Re: [MinTamil] யாமக் குளிரில் காயும் தணப்பு !!

158 views
Skip to first unread message

Tthamizth Tthenee

unread,
Aug 3, 2010, 11:31:47 AM8/3/10
to mint...@googlegroups.com
உங்கள் கண்ணுக்குச் சமத்தாக
தீட்டிக் கொண்டிருக்க வேண்டியது
பொறுமை.

ஆஹா  என்னவொரு அற்புதமான  ஆரம்பம்
 
பொறு மை  அவ்வளவு அற்புதமான  மையா
தீட்டிக்கொண்டு  காத்திருக்க வேண்டியதுதான்
 
கொலைவில் அறியா திருவில் போர் என்று வேறு சொல்லிவிட்டீர்கள்
 
பயமே அறியாமல் காத்திருக்கிறேன்
 
இளங்கன்று  பயமறியாது
 
அன்புடன்
தமிழ்த்தேனீ.
 
3-8-10 அன்று, srirangammohanarangan v <ranga...@gmail.com> எழுதினார்:
>>”தமிழ் ஒளியின் ரேகைகள்” எனும்
இழையில் பல்வேறு கவிஞர்களை அறிமுகப்படுத்துகிறார். இது மிகவும் அரிய
செயல். பெரும்பாலும் இலக்கிய உலகில் அடுத்த படைப்பாளியைப் பாராட்டும்
மனம் வராது. சிட்டி, ரங்கன் போன்று சில exceptions! அந்த இழையை
மின்தமிழிலும் இட வேண்டுகிறேன்.<<
 
பொதுவாக ஓர் இழையை ஆரம்பிக்கும் போது இப்படி முன் சொன்னவர் வார்த்தையை இட்டு ஆரம்பிக்கும் வழக்கம் என்னிடம் இல்லை. ஆனால் இங்கு ஒரு விதிவிலக்காக இப்படி ஆரம்பித்தேன்.
ஏனெனில் இங்கு கவிதையைப் பற்றி பிரஸ்தாபிக்க எனக்கு எப்பொழுதுமே ஒரு தயக்கம்.
 
கவிதை என்பது மிகவும் நளினமான சமாச்சாரம். நீங்களோ  இரும்புக்கடலையை வறுத்துத் தின்றுகொண்டிருப்பவர்கள்.
உங்களிடம் ஒரு சின்ன குழந்தை வந்து தான் கட்ற்கரை வெளியிலும், ககனத்துப் பொந்துகளிலும் தேடித் திரட்டிய கிளிஞ்சல்கள், முத்துச் சிப்பிகள், அழகு அழகான சின்ன சின்ன வலம்புரிச் சங்குகள் இவற்றையெல்லாம் இதோ பார் என்று காட்டத் துணியுமோ?
அந்த அளவிற்குக் குளிர் விட்டுப்போன குழந்தையும் அல்லன் யான்.
 
நீங்களும் குழந்தைகளாக மாறி குழந்தைமையின் உலகங்களில் சுற்றித் திரிய சம்மதம் என்றால் நிறைய செல்வங்கள் பொறுக்கி எடுக்கக் காத்திருக்கின்றன.
 
உங்கள் உலகத்தில் வேண்டுமானால் நான் ஓர் உதவாக்கரையாக இருக்கலாம்.
ஆனால் குழந்தைகளின் உலகத்தில் நான் ஓர் சக்ரவர்த்தி.
அவ்வப்பொழுது வேட்டைக்குப் போவேன்.
அபூர்வ மிருகங்கள், பக்ஷிகள் தென்படும்.
இந்த வேட்டையோ கொலைவில் அறியா திருவில் வேட்டை!
 
இந்தக் குழந்தைகளின் உலகத்தில் படையெடுத்துச் சென்று பலநாடுகளைக் கைப்பற்றி, பல தேசத்து இளவரசிகளை என் அந்தப்புரத்தின் மகாராணிகளாக ஆக்கியிருக்கிறேன்.
படை போர் என்றதும் அழிவோ, சண்டையோ என்றெல்லாம் முழிக்காதீர்கள்.
நான் தான் சொன்னேனே கொலைவில் அறியா திருவில் போர் என்று.
 
ஐயோ சார் நீங்க ரொம்ப திருதிருன்னு முழிக்கிறீங்க!
உங்களுக்கு எங்க குழந்தைகளின் உலகம் என்னென்னே சட்டுனு புரியல்லை.
போகட்டும்
எங்கள் கஜானாவில் அபரிமிதமாகக் கொட்டிக்கிடக்கும் பல அற்புத மணி மாணிக்கங்களையும், 
எங்கள் நந்தவனத்தில் சுயேச்சையாகத் திரியும் அண்டாண்ட பக்ஷிகள் பலவற்றையும் பார்த்துக்கொண்டே வாருங்கள்.
 
வானம் உங்களுக்கும் வசப்படும்.
மெல்ல சிறகு விரியும்.
பயப்படாதீர்கள்.
ஆரம்பத்தில் கட்டாந்தரையை விட்டுக்
கால் மேலெழுவதில்,
சிறுநீர் முட்டிக்கொண்டு வரும்.
எல்லாம் போகப் போகச் சரியாகிவிடும்.
 
பின் ஒரு நாள்
நீங்களே சொல்வீர்கள்.
நான் எப்பொழுதுமே
பறந்துகொண்டுதானே இருந்தேன்!
பின் எப்படி
குப்பை மேட்டில்
குந்தியிருக்கும்
வெற்று விடைக்கோழியானேன்?
என்று.
அதுவரை
உங்கள் கண்ணுக்குச் சமத்தாக
தீட்டிக் கொண்டிருக்க வேண்டியது
பொறுமை.
 
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
 
***
*
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

meena muthu

unread,
Aug 3, 2010, 12:22:39 PM8/3/10
to mint...@googlegroups.com
இதென்ன அதிசயம்!இங்கு தென்றல் வீசுது தெம்மாங்கு பாடுதே!

ஒண்ணுமே புரியலே...!

எல்லோருக்குள்ளும் குழந்தைகள் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள் இதோ..
இப்போது ஒவ்வொருவராக ஓடிவருவார்கள்..!

//நீங்களும் குழந்தைகளாக மாறி குழந்தைமையின் உலகங்களில் சுற்றித் திரிய சம்மதம் என்றால் நிறைய செல்வங்கள் பொறுக்கி எடுக்கக் காத்திருக்கின்றன. //

2010/8/3 srirangammohanarangan v <ranga...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Aug 3, 2010, 12:49:18 PM8/3/10
to mint...@googlegroups.com
ஒளிந்து மட்டுமல்ல. ஓடி வர காத்திருக்கிறார்கள், பள்ளியிலிருந்து ஓடோடி
வருவதைப் போல. எனக்கு Jonathan Livingstone Seagull ஞாபகத்திற்கு
வருகிறது.
இன்னம்பூரான்

2010/8/3 meena muthu <ranga...@gmail.com>:

Tthamizth Tthenee

unread,
Aug 3, 2010, 1:34:13 PM8/3/10
to mint...@googlegroups.com

வையத்தையே  விழுங்கும் விண் மீன்போல்
விரித்த கரு விழியால் அளந்தது  குழந்தை
கையகல இடைவெளியில்  கண் திறந்து
மெய்நிறைந்த  இதழ் விரித்து மண்ணளந்து
வியப்பின் குறியீட்டாய்  பொக்கை வாய் திறந்து
கண்ணிமைக்கும்  கணநேர இடைவெளியில்
இமை மூடித் திறந்தது ஒரு முறை வையமுழுதும்
அதன் கருவிழியில் நிறைந்து ஒளிர்கிறது
அம்மாவின் முந்தானை மட்டும் கைவிடாமல்

அன்புடன்
தமிழ்த்தேனீ

3-8-10 அன்று, Innamburan Innamburan <innam...@googlemail.com> எழுதினார்:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Tthamizth Tthenee

unread,
Aug 3, 2010, 1:49:29 PM8/3/10
to mint...@googlegroups.com
எச்சரிக்கையை  பின் பற்றுகிறேன்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

3-8-10 அன்று, srirangammohanarangan v <ranga...@gmail.com> எழுதினார்:
தேனியாரே! நீங்கள் கற்க வேண்டிய பாடம் நம்பர் 1 --
 
இந்த இழையில் நீங்கள் அதிக பட்சம் சந்தேகிக்க வேண்டியது மொழியை. நான் பயன்படுத்தும் எந்தச் சொல்லையும் நம்பி அதன்மேல் சாய்ந்துவிடாதீர்கள். எவையும் அவையவையே அல்ல.
 
குழந்தை என்றதும் விடுவிடு என்று தாயின் சேலையைப் பிடித்திருக்கும் குழந்தை என்று சித்திரம் தீட்டிவிட்டீர்கள் பாரும். நான் குறிப்பிட்ட குழந்தை இந்தக் குழந்தையே அன்று.

Tthamizth Tthenee

unread,
Aug 3, 2010, 1:54:10 PM8/3/10
to mint...@googlegroups.com
ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹாஆஆஅ
 
கட்டுப்பட்டால்தான்  விளையாட முடியும்
 
விதி முறைகளை  மீற மாட்டேன்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
3-8-10 அன்று, srirangammohanarangan v <ranga...@gmail.com> எழுதினார்:
ஸ்வாமி! எச்சரிக்கை இல்லை இது.
ஒரு விளையாட்டின் விதிமுறைகள் மாதிரி என்று கொள்ளும்.
‘இச்சா, இனியா’ என்றால் ஒரு கட்டத்திற்கு மேல்தான் கண்ணைத் திறக்க வேண்டும் என்று குழந்தைகள் ஒப்பந்தப்படுவதில்லையா? அதைப்போல். :--)))

geeyes

unread,
Aug 3, 2010, 1:54:44 PM8/3/10
to மின்தமிழ்
ரிச்சர்ட் பாஷின் Jonathan Livingstone Seagull தமிழில்
மொழிபெயர்க்கப்பட்டு 'யுனைட்டெட் ரைட்டர்ஸ்' சென்னை 14 -மூலம் சில
ஆண்டுகளுக்கு முன் சிறப்பாக வெளியிடப்பட்டிருக்கிறது. படித்துச்
சுவையுங்கள்.

அன்புடன்,
ஜி.ஸன்தானம்

On Aug 3, 9:49 pm, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:

Tthamizth Tthenee

unread,
Aug 3, 2010, 2:42:45 PM8/3/10
to mint...@googlegroups.com
கட்டுப்பாடு இல்லாத இடத்தில் ஒப்பந்தம்  போடவும் முடியாது
அப்படிப் போட்டால்  அது கடிவாளம் இல்லாத  குதிரைக்கு  ஒப்பாகும்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

3-8-10 அன்று, srirangammohanarangan v <ranga...@gmail.com> எழுதினார்:
On 8/3/10, Tthamizth Tthenee <rkc...@gmail.com> wrote:
ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹாஆஆஅ
 
கட்டுப்பட்டால்தான்  விளையாட முடியும்
 
சாரி! ஒப்பந்தப்பட்டால்தான் விளையாட முடியும்.
கட்டுப்பாடு இல்லாத இடத்தில்தான் ஒப்பந்தம் இருக்கும்

Innamburan Innamburan

unread,
Aug 3, 2010, 6:53:54 PM8/3/10
to mint...@googlegroups.com
சவாரி செய்யும்போது குதிரைக்கு கடிவாளமில்லை; ஜட்கா ஓட்டும்போது மட்டும் ஏன்?

2010/8/4 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

Tthamizth Tthenee

unread,
Aug 4, 2010, 2:00:48 AM8/4/10
to mint...@googlegroups.com
சவாரி செய்யும்போது குதிரைக்கு கடிவாளமில்லை
 
ஏன் இல்லை?
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

4-8-10 அன்று, Innamburan Innamburan <innam...@googlemail.com> எழுதினார்:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Innamburan Innamburan

unread,
Aug 4, 2010, 3:31:13 AM8/4/10
to mint...@googlegroups.com

X4DAD00Z.jpg

2010/8/4 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Aug 4, 2010, 3:34:54 AM8/4/10
to mint...@googlegroups.com
See attachment

2010/8/4 Innamburan Innamburan <innam...@googlemail.com>
Horse riding.jpg

Hari Krishnan

unread,
Aug 4, 2010, 4:24:03 AM8/4/10
to mint...@googlegroups.com

2010/8/4 Innamburan Innamburan <innam...@googlemail.com>
See attachment

லகான் இருக்கிறது.  படத்தில் குதிரையின் முகத்துக்கு அருகில் தொங்கும் கயிறுபோன்ற அமைப்பைப் பாருங்கள்.  லாகான், சேணம், கலணை மூன்றும் இல்லாமல் குதிரையை ஓட்டும் வழக்கமில்லை. 

பககரை விசித்ரமணி பொற்கலணை இட்ட நடை 
பட்சியெனும் உக்ர துரகமும்......என்று அருணகிரி பாடுகிறார்.  மயில் என்கின்ற உக்ரம் நிறைந்த குதிரைக்கே இந்தப் பக்கரை, கலணை எல்லாம் வேண்டியிருக்கிறது!  சொல்லுக்கு அர்த்தம் புரியவில்லை.  அதனால் இந்த விஷயம் தொன்மைக் காலத்திலிருந்து வழங்கிவரும் ஒன்று என்பதை உணர முடியவில்லை.  பக்கரை என்றால் Stirrup.  சேணம் என்றால் Saddle மேல் போடப்பட்டுள்ள மெத்தை.  கலணை என்றால் Saddle.

சென்னையில் உள்ள மன்றோ சிலையைப் பார்க்காதவர்கள் இருக்க முடியாது.  எல்லா சினிமாவிலும் காட்டியாச்சு அதை.  இங்க ஒரு படம் போடுகிறேன்.  

இதுல பாத்தீங்கன்னா, லகான் இருப்பது தெரியவரும்.  குதிரையின் முகத்திலிருந்து கழுத்துக்கு வரும் (அங்கிருந்து கையால் பற்றப்படும்) தோல்.  சிலையைப் பாருங்கள்.  நன்றாகவே தெரியும்.  இந்தச் சிலையைச் செதுக்கிய சிற்பி ஒரு தப்பு பண்ணிட்டார்.  வேலையெல்லாம் முடிஞ்சு ஹப்பாடீ என்று பெருமூச்சு விட்டப்புறம், சிலையை நிறுவிய அப்புறம் யாரோ போய் அவரிடம் ‘என்னய்யா இது...குதிரை மேல stirrup இல்லாம எப்படி ஓட்ட முடியும்?  அத எங்க விட்ட?’ என்று கேட்டிருக்கிறார்கள்.  தான் செய்த தவறைத் திருத்தக்கூட முடியாத நிலை ஏற்பட்டிருப்பதை உணர்ந்த சிற்பி மாரடைப்பால் காலமானார் என்று பெரியவர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.  சிலையைப் பாருங்கள்.  காலை வைத்துக் கொள்வதற்கான உலோக வளையம்--stirrup--இருக்காது.  

ஆகவே, லகான் இல்லாமல் குதிரைச் சவாரி இல்லை.  (குதிரையின் மேல் அமர்ந்தபடி இருக்கும் சிலைகளில், குதிரை நான்கு கால்களையும் ஊன்றி இருந்தால், சம்பந்தப்பட்டவர் எந்தப் போருக்கும் செல்லவில்லை என்று பொருள்.  ஒரு முன்காலைத் தூக்கியிருந்தால் அவர் போருக்குச் சென்று உயிரோடு திரும்பியிருக்கிறார்; இரண்டு கால்களையும் தூக்கியிருந்தால் அவர் போரில் மரணமடைந்தார் என்றெல்லாம் பொருளுண்டு.  ‘ஆரு கேட்டா இதெல்லாம்?  நா கேட்னா?’ என்று முணுமுணுக்கும் முன்னால் போய்விடுகிறேன்.  சும்மா இருக்க முடியாத கைய ஒடச்சு அடுப்புக்குள்ள வச்சிடலாம்னு பாத்தா....எல்லாம் கேஸ் அடுப்பா இருக்கு....)  வர்ரேன்....
--
அன்புடன்,
ஹரிகி.

Hari Krishnan

unread,
Aug 4, 2010, 4:38:17 AM8/4/10
to mint...@googlegroups.com

2010/8/4 Innamburan Innamburan <innam...@googlemail.com>

சவாரி செய்யும்போது குதிரைக்கு கடிவாளமில்லை; ஜட்கா ஓட்டும்போது மட்டும் ஏன்?

நீங்கள் சொல்ல வருவது என்னவென்று இப்போதுதான் புரிகிறது.  கடிவாளம் என்பது கண்ணுக்கு மாட்டப்படும் மறைப்பு இல்லை.  கடிவாளத்துக்குச் சரியான ஆங்கிலப் பெயர் bridle, horse's bit.  குதிரை, லகானின் இந்தப் பகுதியைத் தன் வாயால் கடித்துக்கொள்வதால் அது கடி-வாளம். இந்தச் சொல் ஈட்டில் ஆளப்பட்டிருக்கிறது.  ஓடிஎல் சொல்கிறது:

சிறுவாய்க்கயிறு ciṟu-vāy-k-kayiṟu

n. < id. +. Reins; குதிரையின் லகான். பிடித்த சிறுவாய்க்கயிறும் (ஈடு, 7, 4, 5).

கண்ணை மறைக்கும் உலோகப்பட்டி, பெரும்பாலும் வண்டிக் குதிரைகளுக்குதான் இடப்படும்.  பந்தயக் குதிரைகள், அணிவகுப்புகளில் இடம்பெறும் குதிரைகளுக்குப் பெரும்பாலும் இட்டுப் பார்த்தில்லை.  அதனுடைய பெயர் நினைவுக்கு வர மறுக்கிறது.  That limits the range of vision of the horse.  பக்கவாட்டில் விரைகின்ற மற்ற வண்டிகளும், மனிதர்களும் குதிரையின் கண்ணில் படாமல், முன்னாலிருக்கும் சாலையின் காட்சி மட்டுமே படும்படியாக இடப்படும் மறைப்பு அது.  பொர்க்குதிரைகளுக்கு உண்டு.  பந்தயக் குதிரைகளையும், பயிற்சிக்காகக் காவலர்கள் வீதிகளில் ஓட்டிச் செல்லும் குதிரைகளையும் இந்த மறைப்போடு பார்த்த நினைவில்லை.  நான் தவறாகவும் இருக்கலாம்.  

Hari Krishnan

unread,
Aug 4, 2010, 4:42:09 AM8/4/10
to mint...@googlegroups.com

2010/8/3 srirangammohanarangan v <ranga...@gmail.com>

பொதுவாக ஓர் இழையை ஆரம்பிக்கும் போது இப்படி முன் சொன்னவர் வார்த்தையை இட்டு ஆரம்பிக்கும் வழக்கம் என்னிடம் இல்லை.

வெல்லப் பிள்ளையாரைக் கொஞ்சம் கிள்ளி அவருக்கே நிவேதனம் செய்வதுபோல், இழையைத் தொடங்கிய ரங்கனுக்கு இந்த வரி சமர்ப்பணம்.  (இப்பத்தானே உள்ள வந்த, அதுக்குள்ள ஏன் லகானைப் பத்திப் பேசின?  நான் சொன்னதைப் பத்தி ஏன் எதுவும் சொல்லல?  என்றெல்லாம் ரங்கன் ஃபோன் போட்டுத் திட்டக்கூடாது பாருங்க....அதுக்குத்தான் இந்தத் தற்காப்பு லகான்.)  

Innamburan Innamburan

unread,
Aug 4, 2010, 5:13:35 AM8/4/10
to mint...@googlegroups.com
 ஒத்துக்கிறேன்,அந்த உலோகப்பட்டியைத்தான் நினைத்தேன்.
 தேனி ஓடோடி வந்து லகானை மாட்டீட்டார்.
 மாட்டுக்கு லகானும் இல்லை, மூக்கணங்கயிறுத்தான்,
 தானேன்ன தன்னான்னேன்னு அவுக பாடுதாக.

