நீண்ட காலம் கழித்து வருகின்றேன்!
எனது "கவிதை" ஒன்றை இங்கு எழுதுகின்றேன்.
உங்கள் கருத்துக்களை நீங்கள் கூறினால் நன்று!
மிக்க நன்றி.
அன்புடன் சு.குமுதா
பூம்பனி.....
வீட்டிலிருந்து பார்க்கையிலே
வீதியை நோக்கையிலே
விழியினைக் கிள்ளியது
வீதியின் வெள்ளைக் கோலம்
வானமகள் தூவிடும்
வெள்ளைப் பூக்களை
அள்ளி எடுத்து
எறிந்து விளையாடும்
பிள்ளைகளைப் பார்க்கையிலே
கொள்ளை இன்பம் கூடுதே
பச்சைவர்ண பட்டு தனை
பசுமையாய் கட்டியவள்
வெள்ளைநிறச் சேலைதனை
விருப்புடனே கட்டியதேன்?
பாரினில் நிலவிடும்
போரினைத் தடுக்கவே
ஒற்றுமையின் சின்னத்தை
உடலிலே உடுத்தாளோ?
புனிதத்தின் சேலைதனில்
மனிதக்கால் பட்டதுமே
மங்கியது புனிதம்
மாறியது தேசம்
விண்ணவளும் மண்ணவளும்
விரும்பிடும் ஒற்றுமையை
மறுக்கின்றான் வெறுக்கின்றான்
மதிகெட்ட மனிதனவன்!
நன்றி.
அன்புடன்
சு.குமுதா
On 11월26일, 오전3시08분, "kumutha.subraman...@googlemail.com"
யுகமாயினி ஆசிரியர் சொல்லறார் கேட்டுக்கங்க :-)
உங்கள் வெண்பனி பூசல் வெள்ளைக்கொடியாக, வெண்புறாவாக சிங்களவர்க்குப்
படட்டும். அவதி குறைந்தால் சரி.
ரொம்ம்ப நீண்டுவிட்டது..போர்சூழல் அங்கு! ஐரோப்பாவில் மூன்று தலைமுறை
வந்தாயிற்று. இலங்கையில் இருப்போரில் பாதியை அழித்தாயிற்று. இது என்ன
அவதி? எப்படி இதை முதலில் அனுமதித்தோம்? ம்ம்ம்ம்
கண்ணன்
2008/11/26 <chitha...@yahoo.co.in>:
பச்சைவர்ண பட்டு தனை
பசுமையாய் கட்டியவள்
வெள்ளைநிறச் சேலைதனை
விருப்புடனே கட்டியதேன்?