தமிழகத்து கிராம தெய்வங்கள் - குலதெய்வங்கள்

3,890 views
Skip to first unread message

Subashini Tremmel

unread,
Mar 17, 2011, 1:05:08 PM3/17/11
to மின்தமிழ், Subashini Kanagasundaram
1.பெரியாச்சி
 
தஞ்சாவூர் மாவட்டத்தில் திருத்தரைபூண்டி தாண்டி நாகப்பட்டினம் செல்லும் வழியில் தலைஞாயிறு கிராமத்தில் ஒரு ஐயனார் ஆலயம் இருக்கின்றது. இந்த ஆலயத்தில் சில வித்தியாசமான கிராம தெய்வ வடிவங்களைப் பார்த்தேன்.  அதில் ஒன்று பெரியாச்சி தெய்வம்.
 
periyachi.jpg

இத்தெய்வத்திற்குப் பலி கொடுப்பதற்காக ஒரு சேவல் ஒன்றினை பிரகாரத்தின் வாசலிலேயே ஒரு மஞ்சள் கயிறு கட்டி  வைத்திருக்கின்றார்கள். இத்தெய்வத்திற்குக் கரிய நிறத்திலான புடவை அணிவித்திருக்கின்றார்கள். பெரியாச்சியின் பாதத்தில் ஒரு மனிதனின் சிலை ஒன்று இருக்கின்றது. இத்தெய்வ வழிபாட்டைப் பற்றிய தகவல் அறிந்தவர்கள் இந்த இழையில் தொடருங்கள்.
 
அன்புடன்
சுபா

periyachi.jpg

coral shree

unread,
Mar 17, 2011, 9:48:05 PM3/17/11
to mint...@googlegroups.com
அருமை சுபா. தொடருங்கள். நன்றி.

2011/3/17 Subashini Tremmel <ksuba...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--

மின் செய்தி மாலை படியுங்கள்.
Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

periyachi.jpg

LK

unread,
Mar 17, 2011, 9:49:39 PM3/17/11
to mint...@googlegroups.com
பொதுவாக நெறைய கிராமத்துத் தெய்வங்களின் காலடியில் இப்படிப்பட்ட ஒரு மனிதத் தலை இருப்பதைப் பார்க்கலாம் 

2011/3/18 coral shree <cor...@gmail.com>

--
Thanks and Regards
Karthik L
http://lksthoughts.blogspot.com

periyachi.jpg

N. Ganesan

unread,
Mar 17, 2011, 10:22:05 PM3/17/11
to மின்தமிழ்
On Mar 17, 12:05 pm, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
> பெரியாச்சியின் பாதத்தில் ஒரு
> மனிதனின் சிலை ஒன்று இருக்கின்றது. இத்தெய்வ வழிபாட்டைப் பற்றிய தகவல்
> அறிந்தவர்கள் இந்த இழையில் தொடருங்கள்.
>
> அன்புடன்
> சுபா
>

 சாதாரண கல், மரம், செங்கல், ... நிலையிலிருந்து சிலை வடிக்கும் நிலைக்கு
கிராம தேவதைகள் வளர்ச்சி பெறும்போது காளி ரூபத்தில் செய்யப்படுவது
வழக்கம்.

காளியின் காலில் இருப்பது தாருகாசுரன் என்பது புராணம்.
உ-ம்: ஒரு புதிய காளி சிலை கொடுத்துள்ளேன்.

நா. கணேசன்

லண்டன் செல்கிறது 7 அடி உயர காளி சிலை
செப்டம்பர் 29,2008,00:00 IST

அவினாசி : அவினாசியில் வடிவமைக்கப்பட்ட காளி சிலை, லண்டனில் பிரதிஷ்டை
செய்யப்படுகிறது. அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலருகே ஞானாம்பிகை சிற்பத்
தொழிற்சாலை உள்ளது. இங்கு உருவாக்கப்பட்ட ஏழு அடி உயரம் கொண்ட காளி சிலை,
லண்டனில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இச்சிலை உருவாக்கம் குறித்து
ஸ்தபதிகள் ராஜேந்திரன், ஆனந்தன் ஆகியோர் கூறியதாவது:ஈரோடு மாவட்டம்,
ஊத்துக்குளி அருகேயுள்ள பாறைக்குழியிலிருந்து ஏழு டன் எடையுள்ள கருங்கல்
கொண்டு வரப்பட்டு, ஏழு மாதமாக ஆறு சிற்பிகளைக் கொண்டு வடிவமைத்தோம்.

தற்போது, சிலை ஏழு அடி உயரத்தில் மூன்றரை டன் எடையில் அமைந்துள்ளது. காளி
சிலையின் வலது புறத்திலுள்ள நான்கு கைளில் சூலம், உடுக்கை, கத்தி மற்றும்
அசுரன் தலையும், இடது புற கைகளில் கபாலம், அக்னி சட்டி, கேடயம் மற்றும்
மணி ஆகியனவும் அமைந்துள்ளது.அமர்ந்த கோலத்தில் அரக்கனை வதம் செய்யும்
காளி சிலையை, சில்ப சாஸ்திர முறைப்படி நுணுக்கமான வேலைப்பாடுகளுடன்
உருவாக்கியுள்ளோம். இவ்வாறு ஸ்தபதிகள் கூறினர்.

காளி சிலை, லண்டனுக்கு செல்வது குறித்து திருப்பூரைச் சேர்ந்த வீரமாத்தி
முருகேஷ் கூறுகையில், ""கடந்த ஏழு மாதங்களுக்கு முன்னர் அவினாசியில் காளி
சிலைக்கு ஆர்டர் கொடுத்தோம். லண்டன் அருகேயுள்ள ஒரு கோவிலில் இச்சிலை
விரைவில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இன்னும் 15 நாட்களில், சிலை "பேக்'
செய்யப்பட்டு கப்பல் மூலம் லண்டனுக்கு கொண்டு செல்லப்படுகிறது,''
என்றார்.

Kali_Avinasi.jpg

Geetha Sambasivam

unread,
Mar 18, 2011, 12:25:29 AM3/18/11
to mint...@googlegroups.com
திரு கணேசன் சொல்லி இருப்பது தாருகாசுரன்.  அது வேறே இங்கே தாருகாசுரன் வர மாட்டான்.

2011/3/18 Geetha Sambasivam <geetha...@gmail.com>
பேச்சி அம்மனுக்குத் தான் கருப்புச் சேலை கட்டுவார்கள் சுபாஷிணி.  இது பேச்சி அம்மனாய்த் தான் தெரிகிறது.  ஒருவேளை அதையே வழக்குச் சொல்லில் பெரியாச்சி என்று சொல்லி இருக்கலாமோ??  பாதத்தில் இருப்பவர் சிவன் தான்.  அன்னை காளிதான் ஆவேசம் கொண்டு ஆடுகையில் அவள் ஆவேசம் அடங்க அவள் ஆடும் வழியில் படுத்தார் எனவும், அவரை மிதிக்கவுமே தன்னுணரவுபெற்றாள் என்றும் சொல்வார்கள்.  இது குறித்து இன்னும் அதிகத் தகவல்கள் திரட்டிக்கொண்டு வருகிறேன்.

Geetha Sambasivam

unread,
Mar 18, 2011, 12:24:34 AM3/18/11

இன்னோர் செவிவழிக்கதையில் குழந்தையாக ஈசன் படுத்துக்கொண்டதாயும் குழந்தை அழுத சப்தம் கேட்டு அன்னையின் ஆவேசம் அடங்கினதாயும் சொல்வார்கள்.  இரண்டும் ஒன்றேயா, அல்லது வெவ்வேறா எனத் தெரிந்துகொண்டும் வருகிறேன்.  ஆதாரங்களும் வேண்டும்.  எங்க கிராமத்து ஊரில் இந்த அம்மன் பேச்சி அம்மன் என்ற பெயரிலேயே மாரியம்மன் கோயில் நுழைவாயிலில் அமர்ந்திருக்கிறாள்.  சுதைச் சிற்பம். இவளுக்கு அசைவப் படையல்கள் உண்டு.  உள்ளே இருக்கும் மாரியம்மன் சுத்த சைவம்.

2011/3/17 Subashini Tremmel <ksuba...@gmail.com>
1.பெரியாச்சி
periyachi.jpg

karuannam annam

unread,
Mar 18, 2011, 7:15:29 AM3/18/11
to mint...@googlegroups.com
”சனங்களின் சாமிகள் கதை”- பேராசிரியர் அ.கா. பெருமாள் எழுதிய யுனைட்டெட் ரைட்டர்ஸ் வெளியீடு அண்மையில் படித்தேன். தென் தமிழ் மாவட்டங்களில் வழிபடப்படுகிற 21 தெய்வங்களின் கதைகள் கூறப்பட்டுள்ளன. வில்லிசையாகப் பாடப்படும் கதைகள் பெரும்பாலானவை.
அரிய செயல்களைச் செய்தவீரன், பிறசாதியில் மணம- அதனால் கொலை, சமூக நியதி மீறல், கொடுமைகள், சாபங்கள், அகால மரணம் அடைந்தோர் ஆவிகள் அமைதியுறாமல் பழிவாங்கல், மந்திரவாதிகள் அடக்குதல், அழிதல் போன்றவை கதைக்களமாகப் பாடுபொருளாக அமைந்துள்ளன.
ஒரு பொதுவான அம்சம்- அகால மரணம் அடைந்தோருடைய ஆவிகளைக்  காரணமானவரும் சந்ததியினரும் பிறரும் கொண்டாடி வழிபட்டுவர வழிபடும் இடமும் முறையும் அமைந்துள்ளன.
.
செட்டினாட்டுப் பகுதிகளில் உள்ள அய்யனார் குல தெய்வக்கோவில்களில் படத்திலுள்ள பெரியனாச்சி போன்ற சிலைகளைப் பார்த்துள்ளேன். ஏகாத்தாள், தீப்பாய்ந்தாள் போல. வலுவாக உள்ள தெய்வங்கள் ஒதுக்குப்புறமான கோயில்களில் நிலை நிறுத்தப்பட்டு அதற்கு உரியவர்களாலும் பிறராலும் உரிய முறையில் வழிபடப்படுகின்றன. சாந்தமடைந்து அருள் பாலிக்கின்றன என்பது அசையா நம்பிக்கை.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.     

N. Ganesan

unread,
Mar 18, 2011, 8:04:42 AM3/18/11
to மின்தமிழ்

On Mar 17, 11:24 pm, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>
wrote:

> பேச்சி அம்மனுக்குத் தான் கருப்புச் சேலை கட்டுவார்கள் சுபாஷிணி.  இது பேச்சி
> அம்மனாய்த் தான் தெரிகிறது.  ஒருவேளை அதையே வழக்குச் சொல்லில் பெரியாச்சி என்று
> சொல்லி இருக்கலாமோ??  பாதத்தில் இருப்பவர் சிவன் தான்.  அன்னை காளிதான் ஆவேசம்
> கொண்டு ஆடுகையில் அவள் ஆவேசம் அடங்க அவள் ஆடும் வழியில் படுத்தார் எனவும், அவரை
> மிதிக்கவுமே தன்னுணரவுபெற்றாள் என்றும் சொல்வார்கள்.  இது குறித்து இன்னும்
> அதிகத் தகவல்கள் திரட்டிக்கொண்டு வருகிறேன்.
>

தகவலுக்கு நன்றி. தமிழ்நாட்டில் சிவன் மீது காளி நிற்பதாகவோ,
சேருவதாகவோ சிலைகள் உண்டா?

பெங்கால் தாந்திரீகத்தில் ஏராளாமாக சிவன் காலடியில்
சிற்பங்களும், சித்திரங்களும் உள்ளன. 100 கணக்கான
புஸ்தகங்கள் ஆன்கிலத்தில் உண்டு.

உ-ம்:
http://marjorymejia.com/wp-content/uploads/2011/01/Goddess+Kali+-+Colored+etching+on+paper+1770+Print1.jpg

அன்புடன்,
நா. கணேசன்

>  periyachi.jpg
> 101KViewDownload

>
> இன்னோர் செவிவழிக்கதையில் குழந்தையாக ஈசன் படுத்துக்கொண்டதாயும் குழந்தை அழுத
> சப்தம் கேட்டு அன்னையின் ஆவேசம் அடங்கினதாயும் சொல்வார்கள்.  இரண்டும் ஒன்றேயா,
> அல்லது வெவ்வேறா எனத் தெரிந்துகொண்டும் வருகிறேன்.  ஆதாரங்களும் வேண்டும்.
> எங்க கிராமத்து ஊரில் இந்த அம்மன் பேச்சி அம்மன் என்ற பெயரிலேயே மாரியம்மன்
> கோயில் நுழைவாயிலில் அமர்ந்திருக்கிறாள்.  சுதைச் சிற்பம். இவளுக்கு அசைவப்
> படையல்கள் உண்டு.  உள்ளே இருக்கும் மாரியம்மன் சுத்த சைவம்.
>

> 2011/3/17 Subashini Tremmel <ksubash...@gmail.com>
>
>
>
> > *1.பெரியாச்சி*

>
> > தஞ்சாவூர் மாவட்டத்தில் திருத்தரைபூண்டி தாண்டி நாகப்பட்டினம் செல்லும்
> > வழியில் தலைஞாயிறு கிராமத்தில் ஒரு ஐயனார் ஆலயம் இருக்கின்றது. இந்த ஆலயத்தில்
> > சில வித்தியாசமான கிராம தெய்வ வடிவங்களைப் பார்த்தேன்.  அதில் ஒன்று பெரியாச்சி
> > தெய்வம்.
>
> > [image: periyachi.jpg]
>
> > இத்தெய்வத்திற்குப் பலி கொடுப்பதற்காக ஒரு சேவல் ஒன்றினை பிரகாரத்தின்
> > வாசலிலேயே ஒரு மஞ்சள் கயிறு கட்டி  வைத்திருக்கின்றார்கள். இத்தெய்வத்திற்குக்
> > கரிய நிறத்திலான புடவை அணிவித்திருக்கின்றார்கள். பெரியாச்சியின் பாதத்தில் ஒரு
> > மனிதனின் சிலை ஒன்று இருக்கின்றது. இத்தெய்வ வழிபாட்டைப் பற்றிய தகவல்
> > அறிந்தவர்கள் இந்த இழையில் தொடருங்கள்.
>
> > அன்புடன்
> > சுபா
>
> >  --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at

> >http://groups.google.com/group/minTamil- Hide quoted text -
>
> - Show quoted text -

kalairajan krishnan

unread,
Mar 18, 2011, 8:07:18 AM3/18/11
to mint...@googlegroups.com
அம்மையீர் சுபா அவர்களுக்கு வணக்கம்,

அருமையான தொகுப்பு,
தொகுத்தவற்றை எல்லாம் பகுத்து, எங்களுக்குப் படிக்கத் தரவேண்டும் எனக்
கேட்டுக் கொள்கிறேன்.

சிவகங்கை மாவட்டத்தில், ஐயனார் கோயில்களில் பொயாச்சி என்ற பெயரில்
பரிவார தெய்வங்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. சகோதரி கீதா அவர்கள்
குறிப்பிட்டுள்ளதைப்போல் "பேச்சி" என்ற பெயரிலேயே தெய்வம் உள்ளது.

நல்லதொகுப்பு, தொடர வேண்டுகிறேன்.
அன்பன்
கி.காளைராசன்

--
திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி படியுங்கள்,
http://www.freewebs.com/thirupoovanam/
அன்னதானம் செய்வோம், கண்தானம் செய்வோம். இவ்விருதானங்களையும் சிவபெருமான்
ஏற்றுக் கொள்கிறார்,

Nagarajan Vadivel

unread,
Mar 18, 2011, 8:16:03 AM3/18/11
to mint...@googlegroups.com
கிராம தெய்வங்களில் சிவன், விஷ்ணு, கிருஷ்ணன், காளி கோவிலகள் பெரும்பாலான தமிழகக்கிராமங்களில் வழிபடும் தெய்வங்கள்.  இவற்றைத்தவிர அப்பகுதிக்குரிய (வெள்ளாளகண்டன், பனையாதித்யன் போன்ற) கடவுளரும் உண்டு.

கிராமத் தெய்வங்கள் பரவலாக குடிகோண்டிருக்கும் கடவுள் உள்ளூர்க் கடவுள் என இருவகைப்பிரிவில் வகைப்படுத்தப்படும்

அவை பிராமண தேவர்கள், அம்மன்கள், மாடன் அல்லது பேய் என்றும் வகைப்படுத்தப்படும்

ஜாதிப்பிரிவுபோன்றே தமிழகத்தில் கிராம தெய்வங்கள் எவ்வாறு ஜாதி உயர்ந்த-தாழ்ந்த, பெரிய-சிறிய, சுத்தம்-அசுத்தம் என்று பாகுபடுத்துவதுபோல் கிராம தெய்வங்களும் உயர்ந்த-தாழ்ந்த, பெரிய-சிறிய, சுத்தம்-அசுத்தம், சாந்தமான-உக்கிரமான தெய்வங்கள் என்று பாகுபடுத்தப்பட்டுள்ளது.

வசிக்கும் இடத்தின் அடிப்படையில் உயர்ந்த சுத்தமான ஜாதியினர் பெரிய (தாய்) கிராமங்களிலும், தாழ்ந்த ஜாதியினர் சிறு (சேய்) கிராமங்கள், கிராமத்தின் வெளியே வசிப்பதுபோல் உயர்ந்த சுத்தமான (பிராமண பூஜை) கடவுள் பெரிய கிராமங்களிலும், அசுத்தமான (மிருகபலி), உக்கிரமான, தாழ்ந்த கடவுள் சிறூ கிராமங்களில், கிராமப்புறங்களில் வயல்வெளி மற்றும்தோட்டங்களில் இடம்பெறும்

தமிழக கிராமத் தெய்வங்கள், தேவதைகள் தமிழர் வாழ்வியல் பிரிவினையை வெளிப்படுத்துவதாக உள்ளது. மார்க்ஸிய மானுடவியலார் உக்கிரமான தெய்வங்கள் வலிமையிழந்து வாழும் தாழ்த்தப்பட்டவர்களுகள் ஆதிக்க அடக்குமுறைக்கு எதிராக அதே சமயம் ஒத்துப்போகும்  நம்பிக்கையும் மனப்பக்குவத்தையும் கொடுக்குமாறு அமைந்துள்ளதாகக் குறிப்பிடுவர்.

கிராம தெய்வங்களின் அருள் வழிபடுவரின் உட்புகுந்து நல்ல தீய சக்திகளி வெளிபடுத்தும்.  தீய சக்திகள் வெளிப்படும்போது அது வன்மையான வெளிப்பாடாகத் தோன்றும்.  நல்ல தீய சக்திகள் பிடிக்கும்போது அவை முறையே அருள், பேய் பிடிப்பதாகக் குறிப்பிடப்படும்.

தமிழகக் கிராமதெய்வங்கள் தமிழர் வாழ்வில் கிராம, குல, குடும்ப தெய்வங்களாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளக தொடர்ந்து வந்தாலும் அவை பற்றிய ஆய்வு சங்ககாலம் முதல் தற்காலம் வரை என்ற அடிப்படையில்  முறையாக ஆய்வு செய்யப்படவில்லை.  இத்தெய்வங்கள் வாழ்வின் நிகழ்வுகளுடன் வாழ்வியல் மரபுகளுடன், சமுதாயப் பிரிவினை மத்தியில் பலதரப்பட்டவரையும் எவ்வாறு ஒருங்கிணைத்தது என்பதை மானுட, சமூக உளவியல் அடிப்படையிலும் ஆய்வுசெய்யப்படவில்லை

அய்யனார் பற்றியும், சுடலை மாடன் பற்றியும் அம்மன் பற்றியும் சில குறிப்புகள் மின்தமிழில் பதிவு செய்யப்பட்ததைத் தொடர்ந்து மின்தமிழ் அறிஞர்கள் மேலும் புதிய தகவல் தரவுகளைத்தருவது திட்டமிட்ட பெரிய ஆய்வுக்கு அடிப்படையாக அமையும்
நாகராசன்

2011/3/18 karuannam annam <karu...@gmail.com>

--

kalairajan krishnan

unread,
Mar 18, 2011, 8:23:58 AM3/18/11
to mint...@googlegroups.com
தகவலுக்கு நன்றி. தமிழ்நாட்டில் சிவன் மீது காளி நிற்பதாகவோ,
சேருவதாகவோ சிலைகள் உண்டா?

ஐயா, திருப்பூவணம் அருகில் லாடனேந்தல் என்ற ஊரில் சிவன்மீது காளி
நிற்பதுபோன்ற சிற்பத்தைப் பார்த்த ஞாபகம்,
நேரம்கிடைக்கும்போது சென்று படம் எடுத்து அனுப்ப முயற்சிக்கிறேன்,

N. Ganesan

unread,
Mar 18, 2011, 8:29:23 AM3/18/11
to மின்தமிழ்

On Mar 18, 7:23 am, kalairajan krishnan <kalairaja...@gmail.com>
wrote:

> தகவலுக்கு நன்றி. தமிழ்நாட்டில் சிவன் மீது காளி நிற்பதாகவோ,
> சேருவதாகவோ சிலைகள் உண்டா?
>
> ஐயா, திருப்பூவணம் அருகில் லாடனேந்தல் என்ற ஊரில் சிவன்மீது காளி
> நிற்பதுபோன்ற சிற்பத்தைப் பார்த்த ஞாபகம்,
> நேரம்கிடைக்கும்போது சென்று படம் எடுத்து அனுப்ப முயற்சிக்கிறேன்,
> அன்பன்
> கி.காளைராசன்
>

நன்றி, ஐயா. அது வெகு அபூர்வமானதாக இருக்கும்.

காளி காலில் தாருகாசுரன் - ஆயிரக்கணக்கில்.

பெரியாச்சி காலில் சிவனா? அல்லது பேய்ச்சி காலில் சிவனா?
ஸ்ரீமதி கீதா அவர்கள் தெரிந்து சொல்வதற்குக் காத்திருபோம்.

நா. கணேசன்

> --
> திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி  படியுங்கள்,http://www.freewebs.com/thirupoovanam/

coral shree

unread,
Mar 18, 2011, 8:48:11 AM3/18/11
to mint...@googlegroups.com
நன்றி ஐயா. பெரியாண்டிச்சி அம்மன் பற்றிய த்கவல்கள் சேகரித்துக் கொண்டிருக்கிறேன். புகைப்படங்களுடன் விரைவில் வெளியிடுகிறேன் . நன்றி.

2011/3/18 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

Subashini Tremmel

unread,
Mar 18, 2011, 10:55:01 AM3/18/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram

2011/3/18 Geetha Sambasivam <geetha...@gmail.com>

பேச்சி அம்மனுக்குத் தான் கருப்புச் சேலை கட்டுவார்கள் சுபாஷிணி.  இது பேச்சி அம்மனாய்த் தான் தெரிகிறது.  ஒருவேளை அதையே வழக்குச் சொல்லில் பெரியாச்சி என்று சொல்லி இருக்கலாமோ?? 
அப்படியா? பெரியாச்சி என்று அந்த கருவரியின் மேலே எழுதியிருந்தது. வழக்கில் அப்படி அழைப்பார்கள் போல..
 
பாதத்தில் இருப்பவர் சிவன் தான்.  அன்னை காளிதான் ஆவேசம் கொண்டு ஆடுகையில் அவள் ஆவேசம் அடங்க அவள் ஆடும் வழியில் படுத்தார் எனவும், அவரை மிதிக்கவுமே தன்னுணரவுபெற்றாள் என்றும் சொல்வார்கள்.  இது குறித்து இன்னும் அதிகத் தகவல்கள் திரட்டிக்கொண்டு வருகிறேன்.
 
எனக்கு சிவனாக இருக்குமோ அல்லது வேறு அசுரனாக இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தது. நீங்கள்  தகவல் திரட்டித் தாருங்கள். 
 
-சுபா
 
இன்னோர் செவிவழிக்கதையில் குழந்தையாக ஈசன் படுத்துக்கொண்டதாயும் குழந்தை அழுத சப்தம் கேட்டு அன்னையின் ஆவேசம் அடங்கினதாயும் சொல்வார்கள்.  இரண்டும் ஒன்றேயா, அல்லது வெவ்வேறா எனத் தெரிந்துகொண்டும் வருகிறேன்.  ஆதாரங்களும் வேண்டும்.  எங்க கிராமத்து ஊரில் இந்த அம்மன் பேச்சி அம்மன் என்ற பெயரிலேயே மாரியம்மன் கோயில் நுழைவாயிலில் அமர்ந்திருக்கிறாள்.  சுதைச் சிற்பம். இவளுக்கு அசைவப் படையல்கள் உண்டு.  உள்ளே இருக்கும் மாரியம்மன் சுத்த சைவம்.

2011/3/17 Subashini Tremmel <ksuba...@gmail.com>
1.பெரியாச்சி
 
தஞ்சாவூர் மாவட்டத்தில் திருத்தரைபூண்டி தாண்டி நாகப்பட்டினம் செல்லும் வழியில் தலைஞாயிறு கிராமத்தில் ஒரு ஐயனார் ஆலயம் இருக்கின்றது. இந்த ஆலயத்தில் சில வித்தியாசமான கிராம தெய்வ வடிவங்களைப் பார்த்தேன்.  அதில் ஒன்று பெரியாச்சி தெய்வம்.
 
periyachi.jpg

இத்தெய்வத்திற்குப் பலி கொடுப்பதற்காக ஒரு சேவல் ஒன்றினை பிரகாரத்தின் வாசலிலேயே ஒரு மஞ்சள் கயிறு கட்டி  வைத்திருக்கின்றார்கள். இத்தெய்வத்திற்குக் கரிய நிறத்திலான புடவை அணிவித்திருக்கின்றார்கள். பெரியாச்சியின் பாதத்தில் ஒரு மனிதனின் சிலை ஒன்று இருக்கின்றது. இத்தெய்வ வழிபாட்டைப் பற்றிய தகவல் அறிந்தவர்கள் இந்த இழையில் தொடருங்கள்.
 
அன்புடன்
சுபா

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
periyachi.jpg

Subashini Tremmel

unread,
Mar 18, 2011, 10:58:50 AM3/18/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram

2011/3/18 karuannam annam <karu...@gmail.com>

”சனங்களின் சாமிகள் கதை”- பேராசிரியர் அ.கா. பெருமாள் எழுதிய யுனைட்டெட் ரைட்டர்ஸ் வெளியீடு அண்மையில் படித்தேன். தென் தமிழ் மாவட்டங்களில் வழிபடப்படுகிற 21 தெய்வங்களின் கதைகள் கூறப்பட்டுள்ளன. வில்லிசையாகப் பாடப்படும் கதைகள் பெரும்பாலானவை.
அரிய செயல்களைச் செய்தவீரன், பிறசாதியில் மணம- அதனால் கொலை, சமூக நியதி மீறல், கொடுமைகள், சாபங்கள், அகால மரணம் அடைந்தோர் ஆவிகள் அமைதியுறாமல் பழிவாங்கல், மந்திரவாதிகள் அடக்குதல், அழிதல் போன்றவை கதைக்களமாகப் பாடுபொருளாக அமைந்துள்ளன.
 