2010/8/4 Hari Krishnan <hari.har...@gmail.com>
--

N. Kannan

unread,
Aug 4, 2010, 9:19:01 AM8/4/10
to mint...@googlegroups.com
hat.JPG
 
குட்டி இளவரசன் இப்படியொரு படத்தை வரைந்துவிட்டு பெரியவர் எல்லோரிடமும் கேட்டால் எல்லோரும் இதுவொரு தொப்பி என்றனராம். குட்டி இளவரசனுக்கு மிகவும் வருத்தம்.
 
ஏன் பெரியவர் ஒருவருக்கும், ஒரு யானையை விழுங்கிய மலைப்பாம்பு இதுவென்று தெரியவில்லை?
 
ரங்கன், அற்புதமான ஆரம்பம். தொடருங்கள்!!
 
கண்ணன்
 
2010/8/4 srirangammohanarangan v ranga...@gmail.com:
hat.JPG

sk natarajan

unread,
Jun 2, 2011, 12:20:12 AM6/2/11
to tamizhs...@googlegroups.com, min tamil, thamiz...@googlegroups.com
கோடையை   ரசிக்கும் கோமகனே
உம் வரிகள் அத்தனையும்
சிந்திக்க வைப்பது மட்டுமல்லாமல்
இப்படி நான் ஏன் முன்னரே
சிந்திக்காமல் போனேன்
என எண்ண வைக்கின்றது
நன்றி கவிஞரே

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.com/  
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

2011/6/1 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
கோடை தகித்து இன்று ஏதோ மழைத்தூறல். 

பேசாமல் மழையிலேயே நட்ந்துவிட மாட்டோமா என்ற ஆவலைக் கிளப்பிவிட்டபடி கோடையின் தாபமும், மழையின் தண்மையும் நன்றாகத்தான் இருந்தது. 

Geetha Sambasivam

unread,
Jun 2, 2011, 12:31:20 AM6/2/11
to thamiz...@googlegroups.com, min tamil, tamizhs...@googlegroups.com
இந்த இழை இன்று தான் கண்களில் பட்டது.  கோடையும் சுகமே என்னும் கவிஞருக்கு வாழ்த்துகள். கோடையில் மழை பெய்யும்போது அதுவும் முதல் மழையின் போது ஏற்படும் சுகமே சுகம்.

2011/6/1 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
கோடை தகித்து இன்று ஏதோ மழைத்தூறல். 

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

துரை.ந.உ

unread,
Jun 2, 2011, 12:53:38 AM6/2/11
to tamizhs...@googlegroups.com, min tamil, thamiz...@googlegroups.com
output.gif பணிய வைக்கும் கொளுத்தும் கோடையில்
90b1e94d256f0a1f0998b536bd64dfca.gifபனிப்பொழிய வைக்கும் எழுத்து நடை )

அருமை ஐயா...

011/6/1 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
கோடை தகித்து இன்று ஏதோ மழைத்தூறல். 

பேசாமல் மழையிலேயே நட்ந்துவிட மாட்டோமா என்ற ஆவலைக் கிளப்பிவிட்டபடி கோடையின் தாபமும், மழையின் தண்மையும் நன்றாகத்தான் இருந்தது. 

ஆனாலும் கோடை என்பது வரவர தாங்குவதற்கரிதாய்த்தான் இருக்கிறது. 

ஏ ஸி இருந்தால் ஓகே. அதுவும் கரண்டு கட்டில் கிடைத்த பொழுதுதான். 

குளிர்வசதிகள் இல்லாமல் ஓட்டுவது என்பது அடிக்கடிக் குளியல் என்ற கணக்காகி விடுகிறது. 

ஆனால் கவிதையில் அதே கோடையைப் பார்த்தால் எவ்வளவு இனிமையாக இருக்கிறது! 

மழையைக் கவிதை பாடியவர்கள் இருக்கலாம். ஆனால் கோடையைக் கவிதை பாடியவர்கள் குறைவாகத்தான் இருப்பார்கள். 

மனித வாழ்க்கையில் சுகம் மட்டுமே இனிமை என்ற எண்ணம் இயல்பாக எழும். அதனால் சுகமான விஷயங்கள் கவிதையின் கருப்பொருளாக எளிதில் ஆகிவிடும். 

ஆனால் வருத்தும் விஷயங்களான கோடை போன்றவையும் அழகுதான்; அவற்றை அநுபவிக்கத் தெரிந்தால் அவற்றிலும் ஓர் அலாதி இனிமை இருக்கத்தான் செய்கிறது. 

அனைத்தும் உணர்வின் விஷயமாய் ஆகும்பொழுது ஓர் அழகையும் இனிமையையும் பூசிக்கொள்ளத்தான் செய்கின்றன. 

கவிஞர் பாடுகிறார் -- 

“கானில் வெயில்மழை காலம் பலகண்ட 
கட்டை இரண்டினை ஏன் கடைந்தாய்? ” 

விடை என்னவாக இருக்கும்? 

“தேனழல் சிந்திச் சிரித்தபின்னே உயிர்த் 
தேசில் கனிந்து திளைத்திடத்தான்” 

இப்படியெல்லாம் கற்பனையின் தண்மையில் கோடையை ஆற்றும் எனக்கு காளிதாஸனின் ருதுசம்ஹார ச்லோகம் ஒன்று ஆச்சரியமாக இருந்தது. 

கோடையில் அன்றைய காலங்களில் மக்கள் மேலே தண்ணி கொட்டிக்கொண்டு இருந்தபடிக் கோடைக் காலத்தைத் தள்ளியிருக்கிறார்கள். 

காளிதாஸன் சொல்கிறார் --- 

“ஐயய்யோ அந்தச் சூரியன் என்ன கொடியவனாக இருக்கிறான். சண்டனிலும் சண்டன் ப்ரசண்டன். தாம் பாட்டுக்கு இருக்கும் மக்களை வலுவில் சென்று என்னமாய் வாட்டுகிறான். அம்மம்ம! 

அவனுடைய கொடுமை எப்படி என்பதைச் சொல்ல வேண்டுமானால், சந்த்ர தர்சனமே கண்ணுக்கு இனிமையாய் ஆகிவிடுகிறது. அதுவும் நிலவுக்கதிர் உடலில் பட்டால் போதும் அப்பாடா என்ன இனிமை! 

சந்த்ரன் தோன்றும் வரை மக்கள் தண்ணீரை வாரி வாரிக் கொட்டிக்கொண்டோ, அல்லது தண்ணீரில் மீண்டும் மீண்டும் மூழ்கியபடியோ பகலை ஓட்டுகின்றனர். 

நாள் உதயம் ஆனால் கொடுமை ஆரம்பம். 

நால் அஸ்தமனமானால் ஆகா ரம்மியம் ! 

சூட்டைக் கண்டாலே வெறுப்பு. எவ்வளவு வெறுப்பு என்கிறாயா? 

மன்மதனின் தூண்டுதலால் காம உணர்வு மக்களுக்கு எவ்வளவு இஷ்டமானது. ஆனால் கோடைச் சூட்டைக் கண்டு மக்களுக்குத் தாமாகவே இந்தக் காமத்தின் பால் மனம் பொருந்தாமல் அப்பாடா அமைதியாக இருந்தால் போதும் என்று ஆகிவிட்டது. ஆமாம் காமம் என்றால் அதுவும் ஒருவித சூடுதானே! 

என்ன ஒரு வருந்தச் செய்யும் காலம் இந்தக் கோடை என்பது! 

ப்ரசண்ட3 சூர்ய: ஸ்ப்ருஹணீய சந்த்3ரமா:

ஸதா3வகா3ஹ க்ஷமவாரி ஸஞ்சய: |

தி3நாந்த ரம்யோSப்4யுபசா1ந்த மந்மதோ2

நிதா34காலோSயமுபாக3த: ப்ரியே || 

மிகக்கொடியவனே பரிதி 

பழகுதற்கினியதோ நிலவே! 

என்றும் ஆழ்ந்திட இனிதாய் 

இயன்றது நீர்நிலை நன்றே! 

நாளொன்று முடிவது மகிழ்வே; 

நல்லமைதியும் உற்றனன் மதனன். 

நடுக்குறும் கொடிதொரு காலம் 

நண்ணிடும் ஈதிங்கென் அன்பே! 

(ருதுஸம்ஹாரம்) 

***

2010/8/3 srirangammohanarangan v <ranga...@gmail.com>
>>”தமிழ் ஒளியின் ரேகைகள்” எனும்
இழையில் பல்வேறு கவிஞர்களை அறிமுகப்படுத்துகிறார். இது மிகவும் அரிய
செயல். பெரும்பாலும் இலக்கிய உலகில் அடுத்த படைப்பாளியைப் பாராட்டும்
மனம் வராது. சிட்டி, ரங்கன் போன்று சில exceptions! அந்த இழையை
மின்தமிழிலும் இட வேண்டுகிறேன்.<<
 
பொதுவாக ஓர் இழையை ஆரம்பிக்கும் போது இப்படி முன் சொன்னவர் வார்த்தையை இட்டு ஆரம்பிக்கும் வழக்கம் என்னிடம் இல்லை. ஆனால் இங்கு ஒரு விதிவிலக்காக இப்படி ஆரம்பித்தேன்.
ஏனெனில் இங்கு கவிதையைப் பற்றி பிரஸ்தாபிக்க எனக்கு எப்பொழுதுமே ஒரு தயக்கம்.
 
கவிதை என்பது மிகவும் நளினமான சமாச்சாரம். நீங்களோ  இரும்புக்கடலையை வறுத்துத் தின்றுகொண்டிருப்பவர்கள்.

--
என்றும் அன்புடன்  --  துரை --
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
படம்         : ‘எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.com/
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்:'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral

90b1e94d256f0a1f0998b536bd64dfca.gif
output.gif

selva kumaran

unread,
Jun 2, 2011, 6:26:42 AM6/2/11
to mint...@googlegroups.com
கீதா ஜி

திரு.மோகனரங்கன் எழுதிய கவிதையின் உட்பொருள் இன்னும் ஆழமானது.  திடீர் திடீரென்று இப்படித்தான் அசத்துவார்.

2011/6/2 Geetha Sambasivam <geetha...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

selva kumaran

unread,
Jun 2, 2011, 6:27:40 AM6/2/11
to mint...@googlegroups.com
தட்டச்சுப் பிழை

திரு.மோகனரங்கன் எழுதிய கட்டுரையின் உட்பொருள் இன்னும் ஆழமானது.  திடீர் திடீரென்று இப்படித்தான் அசத்துவார்.

Innamburan Innamburan

unread,
Jun 2, 2011, 7:04:05 AM6/2/11
to mint...@googlegroups.com

செல்வகுமரன் சொல்வது சரி தான். இந்த மோஹன பாற்கடலில் கொஞ்சம் அளைந்த போது, கிட்டியது, இது.

Summer — we all have seen —

A few of us — believed —

A few — the more aspiring

Unquestionably loved —

But Summer does not care —

She goes her spacious way

As eligible as the moon

To our Temerity —

The Doom to be adored —

The Affluence conferred —

Unknown as to an Ecstasy

The Embryo endowed —

-எமிலி டிக்கின்ஸன்

கோடையை கண்டதுண்டோ!, மவனே!

கோடையை கண்டோர் பலர் என்றாலும்.

கோடையின்பம் சிலருக்கே! அறிவாயோ!

மேடை போட்டு விளம்புவேன், யான்!

கோடைக்கு இதெல்லாம் பொருட்டல்ல!

கோடையின் ராஜபாட்டை பிரமாதமே!

மோட்டுவளை சந்த்ரமா காணாயோ!

போட்டுக்கொடுத்தது, என் அருங்குணமே!

விதி தனை புகழ்வாய் நீயே!

குதித்து வந்தது சுபிக்ஷம்.

மோன நிலையும் சூக்ஷ்மமே.

ஆன நிலையோ, உயிர் பிச்சை தானே!

இன்னம்பூரான்

02 06 2011

Geetha Sambasivam

unread,
Jun 2, 2011, 8:37:49 AM6/2/11
to mint...@googlegroups.com
இப்போப் புரிஞ்சது.  நன்றி இன்னம்புராருக்கு.

2011/6/2 Innamburan Innamburan <innam...@gmail.com>

N. Kannan

unread,
Jun 7, 2011, 8:03:58 AM6/7/11
to mint...@googlegroups.com
2011/6/7 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:

> கோடையும், பனியும் எனக்குப் பிடிச்சது. அது பாட்டுக்கு சமத்தா நான் ஒரே
> சூடுப்பா; இப்படித்தான் இருப்பேன். அது என் சுபாவம் என்ன பண்றது? என்று தம்
> இயல்பில் இருக்கின்றன.
> பனியும் அப்படித்தான். நான் குளிர். அவ்வளவுதான் அதுக்குன்னு நான் இருக்கும்
> போது நீ வேற செய்யக் கூடாது; பார்க்கக் கூடாதுன்னு இல்லை; நீ பாட்டுக்குத்
> தாராளமா உன் வேலையைப் பார். பருவம்னா அப்படித்தான் இருக்கணும்.

அடடா! குளிர்காலத்து இதமான வெயில் போல ஒரு இடுகை!

நீங்க உங்க ஊருப்பனியை மெச்சிக்கிறீங்க!
நாங்க ஜெர்மன் பனிய வச்சு கதையே எழுதியிருக்கோம்.
நீங்ககூட உங்க ஊரு பெரிய மலைக்குப் போங்க! ஆமா! இமாலயம்தான். அதைப்போன்ற
ஒரு கோபக்காரி யாரும் கிடையாதாம். எவரெஸ்ட் போய்த்திரும்பினவங்க
சொன்னாங்க! விழுந்து சேவிச்சுட்டு வந்துடனும். பனி கிட்டக்கப்
போகக்கூடாது!
எஸ்கிமோ மொழியில் 20 சொற்கள் உண்டாம். பனி பற்றிப்பேச,...

அப்ப நான் அவரட்டா! :-)

நா.கண்ணன்

Innamburan Innamburan

unread,
Jun 7, 2011, 9:32:35 AM6/7/11
to mint...@googlegroups.com
மின் தமிழர்களே! ஆண் பாலர்களே! பெண் பாலர்களே! இவற்றுக்கு வித்தியாசம் அறியா பாலகர்களே! தாத்தாப்பாட்டிகளே! தாய்க்குலமே! அகமுடையான்களே! ஒரு கட்டை பிரம்மச்சாரியே!  இன்று ஒரு பிரகடனம்:
நாவன்னா காவன்னா படைத்த 'அவரட்டா!' என்ற சொல்லை ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கபட்டுள்ளது: நா. கணேசன் விடாக்கொண்டராகவும், நு.த.லோ. கொடாக்கண்டராகவும், சேசாத்ரி விடா & கொடாக்கண்டராகவும் அரும்பணி புரிவார்கள். நீங்கள் யாவரும் பின்னூட்டுக. அவ்வப்போது ஹரிகி கலக்குவார்.
நன்றி, வணக்கம்.

Hari Krishnan

unread,
Jun 7, 2011, 9:47:23 AM6/7/11
to mint...@googlegroups.com

2011/6/7 Innamburan Innamburan <innam...@gmail.com>

அவ்வப்போது ஹரிகி கலக்குவார்.

அலக்கணால் அல்லல் ஹரிகிக்(கு) ஐயையா!
நலக்குறைவால் வாடும் நாக்கு - கலக்குவதென்?
ஆப்பசைத்த வெங்குரங்கு ஐயையோ நானானேன்.
காப்பியை மட்டும் கலக்கு.

:D

ரங்கர் நம்பள ராங்கர் ஆக்கிப்பிட்டார் ஸ்வாமின்!  ஹயக்ரீவம் உபாஸ்மகே!

Hari Krishnan

unread,
Jun 7, 2011, 9:52:01 AM6/7/11
to mint...@googlegroups.com

2011/6/7 Hari Krishnan <hari.har...@gmail.com>
கெட்ட கேட்டுக்கு வெம்பா கேக்குதா?  தள தட்டுதே!  சரி பண்ணட்டா?

அலக்கணால் அல்லல் ஹரிகி உடம்பு
நலக்குறைவால் வாடுகிறான் நாக்கு - கலக்குவதென்?
ஆப்பசைத்த வெங்குரங்காய் ஆனதனால் இப்போது
காப்பிக்கு மட்டும் கலக்கு.  

யப்பாடீ.... தாடிய நெனச்சா வேத்துக் கொட்டுங்கதுங்கணோவ்! 

Nagarajan Vadivel

unread,
Jun 7, 2011, 10:00:42 AM6/7/11
to mint...@googlegroups.com
மின் தமிழில் தர்க்க வாதம் தூள் பரத்துகிறது.  ஆய்ந்த அறிஞர்கள் ஒன்றுகூடி ஆதாரங்களின் அடிப்படையில் வாதம் செய்து வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் அறிஞர்குழு முடிவுப்படி வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படுவது வரலாறு காட்டும் செய்தி
பதினான்காம் நூற்றாண்டில் மத்திய கிழக்கு நாட்டில் ஒரு அரசவையில் ஒரு சமயம் குதிரைக்கு எத்தனை பற்கள் என்பது பற்றிய விவாதம் நடந்தது.  பத்து நாட்களுக்கு மேல் ஆதாரத்துக்குமேல் ஆதாரம் காட்டி விவாதம் நடந்து கொண்டேயிருந்தது.  பொறுமை இழந்த ஒரு இளைஞன் இவ்வளவு நாள் இப்படி இழுத்துக்கொண்டே போவதற்குப் பதில் ஒரு குதிரையை இழுத்துக் கொண்டு வந்து அதன் பல்லை என்ணி இருக்கலாமே என்று சொன்னான்.  வெகுண்டெழுந்த அரசவை அவனைக் கட்டிவைத்து கசையடி கொடுத்தது.
அதற்குமுன் அரிஸ்டாட்டில் முன் ஒரு பெண்னுக்கு எத்தனை பற்கள் என்ற விவாதம் தொடர்ந்து நடந்தது.  அரிஸ்டாட்டிலுக்கு இரண்டு மனைவிகள்.  இருவரில் ஒருவரை வாயைத்திறக்கச் சொல்லி பல்லை எண்ண வாய்ப்பிருந்தும் அது தவறான முறை என்று கருதப்பட்டது
மின் தமிழில் இரண்டு அறிஞர்கள் பனைமரத்தை பெண்னையை உண்டு இல்லை என்று வஞ்சிக்கோட்டை வாலிபன் வைஜயந்தி பத்மினி நடனம் போல் வீரப்பாவின் வார்த்தையில் சபாஷ் சரியான போட்டி
நாகராசன்

2011/6/7 Innamburan Innamburan <innam...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Jun 7, 2011, 10:26:40 AM6/7/11
to mint...@googlegroups.com

அலக்கணால் அல்லல் ஹரிகிக்(கு) ஐயையா!

நலக்குறைவால் வாடும் நாக்கு - கலக்குவதென்?

ஆப்பசைத்த வெங்குரங்கு ஐயையோ நானானேன்.

காப்பியை மட்டும் கலக்கு.

######

கலக்கமின்றிக் காரியம் தான்செய்யும் நண்ப 

நலக்குறைவோ நல்மருந் துண்டே - நலம்பெறுக 

நல்லதோர் சாதனையில் நன்றுழைக்கு முன்நலமே 

அல்லல் தவிர்க விரைந்து. 

*******************

யாரோ? இவர் யாரோ? என்ன பேரோ?

பாருக்குள்ளே பார்த்ததுண்டோ? அவரட்டா?

சாறு பிழிந்தல்லோ, அல்லல் தவிர்த்தாறு!

தராறு இனிமை, இன்றும், அன்றும், என்றுமே.

++++++++++++++

Subashini Tremmel

unread,
Jun 7, 2011, 1:39:18 PM6/7/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
2011/6/7 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ஒரு கட்டை பிரம்மச்சாரியே! <<<< 

இது யார்னு இப்ப எனக்குத் தெரிஞ்சாகணும் 
:-)) 

ஏன் சொன்னால் தான் தெரியுமா??? திரு.இன்னம்புரான் ..சாரிகளே என்று சொல்லாமல் ...சாரியே என்று சொல்லியிருப்பதிலேயே தெரியவில்லையோ?
-சுபா
 
2011/6/7 Innamburan Innamburan <innam...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
Subashini Tremmel

unread,
Jun 7, 2011, 1:50:35 PM6/7/11
to Mohanarangan V Srirangam, mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
நேரம் இல்லயே ஐயா..
குவிந்து கிடக்கும் மடல்களை எல்லாம் முதலில் வாசிக்க வேண்டும்..

இப்பணியை நான் செய்வதை விட நீங்களே செய்வது சிறப்பாக இருக்கும் ..தண்டனைகளைப் பெற்று பழகி விட்ட எங்களுக்கு இது பெரிய விஷயமில்லை.. :-)

-சுபா

2011/6/7 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
யாரது எங்கயோ கேட்ட குரல்? 

வாங்க் வாங்க ....:-)) 

அப்படியே ஆங்கிலப் பகுதி யார் எழுதியது என்று பதிலும், மொழிபெயர்ப்பில் ஒரு முயற்சியும் ஒரு கை பார்க்கிறது....:-)

2011/6/7 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Jun 7, 2011, 2:48:53 PM6/7/11
to mint...@googlegroups.com

 எல்லாம் ஈவேராவுக்கும் ராம் ஜேத்மலானிக்கும் முன்னோடியான ராபர்ட் இங்கர்சால் தான். பிறகு: சர்க்கரை குறைந்துவிட்டதால்????

Innamburan Innamburan

unread,
Jun 7, 2011, 3:31:25 PM6/7/11
to mint...@googlegroups.com
மன்னிக்கவும். முதலில் இண்டெர் நட்டு கழண்டது.பின்னர், எனது நட்டு கழண்டது. திடீரென்று உடலில் சர்க்கரை குறைய, அவசர யுத்திகளை கையாளவேண்டியிருந்தது. சார்லஸ் ப்ராட்லா என்ற ஆங்கிலேயர் நாத்திக வாதிக்கும், இங்கர்சால் போன்ற இறைநம்பிக்கை இல்லாதவர்களுக்கும் நுட்பமான வித்தியாசம் உண்டு. இங்கர்சால் அமெரிக்க வக்கீல்; சொற்பொழிவு மன்னன். என்னை அவருடைய ஷேக்ஸ்பியர் கருத்துக்கள் கவரவில்லை. தற்காலம், மறுபடியும் ஷேக்ஸ்பியர் யாரு என்ற கேள்வி தலை தூக்கிவிட்டது, இங்கிலாந்தில். I like Bryson. B.(2007) Shakespeare: London: Harper Press.

நன்றி, வணக்கம்.

இன்னம்பூரான்
07 06 2011

2011/6/7 Innamburan Innamburan <innam...@gmail.com>

sk natarajan

unread,
Jun 7, 2011, 8:08:30 PM6/7/11
to thamiz...@googlegroups.com, min tamil, tamizhs...@googlegroups.com
மழை நீர் நிலத்தைக் காதலிக்கின்றது -----   என்பது அழகான எண்ணம்
காளிதாசன் - கவிதையையும்  தந்து எப்படி அவர்களும் உங்களோடு ஒத்துப் போய் இருக்கின்றார்கள்
என்பதை விளித்த விதம் அருமை
கவிகளின் எண்ண அலைகள் - சூழலை சார்ந்து ஒரே நேரக் கோட்டில்  சந்தித்துத் தான் விடும்
நன்றி ஐயா
என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.com/  
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

2011/6/6 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
இன்று மாலைக்கு மேல் திடீரென்று மழை. 

இடி மின்னல் மழை. காற்று. 

பால்கனியில் போய் நின்று கொண்டேன். நன்றாகத்தான் இருந்தது. 

Innamburan Innamburan

unread,
Jun 8, 2011, 1:47:04 AM6/8/11
to mint...@googlegroups.com
கதை வாபஸ்ட். நோ சர்ச்சை.

நன்றி, வணக்கம்.

இன்னம்பூரான்

2011/6/7 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
உம்மை இந்தக் கதையெல்லாம் கேட்கவில்லை. 

கேட்டது சில பகுதிகளுக்கு மொழிபெயர்ப்பு. 
:-)

2011/6/8 Innamburan Innamburan <innam...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Innamburan Innamburan

unread,
Jun 15, 2011, 4:53:53 AM6/15/11
to mint...@googlegroups.com
கதை வாபஸ்ட். நோ சர்ச்சை.

நன்றி, வணக்கம்.

இன்னம்பூரான்

2011/6/15 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
நெடுநாளாக மின் தமிழில் “எது பக்தி?” என்ற இழையைத் தொடர்ந்து என்னுடைய பக்தி என்பது என்ன என்ற விசாரத்தின் பதிவாக எழுதிக்கொண்டிருப்பது பல நண்பர்களுக்கும் தெரிந்திருக்கலாம். 

இப்பொழுது எது பக்தி என்பது நூலாக வெளிவரும் போல் தெரிகிறது. அதற்குப் பூர்வாங்கமாக வரிசையாக இடுகைகளின் Link Index from 1 to 21 entries தயார் செய்தேன். 

நண்பர்கள் இவற்றைச் சிரமம் பாராது ஒரு தடவை கண்ணுற்று ஏதேனும் கருத்துகள் தெரிவிக்கலாம். 

*** 

Innamburan Innamburan

unread,
Jun 15, 2011, 7:40:05 AM6/15/11
to mint...@googlegroups.com

நன்றி, வணக்கம்.

இன்னம்பூரான்

2011/6/15 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ஐயா! தாங்கள் மதிப்பிற்குரிய வயதானவர்.  சிரமப்பட வேண்டாம் ஐயா. 

நான் நண்பர்களைத்தான் கேட்டேன். 
:-) 

2011/6/15 Innamburan Innamburan <innam...@gmail.com>

கதை வாபஸ்ட். நோ சர்ச்சை.

நன்றி, வணக்கம்.

இன்னம்பூரான்

B06.gif
B09.gif
B04.gif
B05.gif

sk natarajan

unread,
Jun 17, 2011, 7:46:34 PM6/17/11
to tamizhs...@googlegroups.com, mint...@googlegroups.com
 என்னமோ நடக்கிறது
 அருமை  அருமை 

இதயத்தில்
என்னமோ நடக்கிறது

வாழ்த்துகள் ஐயா

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.com/  
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

2011/6/17 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
என்னமோ நடக்கிறது ....

sk natarajan

unread,
Jun 17, 2011, 7:51:12 PM6/17/11
to thamiz...@googlegroups.com, min tamil, tamizhs...@googlegroups.com
சொல்லில் தெரிவது பாதி
சொல்லாமால் விட்டதோ மீதி
உள்ளமதை  அளக்க உள்ளவர்கள்
உத்வேகம் கொள்வாரோ ....

அருமை ஐயா

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.com/  
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

2011/6/17 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
உள்ளம் என்பது குகை; 
ஒரு விசித்திரமான குகை. 
போலித்தனம் இல்லாமல் 
உண்மையாய் இருந்தால்தான் 
குகைக்குள் நுழைய முடியும். 
ஆனால் குகைக்குள் இருந்து 
தனக்குத் தானே ஏதாவது பேசினாலும் 
உலகனைத்தும் கேட்கும்; 
பேச வேண்டாம் 
எண்ணினாலே போதும் 
ஆயினும் அதன் தனமையோ மோனம். 

***

N. Kannan

unread,
Jun 17, 2011, 9:19:24 PM6/17/11
to mint...@googlegroups.com
2011/6/17 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:

> தனக்குத் தானே ஏதாவது பேசினாலும்
> உலகனைத்தும் கேட்கும்;
> பேச வேண்டாம்
> எண்ணினாலே போதும்

மின்தமிழை சரியா கணக்குப் பண்ணிட்டீரே :-))

க.>

N. Kannan

unread,
Jun 17, 2011, 9:33:55 PM6/17/11
to mint...@googlegroups.com
2011/6/18 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
> நான் சொன்னது உள்ளம் பற்றி
>

என்ன ஸ்வாமி! இப்படி சொல்லிட்டீர்!
உள்ளங்கள் பேசும் அரங்கம் என்றெல்லவோ இதை நினைத்தேன்.
வெறும் மண்டை காயற இடம்தானா :-)))

க.>

Innamburan Innamburan

unread,
Jun 19, 2011, 4:17:49 AM6/19/11
to mint...@googlegroups.com
க்ஷமிக்கணும். திடீரென்று என்னடா இது என்று கேட்கிறீர்களா? இளங்கன்று பயமறியாது அல்லவா! 

'...உருக்கரந்த உள்ளுரையாய்...'
=> கொஞ்சம் அதிகப்படியாக இல்லை? உள்ளுரையை எப்படி 'உருக்கரந்த'?
'..சொக்கும் சுந்தரமாய்...'
=> ஆஹா! என்னே அருமையான மொழியாக்கம்!

நன்றி, வணக்கம்.

இன்னம்பூரான்
19 06 2011

N. Kannan

unread,
Jun 19, 2011, 9:35:01 AM6/19/11
to mint...@googlegroups.com
வாத்தியார் பூந்து விளையாடிடீரே!
இப்பதான் நம்ம சப்ஜெக்டுக்கு வந்திருக்கிறீர்!
மனிதன் மட்டும்தான் சுழற்சியில் பங்குபெறாத குப்பைகளைப் போடுபவன்.
நாளை மனிதனே அழிந்தாலும் அவன் போட்ட குப்பை அழிய பல கோடி ஆண்டுகளாகும்
என்பதோர் கணக்கு!
கொஞ்சம் நிம்மதி, அது இதுன்னு செண்டிமெண்டலா முடிச்சுட்டீர்!
ஆமா! அது என்ன இன்னிக்கு பீடீ நல்லாகீது? நிம்மதி வந்துட்டதாலா?
அது இல்லாம கவித நல்லா கீது!

நா.கண்ணன்

2011/6/19 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
> ரோடு பொறுக்குபவனின் ஸாலிலக்கி
>
> அப்பப்பா! எவ்வளவு குப்பைகள்!
> மனிசன் குப்ப போடும் பிராணி...
> பீடி இன்னிக்கு நல்லாவே இருக்கு...

sk natarajan

unread,
Jun 19, 2011, 9:00:34 PM6/19/11
to thamiz...@googlegroups.com, mint...@googlegroups.com, tamizhs...@googlegroups.com
அருமை . அருமை
தமிழோடு  நீர் விளையாடுகின்றீர்
தமிழ் உம்மில் விளையாடுகின்றது
ஆக மொத்தம் நன்மை எமக்கே

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.com/  
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

2011/6/19 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
தமிழாக்கத்தில் நான் பயின்றவை

தமிழாக்கம் 

அடையொணா மூர்த்திநீ! 
அடங்கியதென் வாய்ச்சொல்லே. 
ஆர்ப்படங்கும் என்வார்த்தை 
அந்திமத்துப் புறவிதழாய்ச் 
சொற்குழவி பிதற்றும் 
மழலைப்புன் சொல்லே. 
உற்பவிக்கு மையத்து 
உண்மைசொலும் வேட்டைநாய் 
சொற்றொகை பந்தித்துச் 
சுழல் மோனக் கொப்புள்கள் 
பம்புமுயிர் பிறவிப் 
பரம்பரையில் பயின்றிடுசொல் 
முடிகவித்து முன்னியெழ 
முற்றும் அமிழ்ந்துவிட 
முடியாப் புணையாய் 
மொழிதருசொல் தொடர்வதுவால். 
உருவுக்கு முன்னருவில் 
உருக்கரந்த உள்ளுரையாய்ச் 
சொல்லியலே! சொல்லொணா 
ஆரூரும் சோதியறிவே காண்! 
சாந்தத்துப் பைங்கால் 
மேய்ந்துவரும் வல்லமையாய் 
மீப்பாய்ந்து மண்டியெழச் 
சுகாநந்த சாமீப்யம் 
சொக்கும் சுந்தரமாய்ச் 
சுயத்தின் தொழுவத்துள் 
புக்குப் பாய்ந்தோடும் 
பிலத்தின் ஆழத்துள் 
பரமநிலையாய்ப் 
பேரியல்வாய் நிற்பதுவே. 

*** 

sk natarajan

unread,
Jun 19, 2011, 9:06:28 PM6/19/11
to thamiz...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, min tamil
என்றுமே  உமது எழுத்திற்கு  நன்று, மிக நன்று   என்று தான் சொல்ல முடியும்
நன்றன்று என சொல் சொல்ல எவருக்கும் நீர் வாய்ப்புத் தந்ததேயில்லை :)))))
அமிர்தத்தை பருக எவருக்காவது கசக்குமா என்ன?
என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.com/  
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

2011/6/19 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
சில தமிழாக்கங்கள்

செய்து வைத்த சில தமிழாக்கங்கள் இவை. 
தாகூரின் Fruit Gathering நூலிலிருந்து.

XLII
I cling to this living raft, my body, in the narrow stream of my
earthly years.

I leave it when the crossing is over. And then?

I do not know if the light there and the darkness are the same.

The Unknown is the perpetual freedom:

He is pitiless in his love.

He crushes the shell for the pearl, dumb in the prison of the
dark.

You muse and weep for the days that are done, poor heart!

Be glad that days are to come!

The hour strikes, O pilgrim!

It is time for you to take the parting of the ways!

His face will be unveiled once again and you shall meet.  

புவிவாழ்வோ ஒரு சிற்றாறு 
உயிர்ப் புணையாம் பூதவுடல். 
கரையேறியதும் இதைக் கைவிடுவேன் 
பிறகு? 

இருளும் ஒளியும் அங்கே 
ஒன்றே தானோ அறியேன் 

அறியாப் பெருநிலை அதுவே 
மன்னும் விடுதலை 
அன்பைப் பொழிந்திடுவான் 
அதன் வேகத்தில் சற்றும் இரக்கமிலான் 

மோன இருட்சிறையில் 
முத்தினை நத்தி அவன் 
மூடும் சிப்பி உடைத்தெறிவான் 

கழிந்த அந்நாட்களுக்காய்க் 
கருத்தழிந்தே கண் கலங்குகிறாய் 
கண்ணான என் உளமே! 
காலம் இருக்கிறதே. 
களிகொள்! நாட்கள் இன்னும் வரும். 

யாத்திரை செய்வோனே! 
நேரத்தில் மணி அடித்தது பார்! 
போகிற வழித் தடத்தில் 
சாலை பிரிகிறது 
சீக்கிரம் வழி தேர்வாய் 

முகத்திரை விலக்கிடுவான் 
மீட்டும் ஒரு முறை திருக்காட்சி 
மலரும் உங்கள் சந்திப்பே. 

*** 

LXVI

Listen, my heart, in his flute is the music of the smell of wild
flowers, of the glistening leaves and gleaming water, of shadows
resonant with bees' wings.

The flute steals his smile from my friend's lips and spreads it
over my life.  

கேளாய் என்னுளமே! அவன் 
குழல்தரும் ஓசையிலே 
கானில் கமழ் பூவின் 
கனிவாய் எழும் கானம் 
சலசலத்திடும் இலைகள் 
தெளிந்தோடிடும் ஆறு 

திரிதரு வண்டின்சிறை மருங்கில்புணர் 
நிழலவை விரிகீதம் அவன் 
குழல்தரும் ஓசையிலே 

நண்பன் அவன் அதரம் 
இழையோடிடும் புன்னகைதான் 
கவர்ந்து கொணர்ந்திங்கென் 
வாழ்வின் மிசையெல்லாம் 
விரிக்கும் குழலிசையே. 

(நன்றாக இருக்கிறதா என்ன என்று தெரியவில்லை. நன்றே என்றால் மேலும் வரும். அன்றென்றாலும் தானே வரும்.) 

*** 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

Geetha Sambasivam

unread,
Jun 22, 2011, 5:19:03 AM6/22/11
to tamizhs...@googlegroups.com, thamiz...@googlegroups.com, min tamil
எல்லாத்தையும் படிச்சாச்சு, ஒண்ணும் சொல்லத் தெரியலை.

2011/6/21 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
தமிழாக்கம்  

இளமையின் இறுதியிலே 
என்வாழ்வும் நறுங்கனிபோல் 
விடுவதற்கெதையும் அஞ்சி 
முதிர்கனி தீஞ்சுவையில் - தனை 
முற்றிலும் தந்திடக் காத்துநிற்கும். 

Geetha Sambasivam

unread,
Jun 22, 2011, 9:57:15 PM6/22/11
to tamizhs...@googlegroups.com, thamiz...@googlegroups.com, min tamil
கவிதை கற்பனையின் 
அவசரத்தில் பிறக்கும் 
அவசத்தில் பிறக்கும் 
பரவசத்தில் பிறக்கும் 
பார்க்கும் வசத்தில் பிறக்கும் 
ஆர்ப்பில் பிறக்கும் 
அடியுள வேர்ப்பில் பிறக்கும் //

தமிழன்னை கைகட்டிச் சேவகம் செய்யும் காட்சியைக் கண்டு வியப்பாய் உள்ளது. இதைப் படித்த பின்னரும் நெஞ்சும் களராமோ????  வளம் கொழிக்கும் பசுமை செழித்துவிடாதா என்ன??

2011/6/23 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
நெஞ்சும் களரோ?

கவிதை கற்பனையின் 
அவசரத்தில் பிறக்கும் 
அவசத்தில் பிறக்கும் 
பரவசத்தில் பிறக்கும் 
பார்க்கும் வசத்தில் பிறக்கும் 
ஆர்ப்பில் பிறக்கும் 
அடியுள வேர்ப்பில் பிறக்கும் 
அலுப்பில் பிறப்பதுமுண்டோ? 
பேருந்து ஊர்ந்துவர 
பார்க்கும் பரிதவிப்பில் 
பிறப்பதுமுண்டோ ? 

கவிதையின் வான் திறக்க 
புவிதைக்கும் பூரிப்பில் 
போந்ததொரு பொன்னார் மழையாய்ப் 
பாமழையும் பொழிந்திடலாம் 
அன்றேல் 
வாசல் கடந்து வாராது வசந்தமெனில் 
நேசமும் மலராதோ? 
நெஞ்சும் களராமோ? 
03D.gif

selva kumaran

unread,
Jun 23, 2011, 6:51:21 AM6/23/11
to mint...@googlegroups.com
அம்மான்னு சொல்லிட்டு அடுத்து நம்மை சேவகர்னு சொல்லலாமா?! பிள்ளைனு சொல்லலாம்.

2011/6/23 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

2011/6/23 Geetha Sambasivam <geetha...@gmail.com>

கவிதை கற்பனையின் 
அவசரத்தில் பிறக்கும் 
அவசத்தில் பிறக்கும் 
பரவசத்தில் பிறக்கும் 
பார்க்கும் வசத்தில் பிறக்கும் 
ஆர்ப்பில் பிறக்கும் 
அடியுள வேர்ப்பில் பிறக்கும் //

தமிழன்னை கைகட்டிச் சேவகம் செய்யும் காட்சியைக் கண்டு வியப்பாய் உள்ளது.

இல்லை அம்மா! தமிழன்னைக்கு நாம்தாம் என்றும் சேவகர்.
 
இதைப் படித்த பின்னரும் நெஞ்சும் களராமோ????  வளம் கொழிக்கும் பசுமை செழித்துவிடாதா என்ன??

2011/6/23 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
நெஞ்சும் களரோ?

கவிதை கற்பனையின் 
அவசரத்தில் பிறக்கும் 
அவசத்தில் பிறக்கும் 
பரவசத்தில் பிறக்கும் 
பார்க்கும் வசத்தில் பிறக்கும் 
ஆர்ப்பில் பிறக்கும் 
அடியுள வேர்ப்பில் பிறக்கும் 
அலுப்பில் பிறப்பதுமுண்டோ? 
பேருந்து ஊர்ந்துவர 
பார்க்கும் பரிதவிப்பில் 
பிறப்பதுமுண்டோ ? 

கவிதையின் வான் திறக்க 
புவிதைக்கும் பூரிப்பில் 
போந்ததொரு பொன்னார் மழையாய்ப் 
பாமழையும் பொழிந்திடலாம் 
அன்றேல் 
வாசல் கடந்து வாராது வசந்தமெனில் 
நேசமும் மலராதோ? 
நெஞ்சும் களராமோ? 

*** 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

03D.gif

selva kumaran

unread,
Jun 23, 2011, 9:42:43 AM6/23/11
to mint...@googlegroups.com
அந்த அம்மாவோ சொன்ன அம்மா
இந்த அம்மா என்று நினைத்தேன்
அந்த அம்மா என்ற சொல்வரின் சேவகரேயாம்
இந்த அம்மா எனில் பிள்ளையென்பேன் :)

2011/6/23 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
”தொண்டர்பல் லாயிரர் சூழ்ந்து நிற்கின்றோம் 
விழிதுயில்கின்றனை யின்னுமெந் தாயே” 

***
03D.gif

selva kumaran

unread,
Jun 23, 2011, 9:57:36 AM6/23/11
to mint...@googlegroups.com
இப்போ நான் விசிஷ்டாத்வைதம் (சரணாகதி) :)

2011/6/23 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
அம்மா தத்துவம் அத்வைதம் 

*
03D.gif

selva kumaran

unread,
Jun 23, 2011, 9:59:56 AM6/23/11
to mint...@googlegroups.com
???

2011/6/23 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
இது கே ஆர் எஸ்ஸுக்குப் புரியுமே! 
*

2011/6/23 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
அம்மா தத்துவம் அத்வைதம் 

*
03D.gif

Innamburan Innamburan

unread,
Jun 23, 2011, 11:13:29 AM6/23/11
to mint...@googlegroups.com
NTW. இதெல்லாம் TPL.

நன்றி, வணக்கம்.

இன்னம்பூரான்

2011/6/23 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
லிலாக் -- என்பதை மல்லிகைப் பந்தர்க்கீழ் என்று கொஞ்சம் அடாவடித்தனம் பண்ணியிருக்கிறேன் காரணமாக. 

*

2011/6/23 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
தமிழாக்கம் 

மல்லிகைப் பந்தர்க்கீழ் 
செந்நிற மஞ்சளுமாய் 
மழைத்தொப்பி குடை கவிக்கச் 
சிறார் சிரமுயர்த்திச் 
சிலிர்த்த மழை ஈரம் 
ஒல்லென்றெழுந்த 
நகையொலியுள் விழுந்தது காண். 

விண்ணின் காலதரில் 
வியந்தங்கே கடவுள்தாம் 
சாய்ந்து சரிந்திட்டே 
சற்றிங்கே நோக்குவரேல் 
வாழ்த்தொலித்த வளைவுகளின் 
புழையூடே எதிரொலித்து 
விஞ்சுமொரு புகழாரம் 
முந்தியவர் தோளணையும். 

இந்தத் தமிழாக்கத்தின் மூலம் எதுவெனில் John Ciardi அவர்கள் எழுதிய 

Under the lilac 
in red and yellow rain hats 
Children raise their faces 
and shake rain 
into their laughter. 

If God is leaning 
from any sill of Heaven 
He could ring himself a praise 
to out-echo all arches 
by looking here. 

என்ற வரிகளாகும். 

*** 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

*

Geetha Sambasivam

unread,
Jun 23, 2011, 11:28:46 AM6/23/11
to mint...@googlegroups.com
கேஆரெஸ்ஸைத் தெரிஞ்சுக்க மாதவிப்பந்தல் என்னும் பதிவுக்குப் போங்கள். http://madhavipanthal.blogspot.com

2011/6/23 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
இது கே ஆர் எஸ்ஸுக்குப் புரியுமே! 
*

2011/6/23 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
அம்மா தத்துவம் அத்வைதம் 

*

2011/6/23 selva kumaran <selvakumaran.ma@gmail.com>
அந்த அம்மாவோ சொன்ன அம்மா
இந்த அம்மா என்று நினைத்தேன்
அந்த அம்மா என்ற சொல்வரின் சேவகரேயாம்
இந்த அம்மா எனில் பிள்ளையென்பேன் :)

2011/6/23 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
”தொண்டர்பல் லாயிரர் சூழ்ந்து நிற்கின்றோம் 
விழிதுயில்கின்றனை யின்னுமெந் தாயே” 

***

360.gif

Geetha Sambasivam

unread,
Jun 23, 2011, 11:35:58 AM6/23/11
to mint...@googlegroups.com
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அநியாயம்,அக்கிரமம்,

2011/6/23 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ஓஹோ அந்த கே ஆர் எஸ் என்பதோடு நான் சொன்னது குழப்பம் ஆகிவிட்டதா? 

நான் சொன்னது kavithai rasikar selvakkumaran. krs 

அதைத் தமிழில் சொல்லிவிட்டேனா? அதான் 

*

2011/6/23 Geetha Sambasivam <geetha...@gmail.com>
329.gif
360.gif

Geetha Sambasivam

unread,
Jun 23, 2011, 11:36:20 AM6/23/11
to mint...@googlegroups.com
நல்ல சமாளிப்பு.

2011/6/23 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ஓஹோ அந்த கே ஆர் எஸ் என்பதோடு நான் சொன்னது குழப்பம் ஆகிவிட்டதா? 

நான் சொன்னது kavithai rasikar selvakkumaran. krs 

அதைத் தமிழில் சொல்லிவிட்டேனா? அதான் 

*

2011/6/23 Geetha Sambasivam <geetha...@gmail.com>
கேஆரெஸ்ஸைத் தெரிஞ்சுக்க மாதவிப்பந்தல் என்னும் பதிவுக்குப் போங்கள். http://madhavipanthal.blogspot.com

360.gif

Dhivakar

unread,
Jun 24, 2011, 1:00:08 AM6/24/11
to mint...@googlegroups.com
>>கடலனைய கனிந்தவிரக்கம் 
கீசுகீசென்னும் புள்ளொடுங்கும் வனாலயம், 
உட்கிடையில் அன்னாள் புரிஉதவி உயர்விண்ணின் 
கதவடைத்த தாள் ஒன்றைத் திறந்தது; 
அண்டம் கடந்து அப்பாலாய் 
விரிந்த அவளின் அன்போ, 
அகில உலகும் அவள் ஒரு தனி இதயத்தில் 
புகல் காணவும் கூடும். <<

எங்கும் சக்தி எதிலும் சக்தி சர்வம் சக்தி மயம்..

மகரிஷி கண்ட சாவித்திரியின் அன்பை, சக்தியை, க்ருணையைப் புரிய வைத்தீர்..வாழ்க அரங்கனார்..

தி

2011/6/24 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
தமிழாக்கம் 

அரவிந்தரின் “சாவித்திரி” சிறு பகுதி --- 

ஆன்ற பெரும் இனமொன்றைச் சார்ந்தவளென்று 
அவளிடம் உள்ள ஒவொன்றும் உணர்த்தியது. 
புவியின் விரிவிற்குப் போட்டி, 
பொன்றா விண்ணுக்கு அணுக்கம், 
இளம்பெரு புலநலம் திகழும் அவள் ஆன்மா 
விசித்திர செல்வ உலகும் 
வடிவுடை அமைதி வதியும் உலகும் 
கடந்து, கருத்தின் வழி தாண்டிக் கிளர்ந்து 
கருக்கொளா பொருட்குவைபால் சென்று மருவும். 
தடைப்படா தன்னுரம் மிக்க 
அவளது இச்சை ஆர்வம் கெழுமியது. 
ஒள்ளிய சிரத்தையின் உருகெழு வேலை 
அவள் மனம், உணர்ச்சிப் போக்கென ஓடிப்பாயினும் 
ஒருசில் அலையும் காணக்கொடாது. 
யோகு புரி நிலையில் கறங்காடும் புனிதவதி 
சமைந்துநின்ற இடையீடற்ற சமாதிநிலைகள் 
உண்மையின் உள்ளறை விகாசத்தினின்றும் இயக்குறுவனவே. 
கடவுளரின் பள்ளமடையாய், செறிந்த படைப்பின் 
சீர்கெழு துடிப்புகள் திகழும் 
மகிழ்ச்சியின் கைத்தலம் முகிழ்த்த மௌன இதயமாய் 
விடியலின் விளக்கக் காதையன்ன உடல் 
வடிவு கரந்திட்ட தெய்வத்தின் 
வெளிப்படு நிழலாய்த் தோற்ற, 
புலன் கடந்த பொருள் காணப் 
பொற்கோயிற் கதவமாய்த் 
திகழும் எவனோ தத்துவக் கிழவன் ஒருவன் பெயர்தர, 
காலம் தாளமேந்து அவன் நடையில் 
அமர சொற்கட்டு ஆடிவர, 
அவள் கடைக்கண் நோக்கம், 
மண்பூசி நின்றதுவும் விண்ணேசித் தெழச்செய்யும் 
அவள்தன் நோக்க முறுவல் ஊக்கிய களிப்பு 
தேக்கிடும் திறனார் கவினே மாந்தர் வாழ்வினில். 
விரித்துத் தன்னைத் தருதலே 
வாகாய் அவட்கமைந்த செயல் 
கடலும் மற்று விண்ணைப் போன்று 
அமைந்த வண்மையில் 
பிறங்கிய பேருலகொன்றின் கந்தம் தருவள்; 
அவளின் அன்பான அக்கறை இனிய மித வெய்யில்;
அவள்பால் திமிர்ந்த வேட்கை நீலவானின் நிதாநம். 
புயலாடும் புவிதப்பி வேட்டையஞ்சி விதிர்த்திட்டு 
களைத்த புன்சிறை கனக்கத் 
திரிதரு புள்ளென ஆன்மா, 
நினைவில் நிழலாடும் முலைத்தடமன்ன 
ஓர் அமைதி கேந்திரம், சேமக் காப்பகம், 
சொகுசாய் அதிசயித்த சாயணை ஒன்று கிட்ட, 
ஓடிவரும் மதுரவாறு தழல் கொள 
மட்டிலா உயிர் திகழப் பருகலும் கூடும் 
கைதவறிப் போனதோர் 
உள்ளக் களிப்பெனும் பழக்கம் 
மீட்டும் கைக்கொளக் கூடவும் கூடும். 
ஒளிர்ந்திட்ட அவள் உள் இயல்பின் 
பீடுற்ற பெருநலம் உணர்ந்து உய்த்தலும் கூடும் 
அவள் கதகதப்பில் வண்ணக் கோலோச்சில் 
ஆனந்தம் தேக்கித் திறம் காணவும் கூடும்; 
கடலனைய கனிந்தவிரக்கம் 
கீசுகீசென்னும் புள்ளொடுங்கும் வனாலயம், 
உட்கிடையில் அன்னாள் புரிஉதவி உயர்விண்ணின் 
கதவடைத்த தாள் ஒன்றைத் திறந்தது; 
அண்டம் கடந்து அப்பாலாய் 
விரிந்த அவளின் அன்போ, 
அகில உலகும் அவள் ஒரு தனி இதயத்தில் 
புகல் காணவும் கூடும். 
திருப்தியறியாப் பெரும் தெய்வம் 
இங்கே பொருந்தி வதியலும் கூடும்; 
குறளுருவாய்க் கூனிச் சிறைப்பட்ட ஆன்மா 
காற்றின்றி அவனது உள்ளத்தெழுந்த 
உயர்வில் புரிந்த உயிர்மூச்சு 
அவள் உள்ளக் கிடையில், 
தொட்டதனைத்தும் தெய்வமாய்ப் 
புரிகின்ற ஆன்மிகத்தில் 
துறைகண்டு மண்டவும் கூடும்; 
ஏனெனில் ஏந்திழையாள்பால் மருவிய 
பேழ்வாய் அனைத்தும் பிறங்கு ஒளியின் 
போக்கறக் கரந்திட்ட ரகசியங்கள்; 
மௌனமே அவள், அதே பொழுது 
வாக்கும் அவளே; 
தானாய்ப் பர்ந்து நிரவும் 
சாந்தம் தேக்கிய கண்டம்; 
கமபனமற்ற கன்னித் தீயே கொழுத்த கடல்; 
கடவுளர்பால் கைவந்த மௌனம் அவளின் வன்மை; 
தன்னொத்த விரிவினை 
அவன் அவள்பால் கண்டுகொண்டான்; 
மீக்கிளர்ந்து கதகதத்த 
தன் சூக்கும ப்ராணாகாசத்தை 
அவன் மீட்டும் அவளிடத்தில் காணப்பெற்றான்; 
அவள்பால் அண்ணல் தன் அகத்துள் 
உலவுதல் போல் போத்தந்தான்; 
தன் சுயத்தின் நித்திய நிலைப்பேற்றையே 
அவன் அவளூடே சந்திக்கலுற்றான். 
------------------ 
----------------------------- 

***  

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

*

(இளங்கன்று பயமறியாது என்பதுபோல் ஒரு காலத்தில் எதை வேண்டுமானாலும் செய்யும் செருக்கு....என்ன பண்ணுவது..) 

*

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

Innamburan Innamburan

unread,
Jun 24, 2011, 1:46:17 PM6/24/11
to mint...@googlegroups.com
தமிழாக்கம் செய்ய்ப்போவது நீவிரா, அந்த ஶ்ரீராமனா? எந்த எடிஷன்? 

நன்றி, வணக்கம்.

இன்னம்பூரான்

2011/6/24 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
தேவலையே! கிருஷ்ண பரமாத்மாவின் தயவால் கண்டு பிடித்துவிட்டீரே :-))) 

ஆனால் இன்னொரு பகுதி தமிழாக்கம் நான் போட்டே ஆக வேண்டிய கட்டாயத்தில் என்னை வைத்து விட்டீர். 

2011/6/24 Innamburan Innamburan <innam...@gmail.com>

"...Near to earth's wideness, intimate with heaven,

Exalted and swift her young large-visioned spirit

Voyaging through worlds of splendour and of calm

Overflew the ways of Thought to unborn things.

Ardent was her self-poised unstumbling will;

Her mind, a sea of white sincerity,

Passionate in flow, had not one turbid wave.

As in a mystic and dynamic dance

A priestess of immaculate ecstasies

Inspired and ruled from Truth's revealing vault

Moves in some prophet cavern of the gods,

A heart of silence in the hands of joy

Inhabited with rich creative beats

A body like a parable of dawn

That seemed a niche for veiled divinity

Or golden temple door to things beyond.

Immortal rhythms swayed in her time-born steps;

Her look, her smile awoke celestial sense

Even in earth-stuff, and their intense delight

Poured a supernal beauty on men's lives.

A wide self-giving was her native act;

A magnanimity as of sea or sky

Enveloped with its greatness all that came

And gave a sense as of a greatened world:

Her kindly care was a sweet temperate sun,

Her high passion a blue heaven's equipoise.

As might a soul fly like a hunted bird,

Escaping with tired wings from a world of storms,

And a quiet reach like a remembered breast,

In a haven of safety and splendid soft repose

One could drink life back in streams of honey-fire,

Recover the lost habit of happiness,

Feel her bright nature's glorious ambiance,

And preen joy in her warmth and colour's rule.

A deep of compassion, a hushed sanctuary,

Her inward help unbarred a gate in heaven;

Love in her was wider than the universe,

The whole world could take refuge in her single heart.

The great unsatisfied godhead here could dwell:

Vacant of the dwarf self's imprisoned air

Her mood could harbour his sublimer breath

Spiritual that can make all things divine.

For even her gulfs were secrecies of light.

At once she was the stillness and the word,

A continent of self-diffusing peace,

An ocean of untrembling virgin fire:

The strength, the silence of the gods were hers.

In her he found a vastness like his own,

His high warm subtle ether he refound

And moved in her as in his natural home.

In her he met his own eternity..."

Savitri, pp. 14-16 Centenary Edition 

அன்புடன்,
இன்னம்பூரான்
24 06 2011

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Innamburan Innamburan

unread,
Jun 24, 2011, 1:36:43 PM6/24/11
to mint...@googlegroups.com

Innamburan Innamburan

unread,
Jun 24, 2011, 2:10:28 PM6/24/11
to mint...@googlegroups.com
என்னப்பனே! பரந்தாமா!

On 6/24/11, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> wrote:
> 2011/6/24 Innamburan Innamburan <innam...@gmail.com>

>
>> தமிழாக்கம் செய்ய்ப்போவது நீவிரா, அந்த ஶ்ரீராமனா? எந்த எடிஷன்?
>> நன்றி, வணக்கம்.
>>
>> இன்னம்பூரான்
>>
>>
>>

> என் தமிழாக்கத்தைத்தான் நான் போடுவேன்.
>
> ஆனால் கேள்வித்தாளுக்கான விடை லீக் ஆகும் என்று யார் கண்டார்?
> :-))

>>>> *Savitri*, pp. 14-16 Centenary Edition

--

selva kumaran

unread,
Jun 25, 2011, 1:21:38 PM6/25/11
to mint...@googlegroups.com
திரு. மோகனரங்கன்

காவியம் என்றால் என்ன என்று எளிமையாய் சிறு விளக்கமும் சொல்லிவிட்டால், படிக்க நினைப்போருக்கு அது வசதியாக இருக்கும் என்று தோன்றுகிறது.

காவியத்தின் அடிப்படை இலட்சணங்கள் என்ன என்று மட்டும் சொல்லிவிட்டால் படிக்க நினைப்போருக்கு அடிப்படைப் புரிந்து சுவை கூடும் என்பது என் எண்ணம்.

என் எண்ணம் சரியெனப் பட்டால் ஆவன செய்க.

2011/6/25 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
காவியம் உருவாகும் பொழுது 

காவியம் ஒன்று உருவாகிக் கொண்டிருக்கிறது. வாயைப் பொத்திக்கொண்டு பேசாமல் இருந்திருக்கலாம். 'யாரும் இந்தக் காலத்துல காவியம் எழுத முடியாது' என்று தமிழினி வசந்தகுமார் சொல்லப்போக, மூரியெழுந்து, 'ஏன் இல்லை? யார் போடுவதற்கு தயார் என்று சொல்லுங்கள்.' என்று முழங்கப்போய் மாட்டிக்கொண்டு விட்டேன். அன்றிலிருந்து பித்து பிடித்தாற்போல் ஆகிக்கொண்டிருக்கிறது. போகிற போக்கில் அச்சுத் தாளில் 1500 லிருந்து 2000 பக்கம் வரையில் செல்லும் போல் தெரிகிறது. ரொம்பவும் அதிகப் பிரசங்கித்தனம் வேண்டாம் என்று ஆயிரத்திற்குள் அடக்கிவிடக் கருதியிருக்கிறேன். தமிழனாய்ப் பிறக்கக் கொடுத்து வைத்தேன்.

நல்ல தந்தை தாய், ஆசிரியர்கள், 
நண்பர்கள், வளர்ந்த சூழல், 
உள்ளே படுத்துக் கொண்டிருப்பவன், 
உரகச் சுற்றாய் அரவணைக்கும் தடமதில்கள், 
உள்ளத்தைக் கால்கட்டும் உவகைப் பெருக்காய் 
நான் வளர்ந்த தமிழின் மடி, 
ஊருண் கேணியாய்த் தொட்டு வைத்த சங்கப் பொய்கை, 
உலகு புரக்கும் மும்முலையாய்ச் செந்நாப்போது, 
உன்னித்தெழுந்த தடமுலையாய்த் திருவாய்மொழித்தலைவி, 
உவட்டாமல் இனிப்பதுவாய் மூவர்மொழி, 
உலகளந்த திருவடியாய்க் கம்பன் பரிசு, 
உலா வரும் கலைச் செப்பாய் இளங்கோவின் கைச்சிலம்பு, 
அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் 
சிரபுரத்தான் தந்த சீர்வரிசை, 
சந்தக் கொழிப்பின் மந்தாகினியாய்ச் சருவி வரும் தமிழின் கிரி, 
இல்லை இல்லை பெருக்கம் அன்பில் அமிழ்த்தும், 
பேருலகு காணத் தவிக்கும் மனிதனைப் 
பேணி வளர்க்கும் தமிழின் மகன் 
காவியம் பாடுவதில் வியப்பில்லை.

மேலை நாடுகளில் ஒரு பழக்கம் உண்டு. 
அட்டும் சுவையுணவின் ஒரு சிப்பத்தை 
இதழ் பருகக் கொடுத்துக் களிக்கும் 
பழக்கத்திற்குப் பெயர் work in progress. அதுபோல் 
இன்னும் கண் திறக்காத காவியத்தின் கலையெழிலை 
ஒப்பனைக்கு முன்னர் ஒரு சில பிரிகதிராய் 
உமக்குக் கொடுத்துக் களிக்க நினைத்தோம். 
உவட்டாமல் இனிப்பதுவோ உறுத்துவதாய் இருப்பதுவோ 
யாமறியோம் பெரும! 
உண்டுடுத்து உரையாடி ஒலியடங்க உயிர்ப்படங்கும் வாழ்வில், 
உன்மத்தம் என்று நீர் நினைத்தாலும், 
உன்னதமாய்ச் சில கணங்கள் தேக்கி வைத்தேன் தீந்தமிழில்.

திரைத்து வரும் கங்குல். 
தமிழ் ஏங்கிக் காத்திருக்கும். 
புலரி வாராமற் போகாது, 
பொற்கதிராய் என்மகவோர் 
வந்து தழுவும் நாளும் தொலையாது, 
ஆயினும் ஆழியென நீளும் தனிமை, 
அதில் ஓர் அகலெடுத்துச் சென்று 
அருந்தமிழின் கண் மலரும் 
நீர் வழித்த இனிமை என் பங்கு.

காவியம் எதைப் பற்றி எனப் பலரும் கேட்டதுண்டு. 
காலத்தின் கரை வீற்ற நித்யங்களைப் பற்றித்தான் காவியம் கதுவியெழும். 
நித்தப் பொருள் அனைத்தும் ஆலயமாய்ச் சேரும் இடம் மனிதன். 
அவனைத்தான் காவியப் பெண் அன்றிலிருந்து காதலில் கட்டிவிட நினைக்கிறாள். 
கைக்கிளையாய் ஆகிடுமோ என்று பெருமூச்சு எறிகிறாள். 
உலகின் பல மூலைக்கும் சென்று இரவுக்குறியும் பகற்குறியும் வைக்கிறாள்.
வந்தாய் போலே வாராதாய் என்று ஏங்குகிறாள். 
வாராதாய் போல் வருவானே என்று எதிர்நோக்குகிறாள். 
பாங்கரும் விறலியரும் பரிந்து சென்ற பெரியோரும் 
இன்னும் திரும்பிய பாடில்லை. 
எத்துணையோ சிற்றில் இழைத்துச் சிணுங்குகிறாள். 
சிதைத்து அந்தச் செல்வன் சிந்தை மகிழ்விப்பான் 
என்று காலத்தின் அத்துவாக்கள் எங்கும் விழி வைத்து நோக்குகிறாள். 
உள்ளம் கவர் கள்வனை 
உருவெழுதிப் பூத்த உவகையில் உடல் நனைகிறாள். 
என்றும் நெட்டுயிர்ப்பே இவள் பங்காய் 
அந்தப் பெருந்தகையோன் திரிகின்றான் தனைமறந்து, 
பாடிவீடெங்கும், 
தன்னும் உருவும் பெயரும் நினைவயர்ந்து.

இதை நீங்கள் நன்கு புரிந்துகொண்டால் 
காவியத்தையும் செவ்வனே புரிந்து கொள்ளலாம். 
உங்கள் ஆர்வம் கரை இகந்து முந்தும் ஆயினும் 
இது வெறுமனே முன்னூட்டுச் சுவைக்கதிர் தானே! 
முனியாது பொறுத்திடுக! 
முற்றுரும் நாள் முதிராத முத்தி எழிலை 
முகிழ்த்த நூலாக்கித் தந்திடுவேன். 
நடையைப் பொறுத்த வரையில் மரபின் வழீஇய யாப்பா? 
உரையா? புதுக்கவிதையா? விடுதலைப் பாசுரமா? 
குவி நுண்கண்ணியா? என்று 
எவ்வகை அளவுகோலும் கைக்கொள்ளாது 
கவிப்புள்ளைச் சுதந்திரமாகக் கூவ விட்டிருக்கிறேன். 
கூறு தமிழ்ப் பாவலரும், 
புதுக்கவிதைப் போக்குவரத்தாரும் 
நகை தள்ள எள்ளுவரேல் அதுவும் நன்றே.

*** 

காவியத்தின் சில பகுதிகளைச் சுவைக்க ---- 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

***

sk natarajan

unread,
Jun 25, 2011, 9:30:58 PM6/25/11
to thamiz...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, min tamil
அருமையான துவக்கம்
காப்பிய நாயகருக்கு  தலை வணக்கம்

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.com/  
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

Innamburan Innamburan

unread,
Jun 26, 2011, 1:36:41 AM6/26/11
to mint...@googlegroups.com
கிருஷ்ணபரமாத்மா என்ன சொல்கிறார் என்றால்.........!

நன்றி, வணக்கம்.

இன்னம்பூரான்

2011/6/26 sk natarajan <sknatar...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Jun 26, 2011, 2:25:21 AM6/26/11
to mint...@googlegroups.com
Dear Mr. Srirangan Mohana Rangan,

An avid reader of your postings, I endeavour to carry the message further, by introducing a relevant, but, not necessarily obvious, appetizer and you are commanding that it be throttled. I abide by your Supreme Command,

Your Most Obedient Reader,
Innamburan
27 06 2011

Innamburan Innamburan

unread,
Jun 26, 2011, 4:10:52 AM6/26/11
to mint...@googlegroups.com
'இதற்கும் ஸ்ரீமத் பகவத் கீதையின் ஸ்தித ப்ரக்ஞனைப் பற்றிய வர்ணனைக்கும் ஒப்புமை கூறுவர். மேலெழுந்த வாரியாக சில ஒப்புமைகள் உண்டேனும் அதன் மூர்ச்சனை வேறு,'

=> இதை சொல்ல துணிந்தேன். ஒரு வெட்டு! எனினும், அருமை நண்பர் திரு. ஶ்ரீரங்கம் மோஹனரங்கன் அவர்கள் யான் துணிந்ததை படிக்கப்போவதில்லை. அதான், அசாத்திய தகரியத்துடன் இங்கு இதை பதிவு செய்கிறேன். மற்றவர்கள் படிக்கக்கூடும் என்பதும் ஒரு தார்மீக நோக்குத்தானே. ஆனால், நான் மறந்தது, இன்று மற்றவர் பேச்சுரிமையை இந்திய அரசு தடை செய்த இருண்ட தினத்தின் நினைவு நாள் என்பது! 

ஈஷ்வரோ ரக்ஷது.

நன்றி, வணக்கம்.

இன்னம்பூரான்
26 06 2011

sk natarajan

unread,
Jul 1, 2011, 9:28:52 AM7/1/11
to thamiz...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, min tamil
அருமை
உன்னை நீ அறிவாயானால் உனக்கொரு கேடில்லை என்றார்களே ?

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.com/  
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

2011/6/27 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
பொய்யோ மெய்யோ

நாம் ஏன் பொய் சொல்லுகிறோம்? 
நல்லதை நாம் விரும்புவதில்லை. 
கெட்டதை நாம் ரகசியக் காதல் 
செய்யாமல் இருப்பதில்லை. 
ஆனால் நன்மையின் கட்சி என்று கூசாமல்... 
தீமையோடு போய்ச் சேர்ந்து 
நன்மையின் கௌரதையை இழக்க விரும்பாமல் 
நன்மை என்று முழு மனதாகித் 
தீமையின் காந்தல் ருசியை விட முடியாமல் 
இது என்ன சர்வ ஜன ஒப்பந்தப் பொய்? 
நன்மையை விரும்புபவர் என்றால் 
நன்மை அல்லலுறும்போது 
நாம் ஏன் பதுங்கிக்கொண்டு 
கள்ளப் பார்வை பார்க்கிறோம்? 
தீமை கையோங்க நாம் ஏன் 
நம்மாள் வெற்றி பெற்றது போலக் 
களிக்கும் கணப்பொழுது தடயத்தை 
அவசரவசரமாக அழிக்கின்றோம் 
முகம் புடைக்க தார்மிகக் கோபமாய் ஆக்கி? 
படைத்தவனுக்கு நாம் சொல்லும் 
பொய்யா இது? 
அன்றேல் 
படைத்தவன் நமக்குச் சொல்லும் 
மெய்யா இது? 
எப்படியோ, 
உள்ளம் என்று சொல்லிக் 
கள்ளம் என்பதை வைத்தது 
யாருடைய பொய்? 

seshadri sridharan

unread,
Jul 10, 2011, 10:52:20 AM7/10/11
to mint...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, thamiz...@googlegroups.com
அருமையான பதிவு
 
சேசாத்திரி

2011/7/10 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ஞானி விண்ணுலகக் கதவைத் தட்டுகிறான். 

உள்ளிருந்து குரல் -- “யார்?” 

ஞானி -- “நான் தான்” 

குரல் -- “இங்கே உனக்கும் எனக்கும் இடமில்லை. போய்வா” 

ஞானி வந்துவிட்டான். யோசனை. தியானம். சிந்தனை. ஒன்றும் புரியவில்லை. 

சரி என்று மீண்டும் போய்த் தட்டினான். 

“யார்?” 

“நான் தான்” 

பதிலும் இல்லை. திற்க்கவும் இல்லை. 

வந்துவிட்டான். 

வேதனை. சிந்தனை. 
என்னது? 

மூன்றாம் முறை. கதவைத் தட்டினான். 

“யார்?” 

“நீதான்” 

கதவு திறந்துதான் இருந்தது. 

தான்தான் ஒவ்வொரு முறையும் நான் தான் என்று சொல்லிப் பூட்டினோம் என்பது புரிந்தது. 

பூட்டைத் திறப்பது கையாலே 

மனம் வீட்டைத் திறப்பது? 

பதில் சொல்லிப் பூட்டிவிட நான் தயாராய் இல்லை. 

*** 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

2011/7/8 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
என்னைப் படைத்து இவைநடுவே வைத்திட்ட 
உன்னை உரைத்தாலும் யாதுபயன்? - முன்னை 
வினையகல மூண்ட புதுவினைக்கே கன்னம் 
தனைவைக்கும் என்மடமை யே! 

மடமை மறுமை இவற்றின் பிணக்கை 
நடமாடிக் கூத்துகந்தாய் கொல்லோ! -- விடமே 
கழுத்து தனில்மட்டும் வைத்தவுனைச் சொல்வர் 
முழுக்கவைத்த வென்னைச்சொல் லார். 

ஆர்க்குப் பிரீதியென அல்லல் படவைத்தாய் 
ஊருக்கோ உந்தனக்கோ ஊழுக்குப் -- பேர்சொல்லி 
விற்ற எனக்கோ விடாப்பாசம் பெற்றவளின் 
பற்று தனக்கோ புகல்? 

***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

*

Geetha Sambasivam

unread,
Jul 11, 2011, 12:25:36 AM7/11/11
to thamiz...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, min tamil
அருமையான விளக்கம். அதுவும் அந்தக் கடைசி பஞ்ச், சிறப்பு!

2011/7/10 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ஞானி விண்ணுலகக் கதவைத் தட்டுகிறான். 

உள்ளிருந்து குரல் -- “யார்?” 

ஞானி -- “நான் தான்” 

குரல் -- “இங்கே உனக்கும் எனக்கும் இடமில்லை. போய்வா” 

ஞானி வந்துவிட்டான். யோசனை. தியானம். சிந்தனை. ஒன்றும் புரியவில்லை. 

சரி என்று மீண்டும் போய்த் தட்டினான். 

“யார்?” 

“நான் தான்” 

பதிலும் இல்லை. திற்க்கவும் இல்லை. 

வந்துவிட்டான். 

வேதனை. சிந்தனை. 
என்னது? 

மூன்றாம் முறை. கதவைத் தட்டினான். 

“யார்?” 

“நீதான்” 

கதவு திறந்துதான் இருந்தது. 

தான்தான் ஒவ்வொரு முறையும் நான் தான் என்று சொல்லிப் பூட்டினோம் என்பது புரிந்தது. 

பூட்டைத் திறப்பது கையாலே 

மனம் வீட்டைத் திறப்பது? 

பதில் சொல்லிப் பூட்டிவிட நான் தயாராய் இல்லை. 

*** 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

2011/7/8 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
என்னைப் படைத்து இவைநடுவே வைத்திட்ட 
உன்னை உரைத்தாலும் யாதுபயன்? - முன்னை 
வினையகல மூண்ட புதுவினைக்கே கன்னம் 
தனைவைக்கும் என்மடமை யே! 

மடமை மறுமை இவற்றின் பிணக்கை 
நடமாடிக் கூத்துகந்தாய் கொல்லோ! -- விடமே 
கழுத்து தனில்மட்டும் வைத்தவுனைச் சொல்வர் 
முழுக்கவைத்த வென்னைச்சொல் லார். 

ஆர்க்குப் பிரீதியென அல்லல் படவைத்தாய் 
ஊருக்கோ உந்தனக்கோ ஊழுக்குப் -- பேர்சொல்லி 
விற்ற எனக்கோ விடாப்பாசம் பெற்றவளின் 
பற்று தனக்கோ புகல்? 

***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

*

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

35B.gif

Geetha Sambasivam

unread,
Jul 12, 2011, 4:01:45 AM7/12/11
to tamizhs...@googlegroups.com, thamiz...@googlegroups.com, min tamil
And my eyes spread the world before me.
The wind towels me like a mother; .//

முதலில் உங்கள் மொழி ஆளுமையை நினைத்து பிரமிப்பு ஏற்படுகிறது.  வார்த்தைகள் வரும் வேகம் அதிகமா, உங்கள் எண்ணங்களின் வேகம் அதிகமா எனச் சொல்ல முடியாது. பிரவாகம் தான். அதிலும் The wind towels me like a mother  என்பதில் அம்மாவின் அன்பை, பரிவை உணர வைத்திருக்கிறீர்கள்.

Memory in paper;
Thoughts await forever //

இந்த வரிகள் பிடித்தன.  காரணம் சொல்லத் தெரியாது. ஆனால் வேர்ட்ஸ்வொர்த்?? தெரியலை, யாரோ எழுதிய கவிதை ஒன்றும் நினைவில் வந்தது. அதிலே இயற்கையை ரசிப்பது குறித்தும், புத்தகங்கள் அறுவை என்றும் பொருள்பட வரும்.  கவிதை நினைவில் இல்லை. ஆனால் ஜன்னலருகே அமர்ந்து கொண்டு கொட்டும் மழையில் கையில் பிடித்த எழுத்தாளரின் புத்தகத்தோடு அமர்ந்து கொண்டு படிப்பது சொர்க்கம்.

ephemeral lives = a very short time??????

2011/7/11 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ஆங்கிலக் கவிதைகள் சில எழுதி வைத்த பழைய நோட்டு கிடைத்தது. வலையேற்றியிருக்கிறேன். பார்த்துவிட்டு தவறிருந்தால் சொல்லவும். 

***

Geetha Sambasivam

unread,
Jul 12, 2011, 9:28:20 AM7/12/11
to tamizhs...@googlegroups.com, thamiz...@googlegroups.com, min tamil
நன்னியோ நன்னி. :-))) //

ஹிஹிஹிஹி

2011/7/12 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
கீதாம்மா! மிக்க நன்றி. ஏன் என்றால் யார் இந்தச் சுட்டியைப் பார்த்துக் கருத்து சொல்லப் போகிறார்கள்? என்று நினைத்தேன். பரவாயில்லை. என் மீது அக்கறை கொண்டவர்கள் இருக்கிறார்கள். 

கொஞ்சம் சிரமம் பார்க்காமல் மேலும் இடப்போகும் ஆங்கிலக் கவிதைகளையும் பார்த்து தப்பு தவறு இருந்தால் சொல்லுங்கள். தயங்காமல். எனக்குப் பேருதவியாய் இருக்கும். 

நன்னியோ நன்னி. :-))) 

2011/7/12 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Jul 12, 2011, 9:28:35 AM7/12/11
to tamizhs...@googlegroups.com, thamiz...@googlegroups.com, min tamil
தப்பு தவறு இருந்தால் சொல்லுங்கள்//

ம்ஹும் இது கொஞ்சம் ஓவர். எனக்குத் தப்பும் தெரியாது, தவறும் தெரியாது.. ரசிக்க மட்டுமே தெரியும். சந்தேகம் வந்தால் கேட்பேன். இல்லைனா நல்லா இருக்குனு சொல்லிட்டுப் போயிடுவேன்.

2011/7/12 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
கீதாம்மா! மிக்க நன்றி. ஏன் என்றால் யார் இந்தச் சுட்டியைப் பார்த்துக் கருத்து சொல்லப் போகிறார்கள்? என்று நினைத்தேன். பரவாயில்லை. என் மீது அக்கறை கொண்டவர்கள் இருக்கிறார்கள். 

கொஞ்சம் சிரமம் பார்க்காமல் மேலும் இடப்போகும் ஆங்கிலக் கவிதைகளையும் பார்த்து தப்பு தவறு இருந்தால் சொல்லுங்கள். தயங்காமல். எனக்குப் பேருதவியாய் இருக்கும். 

நன்னியோ நன்னி. :-))) 

2011/7/12 Geetha Sambasivam <geetha...@gmail.com>
And my eyes spread the world before me.

திவாஜி

unread,
Jul 25, 2011, 9:44:56 PM7/25/11
to thamiz...@googlegroups.com, min tamil

2011/7/25 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ன்றும் உதவா எனைவைத்தென் நாடகமோ 
மன்றில்நீ ஆடி அலுத்ததுவோ - என்றைக்கும் 
சிந்தைக்கே எட்டா சிவனார்தம் சில்மிஷத்தால் 
நொந்தவுயிர் பந்தெனவே ஆடு. 

--
http://www.swaminathar.org/
http://aanmikamforyouth.blogspot.com/
http://techforelders.blogspot.com/

B9E.gif

Geetha Sambasivam

unread,
Jul 25, 2011, 11:48:23 PM7/25/11
to tamizhs...@googlegroups.com, thamiz...@googlegroups.com, min tamil
ரண்டாற்றின் நன்நடுவே என்பிறப் பென்றால் 
புரண்டுவிழ வாழ்ந்தேன் கடலி -- லரண்டுபோ 
யென்னரங்கா கூவுவனே//

கூவிக் கூவிட்டுத் தான் இருக்கோம். இப்படித் தான் இருக்கு பிழைப்பு! வார்த்தைகள் வெள்ளமாய் வருது; ஆனால் சொல்லத் தெரியலை. :(

2011/7/26 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ரண்டாற்றின் நன்நடுவே என்பிறப் பென்றால் 
புரண்டுவிழ வாழ்ந்தேன் கடலி -- லரண்டுபோ 
யென்னரங்கா கூவுவனே ஏற்றெடுக்கும் கைநீட்டி 
உன்னடிக்கீழ் வைத்திடுவாய் காப்பு

***

Hari Krishnan

unread,
Jul 26, 2011, 12:15:46 AM7/26/11
to mint...@googlegroups.com

2011/7/26 Geetha Sambasivam <geetha...@gmail.com>

கூவிக் கூவிட்டுத் தான் இருக்கோம். இப்படித் தான் இருக்கு பிழைப்பு! வார்த்தைகள் வெள்ளமாய் வருது; ஆனால் சொல்லத் தெரியலை. :(

Don't disturb please.

--
அன்புடன்,
ஹரிகி.

Geetha Sambasivam

unread,
Jul 26, 2011, 2:25:45 AM7/26/11
to mint...@googlegroups.com
சரி, சரி.

2011/7/26 Hari Krishnan <hari.har...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

360.gif

sk natarajan

unread,
Jul 26, 2011, 9:23:32 AM7/26/11
to thamiz...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, min tamil
அருமை ஐயா

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.com/  
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

sk natarajan

unread,
Jul 26, 2011, 9:25:38 AM7/26/11
to thamiz...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, min tamil
அருமை  ஐயா

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.com/  
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

2011/7/26 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
முக்காலும் என்னுள்ளே நீயிருக்க நான்மறந்தே 
இக்காலம் என்கதறி என்னபயன்? -- மொக்குள் 
எனமறையும் தோற்றரவுக் கேயென்னை விற்றால் 
அனவரதம் உன்னுறவென் னாம். 

*** 

2011/7/26 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ரண்டாற்றின் நன்நடுவே என்பிறப் பென்றால் 
புரண்டுவிழ வாழ்ந்தேன் கடலி -- லரண்டுபோ 
யென்னரங்கா கூவுவனே ஏற்றெடுக்கும் கைநீட்டி 
உன்னடிக்கீழ் வைத்திடுவாய் காப்பு

***
2011/7/25 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ன்றும் உதவா எனைவைத்தென் நாடகமோ 
மன்றில்நீ ஆடி அலுத்ததுவோ - என்றைக்கும் 
சிந்தைக்கே எட்டா சிவனார்தம் சில்மிஷத்தால் 
நொந்தவுயிர் பந்தெனவே ஆடு. 

***

sk natarajan

unread,
Jul 26, 2011, 9:34:49 AM7/26/11
to tamizhs...@googlegroups.com, thamiz...@googlegroups.com, min tamil
நான்மறையும்
நான்மறையும்

வார்த்தை  சித்தர்  -  நீர்
விளையாடுகின்றீர்
தமிழ் மொழியினிலே

அருமை ஐயா

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.com/  
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

2011/7/26 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
நான்மறையும் காலம் நனிநல்ல காலமெனில் 
நான்மறையும் காணா நயத்தக்கோய் -- ஊன்மறைய 
உன்னி உணர்வெழுமோர் காலமதே உத்தமமாம் 
மன்னும் அருளால் உவந்து. 

*** 

Geetha Sambasivam

unread,
Jul 26, 2011, 9:43:20 AM7/26/11
to thamiz...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, min tamil
சரியான பதில். 

2011/7/26 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
முக்காலும் என்னுள்ளே நீயிருக்க நான்மறந்தே 
இக்காலம் என்கதறி என்னபயன்? -- மொக்குள் 
எனமறையும் தோற்றரவுக் கேயென்னை விற்றால் 
அனவரதம் உன்னுறவென் னாம். 

*** 

You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
360.gif

sk natarajan

unread,
Jul 30, 2011, 8:52:26 PM7/30/11
to thamiz...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, min tamil
அருமை  ஐயா
உங்களின் வரிகளை  படிக்கையில்
சிந்தையில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்குகின்றது

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.com/  
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

2011/7/31 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
(ஓசை திருப்தியாய் இல்லை. எனவே இவ்வண்ணம் மாற்றியுள்ளேன். விளம் மா விளம் மா விளம் விளம் மா என்பதன் இரட்டிப்பாய் வருகின்ற மாதிரி)

காப்பென நின்றாய் ககனத்தில் நிறைந்தாய் 
கருதவும் அரியனாய் கார்வண்ணா 
கனிந்தருள் செய்தாய் கருத்தினில் இனித்தாய் 
காலமா யென்னகம் கலந்தே 

கோப்புண்டு கற்றாய் குவலய மானாய் 
குணமென நிற்பதும் உவந்தே 
கட்டிட வந்தாள் கருத்தின்றி நின்றாள் 
காணாத கேள்வியில் களித்தே 

தீப்படர் கானில் தப்பிய அரவம் 
தப்பாமல் எய்துமச் சரமாய் 
தஞ்சமாய் அடைந்தே தப்பாமல் எய்யத் 
தரையினில் அழுத்துகால் விரலே 

மீப்பதி யெழுத்தாம் மாறாத விதியாம் 
மாற்றிட மனங்கனிந் தழுத்தாய் 
மகத்தினுக் கப்பால் அணுவினுக் குட்பால் 
முழுமையாய் நின்றமா தவனே. 

***

2011/7/30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
காப்பாக நின்றாலும் ககனமெங்கும் நிறைந்தாலும் 
கருத்துக்கு அரியவன் கார்வண்ணன் 
கனிந்தருள் செய்பவன் கருத்தினில் இனிப்பவன் 
காலத்தின் நாயகன் கலந்துளத்தின் 

கோப்பாகிக் கற்பவன் குவலயமாய் நிற்பவன் 
குணமேறி நிற்பதும் கண்டுவந்தே 
கட்டிவிட வந்தவள் கருத்தழிய நின்றதும் 
காணாத பேர்களும் கேட்டுவப்ப 

தீப்பாய்ந்த கானிலும் தப்பித்த அரவமும் 
தப்பாமல் எய்துமச் சரமாகியே 
தஞ்சமென அடைந்ததும் தவறாமல் எய்யவே 
தரையழுந்த அழுத்தியக் கால்விரலினை 

மீப்பதிய எழுதிய மாறாத விதியினில் 
மாறிடவே அழுத்திட மனங்கனிவையோ 
மகத்திற்கு மப்பாலும் மற்றணுவின் உட்பாலும் 
முழுதாகி நின்றதிரு மாதவனே. 

***

2011/7/29 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
தியும் உலகெலாம் வான்நிறை மெய்மை 
கதியெனக் காட்டிக் கருணையால் ஈந்து 
அதிமா னிடமாய் அமரரும் நந்த 
புதுமா னிடமாய்ப் புவன முயக்கொளப் 
போந்த பரமன் மறுபடி வந்தனன் 
மாந்தரின் வேள்வியில் என்னுமோர் புங்கவன் 
ஈசர்க் களித்த அவிசென வாழ்வினைத் 
தேசம் தனக்கே அளித்தான் உவந்து 
விரதம் இயற்றும் தவசியர் உள்ளும் 
வரமென வந்த பரமநல் வாழ்வு 
கரமெனக் காரிருள் கூற்ற மகற்றித் 
திரமெனத் திண்கழல் சேர்க்கும் திருவருள் 
ஆன்ற பொழுதாய் அகத்திடை ஊன்றிடும் 
பூன்றமா மென்னப் புலர்ந்திடும் சோதி 
புவிநிகழ் வாழ்விதில் பொன்றிடா வாழ்வோ 
குவியுணர் வுற்றெழும் கோலநல் தீர்வோ 
எனமயல் காட்டும் இணையிலா வென்றி 
மனமயல் நீக்கி மறப்பே அகற்றிக் 
கணந்தொறும் கண்ணன் கழலிணை என்றும்
அணைதரும் ஆன்றநல் காப்பு. 

***

2011/7/29 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ண்ணனின்னருள் கிட்டியோர்க்கெலாம் 
திண்ணமாம்கதி தேற்றமிங்கிதே 
வண்ணமாமறம் பல்விதங்களாய் 
நண்ணிடுமவர் நல்குரவென 
திண்ணிதாயுளம் ஓர்ந்தவக்கணம் 
அண்மையாயகம் ஆண்டுநிற்பவன் 
வெண்மையாய்நகை உண்மையானபொய் 
அண்ணலுக்கழ காகிநின்றிடும் 
மண்ணுறுமுயிர் விண்ணிலவிடும் 
கண்ணிலுமவன் காட்சியாகுமே 
பண்ணியவெலாம் கண்ணனுக்கென 
எண்ணிடவினை இன்றியோயுமே 
தண்ணெனுமருள் கொண்டிடுமுயிர் 
உண்டிடமழை யாகிபொழியும் 
திருவருள் 
கண்டோர்க் கன்றிக் காணார் 
எண்சொல் இகந்தும் இறைபொலி வதுவே. 

*** 

2011/7/29 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
வாய்மொழிக்குள்சுவை அறிந்திடுநேசர் 
நயந்திடும்ஒண்நெறி சேரும்நின்கழல் 
மாய்வதிலாமனம் அளித்திடுதூயா 
அயர்வெதுமண்டிடா ஆர்வத்தின்னிழல் 
காய்தலிலாகுணம் குனித்திடும்எம்மான் 
களைப்பெதுமற்றிறை பற்றில்நின்னுடன் 
ஓய்தலிலாவணம் நினதடித்தொண்டே 
உவந்தருள்தந்தெனை ஆட்கொள்கண்ணனே. 

***

2011/7/29 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
நீகாண நான்வாட ஏனிக் கூத்து? 
நலங்கெடவே நலிவதுமே நன்றோ சொல்லாய் 
மீகாமன் கைவிட்ட கலமா யானேன் 
மனத்தகத்தில் பாறைகளில் மோத லானேன் 
யார்காவா ராகிலுமென் நின்காப் பொன்றே 
ஏற்குமுயிர் கதியெனவே ஏங்கி நின்றேன் 
போகாத ஊருக்கு வழிசொல் லாமல் 
பொன்னரங்கா நின்னடிக்கீழ் அமர்த்து வாயே. 

***

sk natarajan

unread,
Jul 30, 2011, 8:58:15 PM7/30/11
to thamiz...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, min tamil
7) Knotted fine little thread*
>> Who is greater?
>> God turned into a man;
>> Or a man turned towards God;
>> Or a man whose God is a Man of God?
>> God descends to man
>> As an answer to abundant prayers;
>> Man ascends to God
>> By the rising call of aspiration;
>> A man devotes himself to a Man of God
>> Out of what?
>> The knotted fine little thread,
>> Not enough to tie,
>> The reason, do you know why?
>> Which is greater?
>> The knotted fine little thread
>> Or the reason that is behind?
>> None can say
>> or who can say?
>> Or how can anyone say?

இது  எனக்கு  மிகவும் பிடித்தது  ஐயா
மிகவும் பெருமையாக இருக்கின்றது
இது போன்ற எண்ணங்கள் நம்மை  தாக்கும் போது
ஒரு சுய சோதனைக்கு உள்ளாக்குகின்றது
நன்றி ஐயா

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.com/  
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

2011/7/31 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
யயாதியின் கதை பற்றி என் ஆங்கிலக் கவிதை 

மகானாய் இருப்பதை விட 

இருளைக் கரைக்குமா கவிதை? 

*** 

--

Hari Krishnan

unread,
Jul 30, 2011, 10:09:23 PM7/30/11
to mint...@googlegroups.com
2011/7/31 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
(ஓசை திருப்தியாய் இல்லை. எனவே இவ்வண்ணம் மாற்றியுள்ளேன். விளம் மா விளம் மா விளம் விளம் மா என்பதன் இரட்டிப்பாய் வருகின்ற மாதிரி)

தானனத் தந்தனா தந்தனத் தத்தனா 
தானனத் தந்த தாதா

இரண்டிரண்டு அசைகளாய் அமையும்போது ஈற்றுச்சீர் அதே போன்ற இரண்டசையில் லேசாக மாறுபடவேண்டும்.  மூன்றசையில் முடிவது ஓசையின் ஓட்டத்தைத் தடுக்கிறது.  The last foot should always (in a சந்த விருத்தம்) break and stop, in order that the next cycle starts smoothly.

ஒரு மாதிரிக்கு: 

காப்பென நின்றளை ககனத்தில் நிறைந்தனை
கருதவரி தான கண்ணா.

உங்கள் எண்ணத்தில் இருந்தது வேறேதேனும் சந்தம் என்றால் இடையீட்டுக்கு மன்னிக்கவும்.  உங்கள் விருப்பம்.  )

sk natarajan

unread,
Aug 7, 2011, 9:30:44 PM8/7/11
to thamiz...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, min tamil
Don't tell me children are god;
They are too childish to be one.
May be you mean to say
Gods are like children.
Quite likely, they never grow in time.

அருமை  ஐயா

Suddenly I heard you somewhere
Felt your presence neighboring mine;
Yet I saw you not,
knew not where to find you,
The same, the same, the self-same you.
Me, the one following you;
You, the self-same elusive you.

ஏக்கங்களை ஏற்றி வைத்தாய்
அருமை ஐயா

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.com/  
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

2011/8/8 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
கவிதையைப் பற்றி ஆங்கிலக் கவிதை 

நீதான்....ஆனால் தொடர்ந்து வந்து பார்த்தால்...இது என்ன மாய விளையாட்டு... 

*** 

N. Kannan

unread,
Aug 22, 2011, 7:48:23 PM8/22/11
to mint...@googlegroups.com
ஐயோ!
கொன்னுட்டீங்க!
இப்படி இறைவனோடு மல்லுக்கட்டும் வழக்கமெல்லாம் மற்றவர் அறியாதது.
காஸ்பல் இசையில், ‘இறைவா நீயொரு கல்’ என்ற பாடல் பிரபலம். முதலில்
திருச்சபை காஸ்பல் குழுவை ஏற்றுக்கொள்ளவில்லை.
அடிபட்டவனுக்குத்தான் தெரியும் அடியின் வலி.

//மாஞாலம் புரக்கட்டும்;
> ஓருயிரின் அஞ்ஞானம் ஊதத் தெரியாத
> கார்மேக வண்ணனார்
> ஊதிநிரப்பட்டும்
> ஊரெங்கும் ஊதுகுழல். //

எண்டா! அம்பி! கிருஷ்ணா! உன் பிறந்த நாளைக்கு இவ்வாழ்த்து தேவைதானா?
இந்த மனுஷர் குறை என்ன என்று கண்டு, நிவர்த்திக்ககூடாதா?

நா.கண்ணன்

பிகு: பக்தி இலக்கியம் தமிழில் இனி இல்லையெனும் குறை தீர்ந்தது.
இப்படித்தான் நான் சொல்லி ஈழத்துக் கவிஞர் வ.செ.ஜெயபாலன் கண்ணன் மீது ஓர்
பாடல் பாடினார். கோனாரப்பயலே என்று ஒரே திட்டு. வலி, வேதனை. பின்
அர்ச்சனை எதில் வரும்! சபாஷ்!

2011/8/23 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
> ஊரெங்கும் ஊதுகுழல்
> யமுனையின் கரையில்
> தெய்வ வெள்ளத்தில்
> திவ்ய ஆற்றினில்
> சிறிதும் இறங்கி நனையாத
> ஓர் கிழவன் நான்;
> இழந்தவன் ஆனேன்.
> மயிற்பீலி கொண்டு
> ஒரு சிறு பிள்ளை
> மாடுகள் ஓட்டி வருவதும் உண்டு;
> குறும்பன் அவன் என்று
> எச்சரிக்கையாக நான்
> இருந்ததும் உண்டு;
> இழந்தேன் ஏ பாவம்!
> கிருஷ்ணன் என்றே சொல்லுவார்கள்;
> வண்ணம் வைத்து அழைப்பார் போலும்
> என்றே இருந்தனன்,
> என்னே என் மடமை!
> ‘ஊருக்கே நீ தெய்வமாடா?
> உன்னைப் பலர் சொல்லுவதேன்?’
> என்றொரு நாள் கேட்கையிலே
> ‘கன்று மேய்ப்பவன் என்னிடம் நீர்
> கிண்டல் செய்வதோ சொல்லும் ஐயா?’
> என்று நகைத்தவன் சென்று விட்டான்.
> இன்றும் நகைக்கும் என் பேதைமையே.
> தன் முன் இருந்தவன்
> தெய்வமென்றே பின்னால்
> தானுணரும் கொடுமை
> தனிப்பட்டதோர் அவலம்.
> அவன் பேசிய பேச்சினுக்கே
> இன்று புதுப் பொருள் தெரிந்திடுதே.
> அன்று உணர்ந்தேனோ
> கன்று உணர்ந்ததைக் கூட நான்?
> சென்று மணலினில் குன்று குகையினில்
> கன்று காலிகளின் கால்கள் இடுக்கினில்
> நின்ற மரக்கிளை நிவந்த கவட்டினில்
> முந்தும் அலைகளின் ஆற்றின் நடுவினில்
> எந்தப் பக்கமும் தேடித் தேடி நான்
> வந்து வந்து நோக்கினும் பயனிலையே!
> மந்த புத்தி என்னை நொந்தும் பயனில்லையே!
> மாட்டிடையன் என்று அவன்
> தோற்றம் அளித்தான்;
> மாட்டின் குலம் என்று இன்று
> தோற்றம் அளிப்பேன்.
> அன்றவனைக் கண்ட போது
> ஒன்றும் கண்டிலேன்;
> இன்று காணும் நேரத்திலே
> அவனைக் கண்டிலேன்;
> நன்று நன்று போகட்டும் நான்
> இழந்தவை கோடி;
> சென்று வந்து போன கதை
> எத்தனை கோடி!
> என்றும் அவன் எனை வெறுக்கக்
> காரணம் உண்டு;
> என்று அவன் அடியிணைக்கே
> சேர்வதும் உண்டு?
> கோடிக் கோடி உயிரினமும்
> கொள்ளைபெரும் கோடி.
> ஓர் உயிர் நான்; என்னை அவன்
> காண்பதுண்டோ நாடி?
> பக்தர்களும் முனிவர்களும்
> பன்னெடுங்கால் யோகிகளும்
> என்னெடுங்கால் இயற்றுதவம்
> இன்றுமுற்றும் தொடருமெனில்
> என்னிலைதான் என்னெனவே
> தன்னைப்போலத் தெரியாதோ?
> ஆனாலும் ஒரு வருத்தம்
> போனாலும் வந்தாலும்
> போக்குவரவொழிந்தாலும்
> நீக்கறியா கேள்வியொன்று
> நிலைகுத்தி நிற்கிறது.
> ஆகாத எல்லாம் ஆக்கும் பெருங்கடவுள்
> போகாத எல்லாம் போக்கும் பரங்கடவுள்
> சோகாக்க வைக்குமெந்தன்
> சொந்த அறியாமைதனை
> எந்த வழியாலும் நீக்கத்தான் அறியாதோ?
> மந்த புத்திக் காரனுங்க!
> மன்னிச்சிட வேணுமிங்க.
> உலகமெல்லாம் படைக்கின்ற உத்தமனார்
> கலகம் செய்யுமெந்தன்
> கள்ள இருள் அஞ்ஞானம்
> விள்ள அறியாமல்
> விடைபெற்றுப் போனாரோ?
> தள்ளிவிட்டுப் போனாலும்
> தலைமைக்குப் பணிந்திடுவேன்;
> எள்ளிவிட்டுப் போனாலும்
> என் ஆண்டை என்று மகிழ்ந்திடுவேன்.
> அள்ளிக்கொண்டு போவதற்கே
> கொடுத்துத்தான் வைக்கவில்லை;
> உள்ளத்தில் தனை உணர்த்த
> உத்தமர்க்கு ஏன் முடியவில்லை?
> உறைந்த பனியாகி
> ஓங்குகின்ற மாயையெனில்
> மறைந்து நின்ற மாதவனார்
> சோதிக்கே சூடு பத்தாதோ?
> அறைந்து வைத்த கர்மம் என்றால்
> அதுதான் வலிது போலும்
> அச்சுதரைக் காட்டிலுமே!
> ஏதோ என்பங்காய்
> எனைவிட்டுப் பிரியாத
> பிரித்தாலும் பேராத
> பெருத்த மாயைக்கே
> தோழமையும் பூண்டு விட்டேன்;
> எக்காளம் ஊதி
> எதிர்சங்கம் தானூதி
> மிக்கபுகழ் அச்சுதனார்
> மாஞாலம் புரக்கட்டும்;
> ஓருயிரின் அஞ்ஞானம் ஊதத் தெரியாத
> கார்மேக வண்ணனார்
> ஊதிநிரப்பட்டும்
> ஊரெங்கும் ஊதுகுழல்.

rajam

unread,
Aug 23, 2011, 12:24:16 AM8/23/11
to mint...@googlegroups.com, Mohanarangan V Srirangam, Narayanan Kannan
அழகான பாடல், மோகன்! நன்றி!

உறைந்த பனியாகி 
ஓங்குகின்ற மாயையெனில் 
மறைந்து நின்ற மாதவனார் 
சோதிக்கே சூடு பத்தாதோ? 

சோதிக்கே சூடு பத்தாமல்தானே - தன்
மேனிமுழுதும் நீலமாய்க் குளிர்ந்துபோனான்!

ஏதோ என்பங்காய் 
எனைவிட்டுப் பிரியாத 
பிரித்தாலும் பேராத  
பிரியாத மாயையைப் பிரித்தெடுக்க முயலுவதேன்?
வல்லமை உண்டோ உமக்கு?

பெருத்த மாயைக்கே 
தோழமையும் பூண்டு விட்டேன்;
தோழமையே அந்த மாயையின் வலிமைக்குப்
பாழான சான்றன்றோ காண்!

On Aug 22, 2011, at 10:27 AM, Mohanarangan V Srirangam wrote:

ஊரெங்கும் ஊதுகுழல்

முனையின் கரையில் 
தெய்வ வெள்ளத்தில் 
திவ்ய ஆற்றினில் 
சிறிதும் இறங்கி நனையாத 
ஓர் கிழவன் நான்; 
இழந்தவன் ஆனேன். 
மயிற்பீலி கொண்டு 
ஒரு சிறு பிள்ளை 
மாடுகள் ஓட்டி வருவதும் உண்டு; 
குறும்பன் அவன் என்று 
எச்சரிக்கையாக நான் 
இருந்ததும் உண்டு; 
இழந்தேன் ஏ பாவம்! 
கிருஷ்ணன் என்றே சொல்லுவார்கள்; 
வண்ணம் வைத்து அழைப்பார் போலும் 
என்றே இருந்தனன், 
என்னே என் மடமை! 

‘ஊருக்கே நீ தெய்வமாடா? 
உன்னைப் பலர் சொல்லுவதேன்?’ 
என்றொரு நாள் கேட்கையிலே 
‘கன்று மேய்ப்பவன் என்னிடம் நீர் 
கிண்டல் செய்வதோ சொல்லும் ஐயா?’ 
என்று நகைத்தவன் சென்று விட்டான். 
இன்றும் நகைக்கும் என் பேதைமையே. 

தன் முன் இருந்தவன் 
தெய்வமென்றே பின்னால் 
தானுணரும் கொடுமை 
தனிப்பட்டதோர் அவலம். 
அவன் பேசிய பேச்சினுக்கே 
இன்று புதுப் பொருள் தெரிந்திடுதே. 
அன்று உணர்ந்தேனோ 
கன்று உணர்ந்ததைக் கூட நான்? 
சென்று மணலினில் குன்று குகையினில் 
கன்று காலிகளின் கால்கள் இடுக்கினில் 
நின்ற மரக்கிளை நிவந்த கவட்டினில் 
முந்தும் அலைகளின் ஆற்றின் நடுவினில் 
எந்தப் பக்கமும் தேடித் தேடி நான் 
வந்து வந்து நோக்கினும் பயனிலையே! 
மந்த புத்தி என்னை நொந்தும் பயனில்லையே! 
மாட்டிடையன் என்று அவன் 
தோற்றம் அளித்தான்; 
ஓருயிரின் அஞ்ஞானம் ஊதத் தெரியாத 
கார்மேக வண்ணனார் 
ஊதிநிரப்பட்டும் 
ஊரெங்கும் ஊதுகுழல். 

***

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

*

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Innamburan Innamburan

unread,
Sep 8, 2011, 1:57:43 PM9/8/11
to mint...@googlegroups.com
என்னே ஒப்புமை! சிந்தனாசக்தியின் யாத்திரையே அபாரம். புரியத்தான் செய்கிறது. கருத்து வரும் பின்னே!
இன்னம்பூரான்
08 09 2011

Innamburan Innamburan

unread,
Sep 8, 2011, 3:57:41 PM9/8/11
to mint...@googlegroups.com

சிந்தனாசக்தியின் யாத்திரையே அபாரம். அதிவேகம், கடுமா ஓடிவராப்போல. பாராசாரி புரவியையும். ஜான்ஸியில் கம்பீரமாக நிற்கும் ரெளனக்கையும் நினைத்துக்கொள்கிறேன்.
 
sk natarajan

unread,
Sep 9, 2011, 12:10:45 AM9/9/11
to thamiz...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, min tamil
அருமையான் நடை
நெஞ்சத்தை தொட்டு செல்கிறது வரிகள்
இந்நிலை மாறி
மெய்நிலை க்கான
தேடுதலைத்   துவங்குது மனம்

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.com/  
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

2011/9/8 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
வேதாந்தியின் விண்ணப்பம் 

பேருயிரே !
உள்ளத்தின் ஆழத்தில் 
உலவும் நிலைச் சுடரே !

நீ மட்டுமே உண்டு 
அந்தோ ! இந்த இருளால் 
நானும் மறைபட்டுக் கிடப்பதென்ன? 
என் கதிர்பட்ட பகுதியுமே 

மேகங்களால் மங்கிவிட? 
ஆசையெனை 
அலங்கோலமாக்கிடவும் 
வழிதப்பி, அலைப்புண்டு 

விதிர்த்து எழும் உணர்ச்சித் தீ 
வாட்டிடவும் 
உன்னமைதி விட்டெறிய 
இருள்பொறியின் சுழல்தன்னில் 
சிக்குவதேன்? 

துயரத்திற்கெனைக் காட்டித் 
தொய்வே தலைதூக்கக் 
காமத்தால் பேதுறவே? 

குருதியுறை விவஸ்தையிலா 
என் கடந்த வாழ்நாள் 
உன் ராஜரீகத் தயவை ஏன் 
எதிர்க்க வேண்டும்? 
தாமத்திக்கத் தான் அது ஏன் 
வைக்க வேண்டும்? 

தன்னந்தனி உண்மையே! 
பன்னம்பல தெய்வங்கள் 
உன்னை அபிநயிப்பார் 
அவர் எந்தன் இளமைதனை 
இனும் ஏய்க்க விடுதியோ நீ 

ஆர்ப்பரிப்பு இவை அடங்குக 
நித்தியத்தின் குரல் கேட்பேன் 
நிலைத்ததுவின் விழைவறிவேன். 

நித்யத்தின் தலைவாசல்
மொய்த்துப் பளபளக்கச் 
சுடரும் இக்காட்சிகளை 
விலக்கிவிடு -- வரந்தருவாய் 

மயர்விலா மதிக்கண்ணை 
யௌவனமும், துல்லியமும் 
வளர்த்தெடுக்கட்டும் என் இதயத்தை

காதுகள் செவிடுபட 
கூக்குரலிடும் ஆவல்களைக் 
கடிந்திடுவாய், என் பிரபுவே! 

கறைபடிந்த என் நூற்றாண்டுகளை 
துலக்கிவிடு என் 
தூய்மைதனை மீட்டுக்கொடு 

ஞானத்தின் மறைக் கதவே ! 
தாள திறவாய். 
பலமே ! நின்னைப் பூர்த்தி செய்வாய் 
அன்பே ! அடங்காது புறம் பொழிவாய்  

***

ஸ்ரீஅரவிந்தர் எழுதிய Vedantin's Prayer என்ற கவிதையை மொழிபெயர்த்தேன். அதன் மூலம் ஆங்கிலத்தில் இங்கே படிக்கலாம்.

N. Kannan

unread,
Sep 11, 2011, 8:04:34 PM9/11/11
to mint...@googlegroups.com
அடடா!

க.>

2011/9/11 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:

> விரிந்துகிடந்த அதனூடு தன்னுயிரைக் காணாதாகி
> வடிவு சுருக்கிச் சிறுபுள்ளியதுவாய் ஆகி
> எல்லையற்றுப் பொடியாகி அலட்சியமாய் வீசிவிட
> மண்ணின்பால் சேற்றில் மக்கிப்போய்ப் புறம்வீழ்ந்த போதத்தின் வினோதம் --

> காலமும் தான்கடக்கத் தானாய் நின்றே!
> ***

Innamburan Innamburan

unread,
Sep 18, 2011, 2:13:52 AM9/18/11
to mint...@googlegroups.com
படித்தேன். நன்றி. சுவையான, சிந்திக்க வைக்கும் கட்டுரை. 

2011/9/17 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
தமிழினி -- இதழ் இப்பொழுது இணையத்திலும் படிக்கக் கிடைக்கிறது. 

பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த செப்டம்பர் 2011 இதழில் என்னுடைய கட்டுரை ஒன்று Edward Said பற்றியது வந்துள்ளது. 

பல முக்கியமான கட்டுரைகளைத் தாங்கி வரும் இதழ் தமிழினி. 

சித்திரை தான் ஆண்டுத் தொடக்கம் கல் தோன்றி மண் தோன்றாக் காலம் முதற்கொண்டே, ஏன் என்று அறிவீர்களா? -- நிச்சயம் திரு ராமச்சந்திரன் அவர்களின் கட்டுரையைப் படித்தே ஆகவேண்டும். 

*** 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

coral shree

unread,
Sep 18, 2011, 6:49:45 AM9/18/11
to mint...@googlegroups.com
//

தமது Preface to Orientalism என்னும் கட்டுரையில் 2003ல் எட்வர்ட் செயித் அவர்கள் கூறும் கருத்து, நின்று நிதானித்து நம் அறிவைப் பயன்படுத்துவதும், மற்ற பண்பாடுகளை நம்முடையது போல் மதித்துக் கற்கும் மனோபாவமும் முக்கியம் என்பதை வற்புறுத்துகின்றன.//

சிந்தனையைத் தூண்டும், மிக விள்க்கமான நல்லதொரு கட்டுரை....... மிகப் பொறுமையாக படிக்க வேண்டியதும் கூட........!

2011/9/18 Innamburan Innamburan <innam...@gmail.com>

--

மின் செய்தி மாலை படியுங்கள்.
Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

DEV RAJ

unread,
Sep 28, 2011, 1:18:13 PM9/28/11
to மின்தமிழ்
மனம் நெகிழ்கிறது

பாமர கீர்த்தியாகத் தெரியவில்லை,
பாகவத கீர்த்தி

தேவ்

On Sep 28, 9:53 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> *எங்கே யார் இருக்கிறார்களோ..!*
>
> எழும்பூர் ரயில் நிலையம் ஒரு விதத்தில் அலாதியானது. எனக்குப் பிடித்த ரயில்
> நிலையங்களில் ஒன்று. இங்கு பலரைச் சந்தித்திருக்கின்றேன். என்றோ பிரிந்தவர்கள்
> சமயத்தில் இங்கு மீண்டும் பார்க்கக் கிடைப்பதும் உண்டு.
>
> ஆனால் அந்த அதே பழைய குறுகலான படிக்கட்டை இன்னும் அகட்டியபாடில்லை. ரோடுக்குக்
> குறுக்கே மேலே போகும் வழியையும் நீக்கியதில் நெரிசல்தான் மிச்சம். அந்தக்
> குறுகிய படிக்கட்டிலும் ஆணொடு பெண் இடித்து மோதாமல் நாசூக்காகப் போகும் பண்பாடு
> போற்றற்குரியது.
>
> அநேகமாக ரோட்டைக் கடந்து உள்ளே வரும் போது எலக்ட்ரிக் ட்ரெயினுக்கான
> நுழைவாயிலில் ஒரு புத்தகக் கடை. ஸ்ரீராமகிருஷ்ண விவேகாநந்தர் சம்பந்தமான
> நூல்கள் கிடைக்கும். அங்கு நுழைந்து பார்த்துவிட்டுத் தான் வண்டி பிடிக்கப்
> படியேறுவது வழக்கம்.
>
> அந்தக் கடையின் சொந்தக் காரருடன் பேச்சுப் பழக்கம் ஏற்பட்டதில் ஏதோ பேசப் போக,
> அவர் தம்மைப் பற்றிச் சிறிது சொல்ல நேர்ந்தது.
>
> புத்தகக் கடைக்காரர் என்ன சொல்வார், புத்தக வியாபாரம் பற்றித்தானே. அவர் தம்
> வாழ்க்கையைப் பற்றியும் சிறிது சொன்னார்.
>
> ஒரு கம்பெனியில் மெஷினிஸ்டாக வேலை பார்த்தவர். சிறுவயதில் இல்லாத ஒரு கோளாறு
> தோல் வெண்மை ஏற்பட்டதால் பயந்து போய், போதாக்குறைக்கு சுற்றியுள்ள ஜனங்கள் வேறு
> அது ஏதோ பயங்கர வியாதி போல் வெறுத்து ஒதுக்கி, கடைசியில் மிஞ்சியது அருவருப்பான
> தனிமை. அது வெறும் ல்யுகோடெர்மியா என்பது அந்தக் காலத்தில் புரிந்திருக்காதோ?
> பாவம் மனிதர் வெளிறிப்போன தோலும், வெறுத்துப் போன மனமும் என்ன கஷ்டம்!
>
> ஆனால் அந்த மனத்தில் ஓர் ஆறுதல் மழையாகப் பொழிந்தவர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்துத்
> துறவியான சுவாமி ராகவேசாநந்தர் என்பவர்.
>
> என்ன செய்தார் என்றால் ‘அட இங்க வாடா பைத்தியமே! ஏன் இப்படி மனம் சுருங்கிப்
> போய் நாணுகிறாய்? உனக்கு ஒன்றும் இல்லை. பயப்படாதே.’ என்று சொல்லி
> ஸ்ரீராமகிருஷ்ண மடத்து பிரஸாதத் தட்டைக் கையிலே கொடுத்து ‘நீதான் எல்லாருக்கும்
> பகிர்ந்துதர வேண்டும். போ’ என்று சொன்னதுதான் தாமதம், என்ன தோன்றியதோ நம் பாமர
> கீர்த்தி நாயகருக்கு!
>
> ஒரு புது தெம்பு. நம் தோல் நிறத்தால் நாம் ஒதுக்கப்படவில்லை என்ற கூட்டுறவு
> உணர்ச்சி.
>
> ஆனால் யாராவது வாங்கத் தயங்கினால் என்று பின்வாங்கியவரை சுவாமிகள் கடிந்து
> கொண்டு, ‘போ! யாராவது வாங்க இஷ்டம் இல்லை என்றால் அவர்கள் பிரஸாதம் இல்லாமலே
> போகட்டும். அவர்களைப் பற்றிக் கவலையில்லை.’ என்று கட்டளையிட்டதும் அப்புறம்
> வாழ்க்கையிலேயே சிறிதும் தயக்கம் இல்லை நமது நண்பருக்கு.
>
> விவேகாநந்தரின் பொன்மொழிகளில் ஒரு வாக்கியம் இவர் கண்ணில் பட்டு நெஞ்சில் போய்
> உட்கார்ந்துகொண்டு விட்டது. ‘என் குருநாதரைப் பற்றி யார் பட்டித்
> தொட்டியெல்லாம் கொண்டு செல்கிறார்களோ அவர்களே எனக்குப் பிரியமானவர்கள்’
>
> அன்றிலிருந்து இந்த மனுஷன் ஸ்ரீராமகிருஷ்ண இலக்கியங்களைச் சுமந்து காடு மேடு
> பட்டி தொட்டி எங்கும் போய் விற்பது. எங்காவது விழா என்றால் அங்கு போய்க் கடை
> போடுவது என்று முழுமூச்சாக, வாழ்க்கையின் முழு நேரப் பணியாக செய்து வருகிறார்.
>
> ‘சார் எனக்கு ஆத்ம திருப்தியாக இருக்கிறது’ என்ற் அவர் சொல்லும் போது அந்த
> நிம்மதியும் சந்தோஷமும் ஒட்டுவாரொட்டியாக நம் மீதும் பாய்கிறது.
>
> அவர் புத்தக விற்பனையில் அவ்வப்போது அடைந்த நஷ்டமும் அவருக்குப் பெரிதாகப்
> படவில்லை.
>
> விவேகாநந்தரின் ஒற்றை மொழி அவருக்கு ஊக்கத் துணை.
>
> ‘போ! நீதான் அனைவருக்கும் ஸ்ரீராமகிருஷ்ணரின் பிரஸாதத்தை விநியோகிக்க வேண்டும்.
> தயங்காதே!’
>
> தயங்காமல் சேவையில் ஆழ்ந்திருக்கிறார் ஒரு கம்பெனி மிஷினிஸ்ட். பெயர் திரு
> வேங்கடகிருஷ்ணன்.
>
> பெரும் பீடாதிபதிகளைக் கண்டால் கூட ஏற்படாத திருப்தி அந்தப் புத்தகக் கடைக்
> காரரைப் பார்த்து பேசியதில் ஏற்பட்டது என்றால் என்ன சொல்ல?

Innamburan Innamburan

unread,
Sep 28, 2011, 1:34:35 PM9/28/11
to mint...@googlegroups.com
நமது வரலாற்று பதிப்பகத்தில் பாகவதர்களும் பாமரர்களே. பாமரர்களும் பாகவதர்களே. ஸ்வாமிஜியின் வாக்கு இவருடைய மனதில் பதிந்து, செயலில் வெளிப்பட்டு, இவருடைய நீரோடையாக அமைந்த கதை பகிர்ந்து கொள்ள உகந்தது. நன்றி. 

N. Kannan

unread,
Oct 5, 2011, 7:30:27 AM10/5/11
to mint...@googlegroups.com
இந்நூலைப் பற்றிய முதல் திறனாய்வு என்னுடையதாக இருந்திருக்க வேண்டும்.
நான் அனுப்பிய நூல் விமர்சனம் ‘கணையாழி’ பரணில் கிடக்கிறது!

மித்திலன் நன்றாக விமர்சித்து இருக்கிறார். இந்நூல் மீள் ஆய்வு செய்து
செய்து புரிந்து கொள்ள வேண்டிய நூல். அடர்த்தி அதிகம். மொழி நடை ஒரு
புறம் என்றால் மொழி தாங்கும் கருத்துலகம் இன்னொரு கருங்குழி!
(அடர்த்தி/கனம் அதிகம் எனும் பொருளில்).

சின்ன நூல்தான். வியாக்கியானங்கள் பின்னால் தோன்றலாம்!

நா.கண்ணன்

2011/10/5 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
> இந்த வருடத் தொடக்கத்தில் என் இரு நூல்கள் வந்தன. ஒன்று, ‘பாரதிக் கல்வி’.
> மற்றொன்று, ‘அறிவும் நம்பிக்கையும் பிரியும் இடத்தில் நிற்கும் மனிதன்’.
> ‘பாரதிக் கல்வி’ பாரதியார் பற்றிய இலக்கிய விமர்சனம். ‘அறிவும்
> நம்பிக்கையும்...’ என்பது விவேகாநந்தரை முன்னிறுத்தி செய்யப்பட்ட கலாசார
> விமர்சனம். அறிவு, நம்பிக்கை என்ற இரு அம்சங்களின் ஊடியக்கப் பங்களிப்பு மனித
> வரலாற்றின் நெடுக யாங்ஙனம் அமைந்தது என்பதை இந்தியச் சூழலில் நோக்கின் கோணம்
> பதித்து எழுதப்பட்ட நூல்.
> இந்த ‘அறிவும் நம்பிக்கையும்...’ என்ற நூல் பற்றிய ஒரு திறமையான விமரிசனம்,
> திரு மித்திலன் அவர்களால் ‘சொல்வனம்’ இதழில் இன்று வெளியாகியுள்ளது.
> விமரிசன ஆசிரியர் நூலின் மையக் கருத்துகளை நன்கு கவனத்தில் கொண்டுள்ளார் என்பது
> நூலை எழுதியவன் என்ற முறையில் எனக்கு மகிழ்வைத் தருகிறது.
> விடப்பட்டவையும், விவாதிக்கப்பட வேண்டியவையும் விமரிசனத்தின் கண் உள்ளன என்பது
> தவிர்க்க முடியாதது. ஆயினும் ஒரு விமரிசகர் நூலுக்குத் தன்னால் இயன்ற அளவு தர
> வேண்டிய கவனத்தைத் தருவதற்கு இறாய்க்கவில்லை என்பது நல்ல அம்சம்.
> மித்திலன் அவர்களின் விமரிசனத்தைப் படிக்க இங்கே சொடுக்கவும் ---
> http://solvanam.com/?p=16808

> ***
> ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
> *
>

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Subashini Tremmel

unread,
Oct 7, 2011, 4:28:12 PM10/7/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
இதைப் படித்தால் யாரும் திருட நினைக்க மாட்டார்கள்.. :-)

2011/10/7 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
தமிழைத் திருடாதே 
..

