நூ த லோ சுமயிலை
பழந்தமிழ்ப்பாடல்களாக உரைகாரர் காட்டும் விடுகதைகள் - நச்சினார்க்கினியர் உரை வழி கண்ட சில
புகுமுன்
பல ஆண்டுகளுக்கு முன் செவ்விய மொழியாம் நம் தமிழுக்கு மதுரைத் தி ட்டம் என
பயன் மிகு மின் நூலக திட்டத்திற்காக நூற்றுக்கணக்கான நூல்களை பல்வேறு
நூலகங்கங்களில் தேடிய நிலையில் கண்ட பெருநூல் தொகுப்புகளில் பல பழம்
ஆசிரியர்கள்தம் தொல்காப்பிய உரைகளும் கண்டேன் அவைகளை பார்க்கும்
நேரம் அவற்றின் ஊடே உரைவிளக்கு நிலையில் காட்டப்பட்ட எடுத்துக்காட்டுகளாக
பற்பல நூல்களின் பாடல்கள் காட்டப்படுள்ளன அவைகளில் தற்காலம் யாவரும்
தொடர்பு கொள்நிலையில் பலவகை ஊடகங்களில் கிட்டுவன நீங்கலாக இவைகள்
எந்தநூலைச் சார்ந்த என (என் சிற்றறிவிற்கு) அறியாநிலையில் உள்ளன என பட்டன
வற்றை தொகுக்க தொடங்கினேன்ஆ னால் எவர்க்கும் எந்நாளும் நேரும் தடைகள்
இயற்கையாக வந்து தொகுப்பின் ஒருசிறு தூரமே சென்றது
' நச்சினார்க்கு இனியனாரின் மேற்கோள்கள் தொகுப்பு ' எ னும் தலைப்பின்
ஓட்டம் நின்றது இத் தொகுப்பில் இனம் தெரியாத நூல்களின் பாடல்களுடன் நூற்பாக்
களும் அடங்கும் அத்தொகுப்பின் முன்னோட்டமாக வைத்த பத்தியே இங்கு காண்க
அதனில் நகைச்சுவை எனும் மெய்ப்பாட்டில் வரும் அதனால் தமிழ் மொழிமீது
சிலருக்கு ஆர்வம் பிறக்கலாம் எனும் கருத்தில் வைக்கும் விடுகதைப் பாடல்கள் இவை
நச்சினார்க்கினியர்
உரைமேற்கோள்பாடல்கள் திரட்டு -
பகுதி 1
வழங்கு பழம் // சங்கநூல்களில் விரவாது தனிப்பாடல்களாகவோ மற்றும்
யாதோ ஒருபிற்காலநூல்தம் பாடல் /வரிகளாக
தோன்றுந மட்டும் ஈங்கு
படைக்கப் பட்டுள்ளன
புறத்திரட்டு, பெருந்தொகை, நீதித்திரட்டு,
பன்னூல் திரட்டு , தனிப்பாடல் திரட்டு ,சீட்டுக்கவிவித் திரட்டு ,
என்பன
சில திரட்டு நுல்கள். அழிந்துபட்ட பலநூல்களினின்று மேற்கோளாக
மேற்கண்ட திரட்டு நூக்களில்
குறையாக உதிர்ந்தனவாக
கிடைத்த
தொன்மை வாய்ந்த பாடல்களைத்
தொகுத்து அவற்றின்
சிற்சில
கீற்றுக்களாவது நமக்குக் கிடைக்கச்
முத்தொள்ளாயிரம், வளையாபதி, போல்வன
சிற்சிலவாவது கிட்டினமைஅ றிந்திருப்பீர்
பலஉரைஆசிரியர்தம் மேற்கோள்கள் வழி மட்டும் சேர்மமாகவே காணும
வற்றில் மேற்படி உரையில், நூல்பெயர் மட்டும் அறிந்து, அவற்றின்
தனிப்பாக்களாய் ஆனால் சிறுதொகுதி அளவாவது ஆவன, அவ்வத்
தலைப்புகளில் படைக்கப்பட்டுதகடூர் யாத்திரை, பெரும்பொருள்-
விளக்கம், ஆசிரியமாலை போல்வந.
