பதினெண் கீழ்க்கணக்கு
விளம்பி நாகனார் இயற்றிய
நான்மணிக்கடிகை
திரு. தி. சு. பாலசுந்தரம் பிள்ளையவர்கள்
(இளவழகனார்)
உரை
நான்மணிக்கடிகை
முகவுரை
கீழ்க்கணக்கு நூல்களுள் அடி அளவினால் நாலடியார் பெயர் பெற்றது போல,
பாடல்களில் கூறப்பெறும் பொருள்களின் அளவால் நான்மணிக்கடிகை பெயர்
பெற்றுள்ளது. கடிகை என்பது துண்டம் என்று பொருள்படும். எனவே,
நான்மணிக்கடிகை என்னும் தொடர் நான்கு இரத்தினத்துண்டங்கள் என்னும்
பொருளைத் தருவதாகும். ஒவ்வொருபாடலிலும், ஒத்த நான்கு சிறந்த கருத்துகளைத்
தேர்ந்தெடுத்துப்பிணைத்து, அழகிய சொற் கோவைகளில் ஆசிரியர் அமைத்துள்ளனர்.
அதனோடு சொல்லும் முறைமையிலும்ஓர் ஒருமைப்பாடு அமைந்திருத்தலை நூல்
முழுவதும் காணலாம். ஆடூஉ முன்னிலை, மகடூஉ முன்னிலை ஆகிய இடைப் பிறவரல்கள்
இன்றி, நந்நான்கு பொருள்களைப் பாடல்தோறும் திறம்படஅமைத்துள்ள ஆசிரியரின்
புலமைத் திறனும் கவித்திறனும் யக்கத்தக்கனவாம்.
இதனை இயற்றியவர் விளம்பி நாகனார் என்பவராவர். நாகனார் என்பது இவரது
இயற்பெயரையும் விளம்பி என்பது இவரது ஊர்ப் பெயரையும்
குறிப்பதாகக்கொள்ளலாம். இள நாகனார், இனிசந்த நாகனார்,
வெள்ளைக்குடிநாகனார், என்று இவ்வாறு 'நாகனார்' என்ற பெயரைத்தாங்கிய
புலவர் பலர் தொகைநூல்களில் காணப்படுகின்றனர். எனவே, நாகனார் என்பது
நெடுங்காலமாகத் தமிழ்நாட்டில் வழங்கிவரும் ஒரு பெயரே ஆகும். விளம்பி
என்பது ஊர்ப்பெயர் அன்றி, வேறு காரணம் பற்றிய அடைமொழியாக இருத்தலும்
கூடும்.
இவர் பெயர் சங்கத்துச்சான்றோர் பெயர் வரிசையில் காணப்பெறாமையினாலும்,
கீழ்க்கணக்கு நூலாசிரியர்களைப்'பிற்சான்றோர்' எனப் பேராசிரியர்
குறித்துள்ளமையினாலும், இவர் சங்க காலத்திற்குப் பிற்பட்டவர்
என்பதுதெளிவு. சங்க நூல் கருத்துகளையும், திருக்குறளின் கருத்துகளையும்
இவரது நூல் சிற்சில இடங்களில் அடியொற்றிச்செல்லுகிறது. 'நாக்கு' (75)
என்ற பிற்காலச் சொல்வடிவம் இதன்கண் எடுத்தாளப் பெறுதலும், அசனம்
(79),ஆசாரம் (93), சேனாபதி (52) முதலிய வடசொல் ஆட்சிகளும்,'எஞ்சாமை' (25)
முதலிய எதிர்மறைத் தொழிற்பெயரை எதிர்மறை வியங்கோள் பொருளில்
வழங்கியிருத்தலும், பிறவும், இவர் பிற்சான்றோர் என்பதை
உறுதிப்படுத்துவனவாம். இந்நூலுள் வரும் 'அல்லவை செய்வார்க்கு அறம்
கூற்றம்'(82) என்னும் செய்யுள் அடியும், 'அல்லவை செய்தார்க்கு அறம்
கூற்றம் ஆம் என்னும் பல்லவையோர் சொல்லும்பழுது அன்றே' என்னும்
சிலப்பதிகார வெண்பாப்பகுதியும் சொற்பொருள் ஒற்றுமையுடையன.
'பல்லவையோர்சொல்' என்று சிலப்பதிகாரம் சுட்டுவதால், இது
அக்காலத்துப்பெருக வழங்கிய ஒரு பழமொழியாகலாம். இரண்டு நூல்களும் இதனை
எடுத்தாளுதலினால், இந்நூல்கள் ஒரே காலப்பகுதியில் தோன்றியனபோலும்!
இந் நூலின் முதற்கண் உள்ள கடவுள்வாழ்த்துச் செய்யுட்கள் இரண்டும்
மாயவனைப் பற்றியவை. எனவே, இந் நூலாசிரியரை வைணவ சமயத்தினர்
என்றுகொள்ளலாம்.
கடவுள் வாழ்த்துச் செய்யுட்கள் இரண்டு நீங்கலாக இந்நூலுள் 101
செய்யுட்கள் உள்ளன.'மதிமன்னும் மாயவன்' என்ற கடவுள் வாழ்த்தும், நூலுள்,
'கற்ப, கழிமடம் அஃகும்(27)', 'இனிது உண்பான் என்பான்'(58), என்னும் இரு
செய்யுட்களும் பஃறொடைவெண்பாக்கள். ஏனைய எல்லாம் நேரிசை, இன்னிசை, அளவியல்
வெண்பாக்கள்.
