மலாக்கா செட்டிகள்

180 views
Skip to first unread message

செல்வன்

unread,
Sep 18, 2011, 10:02:44 PM9/18/11
to mintamil, தமிழமுதம், பண்புடன், தமிழ் சிறகுகள்
மலாக்கா செட்டிகள்
மொழிச் சிதைவின் அடையாளம்
சை. பீர்முகம்மது

இன்று வரலாற்று நகரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மலாக்கா 14ஆம் நூற்றாண்டிலேயே முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகமாகத் திகழ்ந்துள்ளது. ஐரோப்பிய - ஆசிய நாட்டு வாணிபர்கள் தங்களின் கப்பல் பயணத்தில் மலாக்கா துறைமுகத்தைக் கடந்தே போக வேண்டிய ஒரு காலகட்டத்தில் தமிழர்களும் இங்கே வாணிகம் செய்ய வந்துள்ளார்கள்.

கலிங்கப்பட்டணத்திலிருந்தும் ஏனைய தமிழகத் துறைமுகங்களிலிருந்தும் பாய்மரக்கப்பல்களில் வாணிபம் செய்ய வந்த இவர்கள் ‘மலாக்கா செட்டி’ (Malacca Chetti) என்றே அழைக்கப்பட்டார்கள். ‘செட்டி’ என்ற இந்த வார்த்தை வியாபாரிகள் என்னும் பொருள் கொண்டு மலாய் மொழியில் வழங்கப்பட்டது. நாட்டுக் கோட்டைச் செட்டியார்களுக்கும் இந்த மலாக்கா செட்டிகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

14ஆம் நூற்றாண்டில் சுமத்திராத் தீவின் ஒரு நகரமான பலம்பாங்(Palembang)கிலிருந்து வந்த இந்து இளவரசனான பரமேஸ்வரா (Parameswara) முதலில் தமாஸ்சேக் (Tamasek) என்று அப்போது பெயர்பெற்றிருந்த சிங்கப்பூருக்கு வந்து பின் மலாக்கா மாநிலத்தைக் கைப்பற்றினான். இக்காலகட்டத்தில் தமிழர்கள் இந்தச் சுல்தானின் அரண்மனையில் பிரதம அமைச்சர், நிதியமைச்சர் மற்றும் பாதுகாப்புத் தளபதிகளாக இருந்துள்ளார்கள்.

சுல்தான் பரமேஸ்வராவின் ஆட்சியின்போதுதான் இந்த மாநிலத்துக்கு மலாக்கா என்னும் பெயரை அவன் அதிகாரபூர்வமாகப் பிரகடனப்படுத்தினான். மலாய் மீன்பிடிக் கிராமமாக இருந்த இந்தக் கடற்கரையை வாணிபத் துறைமுகமாக்கியது அப்போது அங்கிருந்த தமிழர்கள்தாம். அவர்கள் மலாக்கா மாநிலத்தில் இருந்தவர்களைவிடக் கல்வியிலும் வியாபாரத்திலும் சிறப்புற்றிருந்தார்கள். எனவேதான் அவர்களைப் பரமேஸ்வரா தனது அரண்மனையில் முக்கியப் பதவிகளில் அமர்த்தினான்.

1414இல் இந்தோனேசியாவின் ஆச்சே (Acceg) நகரத்துக்குச் சென்ற பரமேஸ்வரா அங்கே பாசாய் (Pasai) பகுதி இளவரசியை மணந்ததன் மூலம் முஸ்லிமாக மாறித் தனது பெயரைச் சுல்தான் ஸ்கந்தர் ஸா (Sultan Skandar Shah) என மாற்றிக்கொண்டான். அப்போதைய மலாயாத் தீபகற்பத்தில் இவனே முதல் முஸ்லிம் சுல்தான்.

பரமேஸ்வரா, சுல்தான் ஸ்கந்தர் ஸா என முஸ்லிமாக மாறினாலும் அரண்மனையிலும் வாணிபத்திலும் வெற்றிகரமாக இருந்த தமிழர்கள் யாரும் மதம் மாறாமல் இந்துக்களாகவே இருந்தார்கள். தங்களுக்கென்று சிறிய கோயில் ஒன்றையும் கஜபதி அம்மான் என்னும் பெயரில் இவர்கள் ஏற்படுத்திக்கொண்டார்கள்.

வர்த்தக நிமித்தம் வந்த இவர்கள் திரும்பவும் தமிழகம் திரும்பாமல் இங்கேயே தங்க வேண்டிய சூழல் உருவாகியது. தமிழகத்திலிருந்து பல்வேறு உணவுப் பொருட்களைப் பருவக்காற்றை ஒட்டிவந்த கப்பல்கள் மூலம் இறக்குமதி செய்து வியாபாரம் செய்துள்ளார்கள்.

வர்த்தகர்களாக வந்த இவர்களில் வெகு சிலரைத் தவிர மற்றவர்கள் பெண்களை அழைத்துவரவில்லை. இதன் காரணமாக இங்கே மலாய்ப் பெண்களை மணமுடித்துக்கொண்டார்கள். அப்போது சீனாவிலிருந்தும் மலாக்கா துறைமுகத்துக்குப் பெருமளவில் கப்பல்கள் வரத் தொடங்கின. அப்படி வியாபாரம் நிமித்தம் வந்த சீனர்களோடு உறவு நீடித்ததால் சீனப் பெண்களையும் இந்தத் தமிழ் வாணிபர்கள் மணமுடித்தார்கள்.

அரண்மனையில் அரசியல் செல்வாக்கும் பொருளாதாரத்தில் மேன்மையும் கொண்டிருந்த இவர்களை மணந்துகொள்ள மலாய், சீன இனப் பெண்கள் முன்வந்தது ஆச்சரியமல்ல.

போர்த்துக்கீசியர்கள் (1511 - 1641) மலாக்காவைக் கைப்பற்றியபோதும் மலாக்கா செட்டிகளின் செல்வாக்குக் குறையவில்லை. போர்த்துக்கீசியர்களுக்கு அணுக்கமாக இருந்துவந்துள்ளார்கள். ஏறக்குறைய 130 ஆண்டுகள் மலாக்கா நகரம் போர்த்துக்கீசியர்களின் ஆட்சியில் இருந்தபோது இங்கே மத மாற்றங்கள் நிகழ்ந்தன. வியாபாரத்தைவிட மதமாற்றத்தில்தான் போர்த்துக்கீசியர்கள் அதிகக் கவனமுடையவர்களாக இருந்துள்ளார்கள் என்பது வரலாற்று உண்மை. இந்தியாவில் அவர்கள் வந்த இடங்களிலும் இதுதான் நடந்துள்ளது.

இதில் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் பெரும் பகுதித் தமிழர்கள் தங்களின் இந்து மதத்திலிருந்து மாறவே இல்லை. பிற இனப் பெண்களை மணந்தபோதும் அவர்கள் கோயில் வழிபாடு போன்றவற்றை விட்டுக்கொடுக்காமல் இருந்துள்ளார்கள்.

வெகு சிலர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார்கள். மலாய், சீன இனப் பெண்களைப் போர்த்துக்கீசியர்கள் மணந்துகொண்டார்கள். இந்தியாவில் உள்ள ஆங்கிலோ - இந்திய இனத்தைப் போல இங்கே ‘போர்த்துக்கீசியர்’ என்ற தனி இனம் ஒன்று உருவாகியது. இன்றும் போர்த்துக்கீசியர்கள் என்ற அடையாளத்துடன் இவர்கள் வாழ்கிறார்கள். போர்த்துக்கீசியர் காலனி என்றே அரசாங்கம் அதிகாரபூர்வமாக இவர்கள் வாழும் இடத்தை அறிவித்துள்ளது. இவர்களுக்கு அரசியல் சட்டப்படி ‘பூமி புத்ரா’ (மண்ணின் மைந்தர்கள்) என்னும் அந்தஸ்தும் தரப்பட்டுள்ளது.

மலேசியாவின் அரசியல் அமைப்புச் சட்டப்படி 1957இல் நாடு சுதந்திரமடைந்தபோது மலாய்க்காரர்களுக்கு அரசியல் சாசனத்தில் தனிச்சலுகைகள் வழங்கப்பட்டன. கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பு, அரசாங்கக் குத்தகைகள் அனைத்திலும் இந்தச் சிறப்புச் சலுகைகள் ஏற்படுத்தப்பட்டன. பின்தங்கிய சமூகம் என்று அப்போது இதற்குக் காரணம் கூறப்பட்டது.

இந்தச் சிறப்புச் சலுகை பெறும் இனமாகப் போர்த்துக்கீசியச் சமூகமும் சேர்த்துக்கொள்ளப்பட்டது.

இதில் பெரிய சோகம் என்னவென்றால் 1511இல் வந்து இங்கே மதமாற்றங்கள் செய்தபோதும் இங்குள்ள பெண்களை மணந்தபோதும்தான் இப்போதுள்ள போர்த்துக்கீசிய சமூகம் உருவானது. ஆனால் ‘பரமேஸ்வரா’ என்ற இந்து மன்னனாகவும் பிறகு மலாயாவின் முதல் முஸ்லிம் சுல்தானாகவும் அதிகாரபூர்வமாக மலாய் வரலாற்றில் கூறப்பட்டவனின் அரசாங்கத்தில் 14ஆம் நூற்றாண்டிலேயே முதலமைச்சராகவும் நிதியமைச்சராகவும் இருந்த ‘மலாக்கா செட்டிகளுக்கு’ பூமி புத்திரா அந்தஸ்து வழங்கப்படாதது ஏன்? இதை இங்கே உள்ள இந்திய அரசியல் கட்சிகளும் பேசவில்லை. மலாக்கா செட்டிகளும் இதைப் பற்றிப் பேசவில்லை. அல்லது பேசச் சரியான தலைமைத்துவம் அவர்களிடம் இல்லை.

போர்த்துக்கீசியர்கள் 1511இல் மலாக்காவைக் கைப்பற்றியபோது அவர்கள் ஒரு புதிய வரைபடத்தை உருவாக்கியுள்ளார்கள். அதில் கடற்கரையோரம் அமைந்த ஒரு கிராமத்தை ‘கம்போவ் கிலீவ்’ என்று குறிப்பிட்டுள்ளார்கள். கலிங்கப்பட்டணத்திலிருந்து வந்த தமிழர்களை ‘கிலீவ்’ என்றே மலாய்க்காரர்கள் அழைத்தார்கள். அக்காலத்தில் கௌரவமான சொல்லாக இருந்த இந்த ‘கிலீவ்’ இன்று தமிழர்களை இழிவுபடுத்தும் சொல்லாக மாறிவிட்டது.

போர்த்துக்கீசியர்களோடு மலாக்கா செட்டிச் சமூகம் புரிந்துணர்வுடன் செயல்பட்டுள்ளது. போர்த்துக்கீசியக் கடற்படைத் தலைமைத் தளபதி அல்பான்சோ டி அல்புகர்க் எழுதியுள்ள குறிப்பில் மலாக்காவை அங்குள்ள மக்களிடம் இணக்கமாக அரசாட்சி நடத்த மலாக்கா செட்டி சமூகம் கணிசமாக உதவியதால் உயர்பதவிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டதாகக் குறித்துள்ளார். இவ்வாறு கைகோத்துச் செயல்பட்டதால் மலாக்கா செட்டிச் சமூகம் தங்குதடையின்றி வாணிபம் செய்ய முடிந்துள்ளது.

1641இல் டச்சுப் படை மலாக்காவைப் போர்த்துக்கீசியரிடமிருந்து கைப்பற்றியது. 1824 வரை டச்சு அரசாங்கத்தில் ‘மலாக்கா செட்டி’ சமூகம் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. டச்சுக்காரர்கள் வாணிபத்தைத் தங்கள் வசம் எடுத்துக்கொண்டார்கள். அதுவரை வாணிபத்தில் முதலிடத்தில் இருந்த இவர்களின் வாழ்க்கை முறை படுமோசமாகி வாழ்வாதாரத்திற்கு விவசாயத்தை நாட வேண்டிய சூழலிலிருந்து தொடங்கி இவர்களின் வீழ்ச்சி ஆரம்பித்தது.

‘கம்போவ் கிலீவ்’ என்ற வியாபார இடத்தை டச்சுக்காரர்கள் மலாக்கா செட்டிகளிடமிருந்து பறித்து அதற்கு டச்சுக் கிராமமென்று மறுபெயர் சூட்டினார்கள்.

மலாக்கா செட்டிகள் இந்து மதத்தில் பிடிவாதமாக இருந்த காரணத்தால் டச்சுக் கவர்னர் போர்ட் (ஙிஷீக்ஷீt) 15,879 சதுர அடி கொண்ட நிலத்தைக் கோயில் கட்டுவதற்கு வழங்கியுள்ளார். 1781இல் டச்சு அரசாங்கக் கெசட்டில் இது நிரந்தரப் பட்டாவுடன் கூடிய நிலமாக அவர்களுக்கு வழங்கப்பட்டதற்கான குறிப்பு உள்ளது.

‘ஸ்ரீபொய்யாத விநாயகர் மூர்த்தி’ என்னும் பெயரில் இக்கோயில் கட்டப்பட்டது. எழுத்துபூர்வமான மலாயா வரலாற்றில் இதுவே இப்பிரதேசத்தில் கட்டப்பட்ட முதல் இந்துக் கோயில் - இன்றும் வரலாற்றுச் சின்னமாக உள்ளது. மலாக்கா செட்டிகளின் ஆதி வரலாறு இது.

ஐந்திலிருந்து ஏழு தலைமுறைகளுக்குப் பின்னர் அவர்களின் இப்போதைய நிலை என்ன?

1962ஆம் ஆண்டிலும் 1999ஆம் ஆண்டிலும் இரண்டு முறை அவர்களின் இருப்பிடம் சென்று சில ஆய்வுகள் செய்துள்ளேன். இப்போது இந்தக் கட்டுரைக்காகவும் அங்கே சென்று வந்தேன்.

சீன - மலாய் இனத்தவரோடு கலப்பு மணம் செய்த காரணத்தால் தங்களின் தாய்மொழியான தமிழை அவர்கள் முற்றாக இழந்துவிட்டார்கள். பல்வேறுபட்ட பண்பாட்டு மாற்றங்களுக்குப் பிறகும் அவர்கள் இன்றும் தங்களை இந்து மதத்தவர் எனக் கூறிக்கொள்வதில் பிடிவாதமாக இருக்கிறார்கள். தொழில் நிமித்தம் தலைநகர் கோலாலம்பூர், சிங்கப்பூர், பினாங்கு என்று போய்விட்டாலும் இன்றும் சித்திரை மாதம் ஸ்ரீமுத்து மாரியம்மன் திருவிழாவில் கலந்துகொள்வதைக் கடமையாகக் கொண்டுள்ளார்கள்.

மலாக்கா கஜபெராவ் என்னும் இடத்தில் இன்றும் 100 குடும்பத்தினர் ஒரே இடத்தில் வசிக்கிறார்கள். தியாகராஜன் என்பவர் இவர்களுக்குத் தலைவராக உள்ளார் - ‘கஜபெராவ்’ என்று அதிகாரபூர்வ நகராக உள்ள இந்த இடம் முற்காலத்தில் ‘காஞ்சிபுரம்’ என்றே விளங்கியுள்ளது.

தலைவர் தியாகராஜனின் மனைவி சீன வம்சா வழியில் வந்த மலாக்கா செட்டியாவார். வீட்டில் சேலை கட்டுகிறார். பூஜை அறையில் அனைத்து இந்துக் கடவுள்களும் இருக்கிறார்கள். அந்த அறையை எனக்குக் காட்டினார்கள். பெருமிதமும் மகிழ்ச்சியும் பொங்க அவர் தேவாரத்தை ராகத்துடன் பாடினார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தேவாரம் பாடத் தெரிந்த இவருக்கு ஏன் தமிழ் தெரியவில்லை. எழுதப்பட்ட ஒரு தாள் அவர் கையில் இருந்தது. எட்டிப் பார்த்தபோதுதான் உண்மை தெரிந்தது. ஆங்கில எழுத்துருவில் எழுதப்பட்டிருந்த தேவாரத்தைத்தான் அவர் பாடியுள்ளார்.

அவர்களுக்கு ஒரே மகள். திருமணம் முடிந்துவிட்டது. திருமண ஆல்பத்தைக் காட்டினார்கள். இந்து ஆகமங்கள் சிறிதும் வழுவாத கோயிலில் திருமணம் நடைபெற்றுள்ளது. படத்தில் அனைவரும் வேட்டி, சேலை உடுத்திக் கூட்டமாக இருக்கிறார்கள். மாப்பிள்ளை தாலி கட்டுகிறார். அவர் முகம் அசல் தமிழ் முகமாக இருந்தது.

இவர் ‘மலாக்கா செட்டி’ சமூகத்தவரா என்று தலைவர் தியாகராஜனிடம் கேட்டேன்.

“இல்லை அசல் தமிழர்” என்றார்.

“எப்படி?”

“நாங்கள் எங்கள் மொழியை ஏழு தலைமுறைகளாக இழந்துவிட்டோம். இந்து மதம் மட்டுமே எங்களை அடையாளப்படுத்த எங்கள் மூதாதையர்கள் விட்டுச் சென்ற பெரிய சொத்து. அதை விடாமல் காலங்காலமாகக் காத்துவருகிறோம். எங்களை அடையாளப்படுத்த ஐந்து பெரிய கோயில்களைக் கட்டியுள்ளோம். ஐந்து சிறிய ஆலயங்களும் உள்ளன. பண்பாட்டு மாற்றத்தால் நாங்கள் தமிழ்மொழியை இழந்துவிட்டோம். இனியும் அப்படி இருக்க முடியாது. அதனால் தமிழ் படித்த இளைஞர்களுக்கே எங்கள் பெண்களைத் திருமணம் செய்துவைக்கிறோம். எங்கள் பேரப்பிள்ளைகளாவது தமிழ் தெரிந்தவர்களாக மாறிவிட இதை ஒரு வாய்ப்பாகக் கருதுகிறோம். மிக உறுதியாகத் தியாகராஜன் பேசினார்.

மொழியை இழந்துவிட்ட சோகம் அவரின் குரலில் தெரிந்தது. அவர் மனைவி சீனத்தை இழந்துவிட்டாலும் தன் கணவரின் தாய்மொழிதான் தனது மொழி என்பதில் உறுதியாக இருந்தார். மொழி இழப்பு என்பது எவ்வளவு சோகமானது என்பது நம்மில் பலருக்கு விளங்குவதில்லை. தனது தாய்மொழியை இழந்த இந்த மலாக்கா செட்டிகளை அவர்கள் ஒருமுறை வந்து பார்த்தால் அதன் முக்கியத்துவம் புரியும்.

தியாகராஜன் தன் வீட்டின் எதிர்ப்புறமிருந்த ஒரு வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்றார். தமிழ் தெரிந்த இளைஞரை மணந்து மூன்று பிள்ளைகளுடன் குடும்பமாக அமர்ந்து ஒரு ஞாயிற்றுக்கிழமையில் உணவு சாப்பிட்டுக் கொண்டாடிக்கொண்டிருந்தார்கள். பிள்ளைகள் தமிழ் பேசுகிறார்கள். வீட்டில் இந்துக் கடவுள்களும் சீனக் கடவுள்களும் பக்கம் பக்கமாக இருந்தார்கள். அந்தப் படங்களுக்கு வைக்கப்பட்ட வாழைப்பழங்களில் சீன ஊதுவத்திகள் புகைந்துகொண்டிருந்தன - பண்பாட்டு மாற்றம் ஒன்று அங்கே நிகழ்ந்துகொண்டிருந்தது. இதில் திடுக்கிடும் மிகப் பெரிய ஒரு செய்தியைத் தலைவர் தியாகராஜன் என்னிடம் கூறியபோது என்னால் அதை ஜீரணிக்க முடியவில்லை.

“நாங்கள் முதலியார் சாதியைச் சேர்ந்தவர்கள். எங்கள் மகளை ஒரு முதலியாருக்குத்தான் திருமணம் செய்துகொடுத்துள்ளேன். எந்தக் காரணம் கொண்டும் சாதியை விட்டுக்கொடுக்கக் கூடாது” என்று என் அப்பா அடிக்கடி சொல்வார். இப்படி அவர் கூறியபோது சாதி பற்றிய பெருமிதம் அவர் முகத்தில் தாண்டவமாடியது.

“உங்கள் மனைவி சீனச் சமூகத்தவர்போல் இருக்கிறாரே. அவர் என்ன சாதி?”

அவர் அந்தக் கேள்வியை எதிர்பார்த்தவர்போலவே என்னைப் பார்த்துச் சிரித்தார்.

“என் மனைவியின் அப்பா முதலியார் வகுப்பைச் சேர்ந்தவர். அதனால்தான் என் அப்பா இந்தக் கலியாணத்தை நடத்தினார்.”

அவருக்குத் தமிழ் தெரியவில்லை. மலாய் மொழியிலும் ஆங்கிலத்திலும் என்னிடம் உரையாடினார். ஆனால் சாதி பற்றிச் சொல்லும்போது ‘முதலியார்’ என்று அழுத்தமாகத் தமிழில் கூறினார்.

1824இல் ஆங்கிலேயர்கள் மலாக்காவைக் கைப்பற்றினார்கள். காலனித்துவ ஆட்சியில் அரசாங்கத்தின் சாதாரண வேலைகளில் இவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்தது. 1941 வரையில் ஜப்பானியர் படையெடுப்புக்கு முன்புவரை இவர்களின் வாழ்க்கை சிறிது மாறியது.

1957இல் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இவர்கள் இந்திய அரசியல் கட்சிகளாலும் இந்து சங்க அமைப்புகளாலும் கவனிக்கப்படாமலேயே இருக்கிறார்கள். அவர்களே கோயில்கள் கட்டிக்கொண்டு தீபாவளி, பொங்கல், மாரியம்மன் திருவிழா என வாழ்ந்துவருகிறார்கள்.

ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாரம், திருவாசகம், சிவபுராணம் என்று தங்கள் பிள்ளைகளுக்குக் கோயில்களில் வகுப்பு நடத்துகிறார்கள். தங்கள் மூதாதையர்கள் ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன் விட்டுச்சென்ற இந்து மதப் பண்பாட்டை விடாமல் காப்பதில் அவர்கள் யாருடனும் சமரசம் செய்துகொள்ளத் தயாராய் இல்லை. இப்போது தங்கள் தாய்மொழியை மீட்டெடுக்கும் ஆவலோடு தங்கள் பிள்ளைகளைத் தமிழ் தெரிந்த முதலியார்களுக்கே திருமணம் செய்துவைக்கப் பெரும்பாடுபடுகிறார்கள். உணவு வகையில் தமிழ் வகை உணவுகளையே கடைப்பிடிக்கிறார்கள்.

அரசாங்கம் ‘மலாக்கா செட்டி’ என்ற இவர்கள் வாழும் பகுதியைச் சுற்றுலாப் பகுதியாக்கியுள்ளது. இவர்கள் வாழும் பகுதியின் நுழைவாயில்கூட இந்து மதக் கலாச்சாரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் பற்றி ஒரு குறிப்பையும் இங்கே பளிங்குக்கல்லில் வைத்துள்ளார்கள். இவர்களின் அடையாளங்களைக் காணச் சிறிய மியூசியமும் உள்ளது.

மிக மென்மையானதாகவும் அன்பின் அடையாளமாகவும் இந்தச் சமூகம் உள்ளது. இவர்கள் அமைதியானவர்கள். இந்த அமைதிதான் இவர்களுக்கு எதிரியாகவும் இருக்கிறது.

மலேசிய சுற்றுலாத் துறை தங்களைக் காட்சிப் பொருளாக ஆக்கிய அளவு தங்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது இவர்களின் கவலையாக இருக்கிறது. ஒருவேளை சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இந்த மலாக்கா செட்டி சமூகம் இதேபோல் இருந்தால்தான் அத்துறைக்கு இலாபமாக இருக்கக்கூடும்.