திரு.அ.கபெருமாள் பற்றியும் அவரது ஆய்வுகள் பர்றியும் நண்பர் செந்தில் மற்றும் திரு.ராமச்சந்திரன் வழி நானும் கேள்விப்பட்டேன். இந்த நூலும் நமது ஆய்விற்குப் பயன்படும். நான் வாங்கிக்கொள்கின்றேன்.
 
.
செட்டினாட்டுப் பகுதிகளில் உள்ள அய்யனார் குல தெய்வக்கோவில்களில் படத்திலுள்ள பெரியனாச்சி போன்ற சிலைகளைப் பார்த்துள்ளேன். 
 
நீங்கள் பெரியனாச்சி என்று குறிப்பிடுகின்றீர்கள். ஆக பேச்சி, பெரியாச்சி, பெரியனாச்சி என வெவ்வேறு பெயரில் இத்தெய்வம் வழக்கிலிருப்பதாகத் தெரிகிறது.
 
-சுபா
 
ஏகாத்தாள், தீப்பாய்ந்தாள் போல. வலுவாக உள்ள தெய்வங்கள் ஒதுக்குப்புறமான கோயில்களில் நிலை நிறுத்தப்பட்டு அதற்கு உரியவர்களாலும் பிறராலும் உரிய முறையில் வழிபடப்படுகின்றன. சாந்தமடைந்து அருள் பாலிக்கின்றன என்பது அசையா நம்பிக்கை.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.     

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

LK

unread,
Mar 18, 2011, 11:00:02 AM3/18/11
to mint...@googlegroups.com, Subashini Tremmel
பெரியாண்டிச்சி போன்றவையும் இதில் அடங்குமா >?

2011/3/18 Subashini Tremmel <ksuba...@gmail.com>

--

Subashini Tremmel

unread,
Mar 18, 2011, 11:01:26 AM3/18/11
to mint...@googlegroups.com
அருமையான தகவல்கள் நாகராஜன் ஐயா. நான் பார்த்து காமெராவில் பதிவு செய்த படங்களை இங்கு பகிர்ந்து கொள்கின்றேன். அவற்றை பற்றி தொடர்ந்து தகவல் சேர்ச் சேர தொகுக்க ஆரம்பிக்கலாம்.
 
நன்றி
சுபா

2011/3/18 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

Subashini Tremmel

unread,
Mar 18, 2011, 11:04:01 AM3/18/11
to LK, mint...@googlegroups.com, Subashini Kanagasundaram

2011/3/18 LK <karthik.lv@gmail.com>
பெரியாண்டிச்சி போன்றவையும் இதில் அடங்குமா >?

2011/3/18 Subashini Tremmel <ksuba...@gmail.com>

நீங்கள் பெரியனாச்சி என்று குறிப்பிடுகின்றீர்கள். ஆக பேச்சி, பெரியாச்சி, பெரியனாச்சி என வெவ்வேறு பெயரில் இத்தெய்வம் வழக்கிலிருப்பதாகத் தெரிகிறது.
 
பவளா பெரியாண்டிச்சி என்று குறிப்பிடுகின்றார்.  ஆமாம். இதுவும் ஒரே வகை போலத்தான் தெரிகின்றது. பெரியாண்டிச்சி என்பது கோவை ஈரோடு பகுதியில் உள்ள வழக்கமோ??
 
-சுபா

Geetha Sambasivam

unread,
Mar 18, 2011, 11:29:19 AM3/18/11
to mint...@googlegroups.com
பேச்சி அம்மனைத் தேடப்போய்ச் சுடலைமாடனைக் கண்டு பிடித்தேன். கொஞ்சம் எல்லாவற்றையும் ஒழுங்காய்த் திரட்டிக்கொண்டு வருகிறேன்.  பேய்ச்சி தான் பேச்சி என்றொரு கூற்று.  பேச்சுக்கு அம்மன் என்றொரு கூற்று.  இரண்டில் பேய்ச்சி என்பதே பேச்சி என்றாகி இருக்கும் என்பது என் கருத்து. பெரியாண்டியாச்சி அம்மன் கொங்கு நாட்டில் மட்டும்னு நினைக்கிறேன்.  தகவல்களைச் சரிபார்த்துக்கொண்டு விபரங்களைத் தருகிறேன்.  பேச்சி அம்மன் கருவுறாமல் ஈசன் அருளால் பெற்ற குழந்தை சுடலையாண்டி.

2011/3/18 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Mar 18, 2011, 1:11:17 PM3/18/11
to mint...@googlegroups.com
பண்டைத்தமிழர் சமுதாயம் மேட்ரியார்க்கல் என்ற பெண்வழிச் சமுதாயமாக நிலவியது.  அல்லி, நீலி என்ற நீலகேசி, குண்டலகேசி.போன்ற தொன்மங்கள் பெண்கள் சார்ந்த கருத்துநிலைகளை வெளிப்பத்துவதாக்க் கருதலாம்.  வடபுலத் தாக்கத்தால் திரெளபதி அம்மன் மாரியம்மன் போல கிராமத்தெய்வமாக  செங்கல்பட்டு, வட தென் ஆற்காடு மற்றும் சேலம் மாவட்டங்களில் பெண்தெய்வமாகவும்  பறையர் பழையர் (பள்ளர், பளியர்) மக்கள் காந்த்ரி அம்மனை வணங்கினர்

பெண்தெய்வம் தொடர்பான தொன்மங்களில் ஆண்துணையின்றிக்கருவுற்றதான "immaculate conception" இடம்பெற்றுள்ளது.  பெண்ணியத் தொன்மங்கள் மதுரையில் அதிகம் வழக்கத்தில் இருந்ததற்குக் காரணம் மதுரை அரசகுலத்திலும் பழங்குடிகள் வாழ்வியலிலும் பெண்கள் சிறப்பான இடம் பெற்றிருந்ததே என்று குறிப்பிடப்படுகிறது.  மதுரை வாழ் அல்லியும் மீனாட்சியும் கல்விகேள்வியில் போரிடும் கலையில் சிறந்து விளங்கியதாகக் குறிப்புள்ளது.இன்றும் மதுரை மினாட்சியின் ஆடை ஆண்கள் அணியும் ஆடையைப்போல் உள்ளது என்ற குறிப்பும் உள்ளது

 பத்தொன்பது இருபதாம் நூற்ற்ண்டுகளில் நாடகம் தெருக்கூத்தில் பெண்கள் தொடர்பான அல்லிராணி, பவளக்கொடி  போன்ற பாத்திரங்களில் அனுபவமிக்க கலையில் சிறந்த ஆண் நடிகர்கள் நடிகர்கள் பெண்பாத்திரத்தில் நடித்தனர்
திரைப்படத்தில் அல்லியாக எஸ்.வரலட்சுமியும். பவளக்கொடியாக டி.ஆர்.ராஜகுமாரியும், ராணி செங்கமலமாக சாவித்திரியும் நடித்துள்ளனர்.  ஆயினும் இவ்வகைப் பாத்திரங்கள் நெறிவழுவிப் பெண்களைக்காட்டுவதாகவும் பெண்கள் இவற்றைப்படிப்பதற்குத்தடை இருந்தது என்றும் நீலாம்பிகை அம்மையார் முப்பெண்மணிகள் வரலாறு என்ற நூலில் குறிப்பிடுகிறார்.  வடபுல ஆணியக் கருத்துருக்கள் தமிழகத்தில் ஆணுக்குப் பெண் அடங்கவேண்டும் என்ற கருத்தை நிலைநிறுத்தும் தொன்மங்கள் அறிமுகமாக உதவியது என்ற குறிப்பும் உள்ளது
நீலி போன்ற கிராமத் தெய்வங்கள் தெய்வமா அல்லது பேய என்ற குழப்பம் இருந்துள்ளது. கிராமத் தெய்வங்கள் குறிப்ப்கப் பெண்தெய்வங்கள் பற்றிய வரலாறு மரபு பற்றிய தகவல் பண்டைத்தமிழர் பெண்ணியம் பற்றிய சரியான தகவல்கிடைக்க வழி செய்யலாம்
நாகராசன்.

2011/3/18 Geetha Sambasivam <geetha...@gmail.com>
பேச்சி அம்மனைத் தேடப்போய்ச் சுடலைமாடனைக் கண்டு பிடித்தேன். கொஞ்சம் எல்லாவற்றையும் ஒழுங்காய்த் திரட்டிக்கொண்டு வருகிறேன்.  பேய்ச்சி தான் பேச்சி என்றொரு கூற்று.  பேச்சுக்கு அம்மன் என்றொரு கூற்று.  இரண்டில் பேய்ச்சி என்பதே பேச்சி என்றாகி இருக்கும் என்பது என் கருத்து. பெரியாண்டியாச்சி அம்மன் கொங்கு நாட்டில் மட்டும்னு நினைக்கிறேன்.  தகவல்களைச் சரிபார்த்துக்கொண்டு விபரங்களைத் தருகிறேன்.  பேச்சி அம்மன் கருவுறாமல் ஈசன் அருளால் பெற்ற குழந்தை சுடலையாண்டி.

வினோத்-VINOTH

unread,
Mar 18, 2011, 3:44:58 PM3/18/11
to mint...@googlegroups.com, Subashini Tremmel

தெரியாத்தனமா இப்போ ராத்திரி 1 மணிக்கு இந்த படத்தை பார்த்து தொலச்சுட்டேன்
:(

இப்படியெல்லாம் பயமுறுத்துற படங்களை போடாதீங்க, ;)

இ சிறு தெய்வங்கள் எல்லாம் பெரிய தெய்வங்களின் கிராமத்து பழக்கவழக்கங்களின் முகங்கள். இதை மறு படி சரிபண்ண முடியாதா?

(சிறிய பெரிய என்று வேறுபடுத்தியமைக்கு மன்னிக்க, வேறு எப்படி சொல்ல எனத்தெரியவில்லை)

--
வினோத் கன்னியாகுமரி
http://tamilnanbargal.com/friends/vinoth

N. Ganesan

unread,
Mar 22, 2011, 3:13:33 AM3/22/11
to மின்தமிழ்

On Mar 17, 11:24 pm, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>
wrote:

> பேச்சி அம்மனுக்குத் தான் கருப்புச் சேலை கட்டுவார்கள் சுபாஷிணி.  இது பேச்சி
> அம்மனாய்த் தான் தெரிகிறது.  ஒருவேளை அதையே வழக்குச் சொல்லில் பெரியாச்சி என்று
> சொல்லி இருக்கலாமோ??  பாதத்தில் இருப்பவர் சிவன் தான்.  அன்னை காளிதான் ஆவேசம்
> கொண்டு ஆடுகையில் அவள் ஆவேசம் அடங்க அவள் ஆடும் வழியில் படுத்தார் எனவும், அவரை
> மிதிக்கவுமே தன்னுணரவுபெற்றாள் என்றும் சொல்வார்கள்.  இது குறித்து இன்னும்
> அதிகத் தகவல்கள் திரட்டிக்கொண்டு வருகிறேன்.
>

>  periyachi.jpg
> 101KViewDownload

>
> இன்னோர் செவிவழிக்கதையில் குழந்தையாக ஈசன் படுத்துக்கொண்டதாயும் குழந்தை அழுத
> சப்தம் கேட்டு அன்னையின் ஆவேசம் அடங்கினதாயும் சொல்வார்கள்.  இரண்டும் ஒன்றேயா,
> அல்லது வெவ்வேறா எனத் தெரிந்துகொண்டும் வருகிறேன்.  ஆதாரங்களும் வேண்டும்.
> எங்க கிராமத்து ஊரில் இந்த அம்மன் பேச்சி அம்மன் என்ற பெயரிலேயே மாரியம்மன்
> கோயில் நுழைவாயிலில் அமர்ந்திருக்கிறாள்.  சுதைச் சிற்பம். இவளுக்கு அசைவப்
> படையல்கள் உண்டு.  உள்ளே இருக்கும் மாரியம்மன் சுத்த சைவம்.
>

மாரியம்மன் புராண காலத்தின் முதல் head transplant ஆனவள்.
தக்காணம் முழுக்க இருப்பவள், மகாபாரதத்தில் ரேணுகா.
தலை பிராமணி, உடல் பறைச்சியாகவும் இருப்பதால்
உடல் பூமிக்குள், தலை மட்டும் வெளியே. எனவே சுத்த சைவம்.

ஆங்கிலத்தில் 200 வருஷமாய் இக்கதைகள் அலசப்படுகின்றன.
சிக்காகோவில் ஒரு பெண் பேராசிரியை (டானிகர்) நிறைய எழுதியுள்ளார்.

------------------

பெரியாச்சி காலில் சிவன் என்றால் தெரிந்து சொல்லுங்கள்.
தமிழ்நாட்டில் அம்மன் காலில் சிவன் இருந்தால் அதிசயமே.
தெரிந்துகொள்ள ஆவலுடையேன்.

----------

பெரியாச்சியை பேராய்ச்சி என்பது நெல்லை வழக்குபோலும்.
புதுமைப்பித்தன் 1934-ல் எழுதின கதையில் பேராய்ச்சி
வருகிறாள். பேராய்ச்சி காளியின் ஸ்வரூபம் என்று
குறித்துள்ளார்.
http://thoguppukal.wordpress.com/2011/03/13/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/

புதுமைப்பித்தன், சாயங்கால மயக்கம்:

”ஆற்றங்கரை மணல்… கரையில் பேராய்ச்சி கோயில்… கண் பொட்டையாக்கும் மாலை
மயக்கத்தில் இதன் கோபுரத் தளத்தில், எத்தனை நாவல்கள் எனது மன உலகத்தில்
ஒரு வாழ்க்கையைச் சிருஷ்டித்தன!

அப்பொழுது, எங்கெங்கோ வாரியிறைத்த பிரம்ம தேவனின் சிதறுண்ட நம்பிக்கைகள்
போல, வாழ்க்கை எரியிட்ட கனல்கள் போன்ற நட்சத்திரங்கள்!

மேல் வானத்திலே அந்த மரமடர்ந்த இருட்டுத் திரைக்கு மேல் செவ்விருள்!
அந்தித் தேவனின் சோக நாடகம்!

அந்தச் சாயங்காலம், சீதையின் சோகத்தையும், கதேயின் பாஸ்டையுமே
எப்பொழுதும் என் நினைவிற்குக் கொண்டு வருகிறது.

பேராய்ச்சி, கோயில் உச்சித் தளத்தில் கையில் புஸ்தகத்துடன் நான்!

நிசப்தம்…

பேராய்ச்சி. காளியின் ஸ்வரூபம்… எங்கள் பெரியண்ணத் தேவருக்குக் குடும்பத்
தெய்வம் – தலைமுறை தலைமுறையாகக் காத்துவந்த பேராய்ச்சி…

பேராய்ச்சி! அதில் என்ன தொனி! எவ்வளவு அர்த்த புஷ்டி!

இருண்ட வெளிச்சத்தில் இருண்ட கோரமான சிலை…

தாயின் கருணை. என்ன நம்பிக்கை!

நாளைக்கு அம்மனுக்குக் கொடை.”

நா. கணேசன்

> 2011/3/17 Subashini Tremmel <ksubash...@gmail.com>
>
>
>
> > *1.பெரியாச்சி*
>

> > தஞ்சாவூர் மாவட்டத்தில் திருத்தரைபூண்டி தாண்டி நாகப்பட்டினம் செல்லும்
> > வழியில் தலைஞாயிறு கிராமத்தில் ஒரு ஐயனார் ஆலயம் இருக்கின்றது. இந்த ஆலயத்தில்
> > சில வித்தியாசமான கிராம தெய்வ வடிவங்களைப் பார்த்தேன்.  அதில் ஒன்று பெரியாச்சி
> > தெய்வம்.
>
> > [image: periyachi.jpg]
>
> > இத்தெய்வத்திற்குப் பலி கொடுப்பதற்காக ஒரு சேவல் ஒன்றினை பிரகாரத்தின்
> > வாசலிலேயே ஒரு மஞ்சள் கயிறு கட்டி  வைத்திருக்கின்றார்கள். இத்தெய்வத்திற்குக்
> > கரிய நிறத்திலான புடவை அணிவித்திருக்கின்றார்கள். பெரியாச்சியின் பாதத்தில் ஒரு
> > மனிதனின் சிலை ஒன்று இருக்கின்றது. இத்தெய்வ வழிபாட்டைப் பற்றிய தகவல்
> > அறிந்தவர்கள் இந்த இழையில் தொடருங்கள்.
>
> > அன்புடன்
> > சுபா
>
> >  --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at

N. Ganesan

unread,
Mar 22, 2011, 3:42:21 AM3/22/11
to மின்தமிழ்

On Mar 17, 12:05 pm, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
> *1.பெரியாச்சி*
>

>  periyachi.jpg
> 101KViewDownload

சுபா,

மலேசியா, சிங்கப்பூரில் பிரபலமாய் இருக்கும் பெரியாச்சி
வழிபாடுக்குக் காரணம் தஞ்சை மாவட்டத்தில் இருந்து
புலம்பெயர்ந்தோர். (உங்கள் முன்னோர் போல :) ).

பெரியாச்சிக்கு ஒரு கதை இருக்கிறது. அது அச்சாகி இருக்கலாம்.
எல்லோரும் தேடினால் கிட்டிவிடும். முயல்வோம்.

நா. கணேசன்

http://www.kannam.com/2010/12/blog-post_19.html
நினைவில் வாழும்...
வெற்றிலை பாக்கு

வாங்கிக்கொள்ள
அப்பா தரும்
காசில் மிச்சப்படுத்தி
தாத்தா
எனக்கு தின்பண்டங்கள்
வாங்க தரும்.

குளிக்கப் போகும் போது
என்னையும்
முதுகு தேய்த்து விட
கூட அழைத்து போகும்.

தாத்தாவின்
உழைத்து விரிந்த முதுகு
எனக்கு
விளையாட்டு மைதானமாகும்.

தாத்தாவின்
கண்ணாடி,
கைத்தடியை
மறைத்து வைத்து
விளையாடுவேன்
அப்போது கூட
தாத்தா செல்லமாய் கூட
அதட்டியதில்லை.

பக்கத்து வீட்டு
அண்ணன்
நாங்கள்
விளையாண்ட இடத்தில்
பேய் இருக்கென சொல்ல
பயத்தில்
எனக்கு ஜுரம் வந்து
கை,காலெல்லாம்
நடுங்கியபோது
குரல் உடைந்து
தாத்தா அழுததது.

புழுதியில்
விளையாடிவிட்டு
திரும்பும்போதெல்லாம்
ஆத்தாதான்
ஆளுக்கு தேய்த்து
குளிப்பாட்டிவிடும்.

அந்த வயதிலும்
நடவு நட்டு சேர்த்த காசில்
எனக்கு புதுசட்டை
எடுத்து தரும் ஆத்தாவிடம்
உனக்கு புது புடவை
வாங்கலையா?
என கேட்காமல்,
மத்தாப்பு வாங்க
காசு தா ஆத்தா
என்று கேட்பேன்.
அதற்கும்
காசு தரும் ஆத்தா.

எது கேட்டும்
மறுத்ததில்லை.

நான் கேட்காமலேயே
குழி பணியாரம்
செய்துதரும்.

என் தலையை
வருடிக்கொண்டே
பெரியாச்சி கதையும்,
ஐயனாரு கதையும்
சொல்லிக்கொண்டே
தூங்கவைக்கும்

http://valluvannayanaar.blogspot.com/2010/11/blog-post.html

சொந்தங்களை தேடி
சொந்தங்களை தேடி
--------------------------------
தாத்தா : அண்ணாமலை நாயனார்
இவர் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள சாக்கோட்டை யை இந்த
கிராமத்தை பூர்விகமாக கொண்டவர். கொண்டல் வாத்தியார் என்று அழைக்க
பட்டவர். இறுதியாக பேரளம் Social Welfare பள்ளியில் வேலை பார்த்து ஓய்வு
பெற்றவர். இவரை பற்றிய தகவல்களோ அல்லது போட்டோகளோ இருந்தால் எங்களுக்கு
அனுப்பினால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம்.

இவர் உடன் பிறந்த சகோதரர் சௌந்தர ராஜன் நாயனார் இளவயதில் சிங்கப்பூர்
சென்று settle ஆகிவிட்டவர். இவரை பற்றிய விவரங்கள் பல காலமாக எங்களிடம்
இல்லை. இவர் சந்ததியினர் யாரேனும் இருந்தால் அவசியம் இந்த E மெயில் id ku
தொடர்பு கொள்ளவும். நாங்கள் எங்கள் உறவுகளை தெரிந்து கொள்ள இது மிகவும்
உதவும்.

நான் மும்பை யில் ரயில்வே துறையில் பணி புரிகிறேன். என்னுடைய குல தெய்வம்
பெரியாச்சி அம்மன். ஏன் முன்னோர்கள் பல ஆண்டுகளுக்கு முன் கும்பகோணம்
அருகில் உள்ள ஏதோ ஒரு கிராமத்தில் இருந்து இந்த தெய்வத்தை வழிபட்டனர்.
அனால் தற்போது எந்த இடத்தில உள்ளது என்பது எங்களுக்கு தெரிய வில்லை. இதை
பற்றிய விவரங்களை அனுப்பினால் எங்களுக்கு உதவியாக இருக்கும் .

இப்படிக்கு,
விநாயக மூர்த்தி திருநாவுகரசு
91 - 9987646577

N. Ganesan

unread,
Mar 22, 2011, 4:07:57 AM3/22/11
to மின்தமிழ்
Subha,

The more we think about the village goddess, Periyacci, the more
we see the lacuna in documenting this sakthi of Little tradition.

A worthwhile project with co-operation between Tamil, folkloristics
and anthropology that will take few years to record some authentic
versions of Periyacci story/s and a detailed study of her iconography.
There is a person lying on her lap, and is she eating him? See
the intestines in her mouth & and there is a dead body at her feet.
Her story, and explanation of iconography - I don't know yet
anyone has studied this malevalent goddess of Tanjore area??

http://ram-esh-wara.blogspot.com/2008/12/well-known-goddess-with-unknown-history.html

N. Ganesan

PS:

It looks Tamilnadu CM Kalaignar's Kuladeivam is Periachi:
http://govikannan.blogspot.com/2009/07/blog-post_09.html

Nagarajan Vadivel

unread,
Mar 22, 2011, 4:22:07 AM3/22/11
to mint...@googlegroups.com

Geetha Sambasivam

unread,
Mar 22, 2011, 4:26:47 AM3/22/11
to mint...@googlegroups.com
பெரியாச்சியைத் தேடிப் பலரையும் கேட்டிருக்கிறேன் ஐயா. பேச்சி குறித்த தகவல்கள் கிடைத்துவிட்டன. ரேணுகா தேவி, மாரியம்மன் ஏற்கெனவே தெரிந்த கதை தான். பெரியாச்சி கிடைக்கணும் .  :(

2011/3/22 N. Ganesan <naa.g...@gmail.com>

On Mar 17, 12:05 pm, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
> *1.பெரியாச்சி*
>
>

N. Ganesan

unread,
Mar 22, 2011, 4:44:41 AM3/22/11
to மின்தமிழ்

On Mar 22, 3:26 am, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
> பெரியாச்சியைத் தேடிப் பலரையும் கேட்டிருக்கிறேன் ஐயா. பேச்சி குறித்த தகவல்கள்
> கிடைத்துவிட்டன. ரேணுகா தேவி, மாரியம்மன் ஏற்கெனவே தெரிந்த கதை தான்.
> பெரியாச்சி கிடைக்கணும் .  :(
>

பெரியாச்சி பற்றி அறிய:
http://ram-esh-wara.blogspot.com/2008/12/well-known-goddess-with-unknown-history.html

150 வருஷமாக சிறுமணவூர் முனிசாமி முதலியார், துரைசாமி படையாச்சி,
வரிசைமுகையத்தீன் புலவர், ... வல்லாள மகராஜன்
கதை புஸ்தகம் போட்டிருக்காங்க. அதில் பெரியாச்சி இருக்காளா?னு
பாக்கணும்.

அண்மையில்,
எஸ். ஏ. கே. துர்கா, 1978, வல்லாள ராஜன் யட்சகானம்
இருக்கு. அதில் பெரியாச்சி இருக்கா-னு சொல்றேன்.

------------

ஏ. கே. சாந்தாமணாளன், ராஜசுந்தரி: சிறுகதைத் தொகுப்பு,
1964, வாசு பிரசுரம்.

இதில் “பெரியாச்சி காப்பாற்றினாள்” என்ற சிறுகதை இருக்கு.

இதையும் தரலாம்.

பிற பின்,
நா. கணேசன்

Geetha Sambasivam

unread,
Mar 22, 2011, 4:48:45 AM3/22/11
to mint...@googlegroups.com
நன்றி ஐயா.

2011/3/22 N. Ganesan <naa.g...@gmail.com>

--

Subashini Tremmel

unread,
Mar 22, 2011, 9:12:28 AM3/22/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
நல்ல தகவல்கள் திரு.கனேசன்.

2011/3/22 N. Ganesan <naa.g...@gmail.com>

On Mar 17, 12:05 pm, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
> *1.பெரியாச்சி*
>
> தஞ்சாவூர் மாவட்டத்தில் திருத்தரைபூண்டி தாண்டி நாகப்பட்டினம் செல்லும் வழியில்
> தலைஞாயிறு கிராமத்தில் ஒரு ஐயனார் ஆலயம் இருக்கின்றது. இந்த ஆலயத்தில் சில
> வித்தியாசமான கிராம தெய்வ வடிவங்களைப் பார்த்தேன்.  அதில் ஒன்று பெரியாச்சி
> தெய்வம்.
>
> [image: periyachi.jpg]
>
> இத்தெய்வத்திற்குப் பலி கொடுப்பதற்காக ஒரு சேவல் ஒன்றினை பிரகாரத்தின்
> வாசலிலேயே ஒரு மஞ்சள் கயிறு கட்டி  வைத்திருக்கின்றார்கள். இத்தெய்வத்திற்குக்
> கரிய நிறத்திலான புடவை அணிவித்திருக்கின்றார்கள். பெரியாச்சியின் பாதத்தில் ஒரு
> மனிதனின் சிலை ஒன்று இருக்கின்றது. இத்தெய்வ வழிபாட்டைப் பற்றிய தகவல்
> அறிந்தவர்கள் இந்த இழையில் தொடருங்கள்.
>
> அன்புடன்
> சுபா
>
>  periyachi.jpg
> 101KViewDownload

சுபா,

மலேசியா, சிங்கப்பூரில் பிரபலமாய் இருக்கும் பெரியாச்சி
வழிபாடுக்குக் காரணம் தஞ்சை மாவட்டத்தில் இருந்து
புலம்பெயர்ந்தோர். (உங்கள் முன்னோர் போல :) ).
 
