வியாசர்பாடி( இது எங்க ஏரியா.........)

378 views
Skip to first unread message

syed abdulkadhar

unread,
Dec 29, 2008, 4:20:58 AM12/29/08
to minT...@googlegroups.com

ஒரு சில வருடங்களுக்கு முன் இந்த ஏரியாவுக்கு இரவில் நீங்கள் வருவதாயிருந்தால் ஒரு ஆட்டோ கூட கிடைக்காது.வியாசர்பாடி என்றாலே ரவுடி ஏரியா என்று நிறைய பேருக்கு தெரியும்.
வடசென்னை முன்பெல்லாம் லேபர் ஏரியா என்றுதான் சொல்வார்கள்.
ப‌டிப்பு வாச‌னையே இல்லாத வெள்ள‌ந்தி ம‌னித‌ர்க‌ள் இங்கு ஏராள‌ம்.அழுக்கு ப‌டிந்த‌ ச‌ட்டை,ப‌ர்மா "பாடைக்" (Bataik) கைலிக‌ள்,வாயில் பீடி நாற்ற‌ம் இது தான் வியாச‌ர்பாடி ம‌க்க‌ளின் அடையாள‌ம்.
ஆனால் சென்னை மக்களுக்கு தெரியாத இன்னும் நிறைய சுவாரசியமான விஷயங்கள் இந்த வியாசர்பாடி ஏரியாவில் உண்டு.
 
பி.வி.காலனி,சாஸ்திரி நகர்,சர்மா நகர்,பாரதி நகர் இந்த பகுதிகளை உள்ளடக்கியதே இந்த வியாசர்பாடி.அறுபதுகளில் எங்களைப் போன்று பர்மாவிலிருந்து தாயகம் திரும்பியோருக்காக,அப்போதிருந்த தமிழக அரசு வியாசர்பாடியில் நிலங்களை ஒதுக்கியது.முன்னரே குடியிருந்த மக்களுக்கும்,இந்த புலம் பெயர்ந்த குடிகளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டபோது தான், ரவுடியிசமும் கட்டப் பஞ்சாயத்துகளும் கோலோச்சத் துவங்கின.குட்டி காஷ்மீர் மாதிரி.எதாவது ஒரிடத்தில் சண்டை நடந்து கொண்டே தான் இருக்கும்.
பட்டப் பகலில் வெட்டுக் குத்து கொலைகள் சகஜம்.ஆயிர‌க் க‌ணக்கான ச‌ம்ப‌வ‌ங்க‌ள் நட‌ந்தேறியிருந்தாலும், சுப்பையா,பிலிப்,பெஞ்ச் ப‌டுகொலைக‌ள் இங்கே பிர‌ப‌ல‌ம்.குறிப்பாக‌ பிலிப் என்ற‌ ர‌வுடி, ஒரு ம‌திய‌ வேளையில் பைக்கில் சென்ற‌ போது, முக‌த்தில் ஆசிட் ஊற்றி வ‌ழிம‌றித்து,ஒரு கும்ப‌ல் ம‌ற்ற‌ ம‌க்க‌ள் முன்னிலையில் ச‌ர‌மாரியாக வெட்டிக் கூறுபோட்ட‌து. செய்தது காதுகுத்து ர‌வியின் ஆட்க‌ள்.எல்லாம் 14 முத‌ல் 15 வ‌ய‌துள்ள சிறுவ‌ர்க‌ள். நீண்ட கால போராட்டத்திற்குப் பின் தமிழக காவல்துறை இந்த ரவுடியிசத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.எல்லா வீரமறவர்களையும் என்கவுண்டரில் போட்டுத் தள்ளிய பிறகு தான் வியாசர்பாடி மக்கள் நிம்மதி பெருமூச்சி விட்டனர்.
 
அதெல்லாம் இப்போது இறந்த காலமாகி விட்டது.
இப்போது நீங்கள் வியாசர்பாடி வந்தால் உங்கள் அனுபவமே வேறு.
 