மதிப்புரை
நான்மணிக்கடிகை என்பது, கடைச்சங்கப் புலவர்களால் இயற்றப்பட்ட
கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டனுள் ஒன்றாகும்.
கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டாவன : நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா
நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை யைம்பது,
திணைமொழி யைம்பது, ஐந்திணை யெழுபது, திணைமாலை நூற்றைம்பது, திருக்குறள்,
திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை,
முதுமொழிக்காஞ்சி, ஏலாதி என்பன.
இனி நான்மணிக்கடிகை என்னும் இந்நூலை இயற்றினார் விளம்பிநாகனார் எனப்படும்
நல்லிசைப் புலவராவர். நாகனார் என்னும் பெயருடைய இவர் விளம்பியென்னும்
ஊரிலே பிறந்தமையாலோ, இருந்தமையாலோ விளம்பி நாகனார் என்று
வழங்கப்பட்டனரெனக் கொள்ளல் வேண்டும். இவர் கடைச்சங்கப் புலவர் எனக்
கொள்ளப்படுதலின் இவரது காலம் கி. பி. 200க்கு முற்பட்டதெனக் கருதலாம்.
இவர் இயற்றிய இந் நூலின் காப்புச் செய்யுளான் இவரது சமயம் வைணவம் என்பது
தேற்றம்.
‘நான்மணிக்கடிகை' என்னும் இந்நூற்பெயர், நந்நான்கு வகையான நீதி
மணிகளாற்கோக்கப்பட்ட ஒருவகை அணிகலன் என விரியும். கடவுள் வாழ்த்து உட்பட
நூற்று நான்கு வெண்பாக்களால் இந்நூல் யாக்கப்பெற்றுள்ளது. இது, கடைச்சங்க
நூலாகலின் இதன் நடைச்சிறப்பினைப்பற்றிக் கூறல்வேண்டா.
இந் நூற்குப் பழைய உரை ஒன்று உளதேனும் அது குறிப்புரையா
யிருக்கின்றமையின் மாணவர்க்கும் பிறர்க்கும் தெளிவான முறையிற்
பயன்படுமாறு திருவாளர் தி. சு. பாலசுந்தரம்பிள்ளை யவர்களால் எழுதப்பட்ட
பதவுரை கருத்துரை விளக்கவுரைகளோடு இந்நூலை வெளியிட்டுள்ளோம்.
மாணவர்தம் பருவத்திற்கேற்ற நீதிகளும், உண்மைகளும் இந்நூலின்கண்
மிளிர்வதனால், இது பள்ளிக்கூடங்களிலும் பாடமாக வைக்கப்படுகின்றது.
தமிழகம் இதனை ஆதரிப்பதாக ;
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.
(தொடரும்)
| ||||
| |||
| |||||
| ||||
On Jul 25, 1:23 pm, சீனுத்தாத்தா <see...@gmail.com> wrote:
> மதிப்பிற்குறிய வாசகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு துடங்குகிறேன்.
> ஒரு வாராக நாலடியாரை ஒவ்வொரு தலைப்புகளாகத் தனித்தனியே
> 'மின்டமிலில்' (mintamil) (உரைகளுடன்) பரிசுரித்து முடித்துவிட்டு
> சு்ம்மாயிராமல் 'பதினென்கீழ்க்கில் மூன்றாவதான் "நான்மணிக்கடிகை"யையும்
> அப்படியே பிரசுரிக்கத் துடங்கிக் குளறுபடி செய்யதுடங்கியபின் சில
> நாட்களுக்கு பின்தான் தோண்றியது. அதனை ஒரு தனிடத் தலைப்பினில்
> பிரசுரிப்பது தான் முறையாகும் என்று. இப்பொழுது துடங்குகிறேன்:
>
ஜூலை 15 தேதியிட்ட என் மடல்:
-------------------
அன்பின் இன்னம்பர், சீனு தாத்தா,
நான்மணிக்கடிகை நூல் உள்ள வலைவரி:
http://218.248.16.19/library/l2900/html/l2900ind.htm?book_id=33
அன்புடன்,
நா. கணேசன்
----------------------
> ஊரிலே பிறந்தமையாலோ, இருந்தமையாலோ விளம்பி நாகனார் ...
>
> read more »
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On Jul 26, 2:44 pm, Innamburan Innamburan <innambu...@gmail.com>
wrote:
> யான் செய்த தவறு யாது, திரு.கணேசனார்? கீழே உள்ளது நான் உங்களுக்கு
> காட்டியபிறகு தான், நீங்களே விஷயம் அறிந்து, முனைவர் நக்கீரனாரருக்கு
> மடலனுப்பினீர்கள். மேலும், மற்றைவர் படைப்பை எனது என்று என்றுமே நான்
> சொல்லவில்லையே. உசாத்துணைகளை சுட்டுகிறேன். இன்றைய "அன்றொரு நாள் நோக்குக.'
> இனியும் ஐயமிருந்தால், தீர்ப்பது என் கடனே.
> இன்னம்பூரான்
> நான்மணிக்கடிகை நூல் உள்ள வலைவரி:
http://218.248.16.19/library/l2900/html/l2900ind.htm?book_id=33
>
Dear I sir & Sri. Srinivas,
This is a past mail. Pl. don't worry.
It will be better if Cheenu Thatha
tells the source of Tamil Virtual University.
Anbudan,
N. Ganesan
> 2011/7/26 N. Ganesan <naa.gane...@gmail.com>
> ...
>
> read more »- Hide quoted text -
>
> - Show quoted text -