சிற்பக் கலை அழ்கு

44 views
Skip to first unread message

Vijay kumar

unread,
Jan 11, 2008, 5:45:00 AM1/11/08
to minT...@googlegroups.com
ராமாயணத்தின் தாக்கம் எங்கெல்லாம் சென்றுள்ளது என்பதற்கு ஒரு அறிய எடுத்துக்காட்டு. .... இராவணன் கைலாயத்தை பெயர்க்க முனைதான். அப்போது உமை பயந்து சிவனின் மடியில் தாவி அமர்கிறாள். அப்போது கைலாய பர்வதத்தில் உள்ள மிருகங்கள் எல்லாம் அலறி ஓடின.  அப்புறம் என்ன ஆயிற்று ...இந்த கதையை Dr Jaybee ஐயா அவர்கள் விளக்கம் இங்கே உள்ளது. ( முழுவதுமாக படியுங்கள்).
 

இந்த கதையின் சிற்ப வடிவத்தை பல இடங்களில் காணலாம். குறிப்பாக அங்கோர் பண்டேஅஸ்ரெய் சிற்பத்தை காணுங்கள். பத்து தலைகளை புது விதமாக செதுக்கி உள்ளனர், இராவணனை ஒட்டி பயந்து ஒதுங்கும் சிங்கங்களை கான முடிகிறது. உமையும் பயத்தில் ஐயனின் மடியில் அமர்த்து கீழே எட்டி பார்க்கும் கோணம் மிக அருமை.  சிவபெருமான் தன் வலது காலால் பர்வதத்தை கீழே அழுத்தும் வண்ணம் சிறப்பாக செதுக்கப் பட்டுள்ளது.

இரண்டாம் வரிசையில் ஆணைமுகனும் கருடனையும் காணலாம்.
 
அங்கோர், எல்லோரா, தராசுரம், பட்டடக்கள், மல்லை, பேலூர், எலீபெண்ட என்று பல இடங்களில் உள்ள இதே கரு உடைய சிலைகளை இணைத்துள்ளேன்.



On 1/11/08, venkatram dhivakar <venkdh...@gmail.com> wrote:
துன்பம் என்ற தலைப்பு கொடுத்துவிட்டு இன்பமாகவல்லவா தொடர்கிறது!!!
 
கண்ணன், தலைப்பைத் தனி இழையாக இட முடியாதா?
 
திவாகர்

 
On 1/11/08, venkatram dhivakar <venkdh...@gmail.com > wrote:
அருமை விஜய்! தொடருங்கள்!!
 
திவாகர்

 
On 1/11/08, Vijay kumar <vj.ep...@gmail.com > wrote:

தராசுரம் கோயில் ஒரு அறிய கலை பொக்கிஷம்.

இந்த சிலைகளை காணுங்கள். முருகன் மற்றும் வள்ளி தெய்வானை சிலைகள் இவை.

இவற்றின் அறிய அம்சம் இவற்றின் மூக்குத்தி மற்றும் காதணிகள் அணிய வழி செய்யும் துவாரங்கள். இன்றைய பாணியில் மேல் காதில் துவரம் மற்றும் மூக்குத்தி. மிக சிறிய துவாரத்தை ( ஒரு புல்லோ சிறு குச்சி மட்டுமே உள்ளே செலுத்த இயலும்) அச் சிற்பி எவ்வாறு அமைத்தான் என்பது ஒரு புதிர்.



On 1/11/08, Vijay kumar <vj.ep...@gmail.com > wrote:

ஆம். இவை அளவில் மிக சிறிய சிற்பங்கள் என்பதை குறிக்கவே பெரிய புராண கதை சிற்பத்தை ஒத்த வாலி வதம் சிற்பத்தை காட்டி உள்ளேன். வாலி வதம் சிற்பத்தின் முன் உள்ள ஹீரோ பேனாவின் அளவை வைத்து சிற்பத்தின் நுணுக்கத்தை அறியலாம்.

 
On 1/11/08, Tirumurti Vasudevan <agni...@gmail.com > wrote:
முன்னர் அனுப்பிய இரு படங்களில் ஒன்று வாலி வதம் போல உள்ளது.

திவா

2008/1/11 Vijay kumar < vj.ep...@gmail.com>:
>
>
> படங்களின் பட்டியலில் சிறு மாற்றங்கள் தேவை. தனி மடல் அனுப்பி உள்ளேன்.
>

--
My blogs: http://nallaseithi.blogspot.com/
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!



ravanuprootingkailash.jpg
800px-Ellora_cave29_Shiva-Parvati-Ravana.jpg
belur.JPG
darasuram.jpg
Elephanta_Ravana.jpg
pattadakkal.jpg
mallai okkaneswara.JPG

நா.கண்ணன்

unread,
Jan 11, 2008, 6:34:23 AM1/11/08
to மின்தமிழ்
நல்லது இனி இங்கே தொடர்வோம்.

அற்புதம்!

கண்ணன்

venkatram dhivakar

unread,
Jan 11, 2008, 10:57:43 PM1/11/08
to minT...@googlegroups.com
இராவணன் கைலாயத்தை பெயர்க்க முனைதான். அப்போது உமை
> பயந்து சிவனின் மடியில் தாவி அமர்கிறாள். அப்போது கைலாய பர்வதத்தில் உள்ள<<<<<
அன்பு விஜய்/கண்ணன்
 
இதோ அந்த சிற்பத்துக்கேற்ற திருநாவுக்கரசரின் பாடல் வரிகள்
 
'நரம்பு எழுகைகள் பிடித்து நங்கை நடுங்க மலையை
உரங்கள் எல்லாம்கொண்டு எடுத்தான் ஒன்பதும் ஒன்றும் அலற'
 
ஆச்சரியம் என்னவென்றால் இந்தப்பதிகத்தின் ஒவ்வொரு வரியையயும் அந்த மகாசிற்பி வடித்துள்ளான் (அதுவும் அங்கோர்வாட்?).
 
 இராவணன் மமதையில் கைலாயமலையையே எடுக்கமுயன்றதும் சிவபெருமான் தன் கால்விரல் கொண்டு அவன் பத்துத் தலைகளையும் மலையடியில் அழுத்திய கதையையும் யாவரும் அறிவர். இங்கு அப்பரைப் பற்றி ஒரு கதை உண்டு.
 
இராவணன் படும் துன்பத்தைக் காணச் சகியாமல் அவனுக்கு சாமவேத கானத்தைப் பாடிச் சிவனை சரணடயுமாறு அறிவுறுத்திய சிவகணம் ஒன்றுதான் இந்தச் செய்கைக்காக  மறுபிறவியெடுக்கவேண்டி அப்பராய் அவதாரம் செய்தார் என்று சைவ உலகில் சொல்வார்கள். அப்பர் ராவண சிவபக்தியை சில இடங்களில் மிக அழகாக போற்றுகிறார்.
 
திவாகர்

 




 
On 1/11/08, நா.கண்ணன் <nka...@gmail.com> wrote:
நல்லது இனி இங்கே தொடர்வோம்.

அற்புதம்!

கண்ணன்

Narayanan Kannan

unread,
Jan 12, 2008, 2:25:46 AM1/12/08
to minT...@googlegroups.com
விஜய்:

நீங்கள் கொடுத்துவரும் படங்களையும், இவ்விழையில் வரும் கதைகளையும் நம்
மரபுச் சுவடு வலைப்பதிவில் இணைக்க உள்ளேன்.

நன்றி கூற வேண்டிய நபர்களோ, வலைப்பதிவோ, தளமோ இருந்தால் அறியத்தாருங்கள்.

தமிழ்ப் பண்பாட்டு மாணவர்களுக்கு (உள்நாடு+வெளிநாடு) அது பயன்படும்.

கண்ணன்

Reply all
Reply to author
Forward
0 new messages