--
செல்வன்

செல்வன்

unread,
Sep 18, 2011, 10:04:09 PM9/18/11
to mintamil, தமிழமுதம், பண்புடன், தமிழ் சிறகுகள்
பதிவுக்கான சுட்டி:

மலாக்கா செட்டி சமூகத்தினரை பற்றிய இரு யுடியூப் விடியோக்கள்

http://www.youtube.com/watch?v=dLWv0Ri1h_8&feature=related

rajam

unread,
Sep 18, 2011, 10:14:27 PM9/18/11
to mint...@googlegroups.com
கட்டுரைக்கும் சுட்டிக்கும் நன்றி, செல்வன்.

கலிங்கப்பட்டணத்திலிருந்தும் ஏனைய தமிழகத் துறைமுகங்களிலிருந்தும் பாய்மரக்கப்பல்களில் வாணிபம் செய்ய வந்த இவர்கள் ‘மலாக்கா செட்டி’ (Malacca Chetti) என்றே அழைக்கப்பட்டார்கள். ‘செட்டி’ என்ற இந்த வார்த்தை வியாபாரிகள் என்னும் பொருள் கொண்டு மலாய் மொழியில் வழங்கப்பட்டது. நாட்டுக் கோட்டைச் செட்டியார்களுக்கும் இந்த மலாக்கா செட்டிகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

ஆ, அப்படியா? அப்றம் ... சிலப்பதிகாரமும், மணிமேகலையும் காட்டும் "செட்டி / எட்டி" ஆகியோர் பற்றிய வணிக, கடல் கடந்து சென்ற குறிப்புக்களை எப்படிப் புறக்கணிக்க முடியும்? 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Ganesan

unread,
Sep 18, 2011, 10:44:31 PM9/18/11
to மின்தமிழ்

On Sep 18, 9:04 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> பதிவுக்கான சுட்டி:
>
> http://www.kalachuvadu.com/issue-135/page51.asp
>

வேற்றுமொழிகள் பேசுவதால் பிறநாக்கான்
பிரணாக்கான் எனப்படுகிறார்களாம்:
http://senthilvayal.wordpress.com/2010/09/05/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5/

உலகத் தமிழ் மாநாட்டு மலர்களில் சில கட்டுரைகள் இருக்கும்.

நா. கணேசன்

செல்வன்

unread,
Sep 18, 2011, 11:05:02 PM9/18/11
to mint...@googlegroups.com

2011/9/18 rajam <ra...@earthlink.net>

ஆ, அப்படியா? அப்றம் ... சிலப்பதிகாரமும், மணிமேகலையும் காட்டும் "செட்டி / எட்டி" ஆகியோர் பற்றிய வணிக, கடல் கடந்து சென்ற குறிப்புக்களை எப்படிப் புறக்கணிக்க முடியும்? 

இவர்கள் முதலியார்கள் என கட்டுரையில் சொல்லி உள்ளது அம்மா..சிலப்பதிகார காலத்தில் சென்ற செட்டியார் மக்கள் பர்மாவில் தங்கி இருக்கலாம் என கருதுகிறேன்

rajam

unread,
Sep 18, 2011, 11:19:57 PM9/18/11
to mint...@googlegroups.com
"முதலியார்"களைச் "செட்டி" என்று ஏன் குறிக்கவேண்டும்? புரியவில்லையே.

N. Ganesan

unread,
Sep 18, 2011, 11:23:43 PM9/18/11
to மின்தமிழ்

On Sep 18, 10:19 pm, rajam <ra...@earthlink.net> wrote:
> "முதலியார்"களைச் "செட்டி"  
> என்று ஏன்  
> குறிக்கவேண்டும்?  
> புரியவில்லையே.
>

சிலோனில் முதலி என்பது பட்டம். அரசாங்கத்தால் விற்கப்பட்டது.
சிங்களருக்கும் பிரிட்டிஷ் காலத்தில் பெருவணிகருக்கும்,
சுங்கவரி வசூல் செய்ய அதிகாரம் உள்ளோருக்கும் கொடுத்த பட்டம்
இருந்தது.

நா. கணேசன்

> On Sep 18, 2011, at 8:05 PM, செல்வன் wrote:

> >www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,  

> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to minTamil-

> > unsub...@googlegroups.com

செல்வன்

unread,
Sep 18, 2011, 11:28:33 PM9/18/11
to mint...@googlegroups.com

2011/9/18 rajam <ra...@earthlink.net>

"முதலியார்"களைச் "செட்டி" என்று ஏன் குறிக்கவேண்டும்? புரியவில்லையே.

வணிகம் செய்பவர்களை செட்டி என அழைக்கும் வழக்கம் காரணமாக இவர்களை செட்டி என அழைத்ததாக படித்தேன் அம்மா.

N. Ganesan

unread,
Sep 18, 2011, 11:29:13 PM9/18/11
to மின்தமிழ்

On Sep 18, 10:05 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2011/9/18 rajam <ra...@earthlink.net>
>
> > *ஆ, அப்படியா? அப்றம் ... சிலப்பதிகாரமும், மணிமேகலையும் காட்டும் "செட்டி /

> > எட்டி" ஆகியோர் பற்றிய வணிக, கடல் கடந்து சென்ற குறிப்புக்களை எப்படிப்

> > புறக்கணிக்க முடியும்? *

>
> இவர்கள் முதலியார்கள் என கட்டுரையில் சொல்லி உள்ளது அம்மா..சிலப்பதிகார
> காலத்தில் சென்ற செட்டியார் மக்கள் பர்மாவில் தங்கி இருக்கலாம் என கருதுகிறேன்
> --

செட்டியார்கள் இந்தோனேசியா (ஐஞ்ஞூற்றுவர்) கல்வெட்டுக்களில் 1000
ஆண்டுகளுக்கு
முன்னரெ உள்ளனர். வியட்னாம் (அப்போது அன்னாம் வரை போயினர்).
அறிஞர் இரா. நாகசாமி என்னிடம் ஸ்லைட்ஸ் காட்டினார். அங்கோர் வாட்
கோபுரத்தில்
அதை முதலில் காட்டுவனங்களில் கண்டுபிடித்தவர் பிரென்ச் மனிதர் என்று
வரலாறு கூறுகிறது. ஆனால், அதற்கு முந்தைய graffiti-ல் தமிழில்
கையெழுத்துக்கள்
இருக்கின்றன.

---------------

http://vallinam.com.my/jan09/essay.html
”செட்டி என்ற சொல்லை எழுதுவதில் மிகத் தெளிவாகவே இருந்தார். எங்கள்
சமூகத்தைப் பலர் ' CETI ' என்றே தவறாக எழுதி வரு கின்றனர்; அதன் பொருள்
வேறு என்று கூறிவிட்டு ஒரு வெற்றுத் தாளில் 'CHETTI' என்று பெரிதாய்
எழுதி இப்படித்தான் எழுத வேண்டும் என என்னிடம் காண்பித்தார். முதலில்
கூறப்பட்ட சொல் முழுக்க முழுக்க தமிழ்ச் சமுதாயப் பிரிவினரையும் வட்டித்
தொழில் புரிபவரையும், பின்னது கலிங்கப்பட்டணத்தின் தொன்ம உறவையும், 14 ம்
நூற்றாண்டில் மலாக்கா துறைமுகக் காலத்திலிருந்து உருவான புதுவணிகை
சமுதாயம் எனவும், கடல் வழி வாணிபம் செய்த தந்தைக் குல பாரம்பரியம்
என்பதையும் வலியுறுத்தினார். செட்டி, பிள்ளை, நாயக்கர், இராஜா,
படையாச்சி, முதலியார், பத்தர், பண்டாரம் கலியன் என்ற பிரிவினர் இவர்
களிடத்தில் வேரூன்றியிருப்பினும் ஒற்றுமையாகவே உள்ளனர்!”

கலியன் என்ற வகுப்பைச் சார்ந்தவர் திருமங்கை ஆழ்வார்.அவரே பாசுரங்களில்

குறித்துள்ளார்.

நா. கணேசன்

செல்வன்

unread,
Sep 18, 2011, 11:34:22 PM9/18/11
to mint...@googlegroups.com
http://vallinam.com.my/jan09/essay.html

இந்து சமயத்தை ஆழமாகக் கற்க வேண்டியே அவர்கள் தமிழைக் கற்று வருகின்றனர். வீட்டில் தமிழ் மொழி புழக்கமின்றி மொழியின் சரளம் எவ்வாறு கைக்கூடும் என்பது எனக்குள் கேள்வி எழுந்தது. இதற்குப் பதிலுரைக்க யத்தனமடைந்தனர். "இதுதான் எங்களின் அடையாளம். மற்றவர்கள் எண்ணுவதுபோல் நாங்கள் முழுக்க முழுக்கத் தமிழர்கள் அல்லர். எங்களைத் தமிழராகப் பார்க்காதீர்கள். அப்பாவின் வழி எங்கள் முதல் தாத்தா, தமிழர்தான். ஆனால், எங்கள் கொள்ளுப் பாட்டி முதல், இன்றைய அம்மா வரை யாரும் தமிழரல்லரே! அவர்கள் தமிழையே பேசியதில்லை! இம்மண்ணைச் சேர்ந்த பெண்கள்! மேலும்,அவர்கள் இசுலாத்திற்கு முந்தைய மலாய்க்காரப் பெண்கள், ஜாவானியப் பெண்கள், சீனப் பெண்கள், பாத்தாக் பெண்கள்தானே? இப்படியிருக்க எங்ஙனம் தமிழ் எங்களுக்குத் தாய்மொழியாக இருக்க முடியும்? தமிழகத்திலும் எங்களுக்கு இரத்த உறவுடையோர் இருப்பதை எப்படி அடையாளம் காண்பது? ஆனாலும்,பிற மொழிகளைவிட தமிழை அதிகமாகவே நேசிக்கிறோம். ஆனால், தலைவர்கள் சிலர் எங்களுக்குத் தமிழ் மொழிப் பற்றில்லை என்று கோடி காட்டியபடி வரலாறு தெரியாமல் பேசி வருவது வேதனையளிக்கிறது. நாங்கள் தனித்து நின்று வாழ்வை அடையாளப்படுத்துவது தவறா?" எனக் கேட்கின்றனர் இந்த மூன்றாம் படிவ இளைஞர்கள் இருவரும். எதிர்காலத்தில் காஜா பெராங் கிராமத்தை விரிவாக்கம் செய்து தமது செட்டி சமூகத்தின் இருத்தலை உறுதிபடுத்த அரசிடம் முறையாகக் கோரிக்கை வைத்து அதை எப்படியும் நிறைவேற்றப் போவதாகத் தீர்க்கமுடன் கூறினார் இத்தலைமுறையைச் சேர்ந்த ஜீவனேசுவரன். எந்தவொரு சமூகமும் தாம் குறுகிப் போவதையுணரும் பொழுதுதான், பெரிய பெரிய இலட்சியங்கள் கிளர்ந்தெழும். இன்று மலாக்கா செட்டிக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கிற அச்சம், நாளை...?

அமெரிக்காவில் இன்னும் ஓரிரு தலைமுறைகளில் தமிழ் சமூகத்துக்கும் இப்பிரச்சனை வரலாம்.

--

rajam

unread,
Sep 19, 2011, 12:46:13 AM9/19/11
to mint...@googlegroups.com
குறுக்கீட்டுக்கு மன்னிக்கவும்.

மிகப் பல ஆண்டுகளுக்குமுன் கலிபோர்னியாவில் ஓர் இணையைச் சந்தித்தேன் -- பிரெஞ்ச் ரீயூனியன் (French Reunion) என்ற நாட்டிலிருந்து. அந்தப் பெண் நல்ல கருத்தம்மா! ஆடவர் வெள்ளைக்காரர். இருவரும் எப்படியோ ... இங்கே வந்து தமிழ்ப் படிப்பில் (அவளைவிட அவர்) ஈடுபாடு கொண்ட நிலை. கருப்பணசாமி கோயிலில் 18 படி ஏறி சத்தியம் பண்ணினாலும், செல்வன் மாதிரி ... துண்டு போட்டுத் தாண்டி ... சொன்னாலும், அந்தப் பொண்ணுக்கும் தமிழ் மொழிக்கும் தொடர்பு இருக்கு-னு சொல்லவே எனக்குத் தோன்றவில்லை! ஆனால் அவள் சொன்னது ... அவர் முன்னோர் தமிழர் என்று.

அமெரிக்காவில் இன்னும் ஓரிரு தலைமுறைகளில் தமிழ் சமூகத்துக்கும் இப்பிரச்சனை வரலாம்.
காத்திருக்கத் தேவையே இல்லை! ஏற்கனவே அப்படி ஆகியதைப் பார்த்திருக்கிறேன்; ஆகிவருவதைப் பார்க்கிறோம். அதைப் புரிந்துகொண்டு ... ஒத்துக்கொண்டு .... ஏற்றுக்கொண்டால் ... எல்லார் வாழ்வும் வளமாகும்! :-) :-) :-)
மலாக்கா செட்டிகள் இழை தொடரட்டும். விடை பெறுகிறேன். நன்றி!

செல்வன்

unread,
Sep 19, 2011, 1:06:57 AM9/19/11
to mint...@googlegroups.com

2011/9/18 rajam <ra...@earthlink.net>

மிகப் பல ஆண்டுகளுக்குமுன் கலிபோர்னியாவில் ஓர் இணையைச் சந்தித்தேன் -- பிரெஞ்ச் ரீயூனியன் (French Reunion) என்ற நாட்டிலிருந்து. அந்தப் பெண் நல்ல கருத்தம்மா! ஆடவர் வெள்ளைக்காரர். இருவரும் எப்படியோ ... இங்கே வந்து தமிழ்ப் படிப்பில் (அவளைவிட அவர்) ஈடுபாடு கொண்ட நிலை. கருப்பணசாமி கோயிலில் 18 படி ஏறி சத்தியம் பண்ணினாலும், செல்வன் மாதிரி ... துண்டு போட்டுத் தாண்டி ... சொன்னாலும், அந்தப் பொண்ணுக்கும் தமிழ் மொழிக்கும் தொடர்பு இருக்கு-னு சொல்லவே எனக்குத் தோன்றவில்லை! ஆனால் அவள் சொன்னது ... அவர் முன்னோர் தமிழர் என்று.

நான் படித்தவரை 

ரியூனியன் தீவுகளில் பாண்டிசேர் தமிழர்கள் குடியேற்ரபட்டனர்

அவர்களில் பலர் துவக்கத்தில் கட்டாயமாக கிரிஸ்தவ மதத்துக்கு மதம் மாற்றபட்டனர்.மத சுதந்திரம் கிடைத்தபின்னரும் நில உடமையாளர்கள் அவர்களை பிரெஞ்சு/கிறிஸ்தவ அடையாளத்தை ஏற்க வலியுறுத்தினர்.பொட்டு வைத்தல்,புடவை முதலிய அடையாளங்கள் தடுக்கபட்டன.பெயர்கள் பிரெஞ்சுமயமாக்கபட்டன.ழான், மேரி போன்ற பெயர்கள் தமிழர்கள் மத்தியில் பிரபலமாக வைக்கபட்டது.

தம் கலாசாரத்துக்குள் மணம் செய்ய இயலாத சூழல் பிற ஆபிரிக்க பெண்களை மணக்கும் நிலைக்கு தமிழரை தள்ளியது.அதனால் பெயரில் தமிழ் இருந்தாலும் மொழியை அவர்களால் பாதுகாக்க இயலவில்லை.

காத்திருக்கத் தேவையே இல்லை! ஏற்கனவே அப்படி ஆகியதைப் பார்த்திருக்கிறேன்; ஆகிவருவதைப் பார்க்கிறோம். அதைப் புரிந்துகொண்டு ... ஒத்துக்கொண்டு .... ஏற்றுக்கொண்டால் ... எல்லார் வாழ்வும் வளமாகும்! :-) :-) :-)

தமிழ்நாடே சீக்கிரம் ஆங்கில நாடாகிவிடும் மாதிரி இருக்கு அம்மா...நம்மை விட அவர்கள் பாஸ்ட்:-)

மலாக்கா செட்டிகள் இழை தொடரட்டும். விடை பெறுகிறேன். நன்றி!

Not needed. புலம் பெயர் தமிழர்களை பற்றியும் இதில் விவாதிக்கலாம்.பொதுவானதையும் எழுதலாம்.தலைப்புக்குள் மட்டும் சுற்றிவருவது சரிவராது.

Dhivakar

unread,
Sep 19, 2011, 3:16:53 AM9/19/11
to mint...@googlegroups.com
Selvan,

Thiru Mohammathu article was no nice. I am for the past several years, doing a research on tamil settlers in this part of the country.

It was found that there are more than 20 family names in Telugu country had the origin of Tamil. They belong to Tamilnadu but lost with the language. 

மொழியை இழந்துவிட்ட சோகம் அவரின் குரலில் தெரிந்தது. எங்கள் பேரப்பிள்ளைகளாவது தமிழ் தெரிந்தவர்களாக மாறிவிட இதை ஒரு வாய்ப்பாகக் கருதுகிறோம். மிக உறுதியாகத் தியாகராஜன் பேசினார். 

This is true here too. I have mentioned this in my speech at Kovai Semmozhi Manadu too

தமிழன் எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும். ஆனால் தம் மொழியை மறப்பதென்பதும், தம் தலைமுறையினருக்குக் கற்பிக்காமல் போவதும் பாவப்பட்ட செயலாகக் கருதுகிறேன். இன்றைக்கு செல்லும் தமிழன் தன் மொழியை மறப்பதால் நாளைய தலைமுறையினரின் கவலைக்கும், அவர்களின் திட்டுதலுக்கும் ஆளாகிறான் என்பதை நிச்சயம் உணரவேண்டும்.

தி

2011/9/19 செல்வன் <hol...@gmail.com>
அவர் மனைவி சீனத்தை இழந்துவிட்டாலும் தன் கணவரின் தாய்மொழிதான் தனது மொழி என்பதில் உறுதியாக இருந்தார். மொழி இழப்பு என்பது எவ்வளவு சோகமானது என்பது நம்மில் பலருக்கு விளங்குவதில்லை. தனது தாய்மொழியை இழந்த இந்த மலாக்கா செட்டிகளை அவர்கள் ஒருமுறை வந்து பார்த்தால் அதன் முக்கியத்துவம் புரியும்.

“நாங்கள் எங்கள் மொழியை ஏழு தலைமுறைகளாக இழந்துவிட்டோம். இந்து மதம் மட்டுமே எங்களை அடையாளப்படுத்த எங்கள் மூதாதையர்கள் விட்டுச் சென்ற பெரிய சொத்து. அதை விடாமல் காலங்காலமாகக் காத்துவருகிறோம். எங்களை அடையாளப்படுத்த ஐந்து பெரிய கோயில்களைக் கட்டியுள்ளோம். ஐந்து சிறிய ஆலயங்களும் உள்ளன. பண்பாட்டு மாற்றத்தால் நாங்கள் தமிழ்மொழியை இழந்துவிட்டோம். இனியும் அப்படி இருக்க முடியாது. அதனால் தமிழ் படித்த இளைஞர்களுக்கே எங்கள் பெண்களைத் திருமணம் செய்துவைக்கிறோம்.

தியாகராஜன் தன் வீட்டின் எதிர்ப்புறமிருந்த ஒரு வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்றார். தமிழ் தெரிந்த இளைஞரை மணந்து மூன்று பிள்ளைகளுடன் குடும்பமாக அமர்ந்து ஒரு ஞாயிற்றுக்கிழமையில் உணவு சாப்பிட்டுக் கொண்டாடிக்கொண்டிருந்தார்கள். பிள்ளைகள் தமிழ் பேசுகிறார்கள். வீட்டில் இந்துக் கடவுள்களும் சீனக் கடவுள்களும் பக்கம் பக்கமாக இருந்தார்கள். அந்தப் படங்களுக்கு வைக்கப்பட்ட வாழைப்பழங்களில் சீன ஊதுவத்திகள் புகைந்துகொண்டிருந்தன - பண்பாட்டு மாற்றம் ஒன்று அங்கே நிகழ்ந்துகொண்டிருந்தது. இதில் திடுக்கிடும் மிகப் பெரிய ஒரு செய்தியைத் தலைவர் தியாகராஜன் என்னிடம் கூறியபோது என்னால் அதை ஜீரணிக்க முடியவில்லை.

“நாங்கள் முதலியார் சாதியைச் சேர்ந்தவர்கள். எங்கள் மகளை ஒரு முதலியாருக்குத்தான் திருமணம் செய்துகொடுத்துள்ளேன். எந்தக் காரணம் கொண்டும் சாதியை விட்டுக்கொடுக்கக் கூடாது” என்று என் அப்பா அடிக்கடி சொல்வார். இப்படி அவர் கூறியபோது சாதி பற்றிய பெருமிதம் அவர் முகத்தில் தாண்டவமாடியது.

“உங்கள் மனைவி சீனச் சமூகத்தவர்போல் இருக்கிறாரே. அவர் என்ன சாதி?”

அவர் அந்தக் கேள்வியை எதிர்பார்த்தவர்போலவே என்னைப் பார்த்துச் சிரித்தார்.

“என் மனைவியின் அப்பா முதலியார் வகுப்பைச் சேர்ந்தவர். அதனால்தான் என் அப்பா இந்தக் கலியாணத்தை நடத்தினார்.”

அவருக்குத் தமிழ் தெரியவில்லை. மலாய் மொழியிலும் ஆங்கிலத்திலும் என்னிடம் உரையாடினார். ஆனால் சாதி பற்றிச் சொல்லும்போது ‘முதலியார்’ என்று அழுத்தமாகத் தமிழில் கூறினார்.

1824இல் ஆங்கிலேயர்கள் மலாக்காவைக் கைப்பற்றினார்கள். காலனித்துவ ஆட்சியில் அரசாங்கத்தின் சாதாரண வேலைகளில் இவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்தது. 1941 வரையில் ஜப்பானியர் படையெடுப்புக்கு முன்புவரை இவர்களின் வாழ்க்கை சிறிது மாறியது.

1957இல் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இவர்கள் இந்திய அரசியல் கட்சிகளாலும் இந்து சங்க அமைப்புகளாலும் கவனிக்கப்படாமலேயே இருக்கிறார்கள். அவர்களே கோயில்கள் கட்டிக்கொண்டு தீபாவளி, பொங்கல், மாரியம்மன் திருவிழா என வாழ்ந்துவருகிறார்கள்.

ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாரம், திருவாசகம், சிவபுராணம் என்று தங்கள் பிள்ளைகளுக்குக் கோயில்களில் வகுப்பு நடத்துகிறார்கள். தங்கள் மூதாதையர்கள் ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன் விட்டுச்சென்ற இந்து மதப் பண்பாட்டை விடாமல் காப்பதில் அவர்கள் யாருடனும் சமரசம் செய்துகொள்ளத் தயாராய் இல்லை. இப்போது தங்கள் தாய்மொழியை மீட்டெடுக்கும் ஆவலோடு தங்கள் பிள்ளைகளைத் தமிழ் தெரிந்த முதலியார்களுக்கே திருமணம் செய்துவைக்கப் பெரும்பாடுபடுகிறார்கள். உணவு வகையில் தமிழ் வகை உணவுகளையே கடைப்பிடிக்கிறார்கள்.

அரசாங்கம் ‘மலாக்கா செட்டி’ என்ற இவர்கள் வாழும் பகுதியைச் சுற்றுலாப் பகுதியாக்கியுள்ளது. இவர்கள் வாழும் பகுதியின் நுழைவாயில்கூட இந்து மதக் கலாச்சாரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் பற்றி ஒரு குறிப்பையும் இங்கே பளிங்குக்கல்லில் வைத்துள்ளார்கள். இவர்களின் அடையாளங்களைக் காணச் சிறிய மியூசியமும் உள்ளது.

மிக மென்மையானதாகவும் அன்பின் அடையாளமாகவும் இந்தச் சமூகம் உள்ளது. இவர்கள் அமைதியானவர்கள். இந்த அமைதிதான் இவர்களுக்கு எதிரியாகவும் இருக்கிறது.

மலேசிய சுற்றுலாத் துறை தங்களைக் காட்சிப் பொருளாக ஆக்கிய அளவு தங்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது இவர்களின் கவலையாக இருக்கிறது. ஒருவேளை சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இந்த மலாக்கா செட்டி சமூகம் இதேபோல் இருந்தால்தான் அத்துறைக்கு இலாபமாக இருக்கக்கூடும்.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Dhivakar

unread,
Sep 19, 2011, 3:24:02 AM9/19/11
to mint...@googlegroups.com, rajam
ராஜம் அம்மா!

சிரேஷ்டி எனும் வார்த்தையில் இருந்து ஆதி காலத்தில் பிறந்ததுதான் செட்டி. ஸ்ரேஷ்டி என்பது வணிகக்குழுவின் தலைவருக்கு பிரத்தியேகமாக கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு மரியாதை. ஸ்ரேஷ்டமானவர் என்பது சிறந்தவர் என்றும் பொருள் அல்லவா. 

ஆந்திராவில் இதைப் பற்றிய ஆய்வுகள் நிறைய உண்டு. கோமுட்டி செட்டியார்கள் வந்த விதம் கூடம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 

வணிகர்கள் அதிகமாக ஆந்திரதேசத்தின் கடற்கரையை முதல் நூற்றாண்டில் இருந்து பயன்படுத்தி வந்தார்கள். அவர்கள் தமிழர்களாக இருந்தாலும், தெலுங்கர்களாக இருந்தாலும் ஆந்திரம்தான் அவர்களுக்கு HUB CENTRE.

திவாகர்

2011/9/19 rajam <ra...@earthlink.net>

கி.காளைராசன்

unread,
Sep 19, 2011, 4:53:31 AM9/19/11
to mint...@googlegroups.com, தமிழமுதம், பண்புடன், தமிழ் சிறகுகள்
ஐயா செல்வன் அவர்களுக்கு வணக்கம்.

சை. பீர்முகம்மது அவர்களது

மலாக்கா செட்டிகள்
மொழிச் சிதைவின் அடையாளம்

என்ற ஆய்வுரை பல அரிய தகவல்களை வழங்கியுள்ளது.
ஆய்வாளருக்கு எனது பாராட்டுகள்.

தமிழ்மொழி அறியாத் தமிழர்கள் 
தமிழைப் படிக்கவும் எழுதவும்
தமிழ் இணையப் பல்கலையில் நிறைய வசதிகள் செய்யப் பட்டுள்ளன.
தேவைப்படுவோர் அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.
 
 பிள்ளைகள் தமிழ் பேசுகிறார்கள். வீட்டில் இந்துக் கடவுள்களும் சீனக் கடவுள்களும் பக்கம் பக்கமாக இருந்தார்கள். அந்தப் படங்களுக்கு வைக்கப்பட்ட வாழைப்பழங்களில் சீன ஊதுவத்திகள் புகைந்துகொண்டிருந்தன - பண்பாட்டு மாற்றம் ஒன்று அங்கே நிகழ்ந்துகொண்டிருந்தது.

மிக்க மகிழ்ச்சி. 
ஆங்கிலத்தில் எழுதிவைத்து தேவாரம் பாடுவது அருமை.

நல்லதொரு பகிர்வுக்கு நன்றி.
அன்பன்
கி.காளைராசன்

s.bala subramani B+ve

unread,
Sep 19, 2011, 5:41:33 AM9/19/11
to mint...@googlegroups.com
கலிங்க / ஒட்டர கடற்கரைகள் ஒரு காலத்தில் காக்கிநாட(பித்தாவரம்  ) வரை இருந்தது
அதன் எல்லை கிருஷ்ண நதி  வரை கூட சில காலத்தில் இருந்தது
 
கலிங்கத்தின் மிக முக்கிய கடற்கரைகள்
தாமிரளிபி ,பிப்பிலி ,தாமர,தேவி பட்டினம் ,கல்கத்த பட்டினம்  ,பணிக்க பட்டினம் ,மாணிக்கபட்டினம்,பாலூர்,பஹுடமுகன் ,கலிங்கபட்டினம் 
என்று தமிழர்களின் கடல் மேலாண்மைக்கு உட்பட்டே இருந்தது 
 
இன்றும் அங்கு சாடுபா ( சாத்துவ  ) குடும்பங்கள் , நாயக்க  குடும்பங்கள்  இருக்கின்றன
ஒரிசாவில் இன்றும் வியாபாரம் என்பதற்கு விவசாயம் என்றே
அழைக்கிறார்கள்
 
தமிழகத்தில் கலிங்க செட்டி கலிங்க கூட்டம் (கோசலை ராமன் MP ) என்ற குழுவே இருந்தது
 
ஒரிசாவில் சுத்தியா ( பேராசை பிடித்தவன் ) என்ற அநாகரிக சொல்,  
துறைமுகங்களில் வட்டிக்கு பணம்  விட்டு கோயில்களில் தலைமை பொறுப்பில் இருந்தவர்கள் என்ற பொருளில் வரும்
 
இன்று அது ஒரு வழக்கு சொல்
 
சென்ற வருடம் கடலார் மீனவ இதழுக்காக நெய்தல் நிலவரம் என்ற நிகழ்விற்காக 
பழவேற்காடு முதல் கன்னியாகுமாரி வரை சென்ற போது கோயில்களில் செட்டியர்களிடம் பேசி தான் அந்த அந்த ஊர் மக்களிடம் பேசினோம்
 
முதலியார்கள் கூட கோயில் செட்டியர்களாக   இருக்கிறார்கள்
 
என்னுடிய அப்பா வழி குல தெய்வ கோயில் பாண்டிச்சேரிக்கு அருகில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கடற்கரை ஊரான கூநிமேட்டில் 
என்னுடிய தாத்தாவின் ( பூவராகவன் ) அப்பா செட்டியாராக  இருந்ததாக கேள்வி
 பட்டு இருக்கிறேன் 
 
Selva Murali

unread,
Sep 19, 2011, 5:45:33 AM9/19/11
to mint...@googlegroups.com
வடமாவட்டங்களில் செட்டியார் என்ற சமூகத்தில் சேனை தலைவர் என்ற உட்பிரிவு. அதையே விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் முதலியார் என்று கூறுகிறார்கள். 

2011/9/19 s.bala subramani B+ve <sunke...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
M.S.Murali (B+ve)
99430-94945
----------------------------------------------------------
India`s Leading Web Hosting Providers
www.rupeeshost.com
India`s First Cloud Hosting Provider
www.cloudsindia.in
----------------------------------------------------------

N. Ganesan

unread,
Sep 19, 2011, 8:25:15 AM9/19/11
to மின்தமிழ்

On Sep 19, 4:45 am, Selva Murali <murali1...@gmail.com> wrote:
> வடமாவட்டங்களில் செட்டியார் என்ற சமூகத்தில் சேனை தலைவர் என்ற உட்பிரிவு. அதையே
> விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் முதலியார் என்று கூறுகிறார்கள்.
>

முதலி என்பது ஒரு பட்டம். கங்கன் கட்டி என்பது வெள்ளாளரில் ஒரு
குடிப்பெயர்,
கல்வெட்டுக்களில் வெள்ளாளர் என்றுள்ளது (பார்க்க: வெ. இரா. துரைசாமி
கட்டுரைகள்).
சேலம் மாவட்டம் தாரமங்கலம் கோவிலைக் கட்டினவர்கள் “கட்டி முதலிகள்”
எனப்படுகிறார்கள்.
வலங்கை வெள்ளாளர் எனப்படும் கட்டி முதலிகள், இடங்கை முதலிகளில்
செங்குந்தரினும்
வேறு என கல்வெட்டுகள் கூறுகின்றன.

அரை என்றால் அரச மரம் (தொல்காப்பியம்). இது இந்தோ-ஆரியச் சொல் அன்று.
காடுகளில் எப்பொழுதும் சலசலத்துக்கொண்டுள்ள கம்பீரமான மரம். புத்தரின்
போதி மரம். சிந்து முத்திரைகளில் கொற்றவையின் மரம் இந்தக் கோ மரமே.
மன்னனின் ஆணை எழுத்தியுள்ள ஏடுகள் கல்வெட்டுக்களில் அரையோலை
எனப்படுகிறது. அரை = மன்னன், அரையன். இது தமிழ்ச்சொல், ராஜா (regal,
regime) என்னும்
இந்தோ-ஐரோப்பியச் சொல்தான் அரையன் ஆனது எனச் சொல்ல இயலாது.
மரங்களிலே மிக முக்கியமான அரை மரத்துக்கு தமிழ்ப் பெயர் இல்லை
என்றாகும்:
http://nganesan.blogspot.com/2008/01/eru-tazuval.html

கங்கன் கட்டிகள் (அகநானூறு), சிலம்பு, ... மூத்த தமிழ் வேளிர் குடியினர்.
மூத்த + அரையர் = முத்தரையர் என்றாகியுள்ளது
இரா. நாகசாமி அவர்கள் முத்தரையர் (மூத்தரையர்) என்னும் தமிழ்/த்ராவிடச்
சொல்லை
விருத்தராஜா என்று வடமொழிப் பகுதிகளில் செப்பேடுகளில் உள்ளதைக்
காட்டியுள்ளார்கள். கட்டுரை இணைத்துள்ளேன்.

நா. கணேசன்

முத்தரையர் - டாக்டர். இரா. நாகசாமி

கி.பி. 850 இல் விஜயாலய சோழன் தஞ்சாவூரை முத்தரையர்களிடமிருந்து
கைப்பற்றிச் சோழ சாம்ராஜ்யத்தை நிறுவினான் என்பர். "முத்தரையர்"
என்பவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்? எவ்வளவு காலம் ஆண்டார்கள்?
இப்பொழுதுள்ள முத்தரையர் என்ற பெருங்குடி மக்களுக்கும், அக்கால
முத்தரையர்களுக்கும் என்ன தொடர்பு? முத்தரையர் என்ற சொல் எதைக்
குறிக்கிறது? என்றெல்லாம் மிக ஆர்வத்தோடு ஆராய்ச்சி செய்த ஆசிரியப்
பெருமக்கள் உண்டு. இந்த ஆராய்ச்சியை அண்மையில் நான் மேற்கொள்ள நேர்ந்த
போது தமிழக வரலாற்றில் இதுகாறும் தெளிவாராத பல உண்மைகள் வெளிப்பட்டன.
அவற்றில் சிலவற்றை இங்கு காண்போம்.

மூன்று தரையர்
முத்தரையர்களைப்பற்றி அண்மையில் வந்த ஆராய்ச்சிக் கருத்துக்களின்
சுருக்கம் பின்வருமாறு; "முத்தரையர்" என்ற பெயர் மூன்று தரையர் என்ற
சொல்லின் சுருக்கமே. அதற்குச் சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவர்
நாடுகளையும் ஆண்டவர்கள் என்பது பொருள். இவர்கள் வேங்கடத்தை ஆண்ட
சங்ககாலக் கள்வர் வழியினர். இவர்களே களப்பிரர் என்பவர்கள். கி.பி. 4ஆம்
நூற்றாண்டில் பல்லவர் காஞ்சியைக் கைப்பற்றியபோது தென்னாடு பெயர்ந்து
சோழநாட்டைப் பிடித்து ஆண்டனர். இவர்களிடமிருந்துதான் பல்லவ அரசன் சிம்ம
விஷ்ணு சோழ நாட்டைக் கைப்பற்றினான் என்பது இதுகாறும் வந்துள்ள கருத்து.
முத்தரசர் என்ற சொல் முதன்முதலில் கி.பி. ஆறாம் நூற்றாண்டில்தான்
காணப்படுகிறது. அதுவும் தமிழ்நாட்டில் இல்லை. பெங்களூர் கோலார் தலைக்காடு
பகுதியில் அக்காலத்தில் ஆண்ட கங்கர் என்பவர்களின் செப்பேடுகளில்தான்
முதன்முதலில் காணப்படுகிறது. இவர்களுக்குக் கொங்கணி கங்கர் என்று பெயர்.

ஏறக்குறைய 550லிருந்து 600க்குள் ஆண்டவன் கங்க மன்னன் துர்விநீதன்
என்பவன். மிகச் சிறந்த தீரனாகவும், அறிவாளியாகவும் திகழ்ந்தவன் இவன்.
கங்க துர்விநீதன் "முத்தரையர்" என்றால் என்ன பொருள் என்று தன்
செப்பேட்டில் கூறியிருக்கிறான். இவனது செப்பேடு இருமொழிகளில் உள்ளது.
முதல் பகுதி சமஸ்கிருதத்திலும் இரண்டாம் பகுதி பழைய கன்னடத்திலும் உள்ளது
(பழைய கன்னடம் என்பது பெரும்பாலும் தமிழாகவே இருக்கும்). சமஸ்கிருதப்
பகுதியில் துர்விநீதன் தன்னை கொங்கணி விருத்தராஜன் (ஸ்ரீமத் கொங்கணி
விருத்தராஜேன துர்விநீத நாமதேயேன) என்று குறிக்கறான்.
இதே பகுதியைக் கன்னடத்தில் கூறும் போது "கொங்கணி முத்தரசரு" என்று
கூறுகிறான். இதிலிருந்து முத்தரசர் என்ற சொல்லுக்கு நேர் சமஸ்கிருதச்
சொல் விருத்தராஜன் என்று மொழிபெயர்ப்பு உள்ளது ஆதலின் முத்தரசர் என்ற
சொல் மூத்தகுடி என்பதின் பெயரே. உண்மையில் முது அரசர் என்பதே முத்தரசர்
என்று வந்துள்ளது. முத்தரசர் என்று குறிக்கப்படும் துர்விநீதன்
முதுகுடியைச் சேர்ந்தவன். இதுபோல் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் ஆண்ட முதலாம்
சிவமாறன் என்ற கங்கமன்னனும், 8ஆம் நூற்றாண்டில் ஆண்ட கங்கன் புருஷன்
என்பவனும் சமஸ்கிருத பகுதியில் "விருத்த ராஜா" என்றும் கன்னடப் பகுதியில்
முத்தரசர் என்றும் அழைக்கப்படுகின்றனர். ஒன்று அல்ல இரண்டு அல்ல பல
கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் கங்கர்களை முத்தரசர் என்று அரசப்
பட்டயங்கள் குறிக்கின்றனர். இதிலிருந்து முத்தரையர் என்ற சொல் எவ்வாறு
தோன்றியது என்றும் கங்க அரசர்களே முத்தரையர் என்றும்
தெளிவாக்கப்பட்டுள்ளது.
முதுபெரும் வேளிர் கங்கர் இந்தக் கங்க மன்னர்கள் தம்மை ஏன் முத்தரையர்கள்
என அழைத்துக் கொண்டனர்? கொங்கணி கங்க அரசர்களது வரலாற்றை எழுதுபவர்கள்
கி.பி. 4ஆம் நூற்றாண்டிலிருந்து தான் தொடங்குகிறார்கள். அவர்கள் கொங்கணம்
கன்னடப் பகுதியை ஆண்டதால் கன்னட அரசர்கள் என்றும் கூறுவர். உண்மையில்
கங்கர்கள் தமிழ் முதுகுடி மக்களே. முதுபெரும் வேளிர்களில் ஓருவரே கங்கர்
எனச் சங்க இலக்கியங்கள் தெளிவாகக் கூறுகின்றன. அகநானூற்றில் உள்ள ஒரு
பாடல் "நன்னன் ஏற்றை நறும் பூண் அத்தி துன்னரும் கடுந்திறல் கங்கன்
கட்டி" (அகம் 44) என்று கங்க அரசனைக் கூறுகிறது. இவன் சோழ மன்னனோடு
பொருது தோற்றுப் போயிருக்கிறான்? கொங்காணம் என்ற பகுதியின் தலைவன் நன்னன்
என்றும் அவன் தமிழ்க் குடிமகன் என்றும் சங்க இலக்கியங்களிலிருந்து
அறிகிறோம். கங்கர் குடியினர் சங்க காலத்திற்குப் பிறகு கொங்கணத்தைத்
தமதாக்கிக்கொண்டு படிப்படியாகக் பெங்களூர், தலைக்காடு, கோலார் பகுதிகளைப்
பிடித்து ஒரு பேரரசை நிறுவினார்கள். இருப்பினும் தமிழகத்துடனேயே சிறந்த
தொடர்பு கொண்டிருந்தனர். சோழ அரசுடனும் பல்லவ அரசுடனும் இணை பிரியா
நட்புப் பூண்டிருந்தனர். இவர்களில் சில அரசர்களுக்குப் பல்லவ அரசர்கள்
முடி சூட்டியுள்ளார்கள்.

கன்னடமும் சம்ஸ்கிருதமும்
தமிழ்ப் பெருமன்னர்களான சேர மன்னர்களே சங்காலத்துக்குப் பின்னர் மேலைக்
கடற்கரைப் பகுதியிலே தங்கி அங்கு மலர்ந்த மொழியால் மலையாள அரசர்களாகி
விட்டது போன்று தமிழ் மன்னர்களான கங்கர்கள் கொங்கணப் பகுதியில் ஆட்சி
புரியத் தொடங்கினர். கி.பி. 5ஆம் நூற்றாண்டில் அங்கு தனித்தன்மை
வாய்ந்ததாகக் கன்னட மொழி வளர மக்கள் மொழியான கன்னடத்தையும்,
சம்ஸ்கிருதத்தையும் இவர்கள் பயன்படுத்தினர். இருப்பினும் இவர்கள்
தமிழையும் விட்டுவிடவில்லை. இவர்களது பல கல்வெட்டுகள் தமிழில் உள்ளன.
கி.பி. 3-4ஆம் நூற்றாண்டுகளில் பழைய கன்னடத்துக்கும் தமிழுக்கும் அதிக
வேறுபாடு இல்லை என்பது ஆராய்ச்சியாளர்கள் அறிந்ததே.
அப்பகுதியில் பெருமன்னர்களாக மலர்ந்த இம் மன்னர்கள் தாங்கள் புதிதாக
ஆட்சிக்கு வந்தவர்கள் அல்லர். மிகவும் தொன்மையான குடியைச் சேர்ந்தவர்கள்
என்பதை வலியுறுத்தும் வகையில் தம்மை முதுகுடி முத்தரையர் (விருத்த ராஜா)
என்று அழைத்துக் கொள்ளத் தலைப்பட்டனர். ஆதலின் கங்கர் "முத்தரையர்"
என்றும், தமிழ் முதுபெரும் வேளிர் வழிவந்தவர் என்றும் தமிழ் வரலாற்றோடு
நெருங்கிய தொடர்பு கொண்டவர் என்றும் அறிகிறோம்.

> 2011/9/19 s.bala subramani B+ve <sunkenl...@gmail.com>

Dhivakar

unread,
Sep 19, 2011, 11:18:50 AM9/19/11
to mint...@googlegroups.com
கி.பி. 850 இல் விஜயாலய சோழன் தஞ்சாவூரை முத்தரையர்களிடமிருந்து
கைப்பற்றிச் சோழ சாம்ராஜ்யத்தை நிறுவினான் என்பர்.

இது இப்போது (2010 இல்) மாறிவிட்டது.புதிய கண்டுபிடிப்புகளை -  திங்களூர் செப்பேடுகள் நாகசாமி அவர்களே எங்களுக்கு விளக்கினார். தஞ்சாவூரை விஜயாலயச் சோழன் முத்தரையரிடமிருந்து கைப்பற்றவில்லை. பல்லவன் கம்பவர்மனிடமிருந்து கைபற்றினான். தஞ்சை பல்லவர் வசம் இருந்ததற்கு இது மிகப் பெரிய ஆதாரம். 

2011/9/19 N. Ganesan <naa.g...@gmail.com>
> ----------------------------------------------------------

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

K R A Narasiah

unread,
Sep 19, 2011, 11:37:09 AM9/19/11
to mint...@googlegroups.com
திவாகர் சொல்வது சரியே. அவர் குறிப்பிடுவது திரு இந்தளூர் செப்பேடு. நடன காசிநாதன் இதை நூலாக வெளியிட்டுள்ளார்.
. (திங்களூர் அல்ல)
அது இவ்வாறுள்ளது.இந்தச் செப்பேடு, கோவிராஜகேசரி வர்மன் ஆன விஜயராஜேந்திர தேவர் (முதலாம் ராஜராஜன்) தனது முப்பைந்தாவது ஆட்சி ஆண்டில் அளித்த அறக்கொடையை குறித்து வெளியிடப்பட்டது.
 
 பிற்காலச் சோழர்களில் முதல்வனாக அறியப்படும் விஜயாலயச் சோழன் தஞ்சையைப் பல்லவமன்னனான கமபவர்மன் என்பவனிடமிருந்து கைப்பற்றி பல்லவர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்ததாகவும் இச்செப்பேட்டில் காணப்படுகிறது.
நரசய்யா

2011/9/19 Dhivakar <venkdh...@gmail.com>

Dhivakar

unread,
Sep 19, 2011, 11:52:55 AM9/19/11
to mint...@googlegroups.com
ஆமாம் சார். திரு இந்தளூர்தான், கழுகுணிமுட்டம் கோயில். இந்த செப்பேடுகளை கையால் தொட்டுத் தொட்டுப் பார்த்து மகிழ்ந்தோம். பல சமஸ்கிருத வார்த்தைகளை எழுத்துக் கூட்டி எங்கள் முன்னமேயே படித்துப் படித்து பொருள் சொன்னார் பெரியவர் நாகசாமி. அவருக்கும் படு உற்சாகம். 

சரித்திரம் தோண்ட தோண்ட மாறுகிறது.

திவாகர்

2011/9/19 K R A Narasiah <naras...@gmail.com>

K R A Narasiah

unread,
Sep 19, 2011, 12:01:19 PM9/19/11
to mint...@googlegroups.com
I have reviewed the book of Natana Kasinathan (சோழர் காலச் செப்பேடுகள்) and it may appear in a few weeks in The HIndu tuesday edition
இந்தச் செப்பேட்டின் ஒரு விசேஷம் என்னவெனில், இக்கொத்தில் தான் ‘இவ்வளையத்தில் கோத்த செப்பேடு எண்பத்தாறு’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது!

Subashini Tremmel

unread,
Sep 19, 2011, 1:40:19 PM9/19/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
அருமையான் கட்டுரை. மலாச்சா செட்டிகளைப் பற்றி பல தகவல்களை விளக்கமாக வழங்குகின்றது.

2011/9/19 செல்வன் <hol...@gmail.com>
..

சுற்றுலாப் பகுதியாக்கியுள்ளது. இவர்கள் வாழும் பகுதியின் நுழைவாயில்கூட இந்து மதக் கலாச்சாரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் பற்றி ஒரு குறிப்பையும் இங்கே பளிங்குக்கல்லில் வைத்துள்ளார்கள். இவர்களின் அடையாளங்களைக் காணச் சிறிய மியூசியமும் உள்ளது.

மிக மென்மையானதாகவும் அன்பின் அடையாளமாகவும் இந்தச் சமூகம் உள்ளது. இவர்கள் அமைதியானவர்கள். இந்த அமைதிதான் இவர்களுக்கு எதிரியாகவும் இருக்கிறது.

இது புதிதாக ஏற்பட்ட மாற்றம். மலாக்கா யுனெஸ்கோவின் பாதுகாப்பில் வந்து பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு நகரமாக அறிவிக்கப்பட்ட சமயத்தில் இந்த நுழைவாசலை கட்டியுள்ளனர். நான் 2001ல் பார்த்த மலாக்காவிற்கும் இந்த ஆண்டு ஜனவரியில் பார்த்த மலாக்காவிற்கும் அதிக வித்தியாசம் காணப்பட்டது. 

சுபா

மலேசிய சுற்றுலாத் துறை தங்களைக் காட்சிப் பொருளாக ஆக்கிய அளவு தங்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது இவர்களின் கவலையாக இருக்கிறது. ஒருவேளை சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இந்த மலாக்கா செட்டி சமூகம் இதேபோல் இருந்தால்தான் அத்துறைக்கு இலாபமாக இருக்கக்கூடும்.

--
செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
Subashini Tremmel

unread,
Sep 19, 2011, 1:48:21 PM9/19/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram

2011/9/19 கி.காளைராசன் <kalair...@gmail.com>

ஐயா செல்வன் அவர்களுக்கு வணக்கம்.

சை. பீர்முகம்மது அவர்களது

மலாக்கா செட்டிகள்
மொழிச் சிதைவின் அடையாளம்

என்ற ஆய்வுரை பல அரிய தகவல்களை வழங்கியுள்ளது.
ஆய்வாளருக்கு எனது பாராட்டுகள்.

தமிழ்மொழி அறியாத் தமிழர்கள் 
தமிழைப் படிக்கவும் எழுதவும்
தமிழ் இணையப் பல்கலையில் நிறைய வசதிகள் செய்யப் பட்டுள்ளன.
தேவைப்படுவோர் அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மலேசியாவில் தமிழ் படிக்க எந்தச் சிரமமும் இல்லை. அங்கே தமிழ் பள்ளிகளே உள்ளன ஆரம்ப நிலைக் கல்வியிலிருந்து ஆசிரியர் பயிற்சி, பின்னர் பல்கலைக் கழகத்தில் தமிழ் துறை என மலேசியாவில் தமிழ் படிக்க ஏராளமான் வாய்ப்புக்களுள்ளன். முயற்சி இருக்கின்றதா என்பதே கேள்வி. 

மக்கள் தமிழ் தான் பேசுகின்றனர், தமிழ் படம் பார்க்கின்றனர், தமிழ் வானொலி நிகழ்ச்சிகள் உள்ளன.. அரசாங்கத் தமிழ் பள்ளிகள் மட்டுமன்றி தனியார் நடத்தும் தமிழ் பள்ளிகளும் ஞாயிற்றுக் கிழமை வகுப்புக்களும் கூட உள்ளன. .

என்னுடைய பள்ளித் தோழி சீதா வருகின்ற வாரம் மலாயா பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் தமிழில் (பக்தி இலக்கியம்)  டாக்டர் பட்டம் பெறுகின்றாள். அவள் இப்போது அங்கேயே தமிழ் பயிற்றுவிக்கும் விரிவுரையாளராகவும் உள்ளாள்.  தமிழ் படிக்க வேண்டும் என முதலில் மனதில் நினைக்க வேண்டும். மற்றவை தானாக வரும்.

தமிழ் இணையக் கல்விக்கழகம் ஐரோப்பிய நாடுகள் போன்ற தமிழ் பள்ளிகளுக்கு வாய்ப்பில்லாத இடங்களில் மக்களுக்கு கல்விச் சேவை செய்ய அதிகம் வாய்ப்புள்ளது.

சுபா
 
 பிள்ளைகள் தமிழ் பேசுகிறார்கள். வீட்டில் இந்துக் கடவுள்களும் சீனக் கடவுள்களும் பக்கம் பக்கமாக இருந்தார்கள். அந்தப் படங்களுக்கு வைக்கப்பட்ட வாழைப்பழங்களில் சீன ஊதுவத்திகள் புகைந்துகொண்டிருந்தன - பண்பாட்டு மாற்றம் ஒன்று அங்கே நிகழ்ந்துகொண்டிருந்தது.

மிக்க மகிழ்ச்சி. 
ஆங்கிலத்தில் எழுதிவைத்து தேவாரம் பாடுவது அருமை.

நல்லதொரு பகிர்வுக்கு நன்றி.
அன்பன்
கி.காளைராசன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

rajam

unread,
Sep 19, 2011, 2:07:37 PM9/19/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
என்னுடைய பள்ளித் தோழி சீதா வருகின்ற வாரம் மலாயா பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் தமிழில் (பக்தி இலக்கியம்)  டாக்டர் பட்டம் பெறுகின்றாள். அவள் இப்போது அங்கேயே தமிழ் பயிற்றுவிக்கும் விரிவுரையாளராகவும் உள்ளாள்.  
உங்கள் தோழிக்கு என் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும், ஆசியையும் தெரிவியுங்கள், சுபா! அவருடைய வாழ்வும் தமிழ்ப் பணியும் இனிமையாக அருமையாக பொருள் செறிந்ததாக அமையட்டும்!

தமிழ் படிக்க வேண்டும் என முதலில் மனதில் நினைக்க வேண்டும். மற்றவை தானாக வரும்.
இதுக்கெல்லாம் ... பொருளாதார நிலை, prestige/status issue, மற்றும் பல சிக்கல்கள் ...வழிவிடவேண்டும். பரம்பரை பரம்பரையாக இருந்துவரும் சிக்கல்களே ... தமிழ்நாட்டிலுமே!

தமிழ் இணையக் கல்விக்கழகம் ஐரோப்பிய நாடுகள் போன்ற தமிழ் பள்ளிகளுக்கு வாய்ப்பில்லாத இடங்களில் மக்களுக்கு கல்விச் சேவை செய்ய அதிகம் வாய்ப்புள்ளது.
என் கணிப்பில் ... தமிழ் இனி வெளிநாடுகளில்தான் வளரப் போகிறது! :-) தமிழ்நாட்டுக்குப்போய் .... செய்திகள் திரட்டி வரலாமே ஒழிய ... அங்கேயே இருந்து தமிழ் வளர்ப்பதும் தமிழ் ஆய்வு செய்வதும் ... அரிய வாய்ப்பைப் பொருத்து அமையும்.
எனக்கே முடியவில்லை!
அன்புடன்,
ராஜம்

Innamburan Innamburan

unread,
Sep 19, 2011, 3:08:15 PM9/19/11
to mint...@googlegroups.com
என் கணிப்பில் ... தமிழ் இனி வெளிநாடுகளில்தான் வளரப் போகிறது! :-) தமிழ்நாட்டுக்குப்போய் .... செய்திகள் திரட்டி வரலாமே ஒழிய ... அங்கேயே இருந்து தமிழ் வளர்ப்பதும் தமிழ் ஆய்வு செய்வதும் ... அரிய வாய்ப்பைப் பொருத்து அமையும்.
எனக்கே முடியவில்லை!
அன்புடன்,
ராஜம்
~~~~~~~~~பாயிண்ட் மேட். ராஜம்.
இன்னம்பூரான்

Kamala Devi

unread,
Sep 19, 2011, 8:39:52 PM9/19/11
to mint...@googlegroups.com
செல்வன்
வணிகம் செய்பவர்களை செட்டி என்றழைக்கும் பழக்கம் ஒரு பகுதியில் மட்டுமே இருந்தது.
ஆனால் எள் எடுப்பவர்களையும் செட்டி என்றழைக்கும் பழக்கம் கேரளத்தில் உண்டு
சேச்சி

From: செல்வன் <hol...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Monday, 19 September 2011 11:28 AM
Subject: Re: [MinTamil] மலாக்கா செட்டிகள்

Geetha Sambasivam

unread,
Sep 19, 2011, 8:47:51 PM9/19/11
to mint...@googlegroups.com
நல்வரவு கமலம். மடல்கள் இப்போது வருகின்றன.

ஆனால் எள் எடுப்பவர்களையும் செட்டி என்றழைக்கும் பழக்கம் கேரளத்தில் உண்டு//

தமிழ்நாட்டிலிருந்து கேரளத்திற்கு வந்திருக்குமோ?? ஏனெனில் எள் எடுத்து எண்ணெய் வியாபாரம் செய்பவர்கள் வாணியச் செட்டி என அழைக்கப்படுவார்கள். வைசியச் செட்டிமார் தான் லேவாதேவி செய்பவர்கள் என நினைக்கிறேன்.

2011/9/20 Kamala Devi <saahi...@yahoo.com.sg>
செல்வன்
வணிகம் செய்பவர்களை செட்டி என்றழைக்கும் பழக்கம் ஒரு பகுதியில் மட்டுமே இருந்தது.
ஆனால் எள் எடுப்பவர்களையும் செட்டி என்றழைக்கும் பழக்கம் கேரளத்தில் உண்டு
சேச்சி

03D.gif
360.gif

Kamala Devi

unread,
Sep 19, 2011, 8:54:47 PM9/19/11
to mint...@googlegroups.com
yes, you are correct.
இவர்கள் தமிழ் எநாட்டிலிருந்து கேரளம் வந்தவர்கள்.
கமலம்
 
From: Geetha Sambasivam <geetha...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Tuesday, 20 September 2011 8:47 AM

Subject: Re: [MinTamil] மலாக்கா செட்டிகள்
03D.gif
360.gif

N. Ganesan

unread,
Sep 19, 2011, 10:57:29 PM9/19/11
to மின்தமிழ்

On Sep 19, 10:18 am, Dhivakar <venkdhiva...@gmail.com> wrote:
> கி.பி. 850 இல் விஜயாலய சோழன் தஞ்சாவூரை முத்தரையர்களிடமிருந்து
> கைப்பற்றிச் சோழ சாம்ராஜ்யத்தை நிறுவினான் என்பர்.
>
> இது இப்போது (2010 இல்) மாறிவிட்டது.புதிய கண்டுபிடிப்புகளை -  திங்களூர்
> செப்பேடுகள் நாகசாமி அவர்களே எங்களுக்கு விளக்கினார். தஞ்சாவூரை விஜயாலயச்
> சோழன் முத்தரையரிடமிருந்து கைப்பற்றவில்லை. பல்லவன் கம்பவர்மனிடமிருந்து
> கைபற்றினான். தஞ்சை பல்லவர் வசம் இருந்ததற்கு இது மிகப் பெரிய ஆதாரம்.
>

Thanks, Dhivakar for the info.

Ganesan

> 2011/9/19 N. Ganesan <naa.gane...@gmail.com>

> ...
>
> read more »

Dhivakar

unread,
Sep 20, 2011, 12:45:50 AM9/20/11
to mint...@googlegroups.com
Sir,
Today your review on this book appeared in The Hindu.

But Hindu people have probably used their scissor in generous way, it seems. (space constraints) 

Dhivakar

Dhivakar

unread,
Sep 20, 2011, 12:46:13 AM9/20/11
to mint...@googlegroups.com, K R A Narasiah

கி.காளைராசன்

unread,
Sep 20, 2011, 4:54:18 AM9/20/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
அம்மையார் சுபா அவர்களுக்கு வணக்கம்.

என்னுடைய பள்ளித் தோழி சீதா வருகின்ற வாரம் மலாயா பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் தமிழில் (பக்தி இலக்கியம்)  டாக்டர் பட்டம் பெறுகின்றாள். அவள் இப்போது அங்கேயே தமிழ் பயிற்றுவிக்கும் விரிவுரையாளராகவும் உள்ளாள்.  
புதிய முனைவருக்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
 
தமிழ் படிக்க வேண்டும் என முதலில் மனதில் நினைக்க வேண்டும். மற்றவை தானாக வரும்.

இது முற்றிலும் உண்மை.

K R A Narasiah

unread,
Sep 20, 2011, 11:44:50 AM9/20/11
to mint...@googlegroups.com
Cab you send me the link? I am not able to see it ! Or a scanned version?
 
Narasiah

2011/9/20 Dhivakar <venkdh...@gmail.com>

Dhivakar

unread,
Sep 20, 2011, 11:51:09 AM9/20/11
to mint...@googlegroups.com
Sir, Link is not there. I will scan it and send you.

Dhivakar

2011/9/20 K R A Narasiah <naras...@gmail.com>

K R A Narasiah

unread,
Sep 20, 2011, 12:00:43 PM9/20/11
to mint...@googlegroups.com
Thank you I will be happy to see it. Infact I ent reviews for 2 books both by Natana Kasinathan, one on Seppeedukal and the oyjer on varalatruthadayangal. I dont know which is publihed. In fact they sent me another book by iraa mathivanan. It was all about too much of his own imagination! Ideclined to eview it as it had a lot of tall claims like Tamil was spoken all over India and Budha learned Tamil etc.,!

Dhivakar

unread,
Sep 20, 2011, 12:06:29 PM9/20/11
to mint...@googlegroups.com
தமிழக வரலாற்றுத் தடயங்கள்

K R A Narasiah

unread,
Sep 20, 2011, 12:39:22 PM9/20/11
to mint...@googlegroups.com
pl send me the scanned version
N

2011/9/20 Dhivakar <venkdh...@gmail.com>

sk natarajan

unread,
Sep 20, 2011, 1:16:33 PM9/20/11
to tamizhs...@googlegroups.com, mintamil, தமிழமுதம், பண்புடன்
அருமையான தகவல்கள்
அபூர்வமான செய்திகளை  , அறிய முடிகின்றது
 
என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.com/  
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

2011/9/19 செல்வன் <hol...@gmail.com>
மலாக்கா செட்டிகள்

மொழிச் சிதைவின் அடையாளம்

க.இராமச்சந்திரன்

unread,
Sep 28, 2011, 7:29:25 AM9/28/11
to mint...@googlegroups.com
2011/9/19 K R A Narasiah <naras...@gmail.com>
திவாகர் சொல்வது சரியே. அவர் குறிப்பிடுவது திரு இந்தளூர் செப்பேடு. நடன காசிநாதன் இதை நூலாக வெளியிட்டுள்ளார்.

--
 அய்யா , வணக்கம்

திருஇந்தலூர்  செப்பேடு  எந்தமன்னரால் வெளியிடப்பட்டது?
நடனகாசினாதன்  அய்யா அவர்கள்  நூலில் முதலாம் ராஜராஜன் என்று தெரிவித்துள்ளார்களா?
நான் அப்புத்தகத்தை  வாசிக்கவில்லை.
முதலானம ராஜராஜன் வெளியிடப்பட்டது என்றால்  அவர்  ஆட்சி செய்த ஆண்டு-
கி.பி 985  முதல் 1014 வரை - 29 ஆண்டுகள் தான்
.கி.பி 1014 இல் இராஜெந்த்ரசோழன் மன்னராகிவிடுகிறார்  
 அல்லவா?
இதில் ...
தனது முப்பத்தி ஆயிந்தாவது  ஆட்சி ஆண்டில்    அளித்த கொடை  குறித்து    எவ்வாறு  வெளியிடபட்டிருக்கும்?
இதுகுறித்து சோழர்கள் செப்புப்பட்டயங்கள் பற்றி  எழுதிவரும் முன்னாள்  திருவண்ணாமலை  ஆட்சியர்  Dr.இராஜேந்திரன்   அய்யா அவர்கள்  கருத்தையும் கேட்டுபார்க்கலாம் அல்லவா?

க.இராமச்சந்திரன்,
வரலாற்று ஆர்வலர் குழு,
நாகப்பட்டினம்.

s.bala subramani B+ve

unread,
Sep 28, 2011, 7:37:19 AM9/28/11
to mint...@googlegroups.com

இதுகுறித்து சோழர்கள் செப்புப்பட்டயங்கள் பற்றி  எழுதிவரும் முன்னாள்  திருவண்ணாமலை  ஆட்சியர்  Dr.இராஜேந்திரன்   அய்யா அவர்கள்  கருத்தையும் கேட்டுபார்க்கலாம் அல்லவா?

நேற்றில் இருந்து திரு ராஜேந்திரன் அவர்கள் ஒழுங்கு நடவடிக்கை ஆணையரில் இருந்து இப்பொழுது இயக்குனர் பின்தங்கியவர் துறைக்கு மாற்றப்பட்டு  இருக்கிறார்
 
க.இராமச்சந்திரன்

unread,
Oct 4, 2011, 5:09:32 AM10/4/11
to mint...@googlegroups.com

2011/9/28 s.bala subramani B+ve <sunke...@gmail.com>

இதுகுறித்து சோழர்கள் செப்புப்பட்டயங்கள் பற்றி  எழுதிவரும் முன்னாள்  திருவண்ணாமலை  ஆட்சியர்  Dr.இராஜேந்திரன்   அய்யா அவர்கள்  கருத்தையும் கேட்டுபார்க்கலாம் அல்லவா?

நேற்றில் இருந்து திரு ராஜேந்திரன் அவர்கள் ஒழுங்கு நடவடிக்கை ஆணையரில் இருந்து இப்பொழுது இயக்குனர் பின்தங்கியவர் துறைக்கு மாற்றப்பட்டு  இருக்கிறார்
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
மின் தமிழ் நண்பர்களே   ,வணக்கம்
நீங்கள் கூட  செப்பேடுகளை கண்டுபிடிக்கும் வாய்ப்புள்ளது.
எனவே
செப்பேடுகள் குறித்த படங்களை பார்த்து வைத்து இருப்பது  உமக்கும்  அவ்வேளையில் உதவும்  என்ற அடிப்படையில் இதை தெரிவிக்கிறேன்...

திருஇந்தலூர்  செப்பேடுகளை
 தொட்டு ,தூக்கி,
சுத்தம் பன்னுவதில் உடன் இருந்து ,பங்காற்றி    ,
ராஜமுத்திரை கண்டு வியந்து ...  ராஜராஜன் இராஜேந்திரன்  இராஜமுத்திரையில் உள்ளவடிவமைப்பு குறித்தும் திருஇந்தலூர் செப்பிடு  இராஜமுத்திரையில் உள்ள மாற்றம் கண்டு  முத்துசாமி அய்யாவுடன்   விவாதித்து ,
"odd man out " என்ற முறையில் மன்னரை   யூகித்து
ராஜகேசரியா? பரகேசரியா    பார்த்து
தமிழ் தொடன்க்கும் இடத்தை கண்டறிந்து
அவரின் ஆட்சியாண்டினக் கண்டறிந்து ...
இதனைகாலங்கள்  ஆட்சி செய்த மன்னர்களை  பட்டியலிட்டு
மன்னரை கண்டுபிடித்தகுழுவில் இருந்த  எமக்கு -
 கருதுபரிமாற்றதில் பங்கேற்று  முடிவுக்குவந்த
நிகழ்சிகளை நினைக்கும்போது  புல்லரிக்கிறது .

"LET YOUR EDUCATION SERVE SOCIETY"
பச்சையப்பன்  கல்லுரி    அறிவியல்  பிளாக் வாசகம் 

எனவே உங்கள்  அன்னவரின்  பார்வைக்கும்
திரு இந்தளூர் செப்பெடினை காட்சிக்கு காட்டுகிறேன்
அத்துடன்
ஆனைமங்கலம் , எச்சாலம் போன்ற சோழர்கள் செப்புபட்டயாதி  ராஜமுதிரையினைஒப்புமைக்கு காட்டுகிறேன்.

க.இராமச்சந்திரன்

unread,
Oct 4, 2011, 12:23:41 PM10/4/11
to mint...@googlegroups.com

2011/10/4 க.இராமச்சந்திரன் <mura...@gmail.com>

--
DSCN0941.jpg
DSCN0949.jpg
DSCN2676.jpg
DSCN2680.JPG
DSCN2681.JPG

க.இராமச்சந்திரன்

unread,
Oct 7, 2011, 8:17:10 AM10/7/11
to mint...@googlegroups.com
 
intha  chozha
 
க.இராமச்சந்திரன்,
வரலாற்று ஆர்வலர் குழு,
நாகப்பட்டினம்.

--
 
i
வணக்கம் ,
இந்த  சோழ செப்புப்பட்டயங்கள் ராஜமுத்திரைகளில் , எசாலம், திரு இந்தளூர் ராஜமுதிரைகள் மட்டும்  காடபட்டுளது  ,...

ஆனைமங்கலம் செப்பேடு ராஜமுத்திரை யை   " மலாக்கா  செட்டி "
கட்டுரை இல்  தொடர்ச்சியாக கடைசியாக   உள்ளது  பார்த்துகொள்ளவும்.

சோழர்களின்   முத்திரை  " உட்கார்ந்த  புலி "
பாயும்புலி  அல்ல என்பது  நன்கு  தெளிவாகிறது.
மூன்று  ராஜமுத்திரைகளையும்  ஒப்பிட்டு பார்க்கவும்.அறிவை பெறவும்.
நன்றி.

Subashini Tremmel

unread,
Oct 29, 2011, 8:24:39 AM10/29/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
மலாக்காவிலுள்ள பொய்யாத வினாயகர் கோயில் பற்றிய ஒரு விழியப் பதிவை ஒரு பக்கத்தில்ல் பார்த்தேன். இக்கோயில் பற்றி குருக்கள் சில தகவல்கள் சொல்கின்றார். கோயிலையும் முழுதாக இந்த விழியத்தில் பார்க்க முடிகின்றது.
ஆர்வமுள்ளவர்களுக்கு.. இங்கே

சுபா

2011/9/19 Subashini Tremmel <ksuba...@gmail.com>

க.இராமச்சந்திரன்

unread,
Nov 1, 2011, 2:49:23 AM11/1/11
to mint...@googlegroups.com

2011/10/29 Subashini Tremmel <ksuba...@gmail.com>

--
 செல்வன் அய்யா ,
"மலாக்கா செட்டி " கட்டுரை
மலேசிய குழுவின் திரு, நாராயணசாமி  அவர்கள்  செம்மொழி  மாநாட்டில் சமர்ப்பித்த கட்டுரையை  அப்படியே சொல்வதுபோல் உள்ளதே ......உண்மைதானா?
சை.பீர்முகமது  மலேசிய குழுவின் திரு, நாராயணசாமி அவர்களின் குழுமத்தினராக இருப்பாரோ ?

 ன்றி 

Subashini Tremmel

unread,
Nov 5, 2011, 6:53:25 AM11/5/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
இந்த வரலாற்றுச் செய்தி உண்மையான தகவல் என்பதால் இருவர் சொன்ன விஷயங்களிலும் ஒற்றுமை இருப்பதில் அதிசயமில்லை என்றே நான் நினைக்கிறேன். அதிலும் பீர்.முகம்மது அவர்கள் மலேசியாவைச் சார்ந்தவர். அங்கே நாங்கள் பொதுவாகவே இந்த மலாக்கா வரலாறு மலாக்கா செட்டிகள் போன்றோரின் செய்திகளைப் பள்ளிக் காலங்களிலேயே படித்து அறிந்துஇருக்கின்றோம். திரு.நாராயணசாமி அவர்கள் சிங்கையைச் சார்ந்தவர் என நினைக்கிறேன். ஆக அவரும் இதே தகவலை மானாட்டில் சமர்ப்பித்திருக்கலாம்.

சுபா

2011/11/1 க.இராமச்சந்திரன் <mura...@gmail.com>

--
 செல்வன் அய்யா ,
"மலாக்கா செட்டி " கட்டுரை
மலேசிய குழுவின் திரு, நாராயணசாமி  அவர்கள்  செம்மொழி  மாநாட்டில் சமர்ப்பித்த கட்டுரையை  அப்படியே சொல்வதுபோல் உள்ளதே ......உண்மைதானா?
சை.பீர்முகமது  மலேசிய குழுவின் திரு, நாராயணசாமி அவர்களின் குழுமத்தினராக இருப்பாரோ ?

 ன்றி 
 
க.இராமச்சந்திரன்,
வரலாற்று ஆர்வலர் குழு,
நாகப்பட்டினம்.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

க.இராமச்சந்திரன்

unread,
Nov 7, 2011, 6:32:51 AM11/7/11
to mint...@googlegroups.com

2011/11/5 Subashini Tremmel <ksuba...@gmail.com>

--
 
 சுபா அம்மா,
செய்திகளும் , படங்களும் ஒன்றாக இருந்ததால்... சந்தேகம்,.. ....
நீங்கள் சொல்லும் கருத்தும்  எற்றுக்கொளக் கூடியதாக உள்ளது... ,,

 இந்த "மலாக்கா செட்டி "களுக்கு நாம் எந்தவகையில் உதவமுடியும்?
அவர்களின் பொருளாதரத்தை  மேம்படுத்த நாம் ஏதாவது செய்யலாமா?
ஐடியா  கொடுங்களேன் ,
நன்றி....
Reply all
Reply to author
Forward
0 new messages