உலகத்தமிழ் எழுத்தாளர் மாநாடு - முதன்முறையாக! Friday 28 - Sunday 30, October 2011

171 views
Skip to first unread message

Narayanan Kannan

unread,
Oct 27, 2011, 10:22:56 AM10/27/11
to மின்தமிழ்
தமிழர்கள் 19 நாடுகளில் வாழ்கிறார்கள்.

இந்தியத்தமிழ்நாடு தவிர்த்து தமிழ் இலக்கியம் இலங்கை, மலேசியா,
சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பலகாலமாக இருந்து வந்திருக்கிறது.
80களுக்குப் பிறகு தமிழர்களின் உலகப்பரவல் புகலிட இலக்கியத்திற்கு புதிய
முகம் வழங்கி உள்ளது. இத்தமிழ் வளர்ச்சியின் பல்வேறு பரிமாணங்களை அலச
சிங்கப்பூர் முன்வந்திருக்கிறது. இக்கருத்தரங்கின் மேல் விவரங்களைக்
கீழ்க்காணும் தளங்களில் காணலாம்.

http://www.singaporetamilwriters.com/wtwc/

http://www.singaporetamilwriters.com/wtwc/en/

நீண்ட இடைவெளிக்குப்பின் பல நண்பர்களை மீண்டும் சந்திப்பேன் நாளை!
இந்தியாவிலிருந்து மாலன், தமிழவன், மலேசியாவிலிருந்து ரெ.கா, முத்து,
சபாபதி, கனடாவிலிருந்து சேரன், ஜெர்மனியிலிருந்து சுசீ, பாரிசிலிருந்து
லக்ஷ்மி
இப்படிப் பல நண்பர்களைக் காணுவேன். சிங்கப்பூர் இலக்கிய வட்டத்திலிருந்து
கமலம், ஜெயந்தி சங்கர், பாலு மற்றும் பலர்.

சிங்கப்பூர் எழுத்தாளர் சங்கம் கடந்த 10 ஆண்டுகளாக இப்படியொரு கருத்தரங்
நடத்த கனாக்கண்டிருக்கிறது!

நா.கண்ணன்

K R A Narasiah

unread,
Oct 27, 2011, 10:45:09 AM10/27/11
to mint...@googlegroups.com
அன்பின் கண்ணன்,
இது உலகத் தமிழ் எழுத்தாளர்கள் கூட்டம் அல்லவே! உலக எழுத்தாளர்கள் கொண்டாட்டம் அல்லவோ! கனடாவில் இப்போது இருப்பதால் இங்கிருந்து செல்லும் டாக்டர் செல்வா கனகநாயகத்தைச் சந்தித்தேன்.
 
2009 ஆம் ஆண்டில் நடந்த இம்மாஹாநாட்டில் நான் கலந்துகொண்டேன். அப்போது அருண் மகிழ்னநையும் மின்தமிழ் கமலம், ஜெயந்தி ஷங்கர், சீதாலக்ஷ்மி மற்றும் இங்கிலாந்திலிருந்து சிலரையும் சந்தித்தேன் மிகவும் அற்புதமாக நடத்தினர். சிறுகதைப் போட்டிக்கு நடுவராகவும் இருந்தேன். மாலன். அரு மகிழ்னன் மற்றும் நண்பர்களைக் கேட்டதாக்ச் சொல்லவும். கனடாவின்  டாக்டர் செல்வாவை மறக்காமல் சந்திக்கவும். அவர்தான் டொரோண்டோ தமிழ் இலக்கியத் தோட்டத்தை முத்துலிங்கத்தோடு இணைந்து நடத்த்கிறார், டோரோண்டோ பல்கலைக் கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியர்.


 
2011/10/27 Narayanan Kannan <nka...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

கவி.செங்குட்டுவன்

unread,
Oct 27, 2011, 11:05:39 AM10/27/11
to mint...@googlegroups.com
உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு வெற்றி பெறவும், அதில் பங்குபெறும் அய்யா நா.கண்ணன், மாலன் உள்ளிட்டோர் சிறப்பு பெறவும் வாழ்த்துக்கள்.

2011/10/27 K R A Narasiah <naras...@gmail.com>



--
அன்புடன்..........
கவி.செங்குட்டுவன்,
ஊத்தங்கரை - 635207.
அலைபேசி: 9842712109 / 9965634541
தொலைபேசி: 04341- 223011 / 223023
மின்னஞ்சல்: rajend...@yahoo.co.in / kavi.sen...@gmail.com
வலைப்பூ : http://pumskottukarampatti.blogspot.com.
                     http://kaviyinkural.blogspot.com
                     http://mazalaiootru.blogspot.com
                     http://kaviugi.blogspot.com/
                     http://crcmittapalli.blogspot.com/




N. Kannan

unread,
Nov 2, 2011, 6:11:09 AM11/2/11
to mint...@googlegroups.com
அன்பின் நரசய்யா:

உங்கள் மடலை இப்போதுதான் வாசித்தேன்.

பேரா.செல்வாவுடன் அறிமுகமாகியுள்ளது. இனிய மனிதர். அவருக்கு என் பேச்சு
மிகவும் பிடித்துப் போனது!

தாங்கள் 2009 மாநாட்டிற்கு சென்றது மகிழ்வு. இங்கு இவ்வளவு வாயடிக்கும்
கமலம், மைக் முன்னால் ஒரே அடக்கம். சத்தமே கேட்பதில்லை :-)

நா.கண்ணன்

2011/10/27 K R A Narasiah <naras...@gmail.com>:

N. Kannan

unread,
Nov 2, 2011, 6:12:21 AM11/2/11
to mint...@googlegroups.com
நன்றி செங்குட்டுவன். இம்மாநாட்டின் பேராளாளர்களில் பலர் உங்களைப் போன்ற
பள்ளி ஆசிரியர்கள்!

மிக நன்றாக நடந்தது.

நா.கண்ணன்

2011/10/28 கவி.செங்குட்டுவன் <kavi.sen...@gmail.com>:

கவி.செங்குட்டுவன்

unread,
Nov 2, 2011, 6:23:22 AM11/2/11
to mint...@googlegroups.com
தகவலுக்கு மிக்க நன்றி அய்யா.

2011/11/2 N. Kannan <navan...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Kannan

unread,
Nov 2, 2011, 7:06:07 AM11/2/11
to mint...@googlegroups.com
நிகழ்வு குறித்த என் பகிர்வுகள் - 1

இம்மாநாடு பற்றியும், அதன் நோக்கம் பற்றியும், பேச்சாளர்கள் பற்றியும் அறிந்து கொள்ள முதலில் செல்ல வேண்டிய இடம்:

தமிழில்: http://www.singaporetamilwriters.com/wtwc/
ஆங்கிலத்தில்: http://www.singaporetamilwriters.com/wtwc/en/

இம்மாநாட்டை நடத்திய சிங்கை எழுத்தாளர் சங்கம் பற்றி அறிந்து கொள்ள
http://www.singaporetamilwriters.com/

மாநாடு அக்டோபர் 28 வெள்ளி மாலை தொடங்கியது. ஆனால் காலையிலிருந்து பேச்சாளர்களும், பேராளர்களும் வரத்தொடங்கினர். முதலில் போனது நானாக இருக்க வேண்டும். காலை 5:30க்கு இறங்கிவிட்டேன். வந்து பார்த்தால் விமான நிலையத்தில் ஒருவரும் இல்லை. சரி என்று இருந்த கொஞ்ச நேரத்தில் சிவகாசியிலிருந்து கவிஞர் திலகபாமா வந்து சேர்ந்தார். நல்லதாய் போய்விட்டது, பேச்சுத்துணைக்கு. திலகபாமா தமிழ் மரபு அறக்கட்டளைக்கு ஆதரவளித்த மூத்த ஆதரவாளர். அவர் இளையவர்தான் என்றாலும் நிறையப் புத்தகங்கள், ஓலைச்சுவடிகள் சேகரித்து வைத்திருப்பவர். இவரை எனக்கு அறிமுகப்படுத்தியவர் பெர்லின் (ஜெர்மனி) ந.சுசீந்திரன் அவர்கள். 

malan.jpg

மாநாட்டு அரங்கிற்குப் போகும் முன் நா.கண்ணன், மாலன், தேவேந்திரன் (வீரகேசரி), சுசீ. பின் வரிசையில் ரெ.கா (வீடியோவிலிருந்து வெட்டி ஒட்டியது)

மாநாடு குறித்த நேரத்தில் குறித்த விநாடியில் தொடங்கியது! அவ்வளவு நேரக்கட்டுமானம்! நாங்கள் தங்கியிருந்த சின்ன இந்தியா (லிட்டில் இண்டியா) விடுதியிலிருந்து நிகழ்ச்சி நடந்த வளாகத்திற்குச் செல்ல மாலைப் போக்குவரத்தில் ஏறக்குறைய 1 மணி எடுத்தது! அது பொது நிகழ்வு என்பதால் எமக்கு முன்னமே அரங்கம் நிரம்பி இருந்தது. இரண்டு ஒருங்கிணைப்பாளர்கள் பேசி ஒழுங்கமைத்தனர். திரு.அலி, செல்வி ஜெயஸ்ரீ. நிகழ்ச்சி. சிங்கைக் கலைஞர் சி.குணசேகரன் தமிழ் வாழ்த்துப்பாடித் தொடங்க, திரு நா ஆண்டியப்பன், (தலைவர், ஏற்பாட்டுக் குழு, உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு & சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்), திரு கோர் கோக் வா, (துணைத் தலைமை நிர்வாக அதிகாரி, தேசியக் கலை மன்றம், சிங்கப்பூர்), முனைவர் யாக்கோப் இப்ராஹிம், (தகவல், தொடர்பு, கலை அமைச்சர்) தொடக்கவுரை நிகழ்த்தினார். அன்று சிறப்புரை கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்.

vairamuthu.jpg

வைரமுத்து மிகக்கவனமாகவே பேசினார். முதன்முறையாக அவையோர் தரமறிந்து அடக்கி வாசித்தார். புதிதாக ஏதும் இல்லை. எங்களுக்கு ஏதோ புதிதாய் சொல்வது போல் சில சேதிகள் சொன்னார். தமிழ் பரவலாக வேண்டுமெனில் பிற மொழிகளில் மொழியாக்கம் பெற வேண்டும் என்பதே அவரின் ஆதங்கம். ஏனெனில், இவருக்கு நோபல் பரிசு வாங்கும் கனவொன்று இருக்கிறது. அதை நடைமுறைப்படுத்த மொழியாக்கம் தேவை. இந்தியாவிலேயே ஞானபீட பரிசு பெற மொழியாக்கம் தேவைப்படுகிறது. அதற்கு ஆங்கில மொழியாக்கம் எதற்கு? தமிழ்க் கவிதையும், கதையும் இந்தியில் இருக்கும் போதுதான் இந்தியப் பின்புலம் சிதையாமலும், அதன் உணர்வுகள் சரியாகவும் புரியப்படும். நம்மவர்க்கு எல்லாம் ஆங்கிலத்திற்குப் போய் பின் பிற இந்திய மொழிக்கு வர வேண்டும். இது கடந்த 50-60 ஆண்டுகளில் ஏற்பட்ட நோக்கச்சிதைவு. இந்தியா ஒன்று. அதன் உணர்வு ஒன்று. அதன் மக்கள் ஒருவர். இல்லையெனில் இராமாயணமும், மகாபாரதமும் ஒரே அளவில் இந்தியாவெங்கும் தன் ஆளுமையைச் செலுத்த முடியாது. சிங்கை வானொலி நாடகத்தில் கூட அதிக கவனம் பெற்றது மகாபாரதம் என்று திரு.பன்னீர்செல்வம் சொன்னார். ஏதோ, சமயச் சார்பற்று இருக்க வேண்டும் என்ற இமேஜைக் காட்ட இந்த ஏற்பாடு போலும். ஏன் நாலு பாசுரத்தைச் சொல்லி, பல்லாண்டு, பல்லாண்டு என்று ஆரம்பித்தால் கெட்டா போய்விடும்? (இது அமைப்பாளர் குறை அன்று. தமிழன் தன் மரபைப் புரிந்திருக்கும் குறைபாடு. நல்லவேளை அடுத்த நாள் பேசிய இலங்கை கம்பவாரிதி ஜெயராஜ் இந்நோக்கின் பேதமையை உடைத்துக் காட்டினார்).

மாநாட்டின் மிக முக்கிய மகிழ்வு உலகெங்கும் பரவியிருக்கும் என் பழைய, புதிய நண்பர்களை நீண்ட இடைவெளிக்குப் பின் சந்தித்ததுதான். ஒரு சின்ன அடுக்கு...ஜெர்மனி சுசீ, இன்பராணி; பிரான்சு லக்ஷ்மி, ழான்; கனடா: சேரன்; அமெரிக்கா சாஷா எபலிங்க், இலங்கை: தேவேந்திரன் (வீரகேசரி ஆசிரியர்); மலேசியா: இராஜேந்திரன், ரெ.கா, முத்து மற்றும் அநேக நண்பர்கள், சிங்கப்பூர்: அருண், புஷ்பலதா, கமலம் மற்றும் பலர்.

bus.jpg

செம்மொழி மாநாடு போல் எங்களைத் தினம் இட்டுச் சென்ற மகிழ்வூர்தி


இம்மாநாட்டின் சிறப்பு என்ன?

தமிழன் 19 நாடுகளில் பரவி இருக்கிறான். அவனை இணைப்பது தமிழ் மொழியும், பண்பாடும். சென்றவிடமெல்லாம் அவன் இலக்கியம் செய்கிறான். அவ்விலக்கியம் பற்றிய செவ்விய பதிவும், அது குறித்த உலகலாவிய பார்வையில் திறனாய்வும், இம்மாதிரியொரு கருத்தரங்கமும் இதுவரை நடைபெறவில்லை. சிங்கை எழுத்தாளர் சங்கம் இதையொரு கனவாக கடந்த 10 ஆண்டுகளாக எண்ணிவருகிறது. முதன்முறையாக அயலகத்தமிழ் பற்றியும், அதன் இலக்கியம் பற்றியும், இலக்கியம் உருவாகும் சூழல் பற்றியும், வேற்று மண்ணில் தமிழ்/தமிழர் பட்ட/படும் அவதி பற்றியும் மிக விரிவாக இக்கருத்தரங்கு பேசியது. அமெரிக்காக் கண்டம், ஆஸ்திரேலியாக் கண்டம், ஐரோப்பாக்கண்டம், இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களிலிருந்து பேச்சாளர்கள் வந்திருந்தனர். நான் இரண்டு நிலப்பரப்பையும், ஒரு நிலமற்ற புலத்தையும் பிரதிநுவப்படுத்தினேன். ஐரோப்பா, கொரியா எனும் நிலப்பரப்பையும், மின் தமிழ் வெளி எனும் புலத்தையும் நான் சார்ந்து பேசினேன்.

நா.கண்ணன்

பிகு: இவ்விழையில் கருத்தரங்கில் பங்கேற்ற எல்லோரும் கலந்து கொள்ளலாம்.
vairamuthu.jpg
bus.jpg
malan.jpg

N. Ganesan

unread,
Nov 2, 2011, 8:45:31 AM11/2/11
to மின்தமிழ்

On Nov 2, 6:06 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> நிகழ்வு குறித்த என் பகிர்வுகள் - 1
>
> இம்மாநாடு பற்றியும், அதன் நோக்கம் பற்றியும், பேச்சாளர்கள் பற்றியும் அறிந்து
> கொள்ள முதலில் செல்ல வேண்டிய இடம்:
>
> தமிழில்:http://www.singaporetamilwriters.com/wtwc/
> ஆங்கிலத்தில்:http://www.singaporetamilwriters.com/wtwc/en/
>

உலகத்தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் நிகழ்சிகளை
தருவதற்கு நன்றி. முக்கியமான விழாவாக தெரிகிறது.

நா. கணேசன்

> இம்மாநாட்டை நடத்திய சிங்கை எழுத்தாளர் சங்கம் பற்றி அறிந்து கொள்ளhttp://www.singaporetamilwriters.com/

> செவ்விய ...
>
> read more »
>
>  vairamuthu.jpg
> 121KViewDownload
>
>  bus.jpg
> 93KViewDownload
>
>  malan.jpg
> 30KViewDownload

N. Kannan

unread,
Nov 2, 2011, 9:53:43 AM11/2/11
to mint...@googlegroups.com
2011/11/2 N. Ganesan <naa.g...@gmail.com>:

> உலகத்தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் நிகழ்சிகளை
> தருவதற்கு நன்றி. முக்கியமான விழாவாக தெரிகிறது.
>

உலகத் தமிழ் எழுத்தாளர் கருத்தரங்கம் என்பதே சரி. நிகழ்ச்சிகள்
மிகக்கட்டுமான கருத்தரங்கு தரத்தில் அமைந்திருந்தன. அப்படியே வழங்கவும்
பட்டன.

அதில் விழாவின் கூறுகள் மாலைப் பொழுதில் அமைந்தன.

இக்கருத்தரங்கிற்கு முன் நரசய்யா குறிப்பிடும் சிங்கப்பூர் எழுத்தாளர்
மாநாடு நடந்திருக்கிறது. நான் கலந்து கொண்டது கருத்தரங்கில் மட்டுமே.
நான் முன்பு சொல்லியபடி எங்கள் ஆய்வகத்தில் அக்டோபர் 10 தொடங்கி 21 வரை
சூழலியல் பயிற்சிப்பட்டறை அமைந்ததால் அதன் ஏற்பாட்டுக்குழுவில் இருக்கும்
என்னால் அதிக நேரம் செலவிட வழியில்லை.

ஆயினும் சிங்கப்பூர் எழுத்தாளர் குழு கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவர்கள்
வெளியிட்ட மாநாட்டு இதழில், “தமிழகத்தின் தெற்காசிய, தூரக்கிழக்கு
தொடர்புகள்” என்ற கட்டுரை எழுத்தித்தந்தேன்.

ஆயின் நான் கருத்தரங்கில் பேசிய தலைப்பு:

தாயகம் கடந்த தமிழ் இலக்கியத்தில் தமிழ் மனம்:
வேர் கொண்டு விண் எழுதல்!

இத்தலைப்பில் ஒரு கட்டுரையும் சமர்ப்பித்தேன். அது கருத்தரங்கில்
வெளியிடப்பட்டாலும் கட்டுரைகளின் செம்மைப் பதிப்பு கொண்ட நூலொன்று
பின்னால் வருமென்று அறிவிப்பு.

நா.கண்ணன்

karuannam annam

unread,
Nov 2, 2011, 10:17:02 AM11/2/11
to mint...@googlegroups.com
வாழ்த்துகள் திரு கண்ணன்.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

2011/11/2 N. Kannan <navan...@gmail.com>

K R A Narasiah

unread,
Nov 2, 2011, 10:34:28 AM11/2/11
to mint...@googlegroups.com
என் தவறு. நான் கலந்து கொண்டது 2009 Singapore International Writers festival. . அது வேறு
உலகத் தமிழ் எழுத்தாளர் மகாநாடு  வேறு.
இங்கிருந்து செல்ல்முன்பு கனடாவின் டா. செல்வாவைச் சந்தித்தேன்.
நரசய்யா
 
2011/11/2 karuannam annam <karu...@gmail.com>
--

coral shree

unread,
Nov 4, 2011, 3:17:19 AM11/4/11
to mint...@googlegroups.com
அன்பின் திரு கண்ணன்,

//தாயகம் கடந்த தமிழ் இலக்கியத்தில் தமிழ் மனம்:
வேர் கொண்டு விண் எழுதல்!// - அருமையான தலைப்பு. 
பேச்சு பற்றிய விவரங்கள் அளித்தால் நலம்.

//இத்தலைப்பில் ஒரு கட்டுரையும் சமர்ப்பித்தேன். அது கருத்தரங்கில்வெளியிடப்பட்டாலும் கட்டுரைகளின் செம்மைப் பதிப்பு கொண்ட நூலொன்றுபின்னால் வருமென்று அறிவிப்பு.//

வரும் நாளை மிக ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறோம்!

மாநாட்டின் சிறப்பு பற்றிய தகவல் உயர்ந்த நோக்கத்தையும் வெளிப்படுத்துகிறது.படங்களின் பகிர்விற்கும் நன்றி.


2011/11/2 N. Kannan <navan...@gmail.com>
நிகழ்வு குறித்த என் பகிர்வுகள் - 1

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

                                                               
                 
மின் செய்தி மாலை படியுங்கள்.
Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

malan.jpg
bus.jpg
vairamuthu.jpg

N. Kannan

unread,
Nov 4, 2011, 4:36:11 AM11/4/11
to mint...@googlegroups.com
நிகழ்வு குறித்த என் பகிர்வுகள் - 2

அக்டோபர் 29.

நிகழ்ச்சி நிரல் சொன்னது, தாயகம் கடந்த தமிழ் இலக்கியத்தில் தமிழ் மனம் I எனும் அமர்வு 1 காலை 9 மணிக்குத்துவங்குமென்று. ஒருங்கமைப்பாளர் அலி அவர்கள் 8:55லிருந்து count down ஆரம்பித்துவிட்டார். 9 மணிக்குச் சரியாகத் துவங்கியது. இப்படி அழுத்திச் சொல்ல வேண்டிய நிலையில் தமிழ் அரங்கங்களும் நிகழ்வுகளும் உள்ளது. செம்மொழி மாநாட்டில் சுபா பேச வேண்டிய அமர்வின் தலைவர் 10 நிமிடமாகியும் வரவில்லை. சுறு, சுறு சுபாவால் சும்மா இருக்க முடியுமா? அமர்வைத் தானே தொடங்கிவிட்டார் :-)) அவர் பேச்சு முடிந்த பின் ஒரு தாத்தா மெல்ல மேடை நோக்கி வந்து, நான்தான் இதை நடத்தனும் என்றார் :-))

மலேசியா, சிங்கப்பூரில் நடக்கும் மாநாடுகளில் நேரம் மிகச் சரியாக கண்காணிக்கப்படுகிறது. மலேசியாவில் சாட்டையுடன் புலிகளை கவனிப்பவர் ரெ.கா, சிங்கப்பூரில் அருண் மகிழ்நன் :-) கருத்தரஙு என்பதற்கும், கலந்துரையாடல் என்பதற்கும் வேறுபாடு உண்டு. கலந்துரையாடலில் வள, வளவென்று பேசலாம். கருத்தரங்கில் முடியாது. எல்லோருக்குமே கொடுக்கப்பட்டது 20 நிமிடங்கள்தான். அதற்குள் தன் பேச்சின் சாரத்தைச் சொல்லத் தெரிய வேண்டும். காலத்தைக் கணக்கிடும் வித்தையை எனக்கு திருச்சி வானொலி நிலையம் கற்றுக் கொடுத்தது. பல வருடங்கள் நிகழ்ச்சிகள் கொடுத்துள்ளேன். மலேசியா, சிங்கப்பூர் போகும் போதெல்லாம் மீடியாக்காரர்கள் பிடித்துக் கொண்டு, ‘ஐயா உங்கள் கருத்தை நேயர்களுக்கு சுருக்கமாக 30 நொடியில் சொல்லுங்கள்’ என்று மைக்கை நீட்டுவார்கள். சொல்லத்தெரிய வேண்டும். தெரியவில்லையெனில் பழகிக்கொள்ள வேண்டும். 

தமிழ் வளர்ச்சி என்பது திண்ணைப் பள்ளியில் தொடங்கியது. சாவகாசமாக நீட்டி முழக்கிப் பேசலாம். ஆனால் அந்தக்காலம் முடிந்துவிட்டது. உலகம் முழுவதிலிருந்தும் பேச்சாளர்களையும், பேராளர்களையும் வரவழைத்துவிட்டு குறித்த நேரத்தில் குறித்த முறையில் வழங்கவில்லையெனில் அது வீண். முதல் அமர்வில் அறுவர் பேசினோம். முனைவர் சேரன் (கனடா), திரு ந சுசீந்திரன் (ஜெர்மனி), திருவாட்டி ம‌ணிமேக‌லா பத்மநாதன் (ஆஸ்திரேலியா), முனைவர் வே சபாபதி (மலேசியா), முனைவர் சுப திண்ணப்பன் (சிங்கப்பூர்), முனைவர் நா கண்ணன் (ஜெர்மனி/தென்கொரியா). 

Knstage.jpg
வே.சபாபதி, சிவகுமரன் (அமர்வுத்தலைவர்), சுப.திண்ணப்பன், நா.கண்ணன்

முதலில் என்னை அழைத்த போது தமிழ் இலக்கிய வளர்ச்சியின் போக்கை தாயகம் x அயலகம் என்பது போல் பேசச் சொன்னார்கள். எனவே என் கட்டுரையின் முதல் படிவம் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் இலக்கிய வளர்ச்சி, பின் அமீரகம், ஐரோப்பா, அமெரிக்கா என்று அமைந்தது. ஆனால், மலேசிய, சிங்கப்பூர் இலக்கியத்தை விரிவாகப் பேச பலர் முன்வந்ததாலும், அமெரிக்காவை பிரதினுவப்படுத்த திண்ணை ஆசிரியர் வந்ததாலும் என் பேச்சை குறிப்பாக ஐரோப்பாவை மையப்படுத்தி அமைக்கச் சொன்னார்கள். மேலும் இந்தியாவிலிருந்து வரும் மாலன் இந்திய இலக்கியம் பற்றிப் பேசுவார் என்று சொன்னதாலும் நான் கட்டுரையையின் இரண்டாம் படிவத்தை வேறாக அமைத்தேன். என் பேச்சின் தலைப்பை “வேர் கொண்டு விண் எழுதல்” என்று மாற்றினேன். புகல் இலக்கியத் தோற்றம், வகைப்பாடுகள் பற்றி முதலில் பேசினேன். சங்கம் தொட்டு இன்றுவரை உள்ள தமிழ் இலக்கியத்தில் எவையெவை புகல் இலக்கியமாகும் என்று வரைவிலக்கணம் வகுத்தேன். கடல்கோள் வந்து குடிபெயர்ந்த போது அமைத்த இலக்கியம், பின் திணை விட்டுத்திணை புலம்பெயர்ந்த போது தோன்றிய இலக்கியம், பின் இந்தியாவினுள் தேசம் விட்டுத் தேசம் போன போது எழுந்த இலக்கியம், பின் ஒரே ஊரிலேயே கடுமையான சாதீய/மதச் சுவர்கள் தாண்டி வெளிவரும் போது எழும் இலக்கியம், பின் இந்தியா/இலங்கை விட்டு அரசியல் நிர்பந்தத்தால் குடிபெயரும் போது எழும் இலக்கியம் என்று ஒவ்வொன்றிற்கும் உதாரணங்கள் கொடுத்துப் பேசினேன். 

Ktalks.jpg
நா.கண்ணனின் பேச்சு

அயலக இலக்கியம் என்று பேசும் போது அமீரகம், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்சு, சுவிஸ், டென்மார்க், நார்வே, பின்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் கடந்த 30 ஆண்டுகளில் எழுந்த இலக்கிய வளர்ச்சி பற்றியும், குறிப்பிடத்தக்க படைப்புகள் பற்றியும், படைப்பாளர்கள் பற்றியும் பேசினேன். எனது பங்களிப்பு என்னவென்று இனம் காட்டினேன். 1970களிலிருந்து எழுதிக்கொண்டு வருகிறேன். எனது படைப்புகள் கணையாழி, சுபமங்களா, புதிய பார்வை, இந்தியா டுடே போன்ற இந்தியப் பத்திரிக்கைகளிலும், நாழிகை (லண்டன்), எக்ஸில்/உயிர்நிழல் (பிரான்சு), தமிழ் நலன்புரிக் கழக ஆண்டு மலர்கள் (இங்கிலாந்து) போன்ற புகலிடப் பத்திரிக்கைகளிலும் வெளிவந்தன. நான் கவிஞனாக, சிறுகதை, கட்டுரை எழுத்தாளனாக தமிழ் கூறும் நல்லுலகில் அறிமுகமாகியுள்ளேன். தமிழ் இணையம் தோன்றிய பின் மூத்த மின்குடியானவன் எனும் தகுதியில் மதுரைத் திட்டத்தில் உழைத்தது, உத்தமம் அமைப்பில் ஆரம்ப காலம் தொட்டு உழைத்தது, 2001-ல் தமிழ் மரபு அறக்கட்டளையை உருவாக்கியது, பின் இ-சுவடி எனும் மின்னாடற்குழுவை உருவாக்கி 2006 வரை நடத்திவிட்டு அதற்கு மின்தமிழ் என்ற புதிய பேர் சூட்டி 2006 முதல் நடத்துவது பற்றிச் சொன்னேன். [ இவரது, உதிர் இலை காலம், நிழல்வெளி மாந்தர், விலை போகும் நினைவுகள் போன்ற சிறுகதைத் தொகுப்புகள் புகலிடப் பின்னணி கொண்டவை. மெய்நிகர் உலகின் மூலம் சர்வதேசத் தமிழ்க் குடிமகனை உருவாக்கும் முயற்சியாக, ‘மின் தமிழ்’ எனும் மடலாடற்குழுவை உருவாக்கி, ‘ஊஞ்சல் இலக்கியம்“ “கூடல் திணை” போன்ற அடுத்த நூற்றாண்டு இலக்கிய முயற்சிகளின் தோற்றுவாய்க்கான ஒரு தளத்தை உருவாக்கி வருகிறார். இவரது எண்ணற்ற மின்கவிதைகள், கட்டுரைகள் புலம் பெயர் சூழலை, அதன் வாழ்வியலைப் பிரதிபலிப்பதாக உள்ளன. சமகால இலக்கிய ஊடகமான மின்வெளியின் மூலம் சுய வெளியீடுகளான வலைத்தளம், மடலாடற்குழு போன்றவை இவரது எழுத்தைத்தாங்கி வருகின்றன.] இத்தனையும் 30 நொடிகளுக்கும் குறைவான நேரத்தில் சொன்னேன் :-) இதை இங்கு விரிவாகப் பதிவதற்குக்கொரு காரணமுள்ளது. தமிழர்கள் இணையத்தளத்தில் தரமறிந்து கேள்விகள் கேட்பதில்லை. இணையம் தரும் முகமூடிக்குள் ஒளிந்து கொண்டு அநாமதேயமாக யாரையும், யாரும் கேள்வி கேட்கும் பழக்கம் வந்துள்ளது. அவர்களுக்கு இம்மாதிரி சமயங்களில்தான் பதில் சொல்ல வாய்ப்பு அமைகிறது. கி.பி 2000திலிருந்து என் வளர்ச்சியையும், பங்கையும் அறிந்தே சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் என்னை அழைத்தது. சிங்கப்பூருக்கோ, மலேசியாவிற்கோ நான் போவது இது முதல் முறையன்று. தமிழ் இணையம் தோன்றிய காலத்திலிருந்து அதன் தோற்றத்தில் பங்குற்ற எல்லோருடனும் உடனிருந்து வளர்ந்திருக்கிறேன். கற்றோரைத்தான் கற்றோர் காமுறுவர்!

இன்னும் வரும்...

Deepavali2.jpg

Knstage.jpg
Deepavali2.jpg
Ktalks.jpg

coral shree

unread,
Nov 4, 2011, 8:16:42 AM11/4/11
to mint...@googlegroups.com
அருமை. தொடருங்கள். நன்றி.

2011/11/4 N. Kannan <navan...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
Ktalks.jpg
Deepavali2.jpg
Knstage.jpg

meena muthu

unread,
Nov 4, 2011, 8:57:05 AM11/4/11
to mint...@googlegroups.com
உங்கள் எல்லோரையும் நினைக்கும் போது மிகப்பெருமையாக உள்ளது கண்ணன்! 

தொடரும் நிகழ்வை தெரிந்துகொள்ளும் ஆவல் மிக.. !

2011/11/4 N. Kannan <navan...@gmail.com>

நான் கவிஞனாக, சிறுகதை, கட்டுரை எழுத்தாளனாக தமிழ் கூறும் நல்லுலகில் அறிமுகமாகியுள்ளேன். தமிழ் இணையம் தோன்றிய பின் மூத்த மின்குடியானவன் எனும் தகுதியில் மதுரைத் திட்டத்தில் உழைத்தது, உத்தமம் அமைப்பில் ஆரம்ப காலம் தொட்டு உழைத்தது, 2001-ல் தமிழ் மரபு அறக்கட்டளையை உருவாக்கியது, பின் இ-சுவடி எனும் மின்னாடற்குழுவை உருவாக்கி 2006 வரை நடத்திவிட்டு அதற்கு மின்தமிழ் என்ற புதிய பேர் சூட்டி 2006 முதல் நடத்துவது பற்றிச் சொன்னேன். [ இவரது, உதிர் இலை காலம், நிழல்வெளி மாந்தர், விலை போகும் நினைவுகள் போன்ற சிறுகதைத் தொகுப்புகள் புகலிடப் பின்னணி கொண்டவை. மெய்நிகர் உலகின் மூலம் சர்வதேசத் தமிழ்க் குடிமகனை உருவாக்கும் முயற்சியாக, ‘மின் தமிழ்’ எனும் மடலாடற்குழுவை உருவாக்கி, ‘ஊஞ்சல் இலக்கியம்“ “கூடல் திணை” போன்ற அடுத்த நூற்றாண்டு இலக்கிய முயற்சிகளின் தோற்றுவாய்க்கான ஒரு தளத்தை உருவாக்கி வருகிறார். இவரது எண்ணற்ற மின்கவிதைகள், கட்டுரைகள் புலம் பெயர் சூழலை, அதன் வாழ்வியலைப் பிரதிபலிப்பதாக உள்ளன. சமகால இலக்கிய ஊடகமான மின்வெளியின் மூலம் சுய வெளியீடுகளான வலைத்தளம், மடலாடற்குழு போன்றவை இவரது எழுத்தைத்தாங்கி வருகின்றன.] இத்தனையும் 30 நொடிகளுக்கும் குறைவான நேரத்தில் சொன்னேன் :-) இதை இங்கு விரிவாகப் பதிவதற்குக்கொரு காரணமுள்ளது. தமிழர்கள் இணையத்தளத்தில் தரமறிந்து கேள்விகள் கேட்பதில்லை. இணையம் தரும் முகமூடிக்குள் ஒளிந்து கொண்டு அநாமதேயமாக யாரையும், யாரும் கேள்வி கேட்கும் பழக்கம் வந்துள்ளது. அவர்களுக்கு இம்மாதிரி சமயங்களில்தான் பதில் சொல்ல வாய்ப்பு அமைகிறது. கி.பி 2000திலிருந்து என் வளர்ச்சியையும், பங்கையும் அறிந்தே சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் என்னை அழைத்தது. சிங்கப்பூருக்கோ, மலேசியாவிற்கோ நான் போவது இது முதல் முறையன்று. தமிழ் இணையம் தோன்றிய காலத்திலிருந்து அதன் தோற்றத்தில் பங்குற்ற எல்லோருடனும் உடனிருந்து வளர்ந்திருக்கிறேன். கற்றோரைத்தான் கற்றோர் காமுறுவர்!

Kamala Devi

unread,
Nov 4, 2011, 9:38:32 AM11/4/11
to mint...@googlegroups.com
அருமையான அறிமுகம்,, தொடர் 3 க்கு காத்திருக்கிறேன்
க.
 

From: N. Kannan <navan...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Friday, 4 November 2011 4:36 PM
Subject: Re: [MinTamil] உலகத்தமிழ் எழுத்தாளர் மாநாடு - முதன்முறையாக! Friday 28 - Sunday 30, October 2011

Knstage.jpg
Ktalks.jpg
Deepavali2.jpg

N. Kannan

unread,
Nov 4, 2011, 10:05:00 AM11/4/11
to mint...@googlegroups.com
மீனா!

உங்கள் தோழி வந்திருந்தார். அவரைப் பார்த்தது உங்களைப் பார்த்தது போலருந்தது.

கிளம்பும் போது ஒன்று சொன்னார் போல் எல்லோரும் என்ன அப்படியே ஒரு நடை
மலேசியா வந்துவிட்டுப் போவதுதானே என்று சொன்ன போது சத்தியமாக ‘வாசுதேவக்
குடும்பம்’ என்பது இதுதான் என்று உணர்ந்தேன். நீங்களெல்லாம் அன்பால் மிக
உயர்ந்தவர்கள்.

நா.கண்ணன்

2011/11/4 meena muthu <ranga...@gmail.com>:

N. Kannan

unread,
Nov 4, 2011, 9:32:59 PM11/4/11
to mint...@googlegroups.com
நிகழ்வு குறித்த என் பகிர்வுகள் 3

இலக்கியத்தின் பயன் என்ன? இலக்கியம் ஏன் செய்ய வேண்டும்? புகலிட இலக்கியம் நமக்கு என்ன சொல்கிறது? அதற்கொரு மாநாடு தேவையா?

மனித வளர்ச்சியின் சில முக்கிய கட்டங்கள் பற்றி அமெரிக்காவிலிருந்து வந்திருந்த கோபால் ராஜாராம் (திண்ணை ஆசிரியர்) பேசினார். மனிதனுக்கு இயற்கையாகவே தான் பார்த்து, கேட்ட அனுபங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் உள்ளது. எழுத்து பேச்சு வடிவங்கள் தோன்றுமுன்னமே காட்டுவாசிகள் எந்தெந்த மிருகங்கள் எங்கெங்கு வசிக்கும், அவை எத்தகையன என்பது போன்ற விஷயங்களைச் சொல்ல நடித்துக் காட்டுவது ஆதிவாசிகள் பற்றிய ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. பார்ப்பது, கேட்பது என்பது இயல்பானது, இயற்கையானது என்றார் கோபால்ராம். அதனால்தான் நம்ம சனங்கள் அடாது மழை பெய்தாலும் விடாது டிவி முன்னால் உட்கார்ந்து இருக்கிறார்கள்! டிவி பரிசு கொடுத்து வோட்டுக் கேட்பதும் இதனாலேயே! ஆனால் அடுத்த நிலையாக தான் பார்த்ததை, கேட்டதை எழுதி வைப்பது என்றொரு பழக்கம் வருகிறது! அது அடுத்த பெரிய மானுட மாற்றம். எழுத்து பிறக்கிறது. எழுதத்தெரிந்தவுடன் இலக்கியம் பிறக்கிறது. பேச்சு, நடிப்பு இவைகளில் இல்லாத ஒரு பாரிய அனுகூலம் எழுத்திற்கு உண்டு. அது என்னவெனில் நம் அக உணர்வைத் துல்லியமாக எழுத்தில் வடித்துவிடமுடியும் என்பதுதான்! எனவேதான் “தமிழ்” என்றாலே அது ‘அகத்திணையை” குறிப்பது என்றொருகாலத்தில் இருந்தது. அகத்திணை வடிவில்தான் முதன்முறையாக காதல் உணர்வுகள் பதிவாகின்றன. பின் அதுவே பக்தி இலக்கியம் எனும் பூஞ்சோலையாக மலர்கிறது. அடுத்த கட்ட நிலையாக அகத்தில் தோன்றும் உள்ளுணர்வை புறச்செயல்கள் மூலம் நிரூபித்துக் காட்டும் அறிவியல் மொழி பிறக்கிறது. கணிதம் என்பதே அறிவியலின் மொழி. எனவேதான் எண்ணும், எழுத்தும் மானுடத்தின் கண்ணாகின்றன!

இப்படி வளர்ந்த இலக்கியம் மனித வளர்ச்சியின் கண்ணாடி போல் அவ்விலக்கியம் தோன்றிய காலத்தின் பதிவாக நிற்கிறது. தமிழனின் ஆதி இலக்கியம் எனப்பேசப்படும் சங்க இலக்கியமே, ‘யாதும் ஊரே! யாவரும் கேளிர்’ எனும் மிக நளினமான (sophisticated) உலகப்பார்வையை முன்வைக்கிறது. அது ஏன்? என்று என் கட்டுரை ஆராய்கிறது. பட்டுப்பாதையில் கோலோச்சிய தமிழனுக்கு அருமருந்தாய் அமைகிறது நம்மாழ்வார் முன்வைக்கும் ஒரு சூட்சும உளவியல். [http://groups.google.com/group/mintamil/msg/ba9071c24dda7401] இது பற்றியும் என் கட்டுரை பேசுகிறது. காலனித்துவ ஆட்சியில் தமிழன் கூலிக்காரனாய் பர்மா, மலேசியாக் காடுகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறான். அங்கு அவன் வாழ்வை சித்தரிப்பது இலக்கியமே. அது நாட்டுப்புற பாடல் வடிவில் இருக்கலாம், கவிதையாக, ஒப்பாரியாக, சிறுகதையாக தன்னை இனம் காட்டிக்கொள்கிறது. 80 களில் தோன்றும் இலங்கைப் பேரினவாதம் லட்சக்கணக்கில் தமிழர்களை உலகெங்கும் சூறையாடுகிறது. அங்கும் போனவுடன் இவன் செய்யும் முதற்செயல் இலக்கியம் படைப்பதே! எனவே தமிழனின் ஒட்டுமொத்த வாழ்வியலை அறிந்து கொள்ள இலக்கியம் அவசியமாகிறது.

எனது பேச்சை ஒரு overview வாக அமைத்துத் தரும்படி கேட்டிருந்தார்கள். அவ்வாறே செய்தேன். என் அமர்வில் பேசிய முனைவர் சேரன் மிக அழகாக புலம் பெயர் ஈழத்தவரின் அவலங்களை அவர்கள் ஆக்கிய கவிதைகள் மூலம் சொல்லி ஒட்டுமொத்த தமிழ் மனதில் இது குறித்த ஒரு விழிப்புணர்வை உருவாக்க முயன்றார். தமிழனின் ஏகோபித்த குரலைச் சொல்லும் வண்ணம் ஒரு சர்வதேச அமைப்பு என்ற ஒன்று உருவாகாத நிலையில் சிறு அளவில் ஐரோப்பாவில் தோன்றிய இலக்கிய சந்திப்புகள் எவ்வண்ணம் இவ்விழிப்புணர்வு தணிந்துவிடாத வண்ணம் காத்தன என்று பெர்லின் சுசி விளக்கினார். இவ்விலக்கிய சந்திப்புகளின் ஒரு அங்கமாகவே நா.கண்ணனும் ஐரோப்பாவில் பார்க்கப்படுகிறார். இணையம் தோன்றிய பின் ஈழத்தவரின் துயர் பாரிய வடிவில் பதிவாகியுள்ளது. ஆயின் இவர்களுக்கு ஏற்பட்ட துன்பத்தைவிடப் பலமடங்கு துன்பத்தை தோட்டத்துக் கூலியாக மலேசியா சென்ற தமிழன் கண்டு இருக்கிறான் என்பதை மிக விவரமாக முனைவர் வே.சபாபதியின் ஆய்வு காட்டியது. ரப்பர் தோட்டத்தில் பட்ட அவதி, தேயிலைத் தோட்டத்தில் பட்ட கஷ்டம், பின் சியாம் ரயில்பாதை போடும் திட்டத்தில் அற்ப கொசு போல் செத்தொழிந்தது, பின் ஜப்பானியர் ஆக்கிரமிப்பில் பட்ட துன்பங்கள், அதன் பின் தற்போது பூமிபுத்ரர்களின் கையில் வதிக்கும் இரண்டாம் குடிமக வாழ்வு என்று 20 நிமிடங்களுக்குள் ஒரு பெரும் காவியத்தையே நம் முன் கொண்டு வந்து காட்டினார் பேரா.சபாபதி. 

jean+reka.jpg
நா.கண்ணன், ழான், மலேசியப் பேராளர், ரெ.கா

அந்த அமர்வு என் கண்முன் காட்டிய விஸ்வரூப தரிசனம் என்பது மலேசியத் தமிழர் பட்டிருக்கும் பாடுதான். இந்தியத் தமிழர்கள் பட்ட கஷ்டங்கள் இதைக் கண்ணுரும் போது ஒன்றுமே இல்லை என்றாகிவிடுகிறது. ’தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா! இப்பயிரை கண்ணீரால் காத்தோம்!’ எனும் போது நெஞ்சு உருகுகிறது. ஆனால் பிஜித்தீவில் இந்தியர் படும் அவதியைக் (தமிழர் கூட இல்லை) அறிந்து கண்ணீர் வடிக்கும் பாரதி மலேசியத்தோட்டத்து தமிழ்த் தொழிலாளர் பட்ட அவதி பற்றிப் பதிவு செய்யாமல் போகிறான். நல்ல வேளையாக இம்மாநாடு நடந்தது! இன்று உலகு அறிந்து கொண்டது. 

இந்தியத்தமிழர்கள் எவ்வளவுதூரம் இந்த அவதியுறும் தமிழர் வாழ்விலிருந்து அந்நியப்பட்டு போயிருந்தனர் என்பதை நீலகண்ட சாஸ்திரிகளின் வருகை காண்பிக்கிறது! இவர் சிங்கப்பூரில் போய் சமிஸ்கிருதம் தேசிய மொழியாக வேண்டும் என்ற அபத்தமான பரிந்துரையை முன்வைக்கிறார். இதை சிங்கப்பூர் இலக்கியம் ஆவணப்படுத்துகிறது. இந்த அபத்தத்தின் விளைவுதான் தமிழ்வேள் சாரங்கபாணியின் வரவு. தமிழன் தன் வாழ்வை, தன் அடிப்படை நலன்களை இழந்து தவிக்கும் போது வாய்மொழியையும் இழக்க வேண்டிய அவலத்தை பண்டிதர்கள் முன்மொழிதல் என்பது என்ன காலமுரண்? இந்த மாநாடு இத்தகைய அபத்தங்கள் மீண்டும் தோன்றிவிடக்கூடாது என்றுதான் அறிவியற்புலத்தை முன்வைத்து பாடம் நடத்துகிறது. உலகின் மாற்றங்கள் பெரும் ஆயுதப்புரட்சியைவிட அறிவியல் புரட்சியின் மூலமாகவே நடத்தப்பட்டுள்ளன. அறிவே இறுதியில் வெல்லும். எனவேதான் அறிவு சார்ந்து ஒரு உலகக் கருத்தரங்கை சிங்கப்பூர் முன்னடத்தியது. அங்கு அறிவுடையோர் விழித்துக் கொண்டால் பின் மற்றோரை எழுப்பும் பறையை இலக்கியம் கொட்டும் என்பது எதிர்பார்ப்பு! 

இன்னும் வரும்....

நா.கண்ணன்
jean+reka.jpg

coral shree

unread,
Nov 4, 2011, 10:14:11 PM11/4/11
to mint...@googlegroups.com
அன்பின் திருகண்ணன்,

நன்றி. நல்ல பகிர்வு. 

2011/11/4 N. Kannan <navan...@gmail.com>
நிகழ்வு குறித்த என் பகிர்வுகள் 3


இலக்கியத்தின் பயன் என்ன? இலக்கியம் ஏன் செய்ய வேண்டும்? புகலிட இலக்கியம் நமக்கு என்ன சொல்கிறது? அதற்கொரு மாநாடு தேவையா?

மனித வளர்ச்சியின் சில முக்கிய கட்டங்கள் பற்றி அமெரிக்காவிலிருந்து வந்திருந்த கோபால் ராஜாராம் (திண்ணை ஆசிரியர்) பேசினார். மனிதனுக்கு இயற்கையாகவே தான் பார்த்து, கேட்ட அனுபங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் உள்ளது. எழுத்து பேச்சு வடிவங்கள் தோன்றுமுன்னமே காட்டுவாசிகள் எந்தெந்த மிருகங்கள் எங்கெங்கு வசிக்கும், அவை எத்தகையன என்பது போன்ற விஷயங்களைச் சொல்ல நடித்துக் காட்டுவது ஆதிவாசிகள் பற்றிய ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. பார்ப்பது, கேட்பது என்பது இயல்பானது, இயற்கையானது என்றார் கோபால்ராம். அதனால்தான் நம்ம சனங்கள் அடாது மழை பெய்தாலும் விடாது டிவி முன்னால் உட்கார்ந்து இருக்கிறார்கள்! டிவி பரிசு கொடுத்து வோட்டுக் கேட்பதும் இதனாலேயே! ஆனால் அடுத்த நிலையாக தான் பார்த்ததை, கேட்டதை எழுதி வைப்பது என்றொரு பழக்கம் வருகிறது! அது அடுத்த பெரிய மானுட மாற்றம்.
 
//எழுத்து பிறக்கிறது. எழுதத்தெரிந்தவுடன் இலக்கியம் பிறக்கிறது. பேச்சு, நடிப்பு இவைகளில் இல்லாத ஒரு பாரிய அனுகூலம் எழுத்திற்கு உண்டு. அது என்னவெனில் நம் அக உணர்வைத் துல்லியமாக எழுத்தில் வடித்துவிடமுடியும் என்பதுதான்! எனவேதான் “தமிழ்” என்றாலே அது ‘அகத்திணையை” குறிப்பது என்றொருகாலத்தில் இருந்தது. அகத்திணை வடிவில்தான் முதன்முறையாக காதல் உணர்வுகள் பதிவாகின்றன. பின் அதுவே பக்தி இலக்கியம் எனும் பூஞ்சோலையாக மலர்கிறது. அடுத்த கட்ட நிலையாக அகத்தில் தோன்றும் உள்ளுணர்வை புறச்செயல்கள் மூலம் நிரூபித்துக் காட்டும் அறிவியல் மொழி பிறக்கிறது. கணிதம் என்பதே அறிவியலின் மொழி. எனவேதான் எண்ணும், எழுத்தும் மானுடத்தின் கண்ணாகின்றன!//

சரியான கோணத்திலான ஆய்வு. அருமை.  திரு கோபால் ராஜாராம் அவர்களின் எண்ணங்களையும் நம்மோடு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

இப்படி வளர்ந்த இலக்கியம் மனித வளர்ச்சியின் கண்ணாடி போல் அவ்விலக்கியம் தோன்றிய காலத்தின் பதிவாக நிற்கிறது. தமிழனின் ஆதி இலக்கியம் எனப்பேசப்படும் சங்க இலக்கியமே, ‘யாதும் ஊரே! யாவரும் கேளிர்’ எனும் மிக நளினமான (sophisticated) உலகப்பார்வையை முன்வைக்கிறது. அது ஏன்? என்று என் கட்டுரை ஆராய்கிறது. பட்டுப்பாதையில் கோலோச்சிய தமிழனுக்கு அருமருந்தாய் அமைகிறது நம்மாழ்வார் முன்வைக்கும் ஒரு சூட்சும உளவியல். [http://groups.google.com/group/mintamil/msg/ba9071c24dda7401]

//கடவுள் என்பதோர் புரிதல். ஒரு தேடலின் தெளிவு. ஓர் கவிதை. 

இப்புரிதல் என்பது அவரவர் பக்குவம், மனோபாவம் சார்ந்தது

 உங்களையெல்லாம் நான் மனதார நேசிக்கிறேன். "நெஞ்சு நிறைய நேசம் வைத்தால் 
குறை தெரியாது" என்பார்கள்.// - எவ்வளவு அழகான மனிதம் புரிந்து கொண்ட பக்குவம்!


இது பற்றியும் என் கட்டுரை பேசுகிறது. காலனித்துவ ஆட்சியில் தமிழன் கூலிக்காரனாய் பர்மா, மலேசியாக் காடுகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறான். அங்கு அவன் வாழ்வை சித்தரிப்பது இலக்கியமே. அது நாட்டுப்புற பாடல் வடிவில் இருக்கலாம், கவிதையாக, ஒப்பாரியாக, சிறுகதையாக தன்னை இனம் காட்டிக்கொள்கிறது. 80 களில் தோன்றும் இலங்கைப் பேரினவாதம் லட்சக்கணக்கில் தமிழர்களை உலகெங்கும் சூறையாடுகிறது. அங்கும் போனவுடன் இவன் செய்யும் முதற்செயல் இலக்கியம் படைப்பதே! எனவே தமிழனின் ஒட்டுமொத்த வாழ்வியலை அறிந்து கொள்ள இலக்கியம் அவசியமாகிறது.

உண்மைதான், தன் சுகம், துக்கம் அனைத்தையுமே, காவியமாக வடிப்பது என்பது தமிழர்களுக்கு பிறவியிலேயே ஊறிப்போன , கைவந்த கலையாகவே இருக்கிறது.  

எனது பேச்சை ஒரு overview வாக அமைத்துத் தரும்படி கேட்டிருந்தார்கள். அவ்வாறே செய்தேன். என் அமர்வில் பேசிய முனைவர் சேரன் மிக அழகாக புலம் பெயர் ஈழத்தவரின் அவலங்களை அவர்கள் ஆக்கிய கவிதைகள் மூலம் சொல்லி ஒட்டுமொத்த தமிழ் மனதில் இது குறித்த ஒரு விழிப்புணர்வை உருவாக்க முயன்றார். தமிழனின் ஏகோபித்த குரலைச் சொல்லும் வண்ணம் ஒரு சர்வதேச அமைப்பு என்ற ஒன்று உருவாகாத நிலையில் சிறு அளவில் ஐரோப்பாவில் தோன்றிய இலக்கிய சந்திப்புகள் எவ்வண்ணம் இவ்விழிப்புணர்வு தணிந்துவிடாத வண்ணம் காத்தன என்று பெர்லின் சுசி விளக்கினார். இவ்விலக்கிய சந்திப்புகளின் ஒரு அங்கமாகவே நா.கண்ணனும் ஐரோப்பாவில் பார்க்கப்படுகிறார். இணையம் தோன்றிய பின் ஈழத்தவரின் துயர் பாரிய வடிவில் பதிவாகியுள்ளது. ஆயின் இவர்களுக்கு ஏற்பட்ட துன்பத்தைவிடப் பலமடங்கு துன்பத்தை தோட்டத்துக் கூலியாக மலேசியா சென்ற தமிழன் கண்டு இருக்கிறான் என்பதை மிக விவரமாக முனைவர் வே.சபாபதியின் ஆய்வு காட்டியது. ரப்பர் தோட்டத்தில் பட்ட அவதி, தேயிலைத் தோட்டத்தில் பட்ட கஷ்டம், பின் சியாம் ரயில்பாதை போடும் திட்டத்தில் அற்ப கொசு போல் செத்தொழிந்தது, பின் ஜப்பானியர் ஆக்கிரமிப்பில் பட்ட துன்பங்கள், அதன் பின் தற்போது பூமிபுத்ரர்களின் கையில் வதிக்கும் இரண்டாம் குடிமக வாழ்வு என்று 20 நிமிடங்களுக்குள் ஒரு பெரும் காவியத்தையே நம் முன் கொண்டு வந்து காட்டினார் பேரா.சபாபதி. 

jean+reka.jpg
நா.கண்ணன், ழான், மலேசியப் பேராளர், ரெ.கா

அந்த அமர்வு என் கண்முன் காட்டிய விஸ்வரூப தரிசனம் என்பது மலேசியத் தமிழர் பட்டிருக்கும் பாடுதான். இந்தியத் தமிழர்கள் பட்ட கஷ்டங்கள் இதைக் கண்ணுரும் போது ஒன்றுமே இல்லை என்றாகிவிடுகிறது. ’தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா! இப்பயிரை கண்ணீரால் காத்தோம்!’ எனும் போது நெஞ்சு உருகுகிறது. ஆனால் பிஜித்தீவில் இந்தியர் படும் அவதியைக் (தமிழர் கூட இல்லை) அறிந்து கண்ணீர் வடிக்கும் பாரதி மலேசியத்தோட்டத்து தமிழ்த் தொழிலாளர் பட்ட அவதி பற்றிப் பதிவு செய்யாமல் போகிறான். நல்ல வேளையாக இம்மாநாடு நடந்தது! இன்று உலகு அறிந்து கொண்டது. 

பட்ட துன்பத்தில் என்ன பாகுபாடு இருக்க முடியும்? தலைக்கு மேல் போனால் சாண் என்ன முழம் என்ன? அதில் நீ பட்ட பாடு பெரியதா, நான் பட்ட பாடு பெரியதா என்ற வினாவின் பயன் தான் என்ன? 

இந்தியத்தமிழர்கள் எவ்வளவுதூரம் இந்த அவதியுறும் தமிழர் வாழ்விலிருந்து அந்நியப்பட்டு போயிருந்தனர் என்பதை நீலகண்ட சாஸ்திரிகளின் வருகை காண்பிக்கிறது! இவர் சிங்கப்பூரில் போய் சமிஸ்கிருதம் தேசிய மொழியாக வேண்டும் என்ற அபத்தமான பரிந்துரையை முன்வைக்கிறார். இதை சிங்கப்பூர் இலக்கியம் ஆவணப்படுத்துகிறது. இந்த அபத்தத்தின் விளைவுதான் தமிழ்வேள் சாரங்கபாணியின் வரவு. தமிழன் தன் வாழ்வை, தன் அடிப்படை நலன்களை இழந்து தவிக்கும் போது வாய்மொழியையும் இழக்க வேண்டிய அவலத்தை பண்டிதர்கள் முன்மொழிதல் என்பது என்ன காலமுரண்? இந்த மாநாடு இத்தகைய அபத்தங்கள் மீண்டும் தோன்றிவிடக்கூடாது என்றுதான் அறிவியற்புலத்தை முன்வைத்து பாடம் நடத்துகிறது.
 
//உலகின் மாற்றங்கள் பெரும் ஆயுதப்புரட்சியைவிட அறிவியல் புரட்சியின் மூலமாகவே நடத்தப்பட்டுள்ளன. அறிவே இறுதியில் வெல்லும். எனவேதான் அறிவு சார்ந்து ஒரு உலகக் கருத்தரங்கை சிங்கப்பூர் முன்னடத்தியது. அங்கு அறிவுடையோர் விழித்துக் கொண்டால் பின் மற்றோரை எழுப்பும் பறையை இலக்கியம் கொட்டும் என்பது எதிர்பார்ப்பு! //

சத்தியமான வார்த்தைகள். அறிவு விழிக்க வேண்டும்.அப்போதுதான் ஆணவம் அழிந்து, ஆக்கம் நிலைபெறும்! உலகம் பயன்பெறும்.  நல்ல எதிர்பார்ப்பு! சிறந்த எண்ணம். நல்லோரை எழுப்பும் இலக்கியப்பறை மென்மேலும் கொட்ட வாழ்த்துகள்!

இன்னும் வரும்....

நா.கண்ணன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
jean+reka.jpg

N. Kannan

unread,
Nov 4, 2011, 10:42:21 PM11/4/11
to mint...@googlegroups.com
2011/11/5 coral shree <cor...@gmail.com>

> சரியான கோணத்திலான ஆய்வு. அருமை.  திரு கோபால் ராஜாராம் அவர்களின் எண்ணங்களையும் நம்மோடு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
>>

நான் இங்கு வழங்குவது அங்கு கேட்ட கருத்தோடு என் புரிதலையும்
தோய்த்துத்தருவது. அவர் அகத்திணை பற்றியெல்லாம் சொல்லவில்லை. அவர்
சொன்னது பார்த்தல், கேட்டல் இயல்பானது என்பதும். எழுத்தின் பிறப்பு
முக்கிய நிகழ்வு என்பதுமே!

> பட்ட துன்பத்தில் என்ன பாகுபாடு இருக்க முடியும்? தலைக்கு மேல் போனால் சாண் என்ன முழம் என்ன? அதில் நீ பட்ட பாடு பெரியதா, நான் பட்ட பாடு பெரியதா என்ற வினாவின் பயன் தான் என்ன?
>>

அப்படிச் சொல்லிவிட முடியாது!
நீங்கள் காட்டும் மனநிலைதான் ஒட்டுமொத்த தமிழ்நிலை.
நாம் கஷ்டத்தைப் பற்றிப் பேசத்தயங்கிறோம்.
அது பொது மன்றத்தில் இகழ்ச்சியாகப் பார்க்கப்படுகிறது.
எவ்வளவு கஷ்டம் வந்தாலும் காட்டிக்கொள்ளாமல் வாழ வேண்டுமென்று
பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம்.
இதனால்தான் ஜெர்மன் வதை முகாம்களில் பட்ட அவதியை விடக்கூடுதல் அவதியை
இலங்கை வதை முகாம்களில் பெற்றும் தமிழன் இதுவரை ‘தன் அனுபவமாக’ ஒன்றையும்
எழுதி வைக்கவில்லை. இது இலக்கியத்தின் மறைமுகம்:-(
ஐரோப்பிய இலக்கிய சந்திப்புகளில் இந்த அவதி, இந்த சுய அடக்குதல் கண்ணீராக
வெளிவந்திருக்கிறது.
இது குறித்து நான் பேசினேன். தமிழனின் ஒப்பாரி என்பது ஒரு சின்ன
வெளிப்பாடு. ஒரு வடிகால்.

புகல் இலக்கியம் பற்றி அறிந்து கொள்ளவும் ஒரு மனநிலை வேண்டும்.
ஆஸ்திரேலியப் பெட்டையொன்று கேட்டது, இவர் எங்கட மனுசர் இல்லையா? நம்ப
இயலவில்லை! என்று.

நா.கண்ணன்

coral shree

unread,
Nov 4, 2011, 10:58:37 PM11/4/11
to mint...@googlegroups.com


2011/11/4 N. Kannan <navan...@gmail.com>

2011/11/5 coral shree <cor...@gmail.com>

> சரியான கோணத்திலான ஆய்வு. அருமை.  திரு கோபால் ராஜாராம் அவர்களின் எண்ணங்களையும் நம்மோடு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
>>

நான் இங்கு வழங்குவது அங்கு கேட்ட கருத்தோடு என் புரிதலையும்
தோய்த்துத்தருவது. அவர் அகத்திணை பற்றியெல்லாம் சொல்லவில்லை. அவர்
சொன்னது பார்த்தல், கேட்டல் இயல்பானது என்பதும். எழுத்தின் பிறப்பு
முக்கிய நிகழ்வு என்பதுமே!

தெளிவுபடுத்தியதற்கு நன்றி. 

> பட்ட துன்பத்தில் என்ன பாகுபாடு இருக்க முடியும்? தலைக்கு மேல் போனால் சாண் என்ன முழம் என்ன? அதில் நீ பட்ட பாடு பெரியதா, நான் பட்ட பாடு பெரியதா என்ற வினாவின் பயன் தான் என்ன?
>>

அப்படிச் சொல்லிவிட முடியாது!
நீங்கள் காட்டும் மனநிலைதான் ஒட்டுமொத்த தமிழ்நிலை.
நாம் கஷ்டத்தைப் பற்றிப் பேசத்தயங்கிறோம்.
அது பொது மன்றத்தில் இகழ்ச்சியாகப் பார்க்கப்படுகிறது.
எவ்வளவு கஷ்டம் வந்தாலும் காட்டிக்கொள்ளாமல் வாழ வேண்டுமென்று
பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம்.

உண்மை. இந்த இடத்தில் குறிப்பாக ‘பெண்கள்’ என்றுகூட நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம்.பிறப்பிலிருந்து, இறப்புவரை சார்ந்து வாழ்ந்து, எத்துனை துன்பம் வந்தாலும் அதனைத் தின்று முழுங்கி சீரணம் செய்து வாழ கற்றுக் கொடுக்கும் வல்லமை வேறு யாருக்கு வரும், நம் தமிழினத்தவரைத் தவிற? 
 
இதனால்தான் ஜெர்மன் வதை முகாம்களில் பட்ட அவதியை விடக்கூடுதல் அவதியை
இலங்கை வதை முகாம்களில் பெற்றும் தமிழன் இதுவரை ‘தன் அனுபவமாக’ ஒன்றையும்
எழுதி வைக்கவில்லை. இது இலக்கியத்தின் மறைமுகம்:-(
ஐரோப்பிய இலக்கிய சந்திப்புகளில் இந்த அவதி, இந்த சுய அடக்குதல் கண்ணீராக
வெளிவந்திருக்கிறது.
இது குறித்து நான் பேசினேன். தமிழனின் ஒப்பாரி என்பது ஒரு சின்ன
வெளிப்பாடு. ஒரு வடிகால். 

இதுவும் ஒரு சரியான பார்வைதான். மேற்கொண்டு துன்பம் வரக்கூடாது, வரும் சந்ததியினர் நலமாக வாழ வேண்டுமென்றால் பட்ட துன்பங்களின் அளவுகோலையும் சேர்த்து ஆவணப்படுத்த வேண்டியதும் அவசியமாகிறது. இது போன்ற இலக்கியங்கள் வெறும் பொழுது போக்கு இலக்கியங்களாக மட்டுமல்லாமல் வாழ்வியலையே, அதன் தலையெழுத்தையே மாற்றியமைக்கும் வல்லமையும் பெறும் என்பதிலும் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை! ஒப்பாரி என்பது வெறும் வடிகால் என்ற நிலை மாறி ஒரு படி மேலே சென்று வரும் சந்ததியினரின் விழிப்புணர்வைத் தூண்டும் இலக்கியமாக மாறும் அல்லவா? அருமை... அருமை.

புகல் இலக்கியம் பற்றி அறிந்து கொள்ளவும் ஒரு மனநிலை வேண்டும்.
ஆஸ்திரேலியப் பெட்டையொன்று கேட்டது, இவர் எங்கட மனுசர் இல்லையா? நம்ப
இயலவில்லை! என்று.

நா.கண்ணன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Subashini Tremmel

unread,
Nov 5, 2011, 5:17:55 AM11/5/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
எல்லாவற்றையும் பொறுமையாகப் படித்து கருத்து பகிர்ந்து கொள்கிறேன் கண்ணன்.
சரி படத்தில் ழான் ரெகா இவர்களுக்கு இடையில் இருப்பவர் ஷண்முகம் சிவா இல்லையா ?

சுபா

2011/11/5 N. Kannan <navan...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

jean+reka.jpg

N. Kannan

unread,
Nov 5, 2011, 6:01:50 AM11/5/11
to mint...@googlegroups.com
2011/11/5 Subashini Tremmel <ksuba...@gmail.com>

>
> எல்லாவற்றையும் பொறுமையாகப் படித்து கருத்து பகிர்ந்து கொள்கிறேன் கண்ணன்.
> சரி படத்தில் ழான் ரெகா இவர்களுக்கு இடையில் இருப்பவர் ஷண்முகம் சிவா இல்லையா ?

இல்லை சுபா!
இவர் வேறு. ம.எ.சங்கத்தில் இருக்கிறார். பெயர் மறந்துவிட்டது.
ரெ.காவிற்குத்தெரிந்திருக்கும்.

நா.கண்ணன்

Geetha Sambasivam

unread,
Nov 5, 2011, 6:56:39 AM11/5/11
to mint...@googlegroups.com
இந்தியத்தமிழர்கள் எவ்வளவுதூரம் இந்த அவதியுறும் தமிழர் வாழ்விலிருந்து அந்நியப்பட்டு போயிருந்தனர் என்பதை நீலகண்ட சாஸ்திரிகளின் வருகை காண்பிக்கிறது! இவர் சிங்கப்பூரில் போய் சமிஸ்கிருதம் தேசிய மொழியாக வேண்டும் என்ற அபத்தமான பரிந்துரையை முன்வைக்கிறார். இதை சிங்கப்பூர் இலக்கியம் ஆவணப்படுத்துகிறது//
 

முற்றிலும் அறியாத செய்தி.  பல அரிய செய்திகளைத் தாங்கி வரும் தொகுப்பு.  பகிர்வுக்கு நன்றி.
 
படத்தில் இருப்பவர் இருவர் தவிர ரெ.கா. இன்னொரு பெரியவர் திரு கண்ணனையும், ழான் அவர்களையும் பார்த்திருக்கிறேன்.
2011/11/4 N. Kannan <navan...@gmail.com>
நிகழ்வு குறித்த என் பகிர்வுகள் 3

நா.கண்ணன்

N. Kannan

unread,
Nov 6, 2011, 5:51:57 AM11/6/11
to mint...@googlegroups.com
நிகழ்வு குறித்த என் பகிர்வுகள் 4

இம்மாநாட்டில் பேசப்பட்ட இன்னொரு முக்கிய கருப்பொருள் ‘மொழி பெயர்ப்பு’ என்பது, இதை, “மொழிபெயர்ப்பு இலக்கியம்: தருதலும் பெறுதலும்” என்ற அமர்வில் பேசினர். இந்த அமர்வில் பேசியவர் மூவர்.

1. முனைவர் ழான்-லூய்க் செவ்வியார், ஆய்வாள‌ர், பிரெஞ்‍சு கீழைத்திசை ஆய்வுக் கல்விக்கூடம், பிரான்ஸ் 
2. முனைவர் செல்வா கனகநாயகம், பேராசிரியர், ஆங்கில மொழித் துறை, டொரோண்டோ, பல்கலைக்கழகம், கனடா 
3. திரு உதய சங்கர் எஸ் பி, எழுத்தாளர், மலேசியா

விழா தொடக்கவுரையாகப் பேசிய திரு.வைரமுத்து இதைக் குறிப்பாகப் பேசினார். மொழி பெயர்ப்பு என்பதுதான் இருவேறு இனமக்களின் பாலமாக அமைகிறது. இந்தியாவிற்கும் சோவியத் யூனியனுக்கும் முன்பிருந்த பெரிய புரிதல், நட்பு என்பது மொழிபெயர்ப்பை அண்டியே இருந்தது என்பது மிகையன்று. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் என்றொரு நிருவனமே இதற்காகச் செயல்பட்டது. காலம், காலமாக சமிஸ்கிருத காவியங்கள், நீதி நூல்கள் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டோ, புத்தாக்கம் பெற்றோ வந்திருக்கின்றன. சமிஸ்கிருதம் அறிந்த தமிழர்களே நிறைய சமிஸ்கிருத ஆக்கங்கள் செய்துள்ளனர். மொழிவாரி ராஜ்ஜியங்களாக பிரிபட்டுள்ள இந்தியாவில் இம்மாதிரி மொழிபெயர்ப்புக்கள்தான் இந்திய தேசிய ஒற்றுமைக்கு பாலம் அமைப்பவையாகவும், இந்தியாவைப் பின்னிப்பிணைக்கும் மறை நூலாகவும் இருந்திருக்கின்றன. சமகால இந்தியாவில் ஞானபீடப்பரிசு என்பது எம்மொழி நாவல்கள் விரைவாக பிற இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகின்றனவோ அதே விகிதத்தில் பெறப்படுவதாக வைரமுத்து சொன்னார். அவர் இந்தி மொழியில் மொழிபெயர்க்கப்பட வேண்டுமெனச் சொல்லவில்லை. ஆனால் அதுவே தமிழ் ஞானபீடப்பரிசுகளின் எண்ணிக்கையைக் கூட்டும் என்பது திண்ணம்.

Cheran.jpg
சேரனின் கவிதை நூலொன்றை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்த பேரா. செல்வ கனகநாயகம் வாழ்த்துப் பெறுகிறார்

புகல் இலக்கியப்பரப்பில் இது இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது. ஈழத்தமிழின் புத்திலக்கியம் விடுதலை கோரும் எழுத்து. அவலம் நீக்கக் கோரும் எழுத்து. வேதனை காணீர் எனும் எழுத்து. மனித இழிநிலை பகரும் எழுத்து. இது எவ்வளவுக்கு எவ்வளவு பரவலாக்கப்படுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு மனிதத்துயரின் நீக்கம் விரைவுபடும். சர்வதேச புகல் இலக்கியம் என்பது ஸ்திரமாக வேரூன்றிவிட்ட ஐரோப்பிய சூழலில் தமிழ் புலம்பெயர் படைப்புகள் அத்தளத்தில் இடம்பெறத் தொடங்குகின்றன. உதாரணமாக, கலாமோகனின் கவிதைகள் பிரெஞ்சு மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு உலகப் புலம் பெயர் இலக்கிய வரிசையில் இடம் பெற்றுவிட்டதும் உண்மை. இவை டேனிஷ் மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டு டேனிஷ் இலக்கிய வரிசையிலும் சேர்கிறது.  அதே போல் சேரனின் கவிதைகள் பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. 

தமிழ் இலக்கியச் செழுமையை ஆங்கிலம் மூலம் உலகிற்குப் பரப்பிய 20ம் நூற்றாண்டு இலக்கியவாதி ஏ.கே.இராமானுஜம் ஆவார். இவரது செம்புலப்பெயல் நீர் மொழிபெயர்பு லண்டன் குகையிரத வண்டிகளில் உலா வந்த காலமுண்டு. இவர்தான் ஜியார்ஜ் ஹார்ட் போன்ற பின்னாளைய தமிழ்ச் சேவகர்களுக்கு முன்னோடி. இவர் பற்றி அழகாகச் சொன்னார் பேரா.செல்வா. மொழி பெயர்ப்பு என்பது எவ்வளவு சிக்கலானது என்பதை அவரது பேச்சு காட்டியது. 30 ஆண்டுகள் தமிழ் கற்றும் தன்னால் தைர்யமாக தமிழ் பேச முடியவில்லை என்பது ழான் சொன்ன கருத்து. காரணம் தமிழ் மொழியின் இரட்டை அர்த்தம் தொணிக்கும் பேச்சு என்று சொன்னார். ‘அணங்கு’ என்ற சொல் எத்துணை வகையில் பேசப்படுகிறது என்று நம் மின்தமிழ் மடலாடலை முன்மொழிந்து பேசினார். 

எஸ்.பி உதய சங்கரின் பேச்சு மலாய் மொழியில் தமிழ்க் கதைகளையும், கவிதைகளையும் கொண்டு சேர்க்கும் போதுள்ள அரசியல் சிக்கல் பற்றிப் பேசியது. 21ம் நூற்றாண்டில் நாகரீகமடைந்துவிட்ட உலகு காணாத ஒரு கோணம் அவர் எங்களுக்குச் சொன்னது. தமிழர்கள் மலேசியாவில் பல காலம் வாழும் போது தேசிய மொழியை ஏன் பேசவில்லை என்ற பேச்சு வருகிறது. சரி பேசுகிறேன் எனப் புறப்பட்டு மலாய் மொழியில் ஒரு தமிழன், ஒரு இந்து (முஸ்லிம் அல்லாதவர்) புத்தாக்கம் செய்யும் போது மலாய் அரசு அசூசை கொண்டு எழுத்தைத்தடை செய்கிறது என்று அவர் முன்வைத்த வாதம், அயலக இலக்கியத்தின் புதியதோர் சிக்கலை எங்கள் முன் வைத்தது!

இந்தியா போன்ற மொழிவாரி நாட்டில் மொழிபெயர்புகளுக்குள்ள வரவேற்பு பற்றி திரு.நரசய்யா, திவாகர், கமலம் போன்றோர்தான் சொல்ல வேண்டும்.

 நா.கண்ணன்
Cheran.jpg

coral shree

unread,
Nov 6, 2011, 6:00:44 AM11/6/11
to mint...@googlegroups.com
அன்பின் திரு கண்ணன்,

நிறைய தகவல்கள் அறிய முடிந்தது. பகிர்விற்கு நன்றி.

2011/11/6 N. Kannan <navan...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
Cheran.jpg

Subashini Tremmel

unread,
Nov 6, 2011, 6:09:43 AM11/6/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram


2011/11/6 N. Kannan <navan...@gmail.com>
..
எஸ்.பி உதய சங்கரின் பேச்சு மலாய் மொழியில் தமிழ்க் கதைகளையும், கவிதைகளையும் கொண்டு சேர்க்கும் போதுள்ள அரசியல் சிக்கல் பற்றிப் பேசியது. 21ம் நூற்றாண்டில் நாகரீகமடைந்துவிட்ட உலகு காணாத ஒரு கோணம் அவர் எங்களுக்குச் சொன்னது. தமிழர்கள் மலேசியாவில் பல காலம் வாழும் போது தேசிய மொழியை ஏன் பேசவில்லை என்ற பேச்சு வருகிறது. சரி பேசுகிறேன் எனப் புறப்பட்டு மலாய் மொழியில் ஒரு தமிழன், ஒரு இந்து (முஸ்லிம் அல்லாதவர்) புத்தாக்கம் செய்யும் போது மலாய் அரசு அசூசை கொண்டு எழுத்தைத்தடை செய்கிறது என்று அவர் முன்வைத்த வாதம், அயலக இலக்கியத்தின் புதியதோர் சிக்கலை எங்கள் முன் வைத்தது!

மலேசிய எழுத்தாளர் சங்கப் பிரதினிதிகள் இதற்கு சரியான ஆதாரப்பூர்வமான விளக்கம் தந்தால் இதனை ஒரு பிரச்சனையாக முன்வைத்து சிக்கலாக பாவித்து அலசலாம். ஆனால் மலேசிய சூழலில் வளர்ந்த எனது அனுபவத்தில் இது சற்று மிகைப்படுத்தப்பட்ட கூற்றாகத் தெரிகின்றது. இதற்கு பேசிய எஸ்.பி. உதயசங்கரன் தான் சரியான் விளக்கம் கொடுக்க முடியும்.

1. மலேசியாவில் 20ம் நூற்றாண்டின் மத்திய காலத்தில் வந்து சேர்ந்த தமிழர்களில் பெரும்பாலோர் கூலி வேலைகளுக்காகவும் தோட்டங்களில் வேலை செய்வதற்காகவும் அழைத்து வரப்பட்டவர்கள். இவர்கள் குழுக்களாக அமைந்த காரணத்தால் தமிழில் மட்டுமே பேசிக் கொண்டு பலர் உள்ளூர் மலாய் மக்களின் மொழியைச் சரி வர பேச கற்றுக் கொள்ள வில்லை என்பதில் உண்மை உள்ளது. பலர் கொச்சை மலாய் பேசியே காலத்தை தள்ளியவர்கள் என்பதும் உண்மை. ஆனால் இவர்களது குழந்தைகள் அங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள் மலாய் மொழி தான் பள்ளியில் படித்து வளர்ந்திருக்கின்றோம். ஆகையால் மலாய் மொழியில் படைப்பாக்கம் செய்ய இயலாத நிலை என்பது ஒரு பிரச்சனை அல்ல. முயற்சி இல்லாமல் இருக்கலாம்.

2. அடுத்து மொழி பெயர்ப்பு ஏன் ஆசூசை கொண்டு பார்க்கப்படுகின்றது என்பது புரியவில்லை.  தமிழர்களின் பல மலாய் நூல்கள் வெளிவந்துள்ளன. சொல்ல வேண்டிய விஷயத்தை ஆய்வுப் பூர்வமாக சரியான அனுகு முறையில் முன் வைத்தால் மலாய் மொழியில் மொழி பெயர்ப்பு செய்ய நினைப்பவர்களுக்கு மலேசியாவில் தடையில்லை, பிரச்சனையில்லை.

சுபா


இந்தியா போன்ற மொழிவாரி நாட்டில் மொழிபெயர்புகளுக்குள்ள வரவேற்பு பற்றி திரு.நரசய்யா, திவாகர், கமலம் போன்றோர்தான் சொல்ல வேண்டும்.

 நா.கண்ணன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Kannan

unread,
Nov 6, 2011, 6:57:04 AM11/6/11
to mint...@googlegroups.com
சுபா:

அவர் பேச்சின் மூலம் மலேசியாவில் நிலவும் நிறவாதத்தை முன்னிருத்தினார்.
அதாவது மலாய் மொழி (பாகஸா மலேசியா) என்பது பூமிபுத்திரர்களான, முஸ்லிம்
மலாய்காரர்களுக்கு மட்டும் உரித்தானது. எனவே இந்து, கிறிஸ்தவத்தமிழர்கள்
முன்வைக்கும் இலக்கியத்தை பாகாஸா மெலேயு என்றுதான் அழைக்க வேண்டும்
என்பது அரசு தரப்புவாதம். அதாவது முஸ்லிம் அல்லாதோர் எழுதும் எழுத்து
புனித மலாய் மொழியில் சேராது என்பது போன்றதோர்வாதம். பிற மொழிக்கும் சம
அந்தஸ்து உள்ளதெனில் இந்நேரம் ரெ.கா போன்ற நல்ல எழுத்தாளர்களுக்கு அரசு
முஸ்லிம்களுக்கு வாரி வழங்கும் சலுகைகள் என்றோ கிடைத்திருக்க வேண்டும்
என்பது உள்குமுறல். இதுதான் நான் புரிந்து கொண்டது. சரியோ, தவறோ!
(உணர்ச்சி நிரம்பிய அமர்வு)

நா.கண்ணன்

2011/11/6 Subashini Tremmel <ksuba...@gmail.com>:

Nagarajan Vadivel

unread,
Nov 6, 2011, 7:15:55 AM11/6/11
to mint...@googlegroups.com
புலம் பெயர்ந்த தமிழரின் வாழ்வின் தகைமை நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது.  தாய்த் தமிழ்நாட்டில் இருந்து புலம் பெயர்ந்தோர் தோட்டத் தொழிலாளர்களாகவும் கூலித் தொழிலளர்களகவும் வாழ்ந்த இடத்தில் தங்கள் தாய்மொழியை அந்நாட்டின் இறையாண்மைக்கு உட்பட்டு தம் மொழியின் பயன்பாட்டைத் தாழ்த்திக்கொண்டு வாழப் பழகியிருந்தனர். 
1983-ல் ஈழத் தமிழர் புலம் பெயர்தல் நிகழ்ந்தபின் தமிழின் தாக்கம் அவர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தது உன்மை
இப்புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களே தமிழுக்கென உலக அரங்கில் தமிழுக்கு உரிமை கேட்டு வலியுறுத்தினர்
17-ஆம் நூற்றாண்டுக்குப்பின் தமிழர் புலம் பெய்ர்தலில் 1983 வரை நிகழ்ந்த புலம் பெயர்வு புலம் பெயர்ந்த நாட்டின் இறையாண்மைக்குட்பட்டு அரசியல் ஏற்றத் தாழ்வுகளைச் சந்தித்து அதற்குத் தங்களை பழக்கிக் கொண்டனர்
1983-ல்நிகழ்ந்த புலம் பெயர்தல் தமிழுக்கென ஒருஎழுச்சியும் புலம் பெயர்ந்த நாட்டின் இறையான்மைக்கு சவாலாகவும் தொடங்கி சில நாடுகளில் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தி வருவதும் உண்மை
நாகராசன்
2011/11/6 N. Kannan <navan...@gmail.com>

K R A Narasiah

unread,
Nov 6, 2011, 9:35:25 AM11/6/11
to mint...@googlegroups.com
Dear Kannan
yesterday (5th Sep) I spoke in the Thamizh ilakkiyath thoddam of Toronto and Dr chelva introduced me and presided. Mr A Muththulingam was also present. It is amazing to see how these Srilankan maintain the Tamil feeling so afr away from their own country!
Dr Chelva told me about the Singapore function and meeting you, Arun Mahizhnana, Seethalakshmi and others!
I am enjoying your postings

Narasiah (in Toronto)
2011/11/6 N. Kannan <navan...@gmail.com>

--
Cheran.jpg

கவி.செங்குட்டுவன்

unread,
Nov 6, 2011, 10:50:08 AM11/6/11
to mint...@googlegroups.com
அய்யா வணக்கம்,
                மாநாட்டில் நேரிடையாகப் பங்கு பெற்றிருந்தால் கூட அறிய முடியாத பல செய்திகளை மிக விரிவாக அதே நேரம் நேரலை ஒலிபரப்பு போல் தெளிவாக வழங்கியமைக்கு மிக்க நன்றி.

2011/11/6 K R A Narasiah <naras...@gmail.com>
Cheran.jpg

N. Kannan

unread,
Nov 6, 2011, 7:40:44 PM11/6/11
to mint...@googlegroups.com
அன்பின் நரசய்யா:

வணக்கம். புலம்பெயர் சூழலில் நம் ஜாதியோ, சமூக அந்தஸ்தோ நம்மை அடையாளப்படுத்துவதில்லை. தேசியமும், மொழியுமே அடையாளப்படுத்துகிறது. இந்தியாவின் நீண்ட பாரம்பரியம் நமக்கு தோள் கொடுக்கும் ஆனால் இலங்கை போன்ற சிறிய நாட்டிற்கு அதன் மொழி மட்டுமே துணை நிற்கும்.

அது மட்டுமல்ல, தமிழ் மொழிக்கு மட்டுமேயுள்ள ஒரு சிறப்பு அம்சம் குறித்து நான், பேரா.செல்வா, ழான் பேசினோம். அது பற்றி என் அடுத்த இடுகையில் விவரிக்கிறேன்.

நா.கண்ணன்

2011/11/6 K R A Narasiah <naras...@gmail.com>
Dear Kannan



--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
Cheran.jpg

Geetha Sambasivam

unread,
Nov 6, 2011, 8:44:46 PM11/6/11
to mint...@googlegroups.com
தமிழர்கள் மலேசியாவில் பல காலம் வாழும் போது தேசிய மொழியை ஏன் பேசவில்லை என்ற பேச்சு வருகிறது. சரி பேசுகிறேன் எனப் புறப்பட்டு மலாய் மொழியில் ஒரு தமிழன், ஒரு இந்து (முஸ்லிம் அல்லாதவர்) புத்தாக்கம் செய்யும் போது மலாய் அரசு அசூசை கொண்டு எழுத்தைத்தடை செய்கிறது என்று அவர் முன்வைத்த வாதம், அயலக இலக்கியத்தின் புதியதோர் சிக்கலை எங்கள் முன் வைத்தது!

2011/11/6 N. Kannan <navan...@gmail.com>
அன்பின் நரசய்யா:

!

இந்தியா போன்ற மொழிவாரி நாட்டில் மொழிபெயர்புகளுக்குள்ள வரவேற்பு பற்றி திரு.நரசய்யா, திவாகர், கமலம் போன்றோர்தான் சொல்ல வேண்டும்.

 நா.கண்ணன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

--

Kamala Devi

unread,
Nov 6, 2011, 9:08:40 PM11/6/11
to mint...@googlegroups.com
கீதா, முனைவர் கண்ணன்,
மொழிபெயர்ப்பு குறித்த கேள்வி அருமையான கேள்வி.. ஆனால் இது 2வரியிலோ, அல்லது மின்னாடலில் பதில் கொடுக்க
வேண்டிய பதிலல்ல. மாநாட்டிலேயே பல கேள்விகள் கேட்க வேண்டியிருந்தும், [குளிர் காய்ச்சல்--அன்று எனக்கு உடல் நலமில்லாமலிருந்தது] மைக்கின் முன் சத்தமாக பேச இயலாத நிலையில் வெளியே வந்தபோது, முக்கிய பேராளர்களிடம் ஞான் கேட்டேன்.படபடவென்று கேட்காமல் மெதுவாக கேளுங்கள், என்று அவர் ஆறுதலாய் சொல்ல, அது போதாதா கமலத்துக்கு ?
ஓ.கே. இட்ஸ் ஓ.கே.என்று சிலிர்த்துக்கொண்டு போக பிடித்து வைத்துக்கொண்டு, இப்பொழுது சொல்லுங்கள், என்று சிரிக்கிறார்.
ஹ்ம்ம்,
சேரனின் கவிதை, யசோதாவின் கேள்வி, நா.கண்ணனின்சிந்தனை, ரெ.கா,சாரின் பதிவு,ஜெர்மனி சுசீந்தரனின் புலம்
பெயர் அனுபவம்---இங்குதான் கண்ணீர் வந்தது.
வெளியில் வந்தபோது, அன்பர் ஒருவர் சுசீந்தரனை அறிமுகப்படுத்த வந்தபோது கூட, பேசினால் அழுகை வந்துவிடுமோ, என்று
விலகிவிட்டேன்.
கீதா, நமது இலக்கியங்கள் மொழிபெயர்ப்பில்லாததால் தான் இன்று உலக அளவில் பேசப்படவில்லை, என்றுஎன்னுடைய
ஆசிரியர்கள் கூறுவார்கள். தரமான மொழிபெயர்ப்பு,
ஹ்ம்ம், தனி இழையில் பேசலாம்.
அன்பு கமலம்

 

From: Geetha Sambasivam <geetha...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Monday, 7 November 2011 9:44 AM

Subject: Re: [MinTamil] உலகத்தமிழ் எழுத்தாளர் மாநாடு - முதன்முறையாக! Friday 28 - Sunday 30, October 2011
தமிழர்கள் மலேசியாவில் பல காலம் வாழும் போது தேசிய மொழியை ஏன் பேசவில்லை என்ற பேச்சு வருகிறது. சரி பேசுகிறேன் எனப் புறப்பட்டு மலாய் மொழியில் ஒரு தமிழன், ஒரு இந்து (முஸ்லிம் அல்லாதவர்) புத்தாக்கம் செய்யும் போது மலாய் அரசு அசூசை கொண்டு எழுத்தைத்தடை செய்கிறது என்று அவர் முன்வைத்த வாதம், அயலக இலக்கியத்தின் புதியதோர் சிக்கலை எங்கள் முன் வைத்தது!

2011/11/6 N. Kannan <navan...@gmail.com>
அன்பின் நரசய்யா:
இந்தியா போன்ற மொழிவாரி நாட்டில் மொழிபெயர்புகளுக்குள்ள வரவேற்பு பற்றி திரு.நரசய்யா, திவாகர், கமலம் போன்றோர்தான் சொல்ல வேண்டும்.

 நா.கண்ணன்
--




--


Geetha Sambasivam

unread,
Nov 6, 2011, 9:11:08 PM11/6/11
to mint...@googlegroups.com
ஹ்ம்ம், தனி இழையில் பேசலாம்//
 
அதே!  தனி இழையில் பேசலாம்.

2011/11/6 Kamala Devi <saahi...@yahoo.com.sg>
கீதா, நமது இலக்கியங்கள் மொழிபெயர்ப்பில்லாததால் தான் இன்று உலக அளவில் பேசப்படவில்லை, என்றுஎன்னுடைய
ஆசிரியர்கள் கூறுவார்கள். தரமான மொழிபெயர்ப்பு,
ஹ்ம்ம், தனி இழையில் பேசலாம்.
அன்பு கமலம்

 
 

--

N. Kannan

unread,
Nov 6, 2011, 10:29:27 PM11/6/11
to mint...@googlegroups.com
இங்கேயும் பேசலாம் :-)

கீதா என்ன சொல்ல வருகிறார்கள் என்று தெரியவில்லை. வெறும் ஆச்சர்யக்குறி
மட்டும் நிற்கிறது!!

நா.கண்ணன்

2011/11/7 Geetha Sambasivam <geetha...@gmail.com>:

K R A Narasiah

unread,
Nov 7, 2011, 10:31:23 AM11/7/11
to mint...@googlegroups.com
அன்பின் கண்ணன்
இங்கு (டோரண்டோவில்) கூட்டம் முடிந்தவுடன் ஒருவர் என்னை வினவினார். “குலமா மதமா எது புலம் பெய்ர்ந்தோரை சேரவைக்கிறது?” அவர் ஒரு இஸ்லாமியர்; ஸ்ரீலங்கர். நான் தி ஜானகிராமன் நளபாகத்தில் சொன்னதைச் சொன்னேன். “தூரம் சென்று விட்டால் குடுமியும் குல்லாவும் ஒன்றாகிவிடும்!”
 
மொழி தான் அதீத பிணைப்பு கொடுப்பது; மொழிதான் தொப்புள்கொடி!
 
ஆனாலும் எம்போன்றோருக்குச் சில இடங்களில் வருத்தம் தோன்றும்; தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டிருப்பினும் தமிழைப் போற்றிப் பேணுகிறோம். ஏனென்ற விவரம் சமயம் கிட்டும் போது சொல்கிறேன்!
 
மொழிபெயர்ப்பு   சங்கிலியின் ஒருமுக்கிய அங்கம். (an important and strongest link of a chain BUT UNFORTUNATELY A CHAIN IS AS STRONG ITS WEAKEST LINK!) அது சரியாகப் பயன் படுத்தப் படவேண்டும்.
 
கல்கத்தா சு. கிருஷ்ண்மூர்த்தி, இந்திரா பார்த்தசாரதியின் குருதிப் புனலை மொழிபெயர்த்து ஸாஹித்ய அகாதெமி பரிசு பெற்றவர். அவரை பற்றி:

Subramanian Krishnamoorthy)   graduated from Raja’s college pudukkottai, securing the first rank in the university in Sanskrit. He then took his M.A degree in English literature from Nagpur University. Apart from Tamil, his mother-tongue, English and Sanskrit, he knows Hindi, Bengali and German.

After teaching at college for a few years, he joined the audit department of the government of India at madras in 1954. In 1955 he was transferred to Kolkata, where he has been living ever since, except for a 3-year spell in Delhi. He retired from the Indian audit & accounts service 1987.

He has been writing short stories and articles in English and Tamil for over four decades. Two Tamil short story collections (nandriku oru vilai & manitham) and two English short story collections (the peasant and other stories & modern aesopfabbs) have been published. He has written comprehensive Tamil biographies of Kazi Nazrul Islam, Sarat Chandra Chattopadhyay, Premchand & Iswar Chandra Vidyasagar.

His Nazrul biography was awarded the Ilakkia Chintanai Prize (madras) and the Rabindra Smirti Puraskar of the government of Bengal. The biographies of Premchand and Vidyasagar also won the Ilakkia Chintanai Prize. He has translated more than 60 books from Bengali/Hindi/English into Tamil and from Tamil to Bengali.
 
‘Rakta Bonya’, his Bengali translation of Indra Partharathi’s Tamil novel ‘Kurudippunal’, has been awarded the Sahitya Akademi translation Prize & Nikil Bengal Sahitya Samelana Prize.

He has translated Tirukural and Silappadikaram in to Tamil.

டிசம்பரில் வெளிவரவிருக்கும் எனது நான்காவது சிறுகதைதொகுப்புக்கு (செம்புலப்பெயனீர்) கல்கத்தா கிருஷ்ணமூர்த்தி முன்னுரை எழுதியுள்ளார்.
அவரது சகோதரர் பேரா. ஸ்வாமிநாதன் மகாபலிபுரம் என்ற நூல் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். அதை நான் தமிழில் மாமல்லபுரம் என்ற தலைப்பில் மொழிபெயர்த்துள்ளேன்.
 
நரசய்யா
2011/11/6 N. Kannan <navan...@gmail.com>

DEV RAJ

unread,
Nov 7, 2011, 11:05:54 PM11/7/11
to மின்தமிழ்
பரவலான கவனத்துக்கு வரவேண்டிய அரிய தகவலகள்;
நரசய்யா அவர்களுக்கு நன்றி

தேவ்

> *‘Rakta Bonya’, his Bengali translation of Indra Partharathi’s Tamil novel


> ‘Kurudippunal’, has been awarded the Sahitya Akademi translation Prize &

> Nikil Bengal Sahitya Samelana Prize.*


>
> He has translated Tirukural and Silappadikaram in to Tamil.
> டிசம்பரில் வெளிவரவிருக்கும் எனது நான்காவது சிறுகதைதொகுப்புக்கு
> (செம்புலப்பெயனீர்) கல்கத்தா கிருஷ்ணமூர்த்தி முன்னுரை எழுதியுள்ளார்.
> அவரது சகோதரர் பேரா. ஸ்வாமிநாதன் மகாபலிபுரம் என்ற நூல் ஆங்கிலத்தில்
> எழுதியுள்ளார். அதை நான் தமிழில் மாமல்லபுரம் என்ற தலைப்பில்
> மொழிபெயர்த்துள்ளேன்.
>
> நரசய்யா

> 2011/11/6 N. Kannan <navannak...@gmail.com>


>
>
>
>
>
>
>
> > இங்கேயும் பேசலாம் :-)
>
> > கீதா என்ன சொல்ல வருகிறார்கள் என்று தெரியவில்லை. வெறும் ஆச்சர்யக்குறி
> > மட்டும் நிற்கிறது!!
>
> > நா.கண்ணன்
>

> > 2011/11/7 Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>:


> > > ஹ்ம்ம், தனி இழையில் பேசலாம்//
>
> > > அதே!  தனி இழையில் பேசலாம்.
>
> >  --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,

N. Kannan

unread,
Nov 8, 2011, 8:55:11 AM11/8/11
to mint...@googlegroups.com
2011/11/8 K R A Narasiah <naras...@gmail.com>:

> கல்கத்தா சு. கிருஷ்ண்மூர்த்தி, இந்திரா பார்த்தசாரதியின் குருதிப் புனலை
> மொழிபெயர்த்து ஸாஹித்ய அகாதெமி பரிசு பெற்றவர். அவரை பற்றி:
>

மரப்பசுவை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?

>>ஆனாலும் எம்போன்றோருக்குச் சில இடங்களில் வருத்தம் தோன்றும்; தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டிருப்பினும் >>தமிழைப் போற்றிப் பேணுகிறோம். ஏனென்ற விவரம் சமயம் கிட்டும் போது சொல்கிறேன்!

காரணம் அறிய அவா!

நா.கண்ணன்

K R A Narasiah

unread,
Nov 8, 2011, 9:28:01 AM11/8/11
to mint...@googlegroups.com
மரப்பசு, wooden cow என்ற பெயரில் டெல்லி வாழ் Dr. லக்ஷிமி கண்ணனால் மொழிபெய்ர்க்கப்பட்டது. லக்ஷிமி கண்ணன் எனது நூல் ’சாதாரணமனிதனை’ப் பற்றி ஹிந்துவில் எழுதியவர்.
இந்த நாவலின் பின்னணி பலருக்குத் தெரியாது.
 
அதற்குப் (மரப்பசு) பின்புலமாக அமைந்த ஒரு சிறந்த மனிதர், எங்களுக்குப் பரிச்சயமானவர். சிட்டி, தி. ஜானகிராமன் நணப்ர். எனக்குக் கூட!
 
சில காரணங்களுக்காக அந்த விவரத்தைச் சொல்ல இயலாத நிலையில் உள்ளேன். காலமும் காரணமும் நேரும் போது சொல்கிறேன். (எனது சென்ற மடலில் ஏனென்ற விவரம் சமயம் கிட்டும் போது சொல்கிறேன் என்பதைக் குறித்தும் காலம் கிட்டும் போது தெரிவிக்கிறேன்.
 
 
 
நரசய்யா
  

2011/11/8 N. Kannan <navan...@gmail.com>

Kamala Devi

unread,
Nov 8, 2011, 10:19:22 AM11/8/11
to mint...@googlegroups.com
அன்பின் சார்
நலமா ? அம்மா நலமா? என்டெ வணக்கங்கள்.
Dr.லக்‌ஷ்மி கண்ணந்-காவேரி என்ற பெயரில் எழுதுபவர். அருமையான எழுத்தாளர்.
எனக்கு அவரது எழுத்து பிடிக்கும்.
என்னுடைய ஆய்வுக்கட்டுரையில் கூட குறிப்புட்டுள்ளேன்.
ஆனால் அவரைப்பற்றி முழுத்தகவல் அறிய பலரிடம் கேட்டும் கிட்டவில்லை.
அவரது இண்டியா கேட்--பெண்களை மிகவும் கவரும் கதை.
நிங்ஙளின் அனுபவங்கள் எங்களுக்கெல்லாம் பலனுள்ள தகவல்களே
அன்பு கமலம்

 

From: K R A Narasiah <naras...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Tuesday, 8 November 2011 10:28 PM

Subject: Re: [MinTamil] உலகத்தமிழ் எழுத்தாளர் மாநாடு - முதன்முறையாக! Friday 28 - Sunday 30, October 2011
மரப்பசு, wooden cow என்ற பெயரில் டெல்லி வாழ் Dr. லக்ஷிமி கண்ணனால் மொழிபெய்ர்க்கப்பட்டது. லக்ஷிமி கண்ணன் எனது நூல் ’சாதாரணமனிதனை’ப் பற்றி ஹிந்துவில் எழுதியவர்.
இந்த நாவலின் பின்னணி பலருக்குத் தெரியாது.
 
அதற்குப் (மரப்பசு) பின்புலமாக அமைந்த ஒரு சிறந்த மனிதர், எங்களுக்குப் பரிச்சயமானவர். சிட்டி, தி. ஜானகிராமன் நணப்ர். எனக்குக் கூட!
 
சில காரணங்களுக்காக அந்த விவரத்தைச் சொல்ல இயலாத நிலையில் உள்ளேன். காலமும் காரணமும் நேரும் போது சொல்கிறேன். (எனது சென்ற மடலில் ஏனென்ற விவரம் சமயம் கிட்டும் போது சொல்கிறேன் என்பதைக் குறித்தும் காலம் கிட்டும் போது தெரிவிக்கிறேன்.
 
 
 
நரசய்யா
  

2011/11/8 N. Kannan <navan...@gmail.com>
2011/11/8 K R A Narasiah <naras...@gmail.com>:

> கல்கத்தா சு. கிருஷ்ண்மூர்த்தி, இந்திரா பார்த்தசாரதியின் குருதிப் புனலை
> மொழிபெயர்த்து ஸாஹித்ய அகாதெமி பரிசு பெற்றவர். அவரை பற்றி:
>

மரப்பசுவை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?

>>ஆனாலும் எம்போன்றோருக்குச் சில இடங்களில் வருத்தம் தோன்றும்; தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டிருப்பினும் >>தமிழைப் போற்றிப் பேணுகிறோம். ஏனென்ற விவரம் சமயம் கிட்டும் போது சொல்கிறேன்!

காரணம் அறிய அவா!

நா.கண்ணன்

K R A Narasiah

unread,
Nov 8, 2011, 11:33:32 AM11/8/11
to mint...@googlegroups.com
தனி மடலிலவரைப் பற்றிய விவரங்கள் தருகிறேன். ஆம் அவர் காவேரி என்ற பெயரில் எழுதுவார்.
நரசய்யா

2011/11/8 Kamala Devi <saahi...@yahoo.com.sg>

N. Kannan

unread,
Nov 9, 2011, 11:44:44 PM11/9/11
to mint...@googlegroups.com
நிகழ்வு குறித்த என் பகிர்வுகள் 5

மொழிபெயர்ப்பு பற்றிய அமர்வு சில நல்ல கேள்விகளை முன்வைத்தது. மொழி பெயர்ப்பு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் உண்மையில் ஒரு மொழிபெயர்ப்பு மூலத்தின் உயிர்நாடியை சிதைக்காமல் காட்டமுடிகிறதா? என்பது. ஈழத்தமிழுக்கு என்று சில விசேஷப் பயன்பாடுகளுண்டு. அவைகளைச் சட்டென மொழியாக்கம் செய்துவிடமுடியாது. சேரனின் கவிதை வரிகள் சிலவற்றைக் கூறி அதை ஆங்கிலமாக்குவதில் உள்ள சிக்கல்களைச் சொன்னார். இன்னொரு அமர்வில் கி.பி.அரவிந்தனின் கவிதையொன்று சிலாகித்துப் பேசப்பட்டது. அதில் அவர் யாழ்ப்பாணத்தில் வீசும் பல்வேறு வகையான காற்றின் வகைகளைச் சொல்லுவார். இவை தமிழர்களுக்கே புதிய சேதியாக இருந்ததால் சிலர் எழுந்து அவையென்ன என்று கேட்டனர். தமிழனின் கதியே இப்படியென்றால் அதை மொழிபெயர்க்கும் போது எத்தனை சிக்கல்கள் வருமென்று யோசிக்கலாம். ழான் ‘அணங்கு’ என்ற சொல்லின் பல்வேறு நிழல்கள் (shades) பற்றிச் சொன்னார். அணங்கு நல்லதா, கெட்டதா என்று சட்டென முடிவு எடுத்துவிடமுடியாது. தமிழின் பயன்பாடு அப்படி! பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்றெல்லாம் பெயர் வைத்து அழைக்கிறார்கள். திருவாய்மொழியில், ‘பொலிக! பொலிக! பொலிக! எனும் பாசுரத்தில், ‘கடல் வண்ணன் பூதங்கள் மலியப் புகுந்து உழிதரக கண்டோம்’ என்று முடிக்கிறார். யார் இந்த பூதங்கள்? இவ்வமர்வு பற்றியப் பின்னால் பேசிக்கொண்டு இருந்த போது மாலன் என்னிடம் சொன்னார், ஆழ்வார்கள், ஆழங்கால் படுதல் என்பதற்கும் drowning என்பதற்கும் வேறுபாடு உண்டு. ஏ.கே.ஆர் எப்படி Hymns for the Drowning: Poems for Vishnu என்று எழுதலாம் என்றார் [ http://en.wikipedia.org/wiki/Nammalvar ]. உண்மையில் அம்மவர்வில் பேசிய பேரா.செல்வா ஏ.கே இராமானுஜன் பற்றி மிகவும் சிலாகித்துப் பேசினார். 

AKR.JPG உதாரணமாக, மொழிபெயர்ப்பு என்பதன் லாப நஷ்டங்கள் பற்றிப் பேச்சு வந்தது. லாபம் என்னவெனில் மூல ஆசிரியர் பற்றிய ஒரு உலகலாவிய அறிமுகம் கிடைக்கிறது. அது பற்றிய திறனாய்வு வளர்கிறது. நஷ்டம், மொழிபெயர்ப்பு எவ்வளவு தூரம் மூல ஆசிரியரின் இதயத்தை உலகிற்குக் காட்டுகிறது? என்பது! பல நேரங்களில் அது மூல ஆசிரியரின் ஆழ்மனக்கருத்தை விகாரப்படுத்துவது போல் ஆகிவிடுவதுமுண்டு. எனவேதான் செல்வா சொன்னார், தன்னால் மூலத்தின் கருத்து வளமையை ஒழுங்காக மொழி பெயர்க்க முடியாது என உணர்ந்தால் மொழிபெயர்க்காமல் சும்மா இருத்தலே சுகம் என்று! அதுவே ஆசிரியருக்குச் செய்யும் பெரிய கைம்மாறு என்று. இது குறித்து ஏ.கே.ஆர் விரிவாக தனது முன்னுரையிலும், பின்னுரையிலும் பேசுவது குறித்து நான் அந்த அமர்வில் குறிப்பிட்டேன். ஏ.கே.ஆர் தனது மொழிபெயர்ப்பை வழங்கும் முன் மிக நீண்ட முன்னுரை தருவார். அந்த முன்னுரையில் மொழி பெயரும் கவிதையின் புனைவு களம், அது சொல்ல வரும் பாடு பொருள், பின்புலம் போன்றவற்றை விளக்குவார். அவரது முன்னுரை வாசிக்காமல் சங்க இலக்கிய மொழிபெயர்ப்பிற்குள் போனால் ஒன்றும் புரியாது. போரில் மாண்ட தன் பிள்ளையின் புறமுதுகில் புண் பட்டிருந்தால் ஏன் ஒரு தமிழ்த்தாய் தன் முலையை அரிந்து கொள்ள வேண்டும் என்பதை விளக்கிச் சொல்லாவிடில் மாற்றுக் கலாச்சார மக்களுக்குப் புரியாது. மொழிபெயர்ப்பு நடந்த பின் மீண்டும் விரிவாகப் பின்னுரை தருவார் ஏ.கே.ஆர். அதில்தான் அவர் பஷ்ட கஷ்டம் புரிய வரும். இப்படி முன்னுரை, பின்னுரைகளோடு தரும் போதுதான் தமிழ் மொழியின் பொருளை ஒருவாறு மாற்றாருக்குச் சொல்ல முடியும். 

அத்வைத ஆச்சார்யராக பெரும் பீடம் அமைத்து கர்நாடகாவில் வாழ்ந்து வந்த மாதவாச்சார்யரை [1113 CE to 1208 CE] தடுத்தாட்கொள்ளும் திருவுள்ளத்தோடு அவர் கற்ற கல்வியில் திருநெடுந்தாண்டகம் உண்டோ என்று பராசர பட்டர் கேள்வி எழுப்பிய போது சகலத்தையும் கைவிட்டு ஸ்ரீரங்கம் வந்து தமிழ் கற்று நஞ்ஜீயராகி ஆழ்வார்களில் மூழ்கி வியாக்கியான பாரம்பரியத்தைத் தொடங்கி வைக்கும் வைபவத்தை எண்ணினால், மொழி பெயர்ப்பை விட மூலத்தைக் கற்று, உரியோரிடம் உரை கேட்டுத்தெளிதலே மூல ஆசிரியரின் உள்ளத்தைப் புரிந்து கொள்ளும் வழியென அறியலாம். 

ழான் பேசி முடித்த பின் ஏன் தாங்கள் முழுவதும் தமிழில் பேசவில்லை என்று கேட்டேன். மிக அழகாக அதற்கு அவர் இன்னொரு பிறவி எடுக்க வேண்டும் என்றார்! இதற்கும் அவர் 30 ஆண்டுகள் தமிழ் கற்றிருக்கிறார். யாருக்கும் தெரியாத சேனாவராயர் பற்றி அன்று சொற்பொழிவாற்றினார்! தன் பூர்வஜென்மத்தொடர்பால் தமிழ் மீது ஈடுபாடு வந்துள்ளது என்பதைச் சொல்லும் முகத்தான் ஒரு குறளை முன் மொழிந்தார்:

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை 
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை

மறுபிறப்பு உண்டெனும் கருத்தில் இப்பாடல் அமைவதாகச் சொன்னார். இது பேசிக்கொண்டிருக்கும் போது செல்வாவும் கேட்டுக்கொண்டிருந்தார். நான் அப்போது அவரிடம் சொன்னேன், நம்மாழ்வருக்குள் நுழைவதற்கு முன் அனுமதியே ஏ,கே.ஆர் வைணவராகப் பிறந்தது என்று. சங்கப் புலவர்கள் சொல்லியபடி குலத்தொழில் அக்குலத்தில் பிறக்கும் போது கல்லாமல் வந்து சேர்கிறது. இல்லையெனில், அவருக்கு அப்பெரிய பாரம்பரியத்தின் நுணுக்கங்கள் புரியாமல் போயிருக்கும். செல்வாவிடம் ஒரு உதாரணம் காட்டினேன். ஏ.கே.ஆர் பெருமாள் கோயிலில் சேவித்துக் கொண்டு இருக்கிறார். பட்டார்யர் சொல்கிறார், ‘இவன் ஏன் விழுந்து விழுந்து பெருமாளைச் சேவிக்கிறான்? இறைவன் மனது நோகாதோ?” என்று. சாதாரணமாக எல்லோரும் எண்ணுவது நாம் எவ்வளவு நம்மை வருத்தி, தவமிருந்து, ஐம்புலன் அடக்கி, இல்லாத கஷ்டமெல்லாம் பட்டாத்தான் இறைவன் கண் திறப்பான் என்று! இல்லையா? ஆனால் வைணவ வியாக்கியானம் அறிந்தோர் இப்படிக் காணார். திருநெடுந்தாண்டகம் கற்க முடியைச் சிரைத்து, தவக்கோலம் கொண்டு சந்நியாசியாக ஸ்ரீரங்கம் நோக்கி வரும் போது திருப்பதியில் அனந்தாழ்வானைக் காண்கிறார். அவர் கண்களில் நீர் ததும்ப. மனைவி மக்களை விட்டு, இப்படி சந்நியாசி கோலத்தில் வந்து நின்றால்தான் பராசர பட்டர் உம்மை ஏற்றுக்கொள்வார் என்று நினைத்துவிட்டீரே! அவர் வேண்டுவது உம் உள்ளம் மட்டும்தானே! கருணை வள்ளலான அவர் நீர் இப்படி வருத்திக்கொள்வதை சகிப்பாரோ? என்பது அனந்தாழ்வானின் கவலை! ஒரு அடியார் இன்னொரு அடியார் படும் துயர் காணச்சகியார் எனில் இறைவன் மட்டும் அடியார் படும் துயர் கண்டு ஆனந்தப்படுவானா என்ன? எனவேதான் விழுந்து விழுந்து சேவிக்காமல் இறைவன் முன் வந்து ஒரு சொட்டுக் கண்ணீர் உகுத்தால் போதும். அதுவும் நம் கஷ்டம் எண்ணியல்ல. அவன் நம்மை அவன் சந்நிதிக்கு அழைத்து தன்னைக் காணும் பாக்யம் அருளுகின்றானே எனும் நன்றி உணர்வால்! இதை நாம் வைணவ குலத்தில் பிறந்து உணர்வோடு உணர்வாக அறிந்தால் மட்டுமே அந்த பாவத்தைப் புரிந்து கொள்ளமுடியும். இதைத்தான் சங்கப்புலவன் ‘கல்லாமல் பாகம்படும்’ என்கிறான். ஏ.கே.ஆர் வைணவராகப் பிறந்திராவிடில் நம்மாழ்வாருக்குள் நுழைந்தே இருக்கமுடியாது என்பது என் துணிபு என்று பேரா.செல்வாவிடம் கூறினேன். மிகவும் ரசித்துக் கேட்டார்.

அடுத்து இதன் தொடர்பாக வரும் தமிழை ஆதரிக்க வேண்டுமா? ஆராதிக்க வேண்டுமா? என்பது பற்றி....

நா.கண்ணன்


AKR.JPG

N. Kannan

unread,
Nov 10, 2011, 1:41:21 AM11/10/11
to mint...@googlegroups.com
நிகழ்வு குறித்த என் பகிர்வுகள் 6

இந்த மாநாடு தமிழ்த்தாய் வாழ்த்தோடு தொடங்கியது!

தமிழ் வாழ்த்து என்று சொன்னவுடன் மலேசியாவில் கவிஞர் சீனி நைனா முகம்மது அவர்கள் தம் வாழ்த்துப் பாவை விளக்கிச் சொன்ன உரை நினைவிற்கு வருகிறது. அதற்கு முன் இந்த அழகிய பாடலை இதுவரை கேட்காதோருக்காக, இதோ இணைப்பு:


தமிழ் வாழ்த்தின் கதை சொன்னார் நைனா முகம்மது. இறை வணக்கம், வாழ்த்துப்பா, காப்புச் செய்யுள் மரபு தமிழில் இருந்திருக்கிறது ஆனால் தமிழை முதன்மைப் படுத்தி வாழ்த்துப்பா பாடும் பழக்கம் கழகத்தவர் கொண்டு வந்தது என்று முடித்தார். கழகத்தவரும் ஏன் எல்லாவற்றையும் விட்டு தமிழை முதலில் பாட வேண்டும்?

இம்மாநாட்டில் திடீரென்று கேள்வி நேரத்தில் தமிழ் இலக்கியத் திறனாய்வாளர் நாகார்ஜுனன் ஏன் தமிழர்கள் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடுகின்றனர் என்று பொத்தாம் பொதுவாய் கேள்வி கேட்டுவிட்டுப் போனார்.

அதற்கு முன்னமே நான் இக்கேள்வியை நண்பர் ழான் அவர்களிடம் கேட்டுக்கொண்டிருந்தேன். தமிழர்களைப் போல் தம் மொழியை நேசிப்பவர்கள் பிரெஞ்சுக்காரர்கள். அங்கு இந்த வழக்கமுண்டா என்று கேட்டேன். இல்லை என்றார். நாகார்ஜுனன் இந்தியாவின் பிற மொழிக் கலாச்சாரத்திலும் மொழி வாழ்த்துப்பாடும் வழக்கம் இல்லை என்றார். இந்தியாவில் தேவபாஷை என்றறியப்படும் சமிஸ்கிருதத்தில் கூட ஆரம்பிக்கும் போது சமிஸ்கிருத மொழி வாழ்த்துப் பாடும் வழக்கமில்லை என்று நம்புகிறேன் (தவறெனில் திருத்தவும்).

அப்படி இருக்கும் போது தமிழுக்கு மட்டும் என்ன அப்படியொரு சிறப்பு?

இரண்டாவது முறையாக, மொழி பெயர்ப்பு பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் போது ழான் அவர்களிடம் மீண்டும் கேட்டேன். அவர் பொட்டில் அடித்தார் போல் சொன்னார், “ஏனெனில் தமிழ் என்பதோர் சமயம் (It is religion) என்று. உடனே எல்லாம் விளங்கிவிட்டது. இந்தத்திக்கை நோக்கி எனது விளக்கங்களும் முன்பு இருந்திருந்தாலும் அம்மாநாட்டுச் சூழலில் இது மிகவும் உணர்வு பூர்வமாக விளங்கியது.

தமிழர்களைப் பொறுத்தவரை தமிழ் என்பது வெறும் மொழியல்ல! அதையும் தாண்டி தனிச்சிறப்போடு அது பார்க்கப்படுகிறது! ஒன்பதாம் திருமொழியில் திருமழிசை ஆழ்வார் செப்புகிறார்

கதவு மனமென்றும் காணலா மென்றும், குதையும்
வினையாவி தீர்ந்தேன், - விதையாக நற்றமிழை
வித்தியென் உள்ளத்தை நீவிளைத் தாய்,
கற்றமொழி யாகிக் கலந்து.

ஒருவனுக்கு இறை பற்றிய புரிதலே அவன் தமிழ் கற்பதன் மூலமாகவே வாய்க்கிறது என்கிறார். அதாவது இறைவனே ஒருவனுக்கு தமிழ் எனும் தெய்வ மொழியின் வடிவில் கலந்து தன்னை அறிய வைக்கிறான் என்று பொருளாகிறது! இதையே திருமூலரும், “என்னை நன்றாய் இறைவன் படைத்தனன் தன்னை நன்றாய் தமிழ் செய்யுமாறே” என்று செப்புகிறார்.

இக்கருத்தாக்கத்தில்தான் நமக்கு மொழி ஆராதனை வருகிறது. உலகில் எல்லோரும் தத்தம் மொழியை ஆதரிக்கின்றனர். ஆனால் நாம் ஆராதிக்கிறோம்! நமக்கு மொழி என்பதே வழிபடு பொருள். மொழியைப் பற்றி எவ்வளவு சொன்னாலும் இனிக்கிறது. தமிழ் என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் தமிழ்மறை செய்தான் வள்ளுவன். ஆனால் தமிழ் பற்றிக் கவிதை பாடும் பாரதிதாசன், தமிழ், தமிழ் என்று மாய்கிறார்.

தமிழுக்கும் அமுதென்று பேர்- பாரதிதாசன்

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்!

தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்!

இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்

தமிழ் எங்கள் இளமைக்குப் பால்
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

தமிழ் எங்கள் இளமைக்குப் பால் – இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
சுடர்தந்த தேன்

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
வயிரத் தின் வாள்

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்

- பாரதிதாசன்

இதுவொரு பரவச நிலை! மொழி ஒருவனை உன்மத்தம் கொள்ளச் செய்கிறது. வேறு மொழிகளில் இது சாத்தியமா என்று தெரியவில்லை. இல்லையெனில், வெறும் ஒரு சினிமா நடிகர், ஆனால் தமிழ் மாநாட்டில் வந்து தமிழ் ஒப்புவிக்கிறார் எல்லோரும் மகுடிமுன் பாம்பு போல் ரசிக்கிறார்கள்!

இதுவொரு சமய வழிபாடு என்பதறியாது பகுத்தறிவுச் செம்மல்கள் இதையொரு முறைமையாக தமிழகத்தில் புகுத்திவிடுகின்றனர். பக்தி என்பது எந்த வடிவில் நின்றால் என்ன? இறைவனை வழிபட மாட்டோம், ஆனால் மொழியை வழிபடுவோம் என்றால்? தவறில்லை என்று தோன்றுகிறது! திராவிட இயக்கவும் பக்திப்பரவலும் என்று யாராவது முனைவர் பட்ட ஆய்வு செய்யலாம்!

ழான் அவர்களை அடுத்த நாள் அருகிலிருந்த காளியம்மன் கோயிலுக்குக் கூட்டிச் சென்றோம். அதுவேறு, இது வேறா? :-))

நா.கண்ணன்

Nagarajan Vadivel

unread,
Nov 10, 2011, 1:54:47 AM11/10/11
to mint...@googlegroups.com
//தமிழை முதன்மைப் படுத்தி வாழ்த்துப்பா பாடும் பழக்கம் கழகத்தவர் கொண்டு வந்தது//


http://www.youtube.com/watch?v=S3AJJwUjO2A

நாகராசன்
2011/11/10 N. Kannan <navan...@gmail.com>

நா.கண்ணன்

--

N. Ganesan

unread,
Nov 10, 2011, 8:39:00 AM11/10/11
to மின்தமிழ்

On Nov 10, 12:54 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:


> //தமிழை முதன்மைப் படுத்தி வாழ்த்துப்பா பாடும் பழக்கம் கழகத்தவர் கொண்டு
> வந்தது//
>
> http://www.youtube.com/watch?v=S3AJJwUjO2A
>
> நாகராசன்

தமிழ்த்தாய் சினிமாவோடு இணைந்துவிட்டதால்,
http://www.youtube.com/watch?v=UHrBJ_FibdY

தமிழ் வாழ்த்து - ஔவை, இளங்கோ, சம்பந்தர், ... தொடங்கி
வைத்துவிட்டனர். தமிழ்த்தாய் வாழ்த்து முதலில்
பூமித்தாயாக வில்லிபாரதப் பாயிரம். நூற்றுக் கணக்கானவை
உள்ளன. பெருஞ்சித்திரனார், ....

நா. கணேசன்

> 2011/11/10 N. Kannan <navannak...@gmail.com>


>
>
>
>
>
>
>
> > நிகழ்வு குறித்த என் பகிர்வுகள் 6
>
> > இந்த மாநாடு தமிழ்த்தாய் வாழ்த்தோடு தொடங்கியது!
>
> > தமிழ் வாழ்த்து என்று சொன்னவுடன் மலேசியாவில் கவிஞர் சீனி நைனா முகம்மது
> > அவர்கள் தம் வாழ்த்துப் பாவை விளக்கிச் சொன்ன உரை நினைவிற்கு வருகிறது. அதற்கு
> > முன் இந்த அழகிய பாடலை இதுவரை கேட்காதோருக்காக, இதோ இணைப்பு:
>

> > புதிய தமிழ் வாழ்த்து<http://voiceofthf.blogspot.com/2011/01/blog-post_27.html>

> ...
>
> read more »

N. Kannan

unread,
Nov 10, 2011, 8:45:40 AM11/10/11
to mint...@googlegroups.com
2011/11/10 N. Ganesan <naa.g...@gmail.com>:

>
> தமிழ் வாழ்த்து - ஔவை, இளங்கோ, சம்பந்தர், ... தொடங்கி
> வைத்துவிட்டனர். தமிழ்த்தாய் வாழ்த்து முதலில்
> பூமித்தாயாக வில்லிபாரதப் பாயிரம். நூற்றுக் கணக்கானவை
> உள்ளன. பெருஞ்சித்திரனார், ....
>

மேற்கோளுடன் இதை நிருவ முடியுமா?

நன்றி.

நா.கண்ணன்

N. Ganesan

unread,
Nov 10, 2011, 8:49:59 AM11/10/11
to மின்தமிழ்

On Nov 10, 7:45 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2011/11/10 N. Ganesan <naa.gane...@gmail.com>:


>
>
>
> > தமிழ் வாழ்த்து - ஔவை, இளங்கோ, சம்பந்தர், ... தொடங்கி
> > வைத்துவிட்டனர். தமிழ்த்தாய் வாழ்த்து முதலில்
> > பூமித்தாயாக வில்லிபாரதப் பாயிரம். நூற்றுக் கணக்கானவை
> > உள்ளன. பெருஞ்சித்திரனார், ....
>
> மேற்கோளுடன் இதை நிருவ முடியுமா?
>

எதை நிருவ?

நன்றி.

நா. கணேசன்

N. Kannan

unread,
Nov 10, 2011, 9:00:26 AM11/10/11
to mint...@googlegroups.com
2011/11/10 N. Ganesan <naa.g...@gmail.com>:

> தமிழ் வாழ்த்து - ஔவை, இளங்கோ, சம்பந்தர், ... தொடங்கி வைத்துவிட்டனர்.

இதை!!

க.>


தமிழ்த்தாய் வாழ்த்து முதலில்
>> > பூமித்தாயாக வில்லிபாரதப் பாயிரம். நூற்றுக் கணக்கானவை
>> > உள்ளன. பெருஞ்சித்திரனார், ....
>>
>> மேற்கோளுடன் இதை நிருவ முடியுமா?
>>
>
> எதை நிருவ?
>
> நன்றி.
>
> நா. கணேசன்
>
>> நன்றி.
>>
>> நா.கண்ணன்
>

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--

N. Ganesan

unread,
Nov 10, 2011, 9:07:00 AM11/10/11
to மின்தமிழ்

On Nov 10, 8:00 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2011/11/10 N. Ganesan <naa.gane...@gmail.com>:
>

>  > தமிழ் வாழ்த்து - ஔவை, இளங்கோ, சம்பந்தர், ... தொடங்கி வைத்துவிட்டனர்.
>
> இதை!!

தமிழ்மன்னர்களிடம் ஔவை அறிவுரைகள் புறநானூற்றில்.
தமிழ் தேசியத்தை அழகான காப்பியமாக்கி இளங்கோ அடிகள்,
சம்பந்தர் 150+ முறை தமிழின் சிறப்புகளை வாழ்த்தாக்குகிறார்.

இவர்கள் தொடங்கிவைத்ததை வில்லி பாரதத்தில், கருணைப்பிரகாசரில்
விரிந்து, வெள்ளையர் கண்ட திராவிட மொழியியலுடன்
சேர்ந்து சுந்தரம்பிள்ளையின் வாழ்த்து தமிழ்வாழ்த்து ஆனது.
பின்னர் சுந்தரம்பிள்ளை பாடலைப் பார்த்து நூற்றுக்கணக்கான
தமிழ்த்தாய் வாழ்த்துகள் பாடப்பட்டுள்ளன. எனக்குப் பிடித்த
பாடல் பாவாணர் மாணவர் பெருஞ்சித்திரனாரது.

நா. கணேசன்

>
> க.>
>
> தமிழ்த்தாய் வாழ்த்து முதலில்
>
>
>
>
>
>
>
>
>
> >> > பூமித்தாயாக வில்லிபாரதப் பாயிரம். நூற்றுக் கணக்கானவை
> >> > உள்ளன. பெருஞ்சித்திரனார், ....
>
> >> மேற்கோளுடன் இதை நிருவ முடியுமா?
>
> > எதை நிருவ?
>
> > நன்றி.
>
> > நா. கணேசன்
>
> >> நன்றி.
>
> >> நா.கண்ணன்
>
> > --

> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com


> > To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

> > For more options, visit this group athttp://groups.google.com/group/minTamil

N. Kannan

unread,
Nov 10, 2011, 9:46:11 AM11/10/11
to mint...@googlegroups.com
2011/11/10 N. Ganesan <naa.g...@gmail.com>:

> தமிழ்மன்னர்களிடம் ஔவை அறிவுரைகள் புறநானூற்றில்.
> தமிழ் தேசியத்தை அழகான காப்பியமாக்கி இளங்கோ அடிகள்,
> சம்பந்தர் 150+ முறை தமிழின் சிறப்புகளை வாழ்த்தாக்குகிறார்.

> பின்னர் சுந்தரம்பிள்ளை பாடலைப் பார்த்து நூற்றுக்கணக்கான


> தமிழ்த்தாய் வாழ்த்துகள் பாடப்பட்டுள்ளன. எனக்குப் பிடித்த
> பாடல் பாவாணர் மாணவர் பெருஞ்சித்திரனாரது.
>

உதாரணங்கள் காட்டுங்களேன். அப்படி இல்லை என்றுதான் சீனி நைனா முகம்மது சொல்கிறார்!

க.>

karthi

unread,
Nov 10, 2011, 7:50:53 PM11/10/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram

சுபா,

இவர் சண்முக சிவா இல்லை. (சிவா மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை.) இவர் பெயர் சுந்தரராஜ். சுற்றுலா மேலாளராக இருக்கிறார். சில கட்டுரை நூல்கள் எழுதியுளளார். "மிருகங்கள் பேசினால்...". "ஐந்து மூலங்கள்" இத்யாதி. நல்ல தமிழார்வலர்.

ரெ.கா.

N. Ganesan

unread,
Nov 10, 2011, 8:12:17 PM11/10/11
to மின்தமிழ்

வணக்கம், நண்பர் சேரன் என்ன பேசினார்? என்று யாராவது சொன்னால்
நன்றி.

நா. கணேசன்

http://thedipaar.com/news/news.php?id=36105

உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு சிங்கப்பூரில் நடைபெற்றது. சிங்கப்பூர்
தமிழ் எழுத்தாளர் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மூன்று
நாள் மாநாட்டை கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்த கவிஞர் வைரமுத்து
பேசியது:

தென்னாட்டுத் தமிழ் அறிஞர்களோடு பன்னாட்டுப் படைப்பாளிகளும் ஒரு கூரையின்
கீழ் கூடியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

கூடிக் கலையும் மற்றுமொரு கொண்டாட்டமாகவோ அல்லது நம் பெருமைகளை மட்டுமே
ஓயாது பேசுகின்ற கூட்டமாகவோ இந்த மாநாடு முடிந்துவிடக் கூடாது. சில
கேள்விகளை நாம் முன் வைக்கவேண்டும்.அந்தக் கேள்விகள் தர்க்கத்துக்கும்,
நியாயத்துக்கும் உள்பட்டவையாயின், அவற்றுக்கான விடைகளை நாம் தேடியாக
வேண்டும்.

உலகமயமாதல் என்று பெரும் புயலில் உலகத்தின் குறு மொழிகளும், சிறு
மொழிகளும் அழிந்துபோகும் அபாயம் இருக்கிறது என்ற கூற்று உண்மையா? அது
உண்மையானால் தமிழ் மொழிக்கும் தீங்கு நேருமா? அப்படி நேருமானால் தமிழ்
மொழி தன்னைத் தற்காத்துக் கொள்ளும் வழிகள் எவை? என்பதையும் இந்த மாநாடு
விவாதிக்க வேண்டும்.

நம் பலங்களை மட்டும் பேசியே பொய்வலிமை பூண்டுவிட்டோம். நம் பலவீனங்களும்
பேசப்பட வேண்டும். ஒரு மாநாட்டில் தனி நபர்கள் பின்னுக்குத்
தள்ளப்பட்டுத் தத்துவங்களே முன்நிறுத்தப்பட வேண்டும்.

முதலில் நம்மை நமக்குள் மதிக்கும் மனோபாவம் வளரவேண்டும். முதல் மனிதன்
பேசிய மூத்த மொழி என்ற பெருமை நம் வீட்டுக்குள் இருக்கிறது. ஆனால்,
வீட்டுக்கு வெளியே நிலைமை வேறாக இருக்கிறது. கன்னடம் நமது சகோதர
மொழிதான். அதன் மீது எப்போதும் நமக்கு மதிப்புண்டு. இந்தியாவின் உயர்ந்த
இலக்கிய விருது என்று கருதப்படுகிற "ஞானபீடம்' பரிசை கன்னட மொழி எட்டு
முறை பெற்றிருக்கிறது. தமிழ் இரண்டு முறைதான் பெற்றிருக்கிறது. இந்த
ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசின் கடைசிப் பட்டியலில் இரண்டு
இந்தியப் படைப்பாளிகள் இடம் பெற்றிருந்தார்கள். அதில் ஒருவர் ராஜஸ்தானைச்
சேர்ந்த சிறுகதை எழுத்தாளர். மற்றொருவர் மலையாளக் கவிஞர்.

நோபல் பரிசுக்கு இரண்டு இந்தியர்கள் இறுதிச் சுற்று வரை இடம் பெற்றது
நமக்கு மகிழ்ச்சிதான். ஆனால், "கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு
முன்தோன்றி மூத்த குடி' என்று அகப்பெருமை பேசுகிற தமிழ்ப் படைப்பாளியின்
பெயர் அதில் இடம் பெறவில்லையே. நோபல் பரிசு ஒன்றும் ஒரு மொழியின்
அளவுகோல் அல்ல. எனினும் அதில் இடம் பிடிக்காத குறை நம் இனத்துக்கு
இருக்கிறதே. உலகப் படைப்புகளுக்கு இணையான பெருமையும் நமக்கு உண்டு. அதை
உலகத்துக்கு எடுத்துச் சொல்லாத பலவீனமும் நமக்கு உண்டு.

எனவே, தமிழ்ப் படைப்புகளின் ஆங்கில மொழி பெயர்ப்புகள், பிற
மொழியாளர்களின் முன்னிலையில் உலகமெங்கும் வெளியிடப்படவேண்டும்.

போகச் சமுதாயத்திலும் போர்ச் சமுதாயத்திலும் தான் உன்னத இலக்கியங்கள்
பிறக்கும். இன்று தாய்த் தமிழ்நாட்டை விட, தமிழ் ஈழத்திலும் புலம்
பெயர்ந்த தமிழர்களிடமும்தான் அந்த உன்னத இலக்கியம் உருவாகும் வாய்ப்பு
அதிகமாக உள்ளது.

உலகத் தமிழ்ப் படைப்பாளிகளை ஒன்றுகூட்ட "உலகத் தமிழ்ப் படைப்பாளிகள்
மையம்' ஒன்று உருவாக்கப்பட வேண்டும். சிங்கப்பூர் அதற்கு பொருத்தமான
தளமாகத் திகழும் என்று நம்புகிறேன் என்றார் வைரமுத்து.

karthi

unread,
Nov 10, 2011, 8:19:16 PM11/10/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram

சுபா, உதய சங்கரை இந்த மாநாட்டில் பேச வைக்கவேண்டும் என ஏற்பாட்டாளர்களிடம் மல்லாடிக் கொண்டு வந்தவன் நான்தான். உதயா முற்றிலும் மலாய் மொழியிலேயே எழுதும் தமிழ் எழுத்தாளர். முக்கிய mainstream இதழ்களில் எழுதியுள்ளார். ஒரு சிறப்பு என்னவென்றால் இவருடைய உள்ளடக்கம் முழுவதும் மலேசியத் தமிழர் வாழ்வு. இவரைப்போலவே எழுதும் இன்னும் சிலரைத் தம்முடன் இணைத்துக்கொண்டு "காவ்யா" (Kavya) என்னும் இயக்கத்தையும் நடத்திவருகிறார். இந்த வகையில் mainstreamஇன் sub stream. 

இதில் என்ன பிரச்சினை என்றால் முதலில் இவர்களை ஆதரித்த mainstream எழுத்தாளர்கள் இப்போது இவர்களை நுணுக்கமான முறைகளில் ஒதுக்க ஆரம்பித்துள்ளனர். எனெனில் நாட்டின் மலாய் இலக்கிய முதன்மைப் பரிசுகளுக்கு இவர்கள் மலாய்க்காரர்களுக்குப் போட்டியாக முளைத்ததுதான். இதனை உதயா மாநாட்டிலேயே குறிப்பிட்டார்.

"பறையா"என்னும் சொல் மலாய் அகராதியில் இருப்பது பற்றிய பிரச்சினையில் உதயசங்கர் எதிர்க்குரல் எழுப்பியபோது மலாய் மொழிக் கழகத்தின் இயக்குநர் "இது மலாய்க்காரர்களுக்கான அகராதி. இது பற்றி மலாய்க்காரர் அல்லாதாரான நீங்கள் ஏன் குரல் எழுப்ப வேண்டும்?" என்று சொல்லியிருக்கிறார். மலாய் என்பது மலாய்க்காரர்கள் மொழி என்ற அப்பட்டமான இனவாதக் குரல்களும் இன்று எழுகின்றன.

செய்யாவிட்டாலும் கேடு, செய்தாலும் கேடு.

மொழிபெயர்ப்பு பற்றிய ஒரு விளக்கம். ஒரு மலேசியர் மலாய் மொழி அல்லாத மொழியில் (தமிழ், சீனம், ஆங்கிலம்) எழுதும் இலக்கியம் மலாயில் மொழிபெயர்க்கப்பட்டால் அதனை mainstream மலாய் ஏடுகள் பதிப்பிக்க மாட்டா. ஏனெனில் மலேசியர் மலாய் மொழியிலேயே எழுத வேண்டும் என்பது அவர்கள் கொள்கை.

Uthaya Sankar SB  மற்றும் Kavya கூகள் செய்து பாருங்கள். மேல் விவரங்கள் கிட்டும். (கவனம்: இவை மலாய் மொழித் தளங்கள்.)

ரெ.கா.

N. Kannan

unread,
Nov 11, 2011, 12:11:36 AM11/11/11
to mint...@googlegroups.com
கணேசன்:

இவை பத்திரிக்கைக் குறிப்புகள். இது போல் நம் ழான், சாஷா எபலிங்
பற்றியும் சிங்கைச் செய்திதாளில் வந்தது. ழானிடம் காப்பியுண்டு என்று
நம்புகிறேன். கடைசி நாளன்று அன்பு ஜெயா எனக்கும் அவருக்குமென்று இரண்டு
நாளிதழ்கள் வாங்கிவிட்டு, இந்தியா பறந்துவிட்டார், என்னிடம் கொடுக்காமலே
:-)) எனவே என்னால் அச்சேதியை இங்கு இடமுடியாது.

சேரன் பற்றிய செய்திக் குறிப்பு உண்டா என்று தெரியவில்லை. எங்கள்
கட்டுரைகள் புத்தக வடிவில் பின்னால் வரும். நான் மலருக்கு எழுதிய
கட்டுரையை வெளியிடலாமா என அனுமதி கோருகிறேன்.

நா.கண்ணன்

2011/11/11 N. Ganesan <naa.g...@gmail.com>:

N. Kannan

unread,
Nov 11, 2011, 12:23:04 AM11/11/11
to mint...@googlegroups.com
2011/11/11 karthi <karth...@gmail.com>:

>
> செய்யாவிட்டாலும் கேடு, செய்தாலும் கேடு.
>

மேல் விவரங்களுக்கு நன்றி ரெ.கா!

என்னுடைய பெரிய அதிர்ச்சி என்னவெனில் இன்றைய ஆங்கில வெளியீட்டு
வரிசையிலும், பரிசு பெறுவதிலும் இந்திய-ஆங்கில எழுத்தாளர்கள் முதன்மையில்
நிற்கின்றனர். ஆங்கிலத்தின் கடந்த நூற்றாண்டு வளர்ச்சிக்கு முக்கிய
காரணம் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொள்ளாதோர் பங்களிப்புதான். நிலமை
அப்படியிருக்க மிகச் சின்னத்தனமாக (narrow mind) மலேசியா தன் மொழி வளத்தை
மலேயாவின் பிற இனக்குழுக்களின் தரவுகளால் வளப்படுத்தாமல் இப்படியொரு
இனவாத நோக்கைக் கொள்வது மலேசியாவை காலத்தின் மிகப்பின்னால் வைக்கிறது.
இங்கு வந்திருக்கும் ஏமென் பின்.முனைவர் பட்டதாரி மலேசியாவில் முனைவர்
பட்டம் பெற்றவர். அவர் சொல்கிறார் அவருக்கு வேண்டிய வேதிமங்களை மலாய்,
முஸ்லிம் இனத்தவர் அல்லாதோர் நடத்தும் கம்பெனிகள் வாயிலாக
பெறத்தடையென்றும், முஸ்லிம் மலாய்க்காரர் கம்பெனியைக் கண்டு பிடித்து
ஆடர் கொடுக்காதவரை ஆய்வு இல்லையென்று. இவையெல்லாம் பத்தாம்பசலித்தனம்.
இதுதான் மலேசியாவையும், சிங்கப்பூரையும் வித்தியாசப்படுத்துகிறது.
சிங்கப்பூர் பிற இன வருகையால் முன்னேறும் நாடு. மலேசியா தன் குடிகளையே
மதத்தின் பெயரால் பின்தள்ளும் நாடு. மிக வருத்தமாக உள்ளது.

இதில் ஒரு பாஸிடிவ்வான விஷயம் என்னவெனில் உதய சங்கர் ஒரு குளவிக்கூட்டைத்
திறந்திருக்கிறார். “கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்,
தேடுங்கள் கண்டடைவீர்”. வாழ்க மலேசியா!

நா.கண்ணன்

Kamala Devi

unread,
Nov 12, 2011, 7:18:19 AM11/12/11
to mint...@googlegroups.com
சேரன் அற்புதமாகப் பேசினார்.புலம்பெயர் அகதிகள் பற்றிய விவரங்களில், காவல்
அதிகாரிகள், விமானநிலையத்தில் வந்திறங்கிய ஒரு அகதியை கைது செய்யப்போனபோது,
ஒரு பெண் கையில்லாத நிலையில், --- ஞான் , ஞான் கேட்கும்போதே விம்மினேன்.
அவர் வாசித்த கவிதைகளும் அசலாயிட்டிருந்தது.
நிறைய எழுதப்போவதில்லை,
நூல் வெளியாகும்போது அந்த செய்திகள் அறியலாம்
கமலம்
 

Kamala Devi

unread,
Nov 12, 2011, 7:24:53 AM11/12/11
to mint...@googlegroups.com
நிங்ஙள் எழுதியதிலேயே என்னை மிகவும் கவர்ந்த பகுதி இந்த பகுதிதான்.
அதிலும் இறுதிப்பகுதி, 2 முறை படித்தேன்.
கமலம்

 

From: N. Kannan <navan...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Thursday, 10 November 2011 12:44 PM

Subject: Re: [MinTamil] உலகத்தமிழ் எழுத்தாளர் மாநாடு - முதன்முறையாக! Friday 28 - Sunday 30, October 2011
AKR.JPG

N. Kannan

unread,
Nov 12, 2011, 7:27:42 AM11/12/11
to mint...@googlegroups.com
நன்றி கமலம்! என்னடா! மூச்சுப்பேச்சு இல்லாமல் இருக்கிறதே என்று யோசித்தேன். நாம் ஏதோ ground breaking concept சொல்லிவிட்டோம் என்று எண்ணும் போதுதான் எப்போதையும் விட மின் தமிழ் அமைதியாகும் :-) இப்போது பழகிவிட்டது!
அடுத்த பகிர்வு இன்னும் சில நிமிடங்களில்..

நா.கண்ணன்

2011/11/12 Kamala Devi <saahi...@yahoo.com.sg>

Kamala Devi

unread,
Nov 12, 2011, 7:42:47 AM11/12/11
to mint...@googlegroups.com
எனக்கும் அந்த அநுபவம் உண்டு .கூத்துப்பட்டறை கட்டுரையை முதன் முதலாக
மின் தமிழில் எழுதியபோது,  ---
ஹ்ம்ம், அதே கட்டுரை வேறொரு இணைய இதழில் மீள் பிரசுரமானபோது, பல புதிய வாசகர்கள்
எனக்குக்கிட்டினார்கள்,
தொடருங்கள்.
கமலம்

Sent: Saturday, 12 November 2011 8:27 PM

Subject: Re: [MinTamil] உலகத்தமிழ் எழுத்தாளர் மாநாடு - முதன்முறையாக! Friday 28 - Sunday 30, October 2011

N. Kannan

unread,
Nov 12, 2011, 7:57:46 AM11/12/11
to mint...@googlegroups.com
நிகழ்வு குறித்த என் பகிர்வுகள் 7

இப்பகிர்வில் தமிழ் மரபு அறக்கட்டளை எப்படி மின்தமிழ் என்ற ஒன்று உருவான போதே அதன் அருமை உணர்ந்து அச்சேதியை தமிழர் மத்தியில் பரப்பியது என்று கொஞ்சம் காண்போம்.

