இந்தக் காப்பியக் கதையை நடத்திச் செல்ல வேறு பல பெண்களைப் பற்றிய செய்திகளும் தேவை என்று தெரிகிறது.
மணிமேகலைக் காப்பியத்திலிருந்து நமக்குத் தெரிய வரும் பெண்கள் பலர்:
-----------------------------------------------------------------------------------
1. சித்திராபதி
2. வயந்தமாலை
3. மாதவி ( < தாரை; முற்பிறப்பில்)
4. சுதமதி ( < வீரை; முற்பிறப்பில்)
5. மணிமேகலை ( < இலக்குமி; முற்பிறப்பில்)
6. கோதமை
7. அமுதபதி
8. நீலபதி
9. தீவதிலகை
10. சாலி
11. (திலோத்தமை; நேரடிக் குறிப்பில்லை)
12. ஆதிரை
13. காயசண்டிகை
14. சீர்த்தி (சோழ அரசி; இராசமாதேவி)
15. மருதி
16. விசாகை
17. வாசந்தவை
18. வாசமயிலை
19. பீலிவளை
20. கண்ணகி
21. நீலி
++++++++++++++++++++
தெய்வங்கள் பலர்:
-----------------------
மணிமேகலா தெய்வம்
சம்பாபதி
தூணில் இருந்த பாவை / கந்திற்பாவை (?)
சிந்தாதேவி
துர்க்கை (?)
விந்தாகடிகை
ஒரு பெரும் தெய்வம் (?)
+++++++++++++++++++
பொதுவாகக் குறிப்பிடப் பெற்ற பெண்கள்:
----------------------------------------------
1. எட்டிகுமரனுடன் இருந்த காதற்பரத்தை
2. நாடகக் கணிகையர் / சித்திராபதி, மாதவி இவர்களின் ஆயத்தவர்
3. தூண்களில் ஒரு சித்திரம் (?)
4. புண்ணியராசனின் உரிமை மகளிர்
++++++++++++++++++++++++++++
மணிமேகலைக் காப்பிய ஆசிரியர் சாத்தனார் ஏன் இத்தனைப் பெண்களின் இருப்பை / கதைகளை இந்தக் காப்பியத்தில் புகுத்தினார்? இந்தப் பெண்களைப் பற்றிய செய்திகள் எந்த அளவிற்கு அவர் படைத்த காப்பியப் போக்கிற்குத் தேவை; எந்த அளவிற்கு அக்காலச் சமூகம் பற்றித் தெரிந்துகொள்ளப் பிற்காலத்தவருக்கு உதவும்? இவை போலப் பல கேள்விகள் ஆழமான தேர்ந்த இலக்கிய ஆராய்ச்சிக்குத் தேவை.
இக்கால ஆய்வாளர்கள் இவற்றைப் புரிந்துவைத்திருப்பார்கள் என்ற நம்பிக்கை.
++++++++++++++++++++++++++++++
இந்த எல்லாரையும் பற்றி எழுத விருப்பம். இயலுகிறதா என்று பார்ப்போம்.
அன்புடன்,
ராஜம்