"மிகப்பழைய தமிழ் நூல் எனக் கருதப்படும் தொல்காப்பியத்திலே திருமால், முருகன், இந்திரன், வருணன் என்னும் வேதக்கடவுளர் நால்வருக்கு நாலுவகை நிலங்கள் உரியனவாகக் கூறப்பட்டுள்ளன.
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
--~--~---------~--~----~------------~-------~--~----~
மனிதமும்,உலகமும் காப்போம்
வேந்தன், காலம் விட்டுக் காலம் போய்ப் பார்க்கும் போது நாம் பல அளவுகால்களையும், காரணிகளையும் விடுத்தும், மாற்றியும் கொள்ள வேண்டியிருக்கிறது. உதாரணத்திற்கு படிப்பு என்பது. அச்சு வந்த பின்னர்தான் படிப்பு என்று கண்வழிக் காரியம் அறிவு பெறுவதற்கு நெறியாக அமைந்தது. நமது அறிவுக்கூடங்கள், கலாசாலைகள், பல்கலைக்கழகங்கள் எல்லாமே கண், படிப்பு என்ற அடிப்படையில் இயங்குவது எனலாம். அந்தக் காலத்தில் கண் படிப்புக்கு முக்கியம் என்பதைவிட காதுகள் படிப்புக்கு முக்கியம். எனவே நாம் 'படித்தவர்கள்' என்று சொல்வது அந்தக் காலத்தில் 'கேட்டவர்கள்' என்ற சொல்லால் கையாளப்பட்டது. அறிவுக்கு 'கேள்வி' பெருநெறியாகக் கருதப்பட்டது. எனவேதான் செல்வத்துட்ச் செல்வம் செவிச்செல்வம் என்றார் செந்நாப் போதாரும்.
சங்கப் புலவர் பாடும் 'பொலிக பொலிக' !'பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்' என்று பாடியது நம்மாழ்வார் மட்டும் என்று நினைத்தேன். ஆனால் இன்னொருவரையும் அந்த அணியில் சேர்க்க வேண்டும் போல் இருக்கிறது. அவர்தான் பரிபாடலின் முதற்பாடலைப் பாடிய பெருமகனார். எதையோ எதற்கோ முடிச்சு போடுகிறேன் என்றுதானே நினைப்பீர்கள். பொறுங்கள். அப்புறம் நீங்களே சொல்வீர்கள்.திருமாலைப் பாடுகிறார் புலவர் முதல் பரிபாடலில். ஏதோ கோவிந்தா கிருஷ்ணா திருமாலே என்று தனக்குத் தோன்றியதைப் பாடக்கூடாதோ? அது என்ன? வேதம் எப்படி எப்படியெல்லாம் திருமாலைத் துதித்ததோ அப்படியே சாயை பிடித்தா பாடுவது? பிற்காலத்தில் யாராவது ஆரிய மாயை என்று சாடமாட்டார்களோ? சரி பாடத்தான் பாடினாரே இப்படியா அப்பட்டமாக 'நான் வேதங்கள் புகழ்ந்த நெறிப்படியே பாடுகிறேன்' என்று பதிவு செய்து வைப்பது? சரி அது அந்தக்காலம். உள்நோக்கத்துடனான வெற்று அரசியலும், பிளவுகளில் அடைகாக்கும் வெறுப்பின் சூழ்ச்சியும் புலவர்கள் மத்தியில் இல்லாத காலம். மதத்தின் பெயரால் சில விஷமிகள் திரிவினைகள் செய்யத்துணியாத காலம். அவ்வளவு ஏன்? தமிழுக்கு ஒரு நல்லடிக்காலம். தமிழ்ப்புலவர்களும் எம்மொழியும் கற்று, எப்பொருளிலும் பெய்ப்பொருள் காண முயன்ற காலம். சரி நமது கருத்துக்கு வருவோம். ஏன் இவ்வாறு கூறுகிறேன் என்றால், திருமாலைப் பற்றி மறை கண்ட முடிவு, அவன் அன்றலர்ந்த செந்தாமரை அன்ன கண்ணினன், 'தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ' (அந்தப் பரமபுருஷனுக்கு சூரியனால் மலர்ந்த தாமரை போன்ற இரு கண்கள் உள) ---காயாவின் மலர்ந்த பூவை ஒத்தக் கருநிறம் உடையவன் --- அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா என்ற படி திரு விரும்பி வாழும் மார்பினை உடையவன் -- மார்பில் கௌஸ்துபம் என்ற மணியினைப் பூண்டவன் -- நீலமலை ஒன்றைச் செந்நெருப்புச் சூழ்ந்துகொண்டிருப்பது போன்ற பொன்னாலான பீதாம்பரத்தை உடையவன் --- அனைத்தினுள்ளும் அந்தர்யாமியாய் நிறைந்து அனைத்துப் பொருட்களையும் நியமிப்பவனாய் இருப்பவன் -- என்று இவையெல்லாம் வேதங்கள் திருமாலைப் பற்றி உரைக்கும் புகழ். இப்பொழுது சங்கப் புலவரிடம் வருவோம்:எரிமலர் சினைஇய கண்ணை!பூவை விரிமலர் புரையும் மேனியை!மேனித் திரு ஞெமர்ந்து அமர்ந்த மார்பினை!!மார்பில் தெரிமணி பிறங்கும் பூணினை!!மால்வரை எரி திரிந்தன்ன பொன்புனை உடுக்கையை!!(ஞெமர்ந்து -- பரந்து, விரும்பி, நிறைந்து)சரி இத்தனையும் சங்கப் புலவர் பாடிவிட்டுப் பேசாமல் போகக்கூடாதா? நாங்கள் பாட்டுக்கு இப்பொழுது, இவர் பாடித்தான் வேதமே அதைக் காப்பியடித்தது என்று சொல்லி மகிழ்ந்து போவோமே! என்ன செய்வது? அது சங்கப் புலவருக்கு உடன் பாடில்லை. உடனேயே கூறுகிறார்,சேவல் அம் கொடியோய் !நின் வலவயின் நிறுத்தும்ஏவல் உழந்தமை கூறும்நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே!!!சரி ஏதாவது தெரியாமல் சொல்லியிருப்பார், போகப் போகப் பார்க்கலாம் என்றால் இவர் என்ன ஆழ்வாரா அன்றேல் சங்கப் புலவரா என்று வேறுபாடு தெரியாத அளவிற்கு அவருடைய வரிகள் சுழலிடுகின்றன. இப்படியே போனால் ஆழ்வார் சங்கப் புலவரோ என்ற நிலைக்குத்தான் வருவோம். ( அய்யய்யோ யாரும் கோபத்தில் முறைக்காதீங்கோ!) புலவரின் பொற்குரல் தொடர்கிறது:'பொருவேம்' என்றவர் மதம் தபக் கடந்து,செருமேம்பட்ட செயிர் தீர் அண்ணல் !இருவர் தாதை! இலங்கு பூண் மாஅல்!