சங்கம் படிப்போமா? -- "பிணை" ... சொல் வழக்கு

98 views
Skip to first unread message

rajam

unread,
Nov 14, 2010, 5:31:16 PM11/14/10
to மின்தமிழ், DEV RAJ
பகுதி 8 தூங்கட்டும். பிறகு பார்ப்போம்.
தேவ் "பனாட்டு" பற்றிச் சொன்னார். கொஞ்சம் சில்லுக்கருப்பட்டியும் அனுப்பிவைத்திருந்தால் இனிமையாக இருந்திருக்கும்! :-)

கண்ணன் அவருடைய ஊர் வழக்கான "பெணஞ்சு சாப்பிடறதைச்" சொல்லி மக்களின் ஆர்வத்தைக் கிளப்பிவிட்டிருக்கிறார். பேராசிரியர் நாகராசன் ஏதோ சவால் விட்டார். தொடர்ந்து ஹரிகி ஆற்றுமணலை எண்ணிச்சொல்லச் சொன்னார்!  
எனக்குக் கைக்கெட்டியது என் கணினியில் சிறைப்பட்டிருக்கும் பழங்காலத் தொகுப்புக்களே. அவற்றில் தேடியதில் நான் கண்டதைப் பகிர்ந்துகொள்கிறேன். இது சவாலுக்கன்று. கருத்துப் பகிர்வுக்கு மட்டுமே! :-) யாரும் கிளர்ந்தெழவேண்டாம்! :-)
பகுதி 9 -- "பிணை" என்ற சொல்லாட்சி
------------------------------------------------
சரி, எட்டுத்தொகையிலும் பத்துப்பாட்டிலும் மட்டும் தேடினேன். கண்டறிந்தவை:
1. பிணை (பெயர்ச்சொல்), பிணயல் (பெயர்ச்சொல்), பிணை... (வினைச்சொல்) -- இவ்வகை ஆட்சியுண்டு.
2. பிணை (பெயர்ச்சொல்)

2.1: பெரும்பாலான இடங்களில் மான் பிணையைக் குறிக்கிறது. (அவசரமாகப் பார்த்ததில் மாற்றுக் கருத்து விடப்பட்டிருக்கலாம். மாற்றுக் கருத்து உள்ள இலக்கியச் சூழல் கொடுத்தால் என் சொற்கோவைப் பட்டியலில் சேர்த்துக்கொள்வேன் நன்றியுடன்.)

2.2: "பெற்றோன் பெட்கும் பிணையை ஆகுக" என்ற அகநானூற்று வரி (86:14) வேறுபட்டது. தொல்காப்பியக் கூற்றோடு ("பிணையும் பேணும் பெட்பின் பொருள") இணைத்துப் பொருள் காணலாம்.

2.3: "பிணை இலி" என்ற பரிபாடல் வரி (20:50) நிலையான "தனக்கெனத் தன்னைப் பாதுகாப்பான் ஒருவன் இல்லாத" கணிகையின் நிலையைச் சுட்டுகிறது.

2.4: "இதையும் கயிறும் பிணையும் இரிய" என்ற பரிபாடல் வரி (10: 53) பாய்மரத்தையும் கயிற்றையும் பிணைத்த நிலையைச் சுட்டுவதுபோல் உள்ளது.

2.5: "பிணைக் கிழமை" என்ற பரிபாடல் தொடர் (9:81) முருனைப் பற்றிய பாடலில் வருவது. (இது என்ன வகையான கிழமை என்று முடிவு செய்யப் பாடல் முழுவதையும் பார்க்கவேண்டும். இப்போது நேரமில்லை.)
3. பிணயல் (பெயர்ச்சொல்) - மலர், தழை, பனந்தோடு போன்றவற்றின் பிணையலைக் குறிக்கிறது.

4.  பிணை... (வினைச்சொல்)
4.1: மலர்களைப் பிணைத்தல்
4.2: மலரைத் தோளில் பிணைத்தல்
4.3: ஆணும் பெண்ணும் கை/தோள் பிணைதல் (காதலருடன் கைபிணைதல், குரவைக் கூத்தில், குன்றுதோறாடலில்)
  
இன்னும் எண்ணத்தில் மென்றுகொண்டிருப்பவை:
--------------------------------------------------------
பரி 10: 52-54
சிறந்தார் நடுக்கம் சிறந்தார் களையல்
இதை-உம் கயிறும் பிணையும் இரிய-ச்
சிதையும் கலத்தைப் பயினால் திருத்தும்...