மலேசியா சிங்கப்பூரில் பெரியாச்சி கோயில் நான் பார்த்தில்லை, அங்கெல்லாம் மாரியம்மன், காளியம்மன் ஆலயங்கள் தான் உண்டு. குறிப்பாக கிராமப்புறத்தில் அதிலும் செம்பனை பால்மரக்காடுகள் உள்ள தோட்டங்களில் காளியம்மன், மாரியம்மன், மதுரை வீரன், முனியாண்டி, வீரபத்திரன் ஆகிய தெய்வங்கள் தான் பிரபலம்.  அங்கும் பெரியாச்சி இருக்கலாம்.  நான் கேள்விப்பட்டத்தில்லை. ஆனால் எனக்குத் தெரிந்து பெரியாச்சி என்ற பெயரை நான் தமிழகத்தில் அதிலும் இந்தக் குறிப்பிட்ட கோயிலில் தான் பார்த்தேன்.
 
-சுபா
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Subashini Tremmel

unread,
Mar 22, 2011, 9:17:50 AM3/22/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
ஒரு சிலர் இவ்வகை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகின்றது. நாம் தொடர்ந்து விபரங்கள் சேகரிக்க  வேண்டும். ஒரு திட்டம் மனதில் இருக்கின்றது. அதனை ஆரம்பித்துள்ளோம். வருகின்ற மாதங்களில் இதனை செயல்படுத்த முயற்சித்து வருகின்றோம். பெரியாச்சி மட்டுமல்லாது வேறு பல கிராமத்து தெய்வங்களைப் பற்றியும் முதலில் தகவல் தொகுத்து வருவோம். பின்னர் முழுமையானப் பணியை ஆரம்பிக்கலாம்.
 
-சுபா

2011/3/22 N. Ganesan <naa.g...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Subashini Tremmel

unread,
Mar 22, 2011, 9:24:21 AM3/22/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
Thanks Dr NV.
 
I'll watch them in the evening. As mentioned in my reply to Thiru.Ganesan, I've never heard of Periyachi amman in Malaysia, instead Goddess Kaliaman and Mariyamman are the most popular village deities in malaysia especially in the rubber and palm oil plantation area.
anbudan
suba
2011/3/22 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

Subashini Tremmel

unread,
Mar 22, 2011, 9:28:15 AM3/22/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
பெரியாச்சி காளியம்மனுக்கும் கூட டம்மீஸ் வந்திருக்கே.. ஆச்சரியம் தான்.
ஆனால் இந்த ப்ளோகில் பெரியாச்சி காளியம்மன் என்று பெயர் போட்டிருக்கின்றார்கள்... காளியும் பெரியாச்சியும் கலந்த ஒரு வடிவமோ..
-சுபா
2011/3/22 N. Ganesan <naa.g...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Geetha Sambasivam

unread,
Mar 22, 2011, 9:49:59 AM3/22/11
to mint...@googlegroups.com
பெரியாச்சி நான்கு நாட்களாய் மண்டையைக் குடைகிறாள்.  என்றாலும் விரைவில் தகவல்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. நன்றி.  சக்தியின் பல்வேறு வடிவங்களே, பெரியாச்சி, பெரியாண்டியாச்சி, பேச்சி அம்மன், காளி அம்மன், ரேணுகாதேவி, மாரியம்மன், அங்காள பரமேஸ்வரி, கருமாரி, பவானி, பாளையத்தம்மன், முத்துமாரி, காத்தாயி அம்மன், திரெளபதி அம்மன் எனப் பலர்.

2011/3/22 Subashini Tremmel <ksuba...@gmail.com>

N. Ganesan

unread,
Mar 22, 2011, 12:14:56 PM3/22/11
to மின்தமிழ்

காவிரி நதியின் கழிமுகத்தின்(Kaveri delta) சிறுதெய்வம் -
பெரியாச்சி அம்மன்

ஸ்ரீமதி சுபா ட்ரெம்மெல் பெரியாச்சி படம் கொடுத்திருந்தார்:
http://groups.google.com/group/mintamil/msg/7c2edbeb9af2da3a
கருஞ்சீலை கட்டிய பெரியாச்சி காலில் கிடப்பது
வல்லாள ராசாவின் தலை. சற்று விரிவாகப் பார்ப்போம்.

http://en.wikipedia.org/wiki/Periyachi
http://ram-esh-wara.blogspot.com/2008/12/well-known-goddess-with-unknown-history.html
பெரியாச்சியின் இருபுறத்திலும் முனீசுவரனையும்,
மதுரை வீரனும் இருப்பர். பெரியாச்சி கதைகள்
உருவாகி 4 அல்லது 5 நூற்றாண்டுகள் இருக்கும்.
150 ஆண்டுகளாக வல்லாள ராசன் கதை அச்சாகி
இருக்கிறது. உ-ம்: சிறுமணவூர் முனிசாமி முதலியார், துரைசாமி படையாச்சி,

வரிசைமுகையத்தீன் புலவர், ...

அண்மையில்,

எஸ். ஏ. கே. துர்கா, 1978, வல்லாள ராஜன் யட்சகானம்.

பெரியாச்சி சிலை விவரம்:
http://upload.wikimedia.org/wikipedia/commons/2/28/Periachi.jpg
காளியின் ஒரு அண்மைக்கால வடிவமாக
பெரியாச்சி உருவாக்கப்படுகிறாள். திரிசூலத்தை
ஏந்தி தாருகாசுரனை வதைக்கும் காளி,
பெரியாச்சியாய் வல்லாளராசனை மாய்க்கிறாள்.
வல்லாளராசன் மனைவி பெரியாச்சி மடியில்
கிடக்கிறாள். குழந்தை எடுக்கப்பட்டு கையில்
உயரே தூக்கப்பட்டுள்ளது. ராணியின் குடலைக்
குதறி, உருவி மாலையாகவும், வாயிலும் காணலாம்.

விநீதா ஸின்ஹாவின் புத்தகத்தில் பெரியாச்சி
பற்றிய செய்திகளோ, ஆய்வு வழிகாட்டிகளோ

இருக்கலாம்.

A New God in the Diaspora?: Muneeswaran Worship in Contemporary
Singapore
A New God in the Diaspora?: Muneeswaran Worship in Contemporary
Singapore

A New God examines the worship of a Hindu deity known as Muneeswaran
in contemporary Singapore. The strong presence and veneration of this
male deity on the island, and the innovative styles of religiosity now
associated with him, justify calling Muneeswaran a 'new' god in the
Indian diaspora. Vineeta Sinha documents a neglected aspect of local
Hinduism and the ritual domain surrounding guardian deities (kaval
deivam) such as Muneeswaran. She raises a broader question: why has
this deity, brought from Tamilnadu to Malaya more than 170 years ago,
such a strong appeal for young Singaporean Hindus three and four
generations removed from their Indian origins. Her exploration of
these issues provides an ethnographic documentation of urban-based
Hindu religiosity in contemporary Singapore, and makes an important
contribution to the global study of religion in the diasporas.
Vineeta SINHA earned her MA and PhD in Anthropology from Johns Hopkins
University, USA. She teaches in the Department of Sociology at the
National University of Singapore.

ஏ. கே. சாந்தாமணாளன், ராஜசுந்தரி: சிறுகதைத் தொகுப்பு,
1964, வாசு பிரசுரம். இதில் “பெரியாச்சி காப்பாற்றினாள்” என்ற

சிறுகதை இருக்கிறது. இதையும் தருவேன்.

நா. கணேசன்

http://karveldeivams.wordpress.com/periyachi-amman/
http://kathavarayan.skyrock.com/1424267867-SHREE-MAHA-PETIAYE-AMMAN.html

Subashini Tremmel

unread,
Mar 27, 2011, 11:17:53 AM3/27/11
to மின்தமிழ், Subashini Kanagasundaram
அதே ஆலயத்தில் பிரகாரத்திற்குப் பக்கத்தில் தனி கருவரையில் வைக்கப்பட்டிருக்கும் இன்னொரு பெரியாச்சி சிலையின் வடிவம்.
இந்த வடிவம் மிகக் கோரமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றது. சிலையின் கழுத்திலும் கையிலும் நரம்புகள்  தெரிவதைப் பாருங்கள். காலடியில் ஒரு சிங்க முகத்துடனான ஒரு வடிவம் கிடப்பதும் மடியில் ஒரு மனித வடிவம் பலியிடப்படுவதுமாக இந்த சிலை வடிக்கப்பட்டுள்ளது.

periyachi2.jpg

-சுபா

2011/3/17 Subashini Tremmel <ksuba...@gmail.com>
1.பெரியாச்சி
 
தஞ்சாவூர் மாவட்டத்தில் திருத்தரைபூண்டி தாண்டி நாகப்பட்டினம் செல்லும் வழியில் தலைஞாயிறு கிராமத்தில் ஒரு ஐயனார் ஆலயம் இருக்கின்றது. இந்த ஆலயத்தில் சில வித்தியாசமான கிராம தெய்வ வடிவங்களைப் பார்த்தேன்.  அதில் ஒன்று பெரியாச்சி தெய்வம்.
 
periyachi.jpg

இத்தெய்வத்திற்குப் பலி கொடுப்பதற்காக ஒரு சேவல் ஒன்றினை பிரகாரத்தின் வாசலிலேயே ஒரு மஞ்சள் கயிறு கட்டி  வைத்திருக்கின்றார்கள். இத்தெய்வத்திற்குக் கரிய நிறத்திலான புடவை அணிவித்திருக்கின்றார்கள். பெரியாச்சியின் பாதத்தில் ஒரு மனிதனின் சிலை ஒன்று இருக்கின்றது. இத்தெய்வ வழிபாட்டைப் பற்றிய தகவல் அறிந்தவர்கள் இந்த இழையில் தொடருங்கள்.
 
அன்புடன்
சுபா

periyachi2.jpg
periyachi.jpg

LK

unread,
Mar 27, 2011, 11:19:09 AM3/27/11
to mint...@googlegroups.com
பார்க்கவே பயமாக உள்ளதே

2011/3/27 Subashini Tremmel <ksuba...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
periyachi2.jpg
periyachi.jpg

Geetha Sambasivam

unread,
Mar 27, 2011, 11:21:49 AM3/27/11
to mint...@googlegroups.com
குறிச்சு வைச்சுக்கறேன் சுபா, சீக்கிரமாய்த்தகவல்கள் அளிக்க முயல்கிறேன்.  நன்றி.

2011/3/27 Subashini Tremmel <ksuba...@gmail.com>
அதே ஆலயத்தில் பிரகாரத்திற்குப் பக்கத்தில் தனி கருவரையில் வைக்கப்பட்டிருக்கும் இன்னொரு பெரியாச்சி சிலையின் வடிவம்.
இந்த வடிவம் மிகக் கோரமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றது. சிலையின் கழுத்திலும் கையிலும் நரம்புகள்  தெரிவதைப் பாருங்கள். காலடியில் ஒரு சிங்க முகத்துடனான ஒரு வடிவம் கிடப்பதும் மடியில் ஒரு மனித வடிவம் பலியிடப்படுவதுமாக இந்த சிலை வடிக்கப்பட்டுள்ளது.

Subashini Tremmel

unread,
Mar 27, 2011, 11:27:26 AM3/27/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
அவசரமில்லை திருமதி.கீதா. நான் நேரம் கிடைக்கும் போது படங்களை இங்கு பதிகிறேன். நீங்கள் தகவல் கிடைத்ததும் அதனை வழங்குங்கள்.
/சுபா 

2011/3/27 Geetha Sambasivam <geetha...@gmail.com>

N. Ganesan

unread,
Mar 27, 2011, 11:34:47 AM3/27/11
to மின்தமிழ்

On Mar 27, 10:17 am, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
> அதே ஆலயத்தில் பிரகாரத்திற்குப் பக்கத்தில் தனி கருவரையில்
> வைக்கப்பட்டிருக்கும் இன்னொரு பெரியாச்சி சிலையின் வடிவம்.
> இந்த வடிவம் மிகக் கோரமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றது. சிலையின்
> கழுத்திலும் கையிலும் நரம்புகள்  தெரிவதைப் பாருங்கள். காலடியில் ஒரு சிங்க
> முகத்துடனான ஒரு வடிவம் கிடப்பதும் மடியில் ஒரு மனித வடிவம் பலியிடப்படுவதுமாக
> இந்த சிலை வடிக்கப்பட்டுள்ளது.
>
> [image: periyachi2.jpg]
>

அருமையான பெரியாச்சி வடிவம்.

காலடியில் கிடப்பது வல்லாள ராசன். மடியில்
அவன் மனைவி. வயிற்றைக் கிழித்து மகவை
கையில் உயரே தூக்கியிருப்பாள் பெரியநாச்சி/பெரியாச்சி.

உடைவாளுடன் வல்லாளராசன் பெரியநாச்சி
காலடியிலும், மடியில் வயிறு குதறப்பட்ட ராணியும்.

பெரியாச்சி சிலை விவரம்:
http://upload.wikimedia.org/wikipedia/commons/2/28/Periachi.jpg
காளியின் ஒரு அண்மைக்கால வடிவமாக
பெரியாச்சி உருவாக்கப்படுகிறாள். திரிசூலத்தை
ஏந்தி தாருகாசுரனை வதைக்கும் காளி,
பெரியாச்சியாய் வல்லாளராசனை மாய்க்கிறாள்.
வல்லாளராசன் மனைவி பெரியாச்சி மடியில்
கிடக்கிறாள். குழந்தை எடுக்கப்பட்டு கையில்
உயரே தூக்கப்பட்டுள்ளது. ராணியின் குடலைக்
குதறி, உருவி மாலையாகவும், வாயிலும் காணலாம்.

http://groups.google.com/group/mintamil/msg/7af1c67bf64f8971

பெரியநாச்சி/பெரியாச்சி கதைகளை தொகுத்து
யாராவது பிஎச்டி செய்யலாம். புததகம் போடலாம்.

நா. கணேசன்

> -சுபா
>
> 2011/3/17 Subashini Tremmel <ksubash...@gmail.com>

>
>
>
>
>
> > *1.பெரியாச்சி*
>

> > தஞ்சாவூர் மாவட்டத்தில் திருத்தரைபூண்டி தாண்டி நாகப்பட்டினம் செல்லும்
> > வழியில் தலைஞாயிறு கிராமத்தில் ஒரு ஐயனார் ஆலயம் இருக்கின்றது. இந்த ஆலயத்தில்
> > சில வித்தியாசமான கிராம தெய்வ வடிவங்களைப் பார்த்தேன்.  அதில் ஒன்று பெரியாச்சி
> > தெய்வம்.
>
> > [image: periyachi.jpg]
>
> > இத்தெய்வத்திற்குப் பலி கொடுப்பதற்காக ஒரு சேவல் ஒன்றினை பிரகாரத்தின்
> > வாசலிலேயே ஒரு மஞ்சள் கயிறு கட்டி  வைத்திருக்கின்றார்கள். இத்தெய்வத்திற்குக்
> > கரிய நிறத்திலான புடவை அணிவித்திருக்கின்றார்கள். பெரியாச்சியின் பாதத்தில் ஒரு
> > மனிதனின் சிலை ஒன்று இருக்கின்றது. இத்தெய்வ வழிபாட்டைப் பற்றிய தகவல்
> > அறிந்தவர்கள் இந்த இழையில் தொடருங்கள்.
>
> > அன்புடன்
> > சுபா
>
> --

> Suba Tremmelhttp://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!http://subahome2.blogspot.com-  ஜெர்மனி நினைவலைகள்..!http://subaillam.blogspot.com- மலேசிய நினைவுகள்..!http://ksuba.blogspot.com- Suba's Musings
>
>  periyachi2.jpg
> 96KViewDownload
>
>  periyachi.jpg
> 101KViewDownload- Hide quoted text -

N. Ganesan

unread,
Mar 27, 2011, 11:52:47 AM3/27/11
to மின்தமிழ்

பெரியாச்சி வழிபாடு திருவண்ணாமலை பக்கம்
உருவானதால் (Ballalaraja) வன்னிய சமூகத்தினரிடம் உண்டு.
தஞ்சையில் இருப்பதால் கள்ளர் சமுதாயத்தினரிடமும் உண்டா?

முனைவர் கல்பனா சேக்கிழார் போன்றோருக்கு
தெரியலாம்.

நன்றி,
நா. கணேசன்

Subashini Tremmel

unread,
Mar 28, 2011, 11:19:01 AM3/28/11
to mint...@googlegroups.com, N. Ganesan, Subashini Kanagasundaram
திரு.கணேசன்,
நீங்கள் குறிப்பிட்டுள்ள  http://en.wikipedia.org/wiki/Periyachi வள்ளாலராசன் கதை ஒரளவு குறிப்பிடப்படுகின்றது. கன்னிமாரா நூலக லிங்க் வேறு ஏதோ ஒரு புத்தகத்திற்கு இட்டுச் செல்கின்றது.
>>150 ஆண்டுகளாக வல்லாள ராசன் கதை அச்சாகி
இருக்கிறது. உ-ம்: சிறுமணவூர் முனிசாமி முதலியார், துரைசாமி படையாச்சி,
வரிசைமுகையத்தீன் புலவர், ...
அண்மையில்,
எஸ். ஏ. கே. துர்கா, 1978, வல்லாள ராஜன் யட்சகானம்.
 
இந்த தகவல் எங்கே உள்ளது. இந்த நூல் கிடைக்க வாய்ப்புள்ளதா? தமிழக பல்கலைக்கழக் நூலகங்களில் கிடைக்க வாய்ப்புள்ளதா?
 
-சுபா
 
2011/3/27 N. Ganesan <naa.g...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

ஜடாயு

unread,
Mar 29, 2011, 6:53:06 AM3/29/11
to மின்தமிழ்
On Mar 18, 10:11 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:

> பண்டைத்தமிழர் சமுதாயம் மேட்ரியார்க்கல் என்ற பெண்வழிச் சமுதாயமாக நிலவியது.
> அல்லி, நீலி என்ற நீலகேசி, குண்டலகேசி.போன்ற தொன்மங்கள் பெண்கள் சார்ந்த
> கருத்துநிலைகளை வெளிப்பத்துவதாக்க் கருதலாம்.  வடபுலத் தாக்கத்தால் திரெளபதி
> அம்மன் மாரியம்மன் போல கிராமத்தெய்வமாக  செங்கல்பட்டு, வட தென் ஆற்காடு மற்றும்
> சேலம் மாவட்டங்களில் பெண்தெய்வமாகவும்  பறையர் பழையர் (பள்ளர், பளியர்) மக்கள்
> காந்த்ரி அம்மனை வணங்கினர்

அபத்தமான கருத்து. காலனிய நோக்குடைய கிறிஸ்தவ மிஷனரி ஆய்வாளர்கள் நமது
’நாட்டார் வழக்காற்றியல்’ துறைகளைக் குதறிப் போட்டு சொன்ன பல
கருத்துக்களில் ஒன்று இது. ஆரிய திராவிட இனவாதம் போலவே நிராகரிக்கப் பட
வேண்டியது.

தாய் தெய்வம் பற்றிய கருத்தாக்கம் பண்டைத் தமிழகத்திற்கு மட்டுமே
சொந்தமானதல்ல, It is a part of the overall Indic tradition. வேதங்களில்
பல பெண் தெய்வங்கள் (உஷா, ராத்ரி, வாக், சரஸ்வதி, பூமி, அதிதி..)
குறிப்பிடப் படுகின்றனர். அதிதி, பூமி முதலான தெய்வங்கள் குறிப்பாகத்
தாய்மையுடன் தொடர்பு படுத்தப் படுகின்றன. இந்தியாவிலேயே ஆகத் தொன்மையான
தாய் தெய்வ வடிவங்கள் (யக்ஷி, லஜ்ஜா கௌரி போன்றவை) மதுரா, சாரநாத்,
உஜ்ஜயின் போன்ற வட பாரதப் பிரதேசங்களில் கிடைத்துள்ளன.

தமிழகத்தை விட மிகத் தீவிரமாக அஸ்ஸாம், வங்கம் ஆகிய பாரதத்தின் கிழக்குப்
பகுதிகளிலேயே சாக்தமும், தாந்திரீகமும் வளர்ந்துள்ளது என்பதையும்
கவனத்தில் கொள்ளவும்.

சிலப்பதிகாரத்திலேயே பழங்குடித் தன்மையும் வைதீக,தத்துவார்த்த தன்மையும்
ஒன்றிணைந்த பராசக்தியின் தெய்வீக வடிவம் மிகவும் பிரபலமடைந்து விட்டது.
உதாரணமாக இந்தப் பாடலைப் பாருங்கள் -

ஆனைத்தோல் போர்த்துப் புலியின் உரியுடுத்துக்
கானத் தெருமைக் கருந்தலைமேல் நின்றாயால்

இது தெளிவான பழங்குடி அடையாளங்கள் கொண்ட Tribal Goddess வடிவம். ஆனால்
அடுத்த இரண்டு வரிகளிலேயே,

வானோர் வணங்க மறைமேல் மறையாகி
ஞானக் கொழுந்தாய் நடுக்கின்றி யேநிற்பாய்;

என்று வருகிறது. மறைமேல் மறையாகி என்ற தொடர் அப்படியே ‘ஸ்ருதி ஸீமந்த
சிந்தூரீ க்ருதபாதாப்ஜ தூலிகா’ என்ற லலிதா சகஸ்ரநாமப் பெயரின் எதிரொலி
கொண்டது.

அதை விட முக்கியமானது இந்தப் பாடலை காட்டில் உள்ள வேட்டுவர்கள் பாடும்
“வேட்டுவ வரி” என்பதாக இளங்கோ எழுதியிருப்பது!

>
> பெண்தெய்வம் தொடர்பான தொன்மங்களில் ஆண்துணையின்றிக்கருவுற்றதான "immaculate
> conception" இடம்பெற்றுள்ளது.  

இதன் அடுத்த படியாக, இது நேரே தோமா திராவிட கிறிஸ்தவத்தில் போய்
நிற்கும்.

மகாபாரத தொன்மத்தில் குந்திதேவி ஆண் துணையின்றி கருவுற்றாளே என்ற எளிய
கேள்வியை யாராவது கேட்டால் அது ஆரிய சதி என்று முத்திரை குத்தப் படும்.
நல்ல ஆய்வு, நல்ல முடிவு!

காலனிய கண்ணாடிகளைத் தூர எறிந்து விட்டு உங்கள் பண்பாட்டை உங்கள்
சுயமூளையுடன் சிந்தித்து கண்ணைத் திறந்து பாருங்கள்.

அன்புடன்,
ஜடாயு

ஜடாயு

unread,
Mar 29, 2011, 7:08:21 AM3/29/11
to மின்தமிழ்
On Mar 22, 12:13 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:

>
> ஆங்கிலத்தில் 200 வருஷமாய் இக்கதைகள் அலசப்படுகின்றன.
> சிக்காகோவில் ஒரு பெண் பேராசிரியை (டானிகர்) நிறைய எழுதியுள்ளார்.

யார்? Wendy Doniger என்பவரைத் தானே சொல்கிறீர்கள்? அரைகுறைப்
புலமையும், மோசமான பிறழ்வுகளும், வக்கிர மனோபாவமும், உள்நோக்கங்களும்
கொண்டவை இவர் “ஆய்வு”கள். நம்ம மோகனரங்கன் சார் இவரது ”ஆய்வுகளை”
முழுசாக அம்பலப் படுத்தி முன்பே எழுதியிருக்கிறார். இந்தக் கட்டுரை
பார்க்கவும் - http://www.tamilhindu.com/2009/11/invading-the-sacred-book-review-2/

பொதுவான ஒரு விஷயம். வெளிநாட்டு பல்கலைகளால் செய்யப் படும் இத்தகைய
ஆய்வுகள் *பெரும்பாலும்*, இந்தியப் பண்பாட்டையும், சமூகத்தையும்
பிளவுபடுத்தும், மோசமாக சித்தரிக்கும் உள்நோக்கத்துடனேயே செய்யப்
படுகின்றன (விதிவிலக்குகள் உண்டு, மிகக் குறைவு). சிகோகோ பல்கலையின்
இந்தியா/தெற்காசியா துறை ஒரு அப்பட்டமான அஜெண்டாவுடன் செயல்படக் கூடியது.
அது பற்றிய முழு தோலுரிப்பையும் நீங்கள் அரவிந்தன் நீலகண்டனும், ராஜீவ்
மல்ஹோத்ராவும் இணைந்து எழுதியுள்ள Breaking India புத்தகத்தில்
படிக்கலாம். இத்தகைய அஜெண்டாக்கள் கொண்ட வெளிநாட்டுப் பல்கலைத் துறைகள்,
அவற்றில் உள்ள பேராசிரியர்கள், ஆய்வாளர்களை பெயர் குறிப்பிட்டு
ஒவ்வொன்றாக அலசியிருக்கிறார்கள் - http://breakingindia.com/.

N. Ganesan

unread,
Mar 29, 2011, 8:01:55 AM3/29/11
to மின்தமிழ்

On Mar 29, 6:08 am, ஜடாயு <jataay...@gmail.com> wrote:
> On Mar 22, 12:13 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
> > ஆங்கிலத்தில் 200 வருஷமாய் இக்கதைகள் அலசப்படுகின்றன.
> > சிக்காகோவில் ஒரு பெண் பேராசிரியை (டானிகர்) நிறைய எழுதியுள்ளார்.
>
> யார்? Wendy Doniger என்பவரைத் தானே சொல்கிறீர்கள்? அரைகுறைப்
> புலமையும்,  மோசமான பிறழ்வுகளும், வக்கிர மனோபாவமும், உள்நோக்கங்களும்
> கொண்டவை இவர் “ஆய்வு”கள்.   நம்ம மோகனரங்கன் சார் இவரது ”ஆய்வுகளை”
> முழுசாக அம்பலப் படுத்தி முன்பே எழுதியிருக்கிறார். இந்தக்  கட்டுரை

> பார்க்கவும்  -http://www.tamilhindu.com/2009/11/invading-the-sacred-book-review-2/

>
> பொதுவான ஒரு விஷயம். வெளிநாட்டு பல்கலைகளால் செய்யப் படும் இத்தகைய
> ஆய்வுகள் *பெரும்பாலும்*, இந்தியப் பண்பாட்டையும், சமூகத்தையும்
> பிளவுபடுத்தும், மோசமாக சித்தரிக்கும் உள்நோக்கத்துடனேயே செய்யப்
> படுகின்றன (விதிவிலக்குகள் உண்டு, மிகக் குறைவு). சிகோகோ பல்கலையின்
> இந்தியா/தெற்காசியா துறை ஒரு அப்பட்டமான அஜெண்டாவுடன் செயல்படக் கூடியது.
> அது பற்றிய முழு தோலுரிப்பையும் நீங்கள் அரவிந்தன் நீலகண்டனும், ராஜீவ்
> மல்ஹோத்ராவும் இணைந்து எழுதியுள்ள Breaking India புத்தகத்தில்
> படிக்கலாம். இத்தகைய அஜெண்டாக்கள் கொண்ட வெளிநாட்டுப் பல்கலைத் துறைகள்,
> அவற்றில் உள்ள பேராசிரியர்கள், ஆய்வாளர்களை பெயர் குறிப்பிட்டு
> ஒவ்வொன்றாக அலசியிருக்கிறார்கள் -  http://breakingindia.com/.

படித்துப் பார்க்கிறேன். ராஜீவை தெரியும். புத்தகம் எனக்கு
அனுப்பிவைக்கச் சொல்கிறேன். இந்தாலஜிஸ்ட்களுக்கு
தமிழ், சம்ஸ்க்ருதம் தரும் அரிய பணியை பிரெஞ்சு நிறுவனம்
பாண்டிச்சேரியில் பல காலமாக செய்கிறது. இந்தாலஜிஸ்ட்ஸ்
சுவெபில், ழான், ராஜம், ஏவா, ... யார் எழுதினாலும் மூல மொழியும்
அந்த நூல்களும் தேடிப் படித்தல் சிறப்பு. இந்தாலஜிஸ்ட் பார்வை
மேலைநாட்டுக் கோணம் ஆகும். ஸ்ரீ ரங்கன் அவர்கள் சில இழைகளில்
இவை பற்றி தன் பார்வையை எழுதி வருவதாக அறிகிறேன்,
இன்னும் முழுதும் படிக்கவில்லை. வெப்பில் இருந்து பார்ப்பதால்
தட்டுப்பட்ட மடலுக்கு பதில் எழுதுவது என் வழக்கம்.

அன்பினால் செய்வது என்று இங்கு சொல்லப்பட்டது.
அன்பினாலா? அறிவுத் தேடலுக்கா? ’க்னாலட்ஜ் ஈஸ் பவர்’
வன்பாக்கம் விஜய் சில ஆண்டுமுன்னர் எழுதியதாய்
நினைவு: பாக்டீரியாவை மைக்ராஸ்கோப்பில் பார்க்கும்
பணி இந்தாலஜிஸ்ட்ஸ் உடையது. இக் கருத்தை இந்தியர்கள்
குழுக்கள் பலவற்றில் பார்த்திருக்கிறேன்.
ஆனால், பணம், இடையறா முயற்சி, டேட்டா கலெக்‌ஷன்,
ஆராய்ச்சி, செமினார்கள், புத்தகப் பதிப்பு ... என்று இந்தாலஜிஸ்ட்ஸ் போல்
இந்தியாவில் யார் செய்கிறார்கள்? ஆயிரக்கணக்கில்
மாணவர்கள் ஹிந்துயிஸம், புத்திஸம், ... அதற்கு பேராசிரிய முனைவர்கள், ...
என்று கொண்ட பெரும்படை இயங்குகிறது.

மிகப்பெரிய, 5000 ஆண்டு பழமை கொண்ட தேசம் பாரதம். பல
உள்நாட்டு, வெளிநாட்டு பார்வைகள், ஆராய்ச்சிகளைத் தாங்க வல்லது. பழைய
திராவிட என்ற சொல்லுக்கும், இந்தாலஜிஸ்ட்ஸ்
சொன்ன திராவிட என்ற சொல்லுக்கும் பொருள் வேற்றுமை உண்டு.
ஆராய்ச்சிகள் கொண்டுசெல்லும் வழி அது.

நா. கணேசன்

devoo

unread,
Mar 29, 2011, 9:26:29 AM3/29/11
to மின்தமிழ்
>> வானோர் வணங்க மறைமேல் மறையாகி
னக் கொழுந்தாய் நடுக்கின்றி யேநிற்பாய்;
என்று வருகிறது. மறைமேல் மறையாகி என்ற தொடர் அப்படியே ‘ஸ்ருதி ஸீமந்த
சிந்தூரீ க்ருதபாதாப்ஜ தூலிகா’ என்ற
லலிதா சகஸ்ரநாமப் பெயரின் எதிரொலி கொண்டது <<

அருமை ஐயா,

பல தவறான கருத்துகளுக்குக் காரணம் வடமொழியிலிருந்தும், மதக்
கல்வியிலிருந்தும் தமிழர்கள் அந்நியப்படுத்தப்பட்டு நிற்பதுதான்;
‘வேர்களை இழந்து விட்டோம்’ எனும் உணர்வு கொண்டவர்கள் வெகுசிலரே.சிறு
தெய்வ வழிபாடு தமிழகத்தில்
மட்டுமே என்பதும் பலரது ஆழமான நம்பிக்கை

தேவ்

Dhivakar

unread,
Mar 29, 2011, 11:26:36 AM3/29/11
to mint...@googlegroups.com
>>சிறு தெய்வ வழிபாடு தமிழகத்தில் மட்டுமே என்பதும் பலரது ஆழமான நம்பிக்கை
தேவ் காரு!

தமிழகத்தில்  மட்டுமே என்பதை விட தமிழகத்திலும் என்பதுதான் சரியாக இருக்கும். ஆந்திர, ஒடிஷ, வங்காளத்தில் மிக மிக அதிகம்,

ஏன் மிஷினரிகள் ஒடிஷாவில் இத்தனை அதிக அளவில் பிரச்சாரம் செய்தாலும், வெற்றி பெற வில்லை என்பது ஒரு கேள்விக்குறி. இதற்குப் பதில் சிறுதெய்வ வழிப்பாடுதான். ஒடிஷா மலைவாழ் மக்களின் தெய்வங்கள் எல்லாம் நீங்கள் குறிப்பிடும் அளவில் பெயர் பெற்றதுதான். மிஷினரிகள் சிவனை, விஷ்ணுவை, வேதத்தை, இன்னும் இந்து மதத்தை எந்த அளவில் குறை சொல்லவேண்டுமோ, அந்த அளவில் குறை சொல்லியாயிற்று. மலைவாழ்மக்கள் இவை யாவற்றையும் ஏற்றுக் கொள்கிறார்களா என்றால் அடிக்க அடிக்க அம்மியும் நகரும் என்பது போல ஓரளவு முக்கியத்துவம் கொடுத்து மதம் மாறத்தான் செய்கிறார்கள். ஆனால் எந்த மதம் மாறினாலும், தங்கள் சிறு தெய்வ வழிபாட்டை மட்டும் விடவில்லை. அது பாட்டுக்கு அது, இது பாட்டுக்கு இது. இன்னமும் சொல்லப் போனால் சிறுதெய்வ வழிபாடு என்று நீங்கள் சொல்லும் நிலைப்பாடுதான் மதம் மாற்றப்பட்ட இந்த ஏழை மக்களுக்கு இந்து மதத்தின் பால் விட்ட குறை தொட்ட குறையாக தொடர்பை இன்னமும் வைத்திருக்கிறது. ஊர்க்காவல் செய்யும் அம்மனை யாராவது குறை சொன்னால் கலவரமே வெடிக்கும் என்பதும் இங்கு சகஜம்தான்.

ஒடிஷாவில் மதமாற்றக் கலவரம் நினைவிருக்கலாம். ஜார்கண்ட் மாநிலத்தின் கிழக்குப் பகுதியிலும் ஒடிஷாவின் மேற்குப் பகுதியிலும் இந்த மத மாற்றங்கள் ஜரூராக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஒரு மூன்று மாதத்துக்கு முன்பு கூட தமிழ்நாட்டு ஏற்காட்டில் மிகப் பெரிய மிஷனரி மாநாட்டில் இந்தப் பகுதியைச் சேர்ந்தோர் மிக அதிக அளவில் கலந்து கொண்டனர். ஆனாலும் இவர்கள் அனைவருமே தங்கள் பகுதியில் நடைபெறும் சிறு தெய்வ வழிபாடுகளைக் கடைவிடுவதாக இல்லை.

சிறு தெய்வ வழிபாடுகள் மதமாற்றத்திலும் மனமாற்றத்தை ஏற்படுவதைத் தடுக்கின்றன. 

2011/3/29 devoo <rde...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Innamburan Innamburan

unread,
Mar 29, 2011, 11:47:11 AM3/29/11
to mint...@googlegroups.com
"சிறு தெய்வ வழிபாடுகள் மதமாற்றத்திலும் மனமாற்றத்தை ஏற்படுவதைத் தடுக்கின்றன." 

- இந்த முடிபு ஆழ்ந்த கவனத்துடன் சிந்திக்க வேண்டிய  மனிதவியல் கருத்து. மனிதனின் மனப்போக்கு வேறு; அன்றாட நடைமுறை வேறு, தொன்மைக்காலத்திலிருந்து. மனப்போக்கு அவனவனை சார்ந்தது; அது தனித்திருக்கும் உலகம். அன்றாட நடைமுறையோ சமுதாயத்தை சார்ந்தது. கிருத்துவ மிஷனரிகளால், இரு நூறாண்டுகளாக மதம் மாற்றப்பட்டு, கிருத்துவர்களாகவும், ஆங்கிலத்தை தாய்மொழியாக ஸ்வீகரித்துக்கொண்ட வடகிழக்கு மாநிலங்களிலும் சிறு தெய்வங்கள் மதிப்புடன் வணங்கப்படுகின்றன.
இன்னம்பூரான்
29 03 2011

2011/3/29 Dhivakar <venkdh...@gmail.com>

Subashini Tremmel

unread,
Mar 29, 2011, 2:26:48 PM3/29/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
இந்த விழியத்தைப் பாருங்கள். 

அழகாக அம்மனை களிமண்ணில் வடித்து அச்சிலைக்கு அலங்காரம் செய்து பின்னர் ஊர்வலமாக அழைத்து வருகின்றனர். அதேபோல, கருப்பு சாமி, முனியாண்டி சாமிகளையும் களிமண்ணில் வடிக்கும் கலையைப் பாருங்கள். 
இதில் அம்மன் சிலை வடிப்பவரின் விரல்களில் அசைவும் அது உருவாக்கும் வடிவமும் அருமை.

-சுபா

N. Ganesan

unread,
Mar 29, 2011, 2:35:02 PM3/29/11
to மின்தமிழ்

On Mar 28, 10:19 am, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
> திரு.கணேசன்,

> நீங்கள் குறிப்பிட்டுள்ள  http://en.wikipedia.org/wiki/Periyachiவள்ளாலராசன்

> கதை ஒரளவு குறிப்பிடப்படுகின்றது. கன்னிமாரா நூலக லிங்க் வேறு ஏதோ ஒரு
> புத்தகத்திற்கு இட்டுச் செல்கின்றது.>>150 ஆண்டுகளாக வல்லாள ராசன் கதை அச்சாகி
>
> இருக்கிறது. உ-ம்: சிறுமணவூர் முனிசாமி முதலியார், துரைசாமி படையாச்சி,
> வரிசைமுகையத்தீன் புலவர், ...
> அண்மையில்,
> எஸ். ஏ. கே. துர்கா, 1978, வல்லாள ராஜன் யட்சகானம்.
>

நிச்சயம் தமிழக லைப்ரரிகளில் இருக்கும்.
எஸ். ஏ. கே. துர்க்கா சென்னையில் இருக்கலாம்,
அவர் குடும்பத்தாரை இணையத்தில் சிலர் அறியலாம்.

இந்நூலை நான் பெற்றுப் படித்தபின் கருத்து
தெரிவிக்கிறேன்.

க.

> இந்த தகவல் எங்கே உள்ளது. இந்த நூல் கிடைக்க வாய்ப்புள்ளதா? தமிழக பல்கலைக்கழக்
> நூலகங்களில் கிடைக்க வாய்ப்புள்ளதா?
>
> -சுபா
>

> 2011/3/27 N. Ganesan <naa.gane...@gmail.com>

> > > Suba Tremmelhttp://subastravel.blogspot.com-சுபாவின் பயணங்கள்
> > தொடர்கின்றன..!http://subahome2.blogspot.com- ஜெர்மனி நினைவலைகள்..!
> >http://subaillam.blogspot.com-மலேசிய நினைவுகள்..!
> >http://ksuba.blogspot.com-Suba's Musings

>
> > >  periyachi2.jpg
> > > 96KViewDownload
>
> > >  periyachi.jpg
> > > 101KViewDownload- Hide quoted text -
>
> > > - Show quoted text -
>
> > --
> >  "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,

> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> --

> Suba Tremmelhttp://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!http://subahome2.blogspot.com-  ஜெர்மனி நினைவலைகள்..!http://subaillam.blogspot.com- மலேசிய நினைவுகள்..!http://ksuba.blogspot.com- Suba's Musings- Hide quoted text -

devoo

unread,
Mar 29, 2011, 3:08:20 PM3/29/11
to மின்தமிழ்
>> ஆந்திர, ஒடிஷ, வங்காளத்தில் மிக மிக அதிகம்.. <<

Village deities in nepal -

Every village has their own deity, commonly known as Bhuinyar. Tharu
in East Nepal call their deity Gor-raja.

http://www.nirvanahorsesresort.com/tharu_people.php

dev

> ...
>
> read more »

MANICKAM POOPATHI

unread,
Mar 29, 2011, 5:30:16 PM3/29/11
to mint...@googlegroups.com
வணக்கம் நண்பர்களே:

கோயிலில்லா ஊரில் குடியிருப்பது ஆகாது என்பதால்
குன்றிருக்கும் இடந்தோறும்  குருபரனுக்கும்
ஊர்தோறும் __________ அம்மனுக்கும் (Localization of Goddess)
என கோயில்கள் தொன்று  தொட்டு இருந்து வருகின்றன...?

(சிவ)காமிக்கு* இலட்சத்தி எண்ணாயிரம் திருநாமங்கள் என்பார்கள்தானே..?
அதில் ஒன்று  ஜக்கம்மா.. அது தமிழில் இசக்கியம்மன் என்றாகும்.. இல்லீங்களா..?

இந்தியத் திரு நாட்டில்
புகழ் பெற்ற பெரிய கோயில்களுள்..
குறிப்பாக 'இரண்டு' பெரும் மா'நகர கோயில்களில்..
(அவற்றுள் ஒன்று கொல்'கத்தா 'நகரில் உள்ளது  (Kali-ghat...))
நாளது வரை.. இரத்த பலி கொடுக்கப்படுவதும்.. ((( இரத்தம் = உயிர் )))
தலைமைக் குருக்கள் (பட்டாச்சாரியார்) இரத்தத் திலகம் தீட்டு வதுடன்..
பூசை புனஷ்காரங்க்களை  தொடங்கி நடத்தப் படுவதும்..
இந்த நாகரிக யுகத்திலும் தொடர்ந்து வருவது..
மிகப் பெரிய தலை குனிவு ஆகும்.

வழிபாட்டு தளங்களில்.. எப்பாடு பட்டாகிலும்
உயிர் பலி  தவிர்க்கப் பட்டாக வேண்டும் என்பதின்
வெளிப்பாடுதானே..  நெற்றியில் தீட்டு'ம் சந்'தனம் குங்குமம்..??

பெரியவர்கள் ஆவன செய்ய வேண்டும்.

மிக்க நன்றி...!

அன்புடன்.../பூபதி செ. மாணிக்கம்

________________________________________
அமாம்.. கீழே கிடக்கும் 'வெள்ளை'த் தலைக்கு
இன்னும் சொந்தம் கொண்டாடுவோர் யாரோ..???

[A Kami]  is any thing or phenomenon that produces the emotions
of fear and awe.. with no distinction between good and evil....
_______________________________
2011/3/17 LK <karthik.lv@gmail.com>
பொதுவாக நெறைய கிராமத்துத் தெய்வங்களின் காலடியில் இப்படிப்பட்ட ஒரு மனிதத் தலை இருப்பதைப் பார்க்கலாம் 

2011/3/18 coral shree <cor...@gmail.com>
அருமை சுபா. தொடருங்கள். நன்றி.

2011/3/17 Subashini Tremmel <ksuba...@gmail.com>
1.பெரியாச்சி
 
தஞ்சாவூர் மாவட்டத்தில் திருத்தரைபூண்டி தாண்டி நாகப்பட்டினம் செல்லும் வழியில் தலைஞாயிறு கிராமத்தில் ஒரு ஐயனார் ஆலயம் இருக்கின்றது. இந்த ஆலயத்தில் சில வித்தியாசமான கிராம தெய்வ வடிவங்களைப் பார்த்தேன்.  அதில் ஒன்று பெரியாச்சி தெய்வம்.
 
periyachi.jpg

இத்தெய்வத்திற்குப் பலி கொடுப்பதற்காக ஒரு சேவல் ஒன்றினை பிரகாரத்தின் வாசலிலேயே ஒரு மஞ்சள் கயிறு கட்டி  வைத்திருக்கின்றார்கள். இத்தெய்வத்திற்குக் கரிய நிறத்திலான புடவை அணிவித்திருக்கின்றார்கள். பெரியாச்சியின் பாதத்தில் ஒரு மனிதனின் சிலை ஒன்று இருக்கின்றது. இத்தெய்வ வழிபாட்டைப் பற்றிய தகவல் அறிந்தவர்கள் இந்த இழையில் தொடருங்கள்.
 
அன்புடன்
சுபா

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--

மின் செய்தி மாலை படியுங்கள்.
Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

ஜடாயு

unread,
Mar 29, 2011, 10:55:29 PM3/29/11
to மின்தமிழ்
// இந்து “பெரும்” தெய்வங்களை விட சிறுதெய்வங்களைத் தான் இன்னமே எளிதாக
கிறிஸ்தவர்களால் அடையாளம் காண்பிக்க முடியும். //

”கிறிஸ்தவர்களால் சாத்தானாக அடையாளம் காண்பிக்க முடியும்” என்று
படிக்கவும்.

ஜடாயு

unread,
Mar 29, 2011, 10:52:23 PM3/29/11
to மின்தமிழ்
On Mar 29, 8:26 pm, Dhivakar <venkdhiva...@gmail.com> wrote:

> எந்த மதம் மாறினாலும், தங்கள் சிறு தெய்வ வழிபாட்டை மட்டும் விடவில்லை. அது
> பாட்டுக்கு அது, இது பாட்டுக்கு இது. இன்னமும் சொல்லப் போனால் சிறுதெய்வ
> வழிபாடு என்று நீங்கள் சொல்லும் நிலைப்பாடுதான் மதம் மாற்றப்பட்ட இந்த ஏழை
> மக்களுக்கு இந்து மதத்தின் பால் விட்ட குறை தொட்ட குறையாக தொடர்பை இன்னமும்
> வைத்திருக்கிறது.

அன்புள்ள திவாகர், இது ஒரு தற்காலிக்க இடைநிலைப் போக்கு (intermediate
position) மட்டுமே. ஒரு குறிப்பிட்ட சமூகத்தில்/பிரதேசத்தில்/சாதியில்
குறிப்பிட்ட அளவு மக்கள் கிறிஸ்தவத்துக்கு வரும் வரை மிஷநரிகளே இதைக்
கண்டும் காணாதிருப்பார்கள். ஆனால் அந்த threshold தாண்டியதும்,
வன்மத்துடன் எல்லா பிறமத வழிபாடுகளும் அழித்து ஒழிக்கப் படும். சொல்லப்
போனால், இந்து “பெரும்” தெய்வங்களை விட சிறுதெய்வங்களைத் தான் இன்னமே

எளிதாக கிறிஸ்தவர்களால் அடையாளம் காண்பிக்க முடியும்.

எத்தனையோ உதாரணங்கள் இதற்கு சொல்லலாம்.

அயர்லாந்தின் பேட்ரன் செயிண்ட் என்று கத்தோலிக்கர்களால் போற்றப் படும்
செயிண்ட் பாட்ரிக், அந்த நாட்டில் நிலவிய நாக வழிபாடுகளையும், பெண் தெய்வ
வழிபாடுகளையும், அந்த வழிபாடுகள் செய்து வந்த மக்களையும் சுவடே இல்லாமல்
ஈவிரக்கமின்றி கொன்றொழித்தார். அவருக்கு annihilator of snakes என்ற
பட்டப் பெயரே ஏற்பட்டது! (ஒப்பீட்டில் நமது ரிஷிகள் என்ன செய்தார்கள்?
சிவனது கழுத்தில் நாகத்தை அணிவித்தார்கள், திருமாலைப் பாம்பனையில்
படுக்கவைத்தார்கள், நாகேஸ்வரி அம்மனை உருவாக்கினார்கள், நாக வழிபாட்டை
வைதீக சமயத்துடன் இரண்டறக் கலந்தார்கள்).

நாகாலாந்தும், மிசோரமும் இன்று ஏறக்குறைய் 95% கிறிஸ்தவ மயமாகி விட்டன.
அங்கு பழைய வழிபாட்டு முறையின் எல்லா சுவடுகளும் ஒழிக்கப் பட்டு விட்டன.
அருணாசல், மேகாலயா, மணிப்பூர் ஆகியவை இடை நிலையில் உள்ளன - எனவே தான்
அங்கு சிறுதெய்வ வழிபாடுகள் தொடர்கின்றன.

ஏன், நம்ம தமிழ்நாட்டை எடுத்துக் கொள்ளுங்கள். தென் தமிழ்க
(தூத்துக்குடி, குமரி மாவட்டங்கள்) பரதவர்கள் சமூகத்தின் ஒட்டுமொத்த
வரலாறும், சந்தன மாரியம்மன் போன்ற அவர்களது குலதெய்வங்களும் முற்றாகவே
கிறீஸ்தவத்தால் ஒழிக்கப் பட்டன. பெருமித மிக்க அவர்களது வரலாற்றை
அவர்கள் காட்டுமிராண்டிகளாக இருந்ததாக பாதிரிகளே திரித்து எழுதினர். மிக
சமீப காலங்களில் தான் இது பற்றீய புரிதலே அந்த ச்மூகத்தில்
உண்டாகியிருக்கிறது.. ஜோ டி குரூஸ் அவர்களின் கொற்கை, ஆழி சூழ் உலகு ஆகிய
நாவல்கள் இது பற்றி விரிவாகவே பேசுகின்றன.

> ஏற்காட்டில் மிகப் பெரிய மிஷனரி மாநாட்டில் இந்தப் பகுதியைச் சேர்ந்தோர் மிக
> அதிக அளவில் கலந்து கொண்டனர். ஆனாலும் இவர்கள் அனைவருமே தங்கள் பகுதியில்
> நடைபெறும் சிறு தெய்வ வழிபாடுகளைக் கடைவிடுவதாக இல்லை.
> சிறு தெய்வ வழிபாடுகள் மதமாற்றத்திலும் மனமாற்றத்தை ஏற்படுவதைத் தடுக்கின்றன.

சாராம்சம் என்னவென்றால், இது மகிழ்ச்சிக்குரிய விஷயமல்ல. பெரும்
கவலைக்குரிய விஷயம்.

வெறும் பழங்குடி மரபு என்பதை மட்டும் வைத்துக் கொண்டு கிராம தெய்வ
வழிபாடுகள் நீடிக்க முடியாது, கிறிஸ்தவத்தின் வலுவான இறையியல் உறுமலுக்கு
முன்னால் அது நிற்கவே முடியாது. சைவ, வைணவ, சாக்த, வேதாந்த
தத்துவங்களின் ஒளியில் சிறுதெய்வ வழிபாடு என்று கூறப் படுவனவும்
உண்மையில் பரம்பொருள் சொரூபங்களே என்ற புரிதலை அனைத்து இந்துக்களிடமும்
உருவாக்குவதன் மூலமே நமது பண்பாட்டையும், சமயத்தையும் நாம் காப்பாற்ற
முடியும். குமரி மாவட்டத்தின் பல இசக்கி அம்மன், பேச்சி அம்மன்
கோயில்களில் விளக்கு பூஜைகளையும், ஸ்ரீராமகிருஷ்ணர் விவேகானந்தர்
திருவுருவங்களையும் நீங்கள் பார்க்கலாம். இவை “ஊடுருவல்கள்” அல்ல, இவையே
இந்த வழிபாடுகளின் இயல்பான பரிணாமமும், இவற்றைப் போற்றிக் காக்கும்
சரியான வழிமுறையுமாகும். ஸ்ரீ நாராயண குரு ஈழவர்களின் எல்லா உக்கிர
மூர்த்திகளின் கோயில்களிலும் கல்வித் தெய்வமான சரஸ்வதியின் உருவத்தையும்
சேர்த்து வணங்கச் சொன்னது ஏன் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

உள்ளூர் காவல் தெய்வமே என்று பாரதி பாடவில்லை, உலகத்து நாயகியே எங்கள்
முத்து மாரியம்மா என்று தான் பாடினார்.

Mohanarangan V Srirangam

unread,
Mar 29, 2011, 11:18:59 PM3/29/11
to mint...@googlegroups.com, ஜடாயு

2011/3/30 ஜடாயு <jata...@gmail.com>
நல்ல கவனப்படுத்தல் திரு ஜடாயு. மாலை வந்து இது விஷயமாய்ச் சில சொல்ல எண்ணம். நன்றி. 
 
Dhivakar

unread,
Mar 30, 2011, 1:08:06 AM3/30/11
to mint...@googlegroups.com
அன்புள்ள ஜடாயு அவர்களே!
உங்கள் கருத்துக்களோடு முழுதும் ஒத்துப் போகிறேன்.
நான் குறிப்பிட்டது இன்றைய நிலைதான். இன்றைய் தலைமுறை மக்கள் மதமாற்றத்தில் மனமாற்றத்தை தனிப்பட்ட அளவில் ஏற்க மறுக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளேன்.

ஆனால் நாளை இவர்கள் வாரிசுகள் நிலை என்ன.. நாளுக்கு நாள் மாறும் அதிநவநாகரீக காலத்தில் தன் அப்பாவும் தாத்தாவும் ஒரு காலத்தில் இந்த தெய்வத்தைக் கும்பிட்டார்களே என்று இவர்களும் கும்பிடுவார்களா என்றால் இது மிகப் பெரிய கேள்விக்குறி.

ஆனால் இன்றுள்ளது மட்டும் நான் ஏற்கனவே சொல்லிய நிலைதான்..

மிஷினரிகள் பல பள்ளிகள், அவர்களின் புத்தகங்கள், ஏராளமான அளவில் தொண்டர்கள் (கேரளத்தினர்தான் மெஜாரிடி) என குவித்து குழந்தைகளை மூளைச் சலவை செய்து கொண்டு வரும் வேளையில் எதிர்காலத்தை நினைக்கையில் என்னவெனச் சொல்ல? பாரதநாட்டின் பல உன்னதங்கள் மறக்கடிக்கப்படும் சூழ்நிலையில் இந்தக் குழந்தைகள் ‘நாட்டைப் பற்றிய ஒரு எதிர்ப்பு சக்தியை’ வளர்த்துக் கொண்டு தன் எதிர்காலத்தை நோக்கி நகர்கின்றன. பின்னாளில் உண்மை உணர்ந்தாலும் மதம் பிடிக்காதவர் மாவோயிஸ்டாகவும் மாறவும் வாய்ப்புகள் உள்ளன. இவை அதீத பயம் என்று தள்ளுவதற்கு இல்லை. கடந்த இருநூறு ஆண்டுக் கால சரித்திரம் இதைத்தான் நிரூபித்துள்ளியது.

எனக்கு தனிப்பட்ட முறையில் மதம் பெரிதல்ல.. எம்மதமும் சம்மதமே.. ஆனால் மனமாற்றத்தால் மட்டுமே மதமாற்றம் வரவேண்டும். இந்த முறை பயன்படுத்தப்படுவதில்லை.

உங்கள் கருத்துகளுக்கு நன்றி!