தெருள நின் வரவு அறிதல்மருள் அறு தேர்ச்சி முனைவர்க்கும் அரிதே!!'கூடாரை வெல்லும் சீர் கோவிந்தன்' என்றாள் சங்கத் தமிழ்மாலை முப்பதும் தந்த கோதை.அது என்ன இருவருக்கும் மட்டும் தாதை?'நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே நாராயணாத் ருத்ரோ ஜாயதே' (நாராயணோபநிஷத்) 'நான்முகனை நாராயணன் படைத்தான், நான்முகனும் தான்முகமாய்ச் சங்கரனைத் தான் படைத்தான்' என்று திருமழிசையார் தமிழ்ப்படுத்திய வேத வாக்கியத்தைச் சங்கப் புலவர் இரு சொற்களிடைத் தேக்கி வெளியிடும் அழகே தனி! 'இருவர் தாதை'. சரி அவ்வாறு சொன்னவுடன் அது என்ன 'இலங்கு பூண் மா அல்' ? சாந்தோக்கியம் கூறுகிறது, 'ஆப்ரணகாத் ஸர்வ ஏவ ஸுவர்ண:' 'நகத்திலிருந்து எல்லாம் பொன்மயமானவன்'.அடுத்த வரிதான் மிக உச்சக் கட்டமான வரி! 'தெருள நின் வரவு அறிதல் மருளறி தேர்ச்சி முனைவர்க்கும் அரிதே'. 'வரவு அறிதல்' என்றால்? அவதாரக் கொள்கை என்பது திருமால் நெறிக்கே உரித்தான கருத்து. உயர்வற உயர்நலம் கொண்டவன், ஒத்தாரை மிக்காரை இலையாய மாமாயன் எப்படி எந்நின்ற நீர்மையுமாய்ப் பிறக்கிறான்? என்பது ஞானிகளுக்கும் பெரும் புதிர் என்கிறது திருமால் நெறி. இனிவருவது சங்கப் புலவர் உரைக்கும் திருமால் நெறி:அருமை நற்கு ஆயினும்ஆர்வம் நின்வயின் பெருமையின்,வல்லாய்! யாம் இவண் மொழிபவைமெல்லிய எனாஅ வெறாஅதுஅல்லி அம் திரு மறு மார்ப!நீ அருளல் வேண்டும்சரி தன்னோடு விட்டாரா? சுற்றம் புடை சூழ, உற்றார் நட்டார் அனைவரையும் சேர்த்துத்தானே சங்க காலத்திலிருந்து கோதை உரைத்த மறைத்தமிழ் வரையில் பழக்கம். கூட்டு சேர்த்துக் கொண்டுதானே கோவிந்தனை வழிபடச் சொல்லுகிறாள் கோதை. சங்கப் புலவர்,ஆங்கு,காமரு சுற்றமொடு ஒருங்கு நின் அடியுறையாம் இயைந்து ஒன்றுபுவைகலும் 'பொலிக' என,ஏமுறு நெஞ்சத்தேம் பரவுதும் ---வாய்மொழிப் புலவ!நின் தாள் நிழல் தொழுதே.கடல்வண்ணன் பூதங்கள் மலியப் புகுந்து உழிதரக் கண்டேன் என்று இறும்பூது எய்திய நம்மாழ்வார் சங்க காலத்தை நினைத்துத்தான் பாடினாரோ? 'பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்'
> கடல்வண்ணன் பூதங்கள் மலியப் புகுந்து உழிதரக் கண்டேன் என்று
> இறும்பூது எய்திய நம்மாழ்வார் சங்க காலத்தை நினைத்துத்தான்
> பாடினாரோ? 'பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்'
எல்லா ஆழ்வார்களும் இறைவனுக்கு மங்களாசாசனம் செய்தனர். எம் முதல்தாய்
சடகோபனோ நம்மைப் போன்ற அடியார்க்கு மங்களாசாசனம் செய்தார். அவர் அப்படி
'பொலிக, பொலிக, பொலிக போயிற்று வல்லுயிர் சாபம்' என்று
முழங்கவில்லையெனில் இன்று நமக்கேது தெம்பு?
எனக்கு பல சமயம் தோன்றும் எதை வைத்து ஒரு இலக்கியத்தின் வயதை நிர்ணயம்
செய்கின்றனர்? சங்கத் தமிழும், கொள்கையும், ஆழ்வார் பாசுரங்களும்
அப்படியே - சில நேரங்களில் வரிக்கு, வரி (உம்.திருமழிசை) ஒத்துப்
போகின்றனவே. 'சங்கத்தமிழ்' என்று சொன்ன ஆண்டாள் வாய் பொய்க்குமோ?
மிக அருமையாகப் போகிறது ரங்கன். மேலும் சொல்லுங்கள்.
கண்ணன்
நாவிதர் மற்றும் மருத்துவர் எனப்படுகின்ற சாதியினர், அம்பட்டர் என்ற பெயரில் அந்தணப் பிரிவில் இருந்துள்ளனர்.
இன்றைக்கும் வைணவக் கோயில்களின் பூசாரிகள் 'பட்டர்' என்றே அழைக்கப் படுகின்றனர்.
அமாத்தியரான அம்பட்டர்கள் குறித்து தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர், "அமாத்திய நிலையும் சேனாபதி நிலையும் பெற்ற அந்தணாளர்க்கு அரசர் தன்மையும் வரைவில் வென்றவாறு" என்கிறார்.
ஊர்ப் பார்ப்பான்
அகநானூற்றில் "வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த வளை" என்ற 24 ஆம் செய்யுளுடக்கு, அந்நூல் பழைய அரும்பதவுரைக்கார்ர் – வேளாப் பார்ப்பான் – யாகம் பண்ணாத ஊர்ப் பார்ப்பான்; இவர்களுக்குச் சங்கறுக்கையுந் தொழில்" என்று எழுதியுள்ளார்.
இதனால், வைதிகச் சடங்கு நடத்தாத பிராமணரை "ஊர்ப்பார்ப்பான்" என்பது அக்கால வழக்கென்பது தெரியலாம். ஊர்ப்பார்ப்பான் என்பதனால், இவர்கள் மேற்கொண்ட தொழில், நகரவதிகார முதலிய இலௌகிக விருத்திகள் என்று சொல்லலாம். முதலிராசேந்திரன் காலத்தில் வரையப்பட்ட (தீர்க்காலிதிரு) வல்லத்துச் சாஸனமொன்று – ஊரார் சொல்ல எழுதினேன்; இவ்வூர் "ஊர்க்காணத்தான்" ஊர்ப்பார்ப்பான் பரதயன் கிழவன் ஈசுவரசன்மன்"(S,I.I.IV-90)எனக் கூறுவது மேலே நான் கூறிய கருத்தை நன்கு விளக்குதல் காணலாம்.
அகநானூற்றுக் கூற்றால், "சங்கறுப்ப தெங்கள் குலம்" என்று கூறிய நாக்கீரர், ஊர்ப்பார்ப்பார் குலம் இத்தகையது போலும். "சிறந்த கொள்கையொடு அணிவளை போழுநர்" என்று சாத்தனார் மணிமேகலையில் கூறுவது இவ்வூர்ப் பார்ப்பாரது குலவொழுக்கத்தை நினைத்தென்று கருத இடமுண்மையுங் காண்க.