 
பர்மாவிலிருந்து வந்ததால் இப்பகுதி மக்களிடையே ஒரு வித்தியாசமான கலாச்சாரத்தை உணர முடியும்.
உணவு,உடை பேச்சுவார்த்தைகள் எல்லாவற்றிலுமே.
சென்னையில் (தண்டையார்பேட்டை,செகண்ட் லைன் பீச் ரோடுகளைத் தவிர) வேறங்கும் கிடைக்காத
சில உணவு வகைகள் இப்பகுதிகளில் கிடைக்கும்.
அத்தோ,கவ்ஸ்வே,மொய்ங்கா,பேபியோ,மொபெட்டோ அனைத்தும் பர்மிய உணவு வகைகள்.
குறிப்பாக அத்தோ,கவ்ஸ்வே சின்னசின்ன‌ ரோட்டோர கடைகளில் (Only at nights)  கிடைக்கும். "அத்தோ" கடை எங்க இருக்கு" என்று விசாரித்தால் குட்டிச் சாத்தான்க‌ள் கூட சொல்லும்.
ஆர‌ஞ்ச் நிற‌த்தில் பெரிய சைசில் நூடுல்ஸ்,ப‌ச்சை முட்டைகோஸ்,வ‌றுத்த‌ பூண்டு,புளி தண்ணீர்,கொத்த ம‌ல்லி,அரைத்த‌ மிள‌காய் இன்னும் ப‌ல வ‌ஸ்துக்க‌ளை சேர்த்து கையிலியே பிசைந்து ஒரு பிர‌ள‌ய‌த்தையே உண்டுபண்ணி
பீங்கான் கோப்பைக‌ளில் ப‌ரிமாறுவார்க‌ள்.தொட்டுக் கொள்ள ப‌ச்சைமீன் வ‌டித்த‌ த‌ண்ணீரில் வாழைக்காய் போட்டு கெட்டியாக சுடச்சுட அஜினமோடோ கலவையுடன் ஒருகுழ‌ம்பு ( Highly viscous liquid ) த‌ருவார்க‌ள்.
கடித்துக் கொள்ள "பேஜோ" என்று நம்மூர் அடை மாதிரி தான் ஆனால் கொஞ்சம் பெரிய சைசில் கடினமாக இருக்கும்.
இவ்வ‌ள‌வும் சேர்த்து விலை 15 முதல் 20ஐ தாண்டாது.
 
U.K Robert Gordon University-யில்  M.S படித்த‌வராக இருந்தாலும்,இன்போசிஸில் சாப்ட்வேர் என்ஜினியராக இருந்தாலும் Treat  என்று வந்துவிட்டால் ஒரு ஜமாஅத் "அத்தோ" கடைகளில் ஆஜராகிவிடுவோம்.ஒருமணி நேரம் எல்லா கவலைகளையும் மறந்து, 6,7 பேர் சேர்ந்து அரட்டை அடித்து கொண்டே,150 ரூபாய் செலவில் பைவ்ஸ்டார் ஓட்டலில் கிடைக்காத மகிழ்ச்சியை அனுபவித்து விட்டு வருவோம்.
 
அதுமட்டுமன்றி, பர்மிய தின்பண்டங்கள்,"கவ்னி" அரிசி,செருப்புகள்,கைலி அனைத்தும் குறைந்த விலையில் பி.வி.காலணியில் கிடைக்கும்
 
மக்களிடையே பர்மிய வார்த்தைகள் புழக்கம் அதிகம்.அவற்றுள் சிலவற்றை கீழே பாருங்கள். ( நீங்கள் பர்மாபஜாரில் பொருள் வாங்க செல்லும் போது இந்த வார்தைகளை உபயோகித்தால், பர்மா மக்கள் மாதிரி காட்டிக் கொண்டு பேரம் பேசலாம் )
 
 சியா- வாத்தியார்
அசே- ஒரிஜின‌ல்
அட்டூ- டூப்ளிகேட் ( இந்த‌ வார்த்தை சென்னை ம‌க்க‌ளிடையே இப்போது பிர‌ப‌ல‌ம்.<"அட்டு பிக‌ர் மாமே !!!!> )
 
இந்த 3 வார்த்தைகள் போதும்.இதை வைத்து ஒரு சின்ன உதாரணம்.
" ஸியா !!!!! இந்த பீஸ் அசெயா ? இல்ல அட்டூவா ?" என்று கேட்கலாம்.
 
பேச்சு வார்த்தையோடு நின்று விடாமல்,
லுங்கியையும் நாக்கையும் மடித்து வைத்து குத்தியெடுக்கும் சாவுக்குத்தும்,கானாப் பாடல்களும் உருவான தாயகமும் எங்கள் வியாசர்பாடி ( பேஜார்பாடி ) தான்.கானா உல‌க‌நாத‌ன்
வியாச‌ர்பாடி வாசி.
 
