அம்மெனல் (humming), அஞ்சிறைச் சிட்டு (humming bird)

117 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jul 1, 2009, 10:43:44 PM7/1/09
to மின்தமிழ், Santhavasantham, tamil...@googlegroups.com, panb...@googlegroups.com
'humming' என்பதற்கு மிகப்பொருத்தமான தமிழ்ச்சொல் என்ன?
humming - தமிழ் இலக்கியங்களில் எவ்வாறு ஆளப்படுள்ளது?
என்றும் இம்மடலில் பார்ப்போம்.

சென்னைத் தமிழ்ப் பேரகராதியில்:
humming:
http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3advanced?dbname=tamillex&query=humming&matchtype=exact&display=utf8

hum:
http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3advanced?dbname=tamillex&query=hum&matchtype=exact&display=utf8

சுருதி மீட்டல் ஆகிய ’ஹம்மிங்’ ஒலிக்கான
இலக்கிய ஆட்சிகளைப் பார்வையிடும் போது,
”அம்” என்றே தமிழில் நெடுங்காலமாக ஆளப்பட்டுள்ளமை
புலனாகிறது. ஒரு சில சான்றுகளைத் தருகிறேன்.

அம்-, இம்-, உம்- என்று 3 ஆதாரமான உயிரெழுத்திலும்
தமிழ் இலக்கியம் ஒலிக்குறிப்புக்களைக் குறித்துள்ளது.

அம்மெனல் ammeṉal , n. 1. Onom. expr. of filling or
overflowing, as of water; நீர்த்தும்பற் குறிப்பு.
அம்மெனக் கண்ணீ ரரும்பி (பதினொ. திரு விடை. )

இம்மெனல். Onom. expr. of humming, rustling, pattering; ஓர் ஒலிக்குறிப்பு.
இம் மெனப் பெய்ய வெழிலி முழங்குந் திசையெல்லாம் (நாலடி. 392).

உம்மெனல் - Onom. expr. denoting the sound
of bubbling streams, pattering of rain, murmuring of the wind; ஒர்
அனுகரணவோசை. உம்மென்றெழு மருவித்திரள் (தேவா. 244, 3).

தமிழல்லாத பிறமொழிகளில் அம்-, இம்-, உம்- முன்னொட்டாக
ஹ் சேருவதையும் காணலாம். ஹம்மிங் அவ்வகைப் பட்டதே.
உம் கொட்டுதல், ஹும் கொட்டுதல் பற்றிய செய்திகளை
முன்னர் கொடுத்துள்ளேன்:
http://groups.google.com/group/santhavasantham/msg/756f7bb88640789d

யோசித்துப் பார்க்கையில் பழந்தமிழ் இலக்கியத்தில்
”அம் சிறை” என்பது ஹம்மிங் ஓசையைக் குறிக்கிறது
என்று அறியலாகும். அஞ்சிறைத் தும்பி, அஞ்சிறை வண்டு,
அஞ்சிறைச் சுரும்பு, அஞ்சிறை ஞிமிறு என்று வண்டினங்களுக்குப்
பெரும்பாலும் வரும். இவற்றின் தொடரொலி ஹம்மிங்
சிறப்பம்சம் அல்லவா? இவ்வண்டினங்கள் தொடர்ச்சியாய்
முரல்வதற்குக் காரணமான சிறகுகளை “அம் சிறை”
என்கிறார்கள். எல்லா இடத்திலும் “அம் சிறை”
என்பதற்கு அழகிய சிறகு என்று பொருள் கொள்வது சிறப்பில்லை.

குறுந்தொகைப் பாட்டு - ’கொங்குதேர் வாழ்க்கை
அஞ்சிறைத் தும்பி’ உங்களுக்குத் தெரியும்.
வண்டையும், புலவரையும் ஒப்பிடும் பாடல்.
புறத்தே ”அஞ்சிறை” வைத்திருப்பது தும்பி.
அகத்தே கற்பனை ஆகிய சிறகுகள் கொண்டவர் புலவோர்
என்பது நன்னூல் விருத்தியுரை. புறச் சிறகுகளை
ஓசனித்து மலர்நாடிக் கொங்கு எடுப்பது தும்பிகளின்
வாழ்க்கை. அதுபோல, அகச் சிறகைப் பறக்கவிட்டு
இலக்கிய மலர்களை நாடுவது புலவர் வாழ்வு என்கிறார்
சிவபிரான் என்பது பழைய கருத்தாகும்.
தமிழில் சிவபெருமான்
எழுதியதாய்ச் சொல்லப்படுபவை 3 பாட்டுக்கள்தான்.
அவை மூன்றுமே தாழ்குலத்தாருக்கு (subalterns) எழுதியன
என்று சிறப்பாகச் சொல்லப்படுபவை ஆகும்.
கீரன் (சங்கறுப்பவன்), பாண பத்திரன் (சேரமான் ராசாவுக்கு
எழுதின சீட்டுக்கவி), பெற்றான் சாம்பன்
(தீட்சை அளிக்க வேண்டி கொற்றவன்குடி உமாபதி
சிவாச்சார்யருக்கு) - என்பது பழைய தமிழ் இலக்கிய மரபு.
இறைவன் ஏழைகளின் பக்கம் என்பது தென்னாட்டு
வாழ்வியல். இப்போது இந்தியவியலில் subaltern studies
பெரிதாய்ப் பேசுகிறார்கள், ’ஸப்-ஆல்டெர்ன் ஸ்டடீஸ்’
தொடங்கியதே தமிழ்நாட்டில் தான்.

நாரை, குருகு, அன்னம், ... பறக்க எழும்போது இறக்கைகளை ஓசனித்து
ஒலிஎழுப்புவதால் அஞ்சிறை அன்னம், அஞ்சிறைக் குருகு,
அஞ்சிறகு நாரை என்றும் பயில்கிறது. ஓசை > ஓசனிப்பு:
ஓசனிக்கின்ற அன்னம் (சீவக. சிந்தாமணி 2652).

பறவை இனங்களில் சேவல் தம் இறக்கைகளை
விரைந்து சில சமயங்களில் அடிக்கும்.
அச் செயலை “அஞ்சிறை” சேவல் என்கிறார் கம்பர்.
இங்கு அம் சிறை என்பது ஓசனிக்கிற இறக்கை
என்னலாம்.

எண்தரும் கடை சென்ற யாமம் இயம்புகின்ற ஏழையால்
வண்டு தங்கிய தொங்கல் மார்பன் மயங்கி விம்மியவாறு எலாம்
கண்டு நெஞ்சு கலங்கி அம் சிறை ஆன காமர் துணைக்கரம்
கொண்டு தம் வயிறு எற்றி எற்றி விளிப்ப போன்றன கோழியே.

யாமக்கணக்கில் கடைசியாகக் கழியும் யாமத்தைத் தெரிவிப்பனவாகிய சேவல்கள்,
கைகேயியினால், வண்டுகள் மொய்க்கும் மாலை அணிந்த மார்பை உடைய தசரதன் ,
அறிவு கலங்கித் துன்புற்ற முறைகளைப் பார்த்து மனம் கலங்கி, ஓசனிக்கிற
சிறகுளாகிய இரு கைகளால் தம் வயிற்றில் பலமுறை அடித்துக்கொண்டு அழுவன
போலத் தோன்றின.

ஒரு தாளகதியும் சேர்த்து, ஒத்தறுத்து
பறவைக் கூட்டம் ஹம்மிங் ஒலியெழுப்பலை
அழகாய் மனோன்மணீயம் விவரிக்கிறது:

”பன்னிறச் சிறகர்ப் பறவைத் தொழுதி
தம்மினந் தழுவிச் சூழ்ந்து வட்டமாய்
அங்கங் கிருந்து தங்கண் முறைமுறை
அஞ்சிறை யொத்தறுத் தடியா,”

போர்ப் படைகளின் ஓசைக்கு வலசையால்
கடற்கரைக்கு வந்து எய்தும் பறவைத் தொகுதிகளின்
அம்மெனும் இறக்கை ஓசைகளை உவமை
ஆக்குகிறது கலித்தொகை:

நிரை திமில் களிறாகத் திரையொலி பறையாகக்
கரைசேர் புள்ளினத்து அஞ்சிறை படையாக
அரைசுகால் கிளர்ந்தன்ன உரவுநீர்ச் சேர்ப்ப கேள்!

------------

குன்றில் சுனை அருகே, ஓசனிக்கிற இறக்கைகளை
உடைய வண்டின் ஓசை:
”கண்போல் மலர்ந்த காமரு சுனை மலர்,
அஞ்சிறை வண்டின் அரிக் கணம் ஒலிக்கும்
குன்று அமர்ந்து உறைதலும் உரியன்,
அதாஅன்று” - திருமுருகு

வீ அகம் புலம்ப, வேட்டம் போகிய 46-1
மாஅல் அம் சிறை மணி நிறத் தும்பி, - கலித்தொகை
(கரிய, அம்மென ஒலிக்கும் சிறகுடை மணித்தும்பி).

"ஆரல் ஆர்கை அம் சிறை தொழுதி
உயர்ந்த பொங்கர் உயர் மரம் ஏறி “ - கலித்தொகை

சீவக சிந்தாமணிப் பாட்டில் “அஞ்சிறகு ஒலி”
என்றே பேசுகிறது:
ஆழியான் ஊர்திப் புள்ளின் *அம் சிறகு ஒலியின்* நாகம்
மாழ்கிப் பை அவிந்த வண்ணம் வள்ளல் தேர் முழக்கினானும்
சூழ்துகள் மயக்கத்தானும் புளிஞர் உள் சுருங்கிச் சேக்கைக்
கோழி போல் குறைந்து நெஞ்சின் அறம் என மறமும் விட்டார். 449
(ஒன்றை விட்டு அஞ்சி ஓடும் செயலை, 'chickening out' என்று
அமெரிக்கர் சொல்கிறார்கள். முதலில் சொன்னது திருத்தக்க தேவர் :) )

நாரை விடுதூது -
ஓர் அரிய ஆழ்வார் பாசுரத்தைப் பார்ப்போம்:

அஞ்சிறைய மடநாராய்! அளியத்தாய்! நீயும் நின்
அஞ்சிறைய சேவலுமாய் ஆஆஎன்று எனக்கு அருளி
வெஞ்சிறைப்புள் உயர்ந்தார்க்குஎன் விடுதூதாய்ச் சென்றக்கால்
வன்சிறையில் அவன்வைக்கில் வைப்புண்டால் என்செயுமோ

ஈட்டின் விளக்கவுரையைப் பார்க்கலாம்: அஞ்சிறை -
'அம் சிறைய- குழந்தை தாயின் உறுப்புகள் எல்லாம்கிடக்க, மார்பிலே வாய்
வைக்குமாறு போன்று, பறப்பதற்குச் சாதனமான சிறகிலே முற்படக் கண்
வைக்கிறாள்..நீர் பாய்ந்த பயிர் போன்று, ஒன்றற்கு ஒன்று கலவியால் பிறந்த
மகிழ்ச்சி வடிவிலே தொடை கொளலாம்படி( அறியலாம்படி) இருக்கின்றதாதலின், '
அம் சிறை ' என்றார்.

ஈட்டிலே அற்புதமான விளக்கம்!! வண்டினங்களுக்கு (வண்டினம் முரலும் சோலை)
சிறப்புறுப்பே ஹம்மிங் (அம்மெனல்) செய்கிற சிறகுகள் தாமே.
அச்சிறப்பு பற்றியே அஞ்சிறை என்று பல்காலும்
தமிழ் இலக்கியம் நெடுகிலும் குறிக்கப் பெறுக்கிறது
என்பது சாலும்.

நிற்க,

அஞ்சிறைச் சிட்டு (’ஹம்மிங்’ பறவைகள்):

ஓசனிச் சிட்டு (பேரா. செல்வா கட்டுரை):
http://tinyurl.com/osani-chittu
ஓசனி, உசுனி (உஸ்-உஸ் சிட்டு), முரலி,
ஞரலி, ஞிமிரி, சுரும்பி, .... சிட்டுகள் என்றும்
ஓசையை வைத்து வகுக்கலாம்.

இலக்கிய நயத்துடன், “அஞ்சிறைச் சிட்டு” என்றே ஹம்மிங் பறவைகளைச்
சொல்லலாம். (அம்மெனல் = ஹம்மிங்).
இந்த ‘ஹம்மிங்’ இசை தேன்சிட்டின்
சிறகுகள் வேகமாகக் காற்றில் அதிர்வதனால் ஏற்படும் இசை
ஹம்மிங் = அம்மெனல். அப்படியாயின்,
ஹம்மிங் பறவை = அஞ்சிறைச் சிட்டு
என்பதும் பொருத்தம்.

அஞ்சிறை வண்டும், அஞ்சிறைச் சிட்டும் அருகருகே:
http://upload.wikimedia.org/wikipedia/ta/9/9a/Hummingbird_and_a_hiney_bee.jpg

அமெரிக்காவில்
ஹம்மர் என்ற வாகனம் கல்நெய் குடிப்பதில்
பெயர்பெற்றது. டெக்சாஸில் ஹம்மர்
வைத்திருந்தால் இளைஞர்களிடையே
பெருமை. ஹம்மர் என்பது ’ஹம்மிங்
பறவை’ (அம்சிறகுச் சிட்டு) என்பதன் சுருக்கமே.
ஹம்மர் பெருவண்டி எழுப்பும் ஒலி,
மாணிக்கக் கழுத்து அஞ்சிறைச் சிட்டின்
இறக்கை ஒலியை ஒத்திருக்கும்.
மாணிக்கக் கழுத்து அஞ்சிறைச் சிட்டின்
சிறகொலி பின்னணியில் கேளுங்கள்:
Ruby-throated humming bird wing sound
in the background (leave out the chirping
sound from the bird's mouth.)
http://www.kwic.com/~pagodavista/humming.wav

நா. கணேசன்

பலவகை அஞ்சிறைச் சிட்டுகள் (காணொளி):
http://www.youtube.com/watch?v=2n71TgeWXd0
http://www.youtube.com/watch?v=TFH1HzE0gsM
http://video.google.com/videoplay?docid=8228861018253183242
http://video.google.com/videoplay?docid=-3687295607354629880
http://www.youtube.com/watch?v=LpjQ1_yxRlI
http://www.flickr.com/photos/from_barbs_garden_and_beyond/3443857004/

வியாக்கியான இலக்கியம் - இந்திரா பார்த்தசாரதி
http://www.thinnai.com/?module=displaystory&story_id=60512233&format=html

ஓசனிச் சிட்டு (பேரா. செல்வா கட்டுரை):
http://tinyurl.com/osani-chittu

Innamburan Innamburan

unread,
Jul 1, 2009, 10:56:22 PM7/1/09
to minT...@googlegroups.com
இவற்றை எல்லாம் சுட்டிக்காட்டவே தமிழ்ச்சொல் ஒன்று உண்டு - அருமை. மகிழ்ந்து மகிழ்ந்து மாய்ந்துபோனேன். 
இன்னம்புரன் 

2009/7/2 N. Ganesan <naa.g...@gmail.com>

V, Dhivakar

unread,
Jul 1, 2009, 11:58:59 PM7/1/09
to minT...@googlegroups.com
>>>தமிழில் சிவபெருமான்
எழுதியதாய்ச் சொல்லப்படுபவை 3 பாட்டுக்கள்தான்.
அவை மூன்றுமே தாழ்குலத்தாருக்கு (subalterns) எழுதியன
என்று சிறப்பாகச் சொல்லப்படுபவை ஆகும்.
கீரன் (சங்கறுப்பவன்), பாண பத்திரன் (சேரமான் ராசாவுக்கு
எழுதின சீட்டுக்கவி), பெற்றான் சாம்பன்
(தீட்சை அளிக்க வேண்டி கொற்றவன்குடி உமாபதி
சிவாச்சார்யருக்கு) <<<
 
நா. கணேசன் அவர்களே!
 
எல்லோரும் படித்து அறிந்து தெளிந்துகொள்ளவேண்டிய கட்டுரை. மிக மிக அருமை.
 
திவாகர்

2009/7/2 N. Ganesan <naa.g...@gmail.com>

srirangammohanarangan v

unread,
Jul 2, 2009, 12:19:11 AM7/2/09
to minT...@googlegroups.com
அருமை!   திவாகர்  சொல்வதுபோல்   நா  கணேசன்    சிறகடித்துப்  பறக்கிறார்!

2009/7/2 V, Dhivakar <venkdh...@gmail.com>

karth...@gmail.com

unread,
Jul 2, 2009, 3:34:11 AM7/2/09
to மின்தமிழ்
மின்தமிழில் இலக்கியப் பூக்கள் பூத்துக் குலுங்கும்
சீசன் இது போலும். மிக அருமை.

ரெ.கா.

On Jul 2, 10:43 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> 'humming' என்பதற்கு மிகப்பொருத்தமான தமிழ்ச்சொல் என்ன?
> humming - தமிழ் இலக்கியங்களில் எவ்வாறு ஆளப்படுள்ளது?
> என்றும் இம்மடலில் பார்ப்போம்.
>
> சென்னைத் தமிழ்ப் பேரகராதியில்:

> humming:http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3advanced?dbname=ta...
>
> hum:http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3advanced?dbname=ta...

N. Ganesan

unread,
Jul 2, 2009, 7:09:49 AM7/2/09
to மின்தமிழ், thami...@googlegroups.com

எல்லோரையும் போல ”அம் - அழகானது” என்ற ஒற்றைப் பரிமாணப் பொருளைப்
பிடித்துத்
தொங்கிக் கொண்டிராமல், “அம்” என்பது ஒலி பற்றியும் இருக்கும் என்ற
இயல்பான
புரிதலுக்கு வந்தீர்களே?  எனக்கு மிகவும் வியப்பாகவும்,
மகிழ்ச்சியாகவும்,
இருக்கிறது.

”இந்த இராம.கி.க்கு வேறு வேலை இல்லை, ஒலி ஒப்புமை பார்த்துக்
கொண்டேயிருப்பார்”
என்ற பரவலான பழிச்சொல்லை எண்ணிப் புன்சிரித்துக் கொள்ளுகிறேன்.  கொஞ்சங்
கொஞ்சமாய்த் தமிழ்ச்சொற்களின் சொற்பிறப்பு பலருக்கும் விளங்கும் என்ற என்
எண்ணம் மேலும் வலுப்படுகிறது. மொழிக் குடும்பங்களின் உறவும் புரியத்
தொடங்கும்
என அமைகிறேன்.

மொத்தத்தில், நேரம் செலவழித்து மிகவும், ஆழப் போயிருக்கிறீர்கள்.
உங்களுக்குப்
பாராட்டுக்கள். அறிவியல் தமிழுக்கு இது நல்ல பங்களிப்பு.

”அஞ்சிறைச் சிட்டு” என்பதையே இனி முடிவான சொல்லாய் வைத்துக் கொள்ளலாம்;
புழங்கலாம். தேன்சிட்டு என்பதை sun birds க்கு இணையாக மட்டுமே
புழங்கலாம். இது
போல வெவ்வேறு பறவைக் குடும்பங்களின் பெயர்களையும், அவற்றின் தமிழ் இணைச்
சொற்களை ஆய்ந்தால் தமிழில் அறிவியல் வளங் கூடும். செய்யுங்கள்.

ஓசனித்தல் என்ற செல்வாவின் சொல்லைக் கேட்கும் போது, ”கற்பனித்தல்”
பற்றிப்
பெரி.சந்திராவோடு உரையாடியது நினைவுக்கு வருகிறது.

ஓசுதல் என்ற வினையில் இருந்து ஓசை என்ற பெயர்ச்சொல் எழும். அதை வடமொழி
கடன்
வாங்கி ஓசனா என்ற பெயர்ச்சொல்லாக்கும். மீண்டும் தமிழில் கடன்வாங்கி
ஓசனித்தல்
என்று சொல்ல முற்படுகிறோம். என்னைக் கேட்டால் வேண்டாம். ஓசுதலே போதும்.
[கற்பித்தல் என்ற தமிழ் வினையில் இருந்து கற்பு (பெயர்ச்சொல்)>கற்பனா
(வடமொழிப்
பெயர்ச்சொல்)>கற்பனை(தமிழ்ப் பெயர்ச்சொல்)>கற்பனித்தல் (இன்னொரு
வினைச்சொல்
வேண்டுமா?  இதற்குப் பேசாமல் கற்பித்தல் என்றே சொல்லிப் போகலாமே?

அன்புடன்,
இராம.கி.

----- Original Message -----
From: "N. Ganesan" <naa.gane...@gmail.com>
To: "மின்தமிழ்" <minT...@googlegroups.com>; "Santhavasantham"

<santhav...@googlegroups.com>; <tamil...@googlegroups.com>;
<panb...@googlegroups.com>
Sent: Thursday, July 02, 2009 8:13 AM
Subject: [தமிழ் மன்றம்] அம்மெனல் (humming), அஞ்சிறைச் சிட்டு (humming
bird)

> 'humming' என்பதற்கு மிகப்பொருத்தமான தமிழ்ச்சொல் என்ன?
> humming - தமிழ் இலக்கியங்களில் எவ்வாறு ஆளப்படுள்ளது?
> என்றும் இம்மடலில் பார்ப்போம்.

> அஞ்சிறைச் சிட்டு (’ஹம்மிங்’ பறவைகள்):

> ஓசனிச் சிட்டு (பேரா. செல்வா கட்டுரை):
>http://tinyurl.com/osani-chittu
> ஓசனி, உசுனி (உஸ்-உஸ் சிட்டு), முரலி,
> ஞரலி, ஞிமிரி, சுரும்பி, .... சிட்டுகள் என்றும்
> ஓசையை வைத்து வகுக்கலாம்.

> இலக்கிய நயத்துடன், “அஞ்சிறைச் சிட்டு” என்றே ஹம்மிங் பறவைகளைச்
> சொல்லலாம். (அம்மெனல் = ஹம்மிங்).
> இந்த ‘ஹம்மிங்’ இசை தேன்சிட்டின்
> சிறகுகள் வேகமாகக் காற்றில் அதிர்வதனால் ஏற்படும் இசை
> ஹம்மிங் = அம்மெனல். அப்படியாயின்,
> ஹம்மிங் பறவை = அஞ்சிறைச் சிட்டு
> என்பதும் பொருத்தம்.

> அஞ்சிறை வண்டும், அஞ்சிறைச் சிட்டும் அருகருகே:

>http://upload.wikimedia.org/wikipedia/ta/9/9a/Hummingbird_and_a_hiney...

Kannan Natarajan

unread,
Jul 2, 2009, 11:46:59 AM7/2/09
to minT...@googlegroups.com
It is indeed the depth of scholarship that is well revealed in interpreting - "um" - though it does not denote only beauty but feeble sound as well. "U(a)mmuthal" also denotes eating!
 
The usual meaning for "anj'chirai" - signifies ONLY the soft feathers. One wonders how "humming" was construed by Dr Ganesan?
 
"Thumbi" - by itself is a word denoting the feeble sound of "Thum"."Vandu" - due to the murmuring sound of "vuN".The other words as "Thenchchittu" due to the nature of seeking honey.The same meaning is conveyed in "Mathukaram".
 
My humble suggestion is we need to tread with care whilst translating the numerous words from other languages which are known only recently due to our multi-lingual communication. Tracing from ancient Tamil literature might eventuate in conjectures leading to explanation for Nokia to "Nokki" and  Cellular phone.to "Sellidam"!
 
Passion is appreciated but care needs to be adhered in not crossing the thin line of fanatical frenzy!

N. Ganesan

unread,
Jul 2, 2009, 12:12:24 PM7/2/09
to மின்தமிழ்


On Jul 2, 10:46 am, Kannan Natarajan <thara...@gmail.com> wrote:
> It is indeed the depth of scholarship that is well revealed in interpreting
> - "um" - though it does not denote only beauty but feeble sound as well.
> "U(a)mmuthal" also denotes eating!
>
> The usual meaning for "anj'chirai" - signifies ONLY the soft feathers. One
> wonders how "humming" was construed by Dr Ganesan?
>

Hummers don't have soft feathers?

> "Thumbi" - by itself is a word denoting the feeble sound of "Thum"."Vandu" -
> due to the murmuring sound of "vuN".The other words as "Thenchchittu" due to
> the nature of seeking honey.The same meaning is conveyed in "Mathukaram".
>

Thumpi has a different reason for word formation.

> My humble suggestion is we need to tread with care whilst translating the
> numerous words from other languages which are known only recently due to our
> multi-lingual communication. Tracing from ancient Tamil literature might
> eventuate in conjectures leading to explanation for Nokia to "Nokki" and
> Cellular phone.to "Sellidam"!
>

In most languages, Onomatopoeic words are quite close:
http://en.wikipedia.org/wiki/Onomatopoeia

That's what we see in "hamming" in European languages & "ammena" in
Tamil.

However, Nokia and Sellidam are *not* onomatopoeic.

> Passion is appreciated but care needs to be adhered in not crossing the thin
> line of fanatical frenzy!

Looking forward to your Tamil research and inputs,
NG

Kannan Natarajan

unread,
Jul 2, 2009, 12:36:22 PM7/2/09
to minT...@googlegroups.com
> Hummers don't have soft feathers?
 
Well apart from the SUV, I don't want to get to the other meaning of hummer! But my clarification was to "humming bird" for soft feathers.
 
> Thumpi has a different reason for word formation.
 
Can you please explain, Thanks.
 
> However, Nokia and Sellidam are *not*  onomatopoeic.
 
I agree, but our clan is quite adpet at "ideophones":-))
 
> Looking forward to your Tamil research and inputs,
 
At this point its only Tamil search....

Jean-Luc Chevillard

unread,
Jul 2, 2009, 2:05:29 PM7/2/09
to minT...@googlegroups.com
Dear Kannan Natarajan,

I take the liberty to add pointers/references to two articles that I
have written on the topic of "ideophones" in Tamil.

1. Chevillard, Jean-Luc, 2004a, "Ideophones in Tamil: a historical
perspective on the X-enal expressives, (Olikkuṟippu Āṟṟuppaṭai)", in
Chevillard et Wilden, /South Indian Horizon: Felicitation Volume for
François Gros on the occasion of his 70th birthday/, Publication du
département d’Indologie N°94, Institut Français de Pondichéry. (pp.
407-433).

2. Chevillard, Jean-Luc, 2004b: “Ideophones in Tamil: Historical
Observations on the morphology of X-enal expressives.”
URL:
<http://www.fas.nus.edu.sg/journal/kolam/VOLUMES/kolam9&10/chevillard.htm>
[(it appeared in the january 2004 issue of the electronic journal Kôlam
<http://www.fas.nus.edu.sg/journal/kolam/VOLUMES/kolam9&10/inhalt0910.html>
(that issue was edited by edited by Sascha Ebeling, Thomas Lehmann and
Ulrike Niklas)

I mention "ammeṉal" (அம்மெனல்) which is attested in the Kalittokai and in
Cīvakacintāmaṇi
in the 1st article on page 421.

I also mention it in the second article.

Best wishes

-- Jean-Luc Chevillard (Paris)
<http://www.linguist.univ-paris-diderot.fr/~chevilla/>

Kannan Natarajan a écrit :
> [...]
> our clan is quite adept at "ideophones":-))
>

வினோத் ராஜன்

unread,
Jul 2, 2009, 2:31:17 PM7/2/09
to மின்தமிழ்
Why do I aww Raama. Kii's reply, as coming from Naa. Ganesan's
account ? (Or is it only me ? )

Lord Google is messing up again ?

BTW:

ஹம்மிங் பறவை would be simple & nice too ;)

Just my two cents :)

வினோத் ராஜன்

unread,
Jul 2, 2009, 2:35:22 PM7/2/09
to மின்தமிழ்
Read "aww" as "get" :)

I have no idea, abt the position of my fingers when I typed that *)

N. Ganesan

unread,
Jul 2, 2009, 4:24:25 PM7/2/09
to மின்தமிழ்


Qaka234x12 am ciRai vaNTin2 mel paRai tozuti

QkuRu172x01 tAaval am ciRai no paRai vAval
QkuRu172x02 pazu maram paTarum paiyuL mAlai


ng

Kannan Natarajan

unread,
Jul 3, 2009, 11:35:37 PM7/3/09
to minT...@googlegroups.com
"Humming" is a modular expression the origin of which I wonder whether an European thinking is the platform. As a diplomatic french man, I hope you would concur that we need to tread with care when we establish a translation for "guitar" as "nara(u)m'biyaal" or "Periyaal".
 
Let the Tamil language be enriched with new words learning from the nuances of other global languages. I fear that "a(u)muthal" has been used for buzzing of bees anywhere in Tamil literature! Though I would appreciate,if my stand could be clarified with succinct evidence.
 
"Vandu Muralum", "Vandu Paadum", "Vandu Isaikkum" - are the common expressions noted,whiilst "ammum vandukal" has not been mentioned. I wonder due to the "Ha" sound in "humming" whether  "am" has been used in "ammeṉal" (அம்மெனல்)? This derivation can create a conundrum for "hymn" in Tamil and one wonders whether some might consider "immenal" as a Tamil translation:-))
 
Tamils expect more new information from other languages & the sharing of knowledge in the creation of new words would significantly benefit all languages. In Tamil, we say that the cow makes a sound as "amma" whilst in English, the primary class children are taught that the cow "moo's". It is contradictory that Tamils claim the cow has "Tamil" in its voice! (Ideophone!)

N. Ganesan

unread,
Jul 4, 2009, 8:16:03 AM7/4/09
to மின்தமிழ்


On Jul 3, 10:35 pm, Kannan Natarajan <thara...@gmail.com> wrote:
> "Humming" is a modular expression the origin of which I wonder whether an
> European thinking is the platform. As a diplomatic french man, I hope you
> would concur that we need to tread with care when we establish a translation
> for "guitar" as "nara(u)m'biyaal" or "Periyaal".
>

peryiaal - the descriptions in lit. do not fit with guitar.

> Let the Tamil language be enriched with new words learning from the nuances
> of other global languages. I fear that "a(u)muthal" has been used for
> buzzing of bees anywhere in Tamil literature! Though I would appreciate,if
> my stand could be clarified with succinct evidence.
>
> "Vandu Muralum", "Vandu Paadum", "Vandu Isaikkum" - are the common
> expressions noted,whiilst "ammum vandukal" has not been mentioned. I wonder
> due to the "Ha" sound in "humming" whether  "am" has been used in "ammeṉal"
> (அம்மெனல்)? This derivation can create a conundrum for "hymn" in Tamil and
> one wonders whether some might consider "immenal" as a Tamil translation:-))
>

In old lit., we see: 'pan isai paatal am pani vandu'
hum and um are connected in Tamil speech.


> Tamils expect more new information from other languages & the sharing of
> knowledge in the creation of new words would significantly benefit all
> languages. In Tamil, we say that the cow makes a sound as "amma" whilst in
> English, the primary class children are taught that the cow "moo's". It is
> contradictory that Tamils claim the cow has "Tamil" in its voice!
> (Ideophone!)

Isn't "moos" related with words like Mom (of English)?

Isn't in Indian languages: maa, maa to which Tamil add an a- as cow's
sound, ammaa?
World over, maa maa & paa paa are children's speech words (as lips
touch & child starts
speaking those), Tamil makes them ammaa & appaa.

N. Ganesan

unread,
Jul 4, 2009, 8:36:49 AM7/4/09
to மின்தமிழ்
> Qaka234x12 am ciRai vaNTin2 mel paRai tozuti
>
> QkuRu172x01 tAaval am ciRai no paRai vAval
> QkuRu172x02 pazu maram paTarum paiyuL mAlai
>

அம்மெனல் ammeṉal

, n. 1. Onom. expr. of filling or overflowing, as of water;
நீர்த்தும்பற் குறிப்பு. அம்மெனக் கண்ணீ ரரும்பி (பதினொ. திரு விடை.

மும். 10). 2. Onom. expr. of humming; ஓர் ஒலிக்குறிப்பு. (பிங்.)

அம்மேயோ ammēyō
, int. < அம்மை. An exclamation of grief; ஒரு துக்கக்குறிப்பு. (சீவக.
1271, உரை.)

அம்மேயோ என்னும் வார்த்தை போல உம்மேயோ என்றும் இலக்கியத்தில் உள்ளதா?

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jul 4, 2009, 8:56:02 AM7/4/09
to மின்தமிழ், Santhavasantham, tamil...@googlegroups.com
மரு. ந. கண்ணன் எழுதினார்:

> I fear that "a(u)muthal" has been used for
> buzzing of bees anywhere in Tamil literature!

ஓர் இலக்கியச் சான்று தருகிறேன்.

இசை வல்ல ஞானசம்பந்தர் தேவாரம்:
“பண் அம் கெழுவு பாடலினொடு ஆடல் பிரியாத பரமேட்டி பகவன்”.
இராகத்தால் ஹம் இயைகின்ற பாட்டு என்பது பொருள்.

பிங்கலந்தை நிகண்டு ’ஹம்மிங்’ ஓசையை அம் என்கிறது.

மதறாஸ் லெக்ஸிகன்:


அம்மெனல் ammeṉal
, n. 1. Onom. expr. of filling or overflowing, as of water;
நீர்த்தும்பற் குறிப்பு. அம்மெனக் கண்ணீ ரரும்பி (பதினொ. திரு விடை.
மும். 10). 2. Onom. expr. of humming; ஓர் ஒலிக்குறிப்பு. (பிங்.)

அம்மேயோ ammēyō
, int. < அம்மை. An exclamation of grief; ஒரு துக்கக்குறிப்பு. (சீவக.
1271, உரை.)

பண் இசைப் பாடல் அம் பனி வண்டு - கம்பன்
“நல்ல பண்ணொடு பொருந்திய பாடலால் ஹம் இசைத்து,
மனத்தைக் குளிர்விக்கும் வண்டு”.

> Tamils expect more new information from other languages & the sharing of
> knowledge in the creation of new words would significantly benefit all
> languages. In Tamil, we say that the cow makes a sound as "amma" whilst in
> English, the primary class children are taught that the cow "moo's". It is
> contradictory that Tamils claim the cow has "Tamil" in its voice!
> (Ideophone!)

Isn't "moos" related with words like Mom (of English)?

Isn't in Indian languages: maa, maa to which Tamil add an a- as cow's
sound, ammaa? World over, maa maa & paa paa are children's speech
words (as lips
touch & child starts speaking those), Tamil makes them ammaa & appaa.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jul 4, 2009, 12:35:45 PM7/4/09
to சந்தவசந்தம், tamil...@googlegroups.com, mint...@googlegroups.com
some more humming examples:

அந்திக் கோவலர் அம் பணை இமிழ் இசை - அக. நா.

யாழ் இசை அஞ்சிய அம் சொல் ஏழை கோயில், கம்.

Qaka234x12 am ciRai vaNTin2 mel paRai tozuti

QkuRu172x01 tAaval am ciRai no paRai vAval
QkuRu172x02 pazu maram paTarum paiyuL mAlai

will use them in an essay later.

ng

Message has been deleted

N. Ganesan

unread,
Jul 4, 2009, 1:17:31 PM7/4/09
to மின்தமிழ், Lakshmi Srinivas, Jean-Luc Chevillard, George Hart, Asko Parpola, rajam

On Jul 3, 10:35 pm, Kannan Natarajan <thara...@gmail.com> wrote:

> "Humming" is a modular expression the origin of which I wonder whether an
> European thinking is the platform. As a diplomatic french man, I hope you
> would concur that we need to tread with care when we establish a translation
> for "guitar" as "nara(u)m'biyaal" or "Periyaal".

> Let the Tamil language be enriched with new words learning from the nuances
> of other global languages. I fear that "a(u)muthal" has been used for
> buzzing of bees anywhere in Tamil literature! Though I would appreciate,if
> my stand could be clarified with succinct evidence.

ஆம். இலக்கியத்தை ஆழமாகப் படிக்கும் நும் போன்றவர்கள் தமிழில்
நிறைய எழுதவேண்டும். 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஐராவதம்
சொன்னார் - தமிழில் எழுத ஆசை வந்திருக்கிறது என.
உங்களைப் போன்ற படித்த, தமிழ்ப் பாரம்பரியம் மிக்க அறிவியல்
நிபுணர்கள் தமிழில் உரையாட வரவேண்டும். மக்களுக்கு
விளங்கும், விளங்கவைப்பது அறிஞர் கடமை அல்லவா?

-------

இப்பொழுதுதான் இந்தாலஜி குழுவில் ஜார்ஜ் ஹார்ட் அவர்களுக்கும்,
சுடலைமுத்து பழனியப்பன் அவர்களுக்கும் நடக்கும் மடலாட்டைப்
பார்க்கிறேன். எப்பொழுதுமே பழனியப்பன் சங்க இலக்கியங்களில்
சாதி இல்லை என்ற அவர் கருதுகோளுக்குச் சொல்லும் காரணங்கள் வினோதமாக
இருக்கும். இந்தியவியல், மாந்தவியல் ஒப்புமைகளில் அது
அடிபட்டுப் போவதைப் பொறுமையாக ஹார்ட் விளக்கியுள்ளார்கள்.

ஒரே இங்கிலீசில் தன் சொந்தப் புனைவுகளை எழுதிக் கொண்டிருந்தால்
போதாதே. இதுபோன்ற தமிழ் அறிந்த பேராசிசிரியர்கள் உள்ள
அவைக்கண் தமிழில் எழுதி விளக்கினால் புரிந்துகொள்ளலாம்.
வெறும் இங்கிலீசில் தமிழறியாக் கூட்டத்திடையே பேசுவது
பழந்தமிழ் இலக்கியதின் கருதுகோள்களை, உவேசா போன்றோர்
தேடி எடுத்த பொக்கிஷத்தை திரிக்கும் திரிபுவாதம் ஆகிவிடும்
என்றஞ்சுகிறேன்.

தமிழில் புனைவுகளை எழுதினால் நலம்பயக்கும், அனைவருக்கும்
புரியும் என்பது என் வேணவா. முயற்சி எடுப்போம்.

வாழ்க வளமுடன்.

அன்புடன்,
நா. கணேசன்

> "Vandu Muralum", "Vandu Paadum", "Vandu Isaikkum" - are the common
> expressions noted,whiilst "ammum vandukal" has not been mentioned. I wonder
> due to the "Ha" sound in "humming" whether  "am" has been used in "ammeṉal"
> (அம்மெனல்)? This derivation can create a conundrum for "hymn" in Tamil and
> one wonders whether some might consider "immenal" as a Tamil translation:-))

> Tamils expect more new information from other languages & the sharing of
> knowledge in the creation of new words would significantly benefit all
> languages. In Tamil, we say that the cow makes a sound as "amma" whilst in
> English, the primary class children are taught that the cow "moo's". It is
> contradictory that Tamils claim the cow has "Tamil" in its voice!
> (Ideophone!)


Cc: LS, JLC, A. Parpola, G. L. Hart, V. S. Rajam

Kannan Natarajan

unread,
Jul 5, 2009, 12:33:07 AM7/5/09
to minT...@googlegroups.com
Thanks to Dr Ganesan was identifying some of the Sanga Kaala hymns with the usage of the word "am". Despite the explanation, I need to convince further to my search that rather than wearing the "retrospect-acles" - in appraising the ancient texts for the words "humming", one needs to evolve in carrying out prospective analysis. Since, the facade of Tamil translations of certain Tamil words are either literal creations or conjuring tricks!

Hari Krishnan

unread,
Jul 5, 2009, 11:57:44 PM7/5/09
to santhav...@googlegroups.com, minT...@googlegroups.com


2009/7/4 N. Ganesan <naa.g...@gmail.com>


On Jul 4, 9:18 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On Jul 4, 8:22 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
>
> > "பணங்கெழுவு பாடலினொ டாடல்பிரி யாதபர மேட்டிபகவன்"
>
> > இதை இவ்வாறு பொருள்கொள்ளவேண்டுமோ?
>
> "பண் அங்கு எழுவு பாடலினொடு" என்று பிரித்தால்
> இசையியலின் கலைச் சொல்லாகும் ”கெழுவுதல்”
> மறைகிறது. அதனால் தான், ”பண் அம் கெழுவுதல்”
> என்று உரைகாரர் இசையொடு பொருத்திச் சொல்லுகிறார்கள்.
>

நான் எடுத்துக்காட்டிய தேவாரப் பாடல் முழுமையும் பார்ப்போம்:


பண் அம் கெழுவு பாடலினொடு ஆடல் பிரியாத பரமேட்டி பகவன்
அணங்கு கெழுவு பாகம் உடை ஆகம் உடை அன்பர்பெருமானது இடம் ஆம்
இணம் கெழுவி ஆடுகொடி மாடம் அதில் நீடுவிரை ஆர் புறவு எலாம்
தணம் கெழுவி ஏடு அலர்கொள் தாமரையில் அன்னம் வளர் சண்பை நகரே!

இணம் (= இணக்கம்) < இணை-, இணங்கு-.
’ இணைந்தாடும்/ இணங்கி ஆடும் கொடிகளை உடைய மாடம்’.

அணங்கெழுவி என்னும் இரண்டாம் அடி முதற் சீரை ”அணங்கு கெழுவி”
என்று பதம் பிரிப்பதுபோல, இணங்கெழுவி = இணங்கு கெழுவி என்றும்
பிரிக்கலாம்.

நா. கணேசன்





--
அன்புடன்,
ஹரிகி.

Hari Krishnan

unread,
Jul 5, 2009, 11:58:17 PM7/5/09
to santhav...@googlegroups.com, minT...@googlegroups.com


2009/7/4 N. Ganesan <naa.g...@gmail.com>
கெழுவுதல் என்னும் வினைச்சொல்லை பிரித்துவிட்டால்
பொருள் மங்குகிறது, சிறப்பில்லை. அப்படிப் பிரித்தால் “அங்கு” என்ற சொல்
எதற்கு?
அதன் பொருள் என்ன?

கெழுவு என்பது பெயர்சொல்லாவகவும் பயன்படும், வினைச்சொல்லாகவும் பயன்படும்.  கெழுவுதல் என்ற வினைச்சொல்லுக்குப் பெரும்பாலும் பொருந்தியிருந்தல், அல்லது கூடியிருத்தல் அல்லது கலந்திருத்தல் என்ற பொருளே உண்டு.  பெரும்பாலும் இந்தப்  பாபொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றேன்.

ஒழுகலரி தழிகலியில் உழியுலகு பழிபெருகு வழியை நினையா
முழுதுடலி லெழுமயிர்கள் தழுவுமுனி குழுவினொடு கெழுவுசிவனைத்
தொழுதுலகில் இழுகுமல மழியும்வகை கழுவுமுறை கழுமலநகர்ப்
பழுதிலிறை யெழுதுமொழி தமிழ்விரகன் மொழிதகையவே.

வழிமொழித் திருவராகம் (திருப்பிரமபுரம்) திருஞான சம்பந்தர்

முனிகுழுவினொடு கெழுவு சிவன்.  இந்தச் சொல்லுக்கு நிறைதல், மயங்குதல் (confused) பற்றுக்கொள்ளுதல் என்றெல்லாமும் பொருள் உண்டு.  இதை எவ்வாறு இசைக் கலைச்சொல் என்று சொல்கிறீர்கள் என விளங்கவில்லை.  அஞ்சிறைக்குள் கெழுவு எங்ஙனம் கெழுவாயிற்று (கெழுவு: நட்பு. கெழுதகைமை) என்பதும் புரியவில்லை.

Kannan Natarajan

unread,
Jul 6, 2009, 2:22:33 AM7/6/09
to minT...@googlegroups.com
> கெழுவுதல் என்னும் வினைச்சொல்லை பிரித்துவிட்டால்
>
பொருள் மங்குகிறது, சிறப்பில்லை. அப்படிப் பிரித்தால் “அங்கு” என்ற
> சொல் எதற்கு? பொருள் என்ன?
 
 
I'm reminded of the word "Anbukkezhumiya" at the start of any talk by Amarar Navalar Nedunchezhian.

N. Ganesan

unread,
Jul 10, 2009, 8:46:22 AM7/10/09
to மின்தமிழ், santhav...@googlegroups.com

On Jul 4, 7:16 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> This derivation can create a conundrum for "hymn" in Tamil and
> > one wonders whether some might consider "immenal" as a Tamil translation:-))
>

If you are looking for "im" (in other languages, it's "him") onom.
expression,
there are quite a few in Tamil lit.

~ NG

இம் எனும் ஒலிக்குறிப்பு

அக. 318

வரையிழி யருவிப் பாட்டொடு பிரச
முழவுசேர் நரம்பின் இம்மென இமிரும்
பழவிறல் நனந்தலைப் பயமலை நாட!-

-------------

குறிஞ்சிப் பாட்டு - கபிலர்

நைவளம் பழுநிய பாலை வல்லோன்
கை கவர் நரம்பின், இம்மென இமிரும்
மாதர் வண்டொடு, சுரும்பு நயந்து இறுத்த,
தாது அவிழ் அலரித் தா சினை பிளந்து,

----------

நற். 30 மருதம் - கொற்றனார்

கண்டனென் மகிழ்ந கண்டு எவன்செய்கோ
பாணன் கையது பண்புடைச் சீறியாழ்
யாணர் வண்டின் இம்மென இமிரும்
ஏர்தரு தெருவின் எதிர்ச்சி நோக்கி நின்
மார்பு தலைக்கொண்ட மாணிழை மகளிர்
கவல் ஏமுற்ற வெய்து வீழ் அரிப் பனி
கால் ஏமுற்ற பைதரு காலை
கடல்மரம் கவிழ்ந்தெனக் கலங்கி உடன் வீழ்பு
பலர் கொள் பலகை போல
வாங்கவாங்க நின்று ஊங்கு அஞர் நிலையே

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன் யாரையும்
அறியேன் என்றாரக்குத் தோழி சொல்லியது

Kannan Natarajan

unread,
Jul 10, 2009, 10:07:01 PM7/10/09
to minT...@googlegroups.com
Dr Ganesan, I was only alluding to the probability for the word "immenal" due to the prevalence of the word "im" in Thamizh literature. I'm concerned to note the research for a connectivity with the prevalent words in other languages to that in Thamizh literature of yore. Following a discussion with an English literature emeritus, I was informed that any new word in English coined either by a medical,technical,juristic intelligentsia will be analysed by English language experts - similar to Phase 2 trial for grammatical syntactical formation and semantic changes before dissemination into the wider community for usage.

One wonders why Thamizh language users alone tend to be autocratic and not make use of the Thamizh language experts for the process of coinage of new words! When technical & medical fields can work together as "biotechnology", likewise - biostatistics,forensic medicine,biochem,biophysics. Why do we still have a hesitation to use language + science/medical/law/accountancy = lingua science et al!

A food for thought - Would a technical,medical,juristic,research & development person allow a Thamizh language expert to dabble in their areas? Let this "humming" evolve into a more audible resonance!

மு இளங்கோவன்

unread,
Jul 2, 2009, 6:46:43 AM7/2/09
to மின்தமிழ்
அஞ்சிறைச்சிட்டு சிறப்பாக உள்ளது.
அதே நேரத்தில் பாயம் பாடல் என்ற ஒரு சொல் சங்க நூலில் உண்டு.
புணர்ச்சிக்குறிப்பில் பாடும் பாடல் என்று கருதினார் வீ.ப.கா.சு.
பாயம்பாடல் என்பது தனித்து மனத்துள் பாடும் பாடல்.
குறிஞ்சிப்பாட்டில் பாயம் பாடல் குறிப்பு உள்ளது.
ஆனால் இவை யாவும் ஊகம்தானே தவிர உண்மை என்று நம்ப சான்றில்லை.
அஞ்சிறைச்சிட்டு என்பதை ஏற்கலாம்.
கணேசன் ஐயாவுக்குப் பாராட்டு
மு.இளங்கோவன்
புதுச்சேரி
Reply all
Reply to author
Forward
0 new messages