பாட்டி வைத்தியம் (அ) கை வைத்தியம்-3: மூட்டு வலி

953 views
Skip to first unread message

K.Sureshkumar perumal

unread,
Mar 24, 2009, 2:47:53 AM3/24/09
to mutht...@googlegroups.com, tamil_...@googlegroups.com, minT...@googlegroups.com, Pira...@googlegroups.com, Tamil2...@googlegroups.com
என் இந்த இடுகைக்கு ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றி!

இன்று மூட்டுதேய்மானம் பற்றி பார்ப்போம்.


மூட்டு வலி(மூட்டு தேய்மானம்)

மூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பிரச்சினை இல்லாத இடமே உலகத்தில் இல்லை. அப்படிப்பட்ட மூட்டு வலி வரக் காரணம் நாம் காலைக்கடன் கழிக்கும் முறையே என்கிறது மருத்துவம். அதனால்தான் நம் நாட்டில் கால் முட்டியிலும் வெளிநாட்டவருக்கு இடுப்பு மூட்டிலும் இந்த மூட்டு தேய்மானம் வருகிறது.
மூட்டுத் தேய்மானம் இரண்டு வகைப்படும்:
1)மூட்டழற்சி(osteo arthritis):இது பெரும்பாலும் வயதானவர்களுக்கே வரும் இது பொதுவாக இடுப்பு மூட்டு, கால் மூட்டு, தோள்பட்டை, கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும்.
2)முடக்குவாதம்(rheumatoid arthritis):இது எந்த வயதினருக்கும் வரலாம். பெரும்பாலும் விரல்கள்,மணிக்கட்டு,கால் போன்ற பகுதிகளையே தாக்கும்.

அறிகுறிகள்:
மூட்டழற்சி:நாள்பட்ட வலி, மூட்டு இறுக்கம், நடந்த பிறகோவேலை செய்த பிறகோ வலி அதிகமாகும்.
முடக்குவாதம்: இது ஆரம்பத்தில் தெரியாது நாள்பட்ட வலி மற்றும் பலமூட்டூகளில் வலி போன்றவை ஏற்படும். மொத்த உடம்பும் பாதிக்கப்படிருக்கும். மேலும் இரத்தசோகை, குடல் அழற்சி, மலச்சிக்கல், தோற்றம் மாறிய கை மற்றும் பாதம் போன்றவை காண்ப்படும்.

காரணம்:

முக்கிய காரணம் அதிக பளு தூக்குதலால் மூட்டின் உள் பகுதியில் ஏற்படும் மாற்றம்.
முடக்குவாதம் சில கிருமிகளினாலும், ஹார்மோன் எனப்படும் நாளமில்லா சுரப்பிகளின் ஒழுங்கற்ற பணியாலும் ஏற்படுகிறது. மேலும் மன அழுத்தம், சீரற்ற மனநிலை, நோய்த்தொற்று, அடிபடுதல் போன்றவையும் காரண்மாகும்.
பரம்பரை ரீதியாகவும் மூட்டுத்தேய்மானம் ஏற்படலாம்.

கைவைத்தியம்:

1. நல்ல நடுத்தரமான உருளைக்கிழங்கு ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். புதிதான உருளைகிழங்கு சாறையும் அருந்தலாம். இது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.

2.ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

3.இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து தினம் இருமுறை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

4. வெதுவெதுப்பான தேங்காய் அல்லது கடு எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு நன்கு மூட்டில் தேய்த்தால் வலி குறையும். இது மூட்டுவலிக்கு உடனடி தீர்வாகும்.

5.ஒரு தேக்கரண்டி குதிரைமசால்(இது ஒரு கால் நடை தீவனம்) விதைகளை ஒரு கோப்பை நீரில் கொதிக்க வைத்து தேநீர் போல ஒரு நாளைக்கு மூன்று-நான்கு முறை அருந்தலாம்.

6.இது ஒரு ஸ்பெயின் மருத்துவரின் குறிப்பு, மேலும் நல்ல பலனை தரும். இரண்டு மேஜைக்கரண்டி விளக்கெண்ணையை அடுப்பில் சூடேற்றி ஒரு கோப்பை ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். இதை நோய் தீரும் வரை செய்ய வேண்டும். மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். பிறகு மூன்று வாரங்கள் விட்டு விட வேண்டும். மீண்டும் மூன்று வாரங்கள் செய்ய வேண்டும். இந்த மருந்தை சாப்பிடும்போது நாம் காரமான உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொண்டு புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மருந்து பலன் தராது.

7.ஒரு மேஜைக்கரண்டி பச்சை அல்லது பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும்.

உணவுப்பழக்கம்:
வாழைப்பழம் அதிகமாக உண்ண வேண்டும்.
காய்கறி சூப் அதிகமாக சாப்பிட வேண்டும். கேரட், பீட்ரூட் போன்றவற்றை பச்சையாக சாப்பிடலாம்.
கால்சியம் அதிகம் உள்ள பால்,பால் சார்ந்த பொருட்கள், முள் நிறைந்த மீன் போன்றவற்றை சாப்பிட வேண்டும்
தவிர்க்கவேண்டியவை: காரமான வறுத்த உணவுகள், தேநீர், காபி, பகல் தூக்கம், மனக்கவலைகள், மன அழுத்தம்.

படியுங்கள் பயன் பெறுங்கள் கருத்துக்களை கூறுங்கள்

வாழும் வரை பயன்பட விரும்பும்
சுரேஷ் குமார்.



Subashini Tremmel

unread,
Mar 24, 2009, 3:52:45 AM3/24/09
to minT...@googlegroups.com
வணக்கம் சுரேஷ் குமார்.
 
மறக்கப்பட்டு வருகின்ற சில  விஷயங்களில் இந்த எளிய பாட்டி வைத்தியமும் ஒன்று.  அருமையான முயற்சி.  நீங்கள் இதனை தொடர்ந்து எழுதி வாருங்கள். இதனை தொகுத்து நமது வலையகத்தில் இணைத்து வைக்கலாம். அதோடு இந்த கட்டுரைகளைத் தனித்தனியாக உங்கள் குரலில் வாசித்து mp3  கோப்புக்களாக எனக்கு அனுப்பி வைக்க முடியுமா? நமது  மண்ணின் குரல் பகுதிக்கு இது நல்ல தகவலாக அமையும்.
 
ஒரு வேண்டுகோள்: கட்டுரையை கருப்பு நிறத்தில் highlight செய்திருக்கின்றீர்கள். இதனை தவிர்த்து அனுப்பினால் நன்று. வாசிப்பதற்கு உதவியாக இருக்கும்.
 
அன்புடன்
சுபா

 
2009/3/24 K.Sureshkumar perumal <suresh...@gmail.com>

Tirumurti Vasudevan

unread,
Mar 24, 2009, 6:46:51 AM3/24/09
to minT...@googlegroups.com
ஆமாம். கேட்க எளிதாதான் இருக்கு.
கடைப்பிடிக்க?? :-(

திவா

2009/3/24 K.Sureshkumar perumal <suresh...@gmail.com>:


> தவிர்க்கவேண்டியவை: காரமான வறுத்த உணவுகள், தேநீர், காபி, பகல் தூக்கம்,
> மனக்கவலைகள், மன அழுத்தம்.

--
My blogs: [all in Tamil]
http://anmikam4dumbme.blogspot.com/
http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text too!
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!

Tirumurti Vasudevan

unread,
Mar 24, 2009, 6:47:41 AM3/24/09
to minT...@googlegroups.com
ஆம் வாசிக்க கஷ்டப்பட்டு வேறு முறையை கையாள வேண்டி இருந்தது.

2009/3/24 Subashini Tremmel <ksuba...@gmail.com>:


> கட்டுரையை கருப்பு நிறத்தில் highlight செய்திருக்கின்றீர்கள். இதனை தவிர்த்து
> அனுப்பினால் நன்று

--

Geetha Sambasivam

unread,
Mar 24, 2009, 7:38:29 AM3/24/09
to mutht...@googlegroups.com, tamil_...@googlegroups.com, minT...@googlegroups.com, Pira...@googlegroups.com, Tamil2...@googlegroups.com
எழுத்துக்கள் எல்லாம் இரண்டிரண்டாய்த் தெரியுதே, அதுக்கு மருந்து என்ன சொல்றாங்க பாட்டி? சேச்சே!  பாட்டி மருந்து என்ன?

2009/3/24 K.Sureshkumar perumal <suresh...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Mar 24, 2009, 7:57:46 AM3/24/09
to minT...@googlegroups.com
பாட்டி வைத்தியம் இப்போது எங்கே தேடுவது
பாட்டிகளே காணவில்லை
 
எல்லாம் ஒப்பனை உபயத்தில் குமரிகளாக!
 
பாட்டில் வைத்தியம்தான்
 
வேண்டுமானால்
பாட்டில் வைத்தியம் இருக்கிறதா என்று பார்க்கலாம்
 
பாட்டு வைத்தியம்
 
இசையே வைத்தியம்தானே
 
தீபக் என்னும் ஒரு ராகத்தை தான்சேன் இசைத்தான்
தீபங்கள் எரிந்தன
 
அதுபோல ஒவ்வொரு வியாதிக்கு ஒவ்வொரு பாட்டு,அல்லது இசை வைத்தியமாகும்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
2009/3/24 Geetha Sambasivam <geetha...@gmail.com>

v.dotthusg

unread,
Mar 24, 2009, 6:31:11 AM3/24/09
to Pira...@googlegroups.com, minT...@googlegroups.com
ஓம்.
அன்புடன் நண்பருக்கு வணக்கம்.
ஊமத்தைச் செடியில் இரண்டு வகை உண்டு. சர்வ சாதாரணமாக வயல்வெளிகளில் சாலை ஓரமாக காணப்படும். ’கிராமபோன் ’ ஒலிபெருக்கிக் குழாய் வடிவினில் நீல நிறத்தில் பூப் பூக்கும்.
ஒருவகை ஊமத்தம் செடி யின் இலைக் காம்பு இலை நரம்பு ஆகியவை பச்சை வண்ணத்திலும் மற்றொரு வகையான கரு ஊமத்தம் செடிஊதா வண்ணத்தில் அதாவது வயலெட் வண்ணத்தில் இருக்கும்.
 
அந்த கரு ஊமத்தைச் செடியின் இலைகள் சிலவற்றைப் பறித்து சாறெடுத்து சாற்றுக்குசம அளவில் பச்சைக் கற்பூரம், சம அளவு பசுவெண்ணெய் ஆகியவை கலந்து வைத்துகோள்ளவேண்டும். கால் கைகளில் அடிபட்டு வீக்கம், சுளுக்கு, தசைப் பிடிப்பு  இவற்றின் மீது பூசினால் நல்ல பலன் கிடைக்கும். உடைந்த  எலும்பு ஒன்றுசேரும்.
பின் குறிப்பு:
 அந்த மூன்றையும் கலந்தால் மித மிஞ்சிய வெம்மை உண்டாகும். எனவே அந்தக் கலவை தயாரிக்க மூதாட்டியர் அல்லது ஆண்கள் மட்டுமே முயலவேண்டும். இளம் பெண்கள் தொட்டால் மிதமிஞ்சிய உதிரப் போக்கு .(மாதவிலக்கு) உண்டாகும்.
 
-------Original Message-------
Free Animations for your email - by IncrediMail! Click Here!
Reply all
Reply to author
Forward
0 new messages