கரு நிலா முற்றத்தில்
கரு மை பூசிய சாலையில்
ஒளி நிலவாய் அவன் நின்றான்
அண்டவெளி வீரன் அவன்
அந்த பரட்டை தலைக்குள்
எத்தனை குருவிகளோ ?
உள்ளுரையும் மூளைக்குள்
எத்தனை கதறல்களோ ?
ஊ ஊ ஊ என்று இசை மொழிந்தான்
ஆ ஆ ஆ என்று ராகமிட்டான்
அந்த ஓலத்தில் நாய் ஒன்றினைந்தது
வாலை ஆட்டிய படி பாசப்பிழம்பென
பரிகசித்து நகரவோ பயந்து அலறவோ
ஒரு மனிதமும் இல்லை
கரு நிலா மை பூசிய முற்றத்து இரவில்
முற்றுபெறாமல் இசைக்கப்படுகிறது
ஒரு அபஸ்வர ராகம்
கால் அகற்றி அமர்ந்து எழுகையில்
நடராச பாவனையில்
நடுங்கி தான் போகிறது
ஒளி இழந்த நடு இரவு
நட்சத்திரங்கள் நடுங்கி
மேக சீலைக்குள் முகம் புதைக்க
ஆக்ரோஷித்து சிரிக்கிறான்
அவன் பைத்தியக்காரன்
ஆடை கலைந்ததுணரா நிர்வாணன்
மழலை போல் துள்ளி ஓட
விளையாட்டு பாவனையில்
நடம் புரிகிறான் பைரவ மூர்த்தி
வீதி கொஞ்சும் மங்கல் விளக்கொளியில்
இரவு தேநீர் கடை ஒன்றில்
கை ஏந்துகிறான் கவலையற்ற கடவுளவன்
கொட்டப்பட்ட தேநீரில் சரிபாதி பங்கு வைத்து
எறியப்பட்ட ரொட்டி துணுக்கை
படையலாக்குகிறான் பைரவனிற்கு
உண்ட களைப்பு உறங்க மறுத்த விழிகள்
சுருண்டு கொண்ட பைரவனிற்கு
தாலாட்டு வைபவம் தான்
ஊ ஊ ஊ ஓ ஓ ஓ
இசைக்கப்படுகிறது ஒரு அபஸ்வரம்
நேசத்தின் ஆழ்கிணற்றில்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
தாய்மை
தேசாந்திரியை போல, பாதசாரியை போல
வந்துவிடுகிறது அந்த மென் உணர்வு
அழையா விருதாளியாய் வந்து
அழிச்சாட்டியம் செய்யவென.
விடியலில் சிறகடிக்கும்
மலைக்கூடு பறவைபோல
அழுத்தமாக உணர்த்திச் செல்கிறது
அதன் இருப்பை உறுதி செய்யவென
பாறை கண்புகா இடைவெளியில்
கசிந்தோடும் நீர் போல
இதயத்தை வருடிச் செல்ல
வருகிறது அந்த மெய் உணர்வு
எண்ணில் அடங்கா துளிகளிலே
ஒரு துளியாய் உள் நுழைந்து
உறவாடும் அணு பொருளில்
உயிர்க்கிறது பெண் உணர்வு
மகரந்த சேர்க்கையிலே
மலர்விடும் அரும்பாக
தளிர்நடை பயின்று
மணக்கிறது அந்த சேய் உணர்வு
உதிரத்தை உணவாக்கி
உள்ளுணர்வை மொழியாக்கி
வளர்த்தெடுக்கும் வார்ப்பினிலே
உதிக்கிறது தாய் உணர்வு
பிரிந்தோடும் கிளை போல
விலகியோடும் உறவாக
நெகிழ்ந்தோடி போயிடினும்
வேர் பற்று அம்மாவின் அன்புணர்வு
தேசாந்திரியை போல, பாதசாரியை போல
வந்துவிடுகிறது அந்த மென் உணர்வு
எல்லாமே அதுவாக வியாபிக்கும்
தாய்மையின் சேய் உணர்வு.
என் சுவாச காற்றே...!

நல்லா இருக்கு அனுபவம். உணர்வுகளை வெளியிட்டுச் சொல்ல நன்றாய்ப் புரிந்து வைத்திருக்கிறீர்கள்.
என்ன சொல்றது. சும்மாவானும் நல்லா இருக்குனு சொன்னா அது வெறும் பேச்சு.
ஆஹா, அருமைங்க. தனிமையின் தவிப்பும், கடைசியில் துணையின் அருகாமையும், அதன் விளைவால் வந்த கோபத்துடன் கூடிய மகிழ்வும், அதற்கேற்ற படமும். அருமைனா அருமை தான்.
நேசத்தின் படையல்
விதை ஒன்று விழுந்திருக்கும்
மண்ணிலே புதைந்திருக்கும்
உயிரினை தேக்கி வைத்து
காலத்திற்காக ஏங்கியிருக்கும்
விண்ணோ நேசத்தினை
மழையாய் பொழிந்திருக்கும்
இரு தளிர் விட்ட நாள் பொழுதில்
மனமோ மகிழ்ந்திருக்கும்
இளந்தளிர் பச்சையென
மலர் அற்ற பருவத்திலே
பசுமை மங்கை சிரித்திருப்பாள்
விழிகள் அது ரசித்திருக்கும்
கரும்பச்சை இலை இடையில்
சிவந்த நிற மலர் இருக்க
மழலையாய் தோன்றியது
மலர் கொத்து பூக்கள் அது
இயற்கையின் இயக்கத்தில்
இறைவனின் மாட்சி இது
நெகிழ்ந்து வியந்து நின்றேன்
நேசத்தின் படையல் இது.
வகுப்பறையில் மயங்கினாள் அவள்
தாங்கிக்கொண்டான் அவன்
காதல் என்றொரு வதந்தி
பரவியது விரைவில்
சகோதரத்துவம் என்று
முழங்கி நின்றார்கள்
இருவரும்
தயங்கி நின்றேன் நான்
தவித்து பகன்றார்கள் அவர்கள்
ஒரு மகளாய் பிறந்தால்
அண்ணனையும் தம்பியையும்
எங்கே தேடுவது
ஒரு மகனாய் பிறந்தாள்
தங்கையையும் தமக்கையையும்
எங்கே காண்பது
வினா எழுப்பினார்கள்
உடன் பட்டேன் நான்
சகோதரத்துவம் பரந்து
விரியட்டும் என்று.
சகோதரத்துவம்
வகுப்பறையில் மயங்கினாள் அவள்
தாங்கிக்கொண்டான் அவன்
காதல் என்றொரு வதந்தி
பரவியது விரைவில்
சகோதரத்துவம் என்று
முழங்கி நின்றார்கள்
இருவரும்
தயங்கி நின்றேன் நான்
தவித்து பகன்றார்கள் அவர்கள்
ஒரு மகளாய் பிறந்தால்
அண்ணனையும் தம்பியையும்
எங்கே தேடுவது
ஒரு மகனாய் பிறந்தாள்
தங்கையையும் தமக்கையையும்
எங்கே காண்பது
வினா எழுப்பினார்கள்
உடன் பட்டேன் நான்
சகோதரத்துவம் பரந்து
விரியட்டும் என்று.
2013/9/11 Thamil Selvi <thamil...@gmail.com>
vanthachu cj2013/9/11 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>
பிரைவேட் வலை.தலைப்பு: "உணர்வுகளின் ஓவியங்கள்" என்றிருக்க வேண்டும்.சி. ஜெ.
அங்கே தான்என் வீடு ஒருஆலயம்
என் விழிகள்
சகோதரத்துவம்
வகுப்பறையில் மயங்கினாள் அவள்
தாங்கிக்கொண்டான் அவன்
காதல் என்றொரு வதந்தி
பரவியது விரைவில்
சகோதரத்துவம் என்று
முழங்கி நின்றார்கள்
இருவரும்
தயங்கி நின்றேன் நான்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

என்றேன்
கனவில் வாஎன்கிறான்
காதல் வஞ்சகன்
***
--
நீ அழைப்பாய் என
யாரோ நடக்கிறார்கள்
காற்றில் யாரோ நடக்கிறார்கள்
கால்கள் முடக்கிக்கொண்டு
காற்றில் யாரோ சிரிக்கிறார்கள்
இதழ்கள் இறுக்கிக்கொண்டு
கைவீச தோன்றும் போது
திசைகள் அது அருகில் இல்லை
திசை தேடி ஓடும் போது
திசை திருடன் காணவில்லை
உயிரது அழுதிடும் போது
தவித்திடும் மனங்கள் இல்லை
வறுமையில் பசித்திடும் போது
தருவதற்கு யாருமில்லை
அழுகை அது இசைத்திடும் போது
ஆழ் மனதின் முழுநிலை
அழுகை என்னும் ஓலத்தின் போது
அன்பு எங்கும் வறுமை நிலை
காற்றில் யாரோ நடக்கிறார்கள்
பொய்யை விதைத்துக்கொண்டு
காற்றில் யாரோ பறக்கிறார்கள்
உண்மை மறைத்துக்கொண்டு
தவித்திடும் இதயங்கள்
உலகத்தில் பல உண்டு
ஒலித்திடும் அழுகையில்
தவித்திடும் மனம் உண்டு
நிலை அதை பாராது
அணைத்துக்கொண்ட உயிர்கள் உண்டு
துணிச்சல் எனும் நேர்க்கோட்டில்
அன்பினை உயிர்த்துக்கொண்டு
காற்றில் யாரோ விதைக்கிறார்கள்
அன்பெனும் செழுமை விதை
காற்றில் யாரோ அறுக்கிறார்கள்
முழுமையின் கனவு எல்லை
என் சின்னரும்பு செல்லமே
சிருங்கார வண்ணமே
கன்னத்துல ஏனடி
கைய கொஞ்சம் தள்ளடி
விளையாட்டு தோழியா
விளையாட நான் வாரேன்
பட்டாம்பூச்சி இறக்க ஏறி
உலகத்தை காட்டபோறேன்
வண்ண வண்ண மலரினிலே
நீயுந்தான் மலரான
சூடிக்கொள்ள நான் துணிஞ்சேன்
இதயத்துல கண்மணியே
சோகத்தை தூரத்தள்ளு
பட்டாம்பூச்சி இறக்க ஏறு
வானத்துல ஏறி போயி
மின்மினி கொண்டு வருவோம்.
--
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
தும்பியை பிடித்து நுனி வாலில் நூல்கட்டி
பறக்க விட்டு ரசித்ததொரு தினத்தில்
மருகி போனேன் நான்
மாற்று திறன் கொண்ட எனக்கு புரிந்தது
வால் அறுந்த தும்பியின் வலி
அவர்களுக்கு புரியவில்லை ஏன்?
தயங்கி தயங்கி சொன்னபோது
போடி நொண்டி என்று
விளையாட்டில் சேர்க்காமல்
விரைந்தோடி பறந்தனர்
சிட்டுகளின் இறக்கைகளை
தனதாக்கிய மகிழ்வோடு
முழங்கால் தேய்தலோடு
வலம் வந்த நாட்கள் எல்லாம்
என் உலக தும்பிகளுக்கு
விரைவு மடலிட்டேன்
விரைந்து ஓடுங்கள்
கொய்து கிழிக்க ஒரு இராட்சத
கூட்டம் கொடூரன் தலைமையில்
குரூரமாக வருகிறதென்று
தும்பிக்கு ஒரு மடல்
முழங்கால் தேய்தலோடு
வலம் வந்த நாட்கள் எல்லாம்
என் உலக தும்பிகளுக்கு
விரைவு மடலிட்டேன்
Eppadipatta varthaigal
This is Kavithai.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

தும்பிக்கு ஒரு மடல்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
-இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