதுகிறார் குலோத்துங்கச் சோழர். பிளாஷ்பேக் பாஸ்ட் ஃபார்வேர்ட் ஆகிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டு. கடல் கடந்து ஆட்சி செய்த சோழர்களும் இல்லை, கடல் கடந்து பரவிய பௌத்தமும் இல்லை தமிழ்நாட்டில். செப்பேடுகளை டச்சுக்காரர்கள் நெதர்லாந்து கொண்டுபோய்விட்டார்கள். பௌத்தவிகாரை பரிதாபமாக நின்று கொண்டிருக்கிறது நாகப்பட்டினத்தில். பிரஞ்சு கத்தோலிக்க மிஷனரிகள் அதை இடித்து பக்கத்தில் கல்லூரி கட்டுகிறார்கள். பிளாஷ்பேக் முடிகிறது. நமக்கு கண்ணீர் வருகிறது நம் வரலாற்றை நினைத்து.

பொன்னியின் செல்வன் போன்ற எது உண்மை எது ஃபிக்‌ஷன் என்று தெரியாத விஷயங்களைக் கஷ்டப்பட்டு படமாக எடுத்து வருபவன் போவனிடத்திலெல்லாம் பேச்சுவாங்குவதை விட முனைவர் க. சுபாஷிணியின் ‘ராஐராஜனின் கொடை’ புத்தகத்தை வைத்து விறுவிறுப்பான திரைக்கதை எழுதி முழுநீள படத்தை எடுக்கலாம். அவ்வளவு சுவாரசியம் இருக்கிறது. அத்தனைக்கும் ஆதாரம் உள்ளது. பாதி புத்தகம் பின்னிணைப்புதான். ராஜேந்திரச் சோழரும், குலோத்துங்கச் சோழரும் தொட்ட செப்பேட்டையே கையில் தொட்டுப் பார்த்திருக்கிறார்கள்.

https://www.commonfolks.in/books/d/rajarajanin-kodai

தேமொழி

unread,
May 16, 2026, 10:53:20 PM (4 days ago) May 16
to மின்தமிழ்
leiden copper plates5.jpg 

அர்ஷா
10.12.2023

ராஜராஜனின் கொடை

உலகெங்கும் தமிழர்கள் வாழ்கிறார்கள்  இன்று,  காரணம்  ஈழத்துப்போர்  அவர்கள் சென்ற வழித்தடங்கள் மிகவும் ரத்தகரை படிந்தது. இரண்டாம்  தலைமுறை தம் கால்களில் நிற்க ஆரம்பித்த பிறகுச் சற்று ஆசுவாசக் கொள்கிறோம்.

இன்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பாக, சீனா ஜப்பான், கொரியா,மீயான் மார்க், லாவோஸ், வியட்நாம், கம்போடியா, தாய்லாந்து, மலாய் தீவுகள், என மத்திய கிழக்காசிய நாடுகளைத் தாண்டி நம் முன்னோர்கள் தமிழ் மொழி பண்பாடு  தாம் பின்பற்றிய மதங்களையும் பல்வேறு நாடுகளுக்கு சென்றடைய காரணமாக இருந்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியம் கலந்த  மகிழ்ச்சி.

பள்ளிக்காலத்திலேயே வரலாறு பாடப்புத்தகத்தை  பள்ளிக்கல்வித்துறை சேர்த்து இருந்தது.   நான் படித்த வரலாற்றுப் புத்தகங்கள் முழுவதும் ஆட்சி முறைகள்,  மன்னர்களைக் குறித்தது. அந்த வரலாற்றுப் புத்தகங்கள் முழுவதுமாக  ஒருவரை வெறிகொண்டு  தாக்கி கொலை செய்து ஆட்சியைக் கைப்பற்றிய வரலாறுகளாக இருந்தன. மேலும் அவை கற்பனை மிகுந்த புனைவுகளையும் கொண்டிருந்தது அதனால் எதை நம்புவது எதை விடுவது என்று சந்தேகத்தில் வரலாற்றுப் பதிவுகளைப் படிக்கும்போது எப்போதுமே முழுமைய நம்பிக்கை வருவதில்லை.  