திவாகர்

2011/3/30 ஜடாயு <jata...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Tthamizth Tthenee

unread,
Mar 30, 2011, 2:18:07 AM3/30/11
to mint...@googlegroups.com
ஒரு சிலை வடிப்பதே தவம் போன்றது,யோகம் போன்றது, 

மனது ஒருமுகப்படவேண்டும்

செய்ய வேண்டிய உருவம் மனதில் பதிந்து மனக்கண்ணில் நீங்காது நிற்க வேண்டும்

மனதில் பதிந்து நிற்கும் உருவம் கையின் வழியாக, அவர் அறிந்த கலையின் வழியாக வெளிவரவேண்டும்.அதுவும் சிந்தனை தடுமாற்றமில்லாமல் முழுமையாக வெளிவரவேண்டும்

அப்படி வந்தால்தான் அந்த உருவம் மண்ணானாலும் கல்லானலும், முறையாக வரும்

மனதில் இருக்கும் தெய்வ உருவம் அந்த சிற்பியின் ஆத்மாவுக்குள்ளே வலம் வரவேண்டும்
அப்போதுதான் தெய்வாம்சம் பொருந்திய சிலையாய் அது மிளிரும்

இப்படி ஒரு யாகம் போல் தவம் போல் வடிக்கப் படும் சிற்பங்கள் ,சிலைகள், விக்ரகங்கள்

தெய்வமாக வணங்கப்படுதலுக்குரிய் தெய்வங்களே

இவையெல்லாம் மனிதனின் ஆத்ம சொரூபங்களே .விக்ரக வழிபாடு ,சிலை வழிபாடு, சிற்ப வழிபாடு  இவர்களால் மேன்மையடைகிறது.

அன்புடன்
தமிழ்த்தேனீ

2011/3/29 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Mar 30, 2011, 12:51:17 AM3/30/11
to mint...@googlegroups.com
கிறித்துவம் உருவ வழிபாட்டை ஆதரிப்பதில்லை என்பது பொது விதியானாலும் அவர்களுல் சில பிரிவினர் உருவவழிபாட்டை மேற்கொள்ளுகின்றனர்.
எடுத்துக்காட்டாக பெசண்ட்நகர் வேளாங்கன்னி கோவில்.  பக்தர்கள் அன்னையின் சிலைக்குப் புடவை அணிந்து பத்தி ஏற்றி வழிபடுவதைக்காணலாம்
மதுரை மாவட்டத்தில் கத்தோலிக்கர் திருமணம் தாலிகட்டும் முறையில்தான் நடைபெறுகிறது
மணிப்பூரில் வைணவம் முன்னிலைபெற்று இன்றும் அவர் நடன வடிவில் நின்று நிலவுகிறது.
திரிபுராவின் மஹாராணி ஆந்திரா விஜயநகர அரச குடும்பத்தை சார்ந்தவர்
மேகாலாயவில் ராமகிருஷ்ணமடம்
அருனாசல்ப்பிரதேசத்தில் பெளத்தம்
என்று பலபரிமானங்கள் இந்தியாவின் வடகிழக்கில் உண்டு
வடகிழக்கு மாநிலங்கள் ஆங்கில ஆட்சியில் இந்தியாவின் அங்கமாகக் கருதப்படவில்லை.  அவை அங்குவாழ்ந்த பழங்குடிகளின் தலைவர்களுடன் ஆங்கிலேயர் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு அவர் வாழ்வியல் மரபுகளில் தலையிடாமல் மன்னர்களையும் பழங்குடித்தலைவர்களையும் கிறித்துவத்துக்கு மாறச் செய்து அவர்கள் மதத்தைத்ப் பரப்பினர்.
அங்கு நிலவியிருந்த இறைவழிபாடு இந்து சமய வழிபாடன்று.  பழங்குடிகளிடையே  நிலவியதாக மானுடவியலார் கருதும் அனிமிஸம் என்ற பழைய இறைவழிபாடே.
இங்கு தமிழகத்தில் தமிழர் வாழ்வியல் மரபில் அவர்களின் இறைவன் இறைவழிபாடு பற்றிச் சரியான தகவல் இன்று நம்மிடையே இல்லை.
இன்று வணங்கப்படும் பெண் தெய்வங்களுக்கு நீண்ட வரலாறு உள்ளது ஆனால் அது ஏட்டில் எழுத்தில் இல்லை. மக்கள் மனதில் அவர் கொண்டாடும் விழாக்களில் இன்றும் இருந்துவருகிறது.  அதை ஆவணப்படுத்துவது மின் தமிழின் நோக்கமாக இருக்கவேண்டும்
வடபுலத்தாக்கம் ஆங்கில ஆதிக்கம் பற்றி நிறைய ஆவணங்களும் ஆய்வுகளும் உண்டு.  ஐயனார் பற்றியும் பெண்தெய்வங்கள் பற்றியும் தரவுகளும் தகவலும் நம்மிடம் இல்லை
கடலைக் கடக்கக்கூடாது என்ற விதியால் இந்திய சமயம் கட்டுண்டிருந்த வேளையில் இந்திய சமுதாய இறை மறை வளங்கள் கடல் கடந்த்துபரவ திரைகடல் ஓடித்திரவியம் தேடிய தமிழர்கள் பெரும் பங்காற்றியுள்ளனர்.  ஆயினும் அதுபற்றிய தகவல் நம்மிடம் இல்லை
பர்மாவில் 140க்கு மேற்பட்ட கந்தசாமி கோவில்கள் நானாதேச வணிகர்களல் கட்டப்பட்டது.  அதுபோன்று அங்கர்வாட் கட்டுவதிலும் மலாயா, சுமத்ரா ஜாவாவில் இந்திய இறையுணர்வை வளர்த்ததில்  தமிழ் நானாதேச வணிகர்களின் பங்கு என்னா என்பதுபற்றிய தகவல் நமக்குக் கிடைக்கவில்லை
தமிழன் சென்ற இடமெல்லாம் தன் இறைஉணர்வை விட்டுவிடாமல் அதே நேரம் அதை மற்றவர்கள்மீது திணிக்காமல் வாழ்ந்த வரலாறு எழுதப்பட்டால அது தமிழர் வாழ்வியல் மரபின் மேன்மையை உலகுக்கு எடுத்துக்காட்டுவதாக இருக்கும்
நாகராசன்

2011/3/30 ஜடாயு <jata...@gmail.com>

Subashini Tremmel

unread,
Mar 30, 2011, 4:02:16 AM3/30/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram

2011/3/30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

ஒரு சிலை வடிப்பதே தவம் போன்றது,யோகம் போன்றது, 

மனது ஒருமுகப்படவேண்டும்

செய்ய வேண்டிய உருவம் மனதில் பதிந்து மனக்கண்ணில் நீங்காது நிற்க வேண்டும்

மனதில் பதிந்து நிற்கும் உருவம் கையின் வழியாக, அவர் அறிந்த கலையின் வழியாக வெளிவரவேண்டும்.அதுவும் சிந்தனை தடுமாற்றமில்லாமல் முழுமையாக வெளிவரவேண்டும்

அப்படி வந்தால்தான் அந்த உருவம் மண்ணானாலும் கல்லானலும், முறையாக வரும்

மனதில் இருக்கும் தெய்வ உருவம் அந்த சிற்பியின் ஆத்மாவுக்குள்ளே வலம் வரவேண்டும்
அப்போதுதான் தெய்வாம்சம் பொருந்திய சிலையாய் அது மிளிரும்

இப்படி ஒரு யாகம் போல் தவம் போல் வடிக்கப் படும் சிற்பங்கள் ,சிலைகள், விக்ரகங்கள்

தெய்வமாக வணங்கப்படுதலுக்குரிய் தெய்வங்களே
 
சரியாகச் சொன்னீர்கள் தேனியார்.  நான் சிற்பியின் விரல் அசைவுகள் உரூவாக்கும் மாற்றத்தை, படிப்படியாக அம்மனின் சிலை உருவாகும் விதத்தை பார்த்து அதிசயித்து விட்டேன்.  அதே போல அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு பெண்கள் பூ சூட்டுகின்ரார்களே. எவ்வளவு அன்போடும் கனிவோடும் செய்கின்றார்கள். நம் வீட்டு பெண்ணிற்கு அழகு செய்வது போல.. பார்த்து மனம் நெகிழ்ந்தது எனக்கு.
 
-சுபா

Tthamizth Tthenee

unread,
Mar 30, 2011, 4:18:30 AM3/30/11
to mint...@googlegroups.com
திருநெல்வேலியில் முனீர்ப்பள்ளம் என்னும் இடத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர் என் உறவுக்காரப் பெண்மணி ஒருவர் அவர் தெருவில் இருக்கும் வினாயகர் கோயிலில் கைங்கர்யம் செய்ய யாரும் வராததால் அவரே தினமும் காலியிலும் மாலையிலும் வினாயகர் விக்ரகத்தை தாய்மை உணர்வுடனும் ,அதே நேரத்தில் தெய்வக்குழந்தை என்னும் பக்தி உணர்வோடும் ஒரு குழந்தையைப் போல் எண்ணி அபிஷேகம் செய்து (குளிக்க வைத்து )  வஸ்திராபரணங்கள் சார்த்தி, தானே தொடுத்த மாலையைச் சார்த்தி புஷ்பங்கள் சார்த்தி, தன் கையால் செய்த உணவுப் பொருட்களை நிவேதனம் செய்து

பூஜைகள் செய்து வழிபடுகிறார். அந்தக் காட்சியை நான் கண்டு மகிழ்ந்து புகைப்படங்கள் எடுத்தேன்

ஆத்ம சமர்ப்பணம் எனும் போது ஆணென்ன பெண்னென்ன/ 

அந்தப் புகைப்படங்களை இங்கே இடுகிறேன்

அன்புடன்
தமிழ்த்தேனீ

2011/3/30 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Subashini Tremmel

unread,
Mar 30, 2011, 4:30:37 AM3/30/11
to mint...@googlegroups.com, N. Ganesan, Subashini Kanagasundaram

2011/3/29 N. Ganesan <naa.g...@gmail.com>

On Mar 28, 10:19 am, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
> திரு.கணேசன்,
> நீங்கள் குறிப்பிட்டுள்ள  http://en.wikipedia.org/wiki/Periyachiவள்ளாலராசன்
> கதை ஒரளவு குறிப்பிடப்படுகின்றது. கன்னிமாரா நூலக லிங்க் வேறு ஏதோ ஒரு
> புத்தகத்திற்கு இட்டுச் செல்கின்றது.>>150 ஆண்டுகளாக வல்லாள ராசன் கதை அச்சாகி
>
> இருக்கிறது. உ-ம்: சிறுமணவூர் முனிசாமி முதலியார், துரைசாமி படையாச்சி,
> வரிசைமுகையத்தீன் புலவர், ...
> அண்மையில்,
> எஸ். ஏ. கே. துர்கா, 1978, வல்லாள ராஜன் யட்சகானம்.
>

நிச்சயம் தமிழக லைப்ரரிகளில் இருக்கும்.
எஸ். ஏ. கே. துர்க்கா சென்னையில் இருக்கலாம்,
அவர் குடும்பத்தாரை இணையத்தில் சிலர் அறியலாம்.

இந்நூலை நான் பெற்றுப் படித்தபின் கருத்து
தெரிவிக்கிறேன்.
 
அப்படியே அதனை மின்னாக்கமும் செய்து கொடுத்தால் நன்று.:-)
-சுபா
 
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
Suba Tremmel

Tthamizth Tthenee

unread,
Mar 30, 2011, 4:39:47 AM3/30/11
to mint...@googlegroups.com
DSCN6134.JPG

2011/3/30 Subashini Tremmel <ksuba...@gmail.com>
DSCN6130.JPG

Tthamizth Tthenee

unread,
Mar 30, 2011, 4:44:09 AM3/30/11
to mint...@googlegroups.com
DSCN6129.JPGDSCN6134.JPG

2011/3/30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
DSCN6130.JPG
DSCN6134.JPG

Tthamizth Tthenee

unread,
Mar 30, 2011, 4:45:23 AM3/30/11
to mint...@googlegroups.com
DSCN6135.JPG

2011/3/30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
DSCN6130.JPG
DSCN6134.JPG
DSCN6135.JPG

Tthamizth Tthenee

unread,
Mar 30, 2011, 4:46:12 AM3/30/11
to mint...@googlegroups.com
DSCN6129.JPG
DSCN6130.JPG
DSCN6135.JPG
DSCN6134.JPG
DSCN6129.JPG

துரை.ந.உ

unread,
Mar 30, 2011, 4:47:09 AM3/30/11
to mint...@googlegroups.com, Tthamizth Tthenee

2011/3/30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

திருநெல்வேலியில் முனீர்ப்பள்ளம்

திருமதி .சாந்தி துரையின் சொந்த ஊர் 

--
என்றும் அன்புடன்  --  துரை --
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
படம்         : ‘எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.com/
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்:'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral

Subashini Tremmel

unread,
Mar 30, 2011, 4:51:29 AM3/30/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram

2011/3/30 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

2011/3/30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
திருநெல்வேலியில் முனீர்ப்பள்ளம்

திருமதி .சாந்தி துரையின் சொந்த ஊர் 
 
அது சரி. அப்படியென்றால் வித்தியாசமாகத்தான் இருக்கும். சாந்தியே ஒரு கிராமத்து நாட்டாமை மாதிரி தானே.:-)
 
-சுபா
 
ஜடாயு

unread,
Mar 30, 2011, 6:08:35 AM3/30/11
to மின்தமிழ்
On Mar 30, 9:51 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:

> கிறித்துவம் உருவ வழிபாட்டை ஆதரிப்பதில்லை என்பது பொது விதியானாலும்

தவறு. கண்டிப்பாக ஆதரிக்கிறது. ஆனால் தன் மதத்தின் உருவங்கள் மட்டுமே
உண்மையானவை மற்றவை பொய் என்று கூறுகிறது. கிறிஸ்தவர்கள் தங்கள்
விக்கிரங்களை statues / deities என்றும், மற்ற மதத்தின் விக்கிரகங்களை
idols என்றும் பெயரிட்டு அழைக்கிறார்கள்.

statue வணங்கப் படவேண்டியது, idols உடைக்கப் பட வேண்டியது!

இந்த மொழி நுட்பம் தெரியாத இந்துக்கள் Milk abhishakam to Lord Ganesha
idol என்றெல்லாம் பத்திரிகை அடிக்கிறார்கள். idol என்ற சொல்லுக்கு பதிலாக
image/deity என்ற சொற்களையே பயன்படுத்த வேண்டும் என்று பிரசாரம் செய்ய

வேண்டும்.

அவர்களுல்

> சில பிரிவினர் உருவவழிபாட்டை மேற்கொள்ளுகின்றனர்.
> எடுத்துக்காட்டாக பெசண்ட்நகர் வேளாங்கன்னி கோவில்.  பக்தர்கள் அன்னையின்
> சிலைக்குப் புடவை அணிந்து பத்தி ஏற்றி வழிபடுவதைக்காணலாம்

இது ஒரு அப்பட்டமான புரட்டு வேலை. இந்துக்களை ஏமாற்றுவதற்காக நடத்தும்
நாடகம்.

> வடகிழக்கு மாநிலங்கள் ஆங்கில ஆட்சியில் இந்தியாவின் அங்கமாகக் கருதப்படவில்லை.
> அவை அங்குவாழ்ந்த பழங்குடிகளின் தலைவர்களுடன் ஆங்கிலேயர் ஒப்பந்தம்
> போட்டுக்கொண்டு அவர் வாழ்வியல் மரபுகளில் தலையிடாமல் மன்னர்களையும்
> பழங்குடித்தலைவர்களையும் கிறித்துவத்துக்கு மாறச் செய்து அவர்கள் மதத்தைத்ப்
> பரப்பினர்.

தவறு. “வாழ்வியல் மரபுகளில் தலையிடவில்லை” என்பது கடைந்தெடுத்த பொய்.
வடகிழக்கு மானிலங்களின் கலாசாரம் முழுவதையுமே காலனிய பிரிட்டிஷ் அரசு
சீர்குலைத்தது. Rani_Gaidinliu என்ற பெயரைக் கேள்விப்
பட்டிருக்கிறீர்களா? மணிபூரின் பெருமிதத்திற்குரிய சுதந்திர வீராங்கனை -
http://en.wikipedia.org/wiki/Rani_Gaidinliu

நேரு, இந்திரா காந்தி ஆகிய செக்யுலர் தலைவர்களே இதைக் கண்டு மனம் நொந்து
அங்கு இந்து சேவை அமைப்புகளை அழைத்து அவர்களைப் பணி செய்யச்
சொல்லியிருக்கிறார்கள்.

> அங்கு நிலவியிருந்த இறைவழிபாடு இந்து சமய வழிபாடன்று.  பழங்குடிகளிடையே
> நிலவியதாக மானுடவியலார் கருதும் அனிமிஸம் என்ற பழைய இறைவழிபாடே.

மோசமான பழைய பொய். நதிகளையும், மலைகளையும், ம்ரங்களையும் வணங்குவது
அனிமிஸமாம், இந்து மதம் இல்லையாம். கங்கை பூஜை செய்பவன், கிரிவலம்
வருபவன், வீட்டில் துளசி மாடம் வைத்து வழிபடுபவர்கள், அரச மரத்தை
சுற்றுவோர் எல்லாம் இந்துக்கள் இல்லையா? அனிமிஸ்டா?

உள்நோக்கம் கொண்ட வெள்ளைக் கார மிஷனரி சொல்லும் எல்லா பொய்களுக்கும்
இப்படித்தான் சிறு கேள்வி கூட கேட்காமல் ஒத்து ஊதுவீர்களோ? வீரியர்
எல்வின் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இதைப் படியுங்கள்.

வனவாசிப் பழங்குடிகள் இந்துக்களே - http://www.tamilhindu.com/2008/10/tribals-are-hindus/

> இங்கு தமிழகத்தில் தமிழர் வாழ்வியல் மரபில் அவர்களின் இறைவன் இறைவழிபாடு
> பற்றிச் சரியான தகவல் இன்று நம்மிடையே இல்லை.

ஏன் இல்லை. மிகத் தெளிவாக இருக்கிறது. இரண்டாயிரம் வருடத்திற்கும்
மேற்பட்ட கலை, இலக்கியப் பண்பாட்டை வைத்துக் கொண்டு இப்படி சொல்வதற்கு
வெட்கமாக இல்லையா?

திருமுறைகளும் திவ்யப் பிரபந்தமும் திருப்புகழும் “தமிழர் வாழ்வியல்
இறைவழிபாடு” இல்லையா? அதெல்லாம் நைஜீரிய மக்களின் வழிபாடா?

> இன்று வணங்கப்படும் பெண் தெய்வங்களுக்கு நீண்ட வரலாறு உள்ளது ஆனால் அது ஏட்டில்
> எழுத்தில் இல்லை. மக்கள் மனதில் அவர் கொண்டாடும் விழாக்களில் இன்றும்
> இருந்துவருகிறது.  

அந்த விழாக்கள் எவ்வளவு பழைமையானவை என்பதைக் கூட இலக்கிய,
அகழ்வாராய்ச்சி சான்று கொண்டு தான் கணக்கிட முடியும். அது தான் அறிவியல்
பூர்வமான பார்வை.

”மக்கள் மனதில் அவர் கொண்டாடும் விழாக்களில்” என்பதைக் காட்டி,
கருணானிதி பிறந்த நாள் தான் தொல்தமிழரின் பெரும் திருவிழா என்றும், தமிழக
ஊர்களில் எல்லாம் திருஷ்டி பொம்மைகளுக்கு ஈடாக நிற்கும் தாடிக்காரர்,
சுட்டு விரல்காட்டி சும்பர்கள் சிலைகள் தான் தொல்தமிழர் சிற்பக் கலையின்
அடையாளம் என்றும் கூட சொல்வீர் போலிருக்கிறதே !

> வடபுலத்தாக்கம் ஆங்கில ஆதிக்கம் பற்றி நிறைய ஆவணங்களும் ஆய்வுகளும் உண்டு.

என்ன புடலங்காய் ஆய்வு, ஆவணம் என்று சொல்ல முடியுமா?

சங்க காலத் தமிழர் சமயம் பற்றி இதுவரை வெளிவந்த நூல்களிலேயே மிக
ஆதாரபூர்வமானதும், சிறப்பானதும் “சங்கத் தமிழர் வாழ்வும் சமயமும்” -
வீ.சண்முகம் பிள்ளை எழுதியது, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு.
அது என்ன சொல்கிறது?

வேதங்கள், வேள்விகள், புராணங்கள், ராமாயணம், மகாபாரதம், கங்கை-இமயம் இவை
பற்றிய குறிப்புகள் சங்கப் பாடல்கள் தோறும் கொட்டிக் கிடப்பதை முழுமையாக
பட்டியல் இடுகிறது, ஒரு என்சைக்ளோபீடியா போன்று. இதற்குப் பெயர் தான்
“வடபுலத் தாக்கமா”?

N. Ganesan

unread,
Mar 30, 2011, 7:56:19 AM3/30/11
to மின்தமிழ்

ஐயா,

இந்த ஊர்ப்பெயர்: வேளாங்கண்/வேளாங்கண்ணி.
வேள் = முருகன், வேளாங்கண் = வேள் முருகன் ஊர். (கண் = இடம்)

மிக அருமையான சோழர் கால படிமங்கள்
(முருகன், நடராஜர்) இப்போது மண்ணில் இருந்து கிடைத்துள்ளன.
13-ஆம் நூற்றாண்டில் டில்லி துருக்கப் படைகள்
தமிழ்நாட்டை தாக்கின போது ஏராளமான கோயில்களில்
புதைக்கப்பட்டன. அவற்றில் ஒன்று. அண்மையில் செல்வன்
திருவெண்காடு ரிஷபாந்திகர் படம் ஞானபாரதிக்கு
கொடுத்தார். அதுவும் 1960-களில் இப்படிக் கிட்டியதே.
அதன் கதை சொல்லணும்.

எனவே, வேளாங்கண்ணி என்பது பழைய பெயர்.
வேளாங்கன்னி அல்ல. ஆங்கிலத்தில் Vailankanni
என எழுதுவர். இத்துடன் Vailasthana என்று ரிக்வேதம்
குறிப்பிடும் இடத்தை ஒப்பிடலாம். Vailasthana = வேள்களின்
ஊர் (சிந்துக் கரையில்) என்பர் தமிழறிஞர்கள் -
உ-ம்: மறைமலை அடிகள்.

அன்புடன்,
நா. கணேசன்

பி.கு.: ராஜ்குமார் மன்றாடியாரை பார்த்தால்
துக்கம் விசாரிக்கவும். அவர் தாயார் இறையடி
சேர்ந்துவிட்டார்.

On Mar 29, 11:51 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:

> 2011/3/30 ஜடாயு <jataay...@gmail.com>

>
>
>
> > On Mar 29, 8:26 pm, Dhivakar <venkdhiva...@gmail.com> wrote:
>
> > > எந்த மதம் மாறினாலும், தங்கள் சிறு தெய்வ வழிபாட்டை மட்டும் விடவில்லை. அது
> > > பாட்டுக்கு அது, இது பாட்டுக்கு இது. இன்னமும் சொல்லப் போனால் சிறுதெய்வ
> > > வழிபாடு என்று நீங்கள் சொல்லும் நிலைப்பாடுதான் மதம் மாற்றப்பட்ட இந்த ஏழை
> > > மக்களுக்கு இந்து மதத்தின் பால் விட்ட குறை தொட்ட குறையாக தொடர்பை இன்னமும்
> > > வைத்திருக்கிறது.
>
> > அன்புள்ள திவாகர்,  இது  ஒரு தற்காலிக்க இடைநிலைப் போக்கு (intermediate
> > position) மட்டுமே. ஒரு குறிப்பிட்ட சமூகத்தில்/பிரதேசத்தில்/சாதியில்
> > குறிப்பிட்ட அளவு மக்கள் கிறிஸ்தவத்துக்கு வரும் வரை  மிஷநரிகளே இதைக்
> > கண்டும் காணாதிருப்பார்கள்.  ஆனால் அந்த threshold தாண்டியதும்,
> > வன்மத்துடன் எல்லா பிறமத வழிபாடுகளும் அழித்து ஒழிக்கப் படும்.  சொல்லப்
> > போனால்,  இந்து “பெரும்” தெய்வங்களை விட  சிறுதெய்வங்களைத் தான் இன்னமே
> > எளிதாக கிறிஸ்தவர்களால்  அடையாளம் காண்பிக்க முடியும்.
>
> > எத்தனையோ உதாரணங்கள் இதற்கு சொல்லலாம்.
>
> > அயர்லாந்தின் பேட்ரன் செயிண்ட் என்று கத்தோலிக்கர்களால் போற்றப் படும்
> > செயிண்ட் பாட்ரிக், அந்த நாட்டில் நிலவிய நாக வழிபாடுகளையும், பெண் தெய்வ
> > வழிபாடுகளையும், அந்த வழிபாடுகள் செய்து வந்த மக்களையும் சுவடே இல்லாமல்
> > ஈவிரக்கமின்றி கொன்றொழித்தார். அவருக்கு annihilator of snakes என்ற
> > பட்டப் பெயரே ஏற்பட்டது!    (ஒப்பீட்டில் நமது ரிஷிகள் என்ன செய்தார்கள்?
> > சிவனது கழுத்தில் நாகத்தை அணிவித்தார்கள், திருமாலைப் பாம்பனையில்
> > படுக்கவைத்தார்கள்,  நாகேஸ்வரி அம்மனை உருவாக்கினார்கள்,  நாக வழிபாட்டை
> > வைதீக சமயத்துடன் இரண்டறக் கலந்தார்கள்).
>
> > நாகாலாந்தும், மிசோரமும் இன்று ஏறக்குறைய் 95% கிறிஸ்தவ மயமாகி விட்டன.
> > அங்கு பழைய வழிபாட்டு முறையின் எல்லா சுவடுகளும் ஒழிக்கப்
>

> ...
>
> read more »- Hide quoted text -

N. Ganesan

unread,
Mar 30, 2011, 8:03:13 AM3/30/11
to மின்தமிழ்

On Mar 30, 3:51 am, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
> 2011/3/30 துரை.ந.உ <vce.proje...@gmail.com>
>
>
>
> >  2011/3/30 Tthamizth Tthenee <rkc1...@gmail.com>

>
> >> திருநெல்வேலியில் முனீர்ப்பள்ளம்
>
> >   திருமதி .சாந்தி துரையின் சொந்த ஊர்
>
> அது சரி. அப்படியென்றால் வித்தியாசமாகத்தான் இருக்கும். சாந்தியே ஒரு கிராமத்து
> நாட்டாமை மாதிரி தானே.:-)
>
> -சுபா

முந்நீர்ப்பள்ளம் - நெல்லை ஜில்லா.

தமிழ் இலக்கிய வரலாறு முதன்முதலாக
எழுதிய முந்நீர்ப்பள்ளம் சி. பூரணலிங்கம் பிள்ளை ஊர்.

முசிபூ பிள்ளை பற்றி இன்று பலருக்கும்
தெரியாது.

http://www.noolaham.net/project/01/50/50.htm
பேரா. கா. சிவத்தம்பி எழுதுகிறார்:

”இன்று பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படும் கருத்தில் தமிழ் இலக்கியத்தின்
வரலாற்றினை முதன் முதலில் எழுதிய பெருமை இன்றைய பரீட்சை வழிகாட்டி
நூல்களை எழுதுவோரின் தமிழ்நாட்டு வழிகாட்டி என்று கொள்ளப்படத் தக்கவரும்,
நிறைய எழுதியவருமான முன்னீர்ப்பள்ளம் எஸ். பூரணலிங்கம் பிள்ளை அவர்களையே
சாரும். அவர் எழுதிய அம் முதற் பாடநூல் "A Primier of Tamil
Literature" (தமிழ் இலக்கிய அரிச்சுவடி; 1904) என்பதாகும். செறிவானதாக
வமைந்த அந்நூலில் எடுத்துக் கூறப்பட்டுள்ள இலக்கியக் காலவகுப்பு
சிந்தனையைத் தூண்டுவதாக அமைந்துள்ளது. பின்னர் இந்நூலை விரித்தெழுதி
'தமிழ் இலக்கிய' மென (Tamil Literature) 1929 இல் வெளியிட்டார்.
பரீட்சைத் தேவைகளை மனங் கொண்டு எழுதப் பெற்ற முதலாவது தமிழ் இலக்கிய
வரலாறு நூல் இதுவே எனலாம். நூலின் பின்னிணைப்பா‘க இவர் தொகுத்து
வழங்கியுள்ள தேர்வு வினாக்கள். பின்னர் வந்த, இவரிலும் பார்க்கச் சிறந்த
வணிக நோக்குடன் தொழிற்பட்ட பேராசிரியர்கள் பலருக்கு இத்துறை
நூலாக்கத்துக்கு வழிகாட்டியாக அமைந்தன. இலக்கிய வரலாறு என்று கொள்ளப்
படுவதிலும் பார்க்கச் சமூக வரலாறு எனக் கொள்ளப்படுவதே பொருத்தமானது என்று
சொல்லலத்தக்க முறையில் அதாவது, தமிழ்ச் சமூகத்தை அதன் இலக்கியத்தைக்
கொண்டு விளங்க முனையும் முறையில், முதற் பகுதி அமைந்திருக்க, இறுதி எட்டு
அத்தியாயங்களும் இலக்கியத்தின் வரலாறாக மாத்திரமே, இலக்கியத்தின்
வரலாறுத் தகவல் தொகுப்பாகவே அமைந்துள்ளன.”

நா. கணேசன்

Nagarajan Vadivel

unread,
Mar 30, 2011, 8:11:39 AM3/30/11
to mint...@googlegroups.com
டாக்டர் எஸ்.ஏ.கே.துர்கா சென்னைப்பல்கலையில் இசைத்துறையில் 1980--ல் பேராசிரியராக இருந்தவர்.  அத்துறை எனது துறைக்கு அருகாமையில் இருந்ததால் அடிக்கடி பார்ப்பதுண்டு. எத்னோ முயூசிகாலாஜியில் ஆய்வு செய்ய அமெரிக்கா சென்றவர்.  அது தொடர்பாக நிறைய ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ளார்.  சென்னைப் பல்கலையில் தற்சமயம் சிறப்புப் பேராசிரியராக உள்ளார்.  தற்போது துறைத்தலைவராக இருக்கும் டாக்டர்.பிரமிளா குருமூர்த்தி தேவாரப்பாடல் தொடர்பாக ஆய்வு செய்தவர்
http://www.acharyanet.com/profile/59/check/1/

http://www.youtube.com/watch?v=hZTKM3lEZ3g

Publications

 1.Voice Culture, 2nd ed., Indian Musicological Society, Baroda, India,1997

2. The Opera in South India, B.R.Publishing Corporation, New Delhi, India, 1979

3. Research Methodology for Music, Center for Ethnomusicology, Chennai, 1993

4. Ethnomusicology-A study of Intercultural Musicology, Center for Ethnomusicology, Chennai, 1996

5.Indian Music in the Context of Independence, Center for Ethnomusicology, Chennai, 1998

6.Vallala Yakshaganam (Tamil), Lalita Publications,Chennai, India ,1978

For further details, mailto:sakd...@hotmail.com

நாகராசன்

2011/3/30 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Mar 30, 2011, 6:55:16 AM3/30/11
to mint...@googlegroups.com
ஐயா
நீங்கள் கொதிப்புடன்  நான் சொன்ன அனைத்தும் தவறு என்று சொல்லி
1. கிறித்துவம் உருவ வழிபாட்டை கண்டிப்பாக ஆதரிக்கிறது
2. statue வணங்கப் படவேண்டியது, idols உடைக்கப் பட வேண்டியது!
3. வேளாங்கன்னி கோவில் அன்னையின் சிலைக்குப் புடவை அணிந்து பத்தி ஏற்றி வழிபடுவது ஒரு அப்பட்டமான புரட்டு வேலை. இந்துக்களை ஏமாற்றுவதற்காக நடத்தும் நாடகம்.
4. வடகிழக்கு மானிலங்களின் கலாசாரம் முழுவதையுமே காலனிய பிரிட்டிஷ் அரசு சீர்குலைத்தது
5. பழங்குடிகளிடையே நிலவியதாக மானுடவியலார் கருதும் அனிமிஸம் என்ற பழைய இறைவழிபாடே மோசமான பழைய பொய்
6. .உள்நோக்கம் கொண்ட வெள்ளைக் கார மிஷனரி சொல்லும் எல்லா பொய்களுக்கும் இப்படித்தான் சிறு கேள்வி கூட கேட்காமல் ஒத்து ஊதுவீர்களோ?
7. இரண்டாயிரம் வருடத்திற்கும் மேற்பட்ட கலை, இலக்கியப் பண்பாட்டை வைத்துக் கொண்டு இங்கு தமிழகத்தில் தமிழர் வாழ்வியல் மரபில் அவர்களின் இறைவன் இறைவழிபாடு பற்றிச் சரியான தகவல் இன்று நம்மிடையே இல்லை.என்று சொல்வதற்க வெட்கமாக இல்லையா?
8. ”மக்கள் மனதில் அவர் கொண்டாடும் விழாக்களில்”  என்பதைக் காட்டி, கருணானிதி பிறந்த நாள் தான் தொல்தமிழரின் பெரும் திருவிழா என்றும், தமிழக ஊர்களில் எல்லாம் திருஷ்டி பொம்மைகளுக்கு ஈடாக நிற்கும் தாடிக்காரர், சுட்டு விரல்காட்டி சும்பர்கள் சிலைகள் தான் தொல்தமிழர் சிற்பக் கலையின்அடையாளம் என்றும் கூட சொல்வீர் போலிருக்கிறதே !
9. வடபுலத்தாக்கம் ஆங்கில ஆதிக்கம் பற்றி நிறைய ஆவணங்களும் ஆய்வுகளும் உண்டு.என்றால் என்ன புடலங்காய் ஆய்வு, ஆவணம் என்று சொல்ல முடியுமா?
10. வேதங்கள், வேள்விகள், புராணங்கள், ராமாயணம், மகாபாரதம், கங்கை-இமயம் இவை பற்றிய குறிப்புகள் சங்கப் பாடல்கள் தோறும் கொட்டிக் கிடப்பதை முழுமையாகபட்டியல் இடுகிறது, ஒரு என்சைக்ளோபீடியா போன்று அமைந்த  “சங்கத் தமிழர் வாழ்வும் சமயமும்” -வீ.சண்முகம் பிள்ளை எழுதிய நூல்.  இதற்குப் பெயர் தான் “வடபுலத் தாக்கமா”?
என்று பத்துக்  கருத்துக்களை முன்வைத்திருக்கிறீர்கள்
அறிஞர்கள் நிறைந்த அவை என்ன சொல்கிறது என்று பார்ப்போம்
நாகராசன்

2011/3/30 ஜடாயு <jata...@gmail.com>
On Mar 30, 9:51 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>

ஜடாயு

unread,
Mar 30, 2011, 10:41:12 AM3/30/11
to மின்தமிழ்
ஒரே ஒரு திருத்தம்.

On Mar 30, 3:55 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:

> 5. பழங்குடிகளிடையே நிலவியதாக மானுடவியலார் கருதும் அனிமிஸம் என்ற பழைய

> இறைவழிபாடே மோசமான பழைய பொய்

இது அல்ல நான் சொன்னது. ’பழங்குடியினரின் வழிபாடான அனிமிஸம் எனப்படும்
ஜந்து இந்துமதம் அல்ல, அதற்கும் இந்து மதத்திற்கும் சம்பந்தமே கிடையாது’
என்பது தான் மோசமான, பழைய பொய்.

மற்றவர்கள் இருக்கட்டும். இவற்றுக்கு உங்கள் தரப்பு வாதங்கள் என்ன
என்பதைச் சொல்லுங்கள் முதலில்.

> 6. .உள்நோக்கம் கொண்ட வெள்ளைக் கார மிஷனரி சொல்லும் எல்லா பொய்களுக்கும்
> இப்படித்தான் சிறு கேள்வி கூட கேட்காமல் ஒத்து ஊதுவீர்களோ?
> 7. இரண்டாயிரம் வருடத்திற்கும் மேற்பட்ட கலை, இலக்கியப் பண்பாட்டை வைத்துக்
> கொண்டு இங்கு தமிழகத்தில் தமிழர் வாழ்வியல் மரபில் அவர்களின் இறைவன் இறைவழிபாடு
> பற்றிச் சரியான தகவல் இன்று நம்மிடையே இல்லை.என்று சொல்வதற்க வெட்கமாக இல்லையா?
> 8. ”மக்கள் மனதில் அவர் கொண்டாடும் விழாக்களில்”  என்பதைக் காட்டி, கருணானிதி
> பிறந்த நாள் தான் தொல்தமிழரின் பெரும் திருவிழா என்றும், தமிழக ஊர்களில்
> எல்லாம் திருஷ்டி பொம்மைகளுக்கு ஈடாக நிற்கும் தாடிக்காரர், சுட்டு விரல்காட்டி
> சும்பர்கள் சிலைகள் தான் தொல்தமிழர் சிற்பக் கலையின்அடையாளம் என்றும் கூட
> சொல்வீர் போலிருக்கிறதே !
> 9. வடபுலத்தாக்கம் ஆங்கில ஆதிக்கம் பற்றி நிறைய ஆவணங்களும் ஆய்வுகளும்
> உண்டு.என்றால் என்ன புடலங்காய் ஆய்வு, ஆவணம் என்று சொல்ல முடியுமா?
> 10. வேதங்கள், வேள்விகள், புராணங்கள், ராமாயணம், மகாபாரதம், கங்கை-இமயம் இவை
> பற்றிய குறிப்புகள் சங்கப் பாடல்கள் தோறும் கொட்டிக் கிடப்பதை
> முழுமையாகபட்டியல் இடுகிறது, ஒரு என்சைக்ளோபீடியா போன்று அமைந்த  “சங்கத்
> தமிழர் வாழ்வும் சமயமும்” -வீ.சண்முகம் பிள்ளை எழுதிய நூல்.  இதற்குப் பெயர்
> தான் “வடபுலத் தாக்கமா”?
> என்று பத்துக்  கருத்துக்களை முன்வைத்திருக்கிறீர்கள்
> அறிஞர்கள் நிறைந்த அவை என்ன சொல்கிறது என்று பார்ப்போம்
> நாகராசன்
>

> 2011/3/30 ஜடாயு <jataay...@gmail.com>> On Mar 30, 9:51 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Mar 30, 2011, 12:05:42 PM3/30/11
to mint...@googlegroups.com
நான் குறிப்பிட்டது

அங்கு நிலவியிருந்த இறைவழிபாடு இந்து சமய வழிபாடன்று.  பழங்குடிகளிடையே
நிலவியதாக மானுடவியலார் கருதும் அனிமிஸம் என்ற பழைய இறைவழிபாடே.

இது நீங்கள் சொன்னது

’பழங்குடியினரின் வழிபாடான அனிமிஸம்  எனப்படும்
ஜந்து இந்துமதம் அல்ல, அதற்கும் இந்து மதத்திற்கும் சம்பந்தமே கிடையாது’
என்பது தான் மோசமான, பழைய பொய்.

அங்கு என நான் குறிப்பிட்டது வடகிழக்கு மாநிலங்களில்.  கிறித்துவம் வேர்விட்டு வளர்வதற்குமுன்னும் கிறித்துவம் பரவிய பின்னும் அவர்கள் அனிமிஸம் என்ற பழைய இறைவழிபாட்டுமுறையை வழக்கத்தில் கொண்டிருந்தார்கள்
அனிமிஸம் உலகெங்கும் வாழ்ந்த வாழும் பழங்குடிகளின் இறைவழிபாட்டுமுறையாகும்

http://www.sacred-texts.com/sha/anim/
மானுடவியலார் அனிமிஸம் பற்றிக்கூரும் கருத்து கீழே
http://www.encyclopedia.com/topic/animism.aspx

உலகெங்கும் உள்ள பழங்குடிகள் பற்றி தகவல் கீழே

http://www.pbase.com/neuenhofer/root

நாக வழிபாட்டுமுறையைக்குறிப்பிடும்போது

Naga Cult - Snake Worship - in Tamil Nadu, India

Animistic snake worship was known in India long before the advent of the Aryans. As in present time, the early inhabitants had to face continuous encounters with deadly snakes infesting forests and marshy grounds. They were overwhelmed with the incomprehensible terror of sudden death and could think of no better way to relieve themselves from that fear than appeasement and veneration. On the other hand, snakes seeking shelter from the rains in houses and stables indicated the beginning of the monsoons and thus of the fertile season and fertility in general, hence they were worshipped mainly by women. Their habit to live under the earth related them to the underworld ancestors who were accordingly venerated in the form of snakes. 
Snake worship in a kind of combined animistic-Hindu form is alive to the present day almost everywhere in India, and is particularly pronounced in South India. Votive steles with snake images are often erected below trees because people believe that the dwellings of the snakes are situated underneath the roots. The Naga (skt. naga – snake) is usually not the snake in general but the cobra, raised to the rank of a divine being. 
In Tamil Nadu, a peculiar custom, called naga-pratishta, is known for barren women. A stone image of a snake is first submersed in a spring or pond for a certain time to be impregnated with the mysterious power of the snakes living there. Then the barren woman circumambulates the Ashvatta tree (ficus religiosa) and has the snake stone established under the tree, or it is lined up with others in the precincts of a temple. From: Waltraud Ganguly

http://www.pbase.com/neuenhofer/naga_cult_in_tamil_nadu&view=slideshow

ஐயனார் வழிபாடு

Ayyanar, a Powerful Village God in Tamil Nadu, India.

Ayyanar and his retinue of 21 gods are worshipped as protective deities in Tamil Nadu. Ayyanar shrines are usually located at the peripheries or boundaries of rural villages, and the deity is seen with a sword riding a white horse. He and fierce-looking Karuppusami, his most important companion with a moustache, a large sickle and a scary demon by his side, are eternally vigilant fighting against demons and evil spirits that are threatening the village. 
It is believed that the Ayyanar cult goes back to an ancient clan-based Dravidian cult of ancestor worship that is linked to nature and fertility worship. Blood sacrifices at these shrines are very common. The huge (sometimes taller than 20 feet) and terrifying images are accompanied by larger than life figures of attendants and animals. Smaller terra cotta horses and iron tridents and spears, offered by devotees in fulfillment of their vows, usually crowd the front yard of these shrines. 
Most officiating priests are non-Brahmins. They derive from local lineage that had initiated the cult many generations ago.

http://www.pbase.com/neuenhofer/ayyanar_a_powerful_village_god&view=slideshow

Thiruvakkarai Vakkrakali Amman Temple in Tamil Nadu, India

At Thiruvakkarai, about 30 km from Pondicherry, there is the Vakkrakali Amman Temple. The temple was built in the 12th century and is dedicated to the Goddess Kali, who is called Vakkra Kali here, the slayer of evil. According to the legend, the Goddess vanquished the demon Vakkrasura, and so she was named Vakkrakali. But not only the Goddess Kali, also Lord Shiva and Lord Vishnu are venerated here

http://www.pbase.com/neuenhofer/thiruvakkarai_vakkrakali_temple&view=slideshow

Mariamman and Kaliamman Temples in Tamil Nadu, India

Māri or Mariamman ("Mother Mari"), or simply Amman ("mother") is the South Indian Hindu goddess of disease and rain. She is the main South Indian mother goddess, predominant in the rural areas of Tamil Nadu, Karnataka and Andhra Pradesh. Māri is also closely associated with the Hindu goddesses Parvati and Kali. Māri originated as an ancient village goddess related to fertility and rain. And she was the smallpox goddess before this disease was eradicated. Now she cures all so-called heat-based diseases like rashes and chickenpox. People also pray to Mariamman for progeny, a good spouse, etc. Most Mariamman temples are humble shrines in villages, where non-Brahmins act as priests. In many rural shrines, the goddess has no form and is represented by a granite stone with a sharp tip, like a spear head. This stone is often adorned with garlands made of limes and with red flowers. These shrines often have an anthill that can be the resting place of a cobra. Milk and eggs are offered to propitiate the snake

http://www.pbase.com/neuenhofer/mariamman_and_kaliamman_temples_in_tamil_nadu&view=slideshow

பண்டைத்தமிழர் வாழ்வியல் மரபில் இறைவழிபாட்டுமுறை அனிமிஸம் என்ற முன்னோர் மற்றும் இயற்கைவழிபாடு என்பதும் பின்னாளில் உயர்கடவுளர் வழொபாடு பரவியது என்பதும் என் கருத்து
நாகராசன்

2011/3/30 ஜடாயு <jata...@gmail.com>
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

Hari Krishnan

unread,
Mar 30, 2011, 10:38:48 PM3/30/11
to mint...@googlegroups.com

2011/3/30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

பண்டைத்தமிழர் வாழ்வியல் மரபில் இறைவழிபாட்டுமுறை அனிமிஸம் என்ற முன்னோர் மற்றும் இயற்கைவழிபாடு என்பதும் பின்னாளில் உயர்கடவுளர் வழொபாடு பரவியது என்பதும் என் கருத்து

பண்டைத் தமிழர் வாழ்வியல் மரபில் இறைவழிபாட்டு முறை, இறைவழிபாட்டு முறையாகத்தான் இருந்தது.  அதற்கு இப்போது அனிமிஸம் என்ற பெயர் அளிக்கப்பட்டிருக்கிறது.  

Tickle.com என்றொரு தளம் இயங்கிக் கொண்டிருந்தது.  The Classic IQ test தொடங்கி, பற்பலவிதமான சோதனைகளை, கேள்வித் தாள்களைத் தயாரித்தளிப்பார்கள்.  நம்முடைய விடைகளின் அடிப்படையில், முடிவுகள் வரும்.  இப்படி சீரியஸாக, விளையாட்டாக என்று நிறைய டெஸ்ட்கள் உண்டு.  நான் ஒருகாலத்தில் தீவிரமாகப் பங்கேற்றுக் கொண்டிருந்தேன்.  இந்தச் சோதனைகளில் ஒன்று: Which God suits you (தலைப்பு வார்த்தைக்கு வார்த்தை நினைவில்லை.  கிட்டத்தட்ட இந்தப் பொருளில் அமைந்த ஒன்று) என்றொரு டெஸ்ட். ‘இது என்னது இது...’ என்று சோதனையை மேற்கொள்ளத் தொடங்கினால், அந்தக் கேள்விகளில் ஒன்று அதிர்ச்சியடைய வைத்தது: Are you an animal worshipper?  அடைப்புக் குறிக்குள் விளக்கம்.  (That is, do you worship monkeys, snakes and the like).  

அதாவது ஆஞ்சநேயர் வழிபாடும், விநாயக வழிபாடும், கருடாழ்வாருக்குத் தனி சன்னதி வைக்கப்படுவதும், மாரியம்மன் கோவில்களில் நாகதேவதைகள் வணங்கப்படுவதும், அனிமல் ஒர்ஷிப்பில் அடங்கும்.  This test is extremely offensive, most provocative என்று தளத்தின் பொறப்பாளர்களுக்கு எழுதிப் போட்டேன்.  That test was removed within a day or two.

ஏன் விலங்கு வழிபாடு என்று முத்திரை குத்துவதோடு நிறுத்திக் கொள்கிறீர்கள்.  Just go ahead and brand each and every Hindu as a worshipper of stones, metals, and rocks and trees.  பிள்ளை பிறக்கும்போதும் சரி, வளரும்போதும் சரி, நல்ல மனுஷன்தான்.  இப்பவும் அப்படியேதான் இருக்கிறான்.  குச்சியால் சாப்பிடுவது ஜப்பானிய வழக்கம்.  ஸ்பூனால் சாப்பிடுவது மேற்கத்திய வழக்கம்.  கைகளால் சாப்பிடுவது இந்திய வழக்கம்.  Aborigines, unhygienic people, who still continue the caveman's habits of eating with hands and washing shit with hands என்று அதற்கும் ஒரு பெயர் வைத்துக் கூப்பிடுங்கள்.  நான் உள்ளிட்ட எல்லோரும் காட்டுமிராண்டிகள் வரிசையில் போய்ச் சேர்ந்துவிடுவோம்.  பிஎச்டிக்கள் எல்லோரும் முட்டாள் அறிவாளிகளைப் பார்த்துப் பகடி பேசிக்கொண்டிருக்கலாம்.

The worship has been in existence from time immemorial  Only, you are branding it with the offensive label, Animal worship.  The word 'you' here does not signify a single person.  It signifies the group that brands us all as Animal worshippers.  We are aware that what we are worshipping is not an animal.  A person who has eyes that can look beyond the surface level, மேம்போக்காகப் பார்த்துத் தீர்ப்பளிப்பவர்களா இருக்க மாட்டார்கள்.  அதனதன் பொருளை விளங்கிக் கொள்ள முயல்வார்கள்.  மற்றவர்கள் பழக்க வழக்கங்களைப் பரிகசித்தும், இளக்காரப்படுத்தியும், தன்னை மேட்டிமைப் படுத்திக்கொள்ளவும் உயர்வாகக் காட்டிக்கொள்ளவும் முயல மாட்டார்கள்.  

என்ன கூத்து இது கண்ணன்!  கருடாழ்வாரை வணங்கும் நீங்களும் அனிமல் ஒர்ஷிப்பர்தானா?

--
அன்புடன்,
ஹரிகி.

devoo

unread,
Mar 30, 2011, 11:16:16 PM3/30/11
to மின்தமிழ்
ஆராய்ச்சி ஆனாலும், வழிபாடு ஆனாலும், நுண்கலை ஆனாலும் அலகை நிர்ணயிப்பது
மேற்கு; கொஞ்சமும் நிறை குறைகளை ஆராயாமல் அப்படியே அதை ஏற்கும் அறிவுஜீவி
அல்லக்கைகளுக்கும்
நம்மில் குறைவு இல்லை. அவன் diety என்பதை நாமும் diety ன்னு சொல்லணும்;
idol ன்னா idol தான். எல்லா நகரங்களிலும் Modern art ன்னு கோஷ்டி
கிளம்பியது இடையில்; விடுமுறை நாள்களில் கண்காட்சி நடத்துவார்கள்.ஆனால்
இப்போது பெரும்பாலும் இந்தியப் பாரம்பரிய
ஓவியங்களே கண்ணில் படுகிறது.

பல துறைகளில் மேற்கு முன்னோடி, அதை மறுக்கவில்லை. நம்மைக் காட்டிலும்
அறிவும், ஆழ்ந்த பார்வையும் கொண்ட மேற்கத்தியர்களையும் இங்கு குறைத்து
மதிப்பிடவில்லை

தேவ்

On Mar 30, 9:38 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2011/3/30 Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>

N. Kannan

unread,
Mar 30, 2011, 11:30:04 PM3/30/11
to mint...@googlegroups.com
2011/3/31 Hari Krishnan <hari.har...@gmail.com>:

> என்ன கூத்து இது கண்ணன்!  கருடாழ்வாரை வணங்கும் நீங்களும் அனிமல்
> ஒர்ஷிப்பர்தானா?
>

:-)

'வெஞ்சினப்பறவை` என்று திருவாய்மொழி பேசும் கருடனை நாம் `பெரிய திருவடி`
என்றல்லவோ அழைக்கிறோம்.

நம்மிடம் உள்ள sophistication-ஐ செமத்திய வழிமுறையில் வருவோர் மெல்லப்
புரிந்து கொண்டு வருகின்றனர். ஒரு கலாச்சாரத்தின் உயர் மதிப்பை இன்னொரு
கலாச்சாரம் கொண்டு எக்காலமும் மதிப்பிடவே முடியாது. நன்றாகச்
சொன்னீர்கள். வலைப்பக்க ஆய்வாளர்களை ஜாக்கிரதைப்படுத்தியதும் மிகச்சரியே!

என்னிடம் வரும் அமெரிக்க, ஆங்கில நண்பர்களுக்கு நான் அடிக்கடி சொல்வது,
இந்திய முறையில் எல்லாமே இயற்கையோடு இயைந்து, செயற்கையற்று இருக்கிறது
என்பது. கையால் சாப்பிடும் போது உணவைத் தொட்டவுடன் விருந்து
ஆரம்பமாகிவிடுகிறது. உணவின் மிருதுதன்மை, சூடு போன்றவை உடலின் நொதிகளை
உடனே சுரக்கச்செய்கின்றன. எனவே நான் சொல்லுவேன், சாப்பிடுதல் என்பது
வாயில் போட்டபின் என்பதில்லை என்று! நாக்கில் உள்ள பொறிகளேதான் கையிலும்
உள்ளன. எனவே `கையால் சாப்பிடுவது` என்பது literally correct!! (கை பட்ட
மாவுதான் நொதிக்கும் (புளிக்கும்).

நம் தெய்வங்களெல்லாம் மிகவும் இயற்கையானவை. ஒன்றில் கூட அந்நியத்தனம்
இருக்காது. கிரகங்களைப் பற்றிச் சொல்லும் போது கூட அவைகளுக்கும் மானுட
உரு கொடுத்துவிடுகிறோம்.

அவர்கள் மொழியில் சொல்வதானால் Indians workship the most sophisticated
animism :-))

அவர்கள்தானே சொல்கிறார்கள் குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்று.
இவனும் மற்றவை போல் மண்ணில் பிறந்தவன்தானே! Is he not an animal? :-) So
any workship done by an animal will be animistic :-)))

நா.கண்ணன்

Nagarajan Vadivel

unread,
Mar 30, 2011, 11:07:04 PM3/30/11
to mint...@googlegroups.com
//The worship has been in existence from time immemorial  Only, you are branding it with the offensive label, Animal worship.  The word 'you' here does not signify a single person.  It signifies the group that brands us all as Animal worshippers.  We are aware that what we are worshipping is not an animal.  A person who has eyes that can look beyond the surface level,//

I mentioned animism as an anthropological concept which was prevalent universally among the tribal communities world wide.
Even now animism is in practiced in Megahalya and the practitioners are highly educated and highly cultureக்
It is not my intention to call names and label Tamils or Hindus or animal worshipers as barbarians

மேம்போக்காகப் பார்த்துத் தீர்ப்பளிப்பவர்களா இருக்க மாட்டார்கள்.  அதனதன் பொருளை விளங்கிக் கொள்ள முயல்வார்கள்.  மற்றவர்கள் பழக்க வழக்கங்களைப் பரிகசித்தும், இளக்காரப்படுத்தியும், தன்னை மேட்டிமைப் படுத்திக்கொள்ளவும் உயர்வாகக் காட்டிக்கொள்ளவும் முயல மாட்டார்கள். 