மதுரைக்காஞ்சி: 26-28
இணை-ஒலி இமிழ் துணங்கை-ச்-சீர்-ப்
பிணை யூபம் எழுந்து ஆட
அஞ்சுவந்த போர்க்களத்தான்...
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எடுத்துக்காட்டு (not the entire list; but representative):
-------------------------------------------------------------------
ஐங் 52: 1
வயலைச் செங்கொடிப் பிணையல் 

ஐங் 91: 4
பழன வெதிரின் கொடிப் பிணையலள் 

ஐங் 373: 3
மான் பிணை 

அக 5: 23
தூநீர் பயந்த துணை அமை பிணையல் 

அக 62: 4-5
மாத்தாள் குவளை மலர் பிணைத்தன்ன
மாயிதழ் மழைக்கண் மாஅயோளொடு 

அக 86: 14
பெற்றோன் பெட்கும் பிணையை ஆகு என 

அக 149: 17-18
... நீலத்து 
எதிர்மலர்ப் பிணையல் அன்ன இவள்
அரி மதர் மழைக்கண்...

அக 189: 8
வயலை-அம்-பிணையல் வார்ந்த கவாஅன் 

அக 345: 8
கருங்கால் வேங்கைச் செம்பூம்பிணையல் 

அக 361: 2-3
மாயிதழ்க் குவளை மலர் பிணத்தன்ன
திருமுகத்து அலமரும் பெருமதர் மழைக்கண் 

அக 385: 11-12
... கிளைய
பயில்-இரும்-பிணையல் ... 

கலி 96: 5
ஏந்தி எதிர் இதழ் நீலம் பிணைந்தன்ன கண்ணாய்

கலி 102: 24-26
கலங்கினர் பலர்
அவருள் மலர் மலி புகல் எழ அலர் மலிர் மணி-புரை நிமிர்-தோள் பிணைஇ
எருத்தோடு இமிலிடைத் தோன்றினான் 

கலி 106: 31-33
... தம்
அன்புறு காதலர் கைபிணைந்து ஆய்ச்சியர்
இன்புற்று அயர்வர் தழூஉ

நற் 90: 6-7
பெருங்கயிறு நாலும் இரும்-பனம்-பிணையல்
பூங்கண் ஆயம் ஊக்க ஊங்காள்

நற் 170: 3
பிணையல்-அம்-தழை 

நற் 252: 9
மலர் பிணைத்தன்ன மாயிதழ் மழைக்கண்

நற் 363: 4-5
உரு வினைக்கு அசாவா உலைவு-இல்-கம்மியன்
பொறி-அறு-பிணை-க்-கூட்டும் துறை-மணல் 

பரி 2: 52-53
நின்னது திகழ்-ஒளி சிறப்பு இருள் திருமணி
கண்ணே புகழ்-சால் தாமரை அலர்-இணை-ப்-பிணையல் 

பரி 7: 56-58
போக்கி-ச் சிறை-பிடித்தாள் ஓர் பொன்னங்கொம்பு
பரிந்து அவளைக் கை-ப்-பிணை நீக்குவான் பாய்வாள்
இரும்பு-ஈர் வடி ஒத்து மை விளங்கும் கண்ணொளியாள் 

பரி 9: 80-82
வென்று உயர்த்த கொடி சான்றவை 
கற்பு இணை நெறி ஊடல் பிணைக் கிழமை
நயத்தகு மரபின் வியத்தகு குமர 

பரி 10: 52-54
சிறந்தார் நடுக்கம் சிறந்தார் களையல்
இதை-உம் கயிறும் பிணையும் இரிய-ச்
சிதையும் கலத்தைப் பயினால் திருத்தும்...

பரி 20: 49-51
மாயப்பொய் கூட்டி மயக்கும் விலைக்கணிகை
பெண்மை-ப்-பொதுமை ப் பிணை-இலி ஐம்புலத்தை-த்
துற்றுவ துற்றும் துணையிதழ் வாய்த்தொட்டி 

புற 243: 3-4
தண் கயம் ஆடும் மகளிரொடு கை-பிணைந்து
தழுவு-வழி-த் தழீஇ தூங்கு-வழித் தூங்கி

மலைபடு: 349
குரூஉக் கண் பிணையல் கோதை மகளிர்

மதுரைக்காஞ்சி: 26-28
இணை-ஒலி இமிழ் துணங்கை-ச்-சீர்-ப்
பிணை யூபம் எழுந்து ஆட
அஞ்சுவந்த போர்க்களத்தான்...

மதுரைக்காஞ்சி: 613-615
கார்-மலர்-க்-குறிஞ்சி சூடிக் கடம்பின்
சீர் மிகு நெடுவேள் பேணித் தழூஉ-ப்-பிணையூஉ
மன்று-தொறும் நின்ற குரவை ... 

பெரும்: 295-296
குறுநர் இட்ட கூம்புவிடு பன்மலர்
பெருநாள் அமையத்துப் பிணையினிர் கழிமின்

திருமுருகாற்றுப்படை: 29-31
கிளைக் கவின்று எழுதரும் கீழ்-நீர்-ச் செவ்வரும்பு
இணைப்புறு பிணையல் வளைஇ ...

திருமுருகாற்றுப்படை 215-217
முழவுறழ் தடக்கையின் இயல ஏந்தி
மென் தோள் பல் பிணை தழீஇ-த் தலை-த்-தந்து
குன்றுதோறாடலும் நின்ற தன் பண்பே...
+++++++++++++++++++++++++++++++++++++++

முழுப் பட்டியலையும் font மாற்றித் தமிழில் எடுத்துத் தர நேரமாகும்.
குறுகிய நேரத்தில் இவ்வளவே காணமுடிந்தது. நுகர்க!
அன்புடன்,
ராஜம்

N. Ganesan

unread,
Nov 14, 2010, 6:28:01 PM11/14/10
to மின்தமிழ்

On Nov 14, 4:31 pm, rajam <ra...@earthlink.net> wrote:
> 2.5: "பிணைக் கிழமை" என்ற  
> பரிபாடல் தொடர் (9:81)  
> முருனைப் பற்றிய பாடலில்  
> வருவது. (இது என்ன வகையான  
> கிழமை என்று முடிவு  
> செய்யப் பாடல்  
> முழுவதையும்  
> பார்க்கவேண்டும்.  
> இப்போது நேரமில்லை.)
>

கற்பிணை நெறியூ டற்பிணைக் கிழமை
நயத்தகு மரபின் வியத்தகு குமர! (பரி. 9)

“கற்புப் பொருந்திய நெறியையுடைய தேவியரது
அன்பு பொருந்திய அவ்வூடல் உரிமையை
நயத்தற்கேற்ற பண்பினையுடைய குமர!”
- பரிமேலழகர்

நா. கணேசன்

Nagarajan Vadivel

unread,
Nov 14, 2010, 6:35:39 PM11/14/10
to mint...@googlegroups.com
மிக்க நன்றி.  பினை என்பது இலக்கியத்தில் இல்லாத பேச்சு வழக்கில் பயன்படும் சொல் என்ற அனுமானம் ஏற்க அல்லது விலக்க உங்கள் கணினியில் சிறைப்பட்டிருக்கும் பழங்காலத்தொகுப்புகளின் தரவுத் தேர்வின் அடிப்படையில் செய்வது ஆய்வு முறையின் நெறிப்படும்.
பினை எனபது தேடலில் ஒரு இலக்கியக் குறிப்பும் தரவுத் தளம் கொடுக்கச்வில்லை என்றால் இந்த அனுமானமான இனை என்ற சொல் இலக்கியத்தில் கையாளப்படவில்லை என்று ஏற்றுக்கொள்ளப்படும்
அறிஞர்களின் அறிதல் அடிப்படையில் அனுமானங்களி ஏற்றுக்கொள்வதற்கும் தரகளின் அடிப்படையில் ஏற்றுக் கொள்வதற்கும் இடையே வேறுபாடு உள்ளது
தரவுகளின் அடிப்படையில் அனுமானங்களும் ஆய்வுகளும் இருத்தல் வேண்டும்.
விக்கியை ஆதாரம் காட்டுவதையும் மாற்றுக்கருத்துகு இடமின்றி நான் சொல்வதை ஏறுக்கொள்ளவெண்டும் என்ற நிலையில்  இருந்து நகர்ந்து இலக்கிய வளங்கள் கணினியில் தரவுகளாக இருக்கும்போது தரவுகளின் அடிப்படியில் ஆயும் நிலைக்குச் செல்லவேண்டும்
இப்போதைய விலக்கலுக்கான அனுமானம் பினை என்பது தமிழ் இலக்கியத்தில் வழக்கில் இல்லாத சொல் எனவே அது பேச்சுவழக்கில் வழங்கும் சொல்லாகவே கருதவேண்டும் என்பதே
இரண்டாம் அனுமானம் பிணைதல் தொடர்பான் தரவுதலத்தில் இருந்து சொற்பட்டி உருவாக்கப்பட்டுள்ளது. தரவுகள் அதிகரிக்க சொற்பட்டியில் மாற்றம் நேரிடுவது இயற்கை
நாகராசன்