ஐயங்கார்
பூணூல் அணியும் பழக்கம் ஆரியர்களுடையது அல்ல. ஆப்பிரிக்காவின் எகிப்பது நாட்டிற்கு ஆரியர்கள் செல்வதற்கும் முற்பட்ட காலத்தைச் சேர்ந்த பாறை ஓவியங்கள் கிடைத்துள்ளன. அதில் உள்ள உருவங்கள் சிலவற்றில் பூணூல் போன்று மார்புக்குக் குறுக்கே வரையப்பட்டுள்ளது. அது பூசாரிகளின் ஓவியங்களாக இருக்கலாம் என அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், பூணூல் அணிதல் என்பது சூரிய வழிபாடு தொடர்புடைய ஒரு மதச் சின்னம். இஸ்லாமியர்கள் தலையில் குல்லாய் அணிவது போல இது ஒரு மதச் சின்னம் அவ்வளவே. இது குறித்து விரிவான விளக்கங்கள் உண்டு. மேலும் தமிழகத்தில் (ஆரியர்கள்) பார்ப்பனர்கள் மட்டும் பூணூல் அணிபவர்கள் அல்ல. தொல்காப்பியம் சொல்லுகின்ற முதல் மூன்று வர்ணத்தவருமே பூணூல் அணிபவர்கள்தான். இன்றைக்குத் தாழ்த்தப்பட்டவர்களாகச் சொல்லப்படும் பறையர் சமூகத்தவர், தாங்கள் பூணூல் அணிவது குறித்து இன்றுவரையிலும் பாடிவரும் பாடல்களை வரலாறு தெரிந்தவர்கள் அறிவார்கள்.
"முந்திப் பிறந்தவன் நான்
முதல் பூணூல் தரித்தவன் நான்
சங்குப் பறையன் நான்
சாதியில் மூத்தவன் நான்"
- என்கிறது அப்பாடல்.
மேலும், மரபாக இருந்துவரும் ஞானவெட்டியார் பாடல்கள்,
"... ... பூணூலந்
தரணிமுத லென்பறையில் தழைத்த தாண்டே"
"பூணூல் தரித்துக் கொள்ளுவோம் - சிவ சிவ
பொறியுமைம் புலனையுந் தொழுது கொள்ளுவோம்
வேண விருதுகளும் விகிதமாய்
வெண்குடை, வெண்சாமரமும் பிடித்துக் கொள்வோம்"
"பூணூல் பிறந்ததெங்கே -சிவசிவ"
"நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப" என்ற பாடல் வரியிலுள்ள நான்மறைகளும் (ரிக், யஜுர், சாம அதர்வண) வேதங்கள் தான் என்று எங்கே சொல்லப்பட்டுள்ளது. நான்மறை என்றால் அந்த ஆரிய வேதங்களைத் தான் குறிக்கும் என்பது சிலர் விட்ட புளுகு. இப்படியே போனால் நான்கு என்று தமிழில் குறிப்பிடுவதெல்லாம் ஆரிய வேதங்கள் நான்கையும் தான் குறிக்கும் என்று வாதாடத் தொடங்கி விடுவார்கள் போலிருக்கிறது.
சிவவழிபாடு தமிழர்களுடையது, சிவன் என்ற சொல்லும் தமிழ்ச்சொல்லே, ஆகமங்களும் முதலில் தமிழில் தானிருந்து சமக்கிருதத்துக்கு மொழி பெயர்க்கப்பட்டு திருகு தாளங்கள் செய்யப்பட்டன. ஆரிய வேதங்களை விடத் தமிழில் நான்கு மறைகள் இருந்தன என்பதற்கு ஆதாரங்கள் திருமந்திரத்திலும், திருமறைகளிலும் உண்டு.
சில சங்ககாலப் பாடல்கள் நாயன்மார்களின் பக்திக்காலத்தைச் சேர்ந்தவை, சில பாடல்கள் ஞானசம்பந்தருக்குப் பிந்தியவை அதனால் தான் சில சங்ககாலப் பாடல்களில் நாயன்மார்களின் பக்தி வாடை வீசுகிறது.
"முத்தமிழ் நான்மறை முளைத்த அருள்வாக்கால் விதி கூறி" என்கிறது கல்லாடம், இங்கு முத்தமிழாலான நான்மறையைப் பற்றிக் குறிப்பிடுகிறார் கல்லாடனார்.
"முத்தமிழ் நான்மறை ஞானசம்பந்தன்" என்கிறார் திருஞானசம்பந்தர்
"வான் தமிழ்மறை யோர்க்கு வானுரை கொடுத்த
தீந்திறல் நெடுவேல் சேரலன் காண்கு" என்கிறது சிலப்பதிகாரம். இங்கு தமிழ்மறையை மட்டுமல்ல அத் தமிழ்மறையை ஒதுபவர்களைத் தமிழ்மறையோர்கள் என்கிறார் இளங்கோவடிகள்.
"தாங்கி மிகைமை வைத்தான் தமிழ்சாத்திரம் " என தமிழ்சாத்திரம் தந்த சிவனைப் போற்றுகிறார் திருமூலநாயனார்/
"சதாசிவ தத்துவம் முத்தமிழ் வேதம்" (76) என்று முத்தமிழ் வேதத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார் திருமூலநாயனார்
இது மணிப்பிரவாளம் இல்லையே! சுத்தமான தமிழ்க் கட்டுரை. வடமொழி மேற்கோள்
காட்டுகிறார். அவ்வளவுதான்.
மணிப்பவளம் என்பது அறிஞர் மொழி, புலவர் மொழி, கல்விமான்கள் மொழி. சென்னை
ஆட்டோ ஓட்டுநர் பேசும் மொழியை நாம் மணிப்பவளம் என்று சொல்வதில்லை :-)
மணிப்பவளம் என்ற சொல்லிற்கேற்ப மணி, மணியான செந்தமிழ் சொற்கள், பவளம்
போன்ற வடமொழி சொற்கள் இடையில். ஒரு ஆபரணம் அது. மணிப்பவளத்தைப் புரிந்து
கொள்ளும் வல்லமையும், புலமையும் பெற்றோர் மின்தமிழ் புலத்தில் அரிது.
ரங்கன் போன்றோர் அரிதாகி வருவது மரபை இழப்பது போல் படுகிறது...
கண்ணன்
என்ன இப்படி அந்தர்பல்டி? சுத்தமான தமிழ்க் கட்டுரை எப்படி
மணிப்பவளமாகும்? மணிதானே உண்டு. பவளம் எங்கே? பெரியவாச்சான் பிள்ளை
வியாக்கியானம் படித்துப் பாருங்கள் இல்லை வேறு ஏதேனும் வேதாந்த உரை
படித்துப்பாருங்கள். மணிப்பவள நடையின் ஆழ்ந்த பொருள் விளங்கும்.
ஏன்? திருப்புகழ் பல மணிப்பவளம்தான்.
அபகார நிந்தைபட் ...... டுழலாதே
அறியாத வஞ்சரைக் ...... குறியாதே
உபதேச மந்திரப் ...... பொருளாலே
உனைநானி னைந்தருட் ...... பெறுவேனோ
இபமாமு கன்தனக் ...... கிளையோனே
இமவான்ம டந்தையுத் ...... தமிபாலா
ஜெபமாலை தந்தசற் ...... குருநாதா
திருவாவி னன்குடிப் ...... பெருமாளே.
அதுதான் அவரும் பெருமாளே என்கிறார் போலக்கிடக்கு :-)
கண்ணன்
மருமானைப் பாடுகிறேன் என்று பாடலுக்குப் பாடல் மாமாவைப் பாடுவார் :-)
பெருமாளே! பெருமாளே!!
கண்ணன்
2008/7/26 anupam srivatsav <anupam.s...@gmail.com>:
ஜாதி வைத்து குழப்படி செய்து எம் நோக்கை திசை திருப்புவோரை மின் தமி
குழுமத்திலிருந்து விலக்க முடிவு செய்துள்ளோம்.
காலம் விரயமாகிப் போய்க்கொண்டிருக்கிறது. மின்பரப்பில் எத்தனையோ தளங்கள்,
குழுமங்கள் அங்கு போய் பெய்யட்டும் இந்த அமிலமழை.
கண்ணன்
Indian Institute of Science - Super Computer Division ல் வேலை
பார்க்கும் ஓர் விஞ்ஞானியுடன் பேசும் வாய்ப்பு ஒருமுறை கிடைத்தது.
கட்டுக்குடுமி, பஞ்ச கச்சம். வித்தியாசமான கெட்அப். அவர் சொன்னார்
வெள்ளையனுடன் இனிமேல் வேதம் பேசுவதில்லை என்று. அதாவது ஆங்கில
ஏகாதிபத்திய காலத்தில் இந்தியர்கள் போற்றி வழிபடும் மறை பொருளைத்
திரித்து மாசு படுத்தி அவர்கள் எண்ணத்தில் குழப்படி செய்யும்படி ஏவப்பட்ட
சில ஏஜெண்டுகள் செய்துவிட்ட திருகுதாளங்கள் 21ம் நூற்றாண்டில்
எதிரொலித்துக் கொண்டிருப்பதே அதற்குச் சான்று.
சமிஸ்கிருதம் இந்தியமொழி. நம் தந்தையர் மொழி. கம்பனும், நம்மாழ்வாரும்,
திருமழிசை ஆழ்வாரும், ஞானசம்பந்தனும், அருணகிரியும் அறிந்த மொழி. இன்றும்
தமிழ் மண்ணில் வாழும் மொழி (இராஜபாளையத்திற்கு அருகில் 'ராஜு' என்று
சொல்லக்கூடிய மறவர்கள் இன்றும் பேசி வருகிற மொழி). அதைக் கற்பதொன்றும்
அரிதான செயலல்ல. பண்டிதமணி கதிரேசன் செட்டியார் கற்றுப் புலமை
பெறவில்லையா?
அப்படிக் கற்று, அறிந்த பின் வாது செய்ய வந்தால் சரி. அந்த
மொழிப்பரிட்சயமே இல்லாமல் வெள்ளையன் சொன்ன மொழிபெயர்ப்பை வைத்துக் கொண்டு
வாது செய்ய வந்தால் என்ன செய்வது? திருமூலர், ஞானசம்மந்தன், கம்பன்,
நம்மாழ்வார் இவர்களும் வேதப்பொருள்தானே சொல்லியிருக்கிறார்கள். அதை
மேற்கோள் காட்டிப் பேச வேண்டியதுதானே? விஷயம் அறிந்தோரின்
நூல்களிலிருந்து எடுத்துப்பேச வேண்டும் என்பது புலவர் தொழில்.
இதை மனதில் வைத்துத்தான் அந்த பெங்களூரூ விஞ்ஞானி அப்படி என்னிடம்
சொன்னார். இந்தியாவில் இருந்து கொண்டு இந்திய மொழியின் ஞானத்தை அறிய
ஆங்கில வழி வரவேண்டியுள்ளதே என்பதே இங்குள்ள் அவலம்.
கண்ணன்
2008/7/27 இரவா <vasude...@gmail.com>:
> 1. It is error to suppose that the pure Aryan race exists any where. The
> Aryans from very early time were extensively eclectic, and this eclecticism
> was the secret of their cultureal success. They freely mix with other races.
> This happened in Europe as well as in India-ibid.
>
ஜம்பு நாதன் என்ற அறிஞர் ஒருவர் தமிழிலேயே வேதத்தை மொழி பெயர்த்து உள்ளார். இவர்கள் அதையாவது படித்து விட்டு பேசலாம்.
என்னதான் முயன்றாலும் மேனாட்டவரால் வேதத்தின் பொருளை உணர்தல் அரிது. சம்ஸ்கிருதம் தெரிந்தவர்கள் கூட சரியாக பொருள் சொல்ல இயலாது. அதற்கு சம்ஸ்கிருதத்துடன் மீமாம்ஸை என்ற சாத்திரம் படிக்க வேண்டும். அபோது கூட சில இடங்கள் இலைமறை காய் மறையாகவே இருக்கும். பார்வைக்கு ஏற்ப வியக்கியானம் செய்யவும் இயலும்.
அதனால்தானே அது மறை!
இது உங்களுக்கே வேடிக்கையாக இல்லையா?
முன்பு கோடி காட்டினேன். ஆண்டாளின் பாசுரங்கள் தமிழ்தான். ஆனால் அதை ஏன்
'வேதத்தின் சாரம்' என்று சொல்லுகிறார்கள் என்று. அதுவொரு துறை. அத்துறை
சார்ந்த அறிவும், மொழிநடையும், பரிட்சயமும் வேண்டும்.
ஆங்கிலம் தெரியும் என்பதற்காக ஒருவர் கற்றை இயல் விதிகளை இப்போதே இங்கேயே
விளக்கு என்று பொது மன்றத்தில் கேட்பதில்லை. முதலில் பௌதீகம் படிக்க
வேண்டும், B.Sc., M.Sc வரையிலாவது அத்துறை சார்ந்த அறிவை உருவாக்கிக்
கொள்ள வேண்டும். பின் அத்துறை சார்ந்த வல்லுநர்கள் உள்ள குழுவில்
சேர்ந்து அது பற்றி மேலும் அலச வேண்டும். இதுதான்முறை.
ஒரு மரியாதையினால், மதிப்பினால் உங்களுக்கு சிலர் கோடி காட்டத்தான்
முடியும். பல்லாயிரமாண்டு வேள்வியின், தேடலின் முடிவை சட்டு புட்டுன்னு
சொல்லிப் போ! என்று எப்படிக் கேட்க முடியும்?
வெறும் பெருமைக்காகச் சொல்லவில்லை. தேட்டமிருந்தால் போய் பாருங்கள். விடை
கிடைக்கும். இது ஆச்சார்ய பீடமல்ல. சின்ன மின்குழு.
