புவியன்பு மடல்

581 views
Skip to first unread message

நா.கண்ணன்

unread,
Apr 22, 2009, 7:56:49 AM4/22/09
to மின்தமிழ்
இன்று நாம் புவியை நேசிக்கும் நாள். ஆராதிக்கும் நாள். மண்ணில் தோன்றிய
நாம் மண்ணுடன் மடிந்தாலும் இடையில் வாழ்கின்ற நாட்களில் நமக்கு
வாழ்வளிக்கும் அரிய பொக்கிஷம் இப்புவி. எனவே இப்புவியைக் காத்தல் நம்
கடன்.

1. இப்புவி மீது படியும் அழுக்கை நம் பங்கிற்கு நாம் சேர்க்காமல்
இருப்போம். இனியொரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம். பிளாஸ்டிக்
பை உபயோகிப்பதை இனிமேல் தவிர்ப்போம். ஒரு பிளாஸ்டிக் பை முழுச்சுற்று
மாற்றாக 1000 வருடங்கள் பிடிக்கின்றன. எனவே எப்போதும் துணிப்பையுடன்
சாமான் வாங்கப் போவோம்.

2. முடிந்தவரை நடப்போம். இல்லை பொது வண்டியில் செல்வோம். இரயிலில்
செல்வது இன்னும் நலம். கார் ஓட்டுவதை முடிந்த மட்டும்
குறைத்துக்கொள்வோம்.

எங்கே? இவ்விழையில் சூழல் அன்பான யோசனைகளைச் சொல்லுங்கள் பார்ப்போம்.
இதுவொரு மனிதச்சங்கிலியின் இலத்திரன் வடிவம். உங்கள் பங்களிப்பு உங்கள்
குழந்தைகளுக்கு, அவர்கள் குழந்தைகளுக்கு நீங்கள் அளிக்கும் பரிசு.

வாழ்க இவ்வையகம்.
வாழ்க வையக உயிர்கள்.
வாழ்க நீடூழி.

நா.கண்ணன்

Tthamizth Tthenee

unread,
Apr 22, 2009, 8:07:33 AM4/22/09
to minT...@googlegroups.com

                                            " பூமித்தாய் "

 

பூமியின் புவி ஈர்ப்பு விசையை  எதிர்த்து வானில் பறக்கும் பறவைகளும் ,  விமானங்களும் , விண்கலன்களும் மீண்டும் தரையிறங்க பூமியின் புவீ ஈர்ப்பு விசையை   உபயோகித்தே ஆகவேண்டும் பூமிக்கு வர

பூமியின் இந்தப் புவி ஈர்ப்பு விசை மட்டும் இல்லாவிடில் உலகில் யாரும் வாழவே முடியாது,நாம் பூமியைப் பாதுகாக்காவிடில் பூமி மட்டும் எப்படி நம்மை பாதுகாக்கும் ...?

  பூமியிலிருந்துதான் ஜீவராசிகள் வாழ்வதற்கு  உயிராதாரமான

நீர், உணவு, உடை வசிக்க இடம் அத்தனையும் கிடைக்கின்றன

பூமி இல்லையேல் நாமும் இல்லை, அப்படிப்பட்ட பூமியை

பஞ்ச பூதங்களில் ஒன்றான பூமியை பாதுகாக்கத் தவறினால்  பெற்ற தாயை பேணிக் காக்கத் தவறிய  பேதைகள் போல் ஆவோம்

விதை ஒன்று போட்டால்தானே  சுரை ஒன்று முளைக்கும்
சுற்றுப்புற சூழலைப் பாதுகாப்போம் என்னும் ஒரு நல் விதை போடுவோம்

விதை போட்டால் அது முளைத்து பலன் தரவேண்டுமானால் அந்த விதையை விளைவித்து செடியாக்கி ,கொடியாக்கி,மரமாக்கி

நமக்குப் பலன் தரும் அளவுக்கு அந்த விதையை வளர்க்கும் பூமியை ஆரோக்கியமாக, சுத்தமாக, வைத்துக் கொண்டால்தானே அப்பூமியிலிருந்து கிடைக்கும் உணவுப் பொருட்களும் நம்மை ஆரோக்கியமாக வைக்கும்

ஓசோன் படலம் கிழிந்து விட்டது என்றும் அதனால் பூமியின் வெப்பம் அதிகரித்து வருகிறது என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துக்கொண்டே இருக்கின்றனர்
இதனால்  அண்டார்டிகா என்னும் பனிப்ரதேசத்தில்  உள்ள பனிமலைகள் உருகி வருகின்றன
ஏற்கெனவே மூன்றில் ஒரு பங்குதான் பூமி
மற்ற இரு பங்கு நீரால் சூழப்பட்ட  இப்பூமியை
பனிமலைகளும் உருகி அதனால் கடல் மட்டத்தின் உயரம் அதிகரித்தால்
சுனாமிதான் வரும் ,
ஆகவே நாம் அனைவருமே இப்பூமியின் வெப்பத்தை தணிக்கும் செயல்பாடுகளை மேற்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்
பூமியை மாசுபடுத்தும் அனைத்தையும் யோசித்து யோசித்து அவைகளை அப்புறப்படுடத்த வேண்டும்
அப்போதுதான் பூமியை காப்பாற்ற முடியும்

குடியிருக்கும் கோயிலை பாதுகாக்காமல் இருந்து விட்டு

புலம்பெயருதலில் என்ன மகிழ்ச்சி இருக்கப் போகிறது

அது சரி பூமியை விட்டு புலம்பெயர  வேற்று கிரகத்தைக் கண்டுபிடிக்கவேண்டும், அப்படியே கண்டு பிடித்தாலும் அப்போது அந்தக் கிரகம் நாம் வாழும் பூமியாகும்.

அப்போது மட்டும் நாம் வாழுகின்ற அந்தப் புதிய பூமியை காப்போமா.?

காக்கவேண்டும் என்னும் எண்ணம் கொள்வோமா.?

இல்லையென்றால் அந்தப் புதிய பூமியும்தானே மாசுபடும்..!

ஆகவே நாம் வாழுகின்ற பூமியை முறையாகப் பாதுகாத்து வைத்துக்கொள்ளவேண்டும் என்னும் உணர்வை நம் மனதில் ஏற்றிக் கொண்டு தற்போது நாம் வாழும் பூமியைக் காக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டும் , 
 
நாம் இப்பூமித்தாயின் புதல்வர்கள்
நாமே நம் தாயைக் காக்காவிடில் வேறு யார் காப்பர்?

நமக்குத்தேவை  மனமாற்றமே !!

இடமாற்றம் அல்ல !!

என்பதை நன்கு உணரவேண்டும்

அடிப்படைத் தூய்மைகளைக் கடைப்பிடிப்போம் என்று உறுதி மொழி எடுத்துக்கொள்ளவேண்டும் அப்போதுதான் நாம் வாழுகின்ற இப் பூமி மாசுபடாமல் நம்மையும் காக்கும்

 

அன்புடன்

தமிழ்த்தேனீ



நா.கண்ணன்

unread,
Apr 22, 2009, 8:10:54 AM4/22/09
to மின்தமிழ்
நடைமுறை யோசனைகள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.

க.>

நா.கண்ணன்

unread,
Apr 22, 2009, 9:52:08 AM4/22/09
to மின்தமிழ்
மூன்றாம் உலக நாடுகள் சுரண்டப்படுவது மட்டுமல்ல. ஒரு புதுவகை சூழல்
காலனீயம் வந்து கொண்டு இருக்கிறது. அதற்குப் பெயர் இ-மாசு (electronic
waste). முதல் உலக நாடுகளிலிருந்து தூக்கி எரியப்படும் பழைய கணினிகள்
மூன்றாம் உலகநாடுகளில் பிரித்து அழிக்கப்படுகின்றன. ஆனால் 21ம்
நூற்றாண்டு நச்சுப்பொருள்களை (உ. டயாக்சின்) 17ம் நூற்றாண்டு
தொழில்நுட்பம் கொண்டு எப்படி நீக்கமுடியும்? பலன், மூன்றாம் உலக
நாடுகளின் வளம் சுரண்டப்படுவது மட்டுமல்ல, முதல் உலக நாடுகளின் விஷமான
மாசுகள் குவியும் குப்பைமேடாகவும் மாறிவருகின்றன. எப்படியும் இந்தியா
போன்ற நாட்டில் மனித உயிருக்கு என்ன மதிப்பு இருக்கிறது? பத்தோடு,
பதினொண்ணு, அத்தோட இதுவொண்ணு.

பாருங்கள் இந்த ஆவணப்படத்தை:

http://www.cbsnews.com/video/watch/?id=4586903n

க.>

கிருஷ்ணமூர்த்தி

unread,
Apr 22, 2009, 10:33:47 AM4/22/09
to மின்தமிழ்
இப்பத்தான் கூகிள் செய்திகள் வழியாக, இந்தப் பக்கத்தைப் படிச்சு
முடிச்சேன்:
http://www.livescience.com/environment/top10_emergingenvironment_technologies-1.html

1947 இலே சுதந்திரம் வந்ததுன்னு சொன்னாங்க. 62 வருஷம் ஆனா பின்னாடிக்
கூட,

*குடிதண்ணீரை முறையாகக் கொடுக்கக் கூட, நம்முடைய அரசியல்வாதிகளுக்கு
நேரமில்லை. நல்ல தண்ணி தர்றது இருக்கட்டும், சாக்கடைத் தண்ணீர்
கலக்காமல் பாத்துக்கக் கூட, நம்ம ஊர் நகராட்சி, மாநகராட்சிகளுக்குத்
தெரியல்லே!

*புதுசா மரம் நடறது இருக்கட்டும், இருக்கிற மரங்களையாவது விட்டு
வைக்கலாம் இல்லையா? அரசுக்கும் தெரியலே, சனங்களுக்கும் புரியலே!

*பிளாஸ்டிக் பைகளினால் தீங்கு வருதுன்னு தெரியும், தடைசெய்ய அரசுக்கும்
மனம் இல்லே, சனங்களுக்கும் வரும் தீமை புரியல்லே!

*பெட்ரோல், டீசல் உபயோகம் அதிகமானா காத்துல மாசு கூடுதுன்னு தெரியும்.
இங்கே கலப்பட பெட்ரோல், டீசல் புழக்கம் அதிகம்னும், அரதப் பழசான [20
வருஷங்களுக்கும் மேலான] லாரிகளை மாத்த மாட்டோம், அரசும் நடவடிக்கை
எடுக்காது.

எரிபொருள் சிக்கனம் தேவை இக்கணம்னு ஏதாவது ஸ்லோகன் எழுத RTO கட்டாயம்
இருக்கும், ஆனா, தரமில்லாத ரோடுகளாலே ஏற்படும் எரிபொருள், நேர விரையம்
பத்தி இங்கே அரசுக்கும் கவலையில்லே, ஏதோ ஒரு பத்திரிகையில்
ஆசிரியருக்குக் கடிதம் எழுதுவதோடு ஜன்ம சாபல்யம் அடைந்து விடும்
ஒன்றிரண்டு அறிவு ஜீவிகளைத் தவிர, மத்தவங்க எல்லாருக்கும் புலம்புவதைத்
தவிர வேறு தெரியலே!

மனுஷனா வாழ சனங்களுக்கும் தெரியலே! தங்களைக் காத்துக் கொள்ளத் தெரியலே!
ஏதோ ஒரு ஹீரோ வந்து தான் காப்பாத்தணும்னு, இல்லே எவனோ ஒரு இறைத் தூதன்
வந்து தான் இவன் வீட்டுக் குப்பைகளை அள்ளணும்னு காத்திருக்கும்
சனங்களுக்கு, தங்களையே காப்பாத்திக்கத் தெரியலே, வழியேதும் புரியலே!

அதுக்கப்புறமில்ல, பூமியை காப்பத்துறது!

meena muthu

unread,
Apr 22, 2009, 10:37:00 AM4/22/09
to minT...@googlegroups.com
இந்தியாவில் நிறைய இடங்களில் முன்பு பார்த்திருக்கிறேன் இரும்பு, கண்ணாடிகள், அலுமினியம்,லொட்டு லொசுக்கு! என்று எல்லாவற்றையும் தனி தனியாக பிரித்து விலை(வீசை)க்கு! போடுவார்கள்!
அதுபோல  இங்கு(மலேசியாவில்) அதை இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறார்கள்! (வீசைக்கு போடுவதற்கு அல்ல:) தனி தனியாக பிரித்து குப்பையில் போடுங்கள் என்று!

இந்த வீடியோவைப்பார்த்தால்! ஓ கடவுளே ! என்ன ஆவாள் இந்த பூமித்தாய் என்று மனம் கலங்குகிறது!

2009/4/22 நா.கண்ணன் <nka...@gmail.com>

meena muthu

unread,
Apr 22, 2009, 10:40:48 AM4/22/09
to minT...@googlegroups.com


பல வருடங்களுக்கு முன்பேஇந்தியாவில் நிறைய இடங்களில் பார்த்திருக்கிறேன் இரும்பு, கண்ணாடிகள், அலுமினியம்,லொட்டு லொசுக்கு! என்று எல்லாவற்றையும் தனி தனியாக பிரித்து விலை(வீசை)க்கு! போடுவார்கள்!

நா.கண்ணன்

unread,
Apr 22, 2009, 9:02:39 PM4/22/09
to மின்தமிழ்
அன்பின் மீனா:

அல்ப காசுக்கு ஆசைப்பட்டு சில சுயநல மடையர்கள் அமெரிக்காவிலிருந்து
விஷக்குப்பைகளை 'அடிமாட்டு' விலைக்கு வாங்கி இப்படிச் சீனாவிலும்,
இந்தியாவிலும் பிரித்து அழிக்க முயல்கின்றனர். குறைந்த வெப்பத்தில்
பிளாஸ்டிக் எரிபடும் போது (கணினி கட்டுமானப்பொருள்) டயாக்சின் போன்ற
நச்சு வேதிமங்கள் உருவாகின்றன. எனது பழைய யப்பானிய ஆய்வுக்குழு
இந்தியாவில் இத்தகு வேதிமங்களை அளந்து வருகின்றனர். செய்தி ஆரோக்கியமாக
இல்லை. எனக்கு என்ன ஆச்சர்யமென்றால் நம் அரசியல்வாதிகள் பொதுமக்களைச்
சுரண்டி எடுத்த காசை சுவிஸ் பேங்கில் போடும் போது அந்த நாடு வளம்
பெறுகிறது. இந்தியா அல்ல. குண்டும், குழியுமான சாலையில் மெர்சிடிஸ்
பென்ஸில் போனால் என்ன? மாட்டுவண்டியில் போனால் என்ன? பயண சுகம்
ஒன்றுதான்! பலகோடிகள் முழுங்கி என்ன பயன். ஜீரணிக்கும் அளவுதான் குடல்
தாங்கும்! இவர்களுக்கு யார் சொல்வது?

இவ்விழையில் நம் மரபு சார்ந்த சூழல் பாதுகாப்பு முறைகள் பற்றிப்
பேசுவோம்.

க.>

> > கலங்குகிறது!- Hide quoted text -
>
> - Show quoted text -

நா.கண்ணன்

unread,
Apr 22, 2009, 9:03:56 PM4/22/09
to மின்தமிழ்
அன்பரே!

போராளிகள் சோர்வடையக்கூடாது ;-)
நாம் நடத்துவது அறிவொளி இயக்கம்!
யார் கண்டது நமது அமெரிக்கத்தமிழர்களுக்கு இச்சேதி உதவலாம்!

க.>

Kannan Natarajan

unread,
Apr 22, 2009, 9:09:48 PM4/22/09
to minT...@googlegroups.com
> நடைமுறை யோசனைகள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.

1. அவரவர் இல்லங்களில் வாழ்வோர் எண்ணிக்கையைப் பொறுத்து  தண்ணீர்த் தொட்டிகள் மாடியிலோ அல்லது வீட்டின் சுவற்றில் உள்ள மழைநீர் தேங்காமல் வெளியேற்றும் பசைமண் (சிமெண்ட்) குழாய்களை, வீட்டின் பின்புறத்தில் தண்ணீர்த் தொட்டி உள்ளவாறு அமைத்து, அக்குழாய்களின் வழியாக மழைநீர் வீணாக சேமிக்கலாம். துணிகளைத் துவைக்தல், வாகனங்களை சுத்தப்படுத்தல், தோட்டத்திற்கு நீர்ப் பாய்ச்சிடுவது என்று பலவாறான பயன்பாடுகளை எண்ணலாம். அத்தொட்டியிலிருந்து சேகரித்த நீரை ஆற்றல் வாய்ந்த இயந்திரத்தை வைத்து, குளிக்குமிடத்திற்கும், மலம் சிறுநீர் கழிக்குமிடத்தின் பயன்பாட்டிற்கும் வழிவகுக்கலாம்.

2. குளிக்கச் செல்லும் முன், நாம் 3 - 5 நிமிடத்திற்குள் குளிப்பதைக் கடைப்பிடிப்பது நன்று. அக்காலத்தை (நிமிடத்தை) காட்டுவதிற்கு சில நாடுகளில், குளியலறைச் சுவற்றில் ஒட்டிக்கொள்ள 3 அல்லது 5 நிமிட மணல் சொரிந்த காலம் காட்டும் கருவிகளை (hour glass), வாரயிறுதில் நாம் மளிகைப்பொருட்கள் வாங்கும் போது இலவசமாக ஒரு இணைப்பாகத் தருகிறார்கள். அப்படியானப் புதுமையான செயல்களை தொழிற்றுறை உரிமையாளத் தமிழர்கள் அல்லது தமிழ்ச்சங்கத்தினர் தம் இனத்திற்கு அவர்கள் வாழும் நாடுகளில் இப்படியான விழிப்புணர்ச்சியை கொண்டுவரலாம்.

3. ஒரு குடும்பத்தை சார்ந்தோர் சராசரியாக 50 - 90 விழுக்காடு கரிப்பொருள் சேர்ந்த கசிவுகளை அடிச்சுவடுகளாப் பதிக்கிறார்கள். எவ்வகையில் என்று பார்த்தால், நாம் பயன்படுத்தும் மின்சாரத்தால். அந்தந்த வீடுகளில், பயன்படுத்தும் மின்சாரக் கருவிகளை கணக்கிட்டு, எவ்வகையில் நாம் நாள்தோறும் குறைக்கலாம் என்று குடும்பத்தினர் அவரவர்கள் தங்களில் ஒருவரை இல்லத்தின் "சுற்றுச்சூழல் கண்காணிப்பாளரா"க ஒரு நாட்குறிப்பேடை தயாரித்து, தேவையில்லாத விளக்குகளை அணைத்தல், கணினி இயந்திரத்திற்கு 10-12 மணி நேரம் நிறுத்திவைத்தல், தயாரான நினையில் (Standby) எப்போதும் உள்ள தொலைக்காட்சி, இசைக்கேட்கும் மின்கருவிகளை இரவில் நிறுத்திவிடுவதும், செல்பேசி, மடிக்கணினி, கையடக்க மற்றும் சட்டைப்பைக் கருவிகளின் மின்விசை செறிவுகளின் குறைப்பு என்று அவரவர் இல்லங்களில் உள்ள மின்சாரத்தைப் பயன்படுத்தும் கருவிகளை எவ்வாறு நம் தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்றவாறு சாதுரியமாக வாழலாம் என்று ஆராயலாம்.

4. கடைகளுக்குச் செல்லும் போது, வீட்டில் உள்ள துணிப்பைகளையே எடுத்துச் செல்ல பழக்கப்படுத்திக் கொள்வது நல்லது. கடைகளில் கொடுக்கும் பிளாஸ்டிக் பைகளை ஏற்றுக்கொள்ளாமல் தடுக்கலாம், அது இலவசமாக இருப்பினும்.

5. இப்போது பூமியின் வடக்கு அரைக்கோளத்தில்  வாழ்வோருக்கு கோடைக்காலம், ஆக குளிர்ச் சாதனப் பெட்டிகள் மிகுதியாக பயன்படுத்தப்படும். இவ்வகையான குளிர்ச் சாதனங்களின் வெப்பநிலையை 24 - 28 டிகிரி செல்சியஸாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். அதில் உள்ள வடிகட்டும் சாதனத்தை (filter) அவப்போது தூய்மைப்படுத்துவதால் தேவையற்ற அதிக மின்சாரச் செலவை தடுக்கலாம்.

6. முனைவர் நா. கண்ணன் தொடக்கத்தில் சொன்ன ஒரு கருத்து;-

> முடிந்தவரை நடப்போம். இல்லை பொது வண்டியில் செல்வோம். இரயிலில் செல்வது இன்னும் நலம்.
> கார் ஓட்டுவதை முடிந்த மட்டும் குறைத்துக்கொள்வோம்.

அக்கருத்தில் சில குறிப்புகளைச் சேர்க்கலாம் என விழைகிறேன்.

பொது வண்டிகள்/நடைப் பயணம் தவிர இருசக்கர மிதிவண்டிகளையும் பயன்படுத்தலாம். ஒரு இடத்தில் ஊழியம் செய்வோர் அல்லது அலுவலகம் இருக்கும் அதே வீதியில் உள்ள நம்மவர்கள் ஒன்றுச் சேர்ந்து ஒருவரின் வாகனத்தில் அலுவலகத்திற்கு செல்வது (car pooling) என்று கால அட்டவணை போட்டு, அவரவர் நாள்தோறும் செல்லும் வாகனங்களுக்கு ஒய்வளிக்கலாம்.

7. அலுவல் குறித்து அடிக்கடி விமானத்தில் செல்வதை தடுத்து அவ்வகையான அலுவல் குறித்த விடயங்களை தொலைபேசியிலோ, இணையம், அஞ்சல் மற்றும் காணொளி கலந்தாய்வுக்கூட்டங்கள் (video conferencing) வழியாக செய்துமுடிக்க சிந்திக்கலாம். அப்படியே விமானத்தில் போகவேண்டியச் சூழலிருப்பின், போவேண்டிய நகரத்திற்கு உரிய நேரடி விமானாமாக இருப்பின் மேலும் நலம். இப்போது விமானக் குழுமங்கள் கரிப்பொருள்களின் கழிவுகளை ஈடுசெய்ய பயணியர்களிடம் வளிமண்டல் பாதுகாப்பு ஆராய்ச்சிகளைப் பற்றி தெரிவித்தும், அவர்களிடம் இருந்து "புறத்தூண்டுதலற்ற" நன்கொடைகளுக்கும் ஆதரவு கேட்டுவருகின்றனர்.

8. மரம் வளர்ப்பதும், காடுகளை பாதுகாப்பது பற்றியும் பலர் தெரிவித்து வருகின்றனர்.அவரவர் இல்லங்களில் தாங்கள் உண்ணும் காய்/பழம்/இலைகள்/தண்டுகள் ஆகியவைகள் - வெடியத்தன் வழியாக கரிப்பொருள் வாயுவைக் குறைக்க வாய்ப்புள்ளது. அதே நேரம் கடைகளில் நாம் வாங்கும் காய்கறிகளை மூட்டைக்கட்டி வாகனங்களில் கொண்டுவருவதால் எவ்வளவு கரிப்பொருளின் கசிவு ஏற்படுகிறது என்று சற்று சிந்தித்துப்பார்த்தல் நல்லது. அசைவம் சாப்பிடிவோர், வாரத்தில் ஒரு நாள் சைவ உணவை உட்கொள்ள வழிச்செய்யலாம்.

9. அலுவலகத்திலோ அல்லது வீடுகளிலோ, நமக்கோ அல்லது குழுந்தைகளுக்கோ புத்தகத்திலிருந்து அச்சிடுவோர் அல்லது நகல் எடுப்போர், ஒரு பக்க அச்சாகவோ/நகல்களாகவோ என்றில்லாமல், இரண்டுப்பக்கமாக (double sided) அச்சடிப்பதின் வழியாக காகிதக்குவியல்களை தவிர்க்கலாம்.

10.இல்லத்திற்கு சுற்றுச்சுவர் எழுப்புவதிற்கு பதிலாக "வாழும் வேலியாக" சிறு மரங்களுக்கு உயிர் கொடுப்போம்.

காக்கை கரவா கரைந்துண்ணும்; ஆக்கமும்
அன்ன நீரார்க்கே உள. - திருக்குறள் (527)

தமிழரன்பகலா,
கண்ணன் நடராசன்

Tthamizth Tthenee

unread,
Apr 22, 2009, 10:04:27 PM4/22/09
to minT...@googlegroups.com
அன்புள்ள நன்பர்களே
 
எக்ஸ்னோரா என்னு அமைப்பின் மூலமாக
எங்கெல்லாம் மரம் நட முடியுமோ அங்கெல்லாம் நாங்கள் மரம் நடுறோம்
 
ஒவ்வொரு பகுதியிலும் பொதுக்கூட்டங்கள் போட்டு அந்தப் பகுதியை  மேம்படுத்த அங்கிருக்கும் பலருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  சில நுணுக்கங்களை  கற்றுத்தருகிறோம்
 
பள்ளிகள், கல்லூரிகள் போன்றவற்றிர்க்கு சென்று  அங்கிருக்கும்  ஆசிரியர்களுக்கும்
மானவர்களூக்கும்  சுற்றுப்புர சூழல் பாதுகாப்பைப் பற்றி  எடுத்துச்சொல்லி அவர்களையும் ஈடுபடுத்துகிறோம்
 
அடுக்கு மாடிக் கட்டிடங்களில்   அந்தக் கட்டிடங்களின்  மேல் தளம் சிறிதும் பாதிக்காதவாறு  மாடித்தோட்டம் போட்டுக் கொடுக்கிறோம்
 
குப்பைகளை குப்பைத் தொட்டியில்  போடபயிற்சி அளிக்கிறோம்
 
மக்கும் குப்பை மக்காத பிளாஸ்டிக் குப்பைகள் என்று தரம் பிரித்து அவைகள  தனியே  போடச்சொல்லிக் கொடுக்கிறோம்
அவைகளை உரமாக்க ஒரு இயந்திரம் வீட்டிலேயே வைத்துக்கொள்ளுமாறு சிரிய வடிவில் செய்திருக்கிறோம்
 
 
 
எங்கெல்லாம்  நீர்நிலைகள் தனியாரால்  ஆக்ரமிப்பு செய்யப்பட்டிருக்கிறதோ
அவைகளைக் கண்டு பிடித்து   வழக்கு பதிவு செய்து  அவைகளை மீட்டு  நாட்டுக்கு அளிக்கிறோம்
 
இன்னும் பல நற் காரியங்களை
 
எக்ஸ்னோரா அமைப்பின் மூலமாக செய்து வருகிறோம்
 
 
5த் பில்லர் என்று ஒரு அமைப்பை ஏற்படுத்தி  லஞ்சம்  வாங்க்குவோரைக் கட்டுப்படுத்துகிறோம்
 
http://peopleofindia.net  என்னும் தளத்தை
 
நான் ஏற்படுத்தி அதில் வரும் புகார்களைக் களைய  அரசாங்கத்தில் இருக்கும்  பல  நல்லவர்களின்   உதவியோடு ஆவன செய்கிறேன்
 
இன்னும் பல நற்காரியங்களை  செய்து வருகிறோம்   ஒரு பைசா கூட வாங்காமல்
செய்கிறோம்
 
தன்னார்லர்களை வைத்துக்கொண்டே செய்கிறோம்
 
எங்களுடைய  எக்ஸ்னோரா அமைப்பு
 
பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 


 
2009/4/23 Kannan Natarajan <thar...@gmail.com>



--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள

தமிழ்த்தேனீ

karth...@gmail.com

unread,
Apr 23, 2009, 12:20:39 AM4/23/09
to மின்தமிழ்

கண்ணன்,

டயாக்சின் போன்ற வேதிமங்களையும் பிறவற்றையும் கட்டுப்படுத்தும்
முயற்சிகள் கியொட்டோ மாநாட்டிலிருந்து ஆரம்பித்தனவல்லவா?
அதை மறுத்து வந்த அமெரிக்கா கூட இப்போது ஆதரவாக மாறிவிட்டது.
இருப்பினும் கியொட்டோவின் எல்லாப் பரிந்துரைகளையும் இன்றே
முற்றாகச் செயல்படுத்தினாலும் பூமியின் வெப்பம் 1 விழுக்காடு
அளவுகூடக் குறையாது என்றுதான் கணிக்கப் பட்டிருக்கிறது.
We are all doomed! உங்களுக்கு இது குறித்து மேலும் அதிகமாகவே தெரியும்.

உலக வெப்பம் கூடுவது இயற்கையின் செயல் என்றும், மனிதன்
அதற்கு அளிக்கும் பங்களிப்பு மிகச் சிறியது என்றும் கூடக்
கேட்டிருக்கிறேன். ஒரு எரிமலை வெடித்தால் காற்றில் கலக்கும்
கரியமில வாயுவின் அளவை எத்தனை நாடுகள் எத்தனை நாள் எரித்தாலும்
எட்டமுடியாது.

ஆகவே நாம் ஒரு சுவருக்கு வந்து விட்டோம். இனி என்ன?
மனிதன் அவ்வளவு எளிதாக விட்டுக் கொடுத்துவிடுவானா?

Adaptive technology என்று பேசத் தொடங்கியுள்ளார்கள். இவற்றையெல்லாம்
சமாளிக்க புதிய தொழில் நுணுக்கம்தான் இப்போது தேவை.

சூரிய ஒளியின் வெப்பத்தைக் குறைக்க வானில் ஒரு கவசம் போடுவதும்
யோசிக்கப்படுகிறது. வெட்டவெளியாக இருக்கும் இடத்திலெல்லாம்
மூடும் திறக்கும் வான் கதவுகள் போடலாம்.
(இதை நான் எனது "சூரியனைக் கொன்றுவிட்டார்கள்" கதையில்
பேசியுள்ளேன்; வேடிக்கையாக!)

கரியமிலவாயுவை விழுங்கும் நுண்ணணுக்கள் இருக்கின்றனவாம்.
அவற்றைப் பெருமளவில் உற்பத்தி செய்யலாம். மண்புழுக்கள்
வளர்ப்பது போல்.

வீட்டுக்குள் குளிர்சாதனங்கள் மேன்மையடைந்து வருகின்றன.

இவ்வளவு பெரிய ஷோப்பிங் கொம்ப்லெக்சுகளை குளிர்சாதனப்
படுத்த முடியுமானால் ஒரு நகர் முழுமையையும் குளிர்சாதனப்
படுத்த முடியாதா?

நகரை விட்டு வெளியே வந்தால் நெடுஞ்சாலைகளையும் மூடி
குளிர்சாதனப்படுத்தலாம்.

Adaptive technology மனித குலத்தைக் காப்பாற்றும் என்றே நினைக்கிறேன்.

அதற்கு மேல் மரபுணுக்களும் இந்த புதிய சூழல்களை உள்வாங்கிக் கொண்டு
தாமே எதிர்ப்புச் சக்தியும் தழுவிக்கொள்ளும் சக்தியும் படைத்த
புதிய மரபணுக்களை உற்பத்தி செய்யலாம்.

ஆகவே மனுக்குலம் அழிந்து
விடும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை.

நாளை மற்றொரு நாள். அது இந்நாள் போல் இருக்காது, எல்லா வகையிலும்.

ரெ.கா.

Tirumurti Vasudevan

unread,
Apr 23, 2009, 12:32:11 AM4/23/09
to minT...@googlegroups.com



நகரை விட்டு வெளியே வந்தால் நெடுஞ்சாலைகளையும் மூடி
குளிர்சாதனப்படுத்தலாம்.
இதுக்கு முடிவே இருக்காது.

Adaptive technology மனித குலத்தைக் காப்பாற்றும் என்றே நினைக்கிறேன்.

சூடு என்றால் அதை தாங்கிக்கொள்ள பழகணும். அதானே adaption?
எப்பவுமே இயற்கைக்கு மாறாகவே போக பார்க்கிறோம். இருப்ப்தை வைத்துக்கொண்டு திருப்தி அடைவது இல்லை. இதானே பிரச்சினையே?

தி.வா

--
My blogs: [all in Tamil]
http://anmikam4dumbme.blogspot.com/
http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text too!
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!

Tthamizth Tthenee

unread,
Apr 23, 2009, 2:04:35 AM4/23/09
to minT...@googlegroups.com
தெருவோரம்
அத்துணை இயற்கைச் சீற்றங்களையும் வெட்டவெளியில் தாங்கிக்கொண்டு
இருக்கும் குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி தானாய் வருகிறது'
 
ஆனால் வீட்டிலே போஷாக்குடன் வளர்க்கப்படும் குழந்தைகளுக்கு
குளிர் காலத்தில் ஜலதோஷம்
வெய்யில் காலத்தில் கட்டி
அத்தனை வியாதிகளும் தாக்குகின்றன
 
அமெரிக்கா சென்று விட்டு இந்தியாவுக்கு வந்து சாதாரணமாக வீட்டில் தண்ணீர் குடித்தாலும் அவர்களுக்கு விஷக் காய்ச்சல் வருகிறது
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 
 

 

நா.கண்ணன்

unread,
Apr 23, 2009, 2:23:15 AM4/23/09
to மின்தமிழ்
ஆகா! கண்ணனார் சொல்லும் கருத்தான யோசனைகளை உடனே செயல்படுத்துவோம்.

ஒரு காலத்தில் மிதிவண்டிகளுக்கென மிகப்பெரிய சாலைகள் அமைத்த சீனாவில்
இப்போது கார்கள் ஓடுகின்றன. சீனா வளரும் வேகத்தில் 400 மில்லியன் மக்கள்
கார் பயன்படுத்தினாலும் ஆகும் சூழல் கேட்டை யோசிக்க.

இந்தியா சும்மா சைவ உணவு நாடாக இல்லை. இப்போதுள்ள 60% கறியுணவு மக்கள்
நாளை கறி உண்ணத்தொடங்கினால்? 600 மில்லியன் வயிறுக்கு சாப்பாடு போட எந்த
கிடை கிடைக்கும்? யோசிக்க! சைவ உணவே புவியன்பு உணவு.

இன்னும் பேசுவோம்.

க.>

On Apr 23, 10:09 am, Kannan Natarajan <thara...@gmail.com> wrote:
> > நடைமுறை யோசனைகள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.>

நா.கண்ணன்

unread,
Apr 23, 2009, 2:28:22 AM4/23/09
to மின்தமிழ்
உலகச் சூடாக்கல் என்பதில் ஆய்வாளர்களுக்குள் அதிகக் கருத்து வேற்றுமை
இல்லை.
மக்கள் விழிப்புடன் செயல்பட்டால் அழிவுத்திசை திருப்ப முடியும்.
மனிதன் மனது வைத்தால் புதிய சூழல்சார் தொழில்நுட்பங்களை உருவாக்கி
பசுமைத்தாயகம் உருவாக்கமுடியும்.
நாம் வாழ்வோம். அதுவே இறைவன் கட்டளை ;-)

க.>

On Apr 23, 1:20 pm, "karthige...@gmail.com" <karthige...@gmail.com>
wrote:


> We are all doomed! உங்களுக்கு இது குறித்து மேலும் அதிகமாகவே தெரியும்.
>

> Adaptive technology என்று பேசத் தொடங்கியுள்ளார்கள். > ஆகவே மனுக்குலம் அழிந்து

நா.கண்ணன்

unread,
Apr 23, 2009, 2:31:11 AM4/23/09
to மின்தமிழ்
வாழ்த்துக்கள் தேனீயாரே!
கேரளாவில் 70களில் செயல்பட்ட ஒரு சிறு அறிவியல் கழகம், அங்கு கட்டவிருந்த
ஒரு பெரும் அணைக்கட்டையும், அதனால் ஏற்படப்போகும் சூழல் பாதிப்பையும்
இந்திராகாந்திக்கு சுட்டிக்காட்டி திசை திருப்பியதுண்டு.
மனிதனின் பலம் நம்பிக்கை!!

க.>

devoo

unread,
Apr 23, 2009, 2:55:57 AM4/23/09
to மின்தமிழ்
Apr 23, 11:23 am, நா.கண்ணன்
//சைவ உணவே புவியன்பு உணவு.//

ஊன் உணவைத் தவிர்த்தால் உஷ்ணம் குறையும்

Cutting meat consumption could significantly reduce greenhouse gas
emissions, a study published Wednesday maintained, as it urged meat
eaters to cut back and the agriculture industry to change its ways.
burgher
About 80 per cent of emissions come from the production of meat,
including through the transport of livestock and feed, mostly from
methane emitted by animal's flatulence.
The study by Tony McMichael of the Australian National University in
Canberra and John Powles of Britain's University of Cambridge said
that, realistically, global consumption of red meat could be reduced
by 10 per cent.

http://www.cbc.ca/health/story/2007/09/12/redmeat-study.html

தேவ்

நா.கண்ணன்

unread,
Apr 23, 2009, 5:44:12 AM4/23/09
to மின்தமிழ்
நன்றி!
இது போல் இன்னும் பல காரணங்களை என்னால் சொல்லமுடியும்.
ஒபாமா இவ்வழிக்கு இப்போது செவிசாய்க்கிறார். கடந்த சில பத்தாண்டுகளாகவே
சைவ உணவு மேலை நாடுகளில் பிரபலமாகிவருகிறது.
அதுவே அன்புசார் வழி.

க.>

On Apr 23, 3:55 pm, devoo <rde...@gmail.com> wrote:
>
> http://www.cbc.ca/health/story/2007/09/12/redmeat-study.html
>
> தேவ்

kamaladevi aravind

unread,
Apr 23, 2009, 8:55:03 PM4/23/09
to minT...@googlegroups.com
வணங்குகிறேன் சார்,  நிங்ஙளின்  இந்த  அரும் சேவைக்கு.
ஈஷ்வர பாதம் பணிவதற்கு ஒப்பானது இக்கைங்கர்யம்.
கமலம்

http//:www.kamalagaanam.blogspot.com


From: Tthamizth Tthenee <rkc...@gmail.com>
To: minT...@googlegroups.com
Sent: Thursday, April 23, 2009 10:04:27 AM
Subject: [MinTamil] Re: புவியன்பு மடல்

Kannan Natarajan

unread,
Apr 24, 2009, 6:20:10 PM4/24/09
to minT...@googlegroups.com

Obese people responsible for global warming!

According to a new report, being overweight isn’t just bad for your health, it’s bad for the environment too.

The London School of Hygiene and Tropical Medicine discovered that overweight people were responsible for more carbon emissions as a result of a higher consumption of food. In particular, the growing need for livestock - 20 percent of all greenhouse gases is believed to come from the toxic methane emitted by cows.

The researchers also put a reliance for transport in the form of cars as increasing overweight populations' strain on the environment.

Phil Edwards and Ian Roberts, authors of the report, told the UK’s Daily Mail:-

‘When it comes to food consumption, moving about in a heavy body is like driving around in a gas guzzler’

‘Staying slim is good for health and for the environment. We need to be doing a lot more to reverse the global trends towards fatness, and recognise it as a key factor in the battle to reduce emissions and slow climate change.’

According to the study, a more slimline country such as Vietnam consume 20 percent less food so produce a lower level of carbon emissions.

The study, which is published in the International Journal of Epidemolgy, concluded that a population of 1 billion within their healthy weight range would produce 1,000 million tonnes less carbon dioxide than an overweight nation of the same size.

A worry given the global rise in BMI…

Courtesy:- http://health.ninemsn.com.au/article.aspx?id=804714

O தோழன்:-}

unread,
Apr 25, 2009, 2:52:39 AM4/25/09
to minT...@googlegroups.com
 பூமித்தாய் புன்னைகைக்க  புவியில் நடப்போம் புவிக்கு வாழ்த்தாய்  

 



2009/4/24 Kannan Natarajan <thar...@gmail.com>



--
அன்புடன்.....
கல்யாண்ஜி

"மண் பயனுற வேண்டும்"

மார்கழி மஹோத்ஸவம்
http://markazhimahotsavam.blogspot.com/
http://velmurugantemple.org.uk/

Narayanan Kannan

unread,
Apr 25, 2009, 2:58:22 AM4/25/09
to minT...@googlegroups.com
2009/4/25 O தோழன்:-} <guru...@gmail.com>:

>  பூமித்தாய் புன்னைகைக்க  புவியில் நடப்போம் புவிக்கு வாழ்த்தாய்
>
ஆகா! வந்திட்டீகளா?
இப்ப உங்கள் புண்ணிய பாதம் எங்கு படுகிறது?
இந்தியா? லண்டன்?

க.>

O தோழன்:-}

unread,
Apr 25, 2009, 12:31:10 PM4/25/09
to minT...@googlegroups.com
லண்டன்

2009/4/25 Narayanan Kannan <nka...@gmail.com>

Narayanan Kannan

unread,
Apr 25, 2009, 5:59:12 PM4/25/09
to மின்தமிழ்
Meat is the most resource-intensive food on the plate. It takes much
more energy, water and resources to produce a pound of meat, than a
pound of grain or produce. (A pound of beef can require about 12,000
gallons of water to produce, compared to 60 gallons for a pound of
potatoes.) In addition, agricultural hormones and antibiotics lead to
pollution of soil, air, and water.

If you eat meat, aim for meat from animals who were raised humanely;
grass-fed, and without hormones or antibiotics. Try hard to avoid
factory farmed meat which relies on large-scale industrialized and
intensive agricultural practices that are focused on profit with
animals kept indoors and restricted in mobility. Each industry has its
own abusive practices, and some are much more cruel than others. For
example, the chicken, egg, turkey, and pork industries tend to be far
more abusive to animals than the beef industry. A growing number of
producers are raising animals without intensive confinement. Refining
your diet by choosing cage-free animal products, instead of the
conventional factory farm products that fill most supermarket shelves,
will help to reduce animal suffering. Happy animals are part of a
happy planet.

Kannan Natarajan

unread,
Apr 25, 2009, 6:32:41 PM4/25/09
to minT...@googlegroups.com
> If you eat meat, aim for meat from animals who were raised humanely; grass-fed, and without hormones or antibiotics.

அறிவியலின் புரட்சியால், வளர்ச்சிக் குன்றியும், வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளிலும் கூட ஆடுமாடுகளுக்கு தரும் உணவில்  அதிக ஊட்டப்பொருள்கள் அடங்கிய "அறிவியல் உணவுகள்" (சைவ, அசைவ கலப்பு)  பல நாடுகளின் கால்நடைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. எப்படி மனிதக்குலத்திற்கு, வளமூட்டப்பெறவும் (fortify/enrich) வலுப்படுத்தவும் சில கனிப்பொருள்களைச் (minerals) சேர்க்கிறார்களோ, அவ்வாறே பல கால்நடைகளுக்கு என்ற உணவுகளிலும் நடைமுறையில் உள்ளதால், நீங்கள் கூறும் "Organic உணவு வகைகளையே" உண்டு வாழும் ஆடுமாடுகள் அரிதாகவும், அதேசமயம் தொலைவிடங்களைச் தேடிச்செல்ல வேண்டியும்வுள்ளது என்று என் நண்பர் ஆதங்கப்பட்டுகொண்ட நினைவு தான் வருகிறது.


> Try hard to avoid factory farmed meat which relies on large-scale industrialized and intensive agricultural practices

மேலும் மரபணுக்களின் பண்புகளை மாற்றியமைக்கும் (GM) உணவுகள் உலவிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், கூர்ந்தாராய்வுச் செய்து தனிப்பட்ட உணவுவகையை உண்டு வாழ்ந்த ஆடுமாடுகளை தேடுவது, "வைக்கோல் குவியலில், ஊசியைத் தேடுவதிற்கு இணை!"

ஆடு, மாடுகளின் தோழன்,
கண்ணன் நடராசன்

Narayanan Kannan

unread,
Apr 25, 2009, 6:42:56 PM4/25/09
to minT...@googlegroups.com
நன்றி கண்ணன்.

கண்ணன் என்றாலே ஆடு, மாடுகளின் தோழனாகத்தானே இருக்க வேண்டும் ;-)

நம்ம ஊரில் ஒரு சொலவடை உண்டு. “அடி மாட்டு விலைக்கு கேக்கறான்!” என்று.
அதாவது, ஒரு காளை மாடு தன் வாழ்நாள் முழுவதும் மனிதனுக்கு உழைத்த பின்
அதை அடித்து, உண்ண விற்று விடுவர்.

1. முதலில் இது நன்றியற்ற செயல்.
2. மாடு தன் சக்தியை எல்லாம் கொடுத்த பின் எலும்பும், தோலுமாக இருக்கும்
போது, அது உணவிற்குக் கொல்லப்படுகிறது. இந்த உணவில் என்ன சக்தி
இருக்குமென்று இந்தியாவில் உண்கின்றனர்? மேலும், நாம் என்ன உண்கிறோமோ!
அதுவே நாம்! இது தத்துவமன்று. அறிவியல். எனவே நம் உடலுக்கும்,
உள்ளத்திற்கும் தெம்பு அளிக்கும் சாத்வீக உணவுகளை உண்பதே சிறந்தது.

சமீபத்தில் ஒரு படம் கொரியாவில் சக்கை போடு போட்டது. Low budget படம்.
ஒரு கிழவன், கிழவி, ஒரு கிழ மாடு. இதுதான் கதை. அற்புதமாக விவசாயின்
வாழ்வைச் சொல்லும் கதை. இந்தக் கிழவன், அந்த மாட்டிற்குக் காட்டும்
அக்கறையை தனக்குக் காட்டவில்லை என்று கிழவி சொல்லிக்கொண்டே இருப்பது கதை.
இறுதியில் மாடு இறந்துவிடும். அதை முறையாக புதைத்து, நினைவுச்சின்னம்
வைக்கும் கிழம். இந்த அழகிய மனப்பான்மைதான் இந்தியாவில் பசு மாட்டைக்
கொல்லக்கூடாது எனும் வழக்கமாக உள்ளது.

க.>

2009/4/26 Kannan Natarajan <thar...@gmail.com>:

Narayanan Kannan

unread,
Apr 25, 2009, 6:50:12 PM4/25/09
to மின்தமிழ்

இதில் சொல்லப்பட்டிருக்கும் பல விஷயங்கள் அமெரிக்காவை மனதில் கொண்டு எழுதப்பட்டிருந்தாலும், நாம் வாழும் இடத்திற்கு தக்கவாறு இதன் பொருளை உணர்ந்து செயல் படுத்த முடியும்.

Tips for Green Eating

By Melissa Breyer, Senior Editor, Healthy & Green Living

It’s April?the month that houses Earth Day. Which means that you might be experiencing a rush of media extolling the virtues of reusable shopping bags, the evils of single use water bottles, and the importance of organic food. And seasonal food. And local food. And so on. All important issues, but I’m guessing a lot of you know about these things by now. So may I interest you in some other ideas on how to make an impact with your food choices?

Don’t get me wrong. My closet’s packed with cheerleading outfits for the basic tenets of green eating: local, seasonal, organic. They are, in my opinion, vastly important. So I’ll pay tribute to them, quickly, in tip number one?and then cut to the chase with six other tips that see less of the spotlight.


1. Buy Local, Seasonal, Organic.
Shop locally to decrease the fuel consumption of transportation?shop at farmer’s markets, CSAs, food co-ops, and markets that sell local products. Even big box stores are hopping on the local food train. Eat seasonally, which essentially means that you are eating locally, which means that you are not supporting the fuel consumption of cross-country, cross-global transportation. This can be challenging for those of us living in, say, Brooklyn in the winter, but you’d be surprised by all the things you can do with dark greens and winter squash! Support organic agriculture. There, said. (For more on the health benefits of eating organic produce, read Michelle’s post Life Force Diet: Choose Organic.)

2. Don’t Buy Organic.
What??? Organic should be first choice when it’s locally grown, but consider that shipping a pound of organic apples across the country increases fuel and greenhouse gas emissions by 30 percent more than if they had been consumed at their point of harvest. And much of the organic produce on the market is now shipped across the planet. Meanwhile, many local farmers practice organic methods but don’t certify organic because it is expensive and labor-intensive administratively. Since each type of crop needs to be registered, for a smaller farm growing a variety of food it becomes a Herculean task. If you shop at a farmer’s market, talk to your vendors and see if they use eco-friendly agricultural methods?many of the farmers I have talked to do so because they recognize the importance of keeping their land healthy. Consider buying non-organic locally grown produce over non-local organic produce, if you can determine that it was grown conscientiously. 

3. Yes, Eat Your Weeds.
Dandelions, purslane, chickweed, stinging nettle, lamb’s quarter, burdock? Yum! Skip the herbicides, and celebrate your weeds instead with a hot pan and some olive oil. Many plants now maligned as bothersome invaders of the perfect lawn were long used as food greens. Just make sure that you identify the plant species correctly. I, for one, go absolutely shivery in the knees for dandelions?as you can see by these posts:

Eating Dandelions
Cream of Dandelion Soup
Homemade Dandelion Syrup

 4. Eat Antiques.
Grow and shop for heirloom vegetables?varieties that have been around for a long time?to help promote biodiversity. Heirloom varieties can be knobby, speckled, bursting with flavor and loaded with character?they’re not industrially-raised supermarket produce designed for life in a truck and a shelf. With big agriculture growing only a small variety of the same bio-engineered (often patented and sterile) seeds, we run the risk of letting thousands and thousands of generations-old fruits and vegetables become extinct. The same goes for grains and beans. Heirloom beans are awesome; their flavor and texture do justice to their poetic names such as Black Valentine or Butterscotch Calypso.

Learn about heirloom beans and how to cook them here.

5. Mind Your Chills and Hot Flashes
Your refrigerator can be one of the biggest energy drains in your home. Here’s the cooling-efficiency cheat sheet cribbed from Sustainable Dave’s (much more comprehensive) post, Putting the Deep Freeze On Your Energy Loss: Do the dollar bill trick on the seal to check air-tightness; keep the fridge and freezer full; keep the fridge at 35 to 38F degrees, and the freezer around 0F; clean the coils; keep it in a cool place.

Meanwhile, keep the heat out of the kitchen by cooking outside?outdoor grills use less energy than your stove and keep heat out of the house, reducing energy needed to feed hungry air conditioners. And being outside is nice.

 6. Love Your Coffee Farmer.
Lord knows I try to be good about my eating habits, but then, there’s coffee. I can manage to eat straight from my farmer’s market all winter long, but I can’t seem to shake the coffee. And until someone figures out a way to grow coffee beans in New York’s climate (which isn’t going to happen any time soon?fingers crossed), it’s a decidedly not-local item.

Especially with coffee, the consumer’s spending power can really make a difference. Coffee is the world’s second most valuable traded commodity, behind only petroleum. Second, isn’t that interesting? Imagine the impact of our shopping? According to Global Exchange, there are approximately 25 million farmers and coffee workers in over 50 countries involved in producing coffee around the world. Coffee producers are kept in a cycle of poverty and debt by the current global economy designed to exploit cheap labor and keep consumer prices low. Buying Fair Trade Certified coffee ensures a proper wage and working conditions for those who harvest and handle it, and has strong environmental standards built into its certification process that protect watersheds and virgin forests, help prevent erosion, promote natural soil fertility and water conservation, and prohibit GMOs and many synthetic chemicals. Look for the Fair Trade Certified label on your beans or in your coffee shop.

நா.கண்ணன்

unread,
Apr 28, 2009, 10:28:32 PM4/28/09
to மின்தமிழ்
The Monaco Declaration and Research Priorities Report Released 30
January at ASLO

More than 150 scientists from 26 countries are calling for immediate
action by policymakers to reduce CO2 emissions sharply to avoid
possible widespread and severe damage to marine ecosystems from ocean
acidification. This warning comes in The Monaco Declaration and the
Research Priorities Report developed at the 2nd international
symposium on The Ocean in a High-CO2 World, to be released during a
press conference on Friday, 30 January, 2009 at the ASLO Aquatic
Sciences Conference in Nice.

http://www.ocean-acidification.net/

கடலின் அமிலத்தன்மை கூடுகிறது என்பது பசுமையகமாக்கலை விட முக்கியமானது
என்று அறிவியலார் கருகின்றனர். எனவே கரியமிலவாயுக்குறைப்பு அவசியமாகிறது.

க.>

Narayanan Kannan

unread,
Apr 30, 2009, 1:10:55 AM4/30/09
to மின்தமிழ்

Since the beginning of the industrial revolution, the ocean has absorbed approximately 48% of the anthropogenic CO2 released to the atmosphere, significantly reducing its impact on climate. As CO2 dissolves in seawater, the pH of the water decreases, making it more acidic. Since the beginning of the industrial revolution, ocean pH has dropped globally by 0.12 pH units. While these pH levels are not alarming in themselves, the rate of change is cause for concern. To the best of our knowledge, the ocean has never experienced such a rapid acidification. By the end of this century, if concentrations of CO2 continue to rise exponentially, we may expect to see changes in pH that are three times greater and 100 times faster than those experienced during the transitions from glacial to interglacial periods. Such large changes in ocean pH have probably not been experienced on the planet for the past 21 million years. How marine ecosystems, coral reefs, and fisheries will respond to this rapid acidification is unknown.

Narayanan Kannan

unread,
May 5, 2009, 7:22:51 AM5/5/09
to மின்தமிழ்
Swine Flu and Animals
 
The good news is the H1N1 virus will not effect our companion animals such as dogs and cats. The bad news, the recent outbreak is effecting pigs.

In Egypt, pigs have been given the death sentence. 300,000-350,000 pigs are living in Egypt, raised for food for the Christian population. Sadly, this isn't just a bad ending for the pigs, who haven't been found to have the virus, but also for the poor farmers who raise them.

"It has been decided to immediately start slaughtering all the pigs in Egypt using the full capacity of the country's slaughterhouses," said Health Minister Hatem el-Gabaly. People can not get the swine flu from eating pork, so without confirmed cases of sick pigs, the killings are a sad over reaction. Though Egypt has it's reasons due to it's experiences with bird flu, it's still a waste of good resources. Not to mention it seems horribly wasteful to destroy healthy animals that will not be used for food.

Hopefully we won't see similar reactions anywhere else in the world.

Kannan Natarajan

unread,
May 5, 2009, 6:33:45 PM5/5/09
to minT...@googlegroups.com
குப்பையை கிளறினால்... பணம்! - துர்நாற்றத்தில் இருந்து முன்னேற்றம்.

கோவை நகரின் சுகாதாரம், சுற்றுச்சூழலை மேம்படுத்த "ராக்" அமைப்பு அறிமுகம் செய்துள்ள "குப்பையிலிருந்து செல்வம்" என்ற புதிய திட்டம், துப்புரவுப் பணியாளர்  மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.

http://img.dinamalar.com/data/images_news/tbltnsplnews_47254145146.jpg


திட்டத்தின்படி மாதம் 100 டன் குப்பையை மறு சுழற்சிக்காக தரம் பிரிக்க "ராக்" முடிவு செய்துள்ளது. கோவை மாநகராட்சியில் உள்ள வீடு, அலுவலகம், மருத்துவமனை, வணிக வளாகங்களில் இருந்து தினமும் டன் கணக்கில் குப்பைக் கூளங்கள் வெளியேற்றப்படுகின்றன.

  • மக்கும் குப்பை
  • மக்காத குப்பை
என தரம் பிரித்து, வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகின்றன. லாரிகள் மூலம் குப்பையை கொண்டு செல்ல மாநகராட்சிக்கு ஏராளமான பணம் செலவாகிறது.

"ராக்" அமைப்பின் புதிய திட்டத்தின்படி, குப்பையில் இருந்து பிரித்தெடுக்கப்படும்,

  • பேப்பர்
  • கார்டுபோர்டு அட்டைகளை
கிலோவுக்கு மூன்று ரூபாய் கொடுத்து ஐ.டி.சி. நிறுவனம் வாங்கிக் கொள்கிறது. கோவையில் உள்ள 10 காலனிகளில் "ராக்" அமைப்பின் ஏற்பாட்டின்படி குப்பைகளை பிரிக்கும் பணி நடக்கிறது. இதிலிருந்து உபரியாக பணம் கிடைப்பதால் மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் இப்பணியில் ஆர்வமுடன் ஈடுபடுகின்றனர்.  கழிவுக்காகிதங்கள் பிரிக்கப் பட்டபின் குப்பையின் அளவு குறைந்து விடுவதால், இவற்றை வெள்ளலூர் குப்பைக்கிடங்குக்கு லாரியில் கொண்டு செல்லும் போக்குவரத்து செலவும் குறைந்துள்ளது.

"ராக்" அமைப்பின் இணைச் செயலாளர் இரவீந்திரன் கூறியதாவது:-

வீட்டிலிருந்து தூக்கி எறியப்படும்

  • பேஸ்ட்
  • சோப் உறை
  • கார்டுபோர்டு பெட்டி
  • பழைய பேப்பர்
  • ஆயத்த ஆடை அட்டை
  • பிளாஸ்டிக் பேப்பர்
கிலோவுக்கு மூன்று ரூபாய் அளித்து ஐ.டி.சி., நிறுவனம் பெற்றுக் கொள்கிறது. துப்புரவுப் பணியைத் தவிர, பேப்பர் கழிவுகளை பிரிக்கும் பணிக்கென தனியாக பணம் கிடைப்பதால் தொழிலாளர்கள் ஈடுபாட்டுடன் வேலை செய்கின்றனர்.

கோத்தாரி எனும் துப்புரவுத் தொழிலாளி வாரம் 100 கிலோ பேப்பர் கழிவுகள் விற்கிறார். கழிவுகளை பெறும் ஐ.டி.சி., நிறுவனத்தார் பெங்களூருவுக்கு மொத்தமாக அனுப்பி மறுசுத்திகரிப்புக்கு உட்படுத்துகின்றனர். இதனால் மாநகராட்சிக்கு கழிவுகளை பிரித்தெடுக்கும் செலவும் போக்குவரத்து செலவும் மிச்சமாகிறது. பிளாஸ்டிக் கலந்த குப்பையை எரிப்பதால் வெளிப்படும் புகை, புற்றுநோய் மற்றும் சுவாச நோய்களை வரவழைக்கிறது. பிளாஸ்டிக் குப்பைகளை பிரித்தபின் அனுப்பும் பிற குப்பைகளை எரிப்பதால் அப்பகுதியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது.

மாநகராட்சியின் ஆறாம் வார்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிற வார்டுகளுக்கு "மாடல் வார்டு" ஆக இந்த வார்டை மாற்ற முயற்சிக்கிறோம். திட்டத்தை அனைத்து வார்டுகளிலும் அமல்படுத்த ஆலோசித்து வருகிறோம்.

பழைய செருப்பு, துணிகளைத் தவிர அனைத்தையும் மறுசுழற்சி செய்யலாம். இதன் மூலம் 50 சதவீத குப்பையை பிரித்து அனுப்புகிறோம். இத்திட்டம் வெற்றிகரமாக செயல்பட கவுன்சிலர்களின் ஒத்துழைப்பு முக்கியம்.

சில கவுன்சிலர்கள் தாமாகவே முன் வந்து தங்கள் வார்டிலும் அமல்படுத்துமாறு அழைக்கின்றனர். தேர்தலுக்குப் பின் பணிகளை துரிதப்படுத்தவுள்ளோம். ஆறாம் வார்டில் துவங்கிய திட்டம், தற்போது நான்கு மற்றும் ஒன்பதாம் வார்டுகளிலும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மாநகராட்சிக்கு செலவு மிச்சம்; சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்.  துப்புரவுத் தொழிலாளிகளுக்கு சம்பளம் தவிர, வாரம்  200 ரூபாய் பணம் உபரியாக கிடைக்கிறது. "ஒவ்வொரு வீட்டிலும் கழிவுகளை தரம் பிரித்துதான் குப்பைத் தொட்டியில் போட வேண்டும்" என மாநகராட்சி கமிஷனர் கண்டிப்பான உத்தரவிட்டால் திட்டம் முழு வெற்றி பெறும். இவ்வாறு, இரவீந்திரன் கூறினார்.

தற்போது தினமும் 5,000 வீடுகளின் குப்பையை பிரிக்கும் பணி நடக்கிறது. இதன் மூலம் மாதம் 30 டன் பேப்பர், பிளாஸ்டிக் கழிவுகள் மறு சுழற்சிக்காக தற்போது தரம் பிரிக்கப்படுகிறது. இதை மாதம் 100 டன்  ஆக உயர்த்த "ராக்" இலக்கிட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு இது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த, மறுசுழற்சி செய்வதற்கு ஏற்ற பொருட்கள் குறித்து விளக்கி அவற்றை பிரித்து தருமாறு, துப்புரவுத் தொழிலாளர்களுக்கு "ராக்" அமைப்பினர் வகுப்பு நடத்தி வருகின்றனர்.  குப்பையில் இருந்து பேப்பர் கழிவுகளை பிரிக்கும் ஐ.டி.சி., நிறுவனத்தின் இத்திட்டம், கோவையில் மட்டுமல்லாமல்,

  • சென்னை
  • திருவனந்தபுரம்
  • கொச்சி
நகரங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த ஒத்துழைக்குமாறு மத்திய நகர் மேம்பாட்டுத்துறையின் சார்பில் நாட்டின் அனைத்து மாநகராட்சி கமிஷனர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.


குப்பை அள்ள கருவி:-  வீதி குப்பைகளை அகற்றி சுத்தமாக பராமரிக்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. ஆனால் குனிந்து குப்பையை பொறுக்க யாருக்கும் மனம் வருவதில்லை. இப்பிரச்னையை போக்க "இலிட்டர் பிக்கர்" எனும் இலகுவான சீனத் தயாரிப்பை அறிமுகம் செய்துள்ளது "ராக்".  தங்கள் உறுப்பினர்களுக்கும், உதவுபவர்களுக்கும் இலிட்டர் பிக்கர் இலவசமாக தரப்படுகிறது. தெருவில் கிடக்கும் பேப்பர், பிளாஸ்டிக் குப்பைகளை இதன் உதவியால் இலாவகமாக எடுத்து அருகில் உள்ள தொட்டியில் போடலாம்
.

நன்றி: தினமலர்

பி.கு: இச்செயல் திட்டம் எவ்வாறு நடைப்பெற்று வருகிறது என்று நம் குழுமத்தில் உள்ள கோவை, சென்னை மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள நகர்வாழ்நர்கள் தெரிவித்தால் நலம் பயக்கும்.

Narayanan Kannan

unread,
May 5, 2009, 6:49:46 PM5/5/09
to minT...@googlegroups.com
மிக நல்ல சேதி.

இந்தியா போன்ற மனிதவளமுள்ள நாட்டில் குப்பை பிரித்து மறுசுழற்சி செய்வது
எளிது. குப்பையில் செல்வம் என்பதைக் கண்டு கொண்டால் போதும். இந்தியாவின்
பல பிரச்சனைகளுக்கு வரட்டு கௌரவமும் காரணம். அது போனால், இந்தியாவில்
பொதுக் கழிவிடங்கள் கட்டி, மனிதக்கழிவிலிருந்து எரிவளி எடுத்து
பயன்படுத்தலாம். பசுந்தாள் உரம் தயாரிக்கலாம். வேஸ்ட் அல்லது குப்பை
என்பதும் சக்தியே!

>இப்பிரச்னையை போக்க "இலிட்டர் பிக்கர்" எனும் இலகுவான சீனத்
> தயாரிப்பை அறிமுகம் செய்துள்ளது

கோவை போன்ற நகரில் இம்மாதிரிக் கருவிகளை நாமே செய்யலாம். இதற்காக
சீனக்கருவியை வாங்க வேண்டிய அவசியமில்லை.

க.>

Narayanan Kannan

unread,
May 6, 2009, 7:21:46 PM5/6/09
to மின்தமிழ்
Civilization: A Blessing or a Curse?

Is humanity a plague on the earth? Or are we actually Mother Nature's greatest success story? In an amusing video posted to our new EnlightenNext Editors' Blog, this topic is addressed in a dramatic philosophical face-off between spiritual entertainer Stuart Davis and... himself. “In a schizophrenic scene situated in an idyllic Colorado mountain meadow,” writes associate editor Joel Pitney, “'Techno-Progressive Stuart' dukes it out with 'Eco-Spiritual Stuart' over the ultimate value of human civilization.” Enjoy!
 
வீடியோ பார்க்க: http://www.vimeo.com/4072088
 
பிகு: குறிப்பாக - ரெ.கா, க.ந இவர்களுக்கு......

Kannan Natarajan

unread,
May 10, 2009, 9:23:50 PM5/10/09
to minT...@googlegroups.com
விடியல் தேடும் நொய்யல்:- உயிருக்கு போராடுகிறது ஒரு ஜீவ நதி!

மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி,

  • கோவை
  • திருப்பூர்
  • ஈரோடு
  • கரூர்
  • திருச்சி
என ஐந்து மாவட்டங்களை கடந்து காவிரியில் கலக்கிறது காஞ்சி மாநதி.

சென்ற இடமெல்லாம் செழிப்பாக்கிய காஞ்சி நதி, காவிரியுடன் சங்கமிக்கும் இடத்தால் "நொய்யல்" எனப்பெயர் கொண்டது.

"நொய்" என்ற சொல்லுக்கு
  • நுண்மை
  • மென்மை
என்பது பொருள்.

தன் நுண்ணிய மணல் பரப்பினால் இப்பெயர் பெற்றது என்ற கருத்தும் உண்டு. காலப்போக்கில் காஞ்சி நதி என்ற பெயர் வழக்கொழிந்து போனது போலவே, நொய்யலும் வளமிழந்து போனது. மேற்குத்தொடர்ச்சி மலையின் வெள்ளியங்கிரியில் உற்பத்தியாகி, கிழக்கு நோக்கி பாய்கிறது நொய்யல்.

இதன் கரையில்,
  • பேரூர்
  • திருப்பூர்
என்ற முக்கிய நகரங்கள் உள்ளன.

http://img.dinamalar.com/data/images_news/tbltnsplnews_96109735966.jpg

வழியில் 32 குளங்கள், 23 தடுப்பணைகளை நிரப்பி, காவிரியில் இணையும் நொய்யல் படுகை 180 கி.மீ. நீளமும், 25 கி.மீ. அகலமும் கொண்டது. திருப்பூரில் இருந்து 16 கி.மீ. தூரத்தில் ஒரத்துப்பாளையம் அணை உள்ளது.

காவிரியுடன் சங்கமிக்கும் இடத்தில் இருந்த நொய்யல் குடியிருப்பு சேரநாட்டுக்கும், கருரூக்கும் இடையே முக்கிய இணைப்பாக இருந்ததாக சங்க குறிப்புகள் தெரிவிக்கின்றன. இங்கு, சங்ககால மக்கள் 35 ஏக்கர் பரப்பளவில் வசித்து வந்ததற்கான அடையாளங்களை தொல்லியல் துறை கண்டறிந்துள்ளது.

ஈரோட்டில் இருந்து 40 கி.மீ. தூரத்தில் அமைந்த கொடுமணல் கொங்குப்பகுதி நாகரிகத்துக்கான சான்று.

நூற்றுக்கணக்கான

  • முதுமக்கள் தாழி
  • கல்வெட்டுகள்
  • மண்பாண்டங்கள்
புதைபொருட்கள் கொடுமணல் நாகரிகம் தொன்மையானது என்பதை இன்றும் பறைசாற்றி நிற்கின்றன.

நொய்யல் படுகையால் 3,500 சதுர கி.மீ., பரப்பு பயனடைகிறது; 1,800 ச.கி.மீ., பரப்பு பாசனவசதி பெறுகிறது.

கரையோர பகுதிகளில் உள்ள கிராமங்களில் மக்கள் அடர்த்தி சதுர கி.மீ.,க்கு 120 பேர்; நகரப்பகுதியில் 1,000 பேர்.

நொய்யல் ஒரு போதும் கரை மீறியதாக சரித்திரம் இல்லை.

காரணம், ஒவ்வொரு 12 கி.மீ. தூரத்திலும் சில அடி தூரம் ஆழமாகிக் கொண்டே செல்லும் தன்மையால், சரிவான சிற்றாறாக உருக்கொண்டு அதிவேகமாக காவிரியில் கலக்கிறது. இதனால், ஆறு நிறைய தண்ணீர் செல்வதற்கு வழியில்லை; பெரிய அளவிலான தேக்கங்களும் இல்லை.

மற்ற சிற்றாறுகளை போல குளிக்கவும், குடிக்கவும் பயன்பட்டு வந்த இந்நதி, கடந்த தலைமுறையில் சிற்றாறு என்ற நிலையில் இருந்து கழிவுக்கால்வாயாக சுருங்கிக்கொண்டது.

மாசடைந்த நொய்யல்:- இன்றைய தலைமுறையினர் காணும் நொய்யல், நதி என்ற தகுதியை இழந்தது 1985ம் ஆண்டுக்கு பிறகுதான். தொழில் வளர்ச்சி என்ற பெயரில், திருப்பூர் நகரம் அரசின் எந்த உதவியும், கட்டுப்பாடுகளும் இன்றி வளர்ந்த காலகட்டம், அது. வெளிநாடுகளுக்கு பனியனை ஏற்றுமதி செய்ய வாய்ப்பு கிடைத்ததால், தொழில்முனைவோர் பலரும், போட்டி போட்டு உற்பத்தி செய்தனர்.

தொழில் வளர்ச்சியில் மட்டுமே அக்கறை கொண்டிருந்த உற்பத்தியாளர்களும், அன்னிய செலாவணியை நல்வாய்ப்பாக கருதிய அரசும், அதன் மோசமான மறுபக்கத்தை கவனிக்கத் தவறிவிட்டன. ஏற்கனவே, கோவை மாநகரின் கழிவுகள் நொய்யலில் கலந்து, அதை மாசுபடுத்திக் கொண்டிருந்தன.

வெள்ளை நிற ஆடைகளை விட, வண்ணமேற்றிய ஆடைகளுக்கு வரவேற்பு என்பதை அறிந்த, தொழிலதிபர்கள், சாயசலவை ஆலைகளை அதிகளவில் அமைத்தனர். கழிவை சுத்திகரித்து வெளியில் விட வேண்டிய அவசியம் குறித்து, தொழில்முனைவோர் அறிந்திருக்கவில்லை. சாயக்கழிவை சுத்திகரிக்கும் பொறுப்பு, அசட்டுத்தனமாக விடப்பட்டு விட்டது. விழிப்புணர்வும், தொழில்நுட்ப வசதிகளும் பெருகிவிட்ட இக்காலத்திலேயே இன்னும் தீர்வு காணப்படவில்லை.

விவசாயிகளுக்காக கட்டப்பட்ட ஒரத்துப்பாளையம் அணையில் சாயக்கழிவுகள் தேங்கி நின்றன.  அணையை சுற்றிலும் இருந்த விவசாய  நிலங்களில் களை கூட முளைக்கவில்லை. தென்னை மரத்தின் இளநீரிலும் இரசாயனத்தின் காரத்தன்மை கலந்தது. குடிநீர் இன்றி, மக்கள் பரிதவித்தனர். தோல் நோய் மருத்துவமனைகளும், செயற்கை கருத்தரிப்பு மையங்களும் அதிகளவில் ஈரோடு சுற்றுப்பகுதியில் அமைந்தன.

பிரச்னையின் தீவிரத்தை தாமதமாக உணர்ந்த, விவசாய சங்கங்கள் எதிர்ப்பு குரல்கொடுக்க துவங்கின.  சமூக அக்கறையுள்ள அமைப்புகள், நொய்யலை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோஷத்தை வலியுறுத்தின. பல்வேறு கட்ட முயற்சிகளுக்குப்பின், கோர்ட் தலையீடு காரணமாக, நச்சுத்தன்மை வாய்ந்த கழிவு நீர் வெளியேற்றத்துக்கு தடை விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.

கோர்ட் உத்தரவு காரணமாக, அனைத்து சாய ஆலை உரிமையாளர்களும் 800 கோடி ரூபாய் மதிப்பில் 20 இடங்களில் பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்துள்ளனர்; சிலர் சொந்தமாகவும் அமைத்துள்ளனர். பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு தடையில்லாச் சான்று வழங்க வேண்டிய மாசுக்கட்டுப்பாடு வாரியம், வழக்கம்போல் நத்தை வேகத்தில் செயல்படுகிறது. வழக்கு நிலுவையில் இருப்பதால், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சான்று வழங்க முடியாத நிலை உள்ளது. எனவே, சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவு நொய்யலில் கலக்கிறது. கழிவுகள் மட்டுமன்றி, ஆக்கிரமிப்புகளும் நொய்யலை உருக்குலையச் செய்துள்ளன. ஒரு நதி நம் கண் முன்னால் உயிர்ப்பை இழந்து கொண்டிருக்கிறது!

கரை அமைத்தால் கறை நீங்கும்:- கோவையில் இருந்து கரூர் வரை, நொய்யலின் இரு கரையையும் அகலப்படுத்தி, ரோடு அமைக்கலாம் என்ற திட்டம் கடந்த காலங்களில் முன்மொழியப்பட்டு இருந்தது. ஆற்றின் கரை சுத்தப்படுத்தப்படும்; ரோடு வசதியும் உருவாகும். ஆக்கிரமிப்புகளையும் தடுக்க முடியும். போக்குவரத்து நெரிசலுக்கும் தீர்வு கிடைக்கும். கொங்கு மண்டலத்துக்குள் மெட்ரோ போன்ற இரயில் திட்டம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இதற்கு மத்திய அரசின் ஒப்புதல் தேவை. ஆனால், நொய்யல் கரையில் ரோடு வசதியை உருவாக்க மத்திய அரசை எதிர்நோக்க வேண்டிய அவசியம் இருக்காது. முழுமையான ரோடாக இல்லாவிட்டாலும், முக்கிய இணைப்புகள் வரை ரோடு அமைக்கலாம். புறநகர் வழிச்சாலை; தொழில் வளர்ச்சி என பல பரிமாணங்களிலும் இத்திட்டம் பலனளிக்கும்.

நரகமாகிவிட்ட நாகரிக சுவடுகள்:
- நதிக்கரைகளில் தான் நாகரிகங்கள் தோன்றின. தமிழக நதிக்கரைகளுக்கும் அப்பெருமை உண்டு. நொய்யல் நதிக்கரையின் கொடுமணல் நாகரிகம் கி.மு. 300 முதல் கி.பி. 300ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்டது என தொல்பொருள் சான்றுகள் தெளிவுபடுத்துகின்றன. சிற்பக்கலைக்கு பெயர் பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோவிலை தன் கரையில் கொண்டுள்ளதும், இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாகவும் இருந்த நொய்யல், இன்று கடந்து செல்பவர்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு கழிவுகளை சுமந்து செல்கிறது. விவசாயிகளை செழிப்படையச் செய்த அதே நொய்யல், அவர்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.


நொய்யலை காக்க என்ன தான் தீர்வு?:
- கொங்கு நாகரிகத்துக்கு வேராக இருந்த நதி, 25 ஆண்டுகளில் இல்லாமல் போய்விட்டது. இனியாவது அரசு விழித்துக் கொள்ளாவிட்டால், நொய்யல் என்ற பெயரை செவிவழியாக மட்டுமே கேட்க முடியும். நொய்யலை நேரடியாக சீரமைத்து விட முடியாது. சங்கிலித்தொடர் போல், பல்வேறு பிரச்னைகளுக்கும் தீர்வு கண்டு, சில நடைமுறைகளை கட்டுப்படுத்தினால் மட்டுமே சாத்தியம்.

* சாக்கடை கழிவுகள் நொய்யலில் கலக்கும் போது, பிளாஸ்டிக் கழிவுகள் நீரோட்டத்தை தடை செய்கின்றன; பிளாஸ்டிக் கழிவுகளுக்கு தடை விதிக்க வேண்டும்.

* கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உடனடியாக செயல்பட, அரசு தடையின்மை சான்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், நச்சுத்தன்மை இல்லாமல் இருப்பினும், ஆற்றில் கலப்பதை தடை செய்ய வேண்டும். ஒரு சொட்டு கழிவு நீர் கூட, ஆற்றில் கலக்காமல் குழாய் மூலம் அப்புறப்படுத்தப்பட வேண்டும்.

* திருப்பூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை முழு அளவில் செயல்படுத்த வேண்டும். பாதாள சாக்கடை கழிவை சுத்திகரித்து, அக்கழிவு நீரையும் குழாய் மூலம் அப்புறப்படுத்த வேண்டும். நொய்யலின் பாதையில் உள்ள எந்த உள்ளாட்சி பகுதியில் இருந்தும் சாக்கடை கழிவுகள் நொய்யலில் கலக்க தடை விதிக்க வேண்டும்.

* சாயக்கழிவு நீர் கடலில் கலக்கும் திட்டத்தை செயல்படுத்தும்போது, சுத்திகரிக்கப்பட்ட சாக்கடை கழிவு நீரையும், அதே குழாய் மூலம் அப்புறப்படுத்துவற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும்.

* நொய்யலை தூர்வார வேண்டும். ஆக்கிரமிப்பை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும். நொய்யலால் நீராதாரம் பெறும் குளங்களும் சாயக்கழிவால் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, அவற்றையும் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இத்திட்டங்களுக்காக, சில ஆயிரம் கோடிகள் தேவைப்படும். ஆயினும், இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை தன் மெத்தனப்போக்கால் சிதைத்து விட்ட அரசு, பணத்தை செலவழித்தே ஆக வேண்டும்.

* கோர்ட்டில் உள்ள நொய்யல் தொடர்பான வழக்குகளை அனைத்து தரப்பும் வாபஸ் பெற்று, நேரடியான தனிக்குழு மூலம் பேச்சு நடத்த வேண்டும். அல்லது விரைவு நீதிமன்றம் மூலம் மூன்று மாதங்களுக்குள் தீர்வு காண வேண்டும்.

திருப்பூர் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி. தன் பதவிக்காலம் முடிவடையும் முன் இதை செய்து முடித்தால், வரலாறு அவரை நன்றியுடன் நினைவுகூறும்.

நன்றி: தினமலர்

நா.கண்ணன்

unread,
May 10, 2009, 9:31:06 PM5/10/09
to மின்தமிழ்
On May 11, 10:23 am, Kannan Natarajan <thara...@gmail.com> wrote:
>
> நூற்றுக்கணக்கான
>
>    - முதுமக்கள் தாழி
>    - கல்வெட்டுகள்
>    - மண்பாண்டங்கள்

>
> புதைபொருட்கள் கொடுமணல் நாகரிகம் தொன்மையானது என்பதை இன்றும் பறைசாற்றி
> நிற்கின்றன.


நொய்யல் நாகரீகம் குறித்து நான் சேகரித்த பல அரிய படங்கள்

http://www.tamilheritage.org/old/monument/oodu/sangkam.html

எனும் வலைப்பக்கத்தில் இருக்கிறது. அதற்கு தமிழகம் அளித்த பரிசு
"பல்லிளிக்கும் தொல்லியல்" என்ற நக்கலான காலச்சுவடு கட்டுரை.
அவ்வளவுதான்.
வாழ்க தமிழக முதுசொம் முயற்சிகள்!!

க.>

Kannan Natarajan

unread,
May 10, 2009, 9:42:13 PM5/10/09
to minT...@googlegroups.com
> நக்கலான கட்டுரை.

பொறுத்தல் இறப்பினை என்றும்; அதனை
மறத்தல் அதனினும் நன்று! (திருகுறள் - 152)

Narayanan Kannan

unread,
May 10, 2009, 10:25:55 PM5/10/09
to minT...@googlegroups.com
நன்றி கந

மறக்கத்தான் முயல்கிறேன். அப்போது கிண்டல் அடித்தவர்கள் இப்போது தமிழ்
பண்பாட்டின் முதுமையை பல்வேறு சான்றுகள் மூலம் ஏற்றுக்கொள்கின்றனர்.
Science journal ல் கட்டுரை வந்தாயிற்று. இந்தியா முழுவதும் திராவிட
கலாச்சாரம் என்பது மெல்ல, மெல்ல தெளிவுற்று வருகிறது. நம் மக்கள் கிண்டல்
அடிக்காமல் உறுதுணையாக கை கொடுத்தால் எவ்வளவோ செய்யலாம். நமது அறிவு
பல்துறை அறிவென பல்கிப் பெருகி இருக்கிறது. கூட்டாகச் செயல்பட்டால் அது
நமக்கு நலனே (synergistic energy). ஆயின் தமிழர் போக்கு, 'அவனுக்கு என்ன
தெரியும்?' ' எனக்குத்தெரிவது போல் உண்டா?' என்றெல்லாம் விரயமாகிப்
போகிறது. ம்ம்ம்ம்..

க.>

2009/5/11 Kannan Natarajan <thar...@gmail.com>:

Kannan Natarajan

unread,
May 11, 2009, 6:45:00 PM5/11/09
to minT...@googlegroups.com
திசு வளர்ப்பில் "ஜீன்பூல்" மையம்!

தமிழக வனத்துறை சார்பில், கூடலூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட நாடுகாணியில், கடந்த 1988ம் ஆண்டு ஜீன்பூல் தாவரவியல் மையம் அமைக்கப்பட்டது. இங்கு,
  • பசுமைக்குடில்
  • நூலகம்
  • திசு வளர்ப்பு மையம்
  • செயற்கை மேகமூட்ட அறைகள்
  • பெரணி இல்லம்
  • ஆர்க்கிட் பசுமைக்குடில்
  • தாவரங்கள் வளர்க்க நர்சரிகள்
  • தாவரங்களை நடவு செய்ய தனி இடம்
  • யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் மேச்சலுக்காக தனியிடம்
என ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இல்லாமல் இருந்த இந்த தாவர மையத்தை சீரமைக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர். இதை தொடர்ந்து, கடந்த 2007-2008ம் நிதி ஆண்டுகளில் வழங்கப்பட்ட மலைப்பகுதி மேம்பாட்டு நிதி 20 இலட்சத்தில் சீரமைப்பு பணிகள் தொடங்கின. பல பகுதிகளில் சேகரிக்கப்பட்ட மூலிகை செடிகள், தாவர வகைகள் தனித்தனியான பிரிவுகளில் நடவு செய்யப்படுகின்றன.

பல ஆண்டுகளுக்கு பின், இங்குள்ள திசு வளர்ப்பு ஆய்வகத்தில், செடிகளின் சிறு பாகத்தை கொண்டு, இன உற்பத்தியும் செய்யப்படுகிறது. "மூங்கில் மற்றும் ஈட்டி உள்ளிட்ட அழியும் தருவாயில் உள்ள தாவரங்களை கண்டறிந்து, திசு வளர்ப்பு முறையில் உற்பத்தி செய்யப்படும்" என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நன்றி:- தினமலர்

Kannan Natarajan

unread,
May 12, 2009, 6:17:57 PM5/12/09
to minT...@googlegroups.com
வெள்ளியங்கிரி மலையில் சுற்றுச்சூழல் பாதுகாக்க துணி-பை வினியோகம்.

ஈஷா யோகா மையம் பசுமைக்கரங்கள் திட்டத்தில், 7,000 துணி-பை வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

(தமிழகத்தில்) "தென்கயிலாயம்" என பக்தர்களால் போற்றப்படும் வெள்ளியங்கிரி மலை, மேற்கு தொடர்ச்சி மலையின் அடர்ந்த வனப்பகுதிகளில் ஒன்றாக திகழ்கிறது.

வெள்ளியங்கிரி மலைக்கு ஆண்டுதோறும் மகாசிவராத்திரி முதல் சித்திரை மாதம் வரை பக்தர்கள் தரிசனத்திற்காக செல்கின்றனர்.

தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள், உணவுப்பொருட்களை எடுத்துச் செல்லும் பாலிதீன் பைகளை மலையிலேயே வீசிவிட்டு வருகின்றனர். இதனால், மலையின் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, வனவிலங்குகளின் உயிருக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது.

இதை தடுக்க, ஈஷா யோகாமையம், பசுமைக்கரங்கள் திட்டம் மூலமாக வெள்ளியங்கிரி மலையில் உள்ள  பாலிதீன் பைகளை அகற்றும் பணியை கடந்த 2002ம் ஆண்டு முதல் செய்கிறது. இதுவரை, பாலிதீன்  குப்பை  300 டன் அகற்றப்பட்டுள்ளது. மேலும், வெள்ளியங்கிரி மலைக்கு பாலிதீன்  பொருட்களை எடுத்துச் செல்வதை தடுக்க, மலை அடிவாரத்திலேயே இலவசமாக துணிப்பை  வினியோகம் செய்யப்படுகிறது.

இந்த ஆண்டு சித்திரை 1ம் தேதி, 7,000 துணிப்பை வினியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், மே.3ம் தேதி, பசுமைகரங்கள் திட்டத்தில் தன்னார்வத் தொண்டர்கள் குழு, வெள்ளியங்கிரி மலையில் உள்ள பாலிதீன் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சித்ரா பவுர்ணமியை ஒட்டி இன்றும் அதிக அளவில் பக்தர்கள் மலைக்கு செல்வதால் 12 ஆயிரம் துணிப்பைகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

ஜூன் மாதத்தில் பசுமைக்கரங்கள் திட்டத்தின் தன்னார்வத் தொண்டர்கள் ஏழு குழுக்களாக சென்று வெள்ளியங்கிரி மலையின் ஏழு மலைகளிலும் உள்ள பாலிதீன் குப்பைகளை அகற்றவுள்ளனர்.

Narayanan Kannan

unread,
May 12, 2009, 6:41:38 PM5/12/09
to minT...@googlegroups.com
ஆகா! வெள்ளியங்கிரி சென்றுள்ளேன். அந்த தியான மையம்! ஆகா!

சென்றமுறை இந்தியா சென்ற போது மைசூர் சாமுண்டீஸ்வரி கோயிலுக்குப் போனேன்.
அந்த மலை முழுவதும் Plastic free zone. என்ன சுத்தமாக இருந்தது தெரியுமா?
நான் சிறுவனாக இருந்த காலத்தில் ஏது பிளாஸ்டிக்? நாங்களெல்லாம்
துணிப்பைதான் தூக்கி அலையோம். கல்லூரி நாட்களில் கூட ஒரு ஜோல்னா பை
போட்டுக்கொண்டு போனால் `அறிவுஜீவி` என்று பொருள். இப்போது இவையெல்லாம்
போய் `கருப்பு` பிளாஸ்டிக் பை. இப்பழக்கம் ஒழிந்தால் மிக நல்லது.

இந்தியாவை சுத்தமாக வைத்துக்கொண்டால் அது சொர்க்கமல்லவோ!

க.>

2009/5/13 Kannan Natarajan <thar...@gmail.com>:

Narayanan Kannan

unread,
May 13, 2009, 12:18:42 AM5/13/09
to மின்தமிழ்
=============================

Down to Earth - Editorial: The challenge of the chulha
(By Sunita Narain)

=============================
About 24 years ago, I was in a house in a small village some distance
from Udaipur town in Rajasthan. A government functionary was
explaining how an improved chulha (cookstove) worked - they had
installed it in the kitchen. At that time, India was waking up to
forests being devastated. It was believed then (wrongly, as it turned
out) the key reason was poor people cutting trees to cook food. It was
also being understood smoke from chulhas was carcinogenic and that
women were worst hit by this pollution. The answer was to design
improved chulhas - for better combustion and with a chimney.

The woman owner of this improved stove was cooking the day’s meal. I
asked if she was happy with what science and government had donated to
her. Her answer was simple: “Looks good, does not work. I modified
it.” Her problem was that, in this area, women cooked gruel on big
utensils. Her home-made original stove was fitted to her diet and her
utensils. The improved chulha, with its small opening to streamline
the fire, was of little use. When the chulha was designed, nobody
asked her what she needed. Nobody explained to her the laws of
thermodynamics, so that she could fathom why the stove looked and
worked as it did. And nobody was there who could repair or reshape her
cookstove. She had simply broken the opening to fit her needs.
Carefully calculated combustion in the laboratory of the local
university and delivered through a government programme had turned to
hot air.

I learnt my most valuable lesson that day. Designing technologies for
diversity and affordability is much more complex than sending a man to
the moon.

Consider the government’s own statistics. By 1994, some 15 million
improved chulhas were introduced across the country. A survey by the
National Council of Applied Economic Research found, in many cases,
the stoves were not appropriately designed or had broken with use;
over 62 per cent of the respondents said they did not know who to
contact for repairs. No surprise here. Technology deployment in poor
and unserviced households is a job the market does badly.

But why am I discussing this moment of development history? Well,
cookstoves are back. This time, on the world stage. Science has
discovered black carbon - soot - is a key contributor to climate
change; these particles warm the air; when they settle on glaciers,
the latter melt. So now, soot from chulhas poor households use -
burning wood, twigs and cowdung - stands indicted for climate change.
A bill has been introduced in the US Congress requiring the country’s
environment protection agency to regulate black carbon and direct aid
to black carbon reduction projects abroad, including introducing
chulhas in some 20 million homes.

I don’t dispute the science of black carbon. There is no reason to
argue nothing should be done to improve and substitute the polluting
and noxious chulhas of the poorest. The problem is not in the intent.
The problem is in the ‘why’ and the ‘what needs to be done’. Today,
the international community sees these chulhas as an easy solution: 18
per cent of the problem comes from these implements, so replace them.
Here’s a quick and simple climate fix: creating space for cars and
power stations to continue to pollute. Also, the international
community is today equating this ‘survival’ emission - of poor people
with no alternative but to walk long distances to collect firewood,
sweep the forest floor for leaves and twigs and do backbreaking work
to collect and dry cow -dung, all for some ‘oil’ to cook their food -
with the ‘luxury’ emissions of you and I, who drive to work and live
in air-conditioned comfort.

This distinction is necessary. For policy and action. Otherwise, an
important opportunity - provided to us by the poorest in the world -
to reduce emissions in the future will be lost. Lost, once again, to
the ignorance of the international community regarding how the other
half lives and the arrogance of powerful polluters. Let us be clear:
the poorest of the world, who use polluting chulhas because they
cannot afford commercial fossil fuel, provide us the only real space
today to avert climate change.

According to 2006 International Energy Agency data, roughly 13 per
cent of the world’s primary energy supply can be classified as
‘renewable’. Of this, new renewables - solar, wind, geothermal and
cogeneration - make up just about 4 per cent and hydroelectricity 16
per cent. The bulk - 80 per cent - of what is renewable comes from
biomass burning, from the very chulhas of poor families. It is these
families, living on the margins of survival, already vulnerable to
climate change impacts, that are in the renewable energy net. They are
not the problem. They are the solution to our excesses.

The energy trajectory is such that these families, when they move out
of poverty, will also move out of cooking on this biomass stove. They
will walk up the fossil fuel stairway to liquid petroleum gas (LPG).
Every time they move away, as they must, one less family will be using
renewable energy; one more, like you and me, will begin polluting with
long-life greenhouse gas emissions. The difference is black soot
pollutes locally - it literally kills the women who cook - but has a
relatively short life in the atmosphere. So, unlike carbon dioxide, it
disappears in a few weeks.

The poorest, therefore, provide the world the perfect opportunity to
leapfrog - they can move from using renewable energy, currently
polluting, to using more renewable energy, but which is clean for them
and the world. It is this objective that must drive our efforts, not a
plan to pick on the poorest so we can continue to pollute.

This is not easy. It will not be cheap. Science now must invent that
cheap, biomass-based chulha that can be sold, distributed and used in
millions of diverse households across the world. Are we up to the
challenge?

Read this editorial online: http://www.downtoearth.org.in/cover_nl.asp?mode=1
To comment, write to c...@equitywatch.org

Kannan Natarajan

unread,
May 14, 2009, 5:40:56 AM5/14/09
to minT...@googlegroups.com
மாற்றத்திற்கு தயாராகும் மதுரை மாநகராட்சி கழிவுநீர் பண்ணை!

மதுரை மாநகராட்சியின் கழிவுநீர் பண்ணை மற்றும் குப்பை கிடங்கு உள்ள அவனியாபுரம் நகராட்சியில் உள்ள வெள்ளக்கல் மாற்றத்திற்கு தயாராகி வருகிறது.

அவனியாபுரம் நகராட்சியின் 15வது வார்டில் உள்ளது வெள்ளக்கல். பிரிட்டிஷ் ஆட்சியின்போது மதுரையில் தேங்கிய கழிவுநீர், பெரிய குழாய்களில்,
  • வில்லாபுரம்
  • அவனியாபுரம்
வழியாக வெள்ளக்கல்லிற்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு, பல ஏக்கர்களில் புல், கீரை, காய்கறிகள் வளர்ப்பிற்கு பயன்படுத்தப்பட்டது.

மீதமுள்ள தண்ணீர் தனியார் விவசாயத்திற்கும் பயன்பட்டது.  வெள்ளக்கல்லிலேயே பிரிட்டிஷ் அதிகாரி தங்கி தோட்டப் பராமரிப்பு பணிகளை கவனித்தார். இதற்காக உசிலம்பட்டியிலிருந்து ஆட்கள் சென்றனர். அவர்களில் சிலரது குடும்பத்தினர் இன்றும் வெள்ளக்கல்லில் உள்ளனர். 

சுதந்திரத்திற்கு பின், 1952ல் புல்பண்ணை விஸ்தரிப்பு திட்டத்தை அப்போதைய விவசாய அமைச்சர் நாகன்ன கவுடர் துவக்கினார். புல் வளர்ப்பில் நல்ல வருமானம் மாநகராட்சிக்கு கிடைத்தது. இது தவிர கழிவுநீர் சுத்திகரிக்கும்போது, தேங்கும் கழிவுகளும் விவசாய நிலங்களுக்கு உரமாக பயன்படுத்தப்பட்டன. இதன் மூலம் வருமானம் வந்தது. தற்போது சுத்திகரிப்பு பணி நிறுத்தப்பட்டு, கழிவுநீர் அப்படியே பயன்படுத்தப்படுகிறது. இந்த தண்ணீரை நம்பியிருந்த தனியார் விவசாய நிலங்களில் புல் மட்டுமே வளர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சாக்கடை தண்ணீர் தேங்குவதால் புல் அறுக்கும்போது விவசாயிகளுக்கு கால்களில் புண்கள் ஏற்பட்டன. கொசு, ஈ, நாய்கள் தொல்லை இங்கு அதிகம். இப்பகுதி மக்கள் தொற்றுநோயால் அவதிப்படுகின்றனர்.

சாக்கடைக்கும், குப்பைக்கும் பெயர்போன துர்நாற்ற வெள்ளக்கல்லில் மாற்றத்திற்கான பணிகள் நடந்து வருகின்றன.

மதுரையிலிருந்து வெள்ளக்கல் வரும் கழிவுநீரை சுத்திகரித்து துர்நாற்றம் இல்லாமல் விவசாயத்திற்கு பயன்படுத்த திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. தனியார்  நிறுவனத்தினர் வெள்ளக்கல்லில் முகாமிட்டு மாநகராட்சி அதிகாரிகளின் மேற்பார்வையில் செய்து வருகின்றனர்.

சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை பயன்படுத்தலாம் என்பதால் விவசாயிகள் இத்திட்டம் முடிவதை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். திட்டம் செயல்பட துவங்கினால், அவனியாபுரத்தில் வரும் காலத்தில் கொண்டுவரப்பட உள்ள பாதாள சாக்கடை திட்டத்தின் கழிவுநீர் வெள்ளக்கல்லிற்கு செல்லும். மாதம் சில இலட்சம் ரூபாயை  அவனியாபுரம் நகராட்சி, மதுரை மாநகராட்சிக்கு செலுத்தும். இதன் மூலம் மாநகராட்சிக்கு வருமானம் கிடைக்கும்.

நன்றி: தினமலர்

Narayanan Kannan

unread,
May 14, 2009, 5:48:21 AM5/14/09
to minT...@googlegroups.com
இவர்கள் அப்படியே ஒரு நடை சோல் (Seoul) வந்து போனால் வழி கிடைக்கும்.
சோல் நகர் வழியாக ஓடிய பழைய கால்வாயை மிக அழகிய முறையில் சுத்திகரிப்பு
செய்து இப்போது நகர்நடு பூங்காவாக்கியிருக்கினர். பெரிய நாணல் போன்ற
புல்வகை இயற்கையாக சுத்திகரிக்கும் தன்மையது. சிவா ஏரி என்று ஒன்றுள்ளது.
அங்கு இப்படியான பெரிய சுத்திகரிப்பு இயற்கையான முறையில் சாத்தியப்பட்டு,
அங்கும் பெரிய இயற்கைப் பூங்கா நிருவியுள்ளனர்.

மலேசியாவில் புத்ரஜயா எனுமிடத்தில் இப்படியானதோர் கழிவு சுத்திகரிப்பு
முயற்சி நடந்துவருகிறது. மனமிருந்தால் மார்க்கமுண்டு.

மதுரை மீண்டும் தன் பழைய பொலிவைப் பெற வாழ்த்துக்கிறேன்.

க.>

2009/5/14 Kannan Natarajan <thar...@gmail.com>

karth...@gmail.com

unread,
May 14, 2009, 9:52:33 AM5/14/09
to மின்தமிழ்
பார்க்க முயன்றபோது இறங்குவதற்கு வெகுநேரம் எடுத்தது.

மீண்டுமொரு முறை ம்யற்சி செய்து பார்க்கிறேன்.

ரெ.கா.

Narayanan Kannan

unread,
May 14, 2009, 10:03:22 AM5/14/09
to minT...@googlegroups.com
It works alright for me.
Never miss it!

http://www.vimeo.com/4072088

2009/5/14 karth...@gmail.com <karth...@gmail.com>:

Kannan Natarajan

unread,
May 15, 2009, 6:51:34 PM5/15/09
to minT...@googlegroups.com

கபாலீஸ்வரர் கோவில் குளத்து மீன்கள் காப்பாற்றப்படுமா?

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் குளத்தில் பக்தர்கள் மூலம் உணவாக போட்ட பொரியும், ரொட்டித் துண்டுகளுமே மீன்களுக்கு எமனாகி விட்டது. மீன்கள் செத்துவிடாமல் காக்க, "பெடல் வீல் ஏரேட்டர்" இயந்திரத்தை பயன்படுத்தியிருந்தாலே மீன்கள் செத்து மிதந்திருக்காது, என்று மீன் வளர்ப்பு ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள வரலாற்று சிறப்பு பெற்ற கபாலீஸ்வரர் கோவில் குளத்திற்கும், அருகில் உள்ள சித்திரை குளத்திற்கும் அடையார் ஆற்றிலிருந்து தண்ணீர் வரும் வகையில், கடந்த காலங்களில் வாய்க்கால் வசதி செய்யப்பட்டிருந்தது.  தெப்ப உற்சவத்திற்கு ஏதுவாக அமைந்துள்ள இக்குளத்து நீர் மாசுபடாமல் இருக்க, நவபாஷான கற்கள் குளத்தின் கீழ்பகுதியில் புதைக்கப்பட்டன. இக்குளத்து நீரை தான் சுவாமிக்கு அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுக்கும் பயன்படுத்தி வந்தனர்.

காலப்போக்கில் இப்பகுதியில் வீடுகள் அதிகளவில் கட்டப்பட்டதால், இக்குளத்திற்கு வரும் கால்வாய்கள் சிதிலமடைந்து  இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. இதனால், இக்குளத்திற்கு நீர் நிரப்ப வேண்டுமெனில் மழையைத் தான் பெரிதும் எதிர்பார்க்க வேண்டியுள்ளது.

மழைபெய்யாத காலங்களில் கோவில் குளத்திற்கு தண்ணீர் வர வாய்ப்பில்லாததால் பாசி படர்ந்தும், ஆங்காங்கே தூர்ந்தும் போகிறது. கோவில் திருவிழாவின் போது தெப்ப உற்சவம் நடத்த, மெட்ரோ வாட்டர் நிர்வாகம் மூலம் குளத்தில்  தண்ணீர் நிரப்பப்பட்டு  வந்தது.  அ.தி.மு.க., ஆட்சியின் போது மழை நீர் சேகரிப்பின் மூலம் இக்குளத்தில் நீர் நிரப்ப ஏற்பாடு  செய்யப்பட்டது. கோவிலை சுற்றியுள்ள மாட வீதிகளிலிருந்து பெய்யும் மழைநீர், குளத்திற்கு வர வழி செய்யப்பட்டது.  குளத்திற்கு நீர் வரத்து இருந்ததால் மீன்களும் வளர்ந்தன. பக்தர்கள் மீன்களுக்கு பொரி மற்றும் ரொட்டித் துண்டுகளை மீன்களுக்கு போடுவதால், அவற்றை சாப்பிட்ட பின் மீதமுள்ள உணவுகளால் குளத்து நீர் மாசடைந்து  வந்தது.  இதை கோவில் ஊழியர்கள் கண்காணித்து, பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட போதிலும், கடந்த மாதம் 11ம் தேதி முதல் மயிலை கோவில் குளத்தில் மீன்கள் செத்து மிதந்தன.

இது குறித்து கோவில் துணை ஆணையர் தேவேந்திரன், குளத்தில் போதுமான ஆக்சிஜன் கிடைக்காததால் மீன்கள் செத்தன.
  • கோடை வெயிலால் மதிய நேரங்களில் தண்ணீர், வெந்நீராகி விடும் நிலை உள்ளது. இதனாலும் மீன்கள் இறந்திருக்கலாம்
  • பங்குனித் திருவிழாவுக்கு வந்த பக்தர்கள் குளத்து மீன்களுக்கு போட்ட பொரி, ரொட்டித் துண்டுகள் போன்ற உணவுகளை அதிகமாக சாப்பிட்டதால் செரிமானமின்றியும் மீன்கள்  இறந்திருக்கலாம்
என்று கூறியிருந்தார்.

ஆனால், உரிய பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படாததே மீன்கள் செத்து மிதக்க காரணம் என்று பக்தர்கள் குறை கூறுகின்றனர்.

குளத்து நீர் மாசடைந்தது தெரிந்ததும் மீன்வளத் துறையின் ஆலோசனையை பெற்று நடவடிக்கை எடுத்திருக்கலாம். எதுவுமே செய்யாமல், நீர் இறைக்கும் மோட்டார் பம்ப்பை பொருத்தி நீரை சுழற்சி மட்டுமே செய்துள்ளனர்.



http://img.dinamalar.com/data/images_news/tbltnsplnews_73577082158.jpg

ஆனாலும், மீன்களுக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்காமல் தினமும் செத்து மிதக்கின்றன.

இது குறித்து மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,வீடுகளில் தொட்டியில் மீன் வளர்க்கிறோம். அதற்கு ஆக்சிஜன் கிடைக்க சிறிய இயந்திரத்தை பொருத்துகிறோம். அதுபோல் தேங்கும் தண்ணீரில் மீன் வளர்ந்தால் அதற்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்க "பெடல் வீல் ஏரேட்டர்" என்ற இயத்திரத்தை காலை, மாலை வேளைகளில்  இரண்டு மணி நேரம் இயக்கினாலே போதுமானது. "இதன் மூலம்  மீன்களுக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்கும்.  குளத்தில் கழிவுநீர் கலந்ததால் குளத்தில் பாசிகள் படர்ந்து, இரவு முழுவதும் தண்ணீரில் ஆக்சிஜனை முழுமையாக உறிஞ்சிவிடுகிறது. 

இதனால் பகலில் சுவாசிக்க போதுமான ஆக்சிஜன் மீன்களுக்கு கிடைக்காமல் செத்து மிதக்கின்றன, என்றார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை: "கோவில் குளத்தில் மீன்கள் வளர்க்கும் போது மீன்களுக்கான உணவுகளை கோவில் நிர்வாகமே பாக்கெட் செய்து வினியோகித்திருந்தால், நிர்வாகத்திற்கும் நிரந்தர வருமானம் வரும், குளத்து மீன்களும் சாகாமல் பிழைத்திருக்கும்."

இதுபோன்ற சம்பவம் மேற்கொண்டு தொடராமல் இருக்க கோவில் நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செத்த மீன் எந்த இனம்?

மயிலை குளத்தில் செத்த மீன்கள் "கிளாரிடே" என்ற இனத்தைச் சேர்ந்தது. இந்த மீன்கள் மற்ற மீன்களை உண்டு வாழக்கூடியது. தமிழில் "கெளுத்தி மீன்" என்றும், ஆங்கிலத்தில் "கேட் பிஷ்" என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கெளுத்தி மீன் எட்டு மாதத்திலேயே 10 அங்குல அளவுக்கு வளர்ந்துவிடும். மக்கள் சாப்பிடக் கூடிய மீன் வகை தான். இந்த கெளுத்தி மீன்,

  • ஆப்ரிக்கா
  • இந்தியா
  • சிரியா
  • தென்கிழக்கு ஆசிய நாடுகளில்
வளர்கின்றன.

நன்றி: தினமலர்

karth...@gmail.com

unread,
May 15, 2009, 10:01:44 PM5/15/09
to மின்தமிழ்
இவ்வளவு கவனக் குறைவாக இருந்து இப்படி ஓர் அவலம்
நடக்கக் காரணமான கோவில் ஊழியர்கள் தண்டிக்கப்படுவார்களா?
குறைந்த பட்சம் reeducationக்கு அனுப்பலாம் இல்லையா?

முன்பு பாழடைந்து கிடந்த குளத்தை உயிர்ப்பிக்கும் நல்ல முயற்சி
இப்படி அதிகாரிகளின் திறமையின்மையால் தோற்றுப் போனதற்கு
ஒரு பின் ஆய்வு, மறுசீரமைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுமா
என்பதும் தெரியவில்லை.

ரெ.கா.

On May 16, 6:51 am, Kannan Natarajan <thara...@gmail.com> wrote:
> *கபாலீஸ்வரர் கோவில் குளத்து மீன்கள் காப்பாற்றப்படுமா?*

Kannan Natarajan

unread,
May 16, 2009, 3:44:22 AM5/16/09
to minT...@googlegroups.com
> இவ்வளவு கவனக் குறைவாக இருந்து இப்படி ஓர் அவலம் நடக்கக் காரணமான கோவில் ஊழியர்கள் தண்டிக்கப்படுவார்களா?

யாரையும் தண்டிப்பதால் இவ்வாறான நிகழ்வுகள் நிறைவடைந்து போகாது. காலத்திற்கு ஏற்ற வண்ணம், புதிய வழிமுறைகளை கடைப்பிடிப்பதற்கு ஆவனச் செய்தல் நலம் பயக்கும். அதைவிட, உள்ளூர்,வெளியூர்,வெளிநாடுகளில் வாழும் மைலைப் பகுதி தோன்றல்கள், அப்பகுதியின் குலம் மைலை குளச் சீரமைப்புத் தளம் உருவாக்கி நலம் பல வளம் சேர்க்க இனங்காணலாம்.

> குறைந்த பட்சம் re-educationக்கு அனுப்பலாம் இல்லையா?

மீண்டும் பள்ளிக்கு போகலாம், கல்வியை நாடலாம், அதோடு, சிந்தித்து மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் திறமையாகச் செயற்படலாம். கபாலீஸ்வரரை - கவலையில்லா ஈசுவரராக மற்றவர்கள் கூறுவதிற்கு முன் மீன்களுக்கு மீட்பீஸ்வரராக கருணைப் புரியவேண்டும்.

ஓம் நமச்சிவாய வாழ்க!

Tthamizth Tthenee

unread,
May 16, 2009, 4:22:00 AM5/16/09
to minT...@googlegroups.com
அரசு இயந்திரமாக இருந்தாலும் பொது மக்களாக இருந்தாலும்
முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை  உண்மையிலேயே ஆர்வம் இருப்பவர்கள்
செய்யவேண்டிய நேரத்தில் ஆவன செய்யாமல் விட்டுவிட்டு ஒருவரை ஒருவர் குறை  சொல்வதில்  என்ன பயன்..?
எல்லாவற்றையும் அரசே செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பதை விட அந்த மைலாப்பூர் கோயில் ,குளம் அருகிலிருப்போர் சற்றே கவனம் எடுத்துக்கொண்டால்  இவ்வளவு  மீன்கள்  இறந்திருக்காதே
குளமும்  சுத்தமாக இருந்திருக்கும் அல்லவா
 
நமக்கும் கடமைகள் உண்டு என்பதை நாமுணராதவரையில்
இது போன்ற நிகழ்ச்சிகள் நடந்து கொண்டே இருப்பதும் நாம் ஒருவரை ஒருவர் குரை சொல்வதும் மட்டுமே தொடரும்
 
அதனால் பயனேதுமில்லை
 
நாமும்தான் நம் நாட்டின்   வளங்களைக் காப்பதில் பங்கு கொள்வோமே
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ 

Narayanan Kannan

unread,
May 16, 2009, 4:57:49 AM5/16/09
to minT...@googlegroups.com
இதை Eutrophication என்பர். இது சகஜமாக நீர் நிலைகளில் ஏற்படுவது.

பாசிகள் அதிகம் வளர்ந்தால் உயிர்வளியை (ஆக்சிஜன்) உறுஞ்சிவிடும். இல்லை,
பாசிகளிலிருந்து வரும் சில நச்சுப்பொருட்கள் மீன்களைக் கொல்ல வல்லவை. இதை
Harmful Algal Bloom என்பார்கள். வேதிம ஆய்வு செய்து எது காரணி என்று
கண்டுபிடிக்க வேண்டும். எளிய சோதனைகள் இவை.

தேனீயார் சொல்வது போல் இதுவும் அப்பர் செய்த உழவாரப்பணி போல் தொண்டர்களே
செய்யலாம். அரசாங்கத்திற்கு தேர்தல் இருக்கிறது ;-)

க.>


மயிலாப்பூரில் உள்ள வரலாற்று சிறப்பு பெற்ற கபாலீஸ்வரர் கோவில்

karth...@gmail.com

unread,
May 16, 2009, 6:39:57 AM5/16/09
to மின்தமிழ்
ஆம், குளத்தைச் சமூகச் சொத்தாகக் கருதி அங்குள்ள நகர மக்கள்
செயல் பட்டிருக்கலாம். மார்கழியில் ஏராளமான பஜனைக் குழுக்கள்
குளிரையும் பொருட்படுத்தாமல் வீதிகளில் பாடிச் செல்வதைப்
பார்க்கிறேன். இவர்களில் ஒரு பகுதியினர் மனது வைத்தாலே இதைச்
செய்யலாம்.

ரெ.கா.

On May 16, 4:22 pm, Tthamizth Tthenee <rkc1...@gmail.com> wrote:
>>
> நமக்கும் கடமைகள் உண்டு என்பதை நாமுணராதவரையில்
> இது போன்ற நிகழ்ச்சிகள் நடந்து கொண்டே இருப்பதும் நாம் ஒருவரை ஒருவர் குரை
> சொல்வதும் மட்டுமே தொடரும்
>
> அதனால் பயனேதுமில்லை
>
> நாமும்தான் நம் நாட்டின்   வளங்களைக் காப்பதில் பங்கு கொள்வோமே
>
> அன்புடன்
> தமிழ்த்தேனீ
>

> On 5/16/09, Kannan Natarajan <thara...@gmail.com> wrote:
>
>
>

Narayanan Kannan

unread,
May 20, 2009, 6:56:31 PM5/20/09
to மின்தமிழ்
How You Can Save the Planet
By Rex Weyler, Intent

After four decades in the environmental movement, I rejoice at signs
of progress, but I also believe the pace of change remains too slow.
We – especially those privileged with daily meals and computers – need
to do more. I often struggle to reconcile realism with optimism.
Realistically, two-thirds of natural services to humankind are in
decline: depleted fisheries, extinct species, toxic pollution, soil
erosion, dying rivers, lopped-off mountain tops, melting glaciers, and
an atmosphere heating up like a flambé.

Facing these realities, my optimism comes from two sources: One,
historic achievements for civil rights, women’s rights, and disease
treatment show that we can change. Secondly, most people show
compassion and know how to enjoy rich lives with modest consumption. I
know we can achieve a richer quality of life with simpler means. To do
this, we must preserve the two elements of our world that sustain us:
the environment and our communities. We must adopt personal and social
strategies that “relocalize” society. We don’t need super-heroes, but
ordinary heroes and common decency.

Humanity requires large-scale change, but eventually, change comes
down to the daily choices and actions that make large-scale change
possible. We must act as if the age of ecological enlightenment has
arrived.

Here are some key ways we can be part of the solution:

• Stop hydrocarbon use. Walk, ride a bike or take public transport.
Urge politicians to create low-impact public transportation.

• Grow and eat local food. Dining on exotic food, wrapped in plastic
and shipped around the world with fossil fuels, is not sustainable.
Preserve local agricultural land and start a backyard or community
garden. To impress guests: serve something you grew.

• Slow consumption. We must virtually stop consuming certain products
and slow down all consumption. Shop second hand. Recycle everything.
Make global responsibility your fashion statement.

• Build community. We cannot solve the global ecological challenge as
individuals, but we can as neighborhoods and communities. Grow
compassion.

• Have courage. Challenging conventional thinking may attract
ridicule. Do not be intimidated by the consequences of having a
conscience. When one person stands up, others are inspired to stand
up. This is the multiplying power of Gandhi or Aung San Su Kyi.

• Research. To transform society toward ecological responsibility, one
must possess a genuine curiosity about how society works and how
nature works.

• Use your skills. The best way to change the world is through the
things you already know how to do and love to do. Use your skills,
knowledge, and passions.

• Practice self-reflection. Ecology asks us to be humble, not proud.
We must discover how to learn from nature.

Ordinary heroes, who practice modesty and courage, lead social change.
Committed, organized citizens have always led important social
transformation. Personal action defeats feelings of hopelessness. The
choices we make transform the world.

Kannan Natarajan

unread,
May 20, 2009, 7:26:10 PM5/20/09
to minT...@googlegroups.com
ஒரு இலட்சம் மரக்கன்று - சாதனை முயற்சியில் பெண் கைதிகள் - சிறைச்(‌‌‌சோ)சாலை தயாராகிறது!

வெளிச்சமூகத்தில் சுதந்திரமாக வாழ்வோரில் பலர், சமூக அக்கறையின்றி, சுய தேவைக்காக மரங்களை வெட்டி வீழ்த்தி வருகின்றனர். அதே வேளையில், சிறையில் இருக்கும் கைதிகளோ, சமூக அக்கறையுடன் ஒரு இலட்சம் மரக்கன்றுகளை  உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்; இந்த முயற்சி வெற்றி பெற்றால், சாதனை புத்தகத்தில் கைதிகள் இடம் பெறுவர்.

சிறை என்றதுமே, முதலில் ஞாபகத்துக்கு வருவது கைதிகளும், இலாக்கப் கெடுபிடிகளும் தான். இவை, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அடக்குமுறை கூடாரமாகவே கருதப்பட்டன. நாடு சுதந்திரம் பெற்று, மனித உரிமை பேச்சு உயிர்த்தெழுந்த பின், இலாக்கப் சித்ரவதைகள் படிப்படியாக குறைந்தன.  தற்போது, சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை,

  • இல்லவாசிகள்
  • சிறைவாசிகள்
என்றழைக்கும் அளவுக்கு கொடுமை குறைந்து அதிகாரிகள் மற்றும் ஊழியரின் அணுகுமுறை பெருமளவு மாறியுள்ளது.

அதே போன்று, கைதிகள் மத்தியிலும் மாற்றங்கள் நிகழ துவங்கியுள்ளன. சிறைக்குள் இருந்தாலும் சமூகத்துக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணம், கைதிகள் மனதில் விதைக்கப்பட்டு, அதற்கான பணிகள் துவங்கியுள்ளன.

பசுமைச் சூழல்:- வனப்பகுதி அழிக்கப்படுதல், இயற்கைக்கு மாறான சமூக பொருளாதார சூழல் ஆகியவற்றால் புவி வெப்பமடைதல் தீவிரமாக நடக்கிறது. எதிர்கால சந்ததியினருக்கு பேரழிவு ஏற்படுத்தும் புவி வெப்பமடைதலை தடுக்கும் முயற்சிகளில் மரம் வளர்ப்பும் ஒன்று. அதற்கான பணியில், கோவை மத்திய சிறையிலுள்ள பெண் கைதிகள் ஈடுபட்டுள்ளனர். ஒரு இலட்சம் மரக்கன்றுகளை தயார் செய்து பள்ளி, கல்லூரிகளுக்கு வழங்குவதற்கான பணிகள் முழு வீச்சில் நடக்கிறது.

தினமும் 50க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் பாக்கெட்டில் விதையூன்றி மரக்கன்று வளர்த்தல், தண்ணீர் தெளித்து பராமரித்தல் பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த மூன்று மாதத்தில் மட்டும் 16 ஆயிரம் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு, வினியோகத்துக்கு தயாராக உள்ளன.

"கைதிகள் என்றால் சிறைக்குள் கம்பி எண்ணுவோர்" என்ற தவறான எண்ணத்தை மாற்றி, சமூக மாற்றத்துக்கான சேவகர்கள் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளனர்.

தினமும் காலையில் "இலாக்கப்"பில் இருந்து விடுவிக்கப்படும் பெண் கைதிகள், அன்றாட சுய தேவைகளை நிறைவேற்றிய பின், தோட்டத்துக்கு சென்று பசுமை வளர்ப்பில் ஈடுபடுகின்றனர். இதன் மூலம், "குற்றவாளிகள்" என்ற கறையை, துடைத்தெறியும் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.


2,000
மரங்கள் பராமரிப்பு:
-

மத்திய சிறை வளாகத்தில்,
  • சந்தனம்
  • வேம்பு
  • அரசமரம்
  • ஆலமரம்
  • புங்கை மரம்
  • புளியமரம்
  • சீமை அகத்தி
  • வில்வம்
  • மாமரம்
உள்ளிட்ட 32 வகையான 2,000 மரங்கள் உள்ளன.

ஆரம்ப காலத்தில் இந்த மரங்களில் இருந்து தினமும் 2,000 கிலோ வெட்டி எடுக்கப்பட்டு, கைதிகளுக்கு உணவு தயாரிக்க விறகாக பயன்படுத்தப்பட்டு வந்தது.

பசுமைச்சூழல் திட்டம் அமல்படுத்தப்பட்ட பின் விறகுக்காக மரங்கள் வெட்டப்படுவது அடியோடு நிறுத்தப்பட்டது. மாற்று எரிபொருளாக தினமும் 300 - 400 கைதிகளின் தேவைக்காக ஆழ்துளை கிணறு மூலமாக தினமும் ஆறு இலட்சம் இலிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது; வெளியிலிருந்து 70 ஆயிரம்  இலிட்டர் குடிநீர் வாங்கப்படுகிறது. துணி துவைக்க, குளிக்க என கைதிகளால் தினமும் உபயோகப்படும் தண்ணீர் இதற்கு முன், சாக்கடையில் கலந்து வெளியேறியது. தற்போது, உபயோகப்படுத்தப்பட்ட தண்ணீர், வாய்க்கால் மூலமாக மரம், செடிகளுக்கு பாய்ச்சப்படுகிறது. இதனால், சிறைவளாகத்திலுள்ள 2,000 மரங்கள் பசுமை துளிர்த்து வளர்ந்துள்ளன. 

உயர்ந்தது நிலத்தடி நீர்:- மத்திய சிறையில் மேலும், 100 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேமிப்பு தொட்டியின் பயனாக, சிறை வளாக நிலத்தடி நீர் உயர்ந்து, "போர்வெல்"கள் நிரம்பி வழிகின்றன. கிலோ சமையல் எரிவாயு மூலம், கைதிகளுக்கு உணவு தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம், மரங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. 

சிறைப்பறவை அதிகரிப்பு:- சிறை வளாகத்தில் பசுமைச்சூழல் அதிகரித்திருப்பதால் எண்ணற்ற பறவையினங்கள் முகாமிட்டுள்ளன. சமீபத்தில், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரும், இயற்கை ஆர்வலர்களும் நடத்திய ஆய்வில் மத்திய சிறை வளாகத்தில்,

  • வவ்வால்
  • மயில்
  • கவுதாரி
  • குயில்
  • செம்போத்து
  • கிளி
  • நாரை
  • தேன் சிட்டு
உள்ளிட்ட மேலும் பல இன பறவைகள் முகாமிட்டிருப்பது தெரியவந்தது.

சமீபகாலமாக மயில், குயில்களின்  எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

சிறைச்சாலை என்றாலே கம்பிகளும், துன்புறுத்தும் கொட்டடி இலாக்கப்புகளும் தான் நினைவுக்கு வரும் என்ற நிலையை மாற்றி, பசுமைச் சூழலை கண்முன் நிறுத்தும் முனைப்பில், கைதிகள் அன்றாட உழைப்பை செலுத்தி வருகின்றனர்.  வெளிச்சமூகத்தில் சுதந்திரமாக வாழும் பலர் சமூக அக்கறையின்றி மரங்களை வெட்டி வீழ்த்தும் நிலையில், "உள்ளே இருந்தபடி" மரம் வளர்த்து சமூகத்துக்கு கைதிகள் ஆற்றும் சேவை ஆறுதல் அளிக்கிறது.


சிறை டி.ஐ.ஜி.,கோவிந்தராஜன் கூறியதாவது:- சிறைச்சூழலை பசுமையாக்கும் திட்டத்தின் அடுத்த கட்டமாக, ஒரு ஏக்கரில் "தமிழ்ச்சோலை" என்ற பூங்கா அமைக்கவுள்ளோம். 
  • தமிழர் வீரம்
  • விவசாயம்
  • வாழ்க்கை
உள்ளிட்ட தன்மைகளை வெளிப்படுத்தும்,
  • குறிஞ்சி
  • முல்லை
  • மருதம்
  • நெய்தல்
  • பாலை
என ஐந்து வகையாக நிலத்தில் வளரக்கூடிய மரங்களை நடவுள்ளோம்.

சமூக மேம்பாட்டு பணியில், தமிழர் பண்பாடு குறித்தும் கைதிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்ச்சோலை அமைக்க திட்டமிட்டுள்ளோம். டி.ஜி.பி.,யிடம் அனுமதி பெற்றதும் இதற்கான பணிகள் துவங்கும். தமிழகத்தில் உள்ள மத்திய சிறைதோறும், திறந்தவெளிச் சிறை அமைப்பது குறித்து சிறைத் துறை டி.ஜி.பி., பரிசீலித்து வருகிறார்.

இதன் மூலம், சிறைவளாகங்களில் விவசாயம் உயர்ந்து பசுமைப் பிரதேசமாக மாறும். கோவை மத்திய சிறையில் ஒரு இலட்சம் மரக்கன்றுகள் உருவாக்கும் முயற்சி நிறைவு பெறும் போது, "இலிம்கா" சாதனைப் புத்தகத்தில் இடம்பெறும்; அதுவே, உழைப்பை செலுத்திய கைதிகளுக்கு கிடைக்கும் கவுரவம்.இவ்வாறு கோவிந்தராஜன் தெரிவித்தார்.

நன்றி: தினமலர்

நா.கண்ணன்

unread,
May 20, 2009, 8:57:42 PM5/20/09
to மின்தமிழ்
மிகவும் மகிழ்ச்சியளிக்கும் சேதி.

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது!
இதுவொரு நல்ல தொடக்கம். வாழ்க.

க.>

On May 21, 8:26 am, Kannan Natarajan <thara...@gmail.com> wrote:
> *ஒரு இலட்சம் மரக்கன்று - சாதனை முயற்சியில் பெண் கைதிகள் - **சிறைச்(‌‌‌சோ)சாலை

Narayanan Kannan

unread,
May 21, 2009, 12:50:06 AM5/21/09
to மின்தமிழ்
[EDITORIAL] Climate: A hot issue

The third meeting of mayors from around the world committed to taking
action against climate change, C40 Large Cities Climate Summit Seoul,
comes to a close today with the adoption of the Seoul Declaration.

Climate change, once dismissed by many as bugaboo promoted by
scientists, has become a hot issue gripping the attention of the
general public as well as world leaders. In his key-note speech at the
summit, Bill Clinton, a former U.S. president and the founder of the
Clinton Climate Initiative, warned that the world could face fatal
situations if we cannot reduce greenhouse gases by 80 percent by 2050.

While state-level actions are important, efforts to battle climate
change at the city-level are also crucial because cities produce the
lion's share of emissions. In fact, the largest cities around the
world consume 75 percent of world's energy and produce 80 percent of
its greenhouse gases. The forecast that most of the world's delta
regions - home to many metropolises - are directly threatened by
climate change surely adds to the sense of urgency felt by the mayors
and delegates from the 80 cities that gathered in Seoul.

The Seoul metropolitan government has been stridently promoting green
values and a green lifestyle that will result in the reduction of
carbon emissions. In 2007, it issued the "Eco-Friendly Energy
Declaration," an ambitious plan to reduce energy consumption by 12
percent, compared to 2000, by the year 2010. The plan also envisions a
15 percent reduction by the year 2020.

However, statistics show that energy consumption has been rising
annually, putting Seoul further behind its goal with each passing
year. The plan to reduce greenhouse gas emissions suffers from the
same problem. The goal of reducing greenhouse gas emissions by 20
percent from the 1990 level by 2010 seems all but impossible at this
point. Barring some drastic change in the energy consumption trend,
the 25 percent reduction goal by 2020 also seems unfeasible. Clearly,
the Seoul metropolitan government needs to review its goals soon and
make adjustments for the plan to have any effect.

One area where the city may still meet its goal is in the utilization
of renewable energy. As of 2007, renewable sources, such as solar
energy, accounted for 1.1 percent of all energy consumption in the
city. The Seoul metropolitan government is optimistic that it will be
able to meet the 2 percent goal by next year. The recent completion of
the city's first hydrogen fuel cell power plant is an important step
in the expanded use of alternative forms of energy.

Seoul Mayor Oh Se-hoon - who came to stardom as a lawyer when he took
on a case involving apartment residents' right to sunlight - is a
staunch advocate of environmental causes. However, some recent city
hall initiatives, such as Hangang Renaissance project that aims to
transform the Han riverbanks into a series of parks, have been
criticized for damaging the environment.

The fact that Seoul is leading the way in taking action against
climate change is laudable. However, the city government must make
sure that its various goals and grand projects are more than mere
showcases.

2009.05.21
The Korea Herald

Narayanan Kannan

unread,
May 22, 2009, 12:25:03 AM5/22/09
to மின்தமிழ்
Make Combating Climate Change a Global Effort!
Target: Yvo de Boer, Executive Secretary of the United Nations
Framework Convention on Climate Change
Sponsored by: The ONE Campaign

Negotiations are taking place on a new Kyoto treaty. The focus of
those negotiations has been on limiting carbon emissions. But we need
to make sure the agreement also includes funding to help developing
countries adapt to climate change.

The United Nations Framework Convention on Climate Change meets again
in June to work toward a framework for December's critical Copenhagen
Climate Conference. And for the new Kyoto Protocol to work, every
country in the world must come together to address climate change.
That includes the world's poor, especially in sub-Saharan Africa.
Climate change is clearly not a crisis of Africa's making, yet the
consequences of global warming will disproportionately hit Africa's
poor.

Rich countries have an obligation to immediately curb greenhouse gas
emissions and help Africa avoid the worst effects of climate change.
Sign the petition to Yvo de Boer, the Executive Secretary of the
United Nations Framework Convention on Climate Change, who is chairing
the next round of negotiations in June, urging the proper funding for
all countries suffering the effects of climate change.

Expected signatures: 10,000
So far signed: 5,706

Sign this petition at:
http://www.thepetitionsite.com/takeaction/128111070?z00m=19762859

Subashini Tremmel

unread,
May 22, 2009, 4:11:46 AM5/22/09
to minT...@googlegroups.com
இந்தக் கட்டுரை மன நிறைவளிக்கும் இரண்டு விஷயங்களைப் பகிர்ந்து கொள்கின்றது. பசுமைச் சூழலில் அக்கறை உள்ள சமுதாயமாக நாம் மாற வேண்டும். பலருக்கு இது ஏனோ முக்கியத்துவமற்ற ஒரு விஷயமாகவே தோன்றுகின்றது.
கைதிகளை அடைத்து வைக்கும் கூடாரமாக இல்லாமல் அவர்களுக்கும் சமூகப் பொறுப்பினை ஏற்கும் வாய்ப்பினை அமைத்துக் கொள்ள சிறைச்சாலை உதவும் என்றால் அது எவ்வளவு பெரிய முயற்சி!  இந்த முயற்சிக்கு முன்னோடியாக இருப்பவர்களைப்  பாராட்டுவதோடு இதே போல சிறச்சாலை மட்டுமன்றி ஏனைய சமுதாய அமைப்புக்களும் பசுமை சூழலை வளர்ப்பதில் கூட்டு முயற்சியினை ஏற்படுத்த வேண்டும்.
 
-சுபா
2009/5/21 Kannan Natarajan <thar...@gmail.com>

Kannan Natarajan

unread,
May 25, 2009, 7:38:07 PM5/25/09
to minT...@googlegroups.com
தமிழகத்தில்,கடலூர் வண்டிப்பாளையம் அருகே வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் கழிவு நீர் "அப்பர்" குளத்தில் கலப்பதாக பக்தர்கள் புகார் செய்துள்ளனர்.

சிவபக்தரான "அப்பரை" கல்லில் கட்டி கடலில் வீசினர். கடலூர் பாடலீஸ்வரை போற்றி பாடியதன் விளைவாக அப்பர் கடலூர் பகுதியில் கரையேறினார் என்பது  வரலாறு. இதன் மூலம் கடலூர் பாடல் பெற்ற ஸ்தலமாக விளங்குகிறது. அப்பர் கரையேறிய பகுதியில் தற்போது அப்பருக்கும்,பக்தர்கள் மண்டபம் எழுப்பி வழிபட்டு வருகின்றனர்.மேலும் ஆண்டு தோறும் பாடலீஸ்வரர் கோவில் சித்திரை திருவிழாவின் போது "அப்பர்" குளத்தில்  உற்வசம் நடப்பது வழக்கம்.தற்போது கரையேறவிட்டக்குப்பத்தில் உள்ள "அப்பர்" குளத்தில் கழிவு நீர் கலந்து குளம் புனித தன்மை கெட்டு சாக்கடையாக மாறி வருவதாக பக்தர்கள் புகார் செய்தனர்.
http://img.dinamalar.com/data/images_news/tbltnsplnews_55023920537.jpg
இதன் காரணமாக சாக்கடை நீர் அருகில் உள்ள பொதுப்பணி துறை வடிகால்  வாய்க்காலில் திருப்பிவிடப்பட்டது.

நேற்று(25/05/09) இரவு பெய்த கனமழையின் காரணமாக அந்த பகுதியில் போடப்பட்டுள்ள வீட்டு மனை பிரிவுகளில் தண்ணீர் தேங்கி நின்றதால், அந்த வழியாக சென்ற பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வடிகால் வாய்க்காலில் செம்மண் கிராவல் போடப்பட்டு தூர்க்கடிக்கப்பட்டுள்ளது. வாய்க்கால் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் ஓடிய கழிவு நீர் மீண்டும் "அப்பர்" குளத்தில் புகுந்துள்ளது.

இது பற்றி தகவல் அறிந்த "அப்பர்" குளம் பராமரிப்பு மற்றும் வழிபடுவோர் அமைப்பினர் வாய்க்கால் ஆக்கிரமிப்பு செய்து தூர்க்கப்பட்டுள்ளது குறித்து புகார் செய்துள்ளனர். மேலும் நடவடிக்கை எடுக்காவிட்டல் போராட்டத்தில் இறங்குப் போவதாக தெரிவித்துள்ளனர்.


நன்றி:-தினமலர்

Kannan Natarajan

unread,
May 26, 2009, 5:42:37 PM5/26/09
to minT...@googlegroups.com
கடல் ஆமைகள் இனப்பெருக்கத்தை இழந்து வரும் மன்னார் வளைகுடா!

மன்னார் வளைகுடா பகுதியில் முட்டை இட முடியாமல் அரிய வகை கடல் ஆமைகளின் இனப்பெருக்கம் குறைந்து வருகின்றன. உலகில் "ரெப்டைல்" எனப்படும் ஊர்ந்து செல்லும் விலங்கின வகையை சார்ந்த கடல் ஆமைகள் 7 வகைகள் உள்ளன.
  • சித்
  • அலுங்கு
  • பெருந்தலை
  • தோணி
  • பச்சை
என 5 வகை ஆமைகள் இந்தியாவில் உள்ளன.

http://img.dinamalar.com/data/images_news/tbltopnews_54752314091.jpg

இவை இந்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் (1972) படி பட்டியல் ஒன்றில் சேர்க்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.

கடலில் பல்லாயிரம் கி.மீ., வெப்பம் மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் பயணம் செய்யும் ஆற்றல் பெற்ற கடல் ஆமைகள் இனவளர்ச்சிக்கு கடற்கரையை சார்ந்து வாழ்கின்றன. 50 முதல் 80 செ.மீ., குழியில் 100-150 முட்டைகளை ஆமை இடுகிறது. இதிலிருந்து குஞ்சுகள் வெளி வர 7முதல் 10 வாரங்கள் ஆகின்றன.

பெருந்தலை ஆமையை தவிர மற்ற வகை ஆமைகள் மட்டுமே தற்போது இந்திய கடற்கரையில் முட்டை இடுகின்றன. இதில் அதிகபட்சமாக 6 இலட்சத்துக்கு மேற்பட்ட சித் ஆமைகள் இந்திய கடற்கரைக்கு வருகின்றன.

இந்த ஆமைகள் தமிழ்நாடு, ஆந்திரா கடலோர பகுதிகள் வழியாக சென்று ஒரிசாவில் முட்டையிடுவதை வழக்கமாக கொண்டுள்ளன. தமிழ்நாட்டில்,
  • தரங்கம்பாடி - பழையாறு
  • மாமல்லபுரம் - சென்னை கடற்கரை
  • பாயிண்ட் காலிமர் - நாகப்பட்டினம்
  • திருச்செந்தூர் - கன்னியாகுமரி
கடலோரங்களிலும் முட்டை இடுகின்றன. 

இலங்கை - இந்தியா இடையே நடந்து வந்த ஆமை வணிகம் 1960ம் ஆண்டுக்கு பின் நிறுத்தப்பட்டு,
  • உணவு
  • தோல்
போன்றவற்றுக்காக மன்னார் வளைகுடா பகுதியில் கொல்லப்படுகின்றன.

இதனால் அங்கு ஆமைகள் முட்டை இடுவது குறைந்து வருகின்றன. இதையும் தாண்டி கடற்கரையில் இடப்படும் முட்டைகளை,
  • நாய்
  • நரி
போன்றவை துவம்சம் செய்கின்றன.

இப்பகுதியில் அடிக்கடி நிகழும் கடல் அரிப்பாலும் முட்டைகள் அழிகின்றன.

ஆமைகள் மீன்பிடி வலைகளில் மாட்டி இறப்பதை தவிர்க்க "டெட்" ஆமை தவிர்ப்பு உபகரணத்தை வலைகளில் பொருத்துமாறு கூறியும் யாரும் பின்பற்றாததாலும் மன்னார் வளைகுடா பகுதியில் அரிய வகை கடல் ஆமைகள் அழிந்து வருகின்றன. இதை தடுக்க கடலோர மக்களிடம் "டெட்" உபகரண விழிப்புணர்வை ஏற்படுத்த மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளை முன் வரவேண்டும்.

Kannan Natarajan

unread,
May 27, 2009, 7:29:24 PM5/27/09
to minT...@googlegroups.com
விழித்துக் கொள்ளாவிட்டால் அழிவு நிச்சயம்!

தரைமேல் காணப்படுகிற அமேசான் காடுகளின் அடர்த்தியைப்பற்றி நாம் அறிவோம்.

கடலிலும் அப்படி ஓர் அடர்த்திமிக்க பவளப்பாறைத் தொடர்கள் தென்கிழக்கு ஆசிய கடல் எல்லைகளில் உள்ளன. இந்தக் கடல் பிரதேசத்தில்தான் "குரோஷி" என்கிற வெப்ப நீரோட்டமும் உள்ளது.

நிலப்பரப்பு உயிரினங்கள் தாங்கள் உணவைத்தேடிக் கண்டறிந்து தற்காப்புக்குத் தகுந்த சூழல்களில் வாழத் தலைப்படுவது இயல்பு. அதைப் போலவே கடல்வாழ் உயிரினங்கள் கடல்நீருக்கடியில் செழித்திருக்கும் பவளப்பாறைகளை அண்டி வாழ்வதும் இயல்பு. இந்தியக் கடலிலிருந்து பசிபிக் கடல் வழியாக தென்கிழக்கு ஆசிய நாடுகளை ஒட்டிச் செல்லும் "குரோஷி" நீரோட்டப்பாதை இதற்குப் பெரிதும் துணைபுரிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

பூமி வெப்பமடைவது நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதை ஒரு கட்டுக்குள் வைத்திருந்தாலன்றி, பூவுலக உயிரினங்கள் அனைத்துக்கும் தீங்குகள் பல விளையும். இதைக் கருத்தில் கொண்டு 1990ம் ஆண்டில் எந்த அளவு கரியமிலவாயு வெளியாகியதோ அதில் 80 சதவீதத்துக்குக்கீழ் உள்ளதாக இருக்குமாறு தற்காத்து வருவது அவசியம் என்றும் அதை அனைத்து நாடுகளும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் ஜப்பான் கியோட்டாவில் நடைபெற்ற உலக நாடுகளின் உச்சிமாநாட்டில் பிரகடனமானதோடு சரி. எந்த நாடும் அதை நடைமுறைப்படுத்தவில்லை.

ஆனால் அண்மையில் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடி, கியோட்டா பிரகடனத்தை எண்ணிப்பார்க்க வைத்தது.
  • நடக்கக்கூடிய தூரத்துக்கு நடப்பது
  • முடிந்தவரை மோட்டார்பைக்குகள், கார் இவற்றுக்குப் பதிலாக சைக்கிள்களைப் பயன்படுத்துவது
  • தனித்தனி என்பதைத் தவிர்த்து பலபேர் சேர்ந்து பயணம் செய்யத்தக்க பெரிய வாகனங்களைப் பயன்படுத்துவதுமான நடத்தைகளை
ஐரோப்பிய நாடுகள் பல பின்பற்றத் தொடங்கின.

சீனாவின் ஷாங்காய் மாகாண
ரயில் நிலையங்களில் சைக்கிள்களை நூற்றுக்கணக்கில் நிறுத்திவைத்து ரயில் பயணிகள் வீடுகளுக்குச் சென்று திரும்ப அவற்றைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியது.

அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார் கார் உள்பட உலகின் பஸ், கார் உற்பத்தி நிறுவனங்கள் முடங்கிப்போயின. அரசாங்கங்களும் விழிப்படைந்தன. கரியமிலவாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு பல நடவடிக்கைகளை மக்களிடையே தற்போது செய்து வருகின்றன.

குறிப்பாக பூமிக்குள் படிந்திருக்கும் பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் நிலக்கரியை வரம்புமீறி தொடர்ந்து எரிப்பதால் வெளியாகும் கரியமிலவாயு இயல்புக்கு மாறானதான வெப்பத்தை அதிகரிக்கத் தூண்டுதலாக அமைந்துவிடுகிறது. அது நீடிக்குமேயானால், மேலே சொல்லப்பட்டிருக்கும் கடலுக்கடியில் மிளிர்கின்ற அமேசான் காடுகளைப் போன்ற பவளப்பாறைத் தொடர்களின் வளமை அழியும். 21ம் நூற்றாண்டின் கடைசியில் பூமியில் வாழும் உயிர்களுக்கு வரக்கூடிய உணவுப் பஞ்சமும் தவிர்க்க முடியாததாகிவிடும் என்று பவளப்பாறை வளம் குறித்த ஆய்வுக்குழுவின் தலைவர்
லிடாபெட் சோயிட் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனையொட்டி நாம் நமது தமிழ்நாட்டின் தற்போதைய நிலைமைகளைப் பார்ப்போம்.

நிலத்தடி நீர் தாழ்ந்து வருவதால் தோப்புகள் குறைந்து வந்துள்ளன. அன்னியச் செலாவணி ஈட்டுதல் என்பதன் பெயரால் டீ எஸ்டேட்டுகள் காடுகளைக் காலிசெய்து விரிவடைந்தன. பணக்காரர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் கூடுதலாகி அவர்களின் கோடை வாசஸ்தலங்களாகவும் மாறிவருகின்றன.இங்கு வேலைகளைச் செய்யவும் உல்லாசவாசிகளுக்குப் பணிவிடை செய்யவும் நிலப்புலத்திலிருந்து ஆள்கள் குடும்பம் குடும்பமாய் தருவிக்கப்பட்டு அங்கு குடியமர்த்தப்பட்டனர்.

விளைவு:- வனத்தின் பரப்பு சுருங்கியது. மழைவளம் குறைந்ததோடு ஊற்றுநீர் சுரந்துவந்த மலைத்தொடர்களும் வறண்டன. போதாக்குறைக்கு தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த மரங்களும் சாய்க்கப்பட்டன. எங்கும் வறண்டு போனதால், குடிநீருக்காக அலைந்து தவிக்கும் வன உயிரினங்களின் துயரங்கள் சொல்லிமாளாது.தண்ணீரைத் தேடும் யானைகள், மலைகளையும் வனங்களையும் ஒட்டியுள்ள நிலங்களில் நுழைகின்றன. தாகத்தின் உச்சகட்ட விளைவாக மான் கூட்டம் ஒன்று அண்மையில் பாசனக் கிணறு ஒன்றில் பாய்ந்து மரணத்தைத் தழுவ நேர்ந்தது.

"சனி நீராடு" என்கிறது தமிழ் இலக்கியம். மெல்ல நகரும், நடக்கும் (நடந்தாய் காவிரி என்பதுபோல) நீரில் குளித்து எழு என்பது அதன் பொருள் என்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் அ. சிவபெருமானின் விளக்கம்.

சூரியனைச் சுற்றும் ஒன்பதில் ஒன்றான சனி கோள் ஒரு தடவை சூரியனைச் சுற்றிவர இரண்டரை ஆண்டுகளாகின்றன என்பதும் மற்றவை அதைவிடக் குறைந்த காலத்திலேயே சுற்றி வருகின்றன என்பதும் வானவியல் கணக்கு. ஆக, "சனி" என்றால் "மெல்ல" என்று பொருள் கொள்ளப்படுவதாலேயே சனி நீராடு சொற்றொடர் உண்டானது.

ஆமாம்! குளிக்கின்ற மாதிரியான அந்த நீரோட்டம் இன்று வறண்டு கிடக்கின்றபோது, மற்றவற்றின் நிலையை விவரிக்கத் தேவையில்லை. அப்படி பூமியின் மேல்பரப்பில் கிடைக்கின்ற நீரைச் சுத்திகரித்து குடிநீராகப் பயன்படுத்த முடியாமல் உடல் நலத்துக்கு ஒவ்வாமை கொண்டுள்ள கனிமங்களும்
ரசாயனங்களும் செறிந்து கிடக்கும் நிலத்தடி நீரை அல்லவா தமிழகத்தின் 10 ஆயிரம் கிராமங்களில் குடிநீராக வழங்கிவிடுகின்றனர். இதில் மாசுபட்ட நீரும் அடங்கும். ஆக, குளிக்கவும், குடிக்கவுமான இயற்கையான நீரோட்டத்தை அழித்த கையோடு, கிணறு மற்றும் குழாய் நீர் பாசனம் என்பதன் பெயரால் விளை நிலங்களையும் அல்லவா இன்று உப்பளமாக மாற்றியிருக்கிறோம்.

முன்பெல்லாம் ஒரு உழவு மழையில் விதைப்பு செய்து அடுத்தடுத்து வரும் இரண்டு, மூன்று உழவு மழையிலேயே விளைந்து தள்ளிய புஞ்சை நில விளைச்சல் இன்று அற்றுப்போனதன் காரணங்களை யாரும் கண்டறியவில்லை.

"உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான்" என்பது வழக்கு. ஆம், நமது கண் மூடித்தனமான பாசன முறைகளால் விளை நிலங்களும் நிலத்திற்கடியில் இருந்த உப்பைச் சுமந்து கொண்டுவிட்டபடியால், புஞ்சைப் பயிர்களும் இன்று நான்கு, ஐந்து உழவு மழைக்கு ஏங்குகிறது.

இப்போதெல்லாம் அந்த "மும்மாரி மழை" என்பது ஏது? 

இந்த ஆண்டு தொடக்கத்தில், புவி வெப்பமடைவதைத் தவிர்க்கும் வேலைத் திட்டங்களை ஆராய்ந்த கூட்டத்தில் இந்தியாவின் பங்களிப்பு ஒன்றுமே இல்லை என்பது தகவல்.

மக்களவை முன்னாள் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி இதற்கு தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.பொதுவாக சுற்றுப்புறச் சூழல் கேட்டை படிப்படியாய்க் குறைப்பதற்கு இந்திய அரசு அக்கறை செலுத்தவில்லை. 

தொழிற்சாலை மற்றும் நகரக் கழிவுகளும், மறுசுழற்சிக்குப் பயன்படும் என்கிற விழிப்புணர்வு கொஞ்சம்கூட இல்லாத நம் நுகர்வோர் கண்ட மாதிரி வீசி எறிகின்ற பிளாஸ்டிக், தெர்மாகோல் மற்றும் மருத்துவக் கழிவுகள் விளைநிலம் மற்றும் மழைநீரை மட்டும் அல்லாமல், நிலத்தடி நீரையும் மாசுபடுத்துவதை எவருமே கண்டுகொள்ளவில்லை.

உலக நாடுகள் அனைத்தும் கவலைப்படுகின்றன. ஆபத்து நொடிக்கு நொடி அதிகரித்து வருகிறது. இப்படியே போனால் விரலால் எண்ணக்கூடிய அடுத்த சில தலைமுறைகளில் அந்த "டைம் பாம்" வெடிக்கும் அபாயம் காணப்படுகிறது.

இனியும் இந்தியா மெத்தனமாக இருந்தால் எப்படி?

மரம் வளர்ப்பதும், புகை வெளியேற்றத்தைக் குறைப்பதும் தான் ஆபத்தைத் தள்ளிப் போடும் வழிகள்.

அது தெரிந்தும் தயக்கம் ஏன்?

விழித்துக் கொள்ள வேண்டிய தருணம் இதுவே!

சி.வையாபுரி

நன்றி:- தினமணி

Narayanan Kannan

unread,
May 28, 2009, 6:53:23 AM5/28/09
to minT...@googlegroups.com
மிக நல்ல கட்டுரை!

நிறையத் தகவல்கள். அவர் பேசும் நீரோட்டம் அறிவியல் உலகில் குரோஷியோ
என்றழைக்கப்படும். ஜப்பானிய மொழியில் குரோ என்றால் கருப்பு என்று பொருள்.
இது ஆசியாவில் சுற்றும் நீரோட்டம். ஐரோப்பிய அமெரிக்க உலகங்களில்
சுற்றும் மற்றொரு பிரம்மாண்டமான நீரோட்டம் ’வளைகுடா நீரோட்டம்’

இந்திய அரசியல் பசுமை அரசியலாக வேண்டும். அதை இந்தியர்கள் செய்விக்க
வேண்டும். இந்தியாவில் விழிப்புணர்வு பெருகி வருகிறது. நினைத்தால்
எளிதாய் சாதிக்கக்கூடியவையே இவை. நமது மரபு அடிப்படையில் ‘புவியன்பு’
மரபு! நம் மரபை பல கோணங்களில் மீள்பார்வை செய்ய வேண்டிய தருணமிது!

நன்றி, க.ந.

க.>

2009/5/28 Kannan Natarajan <thar...@gmail.com>:


> இந்தியக் கடலிலிருந்து பசிபிக் கடல் வழியாக தென்கிழக்கு ஆசிய நாடுகளை ஒட்டிச்
> செல்லும் "குரோஷி" நீரோட்டப்பாதை இதற்குப் பெரிதும் துணைபுரிந்து வருவதும்
> குறிப்பிடத்தக்கது.
>>

Narayanan Kannan

unread,
May 28, 2009, 6:55:38 AM5/28/09
to minT...@googlegroups.com
2009/5/26 Kannan Natarajan <thar...@gmail.com>:

>
> இது பற்றி தகவல் அறிந்த "அப்பர்" குளம் பராமரிப்பு மற்றும் வழிபடுவோர்
> அமைப்பினர் வாய்க்கால் ஆக்கிரமிப்பு செய்து தூர்க்கப்பட்டுள்ளது குறித்து
> புகார் செய்துள்ளனர். மேலும் நடவடிக்கை எடுக்காவிட்டல் போராட்டத்தில் இறங்குப்
> போவதாக தெரிவித்துள்ளனர்.


அப்பர் பெருமான் போராடவில்லை. தொண்டு செய்யும் அடியாராக இருந்தார். அவர்
செய்தது போல் இவர்கள் ஆளுக்கொரு மண்வெட்டியைத் தூக்கினால், காரியம்
முடிந்துவிடும். போராட்டம், ஆர்ப்பாட்டம் இவையெல்லாம் அழிவிற்கு இட்டுச்
செல்லும். தப்பான வழிகளில் மக்களைப் பழக்கப்படுத்திவிட்டனர்! ம்ம்ம்..

க.>

Tthamizth Tthenee

unread,
May 28, 2009, 8:17:27 AM5/28/09
to minT...@googlegroups.com
தம் கையே  தமக்குதவி
 
நாமே முனைந்தால்தான் இனி நற்காரியங்கள் நடக்கும்,இனி யாரையும் நம்பி பயனில்லை
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 

Kannan Natarajan

unread,
May 28, 2009, 7:14:39 PM5/28/09
to minT...@googlegroups.com
(தமிழகத்தில்) திருப்பரங்குன்றத்தில் குறைந்துவரும் வெள்ளை மயில்கள்!

அரசு நிர்வாகங்களின் அலட்சியத்தால்,(மதுரைக்கு அருகாமையில் உள்ள) திருப்பரங்குன்றத்தில் உள்ள மயில்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மயில்களை பாதுகாக்கவும், போதுமான உணவு கிடைக்கவும் சரணாலயம் அமைக்க வேண்டும்.  திருப்பரங்குன்றம் மலைக்குப் பின்புறம் தென்பரங்குன்றத்தில் 300க்கும் மேற்பட்ட மயில்களும், அவற்றில் அபூர்வமான மூன்று வெள்ளை மயில்களும் உள்ளன. இவை மலை அடிவாரத்திலுள்ள கல்வெட்டு குகை கோயில் பகுதியில் பொந்துகளிலும், மரங்களிலும் வசிக்கின்றன.

தினம் காலை, மாலையில் அப்பகுதியில் மயில்கள் தோதை விரித்து ஆடும். இதை காண பக்தர்களும், சிறுவர்களும் அங்கு கூடுவர். உணவு பற்றாக்குறை: மயில்களுக்கான உணவு வசதி இல்லை. பொது மக்களால் கொடுக்கப்படும் பொரி கடலை மட்டும் உணவாக கிடைக்கின்றன. கோயிலுக்கு சொந்தமான காலி இடங்கள் கிடக்கும் புழு, பூச்சிகளை சாப்பிடுகின்றன. அவை போதுமானதாக இல்லை என்பதால் அருகில் உள்ள வயல்களுக்கு உணவு தேடிச் செல்கின்றன.

கிரிவல ரோட்டை கடந்து செல்லும் போது தென்பரங்குன்றம் பகுதியில் உள்ள நாய்கள், மயில்களை கொன்று விடுகின்றன. வாகனங்களில் சிக்கியும் இறக்கின்றன. தோகைக்காக மயில்களை வேட்டையாடும் சம்பவமும் நடக்கிறது. கோயில் நிர்வாகம் சார்பில் ஒரு பகுதியில் இரும்பு வேலி அமைக்கப்பட்டது. அதன்பின் மயில்களை வேட்டையாடுவது குறைந்தது. கோயில் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தொட்டியில் மயில்கள் தண்ணீர் குடிக்கின்றன.

முன்பு 600க்கும் மேற்பட்ட மயில்கள் இருந்த தென்பரங்குன்றத்தில் தற்போது 300க்கும் குறைவாக உள்ளன. முன்பிருந்த 5 வெள்ளை மயில்களில் தற்போது மூன்று மட்டுமே உள்ளன. போதுமான உணவு கிடைக்காததால் மயில்கள் வெளியில் செல்கின்றன. எங்கு உணவு கிடைக்கிறதோ அங்கேயே தங்கி விடுகின்றன. இதனால் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மயில்களுக்கு உணவு கிடைக்க கோயில் நிர்வாகம் சார்பில் தென்பரங்குன்றம் பகுதியில் தானிய கடைகள் திறக்க டெண்டர் விடப்படும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
http://img.dinamalar.com/data/images_news/tbltnsplnews_91973078251.jpg


சரணாலயம் அமைக்கப்படுமா?
:- மயில்களை பாதுகாக்கவும், அவைகளுக்கு உணவு கிடைக்கவும் தென்பரங்குன்றம் பகுதியில் சரணாலயம் அமைக்க வேண்டும் என தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது.

அப்போதைய கலெக்டர் ஜவஹர், "மாவட்ட நிர்வாகம், வனத்துறை, கோயில் நிர்வாகங்களின் ஆலோசனைக்கு பின் சரணாலயம் அமைக்கப்படும் என்றார்".

இன்றுவரை அதற்கான முயற்சிகள் கூட துவங்கவில்லை. அரசு நிர்வாகங்களின் அலட்சியத்தால் திருப்பரங்குன்றத்தில் மயில்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. அங்கு மயில்கள் முற்றிலும்  அழிவற்குள்ளாகவோ அல்லது இடம்பெயர்ந்து செல்வதற்குள்ளாகவோ சரணாலயம் அமைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Narayanan Kannan

unread,
May 29, 2009, 10:18:52 AM5/29/09
to மின்தமிழ்
Yes, we hate plastics! Not only is this evil material bad for our
environment, over and over again the news reports the negative effects
of plastic chemicals on our children’s health. From BPA to phthalates,
plastics are to blame for a slew of health problems.

Now, a long term study of girls living in Harlem has linked exposure
to the chemicals in plastics to childhood obesity.

Yes, plastics make kids fat, well at least there is a correlation.

Researchers at Mount Sinai Medical Center discovered that when
phthalates are absorbed into the body and act as endocrine disruptors,
obesity levels rise in mice. The East Harlem study is the first one to
link endocrine disruptors to human obesity. Dr. Philip J. Landrigan, a
professor of pediatrics at Mount Sinai, explains:

The heaviest girls have the highest levels of phthalates metabolites
in their urine. It goes up as the children get heavier, but it’s most
evident in the heaviest kids. When we say children, I’m talking about
kindergarten children, we are talking about little kids. This is a
problem that begins early in life.

“Growing Up Healthy in East Harlem” has been studying over last 10
years children’s health factors, including pesticides, diet, and
proximity to bodegas. 40% of children living in Harlem are overweight
or obese, and the study found the levels of phthalates measured in
children are significantly higher than the average levels reported by
the Centers for Disease Control and Prevention for children across the
entire United States.

Chemicals in Plastics Linked to Childhood Obesity
Veronica
http://www.care2.com/greenliving/chemicals-in-plastics-linked-to-childhood-obesity.html

Tthamizth Tthenee

unread,
May 29, 2009, 11:03:31 AM5/29/09
to minT...@googlegroups.com
உண்மைதான் ப்ளாஸ்டிக் பொருட்களால் பூமியும் மக்களும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிக் கொண்டிருக்கின்றனர் என்பது உண்மை,
 
ஆனால் இந்தப் ப்ளாஸ்டிக் குக்கு பதிலாக வேறு ஏதேனும் மாற்று மூலப்பொருள் கண்டுபிடிக்க வேண்டும்
பாதிக்காத மூலப் பொருளாக இருக்க வேண்டும்
 
இப்போது டாட்டா வின் நேனோ கார் கூட பைபெர் என்னும்  மூலப் பொருளால் தயாரிக்கப் படுகிறது
 
எங்கேனும் மோதினால் சுக்கு நூறாக உடையும் அபாயம் இருக்கிறது
 
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 

Hari Krishnan

unread,
May 29, 2009, 10:18:44 PM5/29/09
to minT...@googlegroups.com


2009/5/29 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

உண்மைதான் ப்ளாஸ்டிக் பொருட்களால் பூமியும் மக்களும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிக் கொண்டிருக்கின்றனர் என்பது உண்மை,
 
ஆனால் இந்தப் ப்ளாஸ்டிக் குக்கு பதிலாக வேறு ஏதேனும் மாற்று மூலப்பொருள் கண்டுபிடிக்க வேண்டும்
பாதிக்காத மூலப் பொருளாக இருக்க வேண்டும்
 

மறுசுழற்சி செய்யமுடியாத பழைய பிளாஸ்டிக்குகளை, இப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படாமல் தடுக்க

1) கொதிக்கும் தாரில் இவற்றை இட்டு, இந்தக் கலவையைச் சாலைகளுக்குப் பயன்படுத்த முடியுமா?

2) பெயின்ட் போன்ற வண்ணப் பொருட்களோடு இவற்றை கொதிநிலையில் கலந்து வீடுகளுக்கு வண்ணம் பூசப் பயன்படுத்திக் கொண்டால், மழைக்காலங்களில் வெளிப்புறச் சுவர்களின் மேல் படர்நது, அதன்பிறகு காய்ந்துபோய் கருப்புத் திட்டுகளாகக் காட்சியளிக்கும் பாசித் தடங்களைத் தடுக்க முடியுமா?  அப்படித் தடுக்க முடியாவிட்டாலும், கழிவு பிளாஸ்டிக்கை எப்படியோ கழித்துக் கட்ட இது உதவுமா?

யோசித்தால் இப்படிப்பட்ட பயன்பாடுகள் மேலும் கிடைக்காமல் போய்விடுமா?

--
அன்புடன்,
ஹரிகி.

Kannan Natarajan

unread,
May 29, 2009, 10:44:18 PM5/29/09
to minT...@googlegroups.com
> கொதிக்கும் தாரில் இவற்றை இட்டு, இந்தக் கலவையைச் சாலைகளுக்குப் பயன்படுத்த முடியுமா?

இயலும் போலுள்ளது!

எடுத்துக்காட்டு; சேலத்தில் சோதனை முறையில் 2002இல் 350 மீட்டர் சாலை ஒன்றை "பல்படிச் சேர்மக்கீல்"(polymer tar) துணையோடு அமைத்தனர். இவ்வாறான பல்படிச் சேர்மக்கீல் தொழில் நுட்பத்தை, மதுரை தியாகராய பொறியியல் கல்லூரியின் வேதியியல் பேராசிரியர் இரா.வாசுதேவன் வடிவமைத்தார் என்று இச்செய்தி குறிப்பிடுகிறது. (www.icpenviro.org/upload/enb9.pdf)

தமிழன்பகலா,
கண்ணன் நடராசன்

Tirumurti Vasudevan

unread,
May 30, 2009, 12:36:45 AM5/30/09
to minT...@googlegroups.com
சுமார்  ரொஉ வருடம் முன் சென்னை  ஐஐடி பேராசிரியர் ஒருவர்  கூட இதை  செய்ததாக தொலைக்காட்சியில் கூட பார்த்தேன்.
இப்படி அவ்வப்போது பல செய்திகள் வருகின்றன. அப்புறம் ஒன்றுமே நடப்பதில்லை.  ஏன்?

திவா

2009/5/30 Hari Krishnan <hari.har...@gmail.com>

1) கொதிக்கும் தாரில் இவற்றை இட்டு, இந்தக் கலவையைச் சாலைகளுக்குப் பயன்படுத்த முடியுமா?



--
My blogs: [all in Tamil]
http://anmikam4dumbme.blogspot.com/
http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text too!
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!

Tirumurti Vasudevan

unread,
May 30, 2009, 12:37:19 AM5/30/09
to minT...@googlegroups.com


2009/5/30 Tirumurti Vasudevan <agni...@gmail.com>
சுமார்  ஒரு வருடம் முன் சென்னை  ஐஐடி பேராசிரியர் ஒருவர்  கூட இதை  செய்ததாக தொலைக்காட்சியில் கூட பார்த்தேன்.

இப்படி அவ்வப்போது பல செய்திகள் வருகின்றன. அப்புறம் ஒன்றுமே நடப்பதில்லை.  ஏன்?

திவா

Narayanan Kannan

unread,
May 30, 2009, 2:12:28 AM5/30/09
to minT...@googlegroups.com
`மார்க்கெடிங்` என்று வரும் போது நம்மவர் கோட்டை விட்டு விடுகின்றனர்.
அதை அமெரிக்கரிடமிருந்தே கற்றுக் கொள்ளுகின்றனர். சந்தைத்தொழில்நுட்ப
அறிவு இன்னும் விரிவடைய வேண்டும். ஜி.டி.நாயுடு போன்ற இந்திய `தாமஸ்
ஆல்வா எடிசனை` இந்தியா கண்டு கொண்டதா? என்ன?

இந்தியாவில் அடிக்கும் வெய்யில் அவ்வளவும் சுத்தத் தங்கம்! ஆம்!
அவ்வளவும் சக்தி! காசு! ஆனால், நாம் குளிர் வசதிக்கு மின்சாரம் வாங்கி
சூழலில் கரியமில வாயுவைக் கூட்டுகிறோம். வெய்யில் சக்தியை எப்படிப்
பயன்படுத்துவது எனும் தொழில்நுட்ப அறிவில் ஜெர்மனி உலகின் முன்னோடி.
ஜெர்மனியில் வெய்யிலே அடிப்பதில்லை! (well..most of the time!).

இந்திய அறிவு வளத்தை எண்ணினால் பிரம்மிக்கிறது. ஆனால், அது செயல் வடிவம்
கொள்ள கொள்ளை ஆண்டுகள் ஆகின்றன. அடிமை புத்தி போக வேண்டும். சுய
நம்பிக்கையுடன் உலகிற்கு இவர்கள் வழிகாட்ட வேண்டும். மற்றவரின்
வழிகாட்டலுக்குக் காத்திராமல். இளைஞர் மனம் விழிக்க வேண்டும். புதிய
இந்தியா பிறக்கும். பாரதி வழக்கம் போல், மிகச் சரியாகச் சொல்கிறான், `ஒளி
படைத்த கண்ணினாய் வா! வா! வா!`

க.>

2009/5/30 Tirumurti Vasudevan <agni...@gmail.com>:

--
"Be the change you wish to see in the world." -Gandhi

v.dotthusg

unread,
May 29, 2009, 11:32:57 PM5/29/09
to minT...@googlegroups.com
வணக்கம்.
பனை மரமும் தென்னைமரமும்  கற்பக விருட்சம் என்று அழைக்கப்படுகின்றன.
தேங்காயின் கூந்தலில் நார்பகுதி சவரி என்று அழைக்கப்படுகிறது.
அந்த நார் பிரித்தெடுக்கப் பட்டு கயறாகத் திரிக்கப்படும். அப்போது கிடைக்கும் ஒரு கழிவுத்தூள் செம்மை நிறத்தில் மலையென குவிந்து நிற்கும்.
கயிற்றுத் தொழிற்சாலைகளில் ஒரு பெரும் பிரச்சினை இந்தக் கழிவுத்தூள்.
 ‘கொம்மை’ என்றும் கூறுவார்கள்.
எரித்தால் எரியாது. புகைந்துகொண்டே இருக்கும். மக்கிப் போகாது.
அதனையும் தாரில் சேர்த்து சாலைகளில் இடுவதாகவும் பேசப்படுகின்றது.
இயற்கை இப்படி ஒரு பொருளை  ஏன் படைத்திருகின்றது? புரியவில்லை. அதன் பயனை இன்றுவரை நாம் அறிந்துகொள்ள முடியவில்லை.
 
இன்று தானே ‘ஸ்டெம் செல் ’ பற்றி அறிந்திருக்கிறோம். முன்னர் அது ஒரு கழிவு என்றுதானே கூறி வந்தோம்.
 
அன்புடன் வெ. சுப்பிரமணியன் ஓம்.
 
-------Original Message-------
FREE Animations for your email - by IncrediMail! Click Here!

Narayanan Kannan

unread,
May 30, 2009, 2:34:48 AM5/30/09
to minT...@googlegroups.com
2009/5/30 v.dotthusg <v.dot...@gmail.com>:

>  ‘கொம்மை’ என்றும் கூறுவார்கள்.
> எரித்தால் எரியாது. புகைந்துகொண்டே இருக்கும். மக்கிப் போகாது.
> அதனையும் தாரில் சேர்த்து சாலைகளில் இடுவதாகவும் பேசப்படுகின்றது.
> இயற்கை இப்படி ஒரு பொருளை  ஏன் படைத்திருகின்றது? புரியவில்லை. அதன் பயனை
> இன்றுவரை நாம் அறிந்துகொள்ள முடியவில்லை.
>
> இன்று தானே ‘ஸ்டெம் செல் ’ பற்றி அறிந்திருக்கிறோம். முன்னர் அது ஒரு கழிவு
> என்றுதானே கூறி வந்தோம்.


கொம்மை பற்றி ஆராய வேண்டும். இயற்கையில் கழிவு என்பதே இல்லை. அதை
சுழற்சிக்குக் கொண்டு வரும் நுண்ணுயிர் அப்பகுதியிலே இருக்கும். நமது
microbiologist அங்கு போய் ஆய்வு செய்ய வேண்டும். உலகின் அறிவியல்
வெகுவாக நிருவனப்பட்டு போய், அதன் பாதையை சந்தைப் பொருளாதாரம்
நிர்ணயிக்கும் அபாயகரமான சூழல். அறிவியல் அவரவர் சூழல் சார்ந்து இருக்க
வேண்டும். அறிவியல் `ஆட்டு மந்தைக் கூட்டமாகி` வருகிறது!

க.>

Subashini Tremmel

unread,
May 30, 2009, 3:16:25 AM5/30/09
to minT...@googlegroups.com
திரு வெ.சுப்ரமணீயம் அவர்களே,
 
இந்த சிறிய விளக்கத்தை கொஞ்சம் விரிவாக்கி தென்னை பற்றிய மற்ற பல விஷயங்களையும் சேர்த்து ஒரு ஒலிப்பதிவாக்கி எனக்கு அனுப்பி வைத்தால் அதனை மண்ணின் குரலில் வெளியிடலாம். செய்து அனுப்ப முடியுமா?
 
அன்புடன்
சுபா

2009/5/30 v.dotthusg v.dot...@gmail.com

fonio sivakumar

unread,
May 30, 2009, 3:32:51 AM5/30/09
to minT...@googlegroups.com
நமக்கு கிடைக்கும் சூரிய சக்தி முறைப்படி பயன்படுத்தினால். நாம் கரண்ட் பில் கட்டவேண்டியதில்லை.

 ஒரு நண்பர்
 கேட்டிருந்தார் ஒரு வீட்டிற்கு தேவைப்படும் மின்சாரம் சூரியசக்தியில் இருந்து பெற கருவிகளை இந்தியாவில் தயாரித்து கொடுத்தால் நான் அதிகபப்டியாக எங்கள் நாட்டிற்க்கு வாங்கி நான் அங்கு விற்கமுடியும் என்று சொன்னார். ஆனால் அதை எப்போது யார் தயாரித்து விற்பனைக்கு கொண்டு வருவார்கள் என்று தெரியவில்லை .  இந்தியாவில் தயாரிக்கப்படும் உபகரணம் விலை மலிவு மற்றும் தரமானது என்று அவர்கள் சொல்கிறார்கள்.     
fonio



2009/5/30 Narayanan Kannan <nka...@gmail.com>

Geetha Sambasivam

unread,
May 30, 2009, 4:16:22 AM5/30/09
to minT...@googlegroups.com
பல வருடங்கள் முன்னால் குஜராத்தில் ஜாம்நகரில்  சூரிய சக்தி பயன்படுத்தப் பட்டிருக்கிறது என்பதை சொல்லும் வண்ணம் இப்போதும் அங்கே சோலேரியம் சாலை என்ற ஒன்று உள்ளது. அங்கே கண்காட்சியாக சோலார் சக்திக்குப் பயன்படுத்தப் பட்ட பொருட்கள் வைக்கப் பட்டிருக்கின்றன. :((((((((((((( அப்புறம் ஏன் கைவிட்டனர் என்பதற்குச் சரியான காரணமும் தெரியவில்லை.

2009/5/30 fonio sivakumar <fsiva...@gmail.com>

Narayanan Kannan

unread,
May 30, 2009, 4:24:41 AM5/30/09
to minT...@googlegroups.com
அரசாங்க `மெகா` திட்டங்களுக்குக் காத்திராமல் நம்ம கோவை குட்டி
என்ஜினியர்கள் குடிசைத்தொழில் போல் இதை ஆரம்பிக்க வேண்டும். உலகிலேயே
அதிக சோலார் பேனல் கொண்ட வீடுகளுள்ள நாடு ஜெர்மனி. கொரியா இப்போது
கிளம்பியிருக்கிறது! இவர்களெல்லாம் இந்தியாவில் வந்து குப்பை
கொட்டுவதற்குள் நம்மவர், முதலில் நம்ம சந்தையைக் காப்பாற்றிக்கொள்ள
வேண்டும். அரசியல் பெரும் தலைகளை உலக நிருவனங்கள் விலைக்கு வாங்கி
வைத்திருக்கின்றன. எனவே நிறைய என்.ஜி.ஓ நிருவனங்கள் தலையெடுக்க வேண்டும்.

க.>

2009/5/30 Geetha Sambasivam <geetha...@gmail.com>:

Kannan Natarajan

unread,
May 30, 2009, 4:29:26 AM5/30/09
to minT...@googlegroups.com
> நமக்கு கிடைக்கும் சூரிய சக்தி முறைப்படி பயன்படுத்தினால். நாம் கரண்ட் பில் கட்டவேண்டியதில்லை

கதிரவனின் சக்தியில் - மின்சாரக் கட்டணமில்லை என்று சொல்லிவிட இயலாது. ஏனெனில், கதிரவனின் சக்தியால் விளையும் மின்சாரம் - மின்சாரத்தை எடுத்துச் செல்லும் கம்பிகளின் மையத் தொகுதிக்கு (Central Grid) செல்லவும், ஒன்றையொன்று  தொடர்பு கொள்ள வாய்ப்புள்ளதால், கதிரவனின் சக்தியைப் பயன்படுத்தும் இல்லங்களில், மின்சாரத்தின் பயன்பாட்டின் அளவை கணக்கிட இயல்வது மட்டுமன்றி, மின்சாரக் கட்டணத்தையும் கதிரவச்சக்தியால் விளையும் மின்சாரம் குறையும் போது,மின்சாரத்துறையால் பயனூதியமாக பெற முடியும்.

மேலும், கதிரவச்சக்தியை மின்சாரமாக மாற்றவியலும் ஒளிமின்கலங்களின் (photovoltaic cells) விலை அதிக விலையுள்ளதால், அந்தந்த அரசுகள் தங்கள் நகர்வாழ்நர்களுக்கு (residents/citizens), இவ்வகையான ஒளிமின்கலங்களுக்கு தள்ளுபடியை (rebate) வழங்க முனைந்தால், ஒளிமின்கலங்களின் விற்பனை, இந்தியாவிலும், பிற நாடுகளிலும் இப்போது செல்பேசிகளின் (cell or mobile phone) விற்பனைப் போல பெருமளவில் பெருகக்கூடிய வாய்ப்பு மலரும். அதேச்சமயம், இவ்வாறான் ஒளிமின்கலங்களை நிறுவ நாம் தேர்ந்தெடுக்கும் மின்-தொழிலாளி அரசாங்கத்தின் மின் துறையின் சான்றிதழ் (accreditation) பெற்றவராகவும், அனுபவம் வாய்ந்தவராக இருத்தல் முக்கியமானது என்று கதிரவச்சக்தியால் மின்சாரத்தை வழங்கும் மேலை நாடுகளில் உள்ள விதிமுறைகளாகும்.

இந்தியாவின் மின்-துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே சிந்திப்பாரா?

Tthamizth Tthenee

unread,
May 30, 2009, 4:49:08 AM5/30/09
to minT...@googlegroups.com
அதே போல வீடுகளுக்கு தளம் போட்ட பின்னர் சொறுகு ஓடு என்று மீண்டும்  அந்த தளத்தின் மேல் சிமென் ட்   ஜல்லி  கலவையை இடுகிறார்கள்

மீண்டும் மாடியில் வீடு கட்டும் போது தேவையில்லாமல் ஏற்கெனவே போட்ட  கலவையைப் பெயர்த்து எடுத்து விட்டு
மீண்டும் தரை போடுகிறார்கள்

அப்போதுதான் மழையினாலோ வரும் தண்ணீரோ மற்ற வழிகளில் மாடியில் விழும் தண்ணீர்   தளத்தில் இறங்காமல் இருக்கும் என்கிறார்கள்

அந்த சொறுகு ஓடு முறைக்கு பதிலாக

இது போன்ற  பிளாஸ்டிக் கழிவுகளை  உருக்கி சமச்சீராக  தளத்தின் மேல் இடலாம்
அப்போது தண்ணீரும் தளத்தில் இறங்காது

வீட்டிற்கும் அதிக பாரம்  ஏறாது
இது நான் வெகு  நாட்களாக மனதில் வைத்திருந்த திட்டம்

யாரேனும் செயல் படுத்த முன் வந்தால் செயலாற்ற வழி முறைகள் செய்ய என்னால் முடியும்

அன்புடன்
தமிழ்த்தேனீ

2009/5/30 Kannan Natarajan <thar...@gmail.com>



--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள

தமிழ்த்தேனீ

Geetha Sambasivam

unread,
May 30, 2009, 5:13:21 AM5/30/09
to minT...@googlegroups.com
//இது போன்ற  பிளாஸ்டிக் கழிவுகளை  உருக்கி சமச்சீராக  தளத்தின் மேல் இடலாம்
அப்போது தண்ணீரும் தளத்தில் இறங்காது//

weathering course  செய்ய ஓடுகள் ஒட்டுவதே சிறந்ததுனு தோன்றுகிறது தேனீ அவர்களே, அதுதான் வீட்டுக்குள் சூரிய ஒளியிலிருந்து வரும் வெப்பத்தைக் குறைக்கும் தன்மை கொண்டது. ஓடு ஒட்டும் காரணமே அதுதான். ப்ளாஸ்டிக்கிற்கு அந்தக் குணம் இருப்பதாய்த் தெரியவில்லை. மேலும் சூடு அதிகம் ஆனால் கழிவு ப்ளாஸ்டிக்கும் உருக வாய்ப்பு இருக்குமோனு தோணுது என்னதான் விஞ்ஞான முறையில் முயன்றாலும், இது தான் சரியானது. அதிலும் நாட்டு ஓடுதான் வீட்டுக்குள்ளே குளுமையைத் தரும். சீமை ஓடு  அப்படி இல்லை.

2009/5/30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
May 30, 2009, 5:20:13 AM5/30/09
to minT...@googlegroups.com
உலகில் எந்தப் பொருளுக்கும் அழிவு என்பதே கிடையாது
உருவத்திலோ , ரசாயன குணங்களிலோ மாறுபடுகிறதே தவிற  அழிவதே இல்லை

ப்ளாஸ்டிக் என்பதும் ஏற்கெனவே இருக்கும் மூலப் பொருளை வைத்துக்கொண்டு மனிதனால் உருவாக்கப்பட்டதே
ஆகவே ப்ளாஸ்டிக்கின் மூலப் பொருளின் கூறுகளை ஆராய்ந்தால் நிச்சயமாக ப்ளாஸ்டிக் கழிவுகளை எப்படி வேறு வகையில்  மாற்றிப் பயன்படுத்தலாம் என்பது தெரியவரும்

ஆமாம்  விஞ்ஞானிகள் என்று சொல்கிறோமே அவர்கள் எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்,எதையும் புதியதாக கண்டு பிடித்தாற்ப் போன்றே தெரியவில்லையே

அரசு விஞ்ஞானிகளை ஊக்குவிக்க வேண்டும்
புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவேண்டும்
புவியின்  பூகர்ப்ப ரகசியங்களை இன்னும் ஆராயவேண்டும்


கட்டிக் கொடுத்த சாப்பாடும் சொல்லிக் கொடுத்த பாடமும் வெகு நாட்களுக்கு பயன்படாது

நாம் நம் அறிவைக் கொண்டு புதியதாக எதையுமே கண்டு  பிடிக்காமல்
பழையதை குறை கூறிக் கொண்டே காலம் தள்ளிக் கொண்டிருக்கிறோம்


அன்புடன்
தமிழ்த்தேனீ

2009/5/30 Subashini Tremmel <ksuba...@gmail.com>

--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள
தமிழ்த்தேனீ

Tthamizth Tthenee

unread,
May 30, 2009, 5:25:39 AM5/30/09
to minT...@googlegroups.com
கீதாம்மா  ப்ளாஸ்டிக் பொருட்கள் நிச்சயமாய்
வெய்யிலில் உருகாது

அதையும் தவிற ப்ளாஸ்டிக்  கண்டைனரில் வைக்கப் படும்  குளிர்ந்த பொருட்கள்
இரும்பு ,அல்லது சிமெண் ட் போன்ற கண்டைனரில்  வைக்கப் படும் பொருட்களைவிட  குளிர்ச்சியாகவே இருக்கும்


அன்புடன்
தமிழ்த்தேனீ

2009/5/30 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Narayanan Kannan

unread,
May 30, 2009, 6:55:36 AM5/30/09
to minT...@googlegroups.com
இந்த யோசனைகளை மேற்கொள்ளும் போது கவனமாக பிளாஸ்டிக்கை கையாள வேண்டியது
அவசியம். ஏனெனில் பிவிசி பைப்புகளிலிருந்து வரும் தாலேட்டு எனும் வேதிமம்
நமது நாளமில்லா சுரப்பிகளுடன் விளையாடக் கூடியது. வர, வர பள்ளிக்
குழந்தைகள் தொந்தியும் தொப்பையுமாக இருப்பதற்கு இதுவொரு காரணம்.
எம்மாதிரி, பிளாஸ்டிக், எம்மாதிரிக் கலவை இவையெல்லாம் முக்கியம்.
பிரிவுபடா கலவையெனில் பிரச்சனையில்லை.

க.>

2009/5/30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

fonio sivakumar

unread,
May 30, 2009, 4:19:54 AM5/30/09
to minT...@googlegroups.com
என்ன காரணத்தினாலோ இதனை ஒருவரும் கண்டுகொள்வதில்லை.  
fonio



2009/5/30 Geetha Sambasivam <geetha...@gmail.com>

fonio sivakumar

unread,
May 30, 2009, 4:27:19 AM5/30/09
to minT...@googlegroups.com
தொழில் அதிபர்களும் ,வல்லுனர்களும் சிந்தித்தால் நலமாக இருக்கும். 

fonio sivakumar

unread,
May 30, 2009, 4:34:59 AM5/30/09
to minT...@googlegroups.com
தகவலுக்கு நன்றி. இது பற்றி நம் குழுமத்திலிருந்து ஏன் ஒரு மடலை புதிய அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கலாமா?.அதிர்ஷ்டம் இருந்தால் நம் மடல் பரிசீலனைக்கு போகும் அல்லவா? 
fonio



2009/5/30 Kannan Natarajan <thar...@gmail.com>

Kannan Natarajan

unread,
Jun 4, 2009, 8:19:54 PM6/4/09
to minT...@googlegroups.com
உலகின் அரிய வகை உயிரினமான "சிங்கவால்" குரங்குகள் (Lion-tailed Macaque -  சோலைமந்தி) மேற்கு மலைத்தொடர்ச்சியில் அமைந்துள்ள வால்பாறையில் அதிக அளவில் உள்ளது. உலகில் அழிந்துவரும் வனவிலங்குகளில் இதுவும் ஒன்றாகும். எனவே, வனத்துறையினர் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்துவருகின்றனர். வனப்பகுதியில் கிடைக்கும் பழம், கொட்டைகளை உணவாக கொண்டு உயிர்வாழும் இவ்வகை குரங்குகள் மேற்கு மலைத்தொடர்ச்சியில் அதிக அளவில் காணப்படுகின்றன.

http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c3/Lion-tailed_Macaque_in_Bristol_Zoo.jpg/200px-Lion-tailed_Macaque_in_Bristol_Zoo.jpg

வால்பாறையை பொறுத்த வரை,
  • புதுதோட்டம்
  • குரங்குமுடி
  • சின்கோனா
உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காணப்படுகிறது.

மனிதர்களை கண்டால் கூச்ச சுபாவத்துடன் துள்ளி குதித்து ஓடும் இந்த வகை சிங்கவால் குரங்குகள், ரோட்டில் விளையாடும் போது எதிரே வந்த வாகனங்களில் மோதி பலியாகி வருகின்றன. எனவே, சிங்கவால் குரங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் ஓடி விளையாட வசதியாக பல இடங்களில் வனத்துறை சார்பில் ஊஞ்சல் கட்டப்பட்டது.

வால்பாறை - பொள்ளாச்சி மெயின் ரோட்டில் பல இடங்களில் எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

இதனால், மூன்று மாதமாக வால்பாறை பகுதியில் சிங்கவால் குரங்குகள் எந்த வித பாதிப்பும் இல்லாமல் உள்ளது.

நன்றி:-

1. தினமலர்
2. http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF

Narayanan Kannan

unread,
Jun 4, 2009, 8:33:40 PM6/4/09
to minT...@googlegroups.com
புவியன்பு கொண்ட நம் மரபு மெல்ல. மெல்ல தன் பெருமையை உணர்ந்து வருவது
மகிவளிக்கிறது.
இவ்வளவு அறிந்தோர் எப்படித்தான் யானையைக் கோயிலில் கட்ட அனுமதித்தனரோ?

க.>

2009/6/5 Kannan Natarajan <thar...@gmail.com>:

Kannan Natarajan

unread,
Jun 5, 2009, 7:17:00 PM6/5/09
to minT...@googlegroups.com
> இவ்வளவு அறிந்தோர் எப்படித்தான் யானையைக் கோயிலில் கட்ட அனுமதித்தனரோ?

சிந்திக்க வைக்கும் கேள்வி.

இவ்வாறான பழக்கம் எப்போது, எதனால் தொடங்கப்பட்டது?

இவ்வழக்கம் மற்றைய சமயங்களிலும் கடைப்பிடித்து வருகிறார்களா?

ஒரு சமயம் - காலத்திற்கு ஏற்றவாறு எப்படி வளர்ச்சி அடைய வேண்டும்?

விலங்கு வடிவத்தில் உள்ள கடவுள்களை உயர்வாய் போற்றும் தகுதியை, ஏன் அவ்விலங்குகளுக்கு ஆலயங்களில் -  நாம் கொடுக்க எண்ணியதில்லை?

யானையை கயிற்றாலோ (அ) இரும்புக் கட்டுத்தளையாலோ இணைக்காமல்,கோயிலுக்குள்ளேயே ஒரு பாதுகாப்பு புகலிடத்தில் சுயேச்சையாக விட்டுவிடலாமே. யானையின் தும்பிக்கை நம் தலையில் தொட்டால் தான் நமக்கு திருவருட்பேறா?

devoo

unread,
Jun 8, 2009, 1:03:05 AM6/8/09
to மின்தமிழ்
தொழிற்சாலையில் விளையும் காய்கறி
---------------------------------------------------------------------
திறந்த வெளியில் விளையும் காய்கறிகள் புற ஊதாக்கதிர்களின்
பாதிப்புக்கு உள்ளாகின்றன. அதிக வெப்பம் காரணமாக நீர் ஆவியாகி
விரயமாகிறது; புழு பூச்சிகளைக் கட்டுப்படுத்தும்
சிரமமும் ஏற்படுகிறது. சூழலின் மாற்றங்கள் விளைச்சலைக் குறைக்கின்றன.

இப்பிரச்னைகளுக்குத் தீர்வாகத் தொழிற்சாலையின் சூழலில்
டோக்யோ நகரில் அறிவியலார் காய்கறிகளை விளைவிக்கின்றனர்.

தொழிற்சாலை குளிர் சாதன வசதி பொருந்திய அரங்கம்போல்
உள்ளது. விளை பயிர்களுக்கேற்ற தட்ப வெப்ப நிலை பராமரிக்கப் படுகிறது.
அழுக்கும் தூசியும் கிடையாது.
ஊழியர்களும் உடல் முழுதும் கவசஉடை அணிந்து பணி புரிகின்றனர்.முற்றிலும்
இயற்கை சார்ந்த இடுபொருட்கள்; Preservatives இல்லாமல் தூய நிலையில்
விற்பனை.

வழக்கமான வேளாண் முறையில் ஆகும் செலவைக் காட்டிலும்
இம்முறையில் செலவும் குறைவு என்கிறது பத்திரிகைச் செய்தி.

30க்கும் மேற்பட்ட வேளாண் பல்கலைக் கழகங்கள் இங்கு உள்ளன. இம்முறையில்
கவனம் செலுத்துவார்களா?


தேவ்

Narayanan Kannan

unread,
Jun 8, 2009, 2:14:36 AM6/8/09
to minT...@googlegroups.com
தேவ்:

என்ன நீண்ட நாட்களாகக் காணோம்?

நமது விவசாயமுறை காலத்தை வென்றதுதான், ஆயினும், இராமநாதபுரம் போன்ற வரண்ட
பகுதி விவசாயம் இஸ்ரேல், சீனா போன்ற நாடுகள் முயன்று வெற்றி கண்ட முறைகளை
ஏற்றுக்கொள்வனவாக அமைந்தால் இன்னும் வளம் பெறலாம். Drip irrigation எனும்
முறையை நம்மவர் கையாளலாம். சூரிய ஒளியில் வளரும் காய்கறிகளின் சுவையே
தனி. செயற்கைமுறையில் சுவை கிடையாது, விளைசல் அதிகம். நம்ம ஊர்
கத்தரிக்காயின் சுவை வேறு எங்கு வரும்?

க.>

2009/6/8 devoo <rde...@gmail.com>:

--

Kannan Natarajan

unread,
Jun 8, 2009, 3:17:38 AM6/8/09
to minT...@googlegroups.com
சுற்றுப்புறம்:- சுகாதாரத்தை நோக்கிய பயணம்!

லகம் முழுவதிலும் சுமார் 250 கோடி மக்கள் போதிய கழிப்பிட வசதிகள் இன்றி அவதிப்படுகின்றனர் என்கிறது உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரம். அதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவிலும், சீனாவிலும் வசிக்கின்றனராம்.
  • மலேரியா
  • வயிற்றுப்போக்கு
  • நோய்க் கிருமிகளின் தாக்கம்
போன்ற பலவித நோய்களுக்குத் திறந்தவெளிக் கழிப்பிடங்களே வரவேற்பறைகள்.

கழிப்பறைகள் எதற்கு என நினைக்கும் கிராமங்களில் அதற்கான அவசியத்தை எடுத்துரைப்பது சாமானிய விஷயமல்ல. அதில் படிப்படியாக வெற்றி கண்டு வருகின்றன நமது பஞ்சாயத்து அமைப்புகள்.அரசு - மக்கள் - உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் தொடர்ந்த ஒத்துழைப்பால், 2007 மார்ச் வரை நாடு முழுவதிலும்,
  • 3.19 கோடி தனிநபர் கழிப்பிடங்கள்
  • 9,997 பொதுக் கழிப்பிடங்கள்
  • 3.57 லட்சம் பள்ளிக் கழிப்பறைகள்
  • 1.10 லட்சம் அங்கன்வாடி கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன
"முதல்ல எல்லாம் திறந்த வெளிக் கழிப்பிடங்களைத்தான் பயன்படுத்திட்டு இருந்தோம். அதனால் நாங்க அனுபவிச்ச கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. ஆம்பளைங்க கண்ணுல படாம "போய்ட்டு" வர்றதுக்குள்ள போதும்போதும்னு ஆயிடும். இப்ப எங்க வீட்லயே தனியே கழிப்பறை கட்டிட்டோம். கவர்மெண்ட்ல ரூ.1,200 மானியம் தந்தாங்க. இப்பப் பாருங்க நினைச்ச நேரத்துல எங்க விருப்பம்போல பாத்ரூம், கழிப்பறையைப் பயன்படுத்த முடியுது..."

என்கின்றனர் பழனி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னக்கலையம்புத்தூர் கிராமத்தில் வசிக்கும் மாரியம்மாளும்,
ராஜகாந்தமும்.

http://www.dinamani.com/Images/article/2009/6/7/07kdr5.jpg
ராஜாமணி, மகமாயி

இந்த கிராமப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட
  • பாரப்பட்டி
  • வி.கே.மில்ஸ்
  • சின்னக் கலையம்புத்தூர்
  • ஆர்.ஜி.புரம்
  • விவேகானந்தா காலனி
போன்ற பகுதிகளிலுள்ள பெரும்பாலான வீடுகளில் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது.

"சின்னக் கலையம்புத்தூர் கிராம பஞ்சாயத்துல 95 சதவீதம் வீடுகள்ல கழிப்பறை கட்டிக் கொடுத்திருக்கறோம். இதனால் திறந்தவெளியில மல, ஜலம் கழிக்கறவங்களோட எண்ணிக்கை குறைஞ்சிருக்கு. குறிப்பா, பெண்கள்கிட்ட இந்தத் திட்டம் பெருத்த நிம்மதிய ஏற்படுத்தியிருக்கு..."

என்கிறார் 1வது வார்டைச் சேர்ந்த உறுப்பினர் கே.
ராஜாமணி.

வீட்டுக்குள்ளேயே கழிப்பறை அமைப்பதற்கு இடம் இல்லாதவர்கள் மற்றும் நிரந்தர வீடு இல்லாதவர்களின் பயன்பாட்டுக்காக கிராமங்களில் பொதுக் கழிப்பிடங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.

"கட்டின கழிப்பறைகளைத் தொடர்ந்து பயன்படுத்த கிராம மக்களைத் தூண்டற விதத்துல விழிப்புணர்வை ஏற்படுத்தணும். அதுக்காக சுகாதாரப் பேரணிகளை அப்பப்போ நடத்தறோம். நாடகம் போன்ற கலைநிகழ்ச்சிகள் மூலமா மக்கள்கிட்ட நல்ல கருத்துக்களை எடுத்துச் சொல்றோம். திறந்தவெளியில மல, ஜலம் கழிக்கக்கூடாது, கழிப்பறைக்குப் போயிட்டு வந்ததும் கையை சோப்புப் போட்டுக் கழுவணும்.. இப்படி நிறைய சுகாதார விஷயங்களைப் பற்றி துண்டுப் பிரசுரங்கள், நாடகங்கள் மூலம் எடுத்துரைக்கிறோம்...."

என்னும்
ராஜாமணியின் வார்த்தைகளுக்கு அத்தாட்சியாய் உள்ளன, அந்தக் கிராமத்தில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை போர்டுகள்.

"குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் போடாமல் வீதிகளில் எறிந்தால் அபராதம் ரூ.50 என்ற வாசகங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. இப்படி தொடர்ந்த விழிப்புணர்வு நடவடிக்கைகளால்தான் இந்த கிராமத்துக்கு 2008ம் ஆண்டுக்கான "நிர்மல் கிராம புரஸ்கார் விருது" கிடைத்துள்ளது" என்கிறார் சின்னக்கலையம்புத்தூர் கிராம பஞ்சாயத்துத் தலைவர் வேணுகோபால்.

தமிழகத்தைப் பொருத்தவரை, பஞ்சாயத்து அமைப்புகளின் முக்கியக் குறிக்கோள்களில் ஒன்றாக இருக்கிறது "நிர்மல் கிராம புரஸ்கார் விருது". இந்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ள இந்த விருது, பஞ்சாயத்து அமைப்புகளின் முழு சுகாதாரத்தை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

2005ல் நாடு முழுவதும் உள்ள 40 பஞ்சாயத்து அமைப்புகள் இந்த விருதைப் பெற்றன. 2006ல் இந்த எண்ணிக்கை 769 ஆக உயர்ந்தது. 2007ல் 4000க்கும் மேற்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் நிர்மல் புரஸ்கார் விருது பெற்றுள்ளன.

தமிழகத்தைப் பொருத்தவரை, மிகவும் அதிகபட்சமாக 2008ல் திருச்சி மாவட்டத்தின் 110 பஞ்சாயத்து அமைப்புகளுக்கு நிர்மல் புரஸ்கார் விருது கிடைத்துள்ளது. அதையடுத்து திருவண்ணாமலை மாவட்டத்தின் 98 பஞ்சாயத்துகளுக்கும், நாகபட்டினத்தின் 96 பஞ்சாயத்துகளுக்கு இந்த விருது கிடைத்துள்ளது. நகர்ப்புற மக்களுக்குக் கிடைக்கும் மருத்துவ வசதிகளை கிராம மக்களும் பெற வேண்டும் என்ற நோக்கில் தமிழகத்திலுள்ள பெரும்பாலான ஊராட்சிகள், பேரூராட்சிகளில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

"ரோட்டரி சங்கம் போன்ற சில அமைப்புகள் மூலம் இலவச மருத்துவ முகாம்களை அவ்வப்போது நடத்தி வருகிறோம். இதனால் பொதுமக்கள் பெரிதும் பயனடைந்து வருகிறார்கள். ஸ்பான்ஸர்கள் கிடைப்பதுதான் கஷ்டமாக இருக்கிறது..." என்கிறார் திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இடுவாய் ஊராட்சித் தலைவி பூங்கொடி.

முற்றிலும் முடியாமல் போனால் மட்டுமே, மருத்துவமனைப் பக்கம் தலைகாட்டும் அப்பாவி மக்களுக்கு இத்தகைய இலவச மருத்துவ முகாம்கள் மிகப்பெரிய வரப்பிரசாதம்."எங்க ஊர்ல எங்கே இலவச மருத்துவ முகாம் நடத்துனாலும் சரி, எனக்குத் தெரிஞ்ச கிராமத்துப் பொம்பளைங்களுக்குத் தகவல் சொல்லி வரவழைச்சிடுவேன். உடம்பப்பத்தி கவலைப்படாத இந்த ஜனங்களுக்கு ஏதோ நம்மால முடிஞ்ச உதவி செய்யறோம்..."

என்கிறார் அ.கலையம்புத்தூர் முதல்நிலை ஊராட்சி வார்டு உறுப்பினர் சி.மகமாயி. இந்த வார்டின் சீனியர் உறுப்பினர் என்ற முறையில் மகமாயி அம்மாளின் குரல், கிராம மக்களின் நலனுக்காக என்றுமே உரத்து ஒலிக்கிறது.

"தனிநபர் கழிப்பிடம் கட்டிட்டு அதைப் பயன்படுத்தாம இருக்கறவங்கதான் அதிகம். அவங்ககிட்டபோய் நல்லது, கெட்டது எடுத்துச் சொல்லி கழிப்பறைகளை உபயோகப்படுத்தும்படி சொல்றது பெரிய விஷயமில்ல. அதேபோல வீட்டுக்கு முன்னாடிதான் குப்பையைக் கொட்டுவாங்க. இல்லைனா, சாக்கடையில போடுவாங்க. மக்கள் மத்தியில விழிப்புணர்வு இல்லைனா எதுவும் செய்ய முடியாது..."

என்னும் மகமாயி, அந்தப் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாகக் கூறி பொதுமக்களைத் திரட்டி சாலை மறியல் போட்டங்களை நடத்தி வெற்றியும் பெற்றவர். தங்கள் பகுதி பள்ளிகளில் படிக்கும் மாணாக்கர்களின் உடல் நலத்திலும் கூடுதலாக அக்கறை செலுத்துகிறார், கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பேரூராட்சித் தலைவி விஜயா கதிர்வேல். கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தனியார் ஆதரவுடன் வைட்டமின் மாத்திரைகள் வழங்கி, இலவச தடுப்பூசி போடவும் ஏற்பாடு செய்து தந்திருக்கிறார்.

"சுகாதாரமான சூழ்நிலையில் ஆரோக்கியமான உடல் நலத்துடன் குழந்தைகள் கல்வி பயில வேண்டியது அவசியம்" என்கிறார் இவர்.சுகாதாரத்தின் அவசியத்தை உணர்ந்துவிட்ட கிராமங்கள் பல, குப்பைகளை அகற்றும் பணியை மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் ஒப்படைத்துள்ளன. இதனால் ஏராளமான பெண்கள் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளதுடன், கிராமங்களும் தூய்மையாகப் பளிச்சிடுகின்றன.
  • திண்டுக்கல் மாவட்டம் பாலசமுத்திரம் பேரூராட்சியின் 12வது வார்டு உறுப்பினர் தனபாக்கியம்,
  • ஆயக்குடி பேரூராட்சியின் 4வது வார்டு உறுப்பினர் கமலம்
போன்றோர் தங்கள் பகுதிகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உதவியுடன் குப்பைகளை அப்புறப்படுத்தி வருகின்றனர்.

மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் எனத் தரம் வாரியாகப் பிரிக்கப்பட்டு கச்சிதமாகக் குப்பைகள் அள்ளப்படுகின்றன. குப்பை அள்ளக்கூட பணியாளர்கள் கிடைக்காத நிலையில், நான்கைந்து மாதங்களுக்கு ஒருமுறை துப்புரவுப் பணியாளர்களை வரவழைத்து கிராமம் முழுவதையும் சுத்தப்படுத்தும் பணியைச் செய்து வருகிறார் பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நல்லாம்பள்ளி ஊராட்சித் தலைவி ஈஸ்வரி.  குப்பைகளற்ற, சுகாதாரமான வசிப்பிடமே பெரும்பாலான உள்ளாட்சித் தலைவிகளின் பிரதானக் குறிக்கோளாக இருக்கிறது. அதன் மூலம் நோயற்ற சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் அவர்களின் பயணம் தொடர்கிறது.

ஜி. மீனாட்சி

நன்றி:- தினமணி கதிர் (07/06/09)

Narayanan Kannan

unread,
Jun 8, 2009, 3:59:35 AM6/8/09
to minT...@googlegroups.com
இன்னும் இந்தியா எவ்வளவு பின் தங்கிய நிலையில் உள்ளது என்பதை இக்கட்டுரை
காட்டுகிறது. ஆயினும் 60 களுக்குப் பின் சுகாதார வளர்ச்சி என்பது
அபரிதமாக வளர்ச்சி கண்டுள்ளது. ஆயினும், முன்னேற்றப்பாதையில் இந்தியா
செல்ல வேண்டிய மைல்கல் அநேகம் என்பதையே இது சுட்டுகிறது.

நான் கல்லூரிக் காலங்களிலிருந்து இச்சூழல் விழிப்புணர்ச்சிக்கு என்னால்
முடிந்தவரை வானொலி நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி பேட்டிகள் என்று அளித்து
வருகிறேன். மனிதக் கழிவு என்பது சக்தியின் வேறொரு வடிவம் என்பதை வியாபார
நோக்கறிந்த தமிழக இளைஞர்கள் கண்டு கொண்டால், பயோகேஸ் முறையில் நிறைய
கழிப்பிட வசதிகள் செய்ய முடியும். இதை லாபகரமாக நடத்த முடியும்.
காசுக்குக் காசு, சுகாதாரத்திற்கு சுகாதாரம். மாசுக்குறைவு கூடுதல்
லாபம்!

க.>

2009/6/8 Kannan Natarajan <thar...@gmail.com>:

Kannan Natarajan

unread,
Jun 9, 2009, 6:40:57 PM6/9/09
to minT...@googlegroups.com
பேராபத்தை எதிர்நோக்கும் பொதிகை!

பொதிகை மலையை,
  • செம்மலை
  • குடைமலை
என்றும் அழைப்பர்.

சீன யாத்ரிகர் யுவான் சுவாங் இம்மலையிலுள்ள சந்தன மரங்களின் சிறப்புகளைப் பற்றியும், தலாமி - பொதிகைத் தென்றலைப் பற்றியும் போற்றியுள்ளனர்.

நற்றிணையும், பட்டினப்பாலையும் மலை மேகங்கள் தவழும் உயரத்தைக் கொண்டதாகவும், விண்முட்டும் சிகரங்களை உடையதாகவும் பொதிகை மலை திகழ்கிறது எனப் பகர்கின்றன.

அருணகிரிநாதரும், காவடிச் சிந்து அண்ணாமலை ரெட்டியாரும் இம்மலையின் சிறப்பைப் பற்றி மெய்மறந்து பாடியுள்ளனர்.

பொதிகைக் காட்டில் மேய்கின்ற கழுதைகூட இசை
ரசனையை வெளிப்படுத்தும் என்று பாரதி கூறியுள்ளார்.

கடந்த காலத்தில் வரலாற்றில் சொல்லப்பட்ட கொற்கை துறைமுகம், சிறப்புப் பெற்ற பழைய காயல் மாதிரி பொதிகை மலையும் தன் சிறப்பை இழந்துவிடக் கூடுமோ என்கிற ஐயம் சமீபகாலமாக ஏற்படுகிறது.

  • ஓங்கி உயர்ந்த மலைகள்
  • பச்சை பசேலென அடர்ந்த காடு
  • ஓசையில்லாமல் நடமாடும் வனவிலங்குகள்
  • அற்புதமாக ரீங்காரமிடும் பறவைகள்
  • தரையை நோக்கிப் பாயும் குளிர்ச்சியான அருவிகள்
  • சலசலக்கும் பொருநை ஆற்றின் நதி மூலம் போன்ற காட்சிகள்
எதிர்காலத்தில் இல்லாமல் போய்விடுமோ என்கிற அச்சம் சமீபகாலமாக நம்முன் எழுகிறது.

சிரபுஞ்சிக்கு அடுத்து 4,300 மில்லி மீட்டர் மழை இங்குதான் பெய்கிறது.

இதனால்தான் தாமிரபரணி ஜீவநதியாக ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தில் உருவாகி அதே மாவட்டத்தில் புன்னக்காயலில் கடலில் சேர்கிறது.

2,000
சதுர கிலோமீட்டர் பரப்பில் உள்ள இங்குள்ள பசுமை மாறா காடுகள் கடந்த 30 ஆண்டுகளில் வெட்டப்பட்டு, மத்திய அரசு அமைத்த "அகஸ்தியர் தேசிய பூங்கா"வும்கூட அர்த்தமில்லாமல் ஆகிவிட்டது.

  • வன உயிரினப் பாதுகாப்புச் சட்டம் - 1972
  • வனப் பாதுகாப்புச் சட்டம் - 1980
  • பயோ டைவர்சிட்டி மசோதா - 2005
எனப் பல சட்டபூர்வமான நடவடிக்கைகள் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டும் வனச் செல்வங்களை நம்மால் பாதுகாக்க இயலவில்லை.

பொதிகை மலை வழியாக தமிழகத்திலிருந்து திருவனந்தபுரம் செல்ல மலை வழிச் சாலை அமைக்க 2003ல் ஒரு திட்டம் தீட்டப்பட்டது. அத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் வசதியாக இருக்கும் என்று பலர் நினைக்கின்றனர். இதனால்,
  • சுற்றுச்சூழல்
  • வனம்
  • விலங்குகள்
போன்றவை பாதிக்கப்படும் என்பதை யாரும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.

பாபநாசம் - காரையாறு அணை, கன்னிக்கட்டி வழியாக திருவனந்தபுரம் செல்லும் தூரம் 122 கிலோ மீட்டர் ஆகும். சுமார் 7 மணி நேரம் ஆகும். இரண்டாவது கியரில்தான் செல்ல முடியும். இம்மலையில் 5,000 அடி உயரம் உள்ள பள்ளத்தாக்குகள் உள்ளன. காரையாறு மற்றும் கன்னிக்கட்டியிலிருந்து சிறிது தொலைவில் கேரள எல்லை வருகிறது. அப்பகுதி கரடுமுரடாக இருப்பதைத் திருத்த வேண்டுமென்றால் மரங்களை வெட்ட வேண்டும். அதுமட்டுமல்லாமல் 60 அடி பள்ளத்தில் ஓடும் பேயாறு பகுதியில் போக்குவரத்துப் பாதை அமைக்கவே முடியாது. இவற்றையெல்லாம் சிந்திக்காமல் திட்டம் அறிவிக்கப்பட்டது.

ஏற்கெனவே நாகர்கோவில் வழியாக 130 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருவனந்தபுரத்தை அடைய வசதியாகவும், எளிதாகவும் உள்ள தேசிய நெடுஞ்சாலையைப் பயன்படுத்துவதை விட்டுவிட்டு இந்த காட்டுச் செல்வத்தை அழித்துத்தான் பாதை அமைக்க வேண்டுமா என்பதுதான் நமது கேள்வி.

அதுமட்டுமல்லாமல், செங்கோட்டை - ஆரியங்காவு - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையைப் பயன்படுத்தியும் திருவனந்தபுரத்தை அடையலாம்.

பொதிகை மலைக்கு மற்றொரு பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

அகத்தியர் தங்கிய இப்பொதிகை மலை உச்சி. அங்குள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் 42 கிலோமீட்டர் செங்குத்தான மலையை ஏறினால் பொதிகையின் கொடுமுடியை அடையலாம். கடல் மட்டத்திலிருந்து 6,125 அடி உயரத்தில் அங்குள்ள "பூங்குளம்" என்ற இடத்திலிருந்துதான் தன்னிகரில்லாத தாமிரபரணி புறப்படுகிறது.

தென்றலும், தமிழும் தவழும் இந்த உச்சி இன்றைக்கு பல சீரழிவுகளுக்கு உள்ளாகிவிட்டது.சித்ரா பௌர்ணமி அன்று பயணிகள் இங்கே வருவது உண்டு. 1970ல் அகத்தியருக்கு இங்கே கோவில் கட்டப்பட்டது. அப்பொழுது அதிகமான மக்கள் நடமாட்டம் அங்கே இல்லாமல் இருந்தது. வனவிலங்குகள் குறிப்பாக புலிகள் அதிகமாக நடமாடும் பகுதியாகும் இது. பல சித்தர்களும் உலவுவதாக நம்பிக்கையும் உண்டு.  1980 வரை குறைந்த எண்ணிக்கையிலேயே மக்கள் சித்ரா பௌர்ணமிக்கு இங்கே சென்று பிரார்த்தனை செய்தனர். பசும்பொன் தேவர் 1953ல் ஒருநாள் இரவு முழுதும் தனியே அமர்ந்து இந்த இடத்தில் தியானம் செய்ததும் உண்டு.

ஆனால், இப்பொழுது இந்த இடம் சித்ரா பௌர்ணமியன்று கிட்டத்தட்ட 2,000 பேர் செல்கின்ற யாத்ரீகர் தலமாக ஆகியுள்ளது. 3 நாள்கள் தங்கும் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் இல்லாததால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. அச்சமயம், பிளாஸ்டிக் பைகள் குப்பை குப்பையாக அங்கும் இங்கும் வீசி எறியப்படுவதைப் பார்க்கலாம். இதனால் வனவிலங்குகள் கலைந்து ஓடும் நிலையும் ஏற்படுகிறது. இந்நிலையில் குறிப்பிட்ட சித்ரா பௌர்ணமி அன்று பயணிகள் தங்கும் 3 நாள்களுக்கான வசதிகளும், காடு வழியே செல்லாமல் அதிர்மலை எஸ்டேட் வழியாகச் செல்லக்கூடிய வகையில் பாதைகள் அமைத்தால் பொதிகை மலையின் இயற்கைத் தன்மையைப் பாதுகாக்கலாம்.

சொரிமுத்து அய்யனார் கோயில் இங்குள்ள சிறப்பாகும். சொரிமுத்து அய்யனார் தன்னுடைய மனைவிகளான
  • பூரணா
  • புஷ்பகலா
ஆகியோருடன் இங்கே எழுந்தருளியுள்ளார்.

இக்கோயில் சிங்கம்பட்டி சமஸ்தானத்திற்குச் சொந்தமானது. பத்மநாபபுரம் மன்னன் மார்த்தாண்ட வர்மனை பதவியிலிருந்து இறக்குவதற்கு சூழ்ச்சி நடந்துபோது, அந்த சூழ்ச்சியிலிருந்து தப்பியோடிய மார்த்தாண்ட வர்மன் சொரிமுத்து அய்யனார் கோயிலில் மறைந்து வாழ்ந்து வந்தான். சிங்கம்பட்டி பாளையக்காரர் அவருக்கு உதவி செய்து வந்தார். தன்னுடைய குதிரைப் படையை அனுப்பியது மட்டுமல்லாமல் தன்னுடைய மகனையும் சிங்கம்பட்டி பாளையக்காரர் அனுப்பி வைத்தார். அந்த இளவரசர் போரில் இறந்தார். இதனால் மனத்தளவில் பாதிக்கப்பட்ட மார்த்தாண்ட வர்மன், சிங்கம்பட்டி பாளையக்காரர்களுக்கு பொதிகை மலை வட்டாரத்தை ஒட்டியுள்ள 74,000 ஏக்கர் நிலங்களைத் தானமாக வழங்கினார். அன்றிலிருந்து சிங்கம்பட்டி பாளையக்காரர்கள் இக்கோயிலில் பூசைகள் நடத்தி வருகின்றனர். இதற்கும் ஆடி அமாவாசை திருவிழாவன்று பயணிகள் கட்டுக்கடங்காமல் வருவது உண்டு.

இங்குள்ள "இஞ்சிக்குளி"யில் வாழும், "காணி மக்கள்" என்ற பழங்குடியினர் "நாங்கள் காலையில் எழுந்தால் சிங்கம், புலி, கரடி ஆகியவற்றின் முகத்தில்தான் விழிக்க வேண்டும். எங்கள் வேலையை நாங்கள் செய்வோம். எங்கள் பக்கத்திலேயே அந்த விலங்குகள் வந்து செல்லும். விலங்குகளுக்கும் இந்தக் காட்டில் யார் வாழ்கிறார்கள் என்று அறியும் சக்தி உள்ளது. எங்களால் விலங்குகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை" என்று அந்தப் பழங்குடியினர் சொல்லும்போது மானிடத்திற்கும் விலங்கினத்திற்கும் இடையே நிலவும் ஒருமைப்பாட்டின் பெருமையைக் கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து இயற்கையின் செல்வங்களுக்கும் ஆபத்து என்ற நிலைதான் உள்ளது. எந்த மாவட்டத்திற்கும் இல்லாதவாறு தமிழர்கள் பிரித்து வைத்த ஐவகை நிலங்கள் ஒருசேர அமைந்ததுதான் நெல்லை மாவட்டம்.

ஒருகாலத்தில்,

  • ராஜபாளையம் - சாத்தூர் - சாயல்குடி வடக்கு எல்லையாகவும்
  • தெற்கு எல்லையாக வள்ளியூர் - மூன்றடைப்பு
  • மேற்கே - மேற்குத் தொடர்ச்சி மலையும்
  • கிழக்கே - வைப்பாறு, திருச்செந்தூர் மற்றும் உவரி என்ற வங்கக் கடற்கரைப் பகுதியாகவும்
அமைந்த வீரபூமிதான் அன்றைய திருநெல்வேலி.

தெற்குப் பகுதியிலுள்ள,
  • மூன்றடைப்புக்கும்
  • கூந்தன்குளத்திற்கும்
ருஷியா, சைபீரியா, மத்திய ஆசியா, ஜெர்மனி, மங்கோலியா போன்ற பல நாடுகளில் உள்ள 55 வகையான வெளிநாட்டுப் பறவைகள் நவம்பர் மாதம் வந்து ஜூலை மாதம் வரை தங்கி கூடு கட்டி குஞ்சு பொறித்து, தாயும் சேயும் தங்களின் சொந்த நாடுகளுக்குச் செல்வதுண்டு. இந்த இயற்கைக் குணம் தொடர்ந்து கண்முன் தெரிந்தாலும் பறவைகள் வருகை குறைந்து வருகின்ற நிலையும் உள்ளது. இதற்கு இயற்கையை நாம் போற்றாததும் ஒரு காரணமாகும்.

அதுபோலவே, கிழக்கு எல்லையில் தங்களுக்குத் தேவையான மீன்கள் இயற்கையின் மாற்றத்தால் கிடைக்கவில்லை என்ற மீனவர்களின் வேதனைக் குரலும் கேட்கிறது. குமரி முனையில் சுனாமிக்குப்பின் கடற்கரை எல்லையை மீறி கடல் உள்ளே வருகிறது. ஆனால் திருச்செந்தூரில் மாறுபட்ட நிலையில் கடல் தன்னகத்தே உள்வாங்கிக் கொள்கின்ற நிகழ்வுகள் அவ்வப்போது நடந்தவண்ணம் உள்ளன.

இம்மாவட்டத்தின் வடபகுதியில், கோவில்பட்டி, சங்கரன்கோவில் வட்டாரத்தில் உள்ள கரிசல் பூமியில் வெயிலும், வறட்சியும்தான் இயற்கை தந்த சீதனங்கள். இதையெல்லாம் எளிதாக எடுத்துக் கொள்கின்றவர்கள் குடிக்கத் தண்ணீருக்கு பல மைல்கள் போக வேண்டும்.

அதுதான் பாலச்சந்தரின் தண்ணீர்! தண்ணீர் பூமி!!

இருக்கின்ற நீரையும் பாதிக்கக்கூடிய அளவில் விளாத்திகுளம் அருகே வைப்பாற்றில்,
  • கீழநம்பியாபுரம்
  • அம்மன் கோவில்பட்டி ஆற்றங்கரை
  • விரிசம்பட்டி
  • தோணித்துறை
  • களியாவூர்
வைப்பாறு மற்றும் தாமிரபரணியில்,
  • கன்சாபுரம்
  • கருங்குளம்
  • கொங்கராயன்குறிச்சி
  • முக்காணி
போன்ற தாமிரபரணி நதிப் பாதையில் 3 அடிக்கு மேலாக குழிதோண்டி மணல் எடுப்பதால் தண்ணீர் கிடைக்காத நிலை.

மணல் கொள்ளையால் நம்பியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைக்கட்டுகளுக்குப் பாதுகாப்பில்லை.
  • மயிலாப்பூர் அணைக்கட்டு பெரும் பாதிப்பில் உள்ளது
அதுபோல,

  • திருவைகுண்டத்தில் உள்ள பாலமும் அழிவு நிலையில் உள்ளது
அதுமட்டுமா?

  • பனங்கற்கண்டையும்
  • நுங்கையும்
  • பதநீரையும்
  • குடிசைகள் அமைக்க உதவும் ஓலைகளையும் தருகின்ற பனைகள்
ஒரு காலத்தில் நெல்லை மாவட்ட மக்களோடு பின்னிப் பிணைந்திருந்தன.

தூத்துக்குடி, திருந்செந்தூரிலிருந்து தொடங்கி மேற்கே செங்கோட்டை, புளியறை, அச்சன்கோவில் வரை பரவியிருந்த 90 சதவிகிதத்துக்கும் அதிகமான பனை மரங்கள் வெட்டப்பட்டன. கம்பீரமாகக் காட்சி அளிக்கும் பனை மரங்களை இன்றைக்கு காணவில்லை. ஹெப்சிபா ஜேசுதாசன் எழுதிய "புத்தம் வீடு" என்ற புதினத்தில்தான் அக்காலத்தில் நெல்லை மாவட்டத்தில் அமைந்த பனைத் தொழில் கலாசாரத்தை அறிய முடிகிறது. 

இன்றைக்கு கல்குவாரி என்று எடுத்துக்கொண்டு ஒரு காலத்தில் சமணர்களால் அமைக்கப்பட்ட குடைவரைக் கோயில்களும் அழிக்கப்படுகின்ற நிலை இருக்கிறது. தீர்த்தங்கரர்கள் அமைத்த கழுகுமலை குடைவரைக் கோயில் போன்று குடைவரை கல் சிற்பங்கள் கூடிய அமைப்புகள் பல இடங்களில் உள்ளன.
  • அய்யனார்குளம்
  • அலங்காரப்பேரி
போன்ற 200, 300 ஆண்டுகளுக்கு முந்தைய பழைமையான கோயில்கள் பாதுகாப்பில்லாமல் இருப்பதும் வேதனையைத் தருகிறது.

1957ல் அமைக்கப்பட்ட மணிமுத்தாறு அணையின் முன்பு அற்புதமான பூங்காக்கள் 1960களில் பார்க்கும்பொழுது பிரமிக்கச் செய்தன.

அந்த பூங்காக்கள் யாவும் இன்றைக்கு மொகஞ்சதாரோ, ஹரப்பா போன்ற வரலாற்றுச் சின்னங்கள் போல் காணும்போது கண்ணீர் வருகிறது.

இப்படிப்பட்ட பல இயற்கைச் செல்வங்கள், எழில் தோற்றங்கள் யாவும் பாழ்படுகின்றன என்பதை நினைத்தால் பாரதி பிறந்த மண்ணில் சிறுமையைக் கண்டு பொங்கி எழ வேண்டும் என்கிற ஆத்திரம்தான் நமக்கு வருகிறது.

தமிழகத்தின் செயற்கை முலாம் பூசிக் கொள்ளாத தென்றல் தவழும் பொதிகை மலைச் சாரலையும், தமிழ் வளர்த்த நெல்லையையும் வளர்ச்சி என்கிற பெயரில் அழிக்கும் முயற்சிகள் தொடங்கி இருக்கின்றன. மலையிலுள்ள மரங்களை அழித்துச் சாலைகள் போட்டு, வாகனங்கள் விரையும்போது, அந்தச் சத்தத்தில் வனவிலங்குகள் அழிந்துவிடுமே என்று யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதைப் பற்றி யாரும் வருத்தப்படுவதாகவும் தெரியவில்லை.

உலகத்தில் தமிழர்களின் நாகரிகம்தான் மூத்த நாகரிகம் என்பதைப் பறைசாற்றுகிற ஆதிச்சநல்லூர் அமைந்த மண் நெல்லை. நாட்டின் விடுதலைக்குப் புரட்சி, அகிம்சை மூலம் விடுதலை பெற களம் அமைத்ததும் நெல்லைதான்.
  • பூலித்தேவன்
  • கட்டபொம்மன்
  • வ.உ.சிதம்பரனார்
  • வாஞ்சிநாதன்
போன்ற பல விடுதலை வீரர்கள், தமிழ் வளர்த்த அறிஞர்கள், தமிழகத்தின் அனைத்து அசைவுகளிலும் பெரும் பங்காற்றிய பெருந்தகைகளை அளித்த நெல்லை மண்ணின் பூர்வ அடையாளத்திற்கும், அதன் இயற்கைத் தன்மைக்கும் எந்தக் கோளாறும் வராமல் பாதுகாப்பது நெல்லைக்காரர்களது மட்டுமல்ல, ஆட்சியாளர்களது கடமையும்கூட!

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

Narayanan Kannan

unread,
Jun 13, 2009, 6:44:44 AM6/13/09
to மின்தமிழ்
எங்களது அறிவியல் வட்டத்தில் சுழற்சிக்கு வந்த ஒரு சூழயியல் ஆவணப்படம்.

http://photo-view.blogspot.com/

நாளைவரைதான் இலவசமாகப் பார்க்க முடியுமாம்.

"அகம்" (Home) எனும் இப்படம் ஒரு காவியம், கவிதை. கேமிரா விண்ணைவிட்டு
கீழே இறங்கவே இல்லை. கடைசிவரை ஒரு பருந்துப்பார்வை. நம் அகம் இவ்வளவு
அழகானதா? ஏதோ மாயப்படுதாவில் மாபெரும் ஓவியன் ஒருவன் வரைந்த மாஸ்டர் பீஸ்
போல் ஒவ்வொரு கோணமும். அந்தக் கேமிரா மேனுக்கு தங்க மோதிரம் இடவேண்டும்.
என்ன அழகுப்பார்வை!
இரண்டு மணி நேரம் கையில் வைத்துக்கொண்டு குடும்பத்தோடு பாருங்கள். போனால் வராது!

க.>

Kannan Natarajan

unread,
Jun 18, 2009, 7:18:16 PM6/18/09
to minT...@googlegroups.com
இதோ ஒரு வழிகாட்டி!

இந்தியாவின், மேற்கு வங்க மாநில ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி புவி வெப்பமடைவதைக் குறைப்பதில் நல்லதொரு வழிகாட்டியாகத் திகழ்கிறார். இதை மற்றவர்களும் குறிப்பாக சாதாரண மக்களும் பின்பற்றத் தொடங்கினால் புவியின் வெப்பத்தைக் குறைப்பதுடன் கணிசமான அளவுக்கு உரூபாயையும் மிச்சப்படுத்தலாம்.
  • மின் விளக்குகளை எரியவிடுவதும்
  • மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்துவதும்
  • குளிர்சாதனப் பெட்டி போன்ற குளிரூட்டும் சாதனங்களைப் பயன்படுத்துவதும்
நாகரிக வாழ்க்கையின் இன்றியமையாத அம்சங்களாகக் கருதப்பட்டாலும், பூமியைச் சுற்றியுள்ள ஓசோன் படலத்தில் ஓட்டை விழுவதற்கும் அதனால் புவி வெப்பம் அடைவதற்கும் அதுதான் காரணம் என்று அறிவியலாளர்கள் இப்போது இடைவிடாமல் அரற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

கீழை நாடுகளைவிட மேலை நாடுகளில் உள்ளவர்கள் அறிவாளிகள், புதிய புதிய கண்டுபிடிப்புகள் மூலம் மக்கள் இனிமையாக வாழ வழி செய்கிறார்கள், அவர்களுடைய அறிவியல் கண்டுபிடிப்புகள் பகுத்தறிவின் வெளிப்பாடுகள், அதனால் மனிதகுலம் அடைந்துவரும் நன்மைகளுக்கு அளவே இல்லை என்று புளகாங்கிதம் அடையாதவர்களே கிடையாது.

ஆனால், ஒவ்வொரு கண்டுபிடிப்புக்கும் இயற்கையை நாசப்படுத்தும் சக்தி இருப்பதும், அதன் விளைவாக புவியில் உள்ள தாவரங்கள், மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும் பெருத்த அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதும் மெல்ல மெல்லத் தெளிவாகிக் கொண்டிருக்கிறது.

இனி இந்த முன்னேற்றங்களை ஒரேயடியாகத் தூக்கி எறிந்துவிட்டு மாட்டுவண்டி காலத்துக்கு யாராலும் போக முடியாது. ஆனால் தீமைகளின் தீவிரத்தைக் குறைக்க சில நடவடிக்கைகளை உடனே எடுத்தாக வேண்டும்.

அதற்கு, மேற்கு வங்க ஆளுநரும் - மகாத்மா காந்திஜியின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தி வழிகாட்டி வருகிறார். ஆளுநர் வெளியே செல்லும்போது அவருடன் பயணிக்கும் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்துவிட்டார். ஆளுநர் மாளிகையில் தேவையற்ற மின்சார சாதனங்களை நீக்குமாறு கூறிவிட்டார். அதிக அளவு மின்சாரத்தைத் துய்ப்பதும் வெப்பத்தை வெளியிடுவதுமான மின் விளக்குகளை அகற்றிவிட்டு, சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவிக்காத மின்சார விளக்குகளைப் பொருத்தச் செய்தார். அதிக எண்ணிக்கையில் இருந்த குளிரூட்டிகளைக் குறைத்துவிட்டார். சுடுநீர் பெறுவதற்காக இருந்த மின்சார சூடேற்றிகளுக்குப் பதிலாக சூரிய சக்தியில் இயங்கும் சூடேற்றிகளைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்துள்ளார். தினமும் 2 மணி நேரம் மாலை நேரத்தில் ஆளுநர் மாளிகையில் மின்சார விநியோகத்தை நிறுத்தி வைத்து மின்சாரப் பயன்பாட்டை வெகு கணிசமாகக் குறைத்திருக்கிறார். அவர் ஆளுநராகப் பதவியேற்றபோது 2005 - 06ல் ஆளுநர் மாளிகையில் கரியமில வாயு வெளியேற்றம் 408 டன்கள் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது; அதுவே, அவருடைய நடவடிக்கைகளுக்குப் பிறகு 335 டன்களாக இருக்கிறது.

இது சாதாரணமான சாதனை அல்ல.

ஆடம்பரம், அதிகாரத்தை வெளிக்காட்டும் அனாவசியப் பகட்டு ஆகியவற்றைக் குறைத்துக் கொண்டாலே செலவும் குறையும், புவி வெப்பமடைவதும் கணிசமாகத் தணியும் என்பது இந்த உதாரணத்திலிருந்து அறிய முடிகிறது.

  • அரசு அலுவலகங்கள்
  • பள்ளிக்கூடங்கள்
  • கல்லூரிகள்
  • விடுதிகள்
  • ஆலயங்கள்
  • திருமண மண்டபங்கள்
  • வங்கிகள்
  • அரசுத்துறை நிறுவனங்கள்
  • ரயில் நிலையங்கள்
  • பஸ் நிலையங்கள்
போன்ற இடங்களில் அந்தந்த இடங்களுக்குப் பொறுப்பான தலைமை நிர்வாகி முதல் கடைநிலை ஊழியர் வரை அனைவருமே உறுதி எடுத்துக் கொண்டு மின்சாரத்தைச் சேமிக்க நடவடிக்கைகளைத் தொடங்கினால் மின்சார விரயம் கணிசமாகக் குறையும்.

அதனால் தொழில்துறைப்பயன்பாடு, விவசாயத் தேவை போன்றவற்றுக்கு மின்சார வாரியத்தால் கூடுதல் மின்சாரத்தை அளிக்க முடியும்.

தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பஸ் போக்குவரத்தைச் சீர்படுத்தி பெரிய பஸ், மினி பஸ் ஆகியவற்றை எந்த நேரமும் இயக்குவதை உறுதி செய்தால் சொந்தமாக 2
சக்கர வாகனங்களை வாங்க வேண்டிய தேவை நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு அறவே ஏற்படாது. இதனால் பெட்ரோல் பயன்பாடு கணிசமாகக் குறைந்து நம் நாட்டுக்கு மிகவும் தேவைப்படும் அரிய அன்னியச் செலாவணி கோடிக்கணக்கில் மிச்சப்படும். மின்சார ஸ்கூட்டர்களின் விற்பனையை ஊக்குவிக்க அவற்றுக்கு வரிச்சலுகை, எளிய கடன் வசதி போன்றவற்றை அளித்து மோட்டார் வாகனத்துறையில் தேவையற்ற பெட்ரோல், டீசல் வண்டிகளின் எண்ணிக்கையைக் குறைக்க அரசு உதவலாம்.

வீடுகளிலும் கிணறுகளில் தண்ணீர் இறைக்கப்பயன்படும் மின்சார மோட்டார், மிக்ஸி, கிரைண்டர், ஏ.சி., தரையைப் பெருக்க வாக்குவம் - கிளீனர் போன்ற சாதனங்களின் பயன்பாட்டை குறைத்துக் கொண்டால் மின்சாரம் கணிசமாக மிச்சப்படும். சூரிய சக்தியால் இயங்கும் சாதனங்களை படிப்படியாக புழக்கத்துக்குக் கொண்டுவந்தால் மின்சாரம் வெகுவாக மிச்சப்படும்.

சிறுதுளிதானே பெரு வெள்ளமாகிறது.


நன்றி:- தினமணி

பி.கு:- இக்கட்டுரையில் உள்ள சில ஆங்கிலச் சொற்களை தமிழாக்கம் செய்யுமின், சாலச்சிறந்தது.

எ.கா:-

1.
வாக்குவம் - கிளீனர்
2.
மினி பஸ் (சிறு பேருந்தா?)
3.
மிக்ஸி
4.
கிரைண்டர்
5.
பெட்ரோல்
6. 
டீசல்
7.
"மோட்டார்" (வாகனம்)
8.
டன் (எடை - பொதுவான மொழிபெயர்ப்பு அல்லவா!)
9.
ரயில்

Kannan Natarajan

unread,
Jun 18, 2009, 7:53:38 PM6/18/09
to minT...@googlegroups.com
Bahar Dutt’s documentary, ‘A Melting Point,’ throws light on the worrying phenomenon, a truth which all Indians need to be aware of.



On a scientific expedition: Bahar Dutt.

The Ganga is dying right at its source!

Yes, the Gangotri glacier is melting and so are other glaciers in the Himalayas. That could spell trouble for the citizens of the world in more ways than one can imagine.

It is to learn more about this worrying phenomenon that Bahar Dutt of CNN-IBN, undertook a scientific expedition to the source of the Ganga. Accompanied by a team of scientists and a glaciologist, Dutt trekked up 13,000 ft and the result is a stunning documentary, ‘A Melting Point.’

How did she chance upon this phenomenon?

“Through my work, I met Dr.Prakash Rao from WWF who shared his scientific papers with me. That’s when I realised there is a story here, and more important, a truth which all Indians need to be aware of. One of the new elements I added was the impact of 100 dams being built on the Himalayan rivers — one of them close to the Gangotri — for which forests are being cut on a large scale.” She adds, “For the people of Uttarakhand, the weather patterns are already changing. Rainfall is less, and the temperatures warmer.”

Talking about the adventurous trek, Dutt, a trained wildlife conservationist, recalls, “We trekked 44 km in three days. I didn’t think I could do it, but somehow I managed.

The team had the cameraman Farooq Khan and producer Tridip Mandal. Besides Dr.Prakash Rao, Dr.Rajesh Kumar from BIT, and the unsung heroes, our porters, who carried all our camping equipment up the hill, completed the team.”

Moment of joy

For Dutt, the first sight of the glacier was a moment of unbridled joy. “It is gigantic. We seem so tiny in front of Mother Nature. It is muddy in some parts but in some, where the ice has not melted, it is blue. Around us are pilgrims, who seem as overwhelmed by the sight.”

Are there any visible signs of melting on the glacier?

According to Dr.Rajesh, the number of crevices is the first sign of global warming.



A stunning view.

On the impact of the process, Dutt explains, “I can comment on its impact on the locals. In the long run, there will be less water available in the Ganga. Already parts of the Ganga have dried up. Nearly 500 million people depend on this river for water and agriculture. Imagine the impact on people downstream! I think we need to re-look at our policies of building dams.

Twenty five per cent of Greenhouse gas (GHG) emissions comes from deforestation. This emission has to be curbed. If not, global warming will continue to increase.” Some positive steps are, however, already in place. Since Gangotri is a place of pilgrimage, it is faced with severe pollution. The Centre, the Government of Uttaranchal and the Forest Department are doing a lot by restricting the number of pilgrims on a daily basis. “Now, only 150 people are allowed per day.” Also several dhabas have been removed.

The Himalayas are just one of the many projects that Dutt has been working on. But her true calling is with animals. “You know, from childhood I have been an animal lover. I remember my mother getting fed up of all the dogs, cats and birds I kept adopting as pets from the streets. For me, it’s animals, animals and more animals.”

* * *
Research results are alarming

Research shows how the Gangotri glacier has retreated 2 km further inwards in the past 180 years at an alarming speed of 17 - 20 metres/year. The satellite image clearly shows the shift in the location of the glaciers since 1937, reiterating the point that 450 glaciers across the Himalayas are melting fast.

The glaciers have been reduced in their area from 2,000 sq km to 1,600 sq km i.e. a reduction of 21 per cent!

Glaciers such as Kafni in Himachal are shrinking at an alarming rate of 20 metres a year. Melting of these glaciers has led to drastic climatic changes such as rise in temperature and decrease in snowfall.

Savitha Gautham

Courtesy:- The Hindu

நா.கண்ணன்

unread,
Jun 18, 2009, 9:16:44 PM6/18/09
to மின்தமிழ்
பனிப்பாறைகள் உருகுவது உண்மை. பூமண்டல வெப்பமேற்றலும் உண்மை. ஏற்கனவே
சீனாவில் ஆறுகள் வற்றிவிட்டன. கங்கைக்கும் இக்கதி நேரலாம். புவிமண்டலம் 4
மில்லியன் வருடங்களாக உருவாக்கி வைத்திருக்கும் 'பட்டுப் போன்றதொரு'
சமநிலையை கடந்த 50 ஆண்டுகளில் சீர்குலைத்துவிட்டோம் என்பதுவே நான் இங்கு
உங்களைக் காணச் சொன்ன Home (அகம்) எனும் ஆவணப்படத்தின் சேதி.

க.>

On Jun 19, 8:53 am, Kannan Natarajan <thara...@gmail.com> wrote:
> Bahar Dutt’s documentary, ‘*A Melting Point*,’ throws light on the worrying

Kannan Natarajan

unread,
Jun 18, 2009, 9:43:26 PM6/18/09
to minT...@googlegroups.com
> Home (அகம்) எனும் ஆவணப்படத்தின் சேதி.

சில நாடுகளில் பதிப்புரிமை கட்டுப்பாடால், அக்காணொளியைக் காண - கண் கோடி வேண்டும் போல:-))

அக்கட்டுபாடு எங்கள் நாட்டிற்கும் என்பது வியப்பே!

காண கண் கோடி வேண்டுவோரில் ஒருவர்,
கண்ணன் நடராசன்
It is loading more messages.
0 new messages