சோழ மன்னர்களின் ஆட்சி இலங்கை வரை நீடித்திருந்ததையும், சோழப் பேரரசு இலங்கையிலிருந்து மிகப்பெரிய செல்வங்களை அங்கிருந்து சூறையாடி வந்தார்கள்  என்ற கதைகள்   உண்மைதானா என்று அறியும் ஆவல்  எப்போதும் எனக்கு இருக்கிறது.

2000 ஆண்டுகளுக்கு முன்பாக செல்வம் கொழித்த நாடா இன்று,  பசியிலும் பஞ்சத்தாலும் வாடுகிறது, அன்றைய காலத்தில் தமிழன்  அங்கு இருந்திருந்தால்  இன்று 200 ஆண்டுகளுக்கு முன்பாக சென்ற தமிழினம் அவர்களை  சந்திக்கவே இல்லையா என்று எத்தனையோ கேள்விகள் எழும்போது வரலாற்றை மீண்டும் தேடுகிறோம்.

இலங்கையின் வரலாற்று புத்தகங்களை படிக்கும் போது, அவை பல குழப்பங்களை கொண்டு வரும்  சில பெயர்கள் மீண்டும் மீண்டும் வரும் ஆனால் மிக நீண்ட காலம் வித்தியாசம் இருக்கும் அப்படியானால் அவன் இருந்திருப்பான் இவன் புதியவனாக இருக்க வேண்டும் புதியவனுக்கு ஏன் அவன் பெயரை வைத்தார்கள், ஒருவனுக்கே பல பெயர்கள் இருக்கும். குழப்பங்களை தாண்டி தீர்வுகளை தேடுவது தானே வாழ்க்கை அந்த வகையில் சமீபத்தில் படித்த மிக முக்கியமான ஒரு நூலாக ராஜராஜனின் கொடையை நான் பார்க்கிறேன். முனைவர் சுபாஷினி அவர்களால் எழுதப்பட்டு தமிழ் மரபு அறக்கட்டளை வழியாக வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை கடுமையான மழையில்  மூழ்கி இருந்தபோது என்னை முழுவதுமாக மூழ்கடிக்க செய்த நூல்.
பக்கத்திற்கு பக்கம் ஏகப்பட்ட தகவல்கள் அத்தனையும் ஆதாரங்களோடு குறிப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று பேனாவையும் டைரியும்  பக்கத்தில் வைத்துக் கொண்டேன்.  எதை எடுப்பது எதை விடுவது என்று தெரிந்து கொள்ள முடியாத அளவிற்கு வரிக்கு வரி தகவல்கள் நிறைந்ததாகவே இருந்தது இந்த புத்தகமே ஒரு குறிப்பு தான். இந்த குறிப்பேட்டை வைத்துக்கொண்டு தேடிப் படிக்க அறிந்து கொள்ள நிறைய இருக்கின்றன என்பதை  வாசிப்பின் ஓட்டத்தில் உணர்ந்து கொண்டேன்.

 ராஜராஜ சோழன் என்றால் அனைவருக்கும் ஒரு தனித்த உணர்வைத் தரும். சிலருக்கு அவன் மீது கோபம் பலருக்கு அவன் மீது காதல்.

தலைவனுக்கு உரிய சகல பண்புகள் நிறைந்த ஒருவனாக ஆட்சியும் எல்லைக்கோட்டை தமிழகம் இந்தியா என்ற வட்டத்துக்குள் வரையாமல்  தன் விடாமுயற்சி  நேர்த்தியான திட்டமிடலால்  உலகெங்கும் பரவச் செய்த ஒருவன்.

 "ராஜராஜனின் கொடை"  என்ற இந்த நூலில், மொத்தம் ஒன்பது கட்டுரைகள்  அவை விஜயநகர பேரரசு நாகப்பட்டினம் சூளாமணி பன்ம விகாரை  சோழர் செப்பேடுகள் சோழர்களின்  கடாரப் படையெடுப்பு ஆனைமங்கல செப்பேடுகளுக்கும் கடாரப்படையெடுப்புக்கும் இடையிலான விவரிப்பு,  இவை தாண்டி  இங்க இருக்க வேண்டிய பரபரப்பாக பேசப்பட்ட  பெரிய லைய்டன் செப்பேடுகள் சிறிய  லெய்டன்  செப்பேடுகள்   நெதர்லாந்துக்கு சென்ற பின்னணி  செப்பேடுகள் கூறும் தகவல்கள் வரிக்கு வரி என்னென்ன  என்பது குறித்தெல்லாம் மிக விவரமாக கூறப்பட்டுள்ள  நூலாக அமைந்திருக்கிறது.