கண்ணன்
தேவூ சார், இதெல்லாம் புகை மனிதர்களுடன் சண்டை போடுவதுபோல் மிகுந்த ஆயாசத்தைக் கொடுக்கக்கூடியது. வாய்க்கு வந்ததைப் பேசுபவர்க்கு எந்த உழைப்பும், படிப்பும், அறுதிப்பாடும் தேவையில்லை. தான் கூறியதை வைத்து யாராவது அறிஞர்கள், 'என்ன இப்படிக்கூறுகிறார்களே' என்று எள்ளி நகையாடினால் வாய்க்கு வந்ததைப் பேசுவோர்க்கு அதைப்பற்றியெல்லாம் வெட்கமே கிடையாது. எப்படியோ தங்கள் மேல் பிறருடைய கவனம் திரும்பினால் சரி.இப்படித்தான் வேறொரு குழுமத்தில் ஒரு அறிவு சிகாமணி 'நான்மறை என்றால் சைவத்தில் வேறு நான்மறை. அது வடமொழி நான்மறையைக் குறிக்கவில்லை' என்று ஏதேதோ பிதற்றினார். அவருக்குப் பதிலாக திருஞானசம்பந்தர் திருமுறையில் இருக்கும் பகுதிகளை எடுத்துக்காட்டியும், திருமந்திரப் பகுதிகளை எடுத்துக் காட்டியும் விளக்க முயன்றேன். அதில் நவ ஆகமம் என்று வருவதைப் பார்த்து, 'ஆகமம்தான். மறை கிடையாது' என்று மறுபடியும் குதித்தார். சரி மரை கழண்டால் நாம் என்ன செய்யமுடியும்? நவ ஆகமத்தில் முக்கியமானது காமிகா ஆகமம். அது 1890 களில் பதிப்பாகியுள்ளது. அதிலிருந்து பகுதிகளை எடுத்துக்காட்டினேன். உடனே சுமேரியா, கணவாய், என்று சம்பந்தமில்லாமல் ஆரம்பித்துவிட்டார். இவர்களிடம் பேசுவதற்குத் தேவையானது ஆர்வமோ, அறிவோ, சரியான தகவல்களோ, குறிப்புகளோ அல்ல. வெறும் வேடிக்கை பார்த்து ரசிக்கும் மனோபாவம் இருந்தால் போதும். அது என்ன நான்மறை சம்பந்தமான பகுதிகள் என்று நீங்கள் கேட்பதற்கு முன்னரே நானே கீழே தந்துவிடுகிறேன :---'வேதத்தை விட்ட அறம் இல்லை வேதத்தின்ஓதத்தகும் அறம் எல்லாம் உள; தர்க்கவாதத்தை விட்டு, மதிஞர், வளமுற்றவேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே.(திருமந்திரம் 51)'இந்த வேதம் வேற! அந்த வேதம் வேற! என்று பேதையர் கூறித்திரியப் போகின்றனரே என்று திருமூலரே அடுத்து வருகின்ற பாடல் ஒன்றில் தெளிவாக்குகிறார்.'இருக்கு உருவாம் எழில் வேதத்தின் உள்ளேஉருக்கு உணர்வாய் உணர் வேதத்துள் ஓங்கிவெருக்கு உரு ஆகிய வேதியர் சொல்லும்கருக் குருவாய் கண்ணனும் ஆமே '(திருமந்திரம் 53)சரி திருமந்திரம் ஆகம சுருக்கம். தேவாரத்தில் மூவர் முதலிகள் பாடியுள்ளனரா வேதத்தின் பெருமையை? என்றால், திருஞான சம்பந்தர் தாம் பாண்டிய நாட்டுக்குப் போக முற்படுவதன் நோக்கத்தைப் பத்துப் பாடல்களில் தெரிவிக்கிறார். இதற்கு என்ன செய்ய?'வேத வேள்வியை நிந்தனை செய்து உழல்ஆதமில் அமணொடு தேரரைவாதில் வென்றழிக்கத் திருவுள்ளமே....வைதிகத்தின் வழியொழுகாதஅக்கைதவம் உடைக் காரமண் தேரரை எய்தி வாது செயத் திருவுள்ளமே....மறைவழக்கம் இலாத மாபாவிகள்பறி தலைக் கையர், பாயுடுப்பார்களைமுறிய வாது செயத் திருவுள்ளமே...அந்தணாளர் புரியும் அறுமறைசிந்தை செய்யா அருகர் திறங்களைச்சிந்த வாது செயத் திருவுள்ளமே...வேட்டு வேள்வி செயும் பொருளை, விளிமூட்டு சிந்தை முருட்டு அமண் குண்டரைஓட்டி வாது செயத் திருவுள்ளமே ....அழலோம்பு மறையோர் திறம்விழலது என்னும் அருகர் திறத்திறம்கழல வாது செயத் திருவுள்ளமே..'(தேவாரம், திருஞான சம்பந்தர் திரு ஆலவாய் 108, 3956 -- 3962)அதெல்லாம் என்ன நூற்சான்று இருந்தால் என்ன? 'அது வேற தேவாரம், அது வேற திருஞான சம்பந்தர், அது வேற மறை ' என்று எதையாவது உளறிக்கொட்டினால், எதிராளி ஒரு சமயம் அலுத்துப் போய் 'அடப் போய்யா வெட்டி வேலை' என்று பின்வாங்கினால், அதுதான் இவர்கள் விரும்புவது. இவர்களை விடுங்கள்.நீங்கள் வாருங்கள் இழையின் முக்கியக் கருத்திற்கு.
இரண்டு மொழிக்கும் நிச்சயம் சம்மந்தமுண்டு என்றுதான் வேதாந்த தேசிகரும்
சொல்கிறார். இரண்டிற்குமிடையில் கொடுக்கல் வாங்கல் நிறைய உண்டு.
நீங்களெல்லாம் சேர்ந்து அந்த ஒருமையைத் தேடித்தாருங்கள்! மிகவும்
மகிழ்வாக இருக்கும்.
கண்ணன்
//On Jul 26, 1:21 pm, "Kannan Natarajan" <thara...@gmail.com> wrote:(நன்றி: திரு இராம.கி)//
ரகரத்தை உள்நுழைத்து தமிழ்ச் சொற்களைத் தன்வயம் ஆக்குவது வடமொழிக்கு
உள்ள வழக்கம்.
'உபஸர்கம்' (முன்னொட்டு)
ப்ர, பரா,அப,ஸம்,அநு,அவ,நிஸ்(நிர்), துஸ்(துர்),
வி,ஆ,நி,அதி4,அபி,அதி,ஸு,உத்,அபி4,ப்ரதி,பரி,உப
ஆகியவை முன்னொட்டுகள். 'உபஸர்கம்' எனும் சொல்லிலுள்ள 'உப' என்பதும் ஒரு
முன்னொட்டு தான்.
2008/7/27 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
> இப்படியே சொல்லிட்டு இருந்தால் எப்படி.இது உங்களுக்கே வேடிக்கையாக இல்லையா?
> அப்படி வேதத்தில் ( நான்மறைகள்) என்ன இருக்குணு சொல்லுங்க.
>
முன்பு கோடி காட்டினேன். ஆண்டாளின் பாசுரங்கள் தமிழ்தான். ஆனால் அதை ஏன்
'வேதத்தின் சாரம்' என்று சொல்லுகிறார்கள் என்று.
2008/7/27 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
> இப்படியே சொல்லிட்டு இருந்தால் எப்படி.இது உங்களுக்கே வேடிக்கையாக இல்லையா?
> அப்படி வேதத்தில் ( நான்மறைகள்) என்ன இருக்குணு சொல்லுங்க.
>
ஆங்கிலம் தெரியும் என்பதற்காக ஒருவர் கற்றை இயல் விதிகளை இப்போதே இங்கேயே
விளக்கு என்று பொது மன்றத்தில் கேட்பதில்லை. முதலில் பௌதீகம் படிக்க
வேண்டும்,
அன்பின் வேந்தரே:
நாதமுனிகள் காலம் தொட்டு வழி வழியாய் வேத, உபநிடதங்களையும் திராவிட
வேதசாரமான ஆழ்வார்களின் அருளிச்செயல்களையும் முறையாக ஆய்ந்து துய்யும்
ஒரு போக்கு தமிழகத்தில் காணக்கிடைக்கிறது. சென்னைப் பல்கலைக்கழகம்
ஈட்டின் தமிழாக்கத்தை புருஷோத்தம நாயுடுவின் தமிழ் கொண்டு வெளியிட்டது.
காலட்சேபம் என்றொரு வழக்கம் இருக்கிறது. அதில் நாலாயிர திவ்யப்பிரபந்தம்
அக்கு வேறு ஆணி வேறாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு சொல்லிற்கும் விளக்கம்
சொல்லி மகிழும் ஒரு நீண்ட சம்பிரதாயமும் உள்ளது.
உபன்யாசம் என்றொரு வழக்குமுண்டு. இது, காலட்சேபத்தின் சாரத்தை சில
மணிகளில் வழங்கும் உரைகள். பெரிய, பெரிய ஜாம்ப்வான்களின்
உபன்யாசங்களையெல்லாம் காலம் பதிக்காமல் கொண்டு போய்விட்டது. சமகால
அரங்கில் இரண்டு பேர் ஜொலிக்கிறார்கள். ஸ்ரீரங்கம் ஸ்ரீகிருஷ்ணப்பிரேமி
அண்ணா மற்றும் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள். வேளுக்குடியின் உரைகள் பல
தொலைக்காட்சிகளில் காணக்கிடைக்கின்றன. கிருஷ்ணப்பிரேமியின் உபன்யாசங்கள்
மிகவும் முறையாக ஆடியோ கேசட்டுகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில்
வாங்கலாம்.
ஆண்டாள் பற்றிய ஒரு அழகிய உபன்யாசம் பிரதிவாதி பயங்கரம்
அன்னங்கராச்சாரியர் சுவாமிகளால் "ஆண்டாள் திருக்கல்யாணம்" என்ற தலைப்பில்
கீழ்க்காணும் உரலில் கேட்கக்கிடைக்கிறது.
http://www.acharya.org/mmedia/audio/upanyasam/index.html
ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் எனும் http://www.acharya.org/whatsnew.html
இத்தளத்தில் முறையாக நாலாயிரத்திற்கும் உரை சொல்லும் ஒரு பதிவு
இருக்கிறது. மதுரகவிதாசன் என்பவர் எளிய, அழகிய தமிழில் உரை சொல்லுகிறார்.
கேட்டு அனுபவியுங்கள்.
கிருஷ்ணப்பிரேமி அண்ணா பற்றிய விவரங்களை தேவராஜ் சார் மேலும் சொல்லலாம்.
தேடும் உள்ளம் வரவேண்டும். அள்ள, அள்ளக் குறையாத அளவு அமுதப்பிரவாகம்
காத்திருக்கிறது.
சங்கம் தொட்டு வரும் மரபு பற்றிய மேல் விவரங்களை அரங்கனார் அருளவேண்டும்.
மிகவும் ஆச்சர்யமான ஒரு தொடர்ச்சி உள்ளது.
"செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்"
கண்ணன்
பிகு: லண்டன் கல்யாணசுந்தர குருக்கள் ஒரு மின்னுலகத்தேனீ. அவருக்கு
இன்னும் பல தளங்கள் தெரியும். எனக்கு அவ்வப்போது அருமருந்து தருபவர்
அவரே!
வருக, வருக.
நீங்களோர் மின்பதிவுத் தாரகை.
நீங்களும் அரங்கனாரும் சேர்ந்து ஒரு Pan Indian paranoma தந்து அதில்
நம்மவரின் அளப்பரிய பங்களிப்பைக் காட்டி எப்படி இந்திய ஞானம் என்பது
சிறுதுளி பெருவெள்ளம் (I mean regional contribution) போல் இந்திய
மண்ணில் உருக்கொள்கிறது என்று இங்கு காட்ட வேண்டும்.
ஆண்டாள் சொல்வது போல் கூடி நின்று
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்!!
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!
கண்ணன்
2008/7/29 ஜடாயு <jata...@gmail.com>:
மறையின் உட்பொருளை விளக்குவது கடினம் என்றுதான் ஒப்புக்கொள்கிறார்களே
ஐயா!
விடாமல் கேட்கிறீரே.
--
:-)
இதனால்தானோ கிருஷ்ணனை மாயாவி என்று வைத்தனர்?
வேந்தன் இது நிச்சயம் "ஏமாற்று வேலை"தான். எதையும் நம்ப வேண்டாம்! சுத்த
சத்வ நிலை வரும்வரை!!
ஆனால் எங்களை நிரூபிக்கச் சொல்லாதீர்! நாங்கள் யாரும் இராமகிருஷ்ணர் இல்லை :-))
கண்ணன்
> சொல்லமாட்டேன் கண்ணன்.
> வேதத்தில் இது இருக்கு என்று நீங்கள் சொல்லாதவரையில்.
வேதத்தில் 'அது' இருக்கு என்று சொல்லவில்லை. வேதவே விக்கித்துப்போய்
நிற்கிறது என்றுதான் சொல்கிறோம் :-))
கண்ணன்
Narayanan Kannan wrote:
>
> ஏன்? திருப்புகழ் பல மணிப்பவளம்தான்.
அன்பின் ஹரி:
திரும்ப ஆரண்யவாசம் வேண்டாம் :-) நீங்கள் எழுதுங்கள். தமிழ்ச் சுவை
அறிந்தால்தானே அதைக் காக்க வேண்டுமென்ற புத்தி வரும்.
> திருப்புகழில் சுமார் 60 சதம் தமிழ்தான், தமிழ்தான், தமிழ் மட்டுமேதான்.
> ஆம்ம்ம்மாம்...செந்தமிழாலே பகரார்வமீ அப்படின்னு முருகனிடம் கேட்டுக் கொண்டவர்
> எங்காளு. அந்தப் பாட்டைத்தான் கொஞ்சம் பாருங்களேன்.
>
ஹா! ஹா!!
எங்க அக்கா இந்தப்பாட்டையெல்லாம் பாடுவார்கள் சின்ன வயதில். என்னதான்
சொன்னாலும் அதிலே ஒரு சுகம் இருக்கு ஐயா. இவரின் சந்தத்திற்கு நிகர்
வேறுயார்?
கண்ணன்
கொஞ்சம் அண்ணாண்ட போனா எழுத ஆரம்பிச்சவரு ஆப் ஆய்டாரு பாருங்க.
அதான். வேற ஒண்ணுமில்லே!
தப்பா எளிதி இர்ந்தா மன்னாப்பு கேட்டுகிறேன்.. இன்னா?
திவா
ஜாம்பஜார் ஜக்குவ எங்கியாச்சும் பாத்தீங்களா?
2008/7/31 Hari Krishnan <hari.har...@gmail.com>:
> தலைப்பை விட்டு தள்ளிப் போதல், statutory warning என்றெல்லாம்
> அச்சுறுத்துகிறார்கள். நானும் பத்து வருஷமாய் மின்மடல் குழுக்களில் குப்பை
> கொட்டி, அலுத்து ஒதுங்கி, ஏதோ கண்ணபிரான் திருவாக்கால் திரும்ப வந்தவன்தான். .....
> வேணா. அப்பாலிக்கு அல்லாம் தலப்பு உட்டு அன்னான்ட போய்ட்ட அப்டீன்னு
> மொலுமொலுன்னு புட்ச்சிக்குவாங்கோ... எனுக்கு இந்த குயு பத்தி அன்டர்ஸ்டான்டிங்
> ஆன அப்பாலிக்கி ரைட்டிங் பண்றதா வேணாவா அப்டின்னு பாத்துக்கலாம்.
--
My blogs:(all in Tamil)
http://anmikam4dumbme.blogspot.com/
http://nallaseithi.blogspot.com/
http://kathaikathaiyaam.blogspot.com/
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
ஹரி வாத்யாரே! உங்களுக்கு தெரியாததா!
ஜாம்பஜார் ஜக்குவ எங்கியாச்சும் பாத்தீங்களா?
இவ்வருடம் சென்னை வந்த போது எப்போதோ குழந்தையில் பார்த்த ஜக்கு வந்து
நின்றான். அவன் அக்காள் சக்குவும் வந்திருந்தாள்.
பதவுரை: ஜக்கு = ஜகன்நாதன், சக்கு = சகுந்தளா
பிகு: சந்தோஷி எனும் அழகான பெயர் "சுக்கு" என்றாகிவிட்ட மர்மத்தை
குருக்கள் ஐயா வீட்டில் பார்த்தேன் :-))
2008/7/31 Hari Krishnan <hari.har...@gmail.com>:> ஜாம்பஜார் ஜக்குவுக்கு ஏதோ ஒரு சமயம் விசித்திரஇவ்வருடம் சென்னை வந்த போது எப்போதோ குழந்தையில் பார்த்த ஜக்கு வந்து
> வியாக்கியானம் எழுதிய நினைவிருக்கிறது.
நின்றான். அவன் அக்காள் சக்குவும் வந்திருந்தாள்.
மன்னிக்கணும்.
ஜாம்பஜார் ஜக்கு ன்னு வலைபதிவு போட்டார் ஒத்தர். நல்லாவே இருந்தது. அவர்
புதிர் போட்டி நடத்தி நான் சரியாக எல்லாத்துக்கும் விடை கொடுத்து பரிசு
எல்லாம் வாங்கினேன். (கைதட்டல்தான் வேற என்ன?)
ம்ம்ம், எனக்கு பரிசு கொடுத்த வேளை பதிவுகள் நின்னுபோச்சு. நீங்க
எழுதியது அவர் நடை மாதிரி இருந்ததால சும்மா இருட்டில் ஒரு கல்.
மன்னிக்க
திவா
2008/7/31 Hari Krishnan <hari.har...@gmail.com>:
>
>
> 2008/7/31 Tirumurti Vasudevan <agni...@gmail.com>
>>
>> ஹரி வாத்யாரே! உங்களுக்கு தெரியாததா!
>
>
>>
>> ஜாம்பஜார் ஜக்குவ எங்கியாச்சும் பாத்தீங்களா?
>
>
> எனக்கு விளங்கவில்லை. நான் எப்போதாவது எழுதியதை அல்லது வேறு ஏதேனும் நிகழ்வைச்
> சுட்டுகிறீர்களோ?
> அப்படி ஏதும் இல்லையென்றால் போகிறது. இருந்தால் நினைவூட்டுங்கள் :-)
--
உறைக்கச் சொல்லுங்கள். அறிவு கூடக் கூட அடக்கம் கூடும் என்பார்கள் :-)
ஆனால் அது பல சமயம் நடைமுறைப்படுவதில்லை :-)
அறிவைப் பகிர்ந்து கொள்வதில்தானே சுகம். இங்குதான் பாராட்ட எல்லோரும் இருக்கிறோமே!
ஓ! எல்லாப் புகழும் இறைவனுக்கு!! என்பது இவர்களுக்குப் பிடிக்காதோ ;-) ?
> பல உறுப்பினர்கள் பங்கு கொள்வதில்லை; காரணத்தை ஆராய வேண்டும்; ஒரு சிலர்
> மட்டுமே பேசி வருவதாக உணர்கிறேன்.
இது மடலாடற்குழுக்களுக்கே உள்ள பிரச்சனை.
பலர் சும்மா வேடிக்கை பார்ப்பார்கள்
பலர் சேர்ந்த பிறகு படிப்பதே இல்லை
பலர் எட்டிப்பார்த்து விட்டு ஓடிப் போய்விடுவர்
பலர் 'இவன்' என்ன சொல்லறான், 'இவனுக்கு' நான் என்ன பதில் சொல்ல என்று இருப்பர்.
சிலர் அடேங்கப்பா! இதெல்லாம் பெரியவா சமாச்சாரம், நாம ஒதுங்கி இருத்தலே
நலம்! என்று இருப்பர்.
சிலர் 'நம்மிடம் சொல்ல என்ன இருக்கிறது? ஏதோ பேசுகிறார்கள்,
கேட்டுக்கொண்டு இருப்போம்' என்று இருப்பார்கள்.
சிலர் வயதில் சின்னவர்களா இருப்பதால் பதின்ப வயதுக் கூச்சத்தில் இருப்பர்!
சிலர் வேண்டிய போது வந்து பங்களித்துவிட்டு ஒதுங்கிவிடுவர்.
ஒரு சிலரே, முன்வந்து எழுத வருவர்!
நான் முன்பு சுட்டியவாறு, இணையம் என்பது ஓர் அறிவுக் களஞ்சியம்.
சொல்லுவார் சொன்னால் கற்க நிறைய உள்ளது. கற்றது கைமண் என்பதை ஒவ்வொருமுறை
இணையப் பரப்புள் நுழையும் போதும் உணர்கிறோம். ஒரு சமுதாயம் முன்னேற
வேண்டுமெனில் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளப் பழக வேண்டும்.
பகிர்தலில்தான் நம் எதிர்காலமே உள்ளது. அதை மின்னுலகம்
எளிமையாக்கிவிட்டது.
