பொங்கல் கவிதைகள்

3,821 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jan 14, 2008, 9:02:16 AM1/14/08
to
பொங்கல் வாழ்த்துக் கவிதைகள் சில:
http://nganesan.blogspot.com/2008/01/pongal.html
இவை உதாரணத்துக்குத் தான்.

அன்புடன்,
நா. கணேசன்

N. Ganesan

unread,
Jan 14, 2008, 9:05:39 AM1/14/08
to
பொங்கல் வாழ்த்துக் கவிதைகள் சில:
http://nganesan.blogspot.com/2008/01/pongal.html
இவை உதாரணத்துக்குத் தான்.

பொங்கல் வாழ்த்து அஞ்சல்களிலும், இதழ்களிலும், நீங்கள் பார்த்ததோ,
இயற்றியதோ ஆன பாடல்களை அனுப்புங்களேன்!

Tthamizth Tthenee

unread,
Jan 14, 2008, 9:40:32 AM1/14/08
to minT...@googlegroups.com
பழையன கழிதலும்
புதியன புகுதலும் நலமேயாம்
வாழையடி வாழையாய் வந்த
நல்லதோர் முதுமொழியாம் 
தினம்  தினம் புதுப்பிக்கும் நம் உடலும்
சோர்வகற்றி வளம் சேர்க்கும்  நம் மனமும்
புத்தம் புதுமலராய் நித்தம் நித்தம்
மலர்ந்தே வரும் ஆதவனின் வருகை 
மாதவனின் தோற்றம் போலும்
வைய்யமெல்லாம் ஒளிகூட்டும்
தைமாதமதில் தைதிருநாள் பொங்கலதில்
விடியும் வேளை  நாமெழுந்து நீராடி
நற்காலைப் பொழுதினிலே,நல் வேளயது தனிலே
முத்தான அரிசியுடன் இனிப்பான வெல்லமதை
அளவோடு நாம் சேர்த்து,காமதேனுவென்னும்
பசுவின் பால் சேர்த்து,பொங்கி வரும் வேளையிலே
இறைவன் நாமமது நாம் சொல்லி
நல்லறமும் தருமங்களும் ,பொங்கலோ பொங்கலென்று
மனமார்ந்து உரத்துச் சொல்லி,வைய்யகத்து மாந்தரெல்லாம்
வாழ்வாங்கு வாழ்ந்திடவே,பொய்யகற்றி மெய்யுணர்ந்து
தாள் பணிவோம் ப்ரபஞ்ஜத்தை தினம் உழுது 
ஞான ஒளி பரப்பும் ஆதவனை
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

இரவா

unread,
Jan 14, 2008, 2:46:23 PM1/14/08
to minT...@googlegroups.com

உலகம் தன்னை உழுதவனை
           உயிர்க்க கவளம் தந்தவனை
உலவும் மனிதக் குலம்வாழ
           உள்ளந் தன்னால் வணங்குகிறோம்!
நிலவும் வானும் நெடுநிலமும்
           நீண்டு வளரும் பெருங்கடலும்
வலமும் இடமும் துணையாக
           வாழ்க! பொங்கல் திருநாளே!




On 1/14/08, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
--
   இருக்கும் வரை தமிழ் அணையில்
                  அன்புடன்                                          
                      இரவா

வலைப்பூ: http://thamizmandram.blogspot.com/
இணையம்:  www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com

Kannan Natarajan

unread,
Jan 14, 2008, 4:16:31 PM1/14/08
to minT...@googlegroups.com
தனிப்பெருந் திருநாள்

தமிழ்த்திரு நாட்டின் தனிப்பெருந் திருநாள்
'பொங்கல்' என்னுமிப் புனிதநன் னாள்முதல்
வையகம் முழுவதும் மெய்யறம் ஓங்கி
வறுமையும் பகைமையும் வஞ்சமும் நீங்கி
உங்கள் குடித்தனச் சிறப்புகள் உயர்ந்து
பண்டம் பலவும் பணமும் நிறைந்து
மக்களும் மனைவியும் மற்றுள சுற்றமும்
இன்பம் பெருகிட இல்லறம் நடத்திப்
பல்லாண்டு வாழ்ந்திடப் பரமனார் அருளும்
வாழிய உங்கள் வளமனைப் பொங்கல். -  நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை (1888 - 1972)

Kannan Natarajan

unread,
Jan 14, 2008, 4:17:37 PM1/14/08
to minT...@googlegroups.com
இன்பப் பொங்கல்

பொங்கல் எனும்பொழுதில்--இன்பம்
பொங்குது துன்பங்கள் மங்கி மறைந்திடும்
மங்களச் சொல்அதிலோர்--தெய்வ
மந்திரம் உண்டெனச் சிந்தை களித்திட
எங்கள் தமிழ்நாட்டில்--மிக்க
ஏழையும் செல்வரும் தோழமை எய்திடும்
இங்கிதம் கண்டிடும்நாள்!--பலர்
எங்கும் புகழ்ந்திட உங்கள் குடித்தனம்
பொங்குக பொங்குக பால்!