நான் அவ்வாறான முயற்சியை மேற்கொண்டதாகக் கருதுவீர்களானால் என்னை அருள்கூர்ந்து மன்னிக்க வேண்டுகிறேன்.  நான் கூறிய கருத்துக்களையும் மேற்கோளாகக் காட்டிய உதாரணங்களையும் விலக்கிக் கொள்ளுகிறேன்

//என்ன கூத்து இது கண்ணன்!  கருடாழ்வாரை வணங்கும் நீங்களும் அனிமல் ஒர்ஷிப்பர்தானா?//

மீண்டும் நிபந்தனையற்ற மன்னிப்பைக் கேட்டு என் அறியாமயை நொந்துகொண்டு இவ்விழையிலிருந்து விடைபெறுகிறேன்

இனிமேல் தளத்தில் வெளியாவதை நேரமிருந்தால் படித்து என் அறிவை வளர்த்துக்கொள்ள முயற்சிக்கிறேன். 

ஒரு மேன்மக்கள் குமுகத்தில் ஒருமுகச் சிந்தனையில்லாமல் தான்தோன்றித்தனமாகப் பின்னூட்டமிடுவது அறிஞர்களைப் புன்படுத்துகிறது என்பதை நான் இப்போது முழுதும் உணர்ந்துகொண்டேன்

நன்றி
நாகராசன்

2011/3/31 Hari Krishnan <hari.har...@gmail.com>
--

Hari Krishnan

unread,
Mar 31, 2011, 7:19:06 AM3/31/11
to mint...@googlegroups.com

2011/3/31 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

mentioned animism as an anthropological concept which was prevalent universally among the tribal communities world wide.
Even now animism is in practiced in Megahalya and the practitioners are highly educated and highly cultureக்
It is not my intention to call names and label Tamils or Hindus or animal worshipers as barbarians

Trust me, I had no intentions of hurting you.  But the post was really inflaming.  And I do understand that any word, defining an ideology or concept would have a different shade of meaning for the specialist and an entirely different one for the common man. I am attaching two pages from The Story of Philosophy, Will Durant.  I know you don't have to read it again.  But this particular portion is very valid in the present context of discussions.  The last para of page viii is of particular mention.  Here is what I am talking about.

Capture.PNG

That said, now let's come back to what Animism means to a common man like me.  

WordWeb Dictionary: 
The doctrine that all natural objects and the universe itself have souls

Wiktionary: 

animism (plural animisms)

A belief that spirits inhabit some or all classes of natural objects or phenomena. 
A belief that an immaterial force animates the universe. 
(dated) A doctrine that animal life is produced by an immaterial spirit
 
American Heritage:

n.
  1. The belief in the existence of individual spirits that inhabit natural objects and phenomena.
  2. The belief in the existence of spiritual beings that are separable or separate from bodies.
  3. The hypothesis holding that an immaterial force animates the universe.
Encarta:

an·i·mism [ ánnə mìzzəm ]

noun 
Definition:
 
1. belief that nature has soul: the belief that things in nature, e.g. trees, mountains, and the sky, have souls or consciousness

2. belief in organizing force in universe: the belief that a supernatural force animates and organizes the universe

3. belief in existence of separate spirit: the belief that people have spirits that do or can exist separately from their bodies

[Mid-19th century. < Latin anima "soul"]

an·i·mist adjective, noun
an·i·mis·tic [ ànnə místik ] adjective
Encarta® World English Dictionary [North American Edition] © & (P)2009 Microsoft Corporation. All rights reserved. Developed for Microsoft by Bloomsbury Publishing Plc.

MSN Bookshelf Basics Dictionary:

animism an¢im­izm, noun the attribution of a soul to natural objects and phenomena; G E Stahl's theory (1720) that the soul is the vital principle and source of the phenomena of animal life

All of them taken collectively together, points to the worship of animals, the elements, nature, Rivers, Mountains et al.  To a Hindu, all the Rivers are worthy of worship.  To him Ganges, Kaveri, Godhavari et al, have life and to him even mountains represent God.  In particular, Thiruvannamalai.  While the Kailash is the seat of the Lord, Thiruvannamalai is nothing but Shiva Himself.  

And therefore, when the word animism is uttered, a common man naturally feels that it is Hinduism that is targetted, and not simply some unknown tribe in Meghalaya or some such region.

The Specialist uses his own language and that is why, according to Will Durant, 'In the midst of unprecedented popular ignorance flourished.'  

As a Specialist and Educationist combined, who do you think respected Sir, Will Durant would hold responsible?  The intention should have been made clear if some effort can be spent on the 'flourishing of popular ignorance'.  The writer should have come out with his own definition, if his definition was different from the popular definition of the word in question.

I am not pointing a finger at you.  I am trying to present the situation as it happened and developed and the root cause behind it.

மேம்போக்காகப் பார்த்துத் தீர்ப்பளிப்பவர்களா இருக்க மாட்டார்கள்.  அதனதன் பொருளை விளங்கிக் கொள்ள முயல்வார்கள்.  மற்றவர்கள் பழக்க வழக்கங்களைப் பரிகசித்தும், இளக்காரப்படுத்தியும், தன்னை மேட்டிமைப் படுத்திக்கொள்ளவும் உயர்வாகக் காட்டிக்கொள்ளவும் முயல மாட்டார்கள். 

நான் அவ்வாறான முயற்சியை மேற்கொண்டதாகக் கருதுவீர்களானால் என்னை அருள்கூர்ந்து மன்னிக்க வேண்டுகிறேன்.  நான் கூறிய கருத்துக்களையும் மேற்கோளாகக் காட்டிய உதாரணங்களையும் விலக்கிக் கொள்ளுகிறேன்

உங்கள் பண்புக்குத் தலை வணங்குகிறேன்.  
Capture.PNG
img077.jpg

ஜடாயு

unread,
Mar 31, 2011, 9:01:03 AM3/31/11
to மின்தமிழ்
திரு நாகராஜன் வடிவேல் தான் அளித்த தரவுகளை விலக்கிக் கொள்கிறேன் என்று
சொல்லிவிட்டதால் அதை வைத்து மீண்டும் விவாதம் செய்வது முறையில்லை. எனவே
நானும் நிறுத்திக் கொள்கிறேன்.

Animism பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவல். இப்போதைய ஆங்கிலச் சொல்லாக்கத்தை
வைத்துக் கொண்டு இது ஏதோ மிருகவழிபாடு தொடர்பானது என்ற எண்ணம் தோன்றும்.
அது சரியான புரிதல் அல்ல.

இந்தச் சொல் ஒரு பழைய இறையியல் சொல், மானுடவியல் சொல் அல்ல. anima என்ற
லத்தீன் சொல்லில் இருந்து உருவான சொல். அந்த லத்தீன் சொல்லுக்கு உயிர்
அல்லது ஆன்மா என்று பொருள். எனவே அனிமிஸம் என்பதற்கு சரியான பொருள்
உயிர்த் தத்துவம் அல்லது ஆன்ம தத்துவம். உலகம் எங்கும் ஒரே உயிர் அல்லது
இயற்கை அல்லது ஆத்மா இருக்கிறது என்று நம்பும் கொள்கை. தத்துவ ரீதியாக
மூலப் பிரகிருதி என்ற கருத்தாக்கத்தை முன்வைத்த சாங்கிய தரிசனத்திற்கு
அருகில் இது வரும்.

இந்தியாவின் வடகிழக்கின் வழிபாட்டு முறைகளுக்கு ஆழமான இந்து பாரம்பரியத்
தொடர்பு உண்டு. “அருணாசல” பிரதேசம், “திரிபுரா” போன்ற பேர்கள் பிறகு
எப்படி வந்திருக்கும்? அவர்களது சூரிய,தீ வழிபாடுகள் வேத வேள்விகள்
போன்ற ஒரு வடிவமே. திரிபுராவில் திரிபுர சுந்தரி ஆலயமும் உண்டு. இவர்கள்
எல்லாம் அனிமிஸ்டுகள் என்று முத்திரை குத்தியது காலனிய “அறிஞர்களின்”
அகம்பாவம்/உள்நோக்கம் அன்றி வேறில்லை.

இந்தியப் பண்பாட்டு விழுமியங்களைக் கணக்கில் கொண்டு இத்திறக்கில் செறிவான
ஆய்வுகள் செய்யப் பட்டுள்ளன. சந்தியா ஜெயின் எழுதியிருக்கும் Adi Deo
Arya Devata : A Panoramic View of Tribal-Hindu Cultural Interface என்ற
நூலைப் பரிந்துரைக்கிறேன். Rupa & Co பதிப்பித்துள்ள புத்தகம்.

N. Ganesan

unread,
Mar 31, 2011, 10:06:15 AM3/31/11
to மின்தமிழ்

On Mar 29, 10:18 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> 2011/3/30 ஜடாயு <jataay...@gmail.com>
>

> > On Mar 29, 8:26 pm, Dhivakar <venkdhiva...@gmail.com> wrote:
>
> > > எந்த மதம் மாறினாலும், தங்கள் சிறு தெய்வ வழிபாட்டை மட்டும் விடவில்லை. அது
> > > பாட்டுக்கு அது, இது பாட்டுக்கு இது. இன்னமும் சொல்லப் போனால் சிறுதெய்வ
> > > வழிபாடு என்று நீங்கள் சொல்லும் நிலைப்பாடுதான் மதம் மாற்றப்பட்ட இந்த ஏழை
> > > மக்களுக்கு இந்து மதத்தின் பால் விட்ட குறை தொட்ட குறையாக தொடர்பை இன்னமும்
> > > வைத்திருக்கிறது.
>
> > அன்புள்ள திவாகர்,  இது  ஒரு தற்காலிக்க இடைநிலைப் போக்கு (intermediate
> > position) மட்டுமே. ஒரு குறிப்பிட்ட சமூகத்தில்/பிரதேசத்தில்/சாதியில்
> > குறிப்பிட்ட அளவு மக்கள் கிறிஸ்தவத்துக்கு வரும் வரை  மிஷநரிகளே இதைக்
> > கண்டும் காணாதிருப்பார்கள்.  ஆனால் அந்த threshold தாண்டியதும்,
> > வன்மத்துடன் எல்லா பிறமத வழிபாடுகளும் அழித்து ஒழிக்கப் படும்.  சொல்லப்
> > போனால்,  இந்து “பெரும்” தெய்வங்களை விட  சிறுதெய்வங்களைத் தான் இன்னமே
> > எளிதாக கிறிஸ்தவர்களால்  அடையாளம் காண்பிக்க முடியும்.
>
> > எத்தனையோ உதாரணங்கள் இதற்கு சொல்லலாம்.
>
> > அயர்லாந்தின் பேட்ரன் செயிண்ட் என்று கத்தோலிக்கர்களால் போற்றப் படும்
> > செயிண்ட் பாட்ரிக், அந்த நாட்டில் நிலவிய நாக வழிபாடுகளையும், பெண் தெய்வ
> > வழிபாடுகளையும், அந்த வழிபாடுகள் செய்து வந்த மக்களையும் சுவடே இல்லாமல்
> > ஈவிரக்கமின்றி கொன்றொழித்தார். அவருக்கு annihilator of snakes என்ற
> > பட்டப் பெயரே ஏற்பட்டது!    (ஒப்பீட்டில் நமது ரிஷிகள் என்ன செய்தார்கள்?
> > சிவனது கழுத்தில் நாகத்தை அணிவித்தார்கள், திருமாலைப் பாம்பனையில்
> > படுக்கவைத்தார்கள்,  நாகேஸ்வரி அம்மனை உருவாக்கினார்கள்,  நாக வழிபாட்டை
> > வைதீக சமயத்துடன் இரண்டறக் கலந்தார்கள்).
>
> > நாகாலாந்தும், மிசோரமும் இன்று ஏறக்குறைய் 95% கிறிஸ்தவ மயமாகி விட்டன.

> > முத்து மாரியம்மா  என்று தான் பாடினார்.

>
> > அன்புடன்,
> > ஜடாயு
>

> நல்ல கவனப்படுத்தல் திரு ஜடாயு. மாலை வந்து இது விஷயமாய்ச் சில சொல்ல எண்ணம்.
> நன்றி.

பக்தி, ஞானம் இரண்டும் வடிவாகிய தாங்கள்
கிராம தெய்வங்கள் பற்றி எழுதுங்கள். உங்கள்
நடையில் கற்றுக் கொள்ள நாங்கள் இருக்கிறோம்.

நன்றி.

நா. கணேசன்

கி.கா​ளைராசன்

unread,
Mar 31, 2011, 10:12:11 AM3/31/11
to mint...@googlegroups.com, N. Ganesan
பக்தி, ஞானம் இரண்டும் வடிவாகிய தாங்கள்
கிராம தெய்வங்கள் பற்றி எழுதுங்கள். உங்கள்
நடையில் கற்றுக் கொள்ள நாங்கள்  இருக்கிறோம்.
அன்பன்
கி.கா​ளைராசன்

திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி  படியுங்கள்,
http://www.freewebs.com/thirupoovanam/
அன்னதானம் செய்வோம்,  கண்தானம் செய்வோம்.  இவ்விருதானங்களையும் சிவபெருமான்
ஏற்றுக் கொள்கிறார்,

Nagarajan Vadivel

unread,
Mar 31, 2011, 2:21:31 PM3/31/11
to mint...@googlegroups.com
பெருமதிப்பிற்குரிய ஜடாயு ஐயா
தங்களின் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி.  நீங்கள் சொல்லுங்கள் எழுதுங்கள் நான் கவனமுடன் படித்துப் புரிந்துகொள்வேன். 

இந்தியாவின் வடகிழக்கின் வழிபாட்டு முறைகளுக்கு ஆழமான இந்து பாரம்பரியத்
தொடர்பு உண்டு என்ற உங்களின் அனுமனம் தொடர்பான கருத்துக்களைக் கேட்பதில் ஆவலாக உள்ளேன். 

நான் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில் ஒரு பழங்குடிப் பெண்ணைத்தான் மணந்திருக்கிறேன்.  அவர்களின் முன்னோர் அனிமிஸ்ட்டுகள் என்று தங்களை அழைத்துக்கொண்டார்கள்.
என் மனைவியின் தாய்மாமாவின் அப்பா பெயர் சத்திராஜா.  அப்பழங்குடிகளின் மன்னரான அவர்தான் முதன் முதலாக கிறித்துவத்துக்கு மாறினார்.  இன்றும் அப்பழங்குடிகளின் அரசுமுறையை இந்திய அரசியல் சட்டம் ஏற்றுக்கொண்டுள்ளது.  அவர்களுக்கென்று ஒரு மன்னர் இன்றும் இருக்கிறார். அரசரின் கொடி சேவல் கொடி.  பெரியவர்கள் பேசும்போது அவர்களின் இறைவழிபாட்டுமுறை அனிமிஸம்- வேத வழிபாட்டின் கலவை என்று சொல்லிக் கேட்டிருக்கிறேன்.  ஆயினும் அது பற்றிய முழுத்தகவல் என்னிடம் இல்லை.
நீங்கள் சொல்லும் செய்தி அனமிஸம் பற்றிய உண்மையான புரிதலுக்கு உதவும் என
நன்றியுடன்
நாகராசன்

2011/3/31 ஜடாயு <jata...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Mar 31, 2011, 2:04:31 PM3/31/11
to mint...@googlegroups.com
Dear Sir
Thanks for your reply. As you are aware that my post is on கிராம தேவதைகள்.  I participated in this thread on more than one occasion.  I try and postulate that the Tamils had their own method of worship.
There is no two opinion on the Tamils that they were basically tribes who had their unique tribal culture.  It is altogether a different matter to make a comparative study to establish that the later Tamils were influenced by Vedic thoughts and adapted the Hindu religious practice.
I do not post anything here without providing the reference and wherever I present my views I present with a disclaimer that it is a personal opinion
I am an admirer of your writings and read all your postings on varied topics of importance.
I enjoy your reply given to my posting particularly carefully using ludicurous words to boost and balloon my ego.  GREAT
I am also happy to see a common man who can effortlessly and authoritatively quote Will Durant to make his side as a winning side
At the end of the day it is WIN-WIN
I am basically influenced by the following research ethics
1. Knowing is better than not knowing
2. If you know make it public
Thanks
Vnagarajan

2011/3/31 Hari Krishnan <hari.har...@gmail.com>

--
Capture.PNG

Hari Krishnan

unread,
Mar 31, 2011, 11:19:47 PM3/31/11
to mint...@googlegroups.com

2011/3/31 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

At the end of the day it is WIN-WIN
I am basically influenced by the following research ethics
1. Knowing is better than not knowing
2. If you know make it public

Thanks for the understanding Professor.  

As for me, I do not argue to win.  I argue to know.  In this case also my stance did not alter and let's say a no no to Win Win, and say Know Know.  

It is true that knowing is better than not knowing.  And it is also true that whenever someone learns something new, what he really knows first is the fact that what he was not aware of, ignorant of, till this moment.  

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு. 

And why this colossus of a poet attributed the simile of Knowledge to the act of love and love making.....would take us long, long away from the main issue.  But the simile has it all. அறிதோறும் அறியாமை கண்டு.   

ஜடாயு

unread,
Mar 31, 2011, 11:54:18 PM3/31/11
to மின்தமிழ்
அன்புள்ள நாகராசன் ஐயா,

நன்றி. பாரதப் பண்பாட்டின் செழுமைகள் ஒருங்கே கலந்து மிளிரும் தங்கள்
குடும்பத்தைப் பற்றி அறிய வந்ததும் மிக்க மகிழ்ச்சி.

நான் இதே திரியில் வேறொரு இடத்தில் குறிப்பிட்ட சந்தியா ஜெயின் அவர்களின்
புத்தகத்தில் வடகிழக்கு பற்றி விவரணங்கள் உள்ளன. திரிபுராவை மையப்
படுத்தி அவர் எழுதியிருக்கும் மற்றொரு நூலிலும் அது பற்றி படிக்கலாம் -

EVANGELICAL INTRUSIONS: Tripura: A Case Study
by Sandhya Jain
http://www.rupapublications.co.in/client/Book/EVANGELICAL-INTRUSIONS-Tripura-A-Case-Study.aspx

தமிழில் அரவிந்தன் நீலகண்டன் இது பற்றி புகைப்படங்கள் மற்றும் பல
தரவுகளுடன் ஒரு சிறப்பான கட்டுரையை திண்ணையில் எழுதியிருந்தார்.
எழுத்தாளர் வாசந்திக்கு எதிர்வினையாக எழுதியது. இங்கே -

வடகிழக்கும் பாரதமே. பிரிப்பவர்கள் யார்?
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20711151&edition_id=20071115&format=html

இந்தக் கட்டுரை உங்களுக்குக் கட்டாயம் பல திறப்புகளை அளிக்கும் என்று
நினைக்கிறேன். படித்து தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்புடன்,
ஜடாயு

On Mar 31, 11:21 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:

ஜடாயு

unread,
Mar 31, 2011, 11:58:25 PM3/31/11
to மின்தமிழ்
இந்தத் திரிக்கு பெரிதும் பொருத்தமான ஜெயமோகனின் ஒரு சிறு பதிவு.

அவரது பிரபல கதையான ”மாடன் மோட்சம்” படித்து விட்டு மேல்நிலையாக்கம்
பற்றி ஒரு பொத்தாம் பொதுவான கருத்தை வளர்த்துக் கொண்டவர்கள் நம் சூழலில்
பலர். இங்கு ஜெயமோகன் தெளிவாகக் கூறுவது என்ன என்பதையும் பாருங்கள்.

http://www.jeyamohan.in/?p=8074

மேல்நிலையாக்கம் -கடிதம்
September 6th, 2010

அன்புள்ள ஜெ,

ஸ்ரீநாராயண குருவின் வாழ்க்கையில் அவ்வளவாகக் கேள்விப் படாத சம்பவங்கள்
இவை. பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.

குரு கிராமக் கோயில்களில் பலியிடுவதை நிறுத்தியது பற்றி சுவாமி
தன்மயாவும் சொன்னார். சிறுதெய்வ வழிபாடு பெருந்தெய்வ வழிபாட்டுடன் இணைவது
என்பது ஒருவகையில் ஒரு சமூகத் தொகுப்பு செயல்பாடு தான் அல்லவா? நாராயண
குரு போன்ற விளிம்பு நிலை மக்களுக்காகக் குரல் கொடுத்த ஒரு வேதாந்தியே
இத்தகைய ‘மேல்நிலையாக்கத்தை’ ஊக்குவித்திருக்கிறார். பிரசாரம்
செய்திருக்கிறார். எனவே, இப்போது தமிழகத்தில் சிறிய, கூரையில்லாத கிராமக்
கோயில்கள் பெரிய, ஆகம வழிபாட்டுக் கோயில்களாக ஆவதையும் நாம் இந்தக்
கண்ணோட்டத்தில் தான் பார்க்கவேண்டும் இல்லையா?

அன்புடன்,
ஜடாயு

http://www.jeyamohan.in/?p=7941

அன்புள்ள ஜடாயு

நாராயணகுரு அவரது சீர்திருத்தங்களில் முதன்மையாக செய்தவை மூன்று1.
சிறுதெய்வ வழிபாட்டு நீக்கம் 2. குடிமறுப்பு 3.புலால் மறுப்பு

இவை மூன்றுமே மேல்நிலையாக்கம் சம்பந்தமானவை. அக்காலத்திலேயே அவர்
பிராமணர்களை போல பிறரையும் மாற்ற முயல்வதாக நடராஜகுருவின் அப்பா டாக்டர்
பல்பு குற்றம் சாட்டியிருக்கிறார். ஆனால் குருவுக்கு அதற்கான காரணங்கள்
இருந்தன. அவர் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் முன்னுரிமைகளையும்
ஆழ்மனக்கட்டமைப்பையும் மாற்ற விரும்பினார். அவர்களைக் கட்டிப்போடும்
நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளையும் குறியீடுகளையும் அவர்கள் உதறாமல்
முன்னேற்றம் சாத்தியமல்ல என்று நினைத்தார்.

ஒரு சிறுதெய்வம் இன்றைய ஆய்வாளனுக்கு ஓர் அபூர்வமான ஆய்வுப்பொருள். ஆனால்
அன்று அதை வழிபட்ட மக்களுக்கு உண்மையான ஓர் இருப்பு. பல சிறுதெய்வங்கள்
சென்றகால நிலப்பிரபுத்துவ கால மதிப்பிடுகளின் குறியீடுகள். ஈழவர்கள்
வழிபட்ட பல தெய்வங்கள் நேரடியாகவே வன்முறையின் சின்னங்கள். வன்முறை
நிறைந்த சென்ற காலகட்டத்தின் பிம்பங்கள். குரு ஈழவர்கள் அவற்றை
விட்டுவிட்டு நவீன கால சின்னங்களுக்கு வரவேண்டும் என்று விரும்பினார்.
அறுகொலை போன்ற தெய்வங்களை தூக்கி வீசிவிட்டு சரஸ்வதி தேவியை அவர்
நிறுவினார். அத்வைதியாக, வழிபாட்டுமுறைகளுக்கு அப்பாற்பட்டவராக இருந்தும்
சரஸ்வதிதேவிக்கு துதிப்பாடல்கள் எழுதினார். இதை மிக விரிவான
கோணத்தில்தான் பார்க்க வேண்டும்

இந்த மேல்நிலையாக்கத்தின் இழப்புகள் என்ன ,சரியா தவறா என்பதெல்லாம் ஒரு
பக்க அறிவுத்தள விவாதங்கள் மட்டுமே. குறிப்பாக மேலைநாட்டு கோட்பாடுகளால்
அவை முன்வைக்கப்படுகின்றன. கிறித்தவ அமைப்புகள் இந்து மதத்தை ஓர்
அழிவுசக்தியாக காட்ட அவற்றை பயன்படுத்துகின்றன. ஒட்டுமொத்த நாட்டார்
பழங்குடி நம்பிக்கைகளையே வேருடன் கெல்லி வீசிய பின்னரே கிறித்தவம்
பரவியது- பரப்பப்படுகிறது என்பதை மறைத்து இந்து மதத்தின் உள்ளிழுக்கும்
போக்கை மகாக்கொடுமை என அவர்கள் சித்தரிக்கிறார்கள். ஆனால் நடைமுறையில்
மேல்நிலையாக்கம் தவிர்க்க முடியாததாக நிகழ்கிறது. அதை எவரும்
திணிக்கவில்லை. அது ஈராயிரம் வருடங்களாக நிகழ்ந்து வரும் ஒரு இடைவிடாத
சமூகச் செயல்பாடு. அது ஏன் நிகழ்கிறதென ஆராயவே முடியும். நிகழக்கூடாதென
சொல்வதற்கு ஆய்வாளர் சமூகத்திற்கு நீதிபதி அல்ல.

கடவுள்களின் வடிவங்களை மூன்றாகச் சொல்வது வழக்கம். செயல்தெய்வங்கள்
அல்லது சிறுதெய்வங்கள். இவர்கள் குறிப்பிட்ட செயலுக்கான தெய்வங்கள்.
குறிப்பிட்ட சடங்குகளுடன் இடங்களுடன் குலங்களுடன் தொடர்புடையவை.
இரண்டாவதாக , பெருந்தெய்வங்கள் அல்லது முழுமைத்தெய்வங்கள். படைத்தல்
காத்தல் அழித்தலைச் செய்யும் கடவுள்கள். மூன்றாவதாக தத்துவ தெய்வங்கள்.
வழிபாடானது முதல் படியில் இருந்து மூன்றாவதை நோக்கி இயல்பாக
நகர்ந்துகொண்டே இருக்கும். அந்தச் சமூகம் எந்த அளவுக்குப் பண்படுகிறதோ
அதற்கேற்ப அந்த முன்னகர்தல் சாத்தியமாகிறது

ஒரு சமூகம் பழங்குடித்தன்மையுடன் இருக்கையில் சிறுதெய்வங்கள்
இருக்கின்றன.பழங்குடித்தன்மையை இழக்க இழக்க அது பெருந்தெய்வத்தை நோக்கி
நகர்கிறது. இன்று நம் கிராமங்களில் பல சிறு சமூகங்கள் படிப்பு மற்றும்
செல்வத்தால் முன்னகரும்தோறும் அவர்களுக்கு பெருந்தெய்வம் தேவையாகிறது.
ஆகவே பெருந்தெய்வங்களுடன் தங்கள் தெய்வங்களை இணைத்துக்கொள்கிறார்கள்.
பெருந்தெய்வங்களை ஏற்றுக்கொள்கிறார்கள். இந்தபப்ரிணாமம் வரலாறு முழுக்க
இந்தியாவில் நடந்து வந்த ஒன்று. இன்று ஏன் இது ஒரு பேரழிவு என்றும்,
இவ்வாறு சிறுதெய்வங்கள் பெருந்தெய்வங்களுடன் இணைக்கப்படுவது
‘இந்துமயமாதல்’ என்றும் சொல்லப்படுகிறதென்றால் கிறித்தவ மதமாற்ற
அமைப்புகளின் உள்நோக்கம் உள்ளே செயல்படுவதனால்தான். சிறுதெய்வங்களில்
இருந்து வரலாற்றுப்போக்கில் விலகும் சமூகங்கள் கிறித்தவ பெருந்தெய்வ
வழிபாட்டுக்குள் செல்ல வேண்டும் என்பதற்காகவே.

இந்து பெருமதத்துக்குள் செல்லும்போது சிறுதெய்வங்கள் அழிவதில்லை. அவை
உருமாறுகின்றன. பெருந்தெய்வங்களாக காலப்போக்கில் உருவம் கொள்கின்றன.
சிவனும் முருகனும் கூட அப்படி பெருந்தெய்வங்களாக ஆனவர்களே. சங்க
காலத்தில் முருகன் சாதாரண குன்றுத்தெய்வம்தான். சங்கம் மருவும் காலத்தில்
-திருமுருகாற்றுப்படை காலத்தில்- பெருந்தெய்வம். கண்ணெதிரே
பெருந்தெய்வமாக ஆன சிறுதெய்வம் என்றால் அது அய்யப்பன் தான். இது இந்து மத
செயல்பாடின் மிக இயல்பான ஒரு கூறு. வரலாற்று பின்புலமும் சமூகவியல்
காரணங்களும் உடையது. நாராயணகுரு செய்ததும் அதையே. அய்யா வைகுண்டர்
செய்ததும் அதையே. குரு விலக்கச்சொன்ன உக்கிரமான கிராம தேவதைகள் எல்லாமே
கேரளத்தில் இன்று பெரிய பகவதிகளாக ஆகிவிட்டனர்.

ஒரு வன்முறைத்தெய்வம் ’அருள்மிகு’ தெய்வமாக மாறுவதென்பது அச்சமூகத்தின்
உளவியலில் நிகழும் ஒரு முக்கியமான மாற்றம்.

ஜெ

Nagarajan Vadivel

unread,
Apr 1, 2011, 12:11:10 AM4/1/11
to mint...@googlegroups.com

WHAT WE DON'T KNOW

"Development professionals do not know how to carry out an

economic development programme, either a big one or small one. 

No one knows how - not the US government, not the Rockefeller

Foundation, not the international banks and agencies , not the

missionaries.  I don't know how.  You don't know how .  No one

knows how....  The result: we do not know that we do

not know how.  We have no knowledge of our ignorance.

  - Paddock and Paddock, 1973, PP 299-300

The same holds good for us while we discuss on Tamil heritage in an

aposeterioiri manner

While it is true that the worship of nature is a common thread running

throughout Tamil culture we really do not know when the worship of the

universal God  got differentiated and discriminated according to caste

hierarchy

The result: we do not know that we do not know how.  We have

no knowledge of our ignorance.

Thanks for your sharing

vnagarajan

P.S.  I left Mintamil forum membership under Prof.V.Nagaarajan and

rejoined as Vnagarajan.  I am also a common man not a "learned" Prof.

I dropped the honorific "Professor"

VN

n

2011/4/1 Hari Krishnan <hari.har...@gmail.com>

--

Subashini Tremmel

unread,
Apr 9, 2011, 2:13:42 AM4/9/11
to mint...@googlegroups.com, ஜடாயு, Subashini Kanagasundaram
திரு.ஜெயமோகனின் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி திரு.ஜடாயு.
 
-சுபா

2011/4/1 ஜடாயு <jata...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Subashini Tremmel

unread,
Apr 10, 2011, 3:41:35 AM4/10/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
பெரியாச்சி பற்றி நாம் தொடர்ந்து தகவல் தேடிக் கொண்டிருப்போம். இடையில் மேலும் சில தெய்வ வடிவங்களைப் பற்றியும் தொடர்ந்து பேசுவோம்.  இந்த இழையில் உள்ள பெரியாச்சி படங்கள் எடுக்கப்பட்ட அதே ஆலயத்தில் மேலும் ஒரு வடிவம்.

mahakalan.jpg

ஸ்ரீ மகா காளன் என்ற தெய்வம். அருகில் இந்திராணி அஜாமுகி என்ற இரண்டு பெண் வடிவங்கள்.

இந்த தெய்வத்தைப் பற்றி தகவல் அறிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்புடன்
சுபா

mahakalan.jpg

Geetha Sambasivam

unread,
Apr 10, 2011, 3:49:08 AM4/10/11
to mint...@googlegroups.com
கச்சியப்ப சிவாசாரியாரின் கந்த புராணத்தில்/ அருணகிரியாரின் திருப்புகழில்??? சரியா நினைவில் இல்லை.  இந்த இரண்டில் ஏதோ ஒன்றில்  மஹா காளனையும் அஜாமுகி குறித்தும் வரும்.  இந்திராணியைப்பிடித்துச் செல்லும்போது அவள் ஓலமிட்டு அலறி அபயம் கேட்பதும், அப்போது தர்ம சாஸ்தாவை அவளுக்குப்பாதுகாப்பாக அனுப்புவது  குறித்தும் படித்திருக்கிறேன்.  கொஞ்சம் செக் பண்ணிக்கொண்டு சொல்கிறேன்.  ஒவ்வொருவராக இந்திராணி கூப்பிட்டு ஓலம், ஓலம் என்று கூறுவதாகப் பாடல்! ம்ம்ம்ம்ம்ம்ம்?????

2011/4/10 Subashini Tremmel <ksuba...@gmail.com>

--
mahakalan.jpg
361.gif

Geetha Sambasivam

unread,
Apr 10, 2011, 4:17:11 AM4/10/11
to mint...@googlegroups.com
   
3357.
    பை அரா அமளியானும் பரம் பொருள் முதலும் நல்கும்
ஐயனே ஓலம் விண்ணோர்க்கு ஆதியே ஓலம் செண்டார்
கையனே ஓலம் எங்கள் கடவுளே ஓலம் மெய்யர்
மெய்யனே ஓலம் தொல் சீர் வீரனே ஓலம் ஓலம்.    
1

3358.
    ஆரணச் சுருதி ஓர் சார் அடல் உருத்திரன் என்று ஏத்தும்
காரணக் கடவுள் ஓலம் கடல் நிறத்து எந்தாய் ஓலம்
பூரணைக்கு இறைவா ஓலம் புட்கலை கணவா ஓலம்
வாரணத்து இறை மேல் கொண்டு வரும் பிரான் ஓலம்
                                       என்றாள்.    
//சாஸ்தாவை அழைக்கும் இந்திராணியின் ஓலம்
2

3359.
    ஒய் எனச் சசி இவ் வாற்றால் ஓல் இட அது கேட்டு
                                     எங்கள்
ஐயனைக் குறித்துக் கூவி அரற்றுவாள் போலும் என்னா
மையினைத் தடுத்துச் சிந்து மருத்து என வந்தான் என்ப
வெய்யரில் பெரிதும் வெய்யோன் வீரமா காளன்
என்போன்.    
3

// இங்கே வீர மா காளன் சாஸ்தா என்னும் சாத்தனின் தானைத் தலைவன் எனச் சொல்லப் படுகிறது.
                                 
3360.
    சாத்தனது அருளின் நிற்கும் தானை அம் தலைவன்
                                    வானோர்
வேத்து அவை ஆன எல்லாம் வியத்தகு வீரன் உந்தி
பூத்தவன் முதலோர் யாரும் புகழ வெவ் விடத்தை உண்டு
காத்தவன் நாமம் பெற்றோன் காலற்கும் காலன்
                                  போல்வான்.    
4

3361.
    இரு பிறை ஞெலிந்திட்டு அன்ன இலங்கு எழில்
                           எயிற்றன் ஞாலம்
வரு முகில் தடிந்தால் என்ன வாள் கொடு விதிர்க்கும்
                                     கையன்
உரும் இடிக்குரல் போல் ஆர்க்கும் ஓதையன் உரப்பும்
                                    சொல்லன்
கரவிழைத்து எங்ஙன் போதி நில் எனக் கழறி வந்தான்.    
5

3362.
    கொம் என வந்த வீரன் கூவிய சசியை நோக்கி
அம்மனை அழுங்கல் வாழி அசமுகி என்னும் வெய்யாள்
கிம்மியின் துணையும் அஞ்சேல் ஈண்டு உனைத்
                               தீண்டுகின்ற
கைம் முறை தடிந்து வல்லே விடுவிப்பன் காண்டி
                                  என்றான்.    
6

3363.
    வீரனது உரையைக் கேளா மெல்லியல் அணங்கின்
                                     நல்லாள்
பேர் இடர் சிறிது நீத்துப் பெயல் உறு துவலை தூங்கு
மாரியின் செலவு கண்ட வள வயல் பைம் கூழ் போல
ஆருயிர் பெற்றாள் மற்றை அசமுகி அவனைக் கண்டாள்.    
7

3364.
    ஓவரும் புவனம் யாவும் ஒருங்கு முத்தொழிலும் ஆற்றும்
மூவரும் துறக்கம் வைகும் முதல்வனும் திசை காப்பாளர்
யாவரும் என் முன் நில்லார் ஈண்டு எனை இகழ்ந்து சீறித்
தேவர் தம் குழுவின் உள்ளான் ஒருவனோ செல்வன்
                                       என்றாள்.    
8

3365.
    வெறித்திடு கண்ணில் நோக்கி வெவ்விதழ் அதுக்கி வல்லே
கறித்தனள் எயிற்றின் மாலை கறகற கலிப்ப ஆர்த்தது
முறித்து இவன் தன்னை உண்டு முரண் வலி தொலைப்பன்
                                        என்னாக்
குறித்த அசமுகத்தி நிற்பக் குறுகினன் திறல் சேர் வீரன்.    
9

3366.
    தட்டறு நோன்மை பூண்ட சசி தனைத் தமியள் என்றே
பட்டிமை நெறியால் பற்றிப் படருதி இவளை இன்னே
விட்டனை போதி செய்த வியன் பிழை பொறுப்பன்
                                     நின்னை
அட்டிடு கின்றது இல்லை அஞ்சலை அரிவை என்றான்.    
10

3367.
    கேட்டலும் உருத்து இவ் வார்த்தை கிளத்தினை நின்னை
                                         யாரே
ஈட்டுடன் இவளைப் போற்று என்று இப்பணி தலை
                                    தந்துள்ளார்
வேட்டனன் அவரைக் கேட்ப விளம்புதி என்றான் முந்தூழ்
மாட்டுறு கனலி என்னத் தன்குலம் முடிப்பான் வந்தாள்.    
11

3368.
    தாரணி முதல மூன்றும் தலை அளி புரிந்து காப்பான்
காரணி செறிந்து உற்றன்ன கரியவன் கடவுள் வெள்ளை
வாரணம் உடைய ஐயன் மற்று இது பணித்தான் என்பேர்
வீரரில் வீரன் ஆன வீரமா காளன் என்றான்.    
12

3369.
    என்றலும் அனைய வாய்மை இந்திரன் தனக்கும் ஈசன்
பொன் திரண் மார்பன் நல்கும் புதல்வற்கும்
                            பொதுமைத்து ஆகி
நின்ற அதுவாகத் தேவர் நிருதரால் வருந்தும் ஊழால்
சென்றவன் மகவான் ஏவல் ஆள் எனச் சிந்தை செய்தாள்.    
13

3370.
    புந்தியில் இதனை உன்னிப் பொள் எனச் சினம் மீக்
                                     கொள்ள
இந்திரன் தொழுவன் கொல்லாம் எனை இடை தடுக்கும்
                                       நீரான்
சிந்துவன் இவனை என்னாச் செம்கையில் சூலம் தன்னை
உந்தினள் அது போய் வீரன் உரன் எதிர் குறுகிற்று
                                      அன்றே.    
14

3371.
    குறுகி முன் வருத லோடும் குரூஉச் சுடர் அங்கி மூன்றும்
முறையினோர் இடை உற்று அன்ன முத்தலைப் படையைக்
                                        காணூஉ
அறை கழல் வீரன் தொல் நாள் அங்கியை அட்டதே
                                         போல்
எறி கதிர் வாளால் மைந்தன் இருதுணி படுத்தினானே.    
15

3372.
    படுத்தலும் மணிகள் நீலப் பையரா உமிழ்ந்தது என்னக்
கடித்திடும் எயிற்றுப் பேழ்வாய்க் கரும் கணம் அழல்
                                கான்று என்ன
விடித்திடு கொண் மூவின் பால் எழுந்த மின் என்ன
                                   அன்னாள்
விடுத்திடு சூல வைவேல் வெவ் அழல் பொழிந்தது
                                    அன்றே.    
16

3373.
    காலத்தின் உலகம் உண்ணக் கடல் உறு வடவை தானே
ஆலத்தை மீது பூசி அசமுகி கரத்தில் கொள்ளச்
சூலத்தின் அமைந்தது அம்மா சோதனை கொடுப்பன்
                                     என்னாச்
சீலத்தின் மிக்கோன் கூர்வாள் செந்தழல் பொழிவித்தது
                                      அன்றே.    
17

3374.
    சூளின் ஆர்த்து எறியும் வீரன் சுடர்கொள் முத்தலை
                                 வேல் தன்னை
வாளினால் தடிதலோடும் மறி முகத்து அணங்கு சீறிக்
கேளினால் தனது பாங்கில் கிடைத்த துன் முகி கைச்சூலம்
கோளினால் கடிது வாங்கிக் கூற்றனும் உட்க ஆர்த்தாள்.    
18

அஜாமுகி, சூரபத்ம சகோதரர்களின் சகோதரி, அதோடு இந்திராணியை பலவந்தமாக இழுத்துச் செல்வாள் தன் சகோதரர்களுக்கு மனைவியாக்க. 

2011/4/10 Geetha Sambasivam <geetha...@gmail.com>
கச்சியப்ப சிவாசாரியாரின் கந்த புராணத்தில்/ அருணகிரியாரின் திருப்புகழில்??? சரியா நினைவில் இல்லை.  இந்த இரண்டில் ஏதோ ஒன்றில்  மஹா காளனையும் அஜாமுகி குறித்தும் வரும்.  இந்திராணியைப்பிடித்துச் செல்லும்போது அவள் ஓலமிட்டு அலறி அபயம் கேட்பதும், அப்போது தர்ம சாஸ்தாவை அவளுக்குப்பாதுகாப்பாக அனுப்புவது  குறித்தும் படித்திருக்கிறேன்.  கொஞ்சம் செக் பண்ணிக்கொண்டு சொல்கிறேன்.  ஒவ்வொருவராக இந்திராணி கூப்பிட்டு ஓலம், ஓலம் என்று கூறுவதாகப் பாடல்! ம்ம்ம்ம்ம்ம்ம்?????
361.gif

ஜடாயு

unread,
Apr 10, 2011, 11:58:56 AM4/10/11
to மின்தமிழ்
கந்தபுராணத்தில் தான் மகா காளர் குறித்து வருகிறது. மகா காளர் என்பவர்
மகா சாத்தாவால் நியமிக்கப் பட்ட ஒரு காவல் தெய்வம்.

அசுர காண்டத்தில் கீழ்க்கண்ட படலங்கள் மகா காளர், இந்திராணி (அயிராணி),
அசமுகி ஆகியோர் தொடர்பான புராண வரலாற்றைக் கூறுகின்றன. நன்றி:
கந்தபுராணம் - தமிழ் வசனம் (ஆறுமுக நாவலர்)

இந்திரன் அருச்சனைப் படலம்
தேவர் புலம்புறு படலம்
அயிராணி சோகப் படலம்
மகா சாத்தாப் படலம்
இந்திரன் கயிலைசெல் படலம்
அசமுகிப் படலம்
இந்திராணி மறுதலைப் படலம்
மகாகாளர் வரு படலம்

இந்தப் படலங்களின் மூலப் பாடல்கள் இங்கு கிடைக்கும் -
http://shaivam.org/tamil/sta_kanda_puranam_u_2d.htm

அசமுகி சோகப் படலம்
இந்திரன் மீட்சிப் படலம்

இந்தப் படலங்களின் மூலப் பாடல்கள் இங்கு கிடைக்கும் -
http://shaivam.org/tamil/sta_kanda_puranam_u_2e.htm

அன்புடன்,
ஜடாயு

On Apr 10, 12:49 pm, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>
wrote:

> கச்சியப்ப சிவாசாரியாரின் கந்த புராணத்தில்/ அருணகிரியாரின் திருப்புகழில்???
> சரியா நினைவில் இல்லை.  இந்த இரண்டில் ஏதோ ஒன்றில்  மஹா காளனையும் அஜாமுகி
> குறித்தும் வரும்.  இந்திராணியைப்பிடித்துச் செல்லும்போது அவள் ஓலமிட்டு அலறி
> அபயம் கேட்பதும், அப்போது தர்ம சாஸ்தாவை அவளுக்குப்பாதுகாப்பாக அனுப்புவது
> குறித்தும் படித்திருக்கிறேன்.  கொஞ்சம் செக் பண்ணிக்கொண்டு சொல்கிறேன்.
> ஒவ்வொருவராக இந்திராணி கூப்பிட்டு ஓலம், ஓலம் என்று கூறுவதாகப் பாடல்!

> ம்ம்ம்ம்ம்ம்ம்?????[?][?][?][?][?][?][?][?]
>
> 2011/4/10 Subashini Tremmel <ksubash...@gmail.com>> பெரியாச்சி பற்றி நாம் தொடர்ந்து தகவல் தேடிக் கொண்டிருப்போம். இடையில் மேலும்

> > சில தெய்வ வடிவங்களைப் பற்றியும் தொடர்ந்து பேசுவோம்.  இந்த இழையில் உள்ள
> > பெரியாச்சி படங்கள் எடுக்கப்பட்ட அதே ஆலயத்தில் மேலும் ஒரு வடிவம்.
>
> > [image: mahakalan.jpg]
>
> > ஸ்ரீ மகா காளன் என்ற தெய்வம். அருகில் இந்திராணி அஜாமுகி என்ற இரண்டு பெண்
> > வடிவங்கள்.
>
> > இந்த தெய்வத்தைப் பற்றி தகவல் அறிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்.
>
> > அன்புடன்
> > சுபா
>
> >  --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
>
>

>  mahakalan.jpg
> 68KViewDownload
>
>  361.gif
> < 1KViewDownload

Geetha Sambasivam

unread,
Apr 10, 2011, 10:06:54 PM4/10/11
to mint...@googlegroups.com
// இங்கே வீர மா காளன் சாஸ்தா என்னும் சாத்தனின் தானைத் தலைவன் எனச் சொல்லப் படுகிறது. //

ஐயா, நானும் அதையே குறிப்பிட்டுள்ளேன் என நம்புகிறேன்.  பாடல்களும் கந்தபுராணப்பாடல்கள். :))))))))
                              
2011/4/10 ஜடாயு <jata...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

Nagarajan Vadivel

unread,
Apr 11, 2011, 12:25:30 AM4/11/11
to mint...@googlegroups.com

Subashini Tremmel

unread,
Apr 11, 2011, 12:50:09 PM4/11/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
இந்த படம் பதிவு செய்யப்பட்ட ஆலயம் ஒரு சாஸ்தா ஆலயம் தான். நன்றி திருமதி.கீதா திரு.ஜடாயு. 

-சுபா

2011/4/11 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Apr 30, 2011, 4:42:08 AM4/30/11
to mint...@googlegroups.com
சென்ற வாரம் எங்க ஊர் பரவாக்கரை மாரியம்மன் கோயிலின் தீ மிதி விழாவில் கலந்து கொண்டோம்.  என்னைப் பொறுத்த வரையிலும் இது முதல் தீமிதி விழா.  பல கோயில்களில் நடந்தாலும், தீமிதி அன்று செல்ல முடியாமல் ஏதேனும் பிரச்னை வந்துவிடும்.  சித்திரை மாசம் பெளர்ணமி கழிந்த எட்டாம் நாள் தான் தீமிதிக்கு நாள் பார்க்கின்றனர். இதைக் குறித்த லெளகீகக் கருத்தைத் தற்சமயம் அறிய முடியவில்லை.  எல்லாரும் சுறுசுறுப்பாய்த் தீமிதியில் மூழ்கி இருந்தனர்.  ஒரு மாதம் முன்னாலிருந்தே விரதம் இருக்கின்றனர்.  பிரார்த்தித்துக்கொண்டவர்கள் மட்டுமே பூக்குழி என்றும் அழைக்கப் படும் இந்த அக்னிக்குண்டத்தில் இறங்குகின்றனர்.

மாரியம்மனைக் குளிர்விக்கவே இது நடத்தப்படுவதாய்ப் பொதுவான கருத்து.  கோடை நாட்களிலேயே பெருவாரியான தென்மாவட்டங்களின் கிராம தெய்வங்களின் திருவிழாக்கள் நடைபெறும்.  நான் சென்ற சமயம் கும்பகோணத்திலேயே இருக்கும் கிராமதெய்வமான பச்சைக்காளி, சிவப்புக்காளிக்கும் உற்சவம் நடந்து முடிந்திருந்தது.  அதிகச் சூட்டிலிருந்து உடல்நலம் கெடும் என்பதால் அம்மனை வேண்டித் தவமிருந்து தங்களைக் காக்கவேண்டியே இந்தக் கோடைநாட்களில் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.  பூச்சொரிதல், அபிஷேஹ ஆராதனைகள், போன்றவற்றால் அம்மனைக் குளிர்வித்தல் என்பதோடு ஒரு சில பக்தர்கள் உலக க்ஷேமத்திற்கென வேண்டிக்கொண்டும் தனிப்பட்ட பிரார்த்தனைகளுக்காகவும் தீமிதிக்கின்றனர்.  ஒரு சில படங்களைக் கீழே காணலாம். 

தீமிதிக் குண்டம்!

Posted by Picasa
சென்ற வாரம் ஊருக்குப் போனப்போ மாரியம்மன் கோயிலில் தீமிதிக்கான அக்னிக் குண்டத்தை எழுப்பிக்கொண்டிருக்கும் ஊழியர்கள். அம்மன் புறப்பாடு ஆகி ஊர்வலம் வந்து பின்னர் கோயிலுக்கு எதிரே இருக்கும் வயல்வெளியில் ஒரு இடத்தில் பள்ளம் தோண்டி அதிலே நெருப்பைக் காலையிலேயே மூட்டி விடுகின்றனர். மேலேமேலே கட்டைகள் போடப்பட்டு வைக்கோலால் மூட்டம் மாதிரிப் போட்டு வைக்கின்றனர்.

இந்தத் தீமிதிக்கெனப் பிரார்த்தனை செய்து கொண்டவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். ஒரு மாதம் முன்னாலிருந்து விரதம் இருப்பார்கள். ஒருவேளை உணவு மட்டுமே உட்கொள்ளுவார்கள். ஒரு சிலர் கோயிலிலேயே தங்குவதும் உண்டு. தலையில் கரகம் வைத்துக்கொண்டோ அல்லது காவடி எடுத்தவண்ணமோ இறங்குவதாய் வேண்டிக்கொள்வதும் உண்டு. இங்கே காவடியின் ஒரு வகையைப் பார்க்கலாம். 
Posted by Picasa
இங்கே இன்னொருத்தர் அலகு குத்திக்கொண்டு காவடி எடுத்து வருகிறார்.  
Posted by Picasa
முதலில் குண்டம் இறங்குவதற்கு உரிமை உள்ளவர் அந்த அந்தக் கோயிலின் பூசாரிகளே ஆவார்கள். ஒரு சில கோயில்களில் ஊர்ப் பெரியவர்கள் இறங்கலாம். என்றாலும் பூசாரியே முதலில் இறங்குகிறார். அக்னியில் இறங்கியதும், காலை உடனே தரையில் மண்ணிலோ, வைக்கக் கூடாது என்பதால், 
Posted by Picasa
ஒரு பெரிய அண்டா நிறையப் பாலை வாங்கி, அதைத் தீமிதிக்குண்டத்தின் அருகே ஒரு பள்ளம் தோண்டி அதில் ஊற்றிவிடுகின்றனர். தீமிதிப்பவர்கள் அந்தப் பாலில் காலை நனைத்துக்கொண்டு பின்னரே மேலே ஏறுகின்றனர். இதோ இங்கே பள்ளத்தில் ஊற்றப்பட்ட பால்.  
Posted by Picasa

Innamburan Innamburan

unread,
Apr 30, 2011, 4:53:12 AM4/30/11
to mint...@googlegroups.com

மிக்க நன்றி, திருமதி.கீதா. நான் தஞ்சாவூரில் சிறுவனாக இருந்த போது, பச்சைக்காளி, பவளக்காளி விழாக்களும், மொஹர்ரம் பண்டிகையும் விமரிசையாக நடக்கும். மொஹர்ரம் பண்டிகையில் விரதமிருந்து சில ஹிந்துக்கள் கலந்து கொள்வார்கள் என்று ஞாபகம். மேலதிக விவரங்களுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன். எல்லாம் மறந்து விட்டது. 
இன்னம்பூரான்
30 04 2011

Geetha Sambasivam

unread,
Apr 30, 2011, 5:43:49 AM4/30/11
to mint...@googlegroups.com
தெரிந்த வரையில் கூறுகிறேன் ஐயா.

2011/4/30 Innamburan Innamburan <innam...@gmail.com>

மிக்க நன்றி, திருமதி.கீதா. நான் தஞ்சாவூரில் சிறுவனாக இருந்த போது, பச்சைக்காளி, பவளக்காளி விழாக்களும், மொஹர்ரம் பண்டிகையும் விமரிசையாக நடக்கும். மொஹர்ரம் பண்டிகையில் விரதமிருந்து சில ஹிந்துக்கள் கலந்து கொள்வார்கள் என்று ஞாபகம். மேலதிக விவரங்களுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன். எல்லாம் மறந்து விட்டது. 
இன்னம்பூரான்
30 04 2011

--

Subashini Tremmel

unread,
Apr 30, 2011, 8:38:22 AM4/30/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
புகைப்படங்களுக்கும் விளக்கங்களுக்கும் நன்றி திருமதி கீதா.
நமது வலைப்பக்கத்தில் கிராம தெய்வங்கள் வழிபாடு பகுதியில் இணைத்து வைக்கின்றேன். 

பச்சைக் காளி சிவப்புக்காளி - என்று எப்படி காளியை வகைப்படுத்துகின்றார்கள்? அதனையும் சற்று விளக்க முடியுமா?

-சுபா

2011/4/30 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Apr 30, 2011, 9:23:11 AM4/30/11
to mint...@googlegroups.com
எல்லா விளக்கங்களும் தருகிறேன் சுபா, வீட்டில் விருந்தினர் வருதல், போதல்னு கொஞ்சம் பிசி.

2011/4/30 Subashini Tremmel <ksuba...@gmail.com>
புகைப்படங்களுக்கும் விளக்கங்களுக்கும் நன்றி திருமதி கீதா.
நமது வலைப்பக்கத்தில் கிராம தெய்வங்கள் வழிபாடு பகுதியில் இணைத்து வைக்கின்றேன். 

பச்சைக் காளி சிவப்புக்காளி - என்று எப்படி காளியை வகைப்படுத்துகின்றார்கள்? அதனையும் சற்று விளக்க முடியுமா?

-சுபா

360.gif
It is loading more messages.
0 new messages