செப்டம்பர் 29, சனி. என் அமர்விற்கு அடுத்த அமர்வாக மின்தமிழ்: புதிய பரிமாணங்கள், புதிய வார்ப்புகள் எனும் அமர்வு அமைந்தது. அதில் பாருங்கள் நாம் மின்தமிழ் எனும் மடலாடற்குழு அமைத்து இச்சொல்லைப் பரவலாக்கிய பின் இப்போது இணையத்தில் புழங்கும் தமிழுக்கே மின்தமிழ் எனும் பெயர் நிலைத்துவிட்டது! இப்படித்தான் முன்பொருமுறை ஒரு மென்பொருளுக்கு (சாஃப்ட்வேர்) மின்தமிழ் என்று பெயரிடலாமா? என்று ஒரு பேச்சு இங்கு வந்தது. குழப்பம் வரலாம் என்று சொல்லி அம்மென்பொருளின் பெயரைக் கொஞ்சம் மாற்றிய நினைவு வருகிறது! 

இம்மவர்வின் பேச்சாளர்கள்:
திரு முத்து நெடுமாறன், உருவாக்குநர், முர‌சு அஞ்ச‌ல் & செல்லின‌ம், மலேசியா
திருவாட்டி நாகலக்ஷ்மி சிவசம்பு, ஆசிரியர், உயிர்நிழல், பிரான்ஸ்
திரு மு ம‌யூர‌ன், எழுத்தாளர், இலங்கை
திரு கோபால் ராஜாராம், நிறுவ‌ன‌ ஆசிரிய‌ர், திண்ணை, அமெரிக்கா

muthu.jpg

திரு முத்து நெடுமாறன் அவர்களை மின்தமிழ் (அதாவது மின்வெளியில் தமிழ் உலா வந்த காலம்) உருவான காலத்திலிருந்து அறிவேன். எமது நண்பர் நயனம் ராஜகுமாரன் அவர்கள் இண்டர்நெட் என்பதை “இணையம்” என்று அழைக்க, உண்மையில் எங்களை இணைத்தது முத்து நெடுமாறன்தான். பாலபிள்ளை தமிழ் மடலாடற்குழுவின் தந்தை. அவர் உருவாக்கிய தமிழ்.நெட்டில் தமிழை உட்புகுத்தியது முத்து. தமது இணைமதி எனும் எழுத்துருவை எங்களுக்கெல்லாம் அளித்து தமிழில் மடலாடும் சாத்தியத்தைச் செய்தார். எனவே மலேசியாவின் இரட்டையர்களான பாலாவும், முத்துவும் என்றும் நாம் நினைவில் கொள்ளத்தக்கவர்கள். முத்துவுடன் இணைந்து நான் பல்வேறு உத்தமம் மாநாடுகளில் மெக்கிண்டாஷ் கணினிக்கான எழுத்துருக்களை அளித்திருக்கிறேன். நான் அப்போது ஜெர்மன் கீபோர்டுக்கான பிட்மேப் பாண்ட் ஒன்றை உருவாக்கி வைத்திருந்தேன். நான் முன் பகர்வுகளில் சொல்லியபடி ஜெர்மனி புகலிட இலக்கிய முன்னோடி. ஐரோப்பாவில் ஒவ்வொரு நாட்டின் கீ போர்டும் வித்தியாசப்படும். எனவே எங்கள் சேவை புகலிட இலக்கியப் பதிவிற்கு வலு சேர்த்தது என்று சொல்லலாம். 

முத்து இப்போது முழுமூச்சாக தமிழை கையடக்க செல்பேசிகளில் கொண்டு செல்வதில் கவனமாக இருக்கிறார். மேகக்கணினிகள் பரவலாகும் போது கையடக்க செல்பேசிகளே நமது கணினிகளாகும். இந்தியா போன்ற பவர்கட் நாடுகளுக்கு மொபைல் ஃபோன் பெரிய வரமாகும். பவர்கட் என்றாலும் நாம் உலாவலாம், தடையில்லாமல் வேலை செய்யலாம். கையடக்க செல்பேசிகளில் எப்படி சிறுகதைகளை உட்புகுத்துவது என்று அவராக்கிய நடமாடும் மின்னூல்களைக் காண்பித்தார். மலேசியா தமிழ் எழுத்தாளர் சங்க மாநாட்டில் எப்படி வரும் கால தொழில்நுட்பம் தமிழ் நடையையே மாற்றப்போகிறது என்று பேசிய ஞாபகம் வந்தது. குறுங்குறு கதைகள் எழுத்தித்தருமாறு முத்து என்னிடம் கேட்க நானொரு கதை அனுப்பினேன். ஹைக்கூ போல் குறுங்கதைகள் உருவாகும் இனி.

நாகலக்ஷ்மி சிவசம்பு பிரான்சு நாட்டில் எக்ஸில் (Exil(e), உயிர்நிழல் எனும் பத்திரிக்கை ஆசிரியர். நானும் இப்பத்திரிக்கைகளில் எழுதியுள்ளேன். அவரது பங்களிப்பு பற்றிப் பேசினார். வேடிக்கை என்னவெனில் அவர் பேசும் பல சொற்கள் முனைவர் சுப.திண்ணப்பனுக்கு புதிதாக இருக்க நான் அவருக்கு தமிழ் > தமிழ் மொழிபெயர்ப்பு செய்து கொண்டிருந்தேன் :-) 

Jean&me.jpg

நா.கண்ணன், சுப.திண்ணப்பன், வே.சபாபதி, பின்னால் ழான்

அந்த அமர்வில் பேசியவர்களிலேயெ மிகவும் இளையரும், அதற்கான துடிப்பும் உடையவர் இலங்கையைச் சேர்ந்த மயூரன். நூலகம் முயற்சியின் முக்கியஸ்தர். மிக எளிமையாக, நகைச்சுவையுடன் மயூரன் பேசியதை எல்லோரும் ரசித்தனர். திண்ணை ஆசிரியர் ராஜாராம் கோபால் மிக அழகான, பொருள்ள பேச்சை நிறைய கேலிச்சித்திரங்கள் மூலம் வழங்கினார். மிகவும் அமெரிக்கத்தன்மையுடன் இருந்த அவர் பேச்சு என்னைக் கவர்ந்தது. நன்றாக இருந்தது என்று நான் சொல்ல, என் பேச்சை அவர் ரசித்ததைச் சொல்லி என் பேச்சின் ஒரு சிலைடு வேண்டுமென்று கேட்டார். அனுப்பி வைத்திருக்கிறேன். 

இவ்வமர்வின் த‌லைவ‌ர்: திரு ஆ ப‌ழ‌னிய‌ப்ப‌ன், (உத‌வி இய‌க்குன‌ர், சிங்க‌ப்பூர் நாடாளும‌ன்ற‌ம்). எனது இனிய நண்பர். 2000ம் ஆண்டு சிங்கப்பூர் மாநாட்டில் ஆயிரக்கணக்கான தமிழ் நுகர்வோர் அரங்கில் இவர்தான் “பாசுரமடல்” கண்ணன் என்று அறிமுகப்படுத்திய போதுதான் எனக்கு அப்படியொரு டைட்டில் இருப்பது தெரிந்தது. ஆனாலும் அவரது பேச்சில் தமிழ் மரபு அறக்கட்டளை என்ற சொல்லோ, மின்தமிழ் குழுமம் என்ற சொல்லோ, நாம் செய்துவரும் அரும் பணிகள் பற்றிய சிறுகுறிப்பும் கூட இடம் பெறாததை தொழில்முறை புறக்கணிப்பு என்று கொள்கிறேன். (தமிழ் உலகம்குழுவிற்குப் போட்டி என்று எம்மை எண்ணிவிட்டாரோ? இல்லை மலேசியாவில் தோன்றிய த.ம.அ சிங்கையில் தோன்றாததால் புறக்கணித்துவிட்டாரோ? யாமறியோம் பராபரமே!)

லக்ஷ்மி பேசிய போது புகலிட வாழ்வை ஆறாம் திணையென்றும், மின்வெளியை ஏழாம்திணையும் குறிக்கப்போய் பலருக்கு அது குழப்பத்தை உருவாக்கியது. மின்வெளியை ஆறாம்திணையென்று குறிக்கும் வழக்கம் மிக ஆரம்ப காலத்திலேயே சென்னை ஆன்லைன் நடத்திய “ஆறாம்திணை” எனும் மின்னிதழ் மூலம் அறிமுகமாகியிருந்ததே காரணம். நான் அப்பெயர் குறித்து 2000க்கு முந்திய காலங்களில் அவ்விதழ் சிறப்பு மலரில் எழுதியுள்ளேன். பின் 2000ம் ஆண்டு நடந்த தமிழினி 2000 மாநாடு ஒட்டிய செய்மதி நிகழ்வில் சென்னை தமிழ் சிந்தனை வட்டப்பேச்சில் சுஜாதா அவர்கள் என்னைக் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மின்வெளியை நாம் ஏன் “ஆறாம்திணை” என்று கூற வேண்டுமென்று உத்தமம் இதழில் ஒரு கட்டுரை எழுதினேன். அக்கட்டுரையின் மின்னகல் காண இங்கே சொடுக்கவும் (கிளிக் செய்யவும் என்று எழுதாதீர்கள்!). இதைச் சொல்ல வாய் துடித்தாலும் காலநெருக்கடியால் அங்கு மௌனியானேன்!

translation.jpg
ழான், மாலன், செல்வா, உதயசங்கர் (இப்படம் முன்பகர்விற்கானது)


அடுத்த அமர்வு: தாயகம் கடந்த தமிழ் எழுத்தாளர்களின் தாக்கம் 

பேச்சாளர்கள்:
நாகார்ஜூனன், எழுத்தாளர், இங்கிலாந்து 
முனைவர் கிருஷ்ணன் மணியம், இணைப் பேராசிரியர், இந்திய ஆய்வியல் துறை, 
மலாயாப் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம்
முனைவர் கிர்ப்பால் சிங், இய‌க்குன‌ர், வீ கிம் வீ நிலைய‌ம், சிங்க‌ப்பூர் நிர்வாக‌ப் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம்

த‌லைவ‌ர்:
முனைவர் ரெ கார்த்திகேசு, எழுத்தாளர், மலேசியா

நாகார்ஜூனன் பேசிய பேச்சை விட அவர் பேசியவிதம் சூப்பராக இருந்தது! டிப்பிகல் தமிழக அறிவுஜீவியின் நக்கல், எள்ளல், எல்லோரையும் தூக்கிப்போட்டு விளையாடும் பாங்கு....ரொம்ப வித்தியாசமாக இருந்தது. மிகவும் ரசித்தேன். முடிந்தவுடன் நன்றாக இருந்தது என்றேன். “உங்கள் பேச்சிலிருந்து இரண்டு பாயிண்டு” எடுத்தாண்டேன்” என்றார் சிரித்துக்கொண்டே. "Yes! Something sounded familiar"  என்றேன் சிரித்தபடி. தேனீர் இடைவேளையில் நம்ம கமலம் வெள்ளந்தியாக என்னிடம் வந்து ‘இப்படியெல்லாம் கூடப் பேசலாமா?’ என்றார் :-) இன்னொரு பக்கம் மயூரன் வந்து, “கண்ணன் கவனித்தீர்களா! நாகார்ஜுனன் அப்படியே கமல் ஸ்டைலில் பேசியதை? கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் கமல் பேசுவது போலவே இருக்கும்!” என்றார். அடடா! என்னென்ன பிரண்டேஷன் டெக்கினிக்கெல்லாம் இருக்கு உலகில் என்று நான் சிரித்தேன்!

கிருப்பால் சிங் ஆங்கிலத்தில் உரையாற்றினார். ஒருவகையில் இந்த மாநாட்டுக் கருத்தின் anti-thesis என்பது போல் இருந்தது அவர் பேசியது. மூன்றாம் தலைமுறை சீக்கான அவர் இருப்பது பஞ்சாப் இல்லை, பல்லினம் வாழும் சிங்கப்பூர், அவர் பிறந்தது பஞ்சாப் இல்லை, மெட்ரோபாலிடன் சிங்கப்பூர், தாய்மொழியோஆங்கிலம் என்றாகிப்போனது. எனக்கு சீக்கென்று எந்த அடையாளமும் இல்லை என்றார். இதற்கடுத்து இன்னொரு வேலை இருந்ததால் அவர் பேச்சிற்குப்பின்

Kirpal.jpg
கிர்ப்பால்சிங்

கேட்கத்துடித்து கேட்க முடியாது போன கேள்வி, “பின் ஏன் நீர் டர்பன் (தலைப்பாகை) கட்டிக்கொண்டு இருக்கிறீர்?” என்பது! ஆனால் ஒன்று தெரிகிறது. நமக்கு தமிழ் என்பது மொழி, தெய்வம், அடையாளம். சீக்கியர்களுக்கு தலைப்பாகை!!

நா.கண்ணன்
translation.jpg
Jean&me.jpg
Kirpal.jpg
muthu.jpg

Kamala Devi

unread,
Nov 12, 2011, 8:12:29 AM11/12/11
to mint...@googlegroups.com
அடடா, ரசித்தேன், சிரித்தேன், மகிழ்ந்தேன்.
சத்யமாயிட்டும் நிங்ஙள் சொல்லும்வரை, நாகர்ஜுனனின் விளக்கம் எனக்குப்புரியவில்லை.
பின்னர் ஞானும் பழனியப்பனும் மலையாலத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, எனிக்கும் மலையாளம்
அறையாம், என்னோடும் மலையாளத்தில் சம்சாரிக்காம், என்று அவராகவே பேச வந்தபோது, ஹூம், கமலத்தைதெரியாதா ?
ஹா, என்று பரவசத்தில், உடனே கேட்ட கேள்வி, அவரது உரை பற்றித்தான். கண்ணன் நிங்ஙளை அப்படி சப்போட் செய்கிறாராரே, என்று சொல்லப்போக, --பிறகு அவர் சிரித்து மகிழ்ந்து அவரது உரையை விளக்கினார்.
இனி நிங்ஙள் கட்டுரை பேசட்டும்
கமலம்

Sent: Saturday, 12 November 2011 8:57 PM

Subject: Re: [MinTamil] உலகத்தமிழ் எழுத்தாளர் மாநாடு - முதன்முறையாக! Friday 28 - Sunday 30, October 2011
muthu.jpg
Jean&me.jpg
translation.jpg
Kirpal.jpg

coral shree

unread,
Nov 12, 2011, 8:21:45 AM11/12/11
to mint...@googlegroups.com
அன்பின் திரு கண்ணன்,

”மின் தமிழ்” என்னும் பெயர் வரலாறு சுவாரசியமாக இருக்கிறது. சிங்கப்பூர் எழுத்தாளர் மகாநாட்டில் நாங்களும் உடன் வந்து கலந்து கொண்டது போல ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது தங்களுடைய யதார்த்தமான நடை. வாழ்த்துகள்.தொடருங்கள், தங்கள் சுவையான அனுபவங்களை. நல்ல பகிர்வு. நன்றி.

2011/11/12 N. Kannan <navan...@gmail.com>

நா.கண்ணன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

                                                               
                 
மின் செய்தி மாலை படியுங்கள்.
Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

translation.jpg
Kirpal.jpg
Jean&me.jpg
muthu.jpg

coral shree

unread,
Nov 12, 2011, 8:22:53 AM11/12/11
to mint...@googlegroups.com
அன்புச் சேச்சி,

நாங்களும் ரசித்துக் கொண்டிருக்கிறோம்...... அவ்வப்போது வந்து தலை காட்டி மறையும் மின்னல்!

2011/11/12 Kamala Devi <saahi...@yahoo.com.sg>
muthu.jpg
Kirpal.jpg
translation.jpg
Jean&me.jpg

Kamala Devi

unread,
Nov 12, 2011, 8:39:36 AM11/12/11
to mint...@googlegroups.com
பவழம் குட்டி
மின்னலா? அப்படியென்றால் மலையாளிகள் இட்ட பெயர்
படபடப்பு பத்மாவதியை மறந்துவிடுவோமா?
தேங்க் யூ .
அன்பு சேச்சி
 

From: coral shree <cor...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Saturday, 12 November 2011 9:22 PM
muthu.jpg
Jean&me.jpg
translation.jpg
Kirpal.jpg

Subashini Tremmel

unread,
Nov 12, 2011, 12:17:43 PM11/12/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram

2011/11/11 karthi <karth...@gmail.com>

..


மொழிபெயர்ப்பு பற்றிய ஒரு விளக்கம். ஒரு மலேசியர் மலாய் மொழி அல்லாத மொழியில் (தமிழ், சீனம், ஆங்கிலம்) எழுதும் இலக்கியம் மலாயில் மொழிபெயர்க்கப்பட்டால் அதனை mainstream மலாய் ஏடுகள் பதிப்பிக்க மாட்டா. ஏனெனில் மலேசியர் மலாய் மொழியிலேயே எழுத வேண்டும் என்பது அவர்கள் கொள்கை.

அதாவது அசல் மலாயிலேயே இருக்க வேண்டும். வேறு மொழியில் எழுதி அதனை மொழி மாற்றம் செய்யும் போது mainstream பத்திரிக்கைகளில் வாய்ப்பு கிடைப்பதில்லை.. இது என்ன கொடுமை? 

சுபா


Uthaya Sankar SB  மற்றும் Kavya கூகள் செய்து பாருங்கள். மேல் விவரங்கள் கிட்டும். (கவனம்: இவை மலாய் மொழித் தளங்கள்.)

ரெ.கா.



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

Thevan

unread,
Nov 12, 2011, 12:40:54 PM11/12/11
to mint...@googlegroups.com
இது மட்டுமல்ல, மலேசியா அரசு இஸ்லாமிய சட்டத்தை பின்பற்றிய பின் தமிழர்-இந்துக்களுக்கு எதிராக பல அரசியல் சட்டங்களையும் மாற்றியுள்ளது. 

http://hindraf.org/news-statements/192-lobby-group-fast-tracking-apartheid-case-to-us-congress.html

௧௨ நவம்பர், ௨௦௧௧ ௧௦:௪௭ பிற்பகல் அன்று, Subashini Tremmel <ksuba...@gmail.com> எழுதியது:

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
ஒரு மொழியை தகவல் தொடர்பு கருவியாக மட்டுமே பார்க்கும்பேது அது வியாபாரக் கருவியாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.  

Regards,
Thevan, 
Mumbai.

 


N. Ganesan

unread,
Nov 20, 2011, 9:06:33 PM11/20/11
to மின்தமிழ்

On Nov 10, 8:46 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2011/11/10 N. Ganesan <naa.gane...@gmail.com>:
>

> > தமிழ்மன்னர்களிடம் ஔவை அறிவுரைகள் புறநானூற்றில்.
> > தமிழ் தேசியத்தை அழகான காப்பியமாக்கி இளங்கோ அடிகள்,
> > சம்பந்தர் 150+ முறை தமிழின் சிறப்புகளை வாழ்த்தாக்குகிறார்.
> > பின்னர் சுந்தரம்பிள்ளை பாடலைப் பார்த்து நூற்றுக்கணக்கான
> > தமிழ்த்தாய் வாழ்த்துகள் பாடப்பட்டுள்ளன. எனக்குப் பிடித்த
> > பாடல் பாவாணர் மாணவர் பெருஞ்சித்திரனாரது.
>
> உதாரணங்கள் காட்டுங்களேன். அப்படி இல்லை என்றுதான்சீனிநைனா முகம்மது சொல்கிறார்!
>

1) பூவராகன் மடியில் வளரும் பூதேவி தாயாராக வில்லி பாரதப் பாயிரம்
தமிழ்த்தாயைப்
போற்றுகிறது. எனக்குத் தெரிந்து தமிழ்த்தாய் வாழ்த்தில் முதல்பாக்களில்
இது ஒன்று.
இங்கே பாடலைத் தந்து விளக்கமும் எழுதியுள்ளேன்.

2) துறைமங்கலம் வீரசைவர்கள் மூவர். காளத்திப் புராணம் செய்த
கருணைப்பிரகாசர் பாடிய
தமிழ்த்தாய் வாழ்த்து 17-ஆம் நூற்றாண்டு. பாட்டு வேண்டுமானால் தருகிறேன்.

சீனி. நைனா முகமதுவை தமிழ்த்தாய் வாழ்த்து வரலாறு கட்டுரை தரச்
சொல்லுங்களேன்.

Reply all
Reply to author
Forward
0 new messages