> ஒருங்குறி ஒரு சிலருக்குப் பிரச்னை தருவதாகத் தெரிகிறது.
இது உண்மையான பிரச்சனை. பாருங்கள் ஒவ்வொரு கடிதத்திலும் திரு.சுந்தரராஜன்
அவர்களுக்கு சொல்லித் தந்தேன் 'வெட்டி/ஒட்டுவது' எப்படியென்று. அவர்
விலகும் போது ஒரு வால் கடிதத்துடன் விலகிவிட்டார் :-)) பலருக்கு இது
இன்னும் 'பிரம்மவித்தை' போல் படுவதே காரணம். இந்த technophobia ஐ எப்படி
நீக்குவது?
கண்ணன்
அன்பு அரங்கர்க்கு!
வணக்கம்.
உங்களிடம் ஒரு சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன்.
கேள்வி – 1.
வேதத்தின் கருத்துகள் பதியப்பட்டிருப்பதாக க் கூறுகின்ற, சங்க இலக்கியத் தொகை நூல் "பரிபாடல்" எந்த நூற்றாண்டைச் சார்ந்த்து?
கேள்வி – 2
தொல்காப்பியம் கூறும் கடவுளர்கள் எல்லாம் வேதக்கடவுளர்கள் என்றால், தொல்காப்பியக் காலத்தில் வடமொழி எழுத்து வடிவம் கொண்டிருந்ததா?
கேள்வி – 3
"பரிபாடலிலே, "அந்தணர் அருமறைப் பொருள்" என்றும், "அந்தணர் அருமறை" என்றும் "ஒரு சார் அறத்தொடு வேதம் புணர் தவம் முற்றி...திறத்தின் திரிவு இல்லா அந்தணர்"
என்றும் கூறப்பட்டுள்ளது என்றால், பரிபாடலின் காலத்தில், வடமொழி தமிழகத்தில் பேசப்பட்டதா?
கேள்வி - 4
"நான்மறைக் கேள்வி நவில்குரல் எடுப்ப
ஏம இன்துயில் எழுதல்"
என்னும் வரிகள், வேதபாடசாலையைத் தான் குறிபிடுகிறது! என்று எவ்வாறு நிறுவுகின்றீர்கள்?
கேள்வி – 5
எழுத்து வடிவமும் இல்லாத ஒரு மொழி. இலக்கணமும் இலக்கியமும் இல்லாத ஒரு குடியின் கருத்துகள், இலக்கிய வளமும் இலக்கண நலமும் பெற்று, நிலைத்த
குடியினயினரான தமிழர் இலக்கியத்தில் இடம் பெற்றிருக்கின்றன! என்று ஓயாமல் க்குறிக் கொண்டிருப்பது நகைப்பிற்குரியதாகத் தெரியவில்லையா?
கேள்வி – 6
வேதம் எப்போது எழுதப்பட்டது? எப்போது எழுதி முடிக்கப்பட்டது? எழுதியது யார்? அவற்றின் உள்ளடக்கம் எவ்வளவு?
கேள்வி – 7
தமிழில் உள்ள கருத்துகளைக் கேட்ட பேச்சு மொழி வழக்கினர், பிற்காலத்தில் தங்கள் மொழியில் சேர்த்திருக்கலாம் அல்லவா?
கேள்வி – 8
தற்போது எழுத்து வடிவம் பெறாத மொழியைப் பேசும் நரிக்குறவர்கள், தங்கள் மொழி வரிவடிவம் பெற்ற பின்பு, அவர்கள் மொழியிலுள்ளவை தான் தமிழில் உள்ளன! என்று கூறினால் ஏற்றுக் கொள்வீர்களா?
மேற்காணும் கேள்விகளுக்கு சான்றுகளுடன் கூடிய பதில்களை எதிர்பார்க்கின்றேன்.
Who are Tamils?
Kannan
Superb!!
இப்போதுதான் அமைதியாக வாசிக்க முடிந்தது!
உம்மை 'நவயுக பாஷ்யக்காரர்' என்று சொல்லலாம் போலுள்ளது.
"பிரதிவாதி பயங்கரம்' ஜடாயு வாழ்க!!
கண்ணன்
உங்கள் நான்கு கட்டுரைகளும் அற்புதமாக வந்துள்ளன. வைணவ சம்பிரதாயங்களுடன்
வரும் காலங்களில் பரிட்சயப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் தேடல் மேலும்
பொலிவு பெறும்.
ஆகமங்கள் காஷ்மீரத்திலிருந்து வருகின்றன. சரஸ்வதி பீட
விற்பன்னர்களிடமிருந்து ஆகமங்களின் உட்பொருள் அறிய ஸ்ரீராமானுஜர் வடக்கே
போகிறார். போய் ஏட்டுப்பிரதி வாங்கியும் வருகிறார். ஆனால் ஏதோ அரசியல்
காரணங்களுக்காக அதை மீண்டும் பறித்துச் சென்றுவிடுகின்றனர். அப்போது
உடையவரின் வலக்கரம் போல் திகழும் கூரத்தாழ்வான் தனது photographic memory
கொண்டு அப்படியே படித்ததை படி எடுத்துவிடுகிறார்.
எல்லா ஆகமங்களையும் ஆராய்ந்து வேதத்திற்குப் புறம்பில்லாத ஆகமங்களை
முறைப்படுத்தி (உம்.பாஞ்சராட்திரம்) கோயில் ஒழுங்கு செய்கிறார்
ஸ்ரீராமனுஜர். வைதீக மார்க்கிகள் இதற்காக உடையவருக்கு என்றும்
நன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள். ஜேப்பி ஒருமுறை தமிழ்.வலையில் சொன்ன
மாதிரி வைஷ்ணவர்கள் என்றில்லை சைவக் கோயில் ஒழுங்கிலும் இராமானுஜரின்
பங்கு அளப்பரியதாக உள்ளது.
பகவத்பாதாளுக்கு ஆகம பரிட்சயம் உண்டு என்று ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
என்னிடம் சொல்லியுள்ளார். சங்கரர் வைதீகர்கள் விலக்க வேண்டிய ஆகமங்கள்
பற்றிய குறிப்பைத் தருகிறார். இராமானுஜருக்கு அத்வைதம் அத்துப்படி என்பது
நீங்கள் அறிந்ததே. வேதாந்திகள் அனைவரும் சங்கர பாஷ்யத்தில் தேறாமல் மேலே
செல்லமுடியாது.
இராமானுஜ சித்தாந்தத்தை உள்வாங்கிக்கொள்ளாமல் வைதீக மார்க்கம் பற்றி
தீர்க்கமாக நாம் பேசமுடியாது (ஏன் சிவாச்சார்யர்கள் பாஷ்யம் எழுதவில்லை
என்ற கேள்வியிலிருந்து பலவற்றிற்கு விடை அங்குள்ளது)
உங்கள் தேடல் இன்னும் பொலிவுபெற வாழ்த்தும்
அடியேன்
கண்ணன்
2008/8/2 Narayanan Kannan <nka...@gmail.com>: