வெருளி நோய்கள் 1206-1210 : இலக்குவனார் திருவள்ளுவன்

5 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Mar 1, 2026, 3:35:12 PM (14 hours ago) Mar 1
to law...@tn.gov.in, lawsec...@tn.gov.in, minist...@tn.gov.in, இலக்குவனார் திருவள்ளுவன், thiru2...@gmail.com, thiruna...@gmail.com, தமிழ் மீட்சிப் பாசறை, 119maa27s...@gmail.com, Headmaster - MMHSS, Thirunagar, Madurai, Anuragam Kalaignaan, A Piramanayagam, Balakrishnan Thirugnanam, Bharathy S, Sivakumar P, Chandra Sekar, தமிழ் யாப்பியல் ஆய்வாளர் பேரவை, World Tamil Forum, kavia...@yahoo.co.in, Chandar Subramanian, kalvettu, ymha.vaddukoddai, Kanagu Chandran, mkindu, Mumbai Kumanarasa Lemuriya Publications, lankasri, ne...@tamilwin.com, online...@thehindutamil.co.in, Newsofthe Transtamils, poongundran, கவிதைகள் ஆற்காடு க குமரன், Dhinasari, தமிழ் பரத், Gnanam Magazine - ஞானம், Admin Hillsilver Exportss, IE Tamil, Murugesan M., in...@tyouk.org, jeyamohan....@gmail.com, kambane kazhagam, KaviMari Kaviarasan, kavitha directions, Kaviyodai, kovai...@gmail.com, Lakshmi Kumaresan, me...@tyouk.org, கன்னிவாடி காயத்ரி, mullaicharamtamil, nagg...@yahoo.com, Vairamuthu, pandiya raja, puduvaibloggers kuzhu, tamil_ulagam kuzhu, kuzhu, tamilmanram kuzhu, தமிழ் சிறகுகள், thamizh...@googlegroups.com, வல்லமை, anand pulavar, Divya, Sarala M.S, Seetha Ramachandran, Arivukkarasu Su, tamizham...@gmail.com, thamizhmu...@gmail.com, thi...@journalist.com, Viduthalaidaily Viduthalai, ramasamy kandasamy, Nirmalar Selvi, Nirmala Raghavan, ac.chinnapp...@gmail.com, Ramesh Viswanathan, Vijaya Raghavan, tamilnesan, p.kalai...@gmail.com, poovalingam shanmugam, Vaidheeswaran Sundaram, esukur...@gmail.com, DR KADAVUR MANIMARAN, Lalitha Sundaram, Vathilai Prathaban, josephse...@gmail.com, Ganesh Kumar, Advocate Sankkaran, Dr S R GEETHA, இலக்கணத் தாமரை, Arunchol Media, pon.danasekaran reporter, Kanimozhi M.P., Dina Suriyan MURASOLI S SELVAM Editor, Rajeswari Chellaiah, Makizhnan மகிழ்நன், Poonguzhali Panneerselvam, spanneers...@gmail.com, Kanaga Dharshini, மின்தமிழ், Tamil University, Mu.ilangovan ??.?????????, Raghavendra A, Muduvai Hidayath, Ramanathan Nagappan, act...@gmail.com, reade...@nec.edu.in, Benjamin LE BEAU, Deiva Sundaram, kathir nilavan69, ramyaa t.s, Usha Rani, tshrin...@gmail.com, boscomm, Sivakumar E, Nithiyanantham Sachchithanantham, Nithya Duraisamy, Pollachi Nasan Thamizham, Ponnavaikko Murugesan, Prince Ennares Periyar, Siva Pillai, Kayal Angayarkanni, Sekar KaMu, Siva Tamizh, Thamilarasi Siva, Veerasanmugamani Ias, yumiko 1209, Mahendran P, pon...@gmail.com, Mohanlal Lal, Sivamurugan Perumal, Peter Yeronimuse, Arangarasan Venkatasamy, balaji V, capta...@gmail.com, mathiyazhaghi ilakkuvanar, Kumari Ananthan, Enngall Enngal, ilakkiyan, Karpoorasundarapandian Rajsekar, Kumaran R, kani Thamizh sangam, marumugam Ambalavanan I., muhilairajapandian rajapandian, Senthil Velan, lawyerc...@gmail.com, Magudeswaran Govindharajan, Michael Faraday, Arvindh K Swamy, dire...@cict.in, Registrar Cict, kunathogai kunathogai

வெருளி நோய்கள் 1206-1210 : இலக்குவனார் திருவள்ளுவன்



(வெருளி நோய்கள் 1201-1205 : தொடர்ச்சி)

வெருளி நோய்கள் 1211-1215

  1. தள்ளுவண்டி வெருளி – Karotsakiphobia

தள்ளுவண்டி/பிள்ளைகளை உலாத்துவதற்கு அழைத்துச்செல்லும் உலாவண்டி(stroller) குறித்த வரம்பற்ற பேரச்சம் தள்ளுவண்டி வெருளி.
உலா வண்டி என்றால் சுற்றுலாவிற்குச்ச செல்வதற்குரிய மகிழுந்து எனத் தவறாகக் கருதலாம் என்பதால் அதனைக் குறிக்கவில்லை. அதுபோல் தள்ளுவண்டி என்றால் சுமைகளைத் தள்ளிச் செல்ல உதவும் வண்டி என்று கருதக்கூடாது.
00

  1. தற்காப்புக்கலை வெருளி – Karatephobia

தற்காப்புக்கலை(karate)பற்றிய தேவையற்ற அளவுக்டந்த பேரச்சம் தற்காப்புக்கலை வெருளி.
தற்காப்புக் கலையில் ஈடுபடுவோர் தங்களின் கவனக் குறைவாலோ போதிய தேர்ச்சியின்மையாலோ தாக்குதலுக்கு உள்ளாகலாம் எனப் பேரச்சம் கொள்கின்றனர். தற்காப்புக்கலையில் ஈடுபடுபவர்களைப் பார்ப்பவர்களும் தேவையின்றிப் பகுத்தறிவிற்குப் பொருந்தாத வகையில் பேரச்சம் கொள்கின்றனர்.

சிலர் இதனைக் கரக் கலை என்கின்றனர்.
சப்பானிய மொழியில் kara என்றால் வெறுமை என்றும் te என்றால் கை என்றும் பொருள். எவ்வகை ஆயுதமுமின்றி வெறுங்கையால் சண்டையிடுவதால் இவ்வீரக் கலைக்குக் கராத்தே எனப் பெயரிட்டனர்.
00

  1. தற்கொலை வெருளி – Suicidephobia

தற்கொலை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தற்கொலை வெருளி.
மன அழுத்தக் கோளாறுகள், குடும்பப் பின்னணி, மனநலச் சிக்கல்கள், தேர்விலோ வணிகத்திலோ ஏற்படும் தோல்விகளைத் தாங்க இயலாமை போன்ற காரணங்களால் தற்கொலை எண்ணத்திற்கு ஆளாகின்றனர். பிறர் தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்தவர்கள், தாங்களும் அந்த நிலைக்குத் தள்ளப்படும் பல நேர்வுகள் உள்ளன. நான் சிறைத்துறையில் நன்னடத்தை அதிகாரியாகப் பணியாற்றிய பொழுது பல தற்கொலை முயற்சி வழக்குகளை உசாவியுள்ளேன். ஏறத்தாழ அனைவருமே ஊரில் தற்கொலை செய்து கொண்ட பிறரைப்பார்த்துத்தான் அவ்வழியைப் பின்பற்றியதாகக் கூறினர். யாரும் தற்கொலை புரிந்தவரால் அவரது குடும்பத்தினர் அடைந்த இன்னல்களைப் பார்த்து தற்கொலை எண்ணத்தைக் கை விட்டதாகக் கூறியதில்லை.
Sui + cide என்னும் இலத்தீன் சொற்களுக்குத் தன்னைத்தானே + கொல்லுதல் எனப் பொருள்கள். ஆகவே, தற்கொலை எனப் பொருளாகிறது.
00

  1. தற்பட வெருளி- Ipovlopsychophobia

தன்னைத் தானே ஒளிப்படம் எடுப்பதற்குத் தேவையற்ற பேரச்சம் கொள்வது தற்பட வெருளி.
இப்பொழுது தன்னைத்தானே படம் எடுத்துக் கொள்வதைத் தற்படம் என்கிறோம். எனினும் இங்கே தன்னைப் படம் எடுக்கும் எல்லா நேர்வுகளையும்தான் குறிக்கிறது.
சிலருக்குப் படம் எடுத்தால் ஆயுள் குறையும் என்ற நம்பிக்கை இன்னும் உள்ளது. அத்தகையோருக்குப் படம் எடுப்பது பிடிக்காது.
சிலர் தாழ்வு மனப்பான்மையால் அழகற்ற அல்லது பார்ப்பதற்குச் சகிக்காத அல்லது நல்ல உடையணியாத அல்லது நகைகள் அணியா அல்லது ஆடம்பரமாக இல்லாத தன்னைப் படம் எடுப்பதற்கு விரும்பாமல் தேவையற்ற அச்சத்தை வளர்த்துக் கொள்வர்.
சிலர் தங்கள் படங்களைத் தவறாகப் பயன்படுத்துவார்கள் என அஞ்சிப் படம் எடுப்பது குறித்து அளவுகடந்த பேரச்சம் கொள்வர்.
propriophobia என்பதையும் தற்பட வெருளி எனச் சிலர் கருதுகின்றனர். தற்படம் எடுப்பது மட்டடுமல்லாமல எல்லாவகையிலும்தன்னச்சத்தைக் குறிப்பதால், இதனைத்தன்னச்ச வெருளி என்பதே சரியாக இருக்கும்.
00

  1. தற்பணி வெருளி – Facipsophobia

தொழில்முறைப் பணியாளர்களைப் பயன்படுத்தாமல் வீட்டுப் பணிகளைத் தானேசெய்துகொள்வது தொடர்பான அளவுகடந்த பேரச்சம்.
இதனை DYI பேரச்சம் என்று விளக்குகின்றனர். DYI என்றால், “Doing Yourself In” என்றும் do-it-yourself என்றும் விரிவு.
00

(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5
வெருளி நோய்கள்

--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages