ஊமைமன அழுகையொன்றே உலகினிலே பெரிய சிறை.

17 views
Skip to first unread message

Pandiyaraja

unread,
May 23, 2026, 10:28:13 AM (yesterday) May 23
to மின்தமிழ்

பின்னோக்கி ஓடும் நினைவுகள்.

 

எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் கல்வியமைச்சராக இருந்தவர் அரங்கநாயகம் என்பவர். அவர் ஒரு பள்ளியின் தலைமையாசிரியராக இருந்தவர்.

அவர் காலத்தில் கல்வி 11+1 என்று இருந்தது. அதாவது பள்ளியில் 11 ஆண்டுகள் + கல்லூரியில் ஓர் ஆண்டு. அந்த ஓராண்டுக் கல்லூரிப்படிப்பு புகுமுக வகுப்பு (Pre-University Class - PUC) என்னப்பட்டது. கல்லூரியில் இந்த ஓராண்டுப் படிப்பை முடித்த பின்னரே ஒருவர் எந்தவொரு பட்டப்படிப்புக்கும் போகமுடியும். எனவே கல்லூரியில் இத்தகைய மாணவர் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஒரு வகுப்புக்கு 80 பேர் என்ற முறையில் 4, 5 வகுப்புகள் இருக்கும். அவற்றுக்கான ஆசிரியர்கள் நிறையப் பேர் உண்டு.

திடீரென்று ஒருநாள் இந்திய அரசு ஒரு முடிவெடுத்தது. இனி, பள்ளிக்கல்வி 11+1 என்பதற்குப் பதிலாக 10+2 என்று அமையும் என்றது. அந்த +2 வகுப்பைச் சில மாநிலங்கள் கல்லூரியிலேயே வைத்துக்கொண்டன. சில Junior College என்று ஆரம்பித்தன. ஆனால், தமிழ்நாட்டில், அரங்கநாயகம் அந்த +2 பள்ளிகளில்தான் நடக்கும் என்றார். அத்தகைய பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகள் என்னப்படும் என்றார். இதனால் பல நூற்றுக்கணக்கான கல்லூரி ஆசிரியர்கள் பணி இழக்கும் நிலை ஏற்பட்டது. ஆசிரியர் சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தின. இணக்கம் ஏற்படவில்லை. அரங்கநாயகம் சொன்னார் : அத்தகை கல்லூரி ஆசிரியர்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் வேலைக்கு விண்ணப்பித்தால் பரிசீலிக்கப்படும் என்றார். கல்லூரி ஆசிரியர்கள் கொதித்தெழுந்தனர். போராட்டம் வெடித்தது. கைதுகள் தொடர்ந்தன. சிறைகள் நிரம்பின. நான் உட்பட, அமெரிக்கன் கல்லூரி ஆசிரியர்கள் 50-க்கும் மேற்பட்டோர், அண்ணன் சாலமன் பாப்பையா தலைமையில் மறியல் போராட்டம் செய்து, கைதுசெய்யப்பட்டு, மதுரைச் சிறையில் அடைக்கப்பட்டோம்.

மதுரைச் சிறை நிரம்பி வழிந்தது. அடைத்துவைக்க அறைகள் இல்லை. எல்லாரும் திறந்தவெளியில் நிரப்பப்பட்டோம். உண்ணுவது, உறங்குவது, குளிப்பது, கழிப்பது எல்லாமே திறந்தவெளிதான்.

நாங்கள் அடைக்கப்பட்ட முதல்நாள். உணவுநேரம். ஒரு பெரிய தள்ளுவண்டி வந்தது. ஒரு நீள மேஜை வந்தது. தள்ளுவண்டியில் பல சாக்குமூட்டைகள் இருந்தன. ஒருவர் அவற்றை ஒவ்வொன்றாகத் திறந்து அந்த மேஜையில் கொட்டினார். வளைந்ததும், நெளிந்ததும் நொங்கிப்போனதுமான பல அலுமினிய தட்டுகள் அவை. ஆளுக்கொன்று எடுத்துக்கொள்ளுங்கள், இதுதான் உங்கள் சாப்பாட்டுத்தட்டு என்றார். இன்னொருவர் அடுத்தமூட்டையை அவிழ்த்துக்கொட்டினார். அதில் அதேமாதிரி குவளைகள். தண்ணீர் குடிக்கவாம். நாங்கள் எடுக்க மறுத்தோம். சிறை அதிகாரி ஓடிவந்தார். நாங்கள் இதில் சாப்பிடமாட்டோம். நாங்கள் கொலைக்கைதிகள் இல்லை. எங்களுக்குப் புதிய பாத்திரங்கள் வேண்டும் என்றோம். ஒத்துக்கொண்டு ஏற்பாடு செய்தார். சில மணி நேரங்களில் புத்தம் புதிய தட்டுகள், குவளைகள் வந்தன.

சற்றுநேரம் கழித்து உணவு வண்டி வந்தது. வாயில் வைக்க முடியாத சுவையுடன். நாங்கள் உண்ண மறுத்தோம். சிறை அதிகாரி மீண்டும் ஓடிவந்தார். உணவு இப்படித்தான் இருக்கும் என்றார். எங்களுக்கு எங்கள் பங்கு ரேஷனைக் கொடுங்கள். நாங்களே சமைத்துச் சாப்பிட்டுக்கொள்கிறோம் என்றோம். அவரும் ஒப்புக்கொண்டார். மடமடவென்று பல குழுக்கள் அமைக்கப்பட்டன. சமைத்துச் சாப்பிடுவது எங்கள் பொறுப்பு ஆனது. சிறை அதிகாரி, பெரியமனதுபண்ணி, நன்றாகச் சமைக்கக்கூடிய ஒரு ஆயுள்கைதியைத் தந்தார். அவர் வைத்த ரசம், ஆகா. இன்றும் நாவில் இருக்கிறது.

சாப்பிட்டுச் சாப்பிட்டு மரத்தடியில் தூங்குவோம். எல்லாம் முடிந்த பின்னர், இரவில் அவரவர் குழுக்களாக அமர்ந்துகொண்டு உரையாடலில் ஈடுபடுவோம். எங்கள் குழுவுக்குத் தலைவர் அண்ணன் பாப்பையா. அவருடைய நகைச்சுவைப் பேச்சுக்குக் கேட்கவாவேண்டும்? சிரித்துச் சிரித்து வயிறெல்லாம் நோவும். இரவு ஒரு மணிக்கு மேல் அவரவர் அங்கங்கே சாய்வோம்.

கண்ணை மூடினால் கண்ணுக்குள் வந்து நிற்பர் மனைவி மக்கள். கண்களில் நீர் நிரம்பும். மனம் கனக்கும். நெஞ்சம் ஏறி இறங்கும். அந்தப் பிரிவு – அந்த வேதனை – அந்த வலி – அதுதான் சிறை.

இறுதியில் நாங்கள் வென்றோம். எந்தவொரு கல்லூரி ஆசிரியரும் பதவி இழக்கமாட்டார் என்று உறுதிமொழி கொடுக்கப்பட்டது.

கல்லுரி திரும்பியதும் எங்கள் சிறைவாழ்க்கையைப் பற்றிய கவிதை ஒன்றை எழுதினேன்.

தலைப்பு:

ஊமைமன அழுகையொன்றே உலகினிலே பெரிய சிறை.

அந்தக் கவிதை இப்படியாக முடியும்.

கம்பிபோட்ட அறைக்கதவும் சிறையாகமாட்டா;

கனத்துயர்ந்த நெடுமதிலும் சிறையாகமாட்டா;

உள்ளத்து ஆசைகட்கு உருக்கொடுக்க முடியாமல்

உள்ளுக்குள் அழுதுகொண்டு ஊருக்கு மறைத்திருக்கும்

ஊமைமன அழுகையொன்றே உலகினிலே பெரிய சிறை.

அந்தக் கவிதை இப்படியாக ஆரம்பிக்கும்.

பட்டுடுத்திப் பளபளக்கப் பகட்டுவாழ்க்கை வாழவழி கேட்கவில்லை.

கொட்டுகின்ற முரசொலிக்கக் குடைநிழற்கீழ் பவனிவரக் கேட்கவில்லை.

கட்டுகின்ற துணியதனைக் காப்பதற்கு வேலைப் பாதுகாப்பு கேட்டோம்

தட்டெடுத்து வரிசையினில் நிற்பதற்குத் தள்ளிவிட்டார் வெஞ்சிறைக்குள்.

முழுக்கவிதையைத் தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைக்கும்போது பகிர்கிறேன்.

Jayaraman Ramanujam

unread,
May 23, 2026, 10:53:36 AM (yesterday) May 23
to mint...@googlegroups.com


Prof. R. JAYARAMAN B.F.Sc., M.F.Sc., M.A (Econ)., BGL., Ph.D
Former Program Director
University Fisheries Business Management School 
Tamilnadu Dr.J.Jayalalithaa Fisheries University
ECR, Muttukkadu, Chennai 603112, Tamilnadu, 
INDIA
Mobile (+91) 97911 8773
Ll

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/mintamil/2d2e8015-8ebe-4e95-affc-3a044adce3c2n%40googlegroups.com.

தேமொழி

unread,
May 23, 2026, 11:10:37 AM (yesterday) May 23
to மின்தமிழ்
அருமையான நினைவுகள்  பதிவு.  உங்கள் நினைவுகள் பதிவுகளைத் தொடருங்கள் ஐயா. 
நான் புகுமுகவகுப்பு,  11+1 கல்விமுறையின் இறுதி வகுப்புப் பிரிவைச்  சேர்ந்தவள். 
என் கோணத்தில் அரசு கொண்டு வந்த மாற்றம்,   பள்ளியில் 10+2 என்பது தமிழ்நாட்டுக் கல்வி வளர்ச்சியில் இருந்த தடையை உடைத்தது. 
கல்வி பலருக்கும் சென்று சேர்ந்தது.  குறிப்பாகச் சிற்றூர் மாணவர்கள் கல்வி, பெண்கல்வி வளர்ச்சியில் நல்ல மாற்றம் வந்தது. 
பள்ளியில் பத்து ஆண்டுகள் கல்லூரியில் 2 ஆண்டுகள் என்பது கல்வியில் எதிர்பார்த்த மாற்றத்தைக் கொண்டு வந்திருக்காது என்பது என்னுடைய கோணம். 
நானும் ஒரு கட்டுரை இந்த மாற்றம் குறித்து எழுதியுள்ளேன் 12 ஆண்டுகளுக்கு முன்னர், அது நினைவு வந்தது. பகிர்கிறேன். 
உணர்ச்சிப்பூர்வமான கவிதை மிக அருமை. 
நன்றி. 


Reply all
Reply to author
Forward
0 new messages