வெள்ளை அடித்திடுவோம்--எங்கள்
வீடுகள் வாசலில் கூடிய மாசுகள்
அள்ளி எறிந்துவிட்டு--மிக
அற்புதச் சித்திரம் பற்பல வாணங்கள்
புள்ளிகள் கோலமிட்டுத்--தெய்வ
பூசனைத் தீபங்கள் வாசனைத் தூபங்கள்
உள்ளத்தி லும்புகுந்தும்--அங்கே
ஊறிய தீமைகள் மாறுதல் செய்திடும்
சீருடைப் பொங்க லிதாம்!

மாடுகள் நாய்குதிரை--ஆடும்
மக்களைப் போலவே ஒக்கும் உயிரென்று
நாடும் நினைவுவந்து--பொங்கல்
நாளில் அவைகளின் தாளில் தளையின்றித்
தேடும் உரிமைதந்து--முற்றும்
தேய்த்துக் குளிப்பாட்டி நேர்த்தி யுறமலர்
சூடின தாகச்செய்வோம்--அதில்
தோன்றும் கருணையை ஊன்றி நினைத்திட
ஏன்றது இந்தப் பொங்கல்!

அஞ்சும் மனத்தவரும்--கொஞ்சம்
ஆண்மை தருமனப் பான்மை யடைந்திட
மஞ்சு விரட்டிடுவோம்--துஷ்ட
மாட்டையும் அடக்கும் தாட்டிகம் காட்டுவம்
வஞ்சனை மோசங்களும்--தங்கள்
வாடிக்கை விட்டந்த வேடிக்கை பார்த்துடன்
கொஞ்சி மகிழ்ந்திடும்நாள்!--மைந்தர்
கூட்டமும் பந்தய ஓட்டமும் மங்களப்
பாட்டும் மிகுந்த பொங்கல்!

மங்கள வாழ்வுபெற்று--மக்கள்
மாச்ச ரியம்தரும் ஏச்சுக ளைவிட்டு
எங்கள் திருநாட்டில்--இனி
ஏழ்மையும் யாருக்கும் தாழ்மையும் நீங்கிடச்
செங்கை சிரங்கூப்பித்--தெய்வ
சிந்தனை யிற்பல வந்தனை பாடிஇப்
பொங்கலை வாழ்த்திடுவோம்--இந்தப்
பூதலம் யுத்தத்தின் வேதனையாற் படும்
தீதறப் பொங்குக பால்! - நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை (1888 - 1972)

Kannan Natarajan

unread,
Jan 14, 2008, 4:18:29 PM1/14/08
to minT...@googlegroups.com
சுதந்தரப் பொங்கல்

அடிமை விலங்குகள் அகன்றன இனிமேல்
கொடுமை பிறர்பால் கூறுதற் கில்லை
திடமுடன் சத்தியத் தீயினை வீட்டி
மடமை மதவெறி மமதையை எரித்துப்
பொய்யும் மோசமும் புலையும் பொசுங்க
வையம் முழுவதும் வாழ்ந்திடத் துணிந்திங்
கன்பெனும் பாலை அடுப்பகத் தேற்றித்
துன்பெனும் துர்நீர் சுண்டித் தொலைந்திடக்
காய்ச்சித் திரட்டிய கருணைப் பொங்கல்
பாய்ச்சும் சுதந்தரப் பரிமளம் கமழ
அமிழ்தம் இதுவென அழியா வரந்தரும்
தமிழன் தெய்விகத் தனிரசம் சேர்த்துப்
புத்தம் புதியதோர் சுவைதரப் புசித்து
நித்தமும் மகிழ்வுடன் நெடுநாள் வாழ்வீர்! - நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை (1888 - 1972)

Kannan Natarajan

unread,
Jan 14, 2008, 4:19:18 PM1/14/08
to minT...@googlegroups.com
பொங்குக புதுவளம்

பொங்குக பொங்கல் பொங்குகவே
பொங்குக புதுவளம் பொங்குகவே
திங்களில் மும்முறை மழைபொழியத்
தினம்இது முதல்நம் குறைஒழிய
மங்குக போர்வெறி மாச்சரியம்
மதவெறி நிறவெறி தீச்செயல்கள்
தங்குக சத்திய சன்மார்க்கம்
தரணியில் மாந்தர்கள் எல்லார்க்கும்.

மாநில உயிர்கள் நலமுறவும்
மக்கள் உடல்வளம் பலமுறவும்
ஞானமும் கல்வியும் சிறந்திடவும்
நல்லன உணர்ச்சிகள் நிறைந்திடவும்
தானியக் கதிர்வளம் உயர்ந்திடவே
தக்கன உழவுகள் முயன்றிடுவோம்
போனதிங் குணவுப் பஞ்சமெனப்
புதுவளம் எங்கணும் மிஞ்சிடவே. (பொங்)

இயற்கையின் வளம்பல இருந்தாலும்
இன்பம் யாவையும் பொருந்தாவாம்
செயற்கைப் பொருள்கள் சேராமல்
சிறப்புள வாழ்வெனும் பேராமோ?
வியக்கும் பொருள்களைச் செய்திடுவோம்
வேண்டிய திறமைகள் எய்திடுவோம்
நயக்கும் தொழில்பல பெருகவென
நமக்கதில் ஊக்கம் வருகவென. (பொங்)

உழவும் தொழிலும் மலிந்துவிடில்
ஊரில் செல்வம் பொலிந்துவிடும்
விழவும் தினந்தினம் விருந்துகளும்
வீட்டிலும் நாட்டிலும் இருந்துவரும்
பழகும் அன்னிய நாடுகளும்
பரிவுடன் எதையும் ஈடுதரும்
செழுமை பெற்றிடும் வாணிபங்கள்
சேமித் திடுவோம் நாணயங்கள். (பொங்)

பொலிவுறச் செல்வம் சேர்ந்தஉடன்
புதுப்புது உணர்ச்சிகள் ஊர்ந்துவரும்
இலக்கிய வாழ்க்கையில் இச்சைதரும்
இன்பச் செயல்களை மெச்சவரும்
நலிதரும் ஆசையை ஓட்டுவதாய்
நன்னெறி இன்பம் ஊட்டுவதாய்க்
கலைகள் யாவையும் திகழ்ந்திடவும்
கண்டவர் கேட்டவர் புகழ்ந்திடவும். (பொங்)

கொள்ளை கொள்ளை தானியமும்
கோரும் பலதொழில் மானியமும்
வெள்ளிபொன் செல்வம் மிகுந்திடினும்
வேண்டிய கலைத்திறம் திகழ்ந்திடினும்
கள்ளமும் பொய்யும் அமிழ்ந்திடவும்
கருணை நறுமணம் கமழ்ந்திடவும்
உள்ளம் மலர்ந்திடல் இல்லாமல்
உண்மை வளமெதும் நில்லாது. (பொங்)

தனிநா யகன்ஒரு பரம்பொருளாம்
தரணியை ஆள்வதும் அவன்அருளாம்
மனநா யகம்இதில் மலர்ந்துவிடில்
மற்றுள வேற்றுமை உலர்ந்துவிடும்
ஜனநா யகமுறை ஓங்கிவிடும்
சச்சர வென்பன நீங்கிவிடும்
இனமாய் யாவரும் வாழ்ந்திடலாம்
இன்பப் புதுவளம் சூழ்ந்திடவே! (பொங்) - நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை (1888 - 1972)

Kannan Natarajan

unread,
Jan 14, 2008, 4:20:38 PM1/14/08
to minT...@googlegroups.com
தமிழர் கண்ட பொங்கல்

ஏர்தரும் விளைபொருள் யாவையும் நிறைந்தே
ஏழைகள் படுந்துயர் எங்கணும் குறைந்து
போர்வெறிக் கொடுமைகள் புரிவதை மறந்து
பொய்ந்நெறி விடுத்தறம் மெய்ந்நெறி சிறந்து
சீர்தரும் கல்வியும் கலைகளும் செழிக்கச்
செம்மையும் இன்பமும் நாட்டினிற் கொழிக்கப்
பார்புகழ் உழவினைப் பணிந்திட என்றே
பண்டைய தமிழர்கள் கண்டதிப் பொங்கல்.

(வேறு)

பொங்குக பொங்கல் பொங்கிட இன்பம்
ஏரைத் தொழுதால் சீரைப் பெறலாம்
என்பதைப் புகட்டும் இங்கிதப் பொங்கல்
நன்னாள் ஆகிய இந்நாள் தொடங்கிக்
கோழை படாத மேழிச் செல்வம்
வேண்டிய மட்டிலும் வீட்டில் நிறைந்தே
இன்பம் குறையா இல்லறம் நடத்தி
மனைவியும் மக்களும் மற்றுள சுற்றமும்
குலவிட உங்கள் குடித்தனம் சிறந்து
காந்தியை எண்ணிக் கடவுளை நம்பிச்
சத்திய சாந்த சன்மார்க்க நெறியில்
பல்லாண்டு வாழ்வீர் பரமன் அருளும்.

(வேறு)

பொங்கி வழிந்திடும் அன்போடு
பொங்கல் திருநாள் கொண்டாடி
திங்கள் மும்மாரி பொழிந்திடவும்
தீமைகள் யாவும் ஒழிந்திடவும்
எங்கும் மாந்தவர்கள் எல்லாரும்
ஏதொரு குறையும் இல்லாமல்
இங்கித முற்றிட வேண்டுமென
ஈசன் மலரடி பூண்டிடுவோம்.

ஏரைத் தொழுதால் சீராகும்
என்கிற அறிவே நேராகும்
பாரில் இதனை மறந்ததனால்
பஞ்சம் என்பது நிறைந்ததுவே.
ஊரும் நாடும் உயிர்வாழ்தல்
உழவன் காக்கிற பயிர்வாழ்வால்
தேரும் படிவரும் ஒருநாளே
தெய்வீகப் பொங்கல் திருநாளாம்.

வேலும் போரும் வெற்றிகளும்
வேறுள எவ்வித பெற்றிகளும்
சீலம் மிக்குள உழவேபோல்
சேமம் தருகிற தொழிலாமோ?
பாலும் நெய்யும் பசுவாலே
பகடுகள் எருதின் இசைவாலே
சாலும் உழவும் சரியானால்
சங்கடப் பஞ்சம் வருமோதான்?

ஏற்றத் தாழ்வுகள் எண்ணாமல்
எவ்விதப் பிசகும் பண்ணாமல்
போற்றும் அன்பே நெறியாகப்
பொதுநல வாழ்வே குறியாகச்
சாற்றும் படிவரும் பொன்னாளே
சமரசப் பொங்கல் நன்னாளாம்
ஆற்றல் பற்பல எய்திடினும்
அறமே எதிலும் செய்திடுவோம்.

மைந்தரும் உங்கள் மனைவியுடன்
மற்றுள சுற்றம் அனைவருமே
சுந்தரப் பொலிவுடன் களிகொண்டு
சுவைமிகும் பொங்கல் தங்கிடவும்
சிந்தையில் தெய்வம் தங்கிடவும்
சிறப்புடன் மங்களம் பொங்கிடவும்
வந்தனை பொங்கும் மனத்தோடு
வணங்கி உங்களை வாழ்த்துகிறோம்.- நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை (1888 - 1972)

Kannan Natarajan

unread,
Jan 14, 2008, 4:21:25 PM1/14/08
to minT...@googlegroups.com
உழவுப் பொங்கல்

பொங்குக பொங்கல் பொங்குகவே
புதுவளம் நிறைந்தறம் தங்குகவே!
எங்கணும் யாவரும் இன்பமுற
ஏர்த்தொழில் ஒன்றே தென்புதரும்.

உணவுப் பொருள்கள் இல்லாமல்
உயிரோ டிருப்பது செல்லாது;
பணமும் அதுதரும் நலனெல்லாம்
பயிர்கள் விளைப்பதன் பலனேயாம்.

உழவுத் தொழில்தான் உணவுதரும்
உடையும் அதனால் அணியவரும்
பழகும் மற்றுள தொழில் யாவும்
பயிர்த்தொழில் இன்றேல் விழலாகும்.

தங்கமும் வெள்ளியும் இருந்தாலும்
தானியம் ஒன்றே விருந்தாகும்
இங்கிதன் உண்மையை உணர்ந்திடுவோம்
ஏர்த்தொழில் மிகுந்திடத் துணிந்திடுவோம்.

உழவே செல்வம் உண்டுபண்ணும்
உழைப்பே இன்பம் கொண்டுவரும்
உழவைத் தொழுதிட வருநாளே
உற்றஇப் பொங்கல் திருநாளாம்.

ஏழையும் செல்வரும் இங்கிதமாய்
இசைந்துளம் களித்திடும் பொங்கல்இது
வாழிய பயிர்த்தொழில் வளம்பெருகி
வையகம் முழுவதும் வாழியவே. -  நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை (1888 - 1972)


Kannan Natarajan

unread,
Jan 14, 2008, 4:22:05 PM1/14/08
to minT...@googlegroups.com
சமரசப் பொங்கல்

மனிதர் யாவரும் ஒருஜாதி
மாநிலம் எங்கணும் ஒருநீதி
இனிதிவ் வெண்ணம் செழித்திடவே
இம்சையும் பொய்யும் ஒழித்திடவே
தனிவழி அறமுறை தமிழேபோல்
தளர்விலன் சத்திய அமுதூட்டும்
புனிதன்அக் காந்தியின் பொய்யறியாப்
பொக்கைச் சிரிப்புகள் பொங்குதல்போல்
பொங்குக! பொங்கல்! பொங்குகவே!!
புதிதொரு சுவைதரப் பொங்குகவே! - நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை (1888 - 1972)

Kannan Natarajan

unread,
Jan 14, 2008, 4:22:44 PM1/14/08
to minT...@googlegroups.com

பொங்கல் படைப்பு

முத்தமிழ்ப் பண்பெனும் முதுபெருங் கற்கள்
மூன்றையும் அடுப்பென முன்றிலில் கூட்டி
அத்தமிழ் விளைத்துள அறம்பொருள் இன்பம்
அடங்கிய பானையை அடுப்பினில் ஏற்றி
மெய்த்தவ நெறியெனும் நெருப்பினைப் பொருத்தி
மேவிய துயர்களை விறகென எரித்துச்
சத்திய சாந்தநற் பொங்கலைச் சமைத்துச்
சன்னதி ஆண்டவன் முன்அதைப் படைத்து,

தீமைகள் யாவையும் தீர்ந்திட நாட்டில்
திங்கள்மும் மாரிக்குத் திருவருள் கூட்ட
வாய்மையும் தூய்மையும் வளர்ந்திடும் படிக்கோர்
வரந்தர வேண்டுமென் றிறைஞ்சிடு வோமே ;
நோய்மையும் பஞ்சமும் நொடியினில் விலகும்
நுண்ணிய நலந்தரும் புண்ணியம் பெருகும்
தாய்மையின் அன்புடன் தழைத்திடும் தருமம்
தமிழ்ப்பெரும் பொங்கலில் தாரணி மகிழும். - நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை (1888 - 1972)

Kannan Natarajan

unread,
Jan 14, 2008, 4:23:27 PM1/14/08
to minT...@googlegroups.com
பொங்கல் பிரார்த்தனை

சக்திதரும் சூரியனைத் தொழுது நின்று
சர்வேசன் திருவருளை மனத்தில் எண்ணிப்
புத்தரிசிப் பொங்கலுண்ட பூரிப்போடும்
புத்தாடை புனைந்தொளிரும் பொலிவி னோடும்
எத்துணையும் எவர்க்கேனும் இடைஞ்ச லின்றி
எவ்வெவரும் அவ்வவர்தம் மனம்போல் வாழ
ஒத்துதவும் சமுதாயம் உலகில் ஓங்கும்
ஒருவரத்தைத் திருவருள்பால் உவக்கக் கேட்போம்.

பொங்கிவரும் விஞ்ஞானப் புதுமை கண்டு
புத்திகெட்டு மெய்ஞ்ஞானம் போய்வி டாமல்
எங்கள்திருத் தமிழ்நாட்டின் தெய்வ பக்தி
என்றென்றும் குன்றாமல் இருக்கு மாறும்
எங்குமிந்த உலகிலுள்ள மக்க ளெல்லாம்
இன்பமுற அன்புடனே குலவு மாறும்
பொங்கலென்று போற்றுமிந்தப் புனித நாளில்
புண்ணியத்தை நாடுகின்ற எண்ணம் கொள்வோம்.

மேதினியில் வேற்றுமைகள் இருந்தே தீரும்
மெய்இதனை ஐயமறத் தெளியச் செய்து
சாதிமத வேற்றுமையை மிகைப் படுத்திச்
சண்டைகளை மூட்டுவதைத் தவிர்க்கு மாறும்
ஓதிஉணர்ந் தறிவறிந்த முன்னோர் கண்ட
ஒற்றுமையை வேற்றுமையில் உணரு மாறும்
ஆதிபரம் பொருளிடத்தில் வரங்கள் கேட்போம்
அதுவேநாம் பொங்கலிலே அடையும் நன்மை. - நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை (1888 - 1972)

Kannan Natarajan

unread,
Jan 14, 2008, 4:24:11 PM1/14/08
to minT...@googlegroups.com
வாழிய பொங்கல்

பழையன கழியப் புதியன மலியத்
தழைத்துப் பூத்துத் தருமம் கனிந்து
விழவுகள் பாடி விருந்தொடும் உண்டு
முழவொலி மனைதொறும் முழங்கிடும் பொங்கல்!

சத்தியம் நிலவச் சாந்தமே குலவ
உத்தம போதனை ஒப்பிலாச் சமரசம்
இத்தரை முழுதும் எங்கணும் பரவப்
பக்தியில் பரமனைத் தொழுதிடப் பொங்கல்!

யுத்தமே என்னும் ஒருபெரும் பேச்சால்
இத்தினம் எங்கும் யாவரும் ஏங்கிப்
பித்தரே யாகிப் பேதுறும் நிலையைச்
சற்றுநாம் மறக்கச் சாந்தியாம் பொங்கல்!

நினைவுகள் சிறந்து நிதிபல நிறைந்து
சினவகை சேர்ந்த சிறுமைகள் தீர்ந்து
மனைதொறும் மனைதொறும் மங்களம் தங்க
அனைவரும் இன்புறும் அன்பே பொங்கல்!

ஏழையென் றெவரும் ஏங்குதல் நீங்கி
மேழியின் சிறப்பில் செங்கோல் மின்னும்
வாழ்வினைக் காட்ட வருவதே பொங்கல்
வாழிய பொங்கல்! வாழிய உலகம். - நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை (1888 - 1972)

வேந்தன் அரசு

unread,
Jan 14, 2008, 5:51:14 PM1/14/08
to minT...@googlegroups.com
>துஷ்ட
மாட்டையும்
அடக்கும் தாட்டிகம்
??
2008/1/14 Kannan Natarajan <thar...@gmail.com>:
இன்பப் பொங்கல்

--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)

இரவா

unread,
Jan 14, 2008, 10:43:58 PM1/14/08
to minT...@googlegroups.com
எங்கள் தமிழர் இல்லங்கள்
        இனிக்கும் சர்க்கரைக் கரும்புடனே
பொங்கும் இஞ்சித் தேன்பாகுப்
        புகழும் மணமும் இணையாகி
மஞ்சள் மகிழும் செவ்வாழை
        மலியும் கழனி வளத்தாலே
நெஞ்சில் இன்பப் பெருக்கெடுக்க
        நேர்ந்த பொங்கல் வாழியவே!


Vijay kumar

unread,
Jan 14, 2008, 11:44:14 PM1/14/08
to minT...@googlegroups.com



On 1/15/08, வேந்தன் அரசு < raju.ra...@gmail.com> wrote:
>துஷ்ட
மாட்டையும்
அடக்கும் தாட்டிகம்
 
??
 

திரு S. R. பாலசுப்ரமனியாம் அவர்களின் கொபெருஞ்சிங்கன் என்ற புத்தகத்தில் ( பல்லவ குளத்தில் பின்னர் கி பி 13th C தோன்றிய காடவன்) உள்ள குறிப்பு .... ஏழிசை மோகன் என்ற கொபெருஞ்சின்கனின் முப்பாட்டன் பற்றி கல்வெட்டுகளில் உள்ள தகவல்..... ஏழிசை மோகன் மதம் பிடித்த யானைகளை அடக்கி செலுத்துவதில் வல்லவன்....

யானை அடக்கும் தமிழனுக்கு காலை எம்மாத்திரம்

 

 

இரவா

unread,
Jan 15, 2008, 1:49:56 AM1/15/08
to minT...@googlegroups.com
இரத்தம் கொப்பளிக்கும் போர்க்களத்தில் 'ஆயிரம் யானையைக் கொன்ற மானவனுக்கு, வகுப்பது பரணி என்பர். அத்தகைய போரையும் போர்ப் பரணியையும் காணாதவர்கள், காகம் கத்தினாலும் கதறிவிடுவர்.
--
   இருக்கும் வரை தமிழ் அணையில்
                  அன்புடன்                                          

Narayanan Kannan

unread,
Jan 15, 2008, 2:23:51 AM1/15/08
to minT...@googlegroups.com
2008/1/15 இரவா <vasude...@gmail.com>:

> இரத்தம் கொப்பளிக்கும் போர்க்களத்தில் 'ஆயிரம் யானையைக் கொன்ற மானவனுக்கு,
> வகுப்பது பரணி என்பர். அத்தகைய போரையும் போர்ப் பரணியையும் காணாதவர்கள், காகம்
> கத்தினாலும் கதறிவிடுவர்.
>

ஆயிரம் யானைகளைக் கொல்லும் சாமர்த்தியம் ஒரு சாதாரண மனிதனுக்கு
இருக்கிறதென்று நம்புவர்கள் கண்ணன் கம்சனின் 'குவலயாபீடம்' எனும் யானையை
ஒருவனாகக் கொன்றான் எனும் பொழுது கேள்வி கேட்கின்றனர் அல்லது ஆண்டாளின்
பாசுரத்திற்கு ஆழ் பொருள் சொல்லும் போது மறுக்கின்றனர். நாம் எதை
நம்பவேண்டுமென்று விரும்புகிறோமோ அதையே நம்புகிறோம். அப்படியே
பேசுகிறோம்.

விவேகாநந்தர் சொன்னார், இந்தியாவின் எதிர்காலம் வீரமுள்ள, பலாக்கிரமமான
இந்தியனிடம் உள்ளது என்று. எனவே இந்தியாவில் தேகப்பயிற்சியை
ஊக்குவிப்போம். நகரங்களில் மனிதர் கொஞ்ச நேரமாவது காலாற நடப்பதற்கு
பூங்கா வைப்போம். பெண்களுக்கு தேகப் பயிற்சி சொல்லிக் கொடுப்போம்.
தொந்தியும், தொப்பையுமாக இருக்கும் காவல் துறையை மாற்றி அமைப்போம்.
அலுவலகத்தில் இருப்போருக்கும் குறைந்தது 10 நிமிடமாவது கட்டாய தேகப்
பயிற்சி தருவோம். இந்தியர்களைப் பார்க்கும் போது ஒன்று malnourished
அல்லது overfed ஆகவே உள்ளனர்.

பரணி பாடுவதைக் கணினி முன் செய்துவிடலாம். ஆனால், பரணி வீரம்
வேண்டுமெனில் களத்தில் பயிற்சி வேண்டும். இதைத் தமிழகம் செய்யுமா?
பள்ளிகளில் தேகப்பயிற்சி கட்டாயப் பாடமாகுமா? அதை விடுத்து
ஜல்லிக்கட்டுக்கு கோர்டுக்குப் போவது 'தும்பை விட்டு வாலைப் பிடிப்பது
போல்தான்'.

கண்ணன்

வேந்தன் அரசு

unread,
Jan 15, 2008, 9:20:29 AM1/15/08
to minT...@googlegroups.com


2008/1/15 Narayanan Kannan <nka...@gmail.com>:
2008/1/15 இரவா <vasude...@gmail.com>:

. நகரங்களில் மனிதர் கொஞ்ச நேரமாவது காலாற நடப்பதற்கு
பூங்கா வைப்போம்.
 
அதுக்குதான் தினமும் (நடந்தே) கோவிலுக்கு போய் கோவில் புறத்தை மூன்று சுற்று சுற்ற சொன்னார்கள்
 
அறியாதவர்கள் நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறினார்கள்
 

Kannan Natarajan

unread,
Jan 20, 2008, 1:22:34 AM1/20/08
to minT...@googlegroups.com
பொங்கல் தினப் புளகாங்கிதம்

"தை" என்னும் தாய்
 ஓரெழுத்து ஒருமொழியில்
 சிக்கனம் ஆனாள்
 ஏராளமான அறுவடையில்
 தாராள வருவாய் ஆனாள்.
 
 இவள்
 தானே சிக்கனமும் ஆகித்
 தாராள வருவாயும் ஆகிச்
 சிக்கனமும்
 சிறந்த வருமானமும்
 ஒன்றே எனும்
 வாழ்க்கைச் சித்தாந்தத்தை
 வடிவமைத்து விட்டாளே!

 சிக்கனத்-'தை'த் தன்னிலும்
 தாராளத்-'தை' மண்ணிலும் வைத்த
 தைத்தாயின்
 நாகரிக வித்தகம்
 தலைசிறந்த
 ராஜரிகத் தத்துவம்.

 இத்தைத் திருநாளில்
 ஒரு தர்மயுத்த சூளுரை:
 வர்க்க பேதம் இல்லாத
 ஒரு சொர்க்கத்தைச் சமைத்து
 வருமானப் பகிர்மானம்
 வகையாக நடத்த
 வெங்கலத்தில் சங்கொலித்து
 வெற்றி வாகை சூடுவோம்.
 இதோ மணக்கும் பால் பொங்கல்
 இனிக்கும் கரும்புச்சாறு
 வாருங்கள்
 சாதி பேதமில்லாமல்
 சந்தோசமாய்க் கூடிப்
 புசிப்போம், குடிப்போம்
 ஆடிப்பாடிக் களைத்த பின்
 அயர்ந்துறங்க
 ஆனந்தமாய்த் தலை சாய்ப்போம்
 இதுவே
 பொங்கல் தினப் புளகாங்கிதம்!
ச.பாண்டின், போடி.சுந்தரராஜபுரம்.

Kannan Natarajan

unread,
Jan 20, 2008, 1:26:55 AM1/20/08
to minT...@googlegroups.com
பல்லாயிரம் பொங்கல் கண்ட நாடு

பொங்கல் நாள் ஒரு பெருநாள்!!
உழைப்பின் வியர்வையில் முகிழ்ந்திட்ட முத்துக்கள்
கொழித்திட்ட கதிர்கள் குவித்திட்ட அறுவடை
மகிழ்ச்சிக் களிப்பில் திளைக்கின்ற மக்கள்
திருநாள் பொங்கல்; நாம் காணும் பெருநாள்

பல்லாயிரம் பொங்கல் கண்டதிந்த தமிழகம்
பல்கிப் பெருகி பலகோடி மேற்காணும்
பொங்கட்டும் பொங்கல் பொலியட்டும் தமிழகம்
நலங்கண்ட தமிழகத்தால் வளங்காணும் பாரதம்
பொங்கல் நாள் ஒரு பெருநாள்!!
உண்மைகளின் உன்னதங்கள் ஒலிக்கட்டும் உலகெங்கும்

வள்ளுவன்போல் ஞாலஞானிகள் வளரட்டும் ஆங்காங்கே
செழிக்கட்டும் நம்நாட்டில் குறள்போலும் பன்னுால்கள்
இறைஞானி இளங்கோவின் செந்நுாலாம் சிலம்பு உணர்த்தும்
அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்று ஆகிவரும்
நற்சிந்தனை கருக்கொண்டு நற்செயல்கள் ஓங்கட்டும்

மகாகவிகள் தோன்றிடட்டும் நதிநீர்கள் இணைந்திடட்டும்
கனவுகள் நனவாகும்; கங்கைநீர் காவிரி வரும்!
சேதுசமுத்திர திட்டங்களும் நிறைவேறும்
திருநாள் பொங்கல்; நாம் காணும் பெருநாள்!!

பாரதியின் கனவுபோல பாரெங்கும் கலம் செலுத்தி
செல்வங்கள் சேர்த்திடுவோம் ஏழ்மையை துடைத்திடுவோம்
நிமிர்ந்த நன்னடைப் புதுமைப் பெண்களும்
செவ்வனே சேர்ந்தாள சிறக்கட்டும் நம்நாடு
வளத்தைப் பெருக்குங்கள் கொழிக்கட்டும் நம்நாடு

ராமானுஜம் போல் கணிதமேதைகள்
ராமன் போல் நோபல்கள் இலைக்கொன்றாய் முளைக்கட்டும்
நம் விஞ்ஞான வளர்ச்சிகண்டு வியக்கட்டும் நிலவுலகு
கடின உழைப்பிலும் உள்ளத்து உயர்ச்சியிலும்
நம்பிக்கை கைக்கொண்டு நம்நாடு வளரட்டும்

தை பிறந்தது; நாம் வளர்ந்த நாடாக வழியும் பிறந்தது
அரிசியும் பாகும் போல நம் கனவும் நல்வினையும்
இனிப்பாக கலக்கட்டும் உழைப்பாக மலரட்டும்
பொங்கட்டும் எண்ணங்கள் பொலியட்டும் நற்செயல்கள்
திருநாள் பொங்கல் நமக்கெல்லாம் பெருநாள்

டாக்டர். ஏ.பி.ஜெ. அப்துல்கலாம்
முன்னாள் ஜனாதிபதி
Reply all
Reply to author
Forward
0 new messages