2010/11/15 rajam <ra...@earthlink.net>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
visit : www.elearning.edu www.radiusconsultancy.com www.elearninglive.tv

rajam

unread,
Nov 14, 2010, 6:48:19 PM11/14/10
to mint...@googlegroups.com
பரிமேலழகர் உரைக்கு நன்றி கணேசன்.

“கற்புப் பொருந்திய நெறியையுடைய தேவியரது
அன்பு பொருந்திய அவ்வூடல் உரிமையை
நயத்தற்கேற்ற பண்பினையுடைய குமர!”
                         - பரிமேலழகர் 

ஊடல் பிணைக் கிழமை == "அவ்-ஊடல் உரிமை "
இந்த உரையினால் "பிணை" என்பதற்கு என்ன விளக்கம் கிடைக்கிறது? எனக்குப் புரியவில்லையே?
அன்புடன்,
ராஜம்


Hari Krishnan

unread,
Nov 14, 2010, 11:32:48 PM11/14/10
to mint...@googlegroups.com


2010/11/15 rajam <ra...@earthlink.net>

ஊடல் பிணைக் கிழமை == "அவ்-ஊடல் உரிமை "
இந்த உரையினால் "பிணை" என்பதற்கு என்ன விளக்கம் கிடைக்கிறது? எனக்குப் புரியவில்லையே?

ம்ம்ம்? புர்ல?  சாப்பாட்ட வெரலால பெணையற மாறி பெணையறாங்களாம்...அக்காங்.... மாணிக்கவாசகரையே டபாய்க்கிறவருக்கு பரிமேலழகர் எந்த மூலை?   

மலமுழுங்கி மகாதேவனுக்குக் கதவு ஒரு அப்பளம்.  நான் திரும்ப வரும் வரைக்கும் பரிமேலழகர் அப்பளத்தைச் சுட்டுத் தின்னுட்டிருங்க என்ன....(பொரிச்சா கொலஸ்ட்ரால்... வேண்ணா.... கொஞ்சூண்டு நெய் தடவி அவன்ல முப்பது செகண்டு வச்சா எல்லாத்தையும் அவன் பாத்துப்பான்...தெர்தா?)

--
அன்புடன்,
ஹரிகி.

Hari Krishnan

unread,
Nov 14, 2010, 11:47:39 PM11/14/10
to mint...@googlegroups.com


2010/11/15 Hari Krishnan <hari.har...@gmail.com>
சங்க இலக்கியத்தில் மொத்தம் 93 இடங்களில் பிணை என்ற வடிவம் பயன்படுத்தப்பட்டுள்ளது.  மொத்தப் பட்டியலும் இதோ இங்கே:  (ஒரு வழியா டாக்டர் அன்புமணியின் திஸ்கி தேடு முகப்பைக் கண்டுபிடிச்சிட்டேனாக்கும்.... இது வேலைக்காவுமா என்று கேட்ட அன்பர், வேலைக்கு ஆவுதுா இல்லியான்னு பார்க்கவேணுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.)  தோ இன்னும் ரெண்டு மணிநேரத்துல பூனாக்கு;டாட்டா.....அட்த்த வாரம்தான் இனிமே எதையும் எழுதுவேன்.  அது வரிக்கும் எஞ்சாய்!)  இந்த திஸ்கி தேடு முகப்பை யுனிகோடு முகப்பாக மாற்ற யாரானும் ரெடியா, இல்லாட்டி நான் திரும்பி வந்த பொறவு அன்புமணி பெங்களூர்ல எங்க இருக்கார்னு தேடவா?)

ராஜம் அம்மா பட்டியலுக்கும் தேடு முகப்பு பட்டியலுக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கிறது.  That indicates the fault in the TSCII encoding. The search results can include all that Dr Rajam has enlisted with a little refinement in the search input method.  If this interface starts working in Unicode, then it would not require any refinement.  Any ruffian like me can match the results produced by Dr Rajam :))

Hari Krishnan

unread,
Nov 14, 2010, 11:50:18 PM11/14/10
to mint...@googlegroups.com


2010/11/15 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

மிக்க நன்றி.  பினை என்பது இலக்கியத்தில் இல்லாத பேச்சு வழக்கில் பயன்படும் சொல் என்ற அனுமானம் ஏற்க அல்லது விலக்க உங்கள் கணினியில் சிறைப்பட்டிருக்கும் பழங்காலத்தொகுப்புகளின் தரவுத் தேர்வின் அடிப்படையில் செய்வது ஆய்வு முறையின் நெறிப்படும்.

இந்தப் பினையையும் தேடிப் பார்த்துவிட்டேன்.  வந்திருக்கும் விடைகளில் 99 சதம் அன்பினை நட்பினை என்பினை.....என்றுதான் இருக்கின்றன.  ஒரு சதம் பின்னை என்பது குறுகிப் பினை என்று பயன்படுத்தப்பட்டிருக்கிறது.  இப்ப தேடுபொறி துணையோடு சவால்.  பினை, பினைதல் என்ற வடிவத்தை ஒரே ஓரிடத்தில் தமிழிலக்கியத்திலிருந்து எங்கிருந்தாவது காட்டுங்கள் பார்ப்போம்..... அதாவது நீங்க சொல்ற அர்த்தத்துல... 

rajam

unread,
Nov 15, 2010, 12:07:25 AM11/15/10
to mint...@googlegroups.com, Hari Krishnan
நன்றி ஹரிகி! நீங்கள் பூனா போகும் வேகம்; அதனால் சுருக்கமாகச் சொல்கிறேன்.
நீங்கள் தந்த பட்டியலில் சில எட்டுத்தொகை/பத்துப்பாட்டு நூல்கள் விடப்பட்டமாதிரித் தெரிகிறது.

சரி, நீங்கள் திரும்பி வருவதற்குள் என் முழுப்பட்டியலையும் ஒழுங்கு செய்துவைக்கப் பார்க்கிறேன்.
கல்யாணம் சிறப்பாக நடக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! மணமக்களுக்கு என் மனமார்ந்த ஆசிகள்!
அன்புடன்,
ராஜம்


On Nov 14, 2010, at 8:22 PM, Hari Krishnan wrote:



2010/11/15 rajam <ra...@earthlink.net>
முழுப் பட்டியலையும் font மாற்றித் தமிழில் எடுத்துத் தர நேரமாகும்.
குறுகிய நேரத்தில் இவ்வளவே காணமுடிந்தது. நுகர்க!
அன்புடன்,
ராஜம்

--

சங்க இலக்கியத்தில் மொத்தம் 93 இடங்களில் பிணை என்ற வடிவம் பயன்படுத்தப்பட்டுள்ளது.  மொத்தப் பட்டியலும் இதோ இங்கே:  (ஒரு வழியா டாக்டர் அன்புமணியின் திஸ்கி தேடு முகப்பைக் கண்டுபிடிச்சிட்டேனாக்கும்.... இது வேலைக்காவுமா என்று கேட்ட அன்பர், வேலைக்கு ஆவுதுா இல்லியான்னு பார்க்கவேணுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.)  தோ இன்னும் ரெண்டு மணிநேரத்துல பூனாக்கு;டாட்டா.....அட்த்த வாரம்தான் இனிமே எதையும் எழுதுவேன்.  அது வரிக்கும் எஞ்சாய்!)  இந்த திஸ்கி தேடு முகப்பை யுனிகோடு முகப்பாக மாற்ற யாரானும் ரெடியா, இல்லாட்டி நான் திரும்பி வந்த பொறவு அன்புமணி பெங்களூர்ல எங்க இருக்கார்னு தேடவா?)

Search results: பிணை occurs in 93 location(s)
Etexts from Project Madurai are linked to the PM website in appreciation of the volunteers.
==========================================================================