இல்ல இல்ல இரு....400...ஒரு நானூரு...800..அப்ப்ரம் 500....1300ஆச்சா...அப்ரம் 8000....9300 ரா?..அப்பறம் 10000....19300 ஆ? அப்பரம் சிலரை பத்து பத்தா சரி விடு அந்த நாயே எடுத்துண்டு ஒழியட்டும்.... 

நல்ல கற்பனை.. 
 
..

அந்த தாடிக் காரன் எங் கைல கெட்சான்னு வய்யி..அவன...இல்ல மச்சி பொத்தகம்தானே எவன் எடுக்கப் போரான்? பேசாம அப்டியே இருந்துச்சுன்னு வய்யி நாம் உசாரா போய்டுவோம்...இது என்னவோ பொட்டலம் கட்டி வச்சுருக்கோ சொல்ல...என்னவோ ரூபா கட்டுதான்னு நெனச்சி எடுத்துடேன்பா....எல்லாம் தமிய்லெக்கியம் பொத்தகம்...நம்ம பிரனன வாங்குதுங்க.... 

யார் இந்த தாடிக்காரன் ?
தமிழ் இலக்கியம் தமிய்லெக்கியம் ஆகிவிட்டது மெட்ராஸ் பாஷையிலே..

ஒன்னு முடிவு பன்னிட்டேண்டா...மவ்னே தமிழ மாத்திரம் திருடக் கூடாது...பாரு படா பேஜாரு.....

பிள்ளையாரப்பன் குலுங்க குலுங்க சிரித்துக் கொண்டிருந்தார். ‘கவலப் படாதே...அந்த சங்க இலக்கியம் எல்லாம் வேற புத்தகங்கள் உனக்குக் கிடைக்கப் பண்ணுகிறேன்.’ 

ஆஹா தன்யோஸ்மி... 
சரி..கிடைத்ததா?

சுபா
 
சம்பவம் உண்மைதானே? 

உண்மை மாதிரிதான். இல்லையென்றால் வரம் கிடைத்திருக்குமா?... 

அடப் போக்கிரி.... 

அதற்குள் பூஜகர் வந்துவிட்டார். எங்கள் சங்கேதமும் நின்றது. 

***

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

*

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
N. Kannan

unread,
Oct 7, 2011, 10:58:50 PM10/7/11
to mint...@googlegroups.com
ஐயரு! என்ன சொல்ல வராரு?

வேதம்ங்கிறாரு, சங்கம்ங்கறாரு,

நானூறு, ஐந்தூறுன்னு கணக்கு வழக்கு பாக்கறாரு,

பிள்ளையார் சங்கப்பாடல் கிடைக்க வரம் தருகிறார் என்கிறாரு,

இவரு இன்னும் சங்கப்பாடலைத் தேடிக்கொண்டு இருக்கிறாரா?

//அப்போது தி நகரில் ஒரு லாட்ஜில் ரூம் எடுத்துத் தங்கியிருந்தேன்.//

லாட்ஜில் ரூம் போட்டுச் செய்யற வேலையா இது? பிள்ளையாரப்பா! காப்பாத்து!
ஓ! தப்பான ஆளுட்ட கேக்கறேனோ? :-))

க.>

2011/10/8 Subashini Tremmel <ksuba...@gmail.com>:

rajam

unread,
Oct 8, 2011, 1:11:45 AM10/8/11
to mint...@googlegroups.com
கதைக்கு நன்றி! பிள்ளையார் ஒருத்தர் இங்கேயும் இருக்கார். அவர் சொன்னார் ... யாமக்குளிருக்கு இந்தத் தட்டைகள் உதவும்-னு. அதுனாலெ ஒரு படம்.
:-) :-) :-)

On Oct 7, 2011, at 1:14 PM, Mohanarangan V Srirangam wrote:

தமிழைத் திருடாதே 

அப்போது தி நகரில் ஒரு லாட்ஜில் ரூம் எடுத்துத் தங்கியிருந்தேன். அக்கம்பக்கத்து அறைகளில் இருந்தோர் யாராவது பேச்சுத் துணைக்கு இருந்து கொண்டே இருப்பார்கள். அன்றைக்கு என்று பார்த்து யாரும் இல்லை. சரி தமிழில் சுக்ல யஜுர் வேதம் புத்தகம் வாங்கி நாளாகிறது. ஓர் ஓட்டு ஓட்டுவோம் என்றால், சுருவம், வாஜஸ், சோமம், யூபம் என்று ரகஸ்யப் பேச்சாகப் போய்க் கொண்டிருந்தது. வெளியிலும் மாலை மயக்கம். படிப்பதும் ரகஸ்யம் என்றால், என்னவோ ஒரு மாற்று இருந்தால் தேவலை என்று எண்ணி இரண்டு தெரு தாண்டி இருக்கும் பிள்ளையார் கோவில் வரை போய்ட்டு வரலாம் என்று சென்றேன். 

உங்களுக்கு இப்பொழுதே ஒன்று சொல்லிவிடுகிறேன். பிள்ளையார் எனக்கு ப்ரத்யக்ஷம். அதாவது ஊர்க்கதை எல்லாம் வம்பளக்கும் அளவிற்கு பேச்சுத் தொடர்பு உண்டு என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். ஏதோ நீங்கள் நல்லவர்கள் ஆகையால் உங்களுக்கு மாத்திரம் சொல்லுகிறேன். யாரிடமும் சொல்லாதீர்கள். அப்படி மீறி நீங்கள் சொன்னால் உங்கள் வீட்டில் மூஞ்சூறு வந்து பயமுறுத்தும். ஜாக்கிரதை. இதெல்லாம் தேவ ரகசியம். யாருக்கும் சொல்லக் கூடாது. 

போய் அமர்ந்ததும் பிள்ளையார் என்னைக் கண்டுகொள்ளவில்லை. நான் கொஞ்சம் கனைத்து, ஏதோ சுலோகம் எல்லாம் முணுமுணுத்துப் பார்த்தேன். ம் ம் ஆனை முகனார் பாரா முகமாய் இருந்தார். சரி ஏதோ தேவ காரிய அவசரம். ஏன் தொந்தரவு செய்ய வேண்டும் என்று நான் ஒரு தூணில் சாய்ந்து கொண்டு ப்ல யோசனையில் ஆழ்ந்தேன். 

அப்பொழுது சிறிது நேரம் கழித்து, பூஜகரிடம் ஒரு குரல் கூறியது. அதோ அந்தக் கம்பத்துப் பிள்ளையாண்டானிடம் இந்த ப்ரஸாதத்தைக் கொடு என்று. நம்மடவர் குரல் என்று தட்டியதும் திடீர் என்று திரும்பிப் பார்த்தேன். பூஜகர் ‘இந்தாங்கோ! ப்ரஸாதம்’ என்று கொண்டு வந்தார். ‘யாராவது உமக்குச் சொன்னாரா ப்ரஸாதம் கொடுக்கச் சொல்லி?’ என்றேன். ‘யாரும் சொல்லலையே. நேக்குத் தோணித்து. அடிக்கடி வருவேள் பார்த்திருக்கேன். பிரதக்ஷிணம் பண்ணிட்டு பிள்ளையாரப்பனை நெடுநேரம் பார்த்துக் கொண்டு நின்று விட்டு தூணில் சாய்ந்து விடுவீர்கள். சரி அதான் கொடுக்கலாமேன்னு தோணித்து’. கணபதி குறும்பாகச் சிரித்தார். 

இங்க தானே இருப்பேள். சித்த பார்த்துக்கோங்கோ.தோ கடைவரைக்கும் போய்ட்டு வந்துட்றேன். இங்க விபூதி பிரஸாதம் வச்சுருக்கேன். யராவது வந்தா எடுத்துக்கட்டும். 

சரி. 

பூஜகர் போனதும் ‘என்ன இப்பத்தான் மூடுக்கு வந்தாப்புல இருக்கு’ என்றேன். 

ஆமாம். ரொம்ப பெரிய மனுஷன் ஆயிட்டே போல இருக்கு. ஆளையே காணும். 

இல்லங்காணும் வெட்டி அலைச்சல். அயர்ச்சி. அதான் வந்து உம்ம தொந்தரவு பண்ண வேணாமேன்னு..... 

சரி ஏதாவது கதை சொல்லுமே கேட்போம் - என்றார் கணபதி. 

ஓய்! உம்ம கிட்ட கதை சொல்றதுக்கு வியாசராலத்தான் முடியும். நான் ஒரு நடந்த சம்பவம் சொல்றேன். 

ம் ம் பேஷ் பேஷ்...என்னது அது? 

அந்தச் சம்பவத்துக்குத் தலைப்பு கூட வைத்திருக்கேனே...’தமிழைத் திருடாதே!’ 

சூப்பர்! ஆரம்பமே களை கட்றது....என்ன சம்பவம்? 

அதாவது ஒரு நாள் கடற்கரைக்குப் போயிருந்தேன். ஓர் ஓரமா உட்கார்ந்திருந்தப்ப சில அடிகள் தள்ளி கட்டுமரங்களுக்குப் பின் சில ஆட்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். 

இரு இரு ஏதாவது காதல் கத்திரிக்கான்னு ஆரம்பிக்காத.... 

சுவாமி நான் தான் கற்பனை இல்ல, நடந்த சம்பவம்னு சொல்ரேனே....அப்புறம் எப்படிக் காதல் பத்தி வரும்.? 

சரி சொல்லு.... 

அவர்களில் ஒரு பேர்வழி சொல்கிறான் -- 

டேய்! ஒயிங்கா மருவாதியா அன்னிக்கு எத்தினி தேரிச்சுன்னு சொல்லிடி...அல்லாங்காட்டி மவனே டங்குவார் அந்துடும்... 

தமிழ் எவ்வளவு அழகான மொழி தெரியுமா...சங்கப் புலவர்கள் வளர்த்த தமிழ்... 

தோ பாரும் குறுக்கப் பேசக் கூடாது...அப்புறம் எனக்குக் கதை சொல்ர மூடே போயிடும்.... 

சரி சரி தொடர்ந்து சொல்லு.... 

அப்ப அந்தப் பதில் மருவாதி சொல்கிறான் -- 

ரெஸம்மாலும்டா..புல்லயார் சத்யமா...அத்தினியும் பொஸ்தகம்டா... 

இன்னொரு மருவாதி --- ஏன் இன்னா மேட்டரு?...த பாரு....இந்த டபாய்க்கரதெல்லாம் நம்குல்வே வச்சுக்கினன்னு வய்யி..பேஜாராப் பூடும்...பார்த்துக்கொ... 

இல்லடா அவந்தான் லூஸு கன்கா ஒளர்ரான்னா நீயும்...அத்தைனியும் பொத்தகம்டா....அந்தப் பேமானி மட்டும் என் கயில்ல கெட்ச்சான்,...மாவ்னெ.... 

சரி சரி நீ இரு....தோ பாரு...இன்னா பொத்தகம் சொல்லு... 

நான் சரியாப் பார்க்கல்லடா.....அந்தக் கட்டை பிரிச்சா என்னன்னவோ கீது...ஏதோ சங்கொ லெக்கியம்... 

அக்ஹஹஹஹ்ஹா டேய் நாயி...சொல்ரதுன்னா பொய்யி சோக்கா சொல்னும்....இன்னா...எங்க திருப்பி சொல்லி...

ச்ங்கொ லெக்கியம்.... 

டேய் பார்ரா தெருவல்வரு சங்கொலக்கியம் பட்சாராண்டா....ஏய்...ஏய் இங்கன பாரு...அப்டியே மூஞ்சில குத்தினன்னு வய்யி.... 

டேய்....ரெஸமாலும்டா...சொன்னா நம்புடா... 

சரி..நீ இரு.....இரு இரு... 

நீ இன்னா இதுக்கு உல்லார வர்ர?...தோ பாரு நீயும் இவன் கூட்டா/... 

இல்லடா இரு...டேய் மச்சி...இங்க பாரு...இங்ஜ்க பார்ரான்னா ...அந்தப் பொத்தகம் பேரெல்லாம் 5நிமிட் டைம் தரேன்...நாவம் படுத்திச் சொல்லி.... 

இன்னா/.... 

அகநானூறு.... 

டேய்...கன்க்குல வய்யி ..வருதா இப்ப உன்மை...ஒரு 400 ரூவா இல்ல கன்க்குல வய்யி அப்பரம் பார்ப்போம்/// சொல்டா மேல 

பொரநானூரு.....

இப்ப ஒரு 400ஆ/// எவ்வலவோச்சி...800 ம் மேல 

ஐங்குருநூரு... 

டேய் செம துட்டு...நாயி புலுகுது பாரு...ம் ம் 

எட்டுத்தொக... 

சரி 8000...அப்டியே மூஞ்சில போட்ரா நாயை... 

பத்துப்பாட்டு... 

யம்மா...10000 மா? டேய்... 

அப்ரம் பத்துப்பத்து...குர்ந்தொகை... 

ஓ பத்து பத்தா சில்ரை காசா? 

டேய் கில்லாடிடா நீ? அப்டியே கேட்டு உன்மையை வாங்கிட்டியே.... 

இல்ல இல்ல இரு....400...ஒரு நானூரு...800..அப்ப்ரம் 500....1300ஆச்சா...அப்ரம் 8000....9300 ரா?..அப்பறம் 10000....19300 ஆ? அப்பரம் சிலரை பத்து பத்தா சரி விடு அந்த நாயே எடுத்துண்டு ஒழியட்டும்.... 

டேய் இந்தப் பார்ரா...20000 ஆச்சு...நம்ம கண்டிசன்படி எங்க ஷேரைக் கொண்டு வந்து கொட்த்தீன்னா இனிமே நீ எங்களோட பிக்பாக்கட்டுக்கு வரலாம்...இல்லைன்னு வய்யி..நீ எங்க பொயக்கறன்னு பார்த்துட்ரோம்... 

டேய் அதல்லாம் பொத்தகம்டா....நம்புடா... 

தோ பாரு வீன் பேச்சு வேனாம்...எங்ஜ்க தொழில்லாம் விட்டு உன்கிட்ட கூவிக்கின்னு இருக்க முடியாது...ஷேர் வந்தா மவ்னே நீ பொழச்ச...இல்லன்னு வய்யி...பார்த்துக்க,....வாடா இவன்கிட்ட நின்னு மன்னாடிக்கின்னு.... 

இவன விட்டுவிட்டு மத்த மருவாதியெல்லாம் எழுந்து நடந்தாங்க. இவன் தனியாவோ கூட ஒரு கூட்டாளியோ...பொலம்பிக்கிட்டு இருந்தான்...

அந்த தாடிக் காரன் எங் கைல கெட்சான்னு வய்யி..அவன...இல்ல மச்சி பொத்தகம்தானே எவன் எடுக்கப் போரான்? பேசாம அப்டியே இருந்துச்சுன்னு வய்யி நாம் உசாரா போய்டுவோம்...இது என்னவோ பொட்டலம் கட்டி வச்சுருக்கோ சொல்ல...என்னவோ ரூபா கட்டுதான்னு நெனச்சி எடுத்துடேன்பா....எல்லாம் தமிய்லெக்கியம் பொத்தகம்...நம்ம பிரனன வாங்குதுங்க.... 

ஒன்னு முடிவு பன்னிட்டேண்டா...மவ்னே தமிழ மாத்திரம் திருடக் கூடாது...பாரு படா பேஜாரு.....

பிள்ளையாரப்பன் குலுங்க குலுங்க சிரித்துக் கொண்டிருந்தார். ‘கவலப் படாதே...அந்த சங்க இலக்கியம் எல்லாம் வேற புத்தகங்கள் உனக்குக் கிடைக்கப் பண்ணுகிறேன்.’ 

ஆஹா தன்யோஸ்மி... 

சம்பவம் உண்மைதானே? 

உண்மை மாதிரிதான். இல்லையென்றால் வரம் கிடைத்திருக்குமா?... 

அடப் போக்கிரி.... 

அதற்குள் பூஜகர் வந்துவிட்டார். எங்கள் சங்கேதமும் நின்றது. 

***

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

*

N. Kannan

unread,
Oct 9, 2011, 7:32:48 AM10/9/11
to mint...@googlegroups.com
2011/10/9 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:

> ஏன் ஸ்வாமி! நான் மட்டுமா சொல்கிறேன். முன்னோர்களின் பாட்டும் உண்டே --
> துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீயெனக்குச்
> சங்கத் தமிழ்மூன்றும் தா.
> ***

அது சரி! உமக்கும், வியாசருக்கும்தான் இந்தப் பிள்ளையார் பேசுவார், டீல்
வச்சுப்பார். எமக்கென்ன தெரியும்? :-)

நீர் சங்கப் புத்தகங்களைத் தொலைத்த விவரத்தை இத்தனை சூசகமாகச் சொல்ல
வேண்டுமா என்ன? திருடியவன் உம்மைத் தொலைக்கத் தேடிக்கொண்டு இருப்பான் :-)
இனிமேல் வாங்கியவுடன் உம்ம புத்தகத்தில் பெயர் எழுதி வையும்.

அது சரி, பிள்ளையார் அப்பன் வரம் பலித்ததா? புத்தகம் கிடைத்ததா? என்னய்யா
இந்த தமிழுக்கு வந்த சோதனை :-(

நா.கண்ணன்

Innamburan Innamburan

unread,
Oct 9, 2011, 7:55:52 AM10/9/11
to mint...@googlegroups.com
நற்றிணை: நல்லதொரு பதிப்பு: புறநானூறு: புரட்டப்புரட்ட இன்பம்.  நம்மிடம் வந்து அண்டோவிடம் சென்றன. வந்த சுருக்கில் எனக்கு மார்க்கு நிறைய வாங்கிகொடுத்தன. இத்தனைக்கும் ஶ்ரீமோஹனரங்கன் நம்மில்லம் வந்து மூட்டைகள் கட்டி சென்றார்.

DEV RAJ

unread,
Oct 9, 2011, 10:45:00 AM10/9/11
to மின்தமிழ்
>>> உமக்கும், வியாசருக்கும்தான் இந்தப் பிள்ளையார் பேசுவார்.....<<<

முதல் எழுத்தாளரான பிள்ளையார் இன்னொரு எழுத்தாளரிடமும் பேசியுள்ளார்.
‘கலைமணி’ என்ற புனைபெயருடன் விகடனில் கதைகள் எழுதி வந்த கொத்தமங்கலம்
சுப்பு அவர்களும் விநாயகருடன் நடந்த ஓர் உரையாடலைச் சுவைபட
விவரித்துள்ளார் தமது
‘ராவ்பகதூர் சிங்காரம்’ நாவலின் முன்னுரையில்.

விநாயகருக்கும் வித்தைக்கும் எப்போதும் தொடர்புண்டு :
”நற்குஞ் சரக்கன்று நண்ணில் கலைஞானம்
கற்கும் சரக்கன்று காண்”

திருமுறைகள் வெளிவரக் காரணமானவர் திருநாரையூர்ப் பொள்ளாப் பிள்ளையார்

தேவ்

On Oct 9, 5:32 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2011/10/9 Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>:

It is loading more messages.
0 new messages