இவைக
என்னால்ம
துரை திட்டத்தில் பதியப்பட்டுள்ளன காணலாம் )
நச்சினார்க்கினியர்
உரைமேற்கோள்பாடல்கள் திரட்டு -
பகுதி 1
கீழ்காணும் பாடல்களில் அடியில் காணும் எண் எந்நூற்பாவின் கீழ்
ஆசிரியர் இப்பாடல்களைக் காட்டினார் என்பதனை காட்டும் குறிப்பே
இப்பாடல்கள் அவை தாங்கு நூல்பெயர் அறியப்பட வேண்டிய தனிப்
பாடல்களின் அல்லது அவற்றின் வரிப் பகுதிகளின் தொகுப்பு எனவே
கொள்க புகுநிலையோரும் எளிதாக படிக்க சந்திபிரிக்கப்பட்டன
------------------------------------------------------------------------------------------------------------
"நச்சினார்க்கினார் உரை வளம்" என பெருந்தொகுப்பாக கண்டன
நச்சினார்க்கினியர் உரை யுள் காணும் மேற்கோள்கள் சில "
தொல்காப்பியம் // பொரு ளதிகாரம் // செய்யுளியல்
நூற்பா 176 அதனில்
[= யானை (பிசி) ஒப்பொடு புணர்ந்த உவமம்]
"பிறை கவ்வி மலை நடக்கும் " (1) இது எது எவ்வடி ??? விடை படம் 1 எறும்பி
(2)
நூற்பா 176 அதனிலேயே
[=கமுகு (பிசி ) ஒப்பொடு புணர்ந்த உவமம் )
"முத்துப்போ ல்பூத்து முகிழில் கிளிவண்ணம்
நெய்த்(து ஓர்குருதிநிறம்கொ ண்டு வித்துதிர்த்து"(2)இது என்ன எப்பொருளைக் காட்டும் ? விடை படம் 2 பாக்கு
(3)
நூற்பா 176 அதனிலேயே
நீராடான் பார்ப்பான் நிறம் செ ய்யான் நீ ராடின் (3) இது என்ன பொ ருள் ??? விடை படம் 3 நெருப்பு
ஊராடு நீரில் கா க்கை .
[=நெருப்பு (பிசி) தோன்றுவது கிளந்த துணிவு]
(4)
நூற்பா 180 அதனில்
குடத்தலையர் செ வ்வாயில் கொ ம்(பு) எழுந்தார் கையின்
அடக்கிய மூக்கினார் தா ம் இது எது எவ்வடி ??? ..... .......... ......விடை படம் 1 எறும்பி
(=குஞ்சரம்-குறிப்புமொழி [எழுத்தாலும் சொல்லலும்பொருள்
அரியாவாகி பொருள் புறத்தே நின்றது ]
இந்நான்கு பாடல்களில் வரும் விடுகதைகளுக்கும் தமிழ்மொழி புலமை
குறைவு ள்ளோ ரும் முயல்வதில் தவறில்லை விடை காண முயலலாம்
எனினும் விடைக ளை அங்கேயே வேதமறையில் (வெண்மை நிற எழுக்களாக
மறைத்து வைத்துள்ளேன் சுட்டியில் தட விக்காண்க /// [= ??????? (பிசி xxxxxxxxx //
இந்நாளில் பலரும் விடை காண்பது மிக மிக அரிதுதான் ஆகும் நானும் இடர்பட்டவனே
ஆனாலும் ஆசியர் கா ட்டிய குறிப்புவழி விளக்கம் அளிக்க வல்லவன் வைத்துள்ளேன்
விளக்கம்
(1) யானை
=== பிறை கவ்வி
வெண்மை நிறத்துடன் மெல்லிய திங்களின் பிறைக்கீற் றுப்போல் வளைந்து தன் வாயிலிருந்து
கிளம்பி வெளியேகி வருதலால் அதனை யானை தன வாயிலான கவ்வியது போல் தோன்றுதல் >>> உருவகம்
== மலைநடக்கும்
உருவில் பெரியதாகி கரிய நிறத்துடன் ஓர் சிறு குன்றுபோல் அசைந்த நடையில் வருதலால்
இதனில் இரு முரண் தொடைகளை காணலாம்
(அ ) எந்த உயி ரினத்தாலும் கவ்வ முடியாத நிலவினை வாயினில் பற்றுவதாகக் கா ட்டுவது
(ஆ) எங்கும் மலை யோ குன்றோ தன நிலையிலிருந்து நகராத ஒன்றினை நடந்து வருவதாகக் காட்டுவது
வேறு
தென்இந்திய யானைக்கும் ஆப்பிரிக்க யானைக்கும் வேறுபாடுகள் == மூன்று
(1)
அதன் காதுகள் // மேல் காது தலையில் சேரும் இடம் = கிடையாக சென்று தலையுடன் இணையும்
ஆனால் தமி ழகத்து (தென்னிந்திய ) யானை யின் காதுகள் மனிதரைப்போல் 'ஒ'கர வடிவில்
வளைந்த நிலையில் தலையுடன் இணையும்
(2)
அதன் நெற்றி // ஆப்பிரிக்க யானையின் நேற்றி மேல்பகுதி இரு பக்கமும் பந்துகள் போன்ற அமைப்பு குறைந்தும்
சற்றே பின் நோக்கிச் சாய்ந்திருக்கும் அனால் தமிழகத்து யானை யின் நெற்றியில் இருபக்கமும் உருண்ட பந்துகள்
போன்ற அமைப்புடன் சாய்த்து நெடிதாக சாய்த்து உயர்ந்து காணும்
(3)
அதன் தந்தம் // ஆப்பிரிக்க இனத்தினில் ஆன் பெண் இரு பழுக்கும் தந்தம் உண்டு அனால் தமிழக யானைக்கு சில ஆணிற்கு க்கு மட்டும்
தந்தம் வளரும் மேலும் சிலதிரு வைரம் பாயாது வளருமாம் பெண்களுக்குள் கிடையா.
