முள்ளிவாய்க்கால் படுகொலை - நினைவு நாள் 18 மே

440 views
Skip to first unread message

Suba.T.

unread,
May 17, 2015, 5:00:44 PM5/17/15
to மின்தமிழ், Subashini Tremmel
தமிழீழ மக்களின் வாழ்வு நிலை மேம்பாடு அடையவும் மீள்குடியேற்றம் நடைபெற்று தமிழ் மக்கள் தங்கள் சொந்த இடங்களுக்குச்சென்று தங்கள் வாழ்க்கையை இயல்பு நிலையில் மீண்டும் தொடங்கவும் வேண்டும் என்பதே இன்னாளில் என் பிரார்த்த்னை.

​மனதை உறுக்கும் ஒரு சிறு வீடியோ பதிவு.​

முள்ளிவாய்க்கால் படுகொலை- குருதியால் வரையப்பட்ட தமிழர் காவியம்
[ சனிக்கிழமை, 18 மே 2013, 12:50.43 PM GMT ]
முள்ளிவாய்க்கால் படுகொலை முணுமுணுக்காத வாய்களே இருக்க முடியாது. தமிழர் தாயகமெங்கும் குருதியால் வரையப்பட்ட காவியம் என்று சொன்னால் மிகையாகாது.

தமிழர் வரலாற்றிலே மறக்க முடியாத நாட்கள் நீண்ட பெரு வலியுடன் மக்களின் இறுதி மூச்சுக்காற்று தாயக மண்ணிலே புதையுண்டு, எரியுண்டு, கதறக் கதற படுகொலை செய்யப்பட்ட இந்த முள்ளிவாய்க்கால் படுகொலை தினம் இன்றாகும்.

இந்நிலையில், முள்ளிவாய்க்கால் படுகொலை நாளை நினைவில் நிறுத்தி அஞ்சலி செலுத்த வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு.

உடல் தெறிக்க, சிதை எரிய சிங்கள இனவாத அரசின் கொடூர செயல்கள் அரங்கேறிய அந்த நாட்களின் வலிகள் தமிழர்களின் வாழ்வில் என்றும் எச்சமாய் தொடர்கிறது.

2006இல் மாவிலாற்றில் ஆரம்பித்த ஆற்றுப் பிரச்சினை 2009 இல் முள்ளிவாய்க்கால் படுகொலைகளுடன் ஈழக்கனவுகள் மண்ணில் புதையுண்டு போகும் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.

சகோதர நாடெனக் கூறப்படும் இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளின் ஆதரவுடனும் பயங்கர வாத்தினைத் தோற்கடித்தல் என்ற பரப்புரையின் கீழ் வரலாறு காணாத தமிழின் அழிப்பினை நிகழ்த்திவிட்டு வெற்றிக் களிப்பில் உள்ளது சிங்கள அரசு.

பொது மக்கள் செறிவாக வாழ்ந்த இடங்களை எறிகணைத் தாக்குதல்களாலும் ஷெல் வீச்சுக்களாலும் கோரத் தாண்டவமாடி கொலைக்களமாக்கியது சிங்களப்படை.

விடுதலைப் புலிகளை அடியோடு அழித்துவிடவேண்டுமென்றும், தாக்குதல் திட்டத்தினை திசைமாற்றிவிடக் கூடாது என்பதற்காகவும் இராணுவத்தினர் பொதுமக்கள் மீது மிகமோசமான திட்டமிட்ட தாக்குதல்களைச் செய்தனர்.

துண்டாடப்பட்ட நிலங்களில் திண்டாடிய மக்கள் பாதுகாப்புத் தேடி அலைய, பாதுகாப்பு வலயமென புதுமாத்தளன் முதல் அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம், கரையாமுள்ளிவாய்க்கால், வெள்ளாமுள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளை பாதுகாப்பு வலையமாக மகிந்த அரசாங்கம் அறிவித்த இப்பகுதிகளில் மக்கள் கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்பட்டார்கள். இந்நிலையில், 2009 மே18 இறுதி யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக அறிவித்தது மகிந்த அரசு.

முள்ளிவாய்க்கால் மண்ணில் மூச்சடங்கியவர்கள் போக எஞ்சியவர்கள் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டு, தரம்பிரிக்கப்பட்டார்கள். அவ்வாறு தரம்பிரிக்கப்பட்டவர்களில் சிலர் சிறைக்குச் செல்ல, பலர் காணாமல் போனோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.

இற்றைவரை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை காவியம் முற்றுப் பெறவில்லை. அந்தவகையில், கடந்த 2009இல் இலங்கை அரசு நிகழ்த்திய இனப்படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து புலம்பெயர் சமூகங்களும் மனித உரிமை அமைப்புக்களும் மாணவர்களும், ஐநா சபை இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணையை நடத்தக் கோரியும், தண்டனை வழங்குமாறும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

தாயக மக்களுக்காக போராடும் புலம்பெயர் தமிழ் மக்களின் உணர்வுகள், ஒன்றிணைந்து நீதிகேட்டு போராட்டமாக வெடிக்கும் போது, அது அனைத்துலக சமூகங்களுக்கு கொடுக்கப்படும் பாரிய அழுத்தமாகவே காணப்படும்.

இந்நிலையில், சர்வதேச சமூகங்களால் பாரிய எழுச்சியாக நினைவு கூரப்படும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நாள் தாயக மக்களின் விடுதலைக்கான பாதையை திறந்துவிடும் என எதிர்பார்க்கிறோம்.


--
Suba.T.
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Oru Arizonan

unread,
May 17, 2015, 5:06:22 PM5/17/15
to mintamil
இறந்த தமிழ் உடன்பிறப்புகளின் ஆன்மா அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனை ஏத்துகிறேன்.

ஒரு அரிசோனன் 

Anbu Jaya

unread,
May 17, 2015, 10:12:43 PM5/17/15
to mintamil
இதைப்பற்றிப் படிக்கும்போதெல்லாம் இதயத்தில் ஒரு முள் தைக்கிறது.


அன்புடன்,
அன்பு ஜெயா


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
May 18, 2015, 3:19:34 AM5/18/15
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com

கொடுமை ...

காணொளியில் காணும் அந்தத் தாய்களின் அழுகைகளுக்கு என்றுதான் நீதி கிடைக்கும் தெரியவில்லை.

இது போல எத்தனை எத்தனையோ குடும்பங்கள்

.... தேமொழி

Suba.T.

unread,
May 18, 2015, 7:57:04 AM5/18/15
to மின்தமிழ், Subashini Tremmel
முள்ளிவாய்க்கால்: ஆறு ஆண்டுகளாகியும் ஆறா வடுக்கள்; தீரா பிரச்சனைகள்


போரில் மோசமாக சேதமடைந்த சுகாதாரக் கட்டமைப்பு இன்னமும் முழுமையாக சீராகவில்லைபோரில் மோசமாக சேதமடைந்த சுகாதாரக் கட்டமைப்பு இன்னமும் முழுமையாக சீராகவில்லை

இலங்கையில் யுத்தம் முடிவடைந்து ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும், இறுதி யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பிரதேசம், இப்போதும், பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுத்து வருவதாக அங்கு மீள்குடியேறியுள்ளவர்கள் கூறுகின்றார்கள்.

வீடமைப்புத் திட்டங்கள், வாழ்வாதாரத் திட்டங்கள் என்பன அங்கு செயற்படுத்தப்பட்டிருக்கின்றன. பாடசாலைகள் இயங்குகின்றன. பிரதான வீதி சீரமைக்கப்பட்டிருக்கின்றது. எனினும் புது மாத்தளனில் இருந்து முள்ளிவாய்க்காலை ஊடறுத்து முல்லைத்தீவுக்குச் செல்லும் முக்கிய வீதி இன்னும் கவனிப்பாரற்ற நிலையிலேயே காணப்படுகின்றது.

கடற்தொழிலையே இப்பகுதி மக்கள் தமது வாழ்வாதாரத்திற்கான பிரதான தொழிலாகக் கொண்டிருக்கின்றனர். எனினும் பல குடும்பங்கள் இன்னும் வறுமையில் வாடுகின்றன. உணவுக்கும் பிள்ளைகளின் கல்விக்கும் அல்லாட நேர்ந்துள்ளதாக அந்தக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

தொண்டு நிறுவனங்களின் உதவியோடு வீடுகள் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்ற போதிலும், அந்த வீடுகள் முற்றுப் பெறாத நிலையிலேயே காணப்படுகின்றன. அந்த வீடுகளின் சுவர்களுக்குரிய சீமெந்து பூச்சு வேலைகளை வீட்டு உரிமையாளர்களே செய்ய வேண்டும் என்று வீடுகளைக் கட்டிக்கொடுத்தவர்கள் தெரிவித்திருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். சாப்பாட்டுக்கே வழியற்ற நிலையில் வீட்டுச் சுவர்களுக்கான பூச்சு வேலைகளை எவ்வாறு மேற்கொள்வது என்று அவர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

இருந்த போதிலும் கூடாரங்களிலும், கொட்டில்களிலும் சிரமப்பட்டுக் கொண்டிருந்த தங்களுக்கு இந்த கல்வீடுகள் பாதுகாப்பையும் நிம்மதியையும் அளித்திருப்பதாகவும் அவர்கள் நன்றியோடு குறிப்பிடுகின்றனர்.

புதிய வீடுகள் பாதுகாப்புணர்வைத் தந்தாலும் போரின் பேரழிவு கொடுங்கனவுகள் போகமறுக்கின்றனபுதிய வீடுகள் பாதுகாப்புணர்வைத் தந்தாலும் போரின் கொடுங்கனவுகள் போகமறுக்கின்றன

இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளுக்குப் போதிய நிதி இல்லாத காரணத்தினால் அந்த வீடுகளை முழுமையாக நிர்மாணிக்க முடியாதிருப்பதாக இன்னும் சிலர் கூறுகின்றனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மீள்குடியேற்றப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட அபிவிருத்திப் பணிகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும், இறுதி யுத்தத்தின் போது இந்தப் பிரதேசத்தில் நிகழ்ந்த மோசமான உயிரிழப்புக்கள், பாதிப்புகளில் இருந்து அந்த மக்கள் மீட்சி பெறும் வரையில் அங்கு உண்மையான அபிவிருத்தியைக் காண முடியாது என்று சிவானந்தரூபி செந்தமிழ்ச்செல்வன் என்ற பெண்மணி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

யுத்த மோதல்களின்போது சீறி வந்த துப்பாக்கிக்குண்டுகள், எறிகணைகள் மற்றும் குண்டுகளின் தாக்குதல்களில் சிக்கி காயமடைந்தவர்களையும், இறந்தவர்களையும் ஏற்க முடியாமல் தவித்த தற்காலிக வைத்தியசாலையாகச் செயற்பட்ட முள்ளிவாய்க்கால் மேற்கு பாடசாலை இப்போது புதுப் பொலிவு பெற்று கல்வியிலும் சிறந்து விளங்குவதாக அங்குள்ள ஆசிரியர்களும் மாணவர்களும் தெரிவித்தனர்.

மோசமான யுத்த மோதல்களில் சிக்கி, உயிருக்கு உத்தரவாதமற்ற நிலையில், மரணத்தின் விளிம்புவரை சென்று திரும்பியுள்ள தாங்கள், இப்போதுள்ள சூழலில் அங்கு வாழ முடியும் என்று கனவிலும் எதிர்பார்த்திருக்கவில்லை என்றும், அன்றைய நிலைமைகளை மீண்டும் எண்ணிப்பார்க்கும்போது, மரண பயமே தமது மனங்களைச் சூழ்ந்து கௌவுவதாகவும் அங்குள்ள பலரும் கூறுகின்றனர்.

Suba.T.

unread,
May 18, 2015, 8:03:17 AM5/18/15
to மின்தமிழ், Subashini Tremmel

வடக்கில் பிரதான நினைவேந்தல் நிகழ்வு: கண்ணீரில் மிதந்த முள்ளிவாய்க்கால்
[ திங்கட்கிழமை, 18 மே 2015, 06:01.59 AM GMT ]
வடக்கில் பிரதான நினைவேந்தல் நிகழ்வு இறுதிப்போர் இடம்பெற்ற பிரதேசமான முள்ளிவாய்க்காலில் தமிழ் சிவில் சமுகம், மற்றும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சார்பாக நடைபெற்றது.

முற்பகல் 10.30 மணிக்கு சுடரை முதலமைச்சர் க. வி விக்கினேஸ்வரன் ஏற்றிவைத்தார். அதைத் தொடந்து வடமாகாண சபை உறுப்பினர்களும் ஏற்றி வைத்தனர்.

தொடர்ந்து தமது உறவுகளை இழந்து தவிக்கும் உறவுகள் சுடர்களை கண்ணீர்மல்ல ஏற்றினர். கொடுந்துயரை அனுபவித்த உணர்வோடும், உறவுகளின் இழப்பினால் ஏற்பட்ட கனத்தோடும் கூடிய மக்களது கண்ணீர் வெள்ளத்தில் முள்ளிவாய்க்கால் இன்று சோகமாகியது.

அத்துடன் உயிரிழந்தவர்களுக்கான சமயக் கிரியைகளும்  அங்கு இடம்பெற்றன.

N. Ganesan

unread,
May 18, 2015, 9:47:45 PM5/18/15
to mint...@googlegroups.com, housto...@googlegroups.com, Kana Praba, thami...@googlegroups.com, R Cheran, Maravanpulavu K. Sachithananthan, panb...@googlegroups.com, Santhavasantham, vallamai, R. Radhakrishnan


On Sunday, May 17, 2015 at 7:12:43 PM UTC-7, Anbu wrote:
இதைப்பற்றிப் படிக்கும்போதெல்லாம் இதயத்தில் ஒரு முள் தைக்கிறது.



உண்மை, அன்புமிகு அன்புஜெயா.
அறுசீர் விருத்தங்களில் தமிழ்க்குலம்
புயலாய் மாறும் என்று காசி ஆனந்தன்
பாடல் படித்தேன். திருவள்ளுவன்
இலக்குவனார் பதிவினில்.

நா. கணேசன்

தமிழ்க்குலம் புயலாய் மாறும்!

தூற்றினார் தமிழை என்னும்
   துடித்திடும் சேதி கேட்டு
மாற்றலர் மண்ணில் பாய்ந்து
   மானத்தைக் கல்லாய் மாற்றி
ஏற்றினான் சேரன் ஆங்கே
   எதிரியின் தலைமீ தென்ற
கூற்றினைக் கேட்ட பின்னும்
   கூனுமோ தமிழன் வீரம்?

பறித்திடத் தமிழன் மண்ணைப்
   பரங்கியர் வந்த வேளை
தறித்தவர் தலைகள் கொய்து
   தன்வலி காட்டி நின்ற
மறப்புலித் தேவன் வீரன்
   மரபினில் வந்த நம்மோர்
துரத்துது குண்டென் றாலும்
   துணிவிழந் தோடுவாரோ?

உற்றசெந் தமிழி னத்தை
  ஒழித்திட முரசம் ஆர்த்த
துட்டகை முனுவின் கொட்டம்
  தூள்படச் செய்வே னென்று
கட்டுடல் தளர்ந்த போதும்
  கைதனில் வாள்பிடித்த
கொற்றவன் எல்லாளன் தன்
  கூட்டமோ அடிமையாகும்?

மொழி நிலம் தமிழச்சாதி
   மூன்றையும் இன்னல் வந்து
தழுவுமா? தழுவ வந்தால்
   தமிழ்க்குலம் புயலாய் மாறும்!
வழிவழி வந்த வீரம்
   வருவதை ஒருகை பார்க்கும்!
எலிகளும் தமிழர் மண்ணில்
  எழும்! பகை ஓட்டி வைக்கும்!
             - காசி ஆனந்தன்
from:

N. Ganesan

unread,
May 20, 2015, 11:43:58 PM5/20/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, minT...@googlegroups.com


On Monday, May 18, 2015 at 4:57:04 AM UTC-7, Suba.T. wrote:
முள்ளிவாய்க்கால்: ஆறு ஆண்டுகளாகியும் ஆறா வடுக்கள்; தீரா பிரச்சனைகள்



Statement by Hon. Jason Kenney on the 6th anniversary of the end of the Sri Lankan Civil War

May 15, 2015

The Honourable Jason Kenney issued the following statement on occasion of the 6thanniversary of the end of the Sri Lankan Civil War:

“Six years have passed since the end the Sri Lankan Civil War. On May 18, we reflect on the tragedies that occurred as the 25-year conflict came to a close, particularly as they affected Sri Lanka’s Tamil minority.

“I join with the members of Canada’s Tamil community in remembering the tens of thousands of people who were killed and displaced. Indeed, we remember that many Canadian Tamils had themselves found refuge in Canada directly as a result of the bloody conflict in their homeland.

“Canada remains committed to remembering the victims of the Sri Lankan civil war. Our government has consistently urged Sri Lankan authorities to demonstrate accountability by thoroughly investigating allegations that up to 40,000 Tamil civilians were killed by Sri Lankan troops in its final phase. Canada will continue to stand for the truth, as we did when Prime Minister Stephen Harper made the principled decision not to attend the 2013 Commonwealth Heads of Government Summit hosted by the Rajapaksa regime due to their refusal to adequately address our important concerns.

“Earlier this year the people of Sri Lanka, including Tamils, exercised their democratic right to vote, choosing to reject the Rajapaksa regime and electing a new government under President Sirisena. I am hopeful that this new government will continue to pursue a constructive approach to addressing the crimes of the past, while actively pursuing reconciliation with the Tamil community.

“As we remember the victims of the civil war, we commit to working with the new government in Sri Lanka and the international community to promote truth, justice and reconciliation, and to preventing such atrocities from ever being repeated.”

 

Reply all
Reply to author
Forward
0 new messages