விளையாட்டைப் பொறுத்த மட்டில்,
சென்னை முழுவதும் தெரு கிரிக்கெட் ஆதிக்கம் செலுத்தினாலும்,எங்களுக்கு தேசிய விளையாட்டு கால்பந்து தான். பிரேசில்,மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் இங்கு ஏராளம்.நிறைய பேருக்கு அரசு உத்யோகம் கால்பந்து உபயமாகத் தான் கிடைத்தது.
சத்யமூர்த்தி நகர் மாநகராட்சிப்பள்ளியில் பயிற்சி செய்தே ஒரு மாணவன்,தேசிய கால்பந்து அணிக்காக போர்ச்சுகல் வரை சென்று வந்தான்.
 
பாரிமுனையிலிருந்து 10ரூ ஷேர் ஆட்டோவுக்கு தந்தால்,30 நிமிடத்தில் இந்த பர்மிய பிரதேசத்தை அடைந்து விடலாம்.
சென்னையில் இப்ப‌டி ஒரு இட‌மா ? என்று நீங்க‌ள் புருவ‌ம் உய‌ர்த்த கார‌ண‌ம் ஆயிரம்.
                                                            (இன்னும் நிறைய‌ இருக்கு...)
 
 
 

 
 
 
 
 

 
 

வேந்தன் அரசு

unread,
Dec 29, 2008, 1:17:20 PM12/29/08
to minT...@googlegroups.com
இண்டரஸ்டிங்!

Amala Singh

unread,
Dec 29, 2008, 6:50:09 AM12/29/08
to minT...@googlegroups.com
நான் மகாகவி பாரதி நகரில் வசித்திருக்கிறேன். நான் வசித்தது 1996-இல். என்னுடைய நண்பர்கள்
பலர் அப்பகுதியைச்சேர்ந்தவர்கள் என்பதால் பிரச்சினை இல்லாமல் போனது. அப்பகுதி கொஞ்சம்
முரட்டுத்தனமாக இருந்தாலும், அதன் பர்மிய வரலாறு பிரம்மிக்கவைக்கக்கூடியது. பர்மிய அகதிகளின்
வரலாற்றை யாராவது எழுதி இருந்தால் சொல்லுங்கள்.

2008/12/29 syed abdulkadhar <syedmoham...@gmail.com>

Kumaran Malli

unread,
Dec 29, 2008, 7:36:48 PM12/29/08
to minT...@googlegroups.com
வியாசர்பாடி என்ற பெயரை மட்டுமே இது வரை கேள்விபட்டிருந்தேன். வியாசர்பாடியின் அண்மைய வரலாற்றைப் படிக்க வியப்பாக இருக்கிறது. எழுதியதற்கு நன்றி நண்பரே.

2008/12/29 syed abdulkadhar <syedmoham...@gmail.com>

Kannan Natarajan

unread,
Dec 29, 2008, 8:16:52 PM12/29/08
to minT...@googlegroups.com
பர்மாவிலிருந்து 50-60களில் வந்தவர்களுக்கு பின்னால், இந்தியவின் வடபகுதியிலிருந்து தமிழகத்திற்கு இடம்பெயர்ந்த மார்வாடிகள்,சமணர்களும் 60-70களில் வியாசர்பாடியைத் தங்கள் வாழ்விடமாக கொண்டுள்ளனர்.

சங்ககாலப் பாடல் ஏதாவது "வியாசர்பாடி"யைப் பற்றியக் குறிப்பு உள்ளதா என்று தெரிவித்தால் நலம் அல்லது அந்நகர்புறத்தில் உள்ள "இரவீஷ்வரின்" (மூர்த்தி ஐயங்கார் வீதியில்) கோயிலில் உள்ள கல்வெட்டுக்கள் இருப்பின், அந்நகரின் பெயர்க் குறுப்பின் வரலாற்றைக் குறித்துள்ளதா?

இப்படியாக வடசென்னையில் உள்ள நகர்புறங்களைப் பற்றி செய்திப்பெட்டகங்கள் தோன்றினால் பயனளிக்கும்.

தமிழன்பகலா,
கண்ணன் நடராசன்

vj kumar

unread,
Dec 29, 2008, 9:29:07 PM12/29/08
to minT...@googlegroups.com
>
> சங்ககாலப் பாடல் ஏதாவது "வியாசர்பாடி"யைப் பற்றியக் குறிப்பு உள்ளதா என்று
> தெரிவித்தால் நலம் அல்லது அந்நகர்புறத்தில் உள்ள "இரவீஷ்வரின்" (மூர்த்தி
> ஐயங்கார் வீதியில்) கோயிலில் உள்ள கல்வெட்டுக்கள் இருப்பின், அந்நகரின் பெயர்க்
> குறுப்பின் வரலாற்றைக் குறித்துள்ளதா?


5] வியாசர்பாடி
வியாசர்பாடி - வைஷ்ஷாறுபாடி, வைஷ்ஷாறுக் கிராமம் எனக்
குறிக்கப்பட்டுள்ளது. வியாசரும் அவ்வூருக்கும் தொடர்பு இல்லை.


http://bharani.dli.ernet.in/thf/text/etext/nirutha/chennai.html

ஊர் பெயர்கள்

சென்னை மாநகரின் பல பகுதிகள் தனித்தனி ஊர்களாக முன்பு இருந்துள்ளன.
அவற்றின் சில பெயர் வடிவங்கள் வேறு வகைளில் காணப்படுகின்றன.

1] அயனாவரம்

அயனாவரம் - அயன்புரம் என்று அழைக்கப் பெற்றுள்ளது. 'ஜெயங்கொண்ட
சோழமண்டலத்துப் புழல் கோட்டமான விக்கிரமசோழ வளநாட்டுத் துடர்முள்ளிநாட்டு
அயன்புரம்' என்பது கல்வெட்டுத்தொடர். அயன்புரம் வேதம்வல்ல அந்தணர்கட்கு
அளிக்கப்பட்ட 'சுரோத்திரிய கிராமம்' என்று குறிக்கப்பட்டுள்ளது.

2] பெரம்பூர்
பெரம்பூரின் பண்டைய பெயர் 'பிரம்பூர்' என்பதாகும். 'காஞ்சி மண்டலத்தைச்
சேர்ந்த புழல்க்கோட்டம் பிரம்பூர் நாட்டில் சென்னைப் பட்டணம்
பெத்துநாயக்கன் பேட்டை' என்பது கல்வெட்டுத் தொடர். பெரம்பூர் தனி நாடாக
இருந்துள்ளது.

3] வேளச்சேரி
வேளச்சேரி 'சினசிந்தாமணிச் சதுர்வேதமங்கலம்' என்று பெயரில்
அழைக்கப்பட்டுள்ளது. பதின்மூன்றாம் நூற்றாண்டில் இப்பெயர்
வழங்கப்பட்டுள்ளது.

4] பல்லாவரம்
பல்லவபுரம், பல்லவர்புரம் என்று பல்லாவரம் அழைக்கப்பட்டது.
'பல்லவர்புரமான வானவன் மாதேவிச் சதுர்வேத மங்கலம்' என்று கல்வெட்டில்
அவ்வூர் குறிக்கப்பட்டுள்ளது.

5] வியாசர்பாடி
வியாசர்பாடி - வைஷ்ஷாறுபாடி, வைஷ்ஷாறுக் கிராமம் எனக்
குறிக்கப்பட்டுள்ளது. வியாசரும் அவ்வூருக்கும் தொடர்பு இல்லை.

6] சைதாப்பேட்டை
சைதாப்பேட்டைக்குப் பெயர் சையதுபேட்டை என்று சிலர் கூறுவர். ஆனால்
கல்வெட்டில் 'இரகுநாதபுரம் என்கிற சைதாப்பேட்டை' எனக்
குறிக்கப்பட்டுள்ளது.

7] எழும்பூர்
எழும்பூரைக் கல்வெட்டுக்கள் 'எழுழூர்' என்று குறிக்கின்றன. 'புலியூர்க்
கோட்டம் எழுமூர் நாட்டில் திருவல்லிக்கேணி' என்பது கல்வெட்டுத் தொடர்.

8] புரசைவாக்கம்
புரசைவாக்கம் - 'புரசபாக்கம்' என்று குறிக்கப்பட்டுள்ளது. ஒரு
கல்வெட்டில் 'புரசபாக்கம் கிராமம்' என்ற தொடர் காணப்படுகிறது.

9] சென்னை
பெரும்பாலும் எல்லாக் கல்வெட்டுகளும் 'சென்னப்பட்டணம்' என்றே
குறிக்கின்றன. சில கல்வெட்டுக்கள் 'சென்னைபுரி' எனக் குறிக்கிறது.

10] மயிலாப்பூர்
மயிலாப்பூர், மயிலார்ப்பில், மயிலார்ப்பு என்று மயிலாப்பூர்
குறிக்கப்படும் எல்லா இடங்களிலும் 'திரு' என்று அடைமொழி சேர்த்தே
குறிக்கப்பட்டது. [அல்லிக்கேணி - திருஅல்லிக்கேணி என அழைக்கப்பட்டது போல]
இலக்கியங்களில் மயிலாபுரி, மயிலை என இவ்வூர் குறிக்கப்படுகிறது.
திருஞானசம்பந்தர் தேவாரம் 'மாமயிலை' என்று கூறும்.

11] திருவேற்காடு
சமயச் சிறப்புள்ள இடங்களுக்குத் திரு என்ற அடைமொழி சேர்த்துக்
கூறப்படுவது வழக்கம். ஆனால் திருவேற்காடு - 'வேற்காடு' என்று திரு
அடைமொழி இன்றியும் அழைக்கப்பட்டுள்ளது.

12] திருவான்மியூர்
கல்வெட்டுக்களில் 'செயங்கொண்ட சோழ மண்டலத்துப் புலியூர்க் கோட்டமான
குலோத்துங்க சோழ வளநாட்டுக் கோட்டூர் நாட்டுத் திருவான்மியூர் என்ற
குறிப்புக் காணப்படுகிறது.

13] நுங்கம்பாக்கம்
நுங்கம்பாக்கத்தின் பழம் பெயர் 'பொம்மபுரம்' என்பதாகும்.
கல்வெட்டுக்களில் 'பொம்மபுரத்திற்குப் பிரதிநாமமான நுங்கம்பாக்கம்' என்ற
தொடர் காணப்படுகிறது.

14] செம்மஞ்சேரி
செம்மஞ்சேரியை ஒரு கல்வெட்டு 'செம்மண்பாக்கம்' எனக் குறிக்கிறது.

syed abdulkadhar

unread,
Dec 29, 2008, 11:01:28 PM12/29/08
to minT...@googlegroups.com
நன்றி vj kumar
நன்றி  கண்ணன் நடராசன்
நன்றி வேந்தன் அரசு
நன்றி   Amala Singh
நன்றி    Kumaran Malli 

இன்னும் நிறைய ஆராய்ச்சிகள் இருக்கின்றன.

தங்கள் கருத்துகளும் பயனளிக்கின்றன.

குறிப்பாக    vj kumar   ,கண்ணன் நடராசன்      அருமை தோழர்களே !!!!

syed abdulkadhar

unread,
Dec 29, 2008, 11:23:44 PM12/29/08
to minT...@googlegroups.com
//பர்மாவிலிருந்து 50-60களில் வந்தவர்களுக்கு பின்னால், இந்தியவின் வடபகுதியிலிருந்து தமிழகத்திற்கு இடம்பெயர்ந்த மார்வாடிகள்,சமணர்களும் 60-70களில் வியாசர்பாடியைத் தங்கள் வாழ்விடமாக கொண்டுள்ளனர்.//
 
உண்மை தான் கண்ணன் நடராசன !!!!!.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குப் பின் இருக்கும் சவுகார்பேட்டை முழுவதும் மார்வாரிகள் தான்.
 
 
//வியாசர்பாடி

வியாசர்பாடி - வைஷ்ஷாறுபாடி, வைஷ்ஷாறுக் கிராமம் எனக்
குறிக்கப்பட்டுள்ளது. வியாசரும் அவ்வூருக்கும் தொடர்பு இல்லை.//
 

22 வருடங்களாக வியாசர்பாடியில் இருக்கும் எனக்கே இந்த பெயர் விளக்கம் தெரியாது.
நல்ல பயனுள்ள தகவல் v j Kumar...
ஆனால் என்னைப் பொறுத்தமட்டில், பாடி, சேரி போன்ற ஊர்களின் பெயர்கள் முல்லை நிலத்திற்கு கூறப் படும். அதாவது காடும் காடு சார்ந்த பகுதியும்.


வியாச‌ர்பாடி

எருக்கஞ்சேரி ( இதுவும் வியாச‌ர்பாடியில் தான் அமைந்திருக்கிறது. )

க‌ட‌லும் க‌ட‌ல் சார்ந்த நெய்தல் நில ப‌குதிக‌ளுக்கு ப‌ட்டின‌ம், பாக்க‌ம் என்றொரு குறிப்பிட்டார்க‌ள்.
உதார‌ண‌ம் ந‌ம் சென்னை சாந்தோம் அருகே அமைந்த ப‌ட்டின‌ம்பாக்க‌ம் ப‌குதி.


 
Reply all
Reply to author
Forward
0 new messages