 நூலின் ஆசிரியர் ஆனைமங்கல செப்பேடுகள் பற்றி அறிந்ததும்  அவை எங்கு இருக்கின்றன என்ற ஆராய்ச்சியில் மூன்று ஆண்டுகளாக தேடி  இறுதியில் அவை நெதர்லாந்து நாட்டில் உள்ள லெய்டன்  பல்கலைக்கழக நூலகப் பிரிவினரால்  பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்பதை அறிந்தவுடன், அவர்கள் அனுமதியோடு நேரில் சென்று ஆனிமங்கல செப்பேடுகளை  பார்வையிட்டு அதனை பல மணி நேரங்கள் செலவு செய்து  குறிப்புகளாக இப்ப புத்தகத்தில்  தந்துள்ளார்  படிக்கும் போது ஆச்சரியமாகவும் பெரும் மகிழ்ச்சியாகவும் பெருமை நிறைந்த தருணம் ஆகவும் இருந்தது அந்தப் பக்கங்கள். அவற்றோடு நிறுத்திக் கொள்ளாமல் ஆசிரியர் தொடர்ச்சியாக  தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஆணைமங்கல செப்பேடுகளை தம் தாய் நாட்டுக்கே கொண்டு சேர்க்க வேண்டும் என்ற பேரவாவில்  உடனடியாக தமிழக அரசோடு தொடர்பு கொண்டு  அதனை சட்டரீதியாக எடுத்து வரும் முயற்சியிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் என்பன குறித்த தகவல்களையும் கட்டுரைகள் படிக்கும் போது  புல்லரிக்கச் செய்தது உண்மை.

அன்றைய தமிழர்கள்  இரண்டு காரணங்களுக்காக கடல் கடந்து பிற நாடுகளில் சென்றடையும் பயணத்தை தொடங்கி இருக்கிறார்கள்.   முதலாவது காரணம் தம் மதங்களை பரப்புவது,  அது அன்றைய சூழ்நிலையில் பௌத்த மதமாக இருக்கலாம். இரண்டாவது முக்கிய காரணம் மிகவும் ஆளுமை நிறைந்த வணிகர்களைக் கொண்டிருந்த  தமிழ்ச் சூழல்,  ஐரோப்பா மத்திய கிழக்காசிய நாடுகளை மட்டும் இன்றி இந்தோனேசிய நாடுகளுக்கும் மலாய் தீவுகளுக்கும் தொடர்ச்சியாக மிக நீண்ட காலமாக  வணிக நிமிர்த்தமாக  சரளமாக போய்வந்திருக்கிறார்கள்.

செப்பேடுகளை ஆராயும் போது, இந்த வணிகப் பயணத்திற்கு  மிகவும் அதிகமாக விஜயநகர பேரரசு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான பெரும்பாலமாக மையப் பகுதியாக துறைமுகங்களைக் கொண்ட நகரமாக விளங்கி இருப்பதுஅதற்கு ஒரு காரணம்.

 திருகோணமலையில் இயற்கை துறைமுகத்தை கொண்ட இலங்கை இன்று எங்கனம்  வணிக போக்குவரத்துக்கு முக்கிய இடமாக பங்களிப்பு செய்கிறதோ அதுபோல இது என்று புரிந்து கொள்ளலாம்.

 அதேபோன்றுதான் நாகப்பட்டினம் துறைமுக நகரம் என்றே சொல்லும் அளவிற்கு மிக நீண்ட காலமாக வணிக மையமாகவும் பௌத்த சமய மையமாகும் நாகப்பட்டினம் திகழ்ந்து இருக்கிறது. நாகப்பட்டினம் கட்டுரை வழியாக அறிய முடிகின்றது அதேபோல் நூலாசிரியர் அங்கு அகழாய்வின்போது கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு பல்வேறு அகழாய்வு பொருட்கள் எங்கு பாதுகாக்கப்படுகின்றன அல்லது காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன என்பது குறித்த கேள்விகளையும் எழுப்பி இருக்கின்றார்.

 இந்த நூலின் முக்கிய பொருள் ஆணைமங்கல சொற்பொழிவுகள்  செப்பேடுகள் என்ன கூறுகின்றன என்பதிலிருந்து தான் முக்கியம் பெரும் மற்ற விஷயங்களை ஆராகின்றார்கள்.. அந்த வகையில் சூளாமணி பன்ம விகாரை மிக முக்கிய இடத்தை வகிக்கிறது, பெரிய லெய்டன் செப்பேடுகளில் சூளாமணி பன்வகாரை குறித்த பல்வேறு தகவல்களை அறிய முடிகிறது, இது மிக முக்கியமான ஆதாரங்களாக பார்க்கப்பட வேண்டியது மாமன் ராஜராஜ சோழன் காலத்தில் ஸ்ரீ விஜய பேரரசுக்கும் சோழ பேரரசுக்கும் நட்புறவு இருந்ததையும் அதனை அவர்கள் செப்பு சாசனம் மூலம் உறுதி செய்து கொண்டதையும் விளங்கிக் கொள்ள முடிகிறது.

 தொலைந்த பொருள் மீண்டும் கிடைக்கும் போது மிகப்பெரிய சந்தோஷம் ஏற்படும் அந்த பொருளை புதிதாக வாங்கிய போது கிடைத்ததை விட, ஏற்கனவே இருந்த பொருள்  மீண்டும் கிடைத்தது புதிதாக எந்த வரவும் இல்லை ஆனாலும் மகிழ்ச்சி வார்த்தைக்குள் உள்ளடக்க முடியாத ஒன்றுதான்  அப்படித்தான் ஆனைமங்கல செப்பேடுகள்  நெதர்லாந்தில் கிடைக்கப்பெற்ற போது ஆய்வாளர்களுக்கு இருந்திருக்கும் என்று என்னால் உணர முடிகிறது. அந்த சிப்பெடுகள் நெதர்லாந்துக்குச் சென்ற பின்னணி மிகவும் சுவாரசியமான கதை. ஹெச் ஏ ஹமாகர் பற்றிய கதை.

 நூலாசிரியர் செப்பேடுகளை பார்த்ததோடு தன் கடமையை முடித்துக் கொள்ளாமல்  அதனை வரிக்கு வரி மொழிபெயர்த்துள்ளார் அதனையும் நூலில் காண முடிகிறது

 சோழர்களின் கடாரப் படை எடுப்பின் போது சுங்க வரி செலுத்திய விபரங்கள் சோழப் பேரரசின் வணிகக் குழுவை வரவேற்று 81 ஆயிரத்து 800 பணமும் 5,200 டன் வெள்ளியும் பரிசாக அளித்தது என்ற செய்தி வாசிக்கும் போதே ஆச்சரியத்தை தந்தது.

 தெற்காசிய நாடுகளில் கிடைத்த தமிழ் கல்வெட்டுகள் சிலவற்றை குறித்த விபரங்கள் புகைப்படங்களோடு எழுதப்பட்டுள்ளன அவை பெரும்பாலும் வணிக செயல்பாடுகள் குறித்த விளக்கங்களை  ஆதாரங்களே கொண்டிருக்கின்றன என்பது  நம் வணிக மேலாண்மை குறித்த பல்வேறு செய்திகளை அறிய பயன்படுகிறது

 நூலில் இலங்கை ஆதி குடிமகன் யாராக இருந்திருக்க முடியும் என்பது குறித்து ஆராய்ச்சிகளை வாசிக்கும் போது பல கேள்விகளுக்கான விடை கிடைக்கின்றது.

 நூல்  பல்வேறு தேடல்களுக்கான நுழைவுச்சீட்டு ஆக எழுதப்பட்டிருக்கின்றது  இதனை எடுத்துக் கொண்டு நாம் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளலாம்  அரை மனநிலை சந்தேகங்களுக்கு விடை அளிக்கிறது  அனைவரும் படிக்க வேண்டிய  தேடல்களுக்கான ரூட் மேப் என்று சொல்லலாம்.

 அனைவரும் வாங்கி படிக்க வேண்டிய  முக்கியமான  நூல்.  ஆசிரியருக்கு பேரன்புகள் பெரும் கடமைப்பட்டவர்கள் நாங்கள் உங்களுக்கு🙏🏽❤️


Reply all
Reply to author
Forward
0 new messages