AI தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் முதல் தமிழ் படம்' நாவாய் '
1962 களில் பத்மினி பிக்சர்ஸ் மூலமாக பி.ஆர். பந்துலு "கப்பலோட்டிய தமிழன்" படம் எடுத்து இன்று வரலாற்றில் நிற்கிறார்.
ஆனால் படம் முதல் வெளியீட்டில் ஓடவில்லை. படம் போட்ட அத்தனை தியேட்டர்களிலும் ஒரே வாரத்தில் படம் பிளாப் ஆகிவிட்டது.
ஆனால் எம்.ஜி.ஆர். நடித்த தாய் சொல்லை தட்டாதே படம் கப்பலோட்டிய தமிழன் வெளிவந்த அதே நாளில் வெளிவந்து அத்தனை தியேட்டர்களிலும் நூறு நாள் தாண்டி ஓடி சாதனை அடைந்தது.
இருந்தபோதிலும் இன்றும் மக்கள் மனதில் நிற்பது சிவாஜி நடித்த கப்பலோட்டிய தமிழனும் அந்த படத்தை தயாரித்த பி.ஆர்.பந்துலுவும் வரலாற்றில் நிற்கிறது.
நிற்க!
என்னை மாதிரி 2015 களுக்குப் பிறகு பெரியவர் வ.உ.சி.யை உள்வாங்கிய நிலையில் சமூக ஊடகங்களின் வழியாக வ.உ.சி குறித்து விழிப்புணர்வு பெற்ற பலரில் பார்கவன் மிகவும் முக்கியமானவர்.
இவர் திரைப்படத்துறையில் காண்பிய ஆற்றல் தொழில்நுட்ப வல்லுநராக பல தமிழ்ப் படங்களில் பணிபுரிந்து வருபவர்.
ஒரு கட்டத்தில் பெரியவர் வ.உ.சி.மீது பெரிய ஈர்ப்பு ஏற்பட்டு தனது வாழ்நாளில் தனிப்பட்ட முறையில் சம்பாதித்த பல லட்சங்களை கொட்டி செலவு செய்து பிரம்மாண்ட முறையில் இருப்பதைக் கொண்டு எவ்வளவு செலவு செய்ய முடியுமோ தன் சக்திக்கு மேல் லட்சங்களை கொட்டி முழுக்க ஒன்றரை மணி நேரம் ஓடக்கூடிய AI தொழில்நுட்ப முறையில் " நாவாய்" சினிமா எடுத்துள்ளார்.
படத்தை வெளியிட இருக்கும் கடைசிகட்ட வேளைகளில் போதிய பணம் இல்லாமல் படத்தை வெளியிட தவித்து வருவது எங்கள் கவனத்திற்கு தெரிய வந்தது.
கிட்டத்தட்ட 75 இலட்சத்திற்கு மேல் செலவழித்து பிரமாண்டமான முறையில் படம் தயாரித்திருக்கிறார். சில முக்கிய பிரமுகர்கள் உதவுவார்கள் என்று எண்ணிய நிலையில் எதுவும் கைகூடாத நிலையில் படத்தை எப்படியாவது தியேட்டரில் வெளிவருவதற்கு முயற்சி செய்து வருகிறார்.
இந்தப் படம் லாபத்தை நோக்கமாக கொண்டு அவர் தயாரிக்கவில்லை. இன்றைய தலைமுறையினருக்கு, மாணவச் செல்வங்களுக்கு AI தொழில்நுட்பத்தில் தமிழகத்தில் பெரியவர் வ.உ.சி.க்கு முன்னோடியாக முதல் படம் எடுத்து கொண்டு வர வேண்டும் என்ற வேட்கை மட்டுமே அவரை உணர்வுபூர்வமாக நகர்த்தியுள்ளது.
இந்த முயற்சியைப் பாராட்டி தவத்திரு மதுரை ஆதினம் தனது பங்களிப்பாக பெரியவர் வ.உ.சி. மீது கொண்ட பற்றினால் ரூ. இரண்டு லட்சம் அன்பளிப்பாக தந்திருப்பதாக அறிகிறேன்.
முன்னாள் காவல் துறை கண்காணிப்பாளர் மதிப்புமிகு இரத்தின சபாபதி அவர்கள் தனது பங்களிப்பாக ரூ. ஐந்து லட்சம் அன்பளிப்பாக வழங்கியிருந்த போதிலும் யானைப் பசிக்கு சோளப்பொரி மாதிரி மீதி பல லட்சங்கள் தனது தனிப்பட்ட சேமிப்பில் இருந்து செலவழித்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார்.
காந்திக்கு கிடைத்த அட்டன்பரோ அளவுக்கு பெரியவர் வ.உ.சி.யின் அளப்பரிய ஆற்றலை புரிந்து கொள்ளும் அளவுக்கு தமிழகத்தில் இயக்குநர்களும் இல்லை. தயாரிப்பதற்கு ஆட்களும் இல்லை.
ஆனால் பார்கவன் மிகச் சாதாரணமானவர். எப்படியோ ஒரு சக்தி அவர் வாயிலாக இறங்கி பெரிய காரியத்தில் இறங்கி முழுக்கிணற்றை தாண்டும் வேளையில் தவிர்க்க முடியாத பணச் சிரமம் ஏற்பட்டுள்ளது.
பெரியவர் வ.உ.சி. அன்று குப்பனையும், சுப்பனையும் சாமான்யர்களையும் நம்பி நினைத்து பார்க்க கூட முடியாத கப்பலை இறக்கி வெள்ளைக்காரன் அடிவயிற்றை கலக்கியவர். கூட்டுப் பங்கு முறையில் கப்பலை இறக்க முடியும் என்று 125 வருடங்களுக்கு முன்பாக நிகழ்த்தி காட்டியவர். அதைப் போன்றே பெரியவர் வ.உ.சி.மீது பற்று கொண்ட உலகெங்கும் வாழும் ஒவ்வொரு தமிழர்களும் உங்களால் முடிந்த சிறு தொகையானாலும் பரவாயில்லை.ஆனால் ஒவ்வொருவரும் முடிந்த வரை பங்களிப்பு செய்தால் பிப்ரவரி 15 ம் தேதிக்குள் ஏ.ஐ தொழில்நுட்பத்தில் உருவான "நாவாய்" சினிமா திரையில் வெளியிட உதவியாக இருக்கும்.
ஒப்பற்ற காவியதுயர நாயகன் வ.உ.சி.க்கு நாம் செய்யும் நன்றிக்கடன்.
தனது சக்திக்கு மீறிய முயற்சி செய்து AI தொழில்நுட்ப மூலமாக தமிழில் ஆகச் சிறந்த தேசபக்தர், விடுதலை வேள்விக்காக தன்னை முற்றிலும் அழித்துக் கொண்ட தியாக வேங்கை வ.உ.சி. அவர்களது படம் மூலமாக நீங்கள் வருங்காலத்தில் பி. ஆர். பந்துலு போன்று வரலாற்றில் இடம் பெறுவீர்கள் பார்கவன் அவர்களே.