ஐங்குறுநூறு: 052x01 வயலை செ கொடி பிணையல் தஈ 

ஐங்குறுநூறு: 091x04 பழன வெதிரின் கொடி பிணையலள் ஏ 

ஐங்குறுநூறு: 326x02 மட மான் அம் பிணை மறியொடு திரங்க 

ஐங்குறுநூறு: 354x02 மறி உடை மான் பிணை கொள்ளாது கழியும் 

ஐங்குறுநூறு: 373x03 மான் பிணை அணைதர ஆண் குரல் விளிக்கும் 

ஐங்குறுநூறு: 394x04 பெரு மட மான் பிணை அலைத்த 

ஐங்குறுநூறு: 401x01 மறி இடைப்படுத்த மான் பிணை போல 

ஐங்குறுநூறு: 434x02 மறி உடை மான் பிணை உகள 

ஐங்குறுநூறு: 493x02 மாதர் மான் பிணை மறியொடு மறுக 

==========================================================================

அகநானூறு: 005x23 தூ நீர் பயந்த துணை அமை பிணையல் 

அகநானூறு: 007x11 வலை காண் பிணையின் போகி ஈங்கு ஓர் 

அகநானூறு: 014x05 அம் காட்டு ஆர் இடை மட பிணை தழீஇ 

அகநானூறு: 023x08 அண்ணல் இரலை அமர் பிணை தழீஇ 

அகநானூறு: 032x13 வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ நின்ற 

அகநானூறு: 034x06 மறி ஆடு மருங்கின் மட பிணை அருத்தி 

அகநானூறு: 044x14 பிணையல் அம் கண்ணி பெரு பூண் சென்னி 

அகநானூறு: 062x04 மா தாள் குவளை மலர் பிணைத்தன்ன 

அகநானூறு: 074x09 கரு கோட்டு இரலை காமர் மட பிணை 

அகநானூறு: 086x14 பெற்றோன் பெட்கும் பிணையை ஆக என 

அகநானூறு: 129x05 கலை பிணை விளிக்கும் கானத்து ஆங்கண் 

அகநானூறு: 133x17 வரி மரல் கறிக்கும் மட பிணை 

அகநானூறு: 134x12 கணை கால் அம் பிணை காமர் புணர் நிலை 

அகநானூறு: 149x18 எதிர் மலர் பிணையல் அன்ன இவள் 

அகநானூறு: 173x11 உழைமான் அம் பிணை இனன் இரிந்து ஓட 

அகநானூறு: 184x12 புள்ளி அம் பிணையொடு வதியும் ஆங்கண் 

அகநானூறு: 189x08 வயலை அம் பிணையல் வார்ந்த கவர்வுற 

அகநானூறு: 195x06 மான் பிணை நோக்கின் மட நல்லாளை 

அகநானூறு: 234x10 ததர் தழை முனஈய தெறி நடை மட பிணை 

அகநானூறு: 285x05 காடு தேர் மட பிணை அலற கலையின் 

அகநானூறு: 287x10 கணை கால் அம் பிணை ஏறு புறம் நக்க 

அகநானூறு: 291x18 புள்ளி அம் பிணை உணீஇய உள்ளி 

அகநானூறு: 304x08 சிறு மறி தழீஇய தெறி நடை மட பிணை 

அகநானூறு: 314x05 மறி உடை மட பிணை தழீஇ புறவின் 

அகநானூறு: 321x04 கதிர் கால் அம் பிணை உணீஇய புகல் ஏறு 

அகநானூறு: 345x08 கரு கால் வேங்கை செ பூ பிணையல் 

அகநானூறு: 353x11 உயங்கு நடை மட பிணை தழீஇய வயங்கு பொறி 

அகநானூறு: 361x02 மா இதழ் குவளை மலர் பிணைத்தன்ன 

அகநானூறு: 363x19 பிணை ஏர் நோக்கம் பெரு கவின் கொள ஏ 

அகநானூறு: 385x12 பயில் இரு பிணையல் பசு காழ் கோவை 

அகநானூறு: 395x11 மேய் பிணை பயிரும் மெலிந்து அழி படர் குரல் 

==========================================================================

கலிங்கத்துப்பரணி: 011x16 இன் நிழல் இன்மையான் வருந்திய மட பிணைக்கு 

கலிங்கத்துப்பரணி: 020x23 பிணை உம் காணிர் ஓ பிரியும் ஓ அவை ஏ 

கலிங்கத்துப்பரணி: 027x03 பேதுறு மட மொழி பிணை எழில் மான் நோக்கின் 

--
அன்புடன்,
ஹரிகி.

devoo

unread,
Nov 15, 2010, 1:05:26 AM11/15/10
to மின்தமிழ்
தமிழருவி கொட்டுகிறது;
தொடர்ந்து நீராடியதில் தலையில் நீர் கோத்துக்கொண்டது.
சுக்கு, மிளகு, சில்லுக்கருப்பட்டி சேர்த்துக் கஷாயம்
செய்து அருந்த வேண்டும்


தேவ்

Reply all
Reply to author
Forward
0 new messages