மேலும்மி க்க கூறிய விவர அறிவு விழைவோர் வெட்டி ஒட்டிய இணைப்புப் பக்கம் வழி மேலும் பலப்பல காணலாம்
(2) கமுகு
= பாக்கு மரம் இதன் பூ வெண் மை யாகப் பூ த்து பின் பச்சைநிற உருண்டை காய்களாக திரண்டு பின் அவைகளே சிவந்த நிறத்தை அடைவது பேசப்படுகின்றது
வேறு
பாக்கு மரம் பூக்கும் காலங்களில் அதன் தோப்பிலிருந்து நல்ல மனம் வீசுமாம் இப்படி ஒரு மங்களூர் வாழ் பெண்மணி என் ஓர் கோவைப்பயணமஇரயில் சந்திப்பில் காட்டியது உண்டு ஆ னால் வலைத் த்தலங்களில் காணப்படவில்லை அறிந்தவர் இது பற்றி கருத்து வைக்கலாம்
(3) நெருப்பு
நாளும் முத்தீ பேணுதல் தம் தொழிலாகக் கொண்டவர் பார்ப்பனர் தீ யுடனேயே நீங்கா தொடர்புடையவராதலால் அவர்களின் நெருப்பு
பிணைப்பினால் அவர் பெயரே நெருப்பினுக்கு ம் ஆகு பெயராகி யது அதாவது பார்ப்பான் என்றால் தீ = நெருப்பு // நிறம் செய்யான் = சிவந்த நிறமுடையவன் // நீரும் நெருப்பும் எதிர் எதிர் ஆனது ஒன்று இருக்குமிடம் மற்றோன்று கூ டாது ஒருவேளை இரண்டும் கலந்தால் = அதாவது நெருப்பின் மேல் நீர் விழுந்தா லோ நீரில் நெருப்பு விழுந்தாலோ நெருப்பு காக்கையகி விடுமாம் = சிவப்பு நிறம் மாறி கரிய நிறம் பெற்றுவிடும் என்பது காட்டப்படுகின்றது (ஊராடு நீரில் காக்கை)
வேறு
இந்த நூற்பா மறைமுகமாக பார்ப்பனர் பொதுவாகக் மற்ற இனத்தினருடன் கலக்கக் கூடாது அப்படி கலந்தால் அவர்கள் கருநிறமுடையவராகி தன பண்பை முற்றிலும் இழந்துவிடுவார் என்னக்கா ட்ட இயற்றப்பட்டிருக்க வேண்டு ம்
(4) யானை களுக்கு நடுஉ ச்சி தலையின் இடையில் கிண்ணம்போல் இரு குழி ஒன்று உண்டு // தெருக்களில் வரும் யானைகளை விளையாட்டாக சிறுவர்களை முதுகில் ஏற்றி அவரிடம் பெரு சிறு காசுகளை யானை தன துதிக்கையால் பெற்று தர பின் பாகன் பெற்று இந்த கிண்ணம் (குடம் ) போன்ற குழியில்தான் போட்டுவைப்பதை நாளும் காணலாம் = ஆக குழி உடைய தலையை பெற்றது யானை = குடத்தலையன்
தன சிவந்த வாயிலிருந்து எழும் இரு தந்தங்களை உடையது = செவ்வாயில் கொம்பெழுந்தான்
அதன் மிக திறனுடன் பயன்கொள்ளவல்ல துகிக்கையானால் பல்வேறு பணிகளை செய்து கொள்ளும் திறனுடையது யாவரும் அறிவர் அதன் நுனியில் தன அதன் மூக்கு உள்ளது அதன் வழிதான் உயிர் மூச் விடுகின்றது அதனால் கையில் அடக்கிய மூக்கினார் என்றது இந்த புதிர்
திரு ழான் அவர்களுடன் செல்வா தேமொழி சுபா என்பார் கருத்து வைக்கலாம்