வெருளி நோய்கள் 1471 -1475: இலக்குவனார் திருவள்ளுவன்

0 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
5:06 PM (5 hours ago) 5:06 PM
to thiru thoazhamai, Thamizh Pavai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, raman kannusamy, பூங்குழலி Poonkuzhali, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, Dr. Namadhu MGR, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan Srinivasan, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, Chitraleka V, Dr Seenivasan Sappani, Rajan Krishnan, Umarani Pappusamy Mysore, Guberan Rajan, Dr. Ku.Muthukumar

வெருளி நோய்கள் 1471 -1475: இலக்குவனார் திருவள்ளுவன்


ஃஃஃ      அகரமுதல      இலக்குவனார் திருவள்ளுவன் 
     26 May 2026      


(வெருளி நோய்கள் 1466 -1470: தொடர்ச்சி)

வெருளி நோய்கள் 1471 -1475

  1. நிலவறை வெருளி-Fistulaphobia/Botophobia/Troglophobia/ Bathysiderodromo phobia தரைப்பகுதிக்குக் கீழ் அமைந்துள்ள நிலவறை, நில நீள் பாதையில் செல்லும் ஊர்திகள் மீதான அளவுகடந்த பேரச்சம் நிலவறை வெருளி.
  2. அடக்கம் செய்வதற்கு முன்னர் இறந்தவர்கள் உடல்களை நிலவறையில் வைக்கும் வழக்கத்தாலும நிலவறைபற்றிய மிகுந்த அச்சம் கொள்வோர் உள்ளனர்.
    சுற்றடைப்பு வெருளி வேறு, இது வேறு. எனினும் சுற்றடைப்பு வெருளி உள்ளவர்களுக்கு நிலவறை வெருளி வர வாய்ப்புள்ளது.
    Fistula என்றால் இலத்தீனில் நிலத்தடி இருப்புப்பாதை எனவும் பொருள்.
    Boto என்றால் ஆழமான/தாழ்வான எனப் பொருள்.
    Troglo என்றால் குகை/சுரங்கை/தரை அடி அறை எனப் பொருள்.
    bathy + side + rodromo = ஆழத்தில் + கல் அல்லது இரும்பில் அமைந்த + வழித்தடம். எனப்பொருள். எனவே, நிலத்தடிப் பாதைகளைக் குறிக்கிறது. நிலத்தடியில் செல்லும் பெருந்தொடரி முதலானவைமீதான பேரச்சமும் இதில் அடங்கும்.
    00
  3. நிலாச்சோறு வெருளி-Kelngophobia

மாற்றுணா/நிலாச்சோறு (potluck) விருந்து தொடர்பான அளவு கடந்த பேரச்சம் நிலாச்சோறு வெருளி.
தனித்தனியே உணவுவகைகளைக் கொண்டுவந்து சேர்த்துப் பகிர்ந்து மற்றவர் உணவை உண்ணுதல் மாற்றுணா விருந்து எனப்படும். பெரும்பாலும் சோறு முதலான மைய உணவு பொதுவாகவும் துணை உணவுகள் பங்கு கொள்வோராலும் அளிக்கப்படுகின்றன.
மொய்விருந்து என்னும் பொருள் கொண்ட potlatch என்னும் (வட அமெரிக்க நாட்டின் மரபு மக்களின்) விருந்து முறையில் இருந்து potluck வந்ததாகச் சிலர் கூறுவர். 16 ஆம் நூற்றாண்டில் தாமசு நசே(Thomas Nashe) என்னும் ஆங்கிலப் படைப்பாளர் எதிர்பாராத அல்லது அழையாத விருந்தாளி வரும்பொழுது வீட்டில் உணவு இருப்பதைப் பொறுத்து அவருக்கான சாப்பாடு அமைவதைக் குறிப்பதற்காகப் பானையின் நற்பேறு என்னும் பொருளில் பானைப்பேறு / potluck எனக் குறிப்பிட்டுள்ளாராம். இருப்பினும் 1930இல் கூட்டுப் பகிர்வு முறையில் அளிக்கப்படும் விருந்து ஆகிய பகிருணா இவ்வாறு potluck என அழைக்கப்பட்டதாம். கூட்டுணா, பகிருணா, மாற்றுணா என எப்படியும் இந்தக் ‘கொடு-பகிர்’ உணவு முறையைச் சொல்லலாம். எனினும் முதலிரண்டும் வேறு நேர்வுகளிலும் பயன்படுத்தப்படுவதால் மாற்றுணா எனலாம்.
தமிழ் நாட்டில் சில கோயில்களில் ஒவ்வொருவரும் அவரவர் வாய்ப்பு நலனுக்கேற்பக் கடவுளுக்குப் படையல் கொண்டுவந்து தான் கொண்டுவந்ததை விட்டு விட்டு அடுத்தவர் கொண்டு வந்ததை எடுத்துக் கொள்ளும் பழக்கம் உள்ளது. செல்வர் சிறப்பான உணவு வகை கொண்டு வந்திருந்தாலும் அடுத்தவர் எளிய உணவு கொண்டு வந்திருந்தால் அதைத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும் இப்போது உணவு வகைகளுக்கு மாற்றாகக் கனி வகைகளைக் கொண்டு வரும் பழக்கம் உள்ளது. என்றாலும் இப்பொழுது அருகிக் காணப்படும் வழிபாட்டு முறையாக மாறிவிட்டது.
குடியிருப்புப் பகுதிகளில் அல்லது அலுவலகங்களில் இவ்வாறு ஒவ்வொருவர் ஒவ்வோர் உணவு வகையைக் கொணர்ந்து பொதுவில் வைத்து அனைவரும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் இப்பொழுதும் உள்ளது.
சித்திரை முழு நிலவு நாளன்று நிலாச்சோறு என்று அவரவர் தேங்காய்ச் சோறு, எலுமிச்சைச் சோறு, புளிச்சோறு முதலானபிசைந்த உணவு வகைகளைக் கொண்டு வந்து கூட்டாகப்பகிர்ந்து உண்ணும் பழக்கமும் இப்பொழுது மறைந்து வருகிறது. தமிழ் மரபின் படியான நிலாச்சோறு இங்கே கையாளப்பட்டுள்ளது.
00

  1. நிலை ‘இ(c)’ வெருளி – Ceephobia

தர நிலையில் இ(சி) பெறுவது குறித்த அச்சம் நிலை இ(c ) வெருளி.
Cee என்பது ஆங்கில எழுத்து C யைக் குறிப்பது. இங்கே நிலை C யைக் குறிக்கிறது.
தேர்ச்சியிலோ தரப்பாட்டிலோ முதல் நிலை பெறாமல் மூன்றாம் நிலை பெறுவதால் ஏற்படும் பெருங்கவலையையும் இதன் விளைவு குறித்த பகுத்தறிவிற்குப் பொருந்தா அச்சத்தையும் குறிக்கிறது.
00

  1. நிலை ஈ(d) வெருளி – Deephobia

தேர்ச்சித் தரத்தில் நிலை ஈ(D grade) பெறுவது குறித்த பேரச்சம் நிலை ஈ(d) வெருளி.
Deephobia வில் உள்ள Dee என்பது ஆங்கில எழுத்து D-யைக் குறிப்பது.
இந்நிலை சராசரிக்குக் கீழான நிலையை / கீழ்ப்பட்ட தேர்ச்சி நிலையைக் குறிப்பது. அடுத்து தோல்வி(எப்) நிலை வந்து விடுமோ என்ற பெருங்கவலைக்கும் பேரச்சத்திற்கும் ஆளாகி நிலை ஈ(D) வெருளி வந்து விடுகிறது. இதனை நான்காம் நிலை அல்லது கீழ்நிலை என்றும் குறிக்கலாம்.
00

  1. நிலை ஊ (f) வெருளி – Effophobia

தேர்ச்சி நிலையில் தோல்வியுறுவதைக் குறிக்கும் நிலை ஊ (f) வெருளிபற்றிய வரம்பற்ற பேரச்சம்
‘தோ’ வெருளி என்றே சொல்லலாம். ஆனால் அ,ஆ,இ,உ,ஊ,உ,ஏ என வரும் பிற நிலைகளின் வரிசையில் மாறுபட வேண்டா என்பதால் ‘ஊ’ எனக் குறிக்கப்பெற்றுள்ளது. ஊமணை என்பது போதிய பக்குவமின்மையை அல்லது செயலின்மையைக் குறிப்பது. இதனடிப்படையில்தான் பேசும் செயலின்மை ஊமை எனக் குறிக்கப்பெறுகிறது. ஊமணைச்சட்டி என்பது பக்குவமாக உருவாக்கப்படாத மண்சட்டியைக் குறிக்கும். எனவே, தேர்ச்சியின்மையைக் குறிக்கவும் இச்சொல் பொருந்தும். அந்த அடிப்படையில் ஊ என்பதும் பொருந்தும். எனினும் பலருக்கும் இது தெரியாது.
00


(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5


--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages